எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம்.55

Status
Not open for further replies.

uma Karthik

Moderator
♥️ஏக்கம் ♥️


பிரதிக்ஷாவின் வாழ்க்கையை மொத்தமாக முடக்கி விட்டது காதல். உலகம் மற்றும் உறவுகளில் இருந்து மொத்தமாக துண்டித்து.. தன்னை தானே நாலு சுவற்றுக்குள் சிறைப்பட்டுக்கொண்டாள் தாயானவள்.

அப்பனுக்கு தப்பாமல் தாயைப்படுத்தி எடுத்தது..வாரிசு.!!

வாந்தி ,மயக்கம், குமட்டல்.. என நினைவு தப்பி நெடுநேரம் தரையில் கிடைப்பாள். தண்ணீர் தர கூட ஆள் இல்லாமல்..! மயங்கி விழுந்து மறுநாள் காலை எழுந்த கதையும் உண்டு.!! கேட்பார் இல்லாத விளை நிலமாய். நிதானமும் நினைவும் இல்லாமல் நித்திரையில் இருந்தால்.!! உறக்கமா?? பசி மயக்கமா?? கடவுளுக்கே வெளிச்சம்..!!
சுதாரித்து சாப்பிட ஒருவாய் எடுத்து வைத்தால்.. வாசம் பிடிக்காமல் மொத்தமாக வாந்தி வந்துவிடும். பிள்ளை சுமப்பவள் வயிறார சாப்பிட்டதே இல்லை.. பணம் இருக்கிறது தான்.. எத்தனை வேலை ஆட்கள் வேண்டுமானாலும் நியமிக்கலாம். மீண்டும் சம்பளம் கொடுத்து தப்பானவள் பட்டம் வாங்க விரும்பவில்லை.. விழுந்த சூடு அப்படி.??

தினமும் கண்ணீரோடு ஏதேதோ.. காரணம் சொல்லி. தன்னை மட்டும் குற்றவாளியாக்கி.. மன்னிப்பாயா என கெஞ்சி .. உருகி நதியாய் பெருக்கெடுக்கும்தாயின் கண்ணீர் பிடிக்கவில்லை.. பிரதியின் பிள்ளைக்கு..!! தலை சுற்றல், மயக்கத்தோடு உறக்கத்தையும் வாரி வழங்கினான்..!! தாய் உண்டால் தானே பிள்ளைக்கு உணவு..!! பிஞ்சு ஜீவனும் தாயை உறங்க வைத்து பட்டினி கிடக்க..!! ஆகாரமில்லாமல் மகவுக்கு உடல் சுருங்கி போனது விளைவு.

ஏழாம் மாதக் கடைசியில்.. ஸ்கேன் செய்ய வந்தவளை.. நிற்க வைத்து திட்டி தீர்த்தார் மருத்துவர்.

" ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா? குழந்தை இந்த அளவு வளர்ச்சி இல்லாம இருக்கு. உனக்கு பெத்துக்க விருப்பம் இல்லன்னா.. ஆரம்பத்திலேயே அதை நீ பண்ணி இருக்கணும். இப்படி பட்டினி போட்டு கொல்ல கூடாது. நீ ஏமாந்த கோபத்தை குழந்தை மேல காட்டுறியோ?" பிரதிக்ஷாவை சந்தேகமாக ஒரு பார்வை பார்த்தார்.

" இல்ல டாக்டர்.. ரொம்ப மயக்கம் அதிகமா இருக்கு. என்னால எழுந்து சமைக்க முடியல. கூட யாரும் இல்ல உங்களுக்கு தெரியும்.அதான் "குழந்தைக்கு என்ன ஆனது என பயத்தில் நடுங்கிக் கொண்டு நின்றாள்.பிரதி

" அந்த காலமா சமைக்க முடியல சாப்பிடாம ,பட்டினி கிடக்கிறேன்னு சொல்றதுக்கு.?? காபி கூட ஆர்டர் பண்ணி குடிக்கிறாங்க. சத்தான சாப்பாடு நீ சாப்பிட்டு தான் ஆகணும்.

" ம்.." மண்டையை ஆட்டினாள். "குழந்தை நல்லா இருக்கா??" தாய்க்கு உரிய பரிதவிப்போடு கேட்க??

" இந்த குழந்தையோட அப்பாவுக்கு.. பரம்பரை வியாதி இருக்கா??"

