உமா கார்த்திக்
Moderator
அத்தியாயம் _02
திருமண நாள் அன்று இருவரின் காலை பொழுது.
"அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட்படு பரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிரோளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பர சிவமே!"
அருபெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி .
மனிதருள் எவ்வித பேதமும் இல்லாமல்
" பசித்தவருக்கு உணவளிக்க வேண்டும்." என்ற உயரிய தத்துவம் அருளிய வள்ளலார் பெருமானின் திருவுருவப்படத்தை வணங்கி விட்டு தான் பிற வேலைகள். பகுத்தறிவான பக்தியை கொண்டவன் வீர பாரதி. எம் எஸ் சி கணினி அறிவியல் பாடத்தில் கோல்ட் மெடலிஸ்ட், மிஸ்டர் பர்பெக்ட் என்ற பெயர் எடுக்க தந்தையால் கட்டாயப்படுத்த பட்டவன். உடையிலிருந்து வாழும் முறை வரை தந்தையின் அதிகாரத்தின் பிடியில் கீழ்ப்படிந்து நடக்கும் ( நடக்க வைக்கப்பட்ட ) சுயம் என்றால் எப்படி.. என்ற சுவை உணராத(வர்) மகன்.!
எழுதாத வெள்ளை காகிதம் முன் கைகட்டி விடப்படும் குழந்தை நிலை தான்.! அவன் விரும்புவதெல்லாம் மனதோடு மட்டும் தான்.! தந்தை எழுதும் எழுத்துக்களே அவன் தலையெழுத்து.!
இன்று கடவுள் எழுதப் போவது புது எழுத்து.!!
அதே நேரம்.. இங்கு ஆடம்பரம் அணி வகுத்த அறையில், அத்தனை வண்ணங்கள் சேர்ந்த வானவில் குவியலாக உயர் ரகமான உடைகள். மெத்தையில் படுத்துக் கொண்டு அவள் உடலில் இன்று ஒரு நாள் ஒட்டுவதற்காக தவம் இருக்க.!!
அவள் விழியோ.. தொடு திரையில் ஒளிரும் முகத்தை பார்த்து புன்னகைக்க.! என்றோ அவன் (ஆதீஷ் இன்ஸ்டாகிராம் பிரபலம்) பதிவிட்ட ரீல்ஸ் தேடி எடுத்து பார்த்து ரசிக்கிறாள் யுவதிகா.!
அவன்பால் கொண்ட ஈர்ப்பின் வெளிப்பாடாக கண்கள் துள்ளலோடு மின்னியது.
வெள்ளை வேட்டி அணிந்து. சிவப்பு சட்டையின் மொத்த மேல் பகுதியை காற்று வாங்க விட்டு, முடிவில் இருக்கும் இரு பொத்தான் உதவியில் உடை உடலில் தவ்வி நிற்க. "வீ "வடிவில் வயிற்றில் இருந்து கழுத்து வரை திறந்து கிடக்க.. பின் காலரை தூக்கி விட்டு, பெண் ஒழுக்கத்திற்க்கு உபதேசம் செய்கிறான். ஆபாச அரைகுறை ஆடையுடன்,
" ஆண்.. பெண் பேதமில்லை.
அங்கங்களை காட்சி பொருளாக முன்னிறுத்தும் அத்தனை செயல்களும் ஆபாசமே.!"
ஃபோன் திரையில் ஆதீஷ் -" எப்பவுமே .. பொண்ணுங்க.. புடவையில தான் தேவதையா தெரிவாங்க.!
என் தேவதையும் புடவை கட்டி வந்தா அம்சமா இருக்கும். " மீசையை முறுக்கி கொண்டு வெக்கமான முக சாயலில் விடியோ முடிவடைந்தது.
அவன் பேசிய வசனங்களை வைத்து, இதுவரை உடுத்த தேர்வாகாத சுடிதாரை போர் குவித்தவள், புடவை பக்கம் பார்வையை திருப்பினாள். அடர் பிங்க் நிற பட்டுப் புடவையும், தங்க நிற பிளவுஸ் தேர்வு செய்து விட்டு குளிக்க சென்றாள் யுவதி.
யார் சொல்லி புரிய வைப்பது.. இரவில் வரும் கனவு போல.. நிழலில் வரும் போலி (தொடு) திரை முகங்கள்.!!
