எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அலர் தழலில் முகிழ்த்த இதமவ(ன்)ள் - Teasers Thread

Status
Not open for further replies.
(கதை எப்படி என்று படிக்கும் வாசகர்கள் தான் கூற வேண்டும். கதையினூடே என்னுடன் வாருங்கள். ஒரு அழகான பயணமான முரணான காதல் - யுத்த களம் பார்ப்போம். விரைவில் கதையைத் தொடங்கும் எதிர்ப்பார்ப்புடன் இன்று முதல் முன்னோட்டம்.)


கதை தலைப்பு: அலர் தழலில் முகிழ்த்த இதமவ(ன்)ள்


முன்னோட்டம்:01


அதி வேக சாலையில் இரு சொகுசு மகிழுந்து சீறும் சிறுத்தைகளாய் பறந்து கொண்டிருந்தன.. மகிழுந்து உள்ளே எஸ்பிபியின் இன்னிசை சாரல்கள் அவருக்கே உரிய கம்பீரத்தில் பாடி கொண்டிருக்க..
மகிழுந்தின் வேகமோ இன்னும் காட்டாற்று போல் சீறியது..

"வாவ்.. இட்ஸ் எ பிளசண்ட் கால் ஃபர்ம் யூ பேப்ஸ்.. ஹவ் ஆர் யூ டார்லிங்.."

"ஐயம் குட் பேப்ஸ்.. வாட்ஸ் யப் தேர்.."

"நத்திங் மச்.. ஸ்விட் ஹார்ட். எ ஹார்ட் கோர் ரேவ்.."

"என்ஜாய்.."

"ஹா..ஹா.. ஓகே பேபி.."

"யூவர் டீல் இஸ் டன்.."

"தி அதர் ஃபார்மலிட்டீஸ் வில் பீ கம்பிளடட் பை டூமாரோ.."

"ஓகே பேப்.. தென் அஸ் பர் ஆர் டீல் ஐ வில் மேக் த அரேன்ஜ்மேண்ட்ஸ்.."

"ஸூயர்.."

என சிரித்து கொண்டே இன்னும் சில மணித்துளிகள் பேசி கொண்டே சென்றவர்கள் சாலையில் வந்த யமனின் ஊர்த்தியை கவனிக்காது மகிழுந்தின் கட்டுபாட்டை இழக்க.. 'டம்' என பெரிய சத்ததுடன் அணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டது.

இருவரின் அலைபேசி அணைப்புகளா அல்ல நாடியின் இயக்கமா..

***************

"மாமா, நான் என்ன சொல்றேன் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.."

"போடி.. நீ சொல்றதை நான் கேட்கனுமா.."

"யோவ் நீ இப்ப என் பேச்சை கேட்க போறீயா இல்லைய்யா.."

"சும்மா..சும்மா ஏதாவது சம்பவம் பண்ண போறன்னு கிளம்புற.. இந்த தொழிலை விட்டு வேற பார்க்க போறேன்னு.. நீ சொன்னீயா இல்லைய்யா.."

"ஆமா சொன்னேன்.. இப்ப அதுக்கு என்ன.."

"அப்ப என்ன இது எல்லாம்.."

"அது நீ என் விருப்பபடி என்னை கல்யாணம் பண்ணிருந்தா அதை செய்திருப்பேன்.. நீ தான் என் விருப்பபடி நடக்கலையே.. பின்ன நான் எதுக்கு அதை செய்றேன்.."

"மாமா.. நானா அந்த கல்யாணத்திற்கு சம்மந்தம் சொல்லலை என் விருப்பம் இல்லாம தான் அங்கே உட்கார்ந்து இருந்தேன்.."

"நீ சொல்றதை நம்ப சொல்றீயா என்னைய.. நான் உன் கூட இருக்கும் போதே என்னை வேணாம் சொன்னவ தானே நீ.."

