Kiruthika_Jayaseelan
Moderator
அத்தியாயம் 1
"மனசோ இப்போ தத்தியடிக்குது
மாமன் நடைக்கு மத்தளம் டும் டும்"
என்கிற பாடல் ஒலித்து கொண்டு இருந்தது.
"போதும்.. போதும் டி எத்தனை தடவை இதே பாட்ட போட்டு எங்க காது ஜவ்வை கிழிப்பை?" என்று ஆதி கத்த, "ஹலோ, இதெல்லாம் வெடிங் ஜிட்டர்ஸ்... அவசர குடுக்க மாதிரி கல்யாணம் பண்ண உங்களுக்கு எங்க இருந்து இதெல்லாம் தெரிய போகுது" என்று ஜானவி அவனுக்கு பதில் பேச, "ஆமா மா, நாங்க அவசர குடுக்கை தான்... மேடம் ரொம்ப ஸ்லோ...பாவம் அந்த பயம் அர்ஜுன் சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அவன் வாய கடிச்சி வச்சிருக்க நீ" என்று சிவம் சொல்லவும், "அப்படி சொல்லு டா என் செல்ல குட்டி" என்று சொல்லி ஆதி அவனின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
சிவமோ அவனை பார்த்து, "டேய் லூசு பையலே! எத்தனை தடவை சொல்லுறது எனக்கு கிஸ் கொடுக்காதே! இதை பார்த்துட்டு ஸ்ருஷ்டி வேற, உங்க மேல எனக்கு டவுட்டா இருக்குன்னு சொல்லுறா டா" என்று சொல்ல, ஆருஷோ, "டவுட்டே வேணாம், நீயும் அவனும் ஒண்ணுக்குள்ள ஒன்னுன்னு சொல்லு" என்றதும் அவனின் மேல் அருகில் இருந்த பந்தை அடித்து இருந்தான் சிவம்.
"இந்த சடங்கெல்லாம் தேவையா?" என்று கேட்டுக்கொண்டே ஆதர்ஷ் வந்து அமர, "இத அப்படியே போய் நம்ப தாய்குலத்துக்கிட்ட கேளு பார்ப்போம்" என்று ஆருஷ் சொன்னதும், ஆதர்ஷ் வாயை தான் மூடிக்கொண்டான்.
பேச முடியாது, பேசினால் அதற்கும் வாங்கி கட்டி கொள்வான்.
"இப்போல்லாம் நம்ப ஆது அடங்கிட்டான்" என்கிற சிவமாய் பார்த்து, "சாந்தினி அடக்கிட்டான்னு சொல்லு" என்று ஆதி சொல்லவும், இருவரும் ஹைபை கொடுத்து கொண்டனர்.
"சிவுவ ரொம்ப மிஸ் பண்றேன்" என்று ஆருஷ் சொல்ல, "அப்போ வா போய் பார்த்துட்டு வரலாம்" என்று ஆதி முதல் நபராக எழுந்து கொள்ள, "யாழ் வீட்டுக்கு போனா காலை உடைச்சி கைல கொடுத்துருவேன் பார்த்துக்கோ" என்று வித்யா சொல்லவும், எழுந்தவன் அப்படியே அமர்ந்து விட்டான்.
யாழின் பண்ணை வீட்டில் தான் மும்பை மக்கள் அனைவரும் இருந்தார்கள். ஆனால் அவர்களின் துணை அனைவரும் தான் யாழின் வீட்டிலே இருந்து கொண்டார்கள்.
தாலி சார்த்த வேண்டும் என்று கொற்றவை அவர்கள் மூவருக்கும் வேண்டுதல் வைத்து இருக்க, அது வரை இவர்கள் பிரிந்து இருக்கட்டும் என்று பெரியவர்கள் சொல்லி விட்டார்கள்.
முழுதாக இருபத்தி மணி நான்கு நேரம் அவர்களின் துணை இல்லாமல் இருந்ததற்கு தான் இந்த அக்கப்போர் நடக்கிறது.
