Sowndharyacheliyan
Writer
வான்மழை 13:
“உங்க வேலையை என்னைக்கு நான் கொறையவே நினைச்சதில்லைங்க. நேத்து நைட்டு சும்மா விளையாட்டுக்குத் தான் நான் உங்களை டீஸ் பண்ணேன். நீங்க இவ்வளவு ஹேர்ட்டாகி கோபத்துல அப்புடி பண்ணுவீங்க என்று சத்தியமா தெரியாதுங்க,
தெரிஞ்சுருந்தா அப்புடி பேசியிருக்கவே மாட்டேன். எனக்கு மொதல்ல மொதலா வந்த வரன் நீங்க தாங்க, வேற எந்த டாக்டரோ, ஜ.டி மாப்பிள்ளையோ வரலைங்க!
உங்களை, உங்க வேலையை பிடிச்சுப் போயி தாங்க, நான் இந்தக் கல்யாணத்துக்கே ஓகே சொன்னேன்.
நான் செஞ்சது தப்புத் தான் ஆனா, அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையே நீங்க கொடுத்துருக்க வேண்டாம்.
நம்ம வாழ்க்கையில எவ்வளவு முக்கியமான நாள் இன்னைக்கு, எவ்வளவு ஞாபகார்த்தமா வச்சுக்க வேண்டிய நாள் இன்னைக்கு. ஆனா என்மேல இருக்கிற கோபத்துல இன்னைக்கு வராம இருந்து என்னை அவ வைச்சிட்டீங்களா!” என குரல் கரகரக்க பேசியவள்,
“நான் பேசுனது உங்களை ஹேர்ட் பண்ணிருந்தா சாரிங்க, ஆனா பதிலுக்கு நீங்களும் என்னை வலிக்க வச்சுட்டீங்களா.” என தேம்பியபடி அவள் போனை அணைத்திட,
“வருணாக்ஷி!” என கத்தி யவனுக்கு லைன் கட்டான சத்தம் வர,
“அவசரக்குடுக்கை இவளை வச்சிக்கிட்டு!!” என பல்லைக் கடித்தவனுக்கு அவளது பேச்சு கோபத்தை வயவழைத்ததோடு அவளது அழுகை மனதை பிசைய,
“கிருஷ்ணா ஒரு பத்து நிமிசம் வெயிட் பண்ணுங்க, நான் வந்துடுறேன்.” என்றபடி மீட்டிங் ஹால் சென்றவன், ஏற்கனவே அவன் கேட்டிருந்த அரை நாள் விடுப்பினை நினைவுப்படுத்தி, அங்கிருந்து கிளம்பியிருந்தான் கிருஷ்ணாவுடன்.
வரும் வழி எங்கும் வருணாக்ஷியை மனதில் வறுத்தெடுக்க மறுக்கவில்லை.
“ஏன் கிருஷ்ணா, உங்க தங்கச்சி எப்பவுமே அப்புடித்தானா, இவ்வளவு அவசரக்குடுக்கையாவ இருக்குறது. அவ சொல்றதை கேட்டு நீங்களும் வந்திருக்கீங்களே!” என மச்சினனையும் வறுத்தெடுக்க அவன் மறக்கவில்லை.
நேராக அவர்கள் இருந்த கடை வாசலில் வண்டியினை நிறுத்தியவன், கிருஷ்ணாவிடம் வண்டியை கொடுத்து விட்டு வேகமாய் படியேறினான்.
“வாப்பா முகிலா, மீட்டிங் எல்லாம் முடிஞ்சா?” இவனைக் கண்டு மாகலிங்கம் அழைக்க,
அவரின் சத்தத்தில் அனைவரும் திரும்பி இவனைக் கண்டனர்.
“முடிஞ்சதுப்பா” என அவனிற்கு பதிலளித்தவன், தன்னை நோக்கி வந்த குருசாமி - மல்லிகாவினை கண்டு,
“வாங்க மாமா, வாங்க அத்தை” என அவர்களை வரவேற்க,
“வாங்க தம்பி வேலை எல்லாம் முடிஞ்சா?” குருசாமி கேட்டிட,
“எல்லாம் முடிஞ்சது மாமா”.
