உமா கார்த்திக்
Moderator


சென்னை விமான நிலையம்.
பவித்ரா.. மாமனின் கைகளை பிடித்து கொண்டு குதுகலமாய் ஹனி மூன் செல்லும் புதுமண ஜோடியை போல் விமானத்தில் சேர்ந்து அமர்ந்து மாமனவன் தோள் சாய்ந்து.. " எப்டிடா எங்கம்மா கிட்ட சம்மதம் வாங்குன ? வயசு பையன் வயசு பொண்ணு தனியா போக கூடாது.. பஞ்சு நெருப்பு னு படி படியா அளக்குமே.. சுமதி.." ஆச்சர்யமாக விழி விரித்து பதில் எதிர்பார்க்க.
" ஏய்.. அத்தை பேர் சொல்லாத.. " கடிந்து கொண்டான், நொடியில் கோபமாக முகம் மாறியது " அத்தை எப்படி சம்மதிச்சாங்கனா ?" என்று வானத்தை பார்க்க.. தலையில் தட்டி " ப்ளாஷ் பேக் எல்லாம் வேனா.. எனக்கே தெரியும். இந்த ஒரு வாரத்துல என் மனச மாத்தி இந்த மன்மதர கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்ல வைக்கிறேன். அப்டினு சத்தியம் பண்ணிருப்ப, உங்க அத்தையும் அக மகிழ்ந்து அழைச்சுட்டு போக சொல்லி இருக்கும். அதான.! " ஒரு நாள் முழுக்க அத்தையிடம் அவன் கெஞ்சி கூத்தாடி.. பொய் சொல்லி வாங்கிய அனுமதி இது.
" ம்... ஓரளவு அப்படி தான்.. ஆமா ஒரு வாரம் தங்க ஒரு செட் டிரஸ் போதுமா? உனக்கு.ஒரு சின்ன பங்ஸன் போனாலே அத்தனை செட் டிரஸ் அள்ளிட்டு போவ.. வொய் டா ? நீ ஏதோ வேற ப்ளான் போடுற "
" நீ என்ன நெனைச்ச , உன் பிரிவ தாங்க முடியாம, உன் கூடவே வர்றனா? பச்...இல்லை ஆக்ராக்கு போய் தாஜ்மஹால் முன்னால இந்த அழுக்கு பையன ரோஸ் கொடுத்து ப்ரப்போஸ் பண்ண போறனா? உன் ஃப்ரண்ட் சந்தீப்க்கு சம்பவம் பண்ண தான் நான் வர்றேன். "
" ஏய்.. அவன் உன்ன விட பெரிய பையன் அவன அடிச்சுடாத. நோ.. வைலன்ஸ் மை நண்பன் பாவம்" நட்புகாக கெஞ்சினான், காம்பஸ் குத்து வாங்கியவன்.
" அவன் பெரியவன் மாதிரி நடந்துகலயே ராஜா. நீ தான சொன்ன வர்ஷாகிட்ட வேணா வந்து கேளு.. நான் நல்லவனு பாராட்டு பத்திரம் தருவா னு சொன்ன.ல்..ல அதான் வர்றேன். " என்று அவள் முறைத்து தள்ள,
எதை எதையோ சிந்தித்து எச்சில் விழுங்கியவன். " அவங்களுக்கு தான்.. தமிழ் தெரியாதுல.. தெரியாதுல .. " நீ எப்படி பேசுவ, என ப்ரீத்..நினைத்த மாத்திரத்தில் வந்தது பதில்
" எனக்கு தான் ஹிந்தி தெரியும்..ல ஒரு நூல் அளவு உன் மேல தப்பு இருந்தது. அதோட நம்ம உறவு முடிஞ்சுடும். ப்ரீத் எதையும் என்கிட்ட மறைக்கல தான?"