"ஆமாம் சொன்னேன் தான்.. அதுக்கு தான் நீங்க என்னைய மிரட்டி மிரட்டியே பணிய வச்சீங்களே.."

"நீங்களே வலுக்கட்டாயமா தான் என்னை இந்த உறவுக்குள்ள இழுத்தீங்க.. அதையும் மீறி நான் ஏதாவது சொன்னா என் குடும்பத்தை வச்சி மிரட்டுனீங்க.."

"இப்போ நான் வேணும்ன்னே உங்களை ஒதுக்கி தள்ளிட்டு போன மாதிரி பேசுறீங்க.. எங்க அப்பன் எனக்கே தெரியாம டபுள் கேம் ஆடிருக்கான்.. அதுக்கு நான் என்ன செய்ய.."

"ஆமாம் டி.. நான் தான் உன் பின்னாடி வந்தேன்.. எல்லாம் நான் தான் செய்தேன்.. வேணாம்.. வேணாம்.. சொல்லி என் கூட கொஞ்சி கூலாவிட்டு அடுத்தவன் கையால தாலி வாங்க ரெடியா உட்கார்ந்து இருக்க அவன் கூட.. ஏன் அப்ப கூட இந்த மாமா மேலே நம்பிக்கை இல்லை தானேடி.. இவன் என்னை வந்து காப்பாத்துவான்.. இவன் என்னை கூட்டிட்டு போவான்னு ஒரு நிமிஷம் நீ நினைச்சீய்யா.."

"நான் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா நீ அவன் பொண்டாட்டி ஆகிருப்ப.." என அவன் உறும..

அவள் அமைதியாக தலை குனிந்தாள். அவளுக்கு நம்பிக்கை இருந்தது தான். ஆனால் நூறு சதவீதம் இருந்ததா என்று கேட்டால் அது சந்தேகமே.. ஏனென்றால் அவள் பார்த்த ஆண்கள் வர்க்கம் பணத்துக்கு ஒன்று படுக்கைக்கு ஒன்று வைத்திருப்பவர்களின் மத்தியில் இவன் மட்டும் எப்படி நல்லவனாக இருக்க கூடும்.. காதலித்த காலத்தில் காதலனுக்கே உரிய தைரியத்தில் அவன் காதலாய் சற்றே எல்லைகள் மீறியது.. அவளை தப்பும் தவறுமாய் சிந்திக்க வைக்க.. கூடவே தன் தகப்பன் தன் பலவீனத்தில் கைவைக்க என யாவும் சேர்ந்து அவளை நிதானமாக யோசிக்க விடவில்லையே.. அப்போது கூட இந்த இக்கட்டில் இருந்து தன் மன்னவன் வந்து காப்பாத்திட மாட்டானா என ஒரு பக்கம் அவள் மனம் ஏங்கியதே அவ்வாறு இல்லையெனில் தன் உயிரை மாய்த்து கொள்ளலாம் மற்றவன் தொடுகை தன் மேல் படும் முன் என நினைற்று கூர்மையான கத்தியையும் அரளி விதையின் மருந்தையும் தன் புடவையின் உள்ளே மறைத்து வைத்து இருந்தாளே.. இதைப் பற்றி அவள் மன்னவன் அறிவானா.."

"என்னடி அமைதியாகிட்ட.. நான் சொன்னது உண்மை தானே.."

"ஆமா போ.. நீ சொன்னது உண்மை தான்.. ஆனா அதுக்கு நீங்க இப்போ செய்றதுக்கு என்ன சம்மந்தம்.. பேச்சு மாறாத நீங்க, இப்போ என்ன பண்றீங்களாம்.." என அவள் தன் உள்ள உணர்வுகளை எடுத்துரைக்காது அவனிடம் விதண்டாவாதம் பண்ண..

அவனோ, அவளை தீயாய் முறைத்து.. பின், "போடி" என்று விட்டு கதவு அருகே செல்ல..