“அப்பறம் என்ன, மாப்பிள்ளை வந்துட்டாரு கல்யாணப் பட்டு எடுத்திடலாம்ல” வருவின் பெரியத்தை கூறிட,
“பொண்ணுங்க மேல் ப்ஃளோர்ல இருக்காங்க, நான் போன் பண்றேன்” மல்லிகா அவர்களை அழைக்க முயல,
அவரை தடுத்து விட்டு,
“இருக்கட்டும் அத்தை நான் போய் கூட்டிட்டு வரேன். நீங்க எல்லாரும் புடவையை பாத்துட்டு இருங்க” என்றுவிட்டு தனது அவசரக்குடுக்கையை அழைக்க, தானே சென்றான்.
இங்கே, முகிலனிடம் பேசிவிட்டவளிற்கு அழுகை நின்றப்பாடில்லை. நிச்சயம் இப்படி பட்ட எதிர்வினையை முகிலனிடம் இருந்து அவள் எதிர்பார்க்கவில்லை. லிஃப்ட்டிற்கு பக்கத்தில் இருந்த படிகளில் வருணாக்ஷி அமர்ந்திருக்க, அவளிற்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்திருந்தாள் கெளரி.
இவர்களை தேடிக் கொண்டு லிஃப்ட்டில் வந்த முகிலனின் கண்ணில் கெளரி தென்பட, கெளரி யின் விழிகளிலும் விழுந்தான் அவன்.
“அண்..” என அழைக்க வந்தவளை கையமர்த்தி தடுத்தவன் சைகையால வருணாவை கேட்க,
பதிலுக்கு படிக்கட்டினை சுட்டிக் காட்டியவள், அங்கிருந்து மெல்ல நகர்ந்து இவனருகே வந்தவள்,
“அம்மிணி ஒரே அழுகை அண்ணா, பாத்து கூட்டிட்டு வாங்க, நான் கீழேப் போறேன்.” என்றபடி அவள் கீழிறங்கிட,
எட்டி படிகட்டினை பார்த்தவனிற்கு முதுகை காட்டியவாறு பக்கவாட்டில் திரும்பி அமந்திருந்தவளின் அருகு சத்தமில்லாமல் சென்றமர்ந்தான்.
இவனது அரவத்தில் கெளரி என நினைத்தவள், மூக்கை உறிஞ்சி, உறிஞ்சி அழுதவள் தனது துப்பட்டாவிலயே கண்ணீரை துடைக்க,
“உன்னோட துப்பட்டாவே போதுமா? இல்லை டிஸ்ஸூ பேப்பர் ஒரு பண்டல் வாங்கவா?” என்றவனின் நக்கல் குரலில் அவள் பதறி திரும்பிட, மூச்சு முட்டும் நெருக்கத்தில் அமர்ந்திருந்தவனை கண்டு அவள் விதிர்த்தே எழ முற்பட,
அவளதா கைகளை பற்றி இழுத்து மீண்டும் அமர வைத்தவன்,
“எல்லாத்துலயும் அவசியம்தானா வருணாக்ஷி உனக்கு, சரியான ஆர்வக்கோளாறு” என திட்டியவன், இரு பெரிய துணி பண்டல்களை தூக்கிக் கொண்டு அவர்களை கடந்திருந்த இளைஞர்களை சுட்டிக் காட்டியவன்,
“இன்னேரம் எழுந்த வேகத்துல அவங்களோட இடிச்சிருப்ப, அக்கம் பக்கம் பாக்குற பழக்கமே இல்லையா.” என அவளைக் கடிய,
அவன் வந்து விட்டான் என்பதில் உள்ளூர் பூத்த உவகையோடு அவனைப் பார்த்திருந்த வழுக்கு அவனின் திட்டு கோபத்தை வரவழைக்க,
“இடிச்சா கீழே விழுந்துட்டுப் போறேன். உங்களுக்கென்ன? ரொம்பத்தான் அக்கறை!” என அவள் சிலுப்பி முகம் திருப்ப,
“ஏன்? உன் மேல எனக்கு அக்கறையில்லையா?”
