சென்னை விமான நிலையம்ஒரு வழியாக படத்தின் வெளியீட்டு விழா முடிந்து படக்குழுவினர் சென்னை வந்து சேர்ந்தார்கள்.
விமான நிலையத்தில் எல்லோரும் ஒன்றாக தான் வந்து கொண்டிருந்தார்கள். அபர்ணா யாருடனும் பேசவில்லை. சந்திராவின் அருகில் வந்து கொண்டிருந்தவள், அவன் மீது இடித்தும் விட்டாள்.
ஆனாலும், அதை உணர முடியாத அளவிற்கு யோசனை அவளை ஆக்கிரமிப்பு செய்திருந்தது.
'வீட்டுக்கு எப்போது போவோம்' என்று இருந்தவளுக்கு அக்காவை பார்க்க போகிறேன் என்று சிறு பிள்ளை போல் ஆசையும், தவறு செய்த எண்ணத்தில் பயமும் போட்டி போட, அவளால் வேறு எதிலும் கவனம் வைக்க முடியவில்லை.
தன்னருகில் வந்து கொண்டிருக்கும் அந்த சிறு பெண்ணை பற்றிய யோசனைகளில் மீண்டும் மூழ்கினான் சந்திரசூடன்.
மலேசியாவில் நடந்த விஷயங்கள் பற்றி யாரும் ஒன்றும் அபர்ணாவிடம் சொல்லவில்லை.
ஏற்கனவே ஏதோ எண்ணங்களில் சிக்கி தவிக்கிறாள்.ஆராவின் தம்பியை அடித்து துரத்திய பின்னும் சந்திராவால் உணர்வுகளில் இருந்து வெளியே வர முடியவில்லை.இது போன்ற விஷயங்கள் இங்கே சகஜம் தான்.
நிறைய பாலியல் தொந்தரவுகள்.. அவை குறித்தான புகார்கள்.சில பெண்களுக்கு பட வாய்ப்புகளுக்காக அனுசரித்து போக வேண்டிய கட்டாயம்!அனேகமாக இவற்றை பெண்கள் விருப்பம் கொண்டு செய்வதில்லை.
சில பெண்கள் ஆரா போல உண்டு தான்! மறுப்பது.. ஹ்ம்ம்..ஏன், அவனே தன்னை தேடி வரும் பெண்களை இன்று வரை ஏமாற்றியதும் கிடையாது (?).
அவர்கள் தேடி வரும் விஷயங்கள் நடந்து விடுவதால் இவன் பெயர் இதுவரை அடிப்படவில்லை. ஆனாலும், தில்லை எத்தனை முயற்சி செய்தார். இவன் செய்வது தவறு என்று கண்டித்து பார்த்தார்?
சுளீர் என்று இப்போது வலித்தது. கண்ணெதிரே அபர்ணாவுக்கு நடக்க இருந்த கொடூரம்..!இனி, எந்த பெண்ணிடமும் அந்தரங்கம் கூடாது என்ற முடிவு எடுக்க வைத்தது ஒரு வகையில் அபர்ணா தான்.
வீட்டில் உள்ளவர்களிடம் " அபர்ணா கிட்ட யாரும் ஏதும் சொல்ல வேணாம். ரொம்ப ஒடஞ்சு போய்டுவா " என்று சொன்னவன் சம்பவம் தெரிந்த ஓரிருவரிடம் வெறும் தலையசைப்பில் எச்சரித்தான்.மொத்தத்தில் அபர்ணாவுக்கு தனக்கு நடக்க இருந்த எதுவும் தெரியாது.
அந்த இரவு உறங்கி கொண்டு இருந்த அபர்ணாவின் அறையை வெளிப்புறமாக பூட்டி சாவியை தன் அம்மாவிடம் கொடுத்து விட்டு ஆரா தங்கி இருக்கும் அறையை பார்த்து கொண்டே தன் அறைக்கு சென்று விட்டான் சந்திரா.
அவன் அம்மா வாயை திறந்து ஏதும் சொல்லவில்லைதான். ஆனாலும் அவரது மெச்சுதல் பார்வை அவனை பாராட்ட தவறவில்லை.
