உமா கார்த்திக்
Moderator
அன்று அந்த நிகழ்வுக்கு பிறகு நடைபிணமாக வளம் வந்தாள் பவித்ரா. தப்பி தவறி கூட ப்ரீத்க்கு அழைக்கவில்லை.. அவனே அழைத்தாலும் ஏற்க்க வில்லை.. நல்ல வேளை கண்ணீருக்கு வண்ணம் இல்லை.. இருந்திருந்தால் அவள் மெத்தையும் தலையணையின் நிறமும் அவள் அழுகையின் அளவை வண்ணமாக தீட்டி அவள் தாய்க்கு காட்டி இருக்கும்.
" அவளது தாய் இவள் செயலை கவனிக்காமல் இல்லை. உயிர் இல்லா கண்கள், ஒற்றை வரி பதில். ஒப்புக்கு சாப்பிட அமர்ந்து கையை மட்டும் பிசைந்து .. யாருக்குமே தெரியாமல் குப்பையில் கொட்டுவதும் . அறையில் தனியே அழுவதும் பின்பு ஹெட் ஃபோனில் சோக பாடல்கள் கேட்பதும் .. அவ்வப்போது காஃபி தர செல்லும் அவள் அம்மா சுமதி கவனிக்காமல் இல்லை. ப்ரீத்தின் பிரிவால் ஒருவேளை இப்படி
இருக்கிறளோ என்று யோசித்து ஏதும் பேசாமல் அமைதியாக சுமதி இருக்க.. அதை சோதிக்கும் விதமாய் ப்ரீத் புகைப்படத்தை உடைத்து குப்பைய் தொட்டியில் போட்டதை பார்த்ததும். அத்தை என்றாலும் அன்னை போல அவனை வளர்தவர் உள்ளம் பொருக்காது.. கோபத்தோடு அவள் அறைக்கு வர, அழுது கொண்டு இருந்தவள் சட்டென விழிகளை துடைத்தாள்..
" என்ன ஆச்சி பவி சண்டையா.. அவன் கூட,ஏன் அழற.. கண்கானம இருக்க புள்ளை போட்டோவ உடைச்சு தூக்கி போட்டுருக்க.. வீடான வீட்டுல இப்டி உடைஞ்சா அது எவ்ளோ கெட்டது தெரியுமா? அப்டி என்ன சண்டை?
ஊருக்கு போகும் போது உன்ன அடிக்க கூடாதுனு என்கிட்ட அவன் கேட்டுகிட்ட ஒரே காரணத்தால அடி வாங்காம இருக்க.. இல்லை" என்று பற்களை கடித்து எச்சரித்து விட்டு சென்றார் சுமதி.
"அம்மா .. அவன்கிட்ட பேசுனியா.. நல்லா இருக்கானா?" ஏக்கத்தோடு அவள் கேட்டதும்,
சுமதி -" நீ பேசலைனா அவன் எப்டி நல்லா இருப்பான் பவி. அத்தை அவள பேச சொல்லுங்க னு கெஞ்சுறான். ஏன் ..டி தனியா இருக்கவன இப்படி பாடா படுத்துற, நீ சாப்டலைனா கூட கவனிக்க நான் இருக்கேன். அவன பாக்க.. கேட்க யாரு இருக்கா டி . பேச கூட அவனுக்கு ஜீவன் இல்லைடி குரலே சரி இல்லை. ஆம்பள புள்ளைய தனியா அனுப்பி தப்பு பண்ணிட்டேன். எல்லாரையும் அக்கறையா .. பார்த்தவன ஏன் னு கேட்க கூட நாதி இல்லை. பாவம் பண்ணி பொறந்தவன். கல்லு மாதிரி உட்காந்துக மனசு இறங்கிடாத. " என்று வசை பாடிவிட்டு அறையை விட்டு ஆதங்கமாக சுமதி வெளியேற .
" சாப்டலையா..டா நீ.. நான் பேசலைனா உனக்கும் கஷ்டமா இருக்கா.? அப்பறம் ஏன் டா அப்படி பண்ண. " ஒழுங்க சாப்பிடு ப்ரீத் என்று வாட்ஸ் ஆப் ல் குறுஞ்செய்தி அனுப்பினாள் பவித்ரா.. அதற்க்கு பதில் இல்லை.. மறுபடியும் ஹெட்போனை காதில் வைத்து பாடல் கேட்டு கண்ணீர் விட தொடங்கினாள்.
"எங்கிருந்து வந்தாயோ?எதற்க்காக வந்தாயோ?என்னமோ சொன்னையே…கத பேசி போனாயே…அதை நானும்அறியும் முன்னேநீயும் மறைந்தாயேமெல்ல காற்றில்கரைந்தாயே ..