"யோவ் மாமா, இங்க பாரும்.. நீர் இப்போ சம்பவம் பண்ண போறேன்.. சமைக்க போறேன்னு போணீரு.. நான் நடத்துற சம்பவத்துக்கு பதில் சொல்ல முடியாம தவிப்பீர்.." என்க,

"முடிஞ்சத பாருடி.." என்று விட்டு கதவை திறக்க கதவின் கொக்கியில் கைவைக்க,

அவன் சகதர்மினியோ, "மாமா" என்று அலறினாள்..

அவள் அலறலில், வித்தியாசத்தை உணர்ந்தவன் சட்டென்று திரும்ப அவன் காதல் மனையாட்டி தன் கையை அறுத்துக் கொண்டு இரத்தம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்தாள்..

"அடியேய் இழவெடுத்தவளே... என்ன காரியம்டி பண்ணி வச்சுருக்கே.." என அவள் அருகே வர..

அவளோ அவ்வலியிலும் "நீர் தான் சம்பவம் பண்ண போறேன் சொன்னீர்ல போய் பண்ணும்.. நான் இருந்தால் என்ன செத்தால் என்ன.." என அவன் அருகே வர இவள் பின்னே நகர்ந்து சாளரத்தின் மீது மோதி நின்றாள்..

அவளின் செயலில் பதறி போனான் அந்த ஆண் மகன். அவளை சாந்தமாக்க,

"சரி நான் பண்ணல.."

"பொய்.."

"நான் உண்மையை தான் சொல்றேன்.. நான் பண்ணலை.. வா நாம ஹாஸ்பிட்டல் போலாம்.."

"நான் வர மாட்டேன்.. நீ தான் என்னைய வேணாம் சொல்லிட்டல.. என்னை மதிக்காம போறல போயிடு கிட்ட வராத.. வந்த கீழே குதிச்சுடுவேன்.." என அவள் கூறிக் கொண்டே கண்கள் சொருக அவனை பார்த்து கொண்டே இருந்தாள்.

இவளின் பைத்தியக்காரத்தனத்தை கண்டு அவன் ஆவி தான் பறந்தது.

************

ஏகாந்த தனிமையில் அந்த இரவின் குளுமையில் தன் முன் இருந்த தோட்டத்தைப் பார்த்து கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்தான் அவன்.

"அம்மு இங்கே என்ன பண்ற.. வாடை காத்து வீசுது பாரு.. உடம்பு ஒத்துக்காது உள்ள போகலாம்.."

"வேணாம்.. நான் உள்ள வரலை.. இந்த குளுமை எனக்கு பிடிச்சிருக்கு கொஞ்ச நேரம் இங்கு இருக்கலாமே.." அவள் ஆசையாக வினவ,

அவளின் ஆசைக்கு இணங்கியவாரே அவளுடன் ஒன்றினான் அவன்.

அவனின் ஏகபோக உரிமையில் அவளை செல்ல செல்ல சீண்டல்கள் செய்து கொண்டே, அவளிடம் விளையாடி கொண்டிருந்தான் அவன்.

அதன் உணர்வு தந்த மயக்கத்தில் அவனுடன் இழைந்தவளை இதற்கு மேல் பொறுக்காது, என்று நினைத்து அவளை தூக்கிக் கொண்டு மஞ்சம் நோக்கி சென்றவன் அவளை பூப்போல் கிடத்தி அவள் மேல் பரவி படர்ந்தான்.

அவனை அழகாய் உள்வாங்கியவள் அவன் தரும் உணர்வுகளை சுகமாய் தாங்கி கொண்டு சிறு சிறு முனங்கல் ஒலிகள் மூலம் அவனை வரவேற்றவளின் அதிக ஒத்துழைப்பில் அவன் முன்னேற..

அவன் முன்னேற்றம் அவளை ஆழ்மயக்கதிற்கு கொண்டு சென்று கொண்டிருக்க.. அகத்தின் வெளிபாடு வார்த்தையாய் வெளி வந்தது..