" தெரியாது "

நக்கலாக " அந்த சாரோட ப்ளட் குரூப் "

" தெரியாது"

" போதைப் பழக்கம். சுகர், இருக்கா??"

" இருக்காது டாக்டர் கம்மி வயசு தான் அவங்களுக்கு."

" பிரதிக்ஷா உன்னோட குழந்தையோட குரோத் ரொம்ப கம்மியா இருக்கு. இதுக்கு காரணம், நீ சரியா சாப்பிடாத தா? இல்ல உன் பார்ட்னர். அதான் இந்த குழந்தையோட அப்பா. ஜெனிடிக் ஆ எதாவது டிசீஸ் உள்ளவரா? உடனே அவர வர சொல்லுமா.. சில டெஸ்ட் எடுக்க வேண்டியது இருக்கு‌. எச் ஐ வி டெஸ்ட் ரொம்ப முக்கியம். "

" இனிமே நான் ஒழுங்கா சாப்பிடுறேன். என் குழந்தைக்கு டெஸ்ட் எடுக்க அவங்க வர மாட்டாங்க."

மருத்துவர் என்பதை மறந்து கத்தி விட்டார் பொறுக்க முடியாமல்" பிராடு பய.. புள்ளைய ஏத்துக்கல பரவால்ல.. சாகுற நிலைமைல ஒரு குழந்தை இருக்கும் போது டெஸ்ட் வரமாட்டானா?? ரெண்டு நாள்ல டெஸ்ட் எடுக்கணும். அப்படி டெஸ்ட் எடுக்க வரலைன்னு சொன்னா..? நானே அவன் மேல பர்சனலா கம்ப்ளைன்ட் கொடுத்து.. உள்ள தள்ளிடுவேன்." அவர் சொன்ன விதமே. உறுதியாக செய்வார் என்பதை காட்டியது.

பதறி அடித்து எழுந்தவள். " ஐயோ‌.வேணாம்.. மேடம்.. கம்ப்ளைன்ட் எல்லாம் கொடுத்துடாதீங்க. என்ன டெஸ்ட் எடுக்கனும்னு மட்டும் எழுதி கொடுங்க. நானே போய் டெஸ்டுக்கு மட்டும் வர சொல்லி கேட்டு பாக்குறேன்."

" ஏற்கனவே சரியா சாப்பிடாம, நீயும் குழந்தையும் ரொம்ப வீக்கா இருக்கீங்க. இந்த ஸ்டேஜ்ல உன்னால ட்ராவல் பண்ண முடியுமா?? அப்படி எந்த தேசத்துக்கு மகாராஜா..வா இருக்கான் அவன்..!! டெஸ்ட் எடுக்க இங்க வர முடியாதா?? " வாயில் ஏதோ முனவி கடுகடுத்தார்.

" இல்ல மேடம் அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. எனக்காக அவங்களால இங்க வர முடியாது. நான் தான் போகணும்." வந்த கண்ணீர் பாதி கன்னம் தொட, விரலால் வழித்து துடைத்தாள்.

அவளை அதிசயமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு" உன் வாழ்க்கையை நாசமாக்கிட்டு போனவன், நல்லா இருக்குன்னு யோசிக்கிற!! இந்த மாதிரி நல்ல பொண்ணுங்கள எப்படி ஏமாத்த மனசு வரும். டூ டேஸ் தான் டைம். நான் எழுதிக் கொடுக்க எல்லா டெஸ்ட் ரிப்போட்ஸ்ம் வந்து இருக்கணும்." மிரட்டினார்.


" ம்‌‌.." தலை மட்டும் ஆட்டி விட்டு, மருத்துவர் மேலும் திட்டும் முன் அறையை விட்டு தப்பி வெளிவந்தால்.
பிரதி

மீண்டும் அவனை சந்திக்க வேண்டும் என்ற எண்ணமே. பயத்தில் முகம் வெளிரி .. நெஞ்சை
திகிலடைய வைத்தது.. இன்னும் எத்தனை கொடுமைகளை சகிக்க வேண்டும் என நொந்து போனாள் பிரதிக்ஷா .

பிள்ளையின் உயிருக்கு ஆபத்து என்னும் போது.. எத்தனை அவமானங்களை வேண்டுமானாலும் தாங்கலாம்.என்று
மனதைத் திடப்படுத்திக் கொண்டு, ப்ளைட்ல் சென்னைக்கு புறப்பட்டாள்..ப்ரீத்..வீட்டிற்கு செல்லாமல்.