நடக்கையில தொடர்ந்து வர,நடு நடுவே மறைஞ்சுடுவ!தலை முடிய ஒதுக்கையிலும்,வகடுகுள்ள ஒளிஞ்சிடுவ!கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன,கழுவி விட மனமில்லையே!உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன,ஒதர ஒரு வழியில்லையே!அட நீயும் மறைந்தாயே…மெல்ல காற்றில் கரைந்தாயே…உயிரோடு உரைந்தாயே…
என்ற பாடல் முடியவும் . சுமதி கத்தவும் சரியாக இருக்க " காலிங் பெல் அடிக்குற சத்தம் கேட்கலாயா? எருமை தின்னு தின்னுட்டு படுக்குறதுக்கு இதையாவது செய்..
" போறேன் மா . தலையை அள்ளி முடிந்து கொண்டே .. இரவு உடையான டிராக் பேன்ட் நீல நிற டீ ஷர்ட் போட்டு இருந்தாள் பவி. ஷால் போடாம போனா அம்மா திட்டுவாங்க என அழுக்கு துணியுடன் இருந்த சிவப்பு நிற ஷாலை நெஞ்சோடு போர்த்தி கதவை திறந்தாள். எதிரே இருப்பவனை கண்டு இதயம் எகிறி துடித்தது.!! லப்டப் இப்போது 180 தான்டி துடிக்க.. உங்களுக்கே அது யாருனு தெரிஞ்சிருக்கும் ம் .. அவன் தான். அவனே தான். சிமெண்ட் நிற அழுக்கு
டீ ஷர்ட் ,வெளிர் நிற பழைய ஜீன்ஸ் பேண்ட் உடன் காலில் சிலிப்பர் செருப்பு.இப்டியே வாடா வந்த என்பதை போல் பவி ஒரு லுக் விட கனவு தான் இது.
'நீட்டா ஷர்ட் போடாம எங்கேயும் வர மாட்டான் ப்ரீத். நான் அயன் பண்ணாம சுடி போட்டாலே திட்டுவான். பானி பூரி விக்குறவன் மாதிரியா டெல்லி ல இருந்து வருவான். இவன நெனைச்சு நெனைச்சு பைத்தியம் புடிச்சிருச்சோ.?அப்படிதான் இருக்கும். '
" பவி" என்று அவன் குரல் கேட்டது தான் தாமதம். ஓடி சென்று தாயை பிரிந்த சேய் போல அவனை கட்டி அணைத்துக் கொண்டாள் பவித்ரா. அவள் அவன் மேலே கொண்ட கோபம் அவன் செய்த துரோகம்.. பொய்கள், தவறுகள் அத்தனையும் அவள் அன்பின் முன்னாள் தோற்றுப் போனது.! ஏற்கனவே அழுக்காக உள்ள டீ சட்டை கண்ணீர் சிந்தி இன்னும் அழுகாக்கினாள்.
அதிர்ச்சியோடு கேட்டாள் " ப்ரீத்.. இப்டியே வா பிளைட் ல வந்த..? என்னாலயே உன் பக்கத்துல நிக்க முடியலை. வேர்வை வாடை கொமட்டுது. உவக்.."என்று முகத்தை சுழிக்க.
" இது ரொம்ப முக்கியமான கேள்வி.. போடி.. என்னாலயே என்கிட்ட நிக்க முடியலை. பாவம் பவி என் பக்கத்துல உட்கார்ந்துட்டு வந்தவர்.. தாங்க முடியாம அவரே பாடி ஸ்ரே எடுத்து கைல கொடுத்துட்டாரு.. ரெண்டு நாள் ஆச்சி குளிச்சி. ஆமா என்கிட்ட பேசல னு பார்த்தா.. ஏன் சாப்டலை நீ.? எனக்கு தான் சோறு கிடைக்கல , சாப்பாத்திய சாப்ட முடியாம வோடபோன் நாய் மாதிரி இருந்தவன் தெருநாய் மாதிரி ஆகிட்டேன். உனக்கு என்ன கேடு.. " என்று ப்ரீத் அவள் முகத்தை பார்த்தவன். " ஏய் எங்கடி உன் கன்னம். இரு கன்னமும் வற்றி ஒட்டி போனதால் " என் பன் னு குட்டி ஆப்பிள் மாதிரி இருந்த கன்னம் எங்கடி " என்று உதட்டை பிதுக்கி அதிர்ந்து கேட்க.
கிணற்றை காணோம் என்று ஒரு காமெடி வடிவேல் கேட்பது போல கேட்கவும். என்ன சொல்வது என்றே தெரியாமல் மலங்க மலங்க விழித்தாள் பவித்ரா.
