எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

12 வான்மழை அமிழ்தம் நீ!

priya pandees

Moderator
அத்தியாயம் 12

கிடத்தினான் கூற்று, யாஷுக்கும் வருணிக்கும் தான் புரியவில்லையே தவிர, அவர்கள் இன மக்களுக்கு நன்கு புரிந்தது. அதனால் சடசடவென அனைவரும் யாஷ் வருணி முன் மண்டியிட்டு அமர, "வாடா ஓடிரலாம் என்னவோ செய்யப் போறாங்க" என்ற வருணி யாஷ் கையை இழுத்துக் கொண்டு மலையில் இறங்கி ஓடத் திரும்பினாள்.

"நில்லு வரு!" என அவளைப் பிடித்து கைக்குள் நிறுத்தியவன், "நீங்க என்னப் பேசுறீங்கன்னு புரியல" என கிடத்தினானை தான் கேட்டான். அவனுக்கு அந்நொடி ஆரோன் முன், ஏதாவது கோரிக்கை அல்லது போராட்டம் என ஒரு குழு மக்கள் திடீரென வந்து மண்டியிட்டு அமரும் நிலை தான் சட்டென்று ஞாபகத்தில் வந்து நின்றது.

கிடத்தினான் பார்வையிலும் அதே யாசகமே, "என் அனுமனின் கூற்று அது. அந்நாள் என்றோ என நாங்கள் ஏங்கியிருந்த நாள் இதோ இன்று எங்கள் கண் முன்னால். தங்கள் வரவில் எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி" என்றார்.

"ம்க்கும் சோப்பு போட்டு விளக்கிட்டாரு. இப்ப புரிஞ்சுருக்குமே உனக்கு?" என்றாள் வருணி, புருவம் சுருக்கி கிடத்தினான் பேசியதை யூகிக்க முயன்று கொண்டிருந்த யாஷிடம்.

யோசனையோடே அவளிடம் குனிந்து, "இல்ல புரியலடி!" என்க,

"சரியான மன்னாந்த நீ உனக்கு எப்படி புரியும்? நாம பேசுறது குஜராத் தமிழ். அவங்க பேசுறது தமிழ்நாட்டு தமிழ். இன்னைக்கு ஃபுல் டே நின்னு கேட்டாலும் புரியாதுன்னு உனக்கு புரிய வைக்க என்னால முடியல. பேசாம வா தப்பிக்கவாது ட்ரை பண்ணுவோம். வாடா மாமா" என இழுத்தாள்.

"கொல்லப் போறேன்டி உன்ன. அவங்க நம்மள அட்டாக் பண்ண நிக்ற மாதிரி நிக்கல, நல்லா பாரு அவங்க பாடி லேங்குவேஜ்ல மரியாதை தெரியுது இப்ப"

"ஒருவேளை அவங்க அப்படி நடிச்சு நம்மள முழுங்கிட்டா?"

"நேராவே முழுங்கலாம். நடிக்குற அளவுக்கு நாம அவங்களுக்கு அவ்வளவு ஒர்த்தில்ல. நம்மட்ட ஏன் அவங்க நடிக்கணும்னு யோசி"

"இதெல்லாம் பாயிண்ட்டா பேசு. ஆனா அவங்கட்ட பேசி தப்பிக்க தெரியாம முழி"

"போடி லூசு" என அவனும் திட்ட, அவர்கள் இருவரையும் தான் மாற்றி மாற்றி பார்த்திருந்தனர் சுற்றி நின்ற குரங்கு மனிதர்களும்.

"எங்கள் மொழி விளங்கவில்லையோ?" என்றார் மெல்ல கிடத்தினான்.

