priya pandees
Moderator
அத்தியாயம் 9
மருத்துவர்கள் அன்றும் சிலருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தாலும், கவனம் அறிக்கையை எதிர்பார்த்தே இருந்தது. மற்றவர்களுக்கு அவர்கள் மருத்துவமனை தலைமையிடமிருந்து வரவேண்டிய அறிக்கை, இனியும் இங்கு தொடரவேண்டுமா இல்லை இன்றுடன் கேம்ப்பை முடித்து கொண்டு கிளம்ப வேண்டுமா என்ற குழப்பத்தில் அந்த அறிக்கையை எதிர்பார்த்திருந்தனர்.
யாஷ் அவன் மனைவியின் மருத்துவ அறிக்கையை எதிர்பார்த்து காத்திருந்தான். என்ன வந்தாலும் குணப்படுத்திவிடும் முனைப்புடன் தான் அதை எதிர்பார்த்திருந்தான்.
அறிக்கைகள் வந்து சேர மாலை ஆகிவிட்டிருந்தது. மருத்துவர்களுக்கு சென்ற வேலையை முழுமையாக முடித்து விட்டு தான் வரவேண்டும் என்று உத்தரவாக வந்திருந்தது. எவ்வளவு நாள் எடுத்தாலும் நூற்றைம்பது கிராம மக்களுக்கும் முறையே பரிசோதனை முடித்து தான் திரும்ப வேண்டும் என வந்துவிட, மருத்துவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இறங்கினர்.
வருணியின் மருத்துவ அறிக்கையில் தீவிர கவனமாக இருந்தான் யாஷ். அதனால் மற்ற மருத்துவர்கள் அவர்களே இடமாற்றம் செய்ய வேண்டியவைகளை க்ளாடியனுக்கு எடுத்துரைத்து கொண்டிருந்தனர். அவர்கள் அடுத்து தங்க வேண்டிய இடம், மருத்துவ பரிசோதனை கூடத்தையும் மொத்தமாக மாற்ற வேண்டிய கட்டாயம் என அவர்கள் கலந்தாலோசிக்க வேலைகள் நிறைய இருந்தன.
யாஷ் அவர்கள் மருத்துவ குழுவிடமிருந்து சற்று தள்ளி ஒரு மரத்தடியில் கிடந்த கல்லில் அமர்ந்திருந்தான்.
"என்ன வந்துருக்கு மாமா?" என அவனருகிலேயே அவன் முகத்தை ஆராய்ந்து கொண்டு அமர்ந்திருந்தாள் வருணி.
"இட்ஸ் லைக் ஹெர்னியாடி. குடல்ல புண் மாதிரி கட்டி அல்லது சதை வளந்துருக்கு. அன்னைக்கு வயித்துல ஸ்கேன்ல தெரியல, மேபி லேப்ரோஸ்கோபி பண்ணா எந்த இடத்துல இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். பட் கண்டிப்பா ஆப்ரேட் பண்ணணும்" பார்வையை அறிக்கையிலிருந்து விளக்காமலே கூறிக்கொண்டிருந்தான்.
"மை குட்நெஸ்" என அதிர்ந்து எழுந்து நின்றவள், "மாமா! அப்ப சாகுறளவுக்கு பெரிய நோய் இல்ல?" என அதிர்ச்சி விலகாமலே கேட்க, அப்போது தான் நிமிர்ந்து நன்கு முறைத்து பார்த்தான் யாஷ்.
"ஜீஸஸ். நா இப்ப என்ன பண்ணுவேன். இத யார்டையாவது சொல்லி பார்ட்டி பண்ணணுமே? மாமா வா வா ஜலக்ரிடை பண்ணுவோம். நா செம ஹேப்பியா இருக்கேன். பட்ட பகலா இருக்கே வெளில தெரியுமோ? வா மாமா" என அவனை சுற்றி வந்து கையை காலை உதறி அவனை இழுத்து எழும்பி நிற்க வைத்து அப்படியே பாய்ந்து கழுத்தோடு கட்டிக்கொண்டவளுக்கு, கண்ணை கரித்து கொண்டு அழுகையும் வந்தது.