"ஏன் டா இப்படி அலையிற?" என்று சிவம் கேட்க, "யாரு நான் அலையிறேனா? இந்த ஆது நேத்து என்ன பன்னானு தெரியுமா?" என்று ஆதி ஏதோ சொல்ல துவங்க, "என்ன பண்ணான்?" என்று சிவம் ஆர்வமாக கேட்க, ஆருஷும் நெருங்கி வர, "டேய் ஆதி" என்று ஆதர்ஷ் ஆரம்பிக்கும் போதே, "இவன் சாந்தினியை நைட் வர சொல்லி, வைக்கோல் குவிச்சு இருக்கே, அந்த இடத்துக்கு கூட்டிட்டு போனான் டா" என்று போட்டு கொடுக்க, "டேய் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல டா... ஒரு டிஸ்கஷன்" என்று அவன் பிடரியை வருடி கொண்டே சொல்ல, "அது என்ன காலையில பண்ண முடியாத டிஸ்கஷன், நைட் தான் பண்ணி ஆகணுமா?" என்று ஆருஷ் புருவம் உயர்த்தி கேட்க, ஆதர்ஷனோ அவர்களை பார்த்து, "இங்க பாருங்க டா நான் வைக்கோல்க்கு இல்ல வியட்நாமுக்கு கூட கூட்டிட்டு போவேன். என் பொண்டாட்டி.. எனக்கு சாமர்த்தியம் இருக்கு.. உங்களுக்கு இருந்தா நீங்களும் கூட்டிட்டு போங்க... வந்துட்டானுங்க" என்று அவன் சொல்லி முடிக்கும் போதே உள்ளே வந்தான் வெற்றி.
"வாங்க மாப்பிள்ளை" என்று வாய் நிறைய கொற்றவை அழைக்கவும், "ஹை மாமா" என்று ஜானவியும் துள்ளி குதித்து கொண்டு அவனின் அருகில் செல்ல, அவனும் புன்னகையுடன் அவர்களிடம் பேச துவங்கினான்.
"எப்படி இருக்கீங்க அத்தை?" என்று அவன் கேட்க, "இத கேட்க தான் வந்தியா டா?" என்கிற ஆதர்ஷனை பார்த்து, "இல்ல உன்னை தான் விருந்துக்கு கூப்பிட வந்தேன்" என்றான்.
ஆதர்ஷின் கண்கள் விரிந்தன.
"ம்ம்.. உன்னை தான்... உனக்கு தான் இப்போ புதுசா கல்யாணாம் நடந்து இருக்கு..இவனுங்க எல்லாருக்கும் தான் கல்யாணம் ஆகி குட்டியோட இருக்காங்களே" என்று அவன் முடிக்கும் முதல், "டேய் நாங்க குட்டியோட இருக்கும் அவன் அஞ்சு வயசு புள்ளைங்களோட இருக்கான்" என்கிற ஆதியை பார்த்து, "ஆனா இப்போ தானே கல்யாணம் பண்ணான்" என்று முடித்து இருந்தான்.
"ஆது ஒரு சரித்திரம் படைச்சிட்ட டா நீ! குழந்தை, காதல், கல்யாணம்" என்று சிவம் சொல்ல, "குழந்தை முதல் கல்யாணம் வரை" என்று ஆருஷ் சொல்லவும், வெற்றியும் சிரித்து விட்டான்.
"உனக்கு குளுகுளுனு இருக்குமே" என்று வெற்றியை பார்த்து ஆதர்ஷ் சொல்லவும், "மாமா விருந்துல என்ன எல்லாம் இருக்கும்?" என்று சாப்பாட்டை பற்றி ஜானவி கேட்க, "உன்ன அர்ஜுன் சோத்து மூட்டைன்னு சொல்றதுல தப்பே இல்ல டி" என்று ஆதி சொல்ல, "அப்பா" என்று அவள் கத்த, நால்வரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
நேற்று தான் நால்வரும் ஜானவி சாப்பிடும் போது, நாலு அண்ணாக்களும் அவளை வைத்து செய்ய, அவள் அப்பா என்று அழைத்தவுடன், ருத்ரன் அவர்கள் நால்வரையும் வெளுத்து வாங்கி விட்டார்.