"ஆமாங்க அதேதானுங்க. நீங்க ரொம்ப டீப் தமிழ் போகாம பார்டர் தமிழ் பேசுனீங்கனா நாங்க புரிஞ்சுக்குவோம். பேச கூட வேணாம். உங்க மொழி உங்களுக்கு எங்க மொழி எங்களுக்கு. இப்ப எங்களையும் அதோ அங்க கட்டி வச்சுருக்க எங்க ப்ரண்ட்ஸையும் விட்டுறீங்களா? ஆமானா இப்புடி மட்டும் மண்டைய ஆட்டுங்க போதும் சத்தமே காட்டாம கிளம்பி போயிட்டே இருக்கோம். ப்ளீஸ்" என வருணி தலையையும் ஆட்டிக் காண்பித்து சொல்ல, அவர் நிதானமாக மறுத்து தலையசைத்தார்.

"என்னடா பொசுக்குன்னு நோன்னுட்டாரு" என வருணி சோகமாக அவனிடம் திரும்பிக் கேட்க,

"நீதான தலைய ஆட்டுனா போதும்ன அதான் ஆட்டி காமிக்கிறாரு"

"நா இப்படி தான் ஆட்ட சொன்னேன்?" என அவள் மேலும் கீழும் மறுபடியும் ஆட்ட,

"உன்ன மாதிரியே ஆட்ட அவருக்கும் கிறுக்கா பிடிச்சுருக்கு?"

"டேய்!" என அவள் முறைக்க,

"மூச்! கொஞ்ச நேரம் வாய மூடிட்டு நிக்கணும் நீ" என அதட்டவும், முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றுவிட்டாள்.

யாஷ் கிடத்தினானிடம் திரும்பவுமே, "நிச்சயம் உங்களை என்னால் அனுப்ப முடியாது. நா எங்கள் கடவுள் சொல்லாக சொன்னது, உங்களை போல ஒருவர் எங்கள குலம் காப்பாற்ற ஒரு நாள் நிச்சயம் வருவார் என்பதை தான். நீங்கள் எங்களுக்கு உதவ வந்திருக்கிறீர்கள். உதவி செய்ய வந்த உங்களை எப்படி நாங்கள் திருப்பி அனுப்ப முடியும்?" என அவனிடம் கேட்டார்.

"இப்ப மட்டும் நம்ம தமிழ் நல்லா பேசுறாங்க தான?" வருணி சொல்ல,

"இவ்வளவு நேரமு அவங்கள நீ பேசவே விடல, என்னையும் கேட்க விடல" என முறைத்தான் யாஷ், மறுபடியும் திரும்பி நின்று கொண்டாள். அவள் பயம் அவளுக்கு, ஆளில்லாத காடு கூட பயமுறத்தவில்லை மனித உருவில் குரங்கு பேச என அவர்கள் அருகில் நிற்பது தான் எந்நொடியும் பிராண்டி விடுவார்களோ என உள்ளுக்குள் பயபந்து உருள நின்று கொண்டிருந்தாள்.

"எங்களால உங்களுக்கு எப்படி, என்ன ஹெல்ப் பண்ண முடியும்?" என யாஷ் கேட்க,

"அது எங்கள் தெய்வத்தின் வாக்கு"

"அவங்க ஏதோ சொல்ல நீங்க அது நாங்கன்னு தப்பா ஜட்ஜ் பண்ணிட்டீங்கன்னு நினைக்கிறேன். நாங்க டாக்டர்ஸ் எங்களால் நிச்சயம் உங்களுக்கு எந்த உதவியும் பண்ண முடியாது. சத்தியமா நாங்க அதோ அங்க இருக்க எங்க பசங்கள தேடித்தான் வந்தோம். எங்களால இந்த காட்ல உங்களுக்கு எந்த ஹெல்ப்பும் செய்ய முடியாது"

"முடியும்" என்றார் அவர் சுருக்கமாக.

"அப்படி என்ன கஷ்டத்துல இருக்கீங்க நீங்க? உங்களுக்கு இல்யூஷன் பவர் இருக்கு அதவச்சு என்ன வேணா நீங்களே செய்யலாமே?" வருணி சொல்ல,

"என்ன உதவி தேவைப்படுது உங்களுக்கு?" என்றான் யாஷ்.

"சுதந்திரமான வாழ்க்கை வேண்டும்"

"இதைவிட என்ன சுதந்திரம் வேணும் உங்களுக்கு?" யாஷ் கேட்க,

"ஒருவேளை காட்ல இல்லாம ஊருக்குள்ள வாழ ஆசைபடுறாங்களோ?" வருணி சொல்ல, இருவருக்கும் அவ்வளவு குழப்பம்.

