Kiruthika_Jayaseelan
Moderator
அத்தியாயம் 1
கதிரவன் அவனின் வேலையை செய்ய சரியாக ஆறு மணிக்கு உதித்து இருந்தான்.
அர்ஜுனும் கண் விழித்து இருந்தான். ஆறடிக்கு மேல் உயர்ந்து நிற்கும் ஆண்மகன் அவன். அழகானவன், அன்பானவன், அதையும் தாண்டி இப்போது தொழில் துறையில் ஆதிக்கம் செய்ய துவங்கி இருக்கும் அரிமா அவன்.
எழுந்தவன் நேரே சென்றது என்னவோ அவனின் வீட்டிலே இருக்கும் சிறிய உடற்பயிற்சி கூடத்திற்கு தான்.
அவனின் ஹெட் சேட்டை போட்டு கொண்டு அவன் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்க, அவனின் கைபேசி சிணுங்கியது.
வெற்றி தான் அழைத்து இருந்தான். அவனின் உதடுகள் தாராளமாக விரிந்தன.
அழைப்பை அவன் ஏற்கவும், "எப்படி இருக்கீங்க அர்ஜுன் சார்?" என்று கேட்கவும், "எனக்கு என்ன பேஷா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?" என்று கேட்கவும், "ஏதோ உங்க புண்ணியத்துல நல்லா தான் இருக்கேன்" என்று அவனை சீண்டினான்.
ஆயிற்று அவன் ஜானவியை கடத்தி முடித்து ஒரு வருடம் ஆகி இருந்தது.
யாழை சென்று பார்த்து வந்தவன், அதன் பிறகு மும்பை செல்ல வில்லை.
"யாழ் எப்படி இருக்கா?" என்று கேட்கவும், "கொஞ்சம் பரவால்ல.. சரி ஆகிடுவா... ஆதி எல்லாத்தையும் சரி ஆக்கிடுவான்" என்று உறுதியாக வந்தது அவனின் வார்த்தைகள்.
"உனக்கு ஆதி மேல இவளோ நம்பிக்கையா வெற்றி? யாழ் அழுதாலே நீ தாங்கமாட்ட ஆனா அவ இப்போ எவளோ துடிக்கிறா ஆனா நீ அமைதியா இருக்க" என்று அர்ஜுன் வினவ, "அவன் ஒன்னும் அவ அழ காரணம் இல்லையே... அவன் ஏதோ அவங்க குடும்பத்தோட சூழ்நிலையால் அப்படி பேசிட்டான். நீயே பார்த்த தானே! அவன் எவளோ லவ் பன்றான் நிலாவ?" என்று கேட்கவும், "சரி தான். பார்ப்போம் எல்லாம் சரி ஆகிடும், இன்னைக்கு எனக்கு ஒரு புது கிளைண்ட்டோட மீட்டிங் இருக்கு" என்று அவன் சொல்லவும், "செம்ம டா... நீ எப்பவும் போல மாஸ் பன்னிருவ" என்று சொன்னவன் வாழ்த்தையும் கூறி வைத்து விட்டான்.
அர்ஜுன் அவனின் உடற்பயிற்சி முடித்து அவனின் நண்பன் வருணிற்கு தான் அழைத்தான். அவனின் காரியதரிசியும் கூட!
"சொல்லு டா மாச்சான்" என்று தூக்கம் கலந்த குரலில் அவன் பேச, "நைட் எல்லாம் கடல போட வேண்டியது. இன்னைக்கு மீட்டிங் இருக்கு டா நினைவு இருக்கா? நான் உனக்கு பஸ்ஸா இல்ல நீ எனக்கு பாஸா?" என்று அவன் கேட்கவும், "இதையே போய் உன் பெஸ்டி கிட்ட கேளு! சைத்தான் நைட் முழுக்க அவளோட புலம்பல் எல்லாம் கேட்க வைக்குறா... அவ புதுசா வேலைல சேர்ந்ததும் சேர்ந்தா என்ன வச்சி செய்யுறா டா" என்று அவன் புலம்பினான்.
அர்ஜுன் சிரித்து விட்டு, "இந்த பிரச்சனைக்கு தான் டா நான் இன்னும் லவ் பண்ணாம ஜாலியா இருக்கேன்" என்று அவன் சொல்லவும், "டேய் ரொம்ப ஆடாத உன்னையும் ஆட்டி வைக்க ஒருத்தி வராமலா போகிருவா?" என்றவனை பார்த்து, "நான் அவளை ஆட்டி வைக்குறேனா இல்ல அவ என்னை ஆட்டி வைக்குறளான்னு நடக்கும் போது பார்ப்போம்... ஓழுங்கா மீட்டிங் வந்து சேறு" என்று வைத்து விட்டான்.