தவறு செய்யவில்லை என்றாலும்.. விசாரனை ஏதோ.. பயம் கொள்ள வைத்தது. " ம்.. என் மேல உனக்கு நம்பிக்கை இல்லை.. என் கேரக்டர்க்கு அவங்க சர்டிபிகேட் கொடுக்கணும்.." முகத்தை திருப்ப,
சட்டையை பிடித்து தன்னை பார்க்க செய்தவள் " இந்த அல்வா என்கிட்ட கிண்ட முடியாது ப்ரீத். ஒரு தப்பு நடக்கறதுக்கு முன்னாடி தடுக்கனும். எப்ப அந்த பொண்ணு ரூமுக்கு வந்தத என்கிட்ட மறைச்சியோ அப்பவே உன் மனசுக்கு அது தப்புன்னு தெரியுது இல்ல, இன்னைக்கு ஆறுதலுக்கு வர சொல்லுவ, நாளைக்கு அரவணைக்க வர சொல்லுவ, ஒரு வாரம் தனியா இருந்ததுக்கு இந்த லட்சணம். ரெண்டு வருஷத்துக்குள்ள நீ என்னனென்ன கெட்ட பழக்கத்தை பழகிக்க போறியோ? யார் கண்டா.! தவறுகள் வேர் விடும்போதே வெட்டிடனும். " இருவிரலால் கத்தரித்து காட்ட,
ப்ரீத்.. தன் மனதில் என் நண்பன கொல்ல போறாளா? " நீ தான் என்ன பிடிக்கலை னு சொல்லிட்ட அப்றம் நான் எக்கேடு கெட்டா உனக்கு என்ன? "
" ஒ..! ஆமால்ல, நானும் விலை மாதன (கால் பாய்) வர வைச்சு .. விடிய விடிய சும்மா பேசி ஆறுதல் தேடுனா.. சார்..ர்..க்கு அப்ஜெக்ஷன் இருக்காது தான ?அப்படி சேவை பண்றவன் நம்பர் வர்ஷா கிட்ட இருக்கும் மாமா.. கேட்டு வாங்கி தர்றியா? பணம் எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை. ஐ வில் பே ஃபார் இட் " என்று அழுத்தமாக
எரிமலையாய் கோவத்தில் இறுகி, கனலில் எரியும் இரும்பை போல நாயகன் முகம் சிவந்து விட்டது. அதனை மறைக்க வேறு பக்கம் முகத்தை திரும்பி கண்ணாடி ஜன்னலை முறைக்க. அதில் அப்படியே மாமன் முகம் கோபத்தை பிரதிபலித்தது கண்டவள் .. அவன் கண்ணத்தை பிடித்து அவள் புறம் திருப்பி " சும்மா சொன்னதுக்கு கண்ணு சிவந்து ,காது விடச்சு.. உச்சி முடி நட்டு குற அளவு கோபம் ஏறுது .. அப்ப எனக்கு எப்படி இருக்கும்?" என்றாள் ஆதங்கமாய்,
ப்ரீத் -"ஒரு ஆம்பள தப்பு செஞ்சா அது கண்ணாடியில முகம் பார்க்கிற மாதிரி.. இதே ஒரு பொண்ணு அதை பண்ணா உடைஞ்ச கண்ணாடி சில் மேல நடக்குற மாதிரி.."
" பத்தினியா பொண்டாட்டி வேணும்னு நினைக்கிறவன் எல்லாருமே ..ஏக பத்தினி விரதனா இருக்காங்களா? ஆம்பளனா அவுத்துவிட்ட மாடு மாதிரி அப்படி, இப்படி இருக்கலாம். பொண்ணுங்க மட்டும் ஒழுங்கா இருக்கணும் .. என்னடா உங்க நியாயம். கற்ப்போட இருக்க கண்ணியமான மனுஷனை தான் ஒவ்வொரு பொண்ணும் எதிர்பார்ப்பா, குறிப்பா பவித்திரா. "
அவமானத்தில் தலை தாழ்தவன் " நான் கற்போட தான் இருககேன்.. பவி " என்று பாவமாக கூறிய தோரணையில் சிரித்தவள்.. "ஹா... ஹா... தெரியும்".
நான் ஷாப்பிங் பண்ண தான் வர்றேன். ரொம்ப பயப்படாத.. டெல்லில சாந்தனி சவுக் போய் நீ பன்ன தப்புக்கு பர்ச்சேஸ் பண்ணியே பனிஷ்மென்ட் தாரேன்."
