எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம். 53

Status
Not open for further replies.

uma Karthik

Moderator
♥️ஏக்கம் ♥️

பிரதிக்ஷாவின் கரங்கள் மெல்ல நடுங்கியது. மரண பயத்தின் தாக்கம் அது.. இறுதி நிமிடங்களை அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாது. ஸ்டேரிங்கை பயத்தால் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் பிரதி. பயத்தில் விரல்கள் எல்லாம் நடுங்கியது. ஏதேதோ யோசனை வந்து அழுத்தம் தர. வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ முடியாமல்.. போகப் போவது வருத்தமே..!!
இருந்தும் விரக்தியில் எடுத்த முடிவு.. இது. தைரியமாக சாக முடிவு எடுத்தவளுக்கு.. கண்களைத் திறந்து மோதவரும் வாகனத்தை பார்க்க கூட துணிவு இல்லை.. கண்களை இமையோடு சேர்த்து ஒட்டிக்கொண்டால். வயிற்றுக்குள் ஏதோ பிசைவது போல வலி. லாரி ஹாரனின் தொடர் சத்தம்.. செவிக்குள் புகுந்து காது சவ்வை கிழிக்கும் உணர்வு. இடி முழக்கம் அளவுக்கு இரைச்சல் பெண்ணின் உடலெங்கும் அதிர்வு தந்தது.

கட்டுப்பாட்டை இழந்த வாகனத்திற்கும் தற்கொலைக்கு முயலும் வாகனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து விட்டார்
லாரி ஓட்டுனர்.. எதிரே கண்களை மூடிக்கொண்டு வரும் பெண்ணை பார்த்து. வேறு ஏதாவது வாகனம் வருகிறதா.. என்று முன் கண்ணாடி வழியே பார்த்து உறுதி செய்தவர். காரை மோதி விடாமல் லாவகமாக வளைத்து நிறுத்தினார்.. அதோடு மட்டும் நின்று விடாமல்.. வேகமாக கூச்சலிட்டார்.."யம்மா.. குழந்தை குறுக்க நிக்குது..வண்டிய ஏத்திடாத.. பச்சை புள்ள..நிக்குது. " கத்தினார். சூழ்நிலைக்கு ஏற்றவாறு சம்யோசிதமாக பொய் சொன்னார் அந்த பொய் வேலை செய்தது..!! குழந்தை என்று காதில் விழுந்ததுமே.. விழிகளை விரித்து..தேடி..!!வேகத்தை குறைத்தவள்.. மோதி விடக் கூடாது என்று ஸ்டேரிங்கை வளைத்து ஒடித்தால்.. அவளது கார் கட்டுப்பாட்டை இழந்து நேராக சென்று அருகே உள்ள மரத்தின் மீது மோதி நிற்க. உயர்ரக கார் என்பதால் ஏர் பேக்கின் புண்ணியத்தில் தலை தப்பியது..!! இருந்தும் கண்ணாடி உடைந்து முகம் எங்கும் சிறு சிறு காயம். வேகமாக மோதியதால் ஏற்பட்ட அதிர்ச்சி.. படபடப்பு.. விளைவு மயங்கி கிடந்தாள். பிரதிக்ஷா.

இதை பார்த்து. பதைத்து லாரியிலிருந்து இறங்கி சடுதியில் ஓடி வந்து முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்து.. நலமடையும் வரை காத்திருந்து அவளது உடைமைகளையும் செவிலியரிடம் ஒப்படைத்து சென்றார் அந்த உடன்பிறவா சகோதரன். ஆண் தெய்வமாக.!!

"உயிரானவர்கள் வீண் பழி சுமத்தும் போது இறந்து அல்ல.. இருந்து தான் நிரூபிக்க வேண்டும். "