“ஆமாமாமா அக்கறை இருக்குறவரு தான் என்னை இப்புடி அழ வச்சிங்க. இன்னைக்கு எவ்வளவு சந்தோசமான நாள், ஆனா விளையாட்டா ஒரு வார்த்தை விட்டதுக்கு என்னை இப்புடி பழி வாங்கிட்டுங்கிள்ள.” என இப்போதும் யோசியாது அவள் வார்த்தைகளை விட,
அவளின் பழி என்ற வார்த்தையில் கோபமுற்றவன், ஓங்கி அவள் தலையில் கொட்டியிருந்தான்.
“இப்புடித்தான் அவசரகுடுக்கையா வார்த்தையை விடாதன்னு சொல்றது வருணா. என்னோட சூழ்நிலை என்னன்னு புரியாம எவ்வளவு ஈசியா பழி வாங்கறேன்னு வார்த்தையை விடுற நீ? உன்னை பழி வாங்குறதுக்கு நீ என்னோட எதிரியா? இல்லை எனக்கு துரோகம் ஏதும் பண்ணியா நீ?.
நமக்கு கல்யாணம் நடக்கப் போகுது வருணா, இன்னும் இரண்டு வாரத்துல நம்ம வாழ்க்கை ஒண்ணாகப் போகுது. நம்மளோட வாழ்க்கை, நம்மளோட குடும்பம் எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாகப் போறோம். இதுல எப்புடி நீ இவ்வளவு வார்த்தைகளை விடுற.
பேசுறதுக்கு முன்னாடி, நம்ம எதிர்ல இருக்குறவங்க ஹேர்ட் நாங்களா இல்லையான்னு எல்லாம் யோசிக்க மாட்டியா நீ, பழி வாங்குற அளவுக்கு அவ்வளவு கீழ்தரமானவனா நான், அதும் பொண்டாட்டிய் ஆகப் போறவளை! என்னை பத்தி எவ்வளவு நல்லெண்ணம் உனக்கு.” என ஒரு கத்து கத்தியவன் அவளைப் பாராது திரும்பி அமர்ந்துக் கொள்ள,
அவனது கூற்றில் தனது தவறு உணர்ந்தவளுக்கு மேலும் அழுகை கூடியது. அவளும் யோசியாமல் தானே வார்த்தைகளை விட்டு வாங்கிக் கட்டி கொள்கிறாள்.
அழுகையில் உதடு கடித்தவள்,
“சாரிங்க!” என்றபடி தேம்ப, இம்முறை அவளது அழுகை அவனை கரைக்கவில்லை.
“ப்ளீஸ்ங்க சாரி, இனி நான் பார்த்து பேசுறேன். உங்க கிட்ட நான் என்ன பேசுனாலும் அது அப்பாவே முடியுது. ப்ளீஸ் இந்த ஒருதரம் மன்னிச்சுடுங்க, சாரி! இனி அப்புடி நடக்காம இருக்க பாக்குறேன்.” என்றபடி அவன் கைகளை பற்றிக் கொண்டு அவள் கலங்க,
அதற்குமேல் அவளது கண்ணீரை காண சகிக்காதவன்,
“வருணா, ப்ளீஸ் நான் உன்கிட்ட வைக்கிற ரெக்வோஸ்ட் இது. எப்பவும் உன்னோட விளையாட்டு பேச்சு எதிர்ல இருக்குறவங்களுக்கு சந்தோசத்தை தராது. உன்னோட சின்ன விளையாட்டு தினம் கூட அவுங்களை பயங்கரமா காயப்படுத்தும்.
இதுவரை நீ இருந்தது வேற உன் குடும்பத்தாளுங்க கிட்ட எப்புடி வேணும்னாலும் நடந்திருக்கலாம். ஆனா இனி நீ வரப் போறது ஒரு கூட்டுக் குடும்பத்துக்குள்ள, அங்க நான் மட்டும் இருக்க மாட்டேன். உன்னோட இந்த விளையாட்டுத் தனத்தை நீ கண்டிப்பா கொறைச்சியே ஆகணும்.