"டேய் யாஷ் நா சாக மாட்டேன்டா" என நிமிர்ந்து அவன் முகமெல்லாம் முத்தமிட்டு, ஆவேசமாக அவன் இதழோடு ஒன்றிக் கொள்ள, யாஷ் நிதானமாகவே இருந்தான். அவளின் மனபோராட்டத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அன்றும் இப்படி தானே பரிதவித்தாள் என பார்த்திருந்தான்.
ஒருகையிலிருந்த மருத்துவ அறிக்கையோடு அவளை தானும் இறுக்கி அணைத்து கொண்டவன், "ரிலாக்ஸ் வருணி. எதுவுமே இல்லன்னு ரிப்போர்ட் வரல, டிசிஎஸ் இருக்குன்னு ரிப்போர்ட் வந்துருக்குடி. இன்கேஸ் நீ இப்பவும் இத என்னன்னு பாக்க விடாமலே வச்சுருந்தனா இன்னும் சிவியராகி மொத்த இன்டெஸ்டைன்னும் காலி ஆகிருக்கும். அப்றம் பவெல் இல்லாத மிருகம் மாதிரி உயிர் வாழ முடியுமா உன்னால? நீ லேசா முடிச்சுருக்குறத அல்ரெடி ரிஸ்காக்கி வச்சுருக்க, இப்ப உள்ள புண்ணு எந்தளவுக்கு இருக்குன்னு தெரியலடி" என்றவன் அவளை கட்டி பிடித்திருந்தாலும் முதுகில் அடி போட்டுக் கொண்டே தான் பேசிக் கொண்டிருந்தான்.
நிமிர்ந்து அவன் முகம் பார்த்து, கன்னம் பிடித்து கொஞ்சி சிரித்தவள், "ஒன் இயரா தான் சிம்பட்மஸ் இருக்கு, சோ பெருசா எதுவும் இருக்காது. அண்ட் இங்க வந்தும் இத்தன நாள்ல எனக்கு எதுவும் வரல பாத்த தானே? சோ லேசா தான் இருக்கும் சரியாகிடும். நா ஹண்ட்ரட் இயர்ஸ் வாழ போறேனே!" என அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கொண்டு அழுது, சிரித்து, குதித்து என அவனை ஒருவழி ஆக்கினாள்.
பிஸ்மத்துடன் பேசி நின்ற அனைவரும் கூட இவர்களை திரும்பி பார்த்தனர், அவள் எதற்கோ சந்தோஷமாக இருக்கிறாள் என புரிந்து, சிரித்தவாறே, "இஸ் ஷீ ஓகே?" என்றார் இருந்த இடத்தில் இருந்தே சத்தமாக பிஸ்மத் யாஷிடம்.
"டாக்டர் பிஸ்மத்!" என யாஷை விட்டுவிட்டு அவரிடம் ஓடிவந்த வருணி, அவர் கையை பிடித்து தானும் சுற்றி அவரையும் சுற்ற வைத்து, ஆர்பாட்டம் தான் செய்தாள். அவர் புரியாமல் சிரித்தாலும் அவளுடைய சந்தோஷத்தில் இணைந்து கொண்டார்.
"என்னாச்சு?" என யாஷிடம் கேட்ட மற்றவர்களிடம்,
அவள் சந்தோஷத்தை பார்த்து தானும் உள்ளாற மகிழ்ந்த யாஷ், "ஏதோ பயங்கர நோய்னு எங்க எல்லாரையும் ஒரு வருஷமா படுத்திட்டா. அது என்னன்னு கூட செக் பண்ணமாட்டேன்னு அடம். இங்க வந்ததுல அறிவு வந்து செக் பண்ண ஒத்துகிட்டா, அதோட ரிப்போர்ட்" என்றான் கையிலிருந்ததை காண்பித்து.
"ஓ! நா நினைச்சேன், வருணி ப்ரெக்னன்ட் சோ நீங்க ஸ்கேன், ப்ளட் டெஸ்ட்டுலாம் பண்றீங்கன்னு. இப்பவும் அதோட டெஸ்ட் பாஸிட்டிவ்னு அவ என்ஜாய் பண்றா போலன்னு" ஜெனிலியா இவ்வாறு சொல்லவும்,
"அடுத்த ஸ்கேன் அதுக்கா தான் இருக்கும்" என்றான் யாஷ், மற்றவர்கள் சிரிக்க,
"ஒரு டாக்டரா இருந்துட்டு அவ ஹெல்த்த அவளே சரியா பாத்துக்க மாட்டாளாமா?" என்றாள் ஜெனிலியா.