ஆனால் அவ்வார்த்தையை கேட்டவனோ இனிய பொழுதில் யாரோ தன் மீது தண்ணீர் ஊற்றி எழுப்பியது போல் உணர்ந்து வேகவேகமாய் அவளை விட்டு எழுந்து அமர்ந்தான்.

அவன் தன்னை விட்டு பிரிந்தது கூட தெரியாது உணர்ச்சிகளின் வசப்பட்டு இருந்தாள்.. அவள் நிலையை கண்டு சினம் கொண்டவன்..

"அம்மு.." என கர்ஜித்தான்.

அவன் கர்ஜனையில் மோனநிலையில் இருந்தவள் பதறி அடித்து எழுந்து அவனை பார்க்க,

செக்க சிவந்து சினம் கொண்ட வேங்கையாய் உருமாறி இருக்கும் அவனைக் கண்டு எச்சில் விழுங்கினாள் பெண்.

"என்ன ஆச்சு.."

"என்ன ஆகனும்.. உன் மேலே சாய்ந்து இருக்குறது யாருன்னு தெரியாத அளவு நீ யார் மேலையோ பித்தா இருக்க போல.."

அவன் கேட்பது புரியாது பார்த்தாள் அவள்.

அதை கண்டவன் சினம் இன்னும் அதிகமாக, "இப்போ நீ என்ன சொன்ன நியாபகம் இருக்கா.." என கோவம் கொள்ள..

"இப்போது தான் என்ன சொன்னோம் என்று தெரியாது அதன் நினைவும் இல்லாது மலங்க மலங்க விழித்தாள் அவள்.."

"என்ன சொன்னேன்னு தெரியலைங்க.."

"உன் மனசுல நான் தான் இருக்கேன்னா.." என கேட்டவனை,

அதிர்ச்சியுடன் நோக்கினாள் அவள்.

************


வித்தியசமான காதல் - யுத்த களம்.. யாரு யாருக்கு என புரியாது முரணான களம்..

புரிந்து கொள்ள களத்திற்கு செல்வோம்
வாருங்கள்.


உங்கள் கருத்துக்களை இத்திரியில் கூறுங்கள்.

 
Last edited:
(என் அறிமுகத்தை முன்னிட்டு அடுத்த முன்னோட்டம்.)

முன்னோட்டம்:02


"அத்தான், அவளுக்கு செல்லம் கூடி போச்சு.. அதான் பணிஷ்மெண்ட் கொடுத்து இருக்கேன்."

"நீங்க அவளை ரீலிஸ் பண்ணாதீங்க.." என மகளை முறைத்து கொண்டே கூறினாள் அவள்.

"ஏன் அம்மு, பாவம் சின்ன பொண்ணு தானே.. அதுக்கு இப்படியா.. " என அவளின் ஆருயிர் வினவ,

"ஏது சின்ன பொண்ணா.. அவ என்ன செஞ்சா தெரியுமா.."

"அப்படி என்ன செஞ்சா அம்மு.."

"ஸ்கூல் பசங்க கூட வம்பு வளர்த்துட்டு வந்து இருக்கா.. ஸ்கூல்ல ஒரு பையன் அவளோட ப்ரெண்டை அடிச்சிட்டான்னு இவ அவனை போட்டு மிதிச்சு இருக்கா.." என அவள் கூற,

அவள் கூறியதைக் கேட்டு சிரித்தவன்.. "அத்தை எப்படியோ அப்படி தானே அம்மு மருமகளும் இருப்பா.." என கேலி பேச,

"என்னது நான் எல்லாரையும் போட்டு அடிக்கிறதா சொல்றீங்களா.."

"பின்ன இல்லைய்யா.. நீ பண்ணாத சேட்டை ஏதாவது இருக்கா.."

