உமா கார்த்திக்
Moderator


"ப்ரீத்.. வீடியோ கால் பண்ணு" என்று பவித்ரா அங்கு கட் செய்யவும்.. இதயம் பயத்தில் இரண்டடி தள்ளி குதித்தது.. பயப்பந்து பல நூறு எண்ணிக்கையை தாண்டி உள்ளே உருள.. "மாரியாத்தா.. என்ன காப்பாத்துமா " என்று கதறி குலதெய்வ வழிபாட்டையும்.. காட்டி கொடுக்காமல் இருக்க காணிக்கையும் தருவதாய் டீல் பேசிவிட்டு ப்ரீத் அழைப்பை ஏற்க.
என்ன ஒரு அற்புதமான தருணம் இது.!! ப்ரண்ட் கேமரா முன் மாமன் மகள். பேக் கேமரா முன் விலைமகள்.. அட..டா..! இயல்பான முறையில் பேச முயன்றும் அவன் கண் எக்கு தப்பாய் சுழன்று திருட்டு முழி முழிக்க.!
பவித்ரா இடியை இறக்கினாள் மாமன் மனதில் "ஃப்ரெட் கேமரா ஆன் பண்ணு மாமா." அழுத்தமான குரலில் கட்டளையிட்டாள்.
ஆறாக நெற்றியில் வடியும் வேர்வையை துடைத்துவிட்டு " ஏன் பவி " என்று உதறலோடு கேட்க ?
"இல்லைடா வீட்ட சுத்தி பாக்கலாம்னு தான்..கேமரா ஆன் பண்ணி வீட்டை சுத்திக்காட்டு பாக்கனும், உன் லட்சணம் என்னானு ?
" ம்... ஒரு நிமிஷம். " கைகளால் கீழே அவளை அமர சைகை செய்ய வர்ஷா உடனே கீழே அமர்ந்தாள்.. உட்கார்ந்த வேகத்தினால் வளையல் கலகலக்க. அதை குறித்துக் கொண்டாள் பவி.. முகம் இறுகி கண்கள் சிவப்பேற கண்ணீரை உள் இழுத்து கை முஷ்டியை மடக்கி கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.
"துப்பாக்கி முனையில் பிடிபட்டவன் போல செல்போன் முனையில் சிக்கி தவித்தான் ப்ரீத் . மேலே உயர்த்தி பிடித்து காட்டியதால் கீழே அமர்ந்த வர்ஷா அவள் கண்களுக்கு புலப்படவில்லை.ஆனாலும் காதுகளுக்கு புலப்பட தப்பவில்லை.!
வேறு பெண் அவன் அருகில் இருப்பது உறுதியாக தெரிந்து விட்டது.
பவித்ராவிற்க்கு விளைவு என்னவோ?
ஒவ்வொரு அறையாக வீடியோ காலில் காண்பித்தவாறு நடந்தான் ப்ரீத்.
பவி-"சந்தீப் அண்ணா எங்க?"
பதட்டத்தை மறைத்து இயல்பாக "அவனா ப்ரண்ட் ரூம்க்கு போய் இருக்கான்."
"எப்ப வருவாங்க" என்று சிலவற்றை யூகித்தவாறு கேட்க?
" நாளைக் தான் வருவான். ஏன் பவி கேட்குற? "
"இல்லை தனியா இருக்கியே.. அதான் கேட்டேன். சரி ப்ரீத் நல்லா சாப்டுட்டு உடம்ப பார்த்துக்க சீக்கிரம் தூங்கு.என்ன.."
"ம் ஓகே பவி காலையில பேசலாமா.."
"ஏன் எதுவும் அவசர வேலை இருக்கோ? " அவசரத்தை மட்டும் சற்று அழுத்தமா கூறினாள். " "இல்லை நான் வெட்டியா தான் இருக்கேன். ஏதாவதுபேசனுமா?"
" மனசு உடைஞ்சா கூட திரும்ப சேரும் ஆனா நம்பிக்கை உடைஞ்சா அது என்னைக்கும் சேராது" இல்லை ப்ரீத். விரக்தியில் புன்னகை உதிர்த்தன அவள் இதழிகள்.
" என்னடி சொல்லுற ? " பதறி கேட்க.
"ஒன்னும் இல்லை சும்மா இன்ஸ்டால படிச்ச லையன்ஸ் சொன்னேன் ப்ரீத்"
" நல்லா இருக்கு. ஸ்டேட்ஸ் போட்டுடு. நான் வைக்கவா இல்லை டெல்லி முழுக்க,வீடியோ கால்ல சுத்திகாட்ட சொல்லுவியா?" அவன் பொய்யாய் சிரித்து வைக்க.
எரிச்சலாகியது " ஏதாவது சொல்ல மறந்துட்டியா?"
" இல்லையே.. தூக்கம் வருது பவி. காலையில பேசலாம்டா ப்ளீஸ்.. " பயம் காட்டது நடித்து சமாளிக்க முடியாமல் கெஞ்சினான்.
பட்டென கேட்டாள்."படுக்க போறீயா ப்ரீத்.? " அவள் கேள்வியில் அதிர்தவன் "என்ன ? கேட்ட?"
