அத்தியாயம் : 21
விஷ்ணுவுக்கு ஒவ்வொரு நிமிடங்களும் திக் திக் நிமிடங்கள் தான். சென்னையிலிருந்து அழைப்பு வந்தாலே! பீதியானான். ஈஸ்வர் ஏதாவது சொல்லி, திருமணத்தை நிறுத்திடுவானோ? என பயந்து போனான்.
அதையே நினைத்துக் கொண்டு, வீட்டில் சுற்றிக் கொண்டிருக்க, இதை கண்ட கோபால்,
"விஷ்ணு இங்கன வா யா?" என்றார்.
"என்னப்பா?" என்றான் அவர் அருகில் வந்து,
"ஏன் யா சோர்வா தெரியற?. வேலை ரொம்ப சாஸ்தியா?" என்றார் வாஞ்சையாக
"இல்லை பா " என்றவன். " ஒரு சின்ன குழப்பம்!" என்றான் தயங்கி
"என்னப்பு?"
"என்னோட கல்யாணத்தையும் நிறுத்த எதாவது முயற்சி பண்ணுவாங்களாப்பா?"
"என்னய்யா இப்படியெல்லாம் பேசுற? என்னாச்சு உனக்கு?" என்றார் அதிர்ந்து
"அது வந்து பா. லாவண்யாவுக்கு முதலில் ஏற்பாடானதை நான் தான் நிறுத்தினேன். அந்த கோவத்தில் மாமா, அத்தை சொந்தக்காரங்க ஏதும் சொல்லி, நிறுத்த பார்ப்பாங்களோன்னு.. " என்று தயங்கி நிறுத்த!
"அதெப்படி முடியும்? அதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை" என்று விஷ்ணுவை சமாதானப்படுத்த முயன்றார்.
"வாய்ப்பில்லை தான். ஆனாலும் வேறு யாரும் எதுவும் இல்லாததை சொல்லி, மாமா மனசை கலைச்சிடுவாங்களோன்னு தோணுதுப்பா" என்றான் மீண்டும்.
"அதெல்லாம் ராஜூவிடம் நடக்காது. அப்படியே ஏதும் அவன் பண்ணாண்ணா பொண்ணை தூக்கிட்டு வந்திடுவோம்டா மகனே!. யார் தடுத்தாலும்! லாவண்யா தான் உன் பொண்டாட்டி!" என்று அவர் மீசையை முறுக்க
சோர்ந்திருந்தவனின் முகம் நொடியில் பிரகாசமானது. " இப்படியே சிரிச்சிக்கட்டே போய் சாப்பிட்டு போய் செத்த படுய்யா. இரவைக்கு எல்லாரும் சென்னை கிளம்பனும்ல! " என்று அவனை சாப்பிட அனுப்பினார்.
இதோ மறுநாள் சொந்த பந்தங்கள் புடை சூழ, பெற்றோர்கள் உற்றார்கள் முன்னிலையில் விஷ்ணு - லாவண்யா நிச்சயதார்த்த ஒலை வாசிக்கப்பட்டது. எப்போதும் இருப்பதை விட, அவள் முகத்தில் தெரிந்த ஜொலிப்பில், கண்ணை அவள் மீதிருந்து எடுக்க முடியாமல் அமர்ந்திருந்தான் விஷ்ணு.
இதை ரொம்ப நேரமாக கவனித்திருந்த பெரியவர் ஒருவர். " விஷ்ணு தம்பி, என்ன பொண்ணயே வைச்ச கண்ணு வாங்காம, புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க?" என்று மேடை ரகசியமாக சத்தமாக கேட்டு வைக்க,
அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர். விஷ்ணு, தர்ம சங்கடமாக பின் கழுத்தை தேய்த்தபடி லாவண்யாவை பார்க்க, அவள் முகத்தை நிமிர்த்தவே இல்லை. 'இப்படியே மற்றவர்கள் கேளி செய்வது போல! பார்த்து வைப்பது? ' என நாணத்தில் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
"தம்பி, இன்னும் இரண்டு நாளுல உங்களுக்கு பொண்டாட்டியாகிடும். அப்போ பாருங்க! யாரும் எதுவும் பேச மாட்டாங்க!" என்று மற்றொருவர் மேலும் கிண்டலடிக்க,
அதில் கடுப்பானவன். " அப்பவும் என்ன டா பொண்டாட்டியை இப்படி பார்த்து வைக்கிறேன்னு பேசுவீங்க! உங்களுக்கு கிண்டல் பண்ண காரணம் வேணும். அதனால நீங்க கிண்டலை கண்டினியூ பண்ணுங்க. நான் எனக்கு வரப் போறவளை சைட்டடிச்சுக்கிறேன்" என்று பதிலடிக் கொடுக்க,
பெற்றோர்கள் இதை கண்டும் காணாமல் தங்களது வேலையை கவனித்துக் கொண்டிருந்தனர்.