"இப்ப எல்லாம் நார்மல்னு வந்துட்டா?" என ஒருவர் கேட்க,
"டாக்டர் பிஸ்மத்ட்ட ஒருக்க காட்டணும். அவர் தான் எக்ஸாக்டா என்னன்னு சொல்லணும்" என்றான். அதிலேயே மற்றவர்கள் புரிந்து கொண்டனர்.
டாக்டர் பிஸ்மத் ஒரு 'கேஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட்' குடல், இரைப்பை, உணவுக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க கூடியவர்.
வருணி, ஒரு நிலையில் இல்லாமல் துள்ளிக்கொண்டு தான் திரிந்தாள். கிட்டத்தட்ட ஓராண்டு கவலையை இறக்கி வைத்துவிட்ட நிம்மதியில் கால் தரையில் நில்லாமல் சுற்றி வந்தாள்.
அவள் ஆர்ப்பாட்டத்தில் மற்றவர்களும் அயர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற்றனர் என்றே சொல்லலாம். அன்று இவர்கள் அங்கிருந்து கிளம்புவதால் அந்த இருப்பத்தைந்து கிராம மக்களும் கூட ஒன்றிணைந்து இவர்களுக்கென்று இரவு உணவு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
"நா நல்ல மூட்ல இருக்கேன். இவனுங்கட்ட விருந்துன்னு போனா அந்த நல்ல மூட வந்த தடம் தெரியாம காணாம ஆக்கிடுவாங்க மாமா. சோ நா வரல, நீயும் போகாத நாம தனியா இங்கேயே என்ஜாய் பண்ணலாம்" என கண்கள் இரண்டையும் அவள் சிமிட்டி சிமிட்டி பேசியதில், யாஷுக்கு அப்படியொரு சிரிப்புதான். குளித்து கிளம்ப பாக்ஸரோடு நின்றவனை தான் உசுப்பேற்றிக் கொண்டு நின்றாள்.
"நீ இன்னைக்கு நா எதுவும் டிமாண்ட் பண்ணாமலே அள்ளி குடுப்பன்னு தெரியும். இருந்தாலும் இப்ப நாம போலாம். எல்லாரும் போகும் போது நம்ம மட்டும் வரலன்னு சொன்னா எனக்கு மட்டும் தெரிஞ்சது இங்க இருக்க அத்தன பேருக்கும் தெரிஞ்சுடும். அப்றம் நம்மள செக்ஸ்வல் அடிக்ட்ஸ்னு ஈசியா சொல்லிடுவானுங்க"
"சொன்னா சொல்லிட்டு போட்டும் மாமா" என அவன் முகத்தை நெருங்கி, இடுப்பைக் கட்டிக்கொண்டு சினுங்கியவளின் உதட்டை பிடித்திழுத்து தன்னோடு பொறுத்திக் கொண்டான்.
அவனும் பயந்து கொண்டு தானே இருந்தான், அவள் இல்லாமல் ஒரு நாளையும் தான் அவனால் கடத்திவிட முடியுமா என்ன? அவள் ஒருத்தி உடன் வேண்டும் என்றுதானே மொத்த மாணவர்களையும் உடனிழுத்துக் கொண்டு வந்துருக்கிறான். இப்போதும் உள்ளுக்குள் பயம் இருக்கிறது. ஆனால் முதலில் கண்ணுக்கு எதிரே இருக்கும் எதிரியே தெரியாத நிலைக்கு இன்று அது என்ன என்றும் தெரியும் குணப்படுத்தவும் முடியும் என்ற நம்பிக்கையில் வந்த ஆசுவாச முத்தம். ஆள்முத்தமாக அது நீடித்து அடுத்த கட்டத்திற்கு அது நீண்டு கொண்டிருக்க, சுதாரித்தான் யாஷ். மயக்க நிலையில் இருந்தவள் கழுத்தில் அவன் கடித்து வைத்ததில், "மாமா!" என அவனை தள்ளிவிட,
"போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வாடி. இப்ப எப்படியும் தேடி வருவானுங்க டிஸ்டர்பன்ஸோட எதுவும் வேணாம் எனக்கு" என்றவன் நீருக்குள் குதித்து விட்டான்.
