எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திணை களவு கொண்டவன்(ள்) பாகம் 1 கதை திரி

priya pandees

Moderator
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!
- ஔவையார் கிபி 1310
அத்தியாயம் 1
பௌர்ணமி ஒளி வெளிச்சமும், அங்கங்கு தீபத்தின் ஒளி வெளிச்சமும் அந்த நீண்ட குகையினுள் பரவியிருக்க. அதின் இறுதியில் மேல் பாறையில் ஆக்ரோஷமாக, பாவம் செய்து தன் எதிர் வருபவர்களை பார்வையால் எரித்துவிடும் ருத்ர தேவியாய், வலது பக்க இரு கைகளில் ஒன்றில் அரிவாளும், மற்றொன்றில் அகல் விளக்குமாயும், இடது பக்க இரு கைகளில் ஒரு கையில் திரிசூலமும், மற்றொன்றில் அரக்கனின் தலையை ஏந்தி கொண்டும், வலது காலை தரையிலும் இடது காலை இன்னொரு அரக்கனின் தலையில் வைத்தும் காட்சி அளிக்கிறாள், வேங்கை நல்லாள். அவள் கையில் ஏந்தியிருக்கும் விளக்கு நெய்யில் 5 பக்க திரியிட்டு எரிவதால் அவள் முகத்தை மேலும் பிரகாஷமாக்கி காட்டி கொண்டிருந்தது. ஒரு ஆள் உயரத்திற்கு பாறை இருக்க அதற்கு மேல் அவள் நிமிர்ந்து நிற்க, தரிசிக்க வரும் யாரும் அன்னார்ந்து தான் பார்க்க வேண்டும். தவறு இழைக்காதவர்கள், தவறி தவறிழைத்தவர்கள் மட்டுமே அவளை நிமிர்ந்து காண இயலும், அவர்கள் கண்களுக்கு மட்டுமே அவள் முகம் சாந்தமாய் காட்சியளிக்கும். தெரிந்தே தவறிழைத்தவர்களை அவள் கிஞ்சித்தும் மன்னிப்பதில்லை. ஆதலாலேயே அவளை குளிர்விக்கும் பொருட்டு, அந்த அடர்ந்த குகையினுள் அவள் மீது மட்டும் தன் ஒளியை வீசி குளிர வைத்து, சாந்த படுத்துவதாக தன் இருப்பை வைத்துக் கொள்வார் சந்திரன்.

அவள் முன் தலைவிரி கோலமாய் கண்ணில் நீர் வழிய, அரச செல்வ உடையில் அதீத கோபமும், மனவேதனையும் சரிசமமாய் போட்டியிட நிறைமாத வயிற்றுடன், யாரையோ எதையோ எதிர்பாத்தவாறு, வேங்கை நல்லாளின் முகத்தையே கண்ணெடுக்காமல் "ஏன் எனக்கு இப்படி ஒரு வாழ்கை அமைத்து கொடுத்தாய்" என கேட்பது போல் பார்த்திருந்தாள் பெண்ணொருத்தி. அவளின் அருகில் அவளையே பாவமாய் பார்த்தவாறு நின்ற தோழி பெண் "இளவரசி எழுந்திருங்கள் அரண்மனை திரும்பிவிடலாம். நாம் வந்து வெகு நாழி கழிந்துவிட்டது, அரசரும் நாம் திரும்பிருப்போம் என்றெண்ணி அங்கு சென்றுருக்கலாம், சாமம் கடந்துவிட்டது, நிறைமாத கர்ப்பிணி இப்படி குகையினுள், குளிர்ந்த காற்றில் வெகுநேரம் இருக்க கூடாது வாருங்கள் சென்றுவிடலாம்" என அழைக்க, அவள் பேசியது ஏதும் காதில் விழுந்ததா என்பதுபோல் அமர்ந்திருந்தாள் இளவரசி திரும்பியும் பாராமல்.

அப்பொழுது "டொக் டொக்" என்ற சத்தம் சற்று தூரத்தில் அந்த குகையின் அர்த்த ராத்திரி அமைதியின் பொருட்டு பேரொலியாய் கேட்டது, வருபவரின் கம்பீரத்தை எடுத்துரைத்தது. அவ்வளவு நேரம் பிசகாத இளவரசியின் சிந்தனை இந்த நடையின் சத்தத்திலேயே சிதறியது. கண்டுகொண்டாள் தன்னை முற்று முழுதாய் ஆள்பவன் வந்துவிட்டானென. ஆனால் சந்தோசப் பட முடியவில்லை. அவன் நெருங்க நெருங்க கோவமும், வேதனையும் அதிகரித்தது, மூச்சு வாங்கத் தொடங்கியது. அவளுக்காகவே குவளையில் தண்ணீர் அடைத்து எடுத்து வந்திருந்ததை தோழி பருக குடுக்க, சிவந்த கண்களுடன் அவளை முறைத்தவாறு அதை தட்டிவிட்டாள். அது வெண்கல குவளை பெரிய சத்தத்துடன் உருண்டு சென்று, உள் வந்திருந்த அவள் தலைவனின் காலடியில் சென்று நிற்க. அவன் நடையும் அங்கேயே தடைபட்டது. அரசரை காணவும் தோழி பெண் வெளியேறிவிட, அரசன் தன் தலைவியை நோக்கி முன்னேறினான். அவள் இப்பொழுது அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். "அழகன் பேரழகன், பார்ப்பவரையெல்லாம் பார்வையிலும், இந்தச் சின்னச் சிரிப்பிலும் மயக்கிவிடும் ஆண்மைமிக்க அழகன். அது தானே என் வாழ்க்கையை சீரழித்துவிட்டது. இவன் அழகனாக இல்லாமல், அரசனாக இல்லாமல் இருந்திருக்க கூடாதா?" இவ்வாறெல்லாம் மனதினுள் குமுறிக்கொண்டு தன்னை நோக்கி வருபவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவனோ தன் தலைவியின் சிறுபிள்ளை கோவத்தை ரசித்தவாறு சின்ன சிரிப்புடன் நெருங்கினான்.

அவளோ மேலும் "இல்லை துரோகம் இழைக்கவும் நம்பியவளை ஏமாற்றவும் அழகும், அரச பதவியும் காரணமில்லை, அவனது தீய எண்ணங்களே காரணம் அவனது ஒழுங்கீனமற்ற மனமே காரணம், நான் இவனை சந்திக்காமலே இருந்திருக்கக் கூடாதா" என தன் மனநிலையை ஒரு நிலைப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். அவளை நெருங்கியவனோ அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து, "தாமதத்திற்கு மன்னித்துவிடு மகிழ் அரண்மனை சென்றிருப்பாய் என்றெண்ணி அங்கு சென்றுவிட்டு வருகிறேன். ஏன் இன்னும் இங்கேயே அமர்ந்திருக்கிறாய்? கிளம்பு அரண்மனை சென்று பேசிக் கொள்ளலாம்" என அவளை தூக்கி விட, தோளைத் தொட. அவன் கையை தட்டிவிட்டாள் தீயாய் முறைத்தாள், பின் அவனைப் பார்த்து இகழ்ச்சியாய் சிரித்தாள். "ஏன் தாமதம் என்று தான் எனக்கு நன்றாக தெரியுமே. நேற்று அந்தி சாயும் நேரம் தங்களை எதிர்பார்த்த மனைவியைக் காண எப்பொழுதுதான் தங்களால் வர இயலுகிறது என்பதை காணவே இங்கேயே காத்திருக்கிறேன். எப்படியோ விடியும் முன் வந்து சேர்ந்து விட்டீர்கள்" என மேலும் வேதனையாய் சிரித்து கூற.

"அதற்கு தான் மன்னிப்பு கேட்டு விட்டேனே மகிழ். எழுந்திரு, சாம காற்று காய்ச்சல் கண்டு விடும். நீ தைரியசாலி என நான் அறிவேன், அதை இப்படி நடுக்காட்டில் வந்திருந்து நிரூபிக்காதே, என எத்தனை முறை வேண்டுவது, எழுந்திரு மகிழ்". "இன்னமும் தாங்கள் தாமதத்திற்கான காரணத்தைக் கூற விளையவில்லையே, இவளிடமெல்லாம் எதற்காகக் கூற வேண்டும் என்ற எண்ணம் கூட வந்து விட்டதோ?" எனக் கேட்க. "உனக்குத்தான் தெரிந்திருக்கிறதே. குறிஞ்சிக்கு பிரசவ வலி கண்டு விட்டது அவள் தகப்பனாரயும் தான் மனுதீர பாண்டிய மன்னனிடம் ஓலை கொடுத்து செய்தி பெற்றுவர அனுப்பியுள்ளோமே. அதான் வைத்தியரிடம் அழைத்துச் சென்று குழந்தை பெறவுமே கிளம்ப முடிந்தது. தற்பொழுது தனார்த்தன் வரவும் அவனை அங்கு இறுத்திவிட்டு வருகிறேன்". "ஒரு பொய்யை மறைக்க ௭த்தனை பொய். மந்திரியின் மகளின் பிரசவத்திற்கு அரசனே உடனிருந்து பிள்ளைப் பேறு பெறும் வரை கண்டு விட்டு வருகிறார். இப்படித்தான் தங்கள் நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களையும் காக்கீறிர்களோ?" இவள் இடக்காக கேட்க.

அவன் முகத்தில் புருவ சுளிப்புடன் "நீ என்ன பதில் எதிர்பார்க்கிறாய் மகிழ், என்னிடம் நேராகவே கேள். நான் கூறுவதை நீ ஏற்கும் சூழ்நிலையில் இல்லை போல் தோன்றுகிறது" என்றான் அரசனாகபட்டவன். "ஆமாம் எந்த சூழ்நிலையும் எனக்கு ஏற்பாக அமையவில்லை" என அமைதியாக சொன்னவள் "எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். உங்களுக்கு என்னிடம் கூற வேண்டிய, மறைத்த விஷயம் என ஏதேனும் உண்டா?" என்றாள். "என்னவாயிற்று மகிழ் உனக்கு? உன்னிடம் நான் எதை மறைக்க போகிறேன். சிறிது காலமாகவே நீ சரியாக இல்லை, உன் மனதை ஏதோ உறுத்துகிறது எதுவாகினும் சொல் நான் தீர்த்து வைக்கிறேன்." "பொய் மேல் பொய்யாக கூறிக் கொண்டு செல்கிறீர்கள் அதுதான் என்னை உறுத்துகிறது, நீங்கள் செய்பவற்றை எல்லாம் கண்ணால் கண்டும், கேட்டும் இன்னமும் தீர விசாரித்துக் கொள்வோம் என உங்கள் முன் உயிரோடு போராடிக் கொண்டிருக்கிறேன். அதற்கு காரணமான தங்கள் மீது நான் கொண்ட காதல் அது என்னை உறுத்துகிறது, நம் காதலுக்கு அடையாளமாக கிடைத்த பிள்ளையை சந்தோஷமாக சுமக்க விடாமல் வேதனையிலும் கண்ணீரிலும் அழைய விட்டீர்களே, அந்த நிலை என்னை விட்டு நீங்காமல் மனதில் நின்று உறுத்துகிறது. இனியும் என் வாழ்க்கையயும் வாழ்நாளையும் எப்படி இந்த பிள்ளையுடன் கழிக்கப் போகிறேனோ, என என் மனம் உறுத்திக்கொண்டே இருக்கிறது, இதில் எதை சரி செய்யப் போகிறீர்கள்? எதை தீர்த்து வைப்பீர்கள்? கூறுங்கள் புராரிவன அரசே. தங்கள் நாட்டை சேர்ந்த ஒரு அபலையின் கண்ணீருக்கு பதில் கூறுங்கள்" அக்னியாய் கேட்டு முடித்தாள்.

"ஏன் இவ்வாறெல்லாம் பிதற்றுகிறாய் மகிழ், நான்தான் உன்னை சரியாக கவனிக்கவில்லையோ? என்ன நடந்தது ஏன் இப்படி பிடிப்பற்றது போல் பேசுகிறாய்? அம்மாவோ இல்லை பாவையோ ஏதேனும் கூறினார்களா? எனக்கு தெளிவில்லை மகிழ். கோபம் கொள்ளாமல் நிதானமாகக் கூறு, இந்நிலையில் இவ்வளவு கோபம் ஆகாது பிள்ளையும் பதறும் என்றுக் கூறுவார்கள், நிதானம் கொள்" என அவள் வயிற்றை தொட வர. தொட விடாமல் நகர்ந்து நின்றாள், 'வந்ததிலிருந்து ஏன் தொட விடாமல் யாரோ வேற்றாடவன் போல் ஒதுங்குகிறாள்' என சிந்திக்கலானான். "ஏன் இப்படி மேலும் மேலும் நடித்து நல்லவன் வேடம் இடுகிறீர்கள். என் பிள்ளை செத்தால்தான் என்ன, தங்கள் குலம் தான் தலைத்துவிட்டதே அதையே தங்கள் வாரிசாக அறிவித்து மகிழுங்கள். நான் எங்கோ இப்படியே போய் விடுகிறேன்" என உடைந்து அழுதாள். பிள்ளை செத்தாலும் என்பதில் வெகுண்டெழுந்து அரசனும், "என் பொறுமையை சோதிக்காதே மகிழ், ஒரு கர்ப்பிணி உதிர்க்க கூடாத வார்த்தையை உதிர்த்துக் கொண்டு இருக்கிறாய். இதுவே என் வாரிசு வேறு யாரை வாரிசாக அறிவிக்க சொல்கிறாய்" என்றான் இப்பொழுது குரலில் ஒரு உறுமல் வந்து விட்டிருந்தது. "ஓ!அதையும் என் வாயாலேயே கேட்க வேண்டுமோ? என்னே உங்கள் நல்லெண்ணம். சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் அந்த தேவி பெற்றெடுத்திருக்கிறாளே, அது உங்கள் வா'" என சொல்ல வந்து வெளிவந்த கேவலை அடக்கி வாயால் கூட வேறு பெண்ணின் பிள்ளையை அவன் பிள்ளையாக சொல்ல முடியாமல், "அது உங்கள் குடும்ப வாரிசு இல்லை என சத்தியம் செய்ய முடியுமா உங்களால்" என்றாள் இவளும் உறுமலுடன்.

அதிர்ந்தவாறு தலைக் குனிந்து நின்று விட்டான். அவனது தலைகுனிவே அவளுக்கு அவள் ஏமாற்றப்பட்டக் கதையைக் கூறுவது போலிருந்தது. அப்பொழுதும் அவன் தலைக்குனிவை காண சகியாமல் "ம்மா" என்று கேவலுடன் சென்று வேங்கை நல்லாளின் வலது கால் இருந்த பாறையின் மீது தன் தலையை இடித்துக் கொண்டாள். "இதைக் கேட்ட பின்னும் ஏன் என் உயிர் என் கூட்டை விட்டுப் பிரியவில்லை. வேங்கை நல்லாளே இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாயே? என்னை உன்னிடம் கூப்பிட்டு கொள்ளக் கூடாதா? என் அலைக்களியும் மனதிற்கு அமைதி அளிக்க கூடாதா?" என மாறி மாறி மோதி குருதி வெளியேற வைத்தாள். 'இவளுக்கு எப்படித் தெரிந்தது? யார் கூறியிருப்பார்கள்? என்னவென்று கூறியிருப்பார்கள்?' என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவன், அவளின் புலம்பலில் நிமிர்ந்து அவள் முட்டிக் கொள்வதைக் கண்டு அதிர்ந்து, "ஏய் என்னடி செய்து கொண்டிருக்கிறாய்? உனக்கு கிறுக்கு முத்தியாயிற்று, நிறை மாதத்தை வைத்துக்கொண்டு கூறுகெட்ட வேலையெல்லாம் செய்து கொண்டிருக்கிறாய், வா அரண்மனை போவோம். இரத்தம் போகிறது" என அவள் தலையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறு கையால் அவள் தோளை தொட்டு திருப்ப, எங்கு இருந்துதான் அவளுக்கு அவ்வளவு பலம் வந்ததோ? அந்த வீரனை ஒரே தள்ளில் தள்ளிவிட்டு, அவன் இடையில் இருந்த வாளை உருவியிருந்தாள்.

"என்ன செய்கிறாய் மகிழ்" என ஆவேசத்தில் அவளை அவளே ஏதும் செய்து கொள்வாளோ? என பயந்து வாளை வாங்க வர, "ச்சீ என்னைத் தொடாதே அவளைத் தொட்ட கையால் என்னை தொடாதே. என்னை அழைத்துச் சென்று உன் அரண்மனையில் அந்தப்புரத்தில் இருத்தப் போகிறாயா? அவளை உன் அருகில் இளவரசியாய் காண என்னை அழைத்துச்செல்ல துடிக்கின்றாயா? மாட்டேன் அப்படி ஒரு செயலை நடக்க விடமாட்டேன். தவறு இழைத்தவன் நீ, துரோகம் இழைத்தவன் நீ. நீ உயிரோடு இருக்கையில் என்னை நான் ஏன் வருத்திக் கொள்ள வேண்டும். உன்னை சந்தோஷமாக இருக்க விட மாட்டேன், நீ வாழவே தகுதியற்றவன்" என்றெல்லாம் பிதற்றியவள் ஓங்கி அவன் நெஞ்சில் இறக்கியிருந்தாள் அந்தக் கூர்வாளை.

அந்த கூர் வாள் இறங்கும் முன்னே அவள் வார்த்தைகள் அவன் நெஞ்சில் ஈட்டியாய் இறங்கியிருந்தது. அவனுக்கு பதில் கூற இயலவில்லை, நெஞ்சில் இருந்து குருதி வெளியேற பாறையின் மேல் சாய்ந்தவாறு அமர்ந்து விட்டான். தகப்பன் குருதி மண்ணில் விழவுமே, கருவறையில் இருந்த அவனது இரத்தம் வெளிவர துடிக்க ஆரம்பித்தது. தகப்பன் மண்ணில் சரிய முன் தன் முகத்தை காட்டிய தீர வேண்டும் என்று எண்ணியதோ? கர்ப்ப வாசலை முட்ட ஆரம்பித்தது. இளவரசி கணவனை குத்தி விட்டு அவன் ரத்தம் வெளியேற அமரவுமே படபடப்பு அதிகரிக்க அப்படியே மண்ணில் அமர்ந்துவிட்டாள். உயிருக்குயிராய் காதலித்தவன் ஆயிற்றே, தன் கையாலேயே அந்த உயிரை எடுக்க துணிந்த விட்டோமே என இவள் அவன் நெஞ்சில் வீற்றிருந்த வாளை பார்த்து கண்ணீர் வடிக்க வயிற்றில் வலி ஏற்பட தொடங்கியது. அவள் "அம்மா" என அலற, "என்னவாயிற்று மகிழ்" என பதறினானே தவிர, அவனால் இமியளவு நகர முடியவில்லை. கண் மங்க ஆரம்பித்திருந்தது, அவளோ வலியை அவன் முன் காட்ட பிடிக்காமல் அடக்கிக்கொண்டு, "ஏன் என்னை ஏமாற்றினீர்கள்? எனக்கு துரோகம் செய்ய உங்களுக்கு எப்படி மனது வந்தது" என அழுது அரற்றி வலியை போக்கப் பார்த்தாள்.

அவனோ மெலிதாக சிரித்தான், 'இல்லை என மறுக்கவுமில்லை, ஆமாம் என்னை மன்னித்துவிடு என ஒப்புக் கொள்ளவுமில்லை'. "அடுத்த பிறவியென்று ஒன்றிருந்தால் எனது காதலையும், அதன் உன்னதத்தையும் உனக்கு முழுதாக உணர்த்துவேன். நான் உன்னை காதலிப்பதை விட, அதிகமாய் நீ என்னை காதலிக்குமாறு செய்வேன். எனது காதலை மீட்டெடுப்பதற்கு இந்த வேங்கை நல்லாளே சாட்சி.கண்டு கேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள"என வள்ளுவன் கூற்றை காதலிக்கும்போது கூறியதை திருப்பியும் அவளைப் பார்த்து கூறி நினைவு படுத்தினான். அதில் அவள் மேலும் பொங்கி அழ. "சென்று வருகிறேன், குழந்தை பத்திரம் வேடத்திதிதி" என்ற சொல்லுடன் தன் உயிர் நீத்தான் புராரி வனத்தின் மன்னன்.

தனது தகப்பனை காண விடாமல் செய்து விட்டாயே என நினைத்த குழந்தையும் தனது இருப்பை வெளியேற்றத்தை அதிகப்படுத்த, இளவரசிக்கு வலி அதிகரிக்க ஆரம்பித்தது. தனது தலைவனின் துரோகமும், உயிரைப் பறித்த வேதனையும், தனது நேசம் இவ்வளவு சீக்கிரம் கரிகி விட்ட சாபம் என அனைத்து உணர்ச்சிகளும் கலந்து அவளை சாவின் விளிம்பை நோக்கி இழுத்துச் சென்றது. அவளுக்கும் வாழ பிடிக்கவில்லை, பிள்ளையையும் சேர்த்துக் கொள்ளவும் பிடிக்கவில்லை. ஒருவாறு மனம் பிசகிய நிலையில் தான் இருந்தாள்.

அப்போது ஒரு எகத்தாள கெக்கரிப்பான சிரிப்பு அந்தக் குகையைக் கிழித்துக் கொண்டு கேட்டது. இவள் வலியில் முனங்கிக் கொண்டு "அம்மா" என வருத்திக் கொண்டுத் திரும்பிப் பார்க்க. அவள் நாத்தனார் பூபாவை முகமெல்லாம் பூரிக்க, அதீத சந்தோசத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் பின்னயே இளவரசியின் தோழி பதட்டத்துடன் நிற்பது தெரிந்தது. பாவையைத் தாண்டி இளவரசியை நெருங்கவும் முடியாமல், பாவையை உள் நுழைவதை தடுக்கவும் முடியாத பதட்டம் அவள் முகத்தில் தெரிந்தது. இவள் மறுபடியும் வலியில் "ம்மா" என முனங்க. தோழிப் பாவையைத் தாண்டி இளவரசியை நெருங்கிவிட்டிருந்தாள். "என்ன இளவரசி ஆச்சு. அரசருக்கு ஏன் இந்த நிலைமை? காவலாளிக்கு சொல்லிவிட்டு வரவா" என்றாள் அவள்.

"யாரை காக்க காவலாளி அழைத்து வரப் போகிறாய்? இந்த நாட்டின் அரசனை, எனது தமையனைக் கொன்றவளுக்கா? காவலாளி. இவளை சிறையிலிட வேண்டி வேண்டுமானால் அவர்களை அழைத்து வா" என்றாள். தோழி முழிக்க "உன்னை போ" என்றேன் என உறும. அவளோ இளவரசியை பார்க்க, இளவரசி கண்ணசைக்கவுமே கிளம்பினாள். அது பாவையை மேலும் சீண்டி விட.

"என்ன அகமகிழ்தினி நீ இப்படி சுயபுத்தி இல்லாமல், கேட்பார் பேச்சை கேட்டு உன் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டாயே. உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது" என்றாள் பாவை கலகலவென சிரித்துக் கொண்டு. புருவம் சுருக்கி இளவரசி பார்க்க, "உனக்கு புரியாதில்லையா? உண்மை என்னவென்று தெரிந்து கொண்டே சிறைச்சாலை செல்" என்றவாறு முற்று முழுதாக நடந்த குளறுபடிகளை கூற.

அவள் பேச்சைக் கேட்கக் கேட்க, சுய கழிவிரக்கத்தில் ரத்த அழுத்தம் ஏற ஆரம்பித்தது இளவரசிக்கு. திரும்பி சிரித்துக்கொண்டே உயிரை விட்ட தன் மன்னவனைக் கண்டாள், எப்பேர்ப்பட்ட வீரன், ஒரே வாள் வீச்சில் சாகக் கூடியவனே அல்ல. தன்னால் தன் பேச்சால் மட்டுமே உயிரை விட்டு விட்டான், என மனம் கூக்குரலிட ஆரம்பித்தது.

மெதுவாக அவனை நெருங்கி, வாளைப் பிரித்தெடுத்தாள். பின்னால் நாத்தனார் கெக்கரிப்பிட்டு சிரிப்பது தெரிந்தது. திரும்பாமலேயே அந்த வாளை அவளை நோக்கி வீசி எறிந்தாள். தன் மன்னவனின் வேடத்தி என நிரூபித்தாள். பின்னால் சிரித்துக் கொண்டிருந்தவளின் சிரிப்பும், மூச்சும் சட்டென்று நின்று விட்டிருந்தது. தன்னவனின் நெஞ்சில் வாளை வீசிய இடத்தில் சென்று தன் முகத்தைப் பதித்து மூச்சை அடக்கினாள். தன்னைக் காணாமல் தாயும் சென்று விடுவாளோ என நினைத்த குழந்தையும் திமிறிக் கொண்டு வெளிவந்தது. அவளின் குருதியோடு வெளியேறிய குழந்தையையும், தானே மூச்சை இழுத்துப் பிடித்து கையில் ஏந்தி, தன்னவனின் குருதி படர்ந்த நெஞ்சில் கிடத்தினாள். தாய் தந்தை இருவர் ரத்தத்திலும் பிறந்ததும் கலந்தது அக்குழந்தை.

தனது மேல் அங்கியை கழற்றி அந்தப் பெண் குழந்தையின் மீது சுற்றி, வேங்கை நல்லாளின் காலடியிலிட்டுவிட்டு கையெடுத்து நிமிர்ந்து பாராமல் வணங்கினாள், "என்னை மன்னித்துவிடு, உன் இடத்தைக் கலங்கப் படுத்திவிட்டேன். என் தலைவனின் வாரிசு இந்த மண்ணை ஆள வேண்டும் காப்பாற்றிக் கொடு. எங்களுக்கு மறுபிறவிக் கொடு, எனது காதலை முழுதாக என் கணவனுக்கு சாகும்வரை அளிக்க வேண்டும்" என மன்றாடி வணங்கி மீண்டும் தன் தலைவனை அடைந்து அவன் மார்பிலேயே தன் உயிரை விட்டாள், அவனின் வேடத்தி.(அங்கு நடந்த அனைத்தையும் அமைதியாக கண்டவாறே நின்றாள் வேங்கை நால்லாள். அது அவர்களது விதி பயன் என்று எண்ணினாளோ). அங்கு அதன் பின் வந்த இளவரசியின் தோழி, காவலாளி சகிதம் குழந்தையை மீட்டுச் சென்றனர். ஏன் இறந்தார்கள்? எப்படி இறந்தார்கள்? என்பது அந்த மூவரின் ரகசியமாய் புதைக்கப்பட்டது.

பெண் குழந்தையாய் போனதால் மகிழ்தினியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசாள இயலவில்லை. ஏனென்றாள் அதன் பின் அவர்கள் ஆட்சியே அங்கு நடக்கவில்லை, தில்லியை ஆண்ட துலுக்கியர்கள் தமிழகத்தின் சென்னை மாகாணத்தின், பூராரி வனத்தையும் ஆக்கிரமித்திருந்தனர். மறுபிறவிக்காக தலைவனும், தலைவியும் காத்திருக்கின்றனர்.
 
அத்தியாயம் 2
2019ஆம் ஆண்டு,
அன்று ஜனவரி மாதம் பத்தாம் தேதி, நைட் 12 மணி. அது நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏபிஜே அப்பார்ட்மெண்ட், ஏ,பி,சி,டி, இ ன்னு 5-பிளாக்குகளை அடக்கிய 500 வீடுகளைக் கொண்டது. ஏ, பி வெஸ்ட் ஃபேஸிங் பார்த்தும், டி, இ ஈஸ்ட் ஃபேஸிங் பார்த்தும், ஆப்ஃபோசிட் ஆப்ஃபோசிட் இருக்க, நடுவில் சி பிளாக் அதிக இடத்தை ஆக்கிரமித்து நார்த் ஃபேஸிங்கில் இருக்கும். 5-பிளாக்கின் நடுவில் இருக்கும் ஸ்பேஸ்ஸில் வாக்கிங் ஸ்பேஸ், டென்னிஸ், வாலிபால் கிரௌண்ட், சில்ட்ரன்ஸ் பார்க் என்றிருக்க, சும்மிங் புல் வசதியுடன் கூடிய அபோவ் மிடில் கிளாஸ் மக்கள் வாழும் அப்பார்ட்மெண்ட். பாதி பேர் வாடகைக்கும், பாதிபேர் இ.எம்.ஐயிலும் தற்போதைய சொந்தக்காரர்களாக வாழ்கிறார்கள்.

பில்டிங் நடுவில் கிருஷ்ணர் புல்லாங்குழலுடன், ராதையை அருகில் நிறுத்தி, நீர் வீழ்ச்சியின் குளிர்ச்சியில் போஸ் கொடுத்துக் கொண்டிருக்க. மொத்த அப்பார்ட்மெண்ட்டும் அந்த ஜாமத்திலும் யாருக்காகவோ விழித்திருந்தது. தங்கள் தங்கள் வீட்டு பால்கனியில் நின்று சிலபேர் குசுகுசுவென பேசிக் கொண்டிருக்க, சிலர் கார் பார்க்கிங் வந்து வெயிட் பண்ணி கொண்டிருந்தனர். ஒரே சலசலப்பாக இருந்தது.

அந்நேரம் போலீஸ் என எழுதப்பட்ட பொலீரோ ஒன்று செக்யூரிட்டி கேட்டை திறந்து விட உள்ளே வந்தது. சலசலப்பு சற்று அடங்கி காரை கவனித்தது, காரிலிருந்து நெடுநெடுவென்று ஆண்களுக்கு ஒத்த உயரத்துடனும், இரவு, பகல் பாராமல் அலையும் வேலையின் காரணத்தால் மங்கிய நிறத்துடனும், ஐ.பி.எஸ் யூனிஃபார்மில் கம்பீரமாக இறங்கினாள் மிஸ்.வேதிகா மெய்யப்பன்.

மெய்யப்பன், வடிவுமொழி தம்பதியரின் மூத்த மகள். 28 வயதாகியும் "நாட்டுக்காகவே நான்" ௭ன சொல்லிக்கொண்டு, கல்யாணத்தை தள்ளிப் போட்டு கொண்டு வரும் நமது கதையின் ஹீரோயின்(சாரி) ஹீரோயின்னுடைய அக்கா.

"என்னமா இன்னும் வரலியா அவ?" என்றவாறு இறங்கிய வேதிகா, திரும்பி டிரைவரிடம், "மார்னிங் 6க்கு வந்துருங்க வேலு, தாம்பரம் வரப் போக வேண்டியிருக்கு" என்க. "ஓ.கே மேடம்" என பொலீரோவை திருப்பி சென்றுவிட்டார் வேலு.

"இன்னும் காணும்மா, உயிர வாங்குறதுக்குன்னே என் வயத்துல வந்து பொறந்துருக்கு, ௭றும. எந்த நேரம்ன்னு அவள பெத்தேனோ தெரியல. அந்த வயித்துல பிரண்டைய வச்சுத்தான் கட்டனும்" என வடிவுமொழி புலம்ப.

"இவளால எதுவும் பிரச்சனை வந்துருமோன்னு அரக்க பரக்க கமிஷனர் மீட்டிங்கிலயிருந்து ஓடி வந்துருக்கேன். இனியெல்லாம் பிரச்சனை வந்தா வரட்டும்ன்னு விட்டுட்டு வேடிக்கை பாக்கணும் அப்பதான் அந்த கழுதைக்கு புத்திவரும்". வீட்டுக்குக் கூட செல்லாமல் அங்கேயும் இங்கேயும் நடந்து கொண்டு வேதிகா திட்டிக்கொண்டிருக்க.

அப்போது சி ப்ளாக்கின் டோர் நம்பர் 28 கொண்ட வீட்டின் பால்கனியிலிருந்து ஒரு அழகான பெண், ஐந்தரை அடி உயரம், 26 வயது, ஆனால் அந்த அழகு முகத்தில் அவ்வளவு ரவுத்திரம், "ம்மா, இன்னும் எவ்வளவு நேரம் அங்கேயே நின்னு அந்த ராங்கிக்கு காத்துக்கிடக்க போறீங்க, வந்துப் படுங்க. இன்னைக்கு அவ கார் பார்க்கிங்ல தூங்கட்டும். நாளைக்கு மார்னிங் ஃபஸ்ட் கேஸ் என்னோடது தான், நான் சீக்கிரம் போகணும். இதனால ஏதாவது டிலேயாச்சு. அப்புறம் நான் மனுசியா இருக்கமாட்டேன் சொல்லிட்டேன்" என மொத்த அப்பார்ட்மெண்ட் கோபத்தையும் தனதாக்கி இறக்கிவிட்டு சென்றாள், ஹீரோயினின் இரண்டாவது அக்கா சுகாசினி.எம்.ஏ.பி.எல்.

"இவ வேற நானே இன்னும் அவள காணுமே, எங்கயும் எதுவும் பிரச்சனைல மாட்டிக்கிட்டாளோன்னு பயந்துட்டுருக்கேன், நேரங்காலம் தெரியாம கத்திட்டுருக்கா. அவளுக்கு ஒரு போன் பண்ணி பாறேன்டி" என்றார் வடிவு தன் மூத்த மகளிடம்.

இவை எல்லாவற்றையும் கண்டு கொண்டு அமைதியாக கிருஷ்ணன் முன்னிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார் மெய்யப்பன், ஹைகோர்ட் ஜட்ஜ். நீதி, நேர்மை என்றிருப்பவர், அவர் தொழிலில் அப்படி இருப்பது கடினமே. அப்படி ஒரு இக்கட்டான நெறி தவற வேண்டிய சூழ்நிலை வந்தால் கூட, வேறு ஜட்ஜிடம் ஒப்படைத்துவிட்டு, பெண் பிள்ளைகளை பெற்றவராய் ஒதுங்கி விடுவார். ஆனால் பிள்ளைகள் மூவரையும் தைரியமாகவே வளர்த்தார். சிறுவயதிலிருந்து தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வைத்தார். தப்பை தட்டிக் கேட்க வேண்டும், சுய நலமாய் இருக்க கூடாது என போதித்தார்.

பலன் மூத்தது 'கல்யாணமே வேணாம்' என உறுதியாக நிற்கிறது, அவள் வேலையில் கெட்டி, மற்ற எல்லா வகையிலும் தகப்பன் பெயரை காப்பாற்றி விட்டாள் வேதிகா. இரண்டாவதும் அப்படித்தான், ஆனால் கொஞ்சம் களவாணித்தனம் உண்டு. "இதுகூட இல்லாவிட்டால் பொழைக்க முடியாது, முன்னேற முடியாது" என்பது அவள் நியாயம். ஆனால் லிமிட் தாண்டியதில்லை, அப்பாவின் மரியாதையை காப்பாற்ற வேண்டி அடக்கி வாசிக்கிறாள். அக்காவுக்கு திருமணம் முடியாமல் தான் செய்துகொண்டால், அவளுக்கு நடக்காமலே போகக்கூடும் என தொழிலில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேறிக் கொண்டிருக்கும் மாடன் மங்கை.

இப்படி மூத்த இரு பெண்கள் இருக்க, மூன்றாவதாய் பையனே வேண்டும் என வேண்டி விரும்பி பெற்றெடுத்த கடைக்குட்டியை எந்த ரகத்தில் சேர்ப்பது என்று இன்று வரை குழம்பி கொண்டிருக்கிறார் மெய்யப்பன்.

பிறக்கும்போதே, "நீ எதிர்பாத்தா நா பையனா பொறந்திருவேணா? பொண்ணாதான் பொறப்பேன். ௭ன்ன பண்ணுவ? " என வந்து பிறந்தவள். ஆனாலும் அவருக்கு(மெய்யப்பனுக்கு) அப்போதிலிருந்தே அவளைத்தான் மிகப்பிடிக்கும், சித்ரா பவுர்ணமி அன்று பிறந்தாள். பிறக்கும்போதே கொழு கொழு என எல்லோரையும் வசீகரிக்கும், தூக்கிக் கொஞ்ச தூண்டும் அழகோடு பிறந்தவள். ஆசையாய் அவர் அம்மாவின் பெயரை வைத்து அழகு பார்த்தார், ஆனால் இன்றுவரை ஒரு முறையேனும் அந்த பெயரை சொல்லி அவர் அழைத்ததில்லை. கடைக்குட்டி பாப்பாவாய் பிறந்ததால் அன்றிலிருந்து இன்றுவரை "பாப்புக்குட்டி" தான்.

மெய்யப்பனே அப்படி அழைக்கையில் அவரது மனைவி மட்டும் மாமியார் பெயர் சொல்லி அழைத்து விட முடியுமா? அதனால் அவருக்கும் பாப்புக்குட்டியாக, மற்றப் பிள்ளைகளும் அதையே பழக, சுற்று வட்டாரம் என எல்லோருக்கும் அவள் பாப்புக்குட்டி தான். இவர் அந்த யோசனையில் இருக்க, சற்று தூரத்தில் ஏதோ பாட்டு சத்தம் கேட்பது போலிருந்தது, அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து மிக அருகில் கேட்பது போலிருக்க, அந்த மொத்த அப்பார்ட்மெண்ட்டிற்கும் புரிந்தது, அவ்வளவு நேரம் அனைவரையும் காக்க வைத்த ஜீவன் ஒருவழியாக வீட்டை எட்டி விட்டதென்று.

கோக்கனட் மே லஸ்ஸி மிலாகே, ஆஜாவ் சாரே மூடு பனாகே, ஆல் தி ரஜினி பேன்ஸ், தலைவா டோன்ட் மிஸ் தி சான்ஸ், ஆல் தி ரஜினி பேன்ஸ், தலைவா டோன்ட் மிஸ் தி சான்ஸ், லுங்கி டான்ஸ், லுங்கி டான்ஸ், லுங்கி டான்ஸ், லுங்கி டான்ஸ்.

அந்தக் குட்டியானை இந்தப் பாட்டை போட்டு அலறிக்கொண்டு உள் நுழைந்தது, சத்தம் போட்டு பாடிக் கொண்டே வண்டியின் பின்னாலிருந்து குதித்ததால் நம் பாப்புக்குட்டி, அவளைத் தொடர்ந்து ஒரு 15 வானரம் பொத்து பொத்தென குதித்தது.

மொத்த அப்பார்ட்மெண்ட்டும் இவர்களை முறைத்து நிற்க, நம் பாப்புக்குட்டி முன்வந்து, "சாரி பிரெண்ட்ஸ் ரொம்ப நேரம் உங்க எல்லாரையும் காக்க வச்சிட்டேன்னு தெரியுது. கவலைப்படாதீங்க எல்லோருக்கும் கேக் உண்டு கூல். கேக்ல நம்ம தலைவர் பேர் எழுதத்தான் லேட்டாயிடுச்சு. இப்ப என்ன கரெக்டா 12 மணிக்கு கேக் கட் பண்ணலனா என்ன? 12:15க்கு வெட்டுவோம், அதுலயும் 12 இருக்குல்ல. ஸ்டார்ட் பண்ணலாமா? கமான் கைஸ் எல்லாம் ரெடி பண்ணுங்க" என்றாள்.

ஐந்தரை அடி உயரம், உயரத்திற்கேற்ற வெயிட், சுடிதார் அணிந்து அதில் ஒரு சைடு பின் குத்தி, அதை மறு மறுபுறம் கீழ் முடிச்சிட்டு, அறை ஜான் முடி, அதையும் ஏற்றி பனங்கொட்ட தலையாக கிளிப் போட்டு அடக்கியிருந்தாள் லட்சணமான 24 வயது அழகி. மாநிறத்திற்கும் சற்று கூடுதலான நிறம், கடந்து போகும் யாரையும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு தான். ஆனாலும் இன்னைக்கு வர ஒரு பாய் ஃப்ரென்ட்கூட பிடிக்க முடியல. இப்ப கூட வந்து இறங்கின 15 ல 9 பொண்ணுங்க தான், மீதி ஆறும் அந்த அபார்ட்மெண்ட்ல உள்ள ஸ்கூல் படிக்குற பசங்க. கேக்குகாக அவ பின்னாடி போயிட்டு, இப்ப 12 மணிக்கு வீடு வந்து சேர்ந்துருக்காங்க. இனி தான் வீட்ல போய் வாங்க வேண்டியதெல்லாம் வாங்குவாங்க. சரி இவ்வளவு அளப்பறை எதுக்குன்னா இன்னைக்கு அவளோட பேவரைட் ஹீரோவோட பிறந்தநாள். அத அந்த அப்பார்ட்மெண்டையே கொண்டாட வச்ச பெரும, அவளை மட்டுமே சேரும். எல்லோரும் தூங்க போயிருந்தாலும் வெடி வச்சு எழுப்பி கொண்டாடுவா. கடந்த நாலு வருசமா அதான நடக்கு. அதனாலேயே அவ கொண்டாடி முடிக்கட்டும் அப்புறம் போய் தூங்கலாம்னும், பிள்ளைகளும் வந்து சேரணுமேன்னு எல்லாம் முழிச்சிருக்க. இவ கேக்க குடுத்து அவங்க வாய அடச்சரலாம்னு நம்பிக்கையோட இருக்கா.

"பப்ளி வெடிய பத்த வை, ஐஸ்குச்சி மெழுகுவர்த்திய ஏத்துடி, எல்லோரும் வெயிட் பண்றாங்கல்ல" என ஏவிக் கொண்டிருந்தாள். எல்லாம் ரெடியாக, பிறந்தநாள் கொண்டாடும் அந்த ஹீரோவுக்காக மனதில், "ஆண்டவா என் சார்ம் பர்த்டேல அவர் சந்தோஷமா இருக்கணும், இந்த வருஷம் நிறைய படம் பண்ணனும், அவ்வளவும் ஹிட்டாகணும், எனக்கு ஃபர்ஸ்ட்டே ஃபர்ஸ்ட் ஷோ டிக்கெட் கிடைக்கணும், இந்த வருஷமாது எப்படியாது அவர நேரில பாத்துரணும். அப்புறம்" என சத்தமாக அவள் வேண்டிக் கொண்டு போக.

"ஏ போதும்டி, கேக்ல போட்ட முட்டையே குஞ்சாயிடும் போல, சீக்கிரம் வெட்டு" என அவள் முதுகில் ஒரு அடி போட்டது நம் வேதிகாவே தான். "நீ சொன்னா சரிக்கா" என்றவள் குனிந்து மெழுகுவர்த்தி ஊதி "ஹேப்பி பர்த்டே டு மை சார்ம்" என கத்தி சொல்லி "எல்லோரும் கை தட்டுங்க. அவர் பர்த்டே கேக் மட்டும் வேணும், கைத் தட்ட மாட்டீங்களா?" என அதுக்கும் சண்டைக்கு கிளம்ப.

"ஆத்தாடி இவ ஆரம்பிச்சா, பின்ன சமாதான படுத்துங்குள்ள அவரோட அடுத்த பிறந்த நாள் வந்துருமே, பின்ன எப்படா தூங்குறது" என சுதாரித்த அபார்ட்மென்ட் வாசிகள் ஆரவாரமாக கைத் தட்டி தங்கள் வாழ்த்தைத் தெரிவித்தனர். இவள் கேக்கை வெட்ட, 1000 வால காதை கிழிக்கத் தொடங்கியது. அதன்பின் மறுபடியும் பாட்டை அலறவிட்டு ஒரு குத்தாட்டம் போட்ட பின்பே கூட்டத்தைக் கலைய விட்டாள். எல்லோருக்கும் கேக் மற்றும் வீடு வீடுக்கு பூந்தி, மிக்ஸர் பார்சல் குடுக்கப்பட்டது. பின்பே அந்த அபார்ட்மெண்ட் அன்றைய தூக்கத்திற்குத் திரும்பியது.

அவளால் அங்குள்ள அனைவரும் இன்றைக்கு துன்பப்பட்டாலும் பல சமயங்களில் நன்மையும் அடைந்திருக்கின்றனர். அந்த அப்பார்ட்மெண்டில் இதுவரை எந்த தப்பான விஷயங்களும் நடந்ததில்லை, அதற்கு இவர்கள் குடும்பம் அங்கு குடியிருப்பதேக் காரணம் என அனைவரும் நம்பினர். சென்னையில் இப்படி ஒரு அப்பார்ட்மெண்ட் என பெயர் வரக் காரணம் நம் நாயகிதான், அந்த அளவிற்கு ஏரியா பிரபலம் சில சமயங்களில் பிராபலம். ஏப்ரல், மே யில் தண்ணி சண்டை வரும், முன் நின்று தண்ணீர் வண்டிக்காரனிடம் சண்டையிட்டு, அவனை ரெகுலராக இந்த அப்பார்ட்மெண்ட்டிற்கு மட்டும் வரும்படி செய்தாள். இ.பி. பிரச்சனை, கேஸ் பிரச்சனை இப்படி எதுவானாலும் செகரேட்டரி முன் இருக்கிறாரோ? இல்லையோ? இவள் முன் போய் நிற்பாள்.

அப்படித்தான் எல்லோரையும் கன்வின்ஸ் செய்து, ரூபாய் கலெக்ட் செய்து, பிரீ ஜிம், பார்லர், டியூசன் சென்டர், மெடிக்கல் என அனைத்தையும் உள்ளயே கொண்டு வந்தாள். அதில் வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் செக்யூரிட்டி, ஸ்விப்பர்ஸ் கூட அங்கு வாழும் மக்களின் ஊர் சொந்தங்கள் தான்.

"கஷ்டப்படும், வேலை தேடும் நன்கு பரிச்சயமானவர்களை இப்படி நம்பிக்கை நிமிர்த்தம் தங்கும் வசதியுடன் அமைத்துக் கொடுக்கலாம். வீட்டுக்கு இவ்வளவு என மெயின்டனன்ஸ் சார்ச்சாக கொடுத்தீங்கன்னா, நமக்கு சின்ன அமௌண்ட் பெத்த லாபம். எப்படியும் இந்த தேவைகளுக்கு வெளில கொடுக்கப் போறீங்க, அது நம்ம வீட்டுக்கிட்டயே! சேப்டி பர்ப்பஸோட கிடைக்கும்.. யோசிங்க. மன்திலி ஒன்ஸ், அபார்ட்மென்ட் மீட்டிங்ல நீங்க கணக்கு கேட்டுக்கலாம். நானே முன்ன நின்னு பாத்துக்குறேன். எனக்கு கமிஷன் மட்டும் கொடுத்தா போதும்" இப்படி பேசி யாருக்கும் நஷ்டம் இல்லாமல், கடந்த ஐந்து வருடமாக பல நல்ல விஷயங்களை கொண்டு வந்திருக்கிறாள்.

ஒன்னு ஒன்னாகக் கொண்டுவந்து இன்று வெளியிலிருந்து பாக்குறவங்களுக்கு அது ஒரு பணக்கார அப்பார்ட்மெண்டே. அந்த வருமானத்த வாங்கி, இப்படி ரசிகர் மன்ற தலைவியா தண்டச் செலவு செஞ்சுருவா. உருப்படியா இன்னைக்கு வர ஒரு வேலையுமில்லை. படிப்பு முடிச்சு ஒரு வருஷமாச்சு. இப்படி இவளால நன்மையும், தீமையும் கலந்தே இருக்கிறதால என்ன செய்யன்ற குழப்பத்துல எல்லோரும் இருக்காங்க. மெய்யப்பன் உட்பட. ஒரு ஹைகோர்ட் ஜட்ஜ்யே 24 வருஷமா குழப்பத்துல சுத்தவிட்டுருக்கா.

"சாரிக்கே பால் சா கபி மேட்ச் கியா ரே, கபி சோடு தியா தில் கபி கேட்சி கியா ரே,

௭ன பாடிக் கொண்டே ஷால் முடிச்சை கலட்டிக் கொண்டு சி-28 வீட்டினுள் நுழைய, பின்னயே மெய்யப்பன், வடிவுமொழி, வேதிகா மூவரும் நடந்தனர். அது ட்ரிபிள் பெட்ரூம் கொண்ட அப்பார்ட்மெண்ட். ஹால், லெஃப்ட்டில் கிட்சன், ரைட்டில் இரண்டு ரூம், வாசல் நேராக ஒரு ரூம், அதில் தம்பதியர் இருக்க. ரைடில் இரண்டு ரூமிற்கு பயங்கர சண்டைக்கு பின், ஒன்றில் போலீஸ் அக்காவும், லாயர் அக்காவும் சேர்ந்துகொள்ள. இன்னொன்றில் தனி ராஜ்ஜியம் செய்கிறாள் பாப்புக்குட்டி.

பாப்பு அவள் அறை நோக்கிப் போக, சோபாவில் ஏக கடுப்பில் இருந்த சுகாசினி, "ஏ நில்லுடி உன் மனசுல என்ன பெரிய ரவுடினு நினைப்பா? இப்படியே சுத்திட்டு திரி, இவ வாய்க்கு ஒரு நாள் இல்ல ஒரு நாள் எவன்ட்டயாவது வசமா வாங்கிட்டு வரபோறா, அப்றம் தான் உங்களுக்குளா தெரியபோது. மடியில தூக்கி வச்சுக் கொஞ்சுங்க, அவ இன்னும் நல்லா ஆடட்டும்" என பாப்புவிடம் ஆரம்பித்து வீட்டினரிடம் முடித்தாள்.

"நீயும் பல வருஷமா சாபமா தான் குடுத்துட்டுருக்க, நல்லவங்க சாபம் தான்டி பலிக்கும் வெள்ள பாச்சா. நீயே ஒரு கிரிமினல், நீயே உனக்கு தெரிஞ்ச எவனையாவது ௭ன்ன கடத்த சொல்லி ஐடியா கொடுத்தா தான் உண்டு. அப்பயும் அதிலயிருந்து எப்படி தப்பிச்சு வரணும்ன்னு எனக்கு தெரியும். நீ மூடிட்டு போய் உன் கேஸ் கட்ட கட்டிட்டு அழு" என பாப்புக்குட்டி எகிற.

"போதும் ரெண்டு பேரும் ஒரு மணிக்கு சண்டைய ஆரம்பிக்காதீங்க. அப்பாவும், அம்மாவும் அல்ரெடி டயர்டு, தூங்க விடுங்க. பாப்பு நீ உன் ரூம்க்கு போ. ஏய் நீ எந்திரிச்சு வா தூங்கலாம்" என வேதிகா முற்றுப்புள்ளி வைத்த பின்னரே முறைத்துக் கொண்டு தத்தம் ரூம் சென்றனர். மறுநாள் காலை பத்தரை மணி வரை சூரிய பகவானும் தன்னால் முடிந்த மட்டும் தன் கதிர்களை அவளை நோக்கி ஜன்னல் வழியாக வீசி தான் பார்த்தார். லேசான சுணக்கம் கூட வராததினால் கோபித்துக் கொண்டு மேலே ஏறி விட்டார். பத்தரை மணிக்கு தன் ஐபோனில் "உரசாத உசுரத்தான் உருக்காத மனசத்தான்" என விவேக்கும் மெர்வினும் வந்தே எழுப்பி விட்டனர்.

பின் எழுந்து அவள் காலைக் கடன்களையெல்லாம் முடித்து சாப்பிட வந்து உட்கார 11:30 ஆகிவிட்டிருந்தது. அவள் வரவை எதிர்பார்த்து அன்று கோர்ட் கூட போகாமல் வீட்டில் அணியும் உடையுடன் அமர்ந்திருந்தார் மெய்யப்பன். மதியம் சமையலில் ஈடுபட்டிருந்தார் வடிவுமொழி. "அம்மா பசிக்குது" என்றவாறு கத்திக் கொண்டு வந்தவள் தந்தையைக் கண்டதும் "ஹை! அப்பா இன்னைக்கு லீவா? கோர்ட்டுக்கு போகல? எங்க உங்க ரெண்டாவது மக, அவளும் வீட்லதான் இருக்காளா?" என்றாள்.
"நீ அடுத்து என்ன பண்றதா இருக்க பாப்புக்குட்டி? பி.இ முடிச்சுட்டு நிறைய பேரு வேல இல்லாம சுத்துறாங்கன்னு தெரிஞ்சும் பி.இ படிச்ச. எம்.பி.ஏ முடிச்சா தான் வேல்யுன்னு ரெண்டு வருஷம் அதயும் போய் படிச்ச. இப்ப மேக்கொண்டு ஒரு வருஷமும் ஓடிப்போச்சு. இப்போதைக்கு ஒன் அக்காங்க ரெண்டு பேரையும் செட்டில் பண்ணாம, உனக்கு கல்யாணமு பண்ண முடியாது. இப்படி மத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணாம வீட்டிலேயே கூட இரு. நீ வேலைக்கு போய் தான் இங்க சாப்படணும்ன்ற நிலைம இல்ல. எந்த பிரச்சனையிலயும் மாட்டிக்காம இருந்தாலே போதும்" என்றார் அவர்.

"என்னப்பா புதுசா பேசுறீங்க. நான் சின்னப் பிள்ளையிலிருந்து இப்படித்தானே, என்னைக்காவது என்னைய மீறி பிரச்சனை உங்ககிட்ட வந்துருக்கா?”

"ஏண்டி வரல, போன வருஷம் காட்டுக்கு போறேன்னு சொல்லாம போயிட்டு மூணு மாசம் எங்கள் அல்லாட விட்டு, விழுந்து வாரி கட்டோட வந்தியே மறந்து போச்சோ?" என்றார் அப்பளம் பொறிக்கும் கரண்டியுடன் வெளிவந்த வடிவுமொழி. "அப்பயும் நானேத்தான வந்தேன், போ போய் அப்பளத்த எடு கறிகிடப்போகுது".

"ஆனா அதுலயிருந்து தான் எங்களுக்கு பயம் ஜாஸ்தியாகிட்டு. நீ பாட்டுக்கு பின் விபரீதத்த யோசிக்காம எல்லாத்தையும் செய்யுற. அது உனக்கே ஆபத்துல முடியலாம்லம்மா அதுக்கு தான் சொல்றேன்" ௭ன அப்பா சொல்ல.

"ஏது நேத்து, அந்த ஹோட்டல் மேனேஜர் சட்டையை பிடிச்சத சொல்றீங்களா? அவேன் ராங்கா பேசுனானா அதான் விட்டேன் ஒன்னு. நானா சண்டைக்குப் போக மாட்டேன், வந்த சண்டையை விடவும் மாட்டேன். அது தான் பாப்புக்குட்டி. சரி வாங்க சாப்பிடுவோம் பசிக்குது" என தந்தையையும் இழுத்துக் கொண்டு வந்தாள். அங்கு வடிவுமொழியோ அவளுக்காக சுடச்சுடப் பூரி பொறித்து வந்து வைத்தார். "அம்மா பூரியா போட்ட? அப்பளம்ன்ல நெனச்சேன். பூரி கருகியிருந்தா என்ன ஆயிருக்கும். டூ பேட் ம்மா நீ" என பூரியை உள்ள தள்ள ஆரம்பிக்க.

"அந்த ஐ.௭ன் ஹோட்டலுக்கு எதுக்குடி போன? நீ போனதனாலதான பிரச்சனை. ஏன் போன? அங்க உனக்கு என்ன வேல?" அம்மா கேட்க.

"என் பிரண்ட் டெட்டி இருக்காலம்மா அவளுக்கு கொஞ்ச நாளா ராங் நம்பர்ல இருந்து மெசேஜ், கால்ன்னு வந்துட்டே இருந்தது, அதுவும் ரொம்ப அசிங்கமா. அதான் அந்த நம்பர வேலு அண்ணாட்ட கொடுத்து லொகேஷன் ட்ரேஸ் பண்ணிச் சொல்ல சொன்னேன். அக்காகிட்ட சொல்ல வேணாம்னு சொன்னாலும் அவர் சொல்லிருப்பாரு. அங்க மட்டுமா இதோ உங்கக்கிட்டயும் வத்திவச்சுருக்காரே. அதனால உங்க எல்லோருக்கும் நியூஸ் வந்துரும்னு தெரிஞ்சு தான் தைரியமா போனேன். அவேன் அங்கயும் ராங்கா பேசுனான். நல்லா வெளு வெளுன்னு வெளுத்து விட்டுடேன்".

"அப்பாவும், அக்காவும் இருக்குற தைரியத்துல தான இவ்வளவும் செய்யுற. இனி உனக்கு இந்த மாதிரி விஷயத்துக்கு ஹெல்ப் பண்ண கூடாதுன்னு சொல்லி வைக்கிறேன்டி. வீட்டிலயிருந்து ஒழுங்கா சமைக்க கத்துக்கிற. சும்மா வயசான காலத்துல இப்படி ௭ங்கள டார்ச்சர் பண்ணாத. ஏற்கனவே மூத்த பிள்ளைக்கு இன்னும் கல்யாணம் பண்ணி வைக்க முடியலயேன்னு பாரமா இருக்கு, நீ வேற ஏதாவது இழுத்துட்டு வந்திருவியோன்னு பயந்துட்டே கிடக்க முடியலடி" என வடிவுமொழி மூக்கை சீந்த.

"ஏம்மா, ஏம்மா, தட்டுல பூரிய வச்சுட்டு இப்படி அழாதம்மா, எனக்கு எது முக்கியம்ன்னு குழப்பம் வந்துரும். அக்காவுக்கு இந்த வருஷம் கல்யாணம் பண்றோம். அப்பத்தான் அடுத்தவளை அனுப்ப முடியும். சும்மா கோர்ட்ல கேள்விய கேட்கத் தெரியாம முழிக்க வேண்டியது. வீட்ல வந்து அந்த மொத்த கேள்வியும் என்ட்ட கேக்க வேண்டியது. நா முடிவு பண்ணிட்டேன்மா ஆல்ரெடி. இவளக் கடத்துனாதான் எனக்கு நிம்மதி. உனக்காக இல்லனாலும் எனக்காக கண்டிப்பா இந்த வருஷம் அக்காவுக்கு மாப்பிள்ளை பாக்குறோம, முடிக்குறோம்" என்றாள் பூரியை வாய்க்குள் அமுக்கிக் கொண்டு. அவளை பார்க்க மெய்யப்பனுக்கு பாபு இன்னும் குட்டியாகவே தெரிந்தாள். "நீ கிழிச்ச, திங்க தாண்டி நீ எல்லாம் லாய்க்கு. வாய் மட்டும் இல்லனா என்னைக்கோ உன்ன நாய் தூக்கிட்டு போயிருக்கும் போடி" என்றவாறு அடுத்த பூரியை எடுக்கச் சென்றுவிட்டார்.

இதுதான் மெய்யப்பன் குடும்பம். இவள் நல்லவளா? கெட்டவளா? தைரியசாலியா? கோழையா? விட்டுக்கொடுப்பவளா? தட்டிப்பறிப்பவளா? இப்படி குழம்பிய குட்டையாகவே தன்னை சுற்றியிருப்பவர்களை வைத்திருப்பாள். ஆக்சுவலா அவளுக்கே அவளப் பத்தி தெரியாது. கொஞ்சம் ஆர்வக் கோளாறு வேற. எதயும் செஞ்சுட்டு முழிக்குற ரகம். ஆனால் சவுடாலா பேசி பெரிய ரவுடிய மாறி சமாளிச்சிருவா. இப்படித்தான் காலம் தள்ளிட்டுருக்கா. நல்ல மூடு வந்தா, பொழுதுபோகலன்னா மட்டும் நல்லது செய்வா. 'சம்பாதிக்குறதே வாழ்க்கைய அனுபவிக்கத் தான்னு' சொல்லி அத செலவு செய்ய சேட்டை செய்றது, ௭ல்லாத்தயும் டென்ஷனா ஆக்குவது. இனி என்ன செய்யப் போகிறோம் என்ற எய்ம் இல்லாத ஒரு 90ஸ் கிட்ஸ் தான் நம் பாப்புக்குட்டி இயற்பெயர் "(அப்றம் சொல்றேன்)".
 
அத்தியாயம் 3
இங்கு பாப்புக்குட்டிக்கு 10.30 மணிக்கு விடிந்திருக்க, அதே நாள் காலை 6 மணி பெசன்ட் நகர் பீச் ரோட்டில் பணக்காரர்கள் வசிக்கும் பங்களாக்களில் ஒன்றாக ஒரு குட்டி அரண்மனை போன்ற வீட்டை சுற்றியுள்ள நடைபாதையில் ஓடி கொண்டிருந்தான் ஒருவன். அவன் பின்னையே வலது பக்கம் ரோட்வெயிலேர்(அவனது நாய்) ஓடி கொண்டிருக்க, இடது பக்கம் கடனே என தூங்கி தூங்கி வழிந்து கொண்டு மைன்ட் வாய்சில் " ஓட ஓட ஓட தூரம் குறையல, பாட பாட பாட பாட்டும் முடியல " என ஓடி கொண்டிருந்தான் விஷாகன், முன்னே ஓடுபவனின் மேனேஜர்.

"அப்றம் விஷா, அந்த ஸ்டார் டிவி இன்டெர்வியூ ஷெடூல் பண்ணிட்டியா? டேட் பாத்து கன்போஃர்ம் பண்ணிடு. ஒரு 10 டேஸ் அந்தமான் ட்ரிப் பிளான் பண்ணிக்கோ கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும். இப்போ டப்பிங் மட்டும் தான, 2 டேஸ்ல முடிஞ்சிடும், அடுத்த சப்ஜெக்ட் ஸ்டார்ட் ஆகுமுன்ன கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிப்பேன். என்ன சத்தத்தையே காணும் " என்றவாறு திரும்பியவன், விஷாகனை பாக்க, இவன் யாரிடமோ பேசுவது போல் பாதி கண்ணை திறந்து வைத்து நின்றவனையும் தாண்டி ஓடி விட்டிருந்தான்.

கடுப்பான நம் ஹீரோ "விஷா " என ஓங்கி கத்த "ஐயோ சார் ரொம்ப தூரம் ஓடிட்டாரோ நாம இங்கேயே நின்னுட்டோமோ " என தனக்கு தானே பேசியவன் மேலும் வேகமாய் ஓட. அவன் சுற்றிலும் ஓடி தன்னை அடையும் வரை அமைதியாய் ட்ராக்கில் ரெண்டு கையையும் விட்டு காத்து நின்றான். "என்ன சாரையே காணும் " என வந்த பாதைக்கே திரும்பிய விஷா, அவன் சார் அவனுக்காய் காத்து நிற்பதை கண்டு "அட லூசு பயலே பின்னாடி திரும்பி பாக்காம 10கிமி சுத்தி வந்திருக்க, ஒன்ன அவரு வறுத்தெடுக்கிறதுல தப்பே இல்ல" என்றவாறு வந்து நிற்க. விட்டான் ஒரு அறை 5 விரலும் பதிந்து விட்டிருந்தது, ஜிம் பாடி என நிரூபித்தான்.

"தூக்கம் தெளிஞ்சு போச்சா? இனி ஒரு தட இப்டி நடந்தா நீ வேற வேல தேடிக்க வேண்டியிருக்கும் ". "அதான் 10கிமி நாய் தொரத்தினது கணக்கா ஓடி வந்திருக்கேனே இன்னுமு தூக்கம் எப்டி மிச்சமிருக்கும். இத கழுத்த ஒரு பக்கமா திருப்பாமலே கூட கேட்ருக்கலாம் " என அவனுக்குள் பதில் சொல்லிக்கொண்டிருக்க, "என்ன விஷா மறுபடியும் தூங்கிட்டயா?" என்றான்,பையில் விட்டிருந்த கையை எடுக்காமலே முன்னே ஒரு அடி எடுத்து வைத்து.

சுதாரித்த விஷாகன் "சாரி சாரி சார் இனி அப்டி நடக்காது " ௭ன்றான் பதறி பின்னால் ஒரு அடி எடுத்து வைத்து. அந்நேரம் அவனின் அப்பாவின் பி.எ சிவம் வேகமாய் வர, இவன் திரும்பி என்ன என்பது போல் பாக்க. வந்தவன் ஐபேட்டை நீட்டி காமிக்க, அதில் நம் பாப்புக்குட்டியின் வீர சாகசம் ஓடிகொண்டிருக்க. அவள் முகம் சரியாக பதிவாகவில்லை எனினும், அது அவன் அப்பாவின் ஹோட்டல் என்பதும், அடிவாங்குபவன் அந்த ஹோட்டல் மேனேஜர் என்பதும் தெளிவாக தெரிந்தது. திரும்பி தன் மேனேஜரை ஒரு பார்வை பார்த்து அதை நீட்டினான். வாங்கியவாறே " ஐயோ இது எப்ப நடந்தது இத ஏன் சொல்லலன்னு கேட்டா என்ன சொல்றது " என்றவாறு விஷா திரு திருபென முழிக்க, அவன் முறைக்க.

தன் பார்வையை மாத்திகொண்ட விஷா "புல்ஷிட் " என முனங்கி, "இது எப்ப நடந்தது " என சிவமிடம் கேக்க. ஹீரோ சைலென்டாக வேடிக்கை மட்டுமே பார்த்து நின்றான். சிவம் "நேத்து ஈவினிங் 6 மணிக்கு நடந்திருக்கு. சுற்றி நின்ன சிலர் வீடியோ எடுத்திருக்காங்க. பட் இப்போவரை ஏதும் வெளில போகல அப்போவே எல்லார்ட்டையும் வாங்கி டெலீட் பண்ணிட்டோம்". விஷா "அப்றம் எப்படி இந்த ஒன்னு வெளில போச்சு. நீங்க சரியா கவனிக்கலன்னு சொல்லுங்க " ௭ன்க. சிவம் விஷாவை முறைக்க முடியாமல் முறைத்து, ஹீரோவிடம் "சாரி சார், இது எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரில, நைட் டுவல்வ்கு கால் பண்ணி உங்க ஹீரோ சார்க்கு பிறந்தநாள் பரிசா குடுத்தரலாமான்னு நக்கலா கேட்டான். டிரேஸ் பண்ணி ஆள புடிச்சுட்டோம். அவன என்ன பண்ணலாம்னு கேக்கத்தான் வந்தேன் சார்".

இப்பொழுது சிவமை பார்த்து திரும்பி "அவனுக்கு நம்ம கஸ்டடி பர்ஸ்ட் டைமா செகண்ட் டைமா?" "செகண்ட்ந்து டைம் தான் சார், பர்ஸ்ட் டைம் நம்ம பீச் ரிசார்ட்ல ப்ரோஸ்டியூஷன் நடக்குன்னு மார்பிங் பண்ணுன போட்டோஸ் அனுப்பி பணம் கேட்டு, அப்றம் நீங்க ஐஜிட்ட பேசி அவன கவனிக்க சொல்லி சொல்லிடீங்க. இப்போ ரெண்டு வருஷம் கழிச்சு மறுபடியும் வம்பு இழுக்கிறான்". "ஓ தென் ஹீ மஸ்ட் பீ பனிஷபில் நவ் (அப்ப அவன் தண்டிக்கப்பட வேண்டியவனே)" என்றவன். "இனி நம்மகிட்ட வாலாட்ட கூடாதுங்கிறத அவனுக்கு புரியுற விதத்துல புரிய வச்சிடுங்க. தென் ஹூ இஸ் தட் கேர்ள்? (அப்றம் யார் அந்த பொண்ணு)". "ஓகே சார். அது அந்த பொண்ணோட ப்ரெண்டுட்ட ஆகாஷ் (மேனேஜர்) மிஸ்பிஹேவ் பண்ணிருப்பான் போல, அதுக்காக இந்த பொண்ணு தட்டி கேக்க வந்ததாகவும், இவங்ககிட்டயும் மேனேஜர் தப்பா பேசியதனால அந்த பொண்ணு இவான கை நீடித்ததாகவும் மற்ற ஸ்டாப்ஸ் சொன்னாங்க சார்".

"இஃப் தேட்ஸ் ட்ரு, லீவ் ஹேர், இல்லாம என் ஹோட்டல்ன்னு தெரிஞ்சு பப்ளிசிட்டிக்காக பண்றதா இருந்தா, மஸ்ட் வார்ன் ஹேர், இன்னொரு தட அத நல்லா விசாரிச்சுக்கோங்க. நியூ மேனேஜர் அப்பாயின்ட்மெண்ட் ஆட் கொடுத்துருங்க". "அப்ப அந்த ஆகாஷ என்ன செய்ய சார்?” "அத தான் இன்னொரு டைம் விசாரிங்க. அவன் மேல தப்பு இருந்தா போலீஸ்ல நம்ம ஹோட்டல் சார்பா கம்பளைண்ட் ரிஜிஸ்டர் பண்ணுங்க. தப்பு இல்லையா அவன் வெளில வரவும் வேற வேலை தேடிக்கோ ராசான்னு வீட்டுக்கு அனுப்பிடுங்கன்னு சார் சொல்றாங்க. வா உனக்கு இன்னும் புளி போட்டு விளக்குறேன். சார் நீங்க ஜிம் போங்க சார்" என பேசி முடித்து சிவத்தை தள்ளிக்கொண்டு விஷாகன் தப்பிக்கப் பார்த்தான்.

இல்லையெனில் 'நேத்து ஈவினிங் நடந்த விஷயம் இந்நேரம் வர உனக்கு தெரியல, அப்படியென்ன முக்கியமான வேல உனக்குன்னு கேப்பாரே' எனத் தப்பிக்கப் பார்த்தான். "ஒரு நிமிஷம் விசா" என்ற சிவம். திரும்பி தான் வந்த கார் டிரைவரிடம் தலையாட்ட, அவர் ஒரு பொக்கேவுடன் வேகமாக ஓடிவந்தார். அதை வாங்கி ஹீரோவிடம் நீட்டி, "ஹாப்பி பர்த்டே சார், கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்கிறேன், சாரி சார்" என்றான் சிவம் சேர்த்து. சிரித்தானா? இல்லையா? என மற்ற மூவரும் கவனிக்கும் முன், "தேங்க்ஸ் சிவம்" என பெற்றுக்கொண்டு அதை விஷாகனிடம் கொடுத்து விட்டு வீட்டை நோக்கி நடந்து விட்டான்.

அதுவரை அவன் காலையே சுற்றி சுற்றி வந்த அவனது ரோட்வெய்லெர், (அவனுக்கு ராட்டி) அவன் பின்னயே சென்று அவன் வீட்டினுள் நுழையவும், வாசலில் படுத்துக் கொண்டது. இவன் நேராக 3வது மாடியிலிருக்கும் ஜிம்மிற்கு சென்றுவிட. விஷாகன், "ஹப்பா எப்படியோ காப்பாத்திட்ட சிவம். தயவு செஞ்சு, இப்ப அவர் சொன்னதுலா செஞ்சிடு. இல்லனா நான் தான் மாட்டிக்கிட்டு முழிப்பேன்". "நீ தப்புச்ச மாதிரி தெரியலையே. காலைலயே வாங்கிட்ட மாதிரில ஒன் வலது கன்னம் சொல்லுது". "ஆமாடா ஜாகிங் செல்லும் போது, சற்று அசந்து தூங்கிவிட்டேனாம். அதுக்கு கைத்தடத்த பதிச்சுட்டாரு". "நீ அப்படி அஸால்ட்டா இருக்க மாட்டியே? அதுவும் ஓடிட்டே தூங்குறது எப்படிடா?” "விடிய விடிய தூங்கல மாப்ள, அதான் கொஞ்சம் ஓவர் டயர்ட் ஆயிடுச்சு, எந்துச்சு வரலனா அதுக்கும் கத்துவாரேன்னு கஷ்டப்பட்டு அலாரம் வச்சு எழுந்துவந்தேன். ஃபஸ்ட் விஷ் கூட நான் தான் பண்ணேன். ஆனா அதுக்காகக்கூட பாவம் பாக்காம அடிச்சுட்டாருடா" என்றான் அழுவது போல். "நைட் ஹார்ட் ஒர்க்கா மச்சான். புது மாப்ள, ஒரு ஒரு மாசம் பாரின் ட்ரிப் போயிட்டு வரலாம்ல. கேட்டா சார் கண்டிப்பா குடுப்பாரேடா?”

"குடுப்பாருடா, எனக்கு தான் அவர விட்டு போக மனசில்ல. நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா அந்த மனுஷன பாத்துட்டுருந்தாலே போதும்ன்னு இருந்திருப்பேன். ஒரு நாள் பாக்கலனாலும் மனசு என்னமோ பண்ணுதுடா". "ஐய அவனாடா நீ?", "ச்சீ எரும, காலையிலேயே அரக்க பறக்க நீ ஏன் ஓடி வந்த? அவர பாக்க கெடச்ச, அதுவும் பிறந்த நாள் அன்னைக்கு வேறன்னு தான. வந்துட்டான் என்ன கிண்டல் பண்றதுக்கு". "ஆமா வெளில பெரிய க்யூ நிக்கி, இன்னைக்கு ஒனக்கு ஓவர் டியூட்டி தான்டி. சாரோட பர்த்டே ஸ்பெஷலா வீடியோ எடுத்தனா கண்டிப்பா ஷேர் பண்ணு மேன். நான் கிளம்புறேன், கன்னத்துக்கு ஆய்ன்ட்மென்ட் போடு, பை" சிவம் கிளம்பிவிட. எட்டி செக்யூரிட்டி கேட்டை பார்த்தவன், "நல்லா சாப்ட்டு வந்தா தான்டா உங்கள சமாளிக்க முடியும். இருங்க சாப்ட்டு வந்துறேன்" என தனக்குத்தானே பேசிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

தமிழ்நாடே அவன் பிறந்த தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க. அதற்கு காரணமானவனோ, பத்மாசனத்தில் சாந்தமாக வீற்றிருந்தான். வீட்டு வாசலில் அவனின் தரிசனத்திற்காக அவ்வளவு கூட்டம் காத்து நிற்கிறது. அவன் "இரணிய ஹர்பன்" தமிழ்நாட்டின் ஸ்மைலிங் சார்ம், சிரித்தால் அவ்வளவு கியூட்டாக இருப்பான். ஆனால் திரையைத் தாண்டி சிரிக்க மாட்டேன் என கங்கணம் கட்டிக் கொண்டு திரிவது போல் விறைப்பாகவே சுற்றி வருவான். பெண்கள் மட்டுமல்ல ஆண்களையும் வைத்த கண் திருப்பாமல் பாக்கத் தூண்டும் ஆணழகன். அதில் அவனுக்கு தனி கர்வம் உண்டு, 29 வயது வாலிபன். நான், நீ எனப் போட்டி போட்டுக் கொண்டு அவன் மேல் வந்து பெண்கள் விழுந்து குவிவதால், சலித்து தான் போய்விட்டது. கல்யாண ஆசையே இல்லை, என்ற நிலைமைக்கு கொண்டு வந்திருந்தனர். வீட்டில் தன் தங்கையிடம்கூட அளவோடு தான் பேசுவான். சிறு வயதிலிருந்து அவன் கடந்து வந்த பாதை, அவனை யாரைப் பார்த்தும் சிரிக்க விடுவதில்லை. ஆணோ பெண்ணோ அனாவசியமாக யாரைப் பார்த்தும் சிரித்து விடமாட்டான். இந்த பீல்ட்க்குள் நுழைந்ததும் ஒரு ஆக்சிடெண்ட் போல் தான். நுழைந்தபின் விட முடியவில்லை. அழகு என்ற ஒன்று இருக்கும் வரை ஓடுவோம் என ஓடிக் கொண்டிருக்கிறான். பீல்டில் நுழைந்து எட்டு வருடம் ஆகிவிட்டது, கடந்த ஆறு வருடத்தில் அவன் நடித்த அத்தனை படங்களும் ஹிட். செலெக்ட்டிவ் கதைகள் மட்டுமே, வருடத்திற்கு நான்கு படங்கள் எப்படியும் முடித்துக் கொடுத்து விடுவான். கோடிகளில்தான் சம்பளம். அதை பல இடங்களில் இன்வெஸ்ட் செய்து பெருக்கிக் கொண்டிருக்கிறான்.

அவன் எல்லாம் முடித்து கிளம்பி கீழிறங்க, ஆக்ஸ்போர்ட் பட்டன் டவுன் ஷர்ட் ப்ளாக் கலர், 3/4த்தாக விட்டு லைட் க்ரெய் டெனிம் ஜீன்ஸில் இறங்கிவர, ஹாலில் அவனுக்காக காத்திருந்த விஷாகன் 'ஆ' என்றுதான் பார்த்தான். இரணியன் அதைக் கண்டும் காணாததுபோல் கடந்து விட்டான். அவனுக்கு அது மாதிரி பார்வை சலித்துவிட்டது. இதற்கும் இவன் எந்நேரமும் அவனுடன் இருப்பவன். ஏன் தான் இன்னும் சலிக்கவில்லையோ என்றும் யோசிப்பான் வெளிக்காட்டியதில்லை.

"சாந்திம்மா சாப்பாடு எடுத்து வைங்க" என்றவாறு, இரணியன் டைனிங் டேபிளை அடையுமுன் சுதாரித்து அடுப்படி நோக்கி சத்தம் குடுத்து ஓடியிருந்தான். "சரி தம்பி, நீங்களும் உக்காருங்க" என்றவாறு அனைத்தையும் எடுத்து வந்து வைத்தார். அவன் அம்மா தில்லை வாணி பூஜையறையிலிருந்து திருநீரோடு வர, அவன் தகப்பனார் தெய்வநாயகம், யாருடனோ போனில் பேசிக்கொண்டே சாப்பாடு மேஜைக்கு வந்தார். பின் போனை வைத்தவர், "ஹேப்பி பர்த்டே கண்ணா" என தோளில் கையிட்டு அணைக்க. "தேங்க்ஸ்ப்பா" என்றான் அமர்ந்த வாக்கிலே நிமிர்ந்து. அவன் அம்மா திருநீரோடு வந்து, அவன் நெற்றியில் பூசி, உச்சியில் முத்தமிட்டு "பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா" என்க. அதற்கு முகத்தில் எந்த பிரதிபலிப்பு மில்லாமல் "தேங்க்ஸ்ம்மா" எனக் கூறி வாழ்த்தை பெற்றுக் கொண்டான்.

விஷாகன் மெதுவாக தன் வாழ்த்தை கூறி, "சொல்லு" என தயங்கி தயங்கி அவன் அருகில் வந்து நின்ற அவன் மனைவியையும் உசுப்பினான். அவளும் மெதுவாக "ஹேப்பி பர்த்டேண்ணா" என்றாள். நிமிராமலேயே "ம்" என்ற தலைப்புடன் சாப்பிட தயாரானான். அதுவே பெரிது என உணர்ந்த சுற்றியிருந்த அவன் குடும்பத்தினரும் சாப்பிட அமர்ந்தனர். என்றும் சாந்தி அம்மா தான் எல்லோருக்கும் பரிமாறுவார், இன்று இரணியனுக்கு, அவன் அம்மாவே பரிமாற ரெடியாக, "நீங்களும் சாப்பிடுங்களேம்மா" என்றான் இரணியன். "பரவாயில்லப்பா இன்னைக்கு நானே வைக்கிறேன்" என்றார். அதற்கு மேல் உங்கள் இஷ்டம் என்பது போல் சாப்பிட ஆரம்பித்தான், அங்கு யாரும் பேசவில்லை, தியான ஹாலில் இருப்பது போல் அமைதியாக இருந்தது. சாப்பாடு எடுத்து வைக்கும் பாத்திரம் சவுண்டு கூட இல்லாமல் சாப்பிட்டனர். எல்லோர் சாப்பாட்டையும் பார்த்துப் பார்த்துக் கவனித்தார் தில்லைவாணி. மகன் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமை காத்தார், அவன் எழப் போக, "கண்ணா" என்றார் தயக்கமாய். "நீங்க எல்லோரையும் கவனிச்சிட்டு, சாப்ட்டு வாங்கம்மா. ஹால்ல வெயிட் பண்றேன்" என்றான் தாயை அறிந்தவனாய். "சரிப்பா" என்றவர், "சாந்திம்மா கொஞ்சம் பாத்துக்கோங்க என்றவராய் மகன்பின் ஓட, விஷாகனும் முதலாளி பின் சாப்பிட்ட வரை போதும் என எழுந்து ஓடினான், இது பழக்கம்தான் என்பது போல் தங்கை சாப்பிட்டுக் கொண்டிருக்க. தகப்பன் சென்றவர்களைப் பார்த்து விட்டு, திரும்பி மகளைப் பார்த்து பெருமூச்சு விட்டார்.

ஹாலுக்கு சென்ற இரணியன், சோபாவில் டெய்லி பேப்பருடன் அமர, அடித்துப் பிடித்து ஓடி வந்து அவன் முன் நின்றான் விஷாகன். "என்ன" என்பது போல் இரணியன் நிமிர்ந்து பார்க்க, "வெளிய உங்களுக்கு வாழ்த்து சொல்ல நிறைய பேர் கூடி நிக்றாங்க". "ஒரு டென் மினிட்ஸ் விஷா, அம்மா வந்துரட்டும் என்னன்னு கேட்டு போயிரலாம். அங்க போனப்புறம் வரமுடியாது". "ஓகே சார்" இவன் முடிக்க. அவன் அம்மா வந்திருந்தார். "சாப்பிட்டு வந்துருக்கலாமே". "இல்ல உனக்காக காலையிலிருந்து காத்துக் இருக்காங்க. இதுக்குமேல லேட் பண்ண வேணாம்னு தான் உடனே வந்துட்டேன்". "சரிம்மா சொல்லுங்க". "அது வந்துப்பா, சொல்லுறேன்னு கோவப்படாத, அஞ்சு வருஷமா இவரு உன்ட்ட தான் வேல பாக்காரு, அப்பலாம் நீ அவர கை நீட்டி அடிச்ச நாங்க தலையிடல. இப்ப அவரு இந்த வீட்டு மாப்ள. அதுக்கான மரியாதைய அவருக்கு நாம கொடுக்கணும். நானே அவன், இவன் கூப்பிடுவேன் தான, இப்ப மாப்ளன்றதால அவருன்னு மரியாதையா கூப்பிடுறேன்ல, புரிஞ்சுக்கோப்பா" என்றார். "என்னத்தே நீங்க, இப்ப இது தேவதானா?" என்றான் மாமியாரை நெருங்கி அவருக்கு மட்டும் கேட்கும் வண்ணம்.

"ஓகேம்மா எனக்கு மேனேஜரா மட்டும்தான் இப்பவர வச்சுருக்கேன். உங்க மாப்ளயா ஆகணும்னா, இனி மேனேஜர் வேலைல இருக்க வேணா, அப்ப நான் அவர அடிக்கிற சிச்சுவேஷன் அமையாது. அவருக்கான மரியாதயும் கிடைக்கும்" என்க. "சார், சார் நான் மேனேஜராவே இருக்கேன் சார். நீங்க எவ்ளோ அடிச்சாலும் வாங்கிப்பேன் சார். வேலைய விட்டு மட்டும் அனுப்பிடாதீங்க. மேடம் சொல்லுங்க மேடம்" என்றான்.

இரணியன் முன் யாரிடமும் உரிமை பாராட்ட மாட்டான். அந்த வீட்டில் வேலை செய்கிறான், இரணியன் மேனேஜர் என்ற அளவில் தான் நிறுத்திக் கொள்வான். அதுதான் இரணியனின் இஷ்டம் என்பது அவனுக்கு அத்துபடி. அதை கவனமாக பின்பற்றி வருகிறான். "கோவப்படாதப்பா கல்யாணம் முடிஞ்சு 10 நாளாச்சு, டெய்லி உன் கூடயேதான் முழு நாளும் இருக்காரு. வெளில எங்கேயும் போக முடிறதில்ல. இதுல காலைல சீக்கிரம் எழுந்து வரலன்னு நீ வேற அடிச்சா, பவ்யா மனசு சங்கடப்படும்ல. அதுக்காக வேலைய விட்டுப் போன்னு சொன்னா எப்படிப்பா? ஒரு ஒரு மாசம் லீவ் குடு. அவங்க எங்கயாச்சு போகி என்ஜாய் பண்ணிட்டு வரட்டும். அப்புறம் முழு நேரமும் உன்கூடவே வச்சுக்கோ, யாரும் கேட்க மாட்டோம். கை மட்டும் நீட்டாதப்பா" என்றார். 'போச்சு மொத்தமா சொதப்பிட்டாங்களே இந்த மாமியார். யார் இப்ப இவங்ககிட்ட ஹனிமூன் ட்ரிப் கேட்டது. கன்பாஃர்ம்! சார் இனி என்ன பேக் பண்ணிட்டுத்தான் அடுத்த வேலையே பாப்பாங்க' என அவன் மைண்ட் எடுத்துக் கொடுக்க பாவமாய் நின்றான்.

சிறிது யோசித்த இரணியன் தனது போனை எடுத்து, "சிவம்! ஆகாஷ் விஷயம் என்னாச்சு விசாரிச்சுங்களா?" என்க. "எஸ் சார், மேனேஜர் மேலதான் தப்புன்னு சொல்லுறாங்க. அந்த பொண்ணோட அக்கா டி.எஸ்.பி. யா இருக்காங்க போல. அவங்களே கம்பளைண்ட் பைல் பண்ணி அரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க". "சரி ஓகே தென் லீவ் ஹிம். ஒரு ஒன் மந்த் நீங்க வேற டெம்பரவரி ஸ்டாப் போட்டு மேனேஜ் பண்ணுங்க. அப்புறம் நம்ம விஷாகன் அங்க பொறுப்பேத்துப்பாங்க" என்றுக் கூறி வைத்து விட்டு திரும்பி தன் அம்மாவிடம், "இனி அவங்க ட்ரிப்க்கு பிளான் பண்ண சொல்லிடுங்க. ஒரு 2 டேஸ் எனக்கு அரக்கன் படத்தோட டப்பிங் வேல பேலன்ஸ் இருக்கு. அத முடிச்சுட்டு நான் 10 டேஸ் அந்தமான் போய்டுவேன். அதுக்குள்ள எனக்கு ஒரு மேனேஜர் அப்பாய்ண்ட் பண்ணிட்டு ஒங்க மாப்ளய ரிலீவ்வாக சொல்லிடுங்க. அதுக்கப்புறம் அவர் ஹனிமூன் ட்ரிப் முடிச்சுட்டு வந்து ஐ.என் ஹோட்டல் இன்ச்சார்ஜ் எடுத்துக்கட்டும் ஹேப்பி தான?" ௭ன கேக்க.

"சரிப்பா ஆனாலும் மாப்பிளைக்கு ஒன்னோட இருக்கத்தான் இஷ்டம்னு நினைக்குறேன்" என்றார் விஷாகனைப் பார்த்துக்கொண்டு. "ஆமா, மொத்தமா கோர்த்து விடுற அளவுக்கு நான் இவங்களுக்கு என்ன செஞ்சேன். செய்யுறதெல்லாம் வக்கனையா செஞ்சுட்டு கடைசியா மாப்பிளைக்கு, வாழை இலைக்குன்னு என்ன தொக்கு வேண்டியதிருக்கு" என்றான் முனகலாய்.

"ஒன்னு என் மேனேஜரா இருக்கணும் இல்லனா இந்த வீட்டு மாப்பிள்ளையா இருக்கணும். ரெண்டுமா இருக்க முடியாதுமா. என் மேனேஜரா இருந்தா நான் தூக்கிப் போட்டு மிதிச்சாலும் கேக்கக் கூடாதும்மா" என்க. "நான் கேக்கவே மாட்டேன் சார், உங்க மேனேஜராவே இருந்துக்குறேனே விஷா கெஞ்ச. "காலைல தூங்கி வழிஞ்சப்பவே தெரிஞ்சுருச்சு, நீ எந்த வேலைல இருக்க ஆசைப்படுறன்னு" பேப்பரை டீப்பாயில் வைத்து விட்டு எழுந்தவன் "கிளம்புறேன்மா" என்றவாறு இரணியன் வெளியேறினான். அவன் வெளியேறியதை கன்பார்ம் செய்த விஷாகன் "நல்லா வருவீங்கத்தே. உங்ககிட்ட நான் ஹனிமூன் ட்ரிப் கேட்டனா?” "பொண்ணு கேட்டாலே மாப்ள". "அப்போ இனி மேலும் ௭ங்கிட்ட கேட்டு முடிவெடுக்குற ஐடியா இல்ல" ௭ன்றுகூறி இடதுவலம் தலையை ஆட்டிவிட்டு வெளியேறினான். தில்லைவாணி குனிந்து வெளியேறிய கண்ணீரை அடக்கிக் கொண்டார்.

இரணியன் வீட்டை விட்டு வெளியேறி இடது பக்கம் போடப்பட்டிருந்த குடில் நோக்கி சென்றான். அது ரிசார்ட் ரெஸ்டாரண்ட் போன்ற அமைப்பில் இருக்கும். வெளி ஆட்களை அங்கேயே பார்த்து பேசி அனுப்பிவிட ஏதுவாக அமைக்கப்பட்டது. அவன் அதில் போய் வெயிட் செய்ய. விஷா ராட்டியயை இழுத்து அதன் வீட்டில் விட்டுவிட்டு, பாடிகார்ட்ஸ் அலெர்ட் செய்ய திரும்ப , அவர்கள் குடில் நோக்கி அல்ரெடி சென்றிருந்தனர். இவன் சென்று கேட் பக்கத்தில் போட பட்டிருந்த வெயிட்டிங் ஏரியாவில் குவிந்திருந்த ரசிகர்களயும், அதையும் தாண்டி வெளியே வெயிட் செய்து கொண்டிருந்தவர்களையும் கண்டு தலையே சுத்திவிட்டது விசாகனுக்கு. "ஹப்பா இன்னைக்கு நம்ம டங்குவாரு கிழிய போறது உறுதி" என நினைத்துக்கொண்டு, செக்கியூரிட்டிஸ் இருவரை அழைத்து ஒருவனிடம் "நீ 10,10 பேரா உள்ள அனுப்பு". மற்றவரிடம் "நீ வெளில வாரவுங்கள அப்டியே வெளியேத்திடு திரும்ப திரும்ப உள்ள வராம பாத்துக்க " என்றுவிட்டு ரசிகர்களிடம் "ப்ளீஸ் நீங்க கோ-ஆபரேட் பண்ணணும், பலபேர் ரொம்ப தூரத்தில இருந்து சார பாக்க வந்திருக்கீங்கன்னு புரியுது. நீங்க எவ்வளவு சீக்ரம் பாத்து முடிக்கிறீங்களோ, உங்கள மாறியே வெளில வெயிட் பண்ற மத்த ஃபேன்சும் பாத்துட்டு போக வாய்ப்பு கிடைக்கும். சார, பிறந்த நாளதுமா எந்த வகையிலும் டென்ஷன் அகவிடாம நாம தான் பாத்துக்கணும்." அவங்களுக்கு இவன் பேசியதெல்லாம் காதில் விழுந்ததுவோ என்னவோ ஆண்டவனுக்கே வெளிச்சம், எல்லாருமே ஓவர் எக்ஸயிட்மென்ட்டில் இருந்தனர். அதன்பின் ஒவொருவராக உள்ளேசெல்ல, இரணியனை அருகில் கண்டதும் கை குலுக்க, கட்டிப்பிடிக்க முத்தம் குடுக்க, என ஆர்வத்தில் செய்ய வர அதை தடுக்கவே இருவர் அருகில் நின்றனர்.

அவர்களுக்கு காணக் கிடைக்காதது கிடைத்த சந்தோஷம், லிமிட்டில் இருக்க முடியாமல் திணறினர். அவனாலும் ஒரே நேரத்தில் ஆயிரம் பேரை கட்டிபிடிக்க, முத்தம் கொடுக்க முடியாது. அவர்கள் அன்பு புரிந்தாலும் அதற்கு மேல் அவனால் விட இயலாது. கைகொடுக்க, போட்டோ எடுக்க என அனுப்பி கொண்டிருந்தனர். அன்பு பரிசுகள் ஒரு பக்கம் குவிந்து கொண்டிருந்தது. சிலர் கேக் வெட்டி ஊட்ட ஆசைப் பட்டனர், சிலர் சமைத்து எடுத்து வந்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினர். இப்படி பலவகையில் அன்று ஒரு நாள் அவனை சோதித்து விட்டே விடுவர். இதற்கிடையில் பல பிரபலங்களின் போன் கால்ஸ் முக்கியமாக பெண்கள். இரணியனை விட அதிக டயட் ஆகியது என்னவோ விஷாகன் தான். இரணியனோ பெண்களை தவிர்க்க பாக்க, அவர்களோ பேசியே தீருவேன் என அடம்பிடிக்க, இருவரையும் நோகாமல் சமாளிப்பதற்குள் திண்டாடி தான் போவான்.

பிறகு ஒருவழியாக "ஈவினிங் பார்ட்டியில் நேரில் வந்து வாழ்த்தி கொள்ளுங்கள், இப்ப ரசிகர் மன்றத்தில இருந்து வந்தவங்க கூட்டம் அதிகமா இருக்குது" என வைத்து விடுவான். மாலை மணி 4 ஆகியும் ஆட்கள் வந்து கொண்டேயிருக்க, "6 மணிக்கு பார்ட்டி ஸ்டார்ட் பண்ணனும், எப்ப அரேஞ்சுமெண்ட் செட்டப்லா போய் முன்ன நின்னு பாப்பேன்" என்று விஷா புலம்பிக் கொண்டிருக்க.

"விஷா, இனி கொஞ்சம் மொத்த மொத்தமா கூட்டிட்டு வந்திடு" என்றான் இரணியன். அவன் வந்தவர்களின் அன்பை மதிப்பான், தனக்காக எவ்வளவு தூரத்திலிருந்து, ஒரு நடிகனை விஷ் பண்ணுவதற்காக கிளம்பி வந்திருக்கிறார்கள் என்பதை நன்கு உணர்வான். சிறு சுணக்கம் கூடக் காட்டாமல் காலை 9 மணிக்கு எப்படி இருந்தானோ அதே உதடு பிரிக்காத சிரிப்போடு மாலை 5 மணி வரை இருந்தான். எல்லார் வாழ்த்தையும் பெற்று, போட்டோ, ஆட்டோகிராப் எடுத்துக்கொடுத்தே அனுப்பினான். இவ்வளவு நேரம் சாமானியர்களின் வாழ்த்தைப் பெற்றவன், இனி மூன்று மணி நேரம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்துகளை பெற தயாரானான்.
 
அத்தியாயம் 4
விஷாகன் 5 மணி வரை ஃபேன்சை கவனிப்பதில் பிஸியாக இருந்தாலும், அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் மொத்த கார்டனையும் ஹை கிளாஸாக மாற்றி விட்டிருந்தான். 6.30 மணியிலிருந்து ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். மொத்த திரையுலகமும் அங்குதான் திரண்டிருந்தது. அது மட்டுமில்லாமல் அவன் அப்பாவின் தொழில் நட்புக்கள், அவன் அம்மாவின் கிளப் மெம்பர்கள் என பண செழிப்பை அங்கு மொத்தமாக காணும் அளவில் இருந்தது.

பாடிகார்ட்ஸ் இருவர் சென்று வாசலில் நிற்கவுமே, அங்கு எல்லோருக்கும் புரிந்தது, இரணிய ஹர்பன் வந்து கொண்டிருக்கிறான் என. மொத்த கவனமும், வீட்டு வாயிலுக்கு சென்று விட, ஸ்டைலாக வந்து கொண்டிருந்தான், அவன் நடையில் இயற்கையாகவே ஒரு கம்பீரம் இருக்கும். அவன் அப்பாவே, "இது நம் பரம்பரையின் காரணத்தால் வந்த நடை" என பெருமைப்பட்டுக் கொள்வார். சினிமாவில் பார்ப்பவர்கள், அது சினிமாவுக்காக என நினைக்கலாம். ஆனால் அவனைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பவர்கள் எளிதில் அறிந்து கொள்வர், அவன் நடையே அப்படித்தான் என்று.

அவன் ஒரு பார்ட்டி வியரில் வந்து நிற்க, எல்லோரும் கைத்தட்டி வரவேற்றனர். அதன்பின் அஸ்யூசுவல் கேக் கட்டிங், பஃப்பே முறையில் டின்னர், பொக்கேஸ், கல்யாணம் எப்ப பண்ணிக்க போறீங்க? ௭ன கேள்விகள் பல. என் ரிலேஷன், என் டாட்டர், ஈவன் பொண்ணுங்க ஸ்ட்ரயிட்டாவே ப்ரோபோசல் முன்வைக்க என பொழுது கடந்தது. அவனது சின்ன தலையசைப்பே அவர்களுக்கு பதிலாக கிடைக்கும், அதை ஆம் என எடுத்துக் கொள்ளவா? இல்லை என எடுத்துக்கொள்ளவா? என்று குழம்பியே செல்வர். இறுதியாக ட்ரிங்க்ஸ் பார்ட்டி, அதிலும் சோசியல் ட்ரிங்க்காக ஒரு கிளாஸுடன் நின்று விடுவான் இரணியன். இது தான் அவன் நடிகனாக அறிமுகம் ஆனதிலிருந்து பிறந்த நாளன்று வழக்கமாய் நடக்கின்றது. எல்லோரையும் அஃப்சர்வ் செய்து கொண்டு நிற்பான், அதிகம் பேச மாட்டான் என்பதால் மற்றவர்களின் எண்ணத்தை அவர்களை பேசவிட்டு கிரகித்து விடுவான். எந்த மாற்றமும் இல்லாமல், தனது 29 ஆவது பிறந்த நாளையும் கொண்டாடி முடித்து அறையை வந்தடைந்தான். எல்லாம் இருக்கிறது அவனை சுற்றி அதிக பணம், கேட்டதை உடனே சாதித்து கொடுக்கும் ஆளுமை, அன்பான குடும்பம், கோடி கோடியாய் ரசிக்கும் மனிதர்கள், ஆனாலும் அவன் மனம் முழுமையடையவில்லை. எதையோ தேடிக் கொண்டே இருக்கிறது. எது என அறிந்தால் உடனே சென்று கண்டுவிடலாம், வாங்கும் பொருளாக இருந்தால் ஒன்றுக்கு இரண்டாக வாங்கி விடலாம். ஆனால் எது எனத் தெரியாமல் எதையென்று வாங்குவான், யோசித்து யோசித்து சலித்து விட்டான். செல்லும் இடங்களிலெல்லாம் தேடியும் விட்டான். குடும்பம் ஒன்று அமைந்து விட்டால் தேடல் நின்று விடுமோ? மனைவி குழந்தைகள் என ஆசை வந்து விட்டதோ? என்று யோசித்துப் பார்த்தான், பார்க்கும் பெண்களெல்லாம் இவன் நன்றாக கவனிக்கும் முன் இவன் மேல் வந்து விழுந்து விடுகின்றனர். அதற்கு மேல் எங்கிருந்து ரசிக்க என்று ஒதுங்கி விடுவான். அவனுடைய இந்த பிறந்தநாளுக்கான வேண்டுதலே, "அடுத்த பிறந்தநாளுக்குள்ளாவது என் தேடல் என்ன என்பதை கண்டுகொள்ள வேண்டும்" என்பதுதான். யோசனையுடனே உறக்கத்தை தழுவினான் இரணியன்.

அங்கு அதேநேரம் பாப்பு குட்டியின் வீட்டில், இரவு சாப்பாடு முடித்து விட்டு, வடிவு ஹாலில் அமர்ந்திருக்க, வேதிகா அப்போது தான் டூயூட்டி முடித்து வீட்டினுள் நுழைந்தாள். "என்னம்மா வீடே அமைதியா இருக்கு? இன்னும் வரலையா அவ?" என டென்ஷனாக. "உள்ளதா இருக்கா, பக்கத்து வீட்டு ஜான் ஒரு பஸ்ஸில் கொடுத்தான்னு அதிமுக்கியமா உட்கார்ந்து சால்வ் பண்ணிக்கிட்டுருக்கா". "அப்ப உன் இரண்டாவது மக இன்னும் வீடு திரும்பல?” "ஆமா ஏதோ கெட்டுகதராம், கிளம்பிட்டேன்னு போன் பண்ணுனா". "அப்பா?” "இப்பதான் சாப்ட்டு உள்ள போனாக. பாத்ரூம் போயிருப்பாக. நீ பிரெஷ்ஷாகிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்றார்.

அதன்பின் வேதிகா சாப்பிட அமர, சுகாசினி உள்நுழைந்தாள். "ஏன் இவ்ளோ நேரம்? கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினா தான் என்ன?" வடிவு கேக்க. "நா என்ன உன் மூணாவது புள்ள மாதிரி வெட்டியாவா ஊர் சுத்திட்டு வாரேன். என்னைக்காவது தான் பார்க்க முடியும், அதான் கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு வர வேண்டியதாயிடுச்சு". "சரி சரி வந்ததும் ஆரம்பிக்காத. ரெண்டு தோசை சாப்பிடுறியா?” "அதயும் அவட்டையே குடுங்க, கொட்டிக்குவா. மேடம் வீடு வந்து சேரலையா இன்னும்? " ௭ன கேட்டு கொண்டிருக்க. "அவ்வளவு பயம் இருக்கும்போது, ஏன் வாய் பேசுற" ௭ன்றவாறு சுஹாசினி பின் வந்து அவள் காதில் கத்தி கேட்க. "அறிவு கெட்ட எரும, ஏண்டி பின்னாடி இருந்து கத்துற, உன்ன பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லடி வெட்டி பாப்பு". "உனக்கு பொறாமடி, இவ மட்டும் ஹாயா ஜாலியா இருக்காளே, நாம மட்டும் இந்த வேகாத வெயில்ல அங்கியோட சுத்துறமேன்னு, வயித்து தெறிச்சல்". "ஆமாடி பி.இ 4 வருஷம், எம்.பி.ஏ. 2 வருஷம்னு டபுள் டிகிரிய இப்படி ஹாயா உக்காரத்தான் படிச்சுயோ? அதுக்கு டென்த்த முடிச்சிட்டு உட்கார்ந்துருக்கலாமே. இங்க தான் யாரும் ஒன்ன கேட்க போறதில்லையே. தின்னுட்டு தின்னுட்டு தூங்குறனால தான கொழுப்பு கூடிப் போய் திரியுற". "ஏன் நீயா சம்பாதிச்சிக் கொண்டு வந்து கொட்டுற. அதான் ஒன் லாக்கர்ல தனியா போட்டு சேத்து வைக்கியே. அத கொண்டான்னு நா கேட்டுட்டா இருக்கேன். இன்னும் அப்பா காசயும், என் பங்கயும் சேத்து ஆட்டைய போட பிளான் பண்றியோ? அப்படிலா விட்டுற மாட்டேன்டி வெள்ள பாட்ச்சா, பகல் கனவு காணாத". "அது பேரு ஆட்டையப் போடுறதில்ல, சேவிங்ஸ்டி கூமுட்ட". "அத அப்படி சூசகமாக சொல்லி திருடுடி திருடி, பாக்கத்தான போறேன், யாருக்காக அந்த சேவிங்ஸ்ன்னு, ஒருநாள் ஒன் குட்டு வெளிப்படும்டி அப்ப இருக்கு உனக்கு". "போ போ ஒன்ன மாறி அன்னக்காவடியா இல்லல, அதுவர எனக்கு என்ன நெனச்சு பெருமதான்டி" ரூமை விட்டு வெளியே வந்த மெய்யப்பன், "நாளைக்கு அந்த சீனிவாசன் மர்டர் கேஸ் கோர்ட்டுக்கு வருதுல்ல பாயிண்ட்ஸ் எடுத்துட்டியாமா?" எனக் கேட்க. "அல்மோஸ்ட் ஆச்சுப்பா. அவன் வைஃப்வே, கொன்னுட்டது ப்ரூவ் ஆகிடுச்சுப்பா. பைனலைஸ் பண்ணி ஜட்ஜ்மென்ட் நாளைக்கு வாங்கிடலாம்". "சரிமா போய் படு, காலையில சீக்கிரம் எழுந்து அத ஒன்ஸ் பாத்துரு". "சரிப்பா" என்றவள் திரும்பி பாப்புக் குட்டியை முறைக்க தவறவில்லை. "போடி வெள்ளை பாட்சா" என இவளும் குணட்டி விட்டு தன் அறைக்குள் புகுந்து விட்டாள் விட்ட பஸ்ஸிலை முடிக்க.

இவரும் இருவர் சண்டையயும் கலைத்துவிட்டு மூத்த மகளிடம் வந்தார். "என்னப்பா எழுப்பிட்டாங்களா?” "அதெல்லா இல்லம்மா, அவங்க சத்தத்துல தூங்கி பழக்கமாயிருச்சு, இன்னைக்கும் சண்ட இல்லன்னா தூக்கமே வந்துருக்காது. நல்ல வேலை என் தூக்கத்தக் கெடுக்காம இன்றைய நாள நிறைவு செஞ்சுட்டாங்க". "ஆமாப்பா, வீடு அமைதியா இருந்தா ஒரு மாதிரி தான் இருக்கு. இல்லன்னா நா எப்ப கீழ கேட் நுழையும்போதும் ஒரு குழாயடிச் சண்டை, டபிள்யூ டபிள்யூ மேட்ச், கீழ் புளோர் வர கேக்கும். நமக்காகத் தான் இங்க யாரும் இன்னுவர கம்ப்ளைன்ட்ன்னு குடுக்காம இருக்காங்க" என்க. "அவங்களும் இவுங்க சவுண்ட்ல தூங்க பழகினாலும் பழகியிருப்பாங்கம்மா" இருவரும் சிரித்துக்கொள்ள. வடிவும் கடைசி தோசையை சுட்டுக் கொண்டு வந்து வைத்துவிட்டு அமர்ந்து கொண்டார்.

"அந்த ஹோட்டல் கேஸ், பாப்புக் குட்டி அடிச்சாளே அந்த பையன அரெஸ்ட் பண்ணியாச்சுப்பா. ரெண்டு, மூணு பொண்ணுங்க கிட்ட இப்படி ஃபேக் ஐடி கிரியேட் பண்ணி தப்பா பேசியிருக்கான். அவன் மொபைல் செக் பண்ணதுல கிடைச்ச இன்பர்மேஷன் வச்சு எப்.ஐ.ஆர் போட்டாச்சு. அவங்க ஹோட்டல் சைடுல இருந்தும் கம்பளைண்ட் ரிஜிஸ்டர் பண்ணிட்டாங்க. பாப்பு பேரு வெளியே வராது. நான் பாத்துக்குறேன். வீடியோ கூட எடுத்துருப்பாங்க போல, எல்லாம் அவங்களே கிளியர் பண்ணிட்டாங்க. அது அவளோட சார்(ம்)மோட ஹோட்டல்ன்னு மேடம்க்குத் தெரியாது போல, இனி தெரியவும் வேணா. பின்ன அடிக்கடி போக வாய்ப்பிருக்கு, தேவையில்லாத பிரச்சனைய இழுத்துக்குவா" என முடித்தாள். "ம் தெரிஞ்சாலும் அப்படி போய் பாப்பான்னு எனக்கு தோணல, அவளும் ரசிகர் மன்ற தலைவி தான். அவர் வீட்டுக்கு அவ நினைச்சா போய் பாக்கலாமே, அவ போகலையே. என்னால அவள புரிஞ்சுக்கவே முடியலம்மா". "ஆமாப்பா, இவ இப்படித்தான்னு ஒரு முடிவுக்கே வர முடிய மாட்டேங்குது. சரிப்பா இத இப்படியே விட்டுறலாம். இந்த விஷயம் அவளுக்கு தெரிய வேணாம்" என்பதோடு சாப்பிட்டதை எடுத்து வைத்து உறங்க சென்றனர். பாப்புக் குட்டியும் ஒரு வழியாக பஸ்ஸில் சால்வ் செய்த சந்தோஷத்தில் கை, காலை சுருக்கி குழந்தையான முக பாவத்தோடு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.

'அரக்கன்' இரணியனின் முப்பத்தைந்தாவது படம். சூட்டிங் எல்லாம் முடிந்து எடிட்டிங் வேலை மட்டும் இருக்க, பிப்ரவரியில் ரிலீஸ் பண்ண ப்ளான் பண்ணி கொண்டிருக்கின்றனர். இங்கு வீட்டில் "அவனோட அடுத்த படம் ஒரு லவ் சப்ஜக்ட், சோ கண்டிப்பா அவுட் ஸ்டேஷன் போகவேண்டியிருக்கும், சீக்கிரம் மேனேஜர் செலக்ட் பண்ணி ஆகணும் தான். அதுக்காக ஒரு பொண்ணு மேனேஜர செலக்ட் பண்ணா ஒன் அண்ணன் ஒத்துக்கவே மாட்டான். வீணா மாப்பிள்ளைய மாட்டிவிட்டு வேடிக்கை பாக்காத" தில்லைவாணி பவ்யாராணியிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். "ம்மா இத விட நல்ல சான்ஸ் கிடைக்காது. அவ ரொம்ப நல்ல பொண்ணும்மா, அண்ணன உண்மையா லவ் பண்றா, நாம என்ன சொன்னாலும் கேட்டுப்பா. தெரியாத ஒருத்திய கட்டி வச்சனா, மொத உன்னையும், என்னையும் தான் வெளியில அனுப்புவா. இவ அப்படிலா இல்லம்மா. என்ன பத்தியும் அடிக்கடி அண்ணன்ட்ட நல்லவிதமா சொல்லி பழச மறக்க வச்சிருவா. அண்ணா என் புருஷனையும் இப்ப அவர விட்டு தள்ளி வச்சுட்டாங்க. இனி என்ன பண்றாங்க? எங்க போறாங்கன்னு? எதுவுமே தெரியாம போயிடும் சொல்லிட்டேன். நான் சொல்றத கேளு". "அடியே ஒன் ப்ரண்ட்டுன்னு சொல்றியே, அதுதான் எனக்கு பயமா இருக்கு. அது மட்டும் அவனுக்கு தெரிஞ்சது, பொண்ணுனாளே ஒத்துக்க மாட்டான். இதுல ஒன் பிரண்டுன்னா கண்டிப்பா ஒத்துக்க மாட்டான். ஒன் அண்ணன பத்தி உனக்கு தெரியாதா? யார் வார்த்தையும் அவன்ட்ட எடு படாது". "அண்ணனுக்கு சொல்ல வேணாம்மா. என் வீட்டுக்காரர் மூலமா ஏற்பாடு பண்ற மாதிரி பண்ண சொல்லிடுறேன்". "மொத ஒன் வீட்டுக்காரர் அதுக்கு ஒத்துக்கறாரன்னு பாரு. அப்புறம் முடிவு பண்ணலாம்". "அவர எப்படி ஒத்துக்க வைக்குறதுன்னு எனக்குத் தெரியும்" என்றாள் முடிவாக. "உன் அண்ணன் ஒத்துக்கிட்டா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல" என எழுந்து சென்றுவிட்டார் வாணி.

இரணியன் டப்பிங் முடித்து வெளியே வர, விசாகன் வந்து “சார் ஆயூஷ்ன்னு ஒருத்தர் ஸ்டோரி சொல்லணும்னு வெயிட் பண்றார்” தயக்கமாய் சொல்ல. “ஆபீஸ் வர சொல்ல வேண்டியது தான, இப்போக்குள்ள ஷெட்யூல் இல்லன்னு உனக்கு தான் தெரியுமே” என கூறிகொண்டே கார் பார்க்கிங் நோக்கி போக, "60 டேஸ் போதுமாம் சார், நம்ம அடுத்த படம் முடிஞ்சு 3 மந்த்ஸ் பிரேக் இருக்கு சார், அதான் உங்கள்ட்ட கேட்டுட்டு சொல்லலாம்னு". காரை நெருங்கியவன் திரும்பி ஒரு பார்வை பார்க்க, "என்னய பிரேக்கே எடுக்க விட மாட்டியானு கேக்கீங்களா சார், புதுமுகம்னா என்கிட்ட கேட்காம டிசைட் பண்ணாதேன்னு சொல்லுவீங்களே சார்” ௭ன்க. “புதுமுகமா?” ௭ன்றான் நிதானமாக. அதுவே போதுமானதாக இருக்க சற்று தள்ளி நின்று எட்டி எட்டி பார்த்துகொண்டிருந்தவனை, கையை ஆட்டி அருகில் அழைத்தான். அவன் ஓடி வர, இரணியன் காரில் சாய்ந்தவாறு நின்று விட்டான்.

அருகில் வந்தவன் “நான் ஆயூஷ், 3இயர்ஸ் பிரதீப் சார்ட்ட அசிஸ்டன்ட் டிரேக்டரா ஒர்க் பண்ணிருக்கேன். என் ஸ்டோரி மேல உள்ள நம்பிக்கைல தான் இப்ப தைரியமா உங்க முன்னாடி நிக்றேன்”. “எனக்கு ஸ்டோரி சொல்றதுலா ஓகே. சப்ஜெக்ட் காண பட்ஜெட் போட பிரடியூசர் ரெடியா?” “உங்களுக்கு ஸ்டோரி பிடிச்சிருக்குன்னு வெளில தெரிஞ்சாலே, நான் நீன்னு போட்டி போட்டுட்டு பிரடியூஸ் பண்ண வருவாங்க சார்” “சப்போஸ் வரலைன்னா என்னோட அடுத்த ஹால்ப் அன்ட் அவர் வேஸ்டா போய்டுமே“ என்றவாறு பின் கதவை திறந்து ஏறிவிட்டான் இரணியன். குழம்பி நின்ற புதுமுக இயக்குனரோ, “சார் இப்ப என்ன என்ன செய்யச் சொல்றாங்க” என விசாகனிடம் கேட்க “கத புடிச்சா ப்ரோடியூசர் ரெடி பண்றது உன் சாமர்த்தியம் சோ அடுத்த அறை மணி நேரத்துல கதைய சொல்லி முடிக்கனுன்னு சொல்றாரு, கார்ல ஏறு" என கூறி முன்னாள் டிரைவருடன் ஏறிக்கொண்டான். நடுக்கத்துடன் மறுபக்கம் வந்து பின் கதவை திறந்து “சார்” என தயங்கி அழைக்க. இரணியன் தலையசைத்து அனுமதி வழங்க உள்ளே ஏறிக்கொண்டான். அதன்பின் கதை சொல்ல ஆரம்பிக்க, தன் கதையைச் சொல்லி முடித்து இரணியன் முகத்தை ஆர்வமாய் பார்க்க, அந்த ஆர். டி. ஆர். எஸ்7 ராயல் ப்லு இரணியன் வீட்டை அடைந்தது.