" திரையில் ராமனாக தெரியும் ஆண்கள் எல்லாம்.. அறையில் துச்சாதனனாகி துயில் உரிக்கும் கதைகள் தான்.. தினசரி தொலைக்காட்சி செய்தி வழியாக ஏராளம்.
இன்று யுவதிகாவின் மூளை வேலை நிறுத்த நாள். காலையில் வந்த குரல் செய்தி அப்படி..
காந்த குரலில்.. டியர் யுவதி.." என்ற ஒற்றை மயக்கும் அழைப்பில் உருகாமல் விடலை பெண் நின்றால் தான் அதிசயம்.! "
ஆதீஷ் -" பேபி..உனக்கே தெரியும். ஒரு சோசியல் மீடியா இன்ஃபுளுயன்சர் ஆ.. எனக்கு ஆயிரம் ஃபேன்ஸ் இருக்காங்க. ஆனா யார் மேலயும் இதுவரை எனக்கு எந்த இன்ட்ரெஸ்ட் ம் வந்தது இல்லை. நான் சிங்கில் தான் யுவி மா..! ஆனா உன்ன பார்த்ததும் ஒரு புது ஃபீலிங்ஸ்.. இங்க.!தினமும் உன்ன பாத்துகிட்டே இருக்கணும், ப்ளீஸ்.. மறுப்பு சொல்லாம நான் சொல்ற இடத்துக்கு என்ன பார்க்க வருவியா? யுவி ..மா..!! நான் உனக்காக காத்திருப்பேன்." காதல் கொண்டு கசிந்துருகியது குரல். அதில் மதி மயங்கி உணர்வு வீச்சில்.. தடம் மாற துணிந்து விட்டாள் பருவப்பெண்.
வேணுகோபால்,நீலாம்பிகை இவர்கள் செல்ல, செல்வ மகள் யுவதிகா. தாய் தந்தையரின் ஆறு வருட வேண்டுதலின் பலனாக பூமியில் ஜனனித்த பூ மகள். காலாகாலத்தில் பிறந்திருந்தால் வருங்காலத்தில் இத்தனை பிரச்சனை வந்திருக்காது. தாமதத்தின் தண்டனையை தவிர்த்து இருக்கலாம்.!
தெய்வ பக்தி மிகுந்தவர் நீலாம்பிகை. அவர் பூஜை அறை செல்லும் சமயம் பார்த்து கிளம்பி காத்திருந்தாள் யுவதி. தாய் தெய்வ வழிபாட்டை ஆரம்பிக்க.. தனது ஸ்கூட்டியை கிளப்பி வீட்டை விட்டே சடுதியில் வெளியேறி இருந்தால் யுவதிகா.
சென்னையின் பிரதான சாலையில் அமைந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பிரம்மாண்டமான தோற்றம், வியப்பு தரவில்லை அவளுக்கு, தனது தோழி அம்ருதாவுடன் அடிக்கடி வரும் இடம் தான்.! தாயிடம் சொல்லாமல் வந்ததால்..தெரிந்தவர் யாராவது பார்த்து அம்மாவிடம் சொல்லிவிடுவார்களோ..? என்று பதற்றமும்.. நடுக்கமும் வியர்க்க வைத்தது. எகிறிடும் இதயத்துடிப்பு வேறு.. அவளை பாடாய் படுத்தியது. பதைத்த விழிகளோடு முன்னேறி சென்றாள் யுவதிகா.
அதே நேரம் அந்த ஹோட்டலின் பார்ட்டி ஹாலில் தன் டீம் மேனேஜர் ஒருவர் மது அருந்த வற்புருத்த " நான் தான் டிரிங்ஸ் பண்ண மாட்டேன் னு தெரியும்ல.. ணா.. ஏன் ஃபோர்ஸ் பண்ணுறீங்க.. " நாசுக்காக நகர முயன்றான் வீர பாரதி.
" நீ ஒருத்தன் யோக்கியனா இருந்து எங்களை அயோக்கியனா காட்டுறியா. அதான்.. டா " அவர் கண் காட்ட,சுற்றி இருவர் வந்து பாரதியை நகராமல் பிடிக்க.. திமிறிக் கொண்டு பார்ட்டி ஹாலை விட்டு அவசரமாக வெளியே ஒட்டமாக வீரன் ஓடி போக.! எதிரே வந்த பிங்க் புடவை அணிந்த பெண் மீது மோதாமல் விலகிப் போகும் போது.. தடுக்கும் வகையில் கேட்டது ஒரு குரல். அவள் குரல்.!