" அம்ம சல்லி தர மாட்டேன்.. ஏதோ சோறாக்கி போடுவனு.. டிக்கெட் போட்டு கூட்டிட்டு போனா.. ஷாப்பிங் பையத்தியமே .. "
" நீ வாங்கி தர வேணாம். சந்தீப் அண்ணா வாங்கி தருவான்.. தங்கச்சி வாழ்கைய கெடுக்க நெனைச்சதுக்கு தண்டனையா .. நான் கேட்குறது எல்லாம் வாங்கி தருவான். "
"தங்கச்சி வாழ்க்கை கெடுக்குறானா? " என்று இழுத்தவன். "அப்ப நீ தான் அவன் தங்கச்சி, அப்ப உன் புருஷன் ? நான் தான.. மிஸ்ஸஸ் பவித்ரா ப்ரீத் குமார்." என்றான் ஆவலாக,
எள்ளலாக நகைத்து " உன்ன வேற பொண்ணு கல்யாணம் பண்ணா கூட அவளும் சந்தீப்புக்கு தங்கச்சி முறை தான்.." என சிரித்து விட்டு அவன் முகம் மறுவதை ரசித்தாள் பவித்ரா.
"மனசு முழுக்க ஆசைய வச்சிகிட்டு என்ன ஏங்க வைக்கிறதுல என்னடி உனக்கு சந்தோஷம்.." என்று கேட்காதவாறு முணு முணுத்தவன். கண்ணாடி வின்டோ வழியே தெரியும் மேகங்களை வெறிக்கவும். ஆதரவாய் அவன் தோள் சாய்ந்து " மாமா .. நீ என் ப்ராப்பர்டி.. உன்ன எங்கயும், எதுக்காகவும் , யார்கிட்டயும் விட்டுதர மாட்டேன்.. என்றவள் . மனதில் 'எவகிட்டயும் விட்டுதர மட்டேன்.' என்றாள் அழுத்தமாக.
முகத்தில் ஆயிரமாயிரம் வாட்ஸ் பல்பு எரிய " அப்டினா ? என்றான் ப்ரீத் குறும்பாக,
பவித்ரா வெட்கத்தோடு
சொன்னாள் " அப்படிதான்."
ஏர்போர்ட்டில் இருந்து வீட்டை வந்து அடையவே நள்ளிரவு ஆனது. லக்கேஜ் எல்லாம்.. கை போன போக்கில் தூக்கி எறிந்த அடுத்த நொடி
வீடியோ கால் அத்தையம்மா.. என்று வர.. ஏற்று " வந்துட்டோம் அத்தை..இப்ப தான் வந்தோம்.. அத்தை."
" சரி..சாப்டிங்களா ? என்றதும் "ம்" என்றான் சோர்வாக. " ப்ரீத் பத்திரமா பவிய பார்த்துக்க, டிரஸ் கேட்டா வாங்கி தராத.. இருக்கத முதல்ல போட்டு கிழிக்கட்டும் .."
" அவள்ட்ட தரவா? அத்தை.." போனை அவளிடம் தர..
"ஏன்டா..ஏன்.. வாயோடு முனவியவள், என்னமா .." என்றாள் எரிச்சலாக."
"ஏய்..ஷாப்பிங் போற..டிரஸ் வாங்குகிறேனு ஏதாவது என் காதுக்கு வந்துச்சு.."
" கம்பியை காய போட்டு சூடு வச்சிருவீங்க அதானே..தெரியும்.. தெரியும்.." என்று சலித்துக் கொண்டவள்.. "நல்ல அம்மாவா இருந்தா சாப்டியா னு முதல்ல கேக்கணும்.. நீ என்ன அம்மா மா.. "
" நல்ல அம்மா தான் டி.. பச்ச குழந்தை நீ சாப்டியானு கவலைப் பட..சரி சரி சாப்டியா." என்று அக்கறையோடு கேட்டதும்.