" அத்தைய நம்பி உன்னை விட்டுட்டு போனது தப்பா போச்சு. என் செல்லக்குட்டி பட்டினியா போட்டு கொல்றாங்க போல.. மாமா வந்துட்டேன் டி பட்டு. உன் கன்னத்த வளர்க்க வேண்டியது என் பொறுப்பு " என்று செல்பவனை வியப்பாக நோக்கி..'என்னடா பிள்ளைய வளக்குற மாதிரி சொல்றான் 'என எண்ணி..அவனை கண்களில் நிரப்புவதில் பிஸி ஆகி விட..
" ஷோல்டர் பேக் ஐ கலட்டி சோஃபாவில் வீசி விட்டு , ஒரே ஒட்டமாய் கிட்சனில் நுழைந்து சிங்கிள் கை மற்றும் முகத்தை கழுவி, சாதம் சாம்பார் கேரட் பொறியலை அள்ளி நிரப்பி .. வாட்டர் பாட்டிலை ஒரு கையிலும் தட்டை மறுகையிலும் ஏந்தி அவளிடம் ஒடி வந்தான் பாசக்கார மாமன். உணவை பிசைந்து பிசைந்து ஊட்டிவிடலானான் பவிக்கு " ஏய் பம்புலி மாஸ் கோபத்த சாப்பாட்டுல காட்டாத .. அவன் கண்களில் நீர் வழிய.. அன்போடு அவன் புகட்டும் உணவுக்கு முன் அமிர்தமும் தோற்றுப் போனது. அன்போடு சிறிது நேரம் உணவை ஊட்டியவன் தயங்கியவாரு ஒன்னு சொன்னா கோச்சிக்க மாட்டியே. நான் கூட இன்னும் சாப்பிடல பசிக்குது பவி..
"உடனே கையைப் பார்த்தவள். அச்சச்சோ கை கழுவலடா இரு.."
"பரவால்ல பவி நீ சுத்தமா தான் இருப்ப.. எனக்கு நம்பிக்கை இருக்கு "என்று அவன் கூறியதும் சிரிப்பு வர.. ஒரு வார விடுமுறைக்கு பின் இதழில் புன்னகையை குடியேற்றி அவளும் அவனுக்கு உணவை ஊட்டினாள். சாப்பாட்டோடு சேர்த்து அவளது விரல்களையும் சேர்த்து உண்டு கொண்டிருந்தான் , வலித்தாலும் அவள் புகாராக அதை சொல்லவில்லை. பாவம் கொலை பசியில் இருப்பான் போல. ஒருவாராக உண்டு முடித்ததும் தட்டில் கை கழுவி விட்டு, சரி டி ..நான் போய் தூங்குறேன்.
பவி " முதல குளிச்சுட்டு அப்றம் தூங்கு. " என்றதும் அறையை நோக்கி சென்றவனை விழி அகட்டாமல் பார்த்தாள் பெண். சோஃபாவில் இருந்த பையை கண்டதும் பவித்ரா அவனிடம் கொடுப்பதற்காக வேகமாக அவன் அறையின் உள்ளே செல்ல.
"சோர்வோடு மெத்தையில் கைகள் ஊன்றி சாய்ந்து அமர்ந்தவாறு, அவள் வருவதை பார்த்து கலைப் போடு " நல்ல வேளை குடு போன் செத்துடுச்சு சார்ஜ் போடனும்." என எழ முயன்றவனை தடுத்து.
"நீ உட்காரு நான் சார்ஜ் போடுறேன்." என்று பையை திறந்து போன் எடுத்து
சார்ஜ் போட்டுவிட்டு பையை துலாவி தேடினாள் ஆவலோடு " என்ன எதுவும் வாங்கிட்டு வரலையா? அங்க மிரர் வொர்க் குர்தீஸ் சூப்பரா இருக்கும் தெரியுமா? "
'அட அரை பயித்தியமே.' என்று வெகுட்டவன் " உனக்கு மனசாட்சி இருக்கா டி நேத்தில இருந்து ஓடினேன்.. ஓடினேன்..னு ஓடிக்கிட்டே இருக்கேன் தெரியுமா ? இப்ப கூட பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் வராம .. ஓடி உன்னை பார்க்க வந்தா.. உனக்கு டிரஸ் தான் பெருசா தெரியுது. என் பாசம் பெருசா தெரியலை .. போடி .. " என்று முறுக்கி கொண்டான் ப்ரீத்.
பாசத்திற்காக மட்டும் வந்தானா ? யாருக்கு தெரியும்.
"சாரி டா.. ஊருல இருந்து வந்தா.. எப்பவும் ஏதாவது வாங்காம வர மாட்ட ,அதான் கேட்டேன். என்னடா இது? " சதுர வடிவ கவரில் வெள்ளை நிற விபூதி போல எதையோ .. எடுத்தவள் அவனிடம் சுட்டி காட்டினாள்.