" எக்ஸ் கியூஸ் மீ.. டூ நாட் டூ .. ரூம் மேல இருக்கா.. " முகம் பார்க்காமல் இருவரும் எதிர் எதிர் பக்கம் நிற்க.
" கீழ.. இருக்கு. இது பார்ட்டி ஹால் மேடம். ரூம்ஸ் எல்லாம் கீழ் புளோர்.. கீழ போங்க" என்று வழி சொல்லிவிட்டு வாஷ் ரூம் உள்ளே சென்றான் பாரதி.
கண்ணாடி முன்னால் ஆக்ரோஷம் தாங்காத இளம் வயதுடைய, ஒரு பதினாறு வயது பையன் பிதற்றுவது தென்படுகிறது. வாயில் கோப முனகலான வசனங்கள். அவன் வெள்ளை நிற யூனிஃபார்ம் உடையே சொன்னது, இங்கு தினசரி பணியாள் என,
" அப்படியே .. மூஞ்ச அடிச்சு பேக்கனும். பொறுக்கி நாய், இன்னும் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் வசவுகளாய் வர " அவன் எதிரே போய் நின்றான் பாரதி.
"ஏன்டா இவ்ளோ கோவம் வருது? "
" பச்.. சின்ன பையன் என்னால இப்படி தனியா வந்து கண்ணாடி கிட்ட தான் கோபத்தை காட்ட முடியும்." தன் கையை மடக்கி இறுக்கமாய் முறுக்க.
" டேய்.. தெளிவா சொல்லு.. யாரும் உன்ன திட்டுனாங்களா.? வேலைக்கு வந்தா அப்படி தான் இருக்கும். கோபம் நம்மல வளரவிடாது தம்பி."
நிமிர்ந்து அட்வைஸ் அளப்பவனை முறைத்து பார்த்து
" நீ.. வேற.. போ..ணா.. வெளிய ரோஸ் கலர் புடவை கட்டின அக்கா.." என முடிக்கும் முன்
" ஆமா..டா.. வழி தெரியாம சுத்துனுச்சு, நான் தான் கீழ தான் நீங்க தேடுற ரூம் இருக்குனு சொல்லி வழியனுப்பிட்டு வர்றேன்."என்று பெண்ணிற்க்கு உதவியதை பெருமை பேச,
" சுத்தம்.. அந்த அக்கா வாழ்க்கைய முடிச்சு விட்டுட்ட போ.. ணா.."
பதறியது பாரதிக்கு " டேய்.. என்னடா லூசு மாதிரி பேசுற? "
" சரி.. இப்ப நான் மாஃப் போட்டுட்டு வந்தேன். இப்ப நான் கை கொடுத்தா நீ.. என் கைய தொடுவியா? " ஆழமாக ஆய்வு பார்வை பார்க்க,
பாரதி -" ம்..கும் .. மாட்டேன். ஒரே அழுக்குடா.. நெவர் "அஷ்ட கோணலாய் முகத்தை சுருக்கினான்.
" வெளியில மாஃப் போடும் போது கீழ விழுந்துட்டேன். அந்த அக்கா தான் வந்து தூக்கி விட்டுச்சு.. பார்த்து வேலை பாருடா தம்பி னு சொல்லிட்டு போனது தெரியுமா? ப்ச்.. நல்ல அக்கா. " மிகவும் நெகிழ்வோடு உணர்வுப் பூர்வமாக வந்தது அக்காவின் திடீர் தம்பியின் குரல்.
" சரி.. அதான் ஹெல்ப் பண்ணாங்க.. அதுக்கென்ன ?"
சோகமான குரலில் " அந்த அக்கா.. ஆதீஷ் ரூம்க்கு போக போகுது. சரியான பொறுக்கி அவன். அதான் நான் மாத்தி.. தப்பா வழி சொன்னேன். நீ அந்த அக்காவ மாட்ட வைச்சுட்ட " என தன் முன் நேராய் நிற்பவனை குற்றம் சுமத்தினான் பொடியன்.
" டேய்.. அந்த பொண்ணு விருப்பப்பட்டு தான வந்திருக்கு. உனக்கே அவன் பொறுக்கி னு தெரியுது. அதுக்கும் தெரியும். நான் காரணம் இல்லைடா " பழி ஏற்க்க முடியாமல் மறுத்து பேச.
" வயசுல வர்ற சின்ன தடுமாற்றம் ணா..