" செல்லாது ... செல்லாது.. கோபத்தோடு தகித்தவள்.. உன் மருமகனுக்கு ஒத்த பைசா நான் செலவு வைக்க மாட்டேன். அதனால பதறாத.! நான் டிரஸ் வாங்குன காசுக்கு நகையாக சேர்த்து இருக்கலாம் அதானே.. ஆல் டயலாக் ஐ நோ.. ஒரு வாரம் சமையக்காரி மாதிரி அவனுக்கு சோறாக்கி போட தான் அனுப்பி இருக்க.. இவன் சப்பாத்தி சாப்பிட்டா உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு..
அப்படின்னா நீங்களே சார தாங்க வர வேண்டியது தான.." என்றாள் நக்கல் தோனியில்.
" ஊருக்கு போற வரைக்கும். ஒரு வார்த்தைக்கு கூட என்னை கூப்பிடல.. நான் வரணும்.. ஆசை படுறா போல ப்ரீத். டிக்கெட் போடு நான் நாளைக்கு வரேன்.."என்றதும்..கொலை நடுங்கியது.. ரூல்ஸ் பேசி கொல்லுமே..சுமதி."அய்யய்யோ...அம்மா உனக்கு முட்டி வலி இருக்கு, ப்ளைட் எல்லாம் வந்தேன்னு வச்சுக்கோ.. கால் நோகும்..ம்மா.. அதனால நீ சமத்தா வீட்லையே இரு, ஒரே ஒரு வாரம் தான் அதுக்கப்பறம் நானே வந்துடுவேன். சரியா..ஆ.!"என்று பதட்டம் மறாமல் சொல்லி முடிக்க.
" ஒரு வாரம் ஒழுங்கா நல்லபடியா சமைச்சு போடு..அப்ப தான் காலேஜ் போக பெட்ரோல் போட காசு கொடுப்பேன்.. இன்னொரு விஷயம் சொல்லிட்டு தான் போயிருக்க அதுக்கேத்த மாதிரி நல்ல பதிலை வந்து சொல்லணும் சரியா.." திருமணத்திற்கு ஒப்புதல் கேட்க.
" கெட்ட பதிலா சொன்னா என்ன பண்ணுவீங்க..?" எகத்தாளமாக கேட்க..சுமதியோ... கேமராவை திருப்பி துடப்பத்தை காட்ட..
"அம்மா பாசத்தை தவிர மீதி எல்லாத்தையும் காட்டுற.. "
" நடிக்காம போய் தூங்கு டி போ.. "
" என்ன பெர்பாமென்ஸ் பண்ணாலும் இரக்கமே வராது இந்த சுமதிக்கு" என்று வாய்க்குள் முணு முணுத்து ..பேச்சை கட் செய்தாள். அதற்குள்ளே பிரீத் தலையணை பின்னால்
முட்டுக்கொடுத்து மெத்தையில் சாய்ந்து அமர, அவன் மடியில் தலையை வைத்து ஒருகளித்து படுத்து கொண்டாள் பவித்ரா.
மேலிருந்து பார்ப்பதற்கு "ட" வடிவத்தில் இருந்தனர் இருவரும்.. " இன்னொரு ரூம் இருக்குடி போய் அங்க படு." தலையை பிடித்து கீழே தள்ள.. மீண்டும் அவன் மடியில் தலையை வைத்து படுத்துக் கொண்டாள்.
" ம்ஹும்.. தூக்கம் வராது.. புது இடம்..ல..டா..ப்ரீத்.
கவனமாக போனில் விழிகள் ஊடுருவ, விரல்களால் தானாய் அவள் தலையை வருடி தர,அவளோ உறக்கத்தை அணைக்க... இவனோ இமைகளை அசைக்காமல் தேவ கன்னிகை மூடிய விழியும். குவிந்து செவ்விதழ் பிளந்து ஆ..வென அவள் தூங்குவதை கண்டு சிரித்து ரசித்து. பிறகு அவளை விலக்கி ஓரமாய் படுக்க..வைத்தான். நடு இரவில் அவன் இதயம் கனக்க.. கை கொண்டு தேட, அவள் காது மடலோடு மெல்ல வருட.. அவள் ஒற்றை ஜிமிக்கியில் கைகள் பட்டதும் உறக்கத்திலும் புன்னகை வந்தது தானாய் அவள் மாமனுக்கு." நகர்ந்து போடி.."நகரவே மாட்டாள் என்றது தெரிந்து சும்மா சொல்லி வைத்தான்..