"அப்படி சொல்லுங்க அண்ணா.. இவ கெட்டது பத்தாது என் மகளையும் சேர்த்து கெடுக்குறா.." என இன்னொருவள் கூற,

"ஹான் அப்படி நான் தான் கெடுக்குறேன்னா.. எதுக்கு உங்க மகளை என்கிட்ட விடுறீங்க.. விடாதீங்க போங்க.." என முறைத்து கொண்டே கூற,

"நான் எங்கேடி விடுறேன்.. அவ தான் உன் கூடவே இருப்பேன்னு சொல்றா.. நான் யாரை மாதிரி ஆகனும் கேட்டா.. நான் அத்தை மாதிரி ஆகனும்ன்னு சொல்றா உன் மருமக.. எல்லோரும் டாக்டர், என்ஜினியர், டிச்சர், போலிஸ் சொல்வாங்க இவ ஒருத்தி தான் உன்னைய மாதிரி ஆகனும்ன்னு சொல்றா..." அவள் குரலில் மேன்போக்காக சலிப்பு இருந்தாலும் உள்ளர்த்தமோ மகிழ்ச்சியே வெளிப்படுத்தியது.

"அத்த.. சாரி அத்த.. இனி அப்படி பண்ண மாட்டேன்.. ப்ளீஸ்.. " என கெஞ்ச..

"நீ வாடாமா.. உங்க அத்தை கிடக்குறா.." என் அவள் மாமன் தூக்கி கொண்டான் அவனவளின் பிரிய குட்டியை.

"லவ் யூ மாமா.."

"லவ் யூ டூ பேபி.."

இதை பார்த்து கொண்டிருந்தவளுக்கோ சந்தோஷம் ஒரு புறம் என்றால் ஊடல் ஒரு புறம். அவளின் அத்தானுக்கு அவள் லவ் யூ சொல்லிவிட்டாளாம்..

"அத்தான்.." என குரல் மறுப்பின் பிரதியாக விரைவாய் வர..

அவள் அத்தானோ அதை ஆழ்ந்து ரசித்து மீண்டும் மீண்டும் அவளை வெறுபேற்றினான்.

இம்முறை உண்மையிலையே அவள் ஊடல் கொண்டு உள்ளே சென்று விட, அவளின் ஊடலை புன்முகமாகவே ரசித்தான் அவளவன்.

**************

மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள் அவள். தலையோ வின்-வின்னென்று வலித்து கொண்டிருக்க மனமோ ஒரு நிலையில் இல்லாது பல யோசனைகளுடன் இருந்தது.

அந்த சிந்தனையில் உழன்று கொண்டு இருந்தவள் கண்கள் முன்னே பல காட்சிகள் வந்து போனது. அவளின் வீட்டின் நிலை இப்போது யாதோ என தோன்றிய நேரம்.

அவள் அறையினுள் நுழைந்தார் அவர். " என்ன குட்டி மா.. உனக்கு அடி பட்டுட்டுச்சாமே.. இப்போ எப்படி இருக்க.. எப்படி இருக்கான் உன் புருஷன்.." என உள்ளே வந்தவர் ஏகாத்தாளமாய் வினவ,

"நீங்க ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க.. நாங்க என்ன பாவம் பண்ணோம். உங்க வழியில் குறுக்கிடலைல அவர். பின்னே எதுக்கு எங்களை வாழ விடாம பண்றீங்க.." என அவள் வலியோடு கேட்க,

"என்ன தப்பு பண்ணீங்களா.. நீ அவனை கல்யாணம் பண்ணிக்கல.. அது போதாது.. என் ஜாதி என்ன; குலம் என்ன; கோத்திரம் என்ன; அது எல்லாம் உதறி தள்ளிட்டு நீ அவன் கூட சந்தோஷமா வாழ்வ..நான் அதை பார்த்துட்டு சும்மா இருக்கனுமா.."