"எங்கள் இடத்தில் எங்களுக்கு சுதந்திரம் வேண்டும். நாங்கள் இங்கேயே நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும்"

"இங்க தான இருக்கீங்க? இன்னும் யார்ட்ட இருந்து உங்களுக்கு சுதந்திரம் வேணும்?"

"எங்கள் தலைவரிடம் இருந்து"

"சுத்தம்!"

"உங்க தலைவர் அவ்வளவு கொடுமைப் படுத்துறாரா?"

"ஆமா! அவரே எங்கள் இனத்த அழிச்சுட்ருக்குறாரு"

"உங்களுக்குள்ள எலெக்ஷன் வச்சு வேற தலைவர தேர்ந்தெடுக்க வேண்டியது தான? இதெல்லாம் ஒரு பிரச்சினையா?"

"அப்படியென்றால்?"

"நீங்க உங்களுக்குள்ள பேசி வேற தலைவர தேர்ந்தெடுக்கலாமே? அதுக்கு உங்களுக்குள்ள ஏதாவது போட்டி மாதிரி கூட வச்சு ஜெய்கிறவங்க அடுத்த தலைவர் அந்த மாதிரி" யாஷ் தெளிவாக சொல்ல,

"ஓ இங்க மக்கள் ஆட்சி இல்லையோ? அரசாட்சியோ?" என்றாள் வருடி யோசனையாக,

"ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அரசர் மாறுவார், அதற்கும் அவராக ஜீவசமாதி ஆகி முழுமையாக அழிய வேண்டும். மீண்டும் உயிர்பெற்று வரும் ஆசையில் தியானம் கொண்டார் எனில் அவர் மீண்டும் வருவார் மீண்டும் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் எங்களை ஆளுவார். இடையில் அவரை அழிக்க வேண்டும் எனில் அவரை அழிக்க வரும் உயிர், சுயநினைவு இழந்த நிலையில் இருக்கும் பெண்ணிற்குள் சென்ற விந்துவின் கருவிலிருந்து உருவான உயிராக இருக்க வேண்டும். அந்த உயிர் இவ்வுலகுக்கு தீர்க்க ஆயுளுடன் வந்து சேரவேண்டும். அப்படி வரும் உயிர் எங்கள் மொழி பேச வேண்டும், எங்களது பூர்வீகத்தை கொண்டவராக இருக்க வேண்டும், நாங்கள் அவரை தேடிச் செல்லாமல் எங்களைத் தேடி அவரே வரவேண்டும் என்பது எங்கள் அனுமனின் வாக்கு"

"என்னடா ஜுமான்ஜி பட கதை மாதிரி இருக்கு. ஒன்னா நம்பருக்கு இது ரெண்டாம் நம்பருக்கு அதுன்னு" என வருணி சொல்ல, யாஷ் அமைதியாகவே இருந்தான்.

"அப்டினாலும் நீங்க சொல்ற மாதிரி நாங்க வரலையே?" என அவரிடமும் சொன்னவள், "எங்கப்பா சுயநினைவு இல்லாத பொண்ணு சம்மந்தபட்டவன் பொண்டாட்டியாவே இருந்து தொட்டாளே தட்டித் தூக்கிருவாங்க தெரியுமா? நீங்க தேடுற ஆளு இதுவரை பொறந்துருக்கவும் போறதில்ல இனி பிறக்கப் போறதுமில்ல. அன்கான்ஸியல்ல இருக்க பொண்ண தொட்டா அது ரேப்புங்க. எங்க இந்தியாவ என்னான்னு நினைச்சீங்க? எங்கப்பா முடிச்சு விட்ருவாரு"

"வருணி!" என அவளைப் பிடித்து அவள் பேச்சை நிறுத்தியவன், கிடத்தினானிடம், "வேட்டையாடி எதுவும் கிடைக்கலனா உங்களயே பிடிச்சுத் தின்னுடுவாருன்னு சொன்னீங்களே அதனாலயா உங்க தலைவர கொல்லணும்னு முடிவுக்கு வந்துட்டீங்க?" என கேட்டான்.