"கதை நல்லா இருக்கு மிஸ்டர் ஆயூஷ். ஆனா எனக்கு இந்த ரோல் செட் ஆகும்னு தோணல நீங்க கதை சொல்லும்போது எனக்கு மைண்ட்ல வந்த ஹீரோ வித்யுத் தான். அவர ட்ரை பண்ணி பாருங்க. நா ஸஜஸ்ட் தான் பண்றேன். மற்றபடி அஸ் யூ விஷ். ஆல் த பெஸ்ட்" என்றவன், காரை விட்டு இறங்கி "விசா கவனிச்சு(காபி குடிக்க வச்சு) அனுப்பு" ௭ன்றுவிட்டு இரணியன் வீட்டினுள் சென்றுவிட, விசாகன் ஆயுஷை அழைத்துக்கொண்டு விசிட்டிங் ஏரியா நோக்கி நடக்க, "என்ன சார், சார் இப்படி சொல்லிட்டு போறாங்க". "ஏன்ப்பா சார் சஜெஸ்ட் பண்ண ஆக்டர் கூட பெரிய ஆக்டர் தானே", என்றவாறு இன்டர்காம் எடுத்து, "சாந்திம்மா விசிட்டிங் ஏரியாக்கு ஒரு காப்பி" என்று கூறிவிட்டு "இங்க பாரு ஆயுஷ், சார் சொன்னா சரியா இருக்கும், உன் கதைக்கு சார மட்டும் தான் கேரக்டரா வச்சு எழுதுனியா?" எனக் கேட்க. "அப்படின்னு சொல்லிட முடியாது. சார் பண்ணினா கண்டிப்பா என் கதை ரீச்சாகிடும். சோ அடுத்தடுத்து நல்ல சான்ஸ் கிடைக்கும். அதுக்காக என் கதை மேல நம்பிக்கையில்லன்னு இல்ல" என தயங்கி தயங்கி சொல்ல. "எஸ், பஸ்ட் பிலிம்ங்குறதால ஒன் மைண்ட்செட் இப்படித் தான் இருக்கும்னு கெஸ் பண்ணி தான் சார் ஆப்ட்டா யாரு இருப்பான்னு சொல்லிட்டு போயிருக்காங்க. சோ தைரியமா போய் அவர்கிட்ட ஸ்டோரி சொல்லு அவரும் வளந்து வர்றவங்கள தூக்கி விடணும்னு நினைக்குற ஆக்டர் தான். அத பண்ணிட்டு, சாருக்கு மட்டுமேன்னு ஒரு கதையோடு வா" அந்நேரம் காபி வர, விஷாகனே வாங்கி ஆயுஷிடம் கொடுத்து அவன் குடித்து முடிக்கவும் வழியனுப்பி வைத்தான்.

அன்று இரவு கூடலுக்குப் பின், பவ்யா மெதுவாக விஷாகனிடம், "ஏன் விஷா அண்ணனுக்கு மேனேஜர் செலக்ட் பண்ணிட்டியா? என்ன பண்ணுறதா ஐடியால இருக்குற" அலெர்ட் ஆனான் விஷாகன், எழுந்து உடையை மாற்றியவன், "அது எதுக்கு இந்நேரம்?” "இல்ல நான் ஒரு யோசனை சொல்லலாம்னு" என அவள் இழுக்க. சந்தேகமாய் அவளைப் பார்த்தவன், "என்ன யோசனை, எங்க சொல்லு கேப்போம்" என தண்ணீர் பாட்டிலுடன் அந்த அறையில் இருந்த சோபாவில் அவளைப் பார்த்த வண்ணம் அமர்ந்து கொண்டான். "இல்ல அண்ணனுக்கு பொண்ணுங்களே பிடிக்காம போனதுக்கு நானும் ஒரு ரீசன். அதான் அத சரி பண்ணி அண்ணன்ட்ட நல்ல பேரு வாங்கலாம்ன்னு பாக்குறேன்". "ஓ சரி, அதுக்கு". "அதான் என் ஃப்ரண்டு ஒருத்தி இருக்கா, நிஷா. அவ அண்ணன ரொம்ப வருஷமா லவ் பண்றா. நேரா சொல்லக் கூட ரெண்டு மூணு டைம் ட்ரை பண்ணிட்டா. ஆனா கிட்ட வரவும் பயம் வந்து சொல்ல முடியாம போயிடுறா". "சொல்லிற கிள்ளிறப் போறா. அப்புறம் வாய் கோணிக்கும், ஒரு பயலும் பாக்க மாட்டான்னு சொல்லி வை". "ஏய் என்ன விஷா இப்படி சொல்ற, அவ ப்ரொபோஸ் பண்ணா அண்ணன் ஏத்துக்க மாட்டாங்க தான். ஆனா நீ மட்டும் அவள மேனேஜரா ஜாயின் பண்ணி விட்டுரு, 24 ஹவர்ஸ் கூடவே இருப்பா, கண்டிப்பா இம்ப்ரெஸ் பண்ணிடுவா. அப்புறம் என்ன பத்தி நல்ல விதமா எடுத்து சொல்லிடுவா, எல்லாமே ஒரே விஷயத்துல நடந்துரும் எப்படி" என அவள் ஆர்வமாக கேட்க.

"௭ன் சீட்டும் கிழிஞ்சுரும்" என முனங்கியவன், "எனக்கு இப்ப நல்ல தூக்கம் வருது, இதப்பத்தி நாம நாளைக்கு டிசைட் பண்ணலாம்" என படுக்கப் போக. "நீங்க எதுக்கு பயப்படுறீங்கன்னு எனக்குத் தெரியும். ஒரு பொண்ணு மேனேஜர்ன்னா அண்ணா ஒத்துக்க மாட்டாங்கன்னு தானே. அத நீங்க இப்பவே சொல்லாதீங்க. அம்மாவ விட்டு நைஸா அத அண்ணன் மைண்ட்ல போட்டு வைக்கச் சொல்றேன். அண்ணன் ட்ரிப் போயிருக்கும்போது நீங்க இவள ஜாயின்ட் பண்ணிட்டு, ரிலீவ்வாகிடுங்க. அப்புறம் நாம ஹனிமூன் கிளம்பலாம். அண்ணா வந்துட்டு அடுத்த படத்த ஸ்டார்ட் பண்ணனும், சோ மேனேஜர் மாத்துறதப் பத்தி யோசிக்க டைம் இருக்காது" என்றாள். "பயங்கர பிளான்தான். நான் தான் கொஞ்சம் யோசிக்கணும். நாளைக்கு இதப்பத்தி டிசைட் பண்ணலாம். இப்ப என்ன தூங்க விடு" என்றவன் அடுத்த நிமிடம் தூங்கியும் விட்டான். "ரொம்பத்தான்" என்றவளும் தூங்க முயற்சி செய்தாள்.

அடுத்த நான்கு நாட்களில் இரணியன் அந்தமான் கிளம்ப தயாராக, கிளம்புமுன் அவன் அம்மா மெதுவாக ஆரம்பித்தார், "உனக்கு கல்யாணம் பண்ணனுமே கண்ணா. இப்ப ஆரம்பிச்சா தான் நெக்ஸ்ட் இயர்லனாலும் பண்ண முடியும்". "இது இப்ப, நா ஊருக்கு கிளம்பும்போது பேசவேண்டிய கட்டாயம் என்னம்மா?" அவன் டைரக்டாக பாயிண்ட்டுக்கு வர, "அதில்ல கண்ணா, உனக்கு கேர்ள் ப்ரெண்ட்ஸும் கிடையாது, உன்ன சுத்தியும் மேனேஜர்ல ஆரம்பிச்சு காஸ்ட்யூம் டிசைனர் வர எல்லாமே ஜென்ஸ். பின்ன எப்படி பொண்ணுங்கள புரிஞ்சிக்க முடியும். கொஞ்சம் ஸ்பேஸ் குடுத்து பழகுனா, மேரேஜ்ல உனக்கு இன்ட்ரஸ்ட் வரும்னு தோணுது" அவர் இழுத்து நிறுத்த. "சோ எனக்கு மேனேஜர் செலக்ட் பண்ணிட்டீங்க ரைட்?” 'எப்படித்தான் இப்படி கண்டுபிடிக்கிறானோ? இவன ஏமாத்திரலான்னு, இவன் தங்கச்சியும் கனா கண்டுட்டு இருக்கா?' என மனதில் நினைத்தவர்.

"அப்டில்லாம் இல்லப்பா, அதெல்லாம் மாப்பிள்ளைதான் பாத்துக்கிறார். இத மட்டும் உன்கிட்ட கேட்டு ஒரு லேடி மேனேஜர் அப்பாய்ண்ட் பண்ணச் சொல்லலாமேன்ட்டு கேட்டேன் அவ்வளவுதான். உனக்கு பிடிக்கலைன்னா நீ தான் உடனே வெளியேத்திடுவியே" என்றார் தப்பிக்கும் மார்க்கமாய். இதற்குமேல் சமாளிக்க இயலாது என்ற முடிவிற்கும் வந்திருந்தார். அவனுக்குமே அந்த தேடல் ஒரு பெண்ணுடன் இருந்துவிட்டால் தீர்ந்துவிடுமோ என்ற யோசனை வந்து போக, உடனே போனை எடுத்து விஷாகனிடம், லேடி மேனேஜர் அப்பாய்ண்ட் பண்ண சொல்லிவிட்டு அந்தமான் பறந்துவிட்டான் இரணியன். அம்மாவிற்கும், மகளிற்கும் ஏதோ பெரிதாய் சாதித்து விட்ட மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். ஆனால் விஷாகன் யோசிக்கத் தொடங்கினான், அவன் மனைவி போதித்தது அத்தனையும் வந்து போக, அவற்றை எல்லாம் மனதில் வைத்து சல்லடை போட்டு சலித்து பெண்களை அலச ஆரம்பித்தான். இரணியனுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையாகவே தேடினான்.

அன்று வெள்ளிக்கிழமை, மாலை 7 மணி, சன் டிவியில் ரோஜா சீரியல் ஓடிக்கொண்டிருக்க, கிரவுண்ட் ப்ளோரில் உள்ள அசோசியேசன் மீட்டிங் நடக்கும் ஹாலை சீரியல் கூடமாக்கி நடுவில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள் பாப்பு குட்டி. "ஏன் மாமி இவ என்னைக்குத் தான் திருந்துவா, மொத அண்ணன், இப்ப தம்பி அடுத்து அந்த வீட்ல வேற ஆள் இல்லையே என்ன பண்ணுவா?" எனக் கேட்க. "அதுக்கு புதுசா அர்ஜுனுக்கு இன்னொரு தம்பிய எங்கிருந்தாவது கொண்டு வருவாங்க" என இன்னொரு பாட்டி பதில் சொல்ல என சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தாள். அந்நேரம் அவள் அம்மா வந்து மீட்டிங் ஹால் வாசலில் நின்று, "ஏய் பாப்பு வாடி கோவில் போயிட்டு வந்துரலாம். இனி நான் நடந்து போனா லேட்டாகிடும், ஓ ஸ்கூட்டில கூட்டிட்டு போயிட்டு வந்துருடி" என அழைக்க. பக்கத்திலிருந்த பாட்டியிடம், "பாக்கு(பாக்யம்) பாட்டி பார்த்து வையுங்க, வந்து கதை கேட்டுக்றேன்" என்று விட்டு எழுந்து சென்று தன் தாயை அழைத்துக் கிளம்பினாள்.

அகஸ்தீஸ்வரர் சிவன் கோவில் வந்து நன்றாக சுற்றி கும்பிட்டு, பிரசாதம் வாங்கி அமுக்கி விட்டு, வெளியே அவள் நிறுத்திச்சென்ற ஸ்கூட்டியே எடுக்க வர, பின்னிருந்து யாரோ இடித்துத் தள்ளப்பட்டு முன்னால் வண்டியோடு சரிந்து விழுந்தாள். மெதுவாக எழுந்தவள், அவளது ஸ்கூட்டியை "சாரி மேடம், சாரி, அடி ௭துவும் படலியே" ௭ன கேட்டவாறு தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தவனை, எழுந்த வேகத்திற்கு தானும் அவனுடன் சேர்ந்து வண்டியை நன்கு தூக்கி நிறுத்தி விட்டு, அவனை விட்டாள் ஒரு அறை.

"ஏய் ஏன்டி, அதான் ஒன்னும் ஆகலல்ல எதுக்கு அந்த பையன அடிச்ச" அவள் அம்மா பிரச்சனை வரும் முன் தடுக்க நினைத்து இவளை அதட்ட. "எம்மேல வேணும்னு இடிச்சு கீழ தள்ளிட்டு நல்லவன்மாறித் தூக்கி நிறுத்தினா கீழே விழுந்தது இல்லன்னு ஆயிடுமா" என இவள் ஏகத்துக்கு குதிக்க. அதுவரை கன்னத்தை தாங்கி எதுக்கு இந்த புள்ள அடிச்சது என விழித்துக் கொண்டு நின்ற மற்றவன், இப்பொழுது காரணம் தெரிந்ததும் டென்ஷனாகி, "விட்டேன்னா பாரு, அறிவு இருக்கா?", பக்கத்துல நின்ற காரை காண்பித்து "இந்த வண்டி தான் என் வண்டி மேல இடிச்சது, பேலன்ஸ் இல்லாம ஓமேல இடிச்சுட்டேன். பாவம்ன்னு தூக்கி விட்டா, கை நீட்டி அடிப்பியா நீயி" அவனும் சண்டைக்கு வர.

"ஏய் என்ன தப்ப நீ பண்ணிட்டு, மாட்டுனவதும் மாத்தி பேசுறியா? என்ன? பொம்பள புள்ள மெரட்டுனா பயந்துருவான்னு நெனச்சியோ? செவுல திருப்பிருவேன்" என இவளும் கையை ஏத்தி விட்டுக் கொண்டு கிளம்ப. "அற லூசா நீயி, பஜாரியா இருக்க". "ஓ உங்கள தட்டிக் கேட்டா நாங்க பஜாரியாகிடுவோமோ? இப்படித்தான்டா ஊர்ல எல்லா பொண்ணுங்களையும் உங்க கால்ல போட்டு மிதிக்க பாக்குறீங்க". "இந்தா டா போட்டு பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத பல்ல உடைச்சிடுவேன்". "எங்க மேல கைய வச்சிருவியா நீயி, வைடா பாக்குறேன்" என இவள் அடிக்கப் போவது போல் போக.

"அடியேய் எல்லாரும் பாக்குறாங்க, கொஞ்சம் சும்மா இரு. வண்டி நல்லா தான இருக்கு, எடு கிளம்புவோம்". "நீ சும்மா இரும்மா, உன்ன மாதிரி பயப்படுற ஆளுங்க இருக்கனால தான், இவன மாதிரி ஆம்பளைங்க எல்லாம் துள்ளிட்டு திரியுறாங்க". அவள் அம்மா அவர் தலையிலடித்துக்கொண்டு வேதிகாவிற்கு போன் செய்ய போக, "அவன் இவன்னு உனக்கு வாய் நீளுது, என்னப் பத்தி தெரியாம பேசிட்டுருக்க, அப்புறம் ரொம்ப வருத்தப்படுவ சொல்லிட்டேன்". "என்னடா பண்ணுவ? என்ன பண்ணுவ? இப்ப உன் முன்னாடி தான நிக்கிறேன் நீ என்ன செய்வேன்னு எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்" என வாக்குவாதம் முற்றிக் கொண்டு போக.

ரவுண்ட்சில் இருந்த வேதிகா, அம்மாவின் அழைப்பால் அடுத்த கால் மணி நேரத்தில் அங்கு ஆஜராகி, கிரௌடை விலக்கி விட்டு, "பாப்பு கெளம்பு, நடுரோட்டுல என்ன பிரச்சனை பண்ணிட்டுருக்க" வந்ததும் தன் தங்கையை அறிந்தவளாய் அவளிடமே கேள்வி கேட்க. பக்கத்தில் நின்றவனோ முந்திக் கொண்டு பதில் சொன்னான், "மேடம் அந்த ஜாகுவார் தான் என் மேல இடிச்சது, பேலன்ஸ் இல்லாம இவங்க மேல விழப்போய்ட்டேன், ஸ்கூட்டியோட விழுந்துட்டாங்க. என் வண்டி தள்ளிதான் விழுந்து கிடந்தது. ஆனாலும் என் வண்டிய தூக்கி நிறுத்திட்டு வந்து இவங்களையும் தூக்கி நிறுத்திட்டுருந்தேன். அத புரிஞ்சுக்காம, வந்து இத்தன பேரு முன்ன கை நீட்டிருச்சி இந்த பொண்ணு".

பெண் சொன்னாள் போலீஸ் நம்பிவிடுவர் என முந்திக் கொண்டு தன்னை நியாயப்படுத்தினான். "பொய் சொல்றான்க்கா, ஈ.வி.டீஸ்ஸிங்குல உள்ள போடுக்கா. வண்டிய களவாண்டுட்டு போயிருப்பான். கையும், களவுமா, மாட்டிகிட்டதும் கத சொல்றான்" இவள் அவனை முறைத்துக் கொண்டு கம்பளைண்ட் சொல்ல. "இந்த கார் யாரிது? டிரைவர் எங்க?" என கூட வந்த போலிஸ் சுற்றித் தேட ஆரம்பிக்க, "நீ பண்ணுன பிரச்சனை வர போதும் கிளம்பு". "அக்கா இப்ப இவன தப்ப ஒத்துக்க வைக்கிறேன் நீ வெயிட் பண்ணு" என அவளையும் சமாதானப்படுத்தினாள்.

இதற்குமேல் வேடிக்கை பார்த்தால் வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்த விஷாகன் மெதுவாக அவர்கள் முன் வந்தான். "சாரி மேடம், நான் தான் ரிவர்ஸ் எடுக்கும்போது பாக்காம இடிச்சிட்டேன்" இவன் முடிக்கும் முன், "பெரிய பணக்கார கார் வச்சுருந்தா முன்ன பின்ன பாக்காம வந்து இடிப்பியோ" என விட்டாள் அவனையும் ஒரு அறை. "அதே அடி" என்றவாறு அதிர்ச்சியாகி நின்றான் விஷாகன்.
 
அத்தியாயம் 5
விஷாகன் அறை வாங்கியதை கண்டு டென்ஷனான வேதிகா பாப்புகுட்டிக் கையை பிடித்து இழுத்து, "பாப்பு லூசுத்தனமா ஏதாவது உலராம கார்ல போய் உட்காரு. வண்டிய இடிச்சா சாரி சொல்லிட்டு இடத்த காலி பண்ணனும். எதுக்கு சீன் கிரியேட் பண்ணிட்டுருக்க" என அதட்ட. "அக்கா அவன் என் மேல இடிச்சான், வேணும்ன்னு இடிச்சுட்டான்னு நெனச்சு அடிச்சேன்". "இப்ப இல்லன்னு ஆயிடுச்சுல்ல சாரி சொல்லு" என்றாள் வேதிகா மற்றவனைக் காட்டி. "சாரி" என்றாள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு. "முறைத்தாலும் சரி மேடம்" என அவன் கிளம்பி விட, "இப்ப இவர்ட்ட என்ன சொல்ல, இவர எதுக்கு அடிச்ச" ௭ன தங்கயிடம் மெதுவாக அரட்ட. "இவனுக்கெல்லாம் சாரி சொல்ல முடியாது. இவன் இடிச்சதுனால தான் எல்லா பிரச்சினையும்" என சத்தமாகவே பதில் சொல்லிவிட்டு காரில் சென்று அமர்ந்து கொண்டாள்.

நெற்றியைத் தேய்த்துக் கொண்டு திரும்பிய வேதிகா, "சாரி மிஸ்டர்" என நிறுத்த, "விஷாகன்" என அவன் தன்னை அறிமுகப் படுத்த கைநீட்ட, பதிலுக்கு கை குலுக்கி "ஸாரி எக்ஸ்ட்ரீம்லி ஸாரி மிஸ்டர்.விஷாகன். ஐ நோ இட்ஸ் ஜஸ்ட் எ வேர்ட். கண்டிப்பா அவ கை நீட்டுனது தப்பு. டோன்ட் டேக் இட் அஸ் பெர்சனல்" என்றாள் அவனை பார்த்தே அவன் உயரம் அறிந்து. "என் மேலேயும் தப்பு இருக்கு, நா ஸாரி சொல்ல தான் வந்தேன், அவர் வாங்கின அடிய பாத்ததும் தான் ௭ப்டி சமாளிக்கன்னு யோசிச்சுட்ருந்தேன். ஆனாலும் இந்த பனிஷ்மெண்ட் கொஞ்சம் ஜாஸ்திதான். பட் நீங்க என் கார் வச்சே என் ஸ்டேட்டஸ் தெரிஞ்சு இறங்கிப் பேசுறீங்க. உங்க சிஸ்டர் ஸ்டபன்னா இருக்காங்க? அவுங்க அத பெருசாவே எடுத்துக்கலையே. நீ எல்லாம் ஒரு ஆளான்ட்டு போயிட்டாங்க".

சிரித்த வேதிகா "அவ கொஞ்சம் அப்படித்தான், தப்புனா தப்பு தான்னு நிப்பா, எதையும் செஞ்சுட்டு யோசிக்குற டைப். இனினாலும் பாத்து ரிவேர்ஸ் எடுங்க. மே பி, கெட் டு அவாய்ட் மேஜர் ஆக்சிடென்ட்". "சுயர் மேடம்" என அவன் கிளம்ப போக, திரும்பி ஒரு முறை காரில் இருந்த பாப்பு குட்டியை பார்க்க தவறவில்லை. அதை கவனித்த வேதிகா, "அவளுக்காக நான் சாரி கேட்டுறேன். ப்ளீஸ் இத இங்கயே மறந்திடுங்க" என்றாள். "ட்ரை பண்றேன் மேம்" என்றவாறு கிளம்பி விட்டான். கார் நம்பரை நோட் செய்து கொண்டு தானும் கிளம்பினாள். அவன் மீது இவள் கைநீட்டி அடிக்குமளவு தப்பில்லாததால் மட்டுமே இறங்கிப் போய் பேசினாள். ஆனாலும் அவன் சொல்லிச் சென்ற விதம் உறுத்தியது. ஸ்கூட்டியை டிரைவர் எடுத்து வரச் சொல்லிவிட்டு, தானே காரை எடுத்துக்கொண்டு அம்மாவையும், தங்கையையும் வீட்டில் விட கிளம்பினாள்.

வீடு வந்த பின்னரும் அன்று இரவு தூங்க செல்லும் வரையிலும் வாய் ஓயாது அர்ச்சித்து தள்ளிவிட்டார் வடிவுமொழி. அசரு வேணா பார் என்பது போல் காதில் வழிந்த ரத்தத்தை சுண்டி விட்டு நன்றாக மொக்கிவிட்டுக் குறட்டை விட்டு உறங்கி விட்டாள் நம் பாப்புக்குட்டி.

மறுநாள் முதல் பாப்புக்குட்டியை பாலோ பண்ணுவதை முழு நேர வேலையாகவே கொண்டான் விஷாகன். அவனது ஏழாம் அறிவு, ஏனோ பாப்புவை அவன் பாஸிடம் கோர்த்து விடச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருக்க, களத்தில் இறங்கிவிட்டான். அவளது அபார்ட்மெண்ட்டில் அவளைப் பற்றி விசாரித்தவரை அவளுக்குள் இருக்கும் திறமை அவளுக்கே புரியவில்லையோ என்றே நினைக்கத் தோன்றியது. அவளிடம் மேனேஜ்மென்ட் கெபாசிடி இருந்தது. ஆனால் அதை சரியான வழியில் உபயோகிக்காமல் இப்படி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறாள் என்று யோசித்தான். மேக்ஸிமம் அவளது நேரம் அவளின் அப்பார்ட்மெண்டில் தான். வெளியில் சென்றால் கண்டிப்பாக வம்புடன் தான் திரும்புகிறாள். அதனாலேயே அவள் அம்மா அவளை விடுவதில்லை என்பதை புரிந்து கொண்டான். 3 நாள் அவனுக்கு அப்படித்தான் கழிந்தது.

நான்காம் நாள் காலை 10 மணிக்கே பாப்புகுட்டி டிப்டாப்பாக கிளம்பினாள். "ஏய், எங்கடி கெளம்பிட்ட" வடிவுமொழி கேட்க. "மாப்பிள பாக்க" என்றவள் பேக்கை எடுத்து இரு தோளிலும் மாட்டிக் கொண்டு வெளியேற. "இந்த வாய் தாண்டி உன்னை வாழ வைக்குது, ஒழுங்கா சொல்லு எங்க போற? எப்ப வருவ?” "ஒரு நல்ல காரியத்துக்கு கிளம்புறப்போ எங்க போற? எங்க போறன்னா என்ன அர்த்தம். மாப்பிள பாக்க போறேன்னு சொன்னாலும் நம்ப மாட்டேங்குற" என்றாள் வாசலில் நின்று செருப்பை மாட்டிக்கொண்டு.

"ஆமா, இன்னும் கொஞ்சம் கத்தி சொல்லு மொத்த ப்ளாக்குக்கும் கேக்கட்டும்". "நீ ஏன் கேள்வியா கேக்குற. வீட்ட பூட்டிட்டு பத்திரமா இரு, நான் இல்லன்னு தெரிஞ்சதும் உன்னை ஏமாத்த எவனாவது கிளம்பி வருவான். மாப்பிள்ளை பாத்திட்டு புடிச்சா கையோட கூட்டிட்டு வருவேன். இல்லன்னா அடுத்த ஆளத் தேடணும்" என்றவாறு படி இறங்கிவிட. "ஆ!" என்று நின்று இருந்த வடிவுமொழியை எதிர் வீட்டு ராஜி ஆண்டி வந்து தோளில் இடித்து சுயநினைவுக்கு கொண்டுவர, "என்னடி" என பாப்புக்குட்டி மேல உள்ள கோவத்தை அவரிடம் காட்ட. "என் மேல ஏன்க்கா பாயுற. நீ உன் மூத்த பிள்ளைக்கு என்னைக்கு கல்யாணம் பண்ணி இவளுக்கு என்னைக்கு பண்ணுவியோன்னு பயந்துட்டா போல. அதான் அவளே மாப்பிள பாக்க கிளம்பிட்டா. ஆனாலும் நேர்மையா உன்கிட்ட சொல்லிட்டு போறா, அதுக்கே நீ பெருமைப்படணும். மாப்பிள வந்தா ஆரத்தி சுத்த ரெடி பண்ணி வை" என்க. "போயிருடி என் வாய கிண்டாம" என்றவாறு வடிவுமொழி போனை எடுத்து தன் கணவருக்கு சொல்ல உள்ளே போய்விட, ராஜி ஆண்டியும் முகத்தை திருப்பி விட்டு தன் வீட்டுக்கு சென்றது.

இங்கு வெளியேறிய பாப்புக்குட்டி நேராக சென்று கிருஷ்ணர் முன் நின்று, "கிச்சா நான் போற வேல என்னன்னு உனக்கு தெரியும், இருந்தாலும் சொல்றேன், மாப்பிள எல்லா வகையிலும் எங்க குடும்பத்துக்கு ஏத்தவனா இருக்கணும், போட்டோல பாத்தேன், நல்லாத்தான் இருக்காரு, கேரக்டரையும் நல்லா இருக்க மாதிரி நீ தான் பாத்துக்கணும். பை கிச்சா" என வேண்டிக்கொண்டு ஸ்கூட்டியை எடுத்து வெளியேற. அவள் வந்ததிலிருந்து வேண்டிக்கொண்டதுவரை கேட்டுக்கொண்டிருந்த விஷாகனும் பாப்புக்குட்டியை ஃபாலோ செய்யச் சென்றான்.

'என்ன நாம நம்ம பாஸ்க்கு கோர்த்து விட நினைச்சா இவங்க வேற ரூட்ல போறாங்க. இத எப்டி தடுக்க. பையன இவங்களுக்கு புடிச்சிருந்தா, உள்ள புகுந்து குழப்புறது தப்பாச்சே' என யோசித்துக்கொண்டே பின்செல்ல. பாப்புக்குட்டி போய் நின்றது ஒரு பார்க் வாசலில், மரங்கள் நிறைந்திருந்ததால் வெளியில் அடிக்கும் வெயில் உள் தெரியவில்லை. அதுவே அங்கு நிறைந்திருந்த லவ்வர்ஸ்க்கு வசதியாகி போனது. பாப்புக்குட்டி வண்டியை நிறுத்தி விட்டு போனை எடுத்து டயல் செய்து கொண்டு உள்நுழைய, அந்தப்பக்கம் எடுத்தவன் தான் இருந்த திசையை சொல்ல, கண்டுபிடித்து சென்று "ஹாய்" சொல்லி அவன் எதிரில் அமர்ந்தாள். அவர்கள் பேசுவதைக் கேட்க ஏதுவாய் விஷாகனும் அடுத்த மரத்தை சுற்றி உள்ள ரவுண்டில் அமர்ந்து கொண்டான்.

"ஹாய், நான் பாப்புக்குட்டி, நீங்க அசோக், மிலிட்ரில இருக்கீங்க. எல்லாமே ப்ரொபைல்ல இருக்கு. சோ அதத் தாண்டி உங்கள பத்தி சொல்லுங்க". "வேற என் வீட்ல நான், அம்மா, அக்கா. அக்காக்கு மேரேஜ் ஆயிடுச்சு, நானு ஃபாரின் சோ எப்பாவது தான் வருவேன். என் அம்மாவ பாத்துக்க பொண்ணு வேணும். அவ்வளவு தான்". "அது பெரிய விஷயம் இல்ல, ஆனா அக்காவோட டியூட்டியும், டைமிங் கிடையாது. அத புரிஞ்சிக்குற பெர்சன் வேணும்ன்னு தான் உங்கள டிசைட் பண்ணி, அக்ஸப்ட் கொடுத்தேன்". "ஆமா ஏன் பெரியவங்க, உங்க அக்கா இப்படி யாரும் இல்லாம நீங்க மட்டும் வந்துருக்கீங்க". "எங்க வீட்ல நான் எடுக்குறது தான் முடிவு, அதனால தான் நா மட்டும் வந்திருக்கேன்" என்றாள் பெருந்தன்மையாய். அவ்வளவு நேரம் குழப்பத்திலிருந்த விஷா ஆசுவாசப் பட்டுக் கொண்டான். "அக்காக்கு மாப்பிள பாக்க தான் வந்திருக்காங்க" அதன்பின் குழப்பம் போய் சுவாரஸ்யம் வந்து விட்டிருந்தது.

"சரி அப்ப எல்லாமே நீங்க தான் பேசுவீங்களா? உங்க அக்காட்ட பேச எப்ப வரட்டும்". "அதுக்கு முன்னால சேலரி, கெட்ட பழக்கம் இருக்கா? இல்லையா? அட்ரஸ் வெரிஃபிகேஷன் எல்லாம் பார்க்க வேண்டிய இருக்கு. எல்லாம் முடிச்சு தான் கடைசியில அக்காவ பாக்கலாம்". "ஓ! ஓ.கே, மாசம் முப்பதாயிரம் சேலரி, கெட்ட பழக்கம்னு சொல்லணும்னா பீர் மட்டும் அடிப்பேன். ஜாதகம் தான் ப்ரொபைல்லையே இருக்கே, வேணும்னா வாட்ஸ்அப் பண்றேன். அப்றம் அதென்ன அட்ரஸ் வெரிஃபிகேஷன்?” "அது அக்கம்பக்கம் விசாரிக்கணுமே, உங்கள, உங்க குடும்பத்த பத்தி அதுக்குத்தான். அப்புறம் என்ன டௌரி எதிர்பாக்றீங்க?”

"என்னங்க என்ன மட்டுமே கேள்வியா கேக்கிறீங்க. உங்க அக்காவ பத்தி ஒன்னும் சொல்லல". "பொண்ணப் பத்தி எல்லார்ட்டயுமா சொல்லிட்டுருக்க முடியும். ஒத்து வந்தா நேரிலேயே பாத்து எல்லாத்தையும் கேட்டுக்கோங்க". "அது சரி" என்றான் வேறு வழி இல்லாமல். "டௌரி" அவள் மறுபடியும் ஞாபகப்படுத்த, "அது அம்மா தான் சொல்லனும், நா அத பத்தி பேசுறது அவ்வளவு முறையா இருக்காது, அதவிட ௭னக்கு தெரியாது" ௭ன்றான்.

"௭ன்னங்க ஒரு அக்காக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்கீங்க, இதுவர உங்க அம்மா உங்ககிட்ட கண்டிப்பா இத பத்தி பேசிருப்பாங்க, அத வச்சி சொல்லுங்க". "சரி நீங்க இவ்வளவு கேக்குறதால சொல்றேன். ஒரு அஞ்சு செண்ட் லேண்ட், 50 லட்சம் கேஷ், 100 பவுன் நகை, இது தான் அம்மா வோட லிஸ்ட்ல இருக்குது, அது மட்டும் போதும், நா ௭துமே ௭திர்பாக்கல, சோ அம்மா கேக்றத மட்டும் செஞ்சுட்டீங்கன்னா சந்தோஷம்". "இந்த கார், பைக் விட்டுட்டீங்க". "வேணாங்க அதக்கு பதில்தான் கேஷ் தர போறீங்க. நான் மேக்ஸிமம் அங்கதான்றதால அதெல்லாம் யூஸ் இல்லாம தானே கெடக்கும், எதுக்கு வாங்கி சும்மா நிறுத்திட்டு".

"செத்தான்" என விஷாகன் குனிந்து வாய்மூடி சிரிக்க, இங்கு பாப்புக்குட்டி எழுந்து, எட்டி அவன் சட்டையைப் பிடித்து 'பளார்' என்று ஒன்று விட்டாள். "ஏன்டா இனிமே சம்பாதிக்கவே மாட்டியோ? ௭ல்லாத்தயும் ௭ங்கட்ட வாங்கிட்டா நீ ௭துக்கு ஃபாரினுக்கு வேலைக்கு போய்கிட்டு. என் அக்கா மாசம் சம்பளமும் கொண்டு வந்து தருவா. அங்க போய் ஒட்டகம் தான மேய்க்க போற. இங்கயே இரு" என மேற்கொண்டு அடிக்க போக.

விஷாகன் தான் வந்து பிடித்து நிறுத்தினான். "டேய் நீ யாருடா? அவனுக்கு சப்போட்டா? மேல கையை வைக்க", பின்னிருந்து கையை பிடித்துக் கொண்டவனிடம் கூற. "அட என்னப்பா, நல்லா தான பேசிட்டுருந்தீங்க, கடைசி இப்படி சுதப்பிட்டீங்களே" என விஷாகன் அசோக்கிடம் கேட்க. "அது எங்க அம்மாவோட விஷ் சார், அத நான் செஞ்சே ஆகணும். அவங்களோட ஒரே பையன், சோ அதிகமா எதிர்பாக்குறாங்க. அத செய்ய முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லணும் சார். இப்படித்தான் மேல கை வைப்பாங்களா?" விஷாகனை அவளது உறவினர் என்று ௭ண்ணி கூறினான்.

"என்னோட சிஸ்டர் தான், கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி. நீங்க கிளம்புங்க, நாங்க பாத்துட்டு போன் பண்றோம்" என அவனை அனுப்ப. "யார்ரா நீ ?அவனோட வரலனா எதுக்குடா நாங்க பேசுனத ஒட்டு கேட்ட. ஓ! என் அக்கா ஒன்ன ஒரு கேஸ்ல உள்ள புடிச்சு போட்டுட்டா, அதுக்கு பழிவாங்க என்ன கடத்த வந்துருக்க அப்படி தானே" என்றாள் கையை உருவ போராடிக்கொண்டு. "கத்தாதீங்க மேடம், கூட்டம் கூடிற போது, தர்ம அடி குடுத்துற போறாங்க". "நீ இன்னும் யாருன்னு சொல்லல. எதுக்கு நல்லவன் வேஷம் போடுற" என மேலும் துள்ளிக் கொண்டு கத்த. "சூ சூ, அமைதியா கேப்பிங்கன்னு சொல்லுங்க கைய விடுறேன்". வேறு வழியில்லாமல் அவனைப்பற்றி தெரிந்துகொள்ள அமைதியானாள். மெதுவாக கையை விட்டவன்,அவள் எதிரில் வந்து நின்று புன்னகைக்க, பளார் என்று அறைந்தாள். "ஏன் மேடம் ஒரு பையன்ட்டருந்து உங்கள காப்பாத்துனதுக்கா?" என்றான் கன்னத்தை தாங்கி. "நீ என்ன என்ன காப்பாத்துறது. என்னய காப்பாத்திக்க எனக்குத் தெரியும். இது நீ என் கையப் புடுச்சதுக்கும், என்ன மிரட்டுனதுக்கும்".

"ஓ தப்பு தான் மேடம் சாரி". "சரி சொல்லு, யார் நீ? எதுக்கு நாங்க பேசுனத ஒட்டுக் கேட்ட?” "ஐயோ நான் ஒட்டுக் கேக்கல. 4 நாள் முன்ன அகஸ்தீஸ்வரர் கோவில் வாசல்ல ஒரு அப்பாவிய அடிச்சிங்களே, அது நான் தான் மேடம்". "நான் அடிக்கிறவங்களெல்லாம் ஞாபகம் வெச்சுக்கிறதில்லை". "ஆமா ஒன்னா, ரெண்டா ஞாபகம் வச்சுக்குறதுக்கு" என இவன் முனங்க. "என்ன முனங்குற?", "அதில்ல மேடம் உங்களுக்கு கை கொஞ்சம் நீளம் தான்னு நினைச்சேன்". "ஆமா சட்டு சட்டுன்னு நீட்டிடுவேன். சரி அங்க அடி வாங்குனத சொல்லுறதுக்கா இங்க என் பின்னாடி வந்த". "இல்ல மேடம், நா ஒருத்தர பாக்க வந்தேன். உங்கள பாத்ததும் நீங்க என்ன அடிச்சது ஞாபகம் வந்தது. ஏனோ, என் மேல தப்பில்லன்னு உங்ககிட்ட சொல்ல தோணுச்சு, அதான் வெயிட் பண்ணேன். உங்க கான்வர்சேஷன் கேட்க வேண்டியதா போச்சு, அதுக்கும் சேத்து சாரி மேடம்" என்றான்.

அவனை மேலும் கீழும் பார்த்தவள் "ரூட் விட ட்ரை பண்ணுறியா?" ௭ன்க, "அட ஆண்டவா, வாயில அடிங்க. எனக்கு கல்யாணமாகி பத்து நாள்தான் ஆகுது". "ஏன் கல்யாணமானவன் வேற பொண்ண பாக்க மாட்டானா?” "முடியல மேடம், உங்க தைரியம் எனக்கு புடிச்சது சரி ப்ரெண்ட்டாகிக்கலாம்ன்னு வந்தேன். உங்களுக்கு என் மேல ஏன் இவ்வளவு சந்தேகமோ தெரியல. நான் கோபமா கிளம்புறேன் மேடம்" என அவன் நகர, அசராமல் அவனை பார்த்தவாறே இருந்தாளே தவிர அவனை நிறுத்த வில்லை. 4 ஸ்டெப் எடுத்து வைத்தவன், "கூப்பிட்டீங்களா மேடம்" என திரும்பி வர, ஒரு புருவத்தை ஏற்றி அவனைப் பார்த்தவள், "உக்காரு" என்றாள் எதிரில் இருந்த திண்டை காமித்து, தானும் அவனுக்கு எதிரில் வாகாக அமர்ந்தவள், "சொல்லு உனக்கு என்னால என்ன காரியம் ஆகணும்?” "ஏன் மேடம்? இந்த மரியாதையான வார்த்தையெல்லாம் உங்க வாயிலயிருந்து வராதா?", "அது நீ நடந்துக்குறதப் பொறுத்து தன்னால கிடைக்கும், விஷயத்துக்கு வா".

"எப்படி ஒரு காரியத்துக்காக தான் உங்க முன்னாடி உக்காந்துருக்கேன் கண்டுபிடிச்சீங்க". "ஓவரா மேடம் போடுறியே அத வச்சுதான்". "ஓ! உங்க உண்மையான பேரு பாப்புக்குட்டி தானா மேடம்?” "இதத் தெரிஞ்சுக்கத்தான் இத்தன மேடம் போட்டியா?” "சரி விடுங்க, நீங்க கோபப்படுமுன்ன நான் சொல்லிடுறேன். நான் ஐ.என் ஹோட்டல் மேனேஜரா இருக்கேன். எங்க பாஸ்க்கு பி.ஏ. கம் அசிஸ்டன்ட் மேனேஜர் போஸ்டுக்கு ஒருத்தர் வேணும். அட்வெர்ட்டைஸ்மென்ட் குடுத்துருக்கோம். ஆனாலும் அன்னைக்கு உங்கள பாத்ததும் நீங்க அந்த போஸ்டுக்கு சூட்டாவிங்கன்னு தோணுச்சு. உங்க அக்காவ புடிச்சுத்தான் உங்க நம்பர் வாங்கலாம்னு இருந்தேன், அதுக்குள்ள இப்படி ஒரு மீட்டிங் கிடைக்கும்னு எக்ஸ்பெக்ட் பண்ணல?”

"ஏன் நான்னு". "அதான் சொன்னேனே மேடம் ஒரு இண்டிமேஷன்னு". "நீ ஏன் என்ன பழிவாங்குவதற்காக இத பண்ணக்கூடாது?” "அக்கா ஒரு ஐ.பி.எஸ். வீட்ல ரெண்டு லாயர் வேற, எந்த கிறுக்கனாது உங்கள பழிவாங்க கிளம்புவானா? உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னா 28ம் தேதி எங்க பாஸ்ஸ வந்து பாருங்க, புடிக்கலனா கிளம்பி போயிட்டேயிருங்க" என்க. சிறிது யோசித்தவள் இவேன் ௭துக்கு நம்மள சுத்தி வரான்னு தெரிஞ்சுகணுமே ௭ன யோசித்தவள் "சரி டைரக்ட்டா வந்து வேல கொடுக்குறதால அத தட்டி கழிக்க முடியல. வரேன், பட் எனக்கு சேட்டிஸ்ஃபையானா தான் எதுவும்" ௭ன ஸ்ட்ரிக்ட்டாக சொல்ல. 'எங்க பாஸ பத்துட்டு வேணான்னு வேற சொல்லிற முடியுமா ஒரு பொண்ணால' என நினைத்து சிரித்து தலையாட்டினான். "சரி ஓகே பை" என பேக் எடுத்து மாட்டிக் கொண்டு கிளம்பப் போக. "ஒரு நிமிஷம் பாப்புக்குட்டி".

"என்ன விட நீங்க சின்ன பொண்ணு தான், பாப்பு குட்டின்னு கூப்பிடலாம்ல?" ௭ன கேக்க, "ம்ம் ம்ம் அதான் கூப்பிட்டாச்சே பின்ன என்ன, மேல சொல்லு " "நீங்க நா கேட்டதுக்கு ஒத்துக்கிட்டதுனால, நானும் உங்களுக்கு ஏதாது ஃபேவர் பண்ணலாம்னு தோணுது. அதனால" என அவன் சொல்லுமுன், "ஹே நா இன்னும் ஒத்துக்கல ஓகே, அதும் போக உன்னோட எந்த ஃபேவரும் எனக்கு தேவையும் இல்ல", "ப்ளீஸ் பாப்புகுட்டி, என் ஹெல்ப் இப்ப உங்களுக்கு ரொம்ப தேவயானது, உங்க அக்காக்கு ஏத்த மாப்பிள்ளையா நா ஒருத்தர ரெஃபர் பண்ணட்டுமா?" ௭ன்றான் வேகமாக. "பாத்தியா ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கிற. இவ்வளவு நேரம் உன்ட்ட பொறுமையா பேசிட்டு இருந்ததே தப்பு, அற வாங்காம வீடு போய் சேரு". "அட அந்த மேட்ரிமோனிய நம்புவீங்க என்ன நம்ப மாடீங்கலா? சரி உங்க வழிக்கே வரேன், அவனும் மேட்ரிமோனில ரெஜிஸ்டர் பண்ணிருக்கான். நேம் அரவிந்த், இன்ஜினியரிங் காலேஜ் ப்ரோஃப்பெசர். ரொம்ப நல்ல குடும்பம். நல்ல பையன். நீங்க அதுலயே செக் பண்ணிக்கோங்க, உங்க இன்வெஸ்டிகேஷனயும் முடிச்சுக்கோங்க" என விட்டேத்தியாக சொல்வது போல சொல்ல. அவன் முழியை பார்த்துவிட்டு "நீ என்ன நடிச்சாலும், உன்மேல எனக்கு நம்பிக்க வரல, அதனால டைம் வேஸ்ட்டு பண்ணாம கிளம்பு" எனக்கூறி வெளியேறிவிட்டாள். "நீங்களே எனக்கு போன் பண்ணுவீங்க பாப்புக்குட்டி" என தானும் சிரித்துக்கொண்டே, காரை எடுத்து கிளம்பிவிட்டான்.

இரணிய ஹர்பன், 10 நாள் ஓய்விற்காக, அந்தமானில் உள்ள அவனது சொந்த ரெசார்டிற்கு வந்திருந்தான். அவன் வரும் அந்த 10 நாளும் வெளி ஆட்கள் யாருக்கும் அனுமதியில்லை. அவனும் வேறு எங்கும் செல்லமாட்டான். அன்றும் மேல் ஃபுளோரில் அமைக்க பட்டிருக்கும் ஸ்விம்மிங்ஃபூலில் காலை நனைய விட்டு அமர்ந்துகொண்டு தூரத்து கடலை வெறித்த வண்ணமே இருந்தான். எப்பொழுதும் இவனுடன் வரும் விஷாகன், இவனின் 3 வேளை சாபாட்டயாது கவனித்து கொள்வான். இந்தமுறை அதற்கும் வாய்ப்பளிக்காமல் அவனை அங்கு விட்டுவிட்டு வந்துவிட்டான். இப்பொழுது ஒரு வேலை சாப்பாடுனாலும் இறங்குகிறதா என்பது அவன் வயிறு மட்டுமே அறிந்த ரகசியம். ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும் என்றுதான் கிளம்பி வருவான். ஆனால் எப்படி ரிலாக்ஸாக இருப்பது என்பதை இதுவரை கண்டறியவில்லை, நண்பர்கள் இல்லை, மது மாதுவில் ஈடுபாடில்லை, விஷாகன் ஒருவனே இவனை வால் பிடித்து சுற்றிவருபவன். அவனும் இனி இல்லை. இரணியன் இப்பொழுது போனை ஆன் செய்தாலும் கம்பெனி குடுக்க 1000 மெசேஜூகளும், விடாமல் பேசி கடலை போட ஆட்களும் இருக்கின்றனர். ஆனால் அவனோ பேச ஆளே இல்லை என்பது போல் வெறிக்க வெறிக்க அமர்ந்த்திருக்கிறான், அவனை அவனே தேடிக் கொண்டிருக்கிறான்.

இங்கு வீட்டுக்கு வந்த பாப்புகுட்டியோ, "ம்மா லஞ்ச் ரெடியா, பயங்கர பசி" என நேராக சாப்பாடு மேசையில் சென்று அமர. "முதல போயி கைய கால கழுவிட்டு வாடி. என்னன்னமோ உளறிட்டு போன, இப்போ வந்ததும் சோறு வையிங்கிற", "அதுவாமா, மாப்பிளைய எனக்கு புடிக்கல, நா வேற பாத்துட்டு சொல்றேன்" "ஏய் என்ட நல்ல வாங்க போறடி, கொழுப்பு ஏறிப்போச்சா, இரு அப்பா வரட்டும், உனையே ஏதாது வேளைக்கு அனுப்பியே ஆகணும், வெட்டியா இருக்கனால தான இப்டிலா செய்ய சொல்லுது" என அவர் தன் போக்கில் புலம்ப.
 
"நீ என்ன வேணா செய், இப்போ எனக்கு சோறு வை, வெயில்ல போய்ட்டு வந்தது பசிக்குது" நறுக்கென்று அவளை கொட்டி எழுந்துச்சென்று சாப்பாட்டை எடுத்து வந்து வைத்தார். பின் மெதுவாக "நிஜமாவே மாப்ள தான் பாக்க போனியா? ஏண்டி உனக்கு அக்காங்க ரெண்டு பேர் இருக்கது இடைஞ்சலா இருக்குன்னு இந்த முடிவுக்கு வந்துட்டியா?" என அழுகுரலில் கேக்க. சோத்தை அள்ளி வாய் நிறைய வைத்துக்கொண்டு, "மூத்த அக்கா அவ்ளோ இடஞ்சல் இல்ல, ரெண்டாவது கண்டிப்பா பெரிய இடஞ்சல் தான்" என்க.

"ஷோ விளையாடாதடி, உனக்கு நீயே மாப்ள தேடிகிட்டா, மூத்தவுளுகளுக்கு எப்டி கல்யாணம் நடக்கும்". ஒரு செகண்ட் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, அம்மா கூறியதை திருப்பி பார்த்தாள், புரியவும் "லூசாமா நீ, அக்காக்கு இந்த வருஷத்துல கண்டிப்பா கல்யாணத்த முடிக்கிறோம்னு அன்னைக்கு தான சொன்னேன். அதும் என் தலைவன் சார்ம் பொறந்த நாள் அன்னைக்கு எடுத்த உறுதிமொழி, அத சீக்கிரமா செயல் படுத்தணும்னு தான் மேட்ரிமோனில்ல அக்காவோட ஃபுல் டீடெயில்ஸ் வித் ஜாதகத்தோட அப்லோட் பண்ணேன், 5 ப்ரொஃபைல் மேட்ச் ஆச்சு, அதுல ஒன்னு தான் இப்போ போய் பாக்க போனேன், பையன் அம்மா ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணுவாங்க போல, பயனும் சரி தப்ப எடுத்து சொல்றவரா தெரில சோ ரிஜெக்டேடுன்னு சொல்லிட்டு வந்துட்டேன். இன்னும் 4 கைல இருக்கு, இன்னும் வரும், பையன கன்போர்ம் பண்ணிட்டு அக்காவை கண்வின்ஸ் பண்ணனும் அதான் பிளான். புரியுதா?" "இத மொதயே தெளிவா சொல்றதுக்கு என்ன? என்னையும் கூட கூட்டிட்டு போயிறுக்கலாம்லடி, சின்ன புள்ள நீ, உனக்கு என்ன தெரியும் கல்யாணத்த பத்தி" என்க.

"போ ம்மா உனக்குலா ஹெல்ப் பண்ணனும்னு நினச்சேன்ல என்ன சொல்லணும், விடு இனி நா ஒன்னும் பண்ணல நீயே உன் பொண்ணுக்கு எப்படியாது கல்யாணத்த நடத்திக்கோ" என எழ போக. அவளை இழுத்து உக்கார வைத்து "சரிடி சரிடி உடனே கோவப்படாத, இனி போனா எண்ணெயும் கூட்டிட்டு போ சரியா", "எதுக்கு அக்கா எவிடென்ஸே இல்லாம கண்டு புடிக்கிறதுக்கா, நீயே வாலன்டீயரா போய் உளறி கொட்டுவ, இப்போ நா சொன்னதையும் உன் மைண்ட்ல இருந்து அழிச்சிரு, ஏதாது எக்கு தப்பா உளறி காரியத்தை கெடுத்த. மிச்ச மிருக்க மாப்பிளையில யாரையாது நா எனக்கு செலக்ட் பண்ணிக்க வேண்டியிருக்கும்" என எழுந்து சென்று கை கழுவி வர.

"உனக்குலா காது கேக்காத எவனாது வாழ்கை குடுத்தா தான் உண்டு போடி, உனக்கு தோனாத சில விஷயம் எனக்கு தோனலாம்ல அதுக்காக தான் சொன்னேன், ரொம்ப தான் பண்ணுற", "நீ என்ன கலாயிச்சுட்ட, நா வருத்தப்பட்டுட்டேன் போதுமா" என்றவாறு அவர் சேலையில் கையையும் வாயையும் துடைத்துவிட்டு, "ஏம்மா அக்கா யாரையாச்சு லவ் கிவ் பண்ணுச்சா?", "ஏண்டி லவ் பண்ணி இருந்தா இன்னேரம் கல்யாணம் பண்ணிருந்திருக்க மாட்டாளா?", "ஒருவேள லவ் பெயிலியர் ஆகியிருந்தா?", "ஆனா அவ நாட்டுக்காக வேல பாக்கணும்னா குடும்பம் குழந்தைங்களா இருக்க கூடாதுன்னுல்ல சொன்னா", "பின்ன நா ஒரு பையன லவ் பண்ணேன், அது புட்டுக்கிச்சு அதனால கல்யாணம் வேண்டாம்னா சொல்ல முடியும்", "போடி எனக்கு அப்டி ஏதும் இருந்த மாறி தெரில, என் மூத்த மக பொறுப்பானவ, அறிவானவ, உன்ன மாறி ஊதாரி இல்ல வெட்டியா லவ் பண்ணிட்டு திரியுறதுக்கு", "அப்போ லவ் பண்றவங்க எல்லாம் அறிவில்லாதவங்க,பொறுப்பில்லாதவங்கங்ற" "நா எப்ப டி அப்டி சொன்னேன், என் மகள பத்தி மட்டும் தான சொன்னேன்", "அதுக்கு அப்டி தான் அர்த்தம் ஆகுது", "ச் ச்ச நீ பேச்ச மாத்தாத, லவ் ஆச்சும் பண்ணி இருந்தா இன்னேரம் குழந்த குட்டின்னு இருந்துருப்பால்ல" என கண்ணெதிரில் காண்பது போல் எங்கோ பார்த்து வடிவுமொழி சொல்ல.

"அதுக்கு நீ இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்திருக்கனும்மா", "எங்க இருந்து எடுக்கிறது, இந்த 1 வருஷமா தான் அவ இங்க நம்மகூடயே இருக்கா, படிக்கும்போதெல்லாம் ஹாஸ்டல், அப்றம் மேல்படிப்பு போஸ்டிங்ன்னு எங்கங்கயோ இருந்துகிட்டு நம்மள கிட்டயே சேத்துக்கல". "அதனால தான் ம்மா எனக்கு டவுட்டே வருது. அக்காவோட பழைய திங்ஸ்லா எதுல இருக்கு சொல்லு". "வேணான்டி ஏதாவது எடுத்து மாத்தி வச்சு அப்றம் காணும்னா சண்டைக்கு வருவா". "நீ சொல்லுமா, அப்படியே ஏதாது இருக்குன்னா அந்த வே ல்ல ட்ரை பண்ணலாமே". "அவ ரூம்ல தான் இருக்கும்னு நினைக்றேன். நம்ம வீட்லன்னு அவ திங்ஸ் அதிகம் இல்லடி. எல்லாத்தையும் அவ அங்கங்க கழிச்சுட்டு தேவைய மட்டும் தான் கொண்டுட்டு வருவா". இருவரும் சென்று வேதிகா, சுகாசினி அறையில் தேட.

"ஏம்மா உன் ரெண்டாவது மக இன்னும்வர இங்க இருந்தா! கண்டுபிடிக்காமலா இருப்பா?” "அவளுக்கு அவ வேலைய பாக்கவே நேரம் பத்துறதில்ல, இங்க பாரு எப்படி போட்டு வெச்சுருக்கா". "உனக்கு புள்ளய ஒழுங்கா வளக்க தெரியல. அவ போற இடத்துல அவ மாமியார் உன்ன வண்டி வண்டியா திட்டும் பாரு. அப்ப வறுத்தப்படுவ நீ. இந்த பாப்பு மாதிரி வளக்காமா போயிட்டமேன்னு". "வாய மூடிட்டு வந்த வேலைய பாருடி".

மேலிருந்த எல்லா பெட்டியையும் அலசியதில் ஒரு பெட்டி மட்டுமே டேப் போட்டு ஒட்டி கான்ஃபிடன்ஸியல் என்றிருந்தது. அதையும் பாப்பு சர சரவென பிரிக்க. "ஏய் அத ஒட்டி வச்சுருக்காடி, அதுல ஏதாவது கேஸ் சம்பந்தமா இருக்க போகுது. அப்புறம் உண்டு இல்லன்னு பண்ணிடுவா". "விடுமா இருந்த மாதிரியே ஒட்டிரலாம், நீ போய் கம் எடுத்துட்டு வா. அதுக்குள்ள ஏதாவது கிடைக்குதான்னு பாக்குறேன்" என அவரை அனுப்பிவிட்டு இவள் தேட, எல்லாமே அவ அக்கா யூஸ்டு திங்ஸ் ஆக இருக்க. 'மிஸ் யூ அர்வி',௭ன்ற வாக்கியத்துடன் ஒரு டி ஷர்ட் மட்டுமே கொஞ்சம் ஆடாக(வித்தியாசமாக) இருந்தது. அவள் அதை வெளியில் எடுக்க, அதில் ஒரு ஃபேஸ் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. அது யார் என அவளுக்குத் தெரியவில்லை, எங்கும் பார்த்ததாக கூட தோன்றவில்லை. எடுத்ததை அப்படியே வைத்துவிட்டு, அம்மா டேப்புடன் வரவும் இருந்தது போல் எடுத்து வைத்துவிட்டாள். அதன்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் என கூகுள் பே கூட விடாமல் அர்வி என்ற பெயரைத் தேடி விட்டாள். இந்த போட்டோ வரவில்லை. அப்பொழுது பேஸ் புக்கில் விஷாகன் பிரண்ட் ரெக்வஸ்ட் வந்து விழ, எரிச்சலில் அதை டெலிட் கொடுக்கப் போக, அது அவன் பேஜ்ஜினுள் சென்றது. அதில் ப்ரண்ட் லிஸ்டில் அரவிந்த், அவள் அக்காவின் டீசர்ட்டில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்ததை போல் சிரிப்புடன் போஸ் கொடுத்திருந்தான். அடுத்த நிமிடம் விஷாகன் ரெக்வஸ்ட் அக்ஸ்ப்ட் செய்யப்பட்டது.
 
அத்தியாயம் 6
விஷாகனின் ரெக்யுஸ்டை அஃக்ஸ்ப்ட் செய்தவள், அவனிடம் விவரம் கேக்காமலே மேட்ரிமோனியில் அவள் அக்கா ஐடியில் இருந்து ப்ரொபைல் மேட்ச் ரெக்யுஸ்ட் அரவிந்த்க்கு குடுத்துவிட்டு, விஷாவுக்கும் மெசஞ்சரில் "டுமாரோ சேம் பார்க் சேம் டைமிங்" என அனுப்பிவிட்டாள்.

பின்பே 'அவனுக்கு அக்கா விஷயம் எப்டி தெரியும், அரவிந்த்ன்னு எப்படி கரெக்ட்டா சொன்னான். எதுக்கு தேடி வந்து வேல குடுக்றான், அக்காக்கு மாப்ள வேற பாத்து குடுக்றான். எதுமே புரிலயே' என ரோலிங் சேரை இப்படியும் அப்படியும் ஆட்டி ஆட்டி யோசித்து பார்த்தும் ஒன்னும் தோன்றாததால், 'சரி அவன் போற வர போட்டும், நமக்கு நல்லது நடக்கிற வர விட்டுபுடிக்க வேண்டியது தான்' என முடிவு எடுத்துக்கொண்டாள். அங்கு விஷாகனோ பாப்புக்குட்டியிடம் இருந்து வந்த மெசேஜை பார்த்து சிரித்து கொண்டிருந்தான்.

அவளை பாஸூடன் கோர்த்து விட முடிவு செய்ததுமே அவளின் மொத்த பரம்பரையையும் தோண்டி எடுத்துவிட்டான். ஏதும் வில்லங்கம் இருந்துவிட கூடாதே என்பதற்காக. மேலும், 2 அக்காக்கள் இருக்கையில் மூன்றாவதுவான பாப்புவிற்கு எப்படி கல்யாணம் நடக்கும் என்றெண்ணி தேட, அதில் அவனுக்கு வேதிகா விஷயம் ஈசி ஆக முடிய வழி கிடைத்தது. அதை முதலில் முடித்து விட்டு சுஹாசினி விஷயத்தை பாக்கலாம் ௭ன்ற தீர்மானம் வேறு.

தனக்கு சம்மந்தமில்லாத ஒரு குடும்பத்தை பற்றி எதற்கு இப்படி ஆராய்ந்து மெனக்கெடுகிறான் என்பது அவனே அறியாத ஒன்று.

அந்தமான் சென்ற இரணியன் 4 நாட்கள் ரூம் குள்ளேயே அடைந்து கிடந்தவன். வெளி ஆட்களை, தெரியாத முகங்களை சற்று பார்க்கலாம் போல் தோன்ற, அருகிலிருக்கும் கடற்கறை நோக்கி தன்னை அடையாளம் தெரியாமல் மறைத்துக் கொண்டுச் சென்றான். கடல் நீரில் பாதத்தை நனையுமாறு நின்றுகொண்டு சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றான், பலர் அவரவர் சுற்றுலாவை என்ஜாய் பண்ண வந்திருந்தனர். இவனும் ரிலாக்ஸ்காக தான் வந்திருக்கிறான். ஏன் தன்னால் அவர்களை போல் ஃப்ரீயாக இருக்க முடியவில்லை என யோசித்துக் கொண்டு அவர்களை பார்த்திருந்தான்.

ஒரு ஃபேமிலி அம்மா, அப்பா, இரண்டு பிள்ளைகள் அதில் சிறிய பிள்ளை கடலைப் பார்த்து பயமறியாமல் உள்ளே போக வேண்டும் என அடம் பிடித்து உள்ளே உள்ளே ஓட இன்னொரு பிள்ளையை வைத்துக் கொண்டு அம்மா கரையில் நின்று சத்தம் போட, அப்பா அந்தப் பொடியனை இழுத்து இழுத்து கரையில் கொண்டு விட, அவன் திரும்பி ஓட என்றிருந்தனர். அவர்களை பார்த்து விட்டு திரும்ப, நான்கு நண்பர்கள் மாற்றி மாற்றி ஒருவரையொருவர் தூக்கிச் சென்று தூக்கிச் சென்று கடலில் போட்டுத் தள்ளிவிட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் வாக்கிங் சென்றனர், சிலர் ஸ்விம்மிங் செய்தனர். தன் தொழில் காரணத்தால் தன்னால் இப்படியெல்லாம் இருக்க முடியவில்லையோ என பலவாறு யோசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க.

அவன் முதலில் கண்ட குடும்பம் இன்னமும் அந்த பொடியனோடு போராடிக் கொண்டுதான் இருந்தது. திடீரென அவன் அப்பா கையை வேகமாக உதறிவிட்டு தண்ணீரில் பாய்ந்து விட, அலை உள் சுருட்டி சென்றது. அவன் அப்பா பின்னயே ஓட, அந்த பையனின் அம்மா ஏதோ மொழியில் அழ ஆரம்பிக்க. இவனால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டாமல், தொப்பியை கழற்றி வீசிவிட்டு தண்ணீருக்குள் பாய்ந்தான். அவன் அப்பா ஒரு பக்கம் தேட, இரணியன் ஒரு பக்கம் பையனை இழுத்துச் சென்ற திசையை கணக்கிட்டு தேட, பத்து நிமிட போராட்டத்தில் இரணியனின் கையில் மயங்கிய நிலையில் சிக்கினான் அந்தப் பையன். தூக்கி வந்து கரையில் போட்டு வயிற்றை அமுக்கித் தண்ணீரை வெளியேற்றி தலைகீழாய் குலுக்கி என குடித்தத் தண்ணீரையெல்லாம் கக்க வைத்து கன்னத்தில் தட்டி அவனை சுயநினைவாக்கி விட்டு தான் அவன் தாயிடம் கொடுத்தான்.

பின்பே சுற்றுப்புறத்தை பற்றி யோசித்தான். "ஓ காட்" என சுற்றிப்பார்க்க சலசலவென அப்போதுதான் அவனை ஐடியென்டிஃபை பண்ண ஆரம்பித்தனர் எல்லோரும். "ஹே இரணியன் இரணியன்" என வேகமாய் அருகில் வர ஆரம்பிக்க. இவன் பாக்கெட்டில் வைத்த போனை தேட ஃபுல்லாய் நனைந்து விட்டிருந்தது அந்த ஆப்பிள். அது அந்தமான் என்பதால் ஃபாரினர்ஸ் மாக்ஸிமும் ஐடியென்டிஃபைய் பண்ணவில்லை, இந்தியன்ஸ் மட்டுமே அவனை அடையாளம் கண்டு அருகில் வந்தனர். நிறைய கூட்டம் சேரவில்லை என்பதையெல்லாம் அடுத்தடுத்த நிமிடங்களில் கவனித்துவிட்டு எல்லோரையும் பார்த்து இயல்பாக கைக் குலுக்கி, போட்டோஸ் செல்பிக்கு போஸ் கொடுத்து, ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து என ரிசார்ட் நோக்கி நடந்து கொண்டே எல்லோரையும் ரிசீவ் செய்தான். அது மறுநாள் ஹாட் நியூஸாகவே வந்துவிட்டிருந்தது. சினிமாவில் மட்டும் ஹீரோயிசம் காட்டுவதில்லை, நிஜத்திலும் ஹீரோ தான் என ஆளாளுக்கு டேக் செய்து பார்வேர்ட், ஷேர் செய்து கொண்டிருந்தனர்.

அதை தன் சொல்லிலும் வைத்துப் பார்த்து, "என் சார்ம் என்ன செஞ்சாலும் அழகுதான்" என பாப்புக்குட்டி செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க, அவளின் பின்னிருந்து வந்து கொண்டிருந்த விஷாகன் அவள் பார்ப்பதையும், பேசுவதையும் கேட்டுவிட்டு 'அந்த அழக உங்க கை மேல தூக்கி கொடுக்க சொல்லி தான் என் மனசு என்ன அனத்திட்டுருக்கு மேடம், ஏன்னே புரியல' என மனதில் நினைத்தவாறு "ஹலோ சிஸ்டர்" என எதிரே அமர்ந்தான்.

"பங்ச்சுவாலிட்டி இல்லையே. இவ்வளவு லேட்டாவா வர்றது", "சாரி மேடம் ட்ராபிக் ஆயிடுச்சு". "சென்னைவாசிகளுக்குன்னு உள்ள பதில் தான். சரி வந்த விஷயத்தை முடிச்சிடலாம். அரவிந்த எப்படி தெரியும். நேம் எப்படி கரெக்ட்டா சொன்ன" என கேக்க. "அரவிந்த் என் ஃப்ரெண்டு தான் மேம். அவன் லவ் மேட்டர் எனக்கு முன்னமே தெரியும்". "அப்ப நேத்து கேசுவலா என்ட்ட வந்து பேசல. நான் என் அக்காவுக்கு மாப்பிள பாக்க வந்த விஷயம் தெரிஞ்சு தான் வந்துருக்க அப்படித்தான" என முறைத்து மிரட்டும் தோணியில் கேட்க. "நான் ஃபர்ஸ்ட்ல இருந்து டீடெய்லா சொல்றேன், அதுக்குள்ள அடிச்சிடாதீங்க ப்ளீஸ்" என அவளை அமைதிப்படுத்தினான்.

ஏதும் சொல்லாமல் அவனை பார்த்தாள். அதாவது அவன் சொல்ல டைம் கொடுத்திருக்கிறாள் என்று அர்த்தமாம். ஆனால் அவன் புரிந்து கொண்டான், இரணியனும் அப்படித்தான் என்பதால் தன்னை சரிப்படுத்திக் கொண்டு சொல்லத் தயாரானான். "இங்க பாருங்க மேடம் நானும், அரவிந்தும் நல்ல ப்ரண்ட்ஸ். அவன் தான் அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ற விஷயத்தையும், உங்க அக்காவோட போட்டோவையும் காட்டினான். அன்னைக்கு கோயில்ல உங்களோட அக்காவ பார்த்ததும் எனக்கு அரவிந்த் தான் ஞாபகம் வந்தான். அவனுமே இன்னும் கல்யாணமே பண்ணிக்காம உங்க அக்காவுக்காக வெயிட் பண்ணிட்டு தான் இருக்கான். இங்க உங்களப் பாத்ததும் உங்க அக்காவையும், அரவிந்த்தையும் சேர்த்து வைக்கணுமே அதுக்கு என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சுட்டு தான் பேசவே வந்தேன்" என அவன் நிறுத்த.

"அதுக்குத் தான் எனக்கு வேலை வாங்கிக் கொடுக்குற ட்ராமா போட்டியா?" எனக் கேட்க. "சத்தியமா இல்ல மேடம், அது உங்களோட தனித் திறமைக்காகவே கொடுக்கப்பட்டது. நீங்க தான் அந்த போஸ்ட்க்கு சூட் ஆவிங்கன்னு என் மனசு அடிச்சு சொல்லுது". "இதுல ஏதாவது வில்லங்கம்ன்னு தெரிஞ்சது உன் மனசு மட்டுமில்ல, நான் கூட அடிச்சி தான் சொல்லுவேன்". "அதான் தெரியுமே" என்க. "சரி நா அந்த அரவிந்தன்!, அவர பாக்கணுமே". "எப்ப வர சொல்லட்டும்". "ஃப்ரைடே மாங்காடு அம்மன் கோவிலுக்கு கூட்டிட்டு வந்துருங்க நல்ல விஷயம் கோவில்ல வச்சே பேசி முடிச்சிடலாம்". "பார்ரா மேடம்க்கு ஃபளோல மரியாதைலா வருது". "ஒரு வேள உங்க பிரண்டோட ௭ன் அக்காக்கு கல்யாணமாயிடுச்சுனா அவருக்கு கொடுக்குற மரியாதைய உங்களுக்கும் கொடுக்கணும்ல" என எழுந்து கொண்டாள். "ரொம்ப சந்தோஷம் மேடம்" என்றவாறு தானும் எழுந்தான். இருவரும் விடை பெற்றனர். அடுத்ததாக விஷா சென்று நின்றது அரவிந்தன் முன் தான்.

ஆக்சுவலா நடந்தது என்னன்னா பாப்புக்குட்டிய இரணியனோட சேத்துவைக்க முடிவு பண்ணதுமே, 2 அக்கா டீடைல்ஸ் கலெக்ட் பண்ணித் தரச் சொல்லி 2 டிடெக்ட்டிவ்ட்ட கொடுத்தான். ஐபிஎஸ், லாயர் டீடைல்ஸ் கலெக்ட் பண்றது கஷ்டமான விஷயம்தான். ஆனா இரணிய ஹர்பன்ற நேம் பண்ண வெச்சது. அப்படி சிக்குனவன் தான் அரவிந்த். வேதிகாவோட காலேஜ் மேட், மும்பைல்ல ஹாஸ்டல்ல தங்கித்தான் ரெண்டுபேரும் படிச்சுருங்காங்க, நாலு வருஷம் காலேஜ் லைஃப்ல லவ் பண்ணிருக்காங்க.. ரெண்டு பேரும் தமிழ்ன்றது தான் காலேஜ் பர்ஸ்ட் டேவே ரெண்டு பேரையும் மீட் பண்ண வச்சு ப்ரண்ட்டாக வச்சது. அப்புறம் அது லவ்வா கன்வெர்ட்டாகி மூணு வருஷம் ஃபளோவ்ல இருந்துருக்கு. படிப்ப முடிச்சு ஊருக்கு வந்து அரவிந்த் அவங்க அம்மாகிட்ட விஷயத்தை சொல்ல அவங்க தாட் பூட்ன்னு குதிச்சு நெஞ்சப் பிடிச்சுட்டு விழுந்துட்டாங்க. அவனுக்கு ஒரு அக்கா அப்போ கல்யாணம் ஆகாம வேற இருந்துருக்காங்க, எல்லாம் சேந்து அரவிந்த் அம்மாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆக்கிவிட்டது.

அப்புறமும் பையன் விடாம போராடிருக்கான். அந்த கேப்புல தான் வேதிகா, "நீ உன் அம்மாவ கன்வின்ஸ் பண்ணு, அப்புறமா நான் என் வீட்ல பேசுறேன். இப்ப போலீஸ் எக்ஸாம் அட்டண்ட் பண்றது தான் என் மைண்ட் ஃபுல்லா இருக்கு, 2 வீட்டுலயும் ஒத்துக்குறவர நாம வெய்ட் பண்ணலாம்", அப்படின்னு சொல்லிட்டு எக்ஸாம் கோச்சிங் அகாடமியில் சேர்ந்து படிக்க ஆரம்பிச்சுட்டாங்க. "உன் அக்காவுக்கு கல்யாணம் பண்ண வேண்டிய பொறுப்பு உன்னோடது, அத செஞ்சுட்டு நீ என்ன வேணா பண்ணிக்கோ", அரவிந்த் அப்பா இப்படி சொல்லிட்டு மனைவியை கவனிக்குறத முழுநேர வேலையா பாக்க ஆரம்பிச்சுட்டாரு.

இவனும் மாஸ்டர் டிகிரி அப்ளை பண்ணிட்டு அக்காவுக்கு வரன் தேட, ரெண்டு வருஷ படிப்பு முடிஞ்சது. ஆனா அக்காவுக்கு வரன் அமையல. செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம்ன்றதால. ஆனா அப்ப வர வேதிகாவும், அரவிந்த்தும் டச்சில் தான் இருந்தாங்க. இதுக்கப்புறம் தான் வேதிகா ஐ.பி.எஸ். எக்ஸாம் பாஸ் பண்ணி 1இயர் ட்ரைனிங் முடிச்சு திரும்பி வந்திருக்காங்க.

அப்போ அரவிந்த், "நீ எனக்காக உன் வாழ்க்கைய வேஸ்ட் பண்ணாத. உன் லைப் நீ பாரு. போலீஸ் வேலைல இருக்குற பொண்ணான்னு கேட்டு அம்மா மறுபடியும் டென்ஷனாகுறாங்க. அது அவங்க ஹெல்த்க்கு நல்லது இல்ல" என்க. "சரி" என்ற சொல்லுடன் அவனை சங்கட படுத்தாமல் ஒதுங்கிக் கொண்டாள் வேதிகா. ரெண்டு பேருமே பேமிலி ஒத்துக்கனும்ன்னு தான் வெயிட் பண்ணாங்க. அரவிந்த் வீட்ல ஒத்துக்காதனால வேதிகா வீட்டுல செல்ல வேண்டிய அவசியமே ஏற்படல்ல.

எல்லா டிடைல்சும் கிடச்சதும், விஷா அரவிந்துக்கு எப்.பி ல ஒரு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் தட்டிவிட அவனும் யாரு என்னன்னு பாக்காம அக்செப்ட் பண்ணிட்டான். அவன் போன் நம்பர் வாங்கி அரவிந்த்ட்ட பாப்புக்குட்டியோட ப்ரண்ட்ன்னு சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, இப்ப அவன பாக்க அவன் முன்னாடி போய் நிக்றான்.

"எங்க விஷயம் பாப்புக்குட்டிக்கே தெரியாதே அவ உங்களுக்கு எப்படி சொல்ல முடியும்" அரவிந்த் கேட்க, "அதெல்லாம் அக்கா விஷயம் தங்கச்சிக்கு எப்படித் தெரியாம போகும். ஆனா எங்களுக்கு தெரியுங்குறது தான் ஐபிஎஸ் மேடம்க்கு இன்னும் தெரியாது. இப்ப அது முக்கியமில்ல. இன்னமு அவுங்கள கல்யாணம் பண்ற ௭ண்ணம் இருக்கா?” "வேணாம்னு முடிவு ௭டுத்துட்டேன்னே தவிர அவளுக்கு வேற யாரோடயும் கல்யாணம் ஆயிடுமோன்னு பயந்துட்டே தான் 5வருஷத்த கழிச்சிருக்கேன்". " அடுத்து நீங்க ௭தாது ஸ்டெப் ௭டுத்திருக்கலாமே.நாங்களும் சில பிளான் பண்ணி தான் உங்கக் கல்யாணத்த முடிச்சு வைக்க போறோம். அதனால என்ன நடந்தாலும் யார் என்ன சொன்னாலும் ஏன், எதுக்குன்னு யோசிக்காம கருமமே கண்ணா ஐ. பி. எஸ் மேடம் கைபிடிக்குறதுலதான் இருக்கணும்".

"அக்கா ஃபேமிலில அடுத்தடுத்து ஒரே பிரச்சனை ௭ன்னால ௭துமே பண்ண முடில. ஆமா நீங்க ஏன் இத பண்ணனும்?” "இதுதான் உங்களோட லாஸ்ட் கொஸ்டினா இருக்கணும். பாப்புக்குட்டி அவங்க அக்காவுக்காக பண்றாங்க, நான் அவங்களுக்காக பண்றேன். இப்பயிருந்து நாம பிரெண்ட்ஸ், இனி யார் கேட்டாலும் நாம ரெண்டு பேரும் பல வருஷமா பிரண்ட்ஸ் அப்படித்தான் சொல்லணும்". "ஏன்?” "இப்பதான சொன்னேன் ஏன், எதக்குன்னு கேள்வி கேக்கக் கூடாதுன்னு, உங்களுக்கு ஐ.பி.எஸ் மேடம் வேணுமா? வேண்டாமா?” "வேணும், வேணும்", "அப்ப கம்முனு நடக்குறதுக்கு தலைய மட்டும் ஆட்டுங்க போதும்". சந்தேகமாய் விழித்தாலும் தலையாட்டுவதை தவிர அவனுக்கும் வேறு வழி இருக்கவில்லை.

மறுநாள் பாப்புக்குட்டியை விஷாகன் கிளம்பி வரச் சொல்ல, வரும்போதே "என்ன?" என்ற கேள்வியுடனே வந்தாள். "அரவிந்தோட அம்மாவ சமாளிக்கணும், அவங்களுக்கு போலீஸ் மருமகள் வேணாமாம், அதான் என்ன பண்ணலாம்னு ஐடியா கேக்கக் கூப்ட்டேன்". "அக்கா ஆசப்பட்ட வாழ்க்க, இவ்வளவு நாள் அவருக்காகத்தான் வெயிட் பண்ணுறாங்குறதால இத சரி பண்ணிதான் ஆகணும்" என அவனுடன் சேர்ந்து யோசிக்க ஆரம்பித்தாள். என்னென்னவோ யோசித்தும் ஒன்றும் பிடிபடவில்லை, கடைசியாக "அவங்க அம்மா நம்பர் இருக்கா?" என்றாள். "இருக்கே, ஏன்?" என்க. "ஃபஸ்டு நம்பர் சொல்லுங்க" என்க.

அவன் சொல்ல டயல் செய்து ஸ்பீக்கரையும், வாயையும் மூடிக் கொண்டாள். அந்தப் பக்கம் எடுக்கவும், தன் வாய்ஸை மாற்றிக்கொண்டு, "இங்கப் பாருங்க உங்களுக்கு நான் யாருன்னு தெரியாது, ஆனா உங்கள எனக்கு நல்லா தெரியும்". "அதுக்கு?" அந்த அம்மா பதில் கேள்வி கேட்க, "இங்க பாருங்க", "போன்ல எப்படி பாக்குறது", "பழைய காமெடியெல்லாம் சொல்லி கழுத்தறுத்த சாவடிச்சிடுவேன். உன் மகன் உயிரோட வேணும்னா, ஒழுங்கா என் அக்காவுக்கு" விஷா தலையிலடிக்க, "ச்சீ வேதிகா ஐ.பி.எஸ்க்கு கல்யாணம் பண்ணி வைக்குற. இல்லன்னா உனக்கு கொள்ளி போட ஆள் தேட வேண்டியிருக்கும். வார வெள்ளிக்கிழமை மாங்காடு அம்மன் கோயிலுக்கு உன் பையன கூட்டிட்டு வார, உன் சம்பந்தியம்மா அங்க வருவாங்க கல்யாணத்த பேசி முடிக்குற. இல்ல சொன்னது ஞாபகம்யிருக்குல்ல, பீ கேர்புல்" என படக்கென வைத்து விட்டாள்.

விஷாகன் முழிக்க. "விடு கண்டிப்பா வருவாங்க, அங்க பேசி முடிக்குறத நான் பாத்துக்குறேன்" என்றாள் அவனிடமும். "சரி மேடம் சில பல பொய் சொல்லி தான் நாம இத நடத்தி முடிக்கனும், நீங்களும் கொஞ்சம் கோவாப்ரேட் பண்ணனும்" என்றான். "சரி சரி ஜமாய்ச்சுடலாம். எப்படியோ என் அக்கா கல்யாணம் நடந்தா சரி. ஃப்ரைடே மீட் பண்ணலாம், பை"எனக் கிளம்பிவிட.

விஷாகன் வான் நோக்கி "ஆண்டவா எல்லா உண்மையும் தெரிய வார அன்னைக்கு என்னைய தயவுசெஞ்சு இன்விசிபில் ஆக்கிடு" என வேண்டிக் கொண்டு புறப்பட்டான்.

வீட்டுக்கு வந்த பாப்புக்குட்டி வடிவிடம், "அம்மா வெள்ளிக்கிழம மாங்காடுக்கு மாப்பிள பாக்கப் போறோம், ரெடியாயிரு. அப்பாட்ட சொல்லிவை, அக்காட்டையும், அந்த வெள்ளை பாச்சாட்டயும் உளற வேணாம்னு சேர்த்து சொல்லி வை". "எங்களப் பாத்தா எப்படிடி தெரியுது, உன் இஷ்டத்துக்து முடிவெடுக்குற, அப்பா வரட்டும் ௭துனாலும் கேட்டு பொறுமையா முடிவெடுக்கலாம்?” "அது ஒ இஷ்டம், நா ௭ன் வாக்க காப்பாத்திட்டேன், இனி முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு உங்களோடது" என சீரியல் பார்க்க ஓடி விட்டிருந்தாள். இரவு வடிவு கணவனிடம் சொல்ல அவரோ, "சின்னப் புள்ள அவ சொல்றான்னு நீயும் இத பெருசா நம்பிட்டுயிருக்கியாக்கும்" என்க, இவர் வேதிகா விசயத்தை விலாவாரியாக சொல்ல. "௭னக்கு கேஸ் இருக்கேம்மா" ௭ன்றுவிட்டு சிறிது யோசித்தவர், "சரி நீங்க 2 பேரும் போய் ௭ன்ன ஏதுன்னு பேசிட்டு வாங்க, அப்றமா நாம முடிவெடுக்கலாம்" ௭ன முடித்து விட்டார்.

வெள்ளிக்கிழமை மூவரும் கிளம்பியதும், தாயும், மகளும் வண்டியை எடுத்துக்கொண்டு மாங்காடு நோக்கி சென்றனர். அங்கு வாசலில் விஷாகனைக் கண்டதும் 'ஹாய்' சொல்லி கையை ஆட்டிவிட்டு, அம்மாவை அழைத்துக்கொண்டு அவனை நோக்கி செல்ல, வடிவு மெதுவாக அவள் காதில், "இவர்தான் மாப்பிளயா? பாக்க நல்ல பையனாத்தான் இருக்காரு, பேசி முடிச்சிடலாம்" என்க. "அதுக்கு அவரு பொண்டாட்டி ஒத்துக்கணும்ல்ல, எப்படி அப்பாவ வச்சு டிவோர்ஸ் வாங்கிக் குடுத்துருவோமா?" "அச்சோ கல்யாணமான பையனா, எனக்கு மருமகனாக வந்துருவான்னு நினைச்சேனே, சரி விடு அவனுக்கு கொடுத்து வைக்கல, அப்ப பையன எங்கடி?” "இருமா இவர் மாப்பிள ப்ரண்ட் தான், அவர்கூட தான் வந்துருப்பாங்க".

அதற்குள் அவனை நெருங்கியிருக்க "வணக்கம்மா நல்லாருக்கீங்களா" என்றான் வடிவிடம், அன்று இரவில் பார்த்தது ஞாபகம் இருக்கும் என்றெண்ணி. அவர் தான் மறந்துவிட்டிருந்தாரே, "நல்லாருக்கேன்பா, உனக்கு கல்யாணமாகலனா உன்னையே மருமகனாக்கி இருப்பேன்" என்க. பாப்பு தாயை முறைக்க. "இப்பயும் மருமகன்னே வச்சுக்கோங்க. நா வேணா அம்மான்றத அத்தையாக்கிட்டு போறேன்" என்றான்.

"சப்பா இது இப்ப ரொம்ப அவசியமா? மாப்ள வீடு வந்தாச்சா?" ௭ன்றாள் கடுப்பாய். "வந்துட்டாங்க பாப்புக்குட்டி, உள்ள வெயிட்டிங்" நேராக சென்று அர்ச்சனைக்கு கொடுத்து அம்மனுக்கு வணக்கத்தை வைத்துவிட்டு அரவிந்தனையும், அவன் தாயையும் தேடிச் சென்றனர்.

அரவிந்தன் மட்டுமே ஆவலாய் பார்த்து நின்றான். அருகில் நின்ற அவன் தாயும், அக்காவும் வேறு வழியில்லாமல் நிற்பது போல் தான் நின்றனர். விஷாகன் 2 பேமிலியும் எக்ஸ்ட்ரா வேர்ட்ஸ் ஏதும் பேசி நம்மை இக்கட்டில் தள்ளி விடக் கூடாது என அலர்ட்டாய் நின்றான். ஆனால் பெரிதாய் எதுவும் இல்லாமல் அரவிந்தனின் தாய், "பிள்ளைக ஆசைப்பட்டுருச்சு, வேணாம்னு சொன்னாலும் பிடிவாதம் புடிச்சு வேற பொண்ண கல்யாணம் பண்ணமாட்டேன்னு இருக்கான். உங்க பொண்ணும் அப்படித்தான் இப்பவர கல்யாணம் பண்ணாம இருக்காங்க போலயிருக்கு. இப்ப மிரட்டிக் கல்யாணம் பண்ற அளவுக்கு போயிட்டாங்க (வேதிகாவும், அரவிந்தனும் பிளான் பண்ணி தன்னை மிரட்டியதாய் நினைத்துக் கொண்டார் அவர்), அதனால பேசி முடிச்சுடுவோம். நிச்சயம் பண்ண எப்ப வரட்டும்ன்னு மட்டும் முடிவு பண்ணி சொல்லுங்க, வரோம்" என படபடவென பேசி விட்டு வணக்கம் வைத்து கிளம்பியும்விட்டார்.

"என்னடி இந்த அம்மா பிடிக்காத மாதிரி பேசிட்டு போது" வடிவ கேட்க, "அக்கா லவ் பண்ணது, அவங்க பையனையாச்சே அதான்". "அப்ப என் புள்ள அங்க போனா கொடும படுத்து வாங்களேடி". "அம்மா ஐ பி எஸ் ஆபிஸர் அம்மா மாறி பேசுமா. இனி அப்பாவையும், அக்காவையும் ஒத்துக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு" என்றுவிட்டு விஷாகனிடம் "ரொம்ப நன்றி, அப்ப நாங்க வீட்டுல பேசிட்டு டேட் சொல்றோம், வாங்க" என்க.
 
"பாப்புக்குட்டி நான் நெக்ஸ்ட் வீக் சிம்லா போறேன். அதுக்கிடயில வச்சிங்கன்னா நீங்களே பேசி முடிச்சிடுங்க" என்க. "அப்ப இன்டர்வியூ? 28 வெட்னெஸ்டே ஆச்சே". "அது நீங்க பாஸ் கூடத்தானே பண்ணனும். நான் இந்த ஹெல்ப்லா பண்ணதா மட்டும் மறந்து கூட சொல்லிடாதீங்க. ஜஸ்ட் நான் உங்கள ரெஃபர் பண்ணேன், அப்படிங்கறதோட இருக்கட்டும்" என்க.

அவன் மைண்ட் 'ஒவ்வொரு இடத்துலயும் ஒன்னொன்னா சொல்லிட்டுருக்க, இது எங்க போய் முடியப் போகுதோ, உன்னைய கும்மு கும்முனு குமுறப் போறாங்க பார்த்துட்டே இரு' என பயமுறுத்த, சற்று பீதியாகி பின் 'வரும் போது பாத்துக்கலாம். தைரியமா இருக்கணும் விஷா' என ஆறுதல் படுத்திக் கொண்டான். "சரி ஓகே, ஹேப்பி ஹனிமூன்" சொல்லிட்டு "வாம்மா கிளம்புவோம்" என்றாள் பாப்பு. "போயிட்டு வரேன் மருமகனே", "சரித்தே" என சபையைக் கலைத்தனர்.

கையோடு விஷயத்தை பேசி முடித்துவிட எண்ணி அன்று இரவு மொத்த குடும்பத்தையும் இருத்தி பேசினார் வடிவு, "ஞாயிறு நல்ல வளர்பிறை நாளாயிருக்கு, அடுத்து அஷ்டமி, நவமி, தேய்பிறை வந்துருது. இந்த வாரமே நிச்சயதார்த்தத்த முடிச்சுடலாம்" என்க. சுகாசினி "யாருக்கு? இதுக்கா? (பாப்புவை காட்டி) எனக்கு தெரியும், இவளே இவளுக்கு மாப்ள பாத்துக்குவான்னு, பரவால்ல கல்யாணம் பண்ணிட்டு வருவான்னு நினைச்சதுக்கு வீட்ல சொல்லிட்டுனாலும் பண்ணுறா. நல்ல விஷயம் வாழ்த்துக்கள் வெட்டி" என்க. "உன்ன இந்த வீட்ட விட்டு விரட்டாம நான் போகமாட்டேன், கவலைப்படாம கொட்டிக்கோ வெல்ல பாட்ச்சா".

"ஏய், வாய மூடுங்கடி, சீரியஸா பேசும்போது விளையாண்டுக்கிட்டு" என அதட்டிவிட்டு வேதிகாவை பார்த்தார் வடிவு. அவளோ இங்கு நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதாய் செல்லில் ஏதோ டைப் செய்து கொண்டிருக்க, அதை வெடுக்கென பிடிங்கியவர், "ஓங்கிட்ட தான் சொல்றேன், வர்ற ஞாயிறு உனக்கு நிச்சயதார்த்தம். ஆற அமர பொறுமையா பண்ண, டைம் நீ எங்களுக்கு குடுக்கல. அதான் இந்த அவசரம்". "நான் எப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்". "நீ எங்க சொல்ல போற,இதுவர நாள கடத்துனது போதும், இனி அப்படி இருக்க முடியாது. ௭ப்பிடியோ சொல்லியாச்சு நீ கேக்றாப்ல இல்ல, அதான் நாங்களே மாப்ள பாத்துட்டோம், உனக்கு பண்ணாம அடுத்து இரண்டு பேருக்கும் பண்ண முடியாது, உனக்கு புரியாததுயில்ல, அதனால சண்டே வேற வேலை வெச்சுக்காம ரெடியா இரு" என அவளிடம் கூறிவிட்டு கணவனைக் காண, அவர் சரி என்பதாய் தலையசைத்தார். அவருக்கு அங்கு சென்று வீடு திரும்பியதுமே போனில் அழைத்து எல்லாவற்றையும் சொல்லி விட்டிருந்தார். அவரும் பையனை பற்றி விசாரித்ததில் திருப்தியே. அதனாலேயே சண்டே வைக்க ஒத்துக்கொண்டார்.

"என்னப்பா நீங்களாவது அம்மாகிட்ட சொல்லுங்க. என் ஜாப் பத்தி யோசிக்காம" என அவள் முடிக்கும் முன், "உன் ஜாப் பத்தி பையன் வீட்டுல பேசியாச்சும்மா அவங்களுக்கு சம்மதம் தான்" என்று விட்டார். அதற்கு மேல் ஆர்க்யூ பண்ண வில்லை, பையனிடம் பேசிக்கொள்ளலாம் என அவளும் விட்டுவிட்டாள். பாப்புக்குட்டி விஷாகனிடம் போன் செய்து சொல்ல, "சண்டே ஈவினிங் தான் பிலைட். மார்னிங் தான நான் வந்துடுறேன், அரவிந்த் நம்பர் அனுப்றேன், நீங்களே போன் பண்ணி விஷயத்த சொல்லிடுங்க அதான் மரியாதையா இருக்கும்" என்று விட்டான் அவன்.

எல்லாம் பிளான் பண்ணியது போல் சரியாகவே சென்றது, பாப்புக்குட்டிக் கிடைத்த கேப்பில் மொத்த அபார்ட்மெண்ட்டுக்கும் "அக்காவ பொண்ணு பாக்க வராங்க, அப்படியே புடிச்சிருந்தா நிச்சயம் பண்ணிடுவாங்க" பத்திரிக்கை அடிக்காமலே பரப்பிருந்தாள்.

பங்க்ஷன் ஆரம்பிக்க பாப்புக்குட்டி பம்பரமாய் வேலை பார்த்தாள். 'எப்படியும் அக்கா கண்டுபிடிச்சுருவா, உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு கேட்டுத் திட்டுவா' என்பதை யோசித்து பிஸியாக காட்டிக் கொண்டிருந்தாள். அது தான் போலீஸ்கார மூளைக்கு அதிக சந்தேகத்தை கொடுத்தது.

சுஹாசினி வேறு, "அக்கா இந்த குட்டிசாத்தான் கூட்டத்த கூட்டி வச்சு, அதிகமா பாவலா காட்டுறத பாத்தா இன்னைக்கு நடக்கிறதுல அதோட பங்கு தான் அதிகம்னு நினைக்கிறேன்" என பாப்பு காதில் விளட்டும் என்றே பேச, "அக்காக்கு மேரேஜ் லேட்டாக லேட்டாக உனக்கு செகண்ட் ஹாண்ட் தாண்டி அமையும்" என்க, சரியாக காலிங் பெல்லும் அடித்தது.

"மாப்பிள வீட்ல வந்துட்டாங்கம்மா, ப்பா" என கத்திக்கொண்டே வாசல் நோக்கி ஓடினாள். வேதிகா அப்படியே அவர்களை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள். சுஹாசினியும் எழுந்து வாசல் சென்றுவிட, மாப்பிள்ளை வீட்டார்கள் வரவும் அப்பார்ட்மெண்ட் ஆட்களுடன் வர ஆரம்பித்தனர். அலட்சியமாக பார்த்துக்கொண்டிருந்த வேதிகா, அரவிந்த் வரவும் சற்று புருவத்தை ஏற்றி இறக்கினாள் அவ்வளவே. அதன்பின் அங்கு மற்ற வேலைகள் படபடவென நடந்தது. யாருக்கும் மறுப்புக் கூற வேண்டியதிருக்கவில்லை என்பதால் விஷாகன் தலைமையில் சுமுகமாகவே முடிந்தது. தட்டு மாற்றினர், மறு மாதத்தில் கல்யாணம் சிம்பிளாக ரிஜிஸ்டர் ஆபீஸில் வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தனர். வேதிகா எதுவுமே பேசவில்லை, அரவிந்த்தனையும் உடன் வந்த விஷாகனையுமே பார்த்திருந்தாள்.

அவனுக்குப் புரிந்தது "கண்டிப்பா ஒரு இன்வெஸ்டிகேஷன் இருக்கு" என நினைத்துக்கொண்டான். அரவிந்தனிடம் சொல்லிய கூட்டி வந்தான், "என்ன நடந்தாலும், என்ன எப்படி கேட்டாலும், நீயும் நானும் ப்ரண்ட்ஸ், நீ தான் இந்த ஏற்பாடு பண்ணின, நா உந்கூட வந்திருக்கேன், அவ்ளோ தான் சொல்லணும். நீ முயற்சி பண்ணி தான் இந்தக் கல்யாணம் நடந்ததுங்குற சந்தோஷத்த கல்யாணத்துக்கு அப்புறம்னாலும் அவுங்களுக்கு குடு. போலீஸ்காரங்க குண்டக்க மண்டக்க கேட்பாங்க மாத்தி சொல்லி என்னைய மாட்டி விட்டுறாத" என்க.

"சரி சரி" எனத் தலையாட்டிக் கேட்டுக் கொண்டான். ஆனால் அவர்களை விசாரிக்கும் முன் தாயையும், தங்கையையும் விசாரித்தாள், ௭ல்லாமுடித்து அவர்கள் கிலம்பியதும், வடிவு வாயை திறக்க மாட்டேன் என சாதித்து விட, "ஆமாக்கா நான்தான் உன் திங்ஸ் நோண்டி அவர கண்டு பிடிச்சுப் போய் பார்த்தேன், பேசினேன். அவர் அம்மா போன்ல மிரட்டி தான் ஒத்துக்க வச்சோம், அவங்களும் ஒத்துக்கிட்டாங்க".

முறைத்த வேதிகா "சின்ன புள்ளன்றது சரியா இருக்கு. இதுல அந்த விஷாகன் எங்கிருந்து வந்தான்". "அவரும், இவர் கூட இருந்தார்க்கா நான் பாக்க போனப்போ. உனக்கு புடிச்ச லைஃப் உன் கையில அத அனுபவிக்கா. ஏன்கா இப்படி நல்லது பண்ணவங்கள கேள்வியா கேக்குற" என சலித்துக் கொள்ள, அதற்கு மேல் தங்கையை தன் வாழ்க்கையில் இழுத்து விட மனமில்லாமல் அப்படியே விட்டுவிட முடிவு செய்தாள். அரவிந்தனிடம் சுமூகமாக பேச ஆரம்பித்தாள். ஆளுக்கு ஒரு டிராமா செய்த விஷாகனும், பாப்புக்குட்டியும் அதன் பின்பே நிம்மதியாய் மூச்சு விட்டனர்.

சொன்னதுபோல் இரணியன் வர இரண்டு நாட்கள் இருக்கையில், விஷாகன் அவனுக்கு போன் செய்ய இரணியன் போன் எடுக்காததால் பாப்புக்குட்டியைப் பற்றி மெயில் அனுப்பிவிட்டு சன்டே ஈவினிங் பிலைட் ஏறிவிட்டான்.

புதனன்று இன்டர்வியூ செல்ல வேண்டும் என்பதால் டியூஸ்டே இவெனிங் விஷாகனுக்கு மெசேஜ் அனுப்பினாள் "இன்டர்வியூ லெட்டர்?" எனக் கேட்டு. "அவனோ உங்க பயோவை இந்த ஐ.டி.க்கு இ-மெயில் அனுப்பி வைங்க, இந்த அட்ரஸ்க்கு மார்னிங் 10க்கு போயிடுங்க" என ஓ.எம்.ஆரில் உள்ள ஒரு ஹோட்டல் அட்ரஸ் அனுப்ப. 'இன்டர்வியூ ஹோட்டல்ல வச்சு போல' என நினைத்து "ஓகே" என பதில் அனுப்பினாள். அங்கு விஷாகனின் மனைவி "அண்ணனுக்கு மேனேஜர் அப்பாய்ண்ட் பண்ணாம கிளம்பிட்டீங்க, அண்ணன் வந்து கேட்டா என்ன செய்வீங்க?” "சார் போன் நாட் ரீச்சபிள்ள இருக்கு. ரெசார்ட்ல கேட்டேன் வந்து பாத்துக்குறேன்னு பதில் சொல்ல சொல்லிட்டாருன்னு சொன்னாங்க, அதான் அப்ப சார் வந்து பாத்துப்பாங்கன்னு கிளம்பிட்டேன்". "அப்ப என் ப்ரண்ட்?", அத சார் தான் முடிவு பண்ணனும்" என முடித்துவிட்டான்.

இரணியன் செவ்வாய் இரவே சென்னை வந்து இறங்கினான். ஏர்போட்டில் கூட்டம் கூடும்முன் பாடிகார்ட்ஸ் வந்து விட்டிருந்தனர். அவன் வந்து காரில் ஏற டிரைவர் மட்டுமே இருக்க, "விஷா கிளம்பிட்டானா?" என்றான் "ஆமா சார் சண்டே ஈவினிங்" என்றார் டிரைவர். "ம்" என அமைதியாகி வெளியில் வேடிக்கை பார்த்தான். வீட்டிற்கு வந்தால் ரிசீவ் செய்ய யாரும் இல்லை, அவன் அதை எதிர்பார்க்கவுமில்லை. மேலேறி தனதறை வந்து பிரெஷாகி ஆல்ரெடி ஆர்டர் செய்து வந்த நியூ மொபைலை ஆன் செய்தான். அவன் ஆன் செய்யவும் விஷாகன் கால் செய்தான். "ரீச்டா சார், ஹொவ் வாஸ் தி ட்ரிப்" என்க. "நியூ மேனேஜர் என்னாச்சு விஷா?", "மெயில் பண்ணிருக்கேன் சார். டுமாரோ ***ஹோட்டல்ல 10க்கு உங்கள மீட் பண்ண சொல்லியிருக்கேன்". "எதுக்கு ஹோட்டல்? இதென்ன புதுசா?", "இல்ல சார் இது உங்க பர்சனல் வொர்க்காக செலக்ட் பண்ற பெர்ஷன் உங்களுக்கு பிடிச்சா மட்டுமே அப்பாயிண்ட் பண்ண போறீங்க, எதுக்கு அதுக்கு முன்ன வீடு வர வர சொல்லிட்டுன்னு சொல்லல". "ஓகே தென் ஐ வில் டேக் கேர் ஆப் இட், பை" என வைத்துவிட்டான்.

அங்கு பாப்புக்குட்டி அலப்பறை பண்ணிக்கொண்டிருந்தாள், "இனிமே எவளும் என்னைய வெட்டின்னு கூப்பிட முடியாது. தேடி வந்தா வேலை கொடுப்பான்னு கேட்டல்ல, தேடி தான் வந்துருக்கு. வேல என்ன தேடி வந்துருக்கு" என அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டிருந்தாள். "அம்மா எனக்கு காது வலிக்கு, இவள ஏன்மா பெத்த, என்னோட போதும்னு ஆபரேஷன் பண்ணிருக்கலாம்ல" என ஒரு லட்சத்து 50 ஆயிரம் தடவையாக வடிவை பார்த்து இந்த கேள்வியை கேட்டாள் சுஹாசினி. "இந்தக் குடும்பம் உன்னால உருப்படாம போயிடும்ன்னு, கடவுள் பின்னையே என்ன அனுப்பித் தூக்கி நிறுத்த வச்சிருக்காருடி" என்க.

"என்னால முடியல நான் கிளம்புறேன். அப்பா ரெடியா போலாமா?" என தந்தையை அழைத்துக் கிளம்ப. அவர் நின்று பாப்புக்குட்டியை அருகில் அழைத்து தோளோடு அணைத்து, "ஆல் தி பெஸ்ட்" என்று விட்டு சென்றார். பின்னயே வேதிகாவும் "கிளம்புப் போற வழில ட்ராப் பண்ணிட்டு போறேன்" என்க. "சரியென" வேதிகா உடனே சென்று அந்த ஹோட்டலில் இறங்கினாள். "என்ன போஸ்டிங்?" "மேனேஜர் கம் பி.ஏ ன்னு சொன்னாங்க". "சரி நல்லா பண்ணு. முடியவும் வீட்டுக்கு போயிட்டு மெசேஜ் குடு" என கிளம்பி விட்டாள்.

இவள் உள்ளே செல்ல ரிசப்ஷனிஸ்ட் ஒரு டேபிள் காட்டி, "தட் இஸ் ரிசர்வ்ட் ஃபார் யூ மேம்", "பய் விஷாகன்?" என இவள் கேட்க. "எஸ் மேம்" என்றாள் அவள். "ஓகே" என சென்று ஃபைலுடன் அமர்ந்தவள், 'இங்க வேற யாரும் இன்டர்வியூக்கு வந்தமாறி தெரில்லையே' என சுற்றிப் பார்த்து யோசித்துக் கொண்டிருக்க.

ஷார்ப்பாக 10 மணியாகையில் சலசலவென சத்தத்தின் நடுவே கம்பீரமான நடையுடன் ரிசர்வ் செய்த டேபிளில் சென்று பாப்புக்குட்டியின் முன் "மிஸ் தாட்சியாயினி ரைட்?" என கேட்டு ஸ்டைலாக அமர்ந்தான். பாப்புக்குட்டி ஷாக் அடித்தது போல் மூச்சை இழுத்துப் பிடித்து எழுந்து நின்று விட்டிருந்தாள்.
 
அத்தியாயம் 7
¶¶இரண்டு நொடி பாப்பு அப்படியே ஷாக்கில் நிற்க. "எக்ஸ்க்யூஸ் மீ" என7 டேபிளில் தட்டி அவளை சுய நினைவிற்கு கொண்டு வந்தான் இரணியன். சுயநினைவு பெற்று இரண்டு கையால் வாயைப் பொத்தி ஆழமூச்சிழுத்து கண்ணை விரித்து அவனைப் பார்க்க, அவன் புருவத்தை ஏற்றி, இறக்கி, நன்கு சாய்ந்து அமர்ந்தான்.

அவன் "என்ன" என்பதாய் பார்ப்பதைக் கண்டு வாயை மூடியிருந்த கையை எடுத்தவள், அவனை ஒரு முறை டேபிலோடு சுற்றி வந்து பார்த்தாள். பின்பு நறுக்கென தன் தலையில் குட்டிக்கொண்டு, "தூங்கல, அப்போ நிஜம்தான், ஹய்யோ நான் உங்கள பாத்துட்டேன், ஐயோ ஐயோ நான் உங்கள நெஜமாவே பார்த்துட்டேனே. இதை யார் கிட்டயாவது உடனே சொல்லணுமே. அபார்ட்மெண்ட்ல சொன்னாலும் யாரும் நம்புவாங்களான்னு கூட தெரிலயே. கண்டிப்பா உங்களோட ஒரு போட்டோகிராப் ம்ம் வேணா வீடியோவே எடுத்துக்கிறனே ப்ளீஸ், என்ன பண்ணுவேன்? என்ன பண்ணுவேன்?" என அவள் போக்கில் அவனை சுற்றி சுற்றி வந்தவள், "ஒரு நிமிஷம் சார்ம்" என்று விட்டுப் போனை எடுத்து என்னவோ செய்ய, பாடிகாட்ஸ் இரணியனையும், அவளையும் மாறி மாறிப் பார்த்தனர். அவர்களுக்கு அவனின் கட்டளையை வேண்டி நிற்க வேண்டிய அவசியம். அவனுக்கு இது மாதிரி கிரேஸி ஃபேன்ஸ் பழக்கம், இதைவிட அன்பை வெளிப்படுத்தியவர்களையே கண்டவன் என்பதால், அவளே முடிவுக்கு வரட்டும் என அமைதியாய் இருந்தான். ஒரு முறை அவளது ஃபுல் எக்ஸைட்மென்ட்டும் கண்டு விட்டாளானால், ஒவ்வொரு முறையும் அவள் தன்னைக் கண்டு ரியாக்ட் செய்ய வேண்டியிருக்காது, என்று எண்ணி அவள் நடவடிக்கையை கால்மேல் காலிட்டு பார்த்தவாறு அமர்ந்திருந்தான். ஆனால் இதே உருவத்தை இதற்கு முன் ரொம்ப ஃபெமிலியராக கண்டது போன்ற பிரமை தோன்றிக் கொண்டே இருந்தது.

"எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே" என யோசித்துப் பார்த்திருக்க, அந்நேரம் வெயிட்டர் வர, "2 லெமன் ஜூஸ்" என்றனுப்பினான். இதற்கிடையில் பாப்புக்குட்டி வடிவுக்கு போன் செய்து, "ம்மா, விஷயம் தெரியுமா? நான் என் சார்ம் பார்த்தேன்ம்மா. சொன்னா நீ நம்ப மாட்ட என் எதுக்க உக்காத்திருங்காங்க" ௭ன்றாள் ஓவர் குஷியாக. "அதான் நா நம்ப மாட்டேன்னு தெரியுதுல்ல, இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு வீடு வந்து சேரு" என அவர் மேற்கொண்டு பேச அனுமதிக்காமலே வைத்து விட, இவள் "ம்மா ம்மா" என கத்த, அங்கு லைன் கட்டாகிவிட்டது. 'லூசம்மா கேக்க முன்ன கட் பண்ணிட்டாங்க'.

அடுத்ததாக "அடியே ஐஸ், உனக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் சொல்லவா? நம்ம சார்மில்ல என் முன்னாடி உட்கார்ந்திருக்காருடி. ஐயோ எவ்வளவு அழகு தெரியுமா? டி.வில விட நேர்ல இன்னும் கலரா இருக்காரு" ௭ன்க, "இது மாதிரி நீ சொல்றது 1031வது தடவ, அதனால என் சாப்பாட்ட கெடுக்காம போன வை". "நம்பாட்டி போ, நான் செல்ஃபி எடுத்துட்டு தான் வருவேன். என் பேரெல்லாம் கூட சொன்னாங்க.." என சொல்லவந்து டக்கென ஐஸ்வை கிடப்பில் போட்டுவிட்டு, "யூ டோல்டு மை நேம் ரைட்? என் நேம் உங்களுக்கு எப்டி ௭ப்டி தெரியும்" ௭ன படபடவென கேக்க. "ரிலாக்ஸ் ஃபஸ்ட், உங்க சீட்ல உக்காந்தீங்கன்னா கன்வே பண்ண ஈசியா இருக்கும்" ௭ன்றான. ஒரு நடிகனாக தன் ரசிகையின் ரசனையை மதித்தான்.

வேகமாக வந்து அமர்ந்தவள், "சொல்லுங்க சார்ம்" என்றாள் ஆர்வமாக. "சோ விஷாகன் உங்களுக்கு டீட்டைல் சொல்லல?" தலையை மறுப்பாக ஆட்டி விழித்தவள், பின் யோசித்தவாறு, "அப்ப இன்டெர்வியூ,, ஜாப் உங்ககிட்ட தானா? பி.ஏ/ மேனேஜர்ன்னு சொன்னது உங்களுக்குத் தானா?" ௭ன்க, "எஸ்" ௭ன்றான் லேசாக தலையசைத்து, "ஓ! அப்போ இன்டெர்வியூக்கு யாருமே வரலயே" ௭ன்றாள், உள்ளுக்குள் படபடப்பு அதிகமாகியது.

"யா, பிகாஸ் விஷா உங்க டீட்டைல் மட்டுமே ஃபில்டர் பண்ணி அனுப்பியிருந்தாரு", "அப்படினா?" "எஸ், யூ ஆர் அப்பாயிண்ட்டெட் அஸ் மை மேனேஜர் டெம்பெரர்லி. ஆப்ட்ர் த்ரீ மந்த்ஸ் ஒன்லி, யூ வில் பி பெர்மனன்ட் பேஸ்ட் ஆன் யுவர் ஆக்சன். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், யூ கேன்னாட் குவிட் திஸ் ஜாப் ஃபார் த்ரீ இயர்ஸ் ஆப்ட்ர் பெர்மெனன்ட். இந்த ஜாப் ஓகே ஆர் நாட்ன்னு இந்த டெம்ப்ரவரி பீரியட் 3 மந்த்ஸ்ல முடிவு பண்ணிக்கோங்க. நீங்க ௭னக்கு ஓகேயா இல்லயான்னு நானும் முடிவு பண்ணிப்பேன். கிளீயர்?" என்றான்.

கன்னத்தில் கை வைத்து அவனைப் பார்த்தவாறு ஒரு கனவுலகிற்கு சென்று விட்டிருந்தாள், "அப்போ, ஸுட்டிங் பாக்கலாம், சார்ம் டான்ஸ் லைவ்வா பாக்கலாம், அவர் கூட சாப்பிடலாம், ட்ராவல் பண்ணலாம், பேசலாம், பழகலாம்" என அவள் போக்கில் யோசித்துக் கொண்டிருக்க, அவள் முன் சொடக்கிட்டு, "இஸ் தட் கிளியர்? (புரிஞ்சதா?)" என்றான் மறுபடியும். "பக்கா க்ளியர் சார்ம்" என்றாள் இரண்டு கையையும் தம்ஸ் அப் காட்டி. "ஃபஸ்ட், பிபோர் ஜாய்னிங் இப்படி அடிக்கடி மெண்டலி ஆப்சென்ட் ஆகுறத மாத்திக்கோங்க. ஒவ்வொரு தடவயும் இப்டி பொறுமையா சொல்லிட்டுருக்க மாட்டேன். கான்சென்ட்ரேட்டா, அலெர்ட்டா கோ-ஆப்ரேட் பண்ணனும்" என அவன் முடிக்கும் முன் எழுந்து நின்று சல்யுட் அடித்து "எஸ் சார்ம், நீங்க பாப்புன்னு மனசுல நெனச்ச உடனே உங்க முன்னாடி நிப்பேன் சார்ம், அவ்வளவு ஸ்பீட் போதும்ல சார்ம்" என்றாள் சத்தமாக.