"அதான் அவனை போட்டு தள்ள ஆள் அனுப்பினேன்.. ஆனா என்ன அவனுக்கு பதிலா இப்போ நீ ஹாஸ்பிட்டல்ல இருக்க.. இதுவும் நல்லதுக்கு தான்.. ஏன்னா இப்போ உன்னை இப்படி பார்த்ததுலே இருந்து அவன் துடிக்கிறானே.. அது போதாது எனக்கு.." என அவர் வெறி கொண்டு பேச..

அவர் பேச்சை அமைதியாக கேட்டவள், பின் நக்கலாய் நகைத்தாள். அவளின் நக்கல் சிரிப்பில் புருவத்தை சுருக்கியவர், "என்ன இவ்வளோ பேசியும் நீ நக்கலா சிரிக்குற..என்ன பைத்தியம் பிடிச்சு போச்சா, அடிப்பட்டதுல.." என அவர் சிறு பதட்டத்துடன் வினவ,

அவள் அப்போதும் அமைதியாய் புன்னகை மாறாது கண்ணை மட்டும் காட்டினாள் பின்னோக்கி.

அவள் கண்களை தொடர்ந்து பின்னால் திரும்பி பார்க்க, அங்கு ருத்ர மூர்த்தியாய் நின்றிருந்தான் அவளின் ஆருயிர் கணவன்.

"என்ன மாமனாரே, எவ்வளோ பட்டும் திருந்த மாட்ட போல இருக்கே.." என கேட்டுக் கொண்டே அவன் முன்னால் அடி எடுத்து வைக்க அவர் பயந்து கொண்டு பின்னால் நகர்ந்தார். அவர் அப்படி நகருகையில் அங்கு சுவரொரம் போட்டு இருக்கும் மேசையில் இடித்து நிற்க,

அவனோ அதை கவனித்து விட்டு அந்த மேசை மேல் வைத்திருக்கும் மருத்துவ பொருட்களில் இருந்து விருட்டென்ன கத்தியை எடுத்தவன் அதே வேகத்தில் அவர் கழுத்தில் வைத்தான்.

அதில் மிகவும் பயந்தவர், "வேண்டாம்.. வேண்டாம்.. மருமகனே நான் எதுவும் இனி பண்ண மாட்டேன்.. என்னை விட்டுட்டேன்.. ப்ளீஸ்.. நான் உன் வழிக்கே வராம போயிடுறேன்.. இனி உனக்கு எந்த தொல்லையும் கொடுக்காம போயிடுறேன்.." என வாய் தந்தியடிக்க அச்சத்தில் குரல் உளற கூறிட,

அவனோ வெடித்து சிரித்தான். "என்ன மருமகனா.. இப்போ வரைக்கும் நான் உனக்கு ரௌடி தானே.. இப்ப என்ன திடீர் பாசம் என் மேல.." என்க,

அவரோ பீதியாகி அவனைப் பார்த்தார். என்ன சொல்வதென்று தெரியாது..

"அது..அது.."

"ஓஓஓ.. உயிர் பயம்.. சரி பொழைச்சு போ.. வயசான காலத்துல உன்னை கொண்ணு எனக்கு என்ன ஆக போகுது.." என போனால் போகுது என விடுவது போல் அவன் பேசிட..

அவன் பேச்சில் சிறிதே ஆசுவாசமடைந்து முழு முச்சை வெளியிடுவதற்கு முன், அவன் அவர் உள்ளங்கை மணிகட்டில் கத்தியால் கோடு போட்டு இருந்தான்.

அதில் இரத்தம் வெளியேறி வலியில் அலறி கொண்டே அவனை பார்க்க,

"என்ன பார்க்குற மாமனாரே.. பொழைச்சு போ.. சொன்னவன் என்ன டா கைல கோடு போட்டு இருக்கானே பாக்குறீயா.."

அவர் வலியில், "ம்ம்ம்" என்க,

"நான் உன்னை கொல்ல மாட்டேன் தான் சொன்னேன்.. ஆனா கோடு போட மாட்டேன் சொல்லையே.." என்றானே பார்க்கலாம்.

அவரோ அதிர்ந்து விழித்தார்.

அவர் விழிப்பை அசட்டை செய்தவன், "நீ என்னைய தொட்டு இருந்தா.. சரி போயிட்டு போகுது கழுதை நம்ம வேற மாதிரி டீல் (Deal) பண்ணுவோம்ன்னு பொறுமை காத்திருப்பேன். நீ தொட்டது என் பொம்முவை அப்ப நான் எப்படி பொறுமை காப்பேன்.. இப்ப கூட ஒரு சாம்பிள் தான் காட்டி இருக்கேன். இனி தான் மெயின் பிக்சர் (Main Picture) காட்டுவேன். அதுக்கு தயாரா இரு.."

"இப்போ போ.. என் பொம்மு ரெஸ்ட் எடுக்கனும்.." என அவரை பிடித்து லேசாய் கதவு பக்கம் தள்ளினான்.

"டேய்.." என அவர் கோவமாய் ஏதோ கூற வர,

"ஷ்ஷ்.." என வாயின் மேல் விரல் வைற்று அவரை பேச விடாது தடுத்தவன் கண்களை கதவை நோக்கி காட்டினான்.

இதற்கு மேலும் இங்கு நின்றால் எங்கு இவன் தன்னை கொன்று விடுவானோ எண்ணி.. இருவரையும் முறைத்து விட்டு அவ்விடத்தை விட்டு சென்றார்.

**************

"ஆஆஆஆ…" என வலியில் துடித்தவளை மிக மிக அமைதியாய் பார்த்தான் அவன்.

அவனின் கைத்தடம் பதிந்து தன் கண்ணத்தை பற்றி தன்னை வலியுடன் பார்த்தவளை துச்சமாக பார்த்தான் அவன்.

தனக்கு மட்டுமே சொந்தம் என்றெண்ணியவன் எண்ணத்தில் மன்னை வாரி போட்டவள் முன் வேறு யாருக்கோ காதல் கவிகளை எழுதிய பல தாள்களை அவள் முன்னால் கொட்டி 'இது உண்மையா' என்ற கேள்வியுடன் தன் முன் இருப்பவளை துளைக்கும் பார்வை பார்க்க..

அவனின் பார்வையில் துடித் துடித்தவள் பதிலளிக்கும் முன், "எனக்கு உண்மை மட்டும் தான் வேணும்." என்றிட,

அவன் வாக்கியத்தில் வலியுடன் அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, "நான் சொல்றதை நீங்க நம்புங்களேன் ப்ளீஸ்.. எனக்கும் இந்த கவிதைகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. நான் உங்களை ஏமாத்தலை.." என்று திக்கிட,

அவளையே பார்த்திருந்தவன்,"அப்போ இந்த நிழல் உருவத்துக்கும் உனக்கும் சம்மந்தமில்லை.. அதுல இருக்குற ஆளை உனக்கு தெரியவே தெரியாது அதானே," என்க,

"ம்ம்.." என்றாள் அவள்.

"அப்ப எப்படி அந்த நிழல் படமும், அது கூட நீ எழுதிய இந்த கவிதைகள் டைரிகளும் பேப்பர்ஸூம்.. உன் பெட்டியில்.. " என்றிட,

அவன் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மலங்க மலங்க விழித்தாள் அப்பாவை.

யாவும் அவளுக்கு எதிராய் இருக்கவே, அவளை நம்ப மறுத்தான் அந்த அப்போதைய அன்பன் இப்போதைய அரக்கன்.


***********


உங்கள் கருத்துக்களை இத்திரியில் கூறுங்கள்.

Thread 'அலர் தழலில் முகிழ்த்த இதமவ(ன்)ள் - கருத்து திரி' https://www.narumugainovels.com/ind...ழலில்-முகிழ்த்த-இதமவ-ன்-ள்-கருத்து-திரி.2875/
 
Status
Not open for further replies.
Top