"ம்ம் அதும் ஒரு காரணம் ஆனால் அது மட்டுமில்லை, உங்க நரன் இனம் எங்களை எதற்காகவோ தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். எங்கள் தலைவர் அதற்கு உடன்பட்டு எங்களில் சிலரை இதோ இது போன்ற ஓய்விற்கு செல்கிறேன் என கூறிச் செல்கையில் அழைத்துக் கொண்டு சென்று தொலைத்து விட்டு வருகிறார். என்ன நடக்கிறது என்றே எங்களுக்கு புரியாத நிலையில் மோசமாக நாங்கள் அழிக்கப் பட்டு வருகிறோம்"

"ஒருவேளை தூக்கிட்டுப் போய் அவரே வச்சு சாப்பிட்றாரோ?" என்றாள் வருணி.

"அதைத்தான் இங்கிருந்தே செய்யலாமே? எதற்காக ஓய்வென்று கூறிவிட்டு செல்ல வேண்டும்?" என்றார் அவர்.

"ஓய்வுக்கு எங்கப் போவாருன்னு தெரியாதா?"

"அதையும் சொல்லி செல்வதில்லை. யாரும் பின் தொடரக் கூடாது என மிரட்டிவிட்டு தான் செல்வார்"

"அவர் சொன்னா கேட்டுட்டு இருப்பீங்களா? உங்களுக்கு தான் மறைஞ்சு மறைஞ்சு போகத் தெரியுமே அப்படி போக வேண்டியது தானே?"

"எங்களால் மட்டுந்தான் முடியுமா? எங்கள் தலைவர் அவர் எங்களைவிட அதிமடங்கு சக்தி கொண்டவர் அவர். நாங்கள் மறைவது நரன்கள் கண்களை மட்டுமே மறைக்கும், எங்களுக்குள்ளும் எங்கள் தலைவர் கண்களுக்கும் எங்களால் மறைய இயலாது"

"சோ பிட்டி. பாவம் தான்ல?" என்ற வருணி, "இந்த மாதிரி தலைவர்லா எங்க நாட்ல இருந்தா எங்கப்பா சும்மா லெஃப்ட் ஹேன்ட்ல டீல் பண்ணிட்டு போயிடுவாங்க" எனவும் சொல்ல,

"கரெக்ட் எங்களால இதுல என்ன செய்ய முடியும்னு நினைக்றீங்க? உங்க தலைவர உங்களாலயே ஒன்னு செய்ய முடியலனா நாங்க என்ன செய்ய முடியும்?"

"எங்க தலைவர நாங்க தான் எதிர்க்க கூடாது. அது நாங்கள் எங்களுக்குள் செய்து கொள்ளும் சத்திய வாக்கு"

"இவங்க நம்மட்ட பெருசா என்னவோ எதிர்பாக்குற மாதிரி தெரியுது மாமா. நைசா பேசி நம்மள பலி குடுத்துருவாங்கன்னே என் உள் மனசு சொல்லுது" என அவன் காதில் மெல்ல முனங்கினாள்.

அந்நேரம், "கிடத்தி சாமி இதோ அடுத்த நரன்கள், எதற்காக இவ்வளவு பேர் நம்மிடத்தை சுற்றி வளைத்திருக்கின்றனர். இன்னும் எங்கெல்லாம் மறைந்திருக்கின்றனர் என்றும் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்" என க்ளாடியன், ஜனோமியோடு மற்ற இரு பெண்களும் அவர்கள் வலைக்குள் இருக்கத் தூக்கி வந்திருந்தனர்.

"ஒழுங்கா ஒளிய கூட தெரியல இதுல இவங்களுக்கு காட்ட காவல் காக்குற வேலை வேற" என்றாள் வருணி.