அங்க நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் எப்புடி வேணும்னாலும் மாற வாய்ப்பிருக்கு. உன்னோட அவசரத்தனத்தால அங்கே குடும்பத்துக்குள்ள பிரச்சனை பண்றதை நான் விரும்பலை. சோ பாத்து கவனாமா நடந்துக்கோ.” என்னவனை கண்டு உள்ளூர பயப்பந்து உருண்டது வருணாவிற்கு இருந்தும் அதனை வெளிக்காட்டாமல்,
“சரிங்க!” என்றதோட அவள் நிறுத்திக் கொள்ள,
“கீழேப் போகலாம்!” என்றபடி அவன் எழ இருவரும் கீழே வந்தனர்.
பட்டு செக்சனில் முன் பெண்கள் கூட்டம் அலைமோத, அந்த அலைகளில் சென்று ஐக்கியமாகினர் வருணாவும், முகிலனும்.
ஒவ்வொரு புடவையாக அலசி ஆராய்ந்து, அவள் மீது வைத்துப் பார்த்ததிலே களைப்புற்றுப் போனாள் வருணா.
புடவை வருணாவுக்கும், முகிலனுக்கும் பிடிப்பதை விட மற்றவர்களின் விருப்பமே அங்க முதன்மை பெற்றது.
இதில் சுபா வேற இடையிடையே பெரியமருமகள் என்ற தோரணையில் அதிகாரம் செய்ய, பதிலுக்கு வருணாவின் அத்தை கள் அதிகாரம் செய்ய என ஜெகஜோதியாக நடந்தது புடவை எடுக்கும் நிகழ்வு.
இறுதிவரை ஒன்றினை தேர்வு செய்ய விடாமல் இருப்பக்கமும் இழுத்தடிக்க, தலையை பிடித்துக் கொண்டாள் வருணா.
அவளைக் கண்ட முகிலனிற்கு பாவமாகவும், இரு பக்க உறவினர்களின் செயலில் கடுப்பாகி போனவன்,
“அம்மா, நீங்க முத்தத்துக்கு புடவைய பாருங்க, கல்யாணப் புடவையை நாங்க ரெண்டு பேரும் செலக்ட் செஞ்சிக்குறோம்.” என்றவன்,
“வருணாக்ஷி வா” என்றபடி அவளை தன்னருகே நிறுத்திக் கொண்டவன், எடுத்துப் போட்டிருந்த புடவைகளை ஆராய்ந்தப்படியே,
“பாரு வருணா! உனக்கு எந்த புடவை பிடிச்சிருக்குன்னு.” என்றபடி அவளையும் உள்ளிழுத்தவன் அரைமணி நேர தேடலில் மெஜந்தா கலரில் பச்சை பார்டர் வைத்த புடைவையினை ஒரு மனதாக தேர்ந்தெடுத்திருந்தனர்.
மாப்பிள்ளையே புடவையை தேர்வு செய்திருந்ததால் அங்கே மறுப்புக்கு பஞ்சமாகிப் போனது. அடுத்தடுத்த சடங்குகளுக்கு புடவையை எடுத்தவர்கள் பின் வீட்டாள்களுக்கு புடவையை எடுக்க ஆரம்பிக்க,
சுபாவிற்கு வருணாவின் புடவை விலை தெரிய வேண்டியிருந்ததே. அப்போதுதானே கருணாவிற்கு எடுத்ததை விட சில ஆயிரங்களாவது கூட எடுக்க முடியும். ஆனால் எங்கே புடவை எடுத்துக் கையோடு முகிலன் அதனௌ பிஃல்லிற்கு கொடுத்து விட்டிருந்தானே!
“அத்தை! கல்யாணப் புடவை எடுக்குது நம்மளா இல்லை பொண்ணு வீட்டுக்காரங்களும் பங்கா?” அவள் கேட்டிட,
“கல்யாணப் புடவை நம்ம தான் எடுத்துக் கொடுப்போம் சுபா.”