" இது..வா அங்க சித்தர் பீடம் ஒன்னு இருக்கு. அங்க இருந்த சுவாமி ஜீ கொடுத்தது." பவி கொஞ்சமாக கையில் கொட்டி வாயில் போட ,
" அட சீ.. அல்பமே ஏன் டி நெத்தியில பூசாம வாயில போடுற.. "
" சீ.. இது கசக்குது உவக்.." என்று பவி துப்ப எத்தனிக்க,
" ஏய் முழுங்கு.. சாமி ஜீ விபூதி துப்பிட்டா சாபம் பிடிக்கும். " என்று அவன் கூறவும்
பயந்து விழுங்க முடியாமல் பவித்ரா விழுங்க..
" ஏன் ப்ரீத்.? இதை சாப்டதும் . தலை ஒரு மாதிரி பாரமா இருக்கு. நிமிர்ந்து உட்கார முடியலை.. நீ கூட மூனா ஐஞ்சா தெரியுற , நான் சாப்டது விபூதி இல்லை என்ன டா எனக்கு கொடுத்த? "
" மயக்கம் வருதா பவி " அவள் " ம் என்றதுமே 'அப்ப வேலை செய்யுது' நான் உனக்கு கொடுத்தது போதை பொருள். "
" போதை பொருளா? ஏன் ப்ரீத்.. இப்டி தப்பான ..ன.. " என்று முடிக்கும் முன். கண்கள் சொருகி கட்டிலில் விழுந்தாள்.. பவித்ரா.
வேட்டை ஆடாமல் வேங்கையின் அருகே வீச பட்ட இறைச்சி துண்டாய் அவள்.!!எதிர்ப்பே இல்லாமல் இளமையை விருந்தாக்க அவன் முன் விழுந்து கிடக்கிறாள்.! மயங்கி விழுந்ததால் சற்று மேலே ஏறிய அவள் மேல் சட்டை, அவன் ஆசையை இன்னும் கூட்ட மேல் ஆடையை கலட்டி தூக்கி எறிந்தவாரே அவள் அருகில்
வந்து " நீ மொத்தமா எனக்கு தான் யாராலயுமே நம்மள பிரிக்க முடியாது. நீ கூட " என்ற கர்ஜனையோடு அவள் அருகில் நெருங்கினான்.
"ருசி கண்ட பூனை அல்லவா அவன். பெண்ணின் வனப்பும் அழகும். வா என சுண்டி இழுக்க. மயங்கியவள் இப்போது நினைவை மட்டும் இழந்தாள்.. ஆனால் இழக்க கூடாததை இழந்தால். பெயரை போலே பவித்ரமானவள் தாங்குவாளா?
பவித்ரா மெல்ல விழிகளை திறக்க.. இமைகள் திறக்க முடியாமல் திறந்தாள், அரை போதை நிலையிலே அவள் தெளிவில்லாது இருந்தாள். மெத்தையில் அவள் அருகில் ப்ரீத் படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியோடு எழுந்து " டேய் எழுந்திரிடா " உலுக்கி பயதில் தள்ள..
" ஏய்.. தூங்க விடுடி. மாமா செம டயர்ட் "
பவி -" பிளைட்ல வந்ததுக்கு இவ்ளோ டயர்டா.? ட்ரெயின் ல வந்தா.. அவ்ளோ தான் போல "
" உன்னால தான் மாமா ரொம்ப டயர்ட் ஆகிட்டேன். போதை மருந்து கொடுத்து நான் உன்னோட கலந்துட்டேன் "
" எந்த விகிதத்துல கலந்திங்க மாமா? " நக்கலாக அவனிடம் கேட்க.
ப்ரீத் - " 'அதிர்ச்சியில மெண்டல் ஆகிட்டா போல பாவம்'
" நமக்குள்ள எல்லாமே முடிஞ்சுடுச்சு " மர்ம புன்னகையுடன் சொல்ல..
பவி_" ஐய்..ய..ய்..யோ.. என்ன பிரேக் அப் பண்ண போறீங்களா? "
கடுப்போடு "ஏய் நான் உன்ன ரேப் பண்ணிட்டேன் டி "
" ஏன் மாமா இப்படி பண்ணிங்க. " சட்டையை பிடித்து கொண்டு கேட்டாள் பவித்ரா.
சட்டையிலிருந்து அவள் கையை விலக்கி விட்டு " எல்லாம் உன்ன கல்யாணம் பண்ண தான். பயப்படாத பெருந்தன்மையா நானே உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்"
பவி - " ரேப் ஒகே. கல்யாணம் எதுக்கு ? " சந்தேகமாக மாமனை கேட்க.