சிலந்தி வலை பக்கத்துல பறக்குற பட்டாம்பூச்சி .. வலையில சிக்குறவரை அதுக்கே தெரியாது. சாகப் போறோம்னு. அப்டி தான் இந்த அக்கா." என்று கூறியவன் குரலில் வலி கூடி .. கலக்கமாக முகம் மாறியது.
" டேய்.. அந்த பொண்ணு தம்பி னு சொன்னாங்க. நீ ஒன்னும் நிஜ தம்பி ஆக பாக்காத, வேண்டாத வேலை டா.. " முகத்தை நீரில் கையால் அள்ளி
அலம்பி விட்டு திரும்பி பார்த்தான் வீர பாரதி.
தழுதழுத்தது தம்பியின் குரல் .. கண்ணீர் அரும்பியது விழியில் " என்னோட அக்கா வயசு அந்த அக்காவுக்கு. நான் போய் தடுக்க முடியுமா? ஏழை சொல் அம்பளம் ஏறாது. மாஃப் போடும் போது வழுக்கி விழுந்துட்டேன். யாருமே வரலை. அந்த அக்கா தூக்கி விட்டு பாத்து வேலை பாருடா தம்பி அப்படின்னு சொல்லிட்டு அழகா சிரிச்சிட்டு போகுது.
இனிமே அது வாழ்க்கையில சிரிக்கவே முடியாது. ஓனருக்கும் அவனுக்கும் கனெக்ஷன் இருக்கு.நான் சொல்லி தடுக்க முடியாது. நல்ல அக்கா.. போல.!
சீமண்ணை ஊத்திக்கிட்டு தீப்பெட்டியை தேடி போற கதை தான். அழகா இருந்தா அறிவு இருக்கா..தோ.!! " மனம் தாங்காமல் புலம்பல் வந்தது.
கோபமாக " டேய்.. என்ன தான் டா உன் பிரச்சனை? " 'ஒவர் பீலிங்க்ஸ் கடுப்பேற்றியது.
"ண்ணா.. இவனுக்கு இதுதான் வேலை, எப்பவும் இந்த நம்பர் ரூம்ல தான் தங்குவான்.
அவன் ஃபேன் ஆ இருக்க யாரையாவது மூட் பொருத்து, ஃபில்டர் பண்ணி வர சொல்லுவான். வரவங்க இவன் பெரிய மகான் னு நினைக்கிற அளவுக்கு ஏதாவது நல்லது செய்ற மாதிரி வீடியோ போடுறது. ஆனா அந்த உதவி எல்லாம் வீடியோக்கு மட்டும் தான். ஒசியில உடம்ப வளர்க்குறதுக்கு உதாரணமே இவன் தான். இங்கேயும் அவன் தங்க நாங்க காசு கொடுக்கணும். ஹோட்டல் முதலாளி கூட பயப்படுவாங்க, இந்த ஹோட்டல் நல்லாவே இல்ல யாரும் போகாதீங்க அப்படி னு வீடியோ ல அவன் சொன்னா எல்லாரும் நம்புவாங்க.மனுசனோட நம்பிக்கையை
காசக்குற கூட்டம். தன் மேல ஈர்ப்புல இருக்க பொண்ணுங்க கிட்ட இவனும் காதலிக்கிற மாதிரி பேசி.. அந்த மயக்கத்தை வச்சு பொண்ணுங்கள சீரழிக்குறான். வெட்டியா தானே கதை கேட்டுட்டு நிக்குற போய் தடேன்."என்று உரிமையாக ஒருமையில் தம்பிரான் பேச,
முறைத்துப் பார்த்த வீர பாரதி. "டேய்.. யாருடா அவ , எந்த உரிமைல மேல போய் தடுக்கிறது.அவங்க இஷ்டப்பட்டு தானே போறாங்க. அதை விடு, உன் அக்கா யாரோ அதே வயசுல இருப்பாங்கன்னு சொன்னியே..அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?ஜாதகம் இருக்கா?வரதட்சணை எல்லாம் வேணாம்.கை நிறைய சம்பாதிக்கிறேன்.
மாமியார் கொடுமை இல்லை,இங்கேயே பிளாட் இருக்கு.
தனி குடித்தனம் வந்துடலாம். வாட்ஸ் ஆப் நம்பர் இருந்தா குடுடா, ஜாதகத்தை அனுப்பி விடுறேன்." என தீவிரமாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து போக.