"உன்ன பாத்துக்றேன்டா. பாதில விட்டுட்டு போறல்ல? மறுபடியும் கொஞ்சிட்டு வா முடிச்சுவிட்டுறேன்" என வெளியே நின்று இவள் கத்த,
"நான் முடிச்சா என்ன நீ முடிச்சா என்ன? சொர்க்கம் தானடி ரெண்டுமே?" என்றவன் நீரில் மிதந்து சிரிக்க,
"போடா பன்னிமாடு" என முறைத்து விட்டு திரும்பி நடந்தாலும், அவன் பதிலில் சிரிப்பு பீறிட்டு தான் வரபார்த்தது. தெரிந்தால் இன்னும் கலாய்ப்பான் என்பதால் விறுவிறுவென நடந்துவிட்டாள்.
அங்கு மரவீட்டில் பெண்கள் அனைவரும் கிளம்பி கொண்டிருக்க, இவளும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.
"விருந்துக்கு போணும்னு என்ன டீல்ல விட்டல்ல உன்ன என் பின்னயே ஜொல்லு விட விடல நா ஆரோன் மக இல்லடா மாமா" என்றவள் அவள் பெட்டியில் அலசி ஆராய்ந்தாள். அவள் எடுத்து வைத்தவரை அனைத்துமே மருத்துவப் பணிக்கு ஏற்ற உடைகள் மட்டுமே, ஒன்றிரண்டு வெளி நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற கூடுதல் வகை சுடிதார் ரகங்கள் எடுத்து வைத்திருந்தாள் அவ்வளவே.
"நானே பாத்து பாத்து தான் எடுத்து வச்சேன் அதுல ஒரு பெட்டியவே வீட்டுல விட்டுட்டான் அந்த கடங்காரன். இப்ப எல்லாம் வெஸ்ட்ர்ன் கேஸுவல் வியரா இருக்கு, இதுல எத போட்டாலும் மயங்க மாட்டானே!" என்றவள் அனைத்தையும் எடுத்து வெளியில் போட்டிருக்க, அடுத்திருந்த ஜிப் வைத்து பத்திரபடுத்தும் பொருட்களை வைக்கும் பகுதியை திறந்தாள், அது தான் அவள் மாத்திரைகள் எடுத்து வைத்த பகுதி, உள்ளே அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தது இரண்டு உடைகள், பிரத்யேகமாக தேனிலவிற்கென உடுத்தபடும் குட்டி இரவு உடை ஒன்றும், 'நெட்டட்' டாப்பும் ஷார்ட்ஸுமாக மற்றொரு குட்டி உடையும் இருக்க கண்டு அதிர்ந்து, அதை எடுத்து விட்டு உள்ளே வரை கையை விட்டு தேடிப்பார்த்தாள் அவள் உட்கொள்ளும் மாத்திரைகள் எதுவுமே அங்கு இல்லை.
"அடப்பாவி மாமா. நாம ஒன்னும் ஹனிமூன் ட்ரிப் போகல, மெடிக்கல் கேம்ப் போறோம், அங்க நா டாக்டரா தான் இருப்பேன் நீ ஸ்டூடண்ட்டா தான் இருக்கணும்னு என்னலாம் பேசுன? ஃப்ராடு! உன் ஜலக்ரிடைலயே நா சுதாரிச்சுருக்கணும்டா. அவன் மட்டுமே பாக்கறதுக்குனே தேடித் தேடி வாங்கிருக்கான். ஸ்டே பண்ண ரூம் கிடைச்சுருந்தா இந்த ட்ரஸயும் எனக்கு மாட்டி பாத்திருப்பான். கிடைக்கல பாவம்" என பல்லை கடித்தவள், இரண்டு கையிலும் அந்த உடைகளை வைத்து திருப்பி திருப்பி பார்த்திருக்க,
அருகில் சிலரும் தன்னையே பார்ப்பது அப்போது தான் புரிய திரும்பி பார்த்தாள், அவள் தனியாக புலம்பிக் கொண்டிருந்ததை தான் அங்கிருந்த பெண்கள் பார்த்து கொண்டிருந்தனர்.
"நைட் டின்னருக்கு ரெடி ஆகிடுவியா நீ?" என கேட்டாள் அவள் மாணவ நண்பர்களுள் ஒருத்தி.