லாவண்யா, அவனது பேச்சில் அதிர்ச்சியும் ஆச்சரியுமாக நிமிர்ந்து பார்க்க! டக்கென்று அவளை பார்த்து கண்ணடித்தான். இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போய் அப்படியே பார்த்திருக்க,
"இப்போ பொண்ணு மாப்பிள்ளையை பார்க்குது டோய்!" என்று ஒருவன் கிண்டலடிக்க,
இப்போது வெட்கப்படுவது விஷ்ணுவின் முறையானது. கிண்டலும் கேலியுமாக நிச்சயதார்த்தம் விமர்சையாகவும் மகிழ்ச்சியுமாக நடைபெற்றது. இதில் ஈஸ்வர் தான் விருந்தினர்களை கவனிப்பது, கேட்டரிங் ஆட்களுக்குக்கு அவ்வப்போது விபரங்களை கூறுவது என அனைத்தையும் பார்த்துக் கொண்டான். அதனால் தான்! ராஜூவினால் சபையில் நிற்க முடிந்தது. ஏற்கனவே நிச்சயம் நின்றிருந்ததால்! கேவலமாக பேசியவர்களின் வாயை அடைக்கவே விமர்சையாக நடத்தியிருந்தார்.
நிச்சயதார்த்தத்துக்கு, பாதுகாப்பு கருதி வருணாவையும் அழைத்து வந்திருந்தனர். ஈஸ்வரின் வீட்டில் தான் இருந்தாள். இருவருக்கும் ஏற்கனவே நிச்சயம் முடிந்திருந்ததால், அவளை அறையிலேயே இருக்க வைத்து விட்டனர். "வெளியில் உன் தலை தெரியவே கூடாது" என்று கோசலை கண்டித்து விட்டே சென்றிருந்தார்.
யாரும் இதை பேசும் பொருளாக்க விரும்பாமல், ராஜூ மற்றும் ராதிகாவின் அறையில் அமர வைத்திருந்தனர். வெளியாட்கள் யாரும் அங்கே செல்ல மாட்டார்கள். ஹாலில் நடக்கும் பேச்சு வார்த்தைகள் கிண்டல் கேலிகள் என அனைத்தும் காதில வாங்கியபடி, சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
"லாவிக்கு, எங்க விஷ்ணு அண்ணாவே மாப்பிள்ளையா அமைச்சு கொடுத்திட்ட. அவங்க என்னென்னைக்கும் சந்தோஷமா வாழனும் " என்று மனமார பிராரர்த்தனை செய்து கொண்டாள்.