சிகிச்சைகள் எல்லாம் முடிந்த பிறகு.. மருத்துவர் அறைக்கு அழைத்துச் சென்றார்
செவிலியர். அவளது டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் எல்லாம் ஒருமுறை மேலோட்டமாக ஆராய்ந்து.
" பிரதிக்ஷா.. உட்காருங்க.." எதிரே முன்னிருக்கையில் அமர்ந்தவளை ஊடுருவும் பார்வையால்.. அளவிட்டார்.. நடுத்தர வயதுடைய பெண் மருத்துவர். " சூசைட் அட்டெம்ப்ட் னு சைக்காலஜி டாக்டர் ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. சாக வேண்டிய வயசா இது.? இந்த ஜெனரேஷன்ல வளர பிள்ளைகளுக்கு கஷ்டம் தெரியல..வீட்டுல சின்னதா திட்டினா கூட தற்கொலை பண்ணிக்கிறது. ஒரு உயிரோடு மதிப்பு தெரியுமா? உயிர காப்பாத்த தினமும் போராடுற எங்களுக்கு தான் தெரியும். இனிமே இந்த மாதிரி எதுவும் பண்ண கூடாது. ரொம்ப டிப்ரஷன்ல இருந்தீங்கன்னா யாராவது பிரண்ட்ஸ் இருந்தா பேசுங்க.. மனசுல இருக்கத ஷேர் பண்ணிக்கோங்க, அப்படி இல்லையா நல்ல சைகாட்ரிஸ்ட் டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணுங்க.
ஏதோ.. விரக்தி அவசரத்துல முட்டாள் தனமா இன்னொரு உயிரையும் சேர்த்து கொல்றது பாவம் இல்லையா??

அதிர்ச்சியில் விழிகள் விரிய மகப்பேறு மருத்துவரை வெறித்து பார்த்தால் பிரதி.'இன்னொரு உயிரா??' தாரமாகாமல் தாயானவள் கண்கள் கலங்கியது. மடியில் ஏறிய கனமானது.. நெஞ்சோடு சேர்த்து மூச்சையும் அடைத்தது.

கழுத்தில் தாலி இல்லாமல் இருப்பதை கவனித்தவர். அவள் நிலையை எண்ணி வருந்தி " நீ கர்ப்பமா இருக்குது உனக்கு தெரியாதா??"ஆச்சரியமாக கேட்டார்.

கண்ணீர் ஒழுகிட இல்லை என்று தலை மெல்ல ஆட்டினாள்.
" என்னம்மா படிக்காதவங்க கூட இப்ப எல்லாம் தெளிவா இருக்காங்க.? படிச்ச பொண்ணு மாதிரி தான் தெரியுது.. நிறைய சேஃப்டி ஐட்டம்ஸ் இருக்கே.. இதெல்லாம் வராமல் தடுக்க, குழந்தை வயித்துல இருக்கிறதே.. தெரியாதுன்னு கேர்லஸ் ஆ.. சொல்ற.?? டோன்ட் யூ க்நவ்.. தட் இஃப் யூ ஹேவ் செக்* வித் யூ பாய் பிரெண்ட்.தி பேபி வில் போர்ம். ஏற்கனவே ரெண்டு மாசம் ஆயிடுச்சு அந்த பையனை வர சொல்லு. சில டெஸ்ட் எடுக்கணும். எவ்வளவு முடியுமோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிடுமா.. அதுலயும் அலட்சியமா இருந்துடாத..!! வயிறு காட்டிக் கொடுத்துடும்."

பேய் அறைந்தது போல முகம் பயத்தில் வெளிரியது. காதலனின் சிந்தனையும் மூழ்கினால்..பாவப்பட்டவள்.

'என்னையே சந்தேகத்தால் தூக்கி எறிந்தவன்.. குழந்தையை எப்படி??' தன் தலைவிதி மீது வெறுப்பு வந்தது. சுமக்கும் பிள்ளையை நினைத்து கண்ணீரும் சேர்ந்தே வந்தது.!!

இதுபோல தினமும் பல ஏமாளிகளை பார்க்கும் பெண் மருத்துவருக்கு.. இவளது கண்ணீரை பார்த்து கருணை வரவில்லை" இந்த குழந்தைய அந்த பையன் ஏத்துக்குவாரா??" பதில் தெரிந்ததுமே கேள்வி கேட்டார். பதில் சொல்ல முடியாமல். வழிந்த கண்ணீர் அவள் ஷாலை நனைத்தது.

" இங்க பாரு. இப்ப அழுது என்ன பண்ணுறது.?? ஏமாத்தி விட்டுட்டு பொய்டானா?? " வெறுப்பாக பெருமுச்சு விட்டு.. " அப்டினா.?? கல்யாணம் ஆகாம பிள்ளைய சுமந்து ஒரு பொண்ணு இருந்தா.. அவள ரொம்ப கேவலமா இந்த சமூகம் நடத்தும். நிறைய அவமானப்பட வேண்டியதா இருக்கும். பெத்தவங்களுக்கு அசிங்கம்..சோ..
கெட் அன் அபார்ட்ஸன். அது மட்டும் தான் இப்போ தீர்வா இருக்கும்.
கடைசி சான்ஸ் ஆ.. குழந்தை உண்டானத உங்க பாய் பிரண்டு கிட்ட சொல்லி கல்யாணம் செஞ்சுக்க கேட்டு பாருங்க.!! ஒத்துக்கிட்ட சந்தோஷம். அப்படி இல்லன்னா கருவ கலைக்கிறது தான் நல்லது.இல்லீகல்லா பிறக்கும் குழந்தைக்கு இந்த சமுதாயத்தில் மரியாதை இருக்காது. தெளிவா யோசிச்சு ஒரு முடிவெடுங்க.