" அம்மா ப்ளீஸ்..மா தூக்கம் வருது மா .. ப்ளீஸ் ... என்று பிதற்றியவள் ஆழ்ந்த நித்திரைக்குள் செல்ல..
அவன் இதயத்தில் குடியிருப்பவள் .
நெஞ்சம் எனும் மஞ்சம் மீது ஒரு நாள் வாடைக்கு குடி வர.." கடவுள் இருக்கான் டா குமாரு .. என்று எண்ணி உறங்கிப் போனான்.. ப்ரீத்.
" விடியற்காலை வீட்டிற்கு வந்த சந்தீப் அறை கதவை திறந்ததும்.!
ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. இருவரும் பின்னிப்பிணைந்து சாரையும் நாகம் போல இருக்க..! "என்னடா இவ அவன புடிக்கல புடிக்கலைன்னு சொன்னா.!
இப்படி (கட்டி)புடிச்சிட்டு படுத்து இருக்கா?தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கிறீங்களே.. டா"
" உன்ன விடவா நாங்க சீரழிகிறோம்.." என்று ப்ரீத்திடமிருந்து பதில் வர,
"அப்ப தூங்கலையா டா நீ.. "அதிர்ச்சியில் கேட்டான் சந்தீப்.
" இல்லை தூங்குற மாதிரி நடிச்சுட்டு இருக்கேன் டிஸ்டர்ப் பண்ணாம ஓடிப்போயிரு.. "கையால் போக சொல்லி விரட்ட,
" எவ்வளவு நேரம் மா.. நடிச்சிட்டு இருக்க."
" எப்ப இவ கையால என்ன லாக் பண்ணினாலோ அப்ப இருந்து டா .. சுமார் 6 மணி நேரமா.! "
" ப்ரீத் பாபா.." என்று பதறி .. சுண்டு விரலை காட்டி .. "இதெல்லாம்."
" கன்ட்ரோல் செல்ஃப் கன்ட்ரோல்.. "
"வெடிச்சிடும் டா.."
இரண்டு பெட்ஷீட் ஐ காட்டி.."போர்வையை போட்டு புரொடக்ஷன் பண்ணி இருக்கேன் டா அப்படியெல்லாம் ஆகாது.."
" சந்திப்பின் குரல் கேட்டதும் தூக்கம் கலைந்து தலையை சொரிந்து கொண்டு.. குட் மார்னிங் பையா(அண்ணா ) என எழுந்தவள் ...நைய்ட் எங்க போனீங்க? காபி ஏதும் போட்டிங்களா?" என்று கேட்க..
" பையா பாயான்னு சொல்லும் போதே நெனச்சேன் இருபோட்டு எடுத்துட்டு வரேன்.." அழுத்து கொண்டு கிச்சனை நோக்கி சென்றான் சந்தீப் .
மெதுவாக பிரஷ் ஃ அப் ஆகி வந்து காஃபியை பருகியவள்..டைனிங் டேபிள் ஸ்டாண்டில் இருந்த கத்தியை கையில் எடுத்தாள். இது விசாரணை நேரம் " அண்ணா கொஞ்சம் இங்க வாங்களேன்.." பாவம் அவன் எதற்கு இவள் வர சொன்னால் என்று புரியாமல் அவள் முன் வந்து ஆஜர் ஆக.
"ஆரம்பிக்கலாமா "என்று கூறி ..
"வர்ஷா யாரு? எனக்கு அண்ணனா இருந்துகிட்டு இந்த வேலை பார்க்கலாமா? பையா."
" தங்கச்சி மா கத்தி ஷார்ப்பா இருக்கு.உன் கைய குத்திடும். கொஞ்சம் அப்படியே அங்க வச்சிட்டு பேசுவோமா.." பிரதர் குரல் நடுங்க கோரிக்கை வைக்க.
நிராகரிததவள் " தப்பு செய்றவங்கள விட , தப்பு செய்ய தூண்டுறவங்க தான் பெரிய குற்றவாளி.. அதனால " என்று கத்தியை அவன் அருகில் நீட்டி கூர்முனையை அவனது அடி வயிற்றை குறி வைத்துத் முன்னோக்கி நகர்த்த..