அவன் ஆபீஸ் வாசல் முன் தயங்கி தயங்கி நிற்க..!! இருவரின் முதல் சந்திப்பு இங்கே தானே!!
பயத்தோடு அவன் பின்னால் நடந்தது. தன்னிடம் சம்மதம் கேட்காமலே பவித்ராவிடம் தன்னை காதலி என அறிமுகப்படுத்தியது. லிஃப்டில் அவன் அருகே நின்று.. ஜோடியாக இருவரின் உயரத்திற்கும் பொறுத்தம் பார்த்தது.. கண்டதும் காதல் வந்த நொடிகள் எல்லாம் மலராய் அரும்ப மிக மெல்லிய சிரிப்புடன் நின்றவள்..!! சந்தோஷம் நிமிடங்கள் தொடரும் முன் மொத்த கசப்புகள் அலையாய் அடித்து.. சிறு புன்னகையையும் வாரி கொண்டு போனது. !!

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு லிப்டில் ஏறினால் பிரதி. இரு ஆண்கள் அதில் இருந்தனர்.

அருகில் நிற்கும் வாலிபன் ஒருவன் அவளையே பாக்க?? தலையை குனிந்து கொண்டு நின்றால் பிரதி.

ஆபீஸில் உள்ளவருக்கு எல்லாம் தெரியும். ப்ரீத் காதலி பிரதிக்ஷா என்று. ஆனால் அவளுக்கு.?? திருமணம் ஆன ஒரு ஆணை பார்க்க வரும் முன்னால் காதலி என்ற உணர்வு.!!

இதனால் ஏதாவது பிரச்சினை வருமா என்று பயம் வேறு பேதைக்கு.

கேள்வியாக " என்ன மேடம் ஆபீஸ் பக்கம் ரொம்ப மாசமா காணோம். " விசாரணை நடத்தினான்.

அவள் பதில் ஏதும் கூறவில்லை.

அவன் விடுவதாக இல்லை.

தாலி இல்லாமல் தாயானவள்.. அதை வைத்து மிரட்டி பணம் பார்க்க , இங்கு வந்திருப்பதாக நினைத்தது நடத்தைகள் சரியில்லாதவள் என நினைத்து. வழிந்தான்.

" இப்ப ரொம்ப அழகா இருக்கீங்க. பேச மாட்டிங்களா? " அருகில் இருக்கும் நண்பன் தடுத்தும் தொடர்ந்தான்.

சார் அளவு இல்லனாலும்.. ஒரளவு எங்களாலயும் முடியும்." ஒரு முறை திரும்பி முறைத்து பார்த்தவள் மீண்டும் அமைதியாக இருக்க.

அருகில் இருக்கும் நண்பனின் தோளில் கையை போட்டு" ஸ்..ஸ்.. நீளமான முடி.. இருக்க பொண்ணுங்க.. தான் பசங்களோட வீக்னஸ்.." அவள் கூந்தலைப் பார்வையாள் அளந்து..
" உண்மையிலே பிரீத் குமார் சார் ரசிகன் தான்.. ஒரு பொண்ணு இப்படி.!! இன்னொரு பொண்ணு அப்படி!! மச்சக்காரன் தான். இருந்தும் அவர் பவித்ரா மேடம் சூஸ் பண்ணது செம டா.. எவ்ளோ அழகு அவங்க.!! இந்த பொண்ணு அழகு தான் ஆனா பவித்ரா மேடம் அளவுக்கு கிடையாது இல்ல.? அதனால்தான் சார் உங்கள விட்டுட்டாரு போல.? "
சுருக்கென தைத்தது இந்த வார்த்தை அவளை.

" அவங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே லவ் பண்ணிட்டு இருக்காங்க மேடம்க்கு தான் தெரியல போல ? ஏமாந்துட்டாங்க. கண்டுக்காத ஆள தேடி போறதுக்கு பதிலா.. எங்கள மாதிரி இல்லாத பட்டவங்கள கவனிக்கலாம்ல.??