"ஃபைவ் மினிட்ஸ்ல ரெடி ஆகிடுறேன் பாரு" என்றுவிட்டு, அப்படியே அனைத்தையும் பெட்டிக்குள் திரும்ப அமுக்கிவிட்டு, இருப்பதில் அகப்பட்ட அழகான ஒரு உடையுடன் எழுந்து கொண்டாள்.
கொஞ்சம் இருட்டாக இருந்த இடத்திற்கு சென்று உடை மாற்றிக் கொள்வது தான் அங்கு சென்றதிலிருந்தே அவர்கள் கடைப்பிடிப்பது. வருணியும் விளக்கொளி எட்டாத இடம் சென்று நின்று, அந்த கையில்லாத கருப்பு டாப்பையும், கிளிப் பச்சை நிறத்தில் வெள்ளை பூக்கள் போட்ட நீண்ட குடைபோன்ற அமைப்பு கொண்ட ஸ்கர்ட்டையும் அணிந்து கொண்டு ஐந்து நிமிடங்களில் வெளியேவும் வந்திருந்தாள். தெரிந்த வெளிச்சத்தில் முடிந்தளவு அவள் அழகை மேம்படுத்திக் கொண்டு, சுருட்டை முடியை மொத்தமாக ஒரு போனிடெயிலினுள் அடக்கிக் கொண்டு கிளம்பி விட்டாள்.
அவர்கள் குடிலின் கீழேயே விருந்திற்கு அனைத்து ஏற்பாடும் நடந்து கொண்டிருந்தது. ஆண்கள் அங்கு முன்னரே கூடியிருந்தனர், பெண் மருத்துவர்கள் தான் தாமதமாக சென்று இணைந்து கொண்டனர். காட்டுவாசி மக்களும், ஆண்களும் பெண்களுமாக கூட்டமாக கூடியிருந்தனர், அவர்களின் தலைவர் வரும்வரை அந்த இடமே கலகலப்பாக இருந்தது.
யாஷ் பார்வை எப்போதும் போல் மனைவியை தான் சுற்றி வந்தது, ஒரு மேசையில் சாய்ந்து நின்றவன் அவள் வேண்டுமென்றே இவனை கண்டுக்காமல் அங்குமிங்கும் அழைவது தெரிந்தும் அவள் பின்னரே பார்வையை தொடரவிட்டுக் கொண்டிருந்தான். அவள் எப்படி இருந்தாலும் அவனுக்கு கிறுக்கு பிடிக்குமளவிற்கு அழகாக தான் தெரிவாள், இதுபோன்ற சிறப்பு உடைகளில் இன்னும் பிடித்தம் அதிகம் பெற்று பித்து பிடித்துவிடும்.
அவர்கள் தலைவர் வரவும் விருந்து ஆரம்பமாகியது, "நாம கிளம்புறதுல அதிக சந்தோஷப்பட்டு தான் இந்த டின்னர் பார்ட்டியே குடுக்குறாருன்னு நினைக்கிறேன்" வருணி சொல்ல, மெல்ல சிரித்து கொண்டனர் மருத்துவர்கள்.
இந்த மருத்துவர்களால் அங்கு நன்மை அடைந்தவர்களும் இருக்கின்றனர், அவர்கள் நிச்சயம் இனி எந்த ஆங்கில மருத்துவத்தோடு மருத்துவர்கள் வந்தாலும் ஏற்று கொள்வர், இந்த தலைவர் போன்ற சிலர் மட்டுமே ஏற்கவே மாட்டோம் என அந்த பிடியில் உறுதியாக நிற்க கூடும். முக்கியமாக பெண்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வர், வலியில்லாத வாழ்க்கையை தானே அனைவரும் வேண்டுவது!
வருணி முதல் நாள் கண்ட மூன்று பெண்களையும் தன்னுடனே இருக்குமாறு பார்த்துக் கொண்டாள். அவர்களிடம் செய்கை முறையில் பேசிக் கொண்டே இருந்தாள்.
அவர்கள் கொடுத்த உணவு விருந்து, உப்பு உறைப்பும் குறைவாக இருந்தாலும் ருசியாக இருந்தது. எதிலுமே செயற்கை பூச்சு இல்லாத உணவு வகைகள் அதன் ருசியே தனியாக தான் இருந்தது.