"இல்லை சீக்கிரம் படுக்க போறியானு கேட்டேன்."
"ம்.. குட் நைட் பவி பை " என்று அழைப்பை துண்டித்தான்.
" எரிமலையின் உள் கைகாலை கட்டி வீசப்பட்ட மானை போல.. செய்வதறியாமல் திகைத்தாள் பவித்ரா. 'என் பிரீத் இப்படி மாறுவானா? ' அன்பு மட்டுமே நிறைந்தவன் இன்று அருவருப்பாக தெரிந்தான். அவள் விழிகளுக்கு, சந்தீப் பற்றி தெரியும்.. என்பதால் அவள் சந்தீப்பை பார்க்க வந்தால் என்று பொய் சொல்லி இருந்தாலும் கூட நம்பி இருப்பாள். இப்போது மறைத்து நடித்து, துரோகியாகிப் போனான் ப்ரீத். இரவு என்ன நடக்கும் என்று உணர்ந்தவள் கண்ணீர் விட்டு கதறி அழுதாள்.
'காதலே இல்லாமல் வெறும் காமத்துக்கு ஒரு பெண்ணை தொட முடியுமா? என் மேல உனக்கு காதல் இல்லையா? உன் உடல் தேவை என்னால தீர்க்க முடியாது னு வேற.. பெண் சீ.. நினைக்க கூட கூசுது ' அவனிடம் பேசி தடுத்து நிறுத்தி விடு என்று மனம் கதற.. போன் அன் லாக் செய்ததும் அதில் வால்பேப்பராய் அவன் முகம் இருக்கவும். தொட பிடிக்காமல் மெத்தையில தூக்க வீசினாள் பவித்ரா.. அத்தனை வெறுப்பு அவன் மீது,
" தவறுகளை யாராலும் தடுக்க முடியாது. யாராவது அதை கண்டித்தால்.. அவர்களை புறக்கணிப்பார்கள் அல்லது மறைமுகமாக தவறு செய்து அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். தெரியாமல் செய்தால் தடுக்கலாம் தெரிந்த செய்பவனை என்ன செய்வது.? வெறுப்பதை தவிர,
"இங்கே துளியும் உறுத்தல இல்லாமல் அறையினுள் நுழைந்து." வர்ஷா .. டைய்ம் ஆச்சி என்று மணிகட்டில் விரலால் தட்டி காளையவன் சைகை செய்ய.
"ம்.. " என்று அருகில் வந்து அமர்ந்தாள் வர்ஷா. கட்டிலில் அமர்ந்து அவனை கண்களாலேயே விழுங்கினாள். மா நிறம் கலையான முகம். எப்போதும இதழில் நிலைத்த ஒரு மென்னகை, கனிவான பார்வை, அண்ணார்ந்து பார்க்கும் அளவு உயரம். சிகை கோதும் விரல்கள். குழந்தை போல மனம். மயங்கி போனாள் மாது. புதுவித உணர்வு பிடித்த ஒரு நாயகனை காணும் போது வருமே அந்த உணர்வு.!!
தன்னுடைய பதிமூன்று வயதில் பெற்றவராலே வறுமையில் விலை பேசப்பட்டு, ஆறுபது வயது முதிர்ந்த டாக்கூர்க்கு ( ஜமீன்தார்) விற்கப்பட்டு, பிஞ்சுக் குழந்தை என்று பாராமல் பல முறை அந்த காமுகனாலும், அவனது ஆண் பிள்ளைகளாலும் இரவு பகல் பாராது பிஞ்சு மொட்டானவள் கசக்கி எறியப்பட்டு நைய்த்து வீசப்பட்டாள். இரண்டு வருட நரக வாழ்கையில் மொத்த உடலின் பொழிவு இழந்து, முகம் கறுத்து. உடல் இழைத்து புதுமலர் போல பூக்க வேண்டியவள் மக்கும் சருகாய் மாறி போக.! குப்பை என வந்த விலைக்கு பேரம் பேசி தள்ளி விடப்பட்டாள் இந்த தொழிலில் .
" என்னங்க என்ன ஆச்சி. " என்று அவன் அவள் முகத்தின் புறம் கைகள் அசைத்ததும்
தன்னிலை உணர்ந்தவள். "சாரி" சிறு வயது நியாபகம் வந்தது என்று சைகை செய்தாள்.
"ஆரம்பிக்கலாமா?" என்று ஒலிக்கும் குரலும் அவனின் முகபாவனை வைத்து ஆம் என்று தலையை அசைத்தவள். தன் முந்தனையை அவிழ்த்து சரிய விட்டாள்.
அதிகாலை சூரிய கதிர் அவளின் முகம் முழுதும் வெம்மை பரப்ப இமைகளை திறக்க இயலாமல் திறக்க முயன்றால் வர்ஷா.. மிளாகாய் பட்டதை போல் கண்களில் எரிச்சல் பரவ.. இரவு தூங்காததால் சோர்வாக இருந்தது. புடவையை அள்ளி சொருகி அறையை விட்டு தலை பிடித்தவாறு வெளிய வந்தாள் வர்ஷா.