"அவங்க எங்களத் தேடி வந்தவங்க தான்" என்ற யாஷ், நால்வரும் வெளிவர உதவினான், "எப்டி மாட்னீங்க?" என அவர்களிடம் ஆங்கிலத்தில் கேட்க

"டாக்டர் நாங்க மறைஞ்சு தான் இருந்தோம் எப்படியோ பார்த்துத் தூக்கிட்டு வந்துட்டாங்க" என்றான் ஜனோமி,

அவர்கள் நால்வரையும் பேசவே அனுமதிக்காமல் பிடித்துச் சென்று, ஏற்கனவே கட்டிபோட்டிருந்த மூன்று பேருடன் கட்டி வைத்துவிட்டனர்.

"என்னங்க இப்படிப் பண்றீங்க? அவங்க இங்க உள்ள மக்கள் தான்" என்றான் யாஷ்.

"எங்கள் தலைவர் அனுமதி இல்லாமல் முதல் வந்த மூவரை எங்களால் அனுப்ப இயலாது. ஒருவேளை நீங்கள் எங்களுக்கு உதவினால் நீங்கள் அனைவருமே சென்றுவிடலாம் நாங்கள் தடுக்க மாட்டோம். எங்களுக்கு வேட்டையாடி வந்த நரனை திருப்பி அனுப்பி பழக்கமில்லை, ஆனால் உங்களுக்காக மட்டுமே அதை செய்கிறோம். எங்களுக்காக எங்கள் தலைவரிடமிருந்து எங்களை நீங்கள் காத்து தாருங்கள்" என்றார் கிடத்தினான்.

"இதென்னடா தலைய சுத்தி மூக்கத் தொடுற வேலைய இவ்வளவு ஈசியா பேசிட்ருக்காங்க. நீ ஆப்ரேஷன் பண்ண மட்டுந்தான் கத்தி பிடிப்பன்னு தெரியாம இப்படி அதிமேதாவியா டீல் பேசிட்ருக்காங்க. இது எங்க போய் முடிய போகுதோ தெரியல" என புலம்பிய வருணி, அங்கேயே மலையில் கையை ஊன்றி அமர்ந்து விட்டாள்.

"உங்க தலைவர் வர்ற‌ வர நாங்க இங்கேயே இருக்க முடியாது, நியர்லி சிக்ஸ்டி டேய்ஸ் இம்பாஸிபில்" என்றான் யாஷ்.

"உங்களை எங்கள் விருந்தினர்களாக சிறப்பாக ஒரு குறையும் வராமல் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்" என்றார் அவர் தாராளமாக.

"வெட்டப் போற ஆட்டுக்கு பூசை போடுற மாதிரியா?" என்றாள் அப்போதும்.

கிடத்தினான், "இன்னும் யாரெல்லாம் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று போய் தேடுங்கள்" என அவர் மக்களுக்கு கூறியவர் மேலும் மாலை பார்த்தே, "வாருங்கள் அவர்கள் ஓய்வெடுக்கட்டும்" என நகர்ந்து விட, மற்றவர்களும் யாஷுக்கு வணக்கம் வைத்து நகர்ந்துச் சென்றனர்.

"பார்றா பயங்கர மரியாதை தான் மாமா உனக்கு. வாழ்வு தான் போ" என பேச,

"எழுந்து வாடி வாயாடி" என அவளையும் பிடித்து எழுப்பி இழுத்துக் கொண்டு மற்றவர்களைக் கட்டி வைத்திருந்த இடத்திற்குச் சென்றான்.

முதலில் இருந்த மூவர் வாயிலும் ஏதோ இலையை வைத்து அடைத்திருக்க, அதைப்போலவே இப்போது அழைத்து வந்த நால்வருக்கும் கூட வைத்துக் கட்டியிருந்தனர்.

யாஷ் ஏழு பேருக்குமே அவர்களின் வாய் கட்டையும், கை கட்டையும் அவிழ்த்து விட்டான். முதலில் வந்த மூவரால் இப்போதும் வாயைத் திறக்க முடியவில்லை.

"இது குடலை சுத்தபடுத்துற இலை எங்கள பலி கொடுத்து அவங்க சாப்பிட ஏதுவா எங்க குடலையும் எங்க உடம்புல உள்ள கழிவையும் சுத்தப்படுத்த இத குடுத்துருக்காங்க" என்றான் க்ளாடியன்.