" என்ன கேள்வி இது பவி. சினிமால வருமே " அப்பாவியாக சொன்னான்.
" சினிமால என்ன வரும்.. மாமா. டேய் ப்ராடு .. நீ கொடுத்து தூக்க மாத்திரை டோசேஜ் கூட ரொம்ப கம்மி 250 தான். இந்த ஒரு வாரமா 650 டோசேஜ் எடுத்தும் தூக்கம் வரலை. என்ன தான் பண்ண போறனு பாக்க தான். கண்ண மூடி இருந்தேன். துணி விலகி இருக்குனு கழுத்துவரை போர்த்தி விட்டுட்டு போறவன் தான் ரேப் பண்ணுவானா? போடா.. டேய். "
ப்ரீத் " நீ ஏன்டி தூக்க மாத்திரை சாப்ட ?"
பவி - " நீ எதுக்காக சாப்டியோ அதுக்காக தான். நீ சரியா பேசலனா தூக்கமே வர மாட்டிஙகுது. மாத்திரை போட்டுமே தூக்கம் வரலை.. தெரியுமா மாமா."
ஏக்கமான பெருமூச்சோடு " இந்த ராட்சசி குரல் கேட்காம மூச்சி கூட விட முடியலை. ஏன் இந்த கோபம் ? இனிமே பேசாம இருக்காத டி " என்று கெஞ்சலாக கேட்டான்.
பவி -" நான் ஏன் உன்கிட்ட பேசாம இருக்கேன்னு உனக்கு தெரியாதா ப்ரீத் ? "
" ம்.. தெரியும் நான் உன்ன அவாய்ட் பண்ணேன்ல அதான் நீயும் என்ன " தயங்கியவாறு
"சாரி இனிமே இப்டி பண்ண மாட்டேன் ப்ராமிஸ் டி "
பவித்ரா "ம் " என்றாள் சிறு புன்னகையோடு.
" சரி எனக்கு தூக்கமா வருது . நான் தூங்கவா ?" அவளிடம் அனுமதி கேட்க " ம் "என்று அவன் அறையை விட்டு வெளியே வந்தாள் பவித்ரா.
'அம்மா இருந்தா ப்ரீத் கிட்ட பேச முடியாது . சத்தமா பேசி அவங்க காதுல விழுந்துட்டா.. ப்ரீத்..த வீட்டை விட்டு வெளிய அனுப்பிடுவாங்கபொறுமையா பேசுற விஷயமும் இது கிடையாது. கோபத்துல கத்திடுவேன். ' என்று குழம்பியவள் தாய் அழைத்ததும் திரும்பினாள்.
சுமதி " பவித்ரா ப்ரீத்க்கு காஃபி கொண்டு போய் கொடுத்துட்டு வா.. " என கோப்பையை அவள் கையில் தினிக்க.
" அவன் தூங்குறான் மா "
சுமதி" அப்ப இதை நீயே குடி.. ஆமா உன் ரூம் ல தூங்காம ஏன்டி அவன் ரூம்ல தூங்குன . பாவம் அவன் சோஃபால ஒடுங்கி படுக்க முடியாம தூக்கத்துல புரண்டு புரண்டு படுத்துட்டு கிடந்தான். " என்று மகளை கடிந்து கொண்டார்.
'வெளிய தூங்கிட்டு நம்ம கிட்ட வெத்து சீன்..' என சிரித்தவள்" கொஞ்ச நாளா சரியாவே தூங்கலை மா.. அதான்."
சுமதி " பவி அவன் கூட பேசலனா உன்னால சாப்பிட முடியலை. தூங்க முடியலை.நான் சொன்னதுக்காக நீ வீம்புக்கு அவன வேணாம்னு சொல்லுற , அவன் இல்லாம உன்னால வாழ முடியுமா ? இது விளையாட்டு இல்லை பவி வாழ்கை. ஒரு தடவை அதை இழந்துட்டா திரும்பி நம்ம கைக்கு கிடைக்கவே கிடைக்காது. " என உறவை இறுக்கிப் பிடித்துக்கொள் என்று மகளுக்கு மறைமுகமாக உணர்த்தினார் சுமதி.