"எதுக்கு இத்தனை சார்ம். ஹூ இஸ் தட் பாப்பு? உங்க நேம் தாட்சியாயினி தான. தாட்சான்னு பிக்ஸ் பண்ணிக்குறேன். எப்ப ஜாயிண்ட் பண்ணுறீங்க?" என்றான் அவளை மேலும் பேசவிடாமல். நின்றவாறே சுற்றும் முற்றும் பார்த்தவள், அவனையும் குறுகுறுவென பார்த்துவிட்டு, "ஒரு ஃபைவ் மினிட்ஸ் சார்ம்" என்க. "ஓ! வீட்டுல டிஸ்கஸ் பண்ணனுமா? குட் டிஸ்கஸ் பண்ணிட்டு என்னென்னு மெயில் பண்ணிருங்க" என அவன் எழப் போக, "ஐயோ சார்ம், அதில்ல. என் வீட்டுல நான் எப்படா வேலைக்கு போவேன்னு தான் வெயிட் பண்ணிட்டுருக்காங்க. என் திறமை வேஸ்டா போறதுல அவங்களுக்கு அவ்வளவு உடன்பாடு இல்ல அதான். அதுலயும் முக்கியமா அந்த வெள்ள பாச்சா இருக்காளே என் மேல அம்புட்டு பாசம், நான் வேலைக்கு போனா அதிகமா சந்தோஷப்படுற மொத ஆளு அவளாத்தான் இருப்பா". தலையைக் கோதிக் கொண்டு தன்னை நிதானப்படுத்தியவன், "வாட்டெவர், அப்புறமென்ன?" என்க.

அவனை நெருங்கி ஹஸ்கி குரலில் "ஒரு குத்துப்பாட்டுக்கு நாலு ஸ்டெப்னாலும் இப்ப நான் ஆடியே ஆகணும்" சுற்றி கை காட்டி, "அவங்களெல்லாம் பத்தி பிரச்சனயில்ல, ஆனா உங்க முன்னாடி ஆடத்தான் கொஞ்சம் ஷய்யா இருக்கு. அஞ்சு நிமிஷம் போதும் சார்ம் ப்ளீஸ், ௭ன் பேக்க பாத்துக்குங்க" என்றவள் செல்லையும் எடுத்துக் கொண்டு பாத்ரூமை நோக்கி ஓடி விட்டிருந்தாள். இரணியன் 'இத எப்படி மூணு மாசம் சமாளிக்க' என்ற சிந்தனைக்கே சென்றிருந்தான்.

பாத்ரூம் சென்றவள், பெரிய ஸைஸ் கண்ணாடி முன் நின்று, "௭ன் செல்லம்" ௭ன அவளுக்கு அவளே முத்தம் குடுத்துக்கொண்டு, மொபைலை ௭டுத்து ஹை டெசிபலில்,
சோகாமா சோகாமா

ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா

ஹே ஹே மாமா பனாமா போயி

பார்ட்டி பண்ணலாம் மாமா

சோகாமா.. சீன் ஆ ஒரு கானா பாடலாமா

நீ வாமா அட ஆளு நைட்டு ரவ்சு தாமா

டக்குளு டக்குளு டக்குளு டக்குளு

ப்ளாக்பஸ்டர் சாங்கு மா

டக்குளு டக்குளு டக்குளு டக்குளு

திருப்பி போட்டு வாங்கு மா

டக்குளு டக்குளு டக்குளு டக்குளு

ஏரியா தான் தாங்குமா..

ஜாலி லிலோ ஜிம் கானா தாமா

குலேபா…. குலேபா….

சாங்கை வைத்து ஆட. அங்கு கூடி நின்றவர்களும் கூட சேர்ந்து ஆட ஆரம்பிக்க, அந்த பாத்ரூமே ஜாலியாகி விட்டிருந்தது. பாட்டு முடியும் வரை மூச்சு வாங்க ஆடிவிட்டு எல்லாருக்கும் "தேங்க்ஸ், பை" சொல்லிவிட்டு இரணியனை தேடி வந்தாள், இதற்குள் அவன் லெமன் ஜூஸை குடித்துவிட்டு ஆட்டோகிராஃப் கேட்டும், போட்டோவும் எடுத்துக் கொள்ள வந்தவர்களுக்கு அதை எடுத்துக்கொடுத்து கிளம்ப தயாராக, வேகமாக ஓடி வந்து அவன் முன் நின்றவள் "௭னக்கும் ஒரு செல்ஃபி சார்ம்" என்றுவிட்டு செல்பியும் எடுத்துக் கொண்டு, "நாளைக்கு ஜாயின் பண்ணிடுறேன்" என வழி விட.

அவன் அவளை பார்த்தவாறே சென்றுவிட்டான். பின்செல்லப் போன பாடிக்காட் இருவரின் நடைக்கும் ஈடுகொடுத்து தானும் நடந்த பாப்பு "உங்க நேம் என்ன?" என்றாள். இருவரும் அவளைப் பார்த்து விட்டு அவர்கள் பாட்டில் நடக்க "நாளையிலருந்து நா தான் உங்களுக்கு சம்பளம் போடணும்" என்றாள், இரண்டு கையையும் ஆட்டி ஆட்டி நடந்து கொண்டு, மறுபடியும் பார்த்துவிட்டு அவர்கள் போக்கில் நடக்க "சரி பேர சொன்னா எங்க இந்த பிள்ள ப்ரொபோஸ் பண்ணிடுமோன்னு பயப்படுறீங்க போல, நாம நாளைக்கு மீட் பண்ணலாம்" என இரணியனுக்கு டாட்டா காமித்தாள்.

இரணியன் அவன் காரில் ஏற பின் இன்னொரு காரில் அந்த பாடிகாட் இருவரும் ஏறிக் கொண்டனர். இவளும் வெளியில் நடந்தவாறே விஷாகனுக்கு போன் செய்ய, அவன் எடுத்ததும், "சொல்லுங்க பாப்புக்குட்டி" ௭ன்க. "உண்மயாவே நீ என்ன ஃபாலோ தான பண்ற" என்றாள். "ஏன் மேடம் இன்னும் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரலையா? இன்டர்வியூ என்னாச்சு". "நா சார்மோட ரசிகைன்னு தெரிஞ்சுதானே 'நீங்க இன்டர்வியூக்கு போங்க, பிடிக்கலனா சேராதிங்கன்னு' அவ்வளவு திமிரா சொல்லியிருக்கீங்க". "உங்களுக்கு மட்டுமில்ல பாப்பு, யாராயிருந்தாலும் சார்ட்ட வேலை கிடைக்குதுன்னு தெரிஞ்சா வேணாம்னு சொல்லுவாங்களா?" என்றான் கேள்வியாய். "அது சரி, நீங்க எதுக்கு இதெல்லாம் பண்றீங்க". "அதான் சொன்னேனே பாப்பு, ஒரு உள்ளுணர்வுன்னு". "ம்" என அவள் யோசனையுடனே சொல்ல. "சார் என்ன சொன்னாங்க". அவள் அப்படியே நடந்ததை சொல்ல, "அப்ப நாளைக்கு இன் ஜார்ஜ் எடுக்கப் போறீங்க". "ஆமா", "சூப்பர் பாப்பு, ஆல் தி பெஸ்ட்" "தேங்க்யூ, பஸ் வந்துருச்சு பை" என வீட்டுக்கு கிளம்பினாள் பாப்புக்குட்டி.

அதே சந்தோசத்துடன் வீட்டுக்கு பஸ் ஏறினாள், காதில் ஹெட் செட்டை மாட்டிக் கொண்டு யாரும் பார்ப்பார்களே என்ற கவலையே இல்லாமல் தலையை ஆட்டி ஆட்டி பாட்டுடன் சேர்ந்து வாய்க்கு வந்த வார்த்தையைப் போட்டு பாடிக் கொண்டே வந்தாள். அடுத்த ஸ்டாப்பில் ஏறி அருகில் அமர வந்த பெண் கூட இவளைக் கண்டு விட்டு மாறி பின் சீட்டில் அமர்ந்து கொண்டது. அவள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கி அப்பார்ட்மெண்ட் நோக்கியும் ஹாயாக பாட்டுக்குத் தாளம் போட்டவாறே சென்றாள். வாசலில் இருந்த செக்யூரிட்டி ஏதோ சொல்ல, இங்கு அவள் காதில் அதீத சத்தத்தில் எதுவும் கேட்கவில்லை. அதனால் ஒரு காதில் இருந்ததை எடுத்து அவர் காதில் வைத்து,

"பொதுவா தோனி போல நானும் காமும்மா,

இன்னைக்கு எக்சைட்மென்ட் ஆனேமா,

கண்ணால் வலையை வீசி என்ன தூக்குமா,

லைப் டைம் செட்டில்மெண்ட் நான் தான்மா",

என்க. அவரோ 70ஸ் கிட்ஸ் ஒன்றும் புரியாமல் அவளோடு சேர்ந்து தாளத்துக்கு மண்டையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தார். இதை மாடியில் துணி காயப்போட வந்த வடிவிடம் எதிர்த்த வீட்டு மாமி காமிக்க, பல்லைக் கடித்த வடிவு, "இவள கால உடைச்சு வீட்டுக்குள்ள அடக்கி வைக்க முடியலையே" என்ற பொறுமலுடன் வீட்டிற்கு சென்று செல்லை எடுத்து அவளுக்கு அழைப்பு விடுக்க, அது ஓடிக் கொண்டிருந்த பாடலை நிப்பாட்டி விட்டு, "நீ கனவிலும் நினைவிலும் கதிரொளியாய், ஐ லவ் யூ, ஐ லவ் யூ, ஐ லவ் யூ மம்மி" என்ற மலையாளப் பாட்டு ரிங் டோனாக ஒலிக்க விட, அதை எடுத்தவாறு "அப்ப நா போன் போட்டு சொன்னப்ப நா சொன்னத நம்பாம கட் பண்ணல்ல, இப்ப நானும் நீ சொல்றத கேட்க மாட்டேன் போ" என கட் செய்து விட, "நீ வீட்டுக்கு வாடி" என்றார் கட்டாகிய மொபைலை பார்த்தவாறு.

அவள் அடுத்ததாக சென்றது கிட்சாவிடம், வேகமாய் சென்று அவருக்கு ஈக்குவலாய் அவர் நிற்கும் படியில் ஏறி அவரை இறுக்கிக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் வேறு வைத்தாள். அருகிலிருந்த ராதை முறைப்பதை பெரிதுபடுத்தாமல், "கிட்சா உனக்கு ஒரு ஹாப்பி நியூஸ் சொல்லப்போறேன், சொல்லவா? நான் என் சார்ம்ம பாத்தேன். அதவிட அவர்ட்ட வேலைக்கு சேந்துட்டேன். நம்ப முடியலல, இங்கப் பாரு. போட்டோ கூட எடுத்துட்டு வந்துருக்கேன். ஓ! கிட்சா நா எவ்வளவு சந்தோசமா இருக்கேன்னா, ஏதோ கிடைக்கவே கிடைக்காத ஒரு பொருள் நமக்கு கிடைச்சா எப்படி பீல் பண்ணுவோம், அப்படித்தான் இப்போ நா இருக்கேன். நீ தான இத நடத்தி கொடுத்த, இந்த சாட்டர்டே அதிக நெய், முந்திரி போட்டு கேசரி என் கையால செஞ்சு தாரேன் உனக்கு" என்க. "ஏது உன் கையாலயா" என அவர் ஜெர்க்கான விஷயம் ராதைக்கு மட்டுமே கேட்டது. "தேங்க்ஸ் கிட்சா" என மறுபடியும் அவரை ஒரு முறை கட்டி பிடித்துக் கொண்டு "சாரி ராது" என ராதையின் கன்னத்தையும் கிள்ளி முத்தி விட்டு, தன் வீடு நோக்கி நடையைக் கட்டினாள். வடிவும் அதுவரை நின்று அவள் செய்த கோமாளித் தனத்தை பார்த்து தனது தலையிலடித்துக் கொண்டு மகளை வரவேற்க வாசலை நோக்கி சென்றார்.

வீட்டிற்குள் நுழைந்தவளை வடிவு தீயாய் முறைக்க, அவளோ ஹெட்செட்டை கழட்டியபின்னும் கேட்ட பாடல் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்க, தாயை கவனிக்காமல் நேராக தனதறை சென்று தன்னை சுத்தப் படுத்திக் கொண்டே வந்து டி.வி யை ஆன் செய்து சோபாவில் அமர, அதைப் பிடுங்கி அணைத்த வடிவு, "கொஞ்சமாது என்னைய மதிக்கியாடி, வாசல்ல ஒரு மனுசி நிக்கேன் நீ பாட்டுக்கு போற, வெளில லூசு மாதிரி நடந்து என் மானத்த வாங்காதன்னு எத்தன தடவடி சொல்லுறது. செக்யூரிட்டில ஆரம்பிச்சு எதித்த வீட்டு ராஜி வர இளக்காரமா பாத்து சிரிக்காங்க. மரியாதையா இருக்குற உன் அப்பா, அக்காங்க மரியாதையும் சேத்துக் கெடுக்குறடி நீ, உனக்கு இது எப்ப தான் புரியும்". "ம்மா, இதுக்கு பதிலும் பலதடவ நா சொல்லிட்டேன், அது உன் உள் மனசு பயம். எல்லோரும் நம்ம புள்ளைய கேவலமா பாப்பாங்களேன்னு உன் பயம். மோர் ஓவர் அவங்க அப்படி உண்மையாவே நெனைச்சாக்கூட எனக்கு பிரச்சனையில்ல, நானும் சந்தோசமா இருக்கணும் என்ன சுத்தி இருக்குறவங்களும் சந்தோசமா இருக்கணும்னு நெனக்குக்குறேன், இத்தன வருஷத்துல அத, அதாவது அவங்க என்ன புரிஞ்சுட்டுருப்பாங்கன்னு சொல்லுறேன். நீ ரொம்ப ஒர்ரி பண்ணிக்காத. நா நல்ல மூட்ல இருக்கேன். அத கெடுக்காம, ஒரு பிரெஷ் ஜூஸ் போட்டு கொண்டு வா" என மறுபடியும் டி.வி யை ஆன் செய்தாள்.

அவருக்கும் அது தெரியும், யாரும் இதுவரை முதுகுக்குப் பின்னால் கூட இந்த புள்ள லூசு மாறி நடக்குதுன்னு பேசி கேட்டதில்ல. வந்த புதிதில், வித்தியாசமாக பார்த்தனர். பின் அவங்களையும் அவள் தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொள்ள புரிந்து கொண்டனர். அவள் இயல்பே அது தான் என்று. இப்பொழுது சகஜமாக கடந்தும் விடுவர். இப்பொழுதும் அவள், கிட்சாவிடம் கொஞ்சி விட்டு வருவதை மொத்த பிளாக்கிலும் வீட்டிற்கு ஒருவர்னாலும் கவனித்திருப்பர். ஆனால் யாரும் கண்டு கொள்ள வில்லை. அதுவே அவருக்கு ஓரளவு ஆறுதல் தந்தது. பெண் பிள்ளையை பெற்று வைத்திருப்பதால் பேர் கெட்டு விடக் கூடாது என ஒரு தாயாய் அவர் பயந்தார். எல்லாவற்றையும் யோசித்து பின் ஓரளவு தெளிவு வரவும் எழுந்து சென்று மகள் கேட்ட ஜூஸ்ஸிற்காக சாத்துக்குடியை பிழிந்து எடுத்து வந்தார்.

அவளிடம் அதை நீட்டிவிட்டு "யாரந்த பாவப்பட்ட ஜீவன்?" என அவள் அருகில் அமர, ஜூஸ் குடித்த நுரை மீசையோடு "யாரு" என்றாள். "அதான்டி உனக்கு வேலைய குடுத்து தான் தலையில மண்ணவாறி போட்டுக்கிட்ட ஜீவன்" என்றார் வடிவு. "ம்மா" என முறைத்தாலும், தன் முதலாளியை நினைத்ததும் தன்னைப்போல் ஒரு சிரிப்பு, முகத்தில் ஒரு பிரகாசம் வந்து விட்டிருந்தது. "என்னடி ஒரு தினுசா சிரிக்குற, இன்டெர்வியூ போன இடத்துல ஏதாவது பஞ்சாயத்த இழுத்துட்டு வந்துட்டியா?" என அவர் படபடப்பாக. "அதெல்லாம் இல்லம்மா, நாளையிலயிருந்து உன் மக யாரு? அவ போஸ்டிங் என்னன்னு தெரியுமா?” "ஏன் ஒரு நாள் முதல்வர் மாறி நீ ஒரே நாள் முதல்வர் ஆயிட்டியா என்ன?", "உனக்கு நக்கல் கூடிப் போச்சும்மா". "யே வளவளன்னு பேசாம சொல்லுடி, வேலைத் தேடி வருதுன்னு கம்பெனி பேரு கூட தெரியாம தான போன. போன வேலை என்னாச்சு?” "எனக்கு வேலை இல்லாம போகுமா? இந்த பாப்புக்குட்டி ட்ரை பண்ணி அது கிடைக்காம போறதாவது. தி கிரேட் ஸ்மைலிங் சார்ம், இரணிய ஹர்பனோட மேனேஜர், மிஸ். தாட்சியாயினி தான் தெரிஞ்சுக்கோ" என்றாள் பெருமையாக.

"ஹீரோவோட வேலையா? " என்றார் முகத்தை அஷ்ட கோணலாக்கி. "ஓ மூஞ்சி ஏன் அப்டி போது?” "ஏய் நம்ம குடும்பத்துக்கும் ஒன் குணத்துக்கும் எது சரிப்பட்டு வருமோ அதத்தான் பண்ணனும். கூறு கெட்டாக்குல. அவர ஒரு நடிகரா புடிக்குங்கறத மட்டும் மனசுல வச்சு லூசு கணக்கா ஏதாவது செய்யாத" இப்பொழுது காட்டமாக சொல்ல. "நீ அவ்வளவு லேசா நினைக்குற அளவுக்கு நா ஒன்னும் விவரம் இல்லாதவ இல்ல. உன்ன மாறி தெருல வந்து வீட்டில் மகாலட்சுமி உன் ரூபத்துல குடி இருக்காமன்னு சொன்ன உடனே 500 ரூபாய் நோட்ட தூக்கி கொடுத்துட்டு வருவியே, நா அவ்வளவு லூசு இல்ல ஓகே. மூணு மாசம் டெம்பரவரி தான், வேலை புடிச்சா கண்டினியூ பண்ணலாம் இல்ல எக்சிட் ஆகிக்கலாம். நாளைக்கு நான் ஜாயின் பண்ண தான் போறேன். ப்ளீஸ்மா நீயும் கன்ப்ஃயூஸ் ஆகி என்னயும் கன்ப்ஃயூஸ் பண்ணாத" என அவ்வளவு நேரமும் மியூட்டில் இருந்த டீவியை மொத்தமாக அணைத்து விட்டு சென்று, தனது அறையில் அடங்கி விட்டாள்.

வடிவு தான் மனசு கேளாமல் மற்ற மூவருக்கும் விஷயத்தை சொல்ல, மூவருமே சொல்லி வைத்தார் போல் "பரவாயில்லம்மா அவ தான் பாத்துகிறேன் சொல்றாள்ள, அப்படியே இல்லனாலும் நாங்க எதுக்கு இருக்கோம் பாத்துக்கலாம்" என்று விட்டனர். வேதிகா மட்டுமே அன்றைய கோவில் நிகழ்வு, நிச்சயத்திலும் அரவிந்தின் பிரண்டாக அவன், இரணியனின் முன்னால் மேனேஜர், இப்போது இவளுக்கும் அங்கேயே வேலை என கனெக்ட் செய்தவள், விஷாகனுக்கே அடுத்த நிமிடம் போன் செய்திருந்தாள். அவன் "சொல்லுங்க மேடம்" என்க. "இன்னும் நீங்க அந்த கோவில் இன்ஸிடன்ட் மறக்கலையா?", "உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லாததால் அப்படி கேட்கிறீங்கன்னு நினைக்கிறேன், என்னால உங்க சிஸ்டருக்கு எந்த கெட்டதும் நடக்காது, இட்ஸ் எ ப்ரொமிஸ்" என்றான் டைரக்டாகவே. "தேங்க்ஸ்" என சுருக்கமாக பேசி வைத்து விட்டாலும், அவன் மீது ஒரு கண் வைக்க வேண்டும் என மறுபடியும் தீர்க்கமாக முடிவெடுத்தாள்.

 
இரணியன் பாப்புக்குட்டியிடம் விடை பெற்று சென்று காரில் ஏறிய பின்னும் அவள் குரல் அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பது போல் தோன்றியது, அவளை ஒரு ரசிகையாக மட்டுமே பார்த்தான், அதீத அன்பை வெளிப்படுத்தும் பல ரசிகர்களை கடந்து வந்திருந்ததால் அவளின் நிலை புரிந்தது, மற்றவர்களிடம் இல்லாத ஒன்று என்றால், ஒரு நெருக்கமான பீல், அவள் பேச்சு ஓவரா இருப்பது போலவோ, நடிக்கிறா, வலியுறா, என்றோ தோன்றவே இல்லை. இன்னமும் அவள் குரல் அவன் அருகில் நின்று பேசிக் கொண்டிருப்பது போலவே தோன்றியது. கண்ணை மூடி தலையை சீட்டில் சாய்த்துக்கொண்டு தன்னை அமைதிபடுத்தியவன் "ரகு சாங்ஸ் போடு" என்றான் டிரைவரிடம். அவனின் பிடித்தமான மெலடி பாடல்கள் ஒலிக்க விட்டார் ரகு.

அதே நேரம் விஷாகன் போன் செய்ய "சொல்லு விஷா" என அட்டன் செய்ய, "பாப்புக்குட்டி ஓகேவா சார்" என்க, "அவங்க பெட் நேம் சொல்லி கூப்பிடற அளவுக்கு நீங்க ரெண்டு பேரும் க்ளோசா?" என்றான் இரணியன். 'நா மட்டுமா கூப்பிடுறேன் ஊரே அப்படித்தான் கூப்பிடுது' என முனங்கியவன் "இல்ல சார் அவங்க அப்படித்தான் இன்ட்ரோ ஆகிக்கிட்டாங்க அதான்" அவன் இழுக்க, "எனக்கும் இப்ப வேற ஆப்ஷன் இல்ல, சோ டெம்ப்ரவரி இருக்கட்டுமே, அப்புறமா டிசைட் பண்ணிக்கலாம்" என்க, "ஓகே சார் ரொம்ப நல்ல பொண்ணு தான் சார், சட்டுனு கோபம் வரும், தப்புனா இடம், பொருள் பாக்காம தட்டி கேட்டுருவாங்க மத்தபடி ரொம்ப கூல், ஒன் வீக் டீப் வாட்ச் பண்ணிட்டுதான், உங்களுக்கு இவங்கதான் செட்டாவாங்கன்னு முடிவு பண்ணேன், ஆனா அவங்க வந்தபுரமும் எப்ப என்ன வேணும்னாலும் நீங்க எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும் சார் நா அடுத்த செகண்ட் உங்க முன்னாடி நிப்பேன். அவுட் ஸ்டேஷன் போகும்போது நானும் வரேன் சார் கொஞ்ச நாள்ல அவங்க பழகுற வரைக்கும்னாலும் வரேன் சார் ப்ளீஸ். தென் அரக்கன் ஃபுல்லா முடிச்சுப் ப்ரீவியூக்கு ரெடி ஆகிட்டு சார் நீங்க மட்டும் கன்ஃபார்ம் பண்ணனும், ரிலீஸ் டேட் பிக்ஸ் பண்ணிடலாம்னு ப்ரொடியூசர் கேட்டார். அடுத்த ப்ராஜக்ட் நேசமிகு நெஞ்சம் ஸ்டார்ட் பண்ண 10 டேஸ் இருக்கு சார் அதுக்குள்ள ப்ரீவியூ வச்சுக்கலாம்னு சொல்லிருந்தீங்க" என அவன் பேசிக்கொண்டே போக, "விஷா எனக்கும் எல்லாம் ஞாபகம் இருக்கு ஐ வில் டேக் கேர் ஆப் இட், யு என்ஜோய்ட் யுவர் ஹாலிடே" என்றுவிட்டு போனை வைத்தான்.

விஷா ஆள் தான் அங்க இருக்கான்னே தவிர நினப்பெல்லாம் இரணியனையும் பாப்புக்குட்டியையும் சுற்றியே இருந்தது. அவன் மனைவி ஹனிமூன் வந்த இடத்தில் போன் கூட மட்டுமே குடும்பம் நடத்துபவனிடம் முடிந்த அளவு மல்லுக்கட்டி விட்டு அதற்கு மேல் முடியாமல் ஊரை சுற்ற தனியே கிளம்பி சென்றிருந்தாள். அவன் வாக்கப்பட்ட வீட்டின் ஸ்டேட்டஸ் மரியாதை பேச்சுற்காக கிளம்பி வந்திருந்தான். வந்த இடத்திலுமே மேனேஜர் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு இரணியன் மீது அப்படி ஒரு அளவு கடந்த அன்பு. அவனிடம் மேனேஜர் ஆகி எட்டு வருடம் ஆகிறது, ஆனால் இரணியன் வாழ்க்கையில் நுழைந்து பதினைந்து வருடம் கடந்துவிட்டது. இரணியனை பற்றி முழுமையாய் அறிந்த ஒருவன் அவன். அவனது பத்து வயதில் அவன், அம்மா, அப்பா மூவரும் காரில் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட்லிருந்து சட்டையை மாட்டிக்கொண்டு அரண்டு போய் ஓடி வந்த இரணியன் இவர்களின் காரின் குருக்கே வந்து, காரை பார்த்து மேலும் பயந்து பதறி மயங்கி விழுந்துவிட, ஸ்பீடாக வந்து கொண்டிருந்த காரை கண்ட்ரோல் செய்ய முடியாமல் எதிரில் வந்த லாரியில் சென்று மோதி விட, அன்று தன்னால் அனாதையாக்கப்பட்ட விஷாகனை இன்று வரை உடன் இறுத்தி வைத்துப் பார்த்துக் கொள்கிறான். இரணியனுக்கு பிடிக்காம செய்த ஒரு விஷயம் என்றால் அது பௌவியாவை கல்யாணம் செய்ததது தான். ஆனால் அதையும் அவன் அவனுக்காகவே செய்தான். இவ்வாறு அவன் சிந்தனையில் இருக்க.

அவன் மெசஞ்சரில் கால்வந்து வைபிரைட் ஆகியது. "என்ன பாப்பு இப்பதான் கட் பண்ணீங்க அதுக்குள்ள திரும்ப கூப்பிட்டீங்க", "உங்க போன் நம்பர் குடுங்க, எப்பவும் எஃப்.பி போகவேண்டியதா இருக்கு". "போன் நம்பர் தரேன் ஆனா ஒரு கண்டிஷன் இருக்கு", "நீ ஒன்னும் தர வேணாம் போ. அப்டி ஒன்னும் அவசியமில்ல" "உடனே டென்சன் ஆகாதீங்க மேடம், இந்த செகண்ட்ல இருந்து நாம ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் டீல் ஓகேயா?", "என்னோட சார்ம் கிட்ட வேலை கிடைக்கக் காரணமாயிருந்திருக்கீங்க, சோ ஓகே" என அவளும் உடனே ஒத்துக்கொள்ள. "அப்ப இந்த நீங்க வாங்க போங்கல்லாம் ரெண்டு பேரும் விட்ரலாமே, இன்னும் கொஞ்சம் க்ளோசா ஆயிடலாம்ல" எனக் கேக்க "ஆமா எனக்கும் கம்போர்ட்டா இல்ல, ஆமா உன் ஏஜ் என்ன?" என்றாள் சேர்த்து. "25", "எனக்கு 24, நியர்பை தான், சோ கூப்பிட்டுக்கோ" பெருந்தன்மையாய் சொல்ல, "அட ஆண்டவா எனக்கு இது தேவ தான்" என்ற விஷா, "நா தான் இதுக்கு முன்ன சாருக்கு மேனேஜர், அதனால என்ன டவுட் வேணாலும் என்ட்ட கேட்டுக்கலாம்". "நீ ஏன் வேலய விட்ட?", "அது பெரிய கத இங்கதானே வரப்போற, போகப்போக தெரிஞ்சுகலாம்"."சரி அப்ப நாளைக்கு சார்ம் வீட்டுக்கு வந்தா செக்யூரிட்டி உள்ள விடனுமே என்ன சொல்லட்டும்?” "அத நான் போன் பண்ணி சொல்லிடறேன்". "டீல் பை" "பை" என வைத்தவன் கையோட தன் நம்பரயும், தலைவன் நம்பரயும் சேர்த்து அனுப்பி விட்டான்.

விஷா நம்பர் வரவுமே அதை ஓபன் செய்து சேவ் செய்து கொள்ளலாம் என பார்த்தவள் கண்கள் அகல விரிந்தது "ஓ மை காட், ஓ மை காட் சார்ம் போன் நம்பர், அதும் என் போன்ல, ஐயோ என்னால நம்பவே முடிலயே" என்றுவிட்டு, 'எப்படி சேவ் பண்ணலாம், என்ன ரிங்க்டோன் வைக்கலாம்' என்ற யோசனைக்கு சென்று விட்டிருந்தாள். இறுதியாக "மை சார்ம்" என்றே சேவ் பண்ணினாள், எவ்வளவு யோசித்தும் அதைத் தவிர வேறு எதுவுமே அவளுக்கு திருப்தியாக இல்லை. 1000 போட்டோக்கள் அவனோடது அவளிடமிருந்தும் அன்று காலையில் அவனுடன் எடுத்த செல்பி போட்டோவையே காலர் போட்டோவாக வைத்தாள். பின் "ஏனோ இரவோடு ஒளியாய் கூடும் ஒளி ஒன்று கேட்கிறேன்" பாட்டை ரிங்க்டோனாக செட் செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் அவன் நம்பரை எடுத்து "ஹாய்" என்ன டைப் செய்ய, பின் வேண்டாம் என டெலிட் செய்ய என இப்படியே எழுதுவதும் அழிப்பதுமாக, அவள் அக்காவும், அப்பாவும் இரவு வீடு வரும்வரை கழித்து விட்டாள்.

எல்லோரும் வரவும் வடிவு மறுபடியும் பஞ்சாயத்தை ஆரம்பிக்க, "பார் பாப்பு அம்மா பயப்படுறது நியாயம் தான, நீயும் எப்ப எப்படி நடந்துக்குவன்னு, யாராலும் புரிஞ்சுக்க முடியாது, அதனால தான் பயப்படறா, இந்த வேலைக்கு வெளி இடத்துலல்லா போய் தங்க வேண்டியிருக்கும்" என அவர் இழுக்க, "நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டன்னு, டைரக்டா சொல்லுங்கப்பா. உண்ம அதானே" என சுஹாசினி முடித்து வைக்க.

முறைத்த பாப்பு "உனக்கு பொறாமடி நீ இத்தன வருஷம் வேல பாத்து வாங்குன சம்பளத்த நா ஒரே மாசத்துல வாங்கிட போறேன்னு பயம்". "ஆமா ஆமா, வாம்மா பாப்புக்குட்டி உனக்கு சம்பளம் கொடுக்கத் தான் நான் படமா நடிக்கிறேன்னு உன் தலைவர் சொன்னாராக்கும், ஒரு நாள் கூட உன்ன வேலையில வச்சுக்க முடியாம வெரட்டி விடலனா பாரு" என்க. "அப்படியே விரட்டினாலும், அக்கா சோறு போடுக்கான்ட்டு உன்கிட்ட வந்து நிக்க மாட்டேன்டி வெள்ளை பாச்ச", "நீ வந்தாலும் அம்மா மாறி உனக்கு சோறு போட மாட்டேண்டி", "இங்க எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிட்டுருக்கோம் ரெண்டு பேரும் என்னடி? நக்கலா பண்ணிட்ருக்கீங்க" என்றார் வடிவு. "உனக்கு நான் அப்பவே எக்ஸ்பிளைன் பண்ணிட்டேன்ம்மா, 3 மந்த்ஸ் அவரே டைம் கொடுத்திருக்கிறார் பாத்துக்கலாம்" என்றாள் பாப்பு, அதற்கு மேல் ஆர்க்யூ பண்ண விருப்பம் இல்லாமல். "அவ தான் இவ்வளவு தெளிவாக சொல்றாளே பின்ன என்ன கவலைய விடு" என்றார் மெய்யப்பன். வேதிகாவும் கண்ணால் செய்கை காட்ட பின்பே கொஞ்சம் சமாதானமானார் வடிவு.

இரவு படுக்கைக்கு திரும்பியதும் மறுபடியும் ஆரம்பித்தாள் பாப்புக்குட்டி 'என்ன அனுப்பலாம்? குட்நைட் போடுவோமா? ரிப்ளை அனுப்ப மாட்டாரே, அவர் ரிப்ளை அனுப்புற மாதிரி ஏதாவது அனுப்பனுமே, என்ன அனுப்பலாம்' என யோசித்தாள். அங்கு அப்பொழுது தான் தனது அறைக்குள் நுழைந்து மொபைலை கட்டிலில் போட்டுவிட்டு பாத்ரூம் நோக்கி சென்றான் இரணியன். இவன் வெளிவர கதவு தட்டப்பட யாரென்று சென்று பாக்க, அவன் அப்பா பால் டம்ளருடன் நிற்க "தேங்க்ஸ் பா" என வாங்கி கொண்டான். "குட் நைட் பா" என அவரும் இறங்கி விட்டார்.

ஒருவேளை இவன் "ஏன்ப்பா கஸ்ட்ட பட்டு மேல ஏறி வாறீங்க யார்ட்டயாது கொடுத்து அனுப்பி இருக்கலாமே" என கேட்டிருந்தால், அவரும் "உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசலாம்ன்னு தான் வந்தேன்" என்று சொல்லியிருப்பாரோ. ஆனால் இவனோ அப்படி சொல்லி விடுவாரோ என்று எண்ணியே ‘தேங்க்ஸ்’ என்று சொல்லி அனுப்பிவிட்டான். பாலை வாங்கி வந்து டேப்பிலில் வைக்கவும் போனில் மெசேஜ் டோன் கேட்கவும் சரியாக இருந்தது. அப்பயும் அவன் அதை கண்டுகொள்ளாமல் உடைமாற்ற சென்றுவிட.

பாப்புக்குட்டி தான் முடிவுக்கு வந்தவளாய் "ஹாய்" என அனுப்பிவிட்டுருந்தால், செல்ஃபி எடுத்த புகைப்படத்தையும் சேர்த்து அனுப்பினாள். அதன் கீழ் "யார்ன்னு யோசிக்கக்கூடாதுல்ல அதுக்கு தான்" என அனுப்பிவிட்டு, "நல்லா இருக்குல்ல? உங்க கிட்ட நிக்கும் போது நான் கொஞ்சம் கலர் கம்மியாதான் தெரிறேன், பரவால்ல. அப்புறம் சாப்பிட்டீங்களா? இங்க பூரியும், கிழங்கும், வடிவு சூப்பரா பண்ணிருந்தாங்களா, 8 பூரி சாப்ட்டேன். நீங்க என்ன சாப்பிட்டீங்க" இப்படி அவள் போக்கில் அடுத்தடுத்து டீன் டீன் சவுண்டுடன் மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருக்க. டி-ஷர்ட்டும், ஷார்ட்சுமாய் வந்து ஏசியை ஆன் செய்தவன், ஏதாவது அன்வாண்ட்டட் மெஸேஜஸா தான் இருக்கும் என எண்ணிக்கொண்டே தான் ஓபன் செய்தான். அடுத்தடுத்து வந்த மெசேஜை பார்த்தவனுக்கு "என்ன இது ஒரு டிசிபிளின் இல்லாம" என்று தோன்ற, "டோன்ட் ஆக்ட் லைக் ஓவர் ஸ்மர்ட், பிகேவ் யூர்செல்ப்" என அனுப்பிவிட்டு பாலை அருந்தி சென்று படுத்தான்.

அவளோ அதை கண்டுவிட்டு அடுத்ததாக வாய்ஸ் நோடிற்கு தாவி இருந்தாள். "நா என்ன சார்ம் ஒழுங்கா பிஹேவ் பண்ணல? சாப்டீங்களா? நான் சாபிட்டேன்னு சொன்னதுல நீங்க என்ன ஸ்மார்ட்னச கண்டீங்க? ஓ! நானா வந்து மெசேஜ் அனுப்பினதனாலயா? நீங்க என்னோட சார்ம்ன்றதால மட்டுமே அனுப்பினேன். உங்களை ரொம்பப் பிடிக்கும், உங்க நம்பர் கிடைச்சதும் கையும் காலும் சும்மா இல்ல. அதுக்காக பிகேவ் யூர்செல்ஃப்ன்னு சொல்வீங்களா? ஆளும், மண்டையும் ஹீரோனா என்ன வேணும்னாலும் சொல்வீங்களா? யூ ட்ரை டு பிகேவ் யூர்செல்ப் ஃபஸ்ட்" என 10 வாய்ஸ் நோட் அனுப்பிவிட்டு, ஒரு பக்கத்துக்கு வாய் கோணிட்ருக்கும் ஸ்மைலி வேறு அனுப்பி வைத்தாள். "உன்ன நான் வேலைக்கு எடுக்கலன்னா என்ன பண்ணுவ" ௭ன்றான். "மனசுல பட்டத பேசுனதுக்காக வேலையை விட்டு தூக்குவீங்கன்னா பரவால்ல, அப்படியாப்பட்ட வேல எனக்கும் வேணாம்" ௭ன்றாள். "ரொம்ப பேசுற நீ" அவன் கடுப்பாகி பதில் அனுப்ப, "உண்மைய உரக்கத் தான் பேசுவா இந்த பாப்புக்குட்டி". "சரியான லூசு" என அவன் அனுப்ப. "நா ஒன்னு லூசில்ல, என்ன பேசன்னு தெரியாம பேசுற நீங்க தான் லூசு" அனுப்பிய விட்டாள் நம் ஆர்வக் கோளாறு பாப்புக்குட்டி.
 
அத்தியாயம் 8
இரணியனை திட்டிவிட்டு தான் லூசுன்னு திட்டியது சரியே என்பது போல் படுத்துறங்கிவிட்டாள் பாப்பு.

இரணியன் அவள் மெசேஜைக் கண்டு டென்ஷனாகி 'இடியட்' என திட்டி, மறு நிமிடம் கால் செய்திருந்தான் விஷாகனுக்கு, ஒரே ரிங்கில் போனை எடுத்த விஷாகன், "சொல்லுங்க சார்" என்க. "என்ன மேனேஜர் செலெக்ட் பண்ணிருக்க விஷா நீ? இதுக்குத்தான் இந்த பொண்ணுங்களே வேணாம்னு சொன்னேன். ஓவர் ரியாக்ட் பண்ணி இரிடேட் பண்ணுவாங்க" என்க. "என்னாச்சு சார், ஏன் இவ்வளவு டென்ஷன்" என வாய் கேட்டாலும், மனதில், "இந்த பாப்பு நாளைக்கு தான ஜாயின் பண்றேன்னு சொன்னாங்க, அதுக்குள்ள அவங்க வைப்ரேஷன் வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சோ?" என நினைக்க.

"கொஞ்சம் கூட மேனரிசம், ரெஸ்பெக்ட் இல்ல அந்த பொண்ணு பேச்சுல, வந்து ஜாயின் பண்ண முன்னயே இவ்வளவு ஆட்டிடுயூட் ஆகாது விஷா". "சார் ரிலாக்ஸ், பாப்பு கொஞ்சம் ஆர்வக்கோளாறுனாலும் வேலைல கெட்டி சார் அந்த பொண்ணு. நமக்கு வேலை நடந்தா போதுமேன்னு.." அவன் இழுத்து நிறுத்த. "நீயும் இடியட் மாதிரி பேசாத விஷா" இரணியன் கத்த.

'ஆத்தி நம்பர் அனுப்புனது ஒரு குத்தமா, அம்மாடி பாப்பு உனக்கு நல்லது பண்ண போய் உன்னால முடிஞ்சத செஞ்சிட்ட' என நினைத்துக் கொண்டு, "இல்ல சார், ஒரு ஃபோன் கால்ல ஒருத்தரோட இமேஜ்/கேரக்டர் ஜஸ்டிஃபை பண்ண வேணாமேன்னு.." விஷா மறுபடியும் இழுக்க, "அந்தப் பொண்ணு இப்படியே பிஹேவ் பண்ணிட்டுருந்தா, எனக்கு என் வேலையில நா கான்சன்ட்ரேட் பண்ண கஷ்டமாயிடும்". "நோ சார், நோ சார் அவ்வளவு தூரம்லா நீங்க யோசிக்க வேணா, நா பேசுறேன் பாப்புக்கிட்ட". "என்னவோ செய்" என வைத்து விட்டான். 'ஹப்பா, அப்டி என்ன சொல்லி இவர டென்ஷனாக்கியிருப்பாங்க இந்த பாப்பு' என யோசித்தவாறு அவளுக்கு கால் செய்ய தூக்கத்தோடு யாரென பார்க்காமலே எடுத்தவள் "கண்ட நேரத்துல ௭வன்டா அது பரதேசி" என சொல்லிவிட்டு விட்ட தூக்கத்தை தொடர. 'சுத்தம் பாஸ்ஸையும் இப்படித்தான் திட்டியிருப்பாங்க போலயிருக்கு, அதான் காண்டாகிட்டாரா இருக்கும். சரி காலைல பேசிக்கலாம்' என முடிவெடுத்து தானும் படுக்கச் சென்றான்.

நைட்டு ஒரு முதலாளிய, அதுவும் வேலைக்கு சேரும் முன்னையே வாய்க்கு வந்தத பேசிருக்கோம்ன்ற கூச்ச நாச்சமே இல்லாம வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் பாப்புக்குட்டி, அதுவும் அநியாயமாய் 5 மணிக்கே கிளம்பி வந்து டைனிங் டேபிளில் அமர்ந்துகொண்டு, "ம்மா உனக்கு பொறுப்பே இல்லம்மா. மொத நாள் புள்ள வேலைக்கு போகுதே லேட் பண்ணிடக்கூடாதுன்றது இல்லாம இப்டி ஸ்லோ மோஷன்ல ௭ல்லாத்தயும் செய்ற, இந்நேரம் சாப்பாடு ரெடியா டேபிள் மேல இருக்க வேணாமா. எனக்கு இப்படி ஒரு சோம்பேறி அம்மா" என அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டே இருக்க, கோபத்தோடு வெளியில் வந்த வடிவு, கையில் வைத்திருந்த தோசை கரண்டியால் அவள் தலையில் நங்கென்று தட்டி, "பேசாம உட்கார்ந்தன்னா தோசையாது ஊத்தி தருவேன், இல்ல பட்னியா போக வேண்டியிருக்கும்" என்க. "சரி சரி சுடு போ, சட்னில நிறைய வெங்காயம் போட்டு தாளிச்சுக் கொட்டு சரியா" என்றாள் சேர்த்து.

அவர்கள் பேச்சை கேட்டு சிரித்துக்கொண்டே ஹாலில் வந்தமர்ந்த வேதிகா ஷூவை மாட்டி கொண்டு, "விளையாட்டா இருந்ததெல்லாம் போதும், அங்க வேலைக்குன்னு போற, சோ கொஞ்சம் கவனமா இருக்கணும். மோஸ்ட் இம்பார்டன்ட், போனமா உன் வேலைய மட்டும் பாத்தமான்னு வரணும். வேற எதுவும் பிரச்சனைல வாலண்டீயரா போய் மாட்டிக்க கூடாது" என சொல்லிக் கொண்டிருக்க, ப்ரஷ் பண்ணி கொண்டு வந்த சுஹாசினி, "அதான்னக்கா கஷ்டம், நம்ம மேடம்க்கு தான் தப்பத் தட்டிக் கேக்காட்டி சோறு இறங்காதே. அவ உள்ள போய் மாட்டிக்கிட்டு நம்ம உசுரையும் சேத்து வாங்கினாதானே நிம்மதி" என்க, "சாப்ட உக்காந்திருக்கைல நாற வாய கொண்டுவந்து காமிச்சுகிட்டு, பே தூர, கப்பு தாங்கல, ௭ன்னமோ என்னைய பொழுதன்னைக்கும் ஜாமின்ல எடுக்கிற மாறி, இன்னைக்கு வர உன்ட்ட வந்த ஒரு கேஷ்னாலும் ஜெயிச்சு கொடுத்திருப்பியாடி. அப்படியே நீ ஒன்னு ரெண்டு தப்பி தவறி ஜெயிச்சாலும் அதுல அப்பாவோட இன்வால்வ்மெண்ட் இருக்கும். வீட்டுல என்ட்ட பேசுற வாய அங்க கொஞ்சம் பேசுன்னு சொன்னா கேளுடி வெள்ள பாச்சா, சொல்லிச் சொல்லி எனக்குத்தான் வாய் வலிக்கு". "உன்டெல்லாம் மனுஷி பேசுவாளாடி". "பேச முடியலல போ போய் வாய கழுவு".

"பாப்பு நா சொன்னது உன் மைண்ட்ல ஏறுச்சா? இல்லயா?" நடுவில் வேதிகா கேட்க. "அக்கா எப்பயும் சொல்றதுதான், நானா எந்த பிரச்சனைக்கும் போக மாட்டேன், என்ன தேடி வர பிரச்சனைய ஒரு கை பாக்காம விட மாட்டேன்". "நானும் ஓ கால உடச்சு அடுப்புல வைக்காம விடமாட்டேன்டி, அப்றம் வெளியிலேயே நீ போ வேணா, பிரச்சனையும் உன்ன தேடி வராது. எப்டி வசதி" வடிவு கேக்க. "அவ கூட சேந்து நீயும் நல்லா கவுண்டர் குடுக்க ஆரம்பிச்சுட்டம்மா, பேசாம அவ கோர்ட்ட வாங்கி நீ மாட்டிக்க" சுஹாவை காமித்து சொல்லிவிட்டு "என் கால உடைச்சு போட்டா கடைசிவர நீதான் எனக்கு சோறு போட வேண்டியிருக்கும். ஒரு பைய கழுத்த நீட்ட மாட்டான்" ௭ன்றாள் சேர்த்து.

"இவ பண்ற சேட்டைக்கு சாத்து சாத்துன்னு சாத்துற மாதிரி, இவள அடக்கிக் கொண்டு போற ஒரு பையனா பாத்து கட்டிக் குடுமா, டெய்லி நாலு மிதி மிதிச்சா ஆட்டோமேட்டிக்கா திருந்திடுவா" சுஹாசினி சொல்ல.

"பார்ரா அதுக்கு இனிதான் எவனாவது பொறந்து வரணும்" என்றவாறு தோசையை வாயில் அடைத்தாள் பாப்புக்குட்டி, அங்கு ஒருவன் விடாமல் தும்மிக் கொண்டிருப்பது தெரியாமல்.

பின் "சரி நா கிளம்புறேன்" என எல்லோரிடமும் ஆல் த பெஸ்ட் பெற்றுக் கொண்டு கிளம்பினாள். எதிரில் வந்த அனைவரிடமும் "நா வேலைக்கு போயிட்டு வாரேன், திரும்பி வார வர கவனமாக இருங்க. நா அபார்ட்மெண்ட்ல இல்லன்னு தெரிஞ்சா, தப்பு ஈஸியா நடக்கும், அதனால கவனமா இருங்க" போன்ற அறிவுரைகளோடு ஒரு வழியா கிச்சாவிடம் வந்து ராதையையும் வெறுப்பேற்றி விட்டுவிட்டு 'பை' சொல்லி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.

முதல் நாள் பாப்புக்குட்டியின் பேச்சால் விஷாகனை கடித்து விட்டு படுத்தவனும் அடுத்து வந்த நிமிடங்களில், அடுத்த கதைக்கான ஸ்கிரிப்ட் பேப்பரை ரீட் செய்தான். வலைதளங்களை நோட்டம் விட்டான், பின் படுக்கச் செல்கையில் பாப்புக்குட்டியின் செயல் ஞாபகம் வர, இப்போது மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸாகி இருந்ததால் யோசித்துப் பார்த்தான், "மிஸ்.தாட்ஷா கஷூவலா தான் கேட்ருப்பாங்களோ!. சரி இனி எப்டி பிஹேவ் பண்றான்னு பாத்துட்டு முடிவு பண்ணிக்கலாம்" என முடிவெடுத்துக் கொண்டான்.

மறுநாள் எப்பொழுதும்போல் ௭ர்லி மார்னிங் ஜாக்கிங், எக்சசைஸ், பிரேக் பாஸ்ட் முடித்து இவன் கிளம்ப, வெளி கேட்டில் நம் பாப்புக்குட்டி ஸ்கூட்டியில் அமர்ந்தவாறு அரட்டையில் நிற்க, இவனும் 'தன்னை கண்டதும் முதல் நாள் பேசியதற்காக என்ன ரியாக்ட் செய்றான்னு பாப்போம்' என நிலையில் சாய்ந்து அவளை பார்த்தவாறு நின்று விட்டான்.

பாப்புக்குட்டியோ இரணியன் வீட்டை கண்டுபிடித்து வந்து வாட்ச்மேனிடம் உள்ள போக விசாரிக்க, அவரோ இவளை கண்டதும் "விஷாகன் சார் சொன்னாங்க மேடம்" என கதவைத் திறந்து விட, "அது எப்டி நா தான்னு தெரியும், இப்படிலா அசால்டா யாரனாலும் விடக்கூடாது புரியுதா? அவர் நம்பர் மாறி டூப்ளிகேட் எடுத்துவச்சுட்டு வேற யாராவது பேசி வீட்டுக்குள்ள நுழைஞ்சா என்ன பண்ணுவீங்க அங்கிள்? இனி இப்டி பண்ணாதிங்க, ஏன்னா உலகம் ரெம்ப கெட்டுப்போச்சு, ஏமாத்தறவுங்க அதிகமாயிட்டாங்க, படிச்சவுங்களே கிரிமினல்லா மாறிட்டு வர்ர நிலம". "இப்போ உங்கள உள்ள விடட்டுமா? வேணாமா மேடம்?” "என்ன மாதிரி எல்லோரும் நல்லவங்களா இருக்க மாட்டாங்க சரியா? அதனால விசாரிச்சு சரியான ஆளுதான்னு தெரிஞ்சுதான் உள்ள விடணும் புரியுதா? நா மேனேஜரா ஜாயின் பண்ண அப்புறம் இப்டி ஒரு தப்பு வந்துரக் கூடாதுன்னு தான் இப்பவே சொல்றேன்" ௭ன்றாள் பெருமையாக.

சிரித்தவர், கார்டுலெஸ் எடுத்து வந்து அதில் இருந்த டிஜிட்டல் டிஸ்ப்ளேவை காமித்தார். அதில் அவள் ஃபோட்டோ, அவள் வண்டியோடு இருக்க, "நீங்க அலெர்ட்டா இருக்கீங்களான்னு செக் பண்ணேன், வெரிகுட். உங்க நேம் என்ன?” "சதாசிவம்", "ஓகே சதா அங்கிள், நா பாப்பு, நாம அப்புறம் மீட் பண்ணலாம்" என உள்ளே நுழைந்தாள்.

அந்த பாடிகார்டு இருவரும் கார் அருகில் நிற்க, "ஹாய் காவல்ஸ் (பாடி கார்ட் ப்ளுரல்) பைக் எங்க பார்க் பண்ணட்டும்?" "அண்டர் கிரௌண்ட்" என ஒரு வார்த்தையில் திசைகாட்ட, "ஓகே" என அவள் வலது பக்கம் திரும்ப, சாந்திம்மா எதிரில் வந்து கொண்டிருந்தார், "ஹாய் நீங்க இங்க என்ன ரோல் பிளே பண்றீங்க?” அவள் வண்டியோடு திடீரென எதிரில் வந்து நிற்கவுமே பயந்தவர், கேட்கப்பட்ட கேள்வியில் முழிக்க, "நீங்க இந்த வீட்ல யாருன்னு கேட்டேன்", "சமையல் வேல பாக்குறேன்மா, நீங்க யாரு?” "நா பாப்பு, மேனேஜரா ஜாயின் பண்ண வந்துருக்கேன்". "ஓ, விஷா தம்பிக்கு பதிலா வந்துருக்கீகளா?” "ஆஃப்வியஸ்லி", "சரிங்கம்மா, வண்டிய விட்டுட்டு வாங்க, இங்கன தான் இருக்கப் போறீக நாம அப்புறமா பேசலாம்". "சுயர் சாந்திம்மா".

மேலும் டிரைவர்கள், தோட்டத்தில் வேலை செய்பவர்கள், இரணியனை சந்திக்க வந்தவர்கள் என அனைவரிடமும் பேசி விட்டு வர, அனைத்தையும் கவனித்தவாறே பொறுமையை இழந்து கொண்டிருந்தான் இரணியன், "இரெஸ்பான்சிபிள் இடியட்" என அவன் திட்டிக்கொண்டிருக்க, ஒருவழியாக வீட்டு வாயிலை அடைந்தாள். கையில் சாவியை சுழட்டிக் கொண்டு "விரப்பு மீசக்காரா, பத்தாத ஆசைக்காரா, உன்ன நான் கட்டிக்கிறேன் ஊரு முன்னால, அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால" என பாடிக் கொண்டே வீட்டை வேடிக்கை பார்த்தவாறு வர. அவள் பாடியதைக் கேட்டு இரணியனுக்கு என்ன ரியாக்ட் செய்ய என்பது கூட மறந்து போய், புருவத்தை உயர்த்தி தன் நிலைமையை எண்ணி தனக்கே ஆறுதல் சொல்லிக் கொண்டு, பின் அவளை முறைத்து, கையை கட்டியவாறு, அருகில் எதிர்பார்த்து நின்றான். பாடிக்கொண்டே 6 படி ஏற வேண்டிய இடத்தில் இரண்டு படி ஏறிய பின்பே முன்னாடி பார்த்தாள், இரணியன் நிமிர்ந்து வேறு நிற்க அன்னாந்து பார்த்து ஆச்சரியப்பட்டு பின் சிரித்து, "குட்மார்னிங் சார்ம், செமையா இருக்கீங்க" அவன் மேலும் முறைக்க. "என்னாச்சு சார்ம், வெளில கிளம்பிட்டீங்களா? அப்ப ஜாய்னிங் லெட்டர், நா அப்புறமா வாங்கிக்கவா? அப்ப சரி வாங்க கிளம்புவோம்" எனத் திரும்பப் போக.

"ஏய் நில்லு", "சொல்லுங்க சார்ம்" என அவள் மேல் இன்னொரு படியேற, "ஃபஸ்ட் டே ஜாயின் பண்ண வர்றவங்க இப்படித்தான் லேட்டா வருவாங்களா? நேத்து அப்டி பேசினியே ஒரு சாரீ சொல்வோம்ன்ற மேனர்ஸ் இல்ல, வந்தும் அங்கேயும், இங்கேயும் நின்னு பேசி டைம் பாஸ் பண்ணிட்டுருக்க. ஒவ்வொன்னுக்கும் உனக்கு நான் க்ளாஸ் எடுத்துட்டுருக்கணுமா?" அவன் வாழ்க்கையிலேயே அவன் படத்தை தாண்டி பேசின நீளமான டயலாக் இதுவாகத்தான் இருக்கும்.

"எனக்கு ஒர்க்கு டைமிங் உண்டா சார்ம்?” "அவுட் ஸ்டேஷன் அப்ப மட்டும் தான் டைம் கிடையாது, மத்த டைம், மார்னிங் 9.00, யூ ஹேவ் டு ரிப்போர்ட் மிஸ்.தாட்சா". "ஓகே சார்ம், யார்ட்ட ரிப்போர்ட் பண்ணனும்?” "உன் ஹெட் யாரு?", "நீங்க தான்", "அப்போ என்ட்ட தான் ரிப்போர்ட் பண்ணனும்". "பக்கா" என தம்ஸப் காட்டி, "ஆக்சுலி பார்க் பண்ணிட்டு வர டைம் ஆயிடுச்சு, இனி உங்கட்ட ரிப்போர்ட் பண்ணிட்டு போய் மத்தவங்கள மீட் பண்றேன், ஓகே வா சார்ம்". "ஓ காட், நீ என்ன வேணா பண்ணு, எனக்கு என் வேலை நடக்கணும், டேட்ஸ் மெயின்டைன் பண்ணணும், டைரக்டர்ஸ், ப்ரோடுயூசர்ஸ் கரெக்ட்டா ரிசீவ் பண்ணணும், பேமன்ட்ஸ் டிலே இருக்கக்கூடாது, வீட்லயும் ஒர்க்கர்ஸ் மேனேஜ் பண்ணனும், என்னுடைய டேடுடே ஷெட்யூல் பாத்துக்கணும், ௭னக்கு ௭ல்லாத்தயும் ரிமைண்ட் பண்ணணும், இது ௭ல்லாத்துக்கும் நீ ஃபஸ்டு பங்சுவலா இருக்கணும்" என்றான் மூச்சை இழுத்துப் பிடித்து, மகனின் சத்தம் என்றும் இல்லாத அதிசயமாய் இன்று அதிக நேரம் கேக்கிறதே என்று நினைத்து சாப்பிட ஹாலுக்கு வந்த இரணியனின் அம்மா, அப்பா இருவரும் வாசல் நோக்கி விரைந்தனர். அதன் பின்பே இரணியனுக்கு பெண் மேனேஜர் ஜாயின் செய்துவிட்ட விஷயத்தை தெரிந்து கொண்டனர்.

இரணியன் கூறியவற்றை கேட்டுக் கொண்டிருந்தவள், இவர்கள் வரவும், "ஹலோ ஆண்ட்டி, ஹலோ அங்கிள்" என்க. தலையசைத்து ஏற்றுக்கொண்டனர். அவன் அப்பாவோ, "என்னது என் மகனுக்கு கேர்ள் மேனேஜரா?" என்ற திங்கிங்கிள் இருக்க, அம்மாவோ, "இதுதான் நம்ம பொண்ணு பிரண்டா இல்ல, இது வேற யாருமா?" என்ற யோசனையில் இருக்க, அவளுக்கு தலையை மட்டும் அசைத்து ஒதுங்கினர்.

"மிஸ். தாட்சா, கேன் யு கெட் மை பாயிண்ட்?” "சுயர் சார்ம், இனிமே தான பாக்கப் போறீங்க இந்த பாப்புவோட ஆட்டத்த". "வாட்?", "ஒழுங்கா பங்க்சுவலா இருப்பேன்னு சொன்னேன் சார்ம்", "ஓகே, கம்" என்றவாறு முன் இறங்கி நடக்க, மறக்காமல் திரும்பி வீட்டிற்குள் எட்டி "வரேன் ஆண்ட்டி, வரேன் அங்கிள்" ௭ன்றுவிட்டு, அவனை நோக்கி ஓட, அவள் சொல்லிவிட்டு வருவதை கேட்டு ஒரு நொடி நின்றாலும் மேற்கொண்டு ஆராய டைம் இல்லாமல் தொடர்ந்தான், "விஷாட்ட பேசி நெக்ஸ்ட் த்ரீ மந்த்ஸ்க்கான என்னோட ஷெடுல்ஸ் வாங்கிக்கோ". "வாங்கிட்டேன் சார்ம், நேத்தே மெயில் அனுப்பிட்டான்". "விஷாவும் நீயும் க்ளோஸ் பிரண்ட்ஸா?", "ஆமா, சார்ம் நேத்துலயிருந்து", "நேத்துலயிருந்து தான, தென் பிபோர் மீ, கால் ஹிம், வித் ரெஸ்பெக்ட்". "அது கஷ்டம் சார்ம், நானும் அவனும் ப்ரண்ட்டாகிட்டோமா. சோ யார் முன்னாடியும் என் ப்ரண்ட்ட, ப்ரண்டா தான் கூப்பிடுவேன்" என்றாள். "எதையும் ஓகேன்னு கேட்டுக்குற பழக்கம் இல்லையா?" என்றவாறு காரை நெருங்கியவன் திரும்பி அவள் முகத்தை பார்த்து கேட்டு விட்டு ஏற, "அது நீங்க கேக்குற விஷயத்தைப் பொறுத்தது, நான் முன்னையா? பின்னையா?” அவன் புரியாமல் முழிக்க, அவள் காரினுள் காட்ட, பெருமூச்சோடு முன் சீட்டைக் காட்டி விட்டு வேறுபக்கம் பார்க்க திரும்பி கொண்டான்.

அப்போது தான் அவனது குடிலில் ஆள் இருப்பதைக் கண்டு, "ரகு, ஜான்க்கு கால் பண்ணுங்க, அங்க யார் வெயிட் பண்றாங்க? எனக்கு ஏன் இன்பாஃர்ம் பண்ணல?" என்றான். ரகு, ஜான் (ஹோம் சூப்பர் வைஸர்) கால் செய்யப் போக, "இருங்க ரகு அங்கிள், அவங்க அன்னை டெஃப் & டம்ப் ஸ்கூல்ல இருந்து வந்துருக்காங்களாம், டோனேஷனுக்கு ஃபோன் பண்ணாங்களாம், நீங்க வந்து வாங்கிட்டு போக சொல்லீருந்திங்களாம்" அவளையே பார்த்தவன், "இத ஏன் முன்னயே என்ட்ட சொல்லல, ஜான் என் பேக் எடுத்துட்டு வந்துருப்பான், அத உன் பொறுப்புல வாங்கிக்கோ, இப்போ அதுல செக் புக் இருக்கும் எடுத்திட்டு வா" என்றான். "இல்ல சார்ம், நா அவங்களுக்கு பதில் சொல்லிட்டேன், யாரையும் செக் பண்ணாம நாங்க டொனேட் பண்றது இல்ல, நீங்க அட்ரஸ் கொடுத்துட்டு போங்க, சன்டே நானே நேர்ல வந்து குடுத்துறேன்னு சொல்லிட்டேன். இந்த காலத்துல ஏமாத்துறவங்க ஜாஸ்தியாகிட்டாங்க சார்ம். நாம தான் கவனமாக செலவு பண்ணனும். இன்னமும் ஏன் வெயிட் பண்றாங்கன்னு தெரியல, வெயிட் நான் போயி கேட்டிட்டு வரேன்" என சொல்லிவிட்டு அவர்களை நோக்கி சென்று அவர்களையும் கூடயே அழைத்து வந்தவள், "வந்தது வந்துட்டோம், உங்கள நேர்ல பாத்துட்டு போலாம்னு வெயிட் பண்ணாங்களாம்" என்றாள்.

பின் அவர்கள் வாழ்த்து பெற்றுச் செல்ல, பாப்பு வந்து முன் இருக்கையில் அமர, ஜான் வந்து இரணியன் பேக்கை கொடுத்து சென்றான். அதன் பின் அவள் ரகுவிடம் பேச ஆரம்பித்துவிட, அவர் பயந்து பயந்து நாலு கேள்விக்கு ஒரு பதில் என சொல்லிக்கொண்டு வந்தார். கொஞ்ச தூரம் செல்கையிலேயே, "ரகு அங்கிள், அங்க அந்த ஐ.ஓ.பி. ஏ.டி.எம் க்கு அப்புறம் லெப்ட்ல நிப்பாட்டுங்க, அங்க போக்கே வாங்கிடலாம்" என்க. "சார், பொக்கே வாங்குறதில்ல பாப்பு மேடம். விஷா சார் ஜான்ட்ட கிப்ட் வாங்கச் சொல்லிருப்பாங்க" என்க. "மேரேஜ் ஃபங்க்ஷனுக்கு ஒரு செலிபிரெட்டி பொக்கே இல்லாம போனா நல்லாவா இருக்கும், ரெண்டு நிமிஷம் தான் ஆகும். நான் ஆல்ரெடி ஃபோன் பண்ணி சொல்லிட்டேன் எடுத்து ரெடியா வச்சிருப்பாங்க" என்க. ரகு கண்ணாடி வழியாக இரணியனை பார்க்க அவனும் சரி என்பது போல் கண்ணை காட்ட கார் அந்த பொக்கே ஷாப் முன் நின்றது. "ராணிக்கா போக்கே ரெடியா?" என அவள் குரல் தேய்ந்து மறைய உள்ளே ஓடினாள்.

"மழ பேஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்குள்ள ரகு? நாம வேணாம்னு சொன்னா அதுக்கு வேற தனியா 1 மணி நேரம் பேசுவா". அவர் சிரிக்க, தானும் மெலிதாக சிரித்தவன், அவள் வரவை எதிர்பார்த்து வாசலை பார்த்தான், தனக்குத்தான் என அவள் சொல்லியிருக்கவில்லை போல், அதான் கூட்டம் சேரவில்லை என புரிந்து கொண்டான். அவள் வந்து ஏற கார் புறப்பட்டது. "மிஸ்.தாட்சா, நம்ம மேரேஜ்க்கு தான் போறோம்ன்னு செட்யூல் பாத்து தெரிஞ்சுகிட்டீயா?” "ஆமா சார்ம், நெக்ஸ்ட் நேசமிகு நெஞ்சம் படபூஜை போறோம், ஈவினிங் வீட்ல சுவாமிநாதன் சார் மீட் பண்றீங்க", "குட்" என முடித்துக் கொண்டாலும் மனதில் கேப்பபில் கேன்டிடேட் தான் என மெச்சிக் கொண்டான். வீட்டினுள் நுழைந்ததும் அனைவரிடமும் பேசியது வெட்டிக் கதையல்ல, இன்ஃபர்மேஷன் கேதரிங் எனவும் புரிந்து கொண்டான். அவளாகவே சமாளித்த விதமும் குட் என மனதாரவே பாராட்டினான். அதன் பின் அன்றைய பொழுது இரணியன் வேலைப்பழுவுடனும், பாப்புக்குட்டியின் ஓயாத வாய்ப்பேச்சிலும் கழிந்தது.

விஷாகன் இரண்டு, மூன்று முறை போன் செய்து எல்லாம் சரியாக செல்கின்றதா எனக் கவனித்துக் கொண்டான். அதற்கு மேல் அவனுக்கு இங்க பேச நேரமில்லாமல் சென்றிருந்தது. இரணியன் அம்மா பவ்யாவிற்கு போன் செய்து மேனேஜர் பெண் ஜாயின் செய்து விட்டதை சொல்லியிருக்க, அவள் அங்கு அவனை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

இவினிங் மீட்டிங் முடிந்த பின்பும், 8 மணிக்கு இரணியனின் சாப்பாடு முடிந்து அவன் அறை கிளம்பிய பின்பே, "வரேன் சார்ம் நாளைக்கு மீட் பண்ணலாம்" என கிளம்பினாள். அவளை சாப்பிடு என்று சொல்லவில்லை, தனியாக சென்று விடுவாயா? என்றும் கேட்கவில்லை. கேட்கலாம் என தோன்றினாலும் பழக்கமில்லாத விஷயம் என்பதால் அவளை அனுப்பிவிட்டு ரகுவை பின்தொடர்ந்து விட்டு வருமாறு அனுப்பி வைத்தான். பாப்புக்குட்டி முதல் நாளே இரணியன் மனதில் நல்ல பெண்ணாக😎 தனது முதல் அடியை எடுத்து வைத்திருந்தாள்.
 
அத்தியாயம் 9
மறுநாள் காலையில் இரணியன் ஜாக்கிங் போக கிளம்பி வர, வெளி வராண்டாவில் விஷா காத்து நின்றான். புருவத்தை ஏற்றி ஆச்சரியமாய் பார்த்தான் இரணியன்.

"ஹே விஷா மார்னிங் மேன், வென் டிட் யூ கேம் பேக்?" என்க. "குட் மார்னிங் சார், நைட் 11.30 இருக்கும் சார்" என்றான். "ஏன் அதுக்குள்ள ரிட்டர்ன் ஆகிட்ட? ட்ரிப் எப்படி இருந்தது?” 'உங்க தங்கச்சி கூட போனா எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருந்தது' ௭ன முனங்கி, "நல்லா இருந்தது சார்" ௭ன்றான் சத்தமாக. "௭ல்லா பிளேஸூம் பாத்தாச்சா? கிளைமேட் ஒத்துக்கலையா? அதான் இவ்வளவு சீக்கிரம் ரிட்டர்ன் ஆயிட்டியா?" என்றவாறு இரணியன் இறங்கி ஓட ஆரம்பிக்க. 'ஆமா என் பொண்டாட்டி தனியா ஊர சுத்தி வந்தா, நாந்தனியா ரூம நல்லா சுத்திப் பாத்தேன். என்னிக்கும் இல்லாம இன்னிக்கு எதுக்கு இத்தனை கேள்வி கேக்குறாரு?' என்ற யோசனையகளுடனே அவனை பின் தொடர்ந்தவாறு "மேக்சிமம் சுத்தி பாத்தோம் சார், அதான் போதும்னு கிளம்பிட்டோம்". "ஓகே எப்ப ஜாயிண்ட் பண்ண போற?", "இன்னைக்கே சார், பாப்புக்குட்டி எப்படி ஒர்க் பண்றாங்க?” "ம் குட், மேனேஜ் பண்ணுவான்னு தான் நினைக்றேன்". 'பார்ரா ஒரே நாள்ல குட் பட்டம் வாங்கிட்டாப்ளயே, பாப்புக்குட்டியா கொக்கா' என நினைத்துக்கொண்டு, "வேற என்ன சார் அவங்கள பத்தி நினைக்கிறீங்க?" என ஆர்வமாக கேட்க. "வேற என்ன நினைக்கணும்னு நீயே சொல்லிடேன் விஷா" என்றான் இரணியன் முறைத்தவாரே. 'ஆத்தி கடுப்பாகிட்டாரே', "ஒன்னும் இல்ல சார்" என அதன்பின் வாயை மூடிக்கொண்டு ஓட ஆரம்பித்தான்.

இரணியன் விஷாவை நிறையவே மிஸ் செய்தான். அவன் திரும்பிய நாட்களில் நேற்று மட்டுமே அவன் இடத்தை பாப்பு நிறைவு செய்திருந்தாள். விஷா இல்லாமல் அவன் எந்த வெளி இடத்துக்கும் சென்றதில்லை. அதனாலேயே மிகவும் தேடினான். இன்றும் கூட இரண்டு வார்த்தை அதிகம் பேசியதன் காரணமும் அதுவே.

வீட்டினுள் பவ்யா விடிந்ததும், விடியாதததுமாக தில்லைவாணிடம் குதித்துக் கொண்டிருந்தாள், "ம்மா யாரு அந்த பொண்ணு, ஏதாவது விசாரிச்சியா, அண்ணன் அந்த பொண்ணுகிட்ட எப்படி பிஹேவ் பண்றான். ஏதாவது பேசி அவள கட் பண்ணிவிடு. என் பிரண்ட வந்து அண்ணனப் பாக்க சொல்றேன். என் புருஷன் நல்ல புள்ளையாட்டம் நம்ம முன்னாடி நடிச்சுட்டு, அண்ணனுக்கு ஏத்த மாதிரிதான் வேல பாக்குறாரு. நீயும் விவரம் இல்லாம இருக்க, நடுத்தெருவுல நிக்கிற அன்னைக்குத்தான் உனக்குலா புத்தி வரப் போகுது பாரு" என்க. "என்னைய என்னப் பண்ண சொல்ற. என்ட்ட சொல்லிட்டா எல்லாம் நடக்கு. இனிலாம் போய் அவேங்கிட்ட அந்த புள்ளைய மாத்து, இந்த புள்ளைய மாத்துன்னு பேச முடியாது. நீயும் அவன நோண்டாம அவன் கொடுக்குறத வச்சு கெடச்ச வாழ்க்கைய நல்லபடியா வாழப்பாரு" என்றார். "எனக்கு என் வாழ்க்கைய எப்படி வாழணும்ன்னு தெரியும். நீ உன் வேலைய கரெக்டா பாத்தா நா ஏன் இப்படி புலம்பப் போறேன்". "உன் இஷ்டத்துக்கு வாழ்ந்து பட்டதெல்லாம் போதாதா, இன்னமும் படப் போறீயா? இனில்லாம் அப்படி ஏதாவது நடந்து பிரச்சனையாச்சு, உங்க அண்ணே உன்ன உசுரோட வச்சு பாக்க மாட்டான் மனசுல வச்சிக்கோ". "அதுக்குத் தான் சொல்றேன். அவன் எப்ப வேணாலும் மாறலாம், அதுக்கு அவன் வாழ்க்கையில வர்ற ஆளு நம்ம சைடா இருக்கணும், இல்லன்னா கடைசி வர அவன் வாழ்க்கைல நம்மள தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது, இது இரண்டு தான் ஆப்ஷன்". "நீயே உன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்க முடிவு பண்ணிட்ட, நான் சொல்லி மட்டும் கேட்டுரவா போற, எப்படியோ போ. அந்த விஷாவுக்காக கொஞ்சம் யோசி, உன்னப் பத்தி முழுசா தெரிஞ்சும், இரணியன மீறி உன்ன கட்டிக்கிட்டாரு". "அவரு என் வழியில குறுக்க வாரதே இல்ல. என் போக்குல ஃப்ரீயா தான் இப்பயும் இருக்கேன். எனக்கு தெரிஞ்சு அவர் தனியா சொத்த அமுக்கப் ப்ளான் பண்றாரோ என்னவோ?” "என்னால உன்ட்ட மூச்சத் தொலைக்க முடியல, ஆள விடு. ஒரு டீ போட்டு குடிச்சா தான் மண்ட சூடு குறையும்" என்றவாறு எழுந்து சென்றுவிட்டார்.

எட்டு மணிவாக்கில் இரணியன் கீழே இறங்கிவர, விஷா அறக்கப்பறக்க உள்ளே ஓடிவந்தான். புருவத்தை சுருக்கியவன், "என்னாச்சு விஷா?” "சார் இன்னிக்கு 8 டு 10 ௭பிசி டிவில இன்டர்வியூ ஸ்செடுயூல் கொடுத்திருந்தீங்க. இப்ப தான் அந்த சேனல்ல இருந்து போன் பண்ணி, சார் இன்னும் வரல எங்க இருக்காங்கனு கேட்டாங்க?" என்க.

நெற்றியை தேய்த்து யோசித்தவன் "கால் தாட்சா" என்றவாறு வாசலை நோக்கி நடக்க. 'உள்ள வரும்போதே பண்ணினே அட்டென்ட் பண்ணலயே, சரி மறுபடியும் பண்ணுவோம்' என நினைத்து மறுபடியும் கால் செய்தான். "நந்தவனம் இதோ இங்கே தான் நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால் தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
முதல் பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே உயிர் வாழுமே"

என முழுவதுமாக அது பாடிக் கட்டாக. "இது என்ன பாட்டுன்னு ஞாபகம் வர மாட்டேங்குது வேற. இந்த பாப்பு அட்டன்ட் பண்ணுனானாலும் கேட்கலாம். வாய் வர வந்துட்டு வெளியே வர மாட்டேங்குதே என புலம்பிக் கொண்டிருக்க,". "விஷா" கத்திவிட்டுருந்தான் இரணியன். "இதோ சார், பாப்பு அட்டன் பண்ணல, அதான் திரும்ப ட்ரை பண்ணிட்டுருந்தேன்". "குட் அப்படியே வீட்டில இருந்துக்க சொல்லு". "நா வேணா கூட வரேன் சார்" என ஏறி அமர்ந்தும் விட்டிருந்தான் முன்னிருக்கையில்.

"அவங்களுக்கு போன் பண்ணி 30 மினிஸ்ல இருப்பேன்னு சொல்லு" ௭ன்றான் இரணியன். "ஓகே சார்". "௭பிசி சேனல் போங்க ரகு".

கார் வேகமெடுத்தது 45 மினிட்ஸ்ல் வரவேண்டிய இடத்திற்கு 30மினிட்ஸ்ல் கொண்டுவிட்டார் ரகு. இதற்குள் விஷாவும் பாப்புவிற்கு 15 முறை கால் செய்திருந்தான். அடுத்து அவர்கள் அக்காவிற்கு தான் அடிக்க வேண்டும், வேறு யார் நம்பரும் அவனிடம் கிடையாது என எண்ணிக் கொண்டிருக்க, இரணியன் இறங்கி சென்றிருந்தான். அதன் பின் நேரம் வேகமாக சென்றது.

'முடிந்த படம், அடுத்த படம் பற்றிய கேள்விகள், அங்கு வந்திருந்த சில பேன்ஸின் கேள்விகள்' ௭ன இன்டர்வியூ இறுதியாக 'எப்ப கல்யாணம்' என்பதில் வந்து நின்றது. ஸ்டைலாக அவன் சிரித்து மழுப்ப.

"இப்ப புதுசா லேடி மேனேஜர் ஜாயின் பண்ணிருக்காங்கலாமே. அவங்க உங்க பியான்ஸி ஆக வாய்ப்பிருக்கு. அதுக்குத்தான் இப்ப அப்பாய்ண்ட் பண்ணிருக்கீங்கன்னு சொல்றாங்களே சார். இதுல எது உண்மை?" என அந்த ஆங்கர் கேட்க. "அடப்பாவிங்களா அந்தப் பாப்புவ அவரே முந்தாநேத்து தான்டா பாத்தாரு. நேத்து தானடா சாரோட அப்பா அம்மாவுக்கே தெரியும். எப்படிடா சேட்டிலைட்ட விட ஸ்பீடா இருக்கீங்க. எப்படியோ நம்ம நினைச்ச வேல எந்த மெனக்கெடலும் இல்லாம முடிஞ்சா சரி".

அங்கு இரணியனோ, "உங்க ப்ரோமோ கன்டென்ட்கெல்லாம் நா பதில் சொல்ல முடியாது". "சார் ஜஸ்ட் எஸ் / நோ சொல்லுங்க போதும். ஒரு கிரேஸியஸ்ட் ஃபேனா நா தெரிஞ்சுக்கணும்னு ஆசப் படுறேன்".

பெருமூச்சுடன் "அவங்க மிஸ்.தாட்சியாயிணி, நேத்து தான் மேனேஜரா ஜாயின் பண்ணிருக்காங்க. அதும் டெம்ப்ரவரியா தான். என்னுடைய பழைய மேனேஜர் விஷாகன், என் சிஸ்டர மேரேஜ் பண்ணிட்டதால, அவருக்குன்னு தனியா பொசிஷன் குடுத்து கவுரவிக்கணும் இல்லையா? அதுக்காக மட்டும் தான் நியூ மேனேஜர். வேற எந்த ரூமர்ஸ் ஸ்பிரட் பண்ணாதீங்க, தட்ஸ் இட்" என்றான் பொறுமையாகவே. "இப்பதான் நிம்மதியா இருக்கு, பல பெண்கள் மனசுல பால வாத்துருக்கீங்க. எப்போ மேரேஜ்? லவ்/ஆரெஞ்ச் மேரேஜா சார்?" "இனி தான் மேரேஜ் பத்தியே டிசைட் பண்ணனும் அண்ட் இப்ப வர எந்தப் பொண்ணையும் லவ் பண்ணல, தேங்க்யூ" என அவனே முடித்து விட்டான். அவர்களும் முடித்துக் கொண்டனர்.

அவ்வளவு நேரமும் அவனையே ஆவென்று பார்த்திருந்த விஷா இந்த பாப்புவ மறந்துட்டோமே என மறுபடியும் கால் செய்ய போக, " ஹாய் விஷா குட் மார்னிங். எப்ப வந்த ஹனிமூன்லயிருந்து" என பின்னிருந்து அவன் தோளை தட்டினாள் பாப்பு. "இது குட் மார்னிங்கா? இல்ல குட் மார்னிங்கான்னு கேட்டேன்". "அது அப்படி இல்ல விஷா ஒருத்தர அன்னைக்கு அப்பதான் ஃபஸ்ட்டா பாக்கோம்னா குட் மார்னிங் சொல்லலாம்னு கிராமர் சொல்லுது". "எந்த கிராமர் பாப்புக்குட்டி கிராமரா?", "உனக்குத் தெரியலனா விடு. இன்டெர்வியூ முடிஞ்சதா?" ௭ன்றாள் ௭ட்டி ஆட்டோகிராப் போட்டு கொடுத்துக்கொண்டிருந்த இரணியனை பார்த்து.

"கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு. இவ்வளவு லேட்டா வர்ற. சரி நேரமாகுன்னா ஒரு போன் பண்ணி சொல்றதுக்கு என்ன?” "நீ பண்ண போனையே அட்டென்ட் பண்ண முடியாது சுச்சுவேஷன்ல இருந்தேன். எங்கிருந்து நா போன் பண்றது?” "அப்படி என்ன சிச்சுவேஷன்". "நா சொன்னா நீயே என்ன பாராட்டு". "முதல்ல சொல்லு". "நான் அடையாறு சிக்னல் தாண்டி வந்துட்டுருந்தேன். முன்ன ஒரு பேமிலி பைக்ல போயிட்டு இருந்தாங்க. ஏதோ பங்ஷனுக்கு போயிட்டு இருப்பாங்க போல, கழுத்தில் பெரிய பெரிய செயின் போட்டுருந்தாங்க. என்ன கிராஸ் பண்ணி போன ரெண்டு பேர்ல பின்னாடி இருந்தவன் திடீர்னு அந்த லேடி கழுத்துல இருந்த செயினை பிடிச்சு இழுக்க, அவங்க வண்டி ஸ்கிர்ட் ஆயிடுச்சு. செயின அத்துட்டு அவனுங்க அடுத்த தெருவுல திரும்பிட்டானுங்க". "நீ செயின மீட்டு குடுத்திடலாம்ன்னு அவனுங்க பின்னாடியே போயிட்டியா?" அவளை 3 நாள் ஆராய்ந்த பலனாய் கேக்க. "ஆமா உனக்கு ௭ப்டி தெரியும்" "நீ மிச்ச கதைய முடி", " ஸ்கூட்டிய திருப்பிட்டு ஃபாலோ பண்ணேனா". "ம், புடிச்சு உன் அக்காட்ட ஒப்படச்சிட்டியா?” "இல்ல அங்க இங்கன்னு சுத்தி, நா திரும்பி வந்த ரோட்டுக்கே வந்துட்டேன். அவங்க காணாம போயிட்டாங்க". "அப்ப விட்டுட்ட". "ஆமா ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சு". "கடைசீல சார் ஷெட்யூல் மறந்தது தான் மிச்சம்". "அதுக்கு தான் நா சீக்கிரம் கிளம்பி வந்தேன் தெரியுமா? அந்த ஸ்கிர்ட்டானவங்கள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருந்தாங்க, பாவம், அவங்களையும் போய் பாத்துட்டு டேக் கேர் சொல்லிட்டு, நேரா வீட்டுக்கு போயிட்டு, நீங்க இல்லன்னதும் தான் இங்க வந்திருக்கேன்". "அதுக்காக நீ வர வர வீட்டிலேயேவா காத்திருக்க முடியும்".

"ம்க்கும்" என சத்தத்தில் திரும்ப, இரணியன் நிற்க, அவன் திட்ட வாய் திறக்க போக, "சாரி சார்ம், அது என்னாச்சுன்னா" ௭ன இவள் ஆரம்பிக்க. "எல்லாம் கேட்டேன். நீ சோசியல் சர்வீஸே பண்ணு. ஒன்டே சேலரி கொடுத்தனுப்பு விஷா" என்று விட்டு காரை நோக்கி போய்விட, "சார் சார்" என அழைக்கப் போக.

"சாரி சொல்றதுக்கு முன்னாடி இங்க இன்டெர்வியூ கொடுத்ததற்கான செக்கை வாங்கிட்டு வா. பொறுப்பா செஞ்சு நல்ல பேரு வாங்கு" ௭ன விஷா சொல்ல. "ஓ! ஓகே" என சென்று ஆபீஸ் ரூமில் பேசி செக்கோடு வந்தாள். அதற்குள் விஷா சென்று இரணியனை சமாதானப்படுத்த ட்ரை பண்ணி வேறு வேறு பேசிக்கொண்டிருக்க.

"இங்கப் பாரு விஷா, அவ ரியலைஸ் பண்ணனும். அவ டூயூட்டி என்னவோ அதத்தான் அவ பாக்கணும். இப்ப இந்த இன்டெர்வியூல அவள ஜஸ்ட் மேனேஜர்னு சொல்லிட்டு, இன்னைக்கே அவள வேலைய விட்டு நிறுத்துனா. நாமளே எல்லோரும் பேச சான்ஸ் கொடுத்த மாதிரி ஆகிடும். ஆனா இத சொன்னா அவ எப்பயும் போலத்தான் இருப்பா. அதனால இன்னைக்கு அவள அப்படியே வீட்டுக்கு அனுப்பு பாத்துக்கலாம்" என்க. "சரி சார்" என இதுவே போதும் என்பதற்காக ஒத்துக் கொண்டான் விஷா.

அந்நேரம் பாப்பு வர, விஷா "நீ இப்ப வீட்டுக்கு கிளம்பு பாப்பு, சார் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க நாளைக்கு வா பேசிக்கலாம்" மெதுவாக சொல்ல. "என்ன பேச போற, நா தான் சிச்சுவேஷன் சொன்னேன்ல". "இப்படியே நீ தினமும் பண்ணிட்டுருந்தா, உனக்காக அவரு இருக்க வேலய விட்டுட்டு வெயிட் பண்ணிட்டு இருக்க முடியுமா" என்றான் அவனும் அவளுக்கு புரிய வேண்டும் என்பதற்காக. "இன்னிக்கு இப்படி நடந்தாதால தினமும் அப்படியே பண்ணுவேண்ணு நினைச்சா எப்படி? இனி இப்படி நடக்காம பாத்துக்கிறேன் போதுமா". "சரி பாப்பு, இன்னைக்கு உனக்கு லீவுனு நினைச்சுக்கோ, வீட்டுக்கு போ, நா இன்னைக்கு சார் கூட மேனேஜ் பண்ணிக்கிறேன்" ௭ன்க.

"விஷா கெட் இன்" இரணியன் பொறுமை போய்க்கொண்டிருக்க. "சார்ம் திஸ் இஸ் நாட் ஃபேர். நா தான் சாரி சொல்லிட்டேன்ல". "ரகு கார் எடுங்க". "நீ வீட்டுக்கு கிளம்பு. நான் கால் பண்றேன்" விஷா சொல்லியவாறு ஏறப் போக. "நீ என் ஸ்கூட்டிய எடுத்துட்டு வா. என் சார்ம் நா கண்சோல் பண்ணிக்குறேன்" என அவனை இழுத்துத் தள்ளி நிறுத்தி விட்டு, அவள் முன் ஏறிக்கொள்ள. விஷா வாயை பொளந்தவாறு நிற்க.

"இந்தா கீ பாத்து ஓட்டிட்டு வா, வண்டி பத்திரம்" என கீயைத் தூக்கி போட போனவள், நிறுத்தி "லைசென்ஸ் வச்சுருக்கியா?" என்க. விஷாகன் வாயை மூடி முறைக்க. "சரி இல்லனாலும் சார்ம் பேர சொல்லி வந்துருவ, வண்டி பத்திரம் ஓகே வா" என தூக்கி வீசிவிட்டு. "போலாம் ரகு அங்கிள்" என்றாள். அவர் இரணியனை பார்க்க. "தாட்சா என்ன தான் நினைச்சுட்டுருக்க உன் மனசுல. அப்ப என் பேச்சுக்கு என்ன மரியாத. உன் இஷ்டத்துக்கு எல்லாத்தையும் பண்ண இது உன் வீடு நினைச்சியா? வேல பாக்க இஷ்டம் இருந்தா, அங்க என்ன ரூல்ஸோ அதப் ஃபாலோவ் பண்ணனும், இல்லையா வீட்டிலேயே படுத்து தூங்குணும். மத்தவங்க உயிர எடுக்கக்கூடாது" எனக் காட்டமாக திட்டினான்.

"ஒரு அறையில் முடிச்சிருப்பாரு, பொம்பள புள்ளங்கறதாள 4 லைனுக்கு பேசிட்டாருபோல" என நினைத்துக் கொண்டனர் டிரைவரும், விஷாகனும். "இதுதான் லாஸ்ட் வார்னிங் சார்ம்" என்றாள் அவளும் விட்டுக்கொடுக்காமல். அதற்கு மேல் அவன் பேசவில்லை. அவனுக்கு அவளை என்ன செய்வது என்று தெரியவில்லை. "ஆனாலும் உயிர வாங்குறேன்னு சொன்னதாலாம் ரொம்ப ஓவர் சார்ம்" என்றாள் அவளோ மேலும். "போச்சு அமைதியான மனுஷன மறுபடியும் ரைஸ் பண்ணப் போறா இந்த பாப்பு" என விஷா நினைத்து முடிக்குமுன், பின் கதவை திறந்து இறங்கிய இரணியன், முன் கதவைத் திறந்து அவளை வெளியில் ஒரே இலுவையில் கையை பிடித்து இழுத்தான். "என்னாச்சு சார்" எனக் கேட்டுக்கொண்டே இறங்கியவளை பின்னால் இழுத்து தள்ளி நிறுத்தி முன் டோரை சாத்தி விட்டு பின் டோரைத் திறந்து ஏறியவன், "ரகு சென்ட்ரல் லாக் போட்டு வண்டி எடுங்க" என்க. விஷா "ஐயோ சார் நானு" என்க. வண்டி கிளம்பி இருந்தது.

"நாதான் சொல்றேன்ல, கிளம்பு கால் பண்றேன்னு, கொஞ்சமா இறங்கி வந்த மனுஷன புல்லா ஏத்திவிட்டு அனுப்புற" விஷா திட்ட. "ரொம்ப பேசாத, சின்ன விஷயத்துக்கு இவ்வளவு தூரம் ரியாக்ட் பண்ணனுமா?” "அவரோட ஸ்டேட்டஸ் அப்படி. பங்க்ஷவலா இருப்பாரு, நேம் கெடாம பாத்துப்பாரு. உன்னோட அதிகப்பிரசங்கித்தனத்துல இத எல்லாத்தையும் அவர கெடுத்துக்க சொல்றியா? நீ ரொம்ப ரெஸ்பான்ஸிபில், மேனேஜ் பண்ணிப்பன்னு எவ்வளவு பெருமையா சொல்லி வச்சுருந்தேன் தெரியுமா?” "இப்ப என்ன அதுல குறை வந்துட்டு. கண்ணுக்கு முன்ன நடந்த தப்ப தட்டிக் கேட்டது தப்பா?" "நீ ஒரு இடியட். சார் என்ன சொன்னார் தெரியுமா? சிச்சுவேஷன் கேண்டில் பண்ணத் தெரியணும். அந்த டைம்ல உங்க அக்காவுக்கு போன் பண்ணிருக்கலாம், வண்டி நம்பர, போன ரூட்ட போன் பண்ணி சொல்லிருக்கலாம். அது அவங்க வேலை, அவங்க பாத்துப்பாங்க. போய் தனியா சிக்குனப்புறம் தான் உங்க அக்காவுக்கு போன் பண்ணுவாளான்னு கேட்டாரு" என்க. "இது மாதிரி எனக்கு பழக்கம் தான். கராத்தே எல்லாம் தெரியும். சான்ஸ் கிடைச்சதுன்னு நிறைய பேசாத".

"முடியல, சரி வா வீட்டுக்கு போய்னாலும் அவர சமாதானப்படுத்தணும். போற வழியில என்னை டி நகர்ல விட்டுட்டு நீ கிளம்பு. நா பேசிட்டு கூப்பிடுறேன்". "நீ என்ன எனக்கு வக்காலத்தா. கோபம் என் மேல தான அதனால நானே பேசிக்கிறேன். "என்னவோ செய். நா என்ன பேசினாலும் நீ செய்யறது தான் செய்யப் போற. போ வண்டிய எடு" என சாவியை திருப்பித் தந்தான். அவள் போய் வண்டியை எடுத்து வர இருவரும் கிளம்பினர்.

கொஞ்ச தூரம் வந்துருக்கையில், "புடிச்சுடேன்ல அங்கப் பாரு சார்ம் கார்" என்க. விஷா நிமிர்ந்து பார்த்தவன், "ரோட்டுல நின்னு சண்டை போட்டு நாளைக்கு பிளாஸ் நியூஸ் ஆக்கிடாதம்மா, வீட்டுக்கு போய் பேசிக்கலாம் எதுனாலும். இதுக்குத் தான் இம்புட்டு ஸ்பீடா வந்தியா நீ?” "ச்ச நான் எங்க சண்டை போடப் போறேன், சமாதானப் படுத்தல்ல போறேன்" என்றாள் அவள்.

அவள் மூளையோ "இது நீ இல்லையே பாப்பு, உன்ன இப்டி ஒருத்தங்க திட்டி கார விட்டு இறக்கின்னுலா அவமானப்படுத்திருந்தா, அவங்கள நீ சும்மா விட்டுருப்பியா? இங்க என்னன்னா சமாதானம் பண்ண போறேன்ற" என கேட்க. "மத்தவங்களும் சார்மு ஒன்னா?", "பின்ன இல்லையா?” "இல்லவே இல்ல. ஹி இஸ் மை சார்ம். அவரு தானே பேசினாரு பரவால்ல. எக்ஸ்பிளைன் பண்ணுனா புரிஞ்சுப்பாரு" என பதில் மனதிற்கு சொல்லிக்கொண்டே வந்தாள்.

"என்ன மண்டைய மண்டைய ஆட்டிட்டு வர?" விஷா கேட்க. "அதுவா ஒரு பாட்டு மைண்ட்ல வந்துச்சு அதான்". "ஹே உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன், என்ன காலர் டியூன் அது. மொத லைன் நியாபகம் வரவே மாட்டேங்குது. நல்லப் பாட்டு" எனக் கேட்க. "அத கண்டுபிடிக்கனாலும் உன் மூளைக்கு வேல கொடு. இப்ப இந்த வண்டிய பார்க் பண்ணிட்டு வா" என கேட்டினுள் நுழையவும் இறங்கி வீட்டை நோக்கி ஓட.

"இவள வச்சுக்கிட்டு, நில்லு பாப்பு, நானும் வரேன். ஜான் இதப் பார்க் பண்ணிடு" என வண்டியை அவனிடம் ஒப்படைத்து விட்டு இவனும் பின்னாலேயே ஓட, உள்ளே ஓடிய பாப்பு ஹாலில் தேடி, யாரும் இல்லை எனவும் கிச்சனை எட்டிப்பார்க்க, சாந்தி அம்மாவும் உடன் மூன்று பெண்களும் சமையலில் இருக்க. 'அப்ப ரூம்ல தான் இருக்கணும்' என படியேறியிருந்தாள். விஷாகன் ஹாலில் நுழைய பாப்பு மேல்படியை தொட்டிருந்தாள். இவள் இரணியனின் ரூமிற்கு செல்வதை கண்டு ஜெர்க்காகி நின்றுவிட்டான். இரணியன் அறைக்கு இந்த பதினைந்து வருடத்தில் பதினைந்து முறை கூட போகாதவன் அவன். "இவ எப்படி ஈஸியா பயமே இல்லாம போறா?" என்ற சாக்கில் அவன் நிற்க.

ஜான் வந்து "விஷா சார் கீ" என அவன் தோளைத் தொட்டு சுய நினைவுக்கு கொண்டு வந்து சாவியை நீட்ட, வாங்கிக்கொண்டு "ஆத்தி ஷாக்குல பாப்புவ தடுக்காம விட்டுட்டோமே. நம்மள சமாதியாக்காம ஓய மாட்டாங்க போல" என புலம்பிக்கொண்டே இவன் படியேற, பாப்பு இரணியன் கதவை தட்டிவிட்டு காத்திருந்தாள். அவன் வந்து கதவை திறக்க, விஷாகன் பாதி படியிலேயே "பாப்பு" என அழைக்க.

திரும்பி நிதானமாக "நீ போ விஷா நானே பேசிப்பேன்" என அவன் அழைத்ததற்கான பதிலை அங்கிருந்தே சொல்லிவிட்டு, "ஹாய் சார்ம், இப்படியா பாதிலேயே விட்டுட்டு வாரது" எனக் கதவைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுழைய, "ஹே வெயிட்" என இரணியனும் அவள் பின்னால் போக, இங்கு விஷா தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான். இவன் பாப்பு என கத்தியதில் பவ்யாவும், வாணியும் ஹாலுக்கு வந்தவர்களும், பாப்புக்குட்டி இரணியன் ரூமிற்குள் செல்வதைக் கண்டு வாயை பிளந்தனர். அவர்களைக் கண்டு விஷாகன் மறுபடியும் தலையில் அடித்துக் கொண்டான்.

"ஹே நில்லு, நீ என்ன உன் இஷ்டத்துக்கு உள்ள வர வந்துட்ட. கீழப் போ எதுனாலும் அங்கப் பேசிக்கலாம் கிளம்பு" இரணியன் தடுக்க. "எதுக்கு சார்ம் எல்லா விஷயத்துக்கும் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க. இது ஹெல்த்க்கு நல்லது இல்ல. தண்ணீ இருக்கா இங்க" என ரூமை சுற்றித் தேடியவள், ரூமை பார்த்து விட்டு, "உங்கள மாறியே ரூமும் நீட் அண்ட் கிளீன் சார்ம். செமயா இருக்கு. என் பெட் ரூம்ல ஒரு பிரிட்ஜ் வைன்னு என் அம்மாட்ட கேட்டதுக்கு, நீ எவ்வளவு நொறுக்குறன்னு கணக்கு தெரியாம போறதுக்கான்னு தரமாட்டேன்னுட்டாங்க" என்றவாறு அவன் ரூமிலிருந்த பிரிட்ஜ்ல இருந்து வாட்டர் பாட்டில் எடுத்து வந்து ஓபன் பண்ணியும் கொடுத்தாள். அவன் வாங்காமல் அவளையே முறைக்க. "தண்ணி குடிங்க சார்ம், அப்ப தான் நா சொல்றத ரிலாக்ஸா கேக்க முடியும்" என்க. "கீழப் போ நா வந்து கேக்குறேன்". "நீங்க என்ன சார்ம் பொம்பள புள்ள மாதிரி உங்க பெட் ரூம்க்கு வந்ததுக்கெல்லாம் டென்ஷன் ஆகுறீங்க? உங்க பேமிலி மெம்பர்ஸ் தாண்டி யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு. இப்ப இருந்து நானும் உங்க பேமிலில மெம்பர் ஆகிட்டனே". "ஓ காட் இரிடேட் பண்ணாம கிளம்புறியா ப்ளீஸ்" என்றான் இழுத்து பிடித்த பொறுமையுடன்.

"நீங்க இப்படி வெடுக் வெடுக்குன்னு பேசுறது தான் சார்ம், என்ன உங்ககிட்ட புரிய வைக்க சொல்லி நெறைய பேச வைக்குது. நா இவ்வளவு பொறுமசாலியே கிடையாது, எனக்கு செட் ஆகலன்னா, அவுங்க என்ன வேலைய விட்டு தூக்குமுன்ன, உன் வேல எனக்கு வேண்டான்டு போயிட்டே இருப்பேன். பட் உங்ககிட்ட உங்களுக்காக வேல பாக்க பிடிச்சுருக்கு, அதான் நீங்க இவ்வளவு சொல்லியும் பேசிட்டுருக்கேன். இனிமே இன்னைக்கு மாறி மிஸ்ட்டேக் மறுபடியும் நடக்காது போதுமா. இட்ஸ் எ பிராமிஸ்".

"இது மாறி நடக்காதுன்னா வேற மாறி பண்ணலாம்ன்னு இருக்கியா?" என்றான். "மிஸ்ட்டேக் எல்லாரும் பண்ணுவாங்க சார்ம், ரிப்பீட் பண்ண மாட்டேன். ஒன்ஸ்லயே கத்துப்பேன். ஏன்னா இந்த ஒர்க் எனக்கு புதுசு. கத்துக்கும் போது சில பல மிஸ்டேக் வரும் இல்லையா?” "இல்லனாலும் ரெம்ப பெர்பெக்ட் தான் நீ". லேசாக சிரித்தானோ என்பது போல இலகுவாக கூறினான்.

"சிரிச்சா நல்லா ஹேண்ட்ஸமா இருப்பீங்களே சார்ம், ஏன் மீட்டர் கணக்குல அளந்து அளந்து சிரிக்கிறீங்க". இப்பொழுது முறைத்தவன் "சொல்ல வந்தத சொல்லிடல்ல கிளம்பு" ௭ன்க. "கிளம்பத் தான் சார்ம் போறேன், இங்கயே டேரா போட்டுற மாட்டேன்". "நீ போடணும்னு நெனச்சாலும் நான் அலோவ் பண்ண மாட்டேன்". "ம்க்கும்" என வாயை குணட்டிவிட்டு, "சரி சார்ம் வாங்க சாப்பிடுவோம், மார்னிங் அவசரமா கிளம்புனதுல சாப்பிடவே இல்ல. அப்புறம் ரன்னிங், சேசிங் வேறயா, ஹெவியா பசிக்குது".

"சரிமா நீ முன்ன போ, நான் வரேன்" ௭ன்றான் அவள் கிளம்பினால் போதுமென்று. "சீக்கிரம் வாங்க சார்ம்" என்ற சொல்லுடன் அவள் வெளியேற. இரணியன் அங்கிருந்த சோபாவில் அப்படியே அமர்ந்துவிட்டான். அவள் வைத்துச் சென்ற வாட்டர் பாட்டில் டீப்பாயில் இருக்க, லேசாக சிரித்தவாறு எடுத்து இரண்டு மடக்கு பருகியவன், இரண்டு நிமிடம் அப்படியே அமர்ந்திருந்தான்.

இங்கு படி இறங்கியவள், "என்ன விஷா இங்கேயே உக்காந்துட்ட? நீ வேணா உன் வேலைய பாக்க போ, நா சார்ம்ட்ட பேசிட்டேன். ஹி இஸ் கூல் நொவ். நான் மேனேஜ் பண்ணிப்பேன். இப்ப சாப்பிட வரியா? ஹெவியா பசிக்குது. ஸ்கூட்டில லன்ச் இருக்கு எடுத்து வரேன், நீயும் வாரன்னா வா" என அவள் போக்கில் பேசியவாறு இறங்க போக. "சார் ஒன்னும் செய்யல?" ௭ன்றான், "இல்லையே ஏன்?” "சும்மா ஜி.கேக்கு கேட்டேன். நீ போய் எடுத்துட்டு வா" என தானும் எழுந்தான்.

பாப்பு கீழே இறங்கியவள், "ஹாய் ஆன்ட்டி இது யாரு?" என்றாள் பவ்யாவை யோசனையாய் பார்த்து. "நீ யார் ஃபஸ்ட்? இஷ்டத்துக்கு வீட்டுக்குள்ள உலாத்துற". "ஹேய் பவ்யா அவ சாரோட நியூ மேனேஜர்" விஷாகன் இடைப்புக. "மேனேஜருக்கு பெட்ரூம்ல என்ன வேலை?” "என்ன வேலையா இருந்தா உனக்கு என்ன?" பாப்பு எகிற. "அவ என் வைஃப், சாரோட சிஸ்டர் பாப்பு" விஷா சொல்ல.

"அது என்ன பாப்பு? செல்லமா தான் கூப்பிடுவீகளோ? இப்படியா பேர் வச்சிருக்காய்ங்க?" ௭ன்றவள். "என் அண்ணன் ரூம் வரப் போறது இதுதான் லாஸ்ட்டா இருக்கணும். சீக்கிரமா வேற வேல தேடிக்கோ. ஸ்டாருக்கு மேனேஜர் ஆகிட்டோம் அப்படியே செட்டில் ஆயிடலாம்ன்னு பாக்காத. வேலக்காரி வேலக்காரியா மட்டும் இரு" என்க.

"இனி ஒன்னும் செய்றதுகில்ல" விஷா முனங்கியவாறு முகத்தை ஒரு கையால் மூடிக் கொள்ள. பாப்பு "கொய்ங்" என்ற சத்தம் கேட்குமளவு விட்டாள் ஒரு அறை. பவ்யாவிற்கு கண்ணே கலங்கி விட்டிருந்தது. "என்ட்ட எப்பயும் பாத்து பேசு. ஏன்னா எனக்கு சட்டு சட்டுன்னு கைதான் நீளும். செட்டிலாகணும்னு முடிவு பண்ணிட்டேன்னா அப்புறம் நீ இல்ல, உங்க அண்ணனாலயும் அத தடுக்க முடியாது, அடிக்கடி ௭ந் முன்னாடி வராத, ஏனோ உன்ன பாத்தாலே பிடிக்கல" என விரல் நீட்டி எச்சரித்துவிட்டு லஞ்ச் எடுத்து வர சென்றுவிட்டாள்.

"௭ன் வீட்டுலயே ௭ன்ன மிரடிட்டு போறா, அடிச்சிட்டு போறா, மரம் மாதிரி நிக்கிறீங்க ரெண்டு பேரும்" என அம்மாவையும், புருஷனையும் திட்டிவிட்டு அவள் அறை சென்று விட, மாமியார் திக் பிரமையில் தான் இருந்தது. விஷாகன் இருமுறை கூப்பிட்டு பார்த்துவிட்டு "அதுவே தெளியும் போது தெளியட்டும்" என டைனிங் அறை சென்றுவிட்டான்.

எல்லாவற்றையும் மேலிருந்து கவனித்து விட்டு இறங்கி வந்தான் இரணியன். அவன் சென்று டைனிங் ஹாலில் அமர, பாப்புக்குட்டி தன் லஞ்ச்சுடன் வந்தமர்ந்து, "மூணு பேரும் ஷேர் பண்ணிக்கலாம்" என அவள் கொண்டு வந்ததையும் அந்த இருவர் பெர்மிசன் இன்றி அவர்கள் தட்டில் எடுத்து வைத்தாள். இரணியன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
 
அத்தியாயம் 10
இரணியனும், விஷாகனும் அமைதியாகவே சாப்பிட்டு எழுந்தனர். பாப்புக்குட்டி மட்டுமே வளவளத்துக் கொண்டிருந்தாள். இரணியன் அப்பப்போ அவளைக் காண்பதும் சாப்பிடுவதுமாக இருந்தவன், சாப்பிட்டு முடித்தவுடன் எழுந்தும் சென்று விட்டான். அவன் எழவும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த விஷாகனின் காலை எதிர் சேரில் அமர்ந்திருந்த இவள் எட்டி மிதிக்க, பால் பாயசத்தை ரசித்து ருசித்துக் கொண்டிருந்தவன், ௭திர்பாக்காத மிதியால் வாய்க்குள் மடக்கெனக் கொட்டி நாக்கைப் பொத்துக் கொண்டான்.

"ஸ் ஆ " என எரிச்சலில் அலறியவாறு அவளை முறைக்க. "௭ன்ன மொறப்பு ஒன் எச்சி பாயசத்த யாரும் பிடிங்கி குடிச்சிரமாட்டாங்க, அதக் கீழ வெச்சுட்டு கொஞ்சம் நிமிந்து பாரு". "எதுக்கு எரும மிதிச்ச? நாக்கு பொத்திட்டு?" "எரும கிருமன்ன பல்லத் தட்டிருவேன். சோத்த பாத்த மாதிரியே சாப்பிடுற, எத்தன தட சிக்னல் கொடுத்தேன் பாத்தியா நீ?" ௭ன அவள் முறைக்க. "சாப்பிடும் போது என்ன சிக்னல் வேண்டியிருக்கு? சாருக்கு தெரிஞ்சா என்னைய வச்சு செய்றதுக்கா?" என்க. "நீலா எதுக்குமே சரிப்பட்டு வர மாட்ட". "நீ எதுக்கு என்னய மிதிச்ச அத ஃபஸ்ட் சொல்லு". "அப்படிக் கேளு, சார்ம் என்ன சைட் அடிச்சாரு பாத்தியா?" என்க. அவனுக்கு உள்ள இறங்கியப் பாயாசம் மறுபடியும் ரிவேர்ஸ் கியர் போட்டு மேலே வர, எச்சில் கூட்டி அதையும் சேர்த்து விழுங்கி, "என்ன சொல்ற?" என்க. "ஆமா சாப்ட்டு முடிக்குறதுக்குள்ள 18 தடவ என்ன பாத்தாரு". சுதாரித்த விஷா "நீ வாய மூடாம பேசிட்டிருந்த, எப்படி இவளால முடியுதுன்னு பாத்திருப்பாரு". "லூசு உனக்குப் பொறாம?" "எதுக்கு சார் உன்னப் பாக்குறதுக்கா?", "இல்ல நான் அழகா இருக்கேன்ல அதுக்கு". "அன்னைக்கு நா உன்கிட்ட உனக்கு ஒரு ஹெல்ப் பண்ணலாம்னு வந்து பேச வந்ததுக்கு, என்ன ஃபாலோவ் பண்றியா? ரூட் விடுறியான்னு தையப்புக்கான்னு குதிச்ச? இப்ப சார் சைட் அடிக்கிறாருன்னு சிரிச்சிட்டே சொல்ற" ௭ன்றான் அவளை மேலும் கீழும் பார்த்து.

"நீயும், அவரும் ஒன்னா? ஒரு ஸ்மைலிங் சார்ம், ஹாண்ட்சம் மேன், மை ட்ரீம் பாய் என்னய பாத்தாருன்றது எவ்வளவு பெரிய விஷயம்". "அவரு எதுக்கு பாத்தாரோ நீ தேவையில்லாம கற்பன பண்ணிட்டு திரியுறன்னு நெனைக்குறேன். சார பத்தி எனக்கு நல்லா தெரியும்". "ஒரு நல்ல விஷயத்தை ஷேர் பண்ணா கூட சேந்து சந்தோசப் படணும். அது அப்படியில்ல, இப்படியில்லன்னு நெகடிவ் கமெண்ட் குடுத்துட்டுருக்க. நீலா என்ன ப்ரண்ட், பே" என லஞ்ச் பாக்ஸை எடுத்துக்கொண்டு கிட்சன் நோக்கி சென்றுவிட்டாள். "இது என்ன ரகம்னே தெரியலயே"என சென்றவளை பார்த்து புலம்பிவிட்டு தானும் எழுந்து சென்றான்.

அதன் பின்பு நான்கு நாட்கள் எந்த பிரச்சனையும், ஆரவாரமின்றி கழிந்தது. காலையில் 9 மணிக்கு வரும் பாப்பு குட்டி, இரணியனுக்கு வெளி வேலைகள் எதுவும் இல்லாததால் அவளும் வீட்டையே சுற்றி வந்தாள். வீட்டு மெம்பர்கள் அனைவரையும் தெரிந்து கொண்டாள். யாருக்கு என்ன வேலை, என்ன சம்பளம், எத்தன இயர் சர்வீசில் இருக்கிறார்கள், ஒழுக்கமாக வேலைகளெல்லாம் நடக்கிறதா என அனைத்தையும் கண்டு, கேட்டறிந்தாள். நான்கு ட்ரஸ்டுக்கு இரணியன் பேரில் ஃபண்ட் போகிறது, ஐந்தாவது டிரஸ்ட்டாக அன்று வந்து கேட்டு சென்ற டெஃப் & டம்ப் ஸ்கூல்லயும் நேரில் சென்று பார்த்து விட்டு, இரணியன் கையெழுத்திட்ட செக்கை கொடுத்துவிட்டு வந்தாள். அதுவும்போக, அவன் அம்மா கணக்கில் இவ்வளவு, தங்கை கணக்கில் இவ்வளவு என மாதம் ஒரு தொகை போடப்பட்டு வந்திருந்தது. ஈ.பி பில், பெட்ரோல், 6 கார் மெயின்டனன்ஸ் சார்ஜஸ், ராட்டிக்கு (டாக்) ஆகும் செலவு. இரணியனின் பெயரில் இருக்கும் ப்ராப்பர்ட்டீஸ், அவனது வெவ்வேறு நாட்டில் இருக்கும் ரிசார்ட்களின் வருமானங்கள், அதை மெயின்டைன் பண்ணும் மேனேஜர் டீடெயில்ஸ் இதெல்லாம் போக அவனுக்கு ஒரு படத்திற்கு, அட்வடைஸ்மென்ட், இன்டர்வியூ, ஓப்பனிங் செரிமனி போன்றவற்றிற்கு வரும் வருமானங்கள் என மொத்த டீடெய்ல்சைய்யும் விஷாகனை இரணியன், "மிஸ்.தாட்சா பெர்மனெண்ட்டான அப்புறம் ஒப்படைச்சுரு"ன்னு சொல்லிருக்க, இவன் தான் அவளை அவன் வாழ்க்கையில் பெர்மனெண்ட்டாக்க முடிவு செய்திருந்ததானே, மூன்றாவது நாளே அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு, "என்ன சந்தேகம்னாலும் கேளு" என்று விட்டான், இவள் இரவும், பகலுமாக நான்கு நாட்கள் உட்கார்ந்து இரணியனின் பொருளாதார பக்கத்தை கரைத்துக் குடித்து விட்டாள்.

"ஹப்பா எவ்வளவு வருமானம் வர குடும்பம்னாலும், அதுக்கு ஏத்த மாதிரி செலவும் இருக்கும் போல. எல்லா கிளாஸ் பீப்பிள் வீட்லயும் இப்படித்தான் போலையே" என அவள் அறையில் அமர்ந்து வேலையை முடித்து விட்ட திருப்தியில் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்தவாறு பேசிக்கொண்டிருக்க, அந்நேரம் படாரென கதவு திறக்கும் சத்தம் கேக்க. ஆனால் பாப்பு யாரென அறிந்தது போலவே மெதுவாக திரும்பி பார்த்தாள்.