மீண்டும் அவரிடம் திட்டுவாங்க அவர்கள் விரும்பவில்லை.
அவளின் தலையில் கொட்டிய கொற்றவை தான், "என்ன டி உங்க அப்பாவை வச்சி மிரட்டுறியா?" என்று கேட்க, "இங்க பாருங்க நீங்க ரொம்ப உங்க பசங்களுக்கு சப்போர்ட் பண்றீங்க" என்று சொல்லிவிட்டு, "பை மாமா" என்று வெற்றியை பார்த்து சொல்லி சென்று விட்டாள்.
"எல்லாரும் மதியம் வந்திருங்க அத்தை" என்று அவன் சொல்லவும், "எப்படி பா எல்லாமே தனியா சம்மந்தி செய்வாங்க? நாங்களும் வரோம்" என்று வைஷ்ணவி சொல்ல, "இல்ல அத்தை அம்மா கூட தான் அன்னம் அத்தை, சித்தி, தளிர், ஸ்ருஷ்டி, அழகு, மது, சாந்தினி இருக்காங்களே சமாளிச்சிக்குவாங்க" என்றவனை பார்த்து, "அதெல்லாம் பரவால்ல நாங்களும் வரோம் மாப்பிள்ளை" என்றவர்கள் ஒரு மணி நேரம் கழித்து வெற்றியின் வீட்டையும் அடைந்து விட்டார்கள்.
வீடே ஜெஜெ என்று இருந்தது.
"தாத்தா தாத்தா எனக்கு பஞ்சு மிட்டாய் வேணும். தாத்தா தாத்தா எனக்கு நுங்கு வேணும்" என்று ஒரு பக்கம் லக்ஷிதும் மறுபக்கம் லயனிக்காவும் சிதம்பரத்தின் பின்னால் சுற்றி கொண்டு இருந்தனர்.
"இப்போ நுங்கு சாப்பிடுங்க.. சாயங்காலம் பஞ்சுமிட்டாய் சாப்பிடலாம்" என்றவர் அவர்களுக்கு நுங்கு ஊட்ட, அப்போது தான் உள்ளே நுழைந்தார்கள் அனைவரும்.
"அப்பா" என்று ஆதியிடம் லயனிக்கா ஓட, தளிர் வெளியே வரவும், "ப்பா ப்பா" என்று சிவுவும் ஆதியிடம் தான் சென்றாள்.
"அது என்ன டா நீயும் உன் அப்பா மாதிரியே எல்லா பொண்ணுங்களை உன் பக்கம் இழுத்து வச்சி இருக்க?" என்று விஷ்ணு கேட்க, ,"டாலேண்ட் டாடி" என்று சொன்னவன் ஒரு பக்கம் சிவுவையும் மறுபக்கம் லயாவையும் தூக்கி கொண்டான்.
ஷ்ரேயசுடன் வந்த ஸ்ருஷ்டியிடம் இருந்து அவனை வாங்கிய ஆதர்ஷ், "நான் இவனை வச்சிக்குறேன். டேய் குட்டி பையா" என்றதும் அவனும் சிரித்தான்.
"எல்லாரும் வெங்காயம் வெட்டுங்க" என்று அழகு ஆண்களுக்கு கொடுத்து விட்டு செல்ல, அவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, வெங்கையாம் வெட்ட ஆரம்பித்தனர்.
அனைத்தையும் வெட்டி முடித்த பிறகு சிரித்து நேரம் காற்று வாங்க, பால்கனியில் நின்று இருந்தார்கள்.