இவன் அத்துமீறும் பேச்சைக் கேட்டு நண்பனுக்கு நடுக்கமே வந்தது. 'ஐயோ..அவன் வெறி புடிச்சவன் மாதிரி அடிப்பான். இவன் வேற'
" டேய் ஏன்டா இப்படி பேசிட்டு இருக்க.?? அவங்க சாரோட லவ்வர் டா.. தெரிஞ்சா கொன்னுடுவாரு."பேச்சை.. நிறுத்த சொல்லி கெஞ்சினான்.

திமிராக சிரித்துக் கொண்டே" திருத்தம் எக்ஸ் லவ்வர். அவரே வேணாம்னு தான் டா கழட்டி விட்டு இருக்காரு.. அவர் வரவு செலவு முடிச்சிட்டாரு.. இனிமே யாரு வேணா புதுசா அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிக்கலாம். மௌனம் சம்மதம். "பெண் மோகம் தாய்மை மறைத்தது..!! பிள்ளைத்தாச்சியை கூட சீண்டிட வைத்தது.

" சார் தான் முடிச்சுட்டாருல இனிமே நியூ சாப்டர் யார் வேணா எழுதலாம். அம்பு யார் விட்டாலும் பாயும்.சார் மாதிரி வசதி எல்லாம் கிடையாது. அமௌன்ட் மட்டும் கொஞ்சம் டிஸ்கவுண்..ட்.. "

அடிக்க பரபரத்த கைகளை அடக்கிக் கொண்டு நின்றாள். சபிக்கவும் செய்தால். ' என் பாவத்தை எடுத்து கொட்டிக்கிறானுங்களே.. 'பல்லை கடித்து, ஆத்திரத்தில் கண்களும் சிவக்க.!!

இதுவரை எப்படி காதலனை எதிர்கொள்வது.? டெஸ்டுக்கு வர முடியாது என்று மறுத்து விடுவானோ?? அடிப்பானோ.?? இப்படி ஆயிரம் பயம்.. !! பல யோசனைகள் நெஞ்சில்..??ஆனால் இப்போது இவன் தகாத பேச்சில் இருந்த பொறுமை எல்லாம் இழந்துவிட்டால்.பிரதி..

இருந்துமே.. மூன்றாவது தளம் வந்ததுமே வேகமாக வெளியேறினால் பிரதிக்ஷா. ஏதாவது பேசினால் சண்டை ஆகும். அவன் வருவான். பிரச்சனை பெரிதாகும். சந்தீப் மூலம் பவித்ராவிற்கு எல்லாம் தெரிந்து விடும் என்ற நிலையில். பொங்கும் கோபத்தை இழுத்து பிடித்து நிப்பாட்டினால்.

இத்தனை மாத பிரிவு. கண்கள் அவன் அறையை நோக்கி அலைபாய்ந்து திரும்பியது. காதலோடு தாய்மையின் ஏக்கமும் கூடி கண்களை கலங்க வைத்தது.

ரிசப்ஷனில் தான் வந்ததை சொல்லி பார்க்க அனுமதி கேட்டு அமர்ந்திருந்தால் எதிரே போடப்பட்ட மூன்று பேர் அமரக்கூடிய சேரின் முனையில். ஆழ்மனதில் வேண்டுதல். 'டெஸ்ட்க்கு வர மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க' தோள்களில் ஏதோ உரசுவதை உணர்ந்தவள் தள்ளியமர.. லிப்ட்டில் வம்பிழுத்த அதே பொறுக்கி தான்.!!

ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் அவளே பேசி முடிக்க அழைத்தால் " என்ன வேணும் உனக்கு.? வேணும்னு மேல இடிக்கிற மாதிரி பக்கத்துல வந்து உட்கார்ந்து இருக்க.?? என்னென்னமோ பேசுற. நேரவே சொல்லிடு,என்ன வேணும்.?? ஏன் கஷ்டப்பட்டு சுத்தி வளைக்கணும். " நிமிர்வோடு கேட்க.

" எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. " திமிராக உரைத்தான்.

" எங்க ரெண்டு பேருக்கும் பிரேக்கப் ஆயிடுச்சு. இப்ப நான் வந்தது.. சார அபிசியலா மீட் பண்ண, அதே மாதிரி எனக்கே தெரியும்.அவர் பவித்ரா மேடம்ம லவ் பண்றாரு. அவங்களை கல்யாணம் பண்ணிட்டாரு னு. நீ கூப்பிட்டா நான் வருவேனா..?? அதான்..அதே தான் இல்ல.!! உன்னால ஒரு அஞ்சு லட்சம் ரூபா எனக்கு கொடுக்க முடியுமா??வெட்கி தலை குனிந்தவன் இல்லை என்றும் தலை அசைத்து மறுத்திட.