"அவங்க வாய்க்கு என்னாச்சு?"

"ரெண்டு நாளா வச்சுருக்காங்கள்ல புண்ணாகிருக்கும். அது ஆரணும் அதுவரை வாய திறக்க முடியாது" என்ற க்ளாடியன் அங்கேயே சுற்றி முற்றித் தேடி அதற்கான மருந்து இலையுடன் வந்து அந்த மூவரின் வாயிலும் வைத்து விட்டான். வருணிக்கும் அவளின் மருத்துவ இலையை நீட்ட, "எவ்வளவு அக்கறை க்ளாடியன். தேங்க்ஸ்" என்றவள் "உனக்கு கூட இல்ல மாமா பாத்துக்கோ" என அதை வாங்கி உண்டாள்.

"ரெண்டு மாசம் இங்கேயே இருந்தா உன் ட்ரீட்மெண்ட் என்னன்னு தாண்டி என்னோட ஃபர்ஸ்ட் கவலையே" என்றான் தலையைத் தேய்த்து விட்டுக் கொண்டு.

"அதுவரை என் அப்பா பாத்துட்ருக்க மாட்டாங்க. சும்மா ஸ்வைங்குன்னு வந்து இறங்குவாங்க பாரு" என
சட்டை காலரையும் தூக்கி விட்டுக்கொள்ள,

"நிச்சயமா உன் அப்பாவுக்கும் இந்த குரங்கு மனுஷங்களுக்கும் பூர்வ ஜென்ம ரிலேஷன்ஷிப் இருக்கும். அவரும் காடு உருவாக்குறேன் கிணறு தோண்டுறேன்னு அமேசான் காட்டுல இருக்க இவங்கள தான் அங்க தேடுதாருன்னு நினைக்கேன். அங்க காடு உருவாக்குறதுக்கு பின்னாடியும் இவங்க தான் ரீசனா இருப்பாங்க வேணும்னா உன் அப்பா வரவும் கேட்டுபாரு, ஏன்னா வாய்ப்பு கிடைச்சா இவங்கள அங்க குடி வைக்க அமேசான் காடு மாதிரி பெரிய காடு வேணும்ல?" என பேச அவனை அவள் பிடித்து அடிக்க அவன் தட்டிவிட என சிறிது நேரம் சண்டையிட்டு ஓய்ந்தனர்.

என்ன செய்தும் அங்கிருந்தும் அவர்கள் பார்வையிலிருந்தும் தப்ப முடியவில்லை, எங்கு இருந்தாலும் குரங்கு மனிதர்கள் பார்வை இவர்கள் மேல்தான் இருந்தது. மருத்துவ மாணவர்கள் மூவரும் வாய் புண்ணால் அவதியில் இருக்க, க்ளாடியன், ஜனோமி இருவரும் அங்கேயே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தனர், அந்த குரங்கு மனிதர்களிடம் பழக முயன்று கொண்டிருந்தனர்.

ஒரு வாரம் இப்படித்தான் கழிந்தது. நேரத்திற்கு உணவு வந்துவிடும், அசைவம் என்றால் யாஷ் வருணி இருவரும் சாப்பிட பயந்தனர். அதை க்ளாடியனும், ஜனோமியும் என்னவென்று விளக்கிய பின்னரே உண்பதை வழக்கமாக்கினர். உணவு தவிர்த்து மற்ற எல்லாம் அவர்களுக்கு வெட்டவெளி தான். அதில் அவதி வருணிக்கு மட்டுமே யாஷை தான் போட்டுப் படுத்தி எடுத்தாள்.

இப்படியே நாட்கள் செல்ல, வருணி அவள் நேரத்தை போக்கவும், பயத்தை விரட்டவும் அந்த இரு பெண்களுக்கு பயிற்றுவிக்கும் வேலையில் மும்முரமாக இருந்து சுற்றுப்புறத்தை மறக்க முயன்றாள்.