குளித்து முடித்து அவனின் பச்சை நிற சட்டையில் ஆயுத்தமானவன், பின்பு ஜெல் வைத்து அவனின் தலையை சீவினான்.
அம்சமாக இருந்தான்.
இளவரசனை போல் காட்சி அளித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
அவனின் காரை உயிர்ப்பித்து அவனின் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று இருந்தான்.
அங்கே அவனுக்கு முன்னவே வந்து இருந்தான் வருண்.
"டேய் குளிச்சியா இல்லயா? எனக்கு முன்னவே வந்துட்ட?" என்று கேட்டுக்கொண்டே அர்ஜுன் அவனை நெருங்க, "சாவடி வாங்குவ பார்த்துக்கோ, அதெல்லாம் குளிச்சி முடிச்சி ஜாகுவார் பெர்ப்யூம் போட்டுட்டு வந்தேனாக்கும்" என்று சொல்லும் போதே அர்ஜுனின் மேல் வரும் வாசனை அவனை ஈர்த்தது.
"நீ என்ன டா யூஸ் பண்ற?" என்று கேட்க, "ஷாருக் கான் யூஸ் பண்ணுவாரே டிப்திக் அந்த பெர்ப்யூம் தான்... செம்மயா இருக்குல?" என்று அவன் கண்சிமிட்டவும், "உனக்கு சரியா தான் டா உன் அம்மா பேரு வச்சிருக்காங்க அர்ஜுன்னு... பொண்ணுங்க எல்லாம் உன் பின்னாடியே வராங்க பாரு" என்று சொல்லவும், அவனோ சிரித்து கொண்டே உள்ளே சென்றான்.
உள்ளே நுழைந்ததும் அவர்களை வரவேற்றது என்னவோ மிகவும் பரிட்சயமான முகம் தான்.
"உன் ஆளு இங்க என்ன பண்ரா?" என்று கேட்டவனை பார்த்து, "நீயே கேளு டா" என்று வருண் சொல்லவும், "வர்ஷினி நீ இங்க" என்று அர்ஜுன் ஆரம்பிக்கும் போதே, "ஹலோ சார், மேம் உங்களுக்காக வெயிட் பன்றாங்க" என்றவள் பேசவும் அர்ஜுனின் புருவங்கள் சுருங்கியது.
"இந்த சார் எதுக்கு?" என்று கேட்டவனை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "உன்ன ஸ்ட்ரிக்ட்டா சார்ன்னு தான் கூப்பிடணும்னு எங்க பாஸ் சொல்லி இருக்காங்க" என்று அவள் ஹஸ்கி குரலில் பேசவும், வருணோ, "அது யாரு டா உனக்கு இவளோ மரியாதை தர சொல்றவங்க" என்ற வருணை பார்த்து உதடு பிதுக்கி, "தெரியலையே.. இது வேற ஏதோ பெரிய கம்பெனியோட டை அப் வச்சிருக்க கம்பெனின்னு மட்டும் தான் தெரியும். அந்த மேடம் யாருனு எனக்கு தெரியலையே" என்று சொன்னவன், "சரி நான் உள்ள போகலாமா?" என்று வர்ஷினியை பார்த்து கேட்கவும், "தாராளமா போகலாம் சார்" என்று அவள் சொல்ல அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்றான்.
அறையினுள் செல்வதற்கு முன், அவன் கதவை தட்ட, "கம் இன்" என்கிற சத்தத்தில் உள்ளே சென்றான்.
அங்கோ நாற்காலியில் அமர்ந்து எதிர் பக்கத்தை பார்த்து கொண்டு இருந்தது ஒரு உருவம்.
"மிஸ் ஆர் மிஸஸ்" என்று அவன் கேட்கவும், அவளோ, "மிஸ் தான் மிஸ்டர் அர்ஜுன் அபினவ்" என்று திரும்பி அமர்ந்தாள் ஜானவி.
அர்ஜுனின் கண்கள் விரிந்தன. கிட்டத்தட்ட அவளை ஒரு வருடத்திற்கு பிறகு பார்க்கிறான்.
அதே போல் தான் இருந்தாள்.
எந்த மாற்றமும் இல்லை!
அவளின் கண்களில் இன்னும் அதே குறும்பு மறைந்து இருந்தது.
பச்சை நிற சட்டையும் ப்ளூ நிற ஜீன்ஸ் அணிந்து அத்தனை மிடுக்காய் அமர்ந்து இருந்தாள்.
ருத்ரனின் மகளுக்கு சொல்லியும் கொடுக்க வேண்டுமா?