" அப்ப மூடிட்டு போடா " அவள் திட்டியதும் அவமானத்தோடு எழுந்தவனை. சொடக்கிட்டு மீண்டும் அழைத்தவள்‌.

" கல்யாணம் ஆகாம ஒரு பொண்ணு கர்ப்பமா இருந்தா.? அது அவளோட பிரச்சனை. அதுக்கு அர்த்தம் இது இல்ல. போற வர எந்த நாய் வேணா லைன் போட்டு பார்க்கலாம்னு. ஏமாந்த பொண்ணுங்க எல்லாரையும் பிராஸ்டியூட் மாதிரி ட்ரீட் பண்றீங்க?? அப்ப ஏமாத்தின பசங்க.?? இதே இடத்தில உங்க அக்கா தங்கச்சி யாராவது உட்கார்ந்து இருந்தா. இதே மாதிரி உன்னால பேசிட முடியுமா?? அவங்களை கூப்பிட முடியுமா?? ஒரு பொண்ணு ஆசைக்காக ஏமாற மாட்டா.!! உண்மையா வச்ச பாசத்தால தான் ஏமாறுவா.!! கல்யாணம் ஆயிடுச்சா உனக்கு.?? "

" இல்லை "

" முதல்ல கல்யாணம் பண்ணிக்கோ. பெண் குழந்தை பிறந்ததுனா நீ இப்ப பண்ற தப்பு எல்லாம் நீயே நிறுத்திடுவ." அதே கோபம் மாறாமல். ப்ரீத்தின் நம்பருக்கு கால் செய்து. " ப்ரீத்.. இங்க எனக்கு ரொம்ப தொந்தரவா இருக்கு. என்னால உட்கார முடியல உள்ள வரலாமா?? பதில் ஏதும் வராததால்." நான் உள்ள வரேன். என்று கட் செய்து ஹேண்ட் பேக்கில் போனை போட்டு.

அவன் இருக்கும் அறை கதவை திறந்ததும். ப்ரீத் முகம் எல்லாம் தாடி அடர்ந்து படர்ந்து இருக்க. வேறு யாரோ நிற்பது போல உணர்வு எழுந்தது .உடனே..அவனை நேர்கொண்டு பார்க்க பயந்து கீழே தரையைப் பார்த்தால்.. இதை பார்க்க தவறி விட்டால்.!!

பல மாத இறுக்கங்களுக்கு பிறகு.. கண்களோடு.. உலர்ந்து போன உதடுகள் மெல்ல விரிய.. உயிரற்ற ஜடமாய் வாழ்ந்தவனுக்கு. உயிரைப் புதுப்பித்து தந்தது காதலியின் வருகை.!!

இப்போது தான்.மேடிட்ட அவள் வயிற்றை பார்க்கிறான் !! அப்பா ஆகியது அத்தனை ஆனந்தம்..!!

இம்மியளவு கூட இமை அசையாமல் அவளையே பார்கிறான் ப்ரீத்‌‌.
அவளால் உணர முடிந்தது. ஆனால் கோபமா வெறுப்பா எந்த வகையான பார்வை என்பது புரியாமல் யோசனையிலே அமர்ந்திருந்தால்.

கண்களின் பசியை தீர்த்துக் கொண்டிருந்தான். காதலுடன் பிரிவின் கோபத்தோடும் அவளையே..விழிகள் ரசித்து கிடக்க.!!

கண்களை மேலே தூக்கி ஒரு முறை மட்டும் பார்த்து விட்டு.. கீழே பார்வையை பதிக்க.. பயந்தவள் பார்வைக்கு கோபமாக முறைப்பது போலவே தோன்றியது.!!


" எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். " இமைகளை நிமிர்தாமல் கேட்டால்.

" ம்.. ம்.. " என்று ஒற்றை வார்த்தையில் அத்தனை அழுத்தம்.. கோபத்தின் பிரதிபலிப்பாக.!!
பிள்ளையை தந்தையிடமே மறைப்பது மன்னிக்க முடியாத குற்றம் அல்லவா.?

" குழந்தைக்கு வளர்ச்சி கம்மியா இருக்கு."நடுங்கியது குரல்.