என்ன வர்ஷா.. டயர்டா ? பையன் நல்லா கம்பெனி கொடுத்தானோ.. " கள்ள சிரிப்பு சிரிக்க.
"ம்.. உன்னை விட நல்லா" இதை கேட்டதும சந்தீப் முகம் சுருங்கியது." சும்மா.. சொன்னேன். உன்ன மாதிரி யாராலயும் வர்ஷாக்கு கம்பெனி தர முடியாது. காசு எங்க ? நைய்ட் தூங்க விடமா சாவடிச்சுட்டுடான் உன் ப்ரண்ட். முடியலை லீவு எடுத்துக்க போறேன் சந்து. தலை வலி வேற "
சந்தீப் - " ஸ்.. சத்தம் போடாத ப்ரீத் போன் பேசிட்டு இருக்கான். வந்து பணம் தருவான்."
நேற்று பார்த்த புன்னகைக்கும் அழகிய பெண்ணின் புகைப்படம் சுவற்றில் இருந்தது. கண்முன்னே வர.. ஆசையாக கேட்டாள்." பவித்ரா கிட்ட பேசுறானா.. அவன்."
"ம் ஆமா.. "என்றான் இருவருமே இதுவரை ஹிந்தியில் உரையாடினர்." நல்ல வேளை பவிக்கு ஹிந்தி தெரியாது. இல்லைனா காளி அவதாரம் எடுத்துப் வந்து, அவன விட்டுட்டு நம்ம ரெண்டு பேரையும் வதம் பன்னி இருப்பா." குலுங்கி சிரிக்க.
" அப்டி நடந்தா ரொம்ப நல்லது சந்தீப். இப்டி வாழுறதுக்கு சாகலாம்.. எரிச்சல் தாங்காது கண்களை கசக்கியவாறே வலியுடன் கூறினாள் வர்ஷா .
"ஹிந்தியில்
சந்தீப் வர்ஷா பேசியதால் அழைப்பை துண்டிக்காமல் பேசினான் ப்ரீத்.
"என்னடா? ஏதோ லேடிஸ் வாய்ஸ் கேட்குது. யார் அது? "எல்லாம் தெரிந்ததும் எதுவும் தெரியாதது போல் கேள்வி எழுப்பினாள் பவி. விடிய விடிய உறங்காமல் அழுது கண்கள் வீங்கி.. இரத்த சிவப்பானது அவளது மீன் விழிகள். பொறுக்க முடியாமல் காலையில் அழைத்தே விட்டாளே.. உண்மையை சொல்லி மன்னிப்பு கேப்பான் மாமன் என நினைத்தாள் பவித்ரா. ஆனால் உத்தமராசா நான் என்பதை போல் நடிப்பவனை என்ன செய்வது?
" ஒ... அதுவா சந்தீப்க்கு தெரிஞ்ச பொண்ணு "பச்சைப் பொய் சொல்ல..
" அப்ப அந்த பொண்ண உனக்கு தெரியாது?" என்றதுமே உருட்டினானே உருட்டு..
"அந்த அக்கா யாருனே.. எனக்கு தெரியாது? பவி.. அந்த பொருக்கி பய தான் அவங்களை இங்கே கூப்பிட்டு வர்றான்.
'வெறுத்துப் போனது எதை வேனா மன்னிப்பேன். டா.. அக்கானு சொன்ன பாத்தியா.. அதை மட்டும் மன்னிக்க வே மாட்டேன்..டேய் சந்தீப் .. என் கையா தான் டா உனக்கு சாவு.' என்று மனதில் எண்ணியவள்
" ப்ரீத் காலேஜ் டைய்ம் ஆச்சு. ஈவ்னிங் வந்து பேசலாம் பை.. "அழைப்பை துண்டித்து விட்டு கல்லூரிக்கு சென்றாள்.
ப்ரீத் -" வர்ஷா என்று அழைத்தவன். டுடே நைய்ட் யூ ஃப்ரீ.." என்று ப்ரீத் கேட்கவும் வேகமாக தலையை மறுப்பாக அசைத்து
" ம்கும்.. நோ ஃப்ரீ.. "என்று ஹிந்தியில் எதையே சொல்லி கொண்டு அறையைவிட்டு வெளிய வேகமாக சென்றாள் வர்ஷா .
அவள் மொழி புரியாமல் தலையை உலுக்கி " என்னடா சொல்றா.. பூச்... தாச் குறா.. "
" ம்கும்.. உன் கால்ல கூட விழுறாலா..மா இனி அவள கூப்டதிங்கனு கை எடுத்து கும்பிடுறா டா.. அப்டி என்ன பண்ண ?" கோணலாக முறைத்து
யோசித்தவாறு நண்பன் கேட்க ?
" ஒன்னுமே பண்ணலை டா.." அப்பாவியாய் முகம் வைக்க
" இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. வர்ஷாவயே தலை தெரிக்க ஒட வைச்சுட்ட. ஹா.. ஹா... ஹா... பெரிய ஆள் டா நீ.. " என்று கேளி செய்ய ..