பின்னடி வைத்தான். மரண பயத்தில் உறைந்து நின்றான் சந்தீப்.
பவித்ராவிற்க்கு பிடிக்கும் என்பதால் பிரியாணி செய்ய..கறி எடுக்க கட்டப்பையோடு வெளியே சென்ற பிரீத். கத்தியும் கையிமாக இவள் நிற்பதை பார்த்ததும்." பவி.." என்று அலறியபடி.. வேகமாக அருகில் வர..
" இந்தா வந்துட்டான் இல்ல..என் செல்லம். என்ன காப்பாத்த," என்று பெருமிதத்தோடு சந்தீப் பாய் .. ஆவலாக அவனை பார்க்க..
"என்னடா" என்று பவித்ரா ஒரு அதட்டு அதட்டவும்.
" அது ஒன்னும் இல்லடா.. பவிமா..கஞ்சா , ஊசி, பொண்ணு, போதை மாத்திரை இதெல்லாம் எனக்கு தெரியும். இன்னும் இதர பல இருக்குன்னு சொன்னியே அது என்னது டா மாமா ? அவசரமா நான் சிக்கன் வாங்க போறேன்..
என்னன்னு நீ கொஞ்சம் விசாரிச்சு வை பவி.."என்று நண்பனை கொத்தாக கோபக்காரியிடம் கோர்த்து விட்டு ப்ரீத் செல்ல..
" அட துரோகிப் பயலே.." என்று கோபமாய் அவனை சந்தீப் முறைக்க..
" மச்சி உயிரோட இருந்தா பிரியாணி சாப்பிடலாம்.. வர்றேண்டா.. "கிளம்பி வெளியே சென்றான். ப்ரீத் சென்ற திசையை வெறித்தவள்.
விசாரணை கைதியின் புறம் பார்வை திருப்ப.. அவன் அங்கு இல்லை.. எங்க போனான்.. என்று சுற்றி முற்றிலும் பார்வையை சுழட்டினால்.. அவனோ அவள் கால்களுக்கு முன்னே தண்டால் எடுத்தவாறு..
" அண்ணன் வாழணுமா தங்கச்சி கத்தியை கீழே போடு மா..அண்ணன் கூட கத்தி.. கத்தி.. சண்டை போடலாம. கத்தி வைச்சு சண்டை போடக்கூடாது.." என்றதும் குலுங்கி சிரித்தவள்."ஒன்னும் பண்ண மாட்டேன் எந்திரிங்க அண்ணா..ஏன் இப்படி பண்றீங்க.. உங்கள் நம்பி தானே.இங்க அனுப்பினோம்.. இதர பல னா என்ன?" என்று கோபமாக கேட்டவள் கையில் உள்ள வெளிர் நிற கத்திதியினை கண்டு சந்தீப் கண்கள் பயத்தில் மின்ன.!
"நல்லதே இல்லனாலும் கெட்டதையாவது சொல்லித் தராம இருக்கலாம் இல்ல.. உங்களுக்கு ஒன் ஹவர் தான் டைம் வர்ஷா இங்க வரணும்."
" வர்ஷா ஏன் வரணும்.. பவி.. ? "
"நான் அவங்களை பார்த்து கொஞ்சம் பேசணும்.. "
" ம்.. சரி வர சொல்றேன். அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா.?" தயங்கி கொண்டே கேட்க.
" என்ன பேச இருக்கு..ஒரு அண்ணன் மாதிரியா நீங்க நடந்துக்கிட்டீங்க? "வெடுக்கென முகத்தை திருப்பினாள் பவித்ரா.
" நான் இப்படி பண்ண நீ தான் காரணம். "
"நானா " கேள்வியாக பார்த்தவளை.. "ம்.. உன் ஆசை மாமா இங்க எதுக்கு வந்திருக்கான் தெரியுமா? ஷெகர்.. இந்த ஒரு வார்த்தை மட்டும் கூகுள்ல கண்டு பிடிச்சு மனப்பாடம் பண்ணி வைச்சுருக்கான்."
" ஷெகர் னா.. விஷம் தான.!"