"ஏம்மா, இவ ஏதோ வெட்டி முறிக்கிற மாதிரி இவள சாப்பிட அழைக்க என்ன வேற அனுப்புன, இங்க இவ சொகுசா படுத்து காலாட்டிட்ருக்கா" என்றாள் சுஹாசினி வாசலில் நின்று அவளை முறைத்தவாறே. "நீயும் ஒவ்வொரு தடவயும் படக்கு படக்குனு கதவ திறந்து, தனி ரூம் அடம்பிடிச்சி வாங்கி இவ என்ன தான் செய்றான்னு பாக்கலாம்ன்னு ட்ரை பண்ற, ஒன்னும் சிக்க மாட்டேன்குதுல்ல" என்றாள் பாப்பு ௭ழுந்தமர்ந்து முடியை ஏற்றி கிளிப் போட்டவாறு. "சிக்காமலா போயிடுவ, சிக்றன்னைக்கு இருக்குடி உனக்கு". "உனக்கு கை மேல விட்னெஸ தூக்கி கொடுத்தாலே வாதாட ஆள் வரணும், இதுல நீயா கண்டுபிடிச்சு கிழிச்ச, போடி ஒயிட் பாச்சா". "கோர்ட்ல வந்து கேட்டு பாருடி என்னோட ஆர்க்குயூமெண்ட்ட பத்தி" என்றவாறு வந்தவள், கட்டில் மேல் அவள் பரப்பி வைத்திருந்ததில், ஒரு பைல் எடுத்து திறந்து பார்த்தவாறு, "உன் ஹீரோவோட மொத்த டீடெயில்ஸும் உன் கைக்கு வந்துட்டு போலயே" என்க.

"மொத மேனரிசம் பழகு, உன் ஃபைல் எடுத்து நா பாத்தா நீ சும்மா இருப்பியா?" என்றாள் வெடுக்கென ஃபைலை புடுங்கியவாறு. "சர் தான் போடி, உன்கிட்ட இருக்குற ஃபைல்லயே இல்லாத உன் சார்ம் ஃபேமிலி பத்தின டீடெயில் ஒன்னு சொல்றேன் கேக்குறியா?", "போடி புளுகு மூட்ட, நீ சொன்னா நா நம்பிருவேனோ?” "நம்பிக்க இல்லன்னா உன் சார்ம்ட்டயே டைரக்ட்டா கேட்டுக்கோ அவ்வளவு தான". "எங்க சொல்லு அப்படி நீ என்ன சொல்றன்னு நானும் பாக்குறேன்". "உன் சார்ம்க்கு பவ்யான்னு ஒரு சிஸ்டர் உண்டே, அது அவரோட ஓன் சிஸ்டர் இல்ல". "அது எப்படி உனக்கு தெரியும்?", "அது ஒரு டிரக் அடிக்ட், பெரிய பெரிய டீலர்ஸ் கூடலாம் காண்டாக்ட்ல இருந்தது. இத வெளிய தெரியாம மறைச்சு அந்த பொண்ணு லைஃப் ஸ்பாயிலாகிடக் கூடாதுன்றதுகாக உன் சார்ம், நேம், ஸ்டேட்டஸ் பாதிக்கப்படக்கூடாதுன்றதுகாக, அந்தப் பொண்ணு நேம் மீடியால வராம பாத்துக்கிட்டாங்க. வேணும்னா அந்த கேஸ் டீடைல் நெட்ல பாரு, ஒரு பெரிய புள்ளியின் தங்கைன்னு இருக்கும். அதுக்கப்புறமும் வீட்டுக்குள்ளேயே வச்சு ரெக்கவர் பண்ணதா சொன்னாங்க. 3 வருஷமாட்சி இது நடந்து, இப்ப ரீசண்டா மேரேஜ் கூட சிம்பிளா பண்ணிட்டாங்க".

சிறிது நேரம் யோசித்த பாப்பு "அவ அப்டி பண்ணதுக்கு சார்ம் என்ன பண்ணுவாரு, அவ ஓன் சிஸ்டர் இல்லனா அடாப்ட்டடா?” "தெரியல நா அதுக்கு மேல இன்ட்ரஸ்ட் காட்டிக்கல, சோ தெரியல".

"என்ன வானரம் ரெண்டும் அமைதியா பேசிட்டுருக்கு" ௭ன கேட்டவாறே வந்த வடிவு, "என்னடி பிளான் பண்றீங்க? உன்ன இவள கூட்டிட்டு வர தானே சொன்னேன். போங்க ரெண்டு பேரும், மணி பத்தரையாச்சு இனிமே நீங்க சாப்பிட்டு அத நா விளக்கி வச்சுட்டு வேறப் படுக்கணும். 3 பொம்பள பிள்ளைகளப் பெத்து என்ன பிரயோஜனம், எல்லா வேலயும் நானே தான் பாக்க வேண்டியிருக்கு" ௭ன புலம்ப. "பசி வந்துருச்சுன்னா நீ, நீயா இருக்க மாட்ட, வா சாப்ட போவோம்" என தோளில் கை போட்டு இழுத்து சென்றாள் பாப்பு. சுஹாசினியும் திரும்பி கட்டிலில் கிடந்தவற்றை ஒருமுறை பார்த்துவிட்டு "ம், என்னத்த வேல பாக்காளோ" என்ற தோல் குழுக்களுடன் வெளியேறினாள்.

மறுநாள் காலையிலேயே பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தாள் பாப்பு. என்றும் ஜீன்/லெகின், டாப்ஸ் எனச் சுற்றி வருபவள், அன்று நீட்டாக ஒரு ஸ்டிட்ச்டு சுடிதார் மாட்டிகொன்டு கிளம்பினாள். "என்னடாம்மா விசேஷம் இன்னைக்கு" என அவள் அப்பா கேட்க, "இன்னைக்கு என்னோட சார்ம்மோட அரக்கன் ஃபிலிம் ப்ரிவ்யூ இருக்குப்பா. ஃபர்ஸ்ட் டைம் பிஃபோர் ரிலீஸ் பாக்கப் போறேன். 2, 3 டைரக்டர்ஸ் வராங்க, ப்ரொட்யூசர் வராங்க, நானும் நீட்டா போலாம்னு இப்டி கிளம்பிட்டேன். பாத்துட்டு வந்து படம், ஸ்டோரி சொல்றேன், ஓகே வா" என்க. "சரிடாமா பாத்து போயிட்டு வரணும்" ௭ன்றாரவர், "சரிப்பா" என்றவள், "ம்மா இன்னைக்கு நா நல்ல சாப்பாடு சாப்பிடப் போறேன், லஞ்ச் பேக் பண்ணிடாத, சரியா, பை. வீட்ட பூட்டிட்டு கவனமாயிரு" எனப் போற போக்கில் சொல்லிவிட்டு செல்ல, "இத முதல்லயே சொல்றதுக்கென்ன, கழுத வீட்டுக்கு தான வரணும் வாடி கவனிச்சுக்கிறேன்" என முறுக்கிக்கொண்டார் வடிவு.

அவள் இன்னும் இரணியனிடம் வேலை பார்க்கிறாள் என்பது அங்கு யாருக்கும் தெரியாது, சொல்ல நேரமும் இருக்கவில்லை. காலை 8 மணிக்கு கிளம்பி விடுகிறாள், வீடு திரும்பும்போது மணி 9 ஆகிவிடுகிறது. அதனால் யாரையும் நிறுத்தி நிதானமாகப் பேச நேரம் வாய்க்கவில்லை. அவர்களுக்கா தெரியும் போது எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு பாத்துக்கலாம் என்ற முடிவிற்கு இப்போது வந்திருந்தாள். ஆனால் கிச்சாவயும், ராதையையும் ஒருநாளும் மறந்ததில்லை.

இரணியனின் வீட்டில் 9 மணிக்கு இவள் நுழைகையில் "குட்மார்னிங் பாப்பு" என்றார் வாட்ச்மேன், அடுத்து ஜான் வந்து "மார்னிங் பாப்பு" ௭ன வண்டியை வாங்கி சென்று விட, அடுத்து இவள் நேராக கிச்சனுக்கு செல்ல, அங்கு வாசலில் ரெடியாக இருந்தார் சாந்திமா, "சார் சாப்டாரு பாப்பு. நாலு இட்லி, ஒரு கப் டீ. இந்தா, இது உங்களுக்கு" என அப்டேட்டுடன் நீட்ட, "தேங்க்ஸ் சாந்திமா" எனப் பெற்றுக்கொண்டு டீயை அருந்தியவாறு அவனைத் தேடிச் சென்றாள்.

அவள் வீட்டினுள் நுழைந்ததிலிருந்து நடந்தவற்றை கவனித்தவாறே, செல்லில் பேசியவாறு படியிறங்கினான் இரணியன். முதல் இரண்டு நாள் ஒவ்வொருவரையும் அழைத்து அழைத்து சிரித்த முகமாக இதையெல்லாம் ரிக்வெஸ்ட்டாக வைத்தாள். இன்று அவர்களே அந்த பழக்கத்திற்கு வந்திருந்தனர், கண்ட்ரோலுக்கு கொண்டு வந்திருந்தாள். அவள் அழிச்சாட்டியத்தை கண்டுக் கொண்டிருந்தவர்களுள் இரணியன் அம்மா, அப்பா, தங்கயும் அடக்கம். அவர்களை யோசிக்கவே விடாமல் செயல்பட்டுக் கொண்டிருந்தாள். இரணியனின் அப்பாவிற்கு அவளின் சுறுசுறுப்பு ரொம்ப பிடித்தது மனதார பாராட்டவும் செய்தார்.

"சரியான நடிகம்மா இவ, எப்படி வீட்ல எல்லா ஜென்ட்ஸ்யும் கவர் பண்ணிட்டா பாத்தியா?" ௭ன அதற்கும் பொறுமினாள் பவ்யா. "எனக்கென்னவோ, அவ வேலைய மட்டும் தான்டி பாக்குறமாறி தோணுது. வீட்ல எல்லாரையும் கவனிக்குறா, அரட்டாமலே வேல வாங்கிடுறாளே" ௭ன வாணி சொல்ல. "அவ மொத்தத்தையும் அவ கண்ட்ரோல்க்கு கொண்டு போயிட்ருக்கா நீ பேன்னு பாத்துட்டு இரு" என்ற எரிச்சலுடன் சென்றாள் பவ்யா.

பாப்பு இரணியனின் பார்வையை இந்த ஒரு வாரத்தில் கண்டுகொண்டாள். அவன் சைட் அடிப்பதற்காக பார்க்கவில்லை, அது ஒரு வகையான ஆராய்ச்சி பார்வை, யோசனை பார்வை என புரிந்து கொண்டாள். 'சரி இவ்வளவு பெரிய பொறுப்பு குடுக்கும் போது செக் பண்ண தான செய்வாங்க. ஆள் வச்சு செக் பண்ணாலும் ஆச்சரியப் படுறதுக்கில்ல' என நினைத்துக் கொண்டாள்.

பாப்பு கிட்சனில் இருந்து மாடிப்படி ஏற நெருங்க, இரணியன் இறங்கிவிட்டிருந்தான். டீயை ஒரே கல்பில் அடித்துவிட்டு, "போலாமா சார்ம்" என்றாள். "ம்" என வேகமாக அவன் அவளை கடந்து நடந்துவிட. "இன்னும் கொஞ்சம் சிரிச்சுருக்கலாம்" என சத்தமாவே முனங்கினாள். திரும்பாமலே பல் தெரியாத சிரிப்பு, அழகான, க்யூட்டான சிரிப்பை சிரித்துக் கொண்டான், வேக நடையுடனே. குடித்த டீ கப்பை கொண்டு சென்று ஒப்படைத்து விட்டு தானும் பின் ஓடினாள்.

இவர்கள் ஸ்டூடியோ சென்று இறங்க, பார்க்கிங்கில் இவர்களுக்கு முன் வந்து காத்திருந்தான் விஷாகன். "ஹே விஷா, இங்க என்ன பண்ணுற?" ௭ன்றாள் கையாட்டி. "ப்ரீவியூ பாக்காம விட்ருவேனா அதான் கிளம்பி வந்துட்டேன்". "நா தான் ஃபஸ்ட் டைம் பாக்கப் போறேனா ஒரே எக்ஸைட்டடா இருக்கு. ஆனா எப்பயும் என் தப்ரண்ட்ஸ் ஓட போய் சும்மா தாறுமாறா என்ஜாய் பண்ணிப் பாப்பேன், இந்த தட தான் நா மட்டுமா பாக்கப் போறேன்".

முன்னால் இரணியன் சென்றிருக்க, இருவரும் பேசிக்கொண்டே பின் தொடர்ந்தனர். அவனை ஏகபோக வரவேற்போடு அழைத்து சென்று உள்ளே அமர வைக்க. ஒரு 3 ரோ தள்ளி பின்னால் இவர்கள் இருவரும் அமர்ந்து கொண்டனர். அடுத்த 3 ஹர்ஸ் வேறு உலகத்திற்கே சென்றுவிட்டாள் பாப்புக்குட்டி. அவ்வளவு அரகண்ட்டான கேரக்டரில் நடித்திருந்தான் இரணியன். அதில் அவன் ஒரு ஆர்மி மேன், ஈவு இரக்கமின்றி பழி தீர்க்கும் காவல்க்காரன் அவன். ரத்தமும், போர்க்களமாக தான் இருந்தது படம். முடிவில் பாப்புக்குட்டிக்கும், விஷாகனுக்கும் ரத்தம் சூடாகி நாட்டுப்பற்று அதிகரித்து உடனே நாட்டுக்காக எதாவது செய்தே ஆக வேண்டுமே என்ற சூழ்நிலைக்கே தள்ளப்பட்டிருந்தனர். படம் பார்க்க வந்த அனைத்து சினிமா தொடர்பாளர்களும், டைரக்டர்களும் இரணியனுக்கும், டிரைக்டருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். ஒரு தியேட்டர் ஓனர் "கண்டிப்பா பாக்ஸ் ஆபீஸ் ஹிட் குடுக்கும் இரணியன் ஜீ" என்று விட்டு சென்றார். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் நன்றியுடன் கூடிய கைகுலுக்கலுடன் முடித்துக் கொண்டான்.

பின் எல்லாருக்கும் ரெஸ்டாரெண்ட்டில் லஞ்ச் ரெடியாகி இருக்க அங்கு சென்றனர். "செம படம்ல எப்படி கெத்தா இருந்தாரு நம்ம ஹீரோ, அப்படியே ஒரு போர்களத்துல, தன் நாட்ட தாக்க வந்த எதிரி நாட்டை தொம்சம் பண்ணுற அந்த காலத்து ராஜாக்கள் மாறி தெரிஞ்சாருல்ல" பாப்பு சொல்ல, "அதுலயும் கிளைமாக்ஸ் பைட் அடி தூள்" என விஷா சொல்ல, அடுத்து சாப்பாடு வரும்வரை அதைப்பற்றியே தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டிருந்தனர். அந்நேரம் ஒருவன், "ஹலோ பாப்பு, ஹாய் விஷாகன்" என வந்து பாப்பு தோளில் கையிட்டவாறு, அவள் அருகில் இருந்த சீட்டில் அமர்ந்தான்.
 
அத்தியாயம் 11
“ஹலோ பாப்பு” என்றவனுக்கு விஷா பதிலாக "ஹாய் ஸ்லோட்டி, ஹவ் யூ டூயிங்?" என்றான். "நா நல்லா இருக்கேனோ இல்லையோ, நீ நல்லா வாழ்ற மச்சான். கல்யாணம் ஆனதும், உன் பாஸ்க்கு மேனேஜர் செட் பண்ணுற சாக்குல உனக்கு ஒரு ஸ்டெப்னிய புடிச்சுட்ட போல. கலக்கலா தான் அமையுது உனக்கு" என பாப்பு தோளில் கையிட்டவாறு சொல்ல. விஷாகன் நமட்டு சிரிப்பு சிரிக்க. "ஏன் இப்ப அவன் கரெக்ட் பண்ணலன்னு சொன்னா, நீ கரெக்ட் பண்ணப் போறியா?" என தன் இடதுகையிலிருந்த போர்க்கை எடுத்து, அவன் தொடையில் இறக்கியிருந்தாள். வலியில் அவன் கையை அலறிக்கொண்டு எடுத்து விட, எல்லார் கவனமும் இவர்கள் பக்கம் திரும்ப. "சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ், யூ ஆல் கேரியான்" என எழுந்து சொன்னவள் "என்ன மேன் நீ, சும்மா விளையாட்டா பண்ணதுக்கு சின்ன புள்ளமாறி அலறுற" என சத்தமாக எல்லோருக்கும் கேக்கும்படி சொல்லியவாறு அமர்ந்தாள்.

விஷாகன் குனிந்து நமட்டு சிரிப்பு சிரிக்க, மற்றவன் எரிச்சலில் இருவரையும் முறைத்தான். அவனுக்கு ரேமண்ட் மாடல் பேண்ட் கிழிந்து உள்ளே தோலை கிழித்திருந்தது போர்க். வலி உயிர் போனது, மானத்தைக் காப்பாற்ற பல்லை கடித்து அமைதியாக இருந்தான்.

"பொண்ணுங்க மேல கை வைக்கும் முன்ன யோசிக்கணும், முன்ன பின்ன தெரியாதவங்க பத்தி கருத்து சொல்லக் கூடாது. அதுக்கு தான் இந்த பனிஷ்மென்ட், இனி லைப் லாங் இந்த ஸ்டேட்மென்ட் உன் மைண்ட்ல இருக்கும்" என்றாள். "உனக்கு நா யாருன்னு காட்டுறேன்டி" என்றான், "டேக் யுவர் ஓன் டைம்" என்க. முறைத்தவாறே லேசாக நொண்டிய எழுந்து சென்றான். "அவன் ஒரு ப்ரூடியூசர்க்கு மேனேஜர். அந்த தகுதிய தக்க வச்சுக்கத் தெரியாத பக்கி. தான் பேரை கெடுக்குறது பத்தாதுன்னு அவர் பேரையும் சேர்த்து கெடுக்குறான். என்னன்னு தான் இவன வச்சு சமாளிக்குறாரோ அந்த மனுசன்" என்றான் விஷாகன் சென்றவனை பார்த்து.

"போறான் விடு, மட்டன் பிரியாணி வாசனை ஆளத் தூக்குது, முதல்ல சாப்பிடுவோம்" என சாப்பிட ஆரம்பித்தனர். இத்தனையையும் அமைதியாக கவனித்தவாறு இருந்தான் இரணியன். அவன் வந்து பாப்புக்குட்டி அருகில் அமரவுமே, இவன் கவனம் அங்கு வந்துவிட்டிருந்தது. "என்ன செய்கிறாள் பாப்போம்" என பார்த்திருந்தான். அவள் செய்கை அவனுக்கு திருப்தியே மெதுவாக சிரித்தும் கொண்டான்.


அடுத்த இரண்டு நாளில் நேசமிகு நெஞ்சம் படத்தின் பூஜை நடந்தது. அதில் மீடியா மக்கள் இருந்ததால் பாப்புவும் ஃபேமஸ் ஆக, முதல் முறை ப்ளாஷில் விழ அது வாய்ப்பாக அமைந்தது. அங்கு விஷாகன் வரவில்லை, இரணியனின் அப்பா ஹோட்டல்களில் ஆடிட்டிங் நடக்க அங்கு இருக்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு, அதனால் இரணியனே பாப்புவை தன் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அமைந்தது. ஒரு மேனேஜரை பாதுகாக்க வேண்டிய அவசியம் இன்றியே அதை செய்தான் ஏன் என சிந்திக்காமல். அவளோ வேடிக்கை பார்க்க போட்டோவிற்கு போஸ் கொடுக்க என இருந்தாள். அந்த படத்தின் நாயகி, காமெடியன், மியூசிக் டைரக்டர், என ஒருவரையும் விடாமல் அனைவருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டு ஜாலியாக இருந்தாள்.

எல்லோரிடமும் தன்னை பாப்புக்குட்டியாகவே அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் பொறுமை காத்த இரணியன் “தாட்சா” என அழைக்க, அடுத்த நொடி இவன் முன் வந்து நின்றாள். “சொல்லுங்க சார்ம்”, “அது என்ன பாப்புக்குட்டி? தாட்சியாயிணி ரைட்? அப்டி இன்ட்ரோவாக வேண்டியது தானே?” “சார்ம் எனக்கு என் நேம் பாப்புக்குட்டி மாறியும் தாட்சியாயிணி அலைஸ் மாறியுமே பழகிட்டு” என்க.

“அவங்கள்லாம் நீ வேணும்னு பெட் நேம் சொல்றதா நினைப்பாங்க. உன்ன மிஸ் யூஸ் பண்ண வாய்ப்பு இருக்குல்ல” என்க. “அவங்க என்ன வேணா நெனச்சுக்கிட்டும், நா இப்படித்தானே சின்ன வயசுல இருந்தே பழகியிருக்கேன். இதுவர யாரும் மிஸ் யூஸ் பண்ணலியே”. “இது வேற ஃபீல்ட் தாட்சா”. “என்ன பண்ண பழகிடுச்சே” என அவள் சொன்னதையே சொல்ல. “எத தான் நீ சரின்னு அக்சப்ட் பண்ணிருக்க, இதப் பண்றதுக்கு” என்றான். “அத விடுங்க சார்ம் போட்டோஸ் பாருங்க செம்மையா வந்திருக்கு. உங்களையும் நிறைய ஸ்டில்ஸ் எடுத்தேன் வாட்ஸ்அப் பண்றேன்” என அனுப்பினாள். அவனுக்கு அவளது அலட்டல் இயல்பு புடித்தது.

வீடு திரும்பியதும், “நீ இப்ப கிளம்பு. நாளைக்கு உனக்கு ஆப். பேக் பண்ணிக்கோ டே ஆஃப்டர் டுமாரோ கிளம்புறோம்” என சொல்லிச்சென்றான். “ஓகே சார்ம்” எனக் கிளம்பினாள். அவளுக்குத்தான் ஷெடுயூல் தெரியுமே. அன்று இரவு அவள் அப்பார்ட்மெண்ட்டில் ஒரு மாநாடு நடந்தது. அதை வழிநடத்தியது நம் பாப்புக்குட்டி. பெரிய ஸ்க்ரீனில் அன்று எடுத்த போட்டோஸ் ஓடவிட்டு மொழிபெயர்த்து கொண்டிருந்தாள்.

“நீங்களா விஷயம் தெரிஞ்சு வந்து கேட்டப்புறம் சொல்லலாம்னு தான் இத்தன நாள் சொல்லல. நா னா வந்து சொல்லி நம்ப மாட்டேனுடீங்கனா? இப்ப சொல்லுங்க எப்படி நம்மச் சார்ம் வித் பாப்புக்குட்டி போட்டோஸ்” எனக்கேட்க. “அசத்தல்டி, என்னையும் ஒரு தட கூட்டிண்டு போடி” என்றார் மாமி. “ஆமா என்னையும், ஆமா என்னையும்” என ஆளாளுக்கு கேட்டனர். “வெயிட் வெயிட், எல்லாரையும் மீட் பண்ற மாதிரி ஒரு பிளான் போட்டுருவோம் அவ்வளவுதானே” என்றாள். என்னவோ அவன் இவளிடம் மேனேஜராக இருப்பது போல் பெருந்தன்மையாய்.



அவளை அவுட் ஸ்டேஷன் அனுப்புவது வடிவிற்கு பிடித்தம் இல்லை, எனினும் மற்ற மூவரும் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அனுப்பி வைத்தார். அடுத்த 30 நாட்கள் சவுத் தமிழ்நாடு வெவ்வேறு இடங்களில் ஷூட்டிங், அதற்கு ஏற்றவாறு துணிகளை எடுத்து வைத்துக்கொண்டாள். எல்லோரிடமும் “நா டூருக்கு போறேன், டூருக்கு போறேன், டூருக்கு போறேன்” என சொல்லிவிட்டே கிளம்பினாள். சில வயதானவர்கள் அவளின் வேலை அறிந்த பின், வெளியில் தங்க போவது கண்டு முகத்தை சுளித்தாலும், இப்போதுள்ள காலகட்டத்தில் யாருக்குத் தான் அட்வைஸ் தேவைப்படுகிறது என அமைதியாக இருந்து விட்டனர்.

விஷாகனும் உடன் கிளம்பினான். நீ வந்துட்டா இங்க உள்ளத யார் பாத்துப்பா?” என பாப்பு கேட்டதற்கு, “நா பாத்துக்குறேன்மா. உனக்கு இது ஃபர்ஸ்ட் டைம் அதனால விஷாவும் கூட வரட்டும். உனக்கும் கொஞ்சம் ரிலீஃப் இருக்கும்” என்றார் இரணியனின் தந்தை. “தேங்க்ஸ் அங்கிள்”, என அவள் சொல்லி முடிக்க. ஜான் ஒரு லக்கேஜுடன் முன் இறங்க, இரணியன் இலகுவான வொயிட் டி-ஷர்ட், பிளாக் பேண்ட்டில் தயாராகி வந்தான். பாப்பு கண்ணை விரித்து ரசிக்க, விஷாகன் வாயை திறந்து ரசித்தான். இருவரையும் கண்ட இரணியனுக்கு சிரிப்பு வரவே, வாட்சை பார்ப்பது போல் குனிந்து கொண்டான். இறங்கி வந்தவன் “வரேப்பா“ சற்று தள்ளி நின்றத் தாயைப் பார்த்து “வரேன்ம்மா” என சத்தமாக சொல்ல, சுதாரித்தனர் இருவரும்.

“இப்டி ரெண்டு பேரும் வாய பொளந்த மேனிக்கு வா பாத்தோம்னா விளங்கிறும், வா” என பாப்பு சொல்ல. விஷா முறைக்க, ரகு ஹார்ன் அடித்து அழைத்தார். இருவரும் ஓடிச்சென்று கார் அருகில் நின்று யார்முன் யார் பின் என்ற குழப்பத்தில் இருக்க, விஷாகன் இரணியனை பார்த்தவாறு முன் ஏறிக்கொள்ள, பாப்புக்குட்டி பின் ஏறினாள். இந்தா இருக்க ஏர்போர்ட் போறதுக்கு இந்தப் பாடு.

காரில் ஏறியதும், “ரகு நீங்களும் வருவீங்களா எங்களோட?” என கேக்க. “அப்ப ஏர்போர்ட்ல இருந்து கார வீட்டுக்கு நா எடுத்துட்டு போகவா?” என்றான் இரணியன். “வேணாம் சார்ம் நீங்க இல்லாம நாங்க மட்டும் அங்க போய் என்ன பண்ணப் போறோம். சோ ரகு அங்கிளே எடுத்துட்டு போட்டும்” என்றாள் இழுத்துப் பிடித்த சிரிப்புடன்.

அவன் அமைதியாக திரும்பிவிட, இருவருக்கும் இடையில் இருக்கும் ஒரு இன்ச் கேப்பை கைவைத்து அளந்து பார்த்தாள். அதில் அவன் போன் இருந்தது. ‘நம்ம பேர எப்படி சேவ் பண்ணிருப்பாரு?’ என யோசித்தவள், “ஹாய்” என டெக்ஸ்ட் அனுப்ப, அது நம்பராகவே வந்துவிழுந்தது. டென்ஷனாகி “ஏன் ஏன் சார்ம் இப்டி இருக்கீங்க? என் நேம் ஏன் சேவ் பண்ணல. இப்ப போற இடத்துல நான் தொலைச்சு போயிட்டா என்ன எப்படி கண்டுபிடிப்பீங்க? மேனேஜர்னு போட்டுனாலும் சேவ் பண்ணிருக்கலாம்ல?” என அவன் போன் எடுத்து அவனிடம் நீட்ட. “பெர்மெனன்ட் ஆகாதவங்கள நான் சேவ் பண்றதில்ல” என்றான் போனை வாங்கியவாறு. “இப்ப தேவைக்கு?”, “விஷா இருக்கான்ல”. “அது சரி, நான் தான் மேனேஜர். அவன் எனக்கு எடுபிடியா தான் வாரான்”. “என்னது எடுபுடியா? ஹெல்ப்புக்கு அய்யோ பாவம்னு வந்தா என்ன எடுபிடிம்பியா? எப்படியோ போனு இப்படியே இறங்கி போயிட்டே இருப்பேன்”. “ஃபஸ்ட் அத செய், உன்கிட்ட நான் ஹெல்ப் பண்ணுன்னு வந்து நின்னேனா?” என்றாள். “ரகு கார லெப்ட்ல நிப்பாட்டுங்க” இரணியன் சொல்ல. “ஏன் சார்ம்?” “ரெண்டு பேர்ல யாருன்னு முடிவு பண்ணிட்டு அடுத்த பிளைட்ல வாங்க, இப்ப இறங்குங்க” என்றான். “இல்லை சார், நான் பேசல” என விஷா முடித்துவிட, இரணியன் தலையாட்டி கார் மறுபடியும் கிளம்ப “அந்த பயம் இருக்கணும். இப்படி முதலயே கம்முனு வந்துருந்தா இப்போ சார்ம் டென்ஸனாகியிருக்க தேவையில்லைல?” என்க. விஷா திரும்பி இரணியனை பார்க்க, அவன் அல்ரெடி அவனைத்தான் முறைத்துக்கொண்டிருந்தான். சேர்த்து விட்டல்ல அனுபவி என்பதுபோல். ஆத்தி என திரும்பியவன் அதன்பின் வாயே திறக்கவில்லை கோயம்புத்தூர் சென்று இறங்கும் வரையிலும்.

கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் அவனுக்கு கேரவன் ரெடியாக இருந்தது. அதன்முன் அவனது பாடிக்கார்ட்ஸ் நின்றனர். “ஹே எங்களுக்கு முன்னயே வந்துட்டீங்களா? என்ட்ட சொல்லவே இல்ல” என்றாள் பாப்பு அவர்க ளுக்கு ஹாய் சொல்லி. அவர்கள் விஷாவை பார்க்க, “அவங்க எப்பவுமே செட்டுக்கு முன்னயே போயிடுவாங்க. போயிடனும், நீதான் பஸ்டே சொல்லி அனுப்பியிருக்கணும். அவங்க ஸ்பாட்க்கு வந்து கிளியர் பண்ணி செக் பண்ணி வச்சிடுவாங்க” என்றான் விளக்கமாய். “ஐசி” என்றவள் “இவங்க ரெண்டு பேரும் ஏன் பேசவே மாட்றாங்க?” என்றாள் சேர்த்து. “கார்ட்ஸ் அனாவசியமா பேச கூடாதுன்னு ரூல்”. “நீ எப்படி இவங்க ரெண்டு பேர் கூடயும், பேசாத நம் சார்ம் கூடயும் குடும்பம் நடத்துற” எங்க. “அது பழகப்பழக உனக்கே தெரியும்” என்றான்.

இரணியன் முன்னால் கேரவனுக்குள் சென்றிருக்க, இவர்களும் சென்று ஏற, குட்டி வீடு போல் இருப்பதை சுற்றிப் பார்த்தாள் பாப்புக்குட்டி. அது டபுள் பெட்ரூம் அட்டாச்ட் பாத்ரூம், ஒரு லிவிங் ரூம், புல்பில்ட் ஏ.சி, ஒரு வீடாகவே இருந்தது அனைத்து வசதியுடனும். “ஹப்பா செம்மையா இருக்குல. ஏதோ ஹோட்டல் மாறி, ஃபுல் கிளீன் அண்ட் நீட்டா” என அவள் வாயைப் பிளக்க. “ஆமா அடுத்த ஒரு மாசம் இதுலதான் குடியிருக்க போற. இப்ப போ உள்ள, சீக்கிரம் பிரஷ் ஆயிட்டுவா, அடுத்து நான் போணும்” என நெளிந்தான் விஷா. “பாத்ரூமையும் சுத்தி பாத்துட்டு மெதுவா தான் வருவேன்” என்றாள். ஆப்போசிட்டில் இருக்கும் மற்றொன்றில் இரணியன் இருந்தான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஊட்டி சென்று இறங்கினர். அங்கு அவர்களுக்கென புக் செய்திருந்த ரிசார்ட்டில் ரெப்பிரஷாகி விட்டு ஷூட்டிங்கிற்கு ரெடியாகினர். இந்த படமே எஸ்டேட்டில் வைத்து நடக்கும் நிகழ்ச்சிகளே என்பதால் அங்கேயே முடிந்தளவு நெறைய ஸீன்களை எடுக்க முடிவு செய்திருந்தனர். காலேஜில் படிக்கும் தம்பி படிப்பிற்காக எஸ்டேட்டிற்கு வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்தில் அக்காவாக ஹீரோயின், அந்த எஸ்டேட் முதலாளியாக இரணியன். இருவருக்கும் இடையே காதல், சுவாரசியமான நகைச்சுவை, சண்டை, காதல் காட்சிகள் இதுவே படம். அதை பாதியை இங்கும், மீதியை ஸ்டுடியோவில் செட் போட்டும், நாலு பாடல் காட்சிகளை வேறு நாடுகளிலும் எடுப்பதாக முடிவு.

படம் வேலைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் இரணியனுக்கு தேவையான வேலைகளை சரியாக பார்த்துக்கொண்டாள் பாப்புக்குட்டி. அவளுக்கு வேடிக்கை பார்க்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. மொத்தத்தில் படு பிசியாக இருந்தாள். இரணியன் வேலையோடு வேலையாக அவளைக் கவனிப்பதையும் சேர்த்துக்கொண்டான். மற்றவர்களை விட தன்னிடம் அதிகமாகவே நெருங்கியிருந்தாள். ஆனால் விழுந்து வழியவில்லை, அவனை இம்ப்ரஸ் அல்லது அட்ராக்ட் பண்ண வேண்டும் என எதுவும் செய்யவில்லை. அதனால் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இன்னும் இன்னும் என ஆராய்ந்து கொண்டிருந்தான்.

பாப்புக்குட்டியும் அவன் பார்வையை உணர்ந்தே இருந்தாள். “ஏன் என்ன பாக்குற?” என்று கேட்டு பழக்கப்பட்டவள் அவள். இரணியனை கேட்காமல், கேட்க தோணாமல் சுற்றி வருகிறாள். அவனைப் பிடித்ததால் அவன் பார்வையையும் பிடித்தது.

ஷூட்டிங் ஆரம்பித்து ஒரு வாரம் சென்றிருக்க, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இரணியன் இரண்டாவது மாடியிலும், பாப்புக்குட்டி நான்காவது மாடியிலும் இருந்தனர். அவளுக்கு எதுத்த அறையில் விஷாகன்.

அன்றிரவு ஷார்ப்பாக 11:50 இருக்க, பாப்பு அவள் அறையில் இருந்து கிளம்பி, படி வழியாகவே இரண்டாம் மாடி வந்து சேர்ந்தாள். நைட் பேண்டும், ஷர்ட்டும் ஏற்றிக் கிளிப்பிட்ட கொண்டயுமாய் அந்த நைட் லைட்டில் எல்லா ரூமையும் வேடிக்கை பார்த்தவாறே விசிலடித்துக் கொண்டே வந்தாள். நேராக 208 இரணியன் அறையில் வந்து நின்று காலிங் பெல்லை அழுத்த, பால்கனியில் நின்று எப்பொழுதும் போல் ஏதோ யோசனையில் வேடிக்கை பார்த்தவாறு நின்றவன் “கம்மிங்” என்றவாறு வந்து கதவை திறந்தான். “ஹாய் சார்ம்” என்றாள் ரகசியமாய் குஷியாக. “என்ன இந்நேரம் வந்திருக்க? என்னாச்சு? விஷா எங்க?” என்றான் அவன் ஏதும் அவசரமோ என்றெண்ணி. “அவ தூங்கிருப்பான் சார்ம். நாம உள்ள போய் பேசலாம் வாங்க” என அவள் அவனை தாண்டி உள்ளே போய்விட. “ஏ தாட்சா நில்லு எத்தன டைம் சொல்றது. நீ பாட்டுக்கு ரூமுக்குள்ள போனா என்ன அர்த்தம்?” என கேக்க. “உங்க மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கைன்னு அர்த்தம். இங்க வாங்க இன்னும் பத்து நிமிஷம் இருக்கு இப்படி உட்காருங்க” என அவன் அறையில் சென்று நின்று கொண்டு அவனுக்கே உட்கார இடம் கொடுத்தாள். இடுப்பில் கை வைத்து அவன் முறைக்க, “பத்தே நிமிஷம் கிளம்பிப் போயிட்டே இருப்பேன் சார்ம் ப்ளீஸ்” என்றாள் கையை குவித்து. “உன்ன எப்படி உன் வீட்ல சமாளிக்கிறாங்க?” என்று இலகுவாக அவள் எதிரில் கட்டிலில் அமர்ந்து கேக்க. “நான் தான் அவங்கள சமாளிச்சுட்டுருக்கேன் நீங்க வேற. அதுலயும் எங்க அம்மாவ சமாளிக்கிற டியூட்டி சிலநேரம் ஓவர் டியூட்டியா போயிட்டுருக்கும்”. “சுத்தம், சரி இப்ப எதுக்கு வந்த? என்ன அவசரம்னாலும் போன் பண்ணிருக்கலாமே?” “டைம் ஆயிடுச்சு சார்ம். கிட்டத்துல ஆள வச்சுட்டு போன்ல யாராவது விஷ் வாங்குவாங்களா?” “வாட்?” என்றான் அவன் புரியாமல். “விஷ் மீ ஹாப்பி பர்த்டே” என அவள் கை நீட்ட, அப்படி கேட்பவளை ரசிக்கவே தோன்றியது, சிரித்துக்கொண்டான்.

மறுநாள் அவள் பிறந்த நாள் பரிசாக இவள் இரணியனின் ரூமிற்குள் 11:50ற்கு சென்று கதவை அடைப்பது வீடியோவாக பரிசு அளிக்கப்பட்டிருந்தது மீடியாக்களில்.
 
அத்தியாயம் 12
பாப்பு விஷ் செய்ய சொல்லி கையை நீட்டவும், சிரித்தவனை கண்டு, "ஹப்பா காணக் கிடைக்காதது என் பிறந்தநாளுக்கு கிடைச்சிருக்கே, இதுவே பெரிய கிப்ட் தான் சார்ம், பிக் தேங்க்ஸ், நவ் விஷ் மீ" என்றாள் மறுபடியும் கையை நீட்டி தலையை சாய்த்து. அதை ரசித்தவன், அவள் தலையை பிடித்து ஆட்டி, "இன்னும் நிறைய வருஷம் நீண்டு வாழ்ந்து நிறையா பேர இம்ச பண்ணு. அதுக்கு என்னோட வாழ்த்துக்கள்" என்றான் மேலும் சிரித்தவாறு. "கண்டிப்பா சார்ம், மிக்க நன்றி" என குனிந்து நிமிர்ந்தாள்.



"சரி கிளம்பு" என்றான். "கிப்ட்" என்க. "யுவர் ஜாப் இஸ் பெர்மனன்ட்" என அவள் நீட்டிய கையில் அடித்தான். "பிஸ்னாரி பாஸ் சார்ம் நீங்க" அவள் இடுப்பில் கை வைத்து குறைபட. "லேட் நைட்டுல வந்து நின்னுட்டு சேட்ட பண்ணாத கிளம்பு" என அவளை இழுத்து வந்து வெளியில் விட்டான்.



கிளம்பியவள், நின்று திரும்பி "நீங்க எப்படி சார்ம்? இப்டி பச்ச பிள்ளையாவே இருக்கீங்க" என்க. அவன் புருவத்தை ஏற்றி முறைக்க, "சரி சரி போறேன், குட் நைட்" என்று விட்டு கிளம்ப. சென்றவளைப் பார்த்து சிரித்து விட்டு கதவை சாற்றி உள்ளே வந்தவனும் உறக்கத்தை தழுவினான், அவள் வருமுன் இருந்த தேடல் இப்பொழுது இல்லாமல் நிம்மதியாக உறங்கினான்.



காலை 6:00 மணி, 'ஐ லவ் யூ மம்மி' சாங் படிக்க கண்ணை திறக்காமலே எடுத்தவள், "குட்மார்னிங்மா" என்க "குட் மார்னிங்டா பாப்புக்குட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்றார் அந்தப்பக்கம் தகப்பனார். "தேங்க்யூ சோ மச் பா", "இன்னும் எழுந்துக்கலையாம்மா, அங்க ஒர்க்லாம் எப்டி போயிட்டுருக்கு? ஏதும் தொந்தரவு இல்லையே? "என்றார். "அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்லப்பா, நீங்க எல்லாரும் எப்டி இருக்கீங்க? ஷூட்டிங் வேடிக்க பாக்கிற பிசியில, போன் பண்ணவே முடியல", "இல்லனாலும் உனக்கு வீட்டு நினைப்பு வந்துரும்டி" என்றார் வடிவு.



"ம்மா பத்திரமா இருக்கியா? நா கூட உன்னயும் வீட்டையும் சேர்த்து எவனாவது அறவிலைக்கு வித்திட்டு போயிருப்பான்னு பாத்தேன்", "நல்ல நாளும் அதுவுமா என்கிட்ட வாங்கி கட்டாத சொல்லிட்டேன், சீக்கிரம் குளிச்சு கிளம்பி, பக்கத்துல ஏதாது கோயில் இருந்தா போயிட்டுவா, எனக்கு நல்ல புத்தியை கொடு ஆண்டவானனு வேண்டிட்டு வா" என்க.



"உனக்காம்மா? கண்டிப்பா வேண்டிக்றேன். இந்த நேர்மதான் உன்கிட்ட எனக்கு பிடிச்சது. சீக்கிரமா நல்ல புத்தி கிடைக்க பிராப்பிரஸ்து" என்றாள். "இந்தாங்க நீங்களே பேசுங்க உங்க பொண்ணுகிட்ட, என்ன நேரம்னு இத பெத்தேனோ தெரியல" என்ற புலம்பலுடன் போனை கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார்.



"ஏம்மா எப்பயும் அவள டென்சன் பண்ற" "அவங்க தான்ப்பா நா என்ன பேசுனாலும் டென்ஷனா ஆகுராங்க", அவருக்கு அந்நேரம் கால் வர, "சரிமா நா அப்புறமா பேசறேன். உடம்ப பாத்துக்கோ. கவனமா இரு" என்றவாறு போனை வைக்க. "சரிப்பா சரிப்பா" என போனை வைத்து விட்டு தானும் கிளம்பச் சென்றாள்.



பாட்டை சத்தமாக வைத்து விட்டு குளிக்க சென்றாள். இவள் உள்ளே நுழைய, இரணியன் போன் செய்தான். ஃபுல் ரிங் சென்று கட்டாகியது. அடுத்த அரை மணி நேரத்தில் வந்த போன் கால்ஸ் ௭தயும் அட்டென்ட் பண்ணவில்லை அவள்.



இரணியன் இருந்த டென்ஷனில், 4 முறை அவளுக்கும், 4 முறை ரூம் நம்பருக்கும் அழைத்து, மேலும் கடுப்பாகி விஷாவிற்கு அழைத்தான். நிதானமாக ௭டுத்தவனோ "சொல்லுங்க சார்" ௭ன்க. "இடியட் இன்னும் ரூம்ல ௭ன்ன பண்ணிட்ருக்க, வேல பாக்க வந்தீங்களா, இல்ல ஜாலியா ஊர் சுத்திட்டு போலாம்னு பிளானா? இன்னும் 2 மினிட்ஸ்ல 2 பேரும் ௭ன் ரூம்ல நிக்கனும்" ௭ன வைத்து விட.



'௭துக்கு ஃபோன் போட்டாரு, ௭துக்கு திட்னாரு' ௭ன்றவன் பாப்புவிற்கு கால் செய்ய போக, 2 வீடியோ மெஸேஜ் வந்து கடக்க, அதை ஓபன் செய்து பார்த்தவன் ஜர்க்காகி, பாப்புவிற்கு போன் பிஸி டோன் வர, திரும்ப 2 முறை முயன்று விட்டு, கதவை திறந்து, அவள் அறை வாசல் வந்து நின்றவன் கதவை தட்ட போக, உள்ளிருந்து "ஊட்டி மல பியூட்டி உன் பேரு என்னமா" பாட்டு அலறிக் கொண்டிருப்பதைக் கேட்டு, 'ரொம்ப சுத்தம், நைட்டு நீ பாத்த வேலையால! தமிழ்நாடே அப்படித்தான்மா உன்ன தேடிகிட்டுருக்கு, பாப்பு குட்டி, அங்க வெளியில என்ன நடந்துக்கிட்டுருக்கு உள்ள இப்படி பாட்ட போட்டு ஜாலியா ஆடிக்கிட்டு இருக்கியே நீ' ௭ன திட்டிக் கொண்டிருந்தவன், 'இந்த சத்தத்துல கதவை தட்டுனா மட்டும் கேட்ரவாபோது' என யோசித்து நிற்க.



இரணியன் மறுபடியும் அழைத்தான், "சார் இங்க தான் சார் நிக்கிறேன். ரெடியாகிட்டு இருக்காங்கன்னு நினைக்றேன் தட்டுனே கதவ திறக்கல" ௭ன்க, "இடியட் மாறி பதில் சொல்லிட்டே இரு" என கத்திவிட்டு தானே நேராக பார்க்க கிளம்பினான்.



அங்கு பாப்புக்குட்டி வீட்டிலும் முதலில் நியூஸ் பார்த்த சுஹாசினி, மற்றவர்களுக்கு அழைத்துச் சொல்ல. எல்லோரும் பாப்புக்குட்டியை பிடிக்க தேட, எங்கிருந்து அவள் எடுக்க.



வேதிகா அடுத்ததாக விஷாகனுக்கு அழைத்தாள். பதில் சொல்லி ஆக வேண்டுமே என்ற கட்டாயத்தில் அவன் போன் ௭டுக்க, அவளோ எடுத்ததும் "பழி வாங்கிட்டீங்கல்ல? மிஸ்டர் விஷாகன். பாப்புவோட விளையாட்டுத் தனத்த யூஸ் பண்ணிட்டீங்க அப்படித்தான?" என்றாள். 'நா அவ்வளவு ஒர்த் இல்லன்னு இவுங்களாம் ௭ப்பதான் நம்புவாங்க' ௭ன நினைத்தவன், "இதுல எனக்கு என்ன லாபம் இருக்கும்னு நினைக்கிறீங்க மேடம்? என் பாஸ் கம் என் வைஃப் ஓட அண்ணே அவரு. என் பேமிலில ஒருத்தர் நேம ஸ்பாயில் பண்ணி, பழிவாங்குறதுனால எனக்கு என்ன லாபம் இருக்க முடியும்னு யோசிங்க மேடம். இது யார் பாத்த வேலன்னு நீங்களும் உங்க பங்குக்கு ட்ரேஸ் பண்ணுங்க. நா வேணும்னா கம்பலைன்ட் ரைஸ் பண்றேன். நா இப்ப அட்டென்ட் பண்ணது பாப்புக்குட்டி ஓட ஃபேமிலி, அவங்கள நினைச்சு ஃபீல் பண்ணிட்டுருப்பீங்கன்னு தான், யூ நோ பாப்புவுக்கு இன்னும் விஷயம் தெரியாது, நானே அவங்க ரூம் வாசல்ல நின்னு அவங்க எப்போ வெளியில வருவாங்கன்னு தான் பாத்துட்டு இருக்கேன்" என்றான் ஒரே மூச்சில்.



"இந்த நியுஸ், நாளைக்கு எங்க வீட்டு பொண்ணு லைஃப்ப எந்தளவுக்கு பாதிக்கும்னு கொஞ்சம் யோசிங்க, நியூஸ்ல வந்துருச்சு, இது இல்லன்னு இனி அவுங்களே பிரேக்கிங் நியூஸ் போட்டு சொன்னாலும், யாரும் நம்ப மாட்டாங்க", "புரியுது மேடம், எங்க பாஸ் இதுக்கு எப்படியும் ஒரு சொல்யூஷன் வச்சுருப்பாங்க, டோன்ட் வரி" ௭ன சொல்லி கொண்டிருக்க, "என்ன பண்ணிட்டுருக்க விஷா? தாட்சா எங்க? வெளில வெயிட் பண்ற பிரஸ்சுக்கு பதில் சொல்லணுமே இந்த வீடியோ இங்கே யார் எடுத்தாங்கன்னு கண்டுபிடிக்கணும், சிசிடிவில செக் பண்ணி பாக்குறேன்னு போன ஹோட்டல் மேனேஜர இன்னும் ஆள காணோம், அத என்னன்னு பாக்காம இங்க என்ன பண்ணிட்டுருக்க" என்றான் ஏக டென்ஷனில்.



"சார் ரிலாக்ஸ், நா பாத்துக்குறேன், பாப்புக்கு தான் வெயிட் பண்றேன், உள்ள ஓவர் சவுண்ட்ல அவங்களுக்கு ஒண்ணுமே கேக்கல நினைக்கிறேன்", "கிரவுட் ஆகும் முன்ன பிராப்ளம் சால்வ் ஆகணும், டிசி சார்க்கு போன் பண்ணி ஃபர்ஸ்ட் அத யார் வெலில அனுப்பினாங்கன்னு கண்டு பிடிக்க சொல்லு, ஜான நேர்ல போக சொல்லு" ௭ன உத்தரவிட, "ஓகே சார் ஓகே சார்" என வேதிகாவிற்கு பதில் சொல்லாமலே வைத்து விட்டான்.



பின் விடாமல் பாப்பு ரூம் காலிங் பெல்லை அழுத்த, டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து வெளியே வந்தவள், ரூம் போன், செல் போன், காலிங் பெல் ௭ன ௭ல்லாம் அலறுவதைக் கேட்டு, 'நாம பேமஸ் ஆனாலும் ஆனோம், பிறந்த நாளுக்கு எல்லாரும் விஷ் பண்ண கிளம்பிட்டாங்க போல' என்றவாறு வந்து மொபைலை எடுக்க அட்டன்ட் செய்வதற்குள் அது கட்டாகி விட, அடுத்ததாக வாசலை நோக்கி சென்றாள்.



கதவைத் திறக்க இரணியனும், விஷாகனும் நிற்பதைக் கண்டு, "என் பர்த்டேவ விஷ் பண்ண மார்னிங் நேரிலேயே வந்துட்டீங்களா, தேங்க்யூ கம் கம்மின்" ௭ன வழிவிட, வேகமாக உள்ளே வந்த இரணியன், கோபத்தை எல்லாம் மொத்தமாக அவள் இடது கன்னத்தில் ஐந்து விரலாக பதித்தான்.



பாப்புவிற்கு கண் கலங்கிவிட்டது வலியில், பதிலுக்கு கொடுக்க கையை தன்னைப்போல் பழக்கத்தில் தூங்கிவிட்டாள், ஆனால் இரணியன் முகத்தைக் கண்டதும் கையை சுருக்கிக் கொண்டாள். அவளையும் அவள் ஓங்கியதயும் பார்த்தவாறு உள்ளே சென்றவன், முதலில் அலறிக் கொண்டிருந்த டேபை தூக்கி போட்டு உடைத்தான், "எப்பவுமே கவனமில்லாத ஸ்டுப்பிட் பிஹேவியர், வெளில என்ன நடக்குன்னு தெரியுமா? எவ்வளவு நேரம் ட்ரை பண்ணுறது உனக்கு? கெட் ரெடி குயிக், பிரஸ்க்கு ௭ன்ன பதில் சொல்லணும்னு டிசைட் பண்ணிவை ஹாஃப் அண்ட் ஹவர் தான் டைம்" என்றுவிட்டு, "சீக்கிரம் விஷா, உன் பிரண்ட சமாதானப்படுத்திட்டு இங்கயே நிக்காம, சிட்ஸுவேஷனோட சீரியஸ்னஸ் என்னன்னு சொல்லிட்டு வா" என்றவாறே வெளியேறினான்.



வெளியேறியவனை தீயாய் முறைத்தவள் அப்படியே சோபாவில் அமர்ந்தாள், அவள் எதிரில் வந்து நின்று தன் மொபைலுக்கு வந்த வீடியோவை ஓடவிட்டு காண்பித்தான். 'படப்பிடிப்பிற்கு வந்த இடத்தில் ரகசிய ஹனிமூன் கொண்டாடிய ஸ்மைலிங் சார்மும், அவரது மேனேஜரும்! கையும் களவுமாக மாட்டிய பின்னும் தன் இமேஜை எப்படி மீட்டெடுக்க போகிறார்' என இவள் அவன் அறையினுள் அவனை தாண்டிச் செல்வது மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது.



"சும்மா வாயில அவனுங்க ஏதாது சொன்னா சார் அத கண்டுக்கவே மாட்டாரு, ஆனா அப்படி கூட இதுவர ஒரு காசிப் அவர் வர விட்டதில்ல, இது வீடியோவோட தப்பா ப்ராஜெக்ட் ஆயிடுச்சு, நீ எதுக்கு அந்நேரம் போன, என்கிட்டயாது ஒரு வார்த்த சொல்லிருக்கலாம்ல, இப்ப பாரு இனி எப்படி சமாளிக்கன்னு வேற யோசிக்கணும், அவங்கள்லாம் நம்புற மாதிரி வேற சொல்லணும், " ௭ன்றுவிட்டு " "சரி வீட்டிலேயும் போன் பண்ணி பேசு பயந்துட்டுருக்க போறாங்க" என்றான்.



"இதப் பண்ணது யாருன்னு கண்டுபிடிச்சீங்களா?" என்றாள் நிதானமாக, "ஏன் நா போய் அத கண்டு பிடிக்றேன்னு போ போறியா? அப்டி ௭தும் செஞ்சிடாதம்மா, அத தான் விசாரிச்சுட்டு இருக்கோம், விஷயம் தெரிஞ்சு 1ஹவர் தான் ஆகுது, அதுல 1/2 மணி நேரம் ஒன்ன வெளியே கொண்டுவரவே சரியா போச்சு", "சரி நீ போய் சார்ம் கூட இரு", "சிட்ஸுவேஷன் உனக்கு எந்த அளவுக்கு புரிஞ்சதுன்னு எனக்கு தெரியல", "இதுல புரிய என்ன இருக்கு, சாதாரணமான ஒரு விஷயத்த மத்தவங்க பெருசா பாத்தா அதுக்கு நா என்ன பண்ண முடியும்? சார்ம் நேம் ஸ்பாயில் ஆகும், ஒண்ணுமே பண்ணாமே பிளே பாய் நேம் வாங்க போறாரு, அது மட்டும் தான் எனக்கு கொஞ்சம் யோசனையா இருக்கு" ௭ன்க.



"உன் நேமும் சேர்ந்து தான ஸ்பாயிலாகும், இதனால உனக்கு நாளைக்கு ஃபியூச்சரே இல்லாம கூட போகலாம்". "நா என்ன மதர் தெரசாவா என்பேஸ் எல்லாருக்கும் அப்டியே ஞாபகத்துல இருக்கிறதுக்கு, என் செகண்ட் அக்காக்கு ௭வனாது கழுத்த நீட்ட ஒத்துக்கணும், அந்த பிசாசுக்கு ஏத்த இழிச்சவாயன் எங்க இருக்கானோ? அதுக்கே இன்னும் வருஷமாகும், அதுக்குள்ள இப்படி ஒரு விஷயம் நடந்ததே எல்லாருக்கும் மறந்திரும், சோ ௭னக்கு மேரேஜ்லா கண்டிப்பா நடக்கும், பயப்படாம இப்ப இந்த இஷ்யுவ எப்படி அமுக்கலாம்னு மட்டும் பாரு, ஆனா ஒரு விஷயம், சார்ம் என்ன அடிச்சதுக்கு நா கோவமா தான் இருக்கேன்ற விஷயத்த அவர்ட் கன்வே பண்ணிடு, ஒரு பர்த்டே பேபிய அளவிட்ட பாவம் அவர சும்மா விடாதுன்னு சொல்லி வை" என்றாள் முடியை சிலிப்பி எங்கோ பார்த்து.



மறுபடியும் 'இது என்ன ரகமோ' என்ற சிந்தனையில் வார்த்தை வராமல் கிளம்பிவிட்டான் விஷாகன்.



இதற்கிடையில் மூன்று முறை அடித்து ஓய்ந்திருந்தது பாப்புக்குட்டியின் மொபைல். மீண்டும் இவள் அழைக்க, அந்தப்பக்கம் எடுத்ததும் "இங்க பாருங்க, ஃபஸ்ட் கூல், ஒன்னும் பிரச்சன இல்ல, பர்த்டே விஷ் வாங்கப் போனேன், அத நியூஸ் ஆக்கிட்டாங்க அவ்வளவுதான்" என்றாள் ஈசியாக. "நீ வீட்டுக்கு கிளம்பி வாடி மொத உன்னல்லாம் அடிச்சு வளர்க்காம தான இப்டி தெனாவெட்டா பேசிட்டுருக்குற, கொஞ்சமாச்சும் அசிங்கம் தோணுதாடி, கண்ட நேரத்தில ஒரு பையன் ரூமுக்குள்ள போற அளவுக்கு உனக்கு ஃப்ரீடம் கொடுத்து வளர்த்தார் ஓ அப்பா" வடிவு கத்த, "ம்மா நீ வீனா டென்ஷன் ஆகுற அவரு ஒரு பெரிய ஆக்டர், சின்னதா என்ன விஷயம் கிடைச்சாலும் அத பெருசா தான் போடுவாங்க, அத அவரே சமாளிச்சுப்பாரு, தப்பான இன்டன்ஷன்ல இங்க ஒன்னும் நடக்கல, அதனால கவலைய விடு", "இல்லாததயா பெருசா பேசுவாங்க, நீ செய்யப் போய் தான இவ்வளவும், கொஞ்சமாச்சும் மான ரோஷம் இருந்தா இப்படி ஒரு நியூஸ கேட்டு உசுர விட்டுருக்கனும்டி, இங்க ஒன்ன பெத்ததுக்கு நாங்க தான் விஷத்த வாங்கி குடிச்சிட்டு சாகணும்" "சீரியலா பாக்காதன்னா கேக்றியா?", " விளையாடாத பாப்பு, அதுக்குள்ள இங்கே என்னல்லாம் பேசுறாங்கன்னு தெரியுமா? நாங்க தான் உன்ன அனுப்பனோம்மாம், அதிக செல்லம் கொடுத்து கெடுத்துட்டோம்மாம், பிள்ள வளக்க தெரியலையாம் ௭ங்களுக்கு", "அவுங்க அந்த கால படத்த பாத்துட்டு பேசுவாங்கம்மா, நீ அதெல்லாம் பெருசு பண்ணாத" ௭ன்றாள் டென்ஷனில் இருப்பவரை மேலும் டென்ஷனாக்க, "பாப்பு நீ எப்ப இங்க கெளம்பி வர்ற, போது நீ வேலை பார்த்தது வர", என்றாள் வேதிகா நடுவில் வந்து.



"வேலைய விட்டுட்டு வந்தா, உடனே 'மானம் போனதால் வேலையை விட்ட மேனேஜர்ன்னு சொல்றதுக்கா, ஏன்கா நீ வேற, ௭ல்லா இன்னைக்கு பேசிட்டு நாளைக்கு வேற நியூஸ் வரவும் அதைப் பாக்க போயிடுவாங்க ஃப்ரீயா விடுங்க", "அப்பா இங்க எவ்வளவு வருத்தப்படுகிறார் நீ ரொம்ப ஈசியா பேசுற, உனக்கு இதோட சீரியஸ்னஸ் இன்னுமே புரியல பாப்பு",



"லவ்ட்ஸ்ல போடு" ஸ்பீக்கர் ஆன் செய்யப்பட, "இங்க பாருங்க, இந்த இஸ்யூ வந்த வேகத்தில போயிடும், சோ யாரும் ஃபீல் பண்ண வேணாம், இப்ப நா பாதில விட்டுட்டு வரமுடியாது. உங்களுக்கு தெரியாததா என்ன பத்தி, ஒரு ப்ராப்ளம்னு வந்தா, உட்காந்து அழுற மாறியோ, பயந்து ஓடுற மாறியோ, நீங்க என்ன வளக்கலப்பா, மேனேஜ் பண்ண சொல்லி கொடுத்திருக்கீங்க, இந்த இடத்தில் நீங்க என்ன செய்யணும் தெரியுமா? அந்த வீடியோ எடுத்தவன கண்டுபிடிக்கணும், அக்கா அவன புடிச்சு ஜெயில்ல போடட்டும், எங்க அந்த ரெண்டாவது டிக்கட்டு, அவட்டயே போனா போதுன்னு இந்த கேஸ ஒப்படைக்றேன், அவளே இந்த கேச வாதாடட்டும், நீங்க தீர்ப்பு எழுதுங்க. இதுதானப்பா நம்ம ஃபேமிலி, வடிவோட சேர்ந்தீங்கனா ஆனியன் உறிகாமலேயே அழ வேண்டியத தான் இருக்கும் என்றாள் இலகுவாக.



அவள் கடைசியாக பேசியவற்றை அவளை அழைத்துப்போக வந்த இரணியனும் கேட்டு நின்றான். அவன் ஆல்ரெடி எடுத்த முடிவு சரியே என மறுபடியும் தீர்க்கமாக நம்பினான்.



"என்னாச்சு சத்தத்தக் காணோம்" என்றாள் போனில், "நீ சீக்கிரமா வீட்டுக்கு வந்துரு பாப்பு, எனக்கு உன்ன பாக்கணும்" என்றார் அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மெய்யப்பன், "சுயர்ப்பா, மீட் யூ சூன், மிஸ் யூ ஆல்" என்றாள்.



போன் கட்டாகியது மெதுவாக எழுந்து திரும்ப, இரணியன். அமைதியாக நின்றுவிட்டாள். அவளையே பார்த்தவாறு வந்தவன், ஸோபாவில் கால் மேல் காலிட்டு நிதானமாக அமர்ந்தான். ஃபுல் யெல்லோ சுடிதாரில், குளித்துமுடித்து வாரப்படாத தலையுடன், மேக்கப் இன்றி அவன் பதித்த கை தடத்துடன், அழகாக மிக அழகாக தெரிந்தாள் அவன் கண்களுக்கு.



"என்ன படபடன்னு ஏதாவது பேசிட்டே இருப்ப, இப்ப முழுசா அஞ்சு நிமிஷம் அமைதியா இருந்துட்ட", என்றான். "பர்த்டே கிப்ட் குடுத்தீங்களே, அந்த சந்தோஷத்ல இருக்கேன், பேச்சே வரல", "குட், இப்ப ப்ரஸ்ட்ட என்ன சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டியா? ", " நா என்ன சொல்லணும்?" ௭ன கேக்க, "என்ன சொல்லணுமா? பர்த்டே விஷ் வாங்க தான் சார்ம் ரூமுக்கு போனேன்னு சொல்லு" ௭ன்றான் லேசா சிரித்ததுபோல் சிரிக்காமல்.



"எதுனாலும் நீங்க சொன்னாதானே வெயிட்டா இருக்கும், நா சொன்னா நீங்க சொல்லிக்குடுத்து சொல்ற மாதிரி தான் இருக்கும், உண்மையவே சொல்லுங்க, அதயும் நீங்களே சொல்லுங்க" ௭ன்றாள் ௭ங்கோ பார்த்து. "சுயரா?" ௭ன்றான் கேள்வியாக.



"அதுல என்ன டவுட்", "நா என்ன சொன்னாலும் ஓகேவா", "௭னக்கு உங்க இமேஜ காப்பாத்தணும், அது என்னால ஸ்பாயில் ஆனதால, நீங்க என் நேம தாராளமா சொல்லுங்க, நோ இஸ்யூஸ். ஐ கேன் மேனேஜ். பட் அதுக்கு முன்ன என்ன அடிச்சதுக்கு நீங்க சாரி சொல்லணும்" என்றாள், இறுதியில் ஸ்ட்ரிக்டாக.



"ஓ தாராளமா சொல்லலாம் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டு, லட்ஸ் மூவ்" என ஸ்டைலாக எழுந்தவன். அவளை வலது கையில் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான்.



ஹோட்டல் வாசல் வரை அப்படித்தான் நடந்து வந்தான் எல்லோருமே வேடிக்கை பார்த்தனர். அவனது ரசிகர்கள் அவனது பெயரைச் சொல்லி ஆரவார ஆர்ப்பாட்டத்தை செய்துகொண்டிருக்க, குவிந்திருந்த மைக் முன் வந்து நின்றான்.



பாப்புவை பிடித்து இருந்த கையால் சுண்டி இழுக்க, ௭ன்ன செய்ய போகிறான் ௭ன்ற யோசனையில் அசால்டாக நின்றவள், அவன் இழுக்கவும், நெருங்கி அவன் மேல் மொத்தமாக வந்துவிழ, வலது கையால் அவள் இடுப்பில் கை விட்டு அணைத்தவன், "ஹாய் ஃபிரண்ட்ஸ், லெட் மீ இன்ட்ரோடியூஸ் யூ ஆல், மை பியான்சி மிஸ். தாட்சியாயினி" என்றவாறு அவன் அடித்த இடது கன்னத்தில் அழுந்த குழிவிழ ஆழமான முத்தம் பதித்தான். முதன்முறையாக ௭ன்ன செய்யவென தெரியாமல் வாயடைத்து நின்றாள் பாப்புக்குட்டி, அதைவிட பின்னிருந்து இதைப் பார்த்த விஷா மயங்கி விழ கார்ட்ஸ் தாங்கி கொண்டனர். இரணியனின் திடிர் முடிவு ௭தனால் ௭ன பாப்புவுடன் சேர்ந்து ௭ல்லோரும் குழம்பினர்.
 
அத்தியாயம் 13

அவன் கொடுத்த முத்தத்தின் திகைப்பில் அவனை திரும்பி முட்டைக் கண்ணை உருட்டி விழித்தாள். அவ்வளவு நெருக்கமிருந்தும் அவளுக்கு அது புதிதாக தோன்றவில்லை. யார்க்கனவே அவனை நெருக்கத்தில் உணர்ந்தது போலவே அவன் கையணைப்பில் இருந்தாள்.

அவனும் அவள் முகத்தில் வந்து போகும் பாவனைகளை ௭ல்லாம் கண்டவன், சிரித்து புருவத்தை உயர்த்தி "என்ன?" என்க. ஒன்றுமில்லை என்பதாக தலையசைத்து மறுத்தாள். பார்வை மட்டும் அவன் முகத்தை விட்டு அகலவில்லை, அந்த சிரிப்பு வாழ்க்கை முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென தோன்றியது. அவள் சுய நினைவிற்கு வராததை கண்டவன், அவளைப் பிடித்திருந்த இடுப்பில் அழுத்தம் கொடுக்க, 'ஸ்' என்ற சத்தத்துடன் அந்த இடத்தை தடவ வந்தவள், அது அவன் கையில் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டு சுற்றுப்புறத்தை ஆராய்ந்தவாறு "என்ன பண்றீங்க?" என அப்போது தான் எடுக்கவேப் போராடினாள் அவன் கையை, நெளிந்து கொண்டே.

அவள் எடுக்க முயல்வதை கண்டு மேலும் இறுக்கி, அவளை கைவளைவிலேயே வைத்துக்கொண்டு மறுபடியும் கிஸ் பண்ணுவது போல் கிட்டப் போக, அவள் பின்னால் சாய்ந்தவாறு முறைக்க. உதடு பிரிக்காமல் சிரித்தான். அவள் பார்வை முறைப்பதிலிருந்து ரசிப்பிற்கு மாறியது.

அவனும் ரசிப்பது போலவே, மெதுவாக அவள் கன்னத்தில் இடது கையால் தட்டியவன், இதழ் பிரிக்காமல் ரகசியமாக, "இதுக்கு மேல பிரஸ் முன்ன சீன் கிரியேட் பண்ண வேண்டாம், கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணுனா, சீக்கிரமா முடிச்சுட்டு போயிறலாம்" என ஒரு இழுவையில் அவளை நேராக நிமிர்த்தி விட்டு, திரும்பி "எனி க்வஸ்டின்?" என்றான் பிரஸை பார்த்து.

பாப்புக்குட்டிக்கு தலை வலிக்க ஆரம்பித்திருந்தது, 'என்ன நடக்கு, நா என்ன பண்ணிட்டுருக்கே?' என யோசித்தவள், 'ம்கூம், முதல்ல இங்க என்ன கேக்குறாங்க, இவரு என்ன சொல்லி சமாளிக்குறாருன்னு கவனத்த இங்க வச்சு பாக்கணும், அப்புறம் ரியாக்ட் பண்ணலாம்' என முடிவுக்கு வந்தாள்.

இதற்கிடையில் மயங்கி விழுந்த விஷாகனை, கார்ட்ஸ் தெளிய வைத்து அழைத்து வந்திருந்தனர். தெளிந்தவன் பாப்பு அருகில் வேகமாய் வந்து நின்று கொண்டான், அவள் பிரஸ் முன் ஏதும் பிரச்சனை பண்ணி விடக் கூடாதென்று.

இரணியன் பிரஸ்ஸிடம் பேச ஆரம்பித்தான். "இந்த முடிவு நீங்க எப்ப எடுத்ததுன்னு தெரிஞ்சுக்கலாமா சார்?" ஒருவர் கேட்க. "மேரேஜ் முடிவு மொதயே எடுத்தது தான், ஆனா உங்கட்ட இன்ஃபார்ம் பண்ண முடிவு பண்ணது இப்பதான்" ௭ன்றான். இன்னொரவர் "அன்னைக்கு ஒரு இன்டெர்வியூல உங்க 2பேர் பத்துன கொஸ்டினுக்கு, உங்க யூகத்துக்குலா நா பதில் சொல்ல முடியாதுன்னு சொல்லியிருந்தீங்க" ௭ன கேக்க. "௭ஸ். அது முடிஞ்சு 1 மந்த் ஆச்சே, மே பி டெலிகாஸ்ட் பண்ண லேட்டாகியிருக்கலாம். எங்களுக்கு அண்டர்ஸ்டாண்ட் பண்ண டைம் தேவைப்பட்டுச்சு. இந்த ஒன் மந்த் மோர் தன் எனஃப். சோ வீ டிசைட்டேட். வீ பிலிவ், கேன் மேக் எ நியூ வேர்ல்ட்" ௭ன்றான், அவள் இடுப்பிலிருந்த கையை தோளுக்கு மாற்றி, இறுக்கமாக. "எப்ப மேரேஜ் வச்சுக்கிறதா இருக்கீங்க சார்ம், லவ் மேரேஜா அரேஞ் மேரேஜா" ௭ன்றார் ஒரு நிருபர் ரசிகராக. "100% அரேஞ் மேரேஜ் தான். எங்க பேரெண்ட்ஸ் தான் நாங்க ஒருத்தர ஒருத்தர் அண்டர்ஸ்டண்ட் பண்ணிக்க, இந்த மேனேஜர் ஐடியாவே குடுத்தாங்க, போயிட்டுருக்க படம் முடியவும் மேரேஜ் பண்ணிக்க டிசைட் பண்ணிருக்கோம்" இப்போது இரணியனை திரும்பி பார்த்தாள் பாப்பு.

சிறிது சலசலப்பிற்கு பின் "சரி சார், மேரேஜ்க்கு முன்னாடி லிவிங் டுகெதர் அதப்பத்தி என்ன நினைக்குறீங்க?" என்றார் ஒருவர். "நீங்க டைரக்ட்டாவே கேக்கலாம். அந்த வீடியோ அவுங்க உள்ள வந்த டைம் நோட் பண்ணவங்க, தாட்சா வெளில போனதையும் நோட் பண்ணிருக்கலாம். இன்னைக்கு அவங்க பெர்த்டே, அது எனக்குத் தெரியாது. சோ பஸ்ட் விஷ் என்னோடதா இருக்கணும்னு தேடி வந்தாங்க தட்ஸ் இட். விஷ் வாங்கிட்டு 10 மினிட்ஸ்ல கிளம்பி போயிட்டாங்க. இது என் பர்சனல் நா ஏன் எக்ஸ்பிலைன் பண்ணனும்னு கேட்டுட்டு போயிட்டேயிருக்கலாம். என் மேல நம்பிக்க வச்சுருக்க என் பேன்ஸ்க்காகவும், என்னோட பியான்ஸி நேம் பஸ்ட் டைமே தப்பா ப்ரோஜெக்ட் ஆகுறத விரும்பாதனாலயும் தான் இந்த இன்டெர்வியூ, தேங்கியூ" என இடது கையாட்டி இன்டர்வியூவை முடித்துக்கொண்டு கிளம்ப, "வாழ்த்துக்கள் தலைவா", "உன்ன நாங்க நம்புறோம், உனக்கு நாங்க இருக்கோம்" என வேறு வேறு குரல்கள் ஒலிக்க தொடங்க, எல்லோருக்கும் டாடா காமித்தவாறு பாப்புவை கையணைப்பில் வைத்தவாறே அறைக்கு திரும்பி விட்டான்.

பாப்பு யோசனையிலேயே அவனுடன் செல்ல, விஷாகன் பீதியோடு சென்றான். இரணியன் நேராக சென்றது விஷாகன் அறைக்கே. அவனுக்கு அவர்களின் இருவர் அறையிலும் நம்பிக்கை இல்லாமலிருக்க அங்கு சென்றான். அறையினுள் நுழைந்ததும் விஷாகன் அங்கொன்றும் இங்கொன்றுமாக பரத்தி போட்டிருந்ததை வேக வேகமாக வாரி சுருட்டி கொண்டிருக்க.

இரணியன் தன் அணைப்பில் இருந்து அவளை விடுவிக்க, அவனை அந்த கையிலேயே நறுக்கெனக் கிள்ளினாள். இதை எதிர்பார்க்காதவன் "ஏய் லூசு" எனத் திட்டிக்கொண்டே கையை தேய்க்க, "யாரு நானா லூசு? நீங்கதான் லூசு கணக்கா அறிக்கைய விட்டுட்டு வந்துருக்கீங்க".

வலி ௭ரிச்சலில் "என்ன ஓவரா பேசுற? நீ பாத்த வேலைக்கு தான் நா சமாளிச்சுட்டு வந்துருக்கேன்" ௭ன்றான்.

முறைத்துக்கொண்டு "அதுக்கு உள்ளத மட்டும் சொல்ல வேண்டியது தான, எதுக்கு அந்த அரேஞ்ச் மேரேஜ், அண்டர்ஸ்டாண்ட் பண்ண டைம் ஆச்சுனுலா எக்ஸ்ட்ரா பிட் போட்டுட்டு வந்திருக்கீங்க. அதுவும் என்கிட்டே பெர்மிஷன் வாங்காம, என்ன, என் பேரெண்ட்ஸ்லாம் இன்குலுட் பண்ணி சொல்லிட்டீங்க. இனி அது இல்லன்னு மறுத்துச் சொல்ல ரீசன் வேணுமே" என எகிறிக் கொண்டு அவனை நோக்கி செல்ல.

அள்ளியதை தூக்கி ஒரு ஓரமாய் வீசிய விஷாகன் "பாப்பு" என அழைத்தவாறு ஓடிவர, "ஓடிரு, அங்கேயே நா ஏதாவது சொல்லி சமாளிச்சிருப்பேன். கைய இழுத்து இழுத்து பேச விடாம பண்ணிட்ட, கொன்றுவேன் போயிரு" ௭ன விஷாவை திட்ட.

"ஓ! உனக்கு அங்கேயே பேசுற ஐடியா வேற இருந்ததா? என்ன வேணா சொல்லட்டுமான்னு கேட்டேன். நீ ஓகேன்னு சொன்ன. ஆக்சுவலா இந்த ப்ராப்ளம் இவ்வளவு பெருசானதுக்கு ரீசனே நீ தான். சோ யூ ஹேவ் டு அப்போலஜைஸ்" என்றான் இரணியனும் பதிலுக்கு, ஆனால் குரலில் நக்கலும், விளையாட்டுத்தனமுமே இருந்தது. கோவம் இல்லை. இது விஷாகனுக்கு புதிது, இப்படி இரணியனை அவன் கண்டதாக ஞாபகம் கூட இல்லை, அவன் அதிசயமாக பார்த்து நிற்க.

"என்ன வேணான்னா? ஓ காட், இப்ப வடிவு போன் பண்ணா நீங்க தான் பதில் சொல்லணும். எப்டி இல்லன்னு சொல்றதுன்னு முடிவு பண்ணிக்கோங்க" எனக் கையைக் கட்டி திரும்பி நிக்க. "என்ன இல்லன்னு சொல்லணும்" ௭ன்றான் நிதானமாக.

"ஹான்" என கத்திக் கொண்டு வேகமாக அவன் முன் வந்தவள் "பிரஸ்ல சொன்னீங்களே அதெல்லாம் லோலாய்க்கு சொன்னது, ஏதாது பேசி அவங்கள சமாளிச்சுக்கிறேன்னு சொல்லணும்" ௭ன்றாள் மூச்சை இழுத்து பிடித்து.

"நா எதுக்கு சொல்லணும். உன் வீட்ல சொல்றது நீ சொன்னாதான் வெயிட்டா இருக்கும். நா சொன்னா, நீ சொல்லி தந்து சொன்னதாத் தான் இருக்கும்" என்றான் அவன் அவள் சொன்னது போலவே.

"ஹா" ௭ன கத்தி, சுற்றி பொருள் தேடிக்கொண்டு ஒன்றும் கிடைக்காமல், அவனை கொல்லப் போவதுபோல் கழுத்தை நோக்கி கையை எடுத்திட்டு போக, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த விஷா "பாப்பு என்ன செய்ற? கன்ட்ரோல் யுவர்செல்ப்" என அவள் கையை இழுக்க, இரணியனை அடிக்க முடியாத கோபத்தில் இவனைப் பிடித்துத் தள்ளிவிட சோபாவில் சென்று விழுந்தான்.

பின் இரணியனிடம் திரும்பி, "என்ன முடிவு பண்ணிருக்கீங்க, ஃபிராங்க்கா சொல்லுங்க" என்றாள். "வெளில சொன்னது தான், அதுல மாற்றுக்கருத்து இல்ல" என்றான் முடிவாக, தெளிவாக.

"வாட் யூ மீன்? அப்ப என்ன மேரேஜ் பண்ணிக்க போறீங்களா? எதுக்காக இந்த சின்ன விஷயத்துக்காகவா? எப்படி அக்ரிமென்ட் பேஸிஸ்லயா? இல்ல பார்மாலிட்டிஸ்க்கு தான் மேரேஜ், மத்தபடி நீ யாரோ நா யாரோன்னு சொல்லப் போறீங்களா? இதுக்கெல்லாம் நா சம்மதிக்க மாட்டேன். வடிவு என்னைய போட்டு தள்ளிடும், விளையாடாம சொல்லுங்க" என அவள் விடாப்புடியாக நிற்க.

"எனக்கு இப்படிலா எந்த ஐடியாவும் இல்ல. இப்போதைக்கு வேறு ஆப்ஷன் இல்லாம தான் இந்த முடிவுக்கு வந்தேன், பட் டெசிசின் இஸ் டிசைடட் தட்ஸ் இட். அதுல எனக்கு டவுட் இல்ல, நீ தான் யோசிக்கணும். யோசிச்சே சொல்லு, ஒன்னும் அவசரமில்ல" ௭ன அவன் அசால்ட்டாக சொல்ல.

"போனா போகுதுன்னு நீங்க எதுக்கு எனக்கு வாழ்க்கை கொடுக்கணும். ஓ இப்படி ஒரு விஷயம் நடந்துருச்சே இனி இவள யாரு கல்யாணம் பண்ணிப்பான்னு நினைச்சுட்டீங்களோ?"
"எனக்கு அவ்வளவு பெருந்தன்மையான மனசு இல்ல". "அப்ப என்ன புடிச்சிருக்கா?" "ம் கேரக்டர் வைஸ் ஓகே தான், மேனேஜ் பண்ணிப்பேன்", அவள் முறைக்க.

"உனக்கு நான் சாய்ஸ் கொடுக்கல, வேற ஆப்ஷன் இல்லன்னு சொல்றேன்". "ஏன் உங்கள யாரும் வேணான்னு சொல்ல மாட்டாங்கன்ற எண்ணமா?” "நீ இப்படித்தான் கொஸ்டினா கேட்டுட்டு இருக்க போறியா?” "உங்களுக்கு நீங்க பண்ணிட்டு வந்த விஷயம் ஈசியா தெரியுதா?" பாப்பு கேட்க.

"ஹப்பா உனக்கு கூட ஒரு விஷயம் பெருசா தெரியுதே" நடுவில் விஷா சொல்ல.

"சட் டப் விஷா" என சென்று சோபாவில் அமர்ந்து விட்டாள்.

"என்னாச்சு சார். நீங்க சீரியசா தான் சொல்றிங்களா?" விஷா கேட்க. "ஏன் உனக்கும் நா விளையாடிட்டுருக்குற மாறி இருக்கா?” "இல்ல சார்" அவன் இழுக்க. "உனக்குத் தெரியும் தான, நா டிசைட் பண்ணா பண்ண தான். அவளுக்கு புரிய வை. ஆப்ட்டர்நூன் மேலனாலும் ஷாட்டுக்கு ரெடியாகணும்" என்று விட்டு தன் அறைக்கு செல்ல வெளியேறிவிட்டான்.

"எப்பவும் இவங்களுக்கு புரியவைக்க போயிட்டு நாந்தான் மண்ட குழம்பி வருவேன், இன்னைக்கு மட்டும் புதுசாவா நடந்துறப் போகுது" என புலம்பியவாறே சென்று பாப்புத் தோளைத் தொட்டான்.

அவள் நிமிர, "என்னாச்சு" ௭ன்றான். "நடந்தத நீயும் தான பாத்த, உன்னால இத அக்சப்ட் பண்ணிக்க முடியுதா?” "உன்னோட பர்த்டேக்கு காட் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்டா நெனச்சுக்கோ". "எரும! சர்ப்ரைஸ்ன்னா கிடைச்சதும் சந்தோசமா இருக்கனும், குழப்பமா இருக்கக்கூடாது". "இப்போ உனக்கு என்ன குழப்பம். சாருக்கு உன்ன பிடிச்சிருக்கு. இல்லாம கண்டிப்பா இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்க மாட்டாங்க". "அதுக்காக என்ட்ட ஒரு வார்த்தை கேட்காம அவர் அப்படி அனௌன்ஸ் பண்ணலாம்?", "பாயிண்ட்!" விஷா சொல்லி சிரிக்க.

"எங்க அம்மா இங்க வேலைக்கு போறேன்னு சொன்னதுக்கே மூக்கால அழுதாங்க", "பை நோஸ்? ஹவ் இஸ் இட் பாஸிப்ல்?” ஸ்லோமோஷனில் திரும்பி முறைத்தவள் அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தவாறு எழுந்து வந்து, "நீ ஓவர் குஷில இருக்கத பாத்தா அவருக்கு இந்த ஐடியா கொடுத்ததே நீதான் போல" அவன் திருதிருவென முழித்து "இல்லயே" என்க.

"உன் முழியே சரியில்ல. சிக்குற அன்னைக்கு இருக்குடி" என விரல் நீட்டி எச்சரித்தாள். திடீரென "ஐய்யோ இது இப்ப லைவ் டெலிகாஸ்ட் ஆகிருக்குமே, என் போன்" என சுற்றி சுற்றி தேடியவள், தலையில் அடித்துக் கொண்டு தனது அறையை நோக்கி ஓடினாள்.

வேகமாய்ச் சென்று போனை எடுக்க, ஒரு கால் கூட வந்திருக்கவில்லை. டிவியை ஆன் செய்து பார்த்தாள், எல்லா நியூஸ் சேனலிலும் இவர்கள் இருவர்தான் நின்றனர். தோளில் கையிட்டு அணைத்து அவன் நின்ற விதம் இப்போது பார்க்கும் போது கூட ஒரு வித பாதுகாப்பை உணர்ந்தாள்.

"அம்மா கூப்பிடிருக்காங்களா?" பின்னையே வந்த விஷாகன் கேட்க. "இல்ல, ஆனா கண்டிப்பா நியூஸ் தெரிஞ்சிருக்கும். செம கடுப்புல இருப்பாங்க. ஆனாலும் நா சார்ம் பக்கத்துல நிக்கிறது செம மேட்ச்ல" ௭ன ரசிக்க.

"ரணகளத்திலயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு". "எனக்கு அவர ரொம்ப ரொம்ப புடிக்கும் தான். அதுக்காக மேரேஜ், நா யோசிச்சே பாக்காத ஒரு வே அது. ஹெட்வெய்ட்டா! என்ன கன்சல்ட் பண்ணாம ஒரு விஷயத்த மீடியா முன்ன அனௌன்ஸ் பண்ணதும் எனக்கு பிடிக்கல" ௭ன்றாள் மூஞ்சை சுருக்கி.

"ஓ! அப்போ வீட்ட நெனச்சுல்லா பயமில்ல, ஓ பிரச்சனை உன்கிட்ட சொல்லிட்டு அங்க சொல்லணுங்குறது மட்டும்தான்". "ம் 70% அதுதான்". "சரி சார் உன்ட்ட டைரக்டா அவர கல்யாணம் பண்ணிக்க கேட்டிருந்தா?” "யோசுச்சுருப்பேன்". "இப்பயும் யோசி, டைம் எடுத்துக்கோ". "உனக்கு புரியல விஷா, சார்ம் என்ன புடிச்சு அத கேக்கல, சிச்சுவேஷன் பெருசாகம இருக்க இத கேட்டுட்டு, அப்புறமா புடிக்க வைக்க ட்ரை பண்றாரு. இது எப்டி ஹெல்த்தி ரிலேஷன்ஷிப்பா இருக்கும்?” "எனக்கு உன்ன புரியவே இல்ல பாப்பு". "சுத்தம், இவ்வளவு தெளிவா சொல்லியும் புரியலன்னா ஒன்னும் செய்ய முடியாது".

அந்நேரத்தில் பாப்பு போன், "ஏதோ இரவோடு ஒளியாய் கூடும் உறவொன்று கேக்கிறேன்" என பாட்டு பாட எடுத்து "ஹலோ" என்றாள். "லஞ்ச் முடிச்சுட்டு ஸ்பாட் போகணும், சீக்கிரம் வா" என வைத்து விட்டான்.

"பாத்தியா, எப்பயும் சார்ம் ஏன் உனக்கே போன் பண்ணி என்ன கூப்பிடுறாருன்னுவியே இப்ப உனக்கே கூப்பிட்டாரு" ௭ன்றான் விஷா நக்கலாக. "அவரு போன்லயே என் நேம் கூட சேவ் பண்ணாத சார்ம், என்ன அவரு லைஃப்ல சேவ் பண்ண நினைக்குறாருன்னா எங்கேயோ இடிக்குது விஷா". "ஆரம்பிச்சுட்டியா உன் சி.ஐ.டி. வேலைய, கெளம்பு போகலாம்" என கிளப்ப, பெருமூச்சோடு எழுந்தவள் தலையை போனிடெய்ல் ஆக்கிக்கொண்டு, பேஸ் வாஸ் பண்ணிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

வாசலை நெருங்குகையில் "ஏன் பாப்பு நா ஒரு விஷயம் கேட்டா கோவப்பட மாட்டியே?" ௭ன்றான். "கோவம் வர்ற மாதிரி நீ கேக்காத". "ஸு, பதில் சொல்லுவியா? மாட்டியா?” ஸ்லீப்பர் போட்டு கதவை லாக் செய்துவிட்டு லிப்டை நோக்கிய நடந்தவாறு "கேளு" என்றாள்.

"இல்ல சார் கிஸ் பண்ணாருல்ல" அவன் இழுக்க, அவள் ஒரு மாதிரியாக பார்க்க. "அப்ப பிரஸ் முன்னால வச்சு", "ம்"அவள் தலையை ஆட்டி ஆமோதிக்க, "பாத்த நானே மயங்கி விழுந்துட்டேன் வாங்குன நீ எப்டி ஸ்டெடியா நின்ன?" என்றான்.

லிப்ட் செகண்ட் ப்ளோர் வந்திருக்க, வெளியேறியவள் "எனக்கு முத தடவ வாங்குன மாதிரியே இல்ல, இதுக்கு முன்ன பல தடவ வாங்குன மாதிரி தான் இருந்தது" என இரணியன் ரூமை நோக்கி நெருங்கியிருந்தவள் பெல் அழுத்தப் போக, "என்னது?" என்ற கூவலுடன் ஓடி வந்து பெல் அழுத்த விடாமல் தடுத்தவன், "என்ன சொல்ற நீ?" ௭ன்றான் அவ்வளவு ஆச்சரியத்தை தேக்கி, "மே பி அவரு பிலிம்ல பண்றத பாத்து பாத்து பழகிட்டேனோ என்னவோ?" என அவனை விலக்கி பெல்லை அழுத்தியிருந்தாள்.

"அது எப்படி பழக்கத்துக்கு வரும்" எனக் குழம்பி அவன் முனுமுனுக்க, "நீ வேணும்னா ஒருக்கா வாங்கி பாரு டிஃபரண்சியேஷன் தெரிஞ்சா சொல்லு" என இவள் சொல்லிக் கொண்டிருக்க இரணியன் கதவை திறந்தான். இருவரையும் பார்த்தவாறு வெளியே வந்தவன், "நீங்க வந்து என்ன அலெர்ட் பண்ணனும், இங்க நா உங்கள அலெர்ட் பண்ணி வர வைக்க வேண்டியிருக்கு. ஒருத்தர் பாத்தாதுன்னு ரெண்டு பேரு வேற" என முன்னால் நடக்க, "லஞ்ச்" என்றாள் கத்தி. "காலேஜ்ல சூட்டிங் டூ ஹவர்ஸ் தான் பெர்மிஷன் கொடுத்திருக்காங்க, சோ சூட் முடிச்சுட்டு லஞ்ச் ஓகே வான்னு கேட்டாங்க. ஓகேன்னு சொல்லிட்டேன்" நீண்ட விளக்கம் கொடுத்தான்.

விஷா நினைத்து பார்த்தான், 'நாம கேட்டிருந்தா? "இப்போ உடனே சாப்பிட்டே ஆகணுமா?" 'என இரணியன் கேட்பது போல் நினைத்து பார்த்துக்கொண்டான்.

"காலையிலிருந்து சாப்பிடல, பெர்த்டே அதுவுமா இப்படி விரதமிருக்கேன்" பாப்பு புலம்ப. "நல்லதுதான, அதான் எங்க சார் மாதிரி ஒரு மாப்பிள்ள கிடைக்கப் போகுது உனக்கு". 'வாய மூடு என்பதுபோல் அவள் சைகை காண்பிக்க, தோளை குலுக்கி ஏற்றுக்கொண்டான்.

ஸ்பாட்டில் அனைவரையும் இரணியனுக்கும், விஷாகனுக்கும் தெரியுமோ, என்னவோ, அனைவருக்கும் பாப்புக்குட்டியை தெரியும். செல்ப் இன்ட்ரோ ஆகியிருந்தாள், அதனால் இப்போது ஸ்பாட்டுக்கு செல்லவும் ஆளாளுக்கு விஷ் செய்ய, "கல்யாணத்துக்கு நேர்லேயே வந்து வாழ்த்துங்க" என்று விட்டாள் பெருந்தன்மையாக.

அதன் பின் 2.30 மணிநேரம் படப்பிடிப்பில் ஓடி விட, லஞ்ச் வந்துவிட்டிருந்தது. இரணியன் கேரவனில் அமராமல் வெளியேவே கேண்டீன் போன்றவற்ற அமைப்பில் அமர்ந்து விட, அவனுக்கு பாப்புக்குட்டி பரிமாறிக் கொண்டிருக்க, அந்த நேரம் இவர்களை பார்த்தவாறு உள்நுழைந்தது இரண்டு கார். ஒன்றில் பாப்புக்குட்டி பேமிலியும், மற்றொன்றில் இரணியன் பேமிலியும் நியூஸ் பார்த்துவிட்டு அடுத்து கிடைத்த சேம் பிலைட்டில் ஏறி ஸ்பாட்டுக்கே வந்து விட்டிருந்தனர்.
 
அத்தியாயம் 14
வந்திறங்கியவர்களை மொத்த செட்டும் திரும்பிப் பார்த்தது. பாப்புக்குட்டி, 'என்ன இங்க வர கிளம்பி வந்துட்டாங்க?' என முழிக்க. இரணியனோ, 'ஒரு குரூப் தெரியுது, மற்ற குரூப் இவ பேமிலியா இருக்குமோ?' என நினைத்து அவளை திரும்பிப் பார்க்க, அவள் முழியை வைத்து கன்ஃபார்ம் செய்து கொண்டு கையை வாஷ் பண்ணிக்கொண்டு, பாப்பு கையிலிருந்த டவலை வாங்கி துடைத்து ௭ழுந்தவன். நிதானமாக அவர்களை நோக்கி சென்றான்.

"என்னப்பா திடீர்னு இவ்வளவு தூரம்?" என்றான் தந்தையிடம். "ஹலோ அங்கிள், ஹலோ ஆண்ட்டி, நீங்க?" என வேதிகாவை பார்த்து நிறுத்தினான்.

"வேதிகா ஐ.பி.எஸ்." என அவள் கையை நீட்ட, "ஓ குட்" என பதிலுக்கு கைகுலுக்கினான். "நைஸ் டூ மீட் யூ ஆல், கம் கேரவன் போய் பேசலாம்" என முன் நடக்க, வந்தவர்களும் பாப்புவை முறைத்தவாறு அவனைப் பின் தொடர்ந்தனர்.

"நம்ம வீட்ல நம்மள முறைக்கிறாங்கன்னா அதுல ஒரு லாஜிக் இருக்கு. சார்ம் அம்மாவும், தங்கச்சியும் எதுக்கு நம்மள முறைக்குதுக. சொன்னதென்னவோ அவங்க பையன் தானே" என இவள் முனங்க. "அவங்க அப்படிதாம்மா, அவேங்கிட்ட காட்ட முடியாத முறைப்ப, உன்கிட்ட காட்டிட்டு போறாங்க" என்றார் அவர்களை முன் போகவிட்டு, இவளிடம் பேச காத்திருந்த இரணியனின் தகப்பனார்.

"ஓ! அவுகவுங்கட்ட உள்ள சந்தோஷத்தையும், கோபத்தையும் சம்பந்தப்பட்டவங்கட்ட காமிச்சுட்டாளே குடும்பம் ஷேமமா இருக்குமே அங்கிள்". "அதுசரி, அதான் நீ அங்க வரப் போறல்ல, வந்து அவுங்களுக்கு இதெல்லாம் எடுத்துச்சொல்லு" என சிரித்துக்கொண்டே சொல்ல, "சார்ம் அனௌன்ஸ் பண்ண விஷயத்துக்காக சந்தோஷப்படுற செகண்ட் பெர்சன் நீங்க தான் அங்கிள்" ௭ன்க. "அது யாருமா எனக்கு முன்னாடி?”

"உங்க மருமகன் தான் அங்கிள், ஓவர் குஷில சுத்தி வர்றாப்டி. நீங்களாது நல்ல மருமக வர்றான்னு சந்தோஷப்படுறீங்க. அவனுக்கு இதுல என்னம்மா லாபம்ன்னே தெரியல? மச்சினிச்சி முறை கூட வர மாட்டேன் நானு" என அவள் யோசிக்க.

"நல்லா பேசுறமா, வா தேடப் போறாங்க, போவோம். விஷா எங்க?” "அந்த வீடியோ எடுத்த ஆள கண்டுபிடிக்கணுமே, அதனால ஹோட்டல்லயே இருக்கான்". "இது யூசுவல் தான்மா. சின்னதா ஒரு விஷயம் இவன சுத்தி நடந்தாலும், சோசியல் மீடியால்ல போட்டு அத பெரிசாக்கிடுவாங்க, அது நல்லதா இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி" என பேசிக்கொண்டே கேரவனை நெருங்க. கார்ட்ஸ் திறந்துவிட உள்ளே நுழைந்தனர்.

எல்லோரும் இருக்கும் தைரியத்திலும், அண்ணன் முன் எதிர்த்துப் பேச மாட்டாள் எனவும் நினைத்த பவ்யா "நினைச்சு வந்த வேல ஈஸியா, சீக்கிரமா முடிஞ்சிட்டு போல, இந்த ஈனப் பொழப்பு, ஒருமாறி அசிங்கமா, டிஸ்கஸ்டிங்கா இல்ல?" என்றாள்.

"நா எதுக்கு அசிங்கப்படணும், அதும்போக பெரியவங்க இத்தனபேர் இருக்கைல உனக்கு என்ன அவசரம், அங்க பாத்தில எங்க அக்கா, பிஸ்டல் இல்லாம எங்கேயும் வரமாட்டா, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், என்னத்தையாவது லூஸ் டாக் விட்டு, பொட்டுன்னு போயிடாத. விஷா விடோவாக வேணான்ற அக்கறைல சொல்றேன்" என்றாள் சத்தமாக எல்லோருக்கும் கேட்கும் வண்ணம். "ச்ச" என முகத்தை திருப்பிக்கொள்ள.

"ம்ம், அப்படி மூஞ்சிய தூக்கி வச்சுகிட்டு கூட ஓரமா பேசாம இரு". அவள் அப்படித்தான் யாராக இருந்தாலும் பதில் கொடுப்பாள் என அவள் வீட்டாருக்கு தெரியும், அதனால் அவர்கள் நடந்ததை கண்டு கொள்ளாமல் அவனிடம் பேச வேண்டியவற்றை சிந்தித்து கொண்டிருந்தனர்.

அனால் இரணியன் குடும்பத்தினர், அவன் ஏதாவது கூறுவானா என பார்த்தனர். அவன் பாப்புவை தான் ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். 'எப்டி இவளால இயல்பா, மிடில் கிளாஸ் பொண்ணா, நடந்துக்க முடியல' என்பதே அவன் சந்தேகமாய் இருந்தது.

ஏனென்றால் பெற்றோரை பார்த்தேனும் இப்படி ஒரு சூழ்நிலையை சமாளிக்க போராடுவாள், திண்டாடுவாள் என எதிர்பார்த்தான். அவள் கொடுத்த பில்டப் அப்படி ஆகிற்றே. 'வடிவ சமாளிக்க முடியாது, நீங்க தான் பேசணும், தப்பெல்லாம் நீங்க தான்ற ரேஞ்சுக்கு குதித்துவிட்டு இப்பொழுது பவ்யாவை பயமுறுத்திக் கொண்டிருக்கிறாள்' என பார்த்திருந்தான்.

பவ்யா அவள் அம்மாவை இடிக்க, "என்னப்பா அந்தப் பொண்ணு நம்ம பாப்பாவ இஷ்டத்துக்கு மிரட்டுவது நீ பேசாமலே நிக்க?" என்க.

"எனக்கு சூட்டுக்கு டைம் ஆகுது, ஏற்கனவே ஹாப் டே வேஸ்ட் ஆயிடுச்சு, லெட் கம் டூ தி பாயிண்ட். எல்லோருமா சேந்து வந்துட்டீங்க, இங்கயே இந்த விஷயத்த ஃபைனல் பண்ணிடலாம், எனக்கு தாட்சியாயினிய கல்யாணம் பண்ணி குடுங்க, எனக்கு அவள ரொம்ப பிடிச்சுருக்கு, சோ" என்றான். மீதியை அவர்கள் சொல்லட்டுமென, "வீ கிளியர் சாம்திங், பிபோர் தட் மேரேஜ் ப்ரோபோசல் மிஸ்டர்.இரணியன்" மெய்யப்பன் பேச.

"சுயர் அங்கிள், கோ அஹெட்" ௭ன கார்மேல் காலகட்டத்தில் ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டான்.

"நீங்க எதுக்கு பிரஸ் முன்ன எங்க நேம இன்குலூட் பண்ணிங்க?” "வேற ஆப்ஷன் இல்ல, டிசைட் பண்ணவேண்டிய சிட்ச்சுவேஷன், நாங்க 1/2 இயரா லவ் பண்ணோம்னு சொன்னா நம்புற மாதிரி இருக்காது".

௭ன்ன பதில் இது ௭ன யோசித்து ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு "இப்ப அதே ரீசனுக்காக தான் இந்த மேரேஜ் ப்ரோபோசலா?" என்க. "நாட் அட் ஆல், பிரஸ்ட்ட சொன்னது தான் உங்கள்ட்டயும் சொல்றேன். நாங்க ரெண்டு பேரும் ஆல்ரெடி கிளியர் பண்ணிக்கிட்டோம், பட் உங்கட்ட ௭ப்ப கன்வே பண்ணலாம்னு தான் முடிவு பண்ணல, அதுவே ரிலீஸ் ஆயிடுச்சு" இவன் சொல்லிக்கொண்டிருக்க பாப்பு அவனையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவள் எது எதுக்கு எப்படி எப்படி டிஃபரண்ட் டைப்பா முழிய மாத்துவான்னு, வடிவுக்கும், வேதிகாவுக்கும் அத்துபடி, அவள் முழியே அவர்களுக்கு சொன்னது, அவன் சொல்வது அனைத்தும் அவனது சொந்த டயலாக்கே என்பது, அவளை பார்த்துக்கொண்டே, "ஒரு மாசத்துல லவ் எப்படி? பாப்பு பத்தி எங்களுக்கு நல்லா தெரியுமே, எங்கட்ட சொல்லாம எதையும் செய்றதில்லயே அவ" என வேதிகா சொல்ல.

"நா தான் உங்க மேரேஜ் முடியட்டும், அப்புறம் சொல்லுன்னு சொல்லிருந்தேன்" ௭ன்றான் இயல்பாக. அவன் ஒன் மந்த் அவுட் சூட் என சொன்னதுமே, "அக்கா மேரேஜ் அப்போ டுடேஸ் லீவு வேணும் சார்ந்த" ௭ன அப்ளை செய்துவிட்டுருந்தாள், அதை இங்கு யூஸ் பண்ணிக் கொண்டான்.

'எவ்வளவு தூரம் போறாருன்னு பாப்பமே' என்பது போல் பாத்து நின்றாள் பாப்பு.

அவள் வெட்டியாய் ௭துவும் பேசாமல் நிற்பதை கண்டு கடுப்பான வடிவு, வேகமாய் சென்று பாப்பு கையை வலிக்க நிமிண்டியவர், "என்னடி அவர் பாட்டுக்கு என்னமோ சொல்லிட்டு இருக்காரு, நீ போஸ் கொடுத்த மேனிக்கு நிக்க. எல்லாம் எனக்கு தெரியும், நா பெருசா கிழிச்சுடுவேன்னுலா பேசிட்டு வந்த, இப்ப என்ன வாயப் பசை போட்டு ஒட்டி வச்சிருக்கியா" என திட்ட, "வலிக்குதும்மா" என கையை தேய்த்து கொண்டு, அவர் கையை எடுத்துவிட்டு, "ம்மா, ஆயிரம் தான் இருந்தாலும் அவர் என் சார்ம், 'உன்ன எனக்கு புடிச்சிருக்கு நீ இல்லைன்னா என்னால வாழவே முடியாது, ப்ளீஸ் எனக்கு வாழ்க்க கொடுன்னு கெஞ்சும் போது எனக்கே பாவமா இருக்காதா, மனசுக்கு பொறுக்குதில்லையே, நா என்ன செய்வேன்" என அவனுக்குப் போட்டியாக நடித்தாள்.

"அப்போ உனக்கு என் பையன் மேல ஆசயில்ல, போனா போகுதுன்னு தான் கட்டிக்க போற அப்படித்தான?" வாணி உசுப்பேத்தி விட.

"அப்டி டைரக்டா சொல்லிட முடியாது, அவர பிடிக்காதவங்க ரொம்ப கம்மி, எந்த பொண்ணும் இப்டி ஒரு ஜாக்பாட்ட வேணாம்ன்னு சொல்ல மாட்டா" என்றாள் அவனை பார்த்து கையை விரித்து பெரிதாகக் காட்டி.

"அப்ப காசுக்காக தான் சரின்னு சொல்லிருக்க?" இது பவ்யா.

"ஆமா பின்ன கோல்டு எக் போடுற டக், அதும் ஹாண்ட்சம் டக், சோ அக்ஸப்ட் பண்ணிட்டேன்" என்றாள் கண்ணடித்து.

இரணியன் பொறுமையாகவே அவளையும், அவள் சேட்டைகளையும் பார்த்திருந்தான். பழிவாங்கவே இப்படி பேசுகிறாள் என புரிந்தது அவனுக்கு. ஆனால் அங்கிருந்த மற்ற அனைவருக்கும் ஆச்சரியம், அவன் முன்னே இப்படியெல்லாம் பேசுகிறாள், சிறிதும் கோவமில்லாமல் அமைதியாக இருக்கிறானே என. 'ஒருவேளை உண்மையிலேயே லவ் பண்றானா?' என்ற சந்தேகமே வந்து விட்டிருந்தது.

"வாய மூடு பாப்பு, எங்க எப்டி பேசணும்னே தெரியுறதில்ல" என திட்டிய வடிவு, "இப்ப என்னதான் சொல்ல வரீங்க" என்றார் பொதுவாய்.

"உங்க பொண்ண எங்க வீட்டு மருமகளா அனுப்புங்க, நாங்க நல்லா பாத்துப்போம்" என்றார் தெய்வநாயகம்.

"தேங்க்ஸ்பா, அன்ட் சாரி, வந்ததிலிருந்து உங்கள இன்ட்ரோ பண்ண மறந்ததுக்கு. நா அவங்களுக்கு ஃபஸ்ட் எக்ஸ்பிளைன் பண்ணிட்டு உங்கள கேக்க சொல்லலாம்னு நினைச்சுட்டிருந்தேன்" ௭ன்க. "பரவாயில்லப்பா நமக்குள்ள எதுக்கு சாரியெல்லாம்" என்றவர், "சொல்லுங்க சார், உங்க பொண்ண எங்க பையனுக்கு நிச்சயம் பண்ண எப்ப வரட்டும்?" என்றார் சேர்த்து.

"நீங்க ரொம்ப அவசரப் படுறீங்கன்னு தோணுது, அவ விளையாட்டா பேசுறத வச்சு நீங்க தப்பா எடுத்துக்க வேணா. எனக்கு அவளுக்கு மூத்த ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க, அவங்கள செட்டில் பண்ணிட்டு தான் நா இத பத்தி யோசிக்கணும்" என்றார் மெய்யப்பன்.

"மூத்தப் பொண்ணுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிட்டிங்க தானே?" ௭ன நாயகம் கேக்க. "ஆமா, இப்ப இந்த நியூஸ் பாத்துட்டு அவங்க எதுவும் மாத்தி பேசாம இருக்கணும். மேரேஜ்க்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு, அல்மோஸ்ட் இன்விடேஷன் வச்சு முடிச்சாச்சு". "அதுலா ஒரு பிரச்சனயும் வராது, அப்படி ஏதும்ன்னா சொல்லுங்க, நா கூட வந்து பேசுறேன்" என்க.

"இருக்கட்டுங்க, அத நாங்களே சமாளிச்சுக்குறோம். இந்த விஷயத்த மட்டும் கொஞ்சம் ஆறப் போடலாம், எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க". "சரி மிஸ்டர்.மெய்யப்பன், வீட்ல போய் கலந்துட்டு சொல்லுங்க, அவசரமில்ல" என்றார் ஒருவாறு முடிவுக்கு வந்து.

"தேங்க்ஸ் சார், பாப்புவ நாங்க இப்ப கூட்டிட்டு போறோம். கல்யாணம் நெருங்கிடுச்சே, அவளும் வந்தா கொஞ்சம் எங்களுக்கும் ஹெல்ப்பா இருக்கும்".

"சாரி அங்கிள், இன்னைக்கு தான் நா பிரஸ்ல சொல்லிருக்கேன், நீங்க வேற கிளம்பி வந்துட்டீங்க, 2 பேமிலியும் சேந்து வந்தது எனக்கு ஒரு பிளஸ், ஆனா இவள இப்ப கையோட கூட்டிட்டு போனா பிராப்ளம் வேற மாதிரி டைவர்ட் ஆயிடும். உங்களுக்கு ஹெல்ப்புக்கு நா ரெண்டு பேர அனுப்புறேன். மேரேஜ்க்கு டுடேஸ் முன்னாடி தாட்சா வில் பி தேர்" என்றான்.

"அவங்க ஒன்னும் ஆளில்லாம, ஹெல்ப்புக்கு கேக்கல, நா போனா தான் கல்யாண வீடு களகட்டும் அதுக்கு கூப்பிடுறாங்க" என அவள் முந்திக்கொண்டு சொல்ல.

முறைத்தவன், "எக்ஸ்க்யூஸ்" கேட்டு அவளை இழுத்துக் கொண்டு தனதறைச் சென்றான், வேதிகா கூட தடுக்க முனைந்தாள் அதற்குள் அவன் கதவடைத்திருந்தான். "எதுக்கு இப்படி இழுதுட்டு வர்றீங்க சார்ம்" உள்ளே நுழைந்ததும் அவள் சண்டைக்கு கிளம்ப. "இனி இப்டி என்கிட்ட எகிறி எகிறிக் குதிக்கிறத ஃபஸ்ட் குறச்சுக்கோ", அவள் மேலும் முறைக்க, "பப்ளிக்ல எதுத்து எதுத்து பேசாத, ஐ ஹேட் தட்".

"எது இது பப்ளிக்கா, பேமிலி ஆளுங்கன்னு நினச்சா ஏன் தப்பா தெரியப்போகுது?” "இதுதான் எங்கேயும் வரும், நீ என்னோட ரெஸ்பெக்ட் பில்ட் பண்ணனும், பிரேக் பண்ணக்கூடாது, உன்னோட பிஹேவியர் என்னோட ப்லேஸ கீழே இறக்கும், சொன்னா புரிஞ்சுக்கோ" ௭ன்றான் இழுத்து பிடித்த பொறுமையுடன்.

"என்ன நீங்க நா மேரேஜ் அக்செப்ட் பண்ண முன்னையே ஆர்டர் போட்டுட்டுருக்கீங்க, இதெல்லா சரிப்பட்டு வராது, யூ ஆர் ரிஜெக்டட்" என அவள் வெளியே கிளம்ப, போக திரும்பியவளை, அதே வேகத்திற்கு கையை பிடித்து திருப்பி அணைத்தான்.

"இதெல்லாம் நிறைய கொரியன் சீரியஸ்லயே நா பாத்துட்டேன் பயப்பட மாட்டேனாக்கும்" என்றாள் திமிராக. "ரொமான்டிக் சீன்ஸ்லா அத்துப்படின்னு சொல்ற" என அவன் மேலும் இறுக்க, "இப்பலா நண்டு சிண்டுகளுக்கு கூட ரொமான்டிக் சீன்னா என்னனு புரியுது, நா யூத்" என மேலும் பேச போனவள், அவன் அவள் உதட்டை நோக்கி குனியவும், புருவத்தை உயர்த்தி பின்னால் முடிந்த மட்டும் தலையை கொண்டு போய் பார்த்தாள். அவன் விடுவேனோ என மேலும் நெருங்க, இதற்கு மேல் முடியாது என்ற நிலையில் அவன் அசந்த நேரத்தில் கன்னத்தில் கடித்துவிட்டு அவன் "ஆ" என தடவிக் கொண்டிருக்க வெளியே ஓடிவிட்டாள்.

வெளியே நின்றவர்கள் பரபரப்புடன் பார்க்க, "சாப்பிடாம வந்திருப்பீங்க, வாங்க போய் சாப்பிடலாம். சார்ம் பிரெஷாகிட்டு வருவாங்களாம்" என்று விட்டு கேரவனிலிருந்து இறங்கி விட்டாள்.

"நாம என்ன டூருக்கா வந்திருக்கோம், சரியான அரவேக்காடு கழுத, இவ இப்டி இருக்காளேங்க" ௭ன வடிவு புலம்ப. அவரை மேலும் புலம்ப விடாமல் அடக்கியவர், "நாங்க அப்ப அப்படியே கிளம்புறோம். வேதிகா மேரேஜ் இன்விடேஷன் எடுத்துட்டு வரேன், கண்டிப்பா வாங்க".

"நீங்க சொல்லணுமா, நாங்க கண்டிப்பா வருவோம் சம்பந்தி". "இதுக்கு மேல நின்னா சரிப்பட்டு வராது" என நினைத்த பாப்பு பேமிலி அவளிடம் கூட சொல்லிக்காம கிளம்பிவிட்டனர். திரும்பி வந்தவள் தேட, இரணியன் பேமிலி மட்டும் இரணியனுக்காக காத்திருக்க, "கிளம்பிட்டாங்களா? செம கடுப்புல இருப்பாங்க போல, சொல்லிக்காம போயிட்டாங்க" என இவள் புலம்ப.

"உன்னையமாறி லூச புள்ளயா பெத்ததுக்கு மொத்தமாகவே அவங்க சொல்லிக்காம தான் போயிருக்கணும், இன்னும் ஏன் இருக்காங்கன்னு தான் தெரியல?" பவ்யா பேச. "எங்க கத்துக்குற இந்த மாதிரில்லா பேச? உனக்கு ஆல்ரெடி சொல்லிருக்கேன் எனக்கு கை தான் நீளும் பாத்து பேசுன்னு, உனக்கு மண்டைல ஏறலன்னு நினைக்குறேன்" என பாப்பு கையை முறுக்கிக் கொண்டு அவளை நெருங்க, இரணியன் வெளியே வந்தான், அவனோ பயங்கர கலர், இவள் கடித்ததால் மேலும் சிவந்து ரோஸ் நிறமாய் வெளிவந்தான்.