'யாரு சாமி இவன் ' என கழிப்பறையை சுற்றி ஒரு சுத்து பார்வையை வட்டமிட்டவன் அருவருப்பாக ஒரு பார்வை பார்த்து " எங்க நின்னுகிட்டு சம்மந்தம் பேசுற ஏன் இப்படி..? அலையுற.. ணா.. "
சோகமும்,ஏக்கமும் ஏகத்திற்க்கு அப்பியது முகத்தில் " இப்பவே வயசு இருபத்தேழு டா .. இன்னும் மூணு வருஷம் தான் இருக்கு. அப்புறம் வயச வச்சு ரிஜெக்ட் பண்ணுவாங்க. என் செட்டு பசங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆகி குழந்தை இருக்குடா.. எங்க வீட்டிலயும் பாக்குறாங்க தான்.ஒண்ணுமே தெவயல்ல..டா , நாலா பக்கம் தேடுனா தான் டா , ஒரு தடவை கல்யாணம் நடக்கும்.
" கையை ஒரு முழம் நீளம் அளந்து காட்டி " பொண்ணுக்கு இந்த அளவு ஒரிஜினல் முடியும்.சாந்தமான குணம் இருந்தா போதும்டா. உங்க அக்கா எப்படி? "
இதுவரை பேசியதை கேட்டு உறைந்து போய் நின்றவன் தெளிந்து." நீ என்ன பூமரா..ஏதோ கல்யாணம் பண்ண பொண்ணுங்களுக்கு பஞ்சம் மாதிரி பேசுற.."
" பொண்ணுங்க நிறைய தான்டா இருக்காங்க.. எல்லா ரவுண்டும் செலக்ட் ஆகிற நான்..கடைசி ரவுண்டு ரிஜெக்ட் ஆயிடுறேன். " அவமானம் கனக்க தலையை தொங்க போட்டான் பாரதி.
" புரியலை.. ஏன் ரிஜக்ட் பண்றாங்க.கெட்ட பழக்கம் ஏதாவது இருக்கோ.." குறுகுறுவென பார்த்தான் தம்பிரான்.
உடனே மறுப்பாய் தலை ஆட்டி," அது இல்லைடா.. வீடு ஓட்டு வீடு, அதனால எந்த பொண்ணும் என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குது. என் ஆசையே..ஒரு பொண்ணோட முதல் காதலா நான் இருக்கனும்." சிலாகித்துக் கூறினான் பாரதி.
" அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை.. ணா..எல்லா பெண்களையும் ஃப்ரீபுக் பண்ணி வச்சிருக்கானுங்க.அதனால அட்ஜஸ்ட் பண்ண பழகிக்கணும். ஒரு பூ ஒரு ஃப்ளவர் எல்லாம் இந்த காலத்துல இல்ல. ணா.. ஆனா நீ அப்படி தான் இல்ல.!! "அண்ணனை அதிசயித்து நோக்க.
கல்யாண காரியத்தில் உறுதியானவன் விஷயத்திற்க்கு வந்தான். " உங்க அக்கா ? "
கசப்பான புன்னகையுடன்
" இப்படி தான்.. ஒரு பொறுக்கியோட பேச்ச நம்பி போய்.. ஏமாந்துடுச்சு.. அவன் அடிச்சு வெரட்ட, தற்கொலை பண்ணி செத்து மூணு வருஷம் ஆச்சி..! "
'செத்துடுச்சா..' என்ற அதிர்வில்
" டேய்.. என்னடா சொல்லுற..செத்ததை இவ்வளவு ஈஸியா சொல்ற?"
கண்ணாடியை துடைப்பவன் தலையில் அண்ணன் தட்ட,
அவன் புறம் திரும்பி "எங்க அக்காவ காப்பாத்த முடியல.. இப்ப வருத்தப்பட்டு என்ன ஆகப் போகுது. இந்த அக்கா பாவம்.. எனக்கு தடுக்க தான் மனசு துடிக்குது. தடுத்தா வேலை போயிடும். ஆதிஷ் கம்னாட்டி அமைதிப்படை டெக்னிக் தான் யூஸ் பண்ணுவான். எப்படி பேசுவான் தெரியுமா..? அன்பு காட்ட யாருமே இல்ல, அப்படின்னு சிம்பதி கிரியேட் பண்ணிருவான். பெத்த தாய் பேசுறது இல்ல,பணத்துக்காக எல்லாரும் என்ன யூஸ் பண்ணிக்கிறாங்க. முதல் காதல்ல தோத்துட்டேன். ஃபர்ஸ்ட் லவ் நீ தான் னு அப்டியே உருகி மருகி.. நல்லா உருட்டி விடுவான். நமக்கெல்லாம் பொண்ணுங்கள பார்த்தா பேசவே வரமாட்டேங்குது." என நீளமான பெருமூச்சை போறாமையோடு தம்பி உள்ளே இழுக்க,
" உனக்குமா .. டா .. " என அண்ணன் வெளியே அனல் மூச்சிட்டான்.