"ம்..ம்..ம்.." கோபம் வந்தது பொறுப்பில்லாதவல் மீது.!!

" நெறைய டெஸ்ட் இருக்கு. "

" ஓ... ஒ... "

" யாரு அப்பான்னு கேட்டுறாதீங்க ? அடுத்தவங்க குழந்தைக்கு உங்க டெஸ்ட் பண்ன கூப்ட முடியாது. "

தாயானவள் சொல் உயிர்வதை செய்ய..வலியோடு கேட்டான் " வேற ஏதாவது சொல்லனுமா ?" இல்லை என தலை அசைக்க.. "

" போகலாமா."என முன்னே நடக்க.. பின் தொடர்ந்தால் பிரதி.. அவன் வேகத்திற்கு நடக்க முடியாமல் பொறுமையாய் நடந்து வெளியே வரும் போது காரில் ப்ரீத் காத்திருக்க. பின்பக்க டோரை திறந்து காரில் ஏறி அமர்ந்து விட்டாள்.கை மட்டும் தான் ஸ்டேரிங்கில் இருந்தது.
கண்கள் இரண்டும் பின்னால் இருக்கும் பெண் மீது தான்.!!

நிமிர்ந்து ஒரு முறை கூட அவனைப் பார்க்கவில்லை.!!
பார்க்கவே பிடிக்கவில்லையா?? தைரியம் இல்லையா?? என்பது அவளுக்கே புரியவில்லை.!!

இன்னொரு பெண்ணின் கணவனை காதலோடு பார்க்க கூடாது என்று கண்களையும் காதலையும் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். தோழி பற்றி விசாரிக்க ஆசைதான்.தயக்கம் பேச விடாமல் தடுத்தது.

மருத்துவமனை சென்றதும்.எச்ஐவி, பிளட் டெஸ்ட் ,ஜெனிடிக் டெஸ்ட் எடுக்க தந்தையை அழைக்கவும். உள்ளே செல்லும் முன் அழமாக அவளை ஒரு பார்வை பார்த்து சென்றான் ப்ரீத். எல்லாம் முடிந்து வெளியே வரும் போது அங்கே அவள் இல்லை.?? மீண்டும் வாழலாம் என்று துளிர்த்த சிறு நிம்மதியும் .. போக.!! சுற்றிலும் வெறுமை மட்டும் நிரப்பிட .. அவன் வாழ்வை விட்டு விலகி சென்று விட்டாள் பிரதிக்ஷா .
" பி..ர..தி.." கதறினான். மருத்துவமனை முழுவதையும் தேடி அலசியும் அவள் இல்லாமல் போக.!! வெளியே சென்று ரோடு, கடைகள் என எல்லா பக்கமும் தேடி அலைந்தான். கண்களில் இருந்து கண்ணீர் வழிய.. இழந்த உயிரை தேடிடும் உடலாக.. தவிப்போடு அவள் தரிசனம் காண ஏங்கியது ஆண் மனம். இன்னொரு பிரிவை எல்லாம் தாங்க தைரியம் கிடையாது. அத்தனை வலித்தது அவள் இல்லாத வாழ்க்கை.!!


வேகமாக வந்தவன் நடுத்தர வயதுடைய தாயின் மீது மோதி நிற்க.

மோதியதில் தடுமாறியவர் " ஏன் இந்த ஆத்திரமும்.. அவசரமும்.. பொறுமையா போ." என சொல்ல. எதுவுமே அவன் காதில் ஏறவில்லை.பித்து கொண்டவனாட்டம் சுற்றிலும் பார்வையை சுழல விட்டு தேடிக் கொண்டிருந்தான். இழந்த வாழ்க்கையை .!!


" என்னத்த தொலைச்சிட்டு தேடுறீங்க.?"

" நிறைமாசமா.. ஒரு பொண்ணு இந்த பக்கம் பார்த்தீங்களா?" கேட்டவனுக்கு மூச்சு வாங்கியது.

" மாசமா இருக்க பொண்ணா ..?? இன்னைக்கு அந்த பொண்ணுக்கு இங்க வளைகாப்பு.!! அந்த கோயில்ல தான் நடக்கப் போகுது. என்று முடிக்கும் முன்னே.. ஓடி இருந்தான் அந்த கோயில் வாசலுக்கு ? வேறு ஒரு பெண் அலங்கரிக்கப்பட்டு. அமர்ந்து இருக்க. ஏமாற்றம் முகத்தில் அறைய.. திரும்பி வேறு திசையில் தேட சென்று விட்டான் ப்ரீத்.