அன்று கிடத்தினான் மலை மேல் இருக்கும் அனுமனைக் காண கிளம்ப, "நானும் வரேன் வெயிட்" என உடன் கிளம்பினான் யாஷ்.

"மாமா நானு?" என கூடவே எழுந்தவளை, "பெண்களுக்கு அங்கு அனுமதி இல்லை" என நிறுத்தினார் கிடத்தினான்.

"போய் சமத்தா இரு போ" என அவளுக்கு வக்கனம் காண்பித்து அவரோடு ஏற, அவனுக்கு ஒரு தடியைக் கொடுத்து விட்டு முன்னால் ஏறினார் கிடத்தினான்.

கொஞ்சம் தொலைவு சென்ற பின்னரே அந்த அனுமன் சிலை கண்ணில் பட்டது. கல்லில் வடித்த சிலையாக இருந்ததைக் கண்டு, "உங்களுக்கு இந்த கடவுள் சிலை எப்படி கிடைச்சது?" என கேட்டான். அங்கு காட்டுவாசிகளே பொம்மையாக செய்த பெண் தெய்வத்தைத் தான் வழிப்பட்டனர். இதற்கு முன் சென்ற இடங்களிலும் கடவுளை அதுபோல பொம்மையாகவோ மரமாகவோ வெறும் கல்லாகவோ தான் பார்த்திருக்கிறான்‌.

"எங்கள் மூதாதையர் செதுக்கியது. இவர் எங்களது முதல் தோன்றிய தலைமுறை தலைவராக இருந்திருக்கலாம்"

அவர் முன் மண்டியிட்டு ஸ்லோகங்கள் சொல்லி அவர் வணங்கத் துவங்கிவிட, யாஷ் அங்கிருந்து மொத்தக் காட்டையும் சுற்றிப் பார்த்தான்.

மொத்தக் காடும் மரங்களும் பசுமை நிறைந்ததாகவும் தெரிந்தன, குரங்கு மனிதர்கள் இருப்பிடமான அந்த இரு பெரிய மலைகளே தெரியவில்லை. அந்த இடம் முழுவதும் சுற்றி வந்து எல்லா திசைகளிலும் பார்த்தான் எங்கும் தெரியவில்லை.

'அதெப்படி ரெண்டு பெரிய மலை இங்கிருந்து பார்த்தா தெரியாம போகும்? கொஞ்ச தூரம் தானே ஏறி வந்தோம்? மலையும் அருவியும் எப்படி தெரியாம போகும்? மரத்த கூட சூர்ய ஒளி படணும்னு வெட்டி விடுவாங்கன்னு க்ளாடியன் சொன்னானே அப்ப இங்க இருந்து பார்த்தா தெரியணுமே நிச்சயமா?' என குழம்பி நின்றவன், கிடத்தினானிடம் கேட்க செல்ல, அவர் இன்னும் வேண்டுதலில் இருக்க வேறு வழியின்றி அமைதியாக நின்று கொண்டான்.

சற்று நேரத்தில் எழுந்தவர், "நீங்களும் வணங்கிக் கொள்ளுங்கள். உங்களை அவரும் எதிர்பார்த்திருந்தார் அல்லவா?"

அனுமன் முன் இருநொடி நின்று வணங்கி திரும்பியவன், "இங்கிருந்து பார்த்தா உங்க இடமே தெரியலயே ஏன்? அவ்வளவு பெரிய மலை எப்படி தெரியாம போகும்? எனக்கு தான் சரியான ஆங்கில்ல பார்க்க தெரியலையா?" என்றான் இன்னுமே பார்வையை சுழலவிட்டவாறு.

"இங்கிருந்து மட்டுமில்லை வேறு எங்கிருந்து பார்த்தாலும் எங்கள் இடம் உங்கள் கண்ணுக்கு தெரியாது. அது மாய வலைக்குள் தான் இருக்கிறது. எங்களை தவிர வேறு யாராலும் உள்ளே செல்லவும் முடியாது உள்ளே சென்றுவிட்டால் வெளியே வரவும் முடியாது"

"ஓமைகாட்!" என்றவன் நெற்றியை தேய்த்துவிட்டுக் கொண்டான்.