எப்போதும் போல சலிப்பாய்.."ஆரம்பிக்காதிங்க மா . நானே பல குழப்பத்துல இருக்கேன். கூடிய சீக்கிரம் நல்ல முடிவா சொல்றேன்." என்று உறுதியளித்தவள் மாமனின்
பிரிவை விட , தன்ன தவிர வேற்று பெண்ணிடம் அவன் நெருங்கினான் என்ற உணர்வே அவள் மனதை உலுக்கி எடுக்க.. மொத்தமாக யாருக்கோ அவன் சொந்தமானால் என்ன செய்வாய் என அவள் மனம் கேள்வி எழுப்ப ? 'அவன் பண்ண தப்பு என்னால மன்னிக்கவே முடியாது. ஆனா அவன் முகத்தை பார்த்த உடனே என்னால கோபம் படவும் முடியலையே. ? கொஞ்சம் என்னை விட்டு விலகி போனாலும் உயிரே போற மாதிரி இருக்கு. என்னால இந்த உணர்வை கட்டுப்படுத்த முடியல, இதுக்கு பேரு தான் காதலா.!! அவனை நான் அடிச்சிருக்கணும் சட்டை புடிச்சு சண்டை போட்டு இருக்கனும். ' என்றவளின் மனசாட்சி'அவன் இன்னொரு பொண்ண தொட்டா .. உனக்கு என்ன பவி. நீ தான் அவன வேணாம்னு சொல்லிட்டியே. அப்புறம் ஏன் அவன் வேற யாரையும் பார்த்தா உனக்கு பிடிக்கமாட்டேங்குது? இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு இதே வீட்ல வந்து இருப்பானே. யாரோ ஒரு பொண்ணு உன் மாமா கூட சேர்ந்து .. புருஷன் பொண்டாட்டியா இதே வீட்ல உன் கண்ணு முன்னால வாழ்வாங்களே.. அப்ப என்ன பண்ணுவ ? இப்ப கூட இது தப்புன்னு தடுக்கணும்னு நினைக்கிறேனு காதல மறைச்சி நீ பொய் சொல்லலாம். அப்ப என்ன டி பண்ண முடியும் உன்னால ? மனசாட்சி கேள்வி எழுப்ப, என்ன மாதிரியான உணர்வு இது என்று உணர்ந்தும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள் பவித்ரா.
சுமதி " பவி.. நான் மீன் மார்க்கெட் வரை போறேன் . உனக்கு எதும் வேணுமா ? அவன் தூங்கட்டும் எழுப்பாத . "
" எனக்கு எதுவும் வேனாம்மா . "
சுமதி -"ம் கதவ தாழ்ப்பாள் போட்டுகோ.. சாப்ட எதுவும் கேட்டா.. சோம்பேறி தனம் படாம ஏதாவது செஞ்சு அவனுக்கு சாப்பிட கொடு" என்று கூறிவிட்டு மார்க்கெட்டுக்கு சென்றார் சுமதி.
இதற்காகவே காத்திருந்தவள்.. 'அம்மா வெளியே பொய்டாங்க.. இது தான் அவன்கிட்ட பேச சரியா நேரம் '
என அவனது அறை நோக்கி விரைந்தாள் பவி.
உள்ளே மொத்த மெத்தையும் ஆக்ரமித்து முரட்டு தூக்கத்தில் இருந்தான் ப்ரீத். மெதுவக அவன் கைகளை வருடி.. அவனை எழுப்ப முயற்சி செய்ய எந்த பலனும் இல்லை. உடனே தலையணையை வெடுக்கன இழுத்தாள் பவி. இழுத்த வேகத்தில் அதிர்ந்து விழித்தான் ப்ரீத்." என்னடி உடலை நெளித்து சோம்பலாக கையை உயர்த்தி நெட்டி முறித்து . "என்ன டி ..ஏன் எழுப்புற "
" கண்ண மூடு மாமா..உனக்கு ஒன்னு தரனும் "
என்றதுமே பேராசையோடு அது ' கிஸ் ஆ தான் இருக்கும் .. வாடி என் செல்ல குட்டி. என நினைத்து உடனே கண்களை மூடினான் ப்ரீத். "சீக்கரமா கொடுடி.. " அவசரப்படுத்தினான்.
" இருடா மாமா அவசரப்படாத.." ஷார்ட்ஸை மட்டும் அணிந்து கட்டிலின் கீழ் காலை நீட்டி அமர்ந்தவனின் தொடையை குறி பார்த்தது. காம்பஸின் கூர்முனையை ஆழமாக இறக்கினாள். பவித்ரா..
ப்ரீத் " ஆ..ஆ.." என்ற அலறலுடன்
" ஸ்... என்னடி பண்ணுற வலிக்குது பவி.." அழுத்தம் கூட கூட வலியால் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிய.
பவி " போன வாரம் அந்த பொண்ணு கூட என்ன பண்ண? விடிய விடிய தூங்க விடாம அவ கூட என்ன பண்ண ? அந்த பொண்ணு யாரு.? ஏன் உன் ரூம்க்கு வந்தா? என்கிட்ட அவள மறைக்க என்ன பாடு பட்டிங்க சார்.. ஏழு மணிக்கு சார்க்கு தூக்கம் வந்துடுச்சு னு கால் கட் பண்ணிட்டு , விடிய விடிய தூங்க விடலை, இவனுக்காக இனிமே என்ன கூப்டாத அப்டினு அவ உன் ப்ரண்ட் கிட்ட சொன்னா, நீ அவள என்ன பண்ண ? " என கேட்டு இரக்கமே இன்றி கொலை வெறியோடு அவனை பார்க்க.