ஆதர்ஷ், ஆருஷ் மற்றும் ஆதி தான் பேசி கொண்டு இருந்தார்கள்.
அங்கு வந்த தளிரோ, "மாமா உங்களுக்கு மீன் குழம்பு வேணுமா? இல்ல சிக்கன் குழம்பு வேணுமா?", என்று கேட்க, அவள் ஆதர்ஷனை தானே மாமா என்று கேட்பாள்.
"மீன் குழம்பு தான் மா", என்றவன் சொல்ல, அவளும், "சரிங்க மாமா", என்று சொல்லி சென்று விட்டாள்.
"டேய்! அது என்ன உன்ன மட்டும் வந்து கேட்டுட்டு போறா? நாங்க எல்லாம் கண்ணுக்கு தெரியலையா?", என்று ஆதி கேட்கவும், அங்கே வந்தாள் யாழ்.
"மாமா உங்களுக்கு சுறா புட்டு வேணுமா? இல்ல முட்டை வறுவல் வேணுமா?", என்று அவள் கேட்க, "நீ எதுக்கு மா மேல வந்த? இப்போ தானே குழந்தை பிறந்து இரண்டு மாசம் ஆகுது.. எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே.. நீ போய் ரெஸ்ட் எடு", என்று சொல்லவும், யாழ் செல்ல போக, "ஹே நில்லு டி.. ஏன் டி... அவன் பக்கத்துல நாங்க இரண்டு பேரு இவளோ பெரிய சைஸ்ல நின்னுகிட்டு இருக்கோம்.. நானும் பார்க்குறேன்.. வரவ எல்லாம் அவனுக்கு என்ன வேணும்னு கேக்குறீங்க.. என்னையும் இவனையும் பார்த்தா எப்படி டி தெரியுது?", என்று ஆதி அவளிடம் கேட்க, "ம்கூம்.. உங்க இரண்டு பேருக்கும் சோறு போடுறதே அதிகம்", என்று சொல்லிவிட்டு கழுத்தை நொடித்து கொண்டு சென்று விட்டாள்.
ஆருஷ் ஆதியை முறைக்க, " எனக்கு நியாயம் கேட்க சொல்லி நான் கேட்டேனா டா? உன் பொண்டாட்டி உன்ன அசிங்க படுத்துனது இல்லாம என்னையும் சேர்த்து செஞ்சிட்டு போறா", என்றவனை பார்த்து ஆதர்ஷ் தான் சிரித்து கொண்டு இருந்தான்.
"இதெல்லாம் என்ன ஓர வஞ்சனை?" என்று ஆதி கத்தி கொண்டு இருக்கும் போதே, "அவன் தானே புது மாப்பிள்ளை" என்று வெற்றியும் வர, "அவன் புது மாப்பிள்ளையா? அவனுக்கு அஞ்சு வயசுல பிள்ளை இருக்கு டா... ஏன் டா எங்களை சோதிக்குறிங்க?" என்று ஆதி கேட்டுக்கொண்டே வரவும், அனைவருக்கும் உணவு பரிமாற்ற பட்டது.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், ஆதர்ஷுக்கு மட்டும் அல்ல, ஆதி, ஆருஷ் மற்றும் சிவமிற்கும் பிடித்த அனைத்து உணவுகளையும் அவர்கள் செய்து தான் இருந்தார்கள்.
ஆதிக்கு மிகவும் பிடித்த மட்டன் குழம்பு வேறு இருக்க, அவனோ அதை ருசித்து கொண்டே, "அட அட அட.. இதை யாரு செஞ்சாங்களோ அவங்களுக்கு தங்கத்துல வளையல் செஞ்சி போடணும்" என்று அவன் சொல்ல, பெண்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.
"ஏன் சிரிக்கிறீங்க?" என்றவனை பார்த்து, அவர்கள் யார் அதை செய்தது என்று சொல்ல, அவனின் கண்கள் விரிந்தன.