அவள் அணிந்து இருந்த உடையில் இருந்து, ஹீல்ஸ், மோதிரம் மற்றும் கழுத்தில் இருந்த பிளாட்டினம் செயின் உட்பட அனைத்தும் அவளின் அழகை மட்டுமல்ல அவளின் செல்வ செழிப்பையும் பறைசாற்றியது.
அழகி தான் அவள். ஆதியின் தங்கையாயிர்றே! ஆதி அழகன் என்றால் அந்த வீட்டிலேயே அழகி ஜானவி தான்.
தேவதை பெண்ணவள்! தைரியம் நிறைந்தவள்!
சிறுவயதில் இருந்தே அவளுக்கு பயம் என்றால் என்னவென்று யாரும் சொல்லி கொடுத்ததே இல்லை. ஐந்து அண்ணன்களின் கையில் வளர்ந்தவள் அவள்.
அவளுக்கு பிரச்சனை என்று இதுவரை ஒன்றும் வந்ததே இல்லை. ஏனென்றால் பிரச்சனையே அவளாக தான் நிறைய இடங்களில் இருப்பாள்.
செல்லமாகவே வளர்ந்து விட்டாள் என்பதை விட, வளர்த்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
ருத்ரன் மட்டும் அல்ல விஷ்ணு, விக்ரமன், சேகரன், ராஜ பார்த்திபன், விஜயேந்திரன் என்று அனைவருமே அவள் கேட்பதற்கு முன் அவளுக்கு வேண்டியதை கண் முன் வைத்து விடுவார்கள்.
அவளின் வங்கி கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்று கூட அவளுக்கு தெரியாது.
பார்த்து செலவு செய்யும் பழக்கம் இல்லாதவள் அவள்.
பிடித்து இருந்தாள் எடுத்து கொள்வாள். உணவு பிரியை அவள்!
அனைத்து வகையான உணவுகளும் அவளுக்கு பிடிக்கும் ஆனால் அவளிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் உயர்ரக உணவகத்தில் மட்டுமே அவளுக்கு உணவருந்த பிடிக்கும்.
ஐந்தரை அடி சிற்பம் தான். ஆனால் இன்று வரை அவளை யாரும் நெருங்கியது இல்லை. பார்த்து சைட் அடிப்பதோடு சரி, அவளை நெருங்கினால் அவளே அடித்து கொன்று விடுவாள் என்று அனைவருக்கும் தெரியும்.
அதையும் தாண்டி ருத்ரனின் மகளை நெருங்க பைத்தியமா என்ன?
இது அனைத்தையும் தகர்த்து எரிந்து அவளை முதன்முதலில் தொட்டு தூக்கி கடத்தி இருந்தது என்னவோ அர்ஜுன் தான்.
வெற்றி அவனிடம் அன்று பேசும் போதே, "அவ சென்ட்ரல் மினிஸ்டர் ருத்ரன் பொண்ணு அர்ஜுன் அவளோ ஈஸி இல்ல" என்று தான் சொல்லி இருந்தான்.
"யாரா இருந்தா என்ன? அவளை நான் தூக்குறேன்" என்று சொன்னவன் செய்தும் காட்டி இருந்தான்.
அகலயாவிற்கே ஆச்சர்யம் தான். ஜானவியை ஒருவன் கடத்தி இருக்கிறானா என்று!
பயம் அறியாதவன் அவன்! பயத்தை அறியாதவள் அவள்!
அவளை தூக்கியது இன்றும் அவனுக்கு நினைவு இருந்தது.
"பார்க்கறதுக்கு பார்பி டால் மாதிரி இருக்கா! ஆனா பருத்தி மூட்டை கணம் கணக்குறா" என்று திட்டிக்கொண்டே தான் அவளை தூக்கி இருந்தான்.
இருவரின் கண்களும் மோதிக்கொண்டன.
"வாங்க மிஸ்டர் அர்ஜுன் அபினவ்" என்று கால் மேல் கால் போட்டு கொண்டு கைகளை கட்டி அவனை பார்த்து கொண்டு இருந்தாள் செந்தளிர் இல்லத்தின் செல்ல மகள்.
அர்ஜுனோ, அமர்ந்தவன், கால் மேல் கால் போட்டு கொண்டு, "நைஸ் டு மீட் யு அகைன் மிஸ் ஜானவி ருத்ர தேவன்" என்று பதில் அளித்தான்.
சிங்கத்திற்கு பிறந்தவள் அவள், சிறுத்தையைக இருப்பவன் இவன்!
இருவரும் ஒரே கோட்டில் மீண்டும் சந்திக்கிறார்கள். இனி என்ன நிகழுமோ?