வந்தவர்களுக்கு விருந்து, உபசரிப்பு என நேரம் சென்று கொண்டிருந்தது. வந்தவர்களை கவனிக்கவே ஈஸ்வருக்கு நேரம் சரியாக இருந்தது. இதில் இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால்! வருணா வந்திருப்பதை யாருமே ஈஸ்வருக்கு சொல்லவில்லை. திருமணம் நெருங்கி வருவதால் வருணாவை அழைத்து வந்திருக்க மாட்டார்கள் என நினைத்துக் கொண்டான். இவர்கள் வரும் போது ஈஸ்வரும் வேலையாக வெளியில் சென்றிருந்ததால்! அவனுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
லாவண்யா தான், ராதிகாவை அழைத்து, "அம்மா, வருணா இன்னும் சாப்பிடாமல் இருக்கா மா. அவளுக்கு சாப்பாடு கொடுத்து விடுங்க. ரொம்ப நேரம் பசி தாங்க மாட்டாள்" என்றாள் அக்கறையாக
"சாப்பாடு எடுத்து வைச்சிட்டேன் டி. ஹாலில் இத்தனை பேரை தாண்டி எப்படி கொண்டு போறதுன்னு தெரியலை. வருணா வந்திருக்கிறது, நம்ம சொந்தம் யாருக்குமே தெரியாது. அவங்க எல்லாருமே ஹாலில் தான் உட்கார்ந்து இருக்காங்க" என்றார் அங்கலாய்ப்பாக
"அப்படியா?" என்று சற்று யோசித்தவள். "சின்ன கேரியரில் சாப்பாடு வச்சு அதை ஒரு கூடையில் வைத்து கொடு மா. சின்ன பசங்க யார் கையிலாவது கொடுத்து, அதை அறையில் வைச்சிட்டு வர சொல்லிடுறேன்" என்றாள்.
'இதுவும் நல்லா ஐடியாவாக தோன்ற! " சரி " என்றவர். அதன்படியே வைத்து, எடுத்து வந்து கொடுத்தார். அதன்படியே சிறுவன் ஒருவனை பிடித்து, அதை பக்கத்து அறையில் வைத்து விட்டு வர சொன்னாள். அதன்படியே அவனும் வைத்து விட்டு வெளியே ஓடி வர,
அதை தற்செயலாக ஈஸ்வர் பார்த்து விட்டான். இவன் பக்கமாக ஓடி வந்தவனை பிடித்து நிறுத்தியவன். அவன் அளவுக்கு, ஒரு காலை மடித்தும், மற்றொரு காலை நேராக வைத்து அமர்ந்தவன்.
"டேய்! அறையில் என்னடா வேலை?. ஐஸ் பாய் விளையாடுறீங்களா?. அப்படியிருந்தாலும் அறைக்குள்ளே எல்லாம் போய் ஒளியக் கூடாது புரியுதா?. யாராவது தெரியாமல் அறையை பூட்டி விட்டால் என்னாவது?" என்றான் கண்டிக்கும் விதமாக
"அக்கா தான் அந்த அறையில் கூடையை வைக்க சொன்னாங்க.. ஆனால் நீங்க அந்த அறைக்கு தனியா போகாதீங்க. நான் தைரியமான ஆளா இருந்ததால தனியா போய்ட்டு வந்துட்டேன்" என்றான் ரகசியமாக
"பார்ரா! இவர் தைரியமான ஆளு!. இதை நான் நம்பனும்?" என்றான் ஈஸ்வர் கிண்டலாக
"இல்லையா பின்ன? அந்த அறைக்குள்ளே வளையல் சத்தம் கொலுசு சத்தமெல்லாம் கேட்டுச்சு. நான் தைரியமான ஆளா இருந்ததால் தானே போய்ட்டு வந்தேன்!" என்றான் வீராப்பாக
"நீ தலைதெறிக்க ஓடி வந்த போதே உன் வீரத்தை தெரிஞ்சுக்கிட்டேன் டா " என்று அவன் கன்னத்தில் கிள்ளி அனுப்பி வைத்தவன். தனது தந்தையின் அறைக்குள் சென்றான்.
ஏசி ஓடி அணைத்து வைத்திருந்தாலும்! அதன் குளுமை இன்னும் இருந்தது. இதமான மலர்களின் மனம். லேசான கொலுசொலி சிணுங்க! விளக்கு சுவிட்சை போட்டு விட்டான். கைகளால் கண்ணை மறைத்தபடி, தங்க சிற்பமாக பதுமையான படுத்திருந்தாள் வருணா.
சற்றும் எதிர்பாராமல் வருணாவை கண்டவனின் கண்கள் பளபளத்தது. வேகமாக அவளருகே சென்றவன். "மித்து " என்றான் மெல்ல,
சட்டென்று கண்ணிலிருந்து கையை எடுத்து பார்த்தவள். அருகில் ஈஸ்வரை கண்டு பதட்டமாகி விட, வேகமாக எழுந்து நின்றாள்.