“ஓஹ்! எப்புடியும் புடவை விலை இருபதாயிரத்தை கொண்டிருக்கும் போலயே.”
“அதுக்கும் மேல இருக்கும் சுபா.”
“ஏன் த்தை கல்யாண செலவு முழுசா நம்ம பக்கம் தானே! இந்த கல்யாணம் புடவைல கூட பொண்ணு வீட்டுக்காரங்க பங்கு போடக் கூடாதா?”
“உங்களுக்கு உங்கம்மா வீட்டாளுங்க பங்கு போட்டாங்களா சுபா அண்ணி!” என்றவாறு மேகலா வர,
அவளது கேள்வியில் முகம் கருத்துவிட்டது சுபாவிற்கு.
“மேகலா என்ன பேச்சிது?”
“இல்லைம்மா அண்ணிக்கும் நம்ம தானே எல்லாம் செஞ்சோம். புடவை எடுக்கறதுல இருந்து ரிசப்சன் செலவு மொத்தமா நம்ம தானே பண்ணோம். அதான் சுபா அண்ணி மறந்திட்டாங்களோன்னு ஞாபகம் படுத்தினேன்.” என்றவளின் இழுவையில் பல்லைக் கடித்தாள் சுபா.
பின்னே,பரணியும் இவளும் வீட்டு விட்டு சென்று திருமணம் முடித்து விட்டு, வாசலில் வந்து நிற்க முதலில் கோபப்பட்டாலும் பின் மகாலிங்கம் ஏற்றுக் கொண்டாரே!
இவர்களுக்கு திரமணமானதை ரிசப்ஷன் போல வைத்து விடலாமா என சுபாவின் அம்மாவிடம் கேட்டதற்கு,
“தாராளமா செய்யுங்க, ஆனா என்கிட்ட இருந்து எதுவும் எதிர்பாக்காதிங்க” என்றவரிடம் ரிசப்சனுக்கு மட்டும் வந்தால் போதுமானது என்றிருந்தார் மகாலிங்கம்.
பெண்ணிற்காக ஒரு குண்டு மணி தங்கம் கூட இன்னாள் வரை போடவில்லையே அவர். அப்படி இருக்கையில் மேகலாவை எதிர்த்து பேசி விட முடியுமா அவளால்!
அதன் பிறகு வாயை திறக்கவில்லை அவள்.
இங்கே பில் போடும் இடத்தில் கூட்டமாக இருக்க, முகிலனோட வந்த வருணா கவுண்டர் பக்கம் இருந்து அணிகலன்கள் பிரிவுக்கு சென்றாள்.
முகிலன் பில் போட்டு முடிக்கும் வரை அங்கே உலாத்தியவளுக்கு, அங்கே இருந்த பாசி பச்சை கண்ணாடி வளையல் கவனத்தை ஈர்க்க, அதனருகே சென்றாள்.
முகிலன் பணத்தை கட்டி விட்டு அவளை தேடி வர,
“ஏங்க இந்த வளையல் அழகா இருக்கு எடுத்துக்கட்டுமா?” என கையில் வைத்து கேட்க,
“இதுவா பிடிச்சிருக்கு?”
“ம்ம் ஆமா!”
“கண்ணாடி உடையாதா? வேற பாரேன்.”
“உடையாமா நான் பாத்துக்கிறேன். அப்புடியே உடைஞ்சாலும் பரவாயில்லை என் ஆசைக்கு கொஞ்ச நாள் போட்டுக்கிறேன்.” என,
சரி என்று தலையசைத்தவன் அதனை வாங்கி அவளிடம் நீட்ட,
சிரித்
தப்படியே தனது கைகளை அவனிடம் நீட்டினாள் வருணா. அவளது செய்கையில் மென்னகை பூக்க, அவளது கைகளை அழுந்தப் பற்றியவன், ஒவ்வொரு வளையலாக அவளிற்கு போட்டு விட்டான் அவன்.