ப்ரீத்"நான் எதுவும் பண்ணலை..டி" வலி பொறுக்க முடியாமல் நெளிந்து கொண்டே மாமன் சொல்ல.. நம்பாத பார்வையால் துளைத்தவள்
பவி _" நான் போன் பண்ணப்ப அவ இருந்தா.. அவ வளையல் சத்தம் என் காதுக்கு கேட்டுச்சு. வீடியோ கால் பண்ணப்ப கீழ உட்கார சொன்ன தான ? எனக்கு காது நல்லா கேட்கும்.. ப்ரீத் அவ பேர் என்ன?
நடுக்கத்தால் நாயகனின் வாய்
குளறியது " வ..வ.. வ்...வ்.. வர்ஷா." பெயர் சொன்ன உடனே கண்ணத்தில் சப்பென அறைந்தாள் பவித்ரா.
" இல்லை டி என அவள் கையை தொட போக.. " காம்பஸ் ஐ வேகமாக உருவி.. கத்தி போல நீட்டி என்னை தொடாதே என்றாள்.
"இல்ல பவி நான் அவங்ககிட்ட பேசிட்டு தான் இருந்தேன். "
"ஏன் அவளோட பயோகிராபி கேட்டு கதை எழுத போறியா? மொழியே தெரியாம எப்படி பேசுவ? அவளுக்கு தமிழ் தெரியாது. உனக்கு ஹிந்தி தெரியாது. தப்பு பண்றதுக்கு எதுக்குடா மொழி.. அதான் விடிய.. விடிய.. ம்.. " அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது. " இந்த கைதான அவள தொட்டுச்சி" என்று ஆவேசமாக காம்பஸால் அவன் கைகளை குத்த போக.. அவனை காயப்படுத்த முடியாமல் தன்னை காயப்படுத்தி கொள்ள அவள் புறம் காம்பஸை திருப்பியதும் ப்ரீத் சுதாரித்து காம்பஸ் ஐ பறித்து அவன் வலது கைகளில் ஆழமாக குத்திக் கொண்டான் மாமன். இடது கைகளை அழுந்த மடக்கி வலி சமன் செய்ய முயன்றான்.. வலியை பொறுக்க முடியாமல் உதட்டை கடித்தான் பயனில்லை. வலது கையில் இருந்து குருதி வழிய தொடங்கி மெத்தை விரிப்பை நனைத்தது அவன் ரத்த துளிகள்.
" காம்பஸ் எடுடி வலிக்குது." அவன் துள்ள துடிக்க கதற, அமர்தளாக கையை கட்டி அவனை முறைத்தாள் பவி. "இதைவிட அதிகமா எனக்கு வலிச்சது.. என் காதல்.. அப்படி இப்படி நான் உன் மனசுல இருக்கேன்ப . ஒரு வாரம் கூட உன்னால தாக்கு பிடிக்க முடியல?" வற்றாமல் விழி நீரை வடித்து கொண்டே கேட்டாள் பவி.
" ப்ரீத் இப்படி தப்பான பொண்ணுங்க கிட்ட எல்லாம் போகாதடா. அப்டி உன்னால கன்ட்ரோல் பண்ணவே முடியலன்னா எனக்கு டிக்கெட் போட்டு கொடு. நான் வர்றேன்.. நானும் பொண்ணு தான் என்னாலயும் உன்னை " என்ற வார்த்தையை முடிப்பதற்குள் .. இடது கையால் வலுவான அறை ஒன்று பவித்ராவின் கன்னத்தில் உட்கார்ந்து கொண்டது.! அடித்த அடியில் உடல் உதறல் எடுக்க பயந்தோடு அவனை பார்த்தாள் பவி.? ப்ரீத்..வெறி பிடித்தவன் போல, கம்பஸ் ஐ கையில் இருந்து உருவி வீச.. கையில் இருந்து வேகமா இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. பவி வேகமாக அவன் கைகளை பற்ற முயலவும் உதறி எறிந்தான்.