"ப்ரீத் தற்கொலை பண்ண டிரை பண்ணான் பவி. " என்றதுமே அவள்
இதயம் ஒரு நொடி நின்று துடிக்க..மூச்சை இழுத்துப் பிடித்து.." சும்மா சொல்லாதிங்க அண்ணா.." என்றாள் பவி நடுக்கமாக.. தற்கொலைக்கு முயன்றான் என்ற வார்த்தையை கூட அவளால் தாங்க முடியவில்லை.
" காதல் இல்லைனா வாழ முடியும்.. அவனோட உயிர் நீ தான்னு புரியலையா? நீ இல்லைனா செத்துறுத்துருவான் னு தெரியாதா உனக்கு ? அவனோட மொத்த வாழ்க்கைக்கு அர்த்தம் நீதான்.. பவி .
நான் உன்னை வெறுக்கிறேன்.. நீ எனக்கு வேணாம். என்ன விட்டுட்டு போயிடு..அப்படினு நீயே சொன்னா ?அத தாங்க முடியுமா அவனால, உனக்கு அவன புடிக்கலையா.. கொஞ்சம் கொஞ்சமா நீயா விலகணும்.
நீ அவனை லவ் பண்ணலைனு சொன்னத உண்மைனு நம்பி அவன் என்னை எவ்வளவு கொடுமை பண்ணான் தெரியுமா.? " என தன் தலையில் தலையில் அடித்துக் கொண்டான் சந்தீப்.
"அவளுக்கே என்ன பிடிக்கல, நான் செத்துருவாடா மச்சானு என்கிட்ட கேட்கிறான்.. நீ விளையாட்டுக்கு சீண்ட சொல்றது எல்லாத்தையும் உண்மைன்னு நம்புற முட்டாள் பவி அவன்.
அவன் இப்ப உன்ன வேணாம்னு சொன்னா தாங்க முடியுமா உன்னால. ஒரு வாரம் பேசாததுக்கே உயிர் போன மாதிரி உட்கார்ந்து இருக்க.! அத்தை (சுமதி ) அம்மா சொன்னாங்க. அவன காவல் காக்கிறது எனக்கு பெரிய வேலையா இருந்துச்சு. முக்கியமான கிளைண்ட் பார்க்க வெளியூர் போற சூழ்நிலை. தனியாக அவன விட்டுட்டு போக என்னால முடியல ,அதுக்காக அந்த பொண்ண துணைக்கு இருக்க வர சொன்னேன். துணையா இருக்க வர சொல்லல.. திகிட்ட.. திகட்ட அன்பும் காதலும் கிடைக்கிறவங்களுக்கு அதோட அருமை புரியுறதில்லை.. நீ வெறும் அவனோட காதல் இல்ல பவித்ரா.. அவனோட உயிரே நீ தான்.!
நீ விலகிட்டா செத்து போயிடுவான். அவன சாகடிக்கணும்னா.. தாராளமா நீ விலகி போயிடு, அவன் உன்னால சாவட்டும்.. "
" ப்ரீத்.. இந்த அளவு சீரியஸ்..ஆ.. என்ன லவ் பண்றது. எனக்கு தெரியாது அண்ணா.." என்றாள் கண்ணீர் வழிய."எப்பவுமே அவன் என்கிட்டே காதலை காட்டினதில்லை. ணா.. அன்பா அக்கறை காட்டுவான். சண்டை போடுவான். அடிச்சுப்போம்.அவன் இல்லாம என்னால இருக்க முடியாது. ஏன்னு கேட்டா கூட எனக்கு பதில் தெரியாது.! அவனோட முன் கோபம் மட்டும் தான் எனக்கு பிடிக்காது. அவன் எனக்கும் உயிர் தான்.. ரொம்ப.. பிடிக்கும்ணா.. அவன. இதுவரை பிரிவே எங்களுக்குள்ள இருந்ததில்லை.
முதல் முறையா பிரிஞ்சப்ப, எனக்கு புரிஞ்சு போயிடுச்சு..எனக்கும் அவனக்குமான உறவு என்னன்னு.. என்னால அவன் இல்லாம வாழவே முடியாது.