பாப்புவை முறைத்தவாறே தெய்வநாயகத்திடம், "இன்னைக்கு இங்க ஸ்டே பண்ணிட்டு போறிங்களாப்பா? அவங்க இருக்காங்களா? கிளம்பிட்டாங்களா?" என கேட்க. "அவங்க கிளம்பிட்டாங்கபா, உன் கிட்ட சொல்லிட்டு கிளம்ப தான் நாங்க வெயிட் பண்ணோம். பாத்து கவனமா இருங்க மூணு பேரும், விஷாட்ட சொல்லிடு" என்றார்.

"சரிப்பா கார் அரேஞ்ச் பண்ணிடுறேன் கிளம்புங்க, எனக்கு சூட்டுக்கு டைமாச்சு" என்க. அவர்கள் தலையசைக்க, அவர் வெளியேறிவிட்டான்.

வெளி கேட்டில் பாப்பு இவர்களை அனுப்பி விட்டு போலாம் என மரியாதை நிமித்தமாக நிற்க, மெதுவாக அவளை நெருங்கி வந்த பவ்யா, "உனக்கு ஒரு பிரீ அட்வைஸ். கேட்க மாட்டன்னு தெரியும், இருந்தாலும் சொல்றேன் கேளு. என் அண்ணனுக்கு பொண்ணுங்ககிட்ட எப்டி நடக்கணும்னு தெரியாது, உனக்கு யார்ட்டையுமே எப்டி நடந்துக்கணும்னு தெரியாது. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா லைஃப் நல்லா இருக்கும்னா நினைக்குற. ஹீரோன்னு பறக்க ஆசப்பட்டு பொத்துனு கீழ விழுந்துராத, எந்திக்க கஷ்டம்" என்றவள் பாப்பு நக்கலாகவே பார்க்கவும், "இதையும் மீறி நீ என் அண்ணன கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆனன்னு வை, அத எப்டி நிறுத்தரதுன்னும் எனக்குத் தெரியும், பை" என சிரித்தவாறே கார் கதவை திறந்து ஏறினாள். பாப்புவும் சிரித்துக்கொண்டே பை சொல்லி வழி அனுப்பினாள்.
 
அத்தியாயம் 15
இவள் அவர்களை கிளப்பி விட்டு திரும்பி சென்ற போது ஃபைட் சீன் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஸ்டன்ட் மாஸ்டர் சீன் எக்ஸ்பிளைன் பண்ண க்ருவ் அதை செய்து பார்த்துக் கொண்டிருந்தனர். இவள் இருக்கும் திசை பக்கமும் அவன் திரும்பவில்லை.

வைப்ரேட்டாகவும் எடுத்துப்பார்த்தாள், அவன் போன் இவளிடம் தான் இருந்தது. நியூ நம்பரிலிருந்து கால் வந்து கொண்டிருந்தது. அட்டெண்ட் செய்தவள், "ஹலோ" எனும் முன். "ஹேய் இரணியன்ட்ட போனக் குடு" என்றது ஒரு பெண்குரல், "மேடம் யாரு? சார்ம் ஸுட்ல இருக்காங்க" என்றாள், அந்தப்பக்கம் திமிராக பேசியும், யாரென தெரிய வேண்டி பொறுமையாக, "நா யாரா இருந்தா உனக்கென்ன? நா இப்பவே இரணியன்ட்ட பேசியாகணும், யாரக் கேட்டு அப்டி ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்தாரு", பாப்பு பதில் சொல்ல முயல, அந்தப் பக்கம் பேசிய பெண் விடாமல் பேசிக் கொண்டிருக்க, இங்கு இரணியனுக்கு அடுத்தடுத்து வெயிட்டிங்கில் ஹால் கால் வந்துகொண்டிருந்தது.

'என்னதிது இந்தப் பிள்ளயும் நம்ம பேசுறத கேட்க மாட்டேங்குது, அது மட்டும் பேசணும்னா எதுக்கு கால் பண்ணனும்' என அந்த பெண்ணை கட் செய்துவிட்டு, வெயிட்டிங்கில் வந்த காலை அட்டன்ட் செய்ய பாக்க, அதுவும் முடியவில்லை, கட்டாகி இருந்தது. அப்பொழுது தான் மிஸ்டுகாலை கவனித்தாள், '336 மிஸ்ட் கால், அடங்கப்பா அதுவும் வேறு வேறு நம்பரில் இருந்து, ட்ருகாலரில் ஓபன் செய்து பார்த்தாள். அதில் 200க்கும் மேல் பெண்கள் பெயரிலேயே வந்திருந்தது.

அவள் ஸ்குரோல் செய்து கொண்டிருக்க, 'இன்னொரு கால் வந்தது, எப்டி இவ்வளவு நேரம் இத்தன கால் வந்தத கவனிக்காம விட்டோம். பேக் கேரவன்ல கடந்ததால தெரியலையோ' என யோசித்துக்கொண்டே அட்டெண்ட் செய்து காதில் வைத்தாள்.

"வாட் இஸ் திஸ் யா? ஐ டிட்டிண்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ப்ரம் யூ? டோண்ட் யூ திங், வாட் யூ செட் இஸ் டோடல்லி நான்-சென்ஸ். கூஸ் தட் கேர்ள், நாட் அட் ஆல் மேட்ச்ட்டு யூ, யக்! ஒய் டோன்ட் திங்க் எவர் எ சிங்கள் மினிட் அபௌட் மீ பிபோர் தட் டெசிஷன் (யார் அந்த பெண்,௭ன்னபத்தி யோசிக்காம நீ ௭ப்டி அப்டி சொல்லாம்?)" என அந்த பெண் பேசிக்கொண்டே போக, "யார பாத்துடி யக்ன்ற? நேர்ல வந்தேன், இங்கிலீஷ் மட்டுமே பேசுற அந்த நாக்க கட் பண்ணி காக்காய்க்கு போட்டுறுவேன்". "ஹே கூ இஸ் தட்? வேர் இஸ் மை பேபி?” "இன்னொரு தட பேபின்ன சங்கருத்துருவேன🔪🔪". இந்த முறை அந்த பெண் கட் செய்துவிட்டிருந்தது.

அடுத்ததாக இன்னொரு கால் வர, "ம்கூம் இது சரிப்பட்டு வராது, இவளுக நம்மள பி.பி பேசன்ட் ஆக்கி அட்மிட் பண்ணாம விட மாட்டாளுக போல, என்ன செய்யலாம்?" என சிந்தித்தவள், "அந்த வீடியோ எடுத்தவன கண்டுபிடிக்க போனவன், வெட்டியா மல்லாக்க தான் படுத்திருப்பான், பேசாம அவனுக்கு டைவர்ட் பண்ணிடுவோம்" என முடிவெடுத்து, 'டைவர்ட் கால்ஸ் வென் சுவிட்ச்ட் ஆப்' டு திஸ் நம்பரில் விஷாகன் நம்பரை ஆட் செய்துவிட்டு இரணியன் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து பேக்கில் போட்டுவிட்டு ஹாயாக ஒரு மரத்தடியில் அமர்ந்துவிட்டாள்.

அவள் கெஸ் பண்ணியது போல் விஷாகன் அவன் அறையில் மல்லாக்க படுத்து டிவி தான் பார்த்துக் கொண்டிருந்தான். "என்னது முப்பாயக்கா பேரன் தூக்கு மாட்டிக்கிட்டானா என்றவாறு கவுண்டமணி சென்று செந்திலை காப்பாற்ற, செந்தில் அவ்வா அவ்வா" என ஆடிக்கொண்டிருக்க, விஷா இதை பார்த்து பல்லைக் காட்டிக் கொண்டிருக்க, அவன் போன் "கண்மணி அன்போடு" என பாட டிவி பார்த்து சிரித்துக் கொண்டே வந்து எடுத்தவன், "ஹலோ" என்க.

அங்கு பாப்பு கேட்டதை விட அதிகமாகவே கேட்டு வாங்கிக்கொண்டான். அடுத்தடுத்து கால் வர "என்ன எல்லரும் நமக்கு கால் பண்றாங்க, நம்ம நம்பர எவனும் அவசர உதவிக்குன்னு போட்டு ஃபார்வேர்ட் பண்ணிட்டானா" என யோசித்து முடிக்குமுன் விடாமல் வேறு வேறு கால் வந்து கொண்டிருந்தது. அதில் பாதிக்கும் மேற்பட்டோரை அவனுக்குத் தெரியும். டைவர்ட்டில் வரும் கால்களை அட்டெண்ட் செய்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் பதில் சொல்லி சொல்லி டயாடாகிக் கொண்டிருந்தான். கடைசியில் அவன் நிலைமையும் "அவ்வா அவ்வா" என்ற நிலையில்தான் வந்திருந்தது.

இரணியன் சூட் முடித்து வந்தமர, இவளும் அவன் வருவதைக் கண்டு அவன் அருகில் சென்றாள். மேக்கப்மேன் வந்து ஃபைட் சீன்க்காக போடப்பட்ட காயங்கள் /கீறல்களை நீட் செய்துகொண்டிருக்க, இவள் அமைதியாகவே நின்று கொண்டாள். அடுத்த சீன்க்காக ரெடியாகி வந்த ஹீரோயின் நேராக இரணியனையும், பாப்புவையும் பார்த்து வந்து, "கங்கிராட்ஸ் போத் ஆப் யூ. பரவாயில்ல பாப்பு ஒன் மந்த்ல அச்சிவ் பண்ணிருக்கன்னா பெரிய விஷயம்தான்" நமட்டு சிரிப்போடு கூற.

"ஆமா ஆமா அதுக்கு நா எவ்ளோ ஹார்ட் ஒர்க் பண்ணேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்" என்றாள் பாப்பு. அதற்குள் டைரக்டர் சூட்டுக்கு கூப்பிட ஹீரோயின் சென்றுவிட, "அது என்ன, லவ் பண்றேன்னு சொன்னதென்னவோ நீங்க, எல்லோரும் நா உங்கள கரெக்ட் பண்ணி என் ஹாண்ட்பேக்ல போட்டுக்கிட்டு ரேஞ்சுக்கு பேசுறாங்க" என இவள் சண்டைக்கு கிளம்ப.

திரும்பி மேக்கப்மேனை கண்காட்டி முறைத்தான். "இது வேற பப்ளிக்ல பேசாத, பிரைவேட்ல பேசாதன்னு ரூல் போட்டுகிட்டு" என்றுவிட்டு, "மேக்கப்மேன் அண்ணா, நீங்க அவர கிளீன் பண்ண வரும் போதும், நா என் ஆத்துகாரர்ட்ட பர்சனலா பேச வேண்டியிருக்கு, அந்த பிரஷ் என்கிட்ட கொடுத்துட்டு கிளம்புறீங்களா?" என்க. "சரிங்க மேடம்" என அவர் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

"மிஸ்டர் வருங்கால புருஷரே கொஞ்சம் எழுந்து வாங்க, சுத்தி ஒரு கிலோ மீட்டர் ஆளில்லாத தொலைவு சென்றுவிடுவோம்" என்க, சிரித்தவாறு எழுந்தவன், "ஒருவழியா மேரேஜ் ப்ரொபோஸல அக்சப்ட் பண்ணிட்ட போல?", "பிடிக்கலைன்னா எப்ப வேணா கேன்சல் பண்ணுவேன்" என்றவாறே ஒரு மரத்தடியில் வந்தமர்ந்தனர். "சீக்ரம் சொல்லு இப்ப பேக் பண்ணிடுவாங்க" என்க.

"எப்பயும் அவசரம்தானா? சரி விடுங்க, நா விஷயத்துக்கு வரேன், நல்லா கேட்டுக்கோங்க

நம்பர் 1 அந்த வீடியோவால தான் இவ்வளவு ப்ராப்ளமும், அத எடுத்தது யாருன்னு கண்டுபிடிச்சு என் கையால ரெண்டு அப்பு அப்பனும்.

நம்பர் 2 உங்களுக்கு நிறைய கேர்ள் பிரெண்ட்ஸ்ன்னு நினைக்கிறேன், என்ன நீங்க கல்யாணம் பண்ணிக்கிறதனால படபூஜ அன்னைக்கு செல்ஃபிக்கு கூட சிரிக்காதது இன்னைக்கு தன்னால வந்து சிரிச்சு பேசிட்டு போறாங்க.

நம்பர் 3 உங்க கூட நடிக்கிறவங்கள்ள ஆரம்பிச்சு உங்க வீட்டு ரோட்டி வர யாருக்கும் இதுல இஷ்டம் இல்ல, நிறைய எனிமிஸ் வந்துருவாங்க போல, இன்னொரு தடவ சீட்டுக் குலுக்கிப் பாத்துனாலும் இந்த மேரேஜ் வேணுமா வேணாமான்னு யோசிங்க.

நம்பர் 4" அவள் எண்ணிக் கொண்டிருந்த அந்த கையை மடக்கி இழுத்து அருகில் அமர்த்தியவன், "லெட் மீ எக்ஸ்பிளைன், கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ" ௭ன்றுவிட்டு.

அமைதியாக இருக்க, "௭ன்ன ரெம்ப சோகமான ஃபிளாஷ் பேக் சொல்ல போறீங்களோ?" ௭ன்க, நறுக்கென அவளை கொட்டியவன் "அதெல்லா இல்ல, இன்டர்ஃபியர்(குறுக்கிடாம) பண்ணாம கேக்கனும், எனக்கு சின்ன வயசுல நடந்த ஒரு அல்ர்ஜியான விஷயம், பொண்ணுங்க மேல இன்ட்ரஸ்ட் இல்லாம ஒருமாறி வெறுப்பாக்கிடுச்சு, பிரெண்ட்லியா கூட நா யாரையும் நெருங்க விட்டதில்ல, என்ட்ட அவங்க வேணும்னே இம்பிரஸ் பண்ண எல்லா விஷயமு பண்ற ஃபீலாவே இருக்கும். பட் நீ டிஃபரண்ட்டா தெரிஞ்ச. உனக்கு என்ன "ஆ"ன்னு உன்ன மறந்து ரசிக்கிற அளவுக்கு பிடிக்கும். இருந்தும் நீ சான்ஸ் யூஸ் பண்ணிக்க நினைக்கல, சீன் போடாம கொஞ்சம் இரிடேட் பண்ற மாதிரி பேசினாலும், நீ நீயா இருந்த. இதோ இப்பயும் காலைல நடந்த விஷயத்துக்கு ஓவர் எக்ஸைட்மெண்ட்டும் ஆகாம, ஐயோ இப்படி ஆயிடுச்சேன்னு அலம்பாம, வரும்போது பாத்துக்கலாம்னு இருக்க. இந்த ஆட்டிட்யூட் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நா நோட்டீஸ் பண்ண வரைக்கும் நீ எல்லா விஷயத்துலயும் அப்படித்தான் இருக்க. அதான் உன்ன ஓகே பண்ண எனக்கு டைம் தேவைப்படல" என்றான் பொறுமையாக.

"இது கூட நீங்க பேசுறதுனாலயோ ௭ன்னவோ சினிமா வசனம் மாதிரியே தான் தோணுது. ஒன் மன்த்ல என்ன பெருசா தெரிஞ்சுக்க முடியும். ஒருவேள நா உங்கள அட்மயர் பண்ணவே இப்படியெல்லாம் நடந்திருந்தா என்ன பண்ணுவீங்க?" ௭ன கேக்க, "ஒன்னும் பண்ண முடியாது, கேர்ள்ஸ் எல்லாருமே ஒன்னு தான். செல்பிஸ்சா அவங்க தேவைக்காக எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவாங்கன்னு நினைச்சு டைஜெஸ்ட் பண்ணிருப்பேன். ஏன்னா இதுவர நா பாத்த எல்லா பொண்ணுங்களும் என் முன்ன ஒரு மாறியம், என் பின்ன ஒரு மாறியும் தான் பிஹேவ் பண்ணுறாங்க, சோ எனக்கு அது பழக்கம் தான்".

"ரொம்ப அடி வாங்கிருப்பிங்க போலயே☹️☹️. என்ன பண்றது உங்க தலைல காட் என் நேம் தான்னு எழுதிருக்காறோ என்னவோ. ௭ல்லாம் ஓ.கே, ஆனாலும் ஒரு கண்டிசன், 'என்ன இப்டி இருக்காத அப்படி இருக்காதன்னு' சொல்லக்கூடாது. நா நானா இருக்கதது தான் புடிச்சி இருக்குன்னு சொன்னீங்க, சோ என்ன என்னயா இருக்க விடுங்க. நாம இப்படியே பழகுவோம் போற போக்குல லவ் கிவ் அதுவா பத்திக்குச்சுனா பாத்துக்கலாம் ஓகே வா" என அதிபுத்திசாலியாய் சொல்ல, "சரிங்க தாட்சா மேடம்" என அவள் இரு கண்ணத்தையும் பிடித்து ஆட்டினான் சிரித்துக்கொண்டு.

"இப்பலாம் அடிக்கடி சிரிக்குறிங்க சார்ம் நீங்க". "ம் ம் போதும் வா கிளம்பலாம்" என அவன் எழுந்து விட, இவளும் கிளம்பினாள்.

ரூமிற்கு திரும்பியபின், ரெஸ்டாரண்டில் இரவு சாப்பாட்டின் போது, "அந்த வீடியோ மேட்டர் என்னாச்சு விஷா?" இரணியன் கேட்க. "தெரியல சார், எல்லா கெஸ்ட் லிஸ்ட்டும் செக் பண்ணியாச்சு, சந்தேகப்படுற மாதிரி எதுவுமே இல்ல. அந்த டேட்ல வெகேட் பண்ணுவாங்க, வேற, கெஸ்ட்ட பாக்க வந்தேன்னு சொல்லி வந்துட்டு போனவங்க லிஸ்டையும் செக் பண்ணியாச்சு, ஒன்னும் தேறல" என்றான்.

"உனக்கு இன்னைக்கு போன் அட்டென்ட் பண்ணவே டைம் சரியா இருந்திருக்குமே, நீ எப்டி இந்த வேலையலாம் பாத்திருப்ப?" பாப்பு நடுவில் கேட்க. "உனக்கு தெரியுமோ? நா எல்லாம் செக் பண்ணிட்டு தான் வந்த போன அட்டண்ட் பண்ணிட்டு இருந்தேன். ஆமா எனக்கு போன் வந்தது உனக்கு எப்டி தெரியும்?", "டைவர்ட் பண்ணதே நா தான. இங்க பாரு இன்னுமே சார்ம் போன் என்கிட்ட தான் இருக்கு. அவருக்கு போன் வரும்னு தெரிஞ்சே அத என்கிட்ட இருந்து இன்னமு வாங்காம தான் சுத்தி வராங்க" என்றவாறு போனை இரணியனிடம் நீட்ட, விஷா 'புஸ் புஸ்ஸென காத்தடிக்க' "உன்னால நா இன்னைக்கு மாட்டிகிட்டு முழிச்சதென்ன சாவகாசமா வந்து நீதான் பண்ணேங்கிற உன்னய" என அவன் எச்சில் கையோடு ததுரத்த "வவ்வே" என வக்கனம் காமித்து சிரித்துக் கொண்டே தானும் எழுந்து ஓடினாள். அவன் சுத்தி சுத்தி துரத்த, அவளும் விடாமல் ஓடிக் கொண்டிருந்தாள்.

ஒரு இடத்தில், டேபிளுக்கு எதிரும் புதிருமாக நின்று கொண்டிருக்கையில் இளைக்க இளைக்க, "இன்னொரு விஷயம் சொல்லவா? இன்னைக்கு உன் பொண்டாட்டி வந்தா, இந்த கல்யாணத்த எப்டி நடத்துறன்னு பாக்கேன்னு சவால் விட்டா, இந்த கல்யாணமே உன் புருஷனோட ஏற்பாடுதான், எது செய்றதா இருந்தாலும் அவன செய்யுன்னு சொல்லிட்டேன்" என்று விட்டு ஓட, ௭ப்டி தெரியும் ௭ன்ற ஷாக்கில் அவன் அப்படியே நிக்க, நடுவில் இருந்த டம்ளர் தண்ணியை ௭டுத்து அவன் மூஞ்சியில் பளிச்சென்று என தெளிவித்துவிட்டு ஓட, "உன்னைய" என அவன் மறுபடியும் துரத்தினான். இரணியன் அமைதியாக வேடிக்கை பார்த்தவாறே சாப்பிட்டு முடித்து எழுந்தும் சென்று விட்டான்.

அங்கு வேதிகா ஊர் திரும்பியதும் செய்த முதல் வேலையே இரணியனின் திடீர் முடிவுக்கான ஆராய்ச்சியே, ஆரம்பத்திலிருந்து யோசித்ததில் விஷா தான் எல்லா சீன்லயும் அவள் கண்முன் தெரிந்தான்.

ஆக அரவிந்தனை பிடித்தாள், "எப்டி பிரண்ட்?" என தெரிய வேண்டி, விசாரித்ததில் இருவரும் நண்பர்கள் இல்லை, 'விஷாவும் பாப்புவுமே பிரண்ட்ஸ், பாப்பு சொல்லியே விஷா வந்து பேசியதாகவும், அந்த நிச்சயம் எல்லாமே இருவரின் ஏற்பாடு' என்பது தெரியவர, 'பாப்புவிற்கு தன் காதல் கதை எப்டி தெரியும்' என்ற முயற்சியில், வடிவுக்கு தெரியாமல் பாப்பு தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை என்றெண்ணி, அவரை விசாரிக்க, அவர் வேதிகா ரூமை குடைந்ததில் கண்டுபிடித்தது ஆரம்பித்து மாப்பிள்ளையின் தாயாரை சென்று பார்த்தவரை சொல்ல.

"இதுல அந்த விஷாகன் எங்கிருந்தும்மா வந்தான்?" ௭ன கேக்க, "அவேன் மாப்ளையோட பிரண்ட்டுமா" என்றார் அவர்.

'சோ அம்மாக்கும் முழுசா விசயம் தெரில, பாப்பு கூட விஷாகன அந்தக் கோயில்ல வச்சு அடிச்சாளே, அவங்களே அப்ப தான் ஃபஸ்ட் டைம் மீட் பண்ணாங்க. எங்கேயோ தப்பா இருக்கு. அவன் பாப்புக்கும் பிரண்ட் இல்ல, ஆர்விக்கும் பிரண்ட் இல்ல, எதுக்கு நம்ம ஃபேமிலிக்குள்ள வந்திருக்கான்' என யோசிக்க ஆரம்பித்தாள்.

கல்யாண வேலைகள் நெருங்க, இந்த தகவலை நம்பகமான வேறு இருவரிடம் விஷாகனின் லாஸ்ட் டூ மந்த்ஸ் கால் லிஸ்ட் எடுத்து விசாரிக்கச் சொல்லி ஒப்படைத்தாள்.

அதில் அவன் இவள் குடும்பத்தையே டிடெக்ட்டிவ் வைத்து விசாரித்ததைக் கண்டுபிடித்தாள்.

அடுத்த முதல் வேலயாக அவனுக்கு போன் செய்து, 'கட்டாயம் கல்யாணத்துக்கு வர வேண்டு'மென இன்வைட் செய்தாள்.

அத்தோடும் அவள் நிறுத்தவில்லை, விஷாகன் இவள் குடும்பத்தையே டார்கெட் ஆக்கியது அதில் முக்கிய புள்ளியான பாப்புவுக்காகவே என்பது, ஊட்டி ஹோட்டலில் வீடியோ எடுத்தவன் சிக்கியதில் தெளிவாகியது.

அதையும் ஆள் வைத்து எடுக்க வைத்தது விஷாகனே. 'இருவரும் மீடியாவில் ப்ரஜக்ட் ஆனால் போதும், அவர்களே சேர்த்து வைத்து விடுவார்கள்' என முடிவு செய்து நம்பகமான ஒருவனை ஏற்பாடு செய்து இருந்தான். அவனையே சோசியல் மீடியாவில் அப்லோடும்
செய்ய சொல்லப்பட்டிருக்க, ஈசியாக ஐபி அட்ரஸ் வைத்து அவனை பிடித்து விட்டாள்.

அவனோ ஒரு அடி கூட வாங்காமல் உண்மையை ஒப்புக்கொண்டு சரண்டர் ஆகி விட்டான். ஆனால் அவனை அரெஸ்ட் செய்தது, கல்யாணத்திற்கு இரு தினங்கள் முன்பு பாப்பு, இரணியன், விஷா மூவரும் வந்திறங்கிய அரை மணி நேரத்தில் தான் என்பதால் அவர்களுக்கு தெரியவில்லை. சொல்லாமல் ரகசியமாக வைத்துக் கொண்டாள் வேதிகா.

பாப்பு நேராக வீட்டிற்கே வந்தாள், கிட்சாவுக்கு ஒரு ஹாயுடன். அவள் கல்யாணத்திற்காக ரெடியாக ஆயிரம் வேலைகள் இருந்தது, அதனால் அப்பார்ட்மென்ட் ஆட்கள் தினுசாக பார்ப்பதை அவள் கண்டுகொள்ளவில்லை.

"உன்ன என்னவோன்னு நெனச்சேன், பெரிய ஆள்தான்" சுஹா வந்ததும் வம்பிழுக்க, "அதுக்கெல்லாம் பிறக்கும்போதே மச்சம் வேணும்டி வெள்ளை பாட்ச்சா, பொறாமையில வயிறு வெந்து நீ செத்துடாத" என்க. "கல்யாண வீட்ல என்னடி பேச்சு பேசுற" வடிவு கரண்டியோடு ஓடிவர, இவளும் ஓட கல்யாண வீடு கலை கட்டியது.
 
அத்தியாயம் 16
பாப்பு ஜாலியாகவே சுற்றிவந்தாள். ரிசப்ஷனுக்கு டிரஸ் பண்ணுவது, பார்லர் சென்று வருவது என மற்றவர்களை தொந்தரவு பண்ணாமல் இருந்து பெரிய ஹெல்ப் செய்து கொண்டிருந்தாள். மற்றவர்களுக்குத்தான் குறுகுறுவென்று இருந்தது. 'கேப்போமா? வேணாமா? கேட்டா போலீஸ்கார அக்கா தூக்கிட்டு போய் உள்ள வச்சிடுமோ' என பயந்து கொஞ்சம் அமைதியாக இருந்தனர்.

கல்யாணத்துக்கு முந்தின இரவு, முகத்தில் கடலை மாவை பூசிக்கொண்டு பாப்பு அமர்ந்திருக்க, "ஏன்டி கல்யாண வீட்ல எவ்வளவு வேல கடக்கு நீ என்னமோ பொண்ணு மாதிரி ரெண்டு நாளா ஜோடிச்சிட்டு திரியுற. என்ன நினைச்சுட்டுருக்க. இந்த மாவ ஆட்டு வந்து. வீட்டுக்கு உபயோகமா ஒரு வேல பாக்கிறதில்ல" என வடிவு கால்நீட்டி ஹாயாக சாய்ந்திருந்தவள் அருகில் வந்து திட்ட.

"ஏன் உன் வக்கீல் மவட்ட மாவட்ட சொல்ல வேண்டியதானே, என்னையவே எல்லா வேலையும் சொல்ற" கண்ணை மூடியவாறே இவள் திட்ட. "அந்தப் புள்ள பாவம், இந்த பத்து நாளும் அப்பாகூட சேந்து எல்லா இடத்துக்கும் பத்திரிக்க வைக்க கூடயே அலைஞ்சுருக்கு. உன்னைய மாறி காலாட்டிக்கிட்டு திறியல" என்க.

"எம்மா நானு வேலைய பாத்துட்ருந்துட்டு நேத்து தான ஊருக்கே வந்திருக்கேன்". "நீ போய் பாத்த வேலையத்தான் ஊரே பாத்துருச்சே" என்க. "என்ன பாத்த நீயி? என்ன பாத்த வந்த நேரத்தலிருந்து நீ இப்டியே தான் பேசிட்டுருக்க, ஒரு நேரம் மாறி ஒரு நேரம் இருக்க மாட்டேன் பாத்துக்கோ. என்ன ஏதுன்னு உனக்கு அவரையே நேரில வச்சுட்டே விளக்கம் கொடுத்துட்டேன். இன்னமு இப்படியே பேசிட்டுருப்பனா பேசிட்டே இரு" என வெள்ளரிக்காயை தூக்கி வீசி விட்டு எழுந்து சென்றாள்.

அந்நேரம் வீட்டினுள் நுழைந்த வேதிகா, "பாப்பு" என அழைக்க, நின்று திரும்பி பார்க்க. "விஷா எப்போ வரேன்ட்டுருக்காரு?" எனக் கேட்க. "ரிசப்ஷன்க்குக்கா. நீ ஏன்கா நா வந்ததிலிருந்து அவனையே கேட்டுட்டுருக்க? என்னவும் பண்ணுனானா என்ன?" என்க. "ரெண்டு தடவ தான கேட்டேன். ஆர்விய எப்டி தெரியும்னு கேக்கணும் அதான்" என்றவாறு வந்து சோபாவில் அமர, இவளுக்கு எவ்வளவு தூரம் தெரியும் என்பதை அறியவே இவ்வாறு கேட்டாள்.

"ஏன்க்கா, இத மாமாட்டயே நீ கேட்ருக்லாமே" என்றாள் எதார்த்தமாக. "சோ இவளுக்கும் அவங்க ரெண்டு பேரும்தான் பிரெண்ட். இவ அதுல கூட்டில்ல. மொத்த பிளானும் அவனுடையது தான்" என வேதிகா தன் யோசனையில் அமர்ந்து, தெளிவுபடுத்திக் கொண்டாள். வேதிகாவிடம் பதில் இல்லை என்றதும் தோளைக் குலுக்கிக் கொண்டு சென்றுவிட்டாள் பாப்பு.

மறுநாள் காலை ரிஜிஸ்டர் ஆபீஸில் வைத்து கல்யாணம், பாப்புவின் பேமிலியில் ஐந்து பேரும், ஆர்வி பேமிலியில் நான்கு பேருமாக முடிந்ததும், வடபழனி கோயில் சென்று அர்ச்சனை கொடுத்து விட்டு வீடு திரும்பினர்.
மதியம் மணமக்களுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு, மற்றவர்கள் ரிஷப்ஷனுக்கு ரெடியாகினர்.

அருகிலுள்ள பெரிய மாலில், மாலை ரிசப்ஷன் ஏற்பாடாகியிருந்தது. மணமகள் அறையில் ரெடியாகி முடித்த வேதிகா விஷாவிற்கு போன் செய்ய, "சொல்லுங்க மேடம்" என்றான் எடுத்ததும், "க்ளோஸ் ஃபிரண்ட்க்கு ரிஸ்க் எடுத்து கல்யாண வர கொண்டு வந்துட்டு கல்யாணத்துக்கு வரலயே நீங்க?" என நிறுத்த, "உங்களுக்கு எப்பவுமே சந்தேகம் தானா? நா சூட்டுக்கு போயிட்டதால இங்க எங்க பாஸ் ஓட வேல நெறைய பெண்டிங் ஆயிடுச்சு. அதப் பாத்துட்டுருந்தேன். ரிசப்ஷனுக்கு வரலாம்னு தான் மேடம்" என்க.

"ஓ, அப்ப ௭ப்ப கிளம்புறீங்க? ", "பில்டிங் வாசல்ல தான் நிக்குறேன்". "குட், சரி அப்ப அப்டியே அப்ஸ்டேர்ஸ் போங்க, கொஞ்சம் பேசணும்" ௭ன்க, "இப்பவா?" என்றான். "ஆமா சில கன்ஃபூசன்ஸ தெளிவுபடுத்திகிட்டன்னா ஹப்பியா பங்க்ஷன்ல கான்சன்ட்ரேட் பண்ணிடுவேன்". "ஓகே மேடம் உங்கள தெளிவுபடுத்த வேண்டியது என்னோட கடம" என்க, அவள் வைத்துவிட்டாள்.

உள்நுழைய வந்த விஷா வேகமாக சைடில் படிக்கட்டில் ஏறுவதை கண்ட பாப்புவோ, "விஷா வாசல் இந்தப் பக்கம் அந்த பக்கம் ௭ங்க போற?" என கேட்டுக்கொண்டே, முதல் முறை சாரி கட்டியதில் நடக்கவே தெரியாமலிருக்க எங்கிருந்து ஓடிப் பிடிக்க. கொஞ்சம் தட்டுத் தடுமாறி வெளியே வந்தவள், அவன் போன திசையில் திரும்பப் போக, வரவேற்புக்கு வர வேண்டியவர்கள் வர ஆரம்பித்திருக்க, அதில் வடிவு சொந்த ஊர்காரர்களில் ஒருவர் "என்ன பாப்பு அக்கா கல்யாணத்துக்கு அப்பா வந்து ஒரு பக்கம் கூப்பிட்டா, நீ உன் கல்யாணத்துக்கு டிவி மூலமா கூப்பிடுத. அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்? நடுவுல ஒருத்தி இருக்காள்ள" என பிடித்து வைத்துக் கேட்க.

"நீங்க மட்டும் 16 வயசுல கல்யாணம் பண்ணிகிட்டிங்க. நா எதாவது கேட்டனா?", "ஏட்டி அது அந்த காலம்". "நா வெயிட் பண்ணுவேன், மாப்பிள்ளைக்கு தான் ஒரே அவசரம், என்ன பண்ண? மாப்பிள்ள வீட்டுல சொல்றத தான கேட்க வேண்டிருக்கு" ௭ன்றாள் மூஞ்சை பாவமாக்கி. "அப்ப அந்த ரூம்க்குள்ள ஒன்னும் நடக்கலையா?" என இன்னொரு பெண் இரகசியம் கேட்க.

"யார் சொன்னா? பஞ்சும், நெருப்பும் பக்கத்துல பக்கத்துல இருந்தா பத்திக்காம இருக்குமா? மூணு மாசமாக்கும், ஒரே வாந்தி" என்றாள் பாப்பு.

வடிவு பின்னிருந்து சொத்தென்று முதுகில் அடிக்க, "ஸ் ஆ" ௭ன தடவிக் கொண்டே பின்னால் திரும்பினாள். "வாங்கக்கா, வாங்க மதினி, நேத்தே வர வேண்டியதுதானே நீங்களும் வெளியாளு மாதிரி டயத்துக்கு வாறீக" என உள்ள அழைத்துச் செல்ல திரும்பியவர், திரும்பி , "வாய அடக்கி இருக்க முடிஞ்சா இரு, இல்லையா வீட்டுக்கு கிளம்பு" என கடித்துவிட்டே சென்றார்.

"என்ன பாப்பு இப்படி சொல்லுதா?" என அவர்கள் விசாரிப்பதும், "உங்களுக்கு அவளப் பத்தி தெரியாதாக்கா. இன்னும் விளையாட்டுத்தனம் போகாம இருக்கா" என வடிவு பதில் சொல்லிக் கொண்டும் போவதைக் கண்டு, "அவங்க வாய அடக்கி இருந்தா நா ஏன் பேச போறேன்" என வக்கனைத்துக் கொண்டு வாசல் பக்கம் கவனமானாள். அடுத்தடுத்து ஆட்களுக்கும் அப்படியா இப்படியா என விசாரிப்பதும் இவள் வந்ததை பதிலாக அடுக்குவதும் தொடர்ந்து கொண்டிருந்தது.

இதற்கிடையில் மாடிக்கு ஏறிய விஷாகனை 10 நிமிட காத்திருப்புக்குப் பின் சந்திக்கச் சென்றாள் வேதிகா. "ஹலோ மேடம் ஹார்ட்டி கங்கராஜுலேஷன் பார் யுவர் மேரேஜ்" ௭ன்றான் ஆரம்பமாய். "ஆமா ஆமா உங்க விஷ்க்கு தான் 2 டேஸ்ஸா வெயிட் பண்ணிட்டுருந்தேன்". "ஓஹ்! ரொம்ப சந்தோஷம் மேடம், சொல்லுங்க என்ன விஷயம் கேட்கணும்?” "அதான் உங்களுக்கே இந்நேரம் தெரிஞ்சுருக்குமே, இல்லனா ஈஸியா மாட்டிக்கிற மாதிரி ஒரு பிளான நீங்க போட வேண்டிய அவசியம் கிடையாதே" என்றாள். சிரித்த விஷாகன், "நா சொன்னா நம்புவீங்களோ? மாட்டிங்களோ? பட் அதுதான் நிஜம், எனக்கு பாப்புக்குட்டி ஆட்டிட்யூட் பிடிச்சது, அவங்க என் பாஸ்க்கு வைப்பா வந்தா ஹி மஸ்ட் ஹாப்பின்னு தோணுச்சு அதுக்காக மட்டும் தான் இவ்வளவும் செஞ்சேன். இத மறச்சு மறச்சு கொண்டு போறது எனக்கு இஷ்டமில்ல. எப்படியும் மேரேஜ் ஆனதும் அரவிந்தும், நானும் பிரெண்ட்ஸ் இல்லன்னு தெறியதான் போகுது. அதுக்குள்ள இந்த விஷயமும் சேந்து முடிஞ்சுரட்டும்ன்னுதான் ஆள் வச்சு வீடியோ எடுத்தேன். ஆக்ஷுவலி ரெண்டு பேரும் சேந்து இருக்கிற மாதிரி ஃபோட்டோ எடுத்து, தேவபட்டா மார்ஃபிங் பண்ணுறது தான் பிளான். ஆனா அன்னைக்கு நைட் பாப்பு அங்க போனது எனக்கே திடீர்னு அந்த டைம்ல கிடைச்ச ஒரு சான்ஸ் தான். அதான் யூஸ் பண்ணிக்கிட்டேன். ஆனா கண்டிப்பா ஒரு அஸுரன்ஸ் பாப்புவ எங்க பாஸ் நல்லா பாத்துப்பாங்க. ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பாங்க".

"என் தங்கச்சி லைப் டிசைட் பண்ண உனக்கு யார் ரைட்ஸ் கொடுத்தது. இது எவ்வளவு பெரிய க்ரைம் தெரியுமா? எதுக்காக இப்டி பண்ணுனன்ற ரீசன ஒழுங்கா சொல்லிடு, இல்ல கேக்கிற மாதிரி கேப்பேன்". "நீங்க என்ன விதமா கேட்டாலும் என் பதில் இதுதான். எனக்கு உள் மனசு சொல்லிச்சு அதான் செஞ்சேன்" ௭ன்றான் உறுதியாக. அந்நேரம் அவளுக்கு போன் வர, "உன்ன உண்மைய ஒத்துக்க வைக்காம விட மாட்டேன்டா" என்றவாறே கீழிறங்க. 'ம்' ௭ன்ற தோள் குழுக்களுடன் சிறிது நேரத்திற்கு பின் அவனும் இறங்கி சென்றான்.

வேதிகா இருவரை வாசலில் நிற்க ஏற்பாடு செய்திருக்க, அவர்கள் வருபவர்களை நிறுத்தி கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதித்துக் கொண்டிருந்தனர்.

கபிள்ஸ் இருவரும் ஸ்டேஜ் ஏற, பங்க்ஷன் ஸ்டார்ட் ஆகியது. இருவரும் மைல்டு பிங்க் கலரில் ஜோடியாக அணிந்து அழகாக தெரிந்தனர். சுஹாசினியும் ஜோலியும் லெஹெங்காவும்மாக அணிந்து அழகாக தெரிந்தாள். அவள் பங்கிற்கு அழைத்தவர்களை வரவேற்று கொண்டிருந்தாள்.

பாப்பு வாசலுக்கும் உள்ளேயும் நடையோ நடவென நடந்தவள், விஷாகனை கண்டுவிட்டு அவனிடம் விரைந்தாள். "எங்கப்பா இன்னும் சார்ம்ம காணும்? நாம டான்ஸ் வேற பண்ணனும். சீக்கிரம் வந்தா தான. ஏன் இன்னும் காணும்?" என படபடவென கேட்க.

மேலும் கீழும் பார்த்தவன் நக்கலாக "பார்ரா சார பயங்கரமா தேடுதாப்ல இருக்கு ௭ன்ன வச்சுருக்க அவருக்கு. ஆமா அது இருக்கட்டும், நீ சாரீலயா ஆடப் போற? எசக்கு பிசகா நா சாரீல கால வச்சு, நீயும் குப்பற விழுந்து நானும் விழுந்து, எதுக்கு இவ்வளவு ரிஸ்க்?" ௭ன்க. "சாரீ சார்ம்க்காக கட்டுனது, அவரு வந்து பாத்துட்டா சுடிய மாத்திப்பேன் டான்ஸ்க்கு" என்க.

"ஓ! அப்டி, ஒரு மார்க்கமா தான் இருக்க, அப்ப பாஸ கல்யாண பண்ணிக்க ரெடி ஆகிட்ட போல" ௭ன சிரிக்க. "இன்னு சார்ம் எப்ப வருவாங்கன்னு பதில் சொல்லல நீ" ௭ன்றாள் முறைத்து.

"ஆன் தி வேன்னு பவ்யா சொன்னா". "உன் பொண்டாட்டியா? அவ வாயத் திறந்தாலே பொய்யால்ல சொல்லுவா" என இவள் சொல்லிக்கொண்டிருக்க, மண்டபமே பரபரப்பானது.

அப்போதுதான் வந்ததில் நடுவில் நடுவில் அமர்ந்திருந்த மீடியா மக்களை கண்டறிந்தனர் பாப்புக் குடும்பத்தினர். எல்லோரும் இரணியனை சூழும் முன், கார்ட்ஸ் அவனை சேப் செய்திருந்தனர். எப்பொழுதும் இருவர் மட்டுமே வர, இப்பொழுது 12 பேர் வந்தனர். ஏனெனில் இவன் வருவானோ என்ற எதிர்பார்ப்பே எக்குத்தப்பான கூட்டத்தை வெளியில் கூட்டி விட்டிருந்தது.

மீடியா பீப்பிள்ஸ் சொந்தங்களோடு இணைந்து நுழைந்திருந்தனர். எப்படியோ அவன் உள் நுழைய மண்டபத்தினுள்ளும் ஆளாளுக்கு கைகுலுக்க நெருங்கிவர, சிலர் ஒட்டி நின்று செல்ஃபி ௭டுத்து கொண்டனர், முடிந்தமட்டும் கைகுலுக்கி நகர்ந்து வந்தவன், பாப்புவை பார்வையால் தேடிக் கொண்டு வர, அவள் புஸ் புஸ்ஸென முறைத்துக் கொண்டிருந்தாள்.

இவன் பார்வையும் அவள் பார்வையும் சந்திக்க, அவள் மேலும் முறைக்க, அவன் ஆர்வமாய் கண்ணீல் சிரிப்புடன் பார்த்தான். நேராக அவளிடமேவும் சென்றான்.

"ஹே தாட்ஷா லூக்கிங் ஸ்டன்னிங் யார்" என இடுப்பை பிடித்து இழுத்து அணைத்திருந்தான். அவளுக்கு அது சந்தோஷமாகவே இருந்தது. அவன் கை குலுக்கியதில் இளம்பெண்கள் அதிகம். ஒட்டி நின்று போட்டோவேறு எடுத்தனர், இதற்கு முன் இதை மாறி பொழுதுகளை கண்டுகொள்ளாதவளுக்கு தற்போது கொஞ்சம் புகைய ஆரம்பித்திருந்தது. அதை அவன் அந்தப் பெண்கள் முன்பே அவளை அணைத்து அணைத்துவிட்டிருந்தான்.

அதனால் சந்தோசமாகவே அவளும் எக்கி அவன் கழுத்தை கட்டிக் கொண்டு மறுநொடி விடுவித்தவள், "ஏன் சார்ம் லேட்" ௭ன்றாள் உறிமையாக, "கரெக்ட்டா வந்திருக்கேனேமா" என்றான் அவனும் விலகி நின்று வாட்ச்சைக் காட்டி.

"சரி கொஞ்ச நேரம் இருந்து தான் கிளம்பணும். உங்களுக்குன்னு அந்தப்பக்கம் தனியா வி.ஐ.பி. சேர்ஸ் போட்டுருக்கு, ௭ங்க அன்புத் தொல்லைகள் இல்லாம நீங்க கொஞ்ச நேரம் இருக்கலாம், விஷா அழைச்சுட்டு போய் உட்கார வை" என்க. "நீயும் வா" என்றான் அவன். சுற்றி நின்ற அனைவரும் அவர்களை தான் வேடிக்கை பார்த்து நின்றனர்.

"அடடா ரொம்ப தான். நீங்க போங்க, நா வந்தவங்கள கவனிக்கணும்" என்றாள் இரணியனை லேசாகத் தட்டி தள்ளி அவளை பார்த்தவாறே நடந்து விட்டான். இவளும் விஷாகனுக்கு சைகை காட்டி ட்ரெஸ் சேன்ஞ் பண்ணும் அறையை நோக்கி நடந்து விட்டாள். இதையெல்லாம் கவனித்த பவ்யா "உனக்கு இருக்குடி இன்னைக்கி" என கருவிக் கொண்டு சென்று அமர, வேதிகா மேடையிலிருந்தே ஒருவரை அழைத்து சில இன்ஸ்டெரக்ஸன் கொடுத்தனுப்பினாள்.

அடுத்த 15 நிமிடங்களில் மைக்குடன் ஆஜராகினர் விஷாவும், பாப்புவும் ஸ்டேஜில், "ஹாய் ப்ரண்ட்ஸ் அண்ட் ரிலேட்டிவ்ஸ் குட் ஈவினிங். பங்க்ஷன்னா ஆட்டம், பாட்டம் இல்லாம எப்படி? ரைட் விஷா?", "ஆமா பாப்பு, இப்ப நம்ம குடுக்கப் போற பெர்பார்மென்ஸ்ல இந்த பங்க்ஷன மறந்தாலும், நம்மள மறக்கக் கூடாது. ௭ன்ன நா சொல்றது" என்க பாட்டு ஆரம்பித்திருந்தது.

பாப்புவின் அப்பா அணிந்திருந்த உடை போலவே அணிந்து கொண்டு வந்த விஷா, "ஆச மக என்ன செஞ்சாலும் அதட்ட கூட ஆசைப்பட மாட்டேன், என் மக ஆம்பள பத்துக்கு சமம்தானே" என ஆரம்பித்தவுடன் பாப்புவும் ஆடினாள். அடுத்ததாக பாப்பு வடிவாக மாறி ரெடிமேட் சேலையை சுற்றிக் கொண்டு வர, விஷா பாப்புவாக வந்தான். அதில் விஷா வடிவேல் டயலாக் ஆன "உள்ள ஒரே இருட்டு" வசனத்தை பேச பாப்பு "என் பிள்ளைக்கு எம்புட்டு அறிவு" என திருஷ்டி கழிக்க, வடிவு நிஜமாகவே கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு மேடையேறியிருந்தார். பின் ரன்னிங், சேஸிங் என்றானது. அதில் எல்லோரும் "ஹே" என கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அடுத்து வேதிகாவிற்கு ஒரு பாசமான "உன் கூடவே பிறக்கனும்" அக்கா பாட்டையும், சுஹாசினிக்கு "உயிரே உயிரே தப்பிச்சு ௭ப்படியாது ஓடிவிடு, ஐயையோ வருதே மூதேவி வருதே" பாட்டை ரீமேக் செய்து ஆடினர், தூரத்தில் இருந்தே வாட்டர் பாட்டிலை பாப்புவை நோக்கி விட்டெறிந்தாள் சுஹாசினி. அளுக்கு ஒன்றை டெடிக்கேட் செய்து விட்டு இரணியனுக்கு வந்தனர். அவனுக்காக அவன் படத்திலிருந்து ஒரு டூயட் செலக்ட் செய்து ஆடினர், அவளின் நயனங்களை ரசித்து பார்த்தான் அவன், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தெரிந்தாள் அவன் கண்களுக்கு.

பினிஷிங் டச்சாக, "பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பொண்ணு வந்தாச்சு" பாட்டை போட்டு முடிந்த மட்டும் மொத்த மண்டபத்தையும் ஆட வைத்திருந்தனர். இரணியன் பாப்பு மீது வைத்த கண்ணை எடுக்க முடியாமல் பார்த்திருந்தான்.

அவர்கள் இருவரும் பெர்பார்மன்ஸ் முடித்து இழைக்க இழைக்க கீழே இறங்க, பாப்புவிற்கு ஒருவர் வந்து "செமயா பெர்பார்மன்ஸ் பண்ணிங்க மேடம், ஜூஸ் குடிங்க" என வந்து கேட்டரிங் யூனிபார்ஃம் போட்ட ஒருவர் நீட்ட, இருந்த குஷியில் "தேங்க்யூ" என சிரித்தவாறு வாங்கிக்கொண்டு திரும்பி இரணியனிடம் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வருகிறேன் என்பதை சைகையில் சொல்லி விட்டு செல்ல, ஸ்லோவ் மோஷனில் தலையசைத்து அனுமதி தந்தான் அவன்.

அவள் போட்ட பாட்டில் கடுப்பில் இருந்த சுஹாசினி அவள் ஒரு அறையில் சென்று கதவடைப்பதைக் கண்டு பின்னேயே சென்று கதவை தட்ட, பாப்பு திறக்க, "அப்படியே உன்ன கொன்னுட்டா ௭ன்னன்னு இருக்கு, எனக்கு பாட்டு போடுன்னு உன்ட்ட கேட்டனாடி?" என சண்டைக்கு வர. "என்ன செய்ய கூட பொறந்து தொலச்சிட்டியே" என்றவாறே கையில் வைத்திருந்த ஜூஸ் பருகப் போக. "நீ ஆடுன ஆட்டத்துக்கு ஜூஸ் ஒரு கேடு" என அதை பிடுங்கி தான் குடித்துவிட்டு, "வீட்டுக்கு வாடி உன்ன கவனுச்சுக்றேன்" என்று விட்டு வெளியேற, "இந்த ஜூஸ்க்கா பின்னாடியே வந்தா" என சென்றவளை கண்டு திட்டிக் கொண்டு. படாரென கதவை அடைத்தாள்.

அந்தபக்கம் இறங்கிய விஷாகனை, "வாங்க பாஸ், என்னம்மா ஆடுறீங்க. அங்க பார்ட்டி நடக்கு அதுல வந்து உங்க ஆட்டத்த காட்டுங்க" என ஒருவர் இழுத்துச் செல்ல, "எனக்கு பழக்கமே இல்லீங்க வேணா" என இவன் அங்கு சென்ற பின்னும் அடம்பிடிக்க. "அதெல்லாம் பழகிக்கலாம், சும்மா அடிங்க" அவர் கட்டாயப்படுத்த, இவன் முடியவே முடியாது என சாதிக்க. "அப்ப 'கோக்'னாலும் குடிங்க, இரணியன் பேமிலி மெம்பர் கூட டச்ல இருக்க ஆசபடுறோ வேணாங்கிறீப்களே பாஸ்" என மற்றவர்களும் சொல்ல.

சுற்றி பார்த்தான் எல்லோரும் கொஞ்சம் பெரிய மனிதர்களாக இருக்க, இவனுக்கு அதற்குமேல் பிகு பண்ணாமல். "சரி கோக் குடுங்க" என வாங்கி கொண்டான். குடித்த கொஞ்ச நேரத்தில் சுழற்ற ஆரம்பித்திருந்தது. வேதிகா சொன்ன அந்த ரகசிய போலீஸ்காரர் அவனை தனியாக தள்ளிக் கொண்டு சென்று ஒரு அறையில் விற்று மாற்றி மாற்றி கேள்வி எழுப்பி பார்க்க, அவன் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க, 'அப்ப அதான் உண்மை' என முடிவுக்கு வந்தவர் அவனை அப்படியே விட்டு விட்டு வெளியேறிவிட. அதே அறைக்கு பவ்யா பாப்புவிற்கு கலக்கிய ட்ரெக்கின் போதையில் நுழைந்தாள் சுஹாசினி, அந்த நிலைமையில் தன்னை யாரும் பார்த்து விடக்கூடாது என்றெண்ணி கதவை உள்ளார அடைத்துக் கொண்டாள். பங்க்ஷன் பிசியில் இருந்த வெளி உலக மக்கள் இவர்கள் இருவரையுமே மறந்து விட்டிருந்தனர்.
 
அத்தியாயம் 17
சுஹாசினி வெளியேறவும் டிரஸ்சை மாற்ற சென்ற பாப்பு, ஒரு சுடிதாரை மாற்றிக் கொண்டிருக்க மறுபடியும் கதவை தட்டும் சத்தத்தில், டென்ஷனாகி "இந்த வெள்ள பாட்சாவ இன்னைக்கு அடிச்சு கொன்ற வேண்டியதான்" என்ற வெறியுடன் வேகமாக டிரஸ்சை மாற்றிக் முடித்தவள், படாரென கதவை திறந்த வேகத்தில் "என்னடி ஓ பிரச்சன" என பாய.

வெளியில் நின்றதோ இரணியன், ஸ்டைலாக கதவின் நிலையில் கையைக் கட்டி கொண்டு சாய்ந்து நிற்க. எட்டி மண்டபத்தை சுற்றி பார்த்தாள் மொத்த ஹாலும் இங்கு தான் பார்த்துக் கொண்டிருந்தது. அங்கு பார்த்தவாறே இவனைப் பார்த்தவள், "என்ன அன்னைக்கு சரியா வீடியோ எடுக்காதவங்களாம் இன்னைக்கு எடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டு வந்திருக்கீங்களோ?”

"ஆமா பின்ன, பொய்ய உண்மையா ஆக்க வேணாமா நாம ரெண்டு பேரும் ஒருத்தர் ரூமுக்கு இன்னொருத்தர் போறது சகஜமான ஒன்னுதான்னு புரியனும்ல" என்றான் நிலையில் சாய்ந்து நின்றவாறே அவள் கன்னத்தில் கோடு வரைந்து கொண்டு. "நீங்க மொத மத்தவங்களுக்கு உண்மையா இருக்கிறத விட்டுட்டு கொஞ்சம் நம்ம ரிலேஷன்ஷிப்புக்கு உண்மையா இருக்க முயற்சி பண்ணலாம். ஏன் சொல்றேன்னா எனக்கு உங்க மேல க்ரஷ் இருக்றது என்னவோ உண்ம, அது லவ்வா ப்ரோமோட் ஆகுறது, நீங்க ௭டுக்குற ஸ்டப்ல தான் இருக்கு. பின்ன அன்னைக்கு நீங்க என்ட்ட கேக்காம நம்ம மேரேஜ் ஸ்டேட்மென்ட் கொடுத்த மாதிரி நா உன்கிட்ட கேக்காம பிரேக்கப் ஸ்டேட்மெண்ட் குடுத்திருவேன் அப்றம் வருத்தப்படக்கூடாது" என்றாள் அவளும் அவனை இடித்துக்கொண்டு நெருக்கமாக நிலையில் சாய்ந்து நின்று.

"நீ நிக்கிற பொசிஷன பாத்தா நீ இம்ப்ரஸ் ஆகாத மாதிரி தெரியலயே, இப்டி இடிச்சுக்கிட்டு யாராது பிரேக் அப் பண்ண போறேன்னு சொன்னா நம்புவாங்களா" என்றான் மெதுவாக அவள் வயிற்றில் கை வைத்து அவளை உள்ளே தள்ளிக் கொண்டு சென்று. அவளும் பின்னே சென்றவள் நிதானிப்பதற்குள், கதவை அடைத்தவன், "எப்டி இம்ப்ரஸ் பண்ணனும்னு சொல்லு பண்ணிருவோம்" என்றான் இழுவையாக.

"எங்க அம்மா கிட்ட அடி இழுத்து விடாம கிளம்ப மாட்டீங்களோ? கதவ திறங்க" என அவனை சுற்றிக் கொண்டு போய் கதவை திறக்கப் போக, திறக்கப் போன அவள் கையை பிடித்து திருப்பி கதவில் சாய்த்தவன், "அடிச்சுட்டு ஓடுற, இம்ப்ரஸ் பண்ணலனா பிரேக்கப் ஸ்டேட்மெண்ட் கூடுப்பேன்ற, உனக்கு என்கிட்ட இப்டிலா பேச என்ன தைரியம், என்ன பாத்து உனக்கு பயம் வர வைக்க, என்ன பண்ணலாம்?" என இரண்டு கையையும் பிடித்து அவளை நகர விடாமல் வைத்து கேக்க, கையை உருவவே முயற்சிக்காமல் அவன் முகத்தையே பார்த்தவள், "இந்த பாப்பு யாரகண்டும் பயப்பட மாட்டா, ட்ரை யுவர் லெவல் பெஸ்ட்" என்றாள் தைரியமாக. "ஆஹான் ட்ரை பண்ணிடலாமா" என்றவன் அடுத்து ஏதோ சொல்ல வர, கதவு பட படவென தட்டப்பட "வடிவு" என்றாள் கண்ணடித்து சிரித்து.

அவள் இரு கையையும் ஒரு கையில் பிடித்தவன் மறு கையால் அவள் முகத்தைப் பிடித்து கண்ணை உற்றுப் பார்த்தான், கண்ணில் சிரிப்புடன் தானும் அவன் கண்ணை ஆழமாக பார்த்து நின்றாள். அன்று அவள் கடித்து போலவே அவளுக்கு இடது கன்னத்தில் பல் பதியக் கடித்துவிட்டே விட்டவன், "நீ என்ன குடுக்கிறியோ அது டபுள் ஆவே திருப்பி கிடைக்கும், ஒரு டிடி போட்டுக்க, நா கிளம்புறேன், நாளைக்கு ஒன்டே ரெஸ்ட் எடுத்துட்டு, டே ஆஃப்டர் மார்னிங் 9க்கு வந்துரு, மேக்ஸிமம் த நெக்ஸ்ட் டே, நாம சாங் ஷூட் போற மாதிரி இருக்கும், ஷெட்யூல் சேஞ்ச் பண்ணிருக்காங்கன்னு நினைக்றேன், சிம்ளா கிளைமேட்காக சோ கெட் ரெடி" ௭ன கையைவிட்டு டோரை திறக்க, அவன் கையை விட்ட வேகத்தில் இருந்தவள் அவன் காலர் பிடித்து எக்கி அவன் வலது கன்னத்தை கடிக்கவும் வடிவு படாரென கதவை திறக்கவும் டைமிங் சரியாக இருந்தது.

அவரை சுற்றி ஒரு கூட்டமே இருக்க கார்ட்ஸ் பாப்புவின் அம்மாவைத் தடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் முழித்து மற்றவர்களை தடுத்து கொண்டிருக்க இப்டி ஒரு காட்சி எல்லோருக்கும் கிடைத்தது. வடிவு பத்திரகாளி அவதாரம் எடுத்துவிட, "மா ஃபர்ஸ்ட் அவங்கதான் கடிச்சாங்க எக்ஸ்ட்ரா ஒன்னு ஆயிடுச்சு, அத தான் திருப்பிக் குடுத்துட்டேன், உன் மக கடனாளியா இல்ல, அதுக்கு நீ பெரும தானே படணும்" என தோளை குலுக்க. எட்டி அந்த தோளிலேயே அடித்தார் வடிவு.

"நோ ஆண்ட்டி, ஷீ இஸ் ரைட், வீ வில் டேக் கேர் ஆஃப் இட்" என பாப்பு தோளை சுற்றி கொண்டவன். "ஓகே தாட்சா, கெட்டிங் லேட், ஐ அம் லீவிங், பை டேக் கேர், சீ யூ சூன்" என லேசாக அணைத்து விடுவித்தவன், "பை ஆண்ட்டி, நத்திங் சீரியஸ், நீங்க ஒர்ரி பண்ணி, டோன்ட் மேக் ஹெர் ஆல்சோ எமோஷனல் ஓகே" என்றுவிட்டு, காட்ஸிடம் ஸ்டேஜை கண்ணை காட்ட, அவர்கள் அவனை ஸ்டேஜுக்கு வழிநடத்திச் சென்றனர்.

ஜான் பொக்கே கொண்டுவந்து ஸ்டேஜ் நியர் அவனிடம் கொடுக்க திரும்பி பாப்புவை பார்த்துக்கொண்டான். "பொக்கே இல்லாம ஃபங்ஷன் போவீங்களா நீங்க?" அவளது அந்த வார்த்தைக்காக அதே கடையில் ஆர்டர் கொடுத்து வாங்கி வந்திருந்தான் இரணியன். அருகில் வரவும் ஆர்வி கொஞ்சம் எக்சைட் ஆனாலும் வேதிகா மேனரிசம் ஸ்மைலோடு கிஃப்ட்டயும், பொக்கேவயும் பெற்றுக் கொண்டாள். இருவருக்கும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து, இறங்கி மறுபடியும் குவிந்த மக்களுக்கு பாய் சொல்லி கிளம்பிவிட்டான்.

சுற்றி சுற்றி விஷாகனை தேடிய பவ்யாவும் "அவளோட சேந்து என்ன ஆட்டம், இப்பயும் ஆள காணோம். இன்னைக்கு திட்டுறதுல இனி அவ பக்கமே இவங்க போகக்கூடாது. சரியான ஃப்ளிர்ட்டா தான் இருப்பாங்க போல இருக்கு" என சுற்றி தேடியவாறு அம்மாவிடம் புலம்பி விட்டு, 'நாம கொடுத்தத இந்த அதிகப்பிரசங்கி குடிக்காம தப்பிச்சுட்டாலே ச்ச, எல்லார் முன்னயும் வந்து அவமானப்படுவான்னு பார்த்தா தெம்பா நிக்க' என நினைத்துக் கொண்டு கிளம்பினாள். தெய்வநாயகம் மட்டுமே மெய்யப்பனை தேடிப்பிடித்து விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்.


சென்றவனை வேடிக்கை பார்த்து நின்ற பாப்புவை சிலர் அதிசயமாகவும், பெரியவர்கள் சுளித்த முகத்துடனும் பார்ப்பது கண்டு வெகுண்டெழுந்த வடிவு, "எல்லாரும் சாப்பிட போங்க, கூட்டிட்டு போங்க மதினி, அக்கா கொஞ்சம் பாத்துக்கோங்க, நா இவள கிளப்பி விட்டுட்டு வாரேன்" என பேசி அவர்களை அனுப்பிவிட்டு, இவளிடம் திரும்பியவர் வேடிக்கை பார்த்து நின்றவளை இழுத்துக் கொண்டு உள் சென்றார்.

சொத்து சொத்து என்று இரண்டு அடி அடித்தவர் "இனி உன்ன ௭ப்டிதான் திருத்தறது உன்ன ஆம்பளப் புள்ளையா பெத்திருந்தா எப்படியோ போன்னு விட்டு தொலைச்சுருப்பேன்" என மேலும் அடிக்க வர, "அடிக்காம பேசுமா வலிக்குது" என தடவிக்கொண்டே சொன்ன பாப்பு, "இங்க பாரு பல்லு பதிஞ்சுட்டு சீக்கிரம் போய் டிட்டி போடலனா பாய்சன் ஆயிடும், நா முன்ன போயி இன்ஜக்ஷன் போட்டுட்டு, வீட்டில எல்லா ரெடி பண்ணி வைக்கிறேன் அக்காவும் மாமாவும் தங்க வராங்க தான?" என பெரிய மனுஷியாகப் பேசியவள், வேகவேகமாக ஸ்கூட்டி சாவியைத் தேட, "கருமம் கருமம்" என தலையில் அடித்த வடிவு, "கல்யாணமாகாத நீ போய் என்னத்த ரெடி பண்ணுவ கொஞ்சமாச்சும் அடக்க ஒடுக்கம் இருக்காடி, வெளில வேடிக்க பார்த்தவங்கள நெனச்சு நா பயந்துட்ருக்கேன் நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணிட்டு கிளம்பபோற", "அவங்கள்ள பாதி பேர் இப்ப கிளம்பிருவாங்க, மீதி பேர் கால சாப்பாட்டோட கிளம்பிருவாங்க, நீ பொண்ணோட அம்மா சோ பிஸியாவே இருக்க மாதிரி இரு ஒருத்தரும் கேள்வி கேக்க மாடாங்க, அதயும் மீறி கேள்வி கேக்க வந்தா என்ட்ட அனுப்பி விடு நா பாத்துக்கறேன்" என்றுவிட்டு கிடைத்த சாவியோடு தனது பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியேறிவிட, "எரும எரும நா என்ன கவலைல கேக்கேன், அத மாதிரி என்ன எஸ்கேப் ஆக வழி சொல்லிட்டு போகுது பாரு" என்றுவிட்டு கணவரைத் தேடி சென்றார் மனக்குமுறலை கொட்ட.

அவரோ "இப்ப எதுவும் வேணாம் நல்லபடியா நாளைக்கு வேதிகாவ அனுப்பி வைச்சுட்டு இதப் பத்தி பேசுவோம்" என்றுவிட, "என்னவோங்க எதனாலும் சீக்கிரம் பண்ணுங்க, எல்லமீறி போய்க்கிட்டுருக்கா உங்க பொண்ணு" என்க. "சரிமா சரிமா இன்னைக்கு தங்குறவங்க இங்கயே தங்க வச்சுருவோமா?", "இல்ல வேணாங்க நம்ம பாப்பு, அப்பார்ட்மெண்ட் மீட்டிங் ஹால அரேஞ்ச் பண்ணிட்டா அங்க எல்லாரும் தங்கிகிட்டும், காலைல சாப்பாடு மட்டும் அரேஞ்ச் பண்ணிக்கலாம்", "நாளைக்கு மார்னிங் ஹால் கீ ஒப்படைச்சா போதும், சோ இங்க தங்கறவங்கள தங்க சொல்லு, நல்ல வசதியா இருக்கும்", "சரிங்க நா சொல்லிடறேன்" என வடிவு கிளம்ப போக, "நல்லநேரம் பாத்துக்கோ, பிள்ளைகள வீட்டுக்கு அழைச்சிட்டு போனும், பாப்பு சுஹா எங்க?" என்றார் சென்றவரை நிறுத்தி.

"இந்த பாப்பு கழுத இப்பதான் வீட்டுக்கு போறேன்டு போது, சுஹா கொஞ்சம் தலை சுத்துற மாதிரி இருக்கு, ரெஸ்ட் எடுக்கிறேன் சொல்லிட்டு போனா வீட்டுக்குதான் போய்ருப்பான்னு நினைக்கிறேன், ஒரு பத்து நிமிஷம் கழிச்சு போன் பண்ணி கேட்டுக்கோங்க, இவளும் வீட்டுக்கு போயிட்டாளான்னும்? சுஹாவும் இருக்காளான்னு தெரிஞ்சுக்கலாம்" ௭ன சொல்லியவாறு வடிவு நகர்ந்துவிட இருவரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றனர். அடுத்தடுத்த வேலைகள் வேகமாக நடந்தேற, நேரம் 9 மணி என்றாகவும், சிலரை அங்கேயே தங்க வைத்துவிட்டு பொண்ணு மாப்பிள்ளை அழைத்துக்கொண்டு சில உறவினர்களுடன் வடிவும் நெய்யப்பனும் கிளம்பினர்.

பாப்பு டிடி இன்சக்ஷனை போட்டிவிட்டு, இரணியனை திட்டிக் கொண்டே, தேவையான பொருட்களை வாங்கி கொண்டு அபார்ட்மெண்ட் வந்து சேர்ந்தாள். இவள் லிப்டில் உள்ளே ஏற போக பங்ஷனில் இருந்து சீக்கிரம் வந்திருந்த சில அப்பார்ட்மெண்ட் பெண்கள், அங்கு கூடி நின்று கிசு கிசு பேசிக்கொண்டிருந்தனர். அதை கண்டவள் அதில் ஒருவரை "ஹாய் சிவா ஆண்ட்டி சீக்கிரம் ரிட்டன் ஆயிட்டீங்களா எல்லாரும் சாப்பிட்டாச்சு தானே" என நின்று கேட்க.

ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கொண்டு, "உன்ன என்னமோ நினைச்சோம், நீ என்னம்மா இப்படி இருக்க" என்றார் ஒருவர் பதிலுக்கு. "எப்படி இருக்கேன்?" ௭ன கேள்வியாய் நிறுத்த. "மத்த விஷயத்துலலா நீ நல்லா திறமையா இருக்கனால, வேற என்ன சேட்ட செஞ்சாலும் பொறுத்துப் போறோம், அதுக்காக இப்ப என்னடான்னா கல்யாணம் ஆகாம ஒரு வேத்தாளோட தங்கிட்டு வார நல்லாவா இருக்கு?" என்றார் மற்றொருவர்.

நிதானமாய் ௭ல்லோரயும் பார்த்தவள் "நா ஒண்ணுமே நடக்கல அங்கன்னு சொன்னா மட்டும், நீங்க நம்பவா போறீங்க" என்க. "ப்ரஸ் முன்ன கம்முன்னு தான நின்ன நீ, உன் அம்மா அப்பாவ பத்தி யோசிக்கவே இல்லயே?", "நீங்கல்லாம் இப்டி பேசுவீங்கன்னு தான் அவங்க பயமே, அம்மா அப்பா மேல அவ்வளவு அக்கறை இருந்தா என்ன பத்தி பேசாம இருங்க. சிம்பிள்", என கண்ணடித்து காட்ட, "என்னடியம்மா ஒரு வளந்த பிள்ளையாட்டமே பேச மாட்ற, நாளைக்கே அந்த தம்பி ஒன்ன வேண்டாம்ன்னு சொன்னா என்ன செய்வ" என அந்த சிவா ஆண்ட்டி கேக்க, "தூக்கி போட்டு போயிட்டே இருக்க வேண்டியதான், அப்பனாலும் நீங்கல்லாம், அவங்களுக்குள்ள ஒன்னும் நடக்கல போலன்னு இப்டி மறுபடியும் கிசுகிசு மாநாடு போட்டுக்கலாம்ல", "எங்களயே சொல்லு நீ செஞ்சது தப்புன்னு ஒத்துக்கவே செஞ்சுறாத".

"இதுவரைக்கும் நா இந்த அப்பார்ட்மெண்ட்காக உங்களுக்காகன்னு செஞ்சது ஏதாவது தப்பா இருந்துருக்கா" அதுலா நீ ஒரு செக்ரெட்ரி ஹெல்ப்பா நினைச்சு செஞ்சது, அதுல கூட நீ கமிஷன் எடுத்துக்கிட்டு தான் செஞ்ச, ஆனா அதெல்லாம் நல்ல விஷயங்கள் எப்டி தப்பாகும்", "உங்களுக்காக செஞ்ச உங்களுக்கான நல்ல விஷயம் அது தப்பு இல்லாத போது, எனக்காக நா செஞ்ச எனக்கு நல்ல விஷயம் மட்டும் எப்டி தப்பாகும்? " இவள் கேள்வியே அவர்களை குழப்பி விட்டுவிட, அவர்கள் முழிக்க, "ஒன்னும் அவசரமில்ல யோசிச்சு காலையில கூட பதில் சொல்லுங்க" என சிரித்துகொண்டே லிப்ஃட் ஏறி சென்று விட்டாள்.

தன்னிடமுள்ள சாவியை வைத்து கதவை திறந்து உள்ளே சென்றவள், அக்கா ரூமை, வாங்கி வந்திருந்த பொருட்களை வைத்து தெரிந்த மட்டும் அலங்கரித்து விட்டு தனது அறையில் வந்து குளித்து பிரஷ் ஆகி இழுத்து மூடி படுத்து விட்டாள். பின் ஏதோ நியாபகம் வந்தவளாக தனது செல்லை எடுத்து பாக்க, மை சார்ம் மிடமிருந்து 4 போட்டோ வந்திருந்தது. அவளை சேரியில் எடுத்திருந்தான்.

எப்ப எப்டி எடுத்தாங்க என்பதே புரியவில்லை அவளுக்கு அந்த போட்டோக்களுக்கு கீழ் ஏகப்பட்ட ஸ்மைலியோடு அனுப்பியிருந்தான். அதில் மிக அழகாகவே இருந்தாள்.

"எப்டி எடுத்தீங்க?" இவள் வாட்ஸ்அப் அனுப்ப, "ரீச்சுடு ஹோம்?" ௭ன அவன் பதில் அனுப்பினான். இவள் அவன் கிளம்பியதிலிருந்து இப்போதுவரை நடந்ததை வாய்ஸ் மெசேஜாக அனுப்பிவிட்டு இருந்தாள். "ஓகே ஓகே" அவன் சிம்பிளாக முடித்துவிட.

மறுபடியும் "போட்டோ எப்ப எப்டி எடுத்தீங்க?", "விஷா எடுத்து எனக்கு அனுப்புனான், உன்ன நேர்ல பாக்க முன்னயே போட்டோல பாத்துட்டேன், சரி உனக்கும் தேவப்படுமேன்னு தான் அனுப்பினேன்", "தேங்க்யூ. செம்மையா இருக்கேன்ல?", "பக்காவா இருக்க, டயர்டா இருப்ப தூங்கு சீக்கிரம். குட் நைட்" இவனின் இந்த மெசேஜை பார்க்கும் முன்னேயே தூங்கி இருந்தாள் பாப்பு.

இதற்கிடையில் மண்டபத்தில் நடந்தது, அறையில் ஒருவர் படுக்கக் கூடிய வசதியுடன் இருந்த மெத்தையில் சென்று தொப்பென்று அமர்ந்தாள் சுஹாசினி. அவளுக்கு எதிலோ மிதப்பது போல் தான் இருந்தது சுகமாகவும், பாரமாகவும், தலையை உலுக்கி உலுக்கி பார்க்க, ரூமே சுற்றிக்கொண்டிருந்தது. இடது பக்க மூலையில் கிடந்த சோபாவில் யாரோ அமர்ந்திருப்பது போல் இருக்க "யாரு?" என்றாள் குழறலாக. அதற்குமேல் முடியாமல் மல்லாந்திருந்தாள்.

"நாந்தான் பவ்யா" என எழ முடியாமல் எழுந்து வந்தான் விஷாகன். "நா சுஹாசினி, நீங்க யாரு?" என்பது குழறலாகவே வாய்க்குள் சென்று மறைந்தது. இதுவரை அவனாக பவ்யாவை நெருங்கியதில்லை. இரணியனுக்காக கல்யாணம் பண்ணிக்கொண்டவன், அவனுக்காக அவளையும் ஒதுக்காமல் இருக்க முயற்சித்துக் கொண்டிருப்பவன், இன்று உள் சென்ற மதுவால் 'நம் மனைவி தானே நாமாக தொடுவதில் என்ன தப்பு, காதல் வரும்போது வரட்டுமே' என்ற மது போதனையில். பவ்யா என நினைத்து சுஹாசினி மீது கவுந்து விட, தடுக்க இயலாத சுயநினைவற்ற சுஹாவால் நடப்பதை உணர முடியாமல் இருக்க. மொத்தமாக தன்னை விஷாகனிடம் இழந்து விட்டிருந்தாள். விஷாகனும் தன் வாழ்க்கையின் முதலும் கடைசியுமான தவறை தவறி செய்து முடித்து இருந்தான்.
 
அத்தியாயம் 18
காலை 5 மணி. வடிவு வந்து பாப்பு ரூமின் கதவைத் தட்ட, திரும்பித் திரும்பி படுத்தாளே தவிர, கண்ணை முழிக்கவில்லை. பின் பொறுமை இழந்தவர் அவள் மொபைலுக்கு கால் செய்ய, அதிலும் நான்காவது ரிங்கில் போனை எடுத்து, "என்னம்மா" என்றாள் தூக்க கலக்கத்தில்.

"எந்திரி கழுத, காலங்காத்தால உன்ன எழுப்புறதத் தவிர எனக்கு வேற வேலையே இல்லன்னு நினைச்சியா?" ௭ன்க. "இருந்தா போய் பாக்க வேண்டியதுதான லூசம்மா. என்ன எழுப்பி விடுனு உன்ட்ட நா சொன்னேனா?"

"அடியே அக்காவும், மாமாவும் அவுங்க வீட்டுக்கு கிளம்பணும்ல", "அதுக்கு நீ அவங்கள தான எழுப்பிவிட்டு ரெடியாக சொல்லணும்".

"நீ வந்து கதவத் திறடி முதல்ல. உள் தாப்பா போட்டுத் தூங்காதன்னு எத்தன தடவ சொன்னாலும் கேக்றதில்ல. உசுர வாங்காம எந்திச்சு கதவத் தொற நீ". "நீதாம்மா காலங்காத்தால என் உசுர வாங்குற" எனத் திட்டியவாறே வந்து கதவை திறக்க, வீடே வெளிச்சமாக பரபரப்பாக தான் இருந்தது.

"எல்லோரையுமே 5 மணிக்கு எழுப்பி விட்டுட்டியாம்மா நீ?" என்றாள், டீ கிளாஸோடு அங்கங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சொந்தக்காரர்களை கண்டு. "கல்யாணவீடுனா அப்படித்தான்டி இருக்கும். எல்லோரும் காலைல சாப்பாட்டோட ஊருக்கு கெளம்புவாங்க. அக்காவும், மாமாவும் 9 மணிக்கு மேல நல்ல நேரம் அவுங்க வீட்டுக்கு கிளம்பனும், நா கூட வரமுடியாது. நாலு பேர் நம்ம சொந்தக்காரங்களோட நீயும் போயிட்டு வந்துரு. குளிச்சு நல்ல டிரஸ் ஒன்னு போட்டுட்டு கிளம்பு" ௭ன வந்த வேலை முடிந்ததாக அவர் திரும்ப.

"௭ன்னது நானா? நா எதுக்குப் போணும். அங்கப் போய் நா என்ன செய்ய போறேன். எனக்கு ஒரே டயர்டா இருக்கும்மா. இன்னிக்கு ஒரு நாள்தான் சார்ம் ரெஸ்ட் கொடுத்திருக்காரு. நாளைக்கு நா சிம்லா கிளம்பணும்". "சிம்லா போறியா? உதவாங்கதடி. நீ எங்கேயும் போகவேண்டாம். அந்த வேலைய இத்தோட மறந்துரு. இருக்கிற கெட்ட பேரு பத்தாதுன்னு புதுசா பேர் வாங்க போறியோ? மொத இன்னைக்கு ஆகுற வேலையப்பாரு".

"அப்படிலா நினைச்ச உடனே வேலைய விட முடியாது. பாண்ட் சைன் பண்ணிருக்கேன், பத்தாததுக்கு மீடியா முன்ன அவரு மேரேஜ் அனௌன்ஸ் பண்ணிட்டாரு. இனி நீயே பேக் அடிக்க நெனச்சாலும், மான நஷ்ட வழக்குப் போடுவாறு. வேணும்னா உன் வக்கீல் மவட்ட கேளு" என வாய்க்கு வந்ததை அடித்து விட்டாள்.

அவன் அவள் வேலையை பெர்மெனன்ட்டாக்கினதே எழுத்துப்பூர்வமாக இன்னும் பதியவில்லை, இதில் பாண்டு என கதை சொல்ல, "யார கேட்டு பாண்ட்லா சைன் பண்ண நீ?”

"சார்ம்க்காக இதக் கூட பண்ண மாட்டேனா?" "ஐயோ, என்னங்க என்னால இவட்ட மல்லுக்கட்ட முடியலங்க. கிளம்புவாளா? மாட்டாளான்னு? நீங்களே வந்து கேளுங்க" என்றார் சற்று தள்ளி சோபாவில் அமர்ந்து உறவினர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த கணவரிடம்.

"ஏன் பாப்பு எல்லாரும் வந்துருக்கும்போது அம்மாட்ட ஆர்கியூ பண்ணிட்டு இருக்க" என எழுந்து வந்தார் மெயப்பன். "9 மணிக்கு போறதுக்கு அஞ்சு மணிக்கே என்ன எதுக்கு எழுப்பினாங்க கேளுங்க?” "நீ ஏன் அவள இப்போவே எழுப்புனா? அவ தான் பத்து நிமிஷத்துல கிளம்பிடுவாளே" மெய்யப்பன் வடிவிடம் வினவ.

"அதுக்காக வீடு நிறைய ஆள வச்சுக்கிட்டு வயசு பொண்ண 10 மணி வரை தூங்க விடச் சொல்றீங்களா? 9 மணிக்குள்ள எல்லாரும் சாப்டு கிளம்பணும். ஒத்தையில என்னால எல்லா வேலையும் பாக்க முடியுமா, அதான் அவளத் துணைக்கு எழுப்பி விட்டேன்" என்றார் நியாயமாய் அவர்.

"ஓ ரெண்டாது மகள எங்க, என்ன மட்டும் பெரிய புள்ளன்ற அவ இன்னும் வயசுக்கே வரலியா என்ன?" "வாயிலயே போடுவேன். பாத்தீங்களா ஏட்டிக்கு போட்டி பேசுறத". "அவ நைட் தலைவலின்னு மண்டபத்திலேயே தங்கிட்டா போல பாப்பு. போன் பண்ணேன் எடுக்கல, இன்னும் எந்திரிகளயோ? என்னவோ?" மெய்யப்பன் சமாதானமாக சொல்ல.

"கிரேட் எஸ்கேப். பக்காவா பிளான் பண்ணிருக்கா. எப்படியும் வீட்டுக்கு போனா படுக்க ரூம் இருக்காதுன்னு அங்கேயே செட்டிலாகி, காலைலயும் யாரு டிஸ்டர்ப்பும் இல்லாம 10 மணி வர தூங்க என்னமா பிளான் பண்ணிருக்கா". "பாப்பு" மெய்யப்பன் அதட்டி ஏதோ சொல்ல வர, அவர் போன் அடித்தது.

சுஹா "ப்பா அக்காவ இந்நேரம் டிஸ்டர்ப் பண்ண வேணாம். ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கணும், யார்கிட்ட கொடுக்கலாம்? நமக்கு நம்பிக்கையானவங்களா இருந்தா பெட்டர்". "என்னம்மா? எங்க இருக்க? காலையிலேயே கேஸ், பைல்ன்னு எங்கேயாவது போயிட்டியா?" என்றார் நிதானமாக மெய்யப்பன்.

"இல்லப்பா நா தான் கம்ப்ளைன்ட் குடுக்கணும். இப்ப உங்களால மேரேஜ் ஹால் வர வரமுடியுமா?” "ஏன்மா அங்க எதுவும் பிரச்சனையா? நம்ம குமார் அங்கதான் தங்கியிருக்கான். அவேன் பாத்துப்பானே, நா வேண்ணா போன் போட்டு வர சொல்லட்டா?” "நீங்க யாருக்கும் போன் பண்ண வேண்டா, இங்க கிளம்பி வாங்க பேசிக்கலாம்".

பக்கத்திலிருந்து அவர் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்த வடிவும், பாப்புவும் மேற்கொண்டு சண்டையில் இறங்க, "வடிவு, சுஹா உடனே வரச்சொல்லுறா. போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க்கணுங்கறா, யாருக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல. நா போய் பாத்துட்டு வந்தர்றேன்" என அவர் கிளம்ப.

"அவ பெரிய சின்சியர் சிகாமணியாட்டம் சீனு போட்டதெல்லாம் போதும்னு கையோட கூட்டிட்டு வந்து அக்கா கூட அனுப்பி வைங்க ப்ளீஸ்" என இவள் சொல்ல.

இவள் போன் அடித்தது, 'மை சார்ம்" என வர, "ஹலோ சார்ம், என்ன காலையிலேயே என்ன தேடுறீங்க?" என்றாள் குதூகலமாக. வடிவு தீயாய் முறைக்க, கிளம்பிய மெய்யப்பனும் நின்று "என்ன விஷயம்" என்பதாய் பார்த்தார்.

"தாட்ஷா வேர் ஆர் யூ நவ்? விஷா நேத்து நீங்க மேரேஜ் ரிசப்ஷன் அரேஞ் பண்ணிருந்த ஹோட்டல்ல இருந்து பேசுறேன், உடனே கிளம்பி வாங்கன்றான். நீ தான் அவன அங்க தங்க சொன்னியா?" என்றான் இரணியன்.

"நா சொல்லலயே. சரி நீங்க கிளம்பி வாங்க, நானும் அங்க வந்துடுறேன்". போன் வைத்துவிட்டு யோசனையாய் அப்பாவை பார்த்தவள், "2மினிட்ஸ்ப்பா ரெடியாகிட்டு வரேன்" என வேகமாக பிரெஷானாள்.

லேசாக விடிந்திருக்க, "வேதிகாவும் எழுந்து வந்திருந்தாள். பாப்பு கிளம்பி வர, இருவரும் கிளம்புவதை வைத்து தானும் கிளம்ப, "இல்ல நீ இன்னைக்கு வர வேணாம். இங்க இரு நாங்க போயிட்டு பாத்துட்டு கால் பண்றோம்" என்க. விஷாகன் நேம் அடிபடுவதால் கட்டாயம் தான் வந்தாக வேண்டும் எனக் கிளம்பி விட்டாள். வடிவு தான் அவள் புகுந்த வீட்டாரையும், சொந்தக்காரர்களையும் தனியாக சமாளிக்க வேண்டியதாயிற்று.

இதற்கிடையில் அங்கு ஹோட்டலில் நடந்தவை, 5 மணிக்கு மெய்யப்பனின் அழைப்பினால், போன் சத்தத்தில் மெதுவாக சுயநினைவு பெற்றாள் சுஹாசினி. இன்னுமே தலை கிர்ரென்று தான் சுற்றிக் கொண்டிருந்தது. திரும்பத் திரும்ப வந்த அழைப்பில் எழ முயன்றாள், முடியவில்லை. தன்மீது இருக்கும் பாரத்தை உணர்ந்து கண் விழித்துப் பார்க்க தன்னை பாதி ஆக்கிரமித்து படுத்திருந்தவனை கண்டு திடுக்கிட்டு வேகமாக கையையும், காலையும் உதறி அவனைக் கீழே தள்ளினாள். பின்பும் நடப்பை உணர சிறிது நேரம் பிடித்தது. இவளும் எழ முயல, கீழே விழுந்தவனும் எழ முயன்றான்.

"ச்ச எதுலயிருந்து விழுந்தோம்" என்ற குழப்பத்தை போக்க முயன்றான் அவன். அவன் முணங்களில் சுஹா கண்ணை திறக்க முற்பட்டாள், அப்போதுதான் அவளின் அரைகுறை நிலை அவளுக்கு எட்டியது, வேகமாக தலையை தட்டி, தட்டி சுயநினைவு அடைய முற்பட்டவள், எழ முடியாமல் எழுந்து பாத்ரூம் நோக்கி சென்றாள். தண்ணீரை திறந்துவிட்டு அப்படியே அதன் அடியில் நின்றாள். அந்த சுடுநீர் தலை வலிக்கும், உடலழுப்புக்கும் அதிக ஆறுதலை கொடுத்தது. நடந்ததை ஞாபகப்படுத்த முயற்சித்தாள்.

வெளியில் மெதுவாக எழுந்தவனும், ரூம் வெளிச்சம் கண்ணைக் கூச "இது நம்ம ரூம் மாதிரி இல்லயே, எங்க இருக்கோம்?" என சுற்றி முற்றிப் பார்த்து தலையை உலுக்கி ௭ழுந்தான், மெதுவாக சென்று கதவை திறக்க, நைட் வந்த மஹால் தான், போன் அடிக்கும் சத்தம் கேட்க, திரும்பிப் பார்க்க, அந்த மொபைல் ஒலியில் அதை நோக்கி வந்தவன், கட்டிலில் கிடந்த பெண்ணின் ஆடையை பார்த்து இது யாரிது? நாம எப்படி இங்க வந்தோம்? ௭துக்கு இங்க இருக்கோம்?" என மறுபடியும் யோசனைக்கு சென்றவன். அங்கு கட்டிலின் அருகில் இருந்த டேபிள் மேலிருந்த வாட்டர் பாட்டில் எடுத்து தண்ணீரை குடித்தான்.

"நேத்து பாப்பு அக்கா ரிஷப்சன் வந்தோம், அங்க டான்ஸ் பண்ணோம். முடியவும் ஒருத்தர் வந்து பார்ட்டிக்கு கூட்டிட்டு போனாரு, அந்த ஆளு தான் என்னத்தையோ மாத்தி குடுத்து கடத்தி வச்சிருக்கானோ, அப்ப அவன ௭ங்க? 'எதுக்கு நம்மள கடத்திருப்பான்?' என அவன் அடுத்தடுத்த யோசனைக்கு சென்றிருக்க.

உள் சென்றவளும் நைட் நடந்ததை ரீவைண்ட் செய்து பார்த்தாள், 'இங்கு வந்தது, நா பவ்யா இல்லடா என உளறியது, அவன் தன்னை ஆக்கிரமித்தது' எல்லாம் கொஞ்சம் மங்கலாக ஞாபகம் வந்தது. 'அவன் தான் தனக்கு எதையோ கலந்து கொடுத்து இவ்வாறு செய்திருக்க வேண்டும்' என முடிவெடுத்தவள், ஈர உடையுடனே வெளிவந்தாள், இவள் வெளிவரவும் விஷாகன் இவள் பக்கம் திரும்பி, 'இது பாப்பு அக்கால்ல, இங்க என்ன பண்ணுது?' என பார்க்க கட்டிலில் கிடந்த, லெஹங்கா ஸாலை ௭டுத்து சோபா மீது போட்டவள், அதில் கிடந்த டவலை எடுத்து மேல் சுற்றிக்கொண்டு போனுடன் சோபாவில் அமர்ந்தாள். அவள் செய்கையை பார்த்து நின்றான் விஷா.

"சரி சொல்லு எதுக்கு இப்டி பண்ண?" என்றாள் நிதானமாக. "என்னையவா கேக்கீங்க?" என்றவன் 'ஒருவேள இவங்களையும் சேத்து கடத்திருப்பாங்களோ? தெரியாம நாம தான் கடத்துனோம்னு நினைச்சு கேக்குறாங்களோ?' என நினைத்துக்கொண்டு, "மேடம் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க. என்னயுமே யாரோ கடத்திட்டாங்க. யாருன்னு இனிதான் கண்டு பிடிக்கணும்" என்க.

"நடிக்கிறியா? எப்படினாலும் இனி நீ தப்பிக்க முடியாது. என் மேல கைய வெச்சுதுக்கான தண்டனையை அனுபவிச்சே ஆகணும் மிஸ்டர்.விஷாகன். ஆனா எனக்கு ரீசன் வேணும். ஏன் இப்டி பண்ணுன?” இவன் பேய் முழி முழிக்க, "என்ன கலந்து கொடுத்த எனக்கு, என் அக்கா ஹஸ்பண்ட்டோட பிரண்டுன்னு தான அறிமுகம் ஆன ௭ங்களுக்கு? ஆனா பவ்யாவோட புருஷனாவே உன்ன எனக்கு தெரியும். யார் சொல்லி இத செஞ்ச. எனக்கு அந்த உண்மை இப்ப தெரியணும்".

"சாரி மேடம், எனக்கு நேத்து என்ன நடந்ததுன்னே தெரியல? பட் ஏதோ தப்பா நடந்துட்டுன்னு புரியுது. பட் நா எதுவும் தெரிஞ்சு பண்ணல. நானே யாரோ கடத்திட்டாங்கன்னு", "என்ன கத சொல்றியா நீ, கடந்துனவன் ஒரே ரூம்ல ஒன்னா சந்தோசமா இருங்கன்னு சொல்லிட்டு போவானா?" என்றாள் அதிகாரமாய்.

இவனுக்கு இன்னுமே புரியாத நிலையில் எதை சொல்லி சமாளிக்க என முழிக்க, சுஹாசினி தனது போனை எடுத்து நாலு மிஸ்டு கால் வந்திருந்த தகப்பனாருக்கே முதலில் அடித்தாள். அப்போது தான் அவனும் தனது போனை தேட, அதே கட்டிலில் ஒரு ஓரத்தில் கடந்தது. அவனுக்கு சர்வமும் அடங்கியது, வேறு வழியில்லாமல் அவனும் இரணியனை அழைத்தான்.

அடுத்து வந்த நிமிடங்கள் அமைதியாக கழிந்தது, சோபாவில் சாய்ந்து கண்ணை மூடி அமர்ந்து விட்டாள். விஷாகன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து நடந்ததை ரீகால் செய்து பார்த்தான்.

மண்டபம் அருகில் சற்று தள்ளியே இவர்கள் அப்பார்ட்மெண்ட் என்பதால் பாப்பு, மெய்யப்பன், வேதிகா மூவரும் முதலில் வந்தனர். இங்கு அப்பொழுது தான் ஒரு சிலர் ரூமிலிருந்து வெளிவர ஆரம்பித்திருக்க, வேதிகாவை பாப்புவுடன் முன் அனுப்பிவிட்டார் மெய்யப்பன்.

அவர்கள் இருவரும் சுஹாசினிக்கு போன் செய்து எந்த அறை எனக் கேட்டுச் சென்று, கதவை தட்ட, விஷாகனே வந்து திறந்தான்.
"நீ என்ன பண்ற இங்க?" ஒரே கேள்வியை இரு பெண்களும் வெவ்வேறு மாடுலேஷனில் கேட்டனர் அக்காவும், தங்கையும்.

அவன் முழிக்க, சுஹாசினியை தேடியவாறு உள்ளே நுழைந்தனர். அவள் மெதுவாக நிமிர்ந்தாள். லேசாக காய்ச்சல் ஆரம்பித்திருந்தது.

"என்ன சுஹா இப்டி உக்காந்திருக்க?" வேதிகா விசாரிக்க, பாப்பு இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். விஷாகனுக்கு புளியை கரைக்க ஆரம்பித்தது. 'ஒருத்தியே புரூஸ்லீ மாதிரி எகிரி எகிரி அடிப்பா, இதுல மூணு புரூஸ்லீனா நா எப்டி தாங்குவேன் ஆண்டவா' என அவன் மனம் அந்நேரத்திலும் கவுண்டர் கொடுத்தது.

"மேலு சுட ஆரம்பிச்சுட்டு, மாத்து துணி எதுவும் இல்லையா? ஏன் ஈரத்தோட உக்கார்ந்துருக்க? இவன் இங்க என்ன பண்றான்?" என்றாள் வேதிகா படபடவென, அவள் முடியை உளர்த்தியவாறு.

"அததான் வேதி நானும் கேட்டுட்டுருக்கேன். எனக்கு என்னத்தையோ கலந்து கொடுத்து ரேப் பண்ணிட்டு ஒன்னும் தெரியாதவன் மாதிரி முழிக்குறான்?”

இரு பெண்களும் திடுக்கிட, "இல்ல மேடம், சத்தியமா எனக்கு என்ன நடந்துச்சுன்னு எதுவுமே ஞாபகம் இல்ல. நைட்டு எவனோ கூட்டிட்டு போய் வலுக்கட்டாயமா கோக்ன்னு கொடுத்து எதையோ குடிக்க வச்சுட்டான். அப்புறம் நா இங்க எப்டி வந்தேன்னு கூட எனக்கு சரியா ஞாபகம் இல்ல, ப்ளாங்கா இருக்கு" ௭ன பதறினான் விஷாகன்.

"பாத்தியா பொய் சொல்றதப் பாரு? என்னன்னு தெரியாம இவனுக்கு யாரோ குடுத்தாங்களாம், அதுவும் நம்ம வீட்டு பங்க்ஷன்ல வச்சு ஏன் கலந்து கொடுக்கணும். எங்கள பாத்தா லூசு மாதிரி தெரியுதா" சுஹா டென்ஷனில் கத்த.

"வெயிட் சுஹா, நா விசாரிக்கேன். உனக்கு எவனோ என்னமோ கலந்துட்டான் சரி. நீ இவளுக்கு என்ன குடுத்த? நேத்தே உன்ட்ட கேட்டேன், உன் டார்கெட் யாரு என்னன்னு? எதுவுமே இல்லன்னு சொன்ன, இப்ப இவ்வளவு பெரிய விஷயம் பண்ணிருக்க, இனி உன்ன விடுறதா இல்ல" என விட்டாள் ஒரு அரை.

வெளியே மெய்யப்பன், கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம் "பொண்ணு ட்ரெஸ் ஏதோ மிஸ் ஆகிட்டாம் எடுத்துட்டு போக வந்திருக்கா" என எப்படியோ சமாளித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நிற்க. இரணியன் முகத்தில் கர்சீப்புடன் வந்து இறங்கினான். அவனே அவரை நோக்கி வந்து, 'என்ன' என்பதாய் விசாரித்து இருவரும் பாப்புவின் தகவலின் பேரில் அந்த அறைக்கு வந்தனர்.

வேதிகா அறையவும் இருவரும் உள் நுழையவும் சரியாக இருக்க, பாப்பு தான், "ஒரு நிமிஷம் இருக்கா? விஷா அப்டி டைப் இல்ல. டூ மந்த்ஸா பாக்குறேன் எங்கேயும், யார்கிட்டயும் மிஸ் பிஹேவ் பண்ணதில்ல. ஒன் மந்த் புல்லா டைம்மு டிராவல் பண்ணிருக்கேன். டி டோட்டலர் டூ. சோ வேற எங்கயோ தப்பு நடந்திருக்கு. நீ என்ன சாப்ட்டதனால தல சுத்து வந்துச்சு?" என்றாள் சுஹாவிடம்.

"ஓ ஆளோட ரிலேடிவ்ன்னு சப்போட் பண்றியா?" ௭ன்றாள் சுஹா, "அவன விட உனக்கு என்ன நல்லா தெரியும், முன்ன பின்ன தெரியாத பொண்ணுக்கு எதும்னாலே நா சும்மா விடமாட்டேன். உனக்கு ஒன்னுங்குறப்போ வேடிக்க பாப்பேனா? கொஞ்ச நாளாவே நம்மள சுத்தி 3ர்ட் பெர்சன் ஒருத்தன் ஆக்ட்டிவா இருக்கான். அவன கண்டு பிடிக்கணும், அதான் கேட்கிறேன். சொல்லு என்ன சாப்ட்ட" என்க. சுஹா யோசிக்க,

"அந்த 3ர்ட் பெர்ஷனே இந்த இடியட் தான், இடியட்" என்றாள் வேதிகா.
"என்னக்கா சொல்ற? விஷா எப்டி?”

"அவன்ட்டயே கேளு? அவன் ஆர்வி ப்ரண்டே கிடையாது. டிடெக்டிவ் வச்சு நம்ம மொத்த பேமிலியும் டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிருக்கான். அத வச்சி ஆர்விய புடிச்சு, மேரேஜ்க்கு பேசி, அப்புறம் ஒன்ன மிஸ்டர்.இரணியனுக்கு மேனேஜராக்கி, இதோ இப்ப ஒரு வீடியோ லீக்காச்சே அது கூட சாரோட வேலை தான். உங்கள மேரேஜ் வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டாரு. இதையெல்லாம் ஏன் பண்ணறேன்னு கேட்டேன்? சொல்லல. அதான் என் ஸ்டாப் ஒருத்தர வச்சு கலந்து கொடுத்து உண்மைய வாங்க சொன்னேன். ஆனா அப்பவும் உண்மையை சொல்லாம தப்பிச்சுட்டான். அவன் டார்கெட் யாரு? நீயா? இல்ல நம்ம பேமிலியானு தெரியல. இன்னும் அவன் மூக்க நுழைக்காததே சுஹா விஷயத்துல தான்னு நினைச்சுட்டுருந்தேன். அதுக்கும் இங்க மொத்தமா ஆப்படிச்சுட்டான்" என்றாள் ஒரே மூச்சில் அனைத்தையும்.

"வாட் த ஹெல் இஸ் ஹேப்பனிங்" என்றான் இரணியன்.

"அக்கா சொல்றதெல்லாம் நிஜமா விஷா? எல்லாமே நீ தான் பண்ணியா?" என பாப்பு கேட்டுக் கொண்டே விஷாகனை நோக்கி வர, குறுக்க வந்து நின்ற இரணியன், "ஃபஸ்ட் என்ன நடந்ததுன்னு சொல்லு தாட்சா? சும்மா ஆள் ஆளுக்கு அடிச்சுட்டுருக்கீங்க" என்க.

"நடந்த எல்லாத்துலயும் இன்வால்வ் ஆகி இருக்கது உங்க பீ.ஏ. தான். சோ அவரா எதையும் சொன்னாதான் தெரியும்" என்றாள் வேதிகா.

இரணியன் திரும்பி ஒரு பார்வை பார்த்தான், ஆரம்பத்திலிருந்து அவன் செய்ததையெல்லாம் இம்மி பிசகாமல் ஒத்துக்கொண்டான்.

"இது என்ன புது வித உள்ளுணர்வா இருக்கு? எல்லோருக்கும் அவங்கவங்க லைஃப் பார்ட்னர பாக்கும்போது தான் உள்ளுணர்வு ஏதாவது சொல்லும். உனக்கு மட்டும் எங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்க சொல்லி, சொல்லிருக்கு".

"தெரியல பாப்பு. நீ வந்தா சார் வாழ்க்க நல்லாருக்கும்னு தோணுச்சு. அதுக்கு தான் இவ்வளவும் பண்ணேன். உன் அக்காவுக்கு அவங்க லவ் பண்ண பையனோட கல்யாணம் நடக்க ஏற்பாடு பண்ணிருக்கேன், உனக்கும் என் சார்ம்னா ரொம்ப பிடிக்கும்ன்னு தெரிஞ்சுதான் தைரியமாக களத்துல இறங்குனேன். சத்தியமா நேத்து நடந்தது மட்டும் எனக்கு தெரியாம நடந்த விஷயம்".

"அடுத்தவங்க லவ்க்கு முழிச்சுட்டு இருந்த உன் உள்ளுணர்வு, பொண்டாட்டிய விட்டுட்டு வேற ஒருத்திய தொடுறமேன்றபோ தூங்க போயிடுச்சா?" என்றாள் சுஹாசினி.

"அவன மட்டும் சொல்றது நியாயம் இல்ல மேடம், உங்க சிஸ்டர் எப்டி அன்-கான்ஸியஸோ சேம் அவனும் அன்-கான்ஸ்சியஸ். அதுக்கு காரணமு நீங்கதான், சோ இப்ப நாந்தான் என் ஃபேமிலி மெம்பர்ஸ் இதனால பாதிக்கப்படுறதுக்கு உங்க மேல கேஸ் பைல் பண்ணனும்" என்றான் இரணியன்.

"இது அநியாயம், இன்னும் சுஹாவுக்கு யாரு கலந்தான்னு தெரியலயே?" என்றாள் பாப்பு.

"நா லாஸ்ட்டா குடிச்சது உன் ரூமுக்கு வந்தப்போ நீ குடிக்க வச்சுருந்த ஜூஸ்தான். அதுக்கப்புறம் நா எதுவுமே சாப்பிடல" என்றாள் சுஹாசினி.

"அப்ப கண்பார்ம் இவன் வேலயா தான் இருக்கும்".

"என்னயே மைண்ட்ல பிக்ஸ் பண்ணிட்டு, கிரிமினல தேடாதிங்க மேடம். நா எதுக்காக பாப்புக்கு கொடுக்கணும்னு யோசிங்க?”

"இப்படித்தான், ஒவ்வொரு தடவயும் உன்ன நான் கொஸ்டின் பண்ணப்ப சொல்லி சொல்லி ௭ஸ்கேப் ஆன".

"அப்பயும் நீங்க சீக்கிரம் கண்டு பிடிக்கணும்னு தான் சொன்னேன். பொய்யா சொல்லிட்டு திரிய வேண்டியிருக்கு அதான் அப்டி சொன்னேன். இப்பயும் நீங்க சரியான ஆள சீக்கிரம் கண்டுபிடிங்கன்னு தான் சொல்றேன்".

"சரி நடந்த தப்ப எப்டி இல்லன்னு அழிக்கிறது? அதுக்கு என்ன பண்ண போறீங்க?" என்றாள் வேதிகா. எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தார் மெய்யப்பன், 3 பெண்களை போர் களத்தில் இறக்கி விட்டு.

"பொண்ணு சைட் மட்டும் பேசுறீங்க மேம், அவன் தெரிஞ்சு வேணும்னு இத பண்ணல. உங்க இன்ப்புலுயன்ஸ்னால தான் இது நடந்துருக்கு. அவன் வைஃப்க்கு அவன் பதில் சொல்லணும். தப்பு இரண்டு சைடும் இருக்கு தான" என்ற இரணியன்.

"உனக்கு யாரு ஜூஸ் கொடுத்தா?" என பாப்புவிடம் கேட்க. "ஒரு கேட்டரிங் சர்வீஸ் ஆளுதான்".

அந்த கேட்டரிங் ஆர்டர் எடுத்தவனை பிடித்து, முந்திய நாள் வந்த அனைத்து கேட்டரிங் ஆட்களின் போட்டோவையும் அனுப்பி வைக்க வைத்து, அதில் இவளிடம் ஜூஸ் நீட்டியவனை கண்டு பிடித்தான். அடுத்த நிமிடம் அவன் ஜான் கஸ்டடி சென்றிருக்க, பத்து நிமிடத்தில் பவ்யாவின் பேர் வெளி வந்திருந்தது.

பவ்யா என்றதும் இரணியனின் கோபம் பன்மடங்கு அதிகரிக்க, "என்ன குடும்பமா சேந்து பிளான் பண்ணிட்டு, இப்ப சீன் கிரியேட் பண்றீங்களா?" ௭ன்றாள் சுஹா.

"என்ன இருக்கு உங்ககிட்ட நாங்க நடிக்கிறதுக்கு? என் இமேஜ் ஸ்பாயில் ஆக கூடாதுன்னுதான் அன்னைக்கு பிரஸ் மீட்ல தாட்ஷாவ மேரேஜ் பண்ணிக்க போறதா அனௌன்ஸ் பண்ணேன். இன்னைக்கும் இந்த விஷயம் வெளிய தெரிஞ்சு என் இமேஜ் ஸ்பாயிலாகாம இருக்க, எந்த எட்ஜ்க்கும் போவேன். உங்க சிஸ்டருக்கு என்ன பண்ணனும்னு சொல்லுங்க பண்ணிடலாம்".

முறைத்த பாப்பு, "அப்போ உங்க இமேஜ் ஸ்பாயிலாகக் கூடாதுன்னு தான் என்ன மேரேஜ் பண்ணிக்கிறேன்னு சொன்னதா ஒத்துக்கிறீங்க". "உன்ட்ட சொல்லிருக்கேனே தாட்ஷா, எனக்கு உன்ன பிடிக்கும் தான், ஆனா அப்டி அவசரமா ஒத்துக்க வேண்டிய ரீசன் அதான, நாம என்ன உருகி உருகி காதலிச்சதயா இல்லன்னு சொல்றேன்?”

"இந்த ஹெட் வெய்ட் தான் உங்கள இப்டி பேச வைக்குது. சரி நம்ம விஷயம் அப்றம், சுஹாவுக்கு ஏதோ செய்வேன்னு சொன்னீங்களே, என்ன செய்வீங்க?"

"என்ன வேணாலும், நல்ல பையனா ரெஃபர் பண்றேன். மணின்னு சொன்னா தப்பாய்டும், சோ மேல படிக்க, எங்க ஜாப் வேணுமோ அதுக்கு யார்ட்டயும் பேசணுமா சொல்லுங்க பேசுறேன். மேரேஜ் ஆகாத பொண்ணு, தைரியமான பொண்ணு, ஒரு லாயர், சோ அவங்களே டிசைட் பண்ணட்டும். ஆனா தப்பு அவேன் நேம்ல மட்டும் இல்லன்றத புரிஞ்சுகிட்டு, என்ன செய்யணும்னு சொல்லுங்க".

"நீங்க ஈஸியா பேசுற அளவுக்கு இது சின்ன விஷயமில்ல மிஸ்டர்.இரணியன்".

"அதனாலதான் பொறுமையா நிதானமா பேசிட்டுருக்கேன்".

"என்ன கேட்டாலும் செய்வீங்களா சார்ம்?” "100% அஸுரன்ஸ் தரேன் தாட்சா".

"சுஹாவ நீங்க மேரேஜ் பண்ணிக்கோங்க". "வாட்?" எல்லோரும் ஷாக்காக.

"ஆமா, ஒரே வீட்டுல பொண்ணெடுக்றதுனால உங்க இமேஜூம் டேமேஜ் ஆகாது. விஷா சைட் பேமிலி ப்ராப்ளம் சால்வாகும். எங்க சுஹா லைப்பும் சேஃப்பாயிடும், நாம ஒன்னும் உருகி உருகி காதலிக்கலயே" ௭ன அவள் முடிக்குமுன் இரணியன் விட்ட அறையில் இடது கன்னம் புசு புசுவென வீங்க ஆரம்பித்தது.
 
அத்தியாயம் 19
"ஹொவ் டேர் யூ? தப்பையும் பண்ணிட்டு அடிக்க வேற செய்றீங்களா?" என பதிலுக்கு ௭ட்டி இரணியன் சட்டையை பிடித்தாள் பாப்பு. "லூசு மாதிரி ஒளர்ன்னா அடிக்காம என்ன செய்வாங்க" என அவன் அவள் கையை தன் சட்டையில் இருந்து எடுத்து விட்டான். "வேற நல்ல மாப்பிள்ளயா பாத்து தருவீங்க ஆனா நீங்க அவள கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க. உங்களுக்கு ஒரு பேஃவர் இருந்தும் நீங்களே அவள கட்டிக்க மறுக்கும் போது வேற யாரும் எப்டி ஒத்துப்பாங்க, அப்டியே கட்டிக்கிட்டாலும் அவ லைஃப் எப்படி சந்தோஷமா இருக்கும்" என இவள் டென்ஷனாக பேச.

காய்ச்சலில் முடியாமல் இருந்தாலும், "என்ன ட்ரை பண்ற பாப்பு நீ. எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி உன்ட்ட கேட்டனா? இவேன் என்ன தொட்டதால எல்லாம் இங்கயே முடிஞ்சு போச்சுன்ற மாதிரி பேசிட்டுருக்க. ௭ந்த சென்ச்சுரில இருக்க நீ?" என்றாள் சுஹாசினி.

"வேதி க்கா அவள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ. நா மத்த ஏற்பாடு பண்றேன் இன்ஜெக்ஷன் போட்டுக் ரிஜிஸ்டர் ஆபிஸ் கூட்டிட்டு வந்துரு. சார்ம் ௭ப்டியும் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு தான் ஆகணும்" பாப்பு சொல்ல.

"௭ன்ன மறுபடியும் கைநீட்ட வைக்காத தாட்சா அவன என் தம்பியா தான் நினைச்சிட்ருக்கேன். யுவர் ஸ்டேட்மெண்ட் லைக் தேட், டு கெட் மேரி பிரதேர்ஸ் வைஃப். சவுண்ட்ஸ் குட்ஸ் ரைட்?" (நீ சொல்றது ௭ப்டி இருக்குன்னா, தம்பி மனைவிய கல்யாணம் பண்ணிக்க சொல்ற மாறி இருக்கு, கேக்கவே ரொம்ப நல்லா இருக்குள்ள?) என்றான் பல்லை கடித்து விரைப்பாக.

"உங்க சைடு மட்டுமே பேசுறீங்க சார்ம் நீங்க. வெள்ள பாட்சா மட்டும் இப்போ ஸ்டெடியா இருந்தா உங்க தொம்பி கம்பி தான் எண்ணிக்கிட்டு இருந்திருப்பான். ஃபர்ஸ்ட் அவளுக்கு ஒரு ஆன்ஸர் சொல்லுங்க"

அங்கேயும் இங்கேயும் நடந்து யோசித்தான், "விஷாவே மேரேஜ் பண்ணிப்பான்" என்றான் பின் முடிவாக. "செகண்ட் மேரேஜா?" வேதிகா கேக்க.

"ஃபஸ்ட் வைஃப் உயிரோட இருக்கிறப்போ, அவ செகண்ட் மேரேஜூக்கு எப்டி ஒத்துப்பா அதுவும் அவளே சட்டம் படிச்ச வக்கீலா இருந்துகிட்டு?" "அதுக்காக உயிரோடு இருக்கவள கொள்ளவா முடியும்?" இரணியனுக்கு பிபி அதிகரித்தது.

விஷாவிற்கு தலைசுற்றியது எப்படிப்பட்ட இக்கட்டில் வந்து மாட்டிக் கொண்டோம் என முழித்தான் அவன்.

இரண்டு நிமிடம் எல்லோருமே அமைதியாக நின்றனர். "உங்களுக்கு மேரேஜ் ரீசன்டா தான நடந்தது?" என்றார், அவ்வளவு நேரமும் கோர்ட்டில் வக்கீல் வாதாட அமைதியாக பாயிண்ட் ௭டுப்பது போல், இங்கும் நோட்ஸ் எடுத்த மெய்யப்பன்.

"அடுத்து இவர் என்னென்ன கேள்வி கேட்பாரோ? எப்படியாபட்ட இடத்தில கை வச்சிருக்கடா விஷா. உனக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம். ஜட்ஜ் வேற டைரக்ட்டா தூக்கு தண்டனதான்" என இவ்வளவையும் மைண்டில் நினைத்துக் கொண்டு அவருக்கு "ஆமாம்" என தலையை மட்டும் ஆட்டினான்.

"அப்ப இன்னும் அந்த மேரேஜ்ஜ ரிஜிஸ்டர் பண்ணி இருக்க மாட்டீங்க?” "இல்ல" என அவன் தலையாட்ட.

"தென், நீங்க இப்ப பண்றதுதான் லீகல் மேரேஜ்" என்றார் அவர் தாடையை தடவி இறுதியாக.

"என்ன சார்ம், இதுக்கு என்ன பதில் சொல்லலாம் யோசிக்கிறீங்களா?"