"உங்க தலைவர் சீக்கிரம் வர எதுவுமே செய்ய முடியாதா? இந்த மெசேஜ் மாதிரி எதுவும் பாஸ் பண்ண முடியாதா?"

"அவர் வரும் போது தான் வருவார். எங்களுக்குத் தெரிந்த காலவரையறை இரண்டு திங்கள். அறுபது சூர்ய உதயங்கள். அதில் பனிரெண்டு சூர்ய உதயம் கழிந்து விட்டது. இன்னும் நாற்பத்தி எட்டு தான்" என அவர் சொல்ல,

"ஜீஸஸ்!" என்றான் யாஷ்.

அடுத்தும் இரண்டு நாட்கள் கழிந்திருக்க, அந்த மூன்று மாணவர்களுக்கு மெல்ல பேச வந்தது.

"இந்நேரம் நம்மள தேடி க்ரூ வந்துருக்கணும். ஏன் வரலன்னு தெரியல" என அவர்கள் சோகமாக சொல்ல,

"டாக்டர் பிஸ்மத் மூலாமா தானே? அவங்களும் தேடிட்ருக்காங்களோ என்னவோ?" என்றாள் வருணி.

"இல்ல யூ.எஸ் கவர்ன்மென்ட்ல இருந்து"

"அவங்களுக்கு தான் பிஸ்மத் கண்டிப்பா இந்நேரம் சொல்லியும் பாரு. ஆனா தேடி வர டைம் எடுக்கலாம்" என்றாள் வருணி மறுபடியும்.

"அதில்ல டாக்டர் யாஷ். எங்கள இங்க இவங்கள கண்டுபிடிக்க தான் அனுப்பினாங்க. நீங்க எங்கள கூட்டிட்டு வரலனாலும் எங்கள உங்க கூட அனுப்புற ப்ளான் தான். நாங்க இங்க வந்து இவங்கள தேடிட்டு தான் இருந்தோம். நாங்க இவங்கட்ட மாட்டினதும் அங்க சிக்னல் போயிருக்கும். ப்ளஸ் உங்க மூலமாவும் தகவல் போயிருக்கணும். ஆனா ஏன் இன்னும் அவங்களால இங்க வர முடியல?" என அந்த மூன்று பேரில் எட்வர்ட் என்பவன் கேட்க,

"என்னடா புதுசா பேசுறீங்க?" என வருணி அதிர, யாஷ் கூர்மையாகப் பார்த்தான்.
 
Last edited:

Mathykarthy

Well-known member
கிழத்தினான் சொல்ற மாதிரின்னா யாஷ் மட்டும் தான் அவங்க தலைவனை அழிக்க முடியும்.....

யாஷ்க்கே தெரியாம திட்டம் போட்டு அவன் கூட அனுப்பி இருக்காங்க.....😲😲😲

இந்த தலைவன் வேற அவங்க இனத்துக்கு எதிராவே என்ன வேலை பார்க்குறான்னு தெரியல 🧐🧐🧐

இவ்வளவு கலவரத்துலயும் பயத்துலயும் வருக்கு வாய் மட்டும் அடங்கவே மாட்டேங்குது 🤣🤣🤣🤣🤣🤣🤣
 

priya pandees

Moderator
கிழத்தினான் சொல்ற மாதிரின்னா யாஷ் மட்டும் தான் அவங்க தலைவனை அழிக்க முடியும்.....

யாஷ்க்கே தெரியாம திட்டம் போட்டு அவன் கூட அனுப்பி இருக்காங்க.....😲😲😲

இந்த தலைவன் வேற அவங்க இனத்துக்கு எதிராவே என்ன வேலை பார்க்குறான்னு தெரியல 🧐🧐🧐

இவ்வளவு கலவரத்துலயும் பயத்துலயும் வருக்கு வாய் மட்டும் அடங்கவே மாட்டேங்குது 🤣🤣🤣🤣🤣🤣🤣
Elame adutha ud la therinjuklam sis. Varu vay piranthathula irunthae vantatu sis mathika mudiyathu
 
Top