"நீனும் வந்தியா?. யாருமே எங்கிட்ட சொல்லலை!' என்றான் ஆனந்த அதிர்ச்சியுடன்.
"ஷ்ஷ்ஷ்.. சத்தம் போடாதீங்க. உங்க சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சுட போகுது" என்றாள் பதட்டமாக
"ஏன்? தெரிஞ்சா என்ன?" என்றான் புருவம் சுருக்கி
"நிச்சயம் தான் முடிஞ்சிருக்கு! இன்னும் கல்யாணம் முடியலை. அதுக்கு முன்னாடி வந்தால்! ஏதாவது பேசுவாங்க!" என்று தலையை குனிந்தபடி மெல்ல முணுமுணுத்தாள்.
"ஏன்? ஏதும் தப்பா தண்டா பண்ணிடுவோமா?" என்றான் வேண்டுமென்றி
"என்ன? இப்படியெல்லாம் பேசுறீங்க? " என்று வருணா அதிர்ந்து போய் பார்க்க!
"எனக்கு இப்போ அப்படித்தான் தோணுது"
"எ.. என்ன தோணுது?" என்றாள் மிரண்டு போய்
"சொல்லவா?" என்று அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க!
பயந்து போய் ஒவ்வொரு அடியாக பின்னோக்கி நகர்ந்தவள். கடைசியாக சுவற்றில் போய் முட்டி நின்று! அதிர்ந்து போய் பார்க்க!
நெருங்கி நின்றவன். இரு புறமும் கைகளை ஊன்றி அவளை சிறைபிடித்தவன். அவளையே பார்க்க!
அவனது பார்வையின் வீச்சை தாங்க முடியாதவள். பார்வையை தழைத்துக் கொண்டவள். கண்ணை இறுக மூடி, என்னவருமோ என்று நிற்க! இதயமோ டம் டம் என ஒலி எழுப்பி அவளது பயத்திற்கு மத்தளம் கொட்டிக் கொண்டிருந்தது.
சற்று நேரம் அவளது பயத்தை நின்று பார்த்தவனுக்கு, சிரிப்பை அடக்குவது கடினமாகவே இருந்தது. உடல் குலுங்க சத்தமில்லாமல் சிரித்தவன். 'பட்டுக்குட்டி டி நீ!' என மனதில் கொஞ்சிக் கொண்டு, அவள் நெற்றியோடு நெற்றி முற்றியவன்.
"என் மித்து குட்டிக்கு என் மேல அவ்வளவு பயமா?" என்றான் கிண்டலாக
வருணா கண்ணை திறக்காமலேயே, மறுப்பாக தலையசைக்க!.. " அப்புறம் ஏன் டி?.இப்படி பயந்து போய் நிற்குற?" என்றான் கிசுகிசுப்பாக
அவளிடத்தில் எந்த பதிலும் இல்லை.
"எனக்கு, உன்னை அப்படியே கட்டிக்கனும் போல இருக்கு?. கட்டிக்கவா?" என்றான் மென்குரலில்
அவனது பேச்சில் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க! உதட்டை கடித்து உணர்வுகளை அடக்கியபடி நின்றவள். மறந்தும் கண்ணை திறக்கவில்லை.
அவளை வம்புவளர்க்க பேச்சை ஆரம்பித்தவனுக்கு! இப்போது சொல்ல முடியா நிலை. அவனுமே உணர்ச்சி வசப்பட்டிருநதான். "ரொம்ப படுத்தற டி. கல்யாணத்துக்கு பிறகு, இப்படியெல்லாம் பர்மிசன் கேட்டுட்டு நிற்க மாட்டேன்" என்றவன். அவளது நெற்றியில் அவசரமாக முத்தமிட்டு விட்டு, அம்மா சாப்பாடு கொடுத்து விட்டிருக்காங்க. சீக்கிரம் சாப்பிட்டு விடு. டைம் ஆச்சு " என்று விட்டு, வேகமாக அவ்வறையை விட்டு வெளியே சென்று விட்டான்.