அடுத்த நாள் விடிகாலை நேரம் அவனுடைய அம்மா மட்டும் சென்று அபர்ணாவை பார்த்து விட்டு வந்தார்.
ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் தன்னை மறந்து சிறை பட்டிருந்தாள் பெண் .
பெருமூச்சு விட்டுக்கொண்டே வந்தவரின் எதிரில் சந்திரா. அவன் கண்கள் இரவு அவன் சரியாக தூங்கவில்லை என்று தகவல் சொன்னது. அவன் முக பாவனை கேட்ட கேள்விக்கு
சிந்தனைகள் ஆண் அவனை ஆக்கிரமித்தது. நடந்தவற்றை அவன் சாத்தியமாக எதிர்பார்த்திருக்கவில்லை. ஆராவின் தம்பியால் என் பாதுக்காப்பில் இருக்கும் பெண்ணிடம் முயன்று பார்க்க தைரியம் உண்டு என்றால் இதில் ஆராவின் பங்கு எவ்வளவு தூரம் என்று கணக்கிட்டான்.
அபர்ணா ஆராவுடன் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தது ஞாபகம் வர அவன் முகம் இறுகியது. ஆராவை அப்படியே விட்டு வைக்க அவனுக்கு விருப்பம் இல்லை.
நாளை தனக்கு பிடிக்காத வேறு பெண்களை பாதை மாற செய்ய ஆரா மீண்டும் முயற்சி செய்ய கூடும்.
'இது சரியில்லை', முடிவு கட்ட வேண்டும் என்று குறித்துக் கொண்டான்.அபர்ணாவுடன் அவன் யோசனைகள் எப்போதுமே செல்வாவை சுற்றியும் இருக்கும். இன்னும் அவனுமே அதை உணரவில்லை.
உணரும் பொழுது காலம் கடந்து விடாமல் இருக்கட்டும்!'அபர்ணாவுக்கு ஒன்று என்றால் செல்வா எப்படி துடித்து போவாள்?
சொல்வதற்க்கு இல்லை.. என்னிடம் சண்டைக்கு கூட வரக்கூடும்' என்று நினைத்துக் கொண்டான். அவன் இதழ் இதமாக சிரித்தது. அவனை அறியாது செல்வா மீதான அபிப்ராயம் கூட நிதானமாய் மாறத் தொடங்கியிருந்தது.
இதோ, சென்னை சென்றுவிட்டால் அபர்ணா யாரோ…இவன் யாரோ?
நிஜமாய் சொல்லுகிறேன். அந்த எண்ணம்தான் அவனுக்கு. அன்று காலை பதினோரு மணிக்கு தான் அபர்ணா தூக்கம் விழித்தாள். அவளுக்கு இன்னும் தூங்க வேண்டும் போல் புத்தி மசமசப்பாய் இருக்க மீண்டும் படுத்துக் கொண்டாள்.
மீண்டும் சந்திராவின் அம்மா மகனுடன் வர, அப்போதும் அபர்ணாவால் சமாளித்துக் கொள்ள முடியவில்லை.
அபர்ணாவின் நடனம் இன்று இருக்கும் நிலையில் சந்திரா மனதில் அவளைப் பற்றிய கவலைகள் அதிகமானது. அதே சமயம் அபர்ணா மனதிலும் நிறைய கேள்விகள்.
அதில் முதல் கேள்வி,'ஆரா அறையில் நான் எப்படி வந்தேன் 'என்பது. போதாத குறைக்கு உடல் வேறு எங்கோ பறப்பது போல் இருக்க கற்பனை குதிரை வேகமாக ஓடத் தொடங்கியவளுக்கு முகம் பசை இழந்தது.
அவளை புரிந்து கொண்ட சந்திராவின் தாயார்," ஒண்ணும் இல்லை அபர்ணா. நீ சாப்ட புட் ஏதோ ஒதுக்கல போல.