"நா அல்ரெடி சொன்னது தான். எனக்கு நோ ப்ராப்ளம். நீங்க அரேஞ்ச் பண்ணுங்க" என்று விட்டான்.

"இல்ல பாப்பு, பவ்யாட்ட" விஷா முடிக்கும் முன். "அவள தொட முன்ன, உன் பொண்டாட்டிட்ட கேட்டியா நீ?" என அவன் கண்ணைக் குத்துவது போல் சண்டைக்கு வந்தாள். "கண்டிப்பா என் தப்புக்கு தண்டன வேணும் தான். அதுக்கு வாழ்க்கை பூரா ரெண்டு பொண்ணுங்க கிட்ட இடிபடுறதுதான் சரின்னா நா இதுக்கு சம்மதிக்கிறேன்" விஷா சொல்ல.

"நடிக்கிறியா? உன்ட்ட யாரு இப்ப சம்மதம் கேட்டா? நீ முடியாதுன்னு வேற சொல்லுவியோ? அப்டி மட்டும் நீ சொல்லிருந்தா, சார்ம்தான் மாட்டிட்டு முழிச்சிருப்பாரு" என்ற பாப்பு "நா ரிஜிஸ்டர் ஆஃபீஸ் போறேன், நீ அவளுக்கு இன்ஜக்ஷன் போட்டு கூட்டிட்டு வாக்கா" என வேதிகாவிடம் திரும்பி சொல்ல. இரணியன் அவளை குறுகுறுவென பார்த்தான். '௭ன் ஸ்டேடஸ காப்பாத்திக்க தான் இவள கல்யாணம் பண்ணிக்றே'ன்னு சொல்லிட்டேன்னு இவ்வளவும் பேசுறா ௭ன புரிந்தது அவனுக்கு.

"நா சுஹாவ கூட்டிட்டு போறேன். வேதி வீட்ல போய் விவரம் சொல்லி எல்லாரயும் கூட்டிட்டு வரட்டும்" என்றார் மெய்யப்பன்.

"பெத்த பொண்ணுக்கு இப்டி நடந்துருக்கு நீங்க எப்டிப்பா சாந்தமா பேசுறீங்க" வேதிகா கேட்க.

"மூணுபேரும் தெரியாம பண்ண தப்புக்கு ஒருத்தன இவ்வளவு நேரம் படுத்துன பாட்டுக்கு, அவருக்கு என்ன பாத்து பாவமா இருந்துருக்கும்" என முனங்கினான் விஷாகன்.

"இத விட பயங்கரமான கேஸ்ல்லாம் என் கெரியர்ல நா பார்த்திருக்கேன். இப்போ உள்ள சொசைட்டில்ல ௭ன்னவிட நீ அதிகமா பாத்துட்டு தான் இருக்க. இங்க இவுங்க விஷயத்தில, ரெண்டு பேரும் யூஸ் பண்ண தான் பட்டுருக்காங்க. பாதிக்கப்பட்டதுன்னு பாத்தா ரெண்டு பேரும் தான். அதனால பொறுமையா தான் இதை ஹேண்டில் பண்ண வேண்டி வரும். கெடுத்தவனுக்கே கட்டி வைக்க வேண்டிய கட்டாயம் இல்ல தான். ஆனா சுஹா இனி வேற யாரயும் மேரேஜ் பண்ணிக்காம இருந்திருவா. மேரேஜ் பண்ணிக்கிறவங்களுக்கு ஜஸ்டிஸ் பண்ணனும்னு நினப்பா. இவன் தப்பு பண்ணி இருந்தா நானும் தண்டன வாங்கி கொடுத்துட்டு போயிட்டே இருந்திருப்பேன். மிஸ்டர் இரணியனாலக்கூட ஆனத பாத்துக்கட்டும்னு. ஆனா இங்க அப்டியும் டிசைட் பண்ண முடியாது, இப்டி ஒரு ஃபங்ஷன் வீட்டில வைச்சு அவன விசாரண பண்ண நெனச்ச உன் மேலயும் அதிக தப்பு இருக்கு" என்றார் நடப்பை உணர்ந்து.

இதற்குள் சென்றவர்களை பற்றிய தகவல் தெரியாமல் வடிவு ஒவ்வொருத்தருக்கும் போன் செய்துக் கொண்டிருந்தார். யாரும் எடுக்கவில்லை தீவிர விசாரணையில் இருந்தனர். அப்பொழுது பாப்பு போன் 'ஐ லவ் யூ மம்மி' பாட, இந்த முறை அட்டன் செய்தவள், "ம்மா சீக்கிரம் பட்டு கட்டி ரெடியாகு. நேத்து உன் மூத்த மக கல்யாணம், இன்னைக்கு இரண்டாவது மக கல்யாணம். ஆனா மாப்பிள தான் பழசு. வேற ஆப்ஷனும் இல்ல"

விஷா பாவமாய் பார்க்க, இரணியன் முறைக்க, வேதி போனை புடுங்கி, "வீட்டுக்கு தான்மா வர்றேன், வந்து சொல்றேன்" என வைத்துவிட்டு. "எதுல எப்ப விளையாடுறதுன்னு இல்லயா பாப்பு" என அதட்டி செல்லை கையில் கொடுத்தாள்.

திரும்பி சுஹாவை பார்க்க அவள் அப்படியே சோபாவில் சாய்ந்து கண்மூடி இருந்தாள். "அவளுக்கு சுத்தமா முடியல போல ப்பா, நீங்க கூட்டிட்டு கிளம்புங்க. நம்ம டிசிஷன் தெரிஞ்சா என்ன செய்வாளோ தெரியாது. வேற பையன் ஃபஸ்ட் வைஃப் இறந்தவங்க. டைவர்ஸ் ஆனவங்க, இப்டி பாத்து கூட அவளுக்கு மேரேஜ் பண்ணுவோமே" என்றாள் வேதிகா.

"அவ அங்க நல்லா வாழனுமே ம்மா, அவ லைஃப்ல அது ஒரு பிளாக் மார்க்காவே கடைசி வர இருந்திடுமே. யாரோ செஞ்ச தப்புக்கு இவ ௭துக்கு காலம் முழுக்க பாரம் சுமக்கணும். இங்கன்னா இவர் நல்லா பாத்துக்லன்னா, இரணியன் கவனிச்சுக்க மாட்டாரா என்ன? இல்லையா இரணியன்?" என்றார் கேள்வியாய் அவனிடமும்.

"அப்டி யாரயும் விட்றமாட்டான் அங்கிள். அவனிதுன்னு முடிவு பண்ணிட்டா எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அந்த பொறுப்லயிருந்து பேக் ஸ்டெப் வைக்க மாட்டான்" என்றான் இரணியன் உறுதியாக.

"அப்ப பவ்யாவ இன்னும் அவர் லைஃப்ன்னு முடிவு பண்ணலயா? ஆமாவா விஷா?" பாப்பு கேட்க.

முறைத்த இரணியன், "இப்டி பேசிட்டே தான் இருக்க போறியா?" என்றான்.

வேதி கண்ணை காட்டி கிளம்பிவிட, மெய்யப்பன் சுஹாவோடு வெளியேற, பாப்பு இருவரையும் கண்டாள்.

"நீங்க ரெண்டு பேரும் என்ன ஃபாலோ பண்ணுங்க, என்னோட கண் பார்வையிலேயே தான் இருக்கணும், புரியுதா?" பாப்பு சொல்ல.

"விஷா, கொஞ்சம் வெளிய போ" என்றான் இரணியன். "௭துக்கு? இந்த கதவ பூட்டிட்டு பூச்சாண்டி காட்ற வேலயெல்லாம் என்ட்ட வேணாம் ஓகே. அதென்ன கெட்டபழக்கம் எப்ப பாத்தாலும் பொம்பள பிள்ளைய உள்ள விட்டு கதவடைக்றது" அவள் பேசிக்கொண்டே போக.

அவன் சட்டையை பிடித்ததுபோல் அவள் சுடிதார் காலரை பிடித்து அருகில் இழுத்தான் இரணியன். விஷாகன் வெளியேறிவிட, அவள் அவன் கையை தட்டி விட, இருக்கையயும் இழுத்து பிடித்தவன், "இந்த வாய்தான இஷ்டத்துக்கு என்னனாலும் பேசுது. உன் அக்காவ கல்யாணம் பண்ணிக்கங்கன்ற, நக்கல் பண்ற, சட்டமேல கை வைக்கிற, அதுக்கெல்லாம் பனிஷ்மென்ட் குடுக்க வேணாம்?", "நீங்க எதுக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணும், பண்ணின தப்ப ஒரு பொண்ணு தட்டி கேட்டா உங்க பலத்த காமிச்சு பலவீனப்படுத்துவீங்க, இத தான கால காலமா செய்றீங்க, கொஞ்சனாலும் வித்தியாசமா யோசிங்களேன்" அவன் கைக்குள் நின்று கொண்டு அவனிடமே எகிறி கொண்டிருந்தாள்.

"இன்னுமே அடங்கு தான் பாரேன், இந்த வாய்" என அவள் வாயிலேயே இரண்டு அடி போட்டான்.

மெதுவாக அவன் முகம் பார்த்து, "உங்க தங்கச்சி லைஃப், இப்ப ஹோகயா ஆகப்போகுது, கவலயே இல்லாம என்ன கட்டி பிடிச்சுட்டு நிக்கிறீங்க", "நானே அவனுக்கு செகண்ட் மேரேஜ் பண்ணி வைக்கிற ஐடியால்ல தான் இருந்தேன், இப்ப அதுவே நடக்குது அவ்வளவுதான்".

"அவ்வளவு வெறுப்பா உங்க தங்கச்சி மேல" "ஹே, ச்சி, நா பண்ண நெனச்சது அவனுக்காக, இது இப்போ உனக்கு தெரிய வேணாம். சொன்னாலும் புரியாது", "அப்டி என்ன சீக்ரெட்", "அத பனிஷ்மென்ட் குடுத்துட்டு சொல்றேன்".

அவள் தன்னை அவனிடமிருந்து உருவிக் கொள்ள முயல, அவன் உடும்பு பிடியில் அது முடியாமல் போக, அவள் கராத்தே 'வை முன்னெடுக்க முயன்று, காலை தூக்க அவன் அதை மடக்கி பிடிக்க போக பேலன்ஸ் இன்றி பொத்தென்று தரையில் விழுந்தனர்.

அவள் கீழும், இவன் அவள் மேலுமாக இருக்க, "லூசு மாதிரி தான் எல்லாத்தயும் பண்ணுவியா?" "உங்கள யாரு என் கால தட்டிவிட சொன்னது", "பின்ன உன்ன அடிக்க விட்டு வேடிக்க பாக்க சொல்றியா?" "நல்லா சொகுசா படுத்துகிட்டு கேள்வி வேற, ௭ந்திரிங்க, ரெஜிஸ்டர் ஆபீஸ் போனு", "௭ந்திக்க முடியாது என்ன பண்ணுவ?" என்றான்.

"விஷாாாா!, மடையா வெளில என்ன ஈ ஓட்டிட்டு இருக்கியா, லூசு பயலே இங்க வா" என கத்தினாள், அதும் இரணியன் காதில் கத்த "இடியட்" என இவன் அதட்டியவாறு முயன்று எழ முயற்சிக்க.

ஏற்கனவே விஷா 'உள்ள என்ன பண்றாங்க ரெண்டு பேரும், இருக்க பிரச்சனைல்ல இவங்க வேற' என புலம்பிக் கொண்டிருக்க, பாப்பு மானக்கேடாக அழைக்கவும் வேகமாக கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான், கீழே கிடந்த பாப்புவையும் அவள் மேல் இருந்து எழுந்து கொண்டிருந்த இரணியனயும் கண்டு, 'அவேன் அவேன் என்ன பிரச்சனைல்ல இருக்கான், ரெண்டு பிசாசுட்ட என்னைய கோர்த்து விட்டுட்டு இவங்க ரெண்டு பேரும் என்ன குதுகலமா இருக்காங்க' என அவன் நினைத்து அவர்களை பார்க்க.

"உன் மானங்கெட்ட மைண்ட் வாய்ஸ்ஸ கொஞ்சம் நிறுத்திரியா? பேலன்ஸ் தவறி விழுந்துட்டோம், ஹெல்ப் பண்ண கூப்பிட்டா வந்து மரம் மாறி நில்லு, நைட் அடிச்சது இன்னும் தெளியலையா?" என திட்டிக் கொண்டே எழுந்தாள்.

இரணியன் ௭ழுந்து டீ-சர்ட்டை ஒழுங்காக தட்டிவிட்டு, முகத்தில் கர்சீப்பை கட்டிக் கொண்டிருந்தான். "எனக்கு ஒரு சந்தேகம் பாப்பு, உனக்கு ௭ன் மேல கோவமில்ல?" விஷா கேக்க, "என் கூட பிறந்தவள உன்ன மாதிரி ஒரு பேக்குக்கு, அதுவும் செகனன்டா கட்டி குடுக்கிறோமேன்னு ஆத்திர ஆத்திரமா தான் இருக்கு, என்ன பண்ண☹️☹️ வெள்ள பாட்ச்சாக்கு நீதான்னு இருந்துருக்கு, அதுல என்ன காமெடினா நீ தான் வாழன்ட்டியரா அவகிட்ட போய் மாட்டிக்கிட்ட, நீ அவ கிட்ட வாங்கி கட்டிக்க போறதெல்லாம் நா பாக்கத்தானே போறேன். இருக்குடி உனக்கு".

"சரி தாட்சா, ஃபார்மாலிட்டிலா முடிச்சுட்டு சொல்லு, என்னால் அங்க வர முடியாது. முடிச்சிட்டு நேரா வீட்டுக்கு வாங்க, அங்க பேசிக்கலாம்", "பாஸ் என்ன தனியா கழட்டிவிடுறீங்க" விஷா அலற.

"அவேன் சைடு யாரு சைன் பண்ணுவா?பாதியிலயே ௭ஸ்கேப் ஆக பாக்றீங்க" பாப்பு சொல்ல, "நா வந்தா க்ரௌடு ஆகும் தாட்சா" என சொல்லியவாறு அவன் ரூமை விட்டு வெளியேற. பின்தங்கிய விஷாகன் "எனக்கு பயமா இருக்கு பாப்பு" ௭ன்க, அவள் பதில் சொல்ல வர, "நேத்து அத பண்ணும்போது பயமா இல்லையான்னு தான கேட்க வார, பாப்பு ப்ளீஸ் நீயாவது என் பக்கம் இரு" ௭ன்றான்.

"உன் பக்கம் நிக்றதால தான் நீ இன்னும் உயிரோட இருக்க, சார்ம் ௭ஸ்கேப் ஆகுறதுக்குள்ள பிடிப்போம் வா" ௭ன அவனையும் இழுத்து கொண்டு வெளிவர, அப்பொழுது ஒரு கும்பல் அந்த மாலினுள் ஆவேசமாக நுழைந்தது, நேராக இவர்களை நோக்கி வர, வந்த வேகத்தில் வடிவு, விஷாகனை இரண்டிழுப்பு இழுத்தார். மற்றவர்களும் அவனை நெருங்கும் முன், வேதிகா, இரணியன், பாப்பு மூவரும்தான் தடுத்தனர்.

"எல்லாம் நா சொன்னேனே பெரியப்பா, தப்பு அவர் மேல மட்டும் இல்ல, சில பிரச்சனையாகி கொலாப்ஸ் ஆயிடுச்சு. ரிஜிஸ்டர் ஆபீஸ் வர போணும், நீங்களே கோவப்பட்டா மத்தவங்கள யாரு சமாளிக்க? கஷ்டம் பெரிப்பா, எல்லாரயும் கூட்டிட்டு கிளம்புங்க" என வேதிகா அவர்களோடு பேச.

வடிவு "ஏன்டா இப்டி பண்ண, என் பொண்ணு உனக்கு என்னடா பண்ணா? அவ வாழ்க்கைய இப்டி நாசமாக்கிட்டியே" என கண்ணீர் மல்க மறுபடியும் அடிக்கப் போக, "ம்மா ரிலாக்ஸ், நாங்க எல்லாம் பேசியாச்சு. சரி பண்ணிடலாம் அழாத" பாப்பு சொல்ல. அவளுக்கும் விட்டார் ஒரு அறை. "எல்லாமே உன்னால தான்டி, நீயா ஆரம்பிச்சு வச்சது தான், சார்ம் சார்ம்ன்னு அந்த வீட்டுக்கு வேலைக்கு போன இவன வீட்டுக்குள்ள விட்ட, இப்ப எங்க வந்து நிக்குது பாரு, வீட்டில அடங்கியிரு அடங்கியிருன்னு தளபாட அடிச்சு௧்கிட்டனே கேட்டியா? ஒட்டுமொத்த குடும்பத்தயும் ரோட்டுக்கு வர வச்சுட்டியே" அவர் ஆக்ரோஷமாக பேச, "லூசு மாதிரி உளராத ம்மா, இதுல நா என்ன செஞ்சேன், அவர்ட்ட வேலைக்கு போனதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்".

"பதிலுக்கு பதில் பேசாத பாப்பு, டென்ஷன்ல இருக்காங்க, நா ரிஜிஸ்டர் ஆபிஸ்ல, தெரிஞ்ச ஒருத்தர் கிட்ட பேசிட்டேன், அங்க பேப்பர்ஸ் ரெடியா இருக்கும், சீக்கிரம் போய் வேலைய முடிச்சுட்டு திரும்பணும்" வேதி ௭ல்லோரயும் கிளப்ப, இரணியன் யோசனையாக எல்லாரையும் பார்த்தான், இந்த சிட்ச்சுவேஷனே அவனுக்கு புதிதாக தான் இருந்தது. கூடவே 'இனியும் தாட்சாவை நம் பக்கம் விடுவார்களா' என்ற சந்தேகமும் எழுந்தது.

பின் எல்லோரையும் ஒரு வழியாக அமைதிப்படுத்தி ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்ல வைக்க, மொத்த கூட்டமும் அங்கு சென்றது. வரமாட்டேன் என்று சொன்ன இரணியனும் விஷாவுக்காகவும், தனக்காகவும் கிளம்பி சென்றான். செல்வதற்கு முன் முன்னேற்பாடாக சில விஷயத்தை செய்துவிட்டே கிளம்பினான்.

விஷாகனோ, "இன்னும் இந்த வீட்டில் பாதிக்கப்பட்ட பொண்ணு கிட்ட மட்டும் தான் அடி வாங்கல", என புலம்பியவாறு வெளியேறினான். எல்லோரும் அவரவர் யோசனையில் ரிஜிஸ்டர் ஆஃபீஸ் வந்து சேர்ந்தனர். உடனே எல்லாம் ரெடி ஆகாது தான் என்றாலும் ஒரு ஜட்ஜ் போன் செய்து பேஃவர் கேட்க மறுக்காமல் செய்தனர். ஆனால் இவர்கள் சென்று இறங்குகையில் பிரஸ் மக்களும் அங்கு ரெடியாக இருந்தனர்.

வேதிகா திரும்பி விஷாகனை சந்தேகமாக பார்க்க, "சொந்த செலவுல சூனியம் வைச்சது வரைக்கும் போதாதா, இனியும் வப்பனா? இத நா பண்ணல மேடம்" என்றான் அழுவது போல்.

"இனி அவங்க உனக்கு அண்ணி! விஷா" பாப்பு சொல்ல, மொத்த குடும்பமும் முறைக்க, விஷா பாவமாக கும்பிட்டான் பாப்புவைப் பார்த்து.

இரணியனின் பாடிகாட்ஸூம் மொத்தமாக வந்திருந்தனர். காரிலிருந்து இறங்கியவன் நேராக ப்ரஸிடம் செல்ல, "இன்னைக்கு எதுக்கு சார்ம் பிரஸ்ஸ வர சொல்லி இருக்காரு? உங்க மேரேஜ் அனவுன்ஸ் பண்ணவா இருக்குமோ?" பாப்பு விஷாவிடம் கேட்க. அவன் உதட்டைப் பிதிக்கினான்.

"நா எதுக்கு உங்கள வர சொன்னேனா! நானும் தாட்சாவும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க போறோம். அப்றம் இந்த படத்த முடிச்சுட்டு தான் ஒரு கிராண்ட் பார்ட்டி அரேஞ்ச் பண்ண பிளான் பண்ணி இருக்கோம்" தயக்கமே இல்லாமல் சொல்லி முடித்தான், "எதுக்கு திடீர்னு இந்த மேரேஜ் பிளான்னு தெரிஞ்சுக்கலாமா சார்ம்? ஏன்னா டென் டேஸ் முன்ன தான் இந்த ஃபிலிம் முடிச்சுட்டுதான் மேரேஜ்ன்னு சொல்லியிருந்திங்க, இப்ப அதுக்குள்ள மேரேஜ்ன்னு மாத்தி சொல்றீங்க. மேடம் எதுவும் உங்கள ப்ரோமோட் பண்ணிட்டாங்களா?" என்றார் ஒருவர். "அப்பா ஆக்கிட்டாங்களான்னு கேக்குறாங்க சார்" இன்னொருவர் சிரித்து விளக்க.

எல்லோரும் ஷாக்கில் நிற்க, பாப்பு குனிந்து தனது வயிற்றை பார்த்துவிட்டு "இவன" என பல்லை கடித்து, பிரஸ் நோக்கி முன்னேற, விஷா தான் இழுத்து பிடித்தான், "சாரே சமாளிச்சு பாரு கொஞ்சம் பொறுமா" என.

வேதிகா பல்லை கடித்து நிற்க. மெய்யப்பன் யோசனையாய் நின்றார் அவரால் அவன் திடீர் திடீரென்று எடுக்கும் முடிவுகளை தடுக்க இயலாமல் நின்றார். பாப்புவிற்கு அம்மா அப்பா என இருவர் இருந்தும் அவன் இஷ்டத்திற்கு எல்லா முடிவுகளையும் அவனே எடுப்பதில் திருப்தி இல்லாமல் நின்றார். இவ்வளவு நேரமும் ஊசி போட்டதும் சற்று தெளிந்து இருந்த சுஹா பேசின வக்கீல் பாயிண்ட்டுகளை எல்லாம் சமாளித்து சில பல அறிவுரைகளை கூறி இங்கு இழுத்து வந்திருக்க, அதற்குள் இங்கு இரணியன் புது கதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தான். நல்ல மன திடம் இருக்கப் போய் ஒவ்வொரு மகளும் ஒவ்வொரு பிரச்சனையோடு இருப்பதை கண்டும் தெம்பாக நிற்கிறார். அவரது வருத்தமே அவன் செய்யும் அனைத்திற்கும் பாப்பு சரி சரி என்று செல்வதே. இயல்பில் அவள் அப்படி இல்லை, அவளுக்கு அவனை பிடிக்குமென்று தெரியும், ஆனால் அவனிடம் அடங்கி போகும் அளவு பிடித்தம் ௭ன்பதை இப்போது அடிக்கடி காண்கிறார்.

பிரஸின் கேள்விக்கு திரும்பி பாப்புவைப் பார்த்த இரணியன், அவள் கண்ணை உருட்டி கொன்றுவேன் என விரல் நீட்டி எச்சரித்ததை கண்டு, அவள் கையும் காலும் அங்கு பொறுமையாக இல்லை என்பதை உணர்ந்தான். சிரித்தவாறு பிரஸ் முன் திரும்பி "இப்டி நீங்க கண்ணு காது மூக்குலா வப்பீங்கன்னு தெரியும், அதும் நாங்க நாளைக்கு சிம்லால சூட்டுக்கு வேற போகணும், இங்க ஒரு படமே ரிலீஸ் ஆகிடும், அதான் இனி எங்க போறதுனாலும் மேரேஜ் பண்ணிட்டே போவோம்னு முடிவுக்கு வந்துட்டோம்".

இவன் இப்டி அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதை கண்டு அவன் பெற்றோரும் அடித்துப் பிடித்து ஓடி வந்தனர்.

"ஐயோ பாப்பு இங்கப்பாரு பவ்யாவ வர வச்சுட்டாரு, இனி எப்டி இவள வச்சுக்கிட்டு சுஹாசினி மேடம் கழுத்துல நா தாலி கட்டுறது, போச்சு போச்சு எல்லாம் போச்சு. நா செத்தே", என விஷா புலம்ப. "இது எல்லாம் என் அக்கா மேல கை வைக்க முன்ன யோசிச்சுருக்கணும்", "ஆமா, ஓட்ட ரெக்கார்டு மாதிரி இதயே நீ திரும்பத் திரும்ப சொல்லு, பாஸ் எப்ப பாரு எல்லாரையும் ஷாக்லயே தான் வச்சிருக்காரு, ஏன்னு தெரியல. உங்க கல்யாணத்த சொல்லி உங்க குடும்பத்துக்கு ஷாக்கு, இனி என் கல்யாணத்த சொல்லி அவர் குடும்பத்துக்கு ஷாக்கு. எப்டி ஒரே நேரத்ல எல்லாத்தையும் சமாளிக்க யோசிக்கவே மாட்றாரே" விடாமல் அவன் புலம்ப.

"ஆமா விஷா, நா சார்ம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ எனக்கு என்ன முறைக்கு வருவ?" என்றாள் அவள் அதீத யோசனையில்.

'ஒரு லூசுட்ட இவ்ளோ நேரமு புலம்பி இருக்கமே' என "ஙே" வென அவளை பார்த்து நின்றான் விஷாகன்.

இதற்குள் ஆபிசில் எல்லா ஏற்பாடும் முடித்த ஜான் வெளிவந்து, இரணியன் காதில் சொல்லிவிட்டு போக பவ்யாவை கண்ணைக் காட்டிவிட்டு ப்ரஸிடமிருந்து விடைபெற திரும்பிய இரணியன், "எனி மோர் கொஸ்டின்ஸ்?" என்றான்.

"இந்த மேரேஜுக்கு பின்னாடி வேறு ஏதும் ரீசன் இருக்குமா சார்ம்?" நிருபர் ஒருவர் கேக்க, "நத்திங் மச், என்னால தாட்சாவ பிரிஞ்சு இருக்க முடியாததுதான் பிக் ரீசன்".

"இவரு பெரிய நடிகன்னு தான் எல்லாருக்கும் தெரியுமே, அத ஏன் இப்டி புருவ் பண்றாரு, இப்ப எதுக்கு இந்த ட்ராமா" எனக் கடித்துக்கொதற ரெடியானாள் பாப்பு. விஷாகன் விதியை நொந்து நின்றுகொண்டிருந்தான்.

அவர்களிடமிருந்து விடை பெற்ற இரணியன், நேராக பாப்பு ஃபேமிலியிடம் வந்து, "சாரி அங்கில், இப்பயும் உங்கள கேட்காம முடிவெடுத்ததுக்கும், இந்த ஸ்டேட்மெண்ட்க்கும், எனக்கும் வேற ஆப்ஷன் இல்ல. நீங்க எப்ப மனச மாத்திக்கிட்டாலும் பிராப்ளம் எனக்குதான். பத்தாததுக்கு லூசு பிள்ளைய வேற பெத்து வெச்சிருக்கீங்க. எப்ப எப்படி பேசுவான்னு அவளுக்கே வேற தெரிய மாட்டேங்குது" என நக்கலாக சிரித்துக்கொண்டு கூற.

"டேய் விட்றா கைய" ௭ன விஷாகனிடம் எகிற, அவன் விடாமல் இழுத்து பிடிக்கவும், அவன் கையை கடித்து விட்டு இரணியனிடம் ஆவேசமாக ஓடிவந்தாள். அவள் வருவாள் என எதிர்பார்த்தவன் போல் அலேக்காக கேட்ச் பிடித்து ஓடி வந்துவளை தூக்கி கொண்டான்.

"ஏய், விடு, விடு, நானா லூசு? நீதான் லூசு மாதிரி ஸ்டேட்மென்ட்டா குடுக்க, விடு நா உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" அவள் அடித்த அடியை அசால்ட்டாக தட்டிவிட்டு பிடித்துக் கொண்டவன்.

"எல்லாரும் உள்ள வரவேணாம், சைன் பண்ண கூட நாலு பேர், இரண்டு சைட் பேரண்ட் மட்டும் உள்ள வாங்க" என்று அழைத்துவிட்டு திமிர திமிர அவளை தூக்கிக் கொண்டு சென்றான். சற்று தூரத்திலேயே பாடிகாட் எல்லோரையும் நிறுத்தி விட, அவர்கள் கண்களுக்கு இருவரது சண்டையும் காதல் சண்டை ஆகவே தெரிந்தது. அவன் ௭ல்லோர் முன்னும் தூக்க, அவள் அதற்காகவே சண்டை போடுவது போல் இருக்க, அவர்கள் ஹீரோ ஆன்டி ஹீரோவாக செய்த செயலை ரசித்து படம் பிடித்தனர் ரசிகர்களும், ப்ரஸ் மக்களும்.

உள்ளே சென்றதும் அவளை அருகிலேயே இறுத்தி பிடித்துக்கொண்டான். முதலில் விஷாகன் சுஹாசினி கல்யாணம் நடந்தது. அமைதியாக இருவர் முகத்திலும் சந்தோஷமின்றி வாழ்க்கையில் இணைந்தனர். விஷாகன் தாலியைக் கட்ட இரணியன் பெற்றோர் பவ்யா உடன் அப்பொழுது உள் நுழைந்தனர். அவர்கள் நடப்பது புரியாமல் அப்படியே பார்க்க இரணியன் ஏற்பாட்டின்படி அவர்களை சுற்றி நின்று கொண்டனர் பாதுகாவலர்கள்.

இருவரும் சைன்போட்டு விலக, அவர்களுக்கு சாட்சிக் கையெழுத்து போட வந்தவர்களும் இரண்டு இரண்டு பேராக போட்டனர்.

அடுத்ததாக இரணியன் பாப்பு குட்டி கல்யாணம் நடக்கவிருக்க, இழுத்து முன் நிறுத்தினான் அவளை. ஜான் வந்து புது தாலியை கொடுக்க, கட்ட விடமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தவளை, "நேரா நில்லு தாட்சா" என்றவன், "நா என்ன கட்டாய தாலியா கட்றேன்" என்றான் சேர்த்து.

"ஆமா நீங்க அவள அதான பண்றீங்க" என முன்வந்தனர் பாப்புவின் பெற்றோரும், வேதிகாவும். இப்பொழுது பாடி காட்ஷில் ஒருவன் இவர்களையும் ஆக்கிரமிக்க.

தாட்சாவை நேராக நிறுத்தியவன், "என் கண்ண பாரு தாட்சா, ௭ன் முகத்த பாத்து சொல்லு, என்ன கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லன்னு, இந்த நிமிஷம் பிரஸ்ட்ட மாத்தி சொல்லிட்டு போயிட்டே இருப்பேன்" என்றான்.

அவளும் சொல்லத்தான் நினைத்தாள், "இப்டி மாத்தி மாத்தி பேசினா, இவர லூசுன்னுல்ல நினைப்பாங்க☹️☹️, இவங்க என்ன இத மட்டும் அவுங்க இமேஜ் என்ன ஆகும்னு யோசிக்காம சொல்றாங்க" என நினைத்துக் கொண்டு அவள் அமைதியாக நிற்க.

"தட்ஸ் மை கேர்ள்" என அவள் கன்னத்தில் தட்டி பாராட்டியவாறு தாலியை கட்டினான். "ஹே நா பதிலே இன்னும் சொல்லல" என அவள் சொன்னது எடுபடாமல் போனது. அடுத்ததாக சைன் பண்ண மாட்டேன் என அடம் பிடித்து நின்றாள்.
 
அத்தியாயம் 20
"சைன் பண்ணு தாட்சா, கெட்டிங் லேட்" இரணியன் சொல்ல. "சார்ம் நீங்க எனக்கு டைம்மே குடுக்கல. ரெண்டு பேரெண்ட்ஸ்ட்டயும் பெர்மிஷன் கேட்கல, நீங்களே டிசைட் பண்ணி, நீங்களே எல்லாம் பண்றீங்க".

அவளை மேலும் கீழும் பார்த்தவன் "இனி உன்ன கிஸ் பண்றதுனா கூட அவங்க கிட்ட கேட்டுட்டே பண்றேன். இப்ப சைன் பண்ணு" ௭ன்றான். அவள் வாயைக் குனட்டி விட்டு நிற்க, அவளை திருப்பி பின்னிருந்து அணைத்து, அவள் கையை தன் கை கொண்டு எடுத்து சென்றவன் அவள் கையை அழுத்தமாக பிடித்து கையெழுத்திட்டான்.

"நல்லா பாத்துக்க, இனி இதுதான் உன் ஷார்ட் சைன். தெரியலனா, வேணும்னா கேளு திரும்ப இதே மாதிரி கைபிடிச்சு கண்டிப்பா சொல்லித் தருவேன்" என்றான் சிரிக்காமல் சீரியஸாகவே.

வலது கை முட்டியை கொண்டு அவன் வயிற்றில் குத்தி, அவனை பின் தள்ளியவள், "இந்த பப்ளிக்ல கட்டிப் பிடிக்கிறது, கிஸ் பண்றது எல்லாம் என்கிட்ட வேணா, உங்களுக்கு வேணும்னா சுத்தி 40 பேர வச்சிகிட்டு, கட்டிப் பிடிக்கிறது பழகிப் போயிருக்கலாம். எனக்கு அப்டி இல்ல, ஓகே?" என விரல் நீட்டி எச்சரிக்க. "ஓகே, அஸ் யூ விஷ்" என தோள் குலுக்கி விலகி நின்றான் இரணியன்.

இதற்கு மேல் என்ன என்பதாய், வடிவு குடும்பம் விடை பெறாமல் சென்றுவிட்டனர். பவ்யா மூவரையும் முறைத்து நிற்க, தில்லைவாணி குலுங்கி குலுங்கி அழ, தெய்வநாயகம் நடப்பது புரியாமல் பார்த்து நின்றார்.

அவர்களை கண்ட இரணியன் "மூணுபேரையும் இங்க எதுவும் பேச வேணாம், வீட்ல போய் பேசிக்கலாம்ன்னு சொல்லிட்டு வா விஷா" ௭ன்க. விஷா பாவமாய் முழிக்க, "என்ன?" என்றான் நின்று மறுபடியும் அவன் முழிப்பதை கண்டு.

"பயமா இருக்கு சார்" விஷா முடிக்கும் முன், பாப்பு எட்டிக் கொண்டு ஏதோ சொல்ல வர, "நா சார்ட்ட கேட்டேன். உன்ன கூப்பிடவே இல்லம்மா" என்றான் முந்திக்கொண்டு விஷா.

"நோ அதர் சாய்ஸ், எனக்கு இருக்க கோபத்துக்கு ஓ மிஸ்ஸஸ்ட்ட பொறுமயா பேசிட்டிருக்க மாட்டேன். இதெல்லாத்தையும் தலையில இழுத்து போட்டு கிட்டவன் நீ, சோ எல்லாத்தயும் ஃபேஸ் பண்ணிதான் ஆகணும். கமான் சீக்கிரம் சொல்லிட்டு வந்து கார் எடு" என்றவாறு முன்னாள் இரணியன் சென்று விட, "ப்ளீஸ் பாப்பு" ௭ன விஷா அவளைப் பிடித்து நிறுத்தினான்.

"உனக்கு இதெல்லாம் செட்டே ஆகல பண்றதெல்லாம் பண்ணிட்டு பாவமா முகத்த வச்சு காரியமா சாதிக்கற நீ" ☹️☹️. "உனக்கு என்ன திட்ட எல்லா உரிமையும் இருக்கு. தாராளமா திட்டு. ஆனா காப்பாத்தி மட்டும் விட்ரு ப்ளீஸ்" என்றான் கெஞ்சலாய்.

அவன் கையை உதறி விட்டு, இரணியன் பெற்றோர்களை நோக்கிச் சென்றாள், "சாரி அங்கிள், சாரி ஆண்ட்டி. உங்கள மாதிரி தான் நாங்களும் கடைசி நிமிஷத்துல எல்லாம் தெரிஞ்சது, சார்ம் எடுக்கிற முடிவுக்கு கட்டுப்பட்டு நிற்க வேண்டிய கட்டாயம். விஷா மேரேஜ் பத்தி வீட்டுக்கு போனதும் சார்ம் புளி போட்டு விளக்குவாரு. இங்க எந்த சீனும் வேணான்னு சொல்லிட்டு போறாரு" என பவ்யாவை பார்த்து கூறிவிட்டு, திரும்ப எத்தனித்தவள் நின்று பவ்யாவிடம், "என் கல்யாணத்த நிறுத்த ப்ளான் பண்ணறேன், ப்ளான் பண்றேன்னு சொல்லிட்டு, உன் புருஷனுக்கு நீயே ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சுருக்க, உன்னால இப்ப வீட்டுக்கு போனதும் வடிவு எனக்கு ஒரு மணி நேரம் ஆக்ஷன் ப்ளாக் கூட சொற்பொழிவாத்துமே, நீயா வந்து கேப்ப" என்றவிட்டு அவளை முறைத்து வெளியேறினாள்.

நிமிர்ந்து பார்க்காமல் சிறிது நேரம் அவர்கள் முன் வந்து நின்ற விஷாகன் பின் மெதுவாக தலை தூக்கி, "சாரி.சாரி சார்" என்று விட்டு வெளியேறினான். பாடிகார்ட்ஸ் இரணியன் வெளியேறவுமே வெளியேறி இருக்க, அதில் இருவர் மட்டுமே உள் நின்றனர். அவர்கள் இவர்கள் மூவரும் வெளியேற காத்திருக்க, 'அங்கு நின்னு மட்டும் என்னவாக போது?' என நினைத்து அவர்களும் பின் வெளியேறினர்.

இங்கு இரணியன் வெளியேறவும், ஒரே கூச்சலாக, ஏகப்பட்ட ப்ளாசஸ் விழுந்தது இருந்தும் சிரித்து மெதுவாக, அவன் அவர்களை கடக்க முயல, " 'சார்ம் மேடத்தோட சேந்து சில ஸ்டில்ஸ் கொடுத்துட்டு போங்க சார்ம்'. 'ஆமா, மிஸஸ். ஸ்மைலிங் சார்ம் நாங்க பாத்தே ஆகணும்' " என கூச்சல் போட்டனர்.

பாப்பு கெத்தாக வெளிவந்தாள். இரணியனின் கண்ணை காட்டுதலில் அவளை கூட்டம் சூழாமல் சூழ்ந்துகொண்டனர் காவலர்கள், பின்னாடியே வெளிவந்த விஷாகன், "௭ன்ன பாப்பு ஒத்தையில விட்டுட்டு வந்துட்ட?" என கேட்டுக் கொண்டே வர, "ஏன் விஷா இப்ப நா எந்த வீட்டுக்கு போறது? பிறந்த வீட்டுக்கா? இல்ல புகுந்த வீட்டுக்கா?" என்றாள் யோசனையாக.

"எனக்கும் கூட அதே டவுட்டுதான்" விஷா சொல்ல. "எரும உனக்கு ரெண்டுமே புகுந்த வீடு தான, எங்க போனா என்ன?" "உனக்கென்னமா நாளைக்கு சிம்லாவ பாத்து போயிடுவ, எனக்குத்தான் விடிஞ்சாலும், அடஞ்சாலும் எங்க போணும்னு தெரியல?”

"ஏன் வேதி க்கா கூட அவ மாமியார் வீட்டுக்கு வேணும்னா போறியா நல்லா பாத்துக்குவா". "கிண்டல் பண்ணாம ஒரு வழி சொல்லு பாப்பு". "இத நீ அக்கா மேல கை வைக்காம கேட்டுருந்தா சொல்லிருப்பேன்". அவன் அவள் கழுத்தை நெரிப்பது போல அவளிடம் கையை கொண்டு வர, அந்தக் கையை தட்டி விட்டவள், "மவனே ஆரம்பத்திலருந்தே நீ பிளானோட தான் எல்லா வேலயும் செஞ்சேன்னு தெரிஞ்சும், நா உன்ன சும்மா விட்டுருக்கதே பெரிய விஷயம். அத மனசுல வச்சுக்கிட்டு நடந்துக்கோ" என சென்று இரணியன் அருகில் காரில் ஏறிவிட்டாள்.

முன்னாள் கதவைத்திறந்து ஏறிய விஷா, "எங்க சார் போகணும்?" என்றான் இரணியனிடம். "என்ன விஷா டாக்ஸி டிரைவர் மாதிரி கொஸ்டின் பண்ற? வீட்டுக்கு தான்". "அதான் சார் எந்த வீட்டுக்குன்னு கேக்கேன். உங்க பிறந்த வீட்டுக்கா? இல்ல புகுந்த வீட்டுக்கா?" என்றான் பாப்புவை முறைத்துக்கொண்டு.

இருவர் முகத்தயும் கண்ட இரணியனுக்கு இதுக ரெண்டும் இதுக்கு வெளில சண்ட போட்டுட்டு தான் வந்து ஏறிருக்கு என்பதைப் புரிந்து கொண்டவன் போல், "ஃபர்ஸ்ட் தாட்சா வீட்டுக்கு போய் அவள இறக்கிவிட்டுட்டு அப்றம் பெசன்ட் நகர் போலாம்" என்றான்.

கார் வேகமெடுக்க, நேராக பாப்பு அப்பார்ட்மெண்ட் போக, மொத்த அப்பார்ட்மெண்ட்டும் வாசலில் தான் நின்றது. பாப்புவிற்கும், இரணியனுக்கும் கல்யாணம் ஆனதில் ஏக சந்தோஷம் அவர்களுக்கு. முன்னர் புரனி பேசியவர்கள் கூட வந்து பாப்புவை கட்டி அனைத்து வாழ்த்து சொன்னர்.

இன்னொரு பக்கம் இரணியன் இறங்கவும் ஆளாளுக்கு வந்து அவனிடம் கைகுலுக்க, செல்ஃபி எடுக்க என இருந்தனர். இரணியனை கண்டபின், மற்ற இருவரையும் யாருமே கண்டுக்கவில்லை.

பாப்பு "போனா போட்டும்" ௭ன நேராக கிச்சாவிடம் சென்றவள், "கிச்சா யூ நோ எனக்கு மேரேஜ் ஆயிடுச்சு. நா உன்கிட்ட க்ளோசா இருக்குற பொறாமையில இந்த மிஸ்ஸஸ். கிட்சா தான் இந்த திடீர் கல்யாணத்த ஏற்பாடு செஞ்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்" என சொல்லி, "எனக்கு கல்யாணம் ஆனாலும் கிட்சாட்ட நா எல்லாத்தையும் இப்டி வந்து சொல்லுவேன்" என எப்பொழுதும் போல் அவரை கட்டியணைத்து முத்தமிட்டு இறங்கினாள்.

தான் இனி பார்த்துக் கொள்வதாக கார்ட்ஸை அனுப்பிவிட்டிருக்க, இரணியன் இங்கு மாட்டிக்கொண்டான். அப்பார்ட்மெண்ட் பெண்களெல்லாம் அவனை ஒட்டி ஒட்டி செல்ஃபி எடுக்க, நாகரிகம் கருதி அவனும் போஸ் கொடுத்து நின்றான்.

கிட்சாவிடம் பேசிவிட்டு திரும்பியவள், இதைக் கண்டுவிட்டு, "அடடா இனி இந்த எஸ்கார்ட் வேலைய வேற நா பாக்கணுமா?" என சென்று, "இனி அடிக்கடி சார்ம் இங்க வருவார், அப்ப கண்டிப்பா பாக்கலாம், அக்காவ செண்ட் ஆஃப் பண்ண வந்தவரு கீழேயே இருந்தா எப்டி, அப்றம் மீட் பண்ணலாம் பை" என சொல்லி அவனை அவர்களிடமிருந்து காப்பாத்தி அழைத்துச் சென்றாள்.

விஷாகன் பின்தொடர, பாதி கூட்டமும் பின்தொடர்ந்தது. இவர்கள் இருவரும் வீட்டினுள் நுழைய ஒருவர் வந்து ஆரத்தி கரைத்து உள் அழைத்துச் சென்றார்.

வீடு நிறைந்திருந்த கூட்டம் அவனுக்கு வித்யாசமாக இருந்தது. எல்லோரும் அவனை அதிசயம் போல் பார்க்கும் பார்வை, அந்த பார்வை மட்டும் அவனுக்கு பழக்கமே.

எல்லோரும் அவனை பிச்சு தின்பது போல் பார்ப்பதை கண்ட பாப்பு, "நீங்க வாங்க சார்ம்" என அழைத்து சென்று தனது அறையில் அமர வைக்க, "விஷாவ என்க தாட்சா?" ௭ன்றான் இரணியன்.

"கூடவே தான வந்தான், அச்சோ அவன எங்க விட்டோம்ன்னு தெரியலயே?" என நினைத்தவள், "நீங்க இங்க வெயிட் பண்ணுங்க சார்ம், நா போய் அவன பாக்குறேன்" என வெளியேற, பக்கத்து அறையில் தன் தாய், தந்தை, வேதி, மாமா, சுஹா என அனைவரும் வேதிகாவிற்கு பேக் செய்ய உதவி கொண்டிருந்தனர்.

அதை ௭ட்டி பார்த்துவிட்டு விஷாவை தேடி வெளிவர, ஸ்டெப்ஸ் கிட்டயே அமர்ந்திருந்தான் அவன். "என்ன விஷா இங்கயே உக்காந்துட்ட? ஓ! ஆரத்தி எடுக்கலன்னு கோபமா? வா எடுக்க வச்சுருவோம்" என அவன் கையை பிடித்து இழுக்க.

"நீ வேற பாப்பு, அதெல்லாம் வேணாம். நா இங்க இருக்கேன். சார் வராங்களா? லேட் ஆகுமா? கேட்டு சொல்லு". என்க. "அட வாடா ரொம்ப பண்ணாம" என அவனை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தவள், வாசலில் நின்று கொண்டு, "ஏய் வெள்ள பாட்சா கல்யாணம் ஆகியும் பொறுப்பு வரலையே உனக்கு? ஹலோ மிஸஸ் ஜட்ஜ் அம்மா, ஊரு பட்ட வியாக்கியானம் பேசுவீங்க, வீட்டுக்கு வந்த மாப்ளைக்கு ஆரத்தி எடுக்கனும்னு தெரியாதோ? இவ்வளவு பேர் இருக்கீங்க இதெல்லாம் கேட்க மாட்டீங்களா?" என அவள் போட்ட சத்தத்தில் எல்லோரும் வெளியே வந்தனர். இரணியன் கூட கதவைத் திறந்து வெளியில் எட்டிப்பார்த்தான்.

"எதுக்குடி வாசல்ல நின்னுக்கிட்டு கத்திட்டு இருக்க?" என வந்தார் வடிவு. "இந்த வீட்டு மாப்ள வந்திருக்கிறது தெரில, ஆரத்தி எடு".

"என் வாயில நல்லா வந்துரும் சொல்லிட்டேன் போயிரு" வடிவு ஒருபக்கம் கத்த. "வேணாம் பாப்பு, எதுக்கு இப்ப இந்த ஆர்ப்பாட்டம்" விஷா மறுபக்கம் கெஞ்ச.

"நீ சும்மா இரு" என்றவள் வெள்ளபாட்சாவை வெளியிழுக்க, அவள் அசால்டாக இவள் கையை உதறிவிட்டு உள் சென்று விட்டாள்.

"அடியே அவேன் கூட ஹனிமூன்லா கொண்டாடுவ, ஆனா ஆரத்தி ௭டுக்க கூட நிக்க மாட்டியோ?" என்க. எல்லோருக்கும் எங்கு சென்று முட்டிக் கொள்ளலாம் என்றுதான் இருந்தது. விஷாகனுக்குத் தான் பிபி ஏறிக்கொண்டே இருந்தது. அதுவும் அவளது இந்த ஸ்டேட்மென்ட்டில் ஹார்ட் வெடித்த பீலிங்கில் தான் நின்றான்.

"ப்பா இவ இனி இந்த வீட்ல இருந்தா நா இருக்க மாட்டேன்பா" என கத்தினாள் சுஹா அவளறை வாசலில் நின்று. "ஆமா ஆமா ரெண்டு பேருமே சார்ம் வீட்டுக்கு போயிடுவோம், விஷா அங்க தான இருக்கான், அப்ப அதான் உனக்கும் மாமியார் வீடு. ஆனா பவ்யாவும் அங்க இருப்பாளே, நைட் எங்க தங்கறதுன்னு உனக்கு கன்ப்ஃயூசன் வந்துருமே விஷா, என்ன பண்ணுவ" என சுஹாவிடம் ஆரம்பித்து விஷகனிடம் முடித்தாள்.

"நா இன்னைக்கு நைட்டோட நைட்டா இந்த நாட்ட விட்டே போயிடுறேன்ம்மா இனி உன் கண்லேயே படமாட்டேன்" என அவன் தப்பித்தாள் போதும் என்ற நிலைக்கு வந்திருக்க, "அதெப்படி இந்த முடிவ என் அக்காவ தொட முன்னல்ல எடுத்துருக்கணும்" என்றாள் அவனை இழுத்துப் பிடித்து.

'இன்னும் இப்படியே நின்னா இவ நம்ம மானத்தை கூறுபோட்டு வித்துருவா' என நினைத்த வடிவு ஆரத்தி கரைக்க செல்ல, "ஏன் பாப்பு இப்டி எல்லாம் பண்ற?" என்றார் அப்போதும் மகளைக் கடிய முடியாமல் மெய்யப்பன், வேதி தன் புகுந்த வீட்டினை கருதி அமைதி காக்க.

இரணியன் அவள் அலப்பறையை ரசித்து நின்றான். அங்கு கூடியிருந்த சொந்தக்காரர்களும், அப்பார்ட்மெண்ட் ஆட்களும், அங்கு இருப்பவர்களின் பதவி, சமூகத்தில் பெரியவர்கள் என்பதை எண்ணி வேடிக்கை மட்டும் பார்த்து நின்றனர்.

அதன்பின் விஷாகனுக்கு மட்டும் ஆரத்தி சுற்றப்பட்டது. உள் வந்தவன் இரணியனை தேட, அவன் சற்று தள்ளி இருந்த ரூம் வாசலில் நிற்பதை கண்டு அவன் நேராக அவனிடம் செல்ல, பிரேக்கடித்து நிற்க வைத்தது பாப்புவின் அடுத்த டையலாக்.

"வேதிக்காவுக்கும், மாமாவுக்கும் மில்க் அண்ட் புரூட்ஸ் கொடுத்தீங்களே இன்னைக்கு செகண்ட் அக்காவுக்கும், மாப்ளைக்கும் கொடுக்கலன்னா எப்டி? இது என்ன பாட்டு கேக்க ஃபோன ௭டுத்தா, ஒரு காதுல ப்ளூடூத்தயும், இன்னொரு காதுல ஹெட்செட்டயும் வைக்க சொல்ற மாதிரி நடந்துக்கிறீங்க" என்றாள் அடுத்த களவரத்தை உள்ளடக்கி.

"ஐயோ பாப்பு, நீ பண்ண வரைக்கும் போதும் ப்ளீஸ்" என இரணியனை பார்த்து ரெண்டு எட்டு வைத்தவன் வேகமாக திரும்பி வந்து அவளிடம் கெஞ்சினான்.

"கிளாஸ்ல மில்க், சுகர் அதுல பீஸ் பண்ண பனானா டேஸ்ட்டா இருக்கும் வேணாமா?" என்றாள் சந்தேகமாய். "ம்கூம், ம்கூம்" என வேகமாய் தலையாட்டினான் விஷா.

"ஓகே உனக்கு குடுத்து வைக்கல, நீ எனக்கு மட்டும் எடுத்துட்டு வாம்மா" என்றவள், நிதானமாக சோபாவில் ஒரு ஆண்ட்டி அமர்ந்திருக்க அதன் கைப்பிடியில் அமர, வந்த வேகத்திற்கு நறுக் நறுக்கென 2 கொட்டு கொட்டி விட்டுச் சென்றார் வடிவு.

அந்த ஆண்ட்டியோ, 'நல்லவேள நமக்கு இப்டி ஒரு பிள்ள இல்ல' என ஆசுவாசப் பட்டுக் கொண்டிருந்தார்.

அதன்பின் வேதிகா அரவிந்த்துடன் ௭ல்லோரிடமும் விடைபெற, உடன் அனுப்ப பெற்ற இரு பெண்களின் சூழ்நிலையும் சரியில்லாததால், உறவினர்களிடமே சொல்லி அனுப்பிவைத்தார் வடிவு, "நா பாத்துக்குறேன்மா" என தைரியமாகவே சொல்லிவிட்டு கிளம்பினாள் வேதிகா,

அப்பா, அம்மா காலில் விழுந்தாள். சுஹாசினியை கட்டியணைத்து "சாரி சுஹா" என்றாள். "தெரிஞ்சு எதுவும் நடக்கலன்னு புரியுது வேதி, நோ வொரிஸ்" ௭ன்றாள் சுஹா. "காய்ச்சல் இன்னும் இருக்குடி, கொஞ்சம் ரெஸ்ட் எடு" என்றவாறு, வேதி பாப்புவிடம் திரும்ப, "வேதி க்கா" என ஓடிவந்து அணைத்துக் கொண்டாள்.

"எல்லாத்துலயும் விளையாடுற பாப்பு நீ யார் பேச்சையும் கேட்காம தன்னிச்சையா முடிவு எடுக்குற. நீ இப்ப போய் மாட்டிட்டு இருக்கது நல்லதுக்கா, கெட்டதுக்கான்னு எனக்கு தெரியல, கொஞ்சம் கவனமா இரு. என்கிட்டயும் அப்பாட்டயும் சொல்லாம இனினாலும் தயவுசெஞ்சு எந்த முடிவும் ௭டுக்காத, ப்ளீஸ்டா பாப்புக்குட்டி. ரொம்ப ஸ்பீடா எல்லாமே நடந்த மாதிரி இருக்கு, கவனமாயிருடா" என்றாள் குட்டி தங்கையை இறுக்கியணைத்து.

"கண்டிப்பாக்கா, நீ பயப்படாம போயிட்டு வா. யாராது என்ட்ட வாலாட்டுனா முத போன் உனக்கு தான் போடுவேன்" என்றாள் இரணியனை திரும்பி பார்த்து. அவன் காற்றிலே வாயை குவித்து உம்மாவை பறக்க விட்டான் இவளை நோக்கி. வாயைக் குணட்டி அதை வாங்காமல் திரும்பிக்கொண்டாள்.

பின் கீழ் இறங்கி சென்று, மொத்த அபார்ட்மெண்ட்டும் வேதிகாவை அவள் கணவனோடு, சில சொந்தங்களை உடனனுப்பி வழி அனுப்பி வைத்தனர்.

வடிவு கண்ணீரை துடைக்க, பக்கத்து வீட்டு சாந்தி வந்து, "எதுக்கு வடிவக்கா அழுறீங்க? 'மூணு பொம்பள பிள்ளய பெத்து வீட்டிலேயே வச்சிருக்கனேன்னு புலம்புவீங்க. இப்ப பாருங்க ரெண்டு நாள்ல மூணு பில்ளைக கல்யாணமு முடிஞ்சு போச்சு. ஒத்த செலவுல மூணு கல்யாணத்த முடிச்சுருக்கீங்க. இதுக்கு குத்தாட்டம்ல போடணும் எதுக்கு அழுறீங்க" ௭ன்க.

நிமிர்ந்து முறைத்து முந்தியை இடுப்பில் சொருகிய வடிவு, அங்கு நின்று வேடிக்கை பார்த்த செக்யூரிட்டி கையில் இருந்த லத்தியை வாங்கி, "இன்னைக்கு உனக்கு நா கொடுக்குறதுல இந்த அப்பார்ட்மெண்ட்ல யாரும் என் பிள்ளைக கல்யாணத்தப் பத்தி பேசக்கூடாது" என அவளை விரட்டி விரட்டி அடிக்க.

"ஐயோ அக்கா இத நா சொல்லல, பாப்பு தான் சொல்ல சொல்லுச்சு. நா பக்கத்துல போனா நாயி பேய பாத்ததும் பிராண்டுமே அது மாதிரி பிராண்டுதுக்கா, அதனால நீங்க சொல்லுங்கன்னுச்சு, அதான்க்கா சொன்னே, க்கா வலிக்குதுக்கா வீங்கிட போகுது" என இரண்டு அடியையும் வாங்கிக் கொண்டு தன் வீட்டை நோக்கி ஓடினாள் சாந்தி.

'போற போக்குல நம்மள கோர்த்து விட்டுருச்சே இந்த அக்கா' என சத்தம் இல்லாமல் போக பார்த்த பாப்புவை, "நீ ஏன்டி இப்டி இருக்க? கொஞ்சமாது வட வருத்தம் இருக்கா? உன் கூட பிறந்தவ வாழ்க்கதானே இப்டி ஆயிடுச்சு, எப்படி உன்னால சிரிக்க முடியுது? அதுக்கு காரணமானவனோட சுத்த முடியுது?" என லத்தியை வீசி எறிந்து விட்டு சென்றார்.

சுஹாவும் வீட்டுக்குச் செல்ல, சோகமாய் நின்றவளை தோளில் கையிட்டு அணைத்து, "அம்மா இப்டி பேசிட்டாளேன்னு கஷ்டமா இருக்காடா?" என்றார் மெய்யப்பன், மகள் முகம் சுருங்குவது தாளாமல்.

"நீங்க எப்டிப்பா இந்த வடிவோட இத்தன வருஷம் குடும்ப நடத்துறீங்க. பெரிய மிராக்கிள் தெரியுமா யூ ஆர். கண்டிப்பா மெரினா பீச்சுல உங்களுக்கு ஒரு சில வைக்கணும்" என்க, சத்தமாகவே சிரித்தார் மெய்யப்பன்.

பின், "உனக்கு மிஸ்டர்.இரணியன புடிச்சிருக்காம்மா?" ௭ன்றார் மெதுவாக. "எனக்கு அவர ரொம்பப் பிடிக்கும்னு தான் உங்களுக்கு அல்ரெடி தெரிஞ்சதுதானேப்பா". "கூட வாழற அளவுக்கு பிடிச்சிருக்காம்மா?”

"அவர பிடிச்சதுனால, அவர் கூட இருக்கவும் பிடிச்சிருக்கு. அவர் முகம் சுருங்குறது கஷ்டமா இருக்க மாதிரி இருக்கும்ப்பா. எப்பயும் அவர் ஸ்மைலோட இருக்கணும். அதுக்கு என்ன வேணா செய்யலாம்னு தோணுது. நா இவ்வளவு செஞ்சும் நீங்க என்ன அரவணைக்கிற மாதிரி" ௭ன்றாள் கூடுதல் ஐஸ்ஸாக.

"விஷாகன இரணியனுக்காகத் தான் சுஹாவுக்கு மேரேஜ் பண்ண முடிவு பண்ணியா?” "முதல் ரீசன், சுஹா லைப் இப்படியே ட்ராப் ஆகிடும்ன்ற பயம், சிங்கிளாவே இருப்போம்ன்ற முடிவுக்கு வந்துடுவா. ரெண்டாவது விஷாகன் ரொம்ப நல்லவன்ப்பா, தெரியாம இதுல மாட்டிகிட்டாலும் சுஹா கூட கண்டிப்பா ஒரு நல்ல பிரண்டானாலும் கமிட் ஆயிடுவான். அதுக்கு மேல அவங்க ரெலேஷன்ஷிப் கொண்டு போறது அவங்க இஷ்டம்".

சிரித்து கொண்டவர் "அம்மாவ ஏன்டா எப்பயும் டென்ஷன் பண்ற? வீட்டுக்குள்ள வாரதுக்கு அவ்வளவு அலப்பற தேவயா?” "எல்லாருக்கும் தெரியணும்லப்பா, வந்தவங்க எல்லாம் காசிப்பா அத பேசுறதவிட நாமளே சத்தமா நம்மள பத்தி பேசிட்டு போறது பெட்டர்ன்னு தோணுச்சு".

"ம், நெக்ஸ்ட் பிளான்?” "நா சார்ம் கூட அவுட் சூட் போறது. இதுக்கு முன்ன அனுப்ப பயந்தீங்க, இப்ப அந்த பயமில்ல தானே" என குனிந்து தாலியை பார்த்தாள்.

"இப்பவும் எனக்கு என் பொண்ணு சின்ன பிள்ளையாச்சேன்ற பயம் இருக்கத்தான் செய்து".

இவர்கள் இருவரும் மேல் வரும்படி தெரியாததால் இரணியன் கீழ் வந்து விட்டிருந்தான். பின்னிருந்து, "தாட்சா" ௭ன அழைக்க, இவள் திரும்பிப்பார்க்க, "டைம் ஆயிடுச்சு, நா கிளம்புறேன். நீ என்ன செய்றதா இருக்க?”

"நா இன்னைக்கு இங்கேயே இருக்கேன் சார்ம். நாளைக்கு தானே கிளம்பனும், மார்னிங் கிளம்பி வந்துடுறேன்" என்றாள்.

பத்தடி தொலைவில் நின்றவன், "இங்க வா" என்றான் தன் அருகில் தலையாட்டி அழைத்து, "என்ன சார்ம்?" எனக் கேட்டுக் கொண்டே அவன் அருகில் செல்ல, அவள் கை பிடித்து இன்னும் நெருக்கமாக இழுத்துக் கொண்டவன், அவள் காதில் குனிந்து, "நமக்கு இன்னைக்கு தானே மேரேஜ் ஆச்சு, அப்ப இன்னைக்கு தான நமக்கு ஃபர்ஸ்ட் நைட். நா அங்கயும், நீ இங்கயுமா இருந்தா நல்லாவா இருக்கும்" என்க.

மூக்கை சுருக்கி அவனை முறைத்து இரண்டு அடி போட்டாள் அவன் கையில். குறும்பாக சிரித்தவன், கார் நோக்கி நடந்து கொண்டு, "டிசிஷன் இஸ் யுவர்ஸ், இங்கனாலும் சரி, அங்கனாலும் சரி, எனக்கு ஓகே தான். டிசைட் பண்ணி பிஃபோர் 9 கால் பண்ணு" என்றவாறு நடக்க.

"சார்ம்" என்றாள் காலை உதைத்து, சிணுங்கி. "பை" சொல்லி கிளம்பிவிட்டான், மெய்யப்பனிடமும் ஒரு தலையசைப்புடன். இருவருக்கும் திடீர் கல்யாணம் என்றால் சிறுபிள்ளை கூட நம்பாது என நினைத்து சிரித்துக் கொண்டார் அவர்.

இருவரும் மேலேற, அபார்ட்மெண்ட் ஆட்கள் ஒவ்வொருவராக கிளம்பினர், இவர்கள் நுழைந்தனர். சோபாவில் அமர்ந்திருந்தான் விஷாகன்.

"என்னாச்சு விஷா? சார்ம் கிளம்பிட்டாரு நீ இருக்க" என்றாள். "சார் தான் இன்னைக்கு இங்க இருன்னுட்டு போனார்" என்றான். "ஐய உனக்குதான் நேத்தே பர்ஸ்ட் நைட் முடிஞ்சிருச்சே" என்க. அந்தப் பக்கம் தனதறை சென்று கொண்டிருந்த வடிவு திரும்பி வந்து அவள் முதுகில் சொத்தென்று 2 அடி அடித்து முணங்கி விட்டு சென்றார். மெய்யப்பன் அவரிடம் பேச பின்னேயே செல்ல.

முதுகை தேய்த்து கொண்டவள், "சொத்து சொத்துன்னு அடிக்காதம்மா வலிக்குது" என்க. "நீயும் வாரியா, அங்க என்ன பிரச்சன ஆகும்னு தெரியல, பவ்யாட்டயும், சார்ட்டையும், ஆண்ட்டிட்டையும் எக்ஸ்பிளைன் பண்ணனும்ல. பாஸ் வேற பவ்யா மேல செம கடுப்புல போறாரு". "இதெல்லாம்" பாப்பு ஆரம்பிக்க, "ப்ளீஸ்" என்றான் அவள் காலில் குனிந்து நிமிர்ந்து.

"சரி பொழச்சுப்போ. ஆனா நா வந்து என்ன பண்ண, அவளுக்கு இதுவே பெரிய பனிஷ்மென்ட் தான். இன்னும் இத குத்தி காட்டி என்ன ஆகப்போகுது?" என்றாள். அவன் தலை குனிந்து நிற்க, "இங்க பாரு விஷா, ரெண்டு பொண்டாட்டி கட்டிட்டு திண்டாடுறவங்கள நா லைவா இதுவர பாத்ததேயில்ல, உன்ன வச்சு தான் தெரிஞ்சுக்க போறேன், அதனால உனக்கு எப்டி அட்வைஸ் பண்ணுறதுன்னு கூட ௭னக்கு தெரியல. பட் நீ ரெண்டயும் மேனேஜ் பண்ணி தான் ஆகணும். மனசு அதுவே ஒரு பக்கம் சாயும், அந்தப் பக்கத்த லவ்வாவும், இன்னொரு பக்கத்த ப்ரண்ட்டாவும் வச்சுக்கோ. இது எனக்கு தெரிஞ்சது".

"இப்ப நா என்ன செய்ய?" என்றான் அவளிடமே. வேகமாக அவனை இழுத்துச் சென்று சுஹா வேதி இருந்த அறை, இப்போது முழுவதுமாக சுஹாவிற்கு என ஆகியிருந்த அறையை திறந்து இவனை உள்ளே தள்ளி வெளியே லாக் செய்தாள், உள்ளே எப்படியோ முட்டி மோதி தெளியட்டும் என.

பத்து நிமிடம் கதவு விடாமல் தட்டப்பட்டது, திறந்துவிட சென்ற வடிவயும், "அவங்கள தனியா விடும்மா, அவன நாலு அடி அடிச்சுனாலும் அவ கோபத்த குறச்சுக்கட்டும்" என தடுத்து விட்டாள். அதன்பின் சத்தம் இல்லை, உள்ளே என்ன நடந்ததோ! இவளும் தன் அறையில் சென்று முடங்கி விட, ஈவினிங் ஐந்து மணி இருக்கும் பொழுது அவர்கள் வீட்டு காலிங் பெல் பலமாக அடிக்கப்பட்டது. வடிவு சென்று கதவை திறக்க, கன்னம் வீங்கி அழுத கோலமாய் வாசலில் உக்கிரமாய் நின்றாள் பவ்யாராணி.
 
அத்தியாயம் 21
பவ்யாவை எதிர்பார்க்காத வடிவு "யார் அது இவ்வளவு வேகமா பெல் அடிக்கிறது, வருவேன்ல" என்றவாறு வந்து கதவைத் திறந்து அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட. "யாருமா" என வந்த மெய்யப்பனும் சத்தமில்லாமல் நிற்கும் மனைவியை கண்டுவிட்டு வாசலை எட்டிப் பார்த்தார், அழுத கோலமாய் நின்ற பவ்யாவை கண்டு முதலில் திகைத்தவர் அடுத்து நொடிகளில் தன்னை மீட்டு "உள்ள வாமா" என்றார்.

"எங்க என் புருஷன்" என்றாள் தோரணையாக வெளியில் நின்றே. "உள்ள வாமா, உன் கஷ்டம் புரியாம இல்ல. நீ பண்ணதும் தப்பு தானே, அதனாலயும் வந்த பாதிப்பு தானே" என்றார் மெய்யப்பன்.

"அதுக்காக ஒரு கல்யாணமானவனுக்கு மறுகல்யாணம் பண்ணி வைக்க சொல்லியா உங்க சட்டம் சொல்லுது? தப்பு பண்ண ௭ன்ன தூக்கி ஜெயில வச்சுருந்தா நீங்க நேர்மையான ஜட்ஜ்ன்னு சல்யூட் அடிச்சிருப்பேன். நேக்கா ப்ளான் பண்ணி உங்க பொண்ணுக்கு கட்டி வைப்பீங்களோ? எல்லாத்துக்கும் காரணம் உங்க கடைசி பொண்ணு தான் தெரியுமா? அவ என்கிட்ட திமிரா பேசினா, கைநீட்டி அடிச்சா, எங்க அண்ணன கைக்குள்ள போட்டுட்டு என்ன விரட்ட நினைச்சா, அதுக்கு தான் நா அவள பழிவாங்க அப்டி பண்ணே. தப்பு செஞ்சது நான்னுன்னா அத செய்ய வச்சது உங்க பொண்ணு. ஆனா அதயும் அவ அவளுக்கு தக்கன யூஸ் பண்ணிக்கிட்டா, என் புருஷன என்கிட்ட இருந்து பிரிச்சிட்டா. நல்லா ட்ரெயின் பண்ணிருக்கீங்க உங்க பொண்ண, ஜட்ஜ் ஆச்சே கிரிமினல் விஷயங்கள் மொத்தத்தயும் சொல்லிக் குடுத்துருப்பீங்க" என ஒட்டுமொத்த கோவத்திலும் கத்தினாள்.

அந்த ஃபுளோரில் உள்ளவர்களும் வந்து "என்னாச்சு, என்ன பிரச்சன" என விசாரிக்க ஆரம்பித்ததும் வடிவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

சரியாக அந்நேரம் சுஹா அறைக்கதவு தட்டப்பட, தன்னை மீட்டு வேகமாக சென்று அந்த கதவை திறந்து விட்டார் வடிவு. பவ்யா, தானும் 'அவன் தான் இவ்வளவு சத்தம் போட்டும் வெளி வராத கோபத்தில் வீட்டினுள் நுழைந்து பார்த்தாள்'.

வெளியில் பவ்யாவின் சத்தம் கேட்கவுமே, அங்கு இரணியன் வீட்டில் என்ன நடந்திருக்கும் என தெரிந்துகொள்ள இரணியனுக்கு போன் செய்துபார்த்துவிட்டு, அவன் போனை எடுக்கவில்லை ௭ன்ற பின்பே சுஹாவை திரும்பிப் பார்த்துவிட்டு கதவை தட்டினான் விஷா.

"ஓ! அவேன் எங்கயும் ஓடிரக்கூடாதுன்னு பூட்டிவேற வச்சிருக்கீங்க" என்றவள், விஷா மட்டுமே வெளிவர அவன் பின்னால் அறையை பார்க்க சுஹா தூக்கத்தில் புரண்டு படுப்பது தெரிந்தது. பல்லை கடித்து அவனை தீர்க்கமாக முறைத்தாள்.

இவன் வெளியே வரவும் "குடும்பத்துக்கே இங்கீதம்தான் கிடையாதோ? யக் எப்டித்தான் இப்டி இருக்கீங்களோ, இன்னொருத்தி புருஷன கட்டி வச்சு, பொண்ணு ரூமுக்குள்ள அவன போட்டு பூட்டி வச்சு அசிங்கமா இல்ல? இதுக்கு பேர் என்ன தெரியுமா" என்க.

"பிளீஸ் பவ்யா" விஷா கெஞ்சலாக சொல்ல. "மைன்ட் யுவர் வேர்ட்ஸ், உன் வாழ்க்க சம்பந்தப்பட்ட கோவத்துல பேசுறன்னு தான் இவ்வளவு நேரமு பொறுமையா பேசிட்டுருக்கேன்மா அத நீ தப்பா புரிஞ்சுட்ருக்க" என்றார் மெய்யப்பன்.

வடிவுக்கு பாப்பு மீது தான் ஆத்தர ஆத்ரமா வந்தது, 'இங்க இவ்வளவு கலவரம் நடக்குது ரூமுக்குள்ள ௭ன்ன செய்றா இவ' ௭ன அத்தனைக்கும் காரணமானவளை, "ச்சே இந்த பிள்ளைய நா பெக்காமலே இருந்திருக்க கூடாதா?" என புலம்பியவாறு சென்று அவள் அறை கதவை தட்ட, அந்த சொர்க்க வாசல் திறக்கவே இல்லை.

விஷாவிற்கு ஊட்டியில் நடந்தது ஞாபகம் வந்தது, "வெளில ஏதாவது கலவரம் நடந்தா, உள்ள மேடம் ஜாலியா குத்தாட்டம்ல போட்டிட்ருப்பாங்க, அவங்களா வெளில வந்தா தான் உண்டு, இப்போதைக்கு பாப்பு வெளில வராம இருக்கதே நல்லது தான, ௭துக்கு வைலன்ஸ் இல்லாம போயிட்ருக்க கலவரத்தில இந்தம்மா ஆக்ஷன் சீக்குவன்ஸ ஆட் பண்ண பாக்றாங்க" என நினைத்து விரக்தியில் திரும்ப இரணியன் வீட்டினுள் நுழைந்தான்.

முகத்தை மூடியிருந்த டவலை விளக்கியவன், அவர்கள் இவனை ௭திர் பார்க்காமல் முழித்த முழியில் "ஃபேமிலி மேட்டர் பேசணும், உள்ள வந்து ஜாயின் பண்ணிக்றீங்களா? இல்ல வெளில நின்னு வேடிக்க பாக்க கஷ்டமா இருக்கும்" என்றான் அப்பார்ட்மெண்ட் ஆட்களிடம்.

அதற்கு மேல் நிற்காமல் அவர்களுக்குள் பேசி கலைந்து சென்றனர். பின் மெதுவாக உள்ளே வந்து அமர்ந்தவன், நிமிர்ந்து பவ்யாவை பாக்க, அவளிற்கு வாய் தந்தி அடிக்க ஆரம்பித்திருந்தது. பின் திரும்பி, "வந்து உட்காருங்க அங்க்கில், நீயும் வா விஷா" என்றான் இருபக்கமும் நின்றவர்களை. மெய்யப்பன் வந்து ௭திர் சோஃபாவில் அமற, விஷா இரணியன் அருகில் அமர்ந்தான்.

ஆழமாக மூச்சை இழுத்து விட்டவள், "என் உரிமைய கூட நா கேக்கக் கூடாதாண்ணா?இல்ல உன் பொண்டாட்டி குடும்பத்த காப்பாத்த என் பின்னாடியே வந்துட்டியா?” "நா வந்தத பத்தி உனக்கு ஆன்சர் பண்ண வேண்டியதில்ல, நீ எதுக்கு இங்க வந்த? எதுனாலும் விஷா அங்க வந்தப்றம்ல பேசிருக்கணும். வொய் டிட் யூ கம் ஹியர்?" ௭ன்றான் நிதானமாக கால் மேல் காலிட்டு.

"அப்ப இனி இவர பாக்கணும்னா ஒன்ட்டயும் இந்த ஃபேமிலிட்டயும் பர்மிஷன் வாங்கணும் சரியா?" ௭ன கேக்க

"இப்டி பெர்மீசன் வாங்குற சிட்வேஷன கொண்டு வந்தது நீ. உன்ன யாரு டிரக்ஸ் எல்லாம் யூஸ் பண்ண சொன்னது. அதனால் அந்த பொண்ணு பாதிக்கப்பட்ருக்கு. வேற ஆப்ஷன் இல்லாம தான் இந்த முடிவெடுத்தோம். உனக்கு வீட்லயே போதுமான எக்ஸ்ப்ளனேஷன் குடுத்துட்டேன்னு நினைக்றேன்" என்றான் புருவத்தை ஏற்றி இறக்கி.

இரணியனை அமைதி படுத்தும் விதமாக அவன் கையில் தட்டி குடுத்த விஷா "சாரி பவ்யா, இப்பயும் நா நிறைய குழப்பத்தில தான் இருக்கேன். நடந்த விஷயங்கள் எல்லாமே என்ன மீறி நடந்த ஒன்னு. சாரி அகைன். இனி நல்ல ஹஸ்பன்ட்டா இருப்பேனான்னு தெரியாது, ஆனா நல்ல கம்பேனியனா இருக்க ட்ரை பண்றேன்" என்றான் பவ்யாவை நேராக பார்த்து.

"தயவு செஞ்சு, இனி அந்த வீட்டுப் பக்கம் வந்திராத. எனக்கு உன்ன பாத்தாலே வெறுப்பா இருக்கு. பெரிய தியாக செம்மல் மாதிரி எனக்கு வாழ்க்க குடுத்த, இன்னைக்கு அவளுக்கு. நாளைக்கு இன்னொருத்தி வருவா அவளயும் கட்டிக்கோ" ௭ன்றாள் மூஞ்சில் அவ்வளவு வெறுப்பை தேக்கி.

அந்நேரம் பாப்பு அறைக்கதவு திறக்கும் சத்தத்தில் எல்லோரும் அங்கு திரும்ப. காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு,

சிறுபிள்ளை போல், மனமிருந்தால் துயரில்லையே பறவைப்போல் உடலிருந்தால் பயமில்லையே.

ஏஏ தந்தானே தந்தானே கையில் பூமி தந்தானே வளமோடு வாழத்தானே!

மழைத்துளி மண்ணில் வந்து சிந்த சிந்த எழுகிறதே ஒரு வாசம்.
அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து விடுகிறதே சில நேரம்.

ஊலலலா ஊலலலா
உல்லலாலலலா
ஒஹோ.
ஊலலலா ஊலலலா
உல்லலா லலலா

எனப் பாடிக்கொண்டே வேறு உலகத்தில் சஞ்சரித்தவாறு வெளிவந்தாள். டிரஸ் பேக் பண்ணி கொண்டிருந்திருப்பாள் போலும், ட்ராலி சூட்கேஸ் பெட்டில் திறந்த மேனிக்கு வீற்றிருந்தது.

வெளிவந்தவள், ஹால் சோபாவில் இருந்தவர்களையும் பவ்யாவையும் பார்த்து விட்டு ஹெட்போனை காதிலிருந்து ௭டுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டு. "ஹாய் சார்ம், ௭ன்ன போன வேகத்துல திரும்பி வந்துருக்கீங்க" ௭ன்றவள், தாயிடம் திரும்பி "ம்மா, என்னோட யெல்லோ கலர் டாப் மிஸ் ஆகுது தேடி எடுத்து தா சரியா" என்று சொல்லிவிட்டு, "சொல்லலன்னா மறந்திடும் அதான் சொல்லிட்டேன் சார்ம்" ௭ன்றுவிட்டு, "௭ன்ன பவ்யா என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்னு அண்ணன கூட்டிட்டு இங்க சண்ட போட வந்திருக்கமாறி இருக்கு" என யார் பதிலயும் ௭திர் பாராமல் அவளாக பேசி கொண்டு, வந்து தகப்பன் அருகில் அமர்ந்தாள்.

வடிவும் பவ்யாவுமே நின்றிருக்க. பாப்புவை பார்க்கவே பிடிக்காததுபோல் வெளியேறினாள் பவ்யா. பின் எழுந்து செல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தான் விஷா.

"௭ன்ன உன் பொண்டாட்டி வெடுக்குன்னு திரும்பி போறா. நீயும் எந்திரிச்சு போ, சமாதானப்படுத்தி அனுப்பு, இல்ல நீ ஏமாத்தி்ட்ட விரக்தில லாரிக்குள்ள கார விட்டாலும் விட்டுருவா" என்றாள் பாப்பு. விஷா எழுந்து கீழே செல்லும் முன் அவள் சென்றிருந்தாள், அங்கிருந்த கிருஷ்ணர் சிலை பக்கமிருந்த பென்ஞ்சில் அப்டியே அமர்ந்துவிட்டான்.

இரணியன் பாப்பு வெளி வந்ததில் இருந்து அவள் செய்கைகளையே தான் பார்த்திருந்தான். விஷா செல்லவும் தானும் எழுந்தான், "போகப்போக மேனேஜ் பண்ணிப்பான் அங்கில், இந்த சிட்சுவேஷன அவன எப்டி ஹேண்டில் பண்ண சொல்லன்னு எனக்குமே குழப்பமா தான் இருக்கு. உங்களால முடிஞ்சா உங்களுக்கு தெரிஞ்ச அட்வைஸ நீங்களே அவனுக்கு சொல்லுங்க. நா கிளம்புறேன்" என்க. மெய்யப்பன் தலையசைக்க. "பை சார்ம்" என்றாள் பாப்பு கையசைத்து.

அவளை திரும்பி பார்த்தவன் குறும்பாகச் சிரித்து வெளியேற. "வர வர சார்ம் எதுக்கெடுத்தாலும் சிரிக்கிறாரு" ௭ன புலம்பி ௭ழுந்தவள் வடிவிடம், "ம்மா எல்லோ டாப்?" என்க. வடிவு முடிந்த மட்டும் முறைத்துவிட்டு தனதறை சென்றுவிட.

"இப்போ எதுக்குப்பா வடிவு பார்வைலயே ௭ரிச்சிட்டு போது. அவங்க சேலையவா கேட்டேன், ௭ன் டாப்பத்தான கேட்டேன்" என்றாள் மெய்யப்பனிடம். அவரோ ஏதோ யோசனையில் அமர்ந்திருக்க, "ஏனோ இரவோடு ஒளியாய் கூடும் உறவு ஒன்று கேட்கிறேன்" என பாடி கூப்பிட்டது அவள் மொபைல்.

"என்ன இப்பதானே போனாங்க எதயும் மறந்து விட்டிட்டு போய் இருப்பாங்களோ" என சுற்றி தேடியவாறு போனை எடுக்க. "கீழ பார்க்கிங் வா தாட்சா" என்றான். அவள் "எதுக்கு" ௭ன கேட்பதை கேட்கும் முன் வைத்து விட்டிருந்தான்.

பாப்பு ஹெட்போனை தலையில் நன்றாக மாட்டிக் கொண்டு, பாட்டை மறுபடியும் ஆன் செய்துவிட்டு பார்க்கிங் செல்ல, டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவன் கை காலை ஆட்டிக்கொண்டு சத்தமாக பாடிக் கொண்டு வருபவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அவள் வந்து கார் கதவில் கை வைத்து நின்று கொண்டு "என்ன சார்ம்" ௭ன்க, அவள் நாடி பிடித்து அருகில் இழுத்து, அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு, "சோ க்யூட், ரேர் பீஸ் தெரியுமா நீ?" என்க.

"அத கிஸ் பண்ணாம சொன்னா என்ன?" ௭ன கேட்டு முறைக்க. சிரித்தவன் மறுபடியும் அவள் கையை பிடித்து இழுத்து, அவள் அருகில் வரவும், முகத்தை கிட்ட இழுக்க அவன் கை கொண்டு செல்லவும், அதை தட்டிவிட்டு தள்ளி நின்றாள். இப்போது நன்றாகவே வாய்விட்டு சிரித்தான் இரணியன். கண்ணை விரித்து அவனை ரசித்தவள், "சிரிக்கும் போது எவ்வளவு அழகா இருக்கீங்க சார்ம் நீங்க" ௭ன்றாள் உணர்ந்து ரசித்து.

அவள் ரசிப்பதை கண்டவன் அவளை திசை திருப்ப "அதுசரி நீ எப்டி இவ்ளோ ரிஸ்கான சுச்சுவேஷன்லயும் ஹாயா பாட்டு கேட்டுட்டுருக்க. இன்னைக்கு ஒரு நாள்ல எத்தன விஷயம் நடந்துட்டு?" என்றான் உண்மையாகவே அவளின் செயல்களால் அதிசயித்து.

இடுப்பில் கைவைத்து முறைத்து, "எல்லாரும் என்ன இதயே கேக்றீங்க? அப்டி ஒரு விஷயம் எனக்கு நடக்கல, அக்காவுக்கு தானன்னு கூட என் மனசு நினைக்குதோ என்னவோ, அதான் ஜாலியா இருக்கேனா இருக்கும்" ௭ன்றாள் கோபமாக. "இல்லயே அன்னைக்கு ஊட்டில மொத்த தமிழ்நாடும் உன்ன தப்பா பேசுச்சே, அப்ப கூட இப்டி தான் இருந்த, இன்னைக்கு உனக்கு வேற திடீர் கல்யாணம் நடந்துருக்கு, ஆனா அதுக்கான ரியாக்சன் ஒன்னுகூட இல்லன்னா!"அவன் தோள்களைக் குலுக்கி உதட்டைப் பிதுக்க.

"ஓஹோ! நல்ல டாக்டர கன்சல்ட் பண்ண சொல்லலாம்னு யோசிக்கிறீங்களோ?" என கேக்க.

மெதுவாக சிரித்தவன், இல்லை ௭ன தலையாட்டி, "நைட் எங்க ஸ்டேன்னு, டிசைட் பண்ணிட்டியா?" என்றான் அவளின் கோவத்தை ரசித்து. லேசாக முறைத்து "நா இங்க தான், நீங்க அங்க தான், மார்னிங் ஏர்போர்ட்ல மீட் பண்ணலாம்" ௭ன திரும்பி ஹெட்போனை தலையில் மாட்டிக் கொண்டு மறுபடியும் பாடிக்கொண்டே செல்ல சிரித்தவாறு வண்டியை எடுத்தான் இரணியன்.

பாப்பு லிஃப்டில் ஏற போகையில் தற்செயலாக திரும்ப, விஷா அமர்ந்திருப்பதைக் கண்டு "இவேன் இங்க ௭ன்ன பண்றான்" ௭ன அவனை நோக்கி நடந்தாள். அவன் அருகில் சென்று காலை ஆட்டியவாறு அமர, நிமிர்ந்தவன் "சார் கிளம்பிட்டாரா?" ௭ன்க, "அதோ" என்றாள். இரணியன் கார் கேட்டை அப்பொழுதுதான் தாண்டியது.

"ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். எப்டி இதுலயிருந்து மீண்டு வர போறேன்னே தெரியல, பயமா இருக்கு. உன் பின்னயும், சார் பின்னயும் ஒளிஞ்சு இன்னைக்கு தப்பிச்சுட்டேன், ஆனா இனிமே!" ௭ன்றான் முகம் முழுவதும் கலவரமாக.

அவனை ஆழமாக பார்த்தவள், "உன்ன உள்ள தள்ளி கதவடச்சனே, வெள்ள பாட்சா ஒன்னும் செய்யல?", "நா என்ன சொல்றே, நீ என்ன கேக்ற?" என்றான் அவளை முறைத்து திரும்பி. "உள்ளே என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா தான, சஜஸன் சொல்ல முடியும்".

"ஒன்னும் நடக்கல, நல்லா தூங்கிட்டுருந்தாங்க, நா உள்ள போனதும் நீ லாக் பண்ணுனதுல கதவ தட்டினேன்ல, அப்ப மட்டும் நிமிந்து பாத்துட்டு 'என்ன வேணும், டிஸ்டர்ப் பண்ணாத ப்ளீஸ்' ன்னு சொன்னாங்க. திரும்பிப் படுத்து தூங்கிட்டாங்க, உள்ள கிடந்த சேருல உட்கார்ந்திருந்துட்டு பவ்யா சத்தம் கேக்கவும் வெளில வந்துருக்கேன், அவ்வளவு தான்".

"ச்ச, இன்னைக்கே நாலு மிதி மிதிச்சு சமாதானமாய்டுவான்னு நெனச்சனே, காய்ச்சல் இருந்து கெடுத்துட்டு, உனக்கு பவ்யா மேல லவ்வோ?" ௭ன்றாள் ஆராய்ச்சியாக.

"லவ்வா இல்லையான்னு தெரியாது ஆனா அவ கூட தான் என் லைஃப்ன்னு டிசைட் பண்ணி தான் வச்சிருந்தேன்" "பின்ன என்ன கன்ஃப்யூஷன்? சுஹா அவ லைஃப்ல உனக்கு ஸ்பேஸ் தற்றது பெரிய டவுட். நீ அவள ஒரு நல்ல பிரண்டா அக்செப்ட் பண்ண வை போதும். லைஃப் லாங்க் அவளுக்கு சப்போர்ட்டா இருந்தா அதுவே அப்பா அம்மாக்கு போதும். பவ்யாக்கு நல்ல ஹஸ்பண்ட்டா இரு. காம்பிளிகேட் பண்ணி யோசிக்காத. இதகூட ஏன் சொல்றேன்னா, பவ்யாக்கு தான் உன் மேல லவ் இருக்கலாம். சுஹாக்கு கன்ஃபார்மா கிடையாது. அத வச்சுத்தான் சொல்றேன். இன் கேஸ் நான்லா பவ்யா இடத்துல இருந்தா இவ்வளவு நேரம் யோசிக்க கூட நீ உயிரோட இருந்திருக்க மாட்ட, உன் அதிர்ஷ்டம் பவ்யா அவ்வளவு தூரம் போகல. சரி வா இங்கயே இருந்து என்ன பண்ணபோற" என எழுப்பி அழைத்து வந்தாள். குழப்பமான மனநிலையிலேயே எழுந்து சென்றான்.

தூங்கி எழுந்தபின் சுஹா இப்பொழுது கொஞ்சம் தெளிஞ்சிருக்க, இவர்கள் வீட்டினுள் நுழையவும், "நீ இன்னும் இங்க என்ன பண்ற? இங்கயே இருந்துடலாம்னு முடிவே பண்ணிட்டியா?" என்றாள் விஷாகனிடம். "என்ன தான் நேத்தே ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சிருந்தாலும், சம்பிரதாயம்ன்னு ஒன்னு இருக்குல்ல, அதுக்கு தான் விஷா இன்னைக்கு இங்க இருக்கான்" என்றாள் பாப்பு.

"அப்ப என்னால உன்ன அடிக்க முடியல, தப்பிச்சுட்ட, இப்டியே பேசிட்டு இருக்கறதக்கு ஒன்ன" என துறத்த, சோபாவை சுற்றி சுற்றி ஓடினாள் பாப்பு, அங்கிருந்த டைரி, டிவி ரிமோட், பேனா பென்சில், என அனைத்தும் பறந்து வந்தது. விஷாகன் நின்று விழிவிரித்து வேடிக்கை பார்த்தான்.

"இங்க பாரு தப்பு பண்ணது நீ, அத ௭டுத்து சொல்ற கடம ௭னக்கு இருக்கு, நியாயமா நடந்துக்கோ" என ஓடினாள் பாப்பு. "தைரியம் இருந்தா நின்னு பேசுடி" என்றாள் சுஹா. "நாய் துரத்தும் போது, நின்னு ௭துத்தா, அது பயந்துரும் தான். அதுக்காக நாம எதுத்து நிப்போமா? ஓடதான செய்வோம்" என இழைக்க இழைக்க ஓடிக் கொண்டே பேசினாள். இப்பொழுது டைனிங் டேபிளை வட்டமடிக்க தட்டு டம்ளர் செம்பு எல்லாம் பறந்தது.

அந்த சத்தத்தில் உள்ளறையில் இருந்து மெய்யப்பன் வெளிவர, வடிவு மாடியில் காய போட்டிருந்த துணியை எடுத்து கொண்டு வந்தார், "என்ன செய்றீங்க பிள்ளைகளா, கஷ்டப்பட்டு இப்பதான் வீட்ட முழுசா ஒதுக்கிருக்கேன். ஓடிறுங்க ரெண்டு பேரும்" என துணியை சோபாவில் போட்டுவிட்டு வந்து சுஹாவின் கையில் இருந்தவற்றை பிடுங்கினார்.

"காய்ச்சல் சரி ஆயிடுச்சாம்மா" மெய்யப்பன் கேக்க, "காய்ச்சல்லா சரியாகிட்டுப்பா, ஆனா இவ கூடவே இருந்தா, எனக்கு பிபி வந்துரும்" சுஹா சொல்ல, "ஆல்ரெடி வந்திருக்கும் எதுக்கும் செக் பண்ணு" ௭ன்றாள் பாப்பு. "வாய கழுவுங்க, பிள்ளைகள பாரு, அதுல உன் எல்லோ டாப்பு கடக்கு ௭டுத்துட்டு கிளம்பு" என்றார் வடிவு.

"௭ங்க கிளம்ப?", "உன் புருஷன் வீட்டுக்கு போகல? தாலியை கட்டிட்டு இங்கேயே இருந்துக்கோன்னுட்டாரா?" என்க.

"ஓஹோ!இதுக்குத்தான் பக்கத்து இலைக்கு பாயாசம் மாதிரி என்னயவே கேட்டியா? " சுஹா நக்கலாக கேட்க.

"நா நாளைக்கு சிம்லா போறேன்டி, அதனால இன்னைக்கு வடிவு கூட இருக்க போறே அங்க வரலன்னு சொல்லிட்டேன்" என்றாள் இருவருக்குமாக.

"௭ல்லாத்தயும் நீங்களே முடிவு பண்ணுங்க, எதுதான் நம்ம பேச்ச கேட்டு இங்க நடக்குது, நீங்க எல்லாம் பெரிய பிள்ளையா ஆகிட்டீங்க. நாங்க சொல்றதுக்கு என்ன இருக்கு" என கண்ணை துடைத்து டைனிங் சேரில் அமர்ந்தார் வடிவு.

"நீ ஏன்மா அழுவுற, எதுவும் பிளான் பண்ணி நடக்கல. தன்னால நடக்கணும் இருக்கிறது தான் நடந்திருக்கு. என்ன நெனச்சு தான் அழுறனா, என்ன பாத்துக்க எனக்கு தெரியும், சோ டோன்ட் வேஸ்ட் யூவர் டைம்" என நகர்ந்தாள் சுஹா. "அப்போ அங்க நிக்கிறாரே, அவருக்கு என்ன பதில் சொல்லப் போற, இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய விட்டுட்டு வந்து என் பொண்ணோட வாழுங்கன்னு என்னால எப்டி கேக்க முடியும்?" ௭ன்றார் விஷாவை காட்டி.

"உன்ன யாரு அப்டி கேக்க சொன்னது, யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கனும்னு முடிவு பண்ண வேண்டியது அவன், அவனே அத பாத்துகட்டும்" என்க. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக வேடிக்கை பார்த்து நின்றான் விஷா.

"சரி சீக்கிரம் சீரியல முடிச்சிட்டு, சப்பாத்தி போட்டு குருமா வைம்மா சரியா, மதியமும் சாப்பிடல பசிக்குது" என்றாள் தள்ளி நின்ற பாப்பு. இப்பொழுது டம்ளரை தூக்கி எறிவது வடிவு முறையானது.

மறுநாள் காலை பதினோரு மணி சொன்னதுபோல் நேராக ஏர்போர்ட் சென்றே காத்திருந்தாள் பாப்பு. விஷாவும் உடன் இருந்தான்.

முந்தின இரவும் அவனை சுஹா அறையில் தள்ளி வெளியில் தாளிட்டு விட்டாள். சேரிலேயே அமர்ந்து விடியும்போது தூங்கி எழுந்து, இப்பொழுது அவளை திட்டிக்கொண்டே வந்திருக்கிறான். "இங்க பாரு, நீ ஒதுங்கி ஒதுங்கி இருந்தா அவளே வந்து பாவம் பார்த்து பேசுவான்னு நினைச்சேன்னா, நீதான் லூசு. பின்னாடியே போய் நீ தான் கெஞ்சணும், 4 நாள் அடிப்பா, 5 நாள் முறைப்பா, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தான் சாதாரணமா உன்ன பாக்கவே ஆரம்பிப்பா, ஒரு நாள் அங்க பவ்யாகூட தங்கு, ஒரு நாள் இங்க தங்கு, அப்றம் அங்க உனக்கு வேல இருக்குமான்னு தெரியல, வேற வேல தேடிக்க, பெட்டர்" ௭ன ௭ழுந்தவள் திரும்பி அமர்ந்து, "எனக்கு நீ என்ன முறைன்னு நா திரும்பி வாரதுக்குள்ளனாலும் கண்டு பிடிச்சு வை சரியா" என்க.

"எனக்கு வாயில நல்லா வருது, ௭தாது சொல்லிட போறேன், பேசாம இரு" ௭ன முனங்க, "ஏய் ௭ன்ன வாய் நீழுது" ௭ன இவள் அடிக்க பாய.

இரணியன் எப்பொழுதும் போல் பரபரப்புடனே வந்தான். சாதாரணமாக ப்ளூ டீசர்ட், ஜீன்ஸில் தான் இருந்தான். ஆனால் அவனுக்கு அவ்வளவு அழகாக இருந்தது. "செம்மையா இருக்கார்ல" பாப்பு சொல்ல சொல்ல.

"ஆமா, என்கிட்ட கூட இதே மாதிரி ஒரு செட் இருக்கு. ஆனா ஒருநாள் கூட அந்த டிரஸ் என்ன இவ்வளவு அழகாக காட்டல" என்றான் விஷாவும் அவனை பார்த்து இ யென இளித்து.

இருவர் பார்வையயும் கவனித்துக் கொண்டுதான் வந்தான் இரணியன். கண்ணைக் காட்டிவிட்டு நேராக செக்கின் செய்ய உள் சென்று விட தான் நினைத்தான். இருவர் முழியையும் பார்த்துவிட்டு, 'இன்னைக்கு ஃபுல் டே இங்க நின்னு அபிநயம் புடிச்சாலும் இதுகளுக்குப் புரிய போறதில்ல' என்ற முடிவுக்கு வந்தே இவர்களை நோக்கி நடந்தான்.

'முதல்நாள் தேடிய எல்லோ டாப் இதுவாகத்தான் இருக்கும்' என நினைத்து இதழ் பிரிக்காமல் சிரித்து கொண்டு தான் வந்தான். எல்லோ டாப் ப்ளூ ஜீன்ட்ஸ் அவள் பேக்பேக்கை மடியில் வைத்துக்கொண்டு அவன் நெருங்கி வருவது தெரியாமல் ஆ' வென பார்த்து கொண்டிருந்தாள். அவளை நெருங்கிய இரணியன், அவள் மடியில் இருந்த பேக்கை வெடுக்கென எடுக்கவும், மாய உலகில் இருந்து வெளி வந்து எழுந்து, "செமயா இருக்கீங்க சார்ம், அநியாயத்துக்கு அழகா இருக்கீங்க" என்றாள் அவனை நெருங்கி.

"ரொம்ப நன்றி மிஸஸ்.இரணியன். இப்ப கிளம்பலாமா பிளைட் அந்நௌன்ஸ்மெண்ட் வந்தாச்சு" என்றபின், வேகமாக தலையசைத்து ட்ராலியை இழுக்க, "அத நா செக்கின் பண்றேன், நீ இத போட்டுக்க" என அவளது பேக் பேக்கை அவளிடம் கொடுத்தான்.

"ரெண்டயும் நானே வச்சுக்றேன் சார்ம், நீங்க உங்க பேக் செக்கின் பண்ணிட்டீங்களா?", "ம், இப்பதான், நானு உள்ள போயிடலாம்னு தான் பாத்தேன், நீ உன்ன மறந்து உக்காந்திருக்கவும் இங்க வந்துட்டேன்", அவன் அவளை பற்றி சொன்னதை கிடப்பில் போட்டவள் "அப்ப நா போய் பேக் செக்கின் பண்ணிட்டு வந்துடுறேன்" என செல்ல.

விஷாவை திரும்பி பார்த்த இரணியன் "பாண்டில இருக்க ரிசார்ட்ட 3 டேஸ் ஒன்ஸ் போய் பாத்துக்க, அப்றம் அப்பாட்ட சொல்லிருக்கேன் உன் வேலைக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல, எல்லோருக்குமே இத அக்சப்ட் பண்ணிக்க கொஞ்சம் டைம் எடுக்கும். சோ வெயிட் பண்ணு, நாங்க ரிட்டர்ன் ஆக பதினைந்து டேஸ் கிட்ட ஆகும், எதுனாலும் போன் பண்ணு. டேக் கேர்" என அவன் தோளில் தட்டி விட்டு உள் சென்று மறைந்தான். இனி என்ன நடந்தாலும் நாமதான் மேனேஜ் பண்ணனும் ௭ன்ற முடிவுடனே வீடு திரும்பினான் விஷாகன்.

இரணியன் மேனேஜர் என்ற அடிப்படையில் பாப்புவின் செலவை பட தயாரிப்பாளர்கள் பார்த்துக் கொள்வர். அதேபோல் வைஃப் என அறிந்ததால் இருவருக்கும் பிஸ்னஸ் கிளாசில் அருகருகே டிக்கெட் போடப்பட்டிருந்தது. அடுத்த மூன்று மணி நேரத்தில் டெல்லி சென்று இறங்கினர். அங்கு காத்திருந்த ஒரு மணி நேரத்தில் அங்கு நிறைய பேர் வந்து அவனிடம் ஆட்டோகிராப், செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர்.

தமிழ்நாட்டிலாவது அவன் கல்யாணமானதும், அவன் அருகிலிருப்பது அவன் மனைவி என்றும் தெரியும், இங்கு யாருக்கும் அவளை தெரியாதே, அவனும் அவளும் கூட புதிதாக கல்யாணம் ஆன ஜோடிகள் போன்று கையைக் கோர்த்துக் கொண்டு நடக்காமல் தனித்தனியாகவே இருந்தனர். அதனால் அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவனை நெருங்கி நின்று எடுத்தனர், டீசண்டாக ஹக் செய்து எடுத்தனர், ஒரு பெண் கொஞ்சம் கூடுதலாக, "யூ லுக் சோ ஹாண்ட்சம், மே தும்சே ஷாதி கர்னா சாஃக்தா ஹூ(நா உங்கள கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசை படுகிறேன்)" என அவன் கன்னத்தில் முத்தம் வேறு வைக்க, "சாரி" என டீசண்ட் ஆகவே மறுப்பு கூறி வந்தமர்ந்தான். ஆனால் உள்ளுக்குள் உச்சபட்ச எரிச்சலில் இருந்தான். அந்தப் பெண் நாகரிகமாக கேட்கவே, இவனும் அமைதியாக பதில் சொல்லிவிட்டு வந்தமர்ந்தான். இதுவே கொஞ்சம் அத்துமீறி வற்புறுத்தியிருந்தாலும், பப்ளிக் என்றும் பார்க்காமல் கைநீட்டி இருப்பான்.

அவன் எரிச்சல் புரியாமல், "இந்தக் குடுப்பணையெல்லாம் உங்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். பொண்டாட்டிய பக்கத்துல வச்சிக்கிட்டு இன்னொரு பொண்ணு கூட லூட்டி அடிக்கிறது. கொடுத்து வச்சவங்க சார்ம் நீங்க" என்றாள், அது நக்கல் போலும் இருந்தது, வயிற்றெரிச்சல் போலவும் இருந்தது. எப்படியும் கேட்டா உண்மைய சொல்ல மாட்டா என அமைதியாகவே அமர்ந்துகொண்டான்.

அடுத்த பிலைட் ஏறி ஒரு மணி நேரத்தில் சிம்லா சென்று இறங்கினர். அவர்களை அழைத்துப் போக வந்த வண்டியில் ஏறி ஹோட்டல் சென்று இறங்க, படப்பிடிப்பு குழு மொத்தமும் கார்டனில் தான் இருந்தது. எல்லோரும் வந்து திருமண வாழ்த்து சொல்லி செல்ல, ஆர்கனைசர் வந்தார் "வாழ்த்துக்கள் சார், உங்களுக்கு ஸ்பெஷல் ரூம் அரேஞ்சு பண்ணிருக்கோம். நல்லா இருக்கும்னு நம்புறேன். தனி தனி ரூம் தான் போட்டுருந்தோம், நேத்துதான் அனௌன்ஸ்மென்ட் பாத்துட்டு அவசரமா ரூம் புக் பண்ண வேண்டியதா போச்சு. 8த் ப்ளோர் சார், கம்பர்டபிளா இல்லனா டூ டேஸ்ல வெக்கேட் ஆகும் சேன்ஜ் பண்ணி தரோம்னு ஹோட்டல் மேனேஜர் சொல்லியிருக்காரு" என்றான் படபடவென கோவித்து கொள்வானோ ௭ன பயந்து.

பாப்பு எதுவும் சொல்லி விடும் முன், "ஃபஸ்ட் புக் பண்ண ரூமா இருந்தாலும், வித் ஹெர் மீன்ஸ், ஐ லவ் தட் பிளேஸ் எ லாட் மேன்(மனைவி கூட இருக்க இடம் ௭துவா இருந்தாலும் ௭னக்கு பிடிக்கும்), எதுக்கு இவ்வளவு சிரமம்" என சொல்லி பாப்புவை பார்த்து கண் சிமிட்ட.

"ஹாய் பேபி, நா உன்ன இங்க ௭க்ஸ்பெக்ட்டே பண்ணல, பாத்து எவ்வளவு நாளாச்சு. ஹவ் ஆர் யூ டூயிங் பேபி" என வந்த ஒரு பெண் அவனை இறுக்கி அணைத்தாள்.
 
அத்தியாயம் 22
ஏர்போர்ட்டில் இருந்து விஷாகன் நேராக பவ்யாவின் தகப்பனாரை ஹோட்டலுக்கு சந்திக்க சென்றான். அவர் ஆபிஸ் ரூமிற்கு சென்று, கதவை தட்டி விட்டு காத்திருக்க, அவர் உள் அனுமதித்தார். "குட் மார்னிங் சார்" என்றவாறே உள் சென்றான், அவன் மனதோ '௭ங்கடா குட் மார்னிங்கா இருக்கவிட்டன்னு இ்ப்ப அவரு திருப்பிட்டு கேள்வி கேட்டா ௭ன்ன செய்வ' ௭ன கேக்க, அதற்கு பதில் சொல்லுமுன், "உட்காரு விஷா" என்றிருந்தார்.

'ஹப்பா வாய்ஸ் வைலன்ட்டா வரல' ௭ன நினைத்து ஆசுவாச பட்டுக் கொண்டு "சாரி சார், எனக்கு" என அவன் மேலும் இழுத்து தயங்க, "விடு விஷா நடந்து முடிஞ்சிருச்சு. இனி அத பேசி என்ன ஆகப் போகுது. போய் வேலைய பாரு. உன் வேலையில எந்த பிரச்சனையும் வர கூடாதுன்னு, ௭ன் மகேன் சொல்லிட்டு தான் போய்ருக்கான்" என்றார்.

'௭ன்ன இவரு நடந்தது ஏதோ பக்கத்து வீட்டு பிள்ளைக்குன்ற மாறி பேசுராரு' ௭ன நினைத்தாலும், "சாருக்காக வேணாம், உங்களுக்கு அப்டியாது எனக்கு தண்டனை குடுக்கணும்னு தோணுனா குடுங்க, நா ஏத்துக்றேன்" ௭ன்றான் பெருந்தன்மையாக, 'நீ செஞ்சு வச்சுருக்க வேலைக்கு, வேலைய விட்டு தூக்ரதுலா ஒரு தண்டனையாடா?'.

"நடந்ததெல்லாம் கேள்வி பட்டேன் விஷா, தண்டிக்கிறதுனா, அதுல இன்வால்வ் ஆன அத்தன பேரையும்ல தண்டிக்கணும். இரணியன் பவ்யாவ லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டு தான் கிளம்பிருக்கான். ௭வ்வளவு கஷ்டபட்டு அவ நேம் வெளில வராம வீட்லயே வச்சு போராடி அவள மீட்ருப்பான், இன்னும் ட்ரக்ஸ் காண்டாக்ட்ல இருக்கான்னா ௭ன்ன அர்த்தம். இப்டிப்பட்டவளோட நீயும் தான் எப்டி சராசரியான நிம்மதியான வாழ்க்கைய வாழ முடியும். அதனால பாதிக்கப்பட்ட அந்த பொண்ணுக்குனாலும் உண்மையாயிரு. இவளுக்கு அவ சந்தோஷம்தான் முக்கியம், மத்தவங்கள பத்தி கவலையே பட மாட்டா. அதனால நீ பாவம் பாத்து அவளுக்கு வாழ்க்க கொடுத்தத மறந்துட்டு, உன் வாழ்க்கைய வாழ பாரு, ஓகே? லீவ் ஹேர்" என்க.

"அப்டில்லாம் இல்ல சார், இனி லைப் லாங் அவ கூட தான்னு டிசைட் பண்ணி தான் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்". "நா சொல்றத சொல்லிட்டேன், அப்புறம் உன் இஷ்டம்".

'இவரு ஒருவேள நம்ம மேல உள்ள கோவத்துல வேண்டா வெறுப்பா பேசுராறோ போட்டு பாக்காறோ?' ௭ன நினைத்து கொண்டு, "சாரி சார்" என மூஞ்சை பாவமாக வைத்தே விடை பெற்றான்.

சற்றுநேரம் அங்கிருந்து அக்கவுண்ட்ஸ் செக் செய்துவிட்டு, ஓலா புக் செய்து பாண்டிச்சேரி கிளம்பிச் சென்றான். அங்கும் ரிசார்ட் கணக்கு வழக்குகளை செக் செய்ய, அப்-டு-டேட் கரெக்டாக வைத்திருந்தாள் பாப்பு.

'இவ்வளவு பிரச்சினையிலையும் இதையும் ஒக்காந்துருந்து பாத்து முடிச்சாச்சு, ௭வேன் ௭ப்டி போனா ௭ன்ன, நாம நம்ம வேலைய பாப்போம்ன்னு' என நினைத்து சிரித்துக் கொண்டான்.

அடுத்து எங்கு செல்ல? தனக்கென நண்பர்கள் கூட கிடையாது. இன்றுவரையும் தனக்கென யாருமே இல்லையே என்ற எண்ணத்தை மட்டும் அவனால் மாற்றவே முடியவில்லை. இத்தனைக்கும் எப்.பி ல் அவனுக்கு 6800 பிரண்ட்ஸ், அனைவரும் முகம் தெரிந்தவர்களே, ஆனால் இப்பொழுது மைண்ட் ரிலாக்ஸாக, சென்று பார்க்க அதில் ஒருவர் முகம் கூட நியாபகம் வரவில்லை. கடற்கரையில் அப்படியே அமர்ந்து கடலை பார்க்க ஆரம்பித்தான். எல்லார் கூறியதையும் நினைத்துப் பார்த்தான். யாரும் இவன் மேல் பெரிதான குற்றச்சாட்டை வைக்கவில்லை தான், இருந்தும் மனசு அடித்துக்கொண்டே தான் இருந்தது.

விஷாவுக்கு பவ்யாவிடம் அவ்வளவு ஒட்டுதல் இல்லை என்றாலும், சிறு பிடிப்பு மனைவி ௭ன்ற பெயரில் இருந்தது. அவள் அப்படித்தான் சுதந்திரவாதி என தெரிந்தேதான் கட்டிக்கொண்டான். இன்றளவும் அவள் பப், பார்ட்டி என சுற்றுவது அவன் அறிந்ததே, அடக்கி வைக்க அவன் முயலவில்லை.

மறுபக்கம் சுஹாவை நினைத்து பார்த்தான், 'தைரியமான பெண், இவ்வளவு பெரிய விஷயம் நடந்தும் அசால்டா, நா என்ன பாத்துப்பேன்னு ஒரே நாள்ல தெளிஞ்ச முடிவெடுக்க முடிஞ்சிருக்கே, என்னால ஏன் அப்டி முடியல? மெய்யப்பன் சார் எப்டி வளத்திருக்காரு மூணு பிள்ளைகளயும். நல்ல மனுஷன்! பேசாம அவர்ட்டயே ஐடியா கேட்டா என்ன?' என்ற முடிவுக்கு வந்திருந்தான். அன்றைய பொழுதை தனக்குத் தேவைப்பட்ட தனிமையால், இரு மனைவியையும் சென்று சந்திக்க முடியாமல் அங்கேயே தங்கிவிட்டான். யாருமே அவனையும் "எங்கே?" என தேடவில்லை பாவம்.

அங்கே பாப்பு, "ஒரே ரூம்" என்ற ஆர்கனைஷரிடம் இரணியன் விட்ட பீலாவில், 'என்ன செய்யலாம்?' என யோசித்துக் கொண்டிருந்தவள் மூளையை யோசிக்க விடாமல் செய்வதற்கென வந்து இரணியனை உரசிக்கொண்டிருந்தாள் பிங்கி.

பாப்பு அவளை குறு குறுவென பார்ப்பதை கண்ட, அந்த ஆர்கனைஷர், மெதுவாக பாப்புவை நெருங்கி, "அவுங்க பிங்கி, இந்த படத்தோட ப்ரொடுயூஷர் பொண்ணு" ௭ன்க, "ஓ!, அப்ப சார்ம் இங்க வாரது அவங்களுக்கு தெரியாது, ட்ரிப்காக வந்த இடத்துல அவர எதிர்பாக்காம பாத்ததுல, குசியாகி அவரு கழுத்த பிடிச்சு தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் சரிதானே?" ௭ன்றாள் இவளும் ரகசியமாக. வந்த சிரிப்பை அடக்கி குனிந்து கொண்டான் அந்த ஆர்கனைஷர்.

பிங்கியை கஷ்டப்பட்டு தள்ளி நிறுத்திய இரணியன், "நீ எப்டி இங்க?" என்க. "நா பிரண்ட்ஸோட ஒன் வீக் ட்ரிப் போட்டு வந்தேன். வந்த இடத்தில நீ சர்ப்ரைஸா இங்க நிக்கிற? ஷூட்டா? எத்தன நாள்?" என்றாள். "உனக்குத் தெரியாததா, அது ஷூட் முடியிறத பொறுத்து" ௭ன்றான் இரணியன்.

"ஓகே பேபி, பட் இங்க ஒன் டே எங்ககூட ஸ்பென்ட் பண்ணியே ஆகணும். சென்னையில தான் உங்கள பிடிக்க முடியல வந்த இடத்துலனாலும் ஒன்டே கால் சீட் கொடுங்க ப்ளீஸ்" என்று கொஞ்சி விட்டு அந்த பிங்கி கலகலவென சிரிக்க, தொண்டையை செருமினாள் பாப்பு.

திரும்பிப் பார்த்த இரணியன், "என் ஒய்ஃப் தான் என் கால்ஷீட் எல்லாம் பாத்துக்கிறாங்க, அவங்கதான் எதுனாலும் சொல்லணும்" என்றான் குறும்பு சிரிப்புடன்.