அறைக்கதவை சாற்றும் சத்தத்தில் கண்ணை திறந்தவளுக்கு, ஈஸ்வர் இல்லாததை கண்டு, வருத்தமாக இருந்தது. அவனது நெருக்கத்தில், சின்ன இதழ் ஒற்றலையாவது அவளது மனம் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததை உள்ளுக்குள்ளேயே மறைத்துக் கொண்டாள். இருந்தாலும்! தனிமையிலும் அவனது கண்ணியத்தில் வருங்கால மனைவியாக அவளது மனம் பூரித்திருந்தது.
பிறகு, ஈஸ்வர் சொன்னது போல! உணவை சாப்பிட்டு முடித்தாள். மேலும் நேரம் செல்ல, விருந்தினர்கள் பெரும்பாலோனர் சென்று விட, விஷ்ணு தனது ஊரிலிருந்து அழைத்து வந்தவர்களை முதலில் பஸ்ஸில் அனுப்பி வைத்து விட்டான். அதிலேயே ராமனும் சென்று விட,
காரில் மற்றவர்கள் செல்வதற்கு விடைபெற நின்றிருந்தனர்.
ஈஸ்வர் வரவும், " அப்புறம் என்ன மச்சான்?. கல்யாணத்துக்கு சீக்கிரமே கிளம்பி வந்திடுங்க?" என்றான் விஷ்ணு கிண்டலாக
இனிமேல் என்ன செய்ய முடியும்? என்ற தோரணை அதிலிருந்தது.
புருவம் சுருக்கி பார்த்தவன். திரும்பி ராஜூவை பார்க்க! .. மகனின் பார்வை உணர்ந்து, " என்ன ஈஸ்வர்?" என்றார்.
"விஷ்ணு ஏதோ சொல்றான் பா. பெரியவங்க சொன்னதுக்காகத் தான்.. " என்று ஆரம்பிக்க,
"அடேய்! " என்று அதிர்ந்து! அவன் வாயை பொத்தியவன். ஈஸ்வரை தள்ளிக் கொண்டு தனியே நிற்க வைத்து,
"ஏன் டா இப்படி பண்ற?. நீ என் உயிர் நண்பன் இல்லையா?" என்றான் விஷ்ணு பாவமாக
இருவரை பார்த்த ராஜூ. ஏதோ விளையாட்டு போல! என்று மற்றவர்களிடம் கவனத்தை திரும்பினார்.
தனது வாயிலிருந்த, விஷ்ணுவின் கையை எடுத்து விட்டவன். " லாவண்யாவுக்கு அண்ணணும் நான் தான்!" என்றான்.
"ஆமாம் டா. ஆமாம். யாரு இல்லைனு சொன்னா. இங்க பாருடா. பெரியவங்க சொன்னதுக்காக சரின்னு சொன்னாலும்! இப்போ லாவண்யாவை ரொம்ப பிடிச்சிருக்குடா. அவ தான் என் பொண்டாட்டின்னு பிக்ஸ் ஆகிட்டேன். இதில் இடையில் பூந்து ஆட்டத்தை கலைச்சி விட்டுடாத டா. எங்க வாழ்க்கையை பத்தி ரொம்ப கற்பனை பண்ணி வைச்சிருக்கேன்" என்றான் பரிதவிப்பாக
ஈஸ்வருக்கு, விஷ்ணுவின் நிலை நன்றாக புரிந்தது. விளையாட்டு பேச்சை கூட அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது புரிய, " பிழைச்சு போ " என்று அவன் கன்னத்தில் விளையாட்டாக தட்டி அனுப்பி வைத்தான்.
லாவண்யாவிடம் கண்ணாலேயே விடைபெற்று காரில் ஏற, மற்றவர்களும் காரில் ஏறிக் கொண்டனர். ஈஸ்வர், வருணா காரில் ஏறும் வரை பார்த்துக் கொண்டிருந்தான். வருணாவுக்கு உள்ளுணர்வு உணர்த்தினாலும்! நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டு, தலை நிமிர்த்தாமல் காரில் ஏறிக் கொண்டாள். அனைவரும் விடை பெற்று கிளம்பி விட்டனர். மணமக்கள் தங்களது திருமண நாளை எதிர்பார்த்து கனவில் இருக்க! பெரியவர்கள் திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
அடுத்தவாரம் நாமும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விடைபெறுவோம்..