நேத்து நைட் மயக்கம் போட்டு விழுந்துட்ட. டாக்டர் வந்து பாத்துட்டு புட் பாய்சன்னு சொல்லி மெடிசின் குடுத்து இருக்காரு... இப்போ பரவாயில்லையா?ஏதாவது சாப்புடு.பிரெஷா பீல் பண்ணுவ.போய் முதல்ல குளி.கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் " என்று அடுத்தடுத்த விஷயங்களை பேச தொடங்க, கொஞ்சம் சாதாரணமாக உணர்ந்தாள் அபர்ணா.
அவளது முக வெளுப்பு குறைந்தது."என்னோட பிரஷ் கூட எடுக்க என்னோட ரூமுக்கு தான் போகணும்"என்று மெல்லிய குரலில் சொல்லிய அபர்ணாவை பார்க்க பாவமாகிப் போனது அங்கிருந்த இருவருக்கும்.
சந்திரா தனது பாண்ட் பாக்கெட்டிலிருந்து அவள் அறையின் சாவியை எடுத்துக் கொடுக்க மீண்டும் அபர்ணா முகம் குழப்பம் காண்பித்தது.
அதை பெரியதாக காண்பித்து கொள்ளாமல் சாவியை வாங்கிக்கொண்டு தன் அறைக்குள் சென்றவள் அன்றைய தினம் நடக்க இருக்கும் தனது நடனத்தின் ஒத்திகை செய்து பார்த்தாள். உடம்பு சோர்வு வேறு. அவளுக்குள் ஏதோ சரியில்லை என்று மட்டும் தோன்றியது.
மேற்கொண்டு யோசிக்கும் தைரியம் அவளுக்கு இல்லை. தனிமையை வெறுத்தவளாக கீழே உணவகம் நோக்கி போனாள்.
அங்கே இருப்பவர்கள் எல்லாம் இவளை பார்ப்பது போன்ற பிரமை.நல்ல வேளையாக சந்திரா உணவகத்தில் உட்கார்ந்து இருந்தான்.
அவனுடனே சேர்ந்து பெயருக்கு உணவு சாப்பிட்டவள் " ஈவினிங் ப்ரோக்ராம்காக ரிகர்சல் பண்ணனும் அண்ட் ஊருக்கு போக பேக்கிங் ஒர்க் இருக்கு. நான் கிளம்புறேன்" என்று அவனது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து எழ எத்தனிக்க, முதன் முறையாக அவள் தோள்களை அழுத்தி தனது அருகில் உட்கார வைத்தான் சந்திரா." ரிலாக்ஸ்.என்னாச்சு இப்போ? எதுக்கு இப்படி பதட்டமா இருக்கே".
அவனது கேள்வியை விட அவன் கைகள் கொடுத்திருந்த கதக்கதப்பு, அவளை இன்னும் மிரட்டியது.
" ம்ஹும்.. ஒண்ணும் இல்ல... நேத்து நிஜமா எனக்கு புட் பாய்சன் தான் ஆச்சா? இல்ல வேற ஏதாவது... "
அவளால் வார்த்தைகளை முடிக்க முடியாது திணறினாள்.லேசாக சிறிது மனதில் திடுகிட்டவன் தன்னை சட்டென்று சுதாரித்து,
" நீ என்ன கேக்கிறன்னு புரியல. பட் தப்பா ஏதும் யோசிக்காத. நா டான்ஸ் மாஸ்டர் கிட்ட பேசறேன். ஸ்டூடியோ போய் பிரக்டிஸ் பண்ணு. மூளை இப்படி எல்லாம் கற்பனை பண்ணிக்காம வேலை செய்யும்.ஹான்... உன்னோட டிரஸ், மேக் அப் கிட், இன்னும் என்னென்ன வேணுமோ பேக் பண்ணிக்கோ. நேரா நிகழ்ச்சி ஏற்பாடு ஆகியிருக்கும் இடம் வரணும்" என்று விட்டு அலை பேசியில் மூழ்கி விட்டான்.
மேற்கொண்டு அவளை பேச விட அவனுக்கு மனம் இல்லை. சொன்னபடிக்கு ஸ்டூடியோ சென்றவளுக்கு அதற்கு மேல் யோசிக்க நேரம் இருக்கவில்லை.