" அப்படியும் ஒரு பொண்ணு கிட்ட ப்ரொபோஸ் பண்ணேன். தோல்வி தான். காதலிக்கிறதுக்கு நிறைய செலவாகும். இப்ப இருக்க பொண்ணுங்களுக்கு நம்மல மாதிரி பொறுப்பா இருந்தா பிடிக்க மாட்டேங்குது. இப்படி மீடியாவுல மினுக்குறவன தான் புடிக்குது." என தன் உடலை குலுக்கி காட்ட,
தழாத சிரிப்புடன் " பொங்காதடா..
படிச்சு வேலைக்கு போடா.. பொண்ணுங்க லவ் பண்ணும் " அப்ப ஏன் உன்ன யாரும் லவ் பண்ணலை னு கேட்டுடுவானோ? ' என்று பதில் சொல்ல முடியாத பயத்தில், திருட்டு முழியிலும் அழகன் பாரதி. !
" படிப்பெல்லாம் முக்கியம் இல்ல..பேசத் தெரியனும்.. பந்தா காட்டனும், பைக் வேணும். செலவு பண்ணனும். பணக்காரனா காட்ட தெரியனும். வீடு ,வேலை, படிப்பு எல்லாத்தையும் தான் தலையில் சுமக்கிறவன்.எங்க இருந்து காதலிக்கிறது. ? "
" உயிருள்ள அத்தனை பேருக்கும்
காதலிக்க ஆசை தான். குடும்ப பொறுப்பு எனும் நெருப்பை சுமப்பவன்.. காதலில் சபிக்கப்பட்டவன்.! "
பருவ வயதில் பொறுப்பாய் அவன் நின்ற நிலையில் இன்று நிற்பவன் (தம்பி குட்டி) தோளில் கையை போட்டு தேற்றினான். ண்ணா.. " அதான் சரி.. பார்ட் டைம் ஜாப் ..ஆ.. செம டா நீ. " பேசி இயல்பாக்க முயன்றான் பாரதி.
" அந்த அக்கா பாவம் ணா. " மீண்டும் சுற்றி அங்கேயே வந்து நின்றான்.
அவனை மோதி சென்ற யுவதியின் முகம் வந்து மறைய.." ரூம்.. நம்பர் என்ன? "
ஆர்வம் பொங்க.
" காப்பாத்த போறியா.. டூ சீரோ டூ.. "
பாரதி -" ஆமா.. கப்பாத்துனா காதல் வரும் ல.." தன் அக்கா ஏமாந்து இறந்து விட்டதாக வருந்தியவன் வேதனை முகம்,ஒரு பக்கம் அழுத்தம் தர, அவள் முகத்தை தினசரி எங்கேயோ பார்த்த உணர்வு.
" அதுக்கு நீயும் மார்பழக காட்டி வீடியோ போடணும். காப்பாத்து காதல அப்புறம் பாத்துக்கலாம்."
" அட போடா.. " யார் அவள் என யோசனையில் ஒடும் .. அவன் முதுகை வெறித்தான். (தம்பி) கோபி கிருஷ்ணன். இப்போது அக்கா பற்றிய கவலை விடுத்து, நிம்மதியாக தன் துப்பரவு வேலையை தொடர்ந்தான்.
அறை எண் இருநூற்று இரண்டின் வாசலில் காத்திருந்தால் யுவதிகா. உண்மையை சொல்ல வேண்டுமானால் காத்திருக்க வைக்கப்பட்டால். துணைக்கு யாரையாவது அழைத்து வந்திருக்கிறாளா என்ற சோதனைக்காக அமர வைத்தான் ஆதிஷ். கையில் மதுவோடு உள்ளே அமர்ந்து கொண்டு காதல் வசனங்களை மனப்பாடம் செய்தான்.