"உங்களோட மருத்துவமும் எங்களோட மருத்துவமும் ஒன்று கிடையாது தான். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சலச்சதில்லை தான் ஆனாலும் எங்களால் முடியாத சிகிச்சைகள் என்றிருப்பதை நீங்கள் சுலபமாக செய்கிறீர்கள் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். வந்ததற்கும் எங்களுக்கு சிறப்பான பல மருத்துவத்தை செய்ததற்கும் எனது நன்றிகள்" என அவர்கள் மொழியில் தலைவர் பேச ஜனோமி ஆங்கிலத்தில் இவர்களுக்கு எடுத்துரைத்தான்.
உணவு நேரம் முடிந்ததும், "காலைல அடுத்த ஏரியா கிளம்பணும் க்ளாடியன். அங்க எல்லாம் ஷிஃப்ட் பண்ணணும். அங்க இதே மாதிரி எல்லா ஏற்பாடும் பண்ணணும்? எல்லாம் ஒரே நாள்ல பண்ணிடுங்க ப்ளீஸ். நாங்க எவ்வளவு சீக்கிரம் முடிக்குறோமோ அவ்வளவு சீக்கிரம் எங்க ப்ளேஸுக்கு ரிட்டர்ன் போக முடியும்" என்றான் யாஷ்.
"முதல்ல என்ன பண்ணணும்னு தெரியாதனால தான் எல்லாமே தாமதமாச்சு டாக்டர். இந்த முறை இப்படித்தான்னு தெரியும், அதனால நாளைக்கு அங்க போனதும் எல்லாம் ரெடி பண்ணி தந்துடுறோம்" என க்ளாடியன் சொல்ல,
"இந்த மூணு பேரையும் நாம கூட்டிட்டு போவோமா?" என்றாள் தன்னருகே நின்ற பெண்களையும் சேர்த்து தோளில் கையிட்டவாறு,
"இவங்க எதுக்கு?" என்றான் ஜனோமி.
"இந்த பொண்ணுங்க அங்க வந்தா அங்கிருக்குற மத்த பொண்ணுங்களுக்கு எங்க ட்ரீட்மெண்ட்ட ஈசியா சொல்லிடுவாங்க. இல்லனா இங்க நடந்த போராட்டம் அங்கையும் நடக்கும்"
"அவளுக்கு இப்பதான் குழந்தை பிறந்துருக்கு" என்றான் முந்தைய வாரம் குழந்தை பெற்ற பெண்ணை காண்பித்து.
"அதனால என்ன? எங்களால பாத்துக்க முடியும்" என்றாள் வருணி.
"தலைவர் ஒத்துப்பாரான்னு தெரியலையே?"
"இந்த பொண்ணு க்ளாடியன் வைஃப், அவரோட தான் வரப்போறா, அந்த பொண்ணு இப்பதான் குழந்தை பெத்துருக்கா, சோ ஹஸ்பண்ட் விட்டு தள்ளி இருக்கலாம் தப்பில்ல. இந்த பொண்ணு சின்ன பொண்ணு தானே? இவளோட அம்மாட்ட மட்டும் கேட்டா போதாதா?"
"பேசி பார்க்கறேன்"
"கண்டிப்பா நா கூட்டிட்டு போகணும். நாட்டுக்குள்ள கூட்டிட்டு போக கேட்கல, இதே காட்டுக்குள்ள உங்க சொந்தங்கள் வீட்டு பக்கம் கூட்டிட்டு போக தானே கேட்கிறேன்"
"எதுக்கு அவங்க?" என கேட்ட மற்ற மருத்துவர்களுக்கும், "கேர்ள்ஸ் அங்கையும் இவங்கள மாதிரி தான் கஷ்டப்பட்டுட்டு இருப்பாங்க. மறுபடி மறுபடி நாம எக்ஸ்பிளைன் பண்ணிட்டே இருக்க முடியாது. இவங்க அத நமக்கு ஈசியாக்குவாங்க" என்றுவிட, அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
"காலைல மூணு பேர் வீட்லையும் பேசிட்டு கூட்டிட்டு போகலாம்" என சொல்லிச் சென்றனர் க்ளாடியனும் ஜனோமியும்.