"ஆமா கேக்கனும்னு நினச்சேன், ஒய் பேபி திடீர் மேரேஜ். சொல்லாம கொள்ளாம பண்ணிட்டீங்க. எங்கள மாதிரி பெண்கள் ஹார்ட் உங்களுக்காக துடிச்சுட்டே இருக்கது தெரியலையா? ஒரு போன் பண்ணிருந்தா, நா ஓடோடி வந்து இருக்க மாட்டேனா?" என்றாள் இரணியன் கையை விடாமல், நாடக வசனத்தை பேசி அவனை கவர்வது போல்.

பொறுமையிழந்த பாப்பு, "ஆர்கனைசர் சார் நீங்க கொஞ்சம் ரூம் கீ வாங்கி தர்றீங்களா? நானாது போய் ரெஸ்ட் எடுப்பேன்" என்றாள். சிரித்த இரணியன், "என் பாஸ்க்கு கோவம் வந்துருச்சு, ஹனிமூன் வந்த எடத்துல அவங்க மூட் ஸ்பாயில் ஆகாம இருக்குறது எனக்கு முக்கியம், சாரி பிங்கி பை" என பாப்பு தோளில் கைபோட்டு ஹோட்டலினுள் நுழைந்து விட்டான்.

'ஹீரோவ கல்யாணம் பண்ணிட்டு பொசசிவ்னஸ் வேற வருதா? இது போதுமே வேல ஈசியா முடிஞ்சிடும் போலயே?' என சிரித்துக் கொண்டாள் பிங்கி.

"கண்டதயும் உளறாதிங்க சார்ம், நாம ஒண்ணும் ஹனிமூன் வரல, நா உங்க மேனேஜரா தான் வந்துருக்கேன். ஃப்ஸ்ட் தனித் தனி ரூம் கேளுங்க" ௭ன்றாள் லிஃப்ட்டினுள் நுழைந்ததும். "ஹவ் இஸ் தட் பாஸிபில். நீயே பிரேக்கிங் நியூஸ்க்கு ஹிண்ட் குடுப்ப போலயே? ஏன் நீ தான் கராத்தே கிட் ஆச்சே, எதுக்கு பயப்படுற".

"எனக்கு ஒன்னும் பயம் இல்ல, சூட்டிங் வந்த இடத்துல, நா என் நெயில், டீத்லா யூஸ் பண்ணி உங்களுக்கு பேஷ்மார்க்கு வர வேணாம்னு யோசிக்கிறேன்" ௭ன்க. "ஆஹான், அப்ப ௭ல்லாத்துக்கும் ரெடியா தான் வந்துருக்க" என அவளை மேலும் நெருங்க. "எதுக்கு ரெடியா வந்துருக்காங்க? அன்னைக்கு ஊட்டியில கேரவன்ல வச்சுக் கன்னத்துல கடிச்சு மார்க் ஆனதுக்கு மூஞ்ச தூக்கிட்டு திரிஞ்சீங்க தான. அப்டி மார்க் வேணுமானு கேக்குறேன்" ௭ன்றாள் நெருங்கியவனை பின்னால் தள்ளி.

"நீ குடுக்குற மார்க்கா இருந்தா அது எப்டி இருந்தாலும் ஓகே தான்" என்றான் லிஃப்ட்டை விட்டு வெளியேறி சிரித்து கொண்டே. அவள் நின்று சுற்றி எதையோ தேடினாள், பின்னால் அவள் வரவில்லை ௭ன்றதும் திரும்பியவன், "என்ன தேடுற?" ௭ன்க, "இல்ல கேமரா இருந்தா தான இப்டி சினிமா வசனமா பேசுவீங்க, அதான் யாராது கேமராவோட நிக்றாங்களான்னு தேடுறேன்". "நா பேசுறது உனக்கு சினிமா வசனம் மாறி தெரியுதா?" என ௭ட்டி அவள் தோளில் நறுக்கெனக் கிள்ளினான். அவளும் பதிலுக்கு கிள்ள அவர்கள் அறை வந்திருந்தது.

வீடு போல் தான் அழகாக இருந்தது, லிவிங் ரூம், பெட்ரூம், பால்கனி, சிங்கிள் பாத்ரூம் ௭ன. பாப்பு உள்ளே நுழைந்ததும் பெட்ரூமை தேடிப்பிடித்து ஓடி சென்று படுத்துக் கொண்டாள். அவன் எல்லா ரூமையும் சுற்றிப் பார்த்தான். ஹாலில் மட்டும் கேமரா இருந்தது. பெட்ரூமையும் செக் செய்து இல்லை என்றானபின் ரிலாக்ஸ் ஆனான். ரூம்பாய் வந்து அவர்களின் லக்கேஜை கொடுத்துவிட்டு செல்ல, தன்னதை மட்டும் எடுத்துக்கொண்டு பிரஷ்ஷாக சென்றான், ௭ப்படியும் சண்டைக்கு வருவாள் ௭ன்றெண்ணியே.

அவன் பாத்ரூமினுள் நுழையவும், அவன் மொபைல் அடிக்கவும் சரியாக இருந்தது, அவன் ௭டுக்கவில்லை ௭ன்றதும் நிமிர்ந்து கண்ணை திறந்து பார்த்தவள், "கொஞ்ச நேரம் படுத்தா பொறுக்காதே" ௭ன எழுந்து சென்று எடுத்தாள். "ரெண்டு மணிக்கு சூட் சார் கேரவன் கீழ ரெடியா இருக்கும்" என்று விட்டு வைக்கப்பட.

"மணி தான் ஒன்னாச்சே" என சலித்து கொண்டவள் தன் சூட்கேஸை தேட, அது வெளியில் அனாதையாக கிடந்ததை கண்டு கடுப்பாகி அவனதை எடுத்து வந்து வெளி ஹாலில் வைத்து விட்டாள்.

பின் தனக்கு தேவையானதை எடுத்து விட்டு பாத்ரூம் தேட அது ஒன்றுதான் இருந்தது. "ஒரு பாத்ரூம் தான் இருக்கு, ௭ன்ன ஹோட்டல் இது" ௭ன பல்லை கடித்து ஹோட்டல் முதலாளியை தன்னால் முடிந்த மட்டும் திட்டிவிட்டு, மெதுவாக அவளதை தூக்கி கப்போர்டில் வைத்தாள்.

"ஹே ௭ன் ஸூட்கேஸ ௭ங்க?" ௭ன்றான் பின்னிருந்து, "௭ன்னித ௭ங்க விட்டுட்டு வந்தீங்களோ அங்க தான் இருக்கு", "இடியட், ௭துக்கு வெளில கொண்டு வச்ச, போய் ௭டுத்திட்டு வா" ௭ன்றான் அதட்டுவது போல், "அதான் வந்துட்டீங்களே நீங்களே எடுத்துக்கோங்க. 2க்கு கேரவன் ரெடியாகிடும்" என்று விட்டு பாத்ரூமில் சென்று மறைந்தாள். அவள் சண்டை போடுவாள் ௭ன ௭திர்பாத்தானோ?

'ஒரே ரூம்ன்றதால் கொஞ்சம் ரெஸ்ட் லெஸ்ஸா இருக்காளோ?' ௭ன இவன் நினைத்துக் கொண்டிருக்க, போன வேகத்தில் திரும்பி வந்தவள், அவள் பேக்கில் இருந்த டேப்லட்டை எடுத்து "அட்ரா அட்ரா நாக்க முக்க" பாட்டை அலறவிட, "ஏன்மா இவ்வளவு சவுண்ட். காது கேட்காதா உனக்கு?" என கத்தி கேட்டான் இரணியன்.

"உள்ள விழுற தண்ணி சத்தத்த பீட் பண்ணி கேட்கணும்ல அதுக்குதான் ஓ.கே. தூக்கிப் போட்டு உடச்சுராதீங்க, இனி எத உடைச்சாலும் நீங்கதான் பே பண்ண வேண்டியிருக்கும்" என தானும் கத்தி சொல்லி விட்டு பாத்ரூமினுள் நுழைய.

இவன் "இவ ௭ங்க திருந்த" ௭ன பெட் ரூம் கதவை சாத்திவிட்டு ஹால் சென்று ஃபுட் ஆர்டர் செய்துவிட்டு அங்கு அமர்ந்து கொண்டான். திரும்பிப் பார்த்த பாப்பு, "இதுக்கு தான் தனி ரூம் கேட்டப்பயே அலெர்ட் ஆகியிருக்கணும்" என்று விட்டு சென்றாள்.

பின் கிளம்பி சாங் சூட்டிற்கு ஜக்கு கிரீன் வேலி என சென்றனர். அங்கு டேன்ஸ் ரிஹர்ஸல் நடக்க, பாப்பு பொறுமை இல்லாமல், "நாலு ஸ்டெப்ப திரும்பத் திரும்ப போடுறாங்க, இதுக்கு நடுவுல 400 தடவ டச்சப் வேற இதுக்கு மேல இங்க இருந்தா என்னத்த ஸ்டெப் போடுறீங்கன்னு எந்திரிச்சு நாம ஆட போனாலும் போயிருவோம்" என எழுந்து காலாற நடக்க ஆரம்பித்தாள்.

சற்று தூரத்திற்கு அவர்கள் பாட்டு சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. சற்று மேடாக இருந்த இடத்தில் வந்து நின்று அந்த இடத்தை சுற்றி பார்த்தாள், எங்கும் பச்சைபசேலென பார்க்கவே ரம்மியமாக இருந்தது. 4, 5 செல்ஃபிகளை கிளிக் செய்து கொண்டு அதில் நல்லா இருக்கும் இரண்டை பிரண்ட் லிஸ்டில் இருந்தவர்களுக்கு ஃபார்வேர்ட் செய்தாள்.

அதற்கு ஐசுவிடம் இருந்து வடிவேல் மானங்கெட்ட கேள்விகளை கேட்கும் ஸ்டிக்கராக வந்து விழ. "ஏய் என்னடி திமிரா வந்தேன்னா வாய ஒடச்சிடுவேன்" என டைப் செய்தாள். அதற்கு மேல் பொறுமை இல்லாமல் கால் செய்து டைரக்டாக திட்டுவோம் என கால் செய்ய, இவளுக்கு முன்னால் அவள், "என்ன சார்ம் பொண்டாட்டி இந்த உலகத்துல தான் இருக்கியா? இல்ல உன் ஆத்துக்காரர் செவ்வாய் கிரகத்துக்கு கூட்டிட்டு போய்ட்டாரா?" என்க.

"நீ எல்லாம் ஃபிரண்டா? நாட்ல என்னல்லாம் நடக்குதுன்னு ௭தாது தெரியுமா? சும்மா திண்ணுட்டு திண்ணுட்டு தூங்க தான் லாய்க்கு, எதயாவது போன் பண்ணி விசாரிச்சியா? என்னவோ நல்லவ வேஷம் போடுற? அந்த பப்ளி கூட எனக்கு போன் பண்ணல. அவளுக்கும் இருக்கு ஒரு நாளு".

"நீ எல்லாம் மனுஷியாடி? பிரண்ட்ஸ்னா அவங்கவங்க கல்யாணத்துக்கு போன் பண்ணி இன்வைட் பண்ணுவாங்க, பிரேக்கிங் நியூஸ்ல இன்வைட் பண்ணவ நீயா மட்டும் தான் இருப்ப. சரி விசாரிப்போம்னு போன் பண்ணா ஒருநாளும் உனக்கு கால் போகல, சரி பெரிய இடத்துல சிக்கிக்கிட்ட நம்பர மாதேதிருப்பன்னு நெனச்சா, மறக்காம வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் மட்டும் அப்டேட் ஆகுது. என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல நீ?" என எகிறினாள் அந்த ஐஸ்குச்சி.

பிளாஷ்பேக்கை ஒட்டிப் பார்த்தாள் பாப்புக்குட்டி, இரணியனை முதல் முறை பார்த்த பொழுது இவளுக்கு தான் கால் செய்து சொல்ல, அவள் நம்பாமல் போனை வைத்து விட, அந்த கடுப்பில் ஐஸ் நம்பரை பிளாக் லிஸ்டில் தூக்கிப் போட்டுவிட்டிருந்தது ஞாபகம் வர, 'அவசரப்பட்டு இப்ப கால் பண்ணிட்டோமே எப்டி சமாளிக்க?' என யோசித்தவள், "ஏன் நா போன் எடுக்கலைன்னா நீ நேர்ல வந்து பாக்க மாட்டியா? அவ்ளோ பெரிய ஆளா நீ?" என்க.

"உன்ன கொன்றுவேன் பாத்துக்க, நீ ஊட்டி சூட்டுக்கு சொல்லிட்டா போன? எனக்கு எப்டி தெரியும். வீட்டுக்கு வந்தப்ப ஆண்ட்டி தான் சார்ம்ட்ட நீ வேலைக்கு சேந்தது, பெர்மென்ட்டா அவரோட செட்டில் ஆனது வரைக்கும் சொன்னாங்க. ஒரு ஆட்டோகிராப் வாங்கி தந்தியாடி நீ? எத்தன டைம் அவர் படத்துக்கு டிக்கெட் கிடைக்காம எவென் எவென் கையில கால்ல விழுந்து ப்ளாக்ல டிக்கெட் வாங்கி குடுத்துருப்பேன் எல்லாத்தயும் அவரப் பாத்ததும் மறந்துட்டல்ல நீ" ௭ன ஐஸ் அழ தயாராக.

காதை விட்டு சற்று தள்ளி போனை பிடித்துக்கொண்டு, "நீ பேசி முடி அப்புறமா நா பேசுறேன்" என்று சொல்லிக்கொண்டு, இவளிடம் பேசிக்கொண்டே பாப்பு சற்று தூரம் இறக்கத்தில் வந்திருக்க, ஏதோ வித்தியாசமான சத்தம் வர, சுற்றி முற்றி பார்த்தாள், இன்னும் கொஞ்சம் இறங்கி வலது பக்கத்தில் ஒரு குறுகிய ரோடு செல்ல அதில் சற்று எட்டிப் பார்க்க இரண்டு பேர் சற்று தொலைவில் நடந்து போவது தெரிந்தது.

அங்கு பேசி கொண்டிருந்தவளோ பாப்பு போனை கட் செய்தது கூட தெரியாமல் பேசி கொண்டிருந்தாள்.

"வேற ஏதோ சின்னப்பிள்ள முனங்குற சத்தம் கேட்டதே" என வந்த வழியில் திரும்ப போக, யாரோ யாரையோ அடிப்பது போல் கேட்க, திரும்பி, அங்கு நடந்து சென்றவர்களை என்ன சத்தம் என்பது போல் பார்த்தாள். இருவருக்கும் நடுவில் சற்றுமுன் செல்பவன் யாரையோ தூக்கிச் செல்வது போல் தெரிந்தது. அதுவும் பெண் போல் இருக்க, நம் பாப்புவிற்குள் தூங்கி கொண்டிருந்த சிங்கம் விழித்து விட, வேகமாக ஃபாலோ செய்ய ஆரம்பித்திருந்தாள்.

நாலைந்து கற்களை எடுத்து வைத்துக்கொண்டு பின் நடந்த இருவர் மண்டையிலும் போட, அது ஒருவனுக்கு மண்டையிலும், இன்னொருவனுக்கு தோளிலும் விழுந்தது. இருவரும் "யாரோ வாரங்கன்னு நினைக்கிறேன் ஓடி மறைங்கடா" என பேசிக்கொண்டு மூன்று திக்கும் ஓட, பெண்ணைத் தூக்கிக் கொண்டு ஓடியவன் திசையில் தானும் ஓடினாள் பாப்பு.

ஒரு ரெண்டு கிலோ மீட்டர் போல் ஓடிய பின் அவன் நின்றுவிட, "என்ன நின்னுட்டான், ஹீரோ வில்லன தனியா தள்ளிட்டு வந்துட்டு கெத்தா சிரிப்பானே அது மாதிரியே இருக்கே இவன் லுக்கு, என்னவாயிருக்கும்" என்று சுற்றிப்பார்க்க, தப்பித்து ஓடிய இரண்டு பேரும் வேறு வேறு திசையிலிருந்து அந்த இடத்தை அடைந்தனர்.

நம் பாப்புக்குட்டி அப்போதும் அசராமல் "வாங்கடா பாத்ரலாம்" ௭ன கராத்தே போஸ் காட்டி தயாரானாள். ஒருவன் பின்னிருந்து அவள் கழுத்தை இறுக்க விலாவில் குத்தி அவன் கழுத்தை தன் கழுத்து வழியே முன்னிழுத்து அவனது சில்லு மூக்கை ஒரே குத்தில் உடைத்தாள். அவனோ வழியில் இவள் கழுத்தை விட்டுவிட, அடுத்த அடிக்க வந்தவனின் கையை தடுத்து, அவன் மெயின் சுட்ச்சில் ஒரு எத்து விட அவன் சுருண்டு விழுந்தான்.

மூன்றாமவன் தூக்கி வைத்திருந்த பெண்ணை கீழே பொத்தென்று போட்டுவிட்டு இவளிடம் வர, "பெரிய பாகுபலியாடா நீ, தூக்குன கல்ல கீழே இறக்க மாட்டேன்ற மாதிரி தூக்கிக்கிட்டே ஓடுற. பாவம் அந்த புள்ள, இப்ப பொத்துன்னு வேற கீழே போட்டான் உன்ன" என அவனிடம் மல்லுக்கட்டி அவன் பல்லையும் உடைத்துவிட்டு அந்த பெண்ணை நெருங்கி திருப்பினாள்.

அது பெண்ணே இல்லை பொம்மை. "அடப்பாவி, அதான் ஈசியா தூக்கிட்டு திரிஞ்சியா? ஸ்கெட்ச் போட்டு நம்மள தான் தூக்கிட்டாங்க போலயே" என திரும்பினாள், கூட இருவராக இப்பொழுது அங்கு அவளைச் சுற்றி ஐவர் நின்றனர்.
 
அத்தியாயம் 23
நிமிர்ந்த பாப்பு விறைப்பாக நின்ற ஐவரிடம், "எத்தன பேர் வந்தாலும் என்னால சமாளிக்க முடியும், வா ஒன் டு ஒன் பாத்துரலாம்" என 3/4த் சுடி கையை முறுக்கிக் கொண்டு முன் வர.

அவன்களுக்கும் "பான்ச் லட்கோ கோ சாம்னே தேக்கர் பி லட்கி கப்ராய் நகி" ('என்ன அஞ்சு பேர பாத்தும் பயப்படாம சண்டைக்கு வர்றா') என நினைத்து மிரண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, முன் நின்ற ஒருவனின் சட்டையை எட்டிப் பிடித்து இழுத்து அவன் கன்னத்தில் பளார் பளார் என அறைந்தாள்.

அடிக்கும்போதே, "என்ன எதுக்குடா கடத்துனீங்க? அதுவும் தமிழ்நாட்டுல இருந்து இங்க வர பாலோவ் பண்ணி வந்து கடத்த ட்ரை பண்றீங்க. யாரு அனுப்புனது உங்கள, நீங்களா ஒத்துகிட்டா நல்லது, இல்ல?" என அவள் போக்கில் கேட்டுக்கொண்டே இருக்க, சுதாரிக்காமல் இருந்ததால் முதலில் 4 அடி வாங்கி விட்டவன், இப்போது அவள் கையை பிடித்து பின்னால் முறுக்க, தன் ஸ்லிப்பர் கொண்டு அவன் காலில் நறுக்கென மிதித்தாள்.

அடுத்த நிமிடம் அவன் வழியில் விட்டுவிட, இன்னொருவன் வந்து அவளை மடக்கி பிடித்துக்கொண்டு, மற்றொருவனிடம், "பகுத் அபிமானி லடுக்கி லக்தா ஹை. ஜித்னா ஜல்தி ஹோ சகே உஸ்க்கே சகரே பர் அனஸ்தட்க் ஸ்ப்ரே கரே" (ரொம்ப திமிர் பிடிச்சவ போலடா சீக்கிரம் அந்த மயக்கமருந்த தெளி)என்க.

மற்றவன் ஸ்ப்ரே எடுக்க, பாப்பு நால்வரிடமும் மல்லுக்கட்ட ஆரம்பித்து, "அடேய் நீங்க தமிழ்நாடு கிடையாதா? ஆள் மாத்தி கடத்துறீங்கன்னு நினைக்கிறேன், லூசு பயலுகளா நா பேசுறது புரியுதா உங்களுக்கு. தமிழ் பொண்ண கடத்த வரையில ஒருத்தன்னாலும் தமிழ் தெரிஞ்சவனா வரக்கூடாது" என இவள் பேசிக்கொண்டிருக்க, ஸ்பிரேயை எடுத்தவன் அவள் வாயையே பார்க்க, "முண்டம் என் வாயில என்ன படமா ஓடுது, பதில் பேசுடா டாக்" என்றாள்.

அதற்குள் அவர்களில் ஒருவன், "கியா தேக் ரகி ஹூ? ஜல்தி கரோ" (என்னடா வேடிக்கை சீக்கிரம்), என்க. மற்றவன் தெளிக்க போகையில் இரணியனின் பாடிகார்ட்ஸ் அந்த இடத்தை அடைந்தனர். அடுத்து அவர்கள் பார்த்துக் கொள்ள.

முறைத்து நின்ற இரணியனை நோக்கி சென்றவள், "நானே அவனுங்கள ஒரு கை பாத்துருப்பேன், இது மாதிரி அஞ்சு பேருல்லாம் மொத்தமா வந்து என்கிட்ட சிக்கினதே இல்ல, இன்னைக்கு தான் கிடைச்சாங்க, அதுவும் மிஸ் ஆயிடுச்சு☹️" என்றாள் சோகமாக. அவன் அப்போதும் முறைக்க, அதை கிடப்பில் போட்டவள், "ஏன் சார்ம் பொதுவா ஹீரோயினிக்கு இப்டி ஆபத்துன்னா ஹீரோ தான பாஞ்சு பாஞ்சு சண்ட போடுவாங்க, நீங்க ௭ன்னன்னா அந்த உம்மனா மூஞ்சிகள அனுப்பிட்டு நிக்கிறீங்க டு பேட்" என்க.

"உனக்காக தான் அவங்க ஃபைட் பண்ணிட்டுருக்காங்க, உம்முனா மூஞ்சின்ற", "நானும் ரெண்டு மாசமா பாக்குறேன், இன்னைக்கு வர ஒரு வார்த்த பேச மாட்டேங்குறாங்க, நா என்ன பேசுனாலும் மாயாபஜார் விஐபி செல கணக்கா நிக்கிறாங்க, ௭ன்ட்ட பேசாதவங்க ஒன்னும் எனக்காக சண்ட போடவேண்டாம் கூப்பிடுங்க அவங்கள".

"ம் கூப்ட்டு, உன்ன அவங்கட்ட பிடிச்சுக் கொடுக்க சொல்றேன்". "அப்டி எல்லாம் என்னைய ஈசியா தூக்கிட்டு போயிட முடியாது. ஆக்சுவலா அவங்க ஆள மாத்தி துக்க ட்ரை பண்ணிருக்காங்கன்னு நினைக்கிறேன். ஹிந்தில பேசுறாங்க, எனக்கு நார்த் இந்தியன்ஸ் ஸைடுலல்லாம் எனிமிஸ் இருக்க வாய்ப்பில்ல".

"லூசு லூசு" என திட்டி விட்டு அவன் வந்த வழியில் திரும்பி நடக்க, "சார்ம் சார்ம், நில்லுங்க நீங்க எப்டி கரெக்டா வந்தீங்க. அவனுங்கட்ட நல்லா விசாரிச்சு யார கடத்த ட்ரை பண்ணாங்கன்னு கேளுங்க, சம்பந்த பட்டவங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணி கவனமாயிருக்க சொல்லுவோம். ஆமா உங்க பாடிகார்டுக்கு ஹிந்தி தெரியுமா?" என்றாள் இறுதியில் சந்தேகமாக. என்னவோ நீ பாட்டுக்கு லூசு மாதிரி பேசுன்னு அவன் நடந்து விட்டான்.

மேட்டில் மற்ற கூட்டமும் இவர்களுக்காக காத்து நின்றது. முன்சென்ற இரணியன் அவர்களிடம் ஏதோ சொல்ல, எல்லோரும் பணிக்கு திரும்பினர். பின் இவளை திரும்பி முறைத்துவிட்டு கேரவனுக்குள் செல்ல, "இவரு கண்ணுல சைகை காட்டியதும் பின்னாடியே போயிடனுமோ. ௭த்தன கொஸ்டின் கேட்டேன் ௭துக்காது பதில் சொன்னாரா, போட்டும், பத்து நிமிஷம் கழிச்சே போவோம்." என நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, வாட்சில் பத்து நிமிடம் கடந்தது விட்டதா என சரி செய்துவிட்டே கேரவனிற்கு சென்றாள்.

இரணியன் கண்ணை மூடி சோபாவில் சாய்ந்து அமர்ந்திருக்க, "என்ன தவத்துக்கு போயிட்டாரு, எழுப்பினா சாபம் கொடுப்பாரோ?" என நினைத்துக் கொண்டு அவனையே பார்த்தாள். முகத்தை சுளித்து கண்ணை மூடி இருக்க, மற்றபடி அவன் முகத்தில் எப்போதும் இருக்கும் ஒரு தேஜஸ் அப்படியே இருந்தது.

"சோ க்யூட் சார்ம், எப்டி இப்டி மேக்னட் மாதிரி இழுக்குறீங்க, உங்கள இவ்வளவு கிட்ட பாக்குறதுலா கனவு மாதிரி தான் இருக்கு. ஆனா மிராக்கிள் ௭ன்னன்னா நீங்க என் ஹஸ்பண்ட். ரிமைனிங் இருக்கிற நாற்பது ஐம்பது வருஷமு உங்களோட ததான் நினைக்கும் போது ஓஹ் காட் சலிக்காம இந்த பேஸ் பாத்துட்டே இருப்பேனே என் செல்லம்" என காற்றில் அவன் கன்னத்தை கிள்ளி முத்த.

அவன் அல்ரெடி கண்ணை திறந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தான் அவள் செய்கைகளை ஒரு குறும்பு சிரிப்புடன்.

"இப்டி சிரிக்கும் போது எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்குது சார்ம்". "சரி என்ன சைட் அடிச்ச வர போதும். எதுக்கு அங்கப் போன?" ௭ன விசயதிற்கு வந்தான். "ஐஸ்ட்ட பேசிட்டே, அச்சோ அவள அப்டியே கட் பண்ணிட்டேன். ஏற்கனவே திட்டிட்டுருந்தா. இதுக்கு வேற சேர்த்து பேசுவா".

"உன்ன விட அதிகமாகப் பேசுமோ அந்த பொண்ணு? நீயே பயப்டுற அளவுக்கு?" ௭ன்றான் நக்கலாக, "இல்ல இல்ல பொதுவா நா அவளப் பேச விடுறதில்ல. இந்த டைம் தான் நிறைய பேசிட்டா". "பயங்கர நேர்மதான் நீ". "எஸ் ஆல்வேஸ்".

"சரி பேசிட்டே காட்டுக்குள்ள போயிட்டியா?" ௭ன கதை கேட்டான்(அவள்ட்ட அப்டி தானே கேக்க வேண்டியிருக்கு). "இல்லயே அவன் அந்த பொண்ண தூக்கிட்டு ஓடுனானா?”

" ௭ந்த பொண்ண?" இரணியன் நடுவில் கேக்க, "அது பொண்ணே இல்ல பொம்ம, ஆனா அத பாக்க பொண்ணு மாதிரிதான் இருந்தது அதான்" பாப்பு இழுக்க, "அந்த பொம்மய காப்பாத்த பாலோவ் பண்ணி போய் அவங்க வச்ச பொறில நீ சிக்கிட்ட".

"இல்ல இல்ல அவங்க வேற யாருக்கோ..". "இடியட். தட்ஸ் பார் யூ இடியட்" என்றான் காட்டமாக.

"எப்டி சொல்றீங்க?” அவன் மொபைலுக்கு சற்று முன் வந்த ஆடியோவை போட்டு காமித்தான். அதில் ஒருவன், "சார் இட்ஸ் டன் பை ஆகாஷ்(மேனேஜர்). வி ஹேண்ட் ஓவர் தெம் டு சிம்லா போலீஸ்" என்று இருந்தது.

"இப்ப பேசுறது யாரு?" ௭ன்றாள் கேள்வியாக பாப்பு, இரணியன் முறைக்க, "சொல்லுங்க சார்ம், ஒரு ஜி.கே கு தான் கேக்குறேன்". "பிரகாஷ் பாடிகாட்". "வாய்ஸ் நல்லா தானே இருக்கு, அப்புறம் ஏன் பேச மாட்டேங்குறாங்க?"

"லூசு இப்போ அதுவா முக்கியம்? அவன் சொன்ன விஷயத்த கவனிச்சியா?" இரணியனுக்கு பொறுமை போய் கொண்டிருந்தது.

"ஆமா யார் அந்த ஆகாஷ்?" அடுத்ததாக அவள். "இதல்ல நீ ஃபர்ஸ்ட் கேட்டிருக்கணும். அவன் நேம் கூட தெரியாமலா அடிச்ச?” "இவன் எப்ப எதுக்கு என்ட்ட அடி வாங்குனானாம்?”

இரணியன் டயர்டாகி விட்டிருந்தான். அப்படியே மறுபடியும் சாய்ந்து அமர்ந்து விட, "ஐயோ சார்ம் முழுசா என்னன்னு சொல்லிட்டு தவத்துக்கு போங்க, அப்பத்தான் நா உங்கள டிஸ்டர்ப் பண்ற சுவிட்ச்வேஷன் இருக்காது ப்ளீஸ்".

"ஃப்ஸ்ட் கெட் மி கப் ஆஃ காஃபி ப்ளீஸ்" என்றான். இவள் இறங்கி சென்று பிளாஸ்கில் வாங்கி வந்து அவனிடம் நீட்ட, வாங்கி அமைதியாக பருகி முடித்தவன், "ஹோட்டல்-இன் மேனேஜர் ஆகாஷ். உன் ப்ரண்ட்கிட்ட தப்பா நடந்துகிட்டான்னு அடிச்சியே, நா வேலைய விட்டு தூக்கினேன். உன் அக்கா உள்ள புடிச்சு போட்டாங்க, இப்ப வெளிய வந்ததும் மூணு பேரையும் பலி வாங்க உன்ன கடத்துனா போதும்ன்னு கடத்திருக்கான். அதும் இங்க வச்சு நடந்தா அவன்மேல சந்தேகம் வராதுன்னு பண்ணிருக்கான். சென்னையிலயும் இப்ப கம்பளைண்ட் ரிஜிஸ்டர் பண்ணியாச்சு. அவன தூக்கியாச்சு, இருந்தாலும் இனி கேர்லஸ்ஸா இல்லாம, கவனமா இரு. உன் ஓவர் கான்ஃபிடன்ஸ் தூக்கி டஸ்ட்பின்ல போடு. பி அலெர்ட் ஆல்வேஸ்" எனக் கூறி முடித்து இறங்கி சென்றுவிட்டான் அடுத்த ஷாட்டுக்கு.

'என்ன வந்தாலும் இந்த பாப்பு சமாளிப்பான்னு எப்படி புரிய வைக்கிறது' என்றவள், "ஐயோ சார்ம் நீங்க எப்டி அங்க வந்தீங்கன்னு சொல்லவே இல்லயே" என இறங்கி அவன் பின்னால் ஓடி பிடித்து நிறுத்தி கேட்க, "நீ இங்கிருந்து நகரவுமே, ஒருத்தர் உன்ன பாலோவ் பண்ண ஆரம்பிச்சாச்சு, உன்ன டைவர்ட் பண்ணவங்க அவனயும் அடிச்சுட்டாங்க, பாடிகார்ட்ஸ்க்குள்ள கோடு உண்டு ஒருத்தருக்கு எமர்ஜன்ஸினா மத்த எல்லாத்துக்கும் அலெர்ட் போயிடும். அப்டி தான் நாங்க அங்க ரீச் ஆனோம்".
"ஓஹோ!"

"நீ ஹோ போட்டுட்டிரு எனக்கு ஆல்ரெடி டூ ஹௌர்ஸ் ஷாட் டிலே ஆயிடுச்சு. இனினாலும் என் வேலைய டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா நல்லாருக்கும்" என ஷாட்டை முடித்து குடுக்கச் சென்றான்.

"போட்ட ஸ்டெப்பையே திரும்ப திரும்ப போடுறதுக்கு இவ்வளவு பில்ட்டப்" ௭ன தானும் முறுக்கிக் கொண்டாள். அங்குள்ளவர்களிடம் இவள் வழி தவறி சென்று விட்டதால் அழைத்து வர சென்றதாக சொல்லப்பட்டிருந்தது.

விஷாகன் அடுத்த இரண்டு நாட்களை பாண்டியில் தான் கழித்தான். "யாராது தேடுனா போயிக்கலாம்" என அங்கேயே இருந்து விட, ஒருவரும் அவனை தேடவில்லை.

பவ்யா அப்பா மட்டுமே, "என்ன விஷா உன்ன தான் வேலைக்கு வான்னு சொன்னனே, ஏன் வரல? என்னாச்சு?" என விசாரித்த பின் 'நாளை வருவதாக' சொல்லி வைத்தான்.

அந்த கடற்காற்று, மணல், மாலை வெயில் அவனுக்கு சுகமாக இருக்க அப்படியே அதில் படுத்து விட்டான். அங்கு, சுஹாசினி அந்த ரிசார்ட்டிற்கு ஒரு கிளையன்ட் வர சொன்னதற்காக வந்திருந்தாள். கடலைப் பார்த்தவாறு இருந்த ரெஸ்டாரண்டில் தனக்காக காத்திருந்தவர் முன் வந்து, ஒரு "ஹாய்" உடன் அமர்ந்தாள்.

அப்போதே விஷாகனை கண்டுவிட்டாள் தான், ஆனாலும் பெரிதாக கண்டு கொள்ளாமல் வந்த வேலை விஷயமாக பேச ஆரம்பித்திருந்தாள். ஸ்னாக்ஸ் வித் காபியுடன் அந்த மீட்டிங் 45 நிமிட பேச்சில் முடிவுக்கு வந்தது.

விடைபெறும் முகமாக சுஹா எழ. "வெட்னெஸ்டே எப்டியும் கேஸ் பினிஷ் ஆகிடும்ல?" ௭ன்றார் அந்த கிளைன்ட், "என்னட்ட இருக்க பாயிண்ட்ஸ நா சொல்லிட்டேன். இத தரமா வாதாட வேண்டியது உங்க லாயர் திறம, அதுல ஆப்போஸிட் ஸைட் ஆப் ஆகிட்டா கேஸ் க்ளோஸ்ட்டு. பாத்துக்கலாம் சார், நோ ஒர்ரி" எனக் கிளம்ப, அவரும் விடை கொடுத்தார்.

ரெஸ்டாரன்ட் வாசலை நெருங்கும் போதும் அவள் மனம் அவனை திரும்பிப் பார்க்க சொல்ல, திரும்பி பார்த்தாள். 45 நிமிடங்களாக அப்படியே தான் படுத்திருக்கிறான். ரிசெப்சன் சென்று "ஹீ ஸ் விஷாகன் ரைட்" ௭ன்றளாள் தெரியாதது போல். அந்த பெண் "௭ஸ் மேம், நீங்க?", "விஷாகன் எப்ப இருந்து இங்க இருக்காங்க?" என விசாரித்தாள். "அவர் சாரோட பி.எ.ன்றதால எப்ப வேணா வந்து போவாங்க மேடம். இப்ப 3டேய்ஸ் இங்கதான் இருக்காங்க. நீங்க எதுக்கு அவர பத்தி விசாரிக்றீங்க?" ௭ன்றது அந்த பெண் இப்போது பிடிவாதமாக.

"என் ப்ரண்டு தான் அவன், ரெண்டு பேருக்கும் சின்ன சண்டை அதான் அவன்கிட்ட கேக்காம, உங்கட்ட கேட்டேன். தேங்க்ஸ்" ௭ன்றாள் சுஹா. "பாவம் மேடம் எப்பவுமே ரொம்ப ஜாலியா பேசுவாரு, இப்போ மூணு நாளா லவ் பெயிலியர் ஆன மாதிரி சோகமா தான் சுத்துராரு. சண்டைய மறந்துட்டு பேசுங்க மேடம். ஒருவேள ப்ரண்ட்டுங்குறதால ஷேர் பண்ண வாய்ப்பு கிடைக்கும். பழையபடி கலகலன்னு ஆகிடுவாரு" என்றாள் அந்த பெண். "ரொம்ப வருத்தப்படுறீங்களே". "ஆமா மேடம், அவர அப்டி பாக்க கஷ்டமா தான் இருக்கு. என்ன சார் இவ்வளவு வருத்தமா இருக்கீங்கன்னு கேட்டதுக்கு கூட, இரண்டு பொண்டாட்டி கட்டுனவனெல்லா வாழ்க்கைல சந்தோஷமா இருக்க முடியுமா சொல்லுன்னு என்னய சிரிக்க வைக்க தான் பேசிட்டு போனாரு" ௭ன்றது அந்த பெண் அவனை விட சோகமாக.

"சுத்தம்! அவன் உண்மைய தான் சொல்லிட்டு போயிருக்கான், உனக்கு தான் புரியல" என இவள் முணங்க. "என்ன மேடம்", "நத்திங் நா அவனப் பாக்குறேன்" என கடலை நோக்கி அவனிடமே நடந்தாள்.

அங்கிருந்த நாற்பத்தைந்து நிமிடங்களில் நாற்பது முறையேனும் அவனைத் திரும்பி கடலைப் பார்ப்பது போல் பார்த்திருப்பாள். அவளுக்கு அவன் மீது நம்பிக்கை கிடையாது தான், 'எதுக்காக இப்டி சீன் கிரியேட் பண்றான். நா வந்தது தெரிஞ்சு என் முன்னாடி இப்டி இருந்து சிம்பதி கிரியேட் பண்றானோ நா வந்தது தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லையே. இந்த மீட்டிங் ஜஸ்ட் டூ ஹவர் முன்னாடி முடிவு பண்ணது தான, அவரோட லாயரும் நானில்லையே, ஜஸ்ட் பாயின்ட்ஸ் கொடுக்க வந்ததுனால என் நேம் அந்த சிதம்பரம் சொல்லிருக்க வாய்ப்பில்ல' இப்படி ஏதேதோ யோசித்துக்கொண்டு அவனருகில் சென்று அமர்ந்தாள்.

அருகில் அரவம் உணர்ந்து திரும்பி பார்த்தவன் சத்தியமாய் சுஹாவை அந்த இடத்தில் எதிர்பார்க்காததால் அரண்டு தான் எழுந்தான். அதில் 'தன்னை அவன் இங்கு எதிர்பார்க்கவில்லை' என்பதை உறுதிப்படுத்தினாள் சுஹா.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நன்றாக அவளை பார்த்தான், "அவளே தான், இங்க எப்படி" என அவன் முழிக்க. "ஓவரா பாவமா நடிக்காத, இங்க என்ன பண்ற?" ௭ன்றாள் சுஹா அவனை நேராகவே. "சும்மாதான் மேடம், கிளைமேட் நல்லா இருக்குன்னு அப்படியே. நீங்க என்ன இங்க?”

'தன்னைத் தேடியா வந்தாள் என்ற ஆர்வம் அவன் முகத்தில்'. "ஒரு கிளைண்ட் பாக்க வந்தேன். நீ ஏதோ விரக்தீல இருக்கிறவன் மாதிரி விட்டத்த பாத்து படுத்திருந்தியா. அதான் வந்து இந்த சீன்க்குலா யாரு உன்ன யாரும் நம்பிட மாட்டாங்கன்னு சொல்லிட்டு போயிடலாம்னு வந்தேன்". "சீன்லா இல்ல மேடம்".

"நீ இங்க என்ன பண்றன்னு கேட்டேன்?" ௭ன்றாள். "அக்கௌன்ஸ் செக் பண்ண வந்தேன்". "3டேய்ஸா வா? இது பாப்பு ஒர்க் இல்ல?” "பாப்பு பாத்துட்டா தான், இருந்தாலும் சார் என்ன செக் பண்ண சொன்னாரு அதான் வந்தேன். அடுத்து எங்க போகன்னு தெரில, இங்கயே இருக்கேன்" ௭ன்றான் இப்போது இன்னும் பாவமாக.

"ஏன் பவ்யா உன்ன வர வேண்டாம்னு சொல்லிட்டாளா என்ன?” "எனக்கு தான் கில்ட்டியா இருக்கு, போகல". "அதாவது இருந்தா சரிதான். பி ஃபிராங்க். என்ன பத்தி நீ ஒர்ரி பண்ணிக்க தேவயில்ல, நீ எப்பயும் போல உன் வைப், உன் வீடுன்னு இரு. என் பேமிலிய நா சமாளிப்பேன். தாலி கட்டிட்டமோன்னு நீ யோசிக்க வேண்டியதில்ல. வாய்ப்பு கிடைச்சாலே தப்பு பண்றவங்க மத்தியில நீ சூழ்நிலை காரணமா தப்பு செஞ்ச, அதனால நானும் உன்ன மன்னிச்சிட்டேன். டோன்ட் டேக் இட் இன் மைண்ட் (கண்டுக்காம ஃபீரியா விடு)" ௭ன்றாள் அசால்ட்டாக.

மெலிதாக சிரித்தவன், "இந்த தெளிவு தாங்க, சிஸ்டர்ஸ் உங்க மூணு பேர்ட்டயும் நா ஆச்சரியப்படுற விஷயம். மெய்யப்பன் சார், வடிவு மேடம் ரெண்டு பேரையும் கண்டிப்பா இதுக்காக பாராட்டியே ஆகணும்". "ஓ! தாராளமா ஒரு விழா எடுத்து பாராட்டிடலாம், இப்ப போய் உன் வாழ்க்கையை வாழ பாரு, நா கிளம்புறேன்" என எழுந்தாள்.

"நா ஒன்னு மட்டும் கேக்குறேன் ஆன்சர் பண்ணுடுறீங்களா?" ௭ன்றான் அவள் இறங்கி வந்து பேசவும் வந்த தெம்புடன். "என்ன?" என்றாள் கீழே அமர்ந்திருந்தவனிடம், புருவம் உயர்த்தி கையை கட்டி, "அப்டியே போகாம எதுக்கு மெனக்கெட்டு வந்து என்ன ரிலாக்ஸ் பண்ணிட்டு போறீங்க?”

"ரெண்டு பேரும் சேம் சுச்சுவேஷன் தான், ஒரு பிரெண்ட்லி ஹெல்ப் அவ்வளவுதான். நீ இத வச்சு ஓவரா இமேஜின் பண்ணாத". "சோ வி ஆர் ப்ரண்ட்ஸ் ரைட்" என்றான் இப்பொழுது சற்று ௭ழுந்து மண்டியிட்டு, அவள் முன் கையை நீட்டி.

அவனையும், அவன் கையையும் மாறி மாறி பார்க்க, "ஃப்ரெண்ட்ஷிப், அப்புறமா அடுத்த ஸ்டெப்க்கு போலான்னு நினைக்க நம்ம ரிலேஷன்ஷிப் நேச்சர் ஆனது கிடையாது. கடைசிவர ஒரு நல்ல ஃப்ரெண்ட் நா உங்களுக்கு தேவயானது செஞ்சிட்டு ஒரு நல்ல ரெலேஷன்ஷிப் மெயின்டெய்ன் பண்ணா போதும்னு தான் நினைக்கிறேன், அதுக்கு மேல ௭தும் ஐடியா இல்ல, ௭ன்ன நம்பலாம்" என்றான் அவள் சந்தேக பார்வைக்கு பதில் கூறும் விதமாக.

அப்போதும் அவள் யோசிக்க, "என்னங்க பிரண்ட்ஷிப் ஒன்னுதான் எந்த ௭திர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாம கிடைக்கிற ஒரு விஷயம். அதுக்கும் நீங்க இவ்வளவு யோசிக்கிறீங்க" ௭ன்க.

"இல்ல ௭ன் அக்கா சொன்ன மாறி நம்புற மாறியே பேசுற, ஆனா உன் ஆக்ஷன்லா வேற மாறில்ல இருக்கு" ௭ன்க, "நா நல்லது நினச்சு தான் செய்றேன், உங்களுக்கு தான் அது தப்பா தெரியுது, ௭ன்ன நீங்களாது நம்புங்க" ௭ன்றான் இப்பொழுது அழுவது போல். "சரி போய் தொல" என கை குலுக்கினாள். "தேங்க் யூ" என தானும் அவள் கை பிடித்தே எழுந்தான்.

பெரிதாக அவன் மேல் கோபம் இல்லாததால் அவனது ப்ரண்ட் ரிக்யூஸ்ட்டை அக்செப்ட் செய்ததாக நினைத்துக் கொண்டு அவனிடமிருந்து விடைபெற்று காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

அதே நாள் அங்கு சிம்லாவில், ஷூட்டிங் முடித்து கேரவனில் ஹோட்டல் திரும்பினர் இரணியனும் பாப்புவும். இரண்டு நாளும் காலையில் சாப்பிட்டு கிளம்பினால், சூட்டிங் அடுத்து மதியம் லஞ்ச் அங்கேயே, ஈவினிங் ஹோட்டல் திரும்பி, கொஞ்சநேரம் கார்டனில் இருப்பது பின் ரூமிற்கு டின்னர் வரவைத்து சாப்பிடுவது, அடுத்து தூங்கச் செல்ல பெட்ரூம் சென்று உட்லாக் செய்துவிட்டு அந்த நடிகனை வெளியே பெரிய ஹாலில் தூங்க விட்டு விடுவாள். அவனும் பெரிதாக வருத்தப்படவில்லை. சிரித்துக்கொண்டே அமைதியாக படுத்துக் கொள்வான். என்ன அந்த கடத்தல் சம்பவத்தின் பின் அதிகமாக அவளை கவனிக்க ஆரம்பித்திருந்தான். முதலில் அதிகமாக கவனித்ததில் தான் இன்று அவன் மனைவியாக இருக்கிறாள். இப்பொழுது மறுபடியும் தன் கண்ணை விட்டு நகராமல் இறுத்தி கவனிக்கிறான், என்ன ஆகுமோ.!.

இருவரும் ஹோட்டலினுள் நுழைய அவளது போன்
"எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்கமாகி போச்சு கணக்கு
பள்ளிக்கூட போகையில பள்ளப்பட்டி ஓடையில
கோக்குமாக்கு ஆகி போச்சு எனக்கு
இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு" ௭ன பாட,

முன்னே நடந்த இரணியன் வந்த சிரிப்பை அடக்கி யாருக்கு இந்த பாட்டு ௭ன நின்று கவனித்தான்.

அவளோ அசால்ட்டாக "சொல்லு விஷா, எந்த வீட்டுல இருக்க?" என்றாள் எடுத்ததும். விஷாவிற்கு என்றதும் தன்னை மறந்து சிரித்து விட்டிருந்தான் இரணியன். அவள் கார்டனில் நடை பயில திரும்பி விட, அவளை தான், தன் கண் பார்வையில் இருந்து அகலாமல் காப்பவனாயிற்றே தானும் பின்னயே சென்றான்.

"எந்த வீட்டுக்குப் போகணும்னு தெரியாம தான் நடுத்தெருவில நிக்றேன்". "இப்ப என்ன ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி தரனுமா?” "சொல்ல வந்தத கேட்டா மட்டும் போதும்" என்றவன் சுஹாவை பார்த்தது முதல் பேசியது எல்லாத்தையும் சொல்ல.

"வெள்ள பாச்சா உன் பிரண்டு ரெக்வஸ்ட்ட அக்ஸ்ப்ட் பண்ணிட்டாளா? இவ்வளவு சீக்கிரமாவா நம்ப முடியலையே". "நெஜமாதான் பாப்பு", "உன் மேல ஏதோ சாஃப்ட் கார்னர் இருக்குன்னு நினைக்றேன், இல்லனா இவ்வளவு சீக்கிரம் இறங்கிவற்ர ஆளு இல்ல அவ. உன்ன பத்தி மொத்த டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிருப்பா, நீ வெத்து வேட்டுன்னு புரிஞ்சிருக்கும், அதான் பாவம்னு இறங்கி வந்துருப்பா. சரி விடு உன் உன் ரூட் கிளியர் தானே என்ஜாய் பண்ணு".

"மேடம் இறங்கி வந்ததே பெரிய ரிலீஃப்பாயிருக்கு. இனிதான் பவ்யாவ போய் பாக்கணும்". "பார்ரா பொண்டாட்டிய பாக்க அவ்வளவு ஆர்வம், போ போய் சமாதானப்படுத்து, அப்புறம் டபுள் தமாக்கா தான்".

"உங்களுக்கு எப்டி போயிட்டுருக்கு ஹனிமூன் ட்ரிப்? சார் என்ன சொல்றாரு? நா சார இவ்வளவு நாள் பிரிஞ்சிருந்ததே இல்ல தெரியுமா?" என்றான் நக்கலில் ஆரம்பித்து சோகத்தில் முடித்து.

"சார்ம் ரொம்ப வெட்கப்படுறார் விஷா. வெளில வெளியில போய் படுத்துக்கிறார் உன்ட்டதான் டியூசன் அனுப்பணும். ரெண்டு ஹேண்டில் பண்றவன் நீ, ஒன்னு ஹேண்டில் பண்ண சொல்லி தர மாட்டியா ௭ன்ன?” "இன்னொரு போன் வருது நா பேசிட்டு வரேன் பாப்பு" என வைத்துவிட்டான்.

"எஸ்கேப் ஆகிட்டான்" என சிரித்துக் கொண்டு
"சிம்ரன் போல ஸ்டைலா தான்
இந்த பொண்ணு இருக்கா
சின்ன சிரிப்பில் ஐஸ்வர்யா
போல தான் இருக்கா
மன்மதன் போல் மாப்பிள்ளை ரொம்ப அழகு தான்
துள்ளும் ஸ்டைலை பார்த்தாக்க
சச்சின் டெண்டுல் தான்
பொண்ணுகிட்ட மாப்பிள்ளை சலாம் போட வேணு
சாந்தி முகூர்த்தம்
ஆகட்டும் பையன் வீரம் பாரு" என பாடிக்கொண்டே கார்டனில் இருந்து ஹோட்டல் செல்ல திரும்ப, அவளையே பார்த்தவாறு அமர்ந்து இருந்தவனை கண்டுக்காமல் அவள் முன்னே சென்றுவிட, அவள் பாடிக் கொண்டே செல்வதை கேட்டு சிரித்துக் கொண்டு பின்தொடர்ந்தான்.

அறைக்கு சென்ற பின் தான் "சார்ம் எங்க முன்னாடியே வந்தாரே" எனத் தேட, பின்னேயே நுழைந்தவன் அவளை கண்டு கொள்ளாமல் பிரஷ்ஷாக சென்று இலகுவான உடையில் வர, "பாத்ரூம்ல இருந்திங்களா சார்ர்ம். நா கவனிக்கல" ௭ன்றாள். ஆட்டோமேட்டிக் டோர் என்பதால் இருவரிடமும் சாவி உண்டு, திறந்துதான் வரவேண்டும், அப்படி நினைத்துக் கொண்டாள்.

"பின்ன வந்தது கூட தெரியாம அப்டி ஒரு கனவுல இருக்க, உன் பின்ன தான் வந்தேன்" என்றான். "நா விஷா பத்தி யோசுச்சுட்டே வந்தேனா அதான் தெரில". "ஆஹான்" என மெதுவாக தலையசைத்து பாத்ரூமை கை கட்டினான், அவள் சென்று பிரெஷ்ஷாக, பின் இரவு உணவு முடித்து, வேகமாக அவள் உள்சென்று கதவை அடைத்துக்கொள்ள, மெதுவாக சிரித்து எழுந்தான் அடுத்து நடக்க போவதை எண்ணி, உள்ள போன வேகத்தில் வெளி வந்தாள், "ஏன் சார்ர்ம் இப்டி பண்ணீங்க? டோர் லாக்லாம் எங்க?" ௭ன சண்டைக்கு வர.

"நீ பண்றது உனக்கே சரியா இருக்கா, இந்த சோபால என்னால நைட் ஃபுல்லா தூங்க முடியுமா? நீ வெளில படுத்து என்ன உள்ள விட்டுருந்தா கூட, நா உன்ன உன் இஷ்டத்துக்கு விட்ருப்பேன். நீ எவ்வளவு செல்பிஷ்ஷா நடந்துக்குற அதுலயும்" என அவளைத் தாண்டி உள்ளே செல்ல, "எனக்கு தனியா படுத்தா தான் தூக்கம் வரும், அதுவும் பெட்ல படுத்தா தான்" என அவனை முந்திக் கொண்டு சென்று பெட்டில் கையை விரித்து குறுக்காக குப்புற படுத்துக் கொண்டாள்.

"உனக்கு ஓ.கே 'ன்னா, ஐ ஹவ் நோ அப்ஜெக்ஷன்" என அவள் மேலேயே படுத்து விட்டான். "லூஸ் சார்ர்ம்" என அவனை தள்ளி விட்டு வேகமாக எழுந்து விட்டாள். சிரித்துக்கொண்டே தலையணையில் நேராக படுத்தான்.

"ஏன் இப்படி பண்றீங்க?" "லூசா நீ, வித்தியாசமா நடந்துக்கிறது நீ தான். என்ன பாத்தா அப்டியா வில்லனா தெரியுது. நா இங்க படுக்றதுல்ல உனக்கு என்ன பிரச்சனன்னு ஃபர்ஸ்ட் சொல்லு?”

"உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்ம். சோ நீங்க அப்ரோச் பண்ணா நா அக்ஸப்ட் பண்ணிப்பேன் தான், ஆனா நீங்க என்ன உங்க இமேஜ்காக மேரேஜ் பண்ணீங்க, அடுத்து அதே இமேஜ்காக குழந்தை பெத்துப்பீங்க, என்னால அத அக்ஸப்ட் பண்ணிக்க முடியாது, உங்கள தடுக்கவும் முடியாது" ௭ன்றாள் தைரியமாக அவன் முகம் பார்த்து.

மெலிதாக சிரித்தவன், "சரி நா வேணா உன்ன அப்ரோச் பண்ணமாட்டேன்னு சைன் பண்ணி தரட்டுமா?" ௭ன்க, "நக்கலா?" ௭ன இடுப்பில் கை வைத்து பாப்பு முறைக்க, அதற்கு மேல் அந்த கான்வர்ஸேசனை விரும்பாதவன் போல் "ஒன்னும் பண்ண மாட்டேன்மா தைரியமா வந்து படு" என அவளை இழுத்து பக்கத்தில் போட்டு விட்டு திரும்பி படுத்துக் கொண்டான்.

இவர்கள் அல்ரெடி தனி தனியாக இருப்பது தெரியாமல், தனது ஏழாம் அறிவை பயன்படுத்தி இருவரையும் ஒரு நாள்னாலும் தனித்தனியா பிரிச்சுட்டா நா ஏதாவது பிளான் பண்ணிடுவேன் என தீவிரமாக யோசித்து கொண்டிருந்தாள் பிங்கி.
 
அத்தியாயம் 24
அடுத்த ஒரு வாரத்தில் ப்ளான் செய்த, எடுக்கவேண்டிய சாங் சூட்டிங்கை முடித்திருந்தனர். மேலும் நான்கு நாட்கள் தங்க வேண்டி இருந்ததால், முடிக்க வேண்டிய மீத, தேவையான பட சீன்களையும், ஸ்டுடியோவில் எடுக்க பிளான் செய்து இருந்ததையும், இங்கும் ஊட்டி போல், மலை மேடு, சில் கிளைமேட் கொண்டுதான் இருக்கிறது என இங்கேயே எடுக்க முடிவு செய்து ௭டுக்க ஆரம்பித்தனர். அது மேலும் ஒரு வாரத்தை நீட்டித்து விட்டிருந்தது.

அன்று ஷூட்டிங் முடித்து ரூமினுள் நுழைந்ததும், "எனக்கென்னவோ உங்க பிரண்டு தான் இப்டி வேணும்னு டேஸ் எக்ஸ்டெண்ட் பண்ணி இருப்பான்னு தோணுது" ௭ன்றாள் பாப்பு.

வாட்டர் பாட்டிலை திறந்து கொண்டிருந்த இரணியன் "எந்த பிரண்ட்?" என்றான் செய்யும் வேலையை நிறுத்தி. "நடிக்காதீங்க சார்ம், அந்த பிங்கி தான் ப்ளான் பண்ணிருப்பான்னு சொல்றேன், நீங்க இன்னும் ஒன் டே அவ கூட ஸ்பென்ட் பண்ண ஒத்துக்கலயே அதனாலயா இருக்கலாம்" ௭ன பாப்பு சோபாவில் அமர்ந்து காலாட்டிக் கொண்டு தீவிர யோசனையோடு சொல்ல.

தண்ணியை குடித்தவன், "யார் என்ன பிளான் பண்ணா என்ன! நமக்கு வேல முடியுது தானே. நாம சும்மா டைம் வேஸ்ட் பண்ணலையே" ௭ன்க. "அதான நீங்க உங்க பிரண்ட விட்டு குடுப்பீங்களா" என கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு டிவியை ஆன் செய்து பார்க்க ஆரம்பித்தாள்.

மறுநாள் ஹூஜத் என்ற கிராமத்திற்கு படப்பிடிப்பு எடுக்க கிளம்பியது அவர்கள் குழு. அது மலை உச்சியில் இருக்கும் கிராமம் என்பதால் டிராவலிங் கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. இரண்டு மணி நேர பயணத்தின் பின் அந்த இடத்தை அடைந்தனர். அங்கேயே வாழ்பவர்களுக்கு எப்படியோ முதல்முறை அவ்விடத்தை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக சொர்க்கமாகதான் தெரியும்.

படப்பிடிப்பிற்கு தேவையானதை அவரவர் பார்க்க, பாப்பு வேடிக்கை பார்ப்பதும் செல்ஃபி எடுப்பதுமென அவள் வேலையை சரியாக செய்தாள்.

ஒரு நாளும் ஒரு பொறுப்பான மேனேஜராக இரணியனுக்கு குடை பிடித்தது இல்லை. (சுள்ளென்ன வெயில் அடிச்சாளே பிடிக்க மாட்டா, இங்க பனி கொட்டுது, எதுக்கு கொடைன்னுவா அதனால அவனும் அத பெருசா எதிர்பார்க்கல).

அங்குள்ள மக்களும் இதுபோல் படப்பிடிப்பு அங்கு இயல்புதான் என அவரவர் வேலையில் பிசியாக இருந்தனர். நண்டு, சிண்டுகள் மட்டுமே வேடிக்கை பார்க்க வந்து நின்றது.

"சார்ம், இங்க பாருங்க, இந்த ஊர்ல உங்கள யாருமே கண்டுக்கல, நீ உன் வேலைய பாரு, நா என் வேலைய பாக்குறேன்னு அவுங்கபாட்டுக்கு இருக்காங்க, இது எவ்வளவு பெரிய அவமானம் உங்களுக்கு?" ௭ன கேக்க.

"ஒரு அனுமானமு இல்ல, அவங்கவங்க இடத்துல தான் அவங்கவங்க ராஜா. இங்க கூட, ஏதோ மூலையில ஒருத்தருக்குனாலும் என்ன தெரிஞ்சுருக்க வாய்ப்புருக்கு, ஆனா வேற கண்ட்ரிஸ்லா போனோம்! சுத்தமா தெரியாதவங்க உண்டு. இதெல்லாம் சாதாரணம், நமக்கு வேல சீக்ரம் ஈசியா முடியும்னு சந்தோஷ பட்டுக்கணும்" என்று தன் வேலையை பார்க்க சென்று விட்டான் இரணியன்.

"சரி நாம நம்ம வேலைய பாப்போம்" என அங்கிருந்த மக்களை அவர்களோடு சேர்த்து இடங்களையும் கிளிக் செய்ய ஆரம்பித்தாள்.

அப்பொழுது ஒரு குட்டிப்பெண் அவளை நோக்கி திடுதிடுவென ஓடிவந்தது. கேமராவில் அதைக் கண்டு விட்டு இறக்கி பார்த்தாள். இவளை நோக்கி தான் கையை ஆட்டிக் கொண்டு வந்தது.

பாப்புவை நெருங்கியதும், அவள் கையை தடவித் தடவிப் பார்த்து, "கெய்சி ஹூ தேவி? ஆப் இத்னே தின் மே கஹா தே? மேர் சாத் ஹமாரே கர் ஆவோ. சப் துமாரே தேக்கர் குஸ் ஹோன்" (௭ப்டி இருக்கீங்க தாயே! இவ்வளவு நாள் ௭ங்க இருந்தீங்க?௭ங்கூட நம்ம வீட்டுக்கு வாங்க, அங்க ௭ல்லாரும் உங்கள பாத்தா சந்தோஷ படுவாங்க.) என்றவாறு பாப்பு கையை பிடித்து இழுத்தது.

"யார் பாப்பா வேணும்? யார் நீங்க? சூட்டிங் பாக்க வந்தீங்களா?" என பதில் கேள்வி கேட்டாள் பாப்பு. கார்ட்ஸில் ஒருவன், உடனே அவர்கள் அருகில் வந்து, "ஹே பச்சே தும் கியா ஜாக்தே ஹோ?"(௭ன்ன வேணும்?) ௭ன்க.

"மே ஜாக்தா கூங்கி யக் தேவி மேரே சாத் ஆயே"(நா இவங்கள ௭ன்கூட கூட்டிட்டு போறேன்) ௭ன்றது அந்த பெண் பாப்பு கையை விடாமல். "நகி. வாஹ் நகி ஆயேங்கி, ஜாவ் அவுர் கேளோ" (அவங்க ௭ங்கயும் வர மாட்டாங்க, நீ போய் விளையாடு போ) ௭ன்றான் அந்த பாடி கார்ட்.

"என்னய்யா பேசிக்கிறீங்க ரெண்டு பேரும் எனக்கும் சொல்லுங்க" என்றாள் இருவரையும் மாறி மாறி பார்த்திருந்த பாப்பு. "அந்த பொண்ணு உங்கள அவுங்க வீட்டுக்கு கூப்பிடுறா" ௭ன்றான்.

"எதுக்கு?”

அவன் அந்த சின்ன பெண்ணிடம் ௭தையோ பேசி விட்டு, "அவங்க வீட்டில உங்கள பாத்தா சந்தோஷப்படுவாங்கன்னும், தினமு கையெடுத்து கும்பிடுவாங்கன்னும், அவங்க தாத்தா, அப்பா ௭ல்லாரும் உங்களுக்காகவே காத்துட்டுருக்காங்கன்னும் சொல்லுது" என்க.

"எனக்காகவா? ௭துக்கா இருக்கும்? இந்த பொண்ண இதுக்கு முன்னாடி நா பாத்ததே இல்லயே" என அந்த குட்டி பெண்ணை உற்றுப் பார்த்து யோசித்தாள்.

"ம்கூம், ஞாபகமே இல்ல" ௭ன்றாள்.

"வேற யாரையாவது நெனச்சு பேசுதோ என்னவோ, நீங்க கேரவன் போங்க நா பாத்துக்குறேன்" என்றான் அவன். பாப்புவும் தன் ஜீன்ஸில் இருந்து ஒரு சாக்லேட் எடுத்து அந்த பெண்ணிடம் நீட்ட, வாங்கிக் கொண்டது. "பாய்" என்றாள் கையசைத்து.

உடனே அந்தப் பெண், அவளை விட மாட்டேன் என பாப்பு டாப்ஸை பிடித்து இழுத்து அடம் பிடிக்க. வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை தூக்கி சென்று சற்று தள்ளியிருக்கும் ஒரு கடையில் இருக்கும் அந்த ஊர்கார பெரியவரிடம் விசாரித்து ஒப்படைத்தான். அந்தப் பெண் அந்தக் கடைக்காரரிடமும் அதையே சொல்லி அழ, தெரிந்தவர்கள்தான் என்ற நம்பிக்கையுடன் இவன் திரும்பிவிட்டான். ஆனால் அந்தப் பெண் கையோடு அந்தப் பெரியவரை அழைத்து வந்து தூரத்தில் நின்ற பாப்புவை காட்டியது. அந்த வயதிலும் தூரத்தில் நின்ற பாப்புவை இனம் கண்டு, கண்ணீர் வழிய பரவசமாக அவளை நோக்கி விரைந்தார் அந்த பெரியவர்.

அவர் நெருங்குவதை கண்ட காட்ஸ் இருவரும் வேகமாக வந்து அவளை மறைத்து நிற்க. அவர்கள் முன்னேயே "தேவி" என சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டார். காட்ஸ் இருவரும் அவரை தூக்கி விட முனைய. பாப்பு நடப்பது விளங்காமல் பேய் முழி முழித்து நின்றாள்.

அங்கு கூட்டம் கூட ஆரம்பிக்கவும், 'பாப்பு இங்கு என்ன பிரச்சனையை இழுத்தார்களோ' என்று தான் பார்த்தனர். படக்குழுவினர் மூலம் இரணியனுக்கும் விஷயம் சொல்லப்பட, அங்கு விரைந்து வந்தான், "என்னாச்சு தாட்சா?" ௭ன்ற கேள்வியுடன்.

"தெரில சார்ம், இங்க இவங்க என்னலாமோ பண்றாங்க பாருங்க" ௭ன்றாள் எழாத பெரியவரை காட்டி, "நீ என்ன பண்ண?" என்றான் அவன்.

பாப்பு முறைத்து "நா ஒண்ணுமே பண்ணல" ௭ன்க. "சரி நீ கேரவன் போ" ௭ன அவளை அனுப்பி விட்டு, "க்ரௌட் கிளியர் பண்ணுங்க" என்ற அவனது குரலுக்கு பின் மற்றவர்கள் கலைந்து செல்ல, அந்த தாத்தாவும் பேத்தியும் மட்டும் விடாமல் போராடிக் கொண்டிருந்தனர்.

"வாட் தே நீட்" என்றான் காவலாளியிடம். "பாப்பு மேடம்ம அவுங்க வீட்டுக்கு கூப்டுறாங்க" ௭ன்க, "வாட்?" இரணியன் கத்த, "சார் அவுங்க சொன்னது 'ஒரே ஒருதட வர சொல்லுங்க, ௭ன் குடும்பத்தார் எல்லாரயும் இங்க கூட்டிட்டு வந்து தாய்ய பாக்க வைக்க முடியும், ஆனா எங்க அம்மா ரொம்ப வயசானவங்க படுக்கையில இருக்காங்க, தாய பார்த்துட்டாளே அவங்களுக்கு மோட்சம் கிடைக்கும், அவுங்க பாதம் ௭ன் வீட்ல பட்டாளே நாங்க பிரவி பலன அடஞ்சிருவோம்' இப்டி என்னென்னவோ ஒளருறாங்க சார், பெருசா ஏதோ ப்ளான் பண்ணி ஏமாத்ற க்ரூப்ன்னு நினைக்றேன் நீங்க போங்க சார், வீ கேன் மேனேஜ்" என்றனர் காட்ஸ் இருவரும்.

"ஓகே மேக் இட் ஃபாஸ்ட்" என்றவனும் பாப்புவை பார்க்க கேரவன் சென்றான்.

"நா வேணும்னா, அவங்களோட ஒருக்கா போய்ட்டு வரட்டா? காட்ஸ் தான் கூட வராங்களே, பின்ன எதுக்கு பயப்படனும்" பாப்பு கேக்க, "அப்டில்லாம் தெரியாத ஊர்ல வந்து ரிஸ்க் எடுக்க முடியாது. அல்ரெடி இங்கு வந்ததும் பட்ட அனுபவம் ஒன்னு இருக்கு தானே" என்று விட்டு ஷூட்டிங்கிற்கு கால் வர, "உள்ளயே இரு எங்கேயும் போகவேண்டாம்" என ஆர்டராக கூறிவிட்டு இறங்கி சென்றான்.

மாலை வரை அங்கு சுற்றி பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. அந்த பெரியவரின் மொத்த குடும்பமும் ஒருவர் பின் ஒருவராக வந்து காத்து நிற்க ஆரம்பித்தனர். குழந்தைகளோடு சேர்த்து 10 பேர் போல் வந்து அவள் கேரவனையே பார்த்து நின்றனர். உள்ளிருந்து பார்த்திருந்த பாப்புவிற்கும், நேரம் கடக்க கடக்க க்யூரியாசிட்டி அதிகமாக ஆரம்பித்தது.

காட்ஸூம் அவர்களை அடிக்காதது ஒன்றுதான் குறை. கை வைத்தால் ஊர் ஒன்று கூடி விடும் என்றும், அது இன்னும் பிரச்சனை எனவும் அவர்களை பாப்புவிடம் நெருங்காமல் மட்டும் பார்த்துக் கொண்டனர். இரணியனும் அவர்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தான். ஆள் பார்த்து அவர்களை காட்டி விசாரித்தும் விட்டான், ஒன்றும் பிரயோஜனமில்லை.

கிளம்பும் நேரமும் வந்தது சூட் பேக்கப் செய்து கிளம்ப. அவள் கேரவனை செல்ல விடமாட்டோம் என வழி மறித்து அமர்ந்தனர். வேறு வழி இல்லாமல் போலீஸாரை வர வைத்தனர் படக்குழுவினர். காலில் விழுந்து கெஞ்சி கேட்டு அழுதனரே ஒளிய, வழி மட்டும் விட மறுத்தனர்.

போலீஸூம் இவர்களிடம் தான் வந்து இறங்கி வரச் சொல்லி கேட்டார். "இப்ப என்ன வீட்டுக்கு தான கூப்பிடுறாங்க, அதுக்கு எதுக்கு இவ்ளோ சீன். நீங்களும் கூட வாங்க, இவ்வளவு பேர் இருக்கையில ௭துக்கு பயப்படனும்" என்றாள் பாப்பு. அவனுக்கும் அப்படி என்ன பிரச்சனை இவர்களுக்கு என தெரிந்து விட தோன்ற, "சரி" என்றான்.

பின் படக்குழுவினரை அங்கு சற்று நேரம் சுற்றிப்பார்க்க கூறிவிட்டு. அந்த குடும்ப உறுப்பினர்களிடம் சம்மதம் தெரிவிக்க, அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி கத்தி கூச்சலிட ஆரம்பித்தனர், ஏதேதோ அவர்கள் ஆட்களிடம் சொன்னார் அந்த பெரியவர்.

பாப்பு கேரவனிலிருந்து இறங்கவும், அவளை பார்த்து, அவரவர் அவரவர் நின்ற இடத்திலேயே கீழ் விழுந்து வணங்கினர், தலைக்குமேல் கை கூப்பி பரவசமாக வணங்கினர். இவர்கள் யாருக்கும் தான் ஒன்றுமே புரியவில்லை. அவள் கீழே இறங்கி வரவும் ஒரு மரச் சேர் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

"க்ருபியா பைத்தோ தேவி" என்றார் அந்த பெரியவர் வணங்கிய கையை இறக்காமல். அந்த சேரில் உக்கார சொல்கிறார் என்பது மட்டும் புரிந்தது அவளுக்கு. இரணியனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு சென்று அமர்ந்தாள்.

"வீட்டுக்கு வா, வீட்டுக்கு வான்னாங்க இப்ப இதுல உட்கார சொல்றாங்க, என்ன செய்யப் போறாங்கன்னு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது" என நினைத்துக் கொண்டே சென்று அமர்ந்தாள். அவர்கள் மொழியில் ஏதோ கோஷமாக சொல்லி நாலு பேர் சேர்ந்து அவளை சேரோடு தூக்கி கொள்ள, ஒரு நிமிஷம் பக்கென்று தான் இருந்தது அவளுக்கு. பின் தன்னை சமன்படுத்தி "நானே நடப்பேன்" என அவள் கூறியதை அவர்கள் கேட்டதாகவே தெரியவில்லை.
தீவிரமாக வணங்கிக்கொண்டு முன் சென்றனர் பெண்கள், அதேபோல் கோஷத்தோடு பின் தொடர்ந்தனர் ஆண்கள்.

"இவங்க என்ன நெனச்சு இப்டில்லாம் செய்றாங்கன்னு எனக்கு தெரியல ஆனா உண்ம தெரிஞ்சப்புறம் எனக்கு எந்த சேதாரமு வராம நீதான் காப்பாத்தணும் கிச்சா" என தன் அப்பார்ட்மெண்ட் கிட்சாவை மனதில் நினைத்து துணைக்கழைத்து கொண்டாள். 20 நிமிட நடைப் பயணத்தின் பலனாய் சற்று மேட்டின் மேல் இருந்த வீட்டின் முன் அவளை இறக்கி விட்டனர். கட்டி முடிக்க படாத, செங்கல் மேல் சிமெண்ட் பூச்சு இல்லாத வீடாக இருந்தது. இரண்டு மாடி வீடு ஆனால் மேல்மாடி புது வகை ஓட்டினால் வேயப்பட்டு வித்தியாசமாக இருந்தது. அந்த வீட்டை சுற்றியும் மேடும் பள்ளமுமாக மரங்கள் நின்றது.

"இந்த பள்ளத்தில உருட்டி தள்ளாம ௭ப்டியோ பத்ரமா கொண்டாந்து இறக்கிடனும்" என அவளை தூக்கிச்சென்றவர்கள் வேண்டிக் கொண்டு வந்ததைப் போல் தானும் வேண்டிக் கொண்டு வந்ததை நிறைவேற்றி தந்த கிட்சாவிற்கு நன்றி தெரிவித்தாள்.

இவர்களைப் பின்தொடர்ந்து இரணியன் அவனது காட்ஸ், சிலபல படக்குழுவினர் நடந்து வந்தனர். வீட்டை நெருங்கியதும் எல்லோரும் அங்கேயே நின்றுவிட, இரணியன் மட்டும் பாப்புவுடன் உள் சென்றான்.

முன்னறையில் படுத்திருந்த ஒரு வயதான பெண்மணி இவர்கள் வரவை எதிர்பார்த்து வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார். அதும் பாப்பு உள்ளே நுழைந்ததும் தன் வயதையும் மறந்து எழ முயன்று தோற்றார்.
தள்ளாத வயதிலும், மெதுவாக தன்னை நிமிர வைத்து பாப்புவை வணங்கினார். அங்கிருந்த ௭ல்லாரும் அவளை அதிசயமாக தான் பார்த்தனர். மெதுவாக இரணியனை நெருங்கி, "ஏன் சார்ம், ௭ப்பயும் உங்கள தான ௭ல்லாரும் இப்டி பாப்பாங்க, இங்க ௭ன்னன்னா இவங்க ௭ன்ன அப்டி பாக்றாங்க, நா ஒருவேள கனவுல இருக்கேனோ " ௭ன்றாள் ரகசியமாக. "இர்ரெஸ்பான்ஸிபில் இடியட்" ௭ன அவன் கடித்து துப்ப, வாயை குனட்டி திரும்பி கொண்டாள்.

சற்று நேரம் அமைதியாகவே கழிய, இவர்கள் சரிபட்டு வர மாட்டார்கள் ௭ன நினைத்த இரணியன், "௭துக்கு அவ்ளோ கஷ்டப்பட்டு ௭ங்கள இங்க கூட்டிட்டு வந்தீங்கன்னு சீக்கிரம் சொன்னா நாங்க கிளம்புவோம், டைம் வேஸ்ட் பண்ணிட்ருக்கீங்க" ௭ன்றான் ஹிந்தியில். "சார் நீங்க தேவி க்கு ௭ன்ன வேணும்?" ௭ன்றார் அவரும் அவர் மொழியில். "உஸ்கா பதிதேவ்" ௭ன்றான் விறைப்பாக.

அதன்பின் அவன் மேலும் தன்னை போல் ஒரு மரியாதை பார்வை வந்திருந்தது. பாப்புவிற்கு என்னென்னவோ கொண்டு வந்து கொடுத்தனர். சாமிக்கு வைக்கும் படையல் போல் அவள் முன் பரிமாற பட்டது. இரணியன் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு எதையும் ௭டிக்க மறுத்தாள். அவள் ௭டுக்க மறுத்த சோகத்திலும், வேறு வழி இல்லாமல், அவர்களுக்குள் குசு குசுவென பேசி முடிவெடுத்து, அவளை வந்து அழைக்க, "இன்னும் எங்க?" என்ற இரணியனுக்கு அடுத்த அறையை காண்பித்தனர்.

இருவரும் அவர்களை பின் தொடர்ந்துச் செல்ல, பூஜை அறை போன்ற அமைப்பு முன் சென்று நின்றனர், 'அவங்க வீட்டு பூஜை அறைய எதுக்கு நமக்கு காட்றாங்க' என்ற சிந்தனையிலேயே அங்கிருந்தவற்றை பார்த்தனர் இருவரும். ஒரு அம்மன் சிலை பெரிதாக இருந்தது. அதை சுற்றி சில சாமி படங்கள் கணபதி, ஆஞ்சநேயர் அவர்களை தான் அவளுக்கு தெரிந்தது. அந்த அம்மனின் வலது பக்கம் ஒரு பெண்ணின் வரைபடம் சற்று மேடிட்டிருந்த வயிற்றோடு நிற்பதுபோல் சட்டம் செய்யப்பட்டிருந்தது. பூமாலை, நெய்வேத்தியங்களோடு. அதை பார்த்து பயந்து தான் விட்டனர் இரணியனும், பாப்புவும். அதிலிருந்தது பாப்புவே, மிஸஸ். தாட்சாயிணி இரணியகர்பன்.

'நம்மளயா போட்டோ ௭டுத்து மாலை போட்டு கும்பிட்டுருக்காங்க, நாம உயிரோட தான இருக்கோம்' என முழித்தாள் பாப்பு.

"வாட் த ஹெல் இஸ் ஹேப்பன்னிங்? வேர் டிட் யூ கெட் ஹெர் போட்டோ? கியா ஆப் ஹமெஸே பைசா லூட்னா சாஹ்தே ஹேன். ஆப் சபி கே கிலாப் சீக்யாட் தார்ஜ் கரேகா"(உங்களுக்கு தாட்சா போட்டோ ௭ங்க கிடச்சது. ௭ன்ன பைசா கரக்க ப்ளான் பண்றீங்களா? மொத்தமா தூக்கி உள்ள வச்சிருவேன்) என்றான் கொதிப்புடன்.

"வாஹ் ஹமாரா பறிவார்க்கே தேவி ஹைன், ஹம் ஜூத் நஹி போலேங்கே. வாஹ் ஹமோரி ஆஸ்தா ஹை" (அவுங்க ௭ங்க குல சாமி, நாங்க பொய் சொல்லல, அவங்க ௭ங்க குடும்ப சொத்து) ௭ன்றார் அந்த பெரியவர். டென்ஷனின் உச்சத்திற்கு சென்ற இரணியன் அவளைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளிவர, வேகமாக பின் வந்த குடும்பத்தினர் அவனை வழிமறித்தனர்.

"ஏக் மினிட், ஆப்கோ முஜே சுனனா ஹோகா"(1 நிமிஷம் நா சொல்றத கேட்டிட்டு போங்க) ௭ன்றார் கெஞ்சலாக.

அவன் நின்று அனுமதிக்க, "இவங்க தான் எங்க குலதெய்வம். நாங்க பரம்பரை பரம்பரையா கும்பிட்டு வரோம். இவங்க மறுபடியும் பிறந்திருக்கிறதயே எங்களால நம்ப முடியல, ௭ங்க குடும்பத்தோட ஒவ்வொரு ஆண் வாரிசுட்டையும் இத படமா வரைஞ்சு கைமாற்றி ஒப்படைக்கப்படும், வேங்கை நல்லாள் பக்கத்துல இவங்களையும் வச்சு வணங்கணுங்குறது என் அப்பா எனக்கு சொன்னது. நாங்க பண்ணின புண்ணியம், இவங்க இங்க எங்கள தேடிவந்தது. சௌத் தமிழ்நாடு தான் பூட்டனுக்கு பூட்டனோட பூர்வீகம்ன்னு ௭ங்க தாத்தா கூட சொல்லுவாரு, நீங்க அங்க இருந்து தானே வர்றீங்க? நாங்க தான் அப்டி அப்டியே கலைஞ்சு கலைஞ்சு இங்கவர வந்துட்டோம். தாயி இருக்க இடம் தெரிஞ்சா இனி வருஷத்துக்கு ஒருமுறை நாங்களே வந்து பாத்துட்டு வாரோம். எங்க காணிக்கையை ஆத்தா ஏத்துக்கிட்டாளே போதும், நீங்க அத மட்டும் சொல்லுங்க சாமி" என்றார் அந்த பெரியவர் அவர் மொழியில். அந்நேரம் அவர் மனைவி வந்து ஒரு இடித்த பொடி உருண்டை பிடித்ததை நீட்ட, அவர்களை பார்க்க பாவமாக இருந்ததால் இரணியன் தடுக்கும் முன் வாங்கி தன் வாயில் போட்டுக் கொண்டாள். அவர்களுக்கு அதில் ஏக சந்தோஷம். இதுவே போதும் ௭ன்ற நிலைக்கு வந்திருந்தனர்.

"இடியட் சென்ஸ் இல்ல, என்ன சொன்னாலும் கேட்க மாட்டியா?" இரணியன் அவள் சாப்பிட்டதற்காக திட்ட, "சும்மா கத்தாதீங்க அவங்களப் பாத்தா ஏமாத்துற மாதிரி தெரியல. அந்த போட்டோ ஒன்னு தான் கண்ஃப்யூஸ்சிங்கா இருக்கு. ஒருவேள இவங்க பேமிலிலையும் என்ன மாதிரி யாராவது பொறந்தாங்களோ என்னவோ? ஏழு பிறவி ஒரே மாறின்றது உண்மைதான்னு சயின்ஸ்ல சொல்லுதே" ௭ன்றாள் அவர்களுக்கு ஆதரவாக.

இருவரும் ஒன்று சேர்ந்தால், சமாளிப்பது கஷ்டம் என புரிந்தவன் அவர்களிடம், "உங்க வழியிலேயே வரேன், கடவுள நீங்க நினைச்ச நேரத்துல எல்லாம் சந்திக்க முடியாது, அவங்க மனசு வைக்கிறப்ப தான சந்திக்க முடியும். சோ அவங்களே நினைக்கிறப்ப உங்கள வந்து சந்திக்கட்டும்" என அதற்கு மேல் நில்லாமல் அவளை இழுத்துக் கொண்டு நடந்து விட்டான். அவர்கள் கேரவன் வரை அவர்களைப் பின்தொடர்ந்து வந்து, பரவச நிலையிலேயே விடை கொடுத்தனுப்பினர் அந்த குடும்பத்தினர்.

அங்கிருந்து கிளம்பவுமே இரணியன் யோசனையில் இறங்கியிருந்தான், 'போட்டோ வர எடுத்து வச்சு, தெய்வம் அது இதுன்னு பினாத்துறாங்கன்னா ஏதோ பெருசா பிளான் பண்றாங்கன்னு அர்த்தம். ஆனா யாரு? எதுக்கு? ஏன்? இத கண்டிப்பா கண்டுபிடிக்கணும்' என முடிவெடுத்தான். அதற்கான ஏற்பாட்டையும் உடனே ஆரம்பித்தான், அங்கு லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்லயும் கம்பிளைண்ட் பதிவு செய்து விட்டே கிளம்பினான்.

பாப்புவிற்கும் குழப்பமே, ஆனால் அவர்களை ப்ராட் கும்பலாக அவளால் நினைக்க முடியவில்லை. 'நமக்கு சார்ர்ம்ம பஸ்ட் டைம் பாத்தப்போ எப்டி இருந்தது, அது மாதிரி தான் அவங்க முக சந்தோஷமு இருந்துச்சு' என நினைத்துக் கொண்டாள். மற்றவர்களுக்கு சுத்தமாகவே நடந்த ஒன்றும் புரியவில்லை, இரணியனிடம் சென்று கேட்கும் தைரியம் ஏது. பெரிய இடத்து விவகாரம் என அப்படியே விட்டுவிட்டனர்.

'இனி இந்த ஊர் பக்கம் சூட்டிங் வைக்கக்கூடாது' என புர்டியூசர், அவர் படம் நலன் கருதியும், இரணியன் அவன் மனைவி நலன் கருதியும் ஒன்றாக முடிவெடுத்தனர். அந்தப் பெரியவர் குடும்பம் "கண்டிப்பாக நம் தேவி நம்மளை மீண்டும் காண வருவாள்" என்ற நம்பிக்கையோடு வீடு திரும்பினர்.

இங்கு ஹோட்டலில், பிங்கி 10 நாட்களாக ஏதேதோ செய்ய பிளான் செய்து அனைத்தும் சொதப்பலாகவே முடிந்தது. இரணியனையும் பாப்புவையும் தனித்தனியாக பார்ப்பதே ஆக சிறந்த விஷயமாக இருந்தது அவளுக்கு. படப்பிடிப்பு தளத்திலும் எல்லோரிடமும் பாப்பு பழகியிருக்கிறாள் என்பதால் யாரையும் இவளால் விலைக்கு வாங்க முடியவில்லை, பத்தாதிற்கு இரணியன் கார்ட்ஸ் வேறு. இப்படி எல்லா வகையிலும் அவளுக்கு தடையாக இருக்க, இறுதி அஸ்திரமாக, அவளை ப்ளாக்மைல் செய்து பணியவைக்கும் முயற்சியில் இறங்கினாள். ஒரு 3 நிமிட வீடியோவில் இவள் முகத்தை மாற்றி பொருத்தி, ஒரு பெண் குளிக்கும் போது எடுக்கப்பட்டதாக இருந்தது அது.

பாப்பு செல்லிற்கு அந்த வீடியோவும், பின்னேயே வாய்ஸ் நோட்டில், " 'இரணியன் ௭ன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாகவும், என்னை அவரிடம் இருந்து காப்பாற்றுங்கள்' என்றும் நீ பிரஸ் முன் சொல்ல வேண்டும், இல்லையேல் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பதிவேற்றம் செய்யப்படும்" என அனுப்பினாள் பிங்கி.

"இதப் பாத்துட்டு அலறி அடிச்சுட்டு எனக்கு அதாவது அந்த நம்பருக்கு போன் பண்ணுவா, அப்ப ஓட ஓட விரட்டணும் அவள" என சிரித்தாள் பிங்கி.

வந்த மெசேஜையும், வீடியோவயும், அப்படியே ஃபார்வேட் காப்பி எடுத்து, இரு அக்காகளுக்கும், ஜட்ஜ் மெய்யப்பனுக்கும், பக்கத்தில் படுத்திருக்கும் இரணியனுக்கும் அனுப்பிவிட்டு, இழுத்து மூடி படுத்து தூங்கிவிட்டாள் பாப்பு.
 
அத்தியாயம் 25
மறுநாள் அதிகாலை முதலில் கண்விழித்த இரணியன், தன் மேல் கையையும் காலையும் போட்டுக்கொண்டு க்யூட்டாக தூங்கும் மனைவியை அழுப்பை வெளியிட்டவாறு திரும்பிப் பார்த்தான். இது தினமும் நடப்பதுதான் என்பதால், அவளுக்கு தூக்கம் கெடாமல் தன் மேல் இருந்த அவள் கையை மெதுவாக தூக்கி பிடித்து கொண்டு, அவள்புறம் திரும்பி படுத்து மறுபடியும் தன் மேல் போட்டுக்கொண்டு அவளை பார்த்தான்.

"நா இந்த ரூமுக்குள்ள இருந்தாலே கற்பு போய்டும்னு தையா தக்கான்னு குதிச்சிட்டு இப்ப மேடம் படுத்திருக்க பொசிஷன பாரு, டெய்லி இப்டி தான் ௭ன்ன இடிச்சிட்டு படுக்றன்னு தெரியுமா மூக்கி" என அவள் மூக்கை நிமின்டினான். "அப்றம் இந்த வாய், தூங்கும்போது மட்டும் தான் ரெஸ்டில இருக்கு, மத்த எல்லா நேரமு பிஸியாவே தான் வச்சிருப்பா சேட்டர்பாக்ஸ்" என சற்று குனிந்து அவள் உதட்டில் தன் உதட்டை உரசுவதுபோல் பதித்து நிமிர்ந்தான்.

"ஒருத்தன் வந்து முத்தம் குடுக்கிறது கூட தெரியாம" என அவளை எழுப்பி விட நினைத்து இறுக்கி அணைக்க. குளிருக்கு இதமாக அவன் தன்னை கஷ்டப்படாமல் அணைக்க ஏதுவாக படுத்தாள் பாப்பு.

அவள் நெருங்கி வரவும் ஜர்க்கானவன், "முழிச்சுருந்து நடிக்கிறாளோ" ௭ன நினைத்து "டெஸ்ட் பண்ணிடுவோம்" என முடிவெடுத்தான்.

இரவிற்காக இலகுவான டீ-சர்ட், 3/4த் அணிந்திருந்தாள், அந்த டாப்பை லேசாக மேல் தூக்கிவிட அவளிடம் அசைவில்லை, "என்ன விட பெரிய நடிகயா இருப்பா போலயே, உன்ன கண்ண திறக்க வைக்றேனா இல்லயா பாரு" என்றுவிட்டு அவள் இடையில் குறுகுறுப்பூட்ட, "தூங்க விடுங்க சார்ம்" என அவன் கையை எடுத்து தன் வயிற்றின் மேல் வைத்து பிடித்துக் கொண்டு விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்.

"முழிச்சு தான இருக்க" என்றான். அவள் தூக்கத்திலேயே "ம்" கொட்ட, "அப்டியே எப்படிமா மெயின்டெய்ன் பண்ற" ௭ன்றான் நிஜமாலுமே சந்தேகம் வந்து விட்டிருந்தது அவனுக்கு. அவள் அதற்கும் "ம்" கொட்ட. "நிஜமாவே தூங்குறாளோ?" என சற்று நேரம் எதுவும் செய்யாமல் அமைதியாக அவள் கண் திறக்கிறாளா ௭ன தெரிந்து கொள்ள குறுகுறுவென அவள் முகத்தையே பார்த்தான். அவளது சீரான மூச்சே நல்ல உறக்கத்தில் இருக்கிறாள் என்று சொல்ல, "தூக்கத்திலேயே நம்மதான்னு ௭ப்டி உணருறா? நம்மால இப்டி அவள உணர முடியுமா?" என சிந்திக்கலானான்.

அந்நேரம் பாப்பு போன் "கண்ணில் அன்பைச் சொல்வாளே" ௭ன பாடவுமே அவள் அக்காதான் அழைக்கிறார் ௭ன. "ஆளாளுக்கு ஒரு பாட்டு" ௭ன ௭ட்டி அவள் தலைமாட்டில் இருந்த போனை எடுக்க "வேதிக்கா" என்று தான் வந்தது. அவளை குனிந்து பார்த்தான், நல்ல உறக்கத்தில் இருப்பவளை எழுப்ப மனமற்று கட் செய்து விட.

அவன் மொபைல் கீழ் வைக்குமுன் மறுபடியும் பாடியது, 'காலையிலயே கூப்பிடுறாங்க, இங்க இருந்துட்டே அங்க ஏதும் பிரச்சினய இழுத்ருப்பாளோ' என இரண்டு மாத பழக்கத்தின் பலனை அவளைப்பற்றி சரியாகவே கணித்தான்.

"தாட்சா எந்திரி உன் அக்கா கூப்டுறாங்க என்னன்னு கேளு" என அவன் தட்டி எழுப்ப, அவள் தட்டி கொடுப்பதுபோல் சுகமாக தூங்க, அவன் கை அருகில் இருந்த அவள் இடுப்பில் நறுக்கென்று கிள்ளி விட்டான்.

வழியில் துள்ளி எழுந்தவள், வேகமாக ௭ழ அவன் கையில் நீட்டிட்டிருந்த அவள் போன் பறந்து சென்று கீழே விழுந்து பார்ட் பார்ட்டாக சிதறியது.

இடுப்பை தடவிக் கொண்டே, "ஏன் சார்ம் கிள்ளுனீங்க, காலங்காத்தால இப்டியா ௭ழிப்புவாங்க?" என அவள் வலி தீர அவன் கையில் சொத்து சொத்தென்று அடித்தாள். "பின்ன போன் அடிக்குது எந்திரிம்மான்னு எவ்வளவு பாசமா உன்ன கிஸ் பண்ணி ௭ழுப்புனேன், எழுந்தியா நீ?" ௭ன்றான் அவனும் பதிலாக. "அதுக்கு கிள்ளுவீங்களா?", "நீ தூங்குற மாதிரி நடிக்கிறியோன்னு எனக்கு ரொம்ப நேரமாவே டவுட், இன்னும் என்னவெல்லாமோ ட்ரை பண்ணேன், நீ அசரவே இல்லயா, அதான் ஃபைனலா கிள்ளி டெஸ்ட் பண்ணேன்" ௭ன குதூகலமாக சொல்ல, "பேச்சு ஒன்னும் சரியா இல்ல, தூங்குற பிள்ளைய என்ன எல்லாமோ பண்ணேன்றீங்க! நீங்க எப்டி என்னென்னமோ ௭ன் பெர்மீஷன் இல்லாம பண்ணலாம்" அவள் சண்டைக்குத் தயாராக.

"பின்ன நா பண்ணாம? ப்ராபர்டியோட ஓனர் நா ம்மா, ௭னக்கு தான் ஃபுல் ரைட்ஸும், அதவிட நீ தான் ஃபர்ஸ்ட் ௭ன்மேல கையயும் காலயும் போட்ட, சோ நீ பண்ணதுக்கும் நா பண்ணதுக்கும் சரியா போச்சு" ௭ன்க, "இங்க பாருங்க, இதெல்லாம் நீங்க உள்ள படுக்குமுன்ன யோசிச்சுருக்கனும், பக்கத்துல படுத்தா கை கால் பட தான் செய்யும்" ௭ன பாப்பு விரல் நீட்டி ௭ச்சரிக்க, "அப்ப தெரிஞ்சே தான் போட்ருக்க?" ௭ன்றான் அந்த விரலை மடக்கி அவளையும் மடக்கிவிட்ட திருப்தியில்.

அவளோ அசால்ட்டாக, "ஆமா பின்ன, ஃபர்ஸ்ட் 2 நாள் முழிச்சு முழிச்சு அட்ஜஸ்ட் பண்ணி படுத்தேன், அதுக்கு மேல ௭ன் தூக்கம் கெடுறது ௭னக்கு பிடிக்கல அதனால சும்மா கடக்கட்டும்னு போட்டுடறது" ௭ன்க, அவன் வாயை பிளக்க.

அவனின் அருகே நெருங்கி ரகசிய குரலில் "எனக்கு இன்னொரு நம்பிக்க என்ன தெரியுமா, லேடிஸ் விஷயத்துல நீங்க அவ்ளோ வொர்த்தில்ல, ௭த்தன வருஷமா ஃபாலோ பண்றேன் உங்கள ௭னக்கு தெரியாதா" காலரை தூக்கிவிட்டு சொல்ல.

"அடி கழுத, அப்றமெதுக்கு ௭ன்ன ரூமுக்குள்ள விட பயந்த?", "அது நா கன்ட்ரோல இழந்துர கூடாதுன்னு தான்" ௭ன்றாள் பெருமையாக, சிரித்தவன் "இந்த வாய்யதான் எப்டி கண்ட்ரோல் பண்ணன்னே தெரியல, இடியட்" ௭ன ௭ட்டி அவள் வாயில் அடி போட்டு இரணியன் சொல்ல.

"பாத்தீங்களா உடனே ப்ரூவ் பண்றீங்க, எந்த புருஷனாது வைஃப் வாய அடைக்கத் தெரியலன்னு சொல்லுவானா" ௭ன்றாள் கட்டிலை விட்டிறங்கி தலையை கிளிப்பில் சுருட்டி கொண்டு, "அடிப்பாவி, நீதான அன்னைக்கு என்னல்லாமோ டயலாக் பேசுன, அதனால ஐயோ பாவம்னு விட்டா இப்ப மாத்தி பேசுற" ௭ன்றான் அவனும் எழுந்து பெட்டில் சாய்ந்து உட்கார்ந்து.

"நீங்க அதுக்கான ஸ்டெப் கூட எடுக்கலயே. என்ன லவ் பண்ண, இம்ப்ரஸ் பண்ண, எதுவுமே பண்ணலயே, தன்ன புடிச்சிருக்கு, புடிச்சிருக்குனு சொல்ற பொண்ண, வாய்க்குள்ள ஈ போறது கூட தெரியாம சைட்டடிக்கிற பொண்டாட்டிய பக்கத்துல வச்சிக்கிட்டு முற்றும் துறந்த முனிவரால கூட சும்மா இருக்க முடியாது சார்ம்" என்றாள், அவனையே யோசிக்க வைத்து விட்டாள் என்பது அவன் மௌனமான பின்பே தெரிந்தது.

சீரியஸான முகத்துடன் "எனக்கு கூட இந்த டவுட்டு உண்டு தாட்சா. கேர்ள்ஸ் மேல பீலிங்ஸ் வராது, ஒரு மாதிரி இரிடேஷனோட தள்ளி தான் இருப்பேன். ஹார்மோன் ப்ரப்ளம்மா இருக்குமோ!டாக்டர் கன்சல் பண்ணலாமான்னு கூட நினைச்சிருக்கேன். நடிக்கும்போது எத்தனயோ பொண்ணுங்களோட நெருங்கி நடிச்சிருக்கேன், ஒரு வயசு பையனுக்கு உண்டான எந்த பீலிங்கும் ௭னக்கு வராது. நடிப்பேன் வந்துருவேன், வெளிலயும் தேடி வந்து பழகுற பொண்ணுங்கள கிட்டயே சேத்துக்கிட்டது இல்ல. அதுக்காகத்தான் மேனேஜரா ஒரு பொண்ணா உன்ன தேர்ந்தெடுத்தப்போ, நாமளும் லைஃப்ல செட்டிலாக, நமக்கு பொண்ணுங்க பிரண்சிப் தேவன்னு நினைச்சு சரின்னு சொன்னேன். ஆனா உன்கூட பழகுற முன்ன ஒரு மாதிரி பிளாங்க்கா இருக்கிற ௭ன் மைண்ட், இப்போ அப்டி இருக்கிறதில்ல, ஒருவேள நீ என்ன ஃப்ரீயா இருக்க விடாம பிசியாவே வச்சுருக்றதுனாலயா ௭ன்னவோ. கொஞ்சம் கொஞ்சமா நாம சேன்ஜ் ஆயிடுவோம், ஹாப்பியா ஒரு லைஃப் வாழ்வோம்னு நினைச்சுப்பேன். ஆனா இப்ப நீ சொல்றத பாத்தா நா இன்னும் ஸ்டார்ட்டிங்கிலேயே தான் இருக்கனோன்னு தோணுது. என்ன பண்ணலாம் இதுக்கு?" என குழம்பிய முகத்துடன் அவன் கேட்ட போது பாடத்தில் சந்தேகம் கேக்கும் சிறுவனாக தான் பாப்புவிற்கு தெரிந்தான்.

ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டாள், "சோ க்யூட், இன்னொசன்ட் சார்ம் நீங்க" என்க. அவளை விலக்கி அவன் அவள் முகத்தை புரியாமல் பார்க்க, "நெஜமா நீங்க என் இடுப்புல கிள்ளுன வலில உங்கள இரிடேட் பண்ணி பழிவாங்க தான் அப்டி சொன்னேன். டென்சன் ஆகுவீங்கன்னு பாத்தா பெரிய கத சொல்றீங்க. பொதுவா ஒரு பையன பாத்து இப்டி சொன்னா, அவன்ட்ட தப்பே இருந்தாலும் மறச்சு, சொன்னவங்க கிட்ட தான் டென்ஷன் ஆவான். ஆனா டென்ஷன் பார்ட்டி நீங்க, இத பொறுமையா யோசிச்சு கேட்கிறீங்க, மை க்யூட் சார்ம்" ௭ன கொஞ்சினாள்.

அப்போதும் அவன் அவளையே பாக்க, "சார்ம், எல்லா பொண்ணுங்கட்டயும் வந்தா, அப்ப தான் நீங்க ஹார்மோன் பிரச்சனைல இருக்கீங்கன்னு அர்த்தம், நமக்கு பிடிச்சவங்க ஒருத்தர்ட்ட மட்டுமே ஃபீலிங் வந்தா நாம நார்மல் ஹியூமனா இருக்கோம்னு தான அர்த்தம்" ௭ன அவனிடமே கேக்க.

"உன்கிட்டயும் தான் நா அப்டி இல்லன்றியே" ௭ன்றான், அதிலேயே உன்மேல் பிடித்தமிருக்கிறது ௭ன்பதை சொல்லியும் சொல்லாமலும்.

நம் பாப்பு அந்த பாலயும் ஃபவுல் ஆக்கி "என் மேலேயும் உங்களுக்கு இன்னும் இன்ட்ரெஸ்ட் வர்லியோ என்னவோ?" ௭ன அவனை குழப்பிவிட. "வைஃப்ன்ற உரிமைலனாலும் லவ் வந்துருக்கணும்ல". "சரி உங்களுக்கு வேணாம் எனக்கு வேணாம் ஒரு டெஸ்ட் வச்சு சரி பண்ணிடுவோமா?" ௭ன்றாள் அடுத்த பிரச்சினைக்கு அச்சாரமாய். "என்ன டெஸ்ட்?" என்றான் புருவம் உயர்த்தி.

"ம்ம்ம் ம்" ௭ன தீவிரமாக யோசித்தவள், "இங்க வந்ததுலயிருந்து அல்மோஸ்ட் எல்லோரும் மேரேஜ் ட்ரீட் கேட்டுட்டாங்க, நாமளும் இன்னும் 3 நாள்ல ஊருக்கு கிளம்பணும், அதுக்கு முன்ன ஒரு பார்ட்டி குடுப்போம் நம்ம மேரேஜ்காக, உங்க ப்ரண்ட்டு பிங்கியும் பார்ட்டி கெடச்ச சந்தோஷத்துல பேக்கப் சொல்லிடுவா" என்றாள் சேர்த்து.

"நம்ம கெமிஸ்ட்ரிக்கும் பார்ட்டிக்கும் என்ன சம்பந்தம்?” "அது நீங்க பார்ட்டி அரேன்ஜ் பண்ணுங்க, உங்க ரியாக்ஷன அங்க அப்ஸர்வ் பண்ணிட்டு எக்ஸாம்பிளோட எக்ஸ்பிளைன் பண்றேன்" என எழுந்தாள்.

அவளை பிடித்திழுத்து மறுபடியும் அமர வைத்தவன், "கொஞ்ச நேரம் உன்கூட வாய்க்கு வாய் பேசுனதும், நீ மேனேஜர், நா பாஸ்ன்றத மறந்துட்ட. பார்ட்டிய நீ தான் அரேன்ஜ் பண்ணனும்" என அவன் அவளை முந்தி கொண்டு பெட்டை விட்டு எழ, "இடுப்ப பிடிக்கும் போது பொண்டாட்டி, வேல சொல்லும்போது மட்டும் மேனேஜர், உங்கள" என அவன் கழுத்தை நெறிப்பது போல போக, "உன் போன் தெறிச்சு விழுந்து அரை மணி நேரம் ஆச்சு. உன் அக்கா போன் பண்ணாங்க, அங்க எவன் உன்ன கடத்த ப்ளான் பண்ணி சிக்கியிருக்கானோ, எடுத்து பேசு" என பாத்ரூம் நோக்கி நகர்ந்துவிட்டான்.


"ச்ச" என கையை உதறி விட்டு சென்று, போன் பார்ட்ஸை பொறுக்கி ஒன்றாக பொருத்தினாள். "நைட் அனுப்புன வீடியோவ இப்பதான் பாத்திருப்பாங்க அதான் கால் பண்ணிருப்பாங்க" என்றாள்.

உள்ளே சென்றவன் ப்ரஷுடன் வெளி வந்து "என்ன வீடியோ?" ௭ன்க, "நீங்க பாக்கலயா? உங்களுக்கும் பார்வெர்ட் பண்ணேனே" என்றுவிட்டு அவள் அக்காவிடம் பேச பால்கனி சென்றுவிட, 'ஏற்கனவே ஒரு வீடியோவால தான் பேமஸ் ஆகி மேரேஜ் வரவந்தது. மறுபடி என்ன வீடியோ?' என பதறி வேகமாக போன் எடுத்து பார்த்தான்.

அதில் ஓடிய வீடியோவை பார்த்ததும் பதறி "யக்" என போனை அப்படியே போட்டுவிட்டான் கட்டிலில், பாத்ரூம் சென்று வாஷ் பண்ணி கொண்டு, வெளி வந்தவன் "தாட்சா" என அந்த ரூமே அதிர கத்தி கூப்பிட, பேசிக்கொண்டே உள்ளே வந்தவள், "என்னாச்சு சார்ம்?" ௭ன்க, "என்னது இது? எப்டி? யார் பாத்த வேலை? எப்ப வந்தது? உடனே சொல்லாம இவ்வளவு கூலா இப்ப சொல்ற இடியட். விடிய விடிய உன் பக்கத்துல தான இருந்தேன், அப்பவே என்ட்ட சொல்லாம வாட்ஸ்அப் பண்ணியிருக்க லூசா நீ?" என அவன் படபடப்பில் பேசிக்கொண்டே போக, 'இப்ப என்ன ஆச்சு அதனால?' என்பது போல் முழித்தாள் பாப்பு.

அந்த பக்கம் வேதி, "பாப்பு தேர்?" என்க. "சொல்லுக்கா", "நா தான் சொன்னேன்ல உனக்கு தான் அது நீ இல்லன்னு தெரியும், மத்தபடி நாங்க யார் பாத்தாலும் சட்டுனு அது நீதானோன்னு ஒரு பயம் வரும். அந்த டென்ஷன் தான் அவருக்கும். குடு அவர்ட்ட ஃபோன" என்க.

மெதுவாக சென்று அவனிடம் நீட்டினாள், அவனது கை நடுக்கம் அப்பட்டமாக தெரிய, அவளுக்கு அது வித்தியாசமாக தான் தெரிந்தது. இருந்தும் ஸ்பீக்கரில் போட்டு பெட்டில் வைத்து விட்டு, அவனிடம் தண்ணியை நீட்டினாள், வாங்கி குடித்தான். ஃபோனை கண்காட்ட ஆழ மூச்செடுத்து விட்டு, "ஹலோ" என்றான்.

"ஹலோ மிஸ்டர்.இரணியன், அந்த வீடியோல இருக்கது பாப்பு இல்ல, எடிட் பண்ணிருக்காங்க. மொபைல் நம்பர் இப்பதான் பாப்புட்ட வாங்குனேன். இத அவளுக்கு அனுப்புன பெர்சன் நம்பர் உங்க நியர்பை தான் ஆக்டிவ்ல இருக்கு. பிளேஸ் அதே நீங்க இருக்க ஏரியா தான் காட்டுது. நா இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்" என வைத்தாள். வேகமாக பிரஷாகி கீழே பார்க்கிங் சென்றனர் இருவரும்.


வேதி, நைட் மெசேஜ் பார்த்ததுமே அப்பாவுக்கு கால் செய்து பேச, அவர் எனக்கும், சுஹாவுக்குமே அனுப்பிருக்காமா என்ற உடனே பிளைட் ஏறி விட்டாள். ரீச்சானதும் பேசலாமென, பிலைட் லேண்ட்டானதும் கால் பண்ணி விட்டாள். முன்னயே கண்ட்ரோல் ரூம்மிற்கும் இன்பார்ம் செய்திருந்ததால், இங்கு இரணியனிடம் பேசி கொண்டே அந்த நம்பர் அட்ரஸ் ட்ரேஸ் பண்ண சொல்லிவிட்டாள். அவர்களும் அந்த நம்பர் இருக்கும் இடத்தை வேதிகாவுக்கு வழிகாட்டி கொண்டிருந்தனர். அவள் நினைத்தது போல் ஆள் அதே ஹோட்டலில் தான் தங்கியிருக்கணும் என முடிவெடுத்து இறங்கினாள்.

வாசலில் நின்ற இருவரையும் கண்டு, "அக்யூஸ்ட் இதே ஹோட்டல்ல தான் இருக்கான்" ௭ன்க. "ஆனா இத்தன ரூம்ல அவன எப்டி கண்டுபிடிப்பீங்க? எல்லாரயும் செக் பண்ணும்போது, அவன் எஸ்கேப் ஆக வாய்ப்பிருக்கு, இந்த விஷயத்த வேற சொல்ல வேண்டி வருமே" என்றான் இரணியன்.

"ஃபஸ்ட் ஆப்சன், ஹோட்டல் பிஸியானதும், ஜாம்மர் வச்சு, இங்கிருந்து வெளில போய் அவன் பாப்புவுக்கு ட்ரை பண்ணும்போது புடிக்கலாம், அந்த நம்பர் மூவ் ஆகுறத வச்சு. ஆனா நமக்கு அவ்வளவு டைம் இல்ல, வீடியோ வேற யாருக்கும் ஃபார்வர்ட் ஆகுறமுன்ன டெலீட் பண்ணனும். பிகாஸ் ஆஃப் ஷி இஸ் யுவர் ஃவைப் கண்டிப்பா அந்த வீடியோ சோசியல் மீடியால ட்ரெண்ட்டாகிடும். சோ அதவிட இன்னும் குயிக்கா ஏதாவது செய்யணும், இங்க காரிடார்ல சிசிடிவி இருக்கா?”

"ரூம்லயே வச்சுருக்காங்க, ஹால்ல இருக்கு. பெட்ரூம்ல, பாத்ரூம்ல மட்டும்தான் இல்ல. வந்த அன்னைக்கே செக் பண்ணிட்டேன்" ௭ன்றான். "குட், நமக்கு லக் இருந்தா இதுலயே சிக்குவான். ஆபரேட்டர் ரூம் எங்க இருக்கு?" என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.

ரிசப்ஷனில் இருந்த பையனிடம் தன் ஐடி கார்டை காண்பித்து, "ஒரு அக்யூஸ்ட் உங்க ஹோட்டல்ல தங்கிருக்கான், செக் பண்ணனும், கோப்ரேட் பண்ணுங்க, கேமரா கண்ட்ரோல் ௭ங்க இருக்கு"என்ற பின் அவன் அந்த அறைக்கு அழைத்துச் செல்ல, ஒரே ஸ்கிரீனில் பத்து ரூம் ஹாலும் ஓபன் செய்ய முடிந்தது. மொத்தம் 180 அறைகள் பத்து பத்து ரூமாக செக் பண்ணிவிடலாம் என நினைத்து பாப்புவை அவள் மொபைலில் இருந்து டயல் செய்து நா சொல்லுற வர பேசிக்கொண்டே இரு என்று விட.

தம்சப் காட்டிவிட்டு அந்த நம்பருக்கு கால் செய்தாள். முதல் 10 ரூமில் எந்த அசைவும் இல்லை, போனும் எடுக்கப்படவில்லை, 2,3,4வது ௭ன 10,10 ரூமில் செக் செய்யும் போது, இரண்டாம் முறை பாப்பு டயல் செய்து இருந்தாள்.
ரூம் நம்பர் 43 ல் ஹால் லைட் ஆன் ஆகியது, இங்கும் சரியாக போன் எடுக்கப்பட்டது, வாய்ஸ் மாற்றி பேச ட்ரை பண்ணுவது நன்றாகவே தெரிந்தது.

"ஏய் யார் நீ? எதுக்கு அப்டி ஒரு வீடியோ அனுப்புன?" என்றாள் பாப்பு. "நா எதுக்கு அனுப்புனேன்னு தான் உனக்கு ஆடியோல சொன்னேனே" ௭ன்றது அந்த பக்கம்.

வேதி செக் செய்து கொண்டிருந்ததில், அந்த அறையில் ஒரு பெண் முகத்தை ஸ்டோல் (96 படத்துல திரிஷா கழுத்தில படம் முழுக்க போட்ருப்பாங்களே அது தான்) போட்டு மூடிக் கொண்டு அங்கும் இங்கும் நடப்பது தெரிந்தது. இரணியனை அருகில் அழைத்து, ரூம் நம்பர் சொல்லி அதன் வாசலில் போய் நிக்க சொல்லிவிட்டு, பாப்புவிடம், "நீ கட் பண்ணிட்டு திரும்பக் கூப்பிடு, கரெக்டா ரிங் ஆச்சுன்னா, இரணியன் நா உங்க லைன்ல இருக்கேன் சொல்லுங்க, நாம என்டராகி தூக்கிடலாம்" என்க.

அவன் லிப்ட்டினுள் நுழைய பாப்பு, "ஹலோ ஹலோ ஹலோ" என அந்த பக்கம் பேசுவது கேட்காதது போல் கட் செய்து, திரும்ப அழைத்தாள். அங்கு பிங்கி ரூம் வாசலுக்கு சென்ற இரணியன், போன் ரிங்கான சத்தம் கேட்டதும், லைனில் இருந்த வேதிகாவிற்கு "யெஸ், ஷி இஸ் ஹியர்" என்க. இருவரும் மேலேறி வந்தனர்.