" ஒன்னு ஆத்திரக்காரனா இருக்கணும்.!! இல்ல அவசரக்காரனா இருக்கனும்.!!
ரெண்டுமே சேர்ந்தா.?? வாழ்க்கை திண்டாடி தான் போகும். " புலம்பியபடி கோவிலுக்குள் நுழைந்தவர்..அலங்காரத்தோடு அமர்ந்திருக்கும் பெண்ணிற்கு நின்ற இடத்தில் இருந்து கையை உயர்த்தி ஆசி வழங்கிவிட்டு.. கண்ணீரோடு அமர்ந்திருக்கும் கர்ப்பிணி பெண்ணின் அருகில் சென்றார். " உன்ன ஒருத்தன் தேடி திரியிறான். வெளியில.."

விரக்தியாக சிரித்தவாறே" என்னை யாருமா தேட போறாங்க?? வேற யாரையாவது இருக்கும். எனக்கு யாரும் கிடையாது. "

" விதியோட விளையாட்டுல இன்னும் எத்தனையோ இழப்பு கணக்கு
பாக்கி இருக்கு." அந்த அம்மா.. பேசுவது ஒன்றுமே விளங்கவில்லை.
பிரதிக்கு.


விழியில் ஏக்கம் தேங்கி .. அங்கு கர்ப்பிணி பெண்ணுக்கு வளையல் போடுவதை.. சந்தனம் குங்குமம் இட்டு பெரியவர்கள் ஆசிர்வதிப்பதையும் . ஒன்பது வகையான சாப்பாட்டை ஊட்டி விடுவதை பார்த்து. பட்டினி கிடப்பவளுக்கு.. ஆசையில் எச்சில் ஊற.அந்தப் பெண்ணின் கணவன் வந்து மனைவிக்கு வளையல் பூட்டி . குழந்தைக்கு முத்தமிடுவது போல மனைவி முன் மண்டியிட்டு புகைப்படம் எடுக்க !! . தன்னிலை பார்த்து கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது.

அங்கே மீண்டும் பார்க்காமல் பார்வையை திருப்பி கொண்டாள். இதையெல்லாம் அனுபவிக்க கொடுப்பினை இல்லாதவளுக்கு
கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.!!

'ஏன் எங்கள பிரிச்சீங்க.. என் குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு.??' தெய்வத்திடம் வாதாட ..

அருகில் நின்று பேசியவர். அவள் மனதை படித்தது போல்.. அவளின் கண்ணீரை துடைத்து விட்டு, வேகமாக அருகில் இருக்கும் வேப்ப மரத்தில் கட்டப்பட்ட வளையலை அவிழ்த்து.. சிவப்பு பச்சை மஞ்சள் கலவையான வளையல்களை மடியில் முந்தானை யில் வைத்து முனையை இடுப்பில் சொருகி விட்டு..பந்தில் போடப்பட்ட ஒரு இலையை மட்டும் சாப்பாட்டோடு எடுத்து வர..!! அவரின் தெய்வ கடாட்சமான முகம் பார்த்து.. பந்தியில் இடை நிறுத்தி.. தடுக்க யாரும் முன் வரவில்லை.!!

யாசகம் கேட்பவரை போல தான் இருந்தது அவரது தோற்றம். மஞ்சள் நிற புடவையும் அழுக்கேறி தான் இருந்தது. மஞ்சள் மதி முகம். பெரிய குங்குமப்பொட்டும் கருணை வடியும் கண்கள். அவர் மீது வரும் தெய்வீக சுகந்தமும் எதையோ உணர்த்தியது.!!

அவள் முன்னே சமணமிட்ட அமர்ந்தவர். கையில் இருந்து சாப்பாட்டை இலையோடு நீட்ட.சாப்பிட தயங்கினால். உடனே ஒரு பிடி எடுத்து ஊட்ட வர.

"இல்லை எனக்கு வேண்டாம் நீங்க சாப்பிடுங்க. " தன்னிடம் கொடுத்து விட்டால் அவர்கள் எதை சாப்பிடுவார்கள் என்ற எண்ணத்தில் மறுக்க .