ஆணின் இயற்கை ஈர்ப்பியல் விதிகளால் எப்படி பேசி அவளை வசிகரிக்கலாம் என ஒத்திகை பார்த்துக் கொண்டான். இளம் பெண்ணை காத்திருக்க வைத்து, தவிப்புகளை மெல்ல.. மெல்ல.. கூட்ட.. அவன் மீதான காதல் உணர்வுகள் கூடும் என்பது இதுவரை பல பெண்களை ஆராய்ந்து பார்த்து கண்டுபிடித்த, அவன் ரசிகைகளின் பருவத்தின் இயல்பியல்.
யுவதிகா அறியாத இன்னொன்று அவள் தந்தையும் இதே ஹோட்டலில் தான் இப்போது இருக்கிறார்.! தனது கம்பெனியில் உருவான ப்ராஜெக்ட் சக்சஸ் பார்ட்டி செலிப்ரேஷனுக்காக தனது ஊழியர்களுக்கு பார்ட்டி ஹாலில் நன்றி தெரிவிப்பிற்காக விருந்து வைக்க, மகளும் விருந்துக்காக தான் வந்திருக்கிறாள்.! இதை அறியாது சக ஊழியர்களோடு கொண்டாட்டத்தில் திளைக்கும் மகளைப் பெற்ற தந்தை நிலை அவலம் தான்.!!
பத்து நிமிட தவிப்பிற்கு பிறகு.. யுவதி.. ஆதிஷ் எண்ணிற்கு அழைப்பு மேற்கொள்ள, வேண்டுமென்றே
ஏற்காமல், கர்வ புன்னகையோடு அவள் அழைப்பதே பார்த்து குரூரமாக நகைத்தபடி சிலையென அமர்ந்திருந்தான். அவனுக்காக பெண்கள் தவிப்பது ஏதோ ஒரு வகை செருக்கு தந்தது.மது போதையை விட ,தன் மீது நாட்டம் கொண்டு தவிக்கும் பெண்கள் ஏக்கம்.. இன்னும் இன்னும் ராஜபோதையாக ஏறியது கமுகன் சிரத்தில்.
கதவைத் தட்டும் ஓசை கேட்டு " பொறுக்க முடியல அவ்வளவு அவசரம்,எனக்கும் தான் டி." என்று எழுந்து வந்து அறை கதவை திறக்க? வெற்றிடம் தான் கண்ணிற்கு விருந்தானது. ஏமாற்றமாய் விழிகளை நாலா புறமும் மேய விட்டான் ஆதிஷ்.
இன்று காலை யுவதிகாவின் இன்ஸ்டாகிராம் புகைபடத்தை பார்த்து, அவள் அழகில் மயங்கி தான் வலை விரித்தான். அவள் வராதது பெருத்த ஏமாற்றம் அளிக்க.. வேகமாக அறையின் உள்ளே சென்று வராத அவள் மீது கொலை வெறி வர, கதவை அவளிடம் ஏமாந்த கோபத்தில் காலால் உதைத்து சாத்தினான். உணர்வை எவ்வாறு சாத்தி அடைக்க முடியும். இன்னொரு பருவ மீனுக்கான வார்த்தை வலைகள் எப்பொழுதும் போல.!!
போஃனில் " ஹாய்.. பேபி.. நான் ஆதிஷ்.. "
இங்கே யுவதிகா.. யுவனின் இதய சிறையில்.! ஆம் அருகில் இருந்த லிஃப்ட்டுக்குள் தள்ளி.. ஒரு கையில் அவளை தாங்கி, இதயத்தில் அணை போட்டு,மறுக்கையால் கத்தாது அவள் இதழ் மூடி.. நெஞ்சாங் கூட்டில் பொ(ப)தித்துக் கொண்டான் பாரதி. பேச முடியாமல் .. வெறுப்பாக யுவதி பாரதியை நோக்கிட..!
தீ துளிகளாய்.. அவள்
விஷம் சிந்தும் கொல்லும் விழிகள்.! கொள்ளை செய்தது வீரனை.!
இருபத்தியேழு வருடம் பெண்வாசனை உணராதவனை.. தன் வாசனை திரவியத்தின் வாசத்தில் மூழ்கடித்தாள் யுவதி. ஆணின் காப்பாற்றும் தொடுகை, உருமாறி .. காதல் தொடுகை ஆனது.
அப்படி அவளுள் மூழ்கியவன். கைகள் சதை சிதையும் அளவு பற்களால் பதம் பார்த்தால் அவனிடம் வகையாக சிக்கியவள்.