நிமிராமல்.. விம்மியவள் " அவர் கிட்ட பேசணும் டாக்டர்.ப்ளிஸ்."
" நீங்க போய் பேசுங்க.. எமோஷனல் ஆ முடிவு எடுக்காம பிராக்டிகலா பியூச்சர்ல வர்ற பிரச்சனை எல்லாம் யோசிச்சு ஒரு முடிவு எடுங்க"

அவசரமாக வெளியே வந்தவள்.. நர்சிடம் இருந்து தன் செல்போனை வாங்கி.. மை ஹஸ்பெண்ட் என்று பதியப்பட்ட எண்ணையே பார்த்தால்.. அவளது விரல் அந்தரத்திலே நின்றது. அவனது என்னை அழைக்க கூட பயம். எத்தனையோ கேள்விகள் எண்ணத்தில். முதல் கேள்வியே யாருடைய குழந்தை என்பதாக இருக்கும். என்று அவளுக்கே தெரியும் .
கேவலமான பல கேள்விகளை தாங்குவதற்கு மனதைத் திடப்படுத்தினால்.பிரதி.

ஒருவேளை குழந்தையை ஏற்கவில்லை என்றால் பவித்ராவிடம் உதவி கேட்போம். என தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.. நடுங்கும் விரல் கொண்டு அவனது என்னை அழுத்தினால்.. காதலன் ஒவ்வொரு நிராகரித்த அழைப்பும்.. கண்ணீரையும் இதய துடிப்பையும் பல மடங்கு அதிகரித்தது..!!

அவள் எண் என்றதும் வேண்டுமென்று அழைப்பை துண்டித்தான். மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டு இருந்தால் பிரதிக்ஷா. அவன் ஏற்காத ஏமாற்றத்தில் கண்ணீர் நதியாகியது காதல் தாங்கிய விழிகள்.!!

மென் முனகலாக" ப்ளீஸ்.. ப்ளீஸ்.. அட்டென்ட் பண்ணுங்க.. நமக்கு குழந்தை வந்து இருக்கு.!! எனக்கு பயமா இருக்கு, என்ன பண்றதுன்னு தெரியல?? ப்ளீஸ் போன் அட்டென்ட் பண்ணுங்க.. இது உங்க குழந்தை தான். என்னால நிரூபிக்க முடியும் உங்களால மறுக்க முடியாது. " கைகள் நடுங்க அழைப்பு விடுத்தால்..

தொடர் நச்சரிப்பில் பொறுமை இழந்தவன்." ஹலோ.. சொல்லுங்க பிரதிக்ஷா அருண். இன்னைக்கு தான் என் ஞாபகம் வந்திருக்கு போல ??
அவள் பெயரோடு அருண் என்ற பெயரை சேர்த்து ரணப்படுத்தினான்.

" இங்க பாருங்க குத்தல் பேச்சு பேசுறதுக்கான நேரம் இது இல்ல. கேக்குற நிலைமையிலும் நான் இல்ல.. முக்கியமான ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லனும். நமக்கு. நம்ம.."சொல்ல வார்த்தை வராமல் தயங்கிட,

" பிரதிக்ஷா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு." இடியை இறக்கினான் தாயானவள் தலையில்.
" தேவையில்லாம எனக்கு கால் பண்ணாதீங்க. என்ன சொல்லுமோ சீக்கிரமா சொல்லுங்க. " அன்று அருணுடன் திருமணம் நடக்கப்போகிறது என்று யாரோ சொன்னதற்கு. திருமணம் ஆகிவிட்டது என்று இப்போது பொய் சொல்லி.. வலிக்க வைத்து அவளை வதைத்ததில் ஏதோ சிறு நிம்மதி. பதிலடி கொடுத்த திருப்தி அவன் முகத்தில்.

பழி வாங்குதல் எப்போதுமே அழிவுக்கான விதை.. வார்த்தையால் விதைத்தான் அழிவை அவன் உதிரத்தில் உருவாகிய சின்ன (மகவுக்கு )
உயிருக்கு. !!

திருமணமாகிவிட்டது என்ற வார்த்தையிலே இடிந்து போய்விட்டால் பிரதி. இருந்தும் நம்ப முடியாமல் மீண்டும் விம்மல் கலந்த அழுகையோடு அவனிடமே கேட்டால் " நிஜமா.. கல்யாணம் ஆகிடுச்சா..ப்ரீத்"

" ஆமா.. ஆகிடுச்சு. ஸ்டேட்டஸ் பாக்காம கல்யாணம் பண்ணிக்கிற,நல்ல பொண்ணுங்க கூட இருக்கா‌ங்க. அதனால காசு இல்லாதவனுக்கு கல்யாணம் நடந்துடுச்சு !!
உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சா இல்ல ..இன்னும் அருண் கூட லிவிங் ல தான் இருக்கீங்களா??"
அந்த வார்த்தையை கேட்டதும் உடலெங்கும் அருவருப்பில் கூசிப் போனது.

வேதனையோடு தழுதழுக்கும் குரலில் " என் மேல நம்பிக்கை மட்டும் தான் இல்லை னு நினைச்சேன். காதலும் இல்லைனு புரிஞ்சிருச்சு. இனிமே பேச எதுவும் இல்லை." மேலே தொடராது மௌனமாகிட,

" மேடம் டாக்டர் உள்ள கூப்டுறாங்க." அழைப்பில் இருப்பவன் காதிலும் அது விழ.. பதைத்தது அவளுக்கு என்னானதோ என.?

கையில் இருக்கும் செல்போன் பிடிப்பு இல்லாமல் கீழே விழுந்து நொறுங்கியது. உயிரற்ற ஜடமாய் மருத்துவர் அறைக்கு சென்றால் பிரதிக்ஷா.
அவள் முகத்தின் இறுக்கத்தை வைத்து ஒரு முடிவுக்கு வந்து
" நிறைய பொண்ணுங்க உன்ன மாதிரி ஏமாறுறாங்க. தினம் ஒரு நாலு கேஸ் ஆவது இப்படி பார்க்கிறேன். எந்த ஆம்பளையும் இப்படி உண்டாக்குற குழந்தைக்கு பொறுப்பேத்துகிறது இல்ல. சந்தோஷத்துல மட்டும் தான் ஆம்பளைக்கு பங்கு.. தப்பு ரெண்டு பேரும் தான் செய்றாங்க.. ஆனா தண்டனை பெண்களுக்கு தான் அதிகமா கிடைக்குது. நான் எழுதி கொடுக்கிற டேப்லட்ஸ மூணு நாள் தொடர்ந்து போடுங்க.. பெருசா வலி இருக்காது. அப்புறம் ஒரு ஸ்கேன் எடுக்குற மாதிரி இருக்கும். நீங்க போகலாம். அடுத்த கேஸ் வர சொல்லு..ங்க.." டாக்டர் தன் வேலையை தொடர.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தால்.. பிரதி.. காதலன் செய்த துரோகத்தை ஏற்க முடியவில்லை . தன்னையே கொல்ல வந்த போது கூட அவன் மீது வெறுப்பு வந்ததில்லை. ப்ரீத் நல்லவன். பிறர் தன்னை பற்றி சொன்ன பொய்யான தகவல்களை நம்பி விட்டான். உண்மையை உணர்ந்து கொண்டு சீக்கிரம் வருவான். சேர்ந்து விடுவோம் என இதுவரை நினைத்தாள். தன் காதலன் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையில்.!! ஆனால் இன்று.?? மொத்தமாக எல்லாம் முடிந்து விட்டது.

கைகளில் சிசுவுக்கான விஷத்தை இறுக்கிக் கொண்டு புலம்பினால் இல்லாதவனிடம்.. " ப்ரீத்.. இவ்ளோ வலியிலும் நமக்கு குழந்தை வந்தது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா?? ஏமாத்திடிங்க..!! பவித்ராவை தான் கல்யாணம் பண்ணி இருப்பீங்க.?? என் பிரண்டும் என்னை ஏமாத்திட்டா?? நீங்க நம்புனா பொய்ய அவளும் நம்பி இருப்பா!! இன்னைக்கு கேட்டீங்களே?? லிவின் ல இருக்கியா னு மாறவே இல்லை சந்தேகம்.? உயிர் இருக்குற வரைக்கும் உங்களை மட்டுமே நெனச்சிட்டு என்னால வாழ முடியும்..!! என் காதல் எப்பவுமே.. உங்களுக்கு புரிய போறதும் இல்லை. உங்களுக்காக இன்னொரு பாவத்தையும் பண்ண போறேன்.

எந்த பொண்டாட்டியாலையும் இந்த துரோகத்தைத் தாங்க முடியாது.‌ தன் புருஷனோட வாரிசு இன்னொரு பொண்ணு வயித்துல வளர்றத ஏத்துக்க முடியாது.
நான் கர்ப்பமா இருக்குது பவித்ராக்கு தெரிஞ்சா? உங்க கூட வாழ மாட்டா..நான் கடைசி வரைக்கும் கெட்டவளாவே இருந்துட்டு போறேன். எல்லார் வாழ்க்கையும் கெடுத்துட்டீங்க ப்ரீத். அவ வாழ்க்கைய என்னால பங்கு போட முடியுமா?? நீங்க வேணும்னு சண்டை போட முடியுமா?? தாலி இல்லாம வந்து உரிமை கொண்டாட முடியாது.??இந்த குழந்தையையும் என் நடத்தையையும் சீதை மாதிரி நெருப்புல இறங்கி தான் நிரூபிக்கணும்.
அப்படி நிரூபிச்சவங்களயே இந்த உலகம் சந்தேகம் தானே பட்டுச்சு.!! குழந்தைங்கனா அவ்வளவு பிடிக்கும் இல்ல உங்களுக்கு.?? குழந்தை இல்லாத வயித்துக்கு கூட தினம் ஒரு முத்தம் கிடைச்சுடும்..!! இப்ப குழந்தை இங்க இருக்கு. " அடி வயிற்றில் கையால் அழுத்தியவள். ஏன்.. இப்படி எல்லாம் ஆகனும் ? காதலிச்சவன் ரொம்ப கெட்டவன். ஏமாத்திட்டான்னா கூட வெறுத்திடலாம்.உங்கள வெறுக்க முடியாம,சேர்ந்து வாழவும் முடியாம . இப்ப உங்க பார்வைக்கு கெட்டவள் ஆகி நிக்கிறனே.." தலையில் அடித்துக் கொண்டு கதறினால். மாத்திரைகளை விழுங்குவதற்காக வாய் அருகே கொண்டு செல்ல.!!

'பிரதி..' என அவன் குரல் கேட்க..!! கண்களால் சுற்றி தேடியவளுக்கு ஏமாற்றமே..! யாருமே இல்லாமல் வீடு வெறிச்சோடிக் கிடந்தது.!!

' நம்ம குழந்தை கொல்லப் போறியா..?? பிரதி!! என் உயிர் டி .. அது..!! '

விரத்தியாக சிரித்தவள். " குற்ற உணர்ச்சியில எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு போல ? நீங்க பேசுற மாதிரி கேக்குது. நெஜத்துலயும் இதே மாதிரி .. நீங்க பேசி இருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்." என ஏங்கினால்.

' என் குழந்தைய கொன்னா உன்னை மன்னிக்கவே மாட்டேன் டி. சேர்ந்து வாழுவோம் பிரதி.. அவசரப்படாத . நம்ம குழந்தை டி அது.. ப்ளீஸ்..கொன்னுடாத'கெஞ்சியதவன் ஆன்மாவின் குரல்.

" நீங்க இப்படி எல்லாம் சொல்லணும்னு நானா நினைச்சுக்கிறேன் போல.!! நிஜம் என்ன தெரியுமா?? " கதறினால். " ஒரு மாசம் வாழ்ந்தவன் கிட்ட கேட்காம ?? ஒரு நாள் வாழ்ந்தவன் தலையில கட்ட பாக்குற.!! அடுத்தவன் புள்ளைக்கு நான் ஏன் அப்பா ஆகணும்னு கேப்பிங்க?? போதும் ப்ரீத் என்னால முடியல..அப்பாவே புள்ளை பிறப்புல சந்தேகப்படுறது. அத ஆராய்ச்சு நிருபிக்க சொல்றது. இந்த கொடுமை எல்லாம் என் குழந்தைக்கு வேணாம்.. " அழுகையுடனே கையில் இருந்த மாத்திரைகளை மொத்தமாக வாயில் போட்டு விழுங்கி முடித்ததும். " உன்னால கேட்க முடியும்னு எனக்கு தெரியும். அப்பாவுக்கு நீ வேணாம்டா.. அம்மாவ மன்னிச்சுடு. வேற வழி தெரியல. மன்னிச்சுடு குட்டி.. பாவி நான்.. உன்ன சுமக்குற கொடுப்பினை இல்லை.. மன்னிச்சிடுடா தங்கம் .." நெஞ்சில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தாள். பிஞ்சு குழந்தையை கொன்ற தாயாக .!!

❤️‍🔥நன்றிகள்🙏 கோடி❤️‍🔥

உமா கார்த்திக்
 
Status
Not open for further replies.
Top