" ஏம்மா.?? கோடீஸ்வரிக்கு ஏழை கை சாப்பாடு இயம்பாதோ!! என்ற ஒற்றை வாக்கியத்தில்
விழிகள் ஆச்சரியத்தில் விரிய..!! மெய்சிலிர்த்து அடங்கியது.
அந்த தாயின் கரங்களைப் பிடித்து. உணவை ஊட்டி விட செய்தால்.பிரதிக்ஷா . அத்தனை ருசி அந்த சாப்பாட்டில். மொத்த சாப்பாட்டையும் பருக்கை விடாமல்.ருசித்து முடித்தால். கர்ப்ப காலத்தில் வயிறு நிறைய இன்று தான் சாப்பிட்டு இருக்கிறாள் என்று கூட சொல்லலாம்.அந்த தாய் ஊட்டிய உணவு வயிரோடு மனதையும் நிறைத்தது.!!அவரோ ஊட்டிய கையை கழுவி விட்டு.. மீண்டும் அவள் முன் அமர ..

அடுத்து என்ன என்று ஆச்சரியம் அவள் விழிகளில் .!!

" கையை நீட்டுமா " ஒவ்வொரு வளையிலாக அவள் கையில் அணிவித்து. " இதுக்குத்தானே ஏங்கி அழுத..??கன்னத்தில் சந்தணத்தை தடவி.. நெற்றியில் குங்குமமிட்டு.. பூக்களால் அர்ச்சதை தூவி ஆசி வழங்கி ..!!பிள்ளை சுமப்பவளின் தலையில் பதிந்தது தாயின் கரங்கள்.. !! உடல் எங்கும் மின்சாரம் பாய்வது போல் சிலிர்க்க !! இதுவரை உணராத கோவிலில் வீசும் சாம்பிராணியின் மணம்..நாசியில் ஏறி.. மூளை நரம்புகள் எல்லாம் வாசத்தால் நிறைக் க. அந்த உணர்வின் வெளிப்பாடாய் கண்ணீர் சுரந்தது.

" அன்னைக்கு ஒரு நாள் உன்னை கூப்பிட்டேன். நீ வரவே இல்ல.. "

" எப்ப கூப்டீங்கம்மா எனக்கு தெரியலையே"

" அன்னைக்கு ராவுல ரெண்டு பேரும் போனீங்களே..!! அதுக்கு மொத நாளு.. அந்த ஐயா வந்து.. நாளைக்கு கல்யாணம்.. இந்த கோவில்ல பண்ணிக்க போறதா சொல்லி.. என்ன மாதிரி இருக்கவங்களுக்கு
எல்லாம் விருந்து சாப்பாடு போடறதா சொல்லிட்டு போச்சு. மறுநாள் காத்திருந்தேன் வரவே இல்லை." உதட்டைப் பிதுங்கி கொண்டு சொல்ல.

இப்பொழுது தான் பார்க்கிறாள். அவன் திருமணம் செய்யப் போவதாக சொன்ன அதே கோயில் தான்.!! எங்கேயோ சென்றவள். கோவிலுக்குள் ஏன் வந்தால்.. ? என்பது விடை தெரியாத கேள்வி தான்.!! இப்போது நடப்பதெல்லாம்.. அதிசயத்தை தாண்டிய ஒன்று..!!
ஆச்சரியத்தில் விரிந்த விழிகள் அப்படியே நிற்க. !! எதையும் பேச யோசிக்க முடியாமல். பிரதி.

"அவன் பேசி கெட்டா..!! நீ பேசாம கெட்ட போ..!!"

கோவிலில் உள்ள கடிகாரத்தை பார்த்து மெல்ல எழுந்தவள் " எனக்கு நேரம் ஆச்சுமா.. ஊருக்கு போகணும்.ரொம்ப நன்றி மா.. " கைகூப்பி வணங்கினால்.
" உன் வளகாப்பு நான் நடத்தி இருக்கேன்.!!குழந்தை எந்த குறைவும் இல்லாமல் நல்லபடியா பொறக்கும் .. தைரியமா போ." கோவிலில் மணிகள் ஒலிக்க.!! ஏதோ நம்பிக்கை வர, புன்னகையோடு தலை அசைத்து.நிம்மதியாக ஏர்போர்ட் நோக்கி சென்றாள் பிரதிக்ஷா .

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை!!

❤️‍🔥நன்றிகள்🙏 கோடி❤️‍🔥

உமா கார்த்திக்
 
Status
Not open for further replies.
Top