கையை உதறி விட்டு திட்டினான். "ஆ..! பொண்ணா டி.. நீ..பேயி .. ரத்த காட்டேரி.." வலி பொறுக்க முடியாமல் அலறினான். அவள் கூர் பல் பதித்ததில் காயமான தடங்களில் இருந்து ரத்தம் கசிந்தது.
" பொறுக்கி " ஆவேசமாய் ஓங்கி அறைவிட உயர்ந்த கைகள் அப்படியே ஒடுங்கியது. அவன் ஒற்றை சொல்லில்.
அவனது ஐடி கார்டை அவள் முகம் முன் காட்டி " உங்க அப்பா இங்க தான் இருக்காங்க. மரியாதையா வாய மூடிட்டு என்கூட வா .. இல்ல பிரச்சனை பண்ணனும் னா பண்ணு, நீ யாரை பார்க்க வந்தேன்னு நான் அவர்கிட்ட சொல்லுவேன். வீட்டுக்கு தெரியாம தான வந்திருப்ப, ஆபீஸ்ல வேலை பார்க்கிற எல்லாருக்கும்.. நீ.. எம் டி பொண்ணுன்னு தெரியும்.யாருக்கு அசிங்கம் னு யோசிச்சு கோ.!" கையை உதறி விட்டு அசால்டாக நின்றான்.
அவனின் மிரட்டல் பேச்சு .. நடுங்க வைத்தது. இதுவரை அடங்காத தாக்குதலில் ஈடுபட்ட சிங்கப்பெண். மருண்ட விழிகள் கொண்ட மான் போல அவன் பின்னோடு நடந்தாள். வாசல் வந்ததும்.
சுயம் தொலைத்து கெஞ்சினாள்." சார்.. தெரியாம வந்துட்டேன். இனிமே இப்படி பண்ண மாட்டேன். என் ஸ்கூட்டி ல நேரா காலேஜ் பொய்டுறேன். அப்பாகிட்ட சொல்லிடாதிங்க சார்." தந்தையிடம் மாட்டினால், மகள் வந்தது சொகுசு அறை என்பது.. தவறாக வேறு வகையில் நினைத்துவிடுவார் என்று இப்போது தான் புத்தியில் உரைத்தது.
பூமர் அங்கில் மோமென்ட் " அப்பா கிட்ட சொல்ல மாட்டேன். உங்க அம்மாகிட்ட தான் சொல்லுவேன். ஆட்டோ .. " என குரல் தர ஆட்டோ வந்து நின்றது. அவன் நெருங்கி வர வர தானாய் ஆட்டோவில் ஏறி கம்பியோடு ஒட்டி அமர்ந்தாள் யுவதிகா. காதில் சங்கு சத்தம் கேட்டது. தாயை பற்றி தெரியுமே..! பயத்தில் கண்ணீர் வடித்தாள். ' சரியாக இருப்பதை கூட தவறான கோணத்தில் அலசி ஆராயும் குணம் படைத்தவர் நீலாம்பிகை. அடுத்து என்ன நடக்குமோ? கொலை நடுக்கத்தில் யுவதிகா.
நீலாம்பிகை- ஹலோ.. சொல்லு அம்மு.. (அம்ருதா)காலேஜ் டைய்ம் ல ஏன் கால் பண்ணி இருக்க?" என சொல்லிவிட்டு செல்லாத மகளை பற்றிய யோசனையோடு கேள்வி எழுப்ப,
" நீலா மம்மி.. ஏன் இந்த ஓரவஞ்சனை.. அவள மட்டும் பார்ட்டிக்கு அழைச்சுட்டு போறீங்க? "
" யுவதி காலேஜ் வரலையா?" என கேட்ட தாயின் இதயம் நின்று விடும் நிலையில்,
" அப்ப பார்ட்டி ..க்கு நீங்க அழைச்சுட்டு போகலையா? " அதிர்ந்தாள் அம்மு.
வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்றது. ஒரு வாலிபனுடன் யுவதிகா வந்து இறங்கி வர.. " யுவதி இங்க தான் இருக்கா, நீ கிளாஸ் போ.. " அழைப்பை துண்டித்து இடிகளை தாங்க இதயத்தை தயார் செய்து, விழி மாறாது தலை குனிந்து வரும் மகளை பார்வையால் துளைத்தார்..நீலாம்பிகை வேணுகோபாலன்.
நன்றிகள்
கோடி

Last edited: