எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாய் நீ வா!

அத்தியாயம் 1


கதிரவன் அவனின் வேலையை செய்ய சரியாக ஆறு மணிக்கு உதித்து இருந்தான்.


அர்ஜுனும் கண் விழித்து இருந்தான். ஆறடிக்கு மேல் உயர்ந்து நிற்கும் ஆண்மகன் அவன். அழகானவன், அன்பானவன், அதையும் தாண்டி இப்போது தொழில் துறையில் ஆதிக்கம் செய்ய துவங்கி இருக்கும் அரிமா அவன்.


எழுந்தவன் நேரே சென்றது என்னவோ அவனின் வீட்டிலே இருக்கும் சிறிய உடற்பயிற்சி கூடத்திற்கு தான்.


அவனின் ஹெட் சேட்டை போட்டு கொண்டு அவன் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்க, அவனின் கைபேசி சிணுங்கியது.


வெற்றி தான் அழைத்து இருந்தான். அவனின் உதடுகள் தாராளமாக விரிந்தன.


அழைப்பை அவன் ஏற்கவும், "எப்படி இருக்கீங்க அர்ஜுன் சார்?" என்று கேட்கவும், "எனக்கு என்ன பேஷா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?" என்று கேட்கவும், "ஏதோ உங்க புண்ணியத்துல நல்லா தான் இருக்கேன்" என்று அவனை சீண்டினான்.


ஆயிற்று அவன் ஜானவியை கடத்தி முடித்து ஒரு வருடம் ஆகி இருந்தது.


யாழை சென்று பார்த்து வந்தவன், அதன் பிறகு மும்பை செல்ல வில்லை.


"யாழ் எப்படி இருக்கா?" என்று கேட்கவும், "கொஞ்சம் பரவால்ல.. சரி ஆகிடுவா... ஆதி எல்லாத்தையும் சரி ஆக்கிடுவான்" என்று உறுதியாக வந்தது அவனின் வார்த்தைகள்.


"உனக்கு ஆதி மேல இவளோ நம்பிக்கையா வெற்றி? யாழ் அழுதாலே நீ தாங்கமாட்ட ஆனா அவ இப்போ எவளோ துடிக்கிறா ஆனா நீ அமைதியா இருக்க" என்று அர்ஜுன் வினவ, "அவன் ஒன்னும் அவ அழ காரணம் இல்லையே... அவன் ஏதோ அவங்க குடும்பத்தோட சூழ்நிலையால் அப்படி பேசிட்டான். நீயே பார்த்த தானே! அவன் எவளோ லவ் பன்றான் நிலாவ?" என்று கேட்கவும், "சரி தான். பார்ப்போம் எல்லாம் சரி ஆகிடும், இன்னைக்கு எனக்கு ஒரு புது கிளைண்ட்டோட மீட்டிங் இருக்கு" என்று அவன் சொல்லவும், "செம்ம டா... நீ எப்பவும் போல மாஸ் பன்னிருவ" என்று சொன்னவன் வாழ்த்தையும் கூறி வைத்து விட்டான்.


அர்ஜுன் அவனின் உடற்பயிற்சி முடித்து அவனின் நண்பன் வருணிற்கு தான் அழைத்தான். அவனின் காரியதரிசியும் கூட!


"சொல்லு டா மாச்சான்" என்று தூக்கம் கலந்த குரலில் அவன் பேச, "நைட் எல்லாம் கடல போட வேண்டியது. இன்னைக்கு மீட்டிங் இருக்கு டா நினைவு இருக்கா? நான் உனக்கு பஸ்ஸா இல்ல நீ எனக்கு பாஸா?" என்று அவன் கேட்கவும், "இதையே போய் உன் பெஸ்டி கிட்ட கேளு! சைத்தான் நைட் முழுக்க அவளோட புலம்பல் எல்லாம் கேட்க வைக்குறா... அவ புதுசா வேலைல சேர்ந்ததும் சேர்ந்தா என்ன வச்சி செய்யுறா டா" என்று அவன் புலம்பினான்.


அர்ஜுன் சிரித்து விட்டு, "இந்த பிரச்சனைக்கு தான் டா நான் இன்னும் லவ் பண்ணாம ஜாலியா இருக்கேன்" என்று அவன் சொல்லவும், "டேய் ரொம்ப ஆடாத உன்னையும் ஆட்டி வைக்க ஒருத்தி வராமலா போகிருவா?" என்றவனை பார்த்து, "நான் அவளை ஆட்டி வைக்குறேனா இல்ல அவ என்னை ஆட்டி வைக்குறளான்னு நடக்கும் போது பார்ப்போம்... ஓழுங்கா மீட்டிங் வந்து சேறு" என்று வைத்து விட்டான்.


குளித்து முடித்து அவனின் பச்சை நிற சட்டையில் ஆயுத்தமானவன், பின்பு ஜெல் வைத்து அவனின் தலையை சீவினான்.


அம்சமாக இருந்தான்.


இளவரசனை போல் காட்சி அளித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.


அவனின் காரை உயிர்ப்பித்து அவனின் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று இருந்தான்.


அங்கே அவனுக்கு முன்னவே வந்து இருந்தான் வருண்.


"டேய் குளிச்சியா இல்லயா? எனக்கு முன்னவே வந்துட்ட?" என்று கேட்டுக்கொண்டே அர்ஜுன் அவனை நெருங்க, "சாவடி வாங்குவ பார்த்துக்கோ, அதெல்லாம் குளிச்சி முடிச்சி ஜாகுவார் பெர்ப்யூம் போட்டுட்டு வந்தேனாக்கும்" என்று சொல்லும் போதே அர்ஜுனின் மேல் வரும் வாசனை அவனை ஈர்த்தது.


"நீ என்ன டா யூஸ் பண்ற?" என்று கேட்க, "ஷாருக் கான் யூஸ் பண்ணுவாரே டிப்திக் அந்த பெர்ப்யூம் தான்... செம்மயா இருக்குல?" என்று அவன் கண்சிமிட்டவும், "உனக்கு சரியா தான் டா உன் அம்மா பேரு வச்சிருக்காங்க அர்ஜுன்னு... பொண்ணுங்க எல்லாம் உன் பின்னாடியே வராங்க பாரு" என்று சொல்லவும், அவனோ சிரித்து கொண்டே உள்ளே சென்றான்.


உள்ளே நுழைந்ததும் அவர்களை வரவேற்றது என்னவோ மிகவும் பரிட்சயமான முகம் தான்.


"உன் ஆளு இங்க என்ன பண்ரா?" என்று கேட்டவனை பார்த்து, "நீயே கேளு டா" என்று வருண் சொல்லவும், "வர்ஷினி நீ இங்க" என்று அர்ஜுன் ஆரம்பிக்கும் போதே, "ஹலோ சார், மேம் உங்களுக்காக வெயிட் பன்றாங்க" என்றவள் பேசவும் அர்ஜுனின் புருவங்கள் சுருங்கியது.


"இந்த சார் எதுக்கு?" என்று கேட்டவனை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "உன்ன ஸ்ட்ரிக்ட்டா சார்ன்னு தான் கூப்பிடணும்னு எங்க பாஸ் சொல்லி இருக்காங்க" என்று அவள் ஹஸ்கி குரலில் பேசவும், வருணோ, "அது யாரு டா உனக்கு இவளோ மரியாதை தர சொல்றவங்க" என்ற வருணை பார்த்து உதடு பிதுக்கி, "தெரியலையே.. இது வேற ஏதோ பெரிய கம்பெனியோட டை அப் வச்சிருக்க கம்பெனின்னு மட்டும் தான் தெரியும். அந்த மேடம் யாருனு எனக்கு தெரியலையே" என்று சொன்னவன், "சரி நான் உள்ள போகலாமா?" என்று வர்ஷினியை பார்த்து கேட்கவும், "தாராளமா போகலாம் சார்" என்று அவள் சொல்ல அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்றான்.


அறையினுள் செல்வதற்கு முன், அவன் கதவை தட்ட, "கம் இன்" என்கிற சத்தத்தில் உள்ளே சென்றான்.


அங்கோ நாற்காலியில் அமர்ந்து எதிர் பக்கத்தை பார்த்து கொண்டு இருந்தது ஒரு உருவம்.


"மிஸ் ஆர் மிஸஸ்" என்று அவன் கேட்கவும், அவளோ, "மிஸ் தான் மிஸ்டர் அர்ஜுன் அபினவ்" என்று திரும்பி அமர்ந்தாள் ஜானவி.


அர்ஜுனின் கண்கள் விரிந்தன. கிட்டத்தட்ட அவளை ஒரு வருடத்திற்கு பிறகு பார்க்கிறான்.


அதே போல் தான் இருந்தாள்.


எந்த மாற்றமும் இல்லை!


அவளின் கண்களில் இன்னும் அதே குறும்பு மறைந்து இருந்தது.


பச்சை நிற சட்டையும் ப்ளூ நிற ஜீன்ஸ் அணிந்து அத்தனை மிடுக்காய் அமர்ந்து இருந்தாள்.


ருத்ரனின் மகளுக்கு சொல்லியும் கொடுக்க வேண்டுமா?


அவள் அணிந்து இருந்த உடையில் இருந்து, ஹீல்ஸ், மோதிரம் மற்றும் கழுத்தில் இருந்த பிளாட்டினம் செயின் உட்பட அனைத்தும் அவளின் அழகை மட்டுமல்ல அவளின் செல்வ செழிப்பையும் பறைசாற்றியது.


அழகி தான் அவள். ஆதியின் தங்கையாயிர்றே! ஆதி அழகன் என்றால் அந்த வீட்டிலேயே அழகி ஜானவி தான்.


தேவதை பெண்ணவள்! தைரியம் நிறைந்தவள்!


சிறுவயதில் இருந்தே அவளுக்கு பயம் என்றால் என்னவென்று யாரும் சொல்லி கொடுத்ததே இல்லை. ஐந்து அண்ணன்களின் கையில் வளர்ந்தவள் அவள்.


அவளுக்கு பிரச்சனை என்று இதுவரை ஒன்றும் வந்ததே இல்லை. ஏனென்றால் பிரச்சனையே அவளாக தான் நிறைய இடங்களில் இருப்பாள்.


செல்லமாகவே வளர்ந்து விட்டாள் என்பதை விட, வளர்த்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.


ருத்ரன் மட்டும் அல்ல விஷ்ணு, விக்ரமன், சேகரன், ராஜ பார்த்திபன், விஜயேந்திரன் என்று அனைவருமே அவள் கேட்பதற்கு முன் அவளுக்கு வேண்டியதை கண் முன் வைத்து விடுவார்கள்.


அவளின் வங்கி கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்று கூட அவளுக்கு தெரியாது.


பார்த்து செலவு செய்யும் பழக்கம் இல்லாதவள் அவள்.


பிடித்து இருந்தாள் எடுத்து கொள்வாள். உணவு பிரியை அவள்!


அனைத்து வகையான உணவுகளும் அவளுக்கு பிடிக்கும் ஆனால் அவளிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் உயர்ரக உணவகத்தில் மட்டுமே அவளுக்கு உணவருந்த பிடிக்கும்.


ஐந்தரை அடி சிற்பம் தான். ஆனால் இன்று வரை அவளை யாரும் நெருங்கியது இல்லை. பார்த்து சைட் அடிப்பதோடு சரி, அவளை நெருங்கினால் அவளே அடித்து கொன்று விடுவாள் என்று அனைவருக்கும் தெரியும்.


அதையும் தாண்டி ருத்ரனின் மகளை நெருங்க பைத்தியமா என்ன?


இது அனைத்தையும் தகர்த்து எரிந்து அவளை முதன்முதலில் தொட்டு தூக்கி கடத்தி இருந்தது என்னவோ அர்ஜுன் தான்.


வெற்றி அவனிடம் அன்று பேசும் போதே, "அவ சென்ட்ரல் மினிஸ்டர் ருத்ரன் பொண்ணு அர்ஜுன் அவளோ ஈஸி இல்ல" என்று தான் சொல்லி இருந்தான்.


"யாரா இருந்தா என்ன? அவளை நான் தூக்குறேன்" என்று சொன்னவன் செய்தும் காட்டி இருந்தான்.


அகலயாவிற்கே ஆச்சர்யம் தான். ஜானவியை ஒருவன் கடத்தி இருக்கிறானா என்று!


பயம் அறியாதவன் அவன்! பயத்தை அறியாதவள் அவள்!


அவளை தூக்கியது இன்றும் அவனுக்கு நினைவு இருந்தது.


"பார்க்கறதுக்கு பார்பி டால் மாதிரி இருக்கா! ஆனா பருத்தி மூட்டை கணம் கணக்குறா" என்று திட்டிக்கொண்டே தான் அவளை தூக்கி இருந்தான்.


இருவரின் கண்களும் மோதிக்கொண்டன.


"வாங்க மிஸ்டர் அர்ஜுன் அபினவ்" என்று கால் மேல் கால் போட்டு கொண்டு கைகளை கட்டி அவனை பார்த்து கொண்டு இருந்தாள் செந்தளிர் இல்லத்தின் செல்ல மகள்.


அர்ஜுனோ, அமர்ந்தவன், கால் மேல் கால் போட்டு கொண்டு, "நைஸ் டு மீட் யு அகைன் மிஸ் ஜானவி ருத்ர தேவன்" என்று பதில் அளித்தான்.


சிங்கத்திற்கு பிறந்தவள் அவள், சிறுத்தையைக இருப்பவன் இவன்!


இருவரும் ஒரே கோட்டில் மீண்டும் சந்திக்கிறார்கள். இனி என்ன நிகழுமோ?
 

அத்தியாயம் 2

"இது உன் கம்பெனியா? ஆர்ஏ குரூப்ஸ் டெக் இல்லையே?" என்று முதல் கேள்வியை கேட்டு இருந்தான்.


அவளோ திமிராக, "உன் இல்ல உங்க, மரியாதை.. மரியாதை கொடுங்க! நீங்க தான் என்ன தேடி என் ஆபீஸ் வந்து இருக்கீங்க... நான் இல்ல... நினைவு இருக்கட்டும்" என்றவள் அதோடு நிறுத்தாமல், "சரி என்ன தைரியத்துல எங்க கம்பெனியோட டீல் பேச வந்திங்க? இந்த கம்பெனி தி கிரேட் ஆர்ஏ குரூப்ஸ் கம்பனிஸ் கூட இருக்க பகுதி தான். இந்த பிராண்ட் ஆரம்பிக்கலாம்னு நான் ஐடியா கொடுத்தேன். சரி நீயே ஆரம்பிச்சிக்கோன்னு என்னோட டாடியும் சொல்லிட்டாரு" என்றவள், அத்துடனாவது நிறுத்தி இருக்கலாம்.


ஆனால் அப்படி நிறுத்தாமல் அது ஜானவி இல்லையே!


"உங்க கம்பெனி எங்க? எங்க கம்பெனி எங்க? நீங்க இப்போதான் புதுசா மார்க்கெட்ல வளர்ந்து வரீங்க.. நாங்க உயர்ந்து நிக்குறோம்" என்றவள் முடிக்கும் போதே, "எங்க புர்ஜ் கலிப்பா மேலயா?" என்று கேட்டவனை பார்த்து முறைத்தாள்.


"நீங்க தானே மிஸ் ஜானவி, உயர்ந்து நிக்குறேனு சொன்னிங்க.. அதான் உலகத்துலயே உயர்ந்த பில்டிங் புர்ஜ் கலிப்பாவா? இல்ல வேற ஏதாவது ஈபிள் டவர்? ட்வின் டவர்? அந்த மாதிரி அட்லீஸ்ட் ரிப்பன் பில்டிங்?" என்று அவன் நக்கலாக கேட்கவும், அவளுக்கோ ஆத்திரமாக வந்தது.


"என்ன மென் கொழுப்பா?" என்று கேட்கவும், "ஆமா ஆனா உங்கள விட கம்மி தான் மிஸ் ஜானவி.... ரொம்ப நிறைய வேற சாப்பிடுறிங்க.. கொஞ்சம் குறைச்சிக்கோங்க" என்று மீண்டும் அவளை சீண்டினான்.


"என் கம்பெனில வந்து என்னைய இன்சல்ட் பண்றியா நீ?" என்று கேட்டுக்கொண்டே எழுந்து அவளின் அருகில் வந்து விட்டாள்.


வந்தவள் சும்மாவாவது இருந்து இருக்கலாம், அவனின் சட்டையை பிடித்து, "அன்னைக்கு நீ என்ன கடத்தின அப்பவே நான் உன்ன எல்லாம் போலீஸ்ல பிடிச்சி கொடுத்து இருக்கனும்" என்றவள் சொல்லவும், அவனோ அவளின் கையை பிடித்து இழுத்து அவளை திருப்பி அவளின் பின்புறத்தை அவனோடு சேர்த்து அழுத்தி கொண்டான்.


"நானும் போனா போதுன்னு பார்க்குறேன். ஓவரா பேசுற நீ? என்ன டி திமிரா? மினிஸ்டர் வீட்டு பொண்ணுனா என்ன உனக்கு கொம்பு முளைச்சிருக்கா? நீ பேச ஆரம்பிச்ச உடனே உன் வாயில குத்தி இருப்பேன். சரி யாழோட நாத்தனாருனு தான் அமைதியா இருந்தேன். ஆனா என்ன வாய் டி உனக்கு? உன் அண்ணா எல்லாருக்கும் வாயில சனின்னு கேள்வி பட்டேன். ஆனா உன்ன பார்த்த பிறகு தான் தெரியுது குடும்பமே இப்படி தான்னு... ஹான் என்ன சொன்ன உன் கம்பெனிக்கு நான் வந்தேனா? நீ தானே எங்க கம்பெனியோட டீல் போட வாங்கனு என்ன இன்வைட் பண்ண? பிராட் டி நீ! என்னை ஒரு வருஷமா ஒரு பிரைவேட் டிடெக்ட்டிவ் வச்சி வாட்ச் பண்ணி இருக்க" என்றவுடன் அவளின் கண்கள் விரிந்தன.


அவனை திரும்பி பார்க்கவும், "என்ன எப்படி எனக்கு தெரியும்னு பார்க்குறியா? அவனை இரண்டு நாள்லயே நான் கண்டு பிடிச்சிட்டேன். நான் தான் உன் கிட்ட எதையும் காட்டிக்க வேணாம்னு சொன்னேன். நான் எங்க போறேன், எங்க வரேன்னு வேவு பாக்குறது இல்லமா, நான் எந்த பொண்ணு கூடவாவது சுத்துறேனான்னு வேற பார்க்க சொல்லி இருக்க! அப்பவே உன் வாயில அடிக்கணும்னு தான் நினைச்சேன்" என்றவன் அவளின் இதழ்களில் சுண்டி விட, "வலிக்குது டா தடியா" என்று சொல்லவும், அவனோ மேலும் இறுக்கி, "உன் வாய் தான் டி உனக்கு எதிரி" என்றவன், "சரி சொல்லு, "எதுக்கு டிடெக்ட்டிவ் வச்சி வேவு பார்த்த? நான் யாரு கூட இருந்தா உனக்கு என்ன?" என்றவன் கொஞ்சம் அவளின் கையை விட்டதும், அவளோ அவன் புறம் திரும்பி அவனை நெருங்கினாள்.


இப்போது அதிர்வது அவனின் முறை ஆனது.


அவன் வேறு டேபிளின் விளிம்பில் நின்று இருக்க, அவனால் பின்னால் கூட நகர முடியவில்லை.


அவளோ அவனை அவளின் மூச்சு படும் தூரத்தில் நிற்க, அவனின் பாலன்ஸ் வேறு தடுக்கியது.


அவளே அவனின் கையை பற்றி அவளின் இடையில் வைக்க, அவனுக்கோ கண்களில் அதிர்ச்சி.


"ஜானவி'' என்றவன் அழைக்கவும், அவளோ அர்ஜுனின் கழுத்தில் கை போட்டு நின்று கொண்டாள்.


"ஆமா நான் வேவு தான் பார்த்தேன். இப்போ என்ன டா அதுக்கு? உன்ன யாரு என்ன கடத்த சொன்னது? கடத்துனவன் அதோடவாவது இருந்து இருக்கனும். என்னை அக்கறையா பார்த்துகிட்டு, என்கிட்ட எவளோ சாப்ட்டா நடந்து கிட்ட... சரி அதோட நிறுத்தினியா? தினமும் என் கனவுல வந்து நீ டார்ச்சர் பண்ற மென்! ஒரு வருஷமா தினமும் என் கனவுல வர தெரியுமா? உங்கிட்ட ஏதோ ஒரு மேஜிக் இருக்கு டா தடியா... நான் எவளோ ஜாலி பொண்ணு தெரியுமா? நான் இப்படி ஒரு முசுடுவ லவ் பண்ணுவேன்னு நான் கனவுல கூட நினைச்சி பார்க்கல" என்றவள், அவன் எதிர் பார்க்காத சமயம் அவனின் இதழ்களில் சட்டென அவளின் இதழ்களை ஒற்றி எடுத்தாள்.


அர்ஜுன் அவளை உடனே தள்ளி நிறுத்தி இருந்தான்.


"உனக்கு பைத்தியமா ஜானவி?" என்று கத்தியவன், அங்கே இருந்து செல்ல முற்பட, அவனின் கையை பற்றி இருந்தாள் ஜானவி.


"கைய விடு டி" என்று அவன் சொல்லவும், அவள் கேட்டுவிட்டால் அன்று உலகம் அழிந்து விடுமே!


"முடியாது டா தடியா... இங்க பாரு அர்ஜுன்.. நான் ஒன்னும் மத்த பொண்ணுங்க மாதிரி வெட்கபட்டுட்டு, ஐயோ மாமா அத்தானுலாம் கூப்பிட மாட்டேன். எனக்கு அது தெரியவும் தெரியாது... எனக்கு உன்ன பிடிச்சி இருக்கு... உன்ன லவ் பண்றேன். உன்னோட தைரியம் ரொம்ப பிடிச்சி இருக்கு. உன்னோட கண்ணியமும் ரொம்ப பிடிச்சி இருக்கு.. அதுக்காக நீ என்ன இப்பவே லவ் பண்ணுறேன்னு சொல்லணும்னு அவசியம் இல்ல... நாளைக்கு சொன்னா கூட போதும்" என்றவள் சொல்லவும், "கைய விடு டி பைத்தியமே" என்று கையை உதறி விட்டான்.


"யாரு டா பைத்தியம்? நீ தான் பைத்தியம்" என்று அவள் எகிறி கொண்டே வர, அவளின் ஹீல்ஸ் தடுக்கி அவனின் மீதே விழுந்தாள்.


அவனுக்கும் அவளை சட்டென பிடிக்க முடியவில்லை. இருவரும் ஒன்றாக கீழே விழவும், அர்ஜுனின் தலை நங்கென்று தரையில் மோதியது.


"அடிப்பாவி, இப்படி கூப்பிட்டு என் மண்டைய பொளக்க பாக்குறியே" என்று அவன் கத்தவும், அவனின் சத்தம் கேட்டு, வருணும் வர்ஷினியும் உள்ளே வந்தனர்.


"ஐயோ சாரி அர்ஜுன்" என்று சொல்லி ஜானவி எழவும், வருணோ வந்து அர்ஜுனை தூக்கி விட்டான்.


"என்ன டா ஆச்சு?" என்று கேட்டுக்கொண்டே வருண் அவனை எழுப்பி விட, "எல்லாம் தோ நிக்குறாளே இந்த சைத்தானால தான்" என்று அவன் கோவத்தில் பேச, விடுவாளா அவள்?


"யாரு டா சைத்தான்? நீ தான் சைத்தான்! சரியான இஞ்சி தின்ன குரங்கு டா நீ! கொஞ்சமாச்சு சிரிக்கிறியா?" என்று அவள் பொரிந்து தள்ள, வர்ஷினிக்கு தான் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.


ஜானவியை அவளும் முதல் முறை இந்த கோலத்தில் பார்க்கிறாள்.


அவள் இப்படி எல்லாம் பேசுபவள் அல்ல!


அர்ஜுனிடம் சண்டை போடுகிறாள்.


"சரி தான் போ டி" என்று சொல்லிவிட்டு அர்ஜுனும் வருணும் சென்று விட்டார்கள்.


அன்றைய நாள் இரவில் அவர்களுக்கு ஒரு பார்ட்டி வேறு இருந்தது.


சென்றே ஆக வேண்டும் என்பதால் அர்ஜுன் மட்டும் சென்று இருந்தான்.


வர்ஷினியுடன் வருண் வெளியே செல்வதாக சொல்லி விட்டான்.


அதே இடத்திற்கு ஜானவியும் வந்து இருந்தாள்.


அது ஒரு காஷுவல் பார்ட்டி தான் என்பதால் அர்ஜுனும் கூட வெறும் டிஷர்ட் மற்றும் ஜீன்ஸ் தான் அணிந்து வந்து இருந்தான்.


அவளும் கூட ஜீன்ஸ் மற்றும் ஒரு சட்டை தான் அணிந்து வந்து இருந்தாள்.


ஆனாலும் அந்த உடையிலேயே அவள் அழகியாக தான் தெரிந்தாள்.


அவளை காணாத கண்களே அங்கே இல்லை, அர்ஜுனை தவிர!


வந்தவள் அந்த பார்ட்டியை நடத்துபவரிடம் பேசிவிட்டு, திரும்ப அங்கே அவளின் முன் வந்து நின்றான் தமிழ்நாடு எம்பியின் மகன்.


அவளோ அவனை பார்க்க, "ஜானவி ஷால் வி டான்ஸ்?" என்று கேட்கவும், அவளோ, "நாட் இன்டெரெஸ்ட்டேட்" என்று முகத்திற்கு நேராக சொல்லி சென்று விட்டாள்.


ஜானவி அங்கு நின்று கொண்டு இருக்க, பெரெர் ஒருவன் அவளுக்கு ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தான்.


அது ஜூஸ் இல்லை வொட்க்கா என்று அப்போது அவளுக்கு தெரியாது.


அவள் ஜூஸ் என்று நினைத்து தான் குடித்து விட்டாள்.


"இது நல்லா இருக்கே" என்று சொன்னவள், இரண்டு மூன்று என்று ஆறு கிளாஸ் வொட்க்காவை குடிக்க, அர்ஜுனுக்கு ஏதோ தவறாக பட்டது.


அவளால் நிற்கவே முடியவில்லை.


தள்ளாட ஆர்மபித்து இருந்தாள்.


அவளை அர்ஜுன் பிடிக்கும் முதல், அவளின் இடையை பற்றி இருந்தது என்னவோ எம்பியின் மகன் தான்.


அர்ஜுனுக்கோ அவளிடம் செல்லலாமா என்று ஒரு புறம் தோன்றியது. மறுபுறம் எப்படி செல்வது என்கிற தயக்கம் வேறு!


அந்த எம்பியின் மகனோ அவளின் இடையை பற்றி அவளை அவனுடன் ஆட அழைத்து சென்று இருந்தான்.


அங்கே இருந்த பல பேருடைய போனில் இது தான் காட்சியாக படமாக பட்டு கொண்டு இருந்தது.


ஜானவியால் நிற்கவே முடியவில்லை.


ஆனால் அந்த எம்பியின் மகனின் இதழ்களில் ஒரு வெற்றி புன்னகை. அவன் ஒன்னும் அவளை வொட்க்கா குடிக்க தூண்ட வில்லை. ஆனால் அவளே செய்த தவறு அவனுக்கு சாதகமாக போய் விட்டது.


அப்போது தான், அவன் இன்னும் ஒரு படி மேல் சென்று அவளின் இதழ்களை நெருங்க, அர்ஜூனால் இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.


அவனுக்கு அவள் மீது நிச்சயம் இப்போது காதல் இல்லை. ஆனால் அவனின் குடும்பத்துடன் தொடர்புடைய பெண், ஆதியின் தங்கை அவள், அவனின் கண்முன் அவனின் குடும்பத்தை சேர்ந்த பெண்ணிற்கு இப்படி ஆவதை அவனால் பார்த்து கொண்டு இருக்க முடியவில்லை.


அதுவும் ஜானவி காலையில் தான் அவனை காதலிப்பதாக கூறி இருக்க, அவனின் இதழாகளில் வேறு இதழ் பதித்து இருந்தாள். அவளாக நிச்சயம் இப்படி இவனுடன் ஆட மாட்டாள் என்று அவனுக்கு தெரியும்.


அவன் அவளின் இதழ்களை நெருங்குவதற்குள் அவளை அவனின் கைக்கு மாற்றி இருந்தான் அர்ஜுன்.


ஆனால் அவன் ஒன்று மறந்து விட்டான். இது அத்தனையும் அனைவரின் கைப்பேசியில் படம் ஆக வேறு பட்டு கொண்டு இருக்கிறது என்று!


அனைத்தையும் சமாளித்து, ஜானவியை அழைத்து சென்று விடுவானா அர்ஜுன்?
 

அத்தியாயம் 3


"டேய் யாரு டா நீ?" என்று அந்த எம்பியின் மகன் கேட்கவும், "எல்லாரும் முதல்ல உங்க கமெராவை கீழ போடுங்க. டெலீட் ஆள் தி விடியோஸ் நொவ்" என்று ஆக்ரோஷமாய் கர்ஜித்து இருந்தான்.


அவனின் கத்தலில் அங்கிருந்த அனைவரும் அரண்டு தான் போய் விட்டனர்.


"நீங்க யாரு சார்?" என்று ஒருவன் வரவும், "நான் யாரா இருந்தா என்ன? இந்த வீடியோ வெளிய வந்தா உங்க எல்லாருக்கும் மிஸ்டர் ருத்ர தேவன் அண்ட் இந்தியாவோட டாப் பிஸ்னஸ் மென் விஷ்ணு தேவன் அண்ட் விக்ரமனும் சேர்ந்து சங்கு ஊதிருவாங்க. பரவால்லையா?" என்று கேட்கவும், இப்போது அவர்களுக்கு கொஞ்சம் பயம் எடுக்க துவங்கியது.


"நீங்க யாரு அவங்களுக்கு?" என்றவுடன், "நான் யாரா வேணா இருக்கலாம் ஆனா இவங்க மினிஸ்டர் ருத்ர தேவன் பொண்ணு தான். சோ பெட்டெர் கீப் யுவர் ஹாண்ட்ஸ் ஆப் ஹேர்" என்று சொன்னவனை பார்த்து, "இவளோ பேசுற நீ மட்டும் என்ன அந்த பொண்ண வச்சி பூஜையா பண்ணுவ?" என்று மற்றொருவர் கேட்கவும், "நான் அவங்க பேமிலி பிரென்ட்" என்று சொல்லி இருந்தான்.


அந்த எம்பியின் மகனோ இதழ்களில் ஒரு வித கேலி புன்னகையுடன், "யாரு நீ அவங்க பேமிலி பிரண்டா?" என்று கேட்கவும், அவனின் கைப்பேசியை எடுத்தவன், அவனும் யாழும் அருகில் இருக்கும் புகைப்படத்தை எடுத்து காட்டினான்.


"இவங்க தான் ஆதித்யராம் ருத்ர தேவனோட மனைவி யாழ்நிலா ஆதித்யாராம் வேணும்னா கூகுளை போய் பார்த்துக்கோங்க. என்னோட தங்கச்சி" என்று சொல்லவும் அவனிற்கு பேய் அறைந்தது போல் ஆகிவிட்டது.


அதில் யாழில் அவனின் கழுத்தை கட்டி கொண்டு இருப்பது போல் இருந்தது. நிச்சயம் இப்படி ஒரு புகைப்படத்தை தெரியாத ஒருவருடன் அவள் எடுத்து இருக்க மாட்டாள் என்று அனைவர்க்கும் தெரியும்.


"இது போதுமா? இல்ல நானே அவளுக்கு கூப்பிட்டு நீ பண்ண வேலைய சொல்லட்டுமா?" என்று கேட்கவும், உண்மையாகவே அவனுக்கு பயம் தான். அவனுக்கு மட்டும் அல்ல, அங்கிருந்த அனைவருக்கும் பயம் தான்.


நேரடியாகவே அவனுக்கு ஆர்ஏ குரூப்ஸ் உடன் தொடர்பு இருக்கும் என்று அவர்கள் நினைக்கவில்லை.


அர்ஜுனுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவன் இப்படி எல்லாம் இவர்களை தெரியும் அவர்களை தெரியும் என்று சொல்லும் ரகம் கிடையாது. ஆனால் இப்போது சொல்லி ஆக வேண்டிய கட்டாயம்.


சொல்லவில்லை என்றால் பிரச்சனை தான் வந்து இருக்கும் என்று அவனுக்கு தெரியும். அது மட்டும் இல்லாமல், அவனுக்கு ஜானவியை இங்கிருந்து அழைத்து செல்ல வேண்டி இருந்தது.


உண்மையை சொல்லாமல், இந்த கயவன் கூட அவளை விட்டு இருக்க மாட்டான் என்று அவனுக்கு நன்கு தெரிந்து இருந்ததால் தான், யாழின் பெயரை கூறி இருந்தான்.


ஆனால் அவனுக்கு தெரியாத ஒன்று, ஜானவி எங்கு சென்றாலும் அங்கு ஆட்களை வைத்து ருத்ரன் பார்த்து கொண்டே இருப்பார் என்பது தான்.


மனைவியையே எப்போதும் கண்காணிப்பில் வைத்து கொண்டு இருப்பவர் மகளை விட்டு விடுவாரா என்ன?


அவளுக்கே தெரியாமல் எப்போதும் இரண்டு பாடி கார்ட்ஸ் அவளை பின் தொடர்ந்து கொண்டே தான் இருப்பார்கள்.


இன்றும் அந்த எம்பியின் மகன் அவளை நெருங்கி ஆடும் சமயம், "சார் நாங்க வேணா மேம" என்று ஒரு காவலாளி ஆரம்பிக்கும் போதே, அங்கு அர்ஜுன் அவளை நெருங்குவது அவருக்கு வீடியோ காலில் தெரிந்தது.


"இல்ல வெயிட் பண்ணுங்க" என்று சொல்லி இருந்தார்.


அதற்கு பிறகு அர்ஜுன் பேசியதை அவரும் தான் கேட்டு இருந்தார்.


'நல்ல தைரியமான பையன் தான். என் பொண்ண அன்னைக்கு கடத்தும் போதே நான் யோசிச்சி இருக்கனும். இன்டெரெஸ்ட்டிங் யங் மென்" என்று அவரது மனம் அவனை பாராட்டவும் தவறவில்லை.


"நீங்க எதுவும் பண்ண வேணாம் அர்ஜுன் எல்லாமே பார்த்துக்குவான்" என்று சொல்லி அவரும் வீடியோ காலை அணைத்து விட்டார்.


அவருக்கு அர்ஜுனின் மேல் நிறையவே நம்பிக்கை இருந்தது. வெற்றி சொன்னதற்காக ஜானவியை கடத்தியவன், அவளை எப்படி நடத்தினான் என்று ஜானவியே சொல்லி இருந்தாள்.


யாழின் வீட்டில் வளர்ந்தவன், அவனை பற்றி எத்தனையோ பேர் சொல்லி கேள்வியும் பட்டு இருக்கிறார், ஆதலால் ஜானவியை அவனிடம் விடுவதில் அவருக்கு தயக்கம் எதுவும் இருக்கவில்லை.


மீண்டும் காவலாளிக்கு அழைத்தவர், "அங்க ரெகார்ட் பண்ண எந்த விடியோவும் இருக்க கூடாது" என்று மட்டும் கண்டிப்பாக சொல்ல, "சார் கண்டிப்பா எல்லாரோட மொபைல்ளையும் செக் பண்ணிடுறோம்" என்று அவர்களும் பயந்து கொண்டே கூறினார்கள்.


பின்பு அர்ஜுன் ஜானவியை எப்படியோ காரின் அருகே அழைத்து வர, அவள் எங்கே ஓழுங்காக வந்தாள்!


"நம்ம சிங்காரி

சரக்கு நல்ல சரக்கு

சும்மா கும்முன்னு

ஏறுது கிக்கு எனக்கு"


என்று பாட்டு பாடிக்கொண்டே ஆடிக்கொண்டு வந்தவளை பார்த்து, "சரியான குடிகாரியா இருப்பா போல" என்று வாய் விட்டே அவன் சொல்ல, "யாரு டா குடிகார தடியா... நான் இந்திய குடிமகள்" என்று அவள் காலரை தூக்கிவிட்டு சொல்லவும், "இது உண்மை தான். நீ ஒரு குடிமகள் தான் மா" என்று அவன் சொல்லவும், அவளோ, "அப்படி சொல்லு மென். சரி வா நம்ப அடுத்த பாட்டு பாடி டான்ஸ் ஆடுவோம்" என்று சொன்னவள், அவனையும் இழுத்து போட்டு,


"தண்ணி தொட்டி தேடி வந்த

கன்னுகுட்டி நான்

இந்த சூரியன் வழுக்கி

சேத்தில் விழுந்தது மாமி..

என் கண்ண கட்டி காட்டில விட்டது

சாமி சாமி சாமி

சாராயத்த ஊத்து ஜன்னலத்தான் சாத்து"


என்று பாடி கொண்டே அவள் ஆட, "அடிப்பாவி உண்மையாவே குடிகாரியா? எல்லாமே சிட்டுவேஷன் சோங்கா பாடுறா" என்று வாய் விட்டே அவன் புலம்ப, "வா டா அர்ஜுன்....வந்து ஆடு... நம்ப என்ன பாட்டுக்கு ஆடலாம்" என்றவளை, இதற்கு மேல் தாங்காது என்று நினைத்து கொண்டு, அவனின் காரில் ஏற்றினான்.


அவளை ஒரு பக்கம் தள்ளி, அவன் மறுபக்கத்தில் ட்ரைவர் சீட்டில் ஏறிக்கொள்ள, அவளோ,

"பொன்மேனி உருகுதே

என் ஆசை பெருகுதே" என்று அவளோ சீட்டில் அமர்ந்து கொண்டே, நடனம் ஆட, அவனோ அவளுக்கு சீட் பெல்ட் போட முற்பட்டாள்.


அதற்கு அவள் விட வேண்டுமே!


அவனே எதிர்பாரா சமயத்தில் அவனின் மடியின் மீது ஏறி அமர்ந்து விட்டாள்.


"ஜானவி" என்று அவன் அதட்ட, அவளோ, "என்ன டா சும்மா என்னோட பெயரை ஏலம் போடுற! ஜானவி ஜானவின்னு... ஜானுமானு கூப்பிடு டா" என்று அவள் நா குழற பேசவும், 'ம்கூம் அது ஒன்னுதான் குறை இப்போ' என்று நினைத்தவன், "ஜானவி இறங்கி உன்னோட சீட்ல உட்காரு" என்று அவன் சொல்ல, அவளோ அவனை இம்சை செய்து கொண்டு இருந்தாள்.


"ம்கூம்...முடியாது முடியாது... இப்படி தான் உட்காருவேன்" என்று அவனை மேலும் நெருங்கி அவளின் உதடுகளால் அவனின் கழுத்தை உரச, அவனுக்கு தான் இம்சையாக போய் விட்டது.


"ராக்ஸஸி வச்சி செய்றா" என்று புலம்பியவன், எப்படியோ அவளை பக்கத்தில் இருந்த சீட்டில் கிடத்தி, சீட் பெல்ட்டும் போட்டு விட்டு விட்டான்.


அவனின் காரை எடுத்து அவனின் வீட்டிற்கு செல்லும் வரை அவள் சீட்டில் அமர்ந்த படியே குதித்து கொண்டு வர, அர்ஜுனுக்கு தான் கடுப்பாக இருந்தது.


அவனின் வீட்டிற்கு அவன் வந்ததும், அவளோ, "வாவ்... இது தான் நம்ப வசந்த மாளிகையா?" என்று சுத்திகொண்டு இருக்க, "ஐயோ எனக்கு தலை சுத்துது அர்ஜுன்" என்று சொல்லவும், "தலை சுத்தலை.. நீ தான் சுத்துற" என்றவன் அவளை அவனின் அறைக்கு பக்கத்தில் இருக்கும் அறையில் கொண்டு போய் விட்டான்.


அவளோ, "என்ன விட்டுட்டு நீ எங்க டா போற? நீயும் இரு" என்று அவனை பிடித்து இழுத்து படுக்கையில் தள்ளி இருந்தாள்.


அவனின் மீது அவளும் விழ, அவனோ, "ஜானவி" என்று பற்களை கடித்து கொண்டு அழைத்தவன், அவளை கீழே தள்ளி, அவன் எழுந்து கொண்டான்.


அவள் அப்போதும் விடாமல், எழுந்து கொண்டு அவனை இழுக்கவும், அவனோ, "பைத்தியக்காரி போய் தூங்கு டி... சரியான இம்சை" என்று சொல்லவும், "யாரு டா இம்சை... நீ தான் டா இம்சை அரசன் இருப்பத்திமூணாம் புலிகேசி" என்று அந்த போதையிலும் சண்டைக்கு நின்றாள்.


'இந்த போதைல கூட இந்த சோத்து மூட்டைக்கு கவுண்டர் வருது' என்று நினைத்தவன், "பிரின்சஸ் ஜானவி.. ப்ளீஸ் போய் தூங்குறீங்களா?" என்று அவன் அடங்கி செல்வது போல, அவளை கலாய்க்க, அவளும், "அப்படி சொல்லு... நான் தான் எங்க வீட்லயே எல்லா டாடிஸோட லிட்டில் பிரின்சஸ்" என்று சொல்லவும், 'உன்ன இல்ல உன் டாடிஸ்ச தான் டி உதைக்கணும்' என்று நினைத்து கொண்டே, அவன் செல்ல நினைக்கும் போதே, மீண்டும் அவனை நினைத்தவன், அவனின் மீதே வாந்தி எடுத்து இருந்தாள்.


இந்த இரவு அவ்வளவு எளிதாக கடக்க போவது இல்லை என்று மட்டும் அர்ஜுனிற்கு புரிந்தது.
 

அத்தியாயம் 4

அவனுக்கு ஆத்திரமாக வந்தது. இருந்தாலும் அடக்கி கொண்டான்.


"ஜானவி" என்று அழைத்தவன், அவளை அப்படியே கொண்டு போய் ஷாவரின் கீழ் நிற்க வைத்தான். தண்ணீர் இருவரின் மேனியையும் நனைத்தது.


அவளோ அவனின் கைகளில் திமிர, அவனின் கழுத்திலும் நெஞ்சிலும் அவளின் நகத்தின் கீறல்கள் வேறு பதிந்தது. அவனோ அவளை அவனின் கையில் அடக்கி இருந்தான்.


புயலாக இருக்கும் ஜானவியையே அவனின் கையில் அடக்கி விட்டான் அர்ஜுன்.


அவளின் உடை வேறு மொத்தமாக நனைந்து விட்டது.


அவனும் நனைந்து விட்டான்.


அவளும் ஷவரின் அடியிலேயே மயங்கி விட்டாள்.


அவளை அப்படியே தூங்க வைக்கவும் முடியாது.


அவளை கையில் ஏந்தி கொண்டவன், அவளை அருகில் இருந்த ஒரு நாற்காலியில் அமர வைத்து, அலமாரியில் இருந்து ஒரு சட்டையை எடுத்தான்.


விளக்கை அணைத்தவன், அவனே அவளுக்கு உடையும் மாற்றி விட்டான். வேறு வழி இல்லையே! இந்த நேரத்தில் அவன் யாரை சென்று அழைக்க முடியும்?


பின்பு விளக்கை போட்டவன், அவளை கையில் ஏந்தி கொண்டு படுக்கையில் கிடத்தவும், அவளும் உறக்கத்திலும் அவனின் சட்டையை பிடித்து இழுக்க, அவனின் முகத்தில் மெல்லிய புன்னகை.


அவளின் முகத்தில் படர்ந்த முடியை ஒதுக்கி விட்டவன், அவனை அறியாமலேயே அவளின் பிறை நெற்றியில் முத்தமும் கொடுத்து இருந்தான்.


பின்பு தான் அவனுக்கு அவன் என்ன செய்தான் என்று மூளையில் உரைக்க, சட்டென அங்கிருந்து நகர்ந்து அவனின் அறைக்கு சென்று விட்டான்.


அறைக்குள் சென்றவன் அவனின் உடையை மாற்றிக்கொண்டு வரவும், படுக்கையில் படுத்தவனுக்கு உறக்கமே வர வில்லை.


அவனின் நினைவுகளில் ஆயிரம் போராட்டம். அத்தனையையும் ஒதுக்கி வைத்தவன், அப்படியே கண் அயர்ந்தான்.


காலையில் ஜானவி எழும் சமயம் அவளுக்கு ஏதோ தலையில் பாறாங்கல் வைத்தது போன்ற உணர்வு.


தலையின் பாரம் ஒரு புறம் என்றால் அவளுக்கு உடம்பும் அடித்து போட்டது போல் தான் இருந்தது.


அவள் சுற்றி முற்றி பார்க்க, அந்த இடமே அவளுக்கு புதியதாய் தெரிந்தது.


அவளின் நினைவை பின்னோக்கி செலுத்தியவளுக்கு அவள் நேற்று பார்ட்டிக்கு போனதும் அங்கே ஜூஸ் குடித்ததும் நினைவு வந்தது.


அப்படியே இன்னும் கொஞ்சம் கடினப்பட்டு நினைவு படுத்தவும், அர்ஜுன் அவளை அவனின் வீட்டிற்கு கொண்டு வந்ததும் நினைவிற்கு வந்தது.


"ஆத்தி இது அந்த தடியன் வீடா?" என்று சொல்லிக்கொண்டே தலையை பிடித்து கொண்டு திரும்பியவளுக்கு பக்கத்தில் இருக்கும் டேபிளில் அவளுக்கு ஒரு எலுமிச்சை ஜூஸ் உடன், ஒரு கடிதம் இருப்பது தெரிந்தது.


அதை எடுத்து படித்தவளுக்கு, "ஹே சோத்து மூட்டை, இத குடிச்சிட்டு பிரெஷ் அப் ஆகிட்டு வெளியே வா! உனக்கு டிரஸ் அங்க இருக்க செர்ல வச்சிருக்கேன்" என்றும் எழுதி இருந்தான் அர்ஜுன்.


"இந்த சோத்து மூட்டையை மட்டும் விடவே மாட்டுறான்" என்று சொல்லிக்கொண்டே அவன் வைத்த எலுமிச்சை சாற்றை குடித்தவளுக்கு மீதி இருந்த போதை தெளிந்த உணர்வு.


அவளும் எழுந்து சென்று குளித்து விட்டு அவன் வைத்து இருந்த உடையை அணிந்து வந்தவளின் கண்களில் பட்டது என்னவோ, அங்கே சமையல் அறையில் சமைத்து கொண்டு இருக்கும் அர்ஜுன் தான்.


"வாவ் உனக்கு சமைக்க தெரியுமா அர்ஜுன்?" என்று கேட்டுக்கொண்டே அவள் வரவும், 'ம்ம்" என்பதுடன் நிறுத்தி கொண்டான்.


அவளோ சமயற்கட்டின் மேடையில் ஏறி அமர்ந்து, "அப்போ எனக்கு எதிர்காலத்துல பிரச்சனையே இல்ல...நீயே எல்லாம் சமைச்சிருவ.. எனக்கு சுடு தண்ணி தான் போட தெரியும் அர்ஜுன்" என்றவள் சொல்லவும், "உனக்கு கேஸ் பத்த வைக்க தெரியர்தே எனக்கு அதிசயமா தான் தோணுது" என்றான்.


"ஒரு தடவ என் அண்ணா எல்லாருக்கும் கோலமாவுல காபி போட்டு கொடுத்துட்டேன். அதுக்கு அப்புறம் என் அம்மா என்ன கிட்சன்குள்ள விடவே இல்ல" என்றவளை பார்த்து, "உங்க அம்மாக்கு தேங்க்ஸ் சொல்லு... இல்லனா நீ இந்நேரம் கொலை கேஸ்ல ஜெயில்ல தான் கம்பி எண்ணிக்கிட்டு இருந்து இருப்ப" என்றான்.


அவளோ உதட்டை சுழித்து, "என்ன செய்ற?" என்று கேட்கவும், "ஹாம் மேட் ஸ்பகெத்தி" என்றவுடன், "வாவ் எனக்கு ரொம்ப பிடிக்கும் அர்ஜுன்" என்று உற்சாகமாக பேசினாள் ஜானவி.


அவனோ அவளை மேல் இருந்து கீழ் பார்த்து, "உனக்கு எது பிடிக்காதுன்னு சொல்லு.. நீ தான் சரியான சோத்து மூட்டையாச்சே டி" என்றவுடன் அவளோ கோவமாக சென்று அங்கிருந்த மேஜையில் அமர்ந்து கொண்டாள்.


அவனுக்கு அவளின் சைகை எல்லாமே சிரிப்பாக தான் இருந்தது.


இவள் எப்படி அந்த வீட்டில் பிறந்தால் என்று அவனால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.


இதே சமயம் அவனும் சமைத்து முடித்து இருக்க, அவளிற்கு சேர்த்து உணவை எடுத்து கொண்டு வந்தான்.


ஆனால் அவள் அதை தொடவே இல்லை.


அவனோ சாப்பிட்டு கொண்டே, அவனுக்கு பகிரியில் வந்த அனைத்து செய்திகளுக்கும் பதில் அனுப்பி கொண்டு இருக்க, அவள் சாப்பிடாமல் இருப்பதை அவனும் பார்க்கவில்லை.


சிறுது நேரம் கழித்து தான், அவள் உணவை தொட கூட இல்லை என்று அவனிற்கு தெரிந்தது.


"ஏன் சாப்பிடல?" என்று கேட்டவனிடம் அவள் பதில் அளிக்க வில்லை.


கோவமாக இருக்கிறாளாம்.


அவனோ சிரிப்புடன், "ஹே சோத்து மூட்டை, உன்ன தான்" என்று அவன் சீண்டவும், அவள் அப்போதும் பதில் பேசவில்லை.


வேண்டுமென்றே அவளின் முடியை கொதி விட, அவளோ அவனின் கையை தட்டி விட்டு இருந்தாள்.


அவனோ உணவு மேஜையின் மீது ஏறி அமர்ந்து அவளின் உணவு தட்டை எடுத்து, "இங்க பாரு உனக்கு கோவம்னா என் மேல காட்டு.. எதுக்கு இப்படி சாப்பாடு மேல காட்டுற? அதுவும் உன்னால சாப்பிடாம இருக்க முடியாது" என்றவன் அவனே ஸ்பூனில் அவளுக்கு ஊட்டவும், அவள் முதலில் வாங்கவில்லை.


"சாப்பிடுறியா இல்லையா?" என்று கேட்டவன் அந்த தட்டை வைக்க போக, அவனின் கையில் இருந்து உணவு அவளின் வாய்க்குள் போயிருந்தது.


அவனும் மொத்தமாக அவளுக்கு ஊட்டி முடித்து இருந்தான்.


"ஓகே வா?" என்று கேட்க, அவளும் அவனின் அருகில் சென்று, "தேங்க் யு அர்ஜுன்" என்றவள் அவனின் கன்னத்தில் முத்தம் பதித்து இருந்தாள்.


"இப்படி கிஸ் பண்ணாத ஜானவி?" என்று அவன் சொல்லவும், "ஓஹ் அப்போ இப்படி கிஸ் பண்ணவா?" என்று கேட்டவள், அவனின் சட்டையை பிடித்து இழுத்து அவனின் இதழ்களை சுவைக்க துவங்கினாள்.


முதலில் திமிறிய அர்ஜூனால், நேரம் செல்ல செல்ல அவளை தள்ள முடியவில்லை.


அவனின் கைகள் தாமாக அவளின் இடையை பற்ற, ஜானவியின் கைகளோ அவனின் சிகையை பற்றியது.


திகட்ட திகட்ட ஒரு முத்த யுத்தம்.


இருவரின் இளமையும் காட்டாற்று வெள்ளமாக கரை புரண்டு ஓட, அவர்களை சுய நினைவிற்கு கொண்டு வந்தது என்னவோ ஜானவியின் கைப்பேசி தான்.


சட்டென இருவரும் பிரிந்து விட்டனர்.


அர்ஜுனின் கை, ஜானவியின் சட்டைக்குள் இருக்கும் அவளின் மேனியின் வெற்றியடையை பற்றி இருந்தது.


அவன் கண்களை அழுந்த மூடி திறந்தான்.


ஒற்றை முத்தத்தில் அவனை மொத்தமாக சாய்த்து விட்டாலே அவனின் அழகு ராக்ஸஸி!


எந்த உணர்வுகளை அவன் கடிவாளம் போட்டு மறைத்து கொண்டு இருக்கிறானோ அதை மொத்தமாக அவிழ்த்து விட துவங்கி இருந்தாள் ஜானவி.


"நோ அர்ஜுன் நோ... நீ இவளோ வீக்காக கூடாது" என்று அவனிற்கு அவனே சொல்லிக்கொண்டவன் அவனின் அறைக்கு சென்று விட்டான்.


ஜானவியோ அவளுக்கு வந்த அழைப்பை எடுத்து பேசியவள், அர்ஜுனின் பின்னாலேயே அவனை பார்க்க சென்றாள்.


"அர்ஜுன்" என்றவள் அழைக்கவும், "வெளிய போ" என்று கத்தி இருந்தான்.


அவளோ மீண்டும், "அர்ஜுன்" என்று அவனை நெருங்க, அவனோ அவளை இழுத்து கொண்டு வந்து அவனின் வீட்டிற்கு வெளிய விட்டவன், "வெளிய போ டி" என்று அவளின் முகத்திற்கு நேராக கதவை சாற்றி விட்டான்.


அர்ஜுனின் கைப்பேசி சிணுங்கியது. அதை எடுத்து காதில் வைத்தவன், எதிரில் என்ன சொன்னாரோ அந்த நபர், அதற்கு, "நோ எக்காரணம் கொண்டும் எதுவும் யாருக்கும் தெரிய வேண்டாம்" என்று சொல்லி வைத்து விட்டான்.


அர்ஜுனின் ரகசியம் என்னவோ?
 
Top