அடங்கா சினத்தில் கத்தினான். " கண்ட பொம்பளைய தொட்ட கை டி இது. பொம்பள பொறுக்கி நான். நீங்க என் கைய தொடாதிங்க. ரெண்டு வாரத்துக்குள்ள நான் கேடு கெட்டு பொய்டுவனா ? நீயே இப்டி நெனைக்கலாமாடி.. என் மேல உனக்கு நம்பிக்கையே இல்லையா? " காதலியே இழிவாக நினைத்ததால்.. அவமானத்தால் தன் இமை தாண்டி வழியும் கண்ணீரை துடைத்து கொண்டே கேட்க. சிலை போல மெளனமாக நின்றாள் பவித்ரா. "என்ன வார்தை டி சொல்லிட்ட, என்ன பண்ணா என்ன நம்புவ. ? வர்ஷா ரொம்ப டயர்டா தெரிஞ்சாங்க பவி. உண்மையிலே பாவம் அவங்க , புலம்பி தள்ளிட்டேன். பயித்தியம் புடிச்ச மாதிரி புலம்பிட்டு இருந்தேன்
பவி. "
"நீ சொல்றத யாரலயும் நம்ப முடியுமா..டா."
" நம்புற மாதிரி இருக்காது. ஆனா அதான் உண்மை. காதல்ல தோத்தவங்களுக்கு மட்டும் தான் அதோட வலி புரியும். என் நிலமையில இருந்து பார்த்தா தான்டி.. என் வேதனை தெரியும். என்ன நம்பலைனா.. நீ வேணா அந்த பொண்ணு கிட்ட கேளு" என்று அவளை நேராக பார்த்து சொல்ல,
பவி "எந்த தப்பும் பண்ணலை னு என் மேல சத்யம் பண்ணு நம்புறேன்." அவன் வலது கரத்தை உயர்த்தி தன் தலையில் வைத்தாள் பவித்ரா. குருதி துளிகள் அவள் தலை கடந்து நெற்றி திரண்டு இமைகளில் வழிந்தோட " இப்ப சொல்லு, நீ தப்பு பண்ணியா? " என்று கேட்ட நொடியே கண்ணீர் உருண்டோடியது விழியில்.
ப்ரீத் -" நான் எந்த தப்பும் பண்ணலை. பண்ணவும் மாட்டேன். என் மனசு முழுக்க ஒருத்தி இருக்கா அவளை தவிர யாரையும் என்னால தொட முடியாது. " தலையில் கையை பதிக்க.. காயம் கடந்து
அவள் இமைகள் நனைத்து .. இமை முடிகளில் வழிந்து கண்ணத்தில் விழுந்தது தூயவன் உதிர துளிகள்.
"சிவனின் உதிரம் பட்டதும் உலகை அழிக்காமல் உக்ரம் தனிந்த காளிதேவி போல.! உயிரானவன் உதிரம் பட்டதும் இந்த (பவி) தேவியும் சாந்தம் ஆனாள்.!
பவி -" முதல்ல கைக்கு கட்டு போடனும் ரத்தம் நிக்காம வருது ப்ரீத். கைய மேல வைச்சுக்கோ.. " என ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் தேடி எடுத்து வந்து காயத்திற்க்கு மருந்திட்டு கட்டு காட்டினாள்.
ப்ரீத் -" இயேசு நாதர் பாவம் பவி "அனுதாபத்தோடு சொல்ல.. அதை கேட்டு சிரித்தவள்.
" அவர ஏன்டா இதுல இழுக்குற "
" ம்ச்.. இல்லை டி இதுக்கே இப்படி வலிக்குதே.. ஆணி அடிச்சப்ப எவ்ளோ வலிச்சுருக்கும். " என்று ஆழ்ந்த வருத்தத்தோடு சொன்னான் ப்ரீத்.
" ஹா..ஹா.. " என்று சிரித்தவள். 'அப்ப இவன் டம்மி தான் போல என்று நினைக்க தவறவில்லை'
" நல்ல வேளை நீ தப்பு எதுவும் பண்ணலை. அடுத்து எங்க குத்தி இருப்பேனு உனக்கே நல்லா தெரியும். தப்பிச்சிட்ட அவன் இடுப்புக்கு கீழே பார்க்க.
இடுப்புக்கு கீழே தலையணை வைத்து மறைத்தவாறு ஒடுங்கிய படி அமர்ந்தான் ப்ரீத்.
" முதல்ல இந்த காம்பஸ ஏதாவது கண் காணாத இடத்து போய் ஒளிச்சு வைக்கணும். என்று நினைத்தபடி, கண் சிமிட்டி, அவளை பார்த்து சிரித்தான்.
ப்ரீத்" உனக்கு ஹிந்தி எப்படி தெரியும் ?
"நீ தான சம்மர் லீவுல வெட்டியா இருக்கேனு ஹிந்தி கிளாஸ்
போக சொன்ன. "
" சொந்த செலவுல சூன்யம் வைக்குறது இது தான் போல " ம்.... என்று அலுத்துக் கொண்டான் ப்ரீத்..
நன்றிகள்
கோடி 