அவள் பயம் குறையும் அளவில் விழா நடைபெற நடன நிகழ்ச்சி அருமை என்று சொல்லும் அளவுக்கு செய்தாள் அபர்ணா.
ஆராவை மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதித்த தில்லைநாதன், அவள் இந்த நிகழ்வில் எந்த பேட்டியும் கொடுக்க கூடாது என்று கண்டித்து சொல்லிவிட்டார்.
பெரிய திரையில் படத்தின் நாயகன் தோன்றி லைவ்வில் பேச, ஆரா ஒதுக்கப் பட்டது லைம்லைட்டில் விழாமல் போனது.இத்தனையும் அன்று விடியகாலையில் இருந்து ஓயாது முயன்று செய்து ஏற்பாடுகள் செய்து முடித்தவன் நம் கதையின் ஹீரோ சந்திரா தான் மக்களே!(அவனுக்கு ஒரு ஓ.. போடுங்க.)
விழாவில் வந்திருந்த பெரிய வெற்றி படங்களை இயக்கும் மனிதர் சும்மாக இராமல் " சந்திரா.. நீங்களும், டான்ஸ் ஆட வந்திருக்கே, அந்த பொண்ணும் சேர்ந்து நடிச்சா படம் நிச்சயம் போக்ஸ்ஆபீஸ் தான்! சேர்த்து பாத்தா கேமிஸ்ற்றி வேற லெவல். யோசிங்க.. அந்த பொண்ணு கிட்டயும் பேசுங்க நாம படம் பண்ணலாம்.. நா டைரக்ட் பண்றேன்" என்று சிரித்துக் கொண்டே சொல்ல சந்திரா திடுக்கிட்டு போனான்.
"ஏதே, இவ அக்கா, அபர்ணா ஒரு பாட்டுக்கு ஆடினதுக்கே, கூடாதுன்னு சொன்னா.
இவள நடிக்க கேட்டா.. ஸ்ஸ்ஸ்.. ஷப்பா.." என்று மூளையில் அலாறம் அடிக்க, பதிலுக்கு சிரித்து கொண்டே, "ம்ம்.. இதுகூட நல்லா இருக்கே யோசிச்சு சொல்றேன் " என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
அவர் பேசியதில் அவன் மனதில் சிறு சஞ்சலம். அபர்ணாவை பார்க்கும் பொழுது இவளுடன் ஒரே ஒரு படம் நடித்து பார்த்தால் என்ன? என்று அவனுக்கு தோன்றாமல் இல்லை.அவனுக்கு திரைத்துறை புதியது இல்லை. அவன் நடிகன் அல்லவே.ஆனால் அவனுக்கும் நடிப்பு புதியது தானே!
பெரிய அளவில் இல்லாமல் சாதாரணமாக ஒரு படம் அபர்ணாவுடன் சேர்ந்து நடித்தால்தான் என்ன?என்று தோன்றியது.அந்த எண்ணத்தில் மீண்டும் செல்வாவை மறந்தான்.
அபர்ணா மீதான அவன் பார்வை கொஞ்சம் மாறியது. ஆனால், அந்த இயக்குனர் பேசியதில் தில்லை நாதனின் மனைவிக்கு வேறு ஒன்று தோன்றியது. அபர்ணாவின் குடும்பம் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினார்.
எத்தனை நாட்களுக்கு மகன் இப்படி முறை அற்று பெண்கள் சகவாசத்தில் இருப்பதை பொறுத்து கொள்ள முடியும்? ஒருவேளை அபர்ணா போன்ற அழகான, பண்பான பெண் மனைவியாக வந்தால் மகனின் போக்கு மாறுமே! என்று அவர் யோசித்தார்.
இதோ சென்னை வந்து சேர்ந்த பிறகும் அவரவர் யோசனை அவரவர்க்கு.அபர்ணா சினிமாவில் நுழைந்தால் அவள் அம்மா செல்லம், அக்கா செல்வா எப்படி நடந்து கொள்ளகூடும்?இல்லை.. சந்திரா அவளுடன் திருமணஉறவில் இணைவானோ...