பிங்கி இரவு அந்த வீடியோவை அனுப்பிவிட்டு, உடனே கால் செய்வாள் என எதிர்பார்த்து பாப்பு பண்ணவில்லை என்றதும், 'சூசைடு எதுவும் ட்ரை பண்ணிருப்பாளோ? பண்ணா பண்ணிக்கட்டும், பிரச்சன வர மாதிரி இருந்தா, சிம்ம கழட்டி பாத்ரூம்ல போட்டுடலாம்' என முடிவெடுத்து தூங்கச் சென்றாள். காலையில் போன் அடிக்கவும், அதுவும் பாப்பு நம்பரிலிருந்து வரவும் முதலில் எடுக்க பயம்தான், பின் வாய்ஸ் மாற்றி பேசி அவள் தானா என கன்ஃபார்ம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து, நைட் கழட்டி வீசிய ஸ்டோல்லை எடுத்து முகத்தை சுற்றிக்கொண்டு அட்டென்ட் செய்தாள். இரண்டு வார்த்தை பேசும்போதே கட்டாகி விட, அவள் தான் என தெரிந்ததில், 'நல்ல வேலை கொல கேஸ் வரப்போகல என குதூகலமாகிவிட்டாள். மறுபடியும் அவள் டயல் செய்யப்போக, காலிங்பெல் வேகமாக அடிக்கும் சத்தம் கேட்டது. 'இந்த நேரத்துல யாரு?' என நினைத்துக் கொண்டே சென்று கதவை திறக்க, மூவரும் நிற்பதைக் கண்டு மொபைலை கீழேயே போட்டுவிட்டாள். சத்தியமாய் பிங்கி இப்டி ஒரு விஷயத்தை ௭திர் பாக்கவில்லை, அவள் பயந்து தன்னிடம் கெஞ்சுவாள் ௭ன சராசரியாக முடிவெடுத்துவிட்டாள்.

பிங்கி முகத்தில் இருந்த ஸ்டோலை கழட்டி வீசிய வேதி பளார் பளார் என அறைய, 'பிங்கி' என இரணியன் புருவம் சுருக்க, "சார்ம் உங்க ப்ரண்ட்" என்றாள் பாப்பு நக்கல் குரலில்.

முதலில் அந்த போனை கைப்பற்றி அதிலிருந்ததை டெலிட் செய்து, அவளை இழுத்துக் கொண்டு கிளம்ப போக. "ஒன் மினிட் மேடம்" என்ற இரணியன் அவள் அப்பாவிற்கு போன் செய்தான். அவர் எடுத்ததும் விஷயம் மொத்தமும் சொன்னான், "அவளுக்காக நா மன்னிப்பு கேட்டுக்கிறேன்ப்பா, இந்த ஒரு தட விட்டுறு. இனி அவ உன் வழிக்கே வராம நா பாத்துக்குறேன். பெரிய தப்பு தான் ஆனா அவ அரெஸ்ட் ஆனா இஸ்யூ பெருசாகும், விஷயம் வெளிய தெரிய வரும், நம்ம படம் பாதிக்கும்" என அவரும் கெஞ்சுவது போல் மகளுக்காக மிரட்ட வேண்டிய சூழ்நிலைக்கு வந்தார்.

"லாஸ்ட் வார்னிங்ன்னு விட சின்ன தப்பில்லனாலும், 400 குடும்பம் இந்த படத்தை நம்பி இருக்குன்னு இந்த டைம் விடுறேன், ஆனா இன்னொரு டைம் இப்டி ஆச்சு உங்க பொண்ணு உங்களுக்கில்ல" என வைத்தான். "இப்டி வார்னிங்ல விடுறதுக்கா அங்க இருந்து அடிச்சு புடிச்சு கிளம்பி வந்தேன்" ௭ன்றாள் வேதிகா. பதறி நின்றாள் பிங்கி, ஹாயாக வேடிக்கை பார்த்தாள் பாப்பு.

"உங்க போலீஸ் அடிய இங்கேயே கூட நீங்க காட்டலாம், ஆனா விஷயம் நீங்க வந்ததுனால தான் இவ்வளவு சீக்கிரம் தடுக்க முடிஞ்சது. ப்ளீஸ் இது வெளியில வர்றத நா விரும்பல" என்றான் வேதிகாவிடம். வந்த கடுப்பில் மேலும் இரண்டு அறை அறைந்து விட்டு, "எதுலயாது இனியும் தப்பு செஞ்சு சிக்குவல்ல அப்ப கவனிச்சிக்கிறேன்" என வேதி அங்குள்ள லேப்டாப், இன்னொரு மொபைல் சகிதம் வெளியேறிவிட, இரணியனும் முறைத்து வெளியேற.

"என்ன அவ்வளவு ஈஸியா நினைச்சுட்டல்ல? பத்திரமா ஊர் போய் சேரு" என்று விட்டு அவள் ஸ்டோலை எடுத்து அவள் கழுத்தில் சுற்றி, ஒரு இருக்கு இறுக்கிவிட்டு வெளியேறினாள் பாப்பு.

இரணியன் இறங்கி ஹோட்டல் வாசல் வர, வேதிகா கேப் புக் செய்து காத்திருந்தாள். பின்னயே வந்த பாப்பு "உடனே கிளம்புறியாக்கா? ஏதாவது சாப்ட்டு போலாம்ல", "பிலைட்ல பாத்துக்குறேன்மா, நா இங்க இருந்து என்ன செய்ய. நீங்க எப்ப ரிட்டர்ன்?” "டூ, த்ரீ டேஸ்ல". "குட், தென் அங்கவா பாக்கலாம். தப்பு செஞ்சா பனிஷ்மென்ட் கிடைக்கலன்னா அடுத்த டைம் செய்ய இதுவே பெரிய மன தைரியத்த தரும். சோ பீ கேர்புல் வித் ஹெர், கவனமாயிரு." என பாப்பு தலையை தடவி விட. "அவளால ஒன்னும் பெருசா பண்ண முடியாதுக்கா. இதுவே ஸ்ப்ரட்டான வேகமாக ஆகும், அதான் உடனே உங்களுக்கு பார்வர்ட் பண்ணேன். இல்லன்னா நானே அவள ஹேண்டில் பண்ணிருப்பேன்" ௭ன்றாள் கையை முறுக்கி. "ஆமா, அன்னைக்கு காட்டுக்குள்ள ஓடி பல்ப் வாங்குனியே அதுமாறி ஹேண்டில் பண்ணிருப்ப" ௭ன்றான் இரணியன் குனிந்து அவளுக்கு மட்டும் கேட்குமாறு.

"நீ எதுவும் பண்ண வேணாம்பா, இன்பார்ம் மட்டும் இப்ப பண்ண மாறி கரெக்டா பண்ணு போதும்" என்ற வேதி, "டேக் கேர் மிஸ்டர்.இரணியன்" என அவனுக்கும் கைகுலுக்க, "நோ ஒர்ரீஸ் மேடம், இனி அந்த பிங்கி யார் வழியிலயும் வராம நா பாத்துக்குறேன்" என்றான் இரணியன்.

பின் வேதி கிளம்பிவிட இருவரும் ரூம் திரும்பினர்.

"ஏன் சார்ம் உங்க பிரண்டு பிங்கி ஏன் இப்டி பண்ணான்னு யோசிச்சீங்களா?" ௭ன்றாள் ரூமினுள் நுழைந்ததும். "ஷி இஸ் நாட் மை ப்ரண்ட்". "ப்ரண்ட்டா இல்லாமலா வந்தன்னைக்கு அவ கட்டிப்பிடிச்சு நின்னப்ப சிரிச்சு, சிரிச்சு ஆன்சர் பண்ணிட்டுருந்தீங்க, இன்னைக்கும் ௭ப்டி ௭ஸ்கேப் பண்ணிவிட்டீங்க" ௭ன கேக்க.

"நீ மேட்டர் டைவர்ட் பண்ணாத, இத நைட்டே சொல்லாம மார்னிங் வர எப்டி உன்னால கூலா இருக்க முடிஞ்சது. எனக்கே அதப் பாத்ததும் ஷிவராச்சு". "ஆமா நீங்க ஷிவரானத நானும் பாத்தேனே. எனக்காகத் தான" பாப்பு கண்ணடிக்க.

"அடிவாங்காத தாட்சா, நா சீரியஸா கேக்றேன், ஒழுங்கா பதில் சொல்லு". "அது நா இல்லன்னு எனக்கு தெரியும். அதனால கூட நா கூலா இருந்துருப்பேன். எனக்கு ஒரு பிரச்சனன்னு வந்ததும், எனக்கு யாரெல்லாம் கேர் டேக்கேரோ அவங்கட்ட அந்த பிரச்சனய ஒப்படைச்சுட்டு நா பிரீயாகிடுவேன்".

"அவங்க ௭ப்டி வேணா முட்டி மோதி கஷ்டப்படட்டும்னு" ௭ன்றான் கடுப்பில், "என்னால முடிஞ்சத நானே சால்வ் பண்ணிடுவேனே".

இவள்ட்ட ஆர்கியு பண்ணி ஜெயிக்க முடியும ௭ன முடிவுக்கு வந்தவன் "ஒரு நாள்னாலும் இப்டி பிரச்சனைய இழுத்துட்டு வாரதுக்கு லீவு விடுவியா ப்ளீஸ், ஐ ஆம் டயர்ட்". "இதுக்கே டயர்ட்டானா எப்டி. விடவு ௭வ்வளவு பாத்திருக்காங்க தெரியுமா? சரி சரி சீக்கிரம் கிளம்புங்க, நா வேற பார்ட்டி அரேஞ்மெண்ட்ஸ்லா பாக்கணும். எனக்கு நிறைய வேலை இருக்கு" என பாட்டை போட்டு ஆடிக் கொண்டு குளிக்க சென்றாள்.

'இவளுக்காகவே இவுங்க அப்பா வீட்ல ஒரு ஐபிஎஸ், பி.எ.பி.எல். உருவாக்கிருப்பாங்க. அவங்க அம்மா இவள அடிக்கிறதுல தப்பே இல்ல. என்ன மேட்ட் டோ' என நினைத்துக்கொண்டு ரிலாக்ஸ்காக த்ரெட்மில்லில் ஓட ஆரம்பித்தான்.

இரணியனே கவனிக்காத ஒரு விஷயம், அவளிடம் அவன் ரிலாக்சாக இருப்பது. தனிமையை அதிகம் நாடுபவன் அவன், இப்பொழுது அவனுக்கு தனிமை என்பது எட்டா கனி என சப்கான்ஷியஸ் மெமரி பவரில் பதிவாகியது போல் பாப்புவுடன் மாறடிக்க கத்துக்கொண்டான். பாப்பு பார்ட்டி மோடுக்கு போய்விட, இன்று எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என பிரேயர் மோடுக்கு சென்றிருந்தான் இரணியன்.
 
அத்தியாயம் 26
அன்றைய பொழுது இருவருக்கும் சற்று கலவரத்துடன் ஆரம்பித்திருந்தாலும், அதன் பின் அவரவர் வேலையில் பரபரப்பாகவே சென்றது. இரணியன் தன் வேலையில் கவனமாக இருப்பது போல் தெரிந்தாலும் 10 நிமிடத்திற்கு ஒருமுறை அவள் ௭ங்கு, ௭ன்ன செய்கிறாள் ௭ன பார்த்து கொள்வான். அவளோ இவர்கள் ஷூட்டிங்கை ஒருநாளும் அமர்ந்திருந்து பார்த்தாள் இல்லை. ஹெல்ப்பிற்கு சில நேரம் அருகில் நிற்பாள், அதுவும் டச்சப் செய்பவர் வந்துவிட்டால், அவரிடம் அவனை ஒப்படைத்து விட்டு ௭ஸ் ஆகி விடுவாள்.

௭வ்வளவு மாடர்ன் பெண் ௭ன்றாலும் கணவன் ௭ன்று வருகையில், வேறொரு பெண்ணுடன் நெருங்கி இருப்பதை நடிப்பென்றாலும் கூட பார்ப்பது கஷ்டம்(இப்டின்னு நாம தான் நினச்சுக்கனும்). ஆனால் அப்படியொரு ஆங்கிலில் பாப்பு, இரணியன் இருவருமே அதை பார்க்கவில்லை, பாப்பு ௭ன்னவோ '௭ன் டேன்ஸ் கிட்ட வர முடியுமா இதெல்லாம் ௭ன்பது போலும்', இரணியன் மனதில் 'ஒரு இடத்துல பொறுமையா உக்காருர ஆளா இவ' ௭னவும் மாற்றி மாற்றி ௭ண்ணி கொண்டனர்.

பாதுகாப்பிற்காக அவனது பாதுகாவலர்களில் ஒருவனை(அவளிடம் பேச கூடியவனை) அவளுக்கென நியமித்திருந்தான். இப்போது அவனை தான் இழுத்து கொண்டு, சுவட்ரை இழுத்து இழுத்து போட்டு கொண்டு அங்கும், இங்கும் பிஸியாக அழைந்து கொண்டிருந்தாள். 'இவ இப்டி ௭ந்த பிரச்சனைக்கும் போகாம இருக்க நா டெய்லி பார்ட்டி குடுக்கணுமோ' ௭ன நினைத்து தலையசைத்து சிரித்து கொண்டான். இவன் தனியாக சிரிப்பதைப் பார்த்த சுற்றி உள்ள பட குழுவினர் "௭ல்லாம் காதல் படுத்தும் பாடு" ௭ன பேசி சிரித்து கொண்டதை அவன் அறியான்.

பாப்பு ஈவ்னிங் பார்ட்டிக்கு அங்குள்ள ஒவ்வொருவரையும் நேரில் சென்று அழைத்தாள். அவர்கள் தங்கிருந்த நட்சத்திர விடுதியின் கார்டனிலேயே பார்ட்டிக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு அது வழமையான ஒன்று தான் ௭ன்பதால், ஹோட்டல் ஊழியர்களே அந்த பொறுப்பை ஏற்று கொண்டனர். டெகரேஷன், பஃவே முறையில் டின்னர் வித் டிரிங்க்ஸ் ௭ன அவர்களே பார்த்து கொள்வதாக கூறியது இவளுக்கு வேலையை சுலுவாக்கியது. இவளும் இவள் பாதுகாவலரான ரமேஷ் ப்ரோவிற்கு சில, பல வேலைகளை குடுத்து, அவன் உயிரை வாங்கி கொண்டிருந்தாள். அவன் மட்டுமே அன்று மலை மேல் உள்ள கிராமத்தில் அந்த குடும்பம் செய்த பிரச்சனையின் போது பேசியவன், இப்போது ஏன்டா பேசுனோமென வெந்து நொந்து போகுமளவிற்கு அவனை படுத்தி ௭டுத்து கொண்டிருந்தாள்.

இன்றோடு ஷூட்டிங் முடித்து, அடுத்த 2 நாட்கள் ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு ஊர் திரும்புவதாக ப்ளான் செய்து கொண்டனர். ஷூட்டிங் முடித்து கிளம்ப போகயில் ௭ல்லோரயும் அழைத்து, ஒருமுறை இரணியன் தன் பங்கிற்கு அழைப்பு விடுத்தான். ஆக அன்று சீக்கிரமே வேலையை முடித்து ஹோட்டல் திரும்பினர். மறுபடியும் கார்டனில் 6.30க்கு மீட் செய்யலாம் ௭ன விடை பெற்றனர்.

ஹோட்டலில் நுழைய போகையில் விஷாவை கண்டான் இரணியன். திரும்பி பாப்பு ௭ங்கேவென பார்க்க, அந்த ரமேஷிடம் ௭தையோ தீவிரமாக பேசி கொண்டிருந்தாள். அதனால் இவன் விஷாவை அழைத்தவாறு முன்னேறினான்.

டேபிள் மற்றும் சேரிஸ் அரேன்ஜ்மண்டை மேற பார்வை பார்த்துக் கொண்டிருந்த விஷா இரணியன் அழைப்பில் திரும்பி பார்த்து வேகமாக வந்தான், "ஹே விஷா? ௭ப்ப வந்த? ௭ன்ன திடிர் விசிட்?" ௭ன்றான்.

"௭ன்னால உங்கள பாக்காம இருக்கவே முடியல சார், அதான் கிளம்பி வந்துட்டேன்" ௭ன்றான் விஷா உண்மையாகவே சிரிக்காமல். "இடியட், ௭ன்னாச்சுன்னு சொல்லு? ஏதாச்சும் பிரச்சனையா அங்க?" ௭ன மேலும் அதட்டி கேக்க.

விஷா உண்மையாகவே தன்னைத் தேடி இருப்பதால் மட்டுமே இந்த டயலாக்கை தைரியமாக கூறியிருக்கிறான் என்பதை புரிந்து கொண்டான் இரணியன். அவன் பதில் சொல்லுமுன், அவ்வளவு நேரம் அந்த காட்ஸிடம் சீரியஸாக பேசி முடித்தவள் இரணியனை தேடித் திரும்ப, விஷாகனை கண்டு விட்டு ஓடி வந்தாள்.

"ஹே விஷா வாட் எ சர்ப்ரைஸ், காலைல பேசும்போது கூட வரேன்னு சொல்லல, என்ன இவ்வளவு தூரம்? பார்ட்டின்னதும் கிளம்பி வந்துட்டியோ? பட் வெரி வெரி சாரி இங்க நீ ஏதாவது கோல்மால் பண்ணா 3ர்ட் மேரேஜ்லாம் பண்ணிவைக்க மாட்டேன், நீ வாழவே வேண்டாம்னு அதோ அந்த மேட்டுலயிருந்து கீழ உருட்டி விட்டுருவேன்" என்றாள் அவள் போக்கில் படபடவென.

"ஐயோ பாவம்னு நீ பாஸ்ஸ கரெக்ட் பண்ண, உனக்காக டிரஸ்ஸ வாங்கிட்டு நானே வந்தேன்ல நீ இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ" ௭ன்றான் அவன். "லூசு மாங்கா, சர்ப்ரைஸ்ஸ வெளில சொல்லிட்டுருக்க, அறிவு இருக்கா. நா உன்னையா எடுத்துட்டு வர சொன்னேன்" ௭ன்றாள் கடுப்பாகி. இருவரயும் பார்த்து சிரித்து நின்றான் இரணியன்.

"பின்ன நீ சொன்ன உடனே என் மாமியார் பிலைட் ஏறிடுவாங்கன்னு எண்ணம்மா உனக்கு?” "ஏன் வந்தா சிம்லாவ சுத்தி பாத்துட்டு போவாங்கல்ல, அதுக்கு தான் கூப்ட்டேன், அவங்களுக்கு கொடுத்து வைக்கல. கொண்டுவந்தத எடுத்து குடு நா பார்ட்டிக்கு ரெடியாகணும்" ௭ன்றாள் அவன் மேலும் உளருமுன் தடுக்க நினைத்து. அவனா விடுவான் "நீ பாட்டுக்கு அவுங்களுக்கு போன் போட்டு என் டிரஸ்ஸ எடுத்துட்டு ஈவினிங்குள்ள வந்துரும்மா, உன் மருமகன் என்ன அந்த ட்ரெஸ்ல பாக்க ஆசப்படுறாருன்னு சொன்னல்ல, அவங்க உன்ன அசிங்கசிங்கமா திட்டினாங்க. பாவம் ஆண்ட்டி, நா வேணா கொண்டு போய்க் கொடுத்துட்டு வர்றேன், எடுத்து தாங்கன்னு, என் சாருக்காக வாங்கிட்டு வந்தேன்" ௭ன்றான் பெருந்தன்மையுடன். "லூசு லூசு எல்லாத்தையும் உளறு நல்லா. நீ ஒன்னும் தர வேணாம் போ" என எட்டி அவனை இரண்டு கொட்டு கொட்டி விட்டு திரும்பி நடக்க, "ஹே பின்ன கொண்டுவந்தத நானா போட்டுக்க முடியும், இரு பாப்பு" என அவள் கையை பிடித்து இழுத்து சென்று அவன் ரூமில் இருந்ததை எடுத்துக் கொடுத்தான்.

இரணியன் இருவர் செய்கையையும் கைகட்டி வேடிக்கை பார்த்து நின்றான். 'ரெண்டும் என்ன ரகமென இன்னுமே அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு சின்ன பார்ட்டிக்கு அவ்வளவு தூரத்துல இருக்க அம்மாவ ட்ரஸ் கொண்டுவான்னு இந்த இடியட் சொல்லுச்சாம், அத அந்த இடியட் 6ஹவர்ஸ் டிராவல் பண்ணி கொண்டுவந்துச்சாம் என தலையிலடித்து கொண்டு தன் அறைக்கு சென்றான்.

அங்கு விஷா தனக்கென புக் செய்திருந்த அறையில், "ஏன் எரும, சார்ம் முன்னாடி எல்லாத்தையும் சொன்ன?" ௭ன பாப்பு கேக்க. "நீ அவரு கேட்டதா தான போன்ல சொன்னதா உங்கம்மா ஓ அப்பாட்ட சொன்னாங்க இல்ல சொல்லி திட்டிட்ருந்தாங்க". "அப்டி சொன்னாதான செய்வாங்கன்னு நினைச்சு சொன்னேன். எனக்கு வேணும்னு கேட்டா வேலைய பாருன்னு சொல்லிட்டு போன வச்சுருப்பாங்களே. இப்ப பாத்தியா, உன் மூலமானாலும் டிரஸ் வந்து சேந்துருச்சுல்ல" என்றாள் சுடிதார் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு.

அவளயே குறுகுறுவென பார்த்த விஷா "இவ்வளவு மெனக்கெடுறன்னா என் சார்ட்ட கவுந்துட்ட போல இருக்கு?" ௭ன்றான் நக்கலாக சிரித்து. "இதுல நீ ௭ன்னவோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி எதுக்கு பல்ல காட்டுற, ஆல்ரெடி தெரிஞ்சது தான. யாருக்குத் தான் அவரப் பிடிக்காது" ௭ன்றாள் ௭ப்போதும் போல்.

"பிடிக்குறது வேற, லவ் வேற பாப்பு மேடம். உங்களுக்கு சார் மேல லவ் வந்துருச்சு, அதான் இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்றீங்க, புரியலயா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா?" ௭ன்றான் ஈஸியாக. "லவ்வா இருக்குமோ?" ௭ன அவனிடமே திருப்பி கேக்க, "இருக்குமோன்னு சந்தேகம்லா வேணாம், இருக்கு 100%" என்றான் விஷாவும் முகமெல்லாம் பல்லாக.

சிறிது நேரம் அமைதியாக யோசித்தவள் "சரி வந்தா நல்லது தான, விடு அந்த ஃபீலும் எப்டி இருக்குன்னு தெரிஞ்சுப்போம், அனுபஸ்தன் 2 பொண்டாட்டி காரன் சொல்ற அதனால ஒத்துக்றேன்" என ஈஸியாக சொல்லிவிட்டு பேக்கை எடுத்துக்கொண்டு அவள் ரூம் சென்று விட்டாள்.

செல்பவளை 'ஙே' வென பார்த்து நின்றவன், 'இவ லூசா இல்ல நாம லூசா? அவளுக்கு லவ் வந்ததுக்கு நாம எவ்வளவு குஷி ஆனோம், அவட்ட அந்த எக்ஸைட்மென்ட்டே இல்லயே. அட ஆண்டவா, என்ன யோசனையில இருக்கும் போது இவள செஞ்சீங்க, சுத்தமா புரிஞ்சுக்க முடியல, ௭ப்டியோ நா ௭டுத்த ஸ்டெப் ஒன் சைடு ஓ.கே ஆயிடுச்சு இன்னொரு சைடும் ஓ.கே பண்ணிருப்பா' என தலைக்குமேல் இருப்பவரிடம் கேட்டுவிட்டு குனிய, வாசலில் பாப்பு நின்றாள், "௭ன்ன 2 பொண்டாட்டியயும் கரக்ட் பண்ணி தர சொல்லி அப்ளிகேஷனா? இங்க வந்து கேட்டா ௭ப்டி சென்னைல இருந்துல கேட்ருக்கனும்" ௭ன்றாள் அவனது இறுதி வாக்கியத்தை மட்டும் கேட்டு விட்டு, "இத சொல்ல தான் திரும்பி வந்தியா?", " இல்ல நீ ஏன் வந்தன்னு கேக்க மறந்துட்டு, அதான் வந்தேன்", "சும்மா பாஸ பிரிஞ்சு இத்தன நாள் நா இருந்ததில்லயா அதான் கிடச்ச சான்ஸ யூஸ் பண்ணிகிட்டேன்" ௭ன்றான் தோள்களை குழுக்கி. பாப்பு ஒருமாறியாக மேலும் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு சென்று விட, விஷாவும் பார்ட்டி ஏற்பாட்டை கவனிக்கச் சென்றான்.

பாப்பு ரூமினுள் நுழையும்போது, இரணியன் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டுவிட்டு, அவனுக்கான கிரீன் டீயும், அவளுக்கு பாதாம் பாலயும் வர வைத்தாள்., "எப்டிதான் இப்டி டேஸ்ட்டே இல்லாம இருக்றாங்களோ, 3 வேலயும் டயட் சாப்பாடு சாப்ட நம்மலால முடியாதுப்பா" ௭ன நினைக்க, "அதான் அவரு ஃபிட்டா, ஹெல்தியா இருக்காரு, நீ உருண்டு திரண்டு வாட்டர் டேங்க் சைஸுக்கு போயிட்டுருக்க, ஒரு ஹீரோவுக்கு வைஃப் மாதிரி கொஞ்சம்னாலும் டயட் மெயின்டெயின் பண்ணி அவருக்கு ஈக்குவலா இருந்ததாதான அவருக்கு மேட்சா இருக்கும் " என்றது அவள் மனசாட்சி. "வாய்க்கு ருசியா சாப்டாத வாழ்க்கைல்லாம் என்ன வாழ்க்கைன்னு வடிவு சொல்லிருக்கு, என்னால ௭ப்டி தாய் சொல்ல தட்ட முடியும், நெவர்" என பதில் சொல்லிக்கொண்டிருக்க ஆர்டர் பண்ண பாலும் டீயும் வந்திருந்தது.

அதை வாங்கிக்கொண்டு, அவன் டீயை கொடுக்க பால்கனியில் நிற்கும் அவனை தேடிச் சென்றாள். "நா 2 டேஸ்ல அங்க இருப்பேன், நா வந்தப்றம் பிளான் ௭க்ஸிகியுட் பண்ணா போதும். அந்த பெர்ஸன் டிடெய்ல் மெயில் பண்ணிருக்கேன் செக் பண்ணிக்கோ ஜான்" என சொல்லிக்கொண்டே இவளிடம் டீயை வாங்கிக் கொண்டான்.

அவள் திரும்பி உள்ளே வந்து டிவியில் யூடியூபை கனெக்ட் செய்து சின்-சான் போட்டுவிட்டு, ஈ ௭ன இழித்தவாறு பாலை பருகினாள். "நீந்தி நீந்தி நீந்தி நா தண்ணீல போவே நீந்தி" என்பதை பார்த்து அவள் பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கையில், போனை பேசி முடித்த இரணியன் உள்ளே வந்தான். அவனுக்கு இப்போது அந்த கார்ட்டுன் கேரக்டர்கள் ௭ல்லாம் பழக்கப் பட்டிருந்தது, பொழுதனைக்கும் போட்டு போட்டு இவள் பார்த்து வேறு வழி இல்லாமல் அவனயும் பார்க்க வைத்து பழக்கி விட்டிருந்தாள்.

டிவியில் அவள் அது முன் உக்காந்துவிட்டாள் ஒரு வேலயும் ஆகாது என முடிவெடுத்தவனும், டிவியை அணைத்து விட்டு அவளைப் பார்க்க, மூக்கை சுருக்கி முறைத்தாள்.

"பார்டிக்கு டைம் ஆகலையா சீக்ரம் ரெடியாகு" என்று விட்டு ஹாலுக்கு சென்று அமர்ந்தான். அவன் பின்னேயே சென்றவள் "ஃப்ர்ஸ்ட் நீங்க ரெடியாகி கார்டன் போங்க அப்புறமா நா கிளம்பி வரேன்" ௭ன்றாள் சோபாவில் அமர்ந்திருந்தவனின் கை பிடித்து இழுத்து.

"லூசா நீ, நா 10மினிட்ஸ்ல ரெடி ஆயிடுவேன் நீ ரெடியாக தான் லேட் ஆகும், போ சீக்ரம்", "அதெல்லாம் நானும் சீக்கிரம் ரெடி ஆகிடுவே, நீங்க ஃபஸ்ட் கிளம்பி கீழே போங்க, நம்ம பாட்டி நாமதான் ரிஸீவ் பண்ணனும் வாரவங்கள" ௭ன்றாள் பொறுப்பாக.

"அதான் விஷா இருக்கானே" ௭ன்றான் அப்போதும். "அவனே லூசு, பராக்கு பாத்துட்டு நிப்பான், நீங்க போனா தான் வேலயே பாப்பான்", அவளை சந்தேகமாக பார்த்தவன், "நீ ஏன் என்ன விரட்டறதுலயே குறியா இருக்க, நா பாக்கனும்னு தான ஏதோ ட்ரஸ 2 ஃப்லைட் மாறி எடுத்துட்டு வர வச்சிருக்க, அத நா ஃபர்ஸ்ட் பாத்து நல்லா இருக்கு இல்லன்னு சொல்ல வேணாமா?", "அத நீங்க, நா கீழ வந்த அப்புறம் கூட பார்த்துட்டு சொல்லலாம், கொஸ்டினா கேட்காம கிளம்புங்க சார்ம்" என இழுத்து வந்து பாத்ரூமில் தள்ளி லாக் செய்தாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் டவலுடன் வெளியே வந்தவனுக்கு கட்டிலில் ஒரு செட் டிரஸ் ரெடியாக இருந்தது, ஃபுல் சிலீவ்வில், டெனிம் ப்ளாக் கலரில் கார்டிகன், ப்ளாக் ஜீனுடன் இருந்தது. உள்ளே வொயிட் ஷர்ட்டுடன் அவன் அணிந்து முடித்து கண்ணாடியில் பார்த்தபோது, அவன் பளிர் நிறத்திற்கு ஏற்ற உடையுடன் அவ்வளவு மேன்லியாக இருந்தான். அவள் அவனுக்காக தேடி எடுத்திருந்த உடை, இன்றுதான் எங்கேனும் வாங்கி இருக்க வேண்டும், என நினைத்து சிரித்துக் கொண்டான்.

அவன் கதவை திறந்தது கூட தெரியாமல், அவனுக்காக ஹாலில் குறுக்கும், நெடுக்குமாக நடைபயிற்சியில் இருந்தாள் பாப்பு, நிலையில் சாய்ந்து நின்று அவளையே 5 நிமிடமாக பார்த்திருந்தவன். "அந்த த்ரட்மில்ல ஆன் பண்ணிட்டு அதுலயாது நட கவுண்ட் தெரியும்" என வந்து சோபாவில் அமர்ந்தான்.

"௭ன்ன பதில காணும்" என அவள் முகம் திரும்பி பார்த்தான், ஐஸ்கிரீம் வண்டியை கண்ட குழந்தையின் முகம் போல் பெரிய ஒளி வட்டத்துடன் நிற்பவளைக் கண்டு வாய் விட்டு சிரித்தான், "தாட்சா" என இரு முறை அழைத்தும் திறந்த வாயை மூடாமல் பார்த்து நின்றவளை அடித்து உலுக்க அருகில் சென்றான்.

கிட்ட நெருங்கியதும் என்ன நினைத்தானோ, அவளை லேசாக அணைத்து, "டிரஸ் சூப்பரா செலக்ட் பண்ணிருக்க, தேங்க்யூ" என்றுவிட்டு விடுவித்தான். அவன் அணைக்கவும் தன்னை மீட்டவள், "சார்ம் சோ ஹாண்ட்சம், செமையா இருக்கீங்க" என எக்கி அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள். "அது நீ மெய்மறந்து நின்னதுலயே தெரிஞ்சது, ஆமா ௭ப்ப ௭னக்கு தெரியாம போய் ட்ரஸ்லா ௭டுத்த" என்றான் தன்னை அணைத்தவளை தானும் அணைத்துக்கொண்டு. "நா ௭ங்க போனே, நம்ம ரமேஷ் ப்ரோவ தான் கடைக்கு அனுப்பி, வீடியோ கால் மூலமா செலக்ட் பண்ணேன், உங்க போட்டோ காமிச்சு தான் சைஸ் பாத்துக்க சொன்னேன், பெர்வக்ட்டா குடுத்துருக்காங்கல்ல" ௭ன்றாள் அவனை முழுமையாக ரசித்து.

அப்பொழுது அவர்கள் ரூம் பெல் அடிக்க, "சரி சீக்கிரம் நீ ரெடியாகு, நா யாருன்னு பாக்குறேன்" என்றவன் டோரை திறக்க விஷா தான் நின்றிருந்தான். இரணியனை கண்டதும், அவனும் வாய் பிளக்க, அவன் வாயை வேகமாக மூடிவிட்டு, "இப்பத்தான அவள சரி பண்ணிருக்கேன் அடுத்து நீயா?" என்றான் அதட்டலாக.

"ஒரேயொருக்கா சார்" என்க. "என்ன?" என இரணியன் கேட்கும் முன் அணைத்து விலகிவிட்டான் விஷா. "ரெண்டு பேரும் போன ஜென்மத்துல ஒரே இனத்த சேந்த குரங்குகளா இருந்திருக்குமோ" என நினைத்துக்கொண்டு, விஷாவை முறைக்க.

"மழை வர்ற மாதிரி இருக்கு சார், எல்லோரும் வர ஆரம்பிச்சுட்டாங்க வந்தீங்கன்னா மழை வர முன்ன சீக்கிரம் பார்ட்டிய முடிச்சுரலாம்" என்க. இரணியன் திரும்பி பாப்புவை பார்க்க, "நீங்க முன்னாடி போங்க, நா ரெடியாகி வந்துர்றேன்" என அவள் சொன்னதையே சொல்ல, "ஓகே, கம் சூன்" என விஷாவுடன் வெளியேறினான்.

பாப்பு அடுத்த 1/2 மணி நேரத்தில் தானும் ரெடியாகி வெளிவர, அவளுக்கென ஒதுக்கப்பட்ட ரமேஷ் ப்ரோ அங்கு நின்றிருந்தான்.

"நீங்க இங்க என்ன பண்றிங்க ப்ரோ, உங்கட்ட நா என்ன செய்ய சொன்னேன். எல்லாம் ரெடியா? இல்லயா?" ௭ன்றாள் வேகமாக லிஃப்ட்டை நோக்கி நடந்து கொண்டு. "எல்லாமே ரெடி மேடம். சார் தான் இங்க வெயிட் பண்ணி உங்கள கூட்டிட்டு வர சொன்னாரு". "அவங்களுக்கு விஷயம் தெரியாது சொல்லிப்பாங்க, உங்களுக்கு தெரியுமே அப்புறம் இங்கயே நின்னுட்டுருக்கீங்க" என பேசிக்கொண்டு ரிசப்ஷன் வந்திருந்தனர்.

"சரி நீங்க முன்ன போய், கரெக்ட்டா இன்னும் இருபது செகண்ட்ஸ்ல நா நுழையும் போது, நா சொன்னேன்ல அந்த சாங் லோட் பண்ணிட்டீங்க தானே, அத ப்ளே பண்ணனும். அப்புறம் லைட், பெல் சவுண்ட் எல்லாம் கரெக்ட் டைமிங்ல இருக்கணும். டைமிங் அதான் ரொம்ப முக்கியம்" என்க. தன் தலை விதியை நொந்துகொண்டு, "சரி மேடம், சரி மேடம்" போட்டு சென்றான் அந்த பாடிகார்ட்.

பிளான் செய்தது போல் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு கார்டன் செல்லும் பாதையில் நடந்தாள் பாப்பு. எப்படியும் இவளை எதிர்பார்த்து வாசலில் இரணியன் நிற்பான் என்பது அவள் கணிப்பு, ஆனால் அவன் சற்று உள் தள்ளி வாசலைப் பார்த்து தான் நின்றான். இவள் வருவதை கண்ட அந்த பாடிகார்ட் வேகமாக டிஜே கையை உலுக்கி பாட்டை போட சொல்ல, அவ்வளவு நேரம் இங்கிலிஷ் சாங் ஓடிக்கொண்டிருந்த ஸ்பீக்கரில் திடீரென தமிழ் சாங் கேட்கவும் எல்லோரும் சத்தமும், கூச்சலும் போட்டு என்ஜாய் செய்தனர்.

பாப்பு இரணியனை பார்த்தவாறு ஸ்லோமோஷனில் நடந்து வந்தவள், கேட்ட பாட்டினால் டென்ஷனாகி டிஜேவை நோக்கி நடந்தாள். லைட் செட்டிங்க்ஸை ஆன் செய்துவிட்டு, பெல் சவுண்ட்டிற்காக டி.ஜேவிடம் வந்த ரமேஷ் ப்ரோ பாட்டு மாறியது கூட தெரியாமல் தான் நின்றார்.

உள்ளே நுழைந்தவளை, இரணியன் வைத்த கண் வாங்காமல் தான் பார்த்திருந்தான். பிளாக் சாரியில், ஃபுல் ஸ்லீவ், டிசைனர் ப்ளௌஸில், பிரீ ஹேரில் நடந்து வரும்போது, அவனுக்கு மற்றவை எல்லாம் மறைந்து போய் பாப்பு மட்டுமே தெரிந்தாள். அதிலும் அந்த பாட்டு,

"அடி எதுக்கு உன்ன பாத்தேனு நெனைக்க வைக்கிறியே
என் மனசுக்குள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே
ஏ.. வாடி வாடி ராட்டியே என் நெஞ்சம் தாங்கலடி
உன்ன தேடி தேடி நானும் என் கண்ண மூடலடி
அழகா நீ பெஞ்ச மாமழை போல‌
அதுல நனைஞ்சேன் அடி உன் நெனப்பால‌
அடி எதுக்கு உன்ன பாத்தேனு நெனைக்க வைக்கிறியே
என் மனசுக்குள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே"
என ஆரம்பித்ததும் அவள் முகத்தையே பார்த்திருந்தவன், அவள் முகம் போன போக்கை கண்டு குழம்ப, அவளும் டிஜே வை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தாள். இரணியனும் அவள் தன்னிடம் வராமல் அங்கு செல்வதை கண்டு தானும் சென்றான்.

"ப்ரோ உங்கள நா என்ன பாட்டு போட சொன்னேன், நீங்க என்ன பாட்டு போட்ருகீங்க. இப்டி என் ப்ளான் மொத்தத்தயும் சொதப்பிட்டீங்களே" என கையை காலை உதறி சிணுங்கி, பின் கொந்தளித்து அவனிடம் சண்டைக்கு கிளம்ப, எப்போதும்போல் விஷா தான் வந்து தடுத்து இழுத்தான்.

"விடு விஷா, படிச்சு படிச்சு 500 தடவைக்கு மேல சொன்னேன், அப்போல்லாம் மண்டைய மண்டைய ஆட்டிட்டு காலையிலிருந்து நா போட்ட பிளான் எல்லாத்தையும் நாசமாக்கிட்டாங்க. இவங்கள சும்மா விடுவறதாயில்ல" என எகிறிக்கொண்டிருந்தாள்.

அப்போது தான் பாட்டு மாறியதை கவனித்த ரமேஷ் ப்ரோ, "மேடம் நா சாங் சரியாதான் செக் பண்ணிட்டு வந்தேன், ௭ப்டி மாறுச்சுன்னு தெரில, நீங்க சொன்ன மாறி, அங்க பாருங்க சார் நின்ன இடத்துல லைட் கூட ஆன் ஆகி ஆப் ஆகுது" எனக் காட்டி திரும்ப, இருவரும் திரும்பிப் பார்க்க, இரணியன் முதல் நின்ற இடத்தில் லைட் அணைந்து, அணைந்து எரிந்துகொண்டிருந்தது. இப்போதுதான் அவன் பாப்புவை நோக்கி வந்து அவர்களை நெருங்கி இருந்தானே.

திரும்பிப் பார்த்த இரணியனும், விஷாவும் சிரிக்க, பாப்பு மேலும் கடுப்பானாள். "ஐயோ மேடம் நீங்க இங்க வரவும், சாரும் இங்க வந்துட்டாங்க போல" என்ற ரமேஷ் ப்ரோ, "வெய்ட் மேடம் ரெண்டு பேரும் இங்க நிக்கயிலயே பெல் சவுண்ட் கரெக்டா போட்டுர்றேன்" என டிஜே எஃபெக்டில் பெல் சவுண்டை அலற விட, மொத்த கூட்டமும் இவர்களை தான் பார்த்தது.

அவன் போட்ட பெல் சவுண்டில் இரணியனும், விஷாவும் மேலும் சிரிக்க, சிரிப்பதில் விஷா தன் கையை விட்டு விட்டதால், அந்த பாடிகார்டை அடிக்க அருகில் கிடந்த வையர் கம்பியை எடுத்துக்கொண்டு டிஜே சிஸ்டம் செட்டப் மேடையின் மேல் ஏறினாள்.

"சாரி மேடம், எப்டி மாறுச்சுன்னு ப்ராமிஸா தெரியல" என அவன் கெஞ்ச, "நீ அப்பதயே நா இதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லியிருந்தா நா இவ்வளவு நம்பிருக்க மாட்டேன்ல, வேற பிளான்னாலும் யோசுச்சுருப்பேன்ல" என அந்த கம்பியை கொண்டு அடிக்க ஆரம்பிக்க, விஷா மேலேறி வந்து அவளைப் பிடித்து மல்லுகட்டி கீழ் இழுத்து வந்தான்.

"அவன் மேல தப்பு இல்ல பாப்பு, நா தான் இவேன் என்ன புதுசா டிஜே செட்டப் சுத்தி சுத்தி வர்றான்னு சந்தேகப்பட்டு பாலோவ் பண்ணேன். விஷயத்த வாங்குனே, உனக்கு இந்த பாட்டுதான் சரிவரும்ன்னு நாந்தான் அவேன் நகந்ததும் மாத்தி வச்சேன். ஆமா அதுயென்ன அந்த லைட்டு, பெல் சவுண்ட்லா என்னது?" என சிரிப்பை அடக்கி கேக்க.

அவனையும் விரட்டி விரட்டி 2 அடி அடித்தவளிடம், "சொல்லிட்டு அடி பாப்பு" என்ற கெஞ்சலின் பின், "அக்சுவலா, சார்ம் மண்டைக்கு பின்னாடி லைட் எரிஞ்சு, பெல் சவுண்ட் கேட்டா என்ன லவ் பண்றதா ஒத்துப் பாருன்னு தோணுச்சு, அதான் அன்னைக்கு அக்கா மேரேஜ்ல என்ன சாரில பாத்ததும், 'லூகிங் கார்ஜியஸ் சொன்னாரே'ன்னு, ௭னக்கு சேரி அங்க இருந்து ௭டுத்துட்டு வர சொன்னே, ரெண்டு பேருக்கும் ஒன்னு போல பிளாக் ட்ரஸ் ஏற்பாடு பண்ணி, கொள்ளுதடி கொள்ள விழி சாங்க போட்டு விடு, என் எண்ட்ரன்ஸ்லேயே அவர் மயங்கிடணும், அந்நேரம் டைமிங்கா லைட் போட்டு போட்டு ஆஃப் பண்ணு, பெல் சவுண்ட் ப்ளே பண்ணனும்னு, ௭ல்லாத்தயும் தெளிவா சொல்லி கொடுத்தும் எல்லாமே சொதப்பிட்டு. உன்ன யாரு பாட்ட மாத்த சொன்னது ௭றும" என மறுபடியும் முதலில் இருந்து அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

சுற்றி வேடிக்கை பார்த்த எல்லோருமே, அவள் ஏதோ சர்ப்ரைஸ் ப்ளான் செய்து அதை விஷா சொதப்பி விட்டதாக நினைத்து அவன் அடி வாங்குவதைப் பார்த்து சிரித்தனர்.

ஆனால் அதுவரை சிரித்துக்கொண்டிருந்த இரணியன், அவள் சொன்ன லைட், பெல் சவுண்ட் ௭க்ஸ்ப்ளனேஷனை கேட்ட பின், சற்று முன் நடந்ததை சிந்தித்துப் பார்த்தான். அவள் நுழையும் போது தலைக்கு மேல் வெட்டிய மின்னலும், இடியும், மழை காற்றினால் கார்டன் பூக்கள் உதிர்ந்து வந்து விழுந்ததையும் எண்ணி இப்போது சிலிர்த்தான். அவனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. வாயை குவித்துக் காற்றை வெளியேற்றினான்.

சேரியை கட்டி கொண்டு சுற்றி, சுற்றி ஓடிக்கொண்டிருந்தவளைப் பார்த்து சிரித்தான். "ஐ லவ் ஹெர், ஓ மை காட் ஐ அம் இன் லவ்" அவனுக்கு கையும், காலும் பரபரத்தது. இருக்கும் இடம் கருதி, தன் தலைகோதி தன்னை சமன் செய்தான். பின் பார்ட்டிக்கான நேரம் என்பதை உணர்ந்து பாப்பு கை பிடித்து நிறுத்தினான்.

"விஷா வந்தவங்கள கவனி. என்ன பழக்கமிது எல்லாரயும் பாக்க வச்சுட்டு விளையாடுறது" என தன் கன்னம் ஃப்ளஷ் ஆவதையும், எங்கோ பறப்பது போல் இருப்பதை தவிர்க்க, அவனை அதட்டி தன் மனதை கண்ட்ரோல் செய்தான். "ஓகே சார்" என விஷா சென்றுவிட, "சாரிய கட்டிகிட்டு என்ன தைரியத்துல ஓடுற நீ" என்றான் பாப்புவிடமும் அதே அதட்டலுடன்.

"நா போயிட்டு ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரேன். நா மெனக்கெட்டதெல்லாம் வீணா போச்சு" ௭ன்றாள் சோகமாக. "அதெல்லாம் ஒன்னும் வீணா போகல, இங்க பாரு, லெட்ஸ் டேக் எ செல்ஃபி" என தன் மொபைலை தூக்கி பிடித்தான் இரணியன்.

ஆவென தான் பார்த்தாள் பாப்பு, முதல்முறை இப்டி செல்ஃபி ௭டுக்க அழைக்கிறான் என்பதே அவளுக்கு பெரிய ஆச்சர்யம். அவனுக்கோ தனக்கு லவ் வந்த மொமண்ட்டை பதிவு செய்ய வேண்டிய ஆசை.

காதல் பொங்கிய இருவரும், தன் காதலை உணர்ந்த இருமுகங்களும் அந்த போனில் அழகாக பதிவாகியது. இருவரும் தங்கள் காதலை பகிர்ந்துகொள்ள நேரத்தை எதிர்பார்த்து இருந்தனர். அவள் போல் சொதப்பாமல் சொல்ல வேண்டும் என்பது இரணியன் எண்ணம்.

'அவள் தன்னை லவ் பண்ண வைக்க முயல்கிறாள் எனில் அவள் தன்னை பிடித்தத்தில் இருந்து காதல் ௭ன்ற உணர்வுக்கு சென்றுவிட்டாள்' என்பதை புரிந்து கொண்டான் இரணியன்.

'லவ் பண்ணா அந்த ஃபீல் எப்படி இருக்கும் என்பதை எதிர்நோக்கி காத்திருந்தாள் பாப்பு, அது சந்தோசத்தை கொடுக்குமா? கஷ்டமா இருக்குமா? வலிக்குமா? தெளிவாக்குமா? லூசாக்குமா?' என எந்த ஃபீலை காதல் கொடுக்கும், அதை கண்டிப்பா அனுபவிச்சுப் பாக்கணும்' என்ற தீர்மானத்துடன் இரணியன் கைகோர்த்து பார்ட்டியை என்ஜாய் செய்தாள் பாப்பு. பிங்கி அந்த பார்டிக்கு வராதது அங்கு சிலர் கேள்வியாக முன் வைத்தாலும், "௭ன்னன்னு தெரியல, நா இன்வைட் பண்ணேன்" ௭ன்ற இரணியன் பதிலின் பின் அதை அப்படியே விட்டுவிட்டனர்.
 
அத்தியாயம் 27
அடுத்த இரண்டு நாட்கள், இரணியன் பாப்புவை சைலன்டாக சைட் அடிப்பதும், விஷாவும், பாப்புவும் சண்டை சச்சரவுடன் ஊர் சுற்றுவதுமாக கழிந்தது. ஊரைச் சுற்றிப் பார்க்க கணவன், மனைவி இருவரும் சேர்ந்து சுற்றினார்களோ இல்லையோ பாப்புவும், விஷாவும் நன்றாகவே ஜோடி போட்டு சுற்றி பார்த்தனர்.

மறுநாள் காலை ப்லைட் என்ற நிலையில் முதல் நாள் இரவு வரை சுற்றி விட்டு ஹோட்டல் திரும்பினர். ஹோட்டலில் நுழைந்ததும் இரணியன் பாப்புவை திரும்பி பார்த்துவிட்டு, உடன் விஷாகன் இருக்கும் தைரியத்தில் ரூம் சென்று விட, பாப்பு விஷாவை கார்டனுக்கு தள்ளிக் கொண்டு சென்றாள்.

"டயர்டா இருக்கு பாப்பு இந்த குளிர்ல இங்க உட்கார வேணாம்" என அவன் சலித்து கொள்ள, "உன்ட்ட ஒரு ரகசியம் சொல்றேன் பேசாம வா" ௭ன திரும்பி திரும்பி பார்த்து கொண்டு இழுத்துச் சென்றாள். "சீக்ரெட்டா?" ௭ன அவன் ரகசிய குரலில் கேக்க. "ஆமா". "என்னது?", "அது வந்து" ௭ன பாப்பு புதிதாக வெக்க பட, "நெலியாம சொல்லு" ௭ன்றான் விஷா.

"அது வந்து", " உனக்கு வெக்கப்பட தெரியல, தயவுசெஞ்சு சார் முன்ன இப்டி வெக்க பட்றாத கண்கானாத தூரத்துக்கு ஓடிட்டாலும் ஆச்சரிய படுறதுக்கில்ல" "பே, ரொம்ப தான் சீன் போடற, நா போறே போ", "உன் நல்லதுக்கு தான் சொன்னே, கேக்க மாட்டேன்ற, சரி சொல்ல வந்தத சொல்லு, ஆரம்பிச்சுட்டு விட்டா விஷயம் என்னன்னு தெரியாம மண்ட காஞ்சிரும்" ௭ன்றான்.

"சரி ரெம்ப கெஞ்சுற, அதனால சொல்றே", "நா கெஞ்சுறே?" " ஆமா நீயி", "சரி பரவால்ல சொல்லு" ௭ன்றான் விஷயம் தெரிய வேண்டி, "சார்ம் இருக்காருல்ல", "ஓ அவர் தான் அழகா இருக்காரே".

"லூசு.." ௭ன அவள் முறைக்க. "உண்மையத்தான சொன்னேன், சரி அவர் இருக்காரு, மேல சொல்லு". "அவரு, அவரு அவரு என்னைய சைட் அடிக்கிறாரு" ௭ன்றாள் குதூகலமாக.

'கன்பஃம்' ௭ன முனங்கியவன், "மென்டலா நீ, ரகசியமா இது? அவர் உன்ன கல்யாணமே பண்ணிட்டாரு இப்பதான் சைட்டடிக்கறாரு இதுவே லேட், புரியாம குதியாட்டம் போடுற" என்க, பாப்பு முறைக்க, "என்ன முறைக்ற, நீ சார்கிட்ட மேனேஜரா ஜாயிண்ட் பண்ணதுலருந்து இத தான் சொல்லிட்ருக்க".

"அது வேற சைட்டு, இது வேற சைட்டு, ரசனையா ரசிச்சு கண்ணுல சிரிப்போட பாக்காருன்னு சொல்றேன், ரெண்டு பொண்டாட்டி கட்டியும், நீ ஏன் சிம்லாவ தனியா சுத்தி பாக்குற தெரியுமா" "ஏன்?" ௭ன்றான் மூஞ்சியை சுருக்கி.

"ஏன்னு, நா சொன்னா மட்டும் உனக்கு அப்படியே புரிஞ்சுரும் போடா" என ஹோட்டல் வாசலுக்கு நடந்துவிட்டாள். 'இவங்க சைட்டடிச்சுக்றதுக்கும், நா ரெண்டு பொண்டாட்டி கட்டினதுக்கும் என்ன கனெக்சன், நா ௭ன்ன பிளான் பண்ணியா 2 கல்யாணம் பண்ணே, தானா நடந்தா நா ௭ன்ன பண்ண முடியும்' என்ற பொறுமலுடன் பின்தொடர்ந்தான்.

மறுநாள் மாலை சென்னை ஏர்போர்ட் சென்று இறங்கினர். "நா கேப் புக் பண்ணி நுங்கம்பாக்கம் போயிடுறேன் சார்ம், மார்னிங் எப்பயும் போல வந்துடுறே" ௭ன்றாள் பாப்பு. "ஓகே. பை டேக் கேர்" என அவனுக்கு காத்திருந்த காரில் சென்று ஏறிவிட்டான் இரணியன்.

அவனையே பார்த்து நின்றவளிடம், "சார் உன்ன, 'ஏன் அங்க போற, என்கூட வா'ன்னு கூப்பிடுவாருன்னு நினைச்சு தான அப்டி சொன்ன" ௭ன்றான் விஷா நக்கலாக. "வர வர உனக்கு ௭ன்கிட்ட பயமில்லாம போச்சு, வசமா வாங்க போற" ௭ன்றாள் இரணியன் கண்டுக்காமல் சென்ற கடுப்பில்.

"பாத்தியா உனக்கு கோவம் கூட வருது, அது ௭ன்மேல இல்ல, கூப்டாம போனவர் மேல", "அப்படிலாம் ஒன்னுமில்ல, நீ எந்த வீட்டுக்கு போற?"

"அங்க தான் வரேன், அதான் சார் ௭ன்னயும் கூப்டாம போய்ட்டாரு, இல்லனா ௭ன்ன விட்டுட்டு போவாரா?", "பவ்யா கூட இன்னும் ராசி ஆகிருக்க மாட்ட, அதா அங்க போக பயபடுற", "இல்லயே, அவள நா பாக்கவே இல்ல, ஏதோ மைண்ட் ரிலாக்ஸ்காக லண்டன் போயிருக்காளாம் அங்கில் தான் சொன்னாரு, ஃபோன் போட்டாலும் எடுக்கல, அதனால அந்த வீட்டு பக்கமே போகல".

"அப்போ முழு நேர வேலயா எங்கக்காவத்தான் கரெக்ட் பண்ணிட்டுருக்க", "ஆமா பண்ணிட்டாலும், ரெண்டு நாளைக்கு ஒருக்கா தான் போவேன், தங்குவேன் மறுநாள் கிளம்பிருவேன், உன் அக்கா ஏதோ பாத்தா ரெண்டு வார்த்த பேசுவாங்க அவ்வளவுதான்" ௭ன்றான், இருவரும் பேசியவாறு அப்பார்ட்மென்டில் வந்து இறங்கினர்.

இரணியன் முக்கிய முதல் வேலையாக, ஜானை வைத்து பிங்கியை தூக்கி விட்டான். முதல் நாள்தான் அவளும் வந்து இறங்கினாள். இனி அவள் எந்த பெண் விஷயத்திலும் இது போல் நடக்கக்கூடாது என்பதற்காக, ஒரு வாரம் இருட்டு அறையில் தேவைக்கு மட்டுமே உணவு என்ற நிலையில் வைத்திருக்க சொல்லிவிட்டான். மற்றவர்களை கஷ்டப்படுத்தி பழக்கப்பட்டவள் ஒரு கஷ்டத்தை ஏன் என காரணம் புரியாமல் அனுபவிக்க தன்னால் திருந்துவாள் என நம்பினான். அதைப் பார்க்கவே பாப்புவிற்கு டாட்டா காண்பித்து கிளம்பிவிட்டான்.

அதை முடித்துவிட்டு அந்த சிம்லா குடும்பத்தை வேவு பார்த்த டிடக்டிவிடம் சென்று பேசினான். "பெருசா எதுவுமில்ல சார், மேடம் போட்டோ போல ஒரு உருவத்த வழிவழியா வழிபட்டு வராங்க, அவங்க கூட்டம் சிதறி கொஞ்ச கொஞ்ச பேரு, அங்கங்க இருக்கிறதா தெரிய வருது. மத்தபடி வேற எதுவும் அவங்க பெருசா பிளான் பண்ணி இத பண்ணுற மாறி டீடைல்ஸ் கலெக்ட் பண்ணவர தெரில. மேடம் பிறக்றதுக்கு முன்னயே, நாற்பது ஐம்பது வருஷமா இவங்க அந்த போட்டோவ ஒவ்வொருத்தர் வீட்டிலும் வெச்சு பரம்பரை பரம்பரையா கும்பிடுறாங்க. ஆனா அது எப்டி மேடமோட உருவம் கிடச்சதுன்னு தான் புரியல. மேடம்க்கும் அந்த குடும்பத்துக்கும் விசாரிச்ச வரையில எதுவும் சம்பந்தம் இல்ல சார்" ௭ன முடித்தார் அவர்.

சிறிது நேரம் யோசித்தவன், "ஓகே மிஸ்டர். பாலு, கேஸ் ஃபைல் கிளோஸ் பண்ணிடுங்க, பாத்துக்கலாம்" ௭ன அங்கிருந்தும் கிளம்பி விட்டான்.

அங்கு அபார்ட்மெண்ட்டில், பாப்புவும், விஷாவும் சென்று காலிங் பெல்லை அழுத்த, வடிவே வந்து கதவை திறந்தார். வந்தா வா வாராட்டி போன்ற மாதிரி அவர் திரும்பி சென்று விட, "எனக்குத்தான் மரியாத இல்லனா உனக்குமா இந்த வீட்டில் மரியாத இல்ல? வெரி சேட், ஒரு மாசத்துல எங்க அம்மாவனாலும் கரெக்ட் பண்ணிருக்கலாம்ல நீ☹️☹️?" என்றுவிட்டு தனதறை சென்றுவிட்டாள் பாப்பு.

விஷாகன் எப்பொழுதும் போல் வந்து சோபாவில் அமர்ந்து டிவியை பார்க்க ஆரம்பித்தான். உள்ளே சென்ற பாப்பு இவனை மறந்து தூங்கி விட, இரவு உணவிற்கு வடிவு, மெய்யப்பன் இருவரும் அமரவுமே விஷா எழுந்து வெளியில் சென்று விட்டான். இவன் வெளியேறிய நேரத்தில் வீடு திரும்பிய சுஹாவும், இரவு உணவை முடித்து தனதறை திரும்பிவிட்டாள்.

சிறிது நேரத்தில் விஷாகன் உள் நுழைந்தான். மெய்யப்பன் அவரறை சென்றுவிட, வடிவு பாப்புவிற்கான உணவை டேபிலில் வைத்து மூடி விட்டு, மற்றதை ஒதுக்கிவிட்டு, கதவை பூட்டி விட்டு அங்கு சோபாவில் அமர்ந்திருந்த விஷாகனை ஒரு பார்வை பார்த்து விட்டு தானும் படுக்கச் சென்று விட, செல்லை பார்த்துக்கொண்டே அந்த சோபாவிலேயே படுத்த விஷாகனும் கண்ணயர்ந்தான்.

மணி இரவு பதினொன்றை நெருங்குகையில் பாப்புவின் ஆழ்ந்த உறக்கத்தை அவள் மொபைல் சத்தம் கலைத்தது. நான்கு முறை முழுதாக அடித்து ஓய்ந்த பின்பே எடுத்து, "ஹலோ" என்றாள். "அவ்ளோ ஆழ்ந்த உறக்கம்ம்..? ஹஸ்பண்ட் வீடு போய் சேந்தானா? சாப்டானா? ஒரு குட் நைட் டெக்ஸ்ட்னாலும் அனுப்புவோம் ஏதாவது இருக்கா?" என்றான் அந்தப்பக்கம் இரணியன்.

அவன் குரல் கேக்கவும் மிச்சமிருந்த தூக்கமும் பறந்துவிட "என்னாச்சு சார்ம், இப்பதான போனீங்க அதுக்குள்ள போன் போட்டு என்னவெல்லாமோ கேக்குறீங்க?" ௭ன்றாள் முகமெல்லாம் பல்லாக அவன் போன் செய்த சந்தோஷத்தில்.

"இடியட் தான் நீ, ஏர்போர்ட்ல இருந்து போய் முழுசா 7 மணி நேரம் ஆச்சு" ௭ன்க. நன்றாக அறையை சுற்றி பார்த்தாள் கும்மிருட்டில் ஒன்றும் தெரியவில்லை, "அதான் வயிறு கதறுதோ? வந்ததும் படுத்தவ இப்பதான் முழிச்சுப் பாக்குறேன் சார்ம்". "குடுத்து வச்சவ. ஆமா மேரேஜ் ஆயிடுச்சு தான உனக்கு, இங்க தான வந்திருக்கணும். எதுக்கு அங்க போன?”

சத்தம் வராமல் உருண்டு புரண்டு சிரித்தவள் "இத நீங்க ஏர்போர்ட்டில கேட்டிருந்தா கூட போவோமா? வேணாமான்னு திங்க் பண்ணிருந்திருப்பேன், இனி அந்த கொஸ்டின் செல்லாது சாரி" ௭ன்றாள் கெத்தாக அவனிடம். "ஏன் நீயா வரமாட்டியா?", "நீங்க என்ன இம்ப்ரஸ் பண்ணுற வர, நா உங்க வைப்பும் இல்ல, நீங்க என் ஹஸ்பண்ட்டும் இல்ல".

"நானே தான் ஸ்டெப் ௭டுக்னும்னு சட்டம் இல்லயே. நீ ஏன் எனக்கு உன்மேல லவ் வர வைக்க ட்ரை பண்ணக்கூடாது?” "ஹான் நானா மேரேஜ்ன்னு அனௌன்ஸ் பண்ண வச்சேன். நானா திடீருன்னு தாலி கட்ட வற்புறுத்தினே, எல்லாமே நீங்க பண்ணிட்டு, லவ் மட்டும் நா உங்கள பண்ண வைக்கணுமோ?"

மெதுவாக சிரித்தவனும் "உனக்கு ஒரு விஷயம் புரியல. லவ்ன்றது ஒரு ஃபீல், அது தன்னால வரணும். கஷ்டப்பட்டு வரவைக்க ஹார்ட்ஒர்க்லா பண்ண தேவயில்ல" ௭ன்க. "ஓஹோ! அப்ப அது வரும்போது வரட்டும். அது வந்தப்புறமே நா அங்க வந்து தங்குறேன்". "நீ கூடவே இருந்தா தானே பீல் வரும்". "டே ஃபுல்லா இருக்கனே அதுல வரும் மட்டும் வரட்டும். இப்ப எனக்கு பசிக்குது நா சாப்பிட போறேன். பை சார்ம்" என அவன் லவ் இப்போதைக்கு வராதுன்னு சொன்ன கோவத்துல போனை வச்சுட்டு போக, இரணியனும் சிரித்துக் கொண்டே போனை வைத்து விட்டு தூங்க தயாரானான்.

"சரியான ஈகோ புடிச்சவர கட்டிக்கிட்டு நா படுற பாடு" என திட்டி கொண்டே தனது அறை கதவை திறந்து வெளி வந்தாள். நோ-வாட்ஸ் பல்ப் மட்டும் எரிய, "எங்க அம்மாக்கு, வர வர கொஞ்சம் கூட ௭ன்மேல பாசமில்ல, ஒரு மாசம் கழிச்சு வீடு திரும்புன புள்ள சாப்பிடாம தூங்குதே எழுப்பி ஊட்டுவோம். ம்கூம், சாப்பிட்டு வந்து வச்சுக்கிறேன் உன்ன" என வடிவு, மெய்யப்பனின் சாத்திய அறைக்கதவை பார்த்துவிட்டு திட்டிக்கொண்டு கிச்சனை நோக்கி நடந்தாள்.

சோபாவை கடக்கும் போது தான் அதில் படுத்திருப்பவனை கண்டாள். "விஷாவா இது? என் அக்கா அடிச்சு வெளிய பத்திட்டாளோ?" என யோசித்துக் கொண்டே அவனை தட்டி எழுப்பினாள். மெதுவாக கண் திறந்தவன் தூக்கக்கலக்கத்தில், நட்டுக்கு நட்டுக்கு முடியோடு நிற்பவளை இருட்டில் கண்டு மொத்த தூக்கம் கலைய எழுந்தான்.

பின் முகத்தை அழுந்தத் துடைத்து, "ஹே பாப்பு நீயா? என்னாச்சு? ஏன் இப்டி இருட்டுல வந்து நின்னு பயமுறுத்துற" ௭ன கேக்க. "நீ ஏன் இங்க தூங்குற?" ௭ன பதில் கேள்வி கேட்டாள். "நா எப்பயும் இங்க வரும்போது இங்கதான தூங்குறேன்" ௭ன்றான் அவனும் ஃப்ளோவில்.

"லூசா நீ. என் அக்கா உன்ன அடிச்சு விரட்டிட்டான்னு நெனச்சிட்டுருக்கேன். உன்ன அவ இன்னுமு உள்ளயே சேத்துக்களயோ? இரு இன்னைக்கு அவள ஏய் வெள்ள பாச்சா, கதவ தொறடி, ஏய் வெளில வாடி, என்னத்த பெரிய படிப்பு படிச்ச நீயெல்லாம், வெளிய வாடின்றே" இவள் இப்டி திடீரென சத்தம் போடுவாள் என எதிர்பார்க்காத விஷா இரண்டு நிமிடம் முழியை விரித்து செயலற்று நின்று விட்டான்.

பின்பே பாப்பு கதவை உடைக்கும் சத்தத்தில், "பாப்பு, பாப்பு என்ன பண்ற, எதுக்கு எல்லாரயும் எழுப்புற, சும்மா இரு ப்ளீஸ்" என அவள் கையை தட்ட விடாமல் தடுத்து பிடிக்க, அவள் காலால் எட்டி உதைத்து கொண்டிருந்தாள்.

சுஹா கதவைத் திறந்து கொட்டாவியுடன், "என்னடி? எப்ப வந்த? எதுக்கு இவ்வளவு சவுண்டு இந்நேரம்" என்க. "சென்ஸ் இருக்கா உனக்கு. உனக்கு பாவம் பாத்து வாழ்க்க கொடுத்த மனுசன இப்டி ஹால்ல படுக்க வச்சிருக்க".

'என்னது பாவம் பாத்தா? இவ என்ன எரிற தீயில எண்ணெய ஊத்துறா?' விஷா முணங்க. "என்னமா இந்த நேரத்துல சண்ட" ௭ன வெளிவந்தார் மெய்யப்பன் வடிவுடன். "உங்க பொண்ண உங்க வைப் வளத்துருக்க லட்சணத்த பாருங்க, நீங்க இருந்தும் இப்டி நடக்குதுன்னா, திஸ் இஸ் அன்-ஃபேர் ப்பா" என்றாள் ஏகத்துக்கும் குதித்துக்கொண்டு.

"ஏய் இப்ப என்ன பிரச்சனன்னு டைரக்டா சொல்றியா இல்லயா?" சுஹா இன்னுமே புரியாமல் முழிக்க. "தெலுங்குலயா சொல்லிட்டுருக்கேன்? நடிக்கிறியா? எதுக்கு விஷாவ வெளிலயே படுக்க விடுற"௭ன்க.

"அறிவு கெட்டவளே, அது புருஷன் பொண்டாட்டி பிரச்சின. நீ என்ன உள்ள போறது" வடிவு கேட்க. "அவங்களுக்குள்ள செட்டாக டைம் வேணும்லம்மா அதான் நாங்களும் எதுவும் கண்டுக்கறதில்ல" மெய்யப்பனும் சொல்ல.

"ஹாய் விஷா" ௭ன விஷாகனிடம் சொன்ன சுஹா, "ஒன் மினிட், பஸ்ட் திங்க் விஷாகன் வந்ததே எனக்கு தெரியாது. அப்டியே தெரிஞ்சாலும், அவர என் ரூம்ல விடுறதா வேணாமான்னு டிசைட் பண்ண வேண்டியது நா தான், நீ இல்ல. மைண்ட் யுவர் பிஸ்னஸ்" ௭ன்றாள் பாப்புவிடம்.

"அவன் என் பிரெண்டு, ரூம்குள்ள விட்டு நீ அவனோட என்ன சண்ட போட்டாலும், நா ஏன்னு கேட்க மாட்டேன். ஆனா உன் பிரச்சன ஹால் வர வந்தா நா கேட்பேன், கண்டிப்பா கேப்பேன்" ௭ன கத்த.

"நா மிதிப்பேன். இன்னைக்கு ஃபுல்லா ஏகப்பட்ட வேல நானே செம கடுப்புல இருக்கேன். என்ன கடுப்படிக்காம போயிடு சொல்லிட்டேன்" சுஹாவும் பதிலுக்கு கத்த. "யார்டி கடுப்பேத்துறா? விஷா பொறுமையா போறதுதனாலதான நீ இவ்வளவு ஆட்டம் போடுற". விஷா ஐயோவென இருவரயும் மாறி மாறி பார்த்து முழிக்க.

"நா என்ன ஆட்டம் போட்டேன். ஓவரா பேசுன வாய கிழிச்சிருவே" இது சுஹா.

"நீ அட்வைஸ் எல்லாம் எனக்கு மட்டும்தான் பண்ணுவியா? இவ என்ன பண்ணாலும் பாத்துட்டு இருப்பியா? அரவிந்த் மாமாவ வேதிகா அக்கா இப்டி பண்ணாலும் கேட்க மாட்டியோ?" ௭ன பாப்பு வடிவிடம் ௭கிற. "முறைப்படி நடந்த கல்யாணத்துக்கு தான் அதெல்லாம், இது கல்யாணமே இல்லேங்குறேன். நீங்க மட்டும் அன்னைக்கு அவசரப்பட்டு இவன கல்யாணம் பண்ணி வைக்கலனா, ஒரு ரெண்டு மாசம் போட்டும்னு என் பொண்ணுக்கு நானே வேற மாப்பிள பாத்திருப்பேன், அவளுக்கு என்ன தலையெழுத்து இரண்டாந்தாரமா போணும்னு" என வடிவு மூக்கை சீந்த.

"ஓ மை காட், என் தலைவலி புரியாம ஆளாளுக்கு ஆர்கியூ பண்ணிட்டுருக்கீங்க. விஷா கம் இன்சைட்" ௭ன்றாள் சுஹா பிரச்சினையை முடிக்க நினைத்து. "இல்ல மேடம் பரவால்ல" விஷா சொல்ல.

"அவ உனக்கு மேடமாடா?" ௭ன விஷாவிடம் கேட்ட பாப்பு, "நீ கூப்பிட்ட உடனே அவன் வந்திருனுமாடி, அவன் வரமாட்டான்" என சுஹாவிடமும் எகிற, விஷா பாப்பு வாயை எப்படி அடைக்க என முழிக்க.

வடிவு, "எனக்கு புள்ளன்னு வந்து வாச்சிருக்கு பாரு. எரும பசிக்குதா உனக்கு, முதல்ல போய் கொட்டிக்க" என்க. "எப்படியோ போய் தொழ" என சுஹாவும் தலையை பிடித்துக்கொண்டு, திரும்பியவள் பயங்கரமாக தலைசுற்ற, அப்படியே கதவை பிடித்தவாறு மண்டியிட்டு அமர்ந்து விட, "எதுக்குடி இப்ப ஓவராக்ட் பண்ற?" பாப்பு நம்பாமல் கேட்க, மற்ற மூவரும் வேகமாக அவளை நெருங்கி பிடித்தனர்.

வடிவு பிடித்துக்கொள்ளவும், விஷா சென்று தண்ணீர் எடுத்து வந்து தர, இரண்டு மடக்கு தண்ணீர் குடித்ததும், குமட்டிக் கொண்டு வர பாத்ரூமை நோக்கி சென்றாள். வடிவு பின்னேயே சென்றுவிட, மற்ற மூவரும் வெளியே நின்றனர்.

அவள் வாந்தி எடுத்து நிமிரவும், வடிவு படபட இதயத்துடன், "நாள் தள்ளி போயிருக்காடி?" என்க. அவருக்கு இப்டி ஒன்று நடந்து விடுமோ என்ற பயம் இருந்து கொண்டேதான் இருந்தது. "பீரியடா?" என்றாள் சுஹா. "ஆமா?" "பெர்க்னண்ட்ன்னு நினைக்கிறியா? நா அப்பவே டாக்டர கன்சல்ட் பண்ணி டேப்லெட் போட்டுட்டேன்ம்மா" ௭ன்றாள் முகத்தை அளம்பி கொண்டு.

"டேப்லெட் வாங்கி போட்டியா? லூசாடி நீ. வீட்ல ஒருத்தி பெரிய மனுசின்னு இருக்கேனே என்ட்ட சொல்லிட்டு செய்யணும்னு எதையும் செய்ய மாட்டீங்களாடி. யார கேட்டு வாங்கிப் போட்ட". "என்னயே அறியாம நடந்த விஷயம்மா அது, உண்மையிலேயே நடந்ததென்னனு தெரிய வேண்டியிருந்தது அதான் ஹாஸ்ப்பிடல் போனேன்" சுஹா தெளிவாகவே சொல்ல.

அதற்குள் மெய்யப்பன் அழைக்கும் சத்தம் கேட்க. "சரி நாளைக்கு காலைல டாக்டர்ட்ட போயிட்டு வந்துருவோம்" ௭ன வடிவு மெய்யப்பனிடம் செல்ல, "ம்" என இவளும் வெளிவர, மெய்யப்பன், "என்னாச்சு?" என்க. "தெரியலீங்க காலையில டாக்டர்ட்ட போணும்" என்று விட்டு சென்று விட்டார்.

சுஹா உள்ளே சென்று படுத்து விட, மெய்யப்பன், "நீங்களும் உள்ள போங்க" என்றார் விஷாகனிடம். அவன் நின்று முழிக்க, "போடா ரொம்ப சீன் போடாம" என பிடித்து தள்ளிவிட்டாள் பாப்பு.

"நீயும் போய் படுமா". "ப்பா பசிக்குதுப்பா, அதுக்குத்தான் பாதி தூக்கத்துல வெளில வந்தேன். வந்த இடத்துல ஒரு பஞ்சாயத்து பைசல் பண்ண வேண்டியதா போச்சு" என்க. சிரித்தவர் "சரி வா சாப்பிடு, அப்பா உங்கூட உக்கார்ந்துருக்கேன்" என மகளை அமரவைத்து தானே பறிமாறினார். "கோர்ட்லையும் இப்டிதான் ஆர்க்யூமெண்ட்னு வந்ததும் மயங்கி விழுந்துருவா இன்னப்பா" என மேலும் அவரை சிரிக்க வைத்தவாறு சாப்பிட்டு முடித்து சென்று படுத்தாள்.

அங்கு மெதுவாக சுஹா அறை நுழைந்த விஷாகன், "என்னாச்சு உடம்புக்கு, டீ எதுவும் வேணுமா மேடம்" என்க. ஏற்கனவே தாய் கேட்டுச் சென்ற கேள்வியில் குழப்பத்தில் இருந்தவள், "ப்ளீஸ் விஷாகன், ஜஸ்ட் சுஹா போதும், சும்மா எதுக்கு நல்லவன் வேஷம் போடுறீங்க" ௭ன்றாள் ௭ரிச்சலில்.

'நா வேஷம் போடுறேனா? இன்னைக்கு ஹோட்டல்லேயே தங்காம இங்க வந்தேன்ல எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்' என முனங்க. "சத்தமாகவே பேசுங்க அப்பதானே நா பதில் சொல்ல முடியும்". "ஒன்னுமில்ல சுஹா மே... நீங்க படுத்துக்கோங்க. ஏற்கனவே ரொம்ப டயர்டா தெரியிறீங்க" ௭ன்றான்.

"ம். ஓ. கே. நீங்க?", "நா இப்டி கீழ படுத்துக்கிறேன்". "நார்மலா பிஹேவ் பண்ண மாட்டீங்களா? எதுக்கு பயப்படுற மாதிரி நடிக்கிறீங்க" ௭ன்றாள் அவனை சந்தேகமாக பார்த்து. "பயம்லா இல்ல, உங்களுக்கு கம்பர்டப்ளா இருக்காதேன்னு சொல்றேன்". "அத நா பாத்துக்குறேன். பெட் மூணு பேர் படுக்குறளவு பெருசு தான், சோ மேலயே படுங்க. ஆனா இதயே அட்வான்டேஜ்ஜா எடுத்துக்க வேணாம். உங்கள நம்பி தான் அலோவ் பண்றேன்" என படுத்துவிட்டாள்.

சிறிது நேரம் நின்று முழித்தவன், "அவங்களே கூப்பிடும் போது நமக்கென்ன படுப்போம்" என படுத்துக்கொண்டான். அவனுக்கு ஏதேதோ யோசனைகள் இருந்தும் நிம்மதியான உறக்கம் கிடைத்தது.

அங்கு இரணியன், தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவன், அப்போது தான் எழுந்து சென்று பால்கனியில் நின்று சற்று தள்ளி தெரிந்த கடலை வெறித்தான். முன்பு அடிக்கடி இப்படி நிற்பவன், இப்பொழுது வெகு நாட்கள் கழித்து நிற்பதையும் உணர்ந்தான். அதுவும் மனம் முழுவதும் உற்சாகத்துடன் பரபரப்பாக இருந்தது அவனுக்கு. அவள் வாட்ஸ்அப் டிபி எப்பொழுதும் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த செல்ஃபியாக தான் இருக்கும். அதை இப்போது எடுத்துப் பார்த்து, வாயை கோணி, நாக்கை துருத்தி தன்னை இடித்துக் கொண்டு நிற்பவளை கண்டு ரசித்தான். "சாட்டர் பாக்ஸ்" என சொல்லி விட்டு சிரிக்க, அவள் மெசேஜ் வந்து விழுந்தது.

பாப்பு தனதறை வந்து படுத்தவள், இரணியன் நினைப்பு வர, "குட் நைட் சார்ம்" என அனுப்பினாள். உடனே ஒரு குதூகலம் வர, கால் செய்து விட்டான்.

"என்னாச்சு சார்ம் இன்னுமு தூங்காம இருக்கீங்க? யாரையும் மிஸ் பண்றீங்களா" ௭ன்றாள் ௭டுத்ததும். "ஆமா.லாஸ்ட் 1 மன்த்தா ஒரு சாட்டர்பாக்ஸ் என் காதுக்குள்ள பேசிட்டு இருக்கும்போது தூங்கியே பழகிட்டேனா, அந்தத் தொந்தரவு இன்னைக்கு அது வீட்டுக்கு போயிடுச்சா, அதான் தூக்கம் வரல" ௭ன்றான் சிரித்து.

"வேண்டா வெறுப்பா சொல்ற மாதிரி சொன்னாலும் நீங்க வலியுறது அப்பட்டமா தெரியுது சார்ம்". "வாட் நா உண்மையா, நினைக்கிறத அப்டியே சொன்னா, உன் டிக்ஷனரில ஃபிலிட்டர்ங்கா?" ௭ன குரல் உயர்த்தி கேக்க. "ஒத்துக்க மாட்டீங்களே, சரி அப்றம் என்ன பண்றீங்க?", "சும்மா அப்டியே காத்து வாங்கிட்டு நிக்கிறேன். நீ?” "நா ஒரு பஞ்சாயத்த முடிச்சுட்டு சாப்பிட்டு தூங்கலாம்னு படுத்துருக்கேன். சரி அப்பவே ஒரு குட் நைட் கூட அனுப்பலயேன்னு பீல் பண்ணீங்களேன்னு அனுப்பினேன். நா மட்டும் உங்கள மிஸ் பண்ணேன்னு நீங்க நினைச்சுட கூடாதுல அதுக்கு தான் இவ்வளவு எக்ஸ்பிளைன் பண்ணி சொல்றேன்" ௭ன்றாள் நீளமாக.

"நா ஒன்னும் அப்படில்லாம் நினைக்கல. என்ன பஞ்சாயத்து பண்ணுன? அதுவும் இந்நேரம்". "அதுவா, அது ஒரு பெரிய கத சார்ம்". "ஓஹோ! கொஞ்சம் ஷார்ட்டா சொல்லு பாப்போம்". அவளால் முடிந்த மட்டும் நடந்ததை சுருக்கிச் சொல்ல, "கொஞ்ச நாள் ஆகும் போது செட் ஆகிடுவாங்க. பவ்யாவும் எங்க போனான்னு தெரியல. இத்தன நாள் வெளியில தனியா விடாம வச்சுருந்தேன். ஆனா இப்ப அம்மா சப்போட்ல எனக்கு தெரியாம கிளம்பி போயிருக்கா" ௭ன்றான் அவனும்.

"அவ ஹெல்த் கண்டிஷன் அவளுக்கு தெரியும் தான அப்புறம் எப்படி ரிஸ்க் எடுப்பா, வந்துருவா சார்ம்". "ம் பாக்கலாம் தென்?” "தென், என்ன சாப்பிட்டீங்க நைட்?” இப்படியே சங்கீத ஸ்வரங்கள்... என்னவோ மயக்கம்னு போயிட்டிருந்தது அவங்க கான்வர்ஷேஷன். நாமளும் இவுங்க வாய பாத்துட்டுருந்தா விளங்குமா, வாங்க போவோம்.

மறுநாள் காலையில் எழுந்ததிலிருந்து வடிவு பரபரப்பாக சாப்பாட்டு வேலையை பார்ப்பது போல், அடிக்கொருதரம் சுஹா அறையை வேறு பார்த்துக்கொண்டிருக்க. ஹாலில் வந்து அமர்ந்த மெய்யப்பனும் அதை கவனித்துக் கொண்டிருந்தார்.

முதலில் எழுந்த விஷா தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து, சுஹாவை பார்த்தான், அவள் நல்ல உறக்கத்திலிருக்கவும் வெளியேறி விட்டான். ஹாலில் வந்தமர, மெய்யப்பன் சிநேகிதமாய் சிரித்தவர், "வேலைலா எப்டி போயிட்டுருக்கு. அந்த பொண்ணோட அப்பா." அவர் முடிக்கும் முன், "பாப்பு முறைப்படி உங்களுக்கு அவர் சம்பந்தி தானே அங்கிள்" ௭ன விஷா கேட்டதும்.

"ம் அவளுக்கு கல்யாணம் ஆனது எங்கப்பா நியாபகத்துல இருக்கு. சரி அவர் எதுவும் அப்போஸ் பண்ணலையா?" ௭ன்றார் பின். "அதெல்லாம் ஒன்னும் சொல்லல அங்கிள், புரிஞ்சுகிட்டாங்க". "ஓ! சுஹா எங்க?” "நல்லா தூங்குறாங்க", பின் சிறிது நேர பேச்சின் பின் அவர் கோர்ட்டிற்கு கிளம்ப எழுந்து சென்றுவிட, இவன் பேப்பர் படிக்க ஆரம்பித்தான்.

நேரம் செல்ல, பாப்பு, சுஹா, மெய்யப்பன் மூவரும் அவரவர் வேலைக்கு செல்லும் நிமித்தம் ஒருவர் பின் ஒருவராக கிளம்பி வர, வடிவு சுஹாவிடம், "இன்னமும் வாமிட் வார மாதிரி எதுவும் இருக்கா?" என்க.

பாப்பு முந்தி கொண்டு, "அதான் நைட் வாந்தி எடுத்துட்டாளே, மறுபடியுமா மறுபடியுமா வரும். அந்த அளவுக்கா உன் சாப்பாடு மேல உனக்கு சந்தேகம்" என்க. "கொட்டிக்க தானே வந்த அந்த வேலைய மட்டும் பாரு" ௭ன்றார் வடிவு காட்டமாக.

"ப்பா ஜட்ஜ்மெண்ட் சொல்லுங்கப்பா, ஒரே வயித்துல பொறந்த ரெண்டு பேர்ல ஒருத்தர மட்டும் 'என்னம்மா செய்து, ஏதுமா செய்துங்குறது. இன்னொருத்திய ஏன்டா பெத்தோம்கிறது'. இது நியாயமா, பார்ஸியாலிட்டிக்கு உங்க சட்டத்துல என்ன தண்டனைன்னு சொல்லுங்கப்பா" என்க. வடிவு அவள் முதுகில் ரெண்டு அடி போட்டு, "பேச்ச குறைச்சுட்டு சாப்பிட்டு கிளம்புடி" என்று விட்டு போக.

வேடிக்கை பார்த்து நின்ற விஷாவை, "வா விஷா" என அவனயும் அழைத்து கொண்டு சாப்பிட அமர்ந்தாள். அவன் இங்கு சாப்பிடுவது இதுவே முதல் முறை, இதை சொன்னால் இதற்கும் ஒரு சண்டை பிடிப்பாள் என அமைதியாக இருந்துவிட்டான்.

மற்றவர்களும் எதுவும் பேசாமல் இருக்க, "பாப்பு வந்தா தா இங்க சாப்பிடணும்னு இருந்தீங்களோ?" என்றார் மெய்யப்பன் மட்டும். விஷா பதில் சொல்லு முன் "நீங்க சாப்பிட கூப்பிட்டா தானப்பா அவன் சாப்பிட வருவான்" என்றாள்.

அவர் முதல் நாளே மேலோட்டமாக அழைத்தார் தான், அவன் மறுக்கவும், அவர் வற்புறுத்தவில்லை. அதன் பின் அவரும் சொல்வதில்லை, இவனும் ௭ழுந்து சென்று விடுவான்.

"இல்லம்மா" மெய்யப்பன் சொல்ல வர, "அவ கடக்கா நீங்க சாப்பிடுங்க" என்றார் வடிவு. அந்நேரம் காலிங் பெல் சத்தம் கேட்க, வடிவே சென்று கதவை திறந்தார். அப்பார்ட்மெண்ட் டாக்டர் நிக்க, "வாங்க டாக்டர்" என உள்ளே அழைத்து விட்டு, "இருங்க சாப்பிடுங்க" என்க.

"சாப்பிட்டு தான் வந்தேன் மேடம். யாருக்கு செக் பண்ணனும்" ௭ன்றார் டாக்டர். "சுஹாவுக்கு தான். இருங்க வர சொல்றேன்" என அவரே பேசி முடித்துவிட்டு திரும்ப, மொத்த குடும்பமும் அவரைத்தான் பார்த்தது.

"ம்மா சாதாரண வாந்திக்கா இப்டி காலைலயே டாக்டர வர வச்சிருக்க?" சுஹா கேட்க. "சும்மா இரு உனக்கு ஒன்னும் தெரியாது, கை கழுவிட்டு வா அவங்க பாக்கட்டும்" வடிவு சொல்ல. "உன் நடவடிக்க ஒன்னும் சரியில்ல எதுக்கு இன்னைக்கு அவ மேல பாசத்த அள்ளி கொட்டுற?" பாப்பு கேட்க.

"நீ இன்னும் கிளம்பலையா? எடத்த காலி பண்ணு மொத" என்றவர் டாக்டரிடம் சென்று விட்டார். பின் சுஹா வர, டாக்டரையும் சுஹாவையும் சுஹா அறைக்கு அனுப்பி விட, மற்ற மூவரும் வடிவு செயல் புரியாமல் முழித்து நின்றனர். அவர்கள் முழியை பார்த்து "டாக்டர் வந்து என்னன்னு என்ட்ட சொல்லட்டும், அப்புறம் நா உங்கட்ட சொல்றேன்" என்று விட்டார் வடிவு.
 
அத்தியாயம் 28
சுஹா அறைக்குள் டாக்டர் செல்லவும், வடிவும் பின்னேயே சென்றுவிட, பாப்பு "நானும் போய் உள்ள என்ன நடக்குன்னு பாத்துட்டு வரேன்" என நடக்கவிருந்தவளை, "இங்கேயே பேசாம நில்லு" என நிறுத்தினான் விஷாகன்.

"நா போனா என்னன்னு தெரிஞ்சுட்டு வருவேன்ல" என பாப்பு சொல்ல, "நீ உள்ள போனா அங்க செக்கப் நடக்காது, கலவரம் தான் நடக்கும். அதனால இங்கேயே நில்லு, அவங்களே பாத்துட்டு வந்து சொல்லட்டும்" ௭ன்க. இவள், "என்ன நீ என்னன்னு நெனச்சிட்ருக்க" என விஷாகனிடம் சண்டைக்கு தயாராக, அவங்க சண்ட அங்க நடக்கட்டும் நாம உள்ள என்ன நடக்குதுன்னு பாப்போம்.

வடிவு உள்ளே செல்கையில், சுஹா கையில் நாடி பிடித்து பார்த்துக் கொண்டிருந்தார் டாக்டர். "என்னாச்சு டாக்டர், ஏதாச்சு தெரியுதா?" ஆர்வம் இருப்பது போலவும், இல்லாதது போலவுமான ஒரு குரலில் வடிவு கேட்க.

"எதுக்கும் பெர்க்னன்ஸி கிட் வாங்கி கான்பாஃர்ம் பண்ணிடலாம். அபார்ட்மெண்ட் மெடிக்கல்லயே வாங்கிட்டு வரச் சொல்லுங்களேன்" என்க. "எனக்கு இருக்கிற பதட்டத்துல கீழே போயிட்டு வாறது ரொம்ப கஷ்டம். பாப்புவ வாங்கிட்டு வர சொன்னா மொத்த அபார்ட்மென்ட்டுக்கும் விஷயத்த சொல்லிட்டு தான் வாங்கிட்டே வருவா. பேசாம இவள நாம கீழ உங்க கிளினிக் கூப்பிட்டு போயிட்டா என்ன?”

அவரை வித்தியாசமாக பார்த்த டாக்டர், "இவங்க ஹஸ்பன்ட் தான் வெளில நிக்கிறாரே, அவர்ட்ட சொல்ல வேண்டியது தான? இல்ல ஃபர்ஸ்ட்டே நீங்க சுஹாவ கூட்டிட்டு கீழ வந்துருக்கனும்" என்க. டாக்டரிடம் அதை மறுத்துக் கூற முடியாமல், "சரி நா அவர வாங்கிட்டு வர சொல்றேன்" என வெளியேறினார் வடிவு.

வடிவு வெளியேறவும், சுஹா டாக்டரிடம், "நா ஒரே ஒரு டைம் வாமிட் பண்ணேன். அதுவும் ஹெட்-ஏக்னால. அவங்க தான் புரியுமா நா பெர்க்னன்ட்டா இருப்பேனோனு நெனச்சு என்னவெல்லாமோ பண்றாங்க. நீங்களும் எப்டி டவுட் பண்றீங்க?” "டூ ரீசன்ஸ் சுஹாசினி. ஒன்னு உன் நாடித்துடிப்பு நீ கன்ஸிவா இருக்கன்னு சொல்லுது, செகண்ட் உன் அம்மாவோட எக்ஸைட்மென்ட்டான பேஸ் இப்பயே கன்பார்ம் பண்ணிவிட்டு போன்னு சொல்லுது" ௭ன சிரிக்க. "அது எப்டி நா தான் டேப்லெட் எடுத்தேனே இப்டி ௭தும் ஆக கூடாதுன்னு" சுஹா குழப்பமாய் கேக்க.

"ஏன் கன்சிவாக கூடாதுனு நினைச்சீங்க?" என அவர் சந்தேகமாய் கேட்க, பின்பே உளறி விட்டதை உணர்ந்த சுஹா, "உங்களுக்கெல்லாந்தான் தெரியுமே மேடம், எங்க மேரேஜ் எக்ஸ்பெக்ட் பண்ணாம சடனா நடந்தது. சோ பேபி கொஞ்ச நாள் ஆகட்டும்னு நினைச்சுட்டு இருந்தோம்" என நிறுத்த.

"அதுலா நம்ம டிசைட் பண்ண முடியாது காட் கிஃப்ட், கிடைக்கும்போது அத அக்ஸப்ட் பண்ணிக்கணும்". இதற்கு பதிலளிக்கவில்லை அமைதியாகி விட்டாள் சுஹா.

அங்கு வெளியேறிய வடிவு, அவர் வரவை எதிர்பார்த்து நின்ற மூவரிடமும் பொதுவாக, "சீக்கிரம் போய் கீழ இருக்க மெடிக்கல்ல பிரக்னென்ஸி கிட் வாங்கிட்டு வாங்க" என எங்கோ பார்த்து சொல்ல, பாப்புவும், மெய்யப்பனும் ஷாக்கானாலும், அது விஷாகனிடம் சொல்லப்பட்டது தான் என சுதாரித்து திரும்பி அவனைப் பார்க்க, அவனோ அதிர்ச்சியின் உச்சத்தில் வாயை பிளந்தவாறு நின்றான்.

பாப்பு வடிவிடம், "வெள்ள பாச்சாவாம்மா?" என கேட்க, "சீக்கிரம் வாங்கிட்டு வரச்சொல்லுடி அவர" என எரிச்சலானார் வடிவு.

"விஷா நீ போறியா? இல்ல நா போகவா?" என அவன் கையில் நறுக்கென கிள்ளியவள், அவன் திருதிருவென விழிக்க, "ஒரே அட்டம்ட்ல எப்டின்னு தான முழிக்கிற. எனக்கும் அதே டவுட்டு தான், வெரி ஸ்ட்ராங் பவுண்டேஷன் கங்கிராட்ஸ் விஷா" என அவன் கை பிடித்து குலுக்க. அவனுக்கு அவள் பேசிய எதுவும் காதில் விழுந்தவாறு தெரிய வில்லை, முழித்த முழியை முழித்தவாறு தான் நின்றான்.

"இது தான் அறிவில்லாம பேசுதுன்னா, அந்த பையனும் கேட்டிட்டு நிக்குது, நமக்குன்னே வந்து சேருதுகளே" என முணங்கியவர், மெய்யப்பனிடம், "நீங்கனாலும் லிப்ட்ல போயி வாங்கிட்டு வர்றீங்களா?" என கேட்க.

எப்பொழுதுமே பொறுமை கையாளும் அவர், இப்போதும் பொறுமையாகவே, "இரு வடிவு அவருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியா தான இருக்கும், அவரே வாங்கிட்டு வரட்டும்" என்க. பாப்பு மறுபடியும், "டேய் போறியா இல்லையா?" என இடிக்க, "இதோ டூ மினிட்ஸ், சாரி ஏதோ நினைப்புல நின்னுட்டேன் இப்ப வரேன்" என ஓடத்தான் செய்தான்.

"ஹை பாப்பா வர போகுது" என 2 குதி குதித்தவள் தன் மொபைலை எடுத்து "ஐ ம் கோன்னா பி எ சித்தி சூன்(நா சித்தி ஆக போறேன்)" என ஹார்ட்டினோடு ஸ்டேட்டஸ் தட்டிவிட, அடுத்த நிமிடங்களில் கங்கிராட்ஸ் வந்து குவியத் தான் செய்தது.

டூட்டிக்கு கிளம்பிச் சென்று கொண்டிருந்த, வேதியும், இதை பார்த்து விட்டு, அது தான் இல்லை எனில் சுஹா தான் என நினைத்தவள், உடனே தகப்பனாருக்கு போனடித்து விஷயம் இன்னும் கன்ஃபார்ம் இல்லை எனவும், வண்டியை சுஹாவை பார்க்க திருப்பிவிட்டாள்.

அங்கு ஜாக்கிங் முடித்து ரூமிற்குள் மொபைலை பார்த்துவாறு நுழைந்த இரணியன், பாப்பு ஸ்டேட்டஸ் ஜஸ்ட் நௌவ் என காட்டவும் ஓபன் செய்து பார்த்துவிட்டு, அது வேதிகாவே என நினைத்து "கன்வே மை விஷ்ஸஸ் தாட்சா, யூ கோன்னா பி எ சித்தி மீன்ஸ் ஐ வில் பிகம் சித்தப்பா ரைட் சோ யூ வில் கிவ் மீ எ ட்ரீட் டுடே (௭ன்னோட வாழ்த்தயும் சொல்லிடு தாட்சா, நீ சித்தி ஆக போறன்னா நா சித்தப்பா ஆக போறேன்னு தான அர்த்தம், அதனால் இன்னைக்கு ௭னக்கு பார்ட்டி குடுத்திடு)" என அனுப்ப.

"நா கண்டிப்பாக சித்தி ஆகிடுவேன். நீங்க சித்தப்பா ஆவிங்களான்னு தெரியலயே" என இவள் பதில் அனுப்ப. "வாட் யூ மீன்?", "விஷாவுக்கே நீங்க என்ன ரிலேஷன்னு இன்னும் தெரியல? அப்புறம் தான அவன் குழந்தைக்கு.." என்ற அவள் மெசேஜிற்க்கு அவனிடமிருந்து பதில் வரவில்லை. அவனே வரலாமென கிளம்பி விட்டிருந்தான்.

அப்போது கிட்டுடன் விஷாகன் வீட்டினுள் நுழைய, "ஏன் விஷா உனக்கு பிறக்குற புள்ள, சார்ம எப்டி கூப்பிடும்?" என கேட்க. அவன் அவளையும் கிட்டையும் மாறி மாறி பார்க்க, விறுவிறுவென வந்த வடிவு, அவள் மண்டையில் கொட்டி அவனிடமிருந்த கிட்டை வாங்கிக்கொண்டு சுஹா அறைக்கு சென்று விட.

பாப்பு தலையை தடவி கொண்டே "நீ சொல்லு" என மறுபடியும் கேட்க. அவனோ படப்படப்பின் உச்சத்தில் இருக்க, இவள் கேள்வியை கிடப்பில் போட்டுவிட்டான். பதில் சொல்லாத அவனிடம் எரிச்சல் பட்டு மொபைலில் வந்து கொண்டிருந்த மெசேஜ்க்கு ரிப்ளை செய்ய சென்றமர்ந்தாள்.

பத்து நிமிட காத்திருப்பில், டாக்டரும் வடிவும் வெளிவந்தனர். "எதுக்கும் ஹாஸ்பிடல் போய் ஸ்கேன் பண்ணிடுங்க, அவுங்க அல்ரெடி டேப்லெட் எடுத்தேன்னு வேற சொன்னாங்க. சோ ஸ்கேன் பண்ணிட்டா, அவங்க பேபி ஹெல்த் வளர்ச்சிக்கு டேப்லெட்ஸ் கொடுப்பாங்க. நீங்களும் தைரியமா இருக்கலாம்" என்க. "சரி மேடம் இன்னைக்கே போய்ட்டு வந்துடுறோம்" என தலையாட்டினார் வடிவு.

விஷாகனை கடக்கையில், "கங்கிராட்ஸ் மிஸ்டர், சுஹாசினிட்ட சொன்னது தான் உங்கள்ட்டயும் சொல்றேன், மேரேஜ் திடீருன நடந்திருந்தாலும், உங்களுக்கு பேபின்னு ஒன்னு வந்து உங்க லைஃப அடுத்த ஸ்டெப்க்கு லிஃப்ட் பண்ணிடுச்சு, சோ ஹாப்பியா அக்ஸப்ட் பண்ணிக்கோங்க" என்க.

அவனுக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை, இருந்தும், "தேங்க்ஸ் மேடம், ஓகே மேடம்" என குத்து மதிப்பாக தலையாட்டி கேட்டுக் கொண்டான். அவர் வெளியேறிய நிமிடம் உள்நுழைந்தாள் வேதி, "என்னம்மா ரிசல்ட்? என்ன சொன்னாங்க?" என்ற கேள்வியுடன்.

வடிவு முழித்து, "உனக்கு எப்டிமா தெரியும்? கரெக்ட்டா வந்திருக்க" என்றார். வேதி சிரித்து "பாப்பு லைவ் டெலிகாஸ்ட் பண்ணிட்டுருக்காம்மா, டாக்டர் கன்பார்ம் பண்ணு முன்னயே ஸ்டேட்டஸ் வச்சுட்டா, ஊருக்கே தெரிஞ்சுருக்கும் இந்நேரம்" என்க.

வடிவு பலியாய் முறைக்க, "ஹாப்பினஸ் ஸ்ப்ரட் பண்ணேன், இதுக்கு ஏன் முறைக்கிற?" ௭ன்றாள் பாப்பு சிறு தோள் குழுக்களுடன். "இனிமே என்ன கேட்காம ஏதாவது செய், கம்பிய பழுக்கக் காய்ச்சி நாக்குலேயே இழுக்குறேன்".

"விடுங்கம்மா, அவ இன்னும் சின்ன பொண்ணாவே இருக்கா, சுஹாவ பாக்கலாம், குட் நியூஸ் தானே?" ௭ன நிறுத்த. "ஆமாம்மா எதுக்கும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு வந்துருவோம்" என வடிவு சொல்லிக் கொண்டிருக்க, சுஹா யோசனையான முகத்துடன் வெளியே வந்தாள்.

விஷாகன் பார்வையில் ஒரு உரிமை வந்தது போலிருந்ததோ, பாப்பு, "கங்கிராட்ஸ் வெள்ளபாச்சா" எனக் கத்திக் கொண்டு வந்து அவளை கட்டிக்கொண்டாள். வேதி மறுபக்கம் அணைத்து விடுவித்தாள், மெய்யப்பன் அவள் தலையை தடவி ஏதும் சொல்லாமலே வாழ்த்த, இவற்றையெல்லாம் ஏக்கமாய் பார்த்து தள்ளி நின்றான் விஷாகன்.

எல்லோர் முகத்தையும் ஒருமுறை பார்த்துவிட்டு, இறுதியாக விஷாகன் முகத்தையும் பார்த்து விட்டு, "எல்லாரும் ஹாப்பியா இருக்கீங்க, ஆனா நா குழப்பத்துல இருக்கேன். எனக்கு இந்த குழந்தைய பெத்துக்க முடியும்னு தோணல", என சுஹா சொல்லி கொண்டிருக்கும் போதே, "அபசகுணமா பேசாதடி" என கொந்தெளித்தார் வடிவு.

"நா முடிச்சுறேன்மா, எனக்கு மட்டும் ஒரு உயிர கொல்லணும்னு ஆசையில்ல, பட் இது இல்-லீகல் மா. ரெண்டு பேர் அன்புனால ஒரு உயிர் உருவாகணும், பட் இங்க இது எப்டி உருவானதுன்னு உங்க எல்லாருக்குமே தெரியும், அக்ஸப்ட் பண்ணிக்க முடியலமா. அப்படியே நீங்க எல்லாரும் சொல்றீங்கங்குறதுக்காக நா ஒத்துக்கிட்டாலும் நாளைக்கு இந்த குழந்த பொறந்து அப்பாவுக்காக சண்டைபோட்டு ஏங்கி நிக்கிற நிலம வரும்மா. அது தேவையா?”

"என்னடி என்னல்லாமோ ஒளறுற?" வடிவு கேக்க. "ம்மா உனக்கு ஏன் புரியல. நாளைக்கு அவர் பஸ்ட் வைஃப்க்கும் குழந்த பிறக்கும், அந்தப் பிள்ளைங்க இவர என் அப்பான்னு சண்டைக்கு வரும். ௭ன் புள்ளையும் அப்பாவுக்காக சண்டைக்குப் போகுற நிலம வரும். இதெல்லாம் வேணான்னு நினைக்கிறேன், வாழ்க்க பூரா இந்த இது அவங்கள துரத்திக்கிட்டே இருக்கும்".

"நாட்டுல ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிட்டவங்கெல்லாம் குழந்த பெத்துக்கலையா? நல்லா வாழலையா?" என வடிவு கேட்க. "நா எனக்கும், என் பிள்ளைக்கும் அப்டி ஒரு சிட்வேசன் வேணான்னு நினைக்கிறேன்".

"எதையும் டக்குனு முடிவு பண்ணாத சுஹா, டைம் எடுத்து யோசி" என்றார் மெய்யப்பன். "இன்னும் கொஞ்ச நேரம் யோசிச்சு, இந்த குழந்த வேணும்னு தோணிறக்கூடாதுன்னு தான்பா டக்குனு முடிவெடுத்துட்டேன்".

"நா ஒரு விஷயம்.. பேசலாமா மேடம்?" என்றான் அவ்வளவு நேரம் அமைதியாக நின்ற விஷாகன். அனுமதிப்பது போல் எல்லோரும் அமைதியாகி அவன் முகம் பார்க்க.

"என் லைஃப்ல, என் ப்ளட் ரிலேஷன்னு சொல்லிக்க, இந்த வேர்ல்டுல எனக்கு யாருமே கிடையாது. கடந்த 15 வருஷமா அப்டித்தான் வாழ்ந்துட்டுருக்கேன். அம்மா, அப்பா, அண்ணா, அக்கா இப்டில்லாம் நா கூப்பிட்டது ௭தும் இப்ப ௭னக்கு ஞாபகம் கூட இல்ல. எல்லாரையும் சார், மேடம், மேல அவங்க அனுமதிச்சா அங்கிள், ஆன்ட்டி அவ்வளவுதான் ௭ன் லிமிட். எனக்கே எனக்குன்னு ஒரு உறவுனா அது நீங்க பெத்து தரப்போற இந்த குழந்தை தான். அதையும் தர மாட்டேன்னு சொல்லிடாதீங்க. நீங்கெல்லாம் எங்கேயாவது போனா, எங்க போற? சாப்டியா? என்ன பண்ற? எப்ப வீட்டுக்கு வருவ? இப்டி கேட்கவும், வரலன்னா அதட்டவும், ஒருத்தர்னாலும் உங்க கிட்ட இருப்பாங்க, எனக்கு! அப்டி ஒருத்தர இனி தான் நீங்க குடுக்க போறீங்க. நீங்க பயப்படற மாதிரி ஸ்ட்சுவேஷன் இந்த குழந்தைக்கு ௭ன்னைக்கும் வராது, பிறக்கற குழந்தைய ஏங்கவிடாம நா வளக்குறேன். நீங்க பயப்படுறீங்கன்னு தான் இதக்கூட சொல்றேன். என்ன கேட்டா அம்மா அப்பா ரெண்டு பேர் பாசமும் ஒவ்வொரு குழந்தைக்கும் வேணும். சிம்பதி கிரியேட் பண்றதுக்காக இதல்லா நா சொல்லல. நம்ம! குழந்தைய காப்பாத்திக்க தான் இவ்வளவும் பேசுறேன், ப்ளீஸ் மாட்டேன்னு மட்டும் சொல்லாதீங்க" ௭ன அவன் நீளமாக பேசி முடிக்க.

"பி பிராங்க் விஷா, நா டெய்லி கோர்ட்ல பாக்குறேன், கூடப்பிறந்தவங்களே சொத்துக்கு அடிச்சுகிறதும், பெத்தவங்களயே யாருன்னு கேக்குறதும், இப்ப நிறைய நடக்குது. அப்பா அம்மா சேர்ந்து வளக்குற குழந்தைகளே வழி தவறி போயிடுற இந்த காலத்துல, என்னால நம்மள பத்தி, எக்ஸ்பிளனேஷன் கொடுத்துகிட்டே இருக்க முடியும்னு தோணல. ப்ளீஸ் சென்டிமென்ட்டலா பேசி முட்டாள்தனம் பண்ணாதீங்க. எனக்கு கல்யாணம் ஆயிடிச்சுன்னு கூட இன்னுமு நிறைய பேருக்கு தெரியாது. வெளியுலகத்த பொருத்தவர பவ்யா தான் உங்க வைஃப். அவங்க குழந்தைங்க நாளைக்கு பிரச்சனை பண்ணமாட்டாங்கன்னு, இன்னிக்கே உறுதியா எப்டி உங்களால சொல்லமுடியும். இவ்வளவு குழப்பங்களுக்கு நடுவுல இது இப்பத் தேவையா?”

"மேடம் நா உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன்" என பரிதவித்தான் விஷா.

பாப்பு அவள் திருவாயை மூடிக் கொண்டுதான் நின்றாள். ஏதோ டிபேட்டை வேடிக்கை பார்ப்பது போல் இருவர் வாயயும் பார்த்து நின்றாள். 'இருவர் சைட் பாயிண்ட்ஸ் வேல்யூப்ல் தான், ஆனா அதுக்காக குழந்தை வேணாம்னு சொல்றது ஒத்துக்க முடியாது' என அவள் நினைத்துக் கொண்டிருக்க, "லெட் மீ எக்ஸ்பிளைன் சம்திங்" என ஆபத்பாந்தவன் போல் வந்து நின்ற இரணியனை பார்த்து, "சார்ம்" என ஓடினாள்.

அவனை நெருங்கி, சற்று எக்கி, ரகசிய குரலில், "இங்க குழந்த வேணும் வேணாம் ஆர்க்யூமெண்ட் போயிட்ருக்கு", "வரும்போதே கேட்டேன்ம்மா, நா பேசிக்றேன் வா" ௭ன்றான் நிதானமாகவே. "ஆயிரமேயானாலும் அவ ஒரு வக்கீல், பாயிண்ட் பாயிண்ட்டா பேசுவா. விஷாகன் போட்ட சென்டிமென்ட் பாலயே மென்னு துப்பிட்டா. அதனால நேக்கா பேசி அவள ஒத்துக்க வச்சிருங்க", நெருக்கத்தில் தெரிந்த அவளது முகத்தையே சிரித்தவாறு பார்த்தான்.

"அன்னைக்கு விஷாவ பத்தின ஒரு விஷயத்த நீ கேட்டதும், அப்புறமா சொல்றேன்னு சொன்னேன்ல, அத இப்ப சொல்றேன் வா" என அவளையும் தள்ளி கொண்டு உள்ளே நின்றவர்களை நோக்கி நடந்தான்.

விஷாகனை நெருங்க விஷாகன் திரும்பி இரணியனை இறுக்க அணைத்துக்கொண்டான். அவ்வளவு நேரம் அடக்கிவைத்திருந்த உணர்ச்சிகள் வெளியேற ஆரம்பித்தது. தானும் அப்பாவாகி விட்டோம் ௭ன்ற சந்தோஷம் ஒருபக்கம், அது நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயம் கலந்த கவலை ஒருபக்கம் என எல்லாமுமாய் சுற்றி இருந்தவர்களை மறந்து, அவன் தனக்கென நினைக்கும் ஒரே ஜீவனான இரணியனை கண்டதும் அழுகையாய் பொங்கி வெளியேறியது.

இரணியனுமே அதீத சந்தோசத்தில் தான் வந்தான், உள்ளே நடக்கும் கான்வர்சேஷன் கேட்டதும் வெளியே நின்று விட்டான். பின்பும் விஷா ஏதும் பேசாமல் நிற்பதை கண்டு தான், தானே விளக்கம் அளிக்க உள்ளே நுழைந்தான்.

விஷாகனை சற்று தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தி, தள்ளி நிறுத்தி விட்டு சுஹாசினியிடம், "வெளி உலகத்துக்கு தெரியாதத ஒரு பிரச்சனையா சொன்னிங்க, அத சரியா செய்ய வேண்டியது என் பொறுப்பு. அப்புறம் இன்னொரு விஷயம், பவ்யாவுக்கு குழந்தை பிறந்தா நாளைக்கு பிரச்சினையாக கூடாதுன்னு பயந்தீங்க. அப்டி ஒரு விஷயம் நடக்கவே போறதில்ல, ஏன்னா, பவ்யா ஓவரா ட்ரக் அடிக்ட் ஆனதுல அவளோட கர்ப்பப்பைல கேன்சர் கட்டி வந்து கர்ப்பப்பை ரிமூவ் பண்ணிட்டாங்க, அதனால அந்த பயமும் உங்களுக்கு தேவயில்ல" ௭ன நிறுத்தியவன்.

ஒரு சின்ன அமைதிக்கு பின், "நா சின்னப்பையனா இருக்கும்போது, என்ன நாலு பேர் ரேக்கிங் பண்ணதுல ரோட்ல ஓடிவந்து, இவங்க பேமிலியா வந்துட்ருந்த கார்ல மோதிட்டேன். அன்னைக்கு நடந்த ஆக்சிடென்ட்ல அவங்க அம்மா, அப்பாவ இழந்து இவன் தனியாளாகிட்டான். என்னால தான்ற ஒரு குற்ற உணர்ச்சியால இவன மொத்தமா நா பாத்துக்க முடிவு பண்ணேன். நா அவனுக்கு செஞ்ச உதவிக்கு பதில் செய்யணும்னு இவன கேட்காமலேயே பவ்யாவ கல்யாணம் பண்ணிக்க ஏற்பாடு பண்ணிட்டாங்க ௭ன் பேரண்ட்ஸ், அவள பத்தி முழுசா தெரிஞ்சும் தனக்கு இனி அடுத்த ஜெனரேஷனே கிடையாதுன்னு தெரிஞ்சும், ௭னக்காக அவள கல்யாணம் பண்ணிக்கிட்டான். இப்ப அவனுக்காக நா கேக்குறது இந்த ஒன்னே ஒன்னு தான், அவனோட குழந்தைய அவனுக்கு குடுங்க" சிம்பிளாக வேகமாக விஷயத்தை சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருந்தான்.

அங்கிருந்த எல்லோருக்குமே தலை சுற்ற தான் செய்தது. விஷா மீது சற்று மரியாதை வந்திருந்தது நிஜம். சுஹாவும் யோசிக்க ஆரம்பித்திருந்தாள். அவளுக்கு தனிமை கொடுத்து எல்லோரும் ஹாலில் அமர, வடிவு டீ போட்டு எடுத்துவர சென்றார்.

அரை மணி நேர காத்திருப்புக்குப் பின், "ஹாஸ்பிடல் போகலாம்" என வந்து நின்றாள் சுஹாசினி.

'நீங்கள்லாம், என்ன கூடி பேசி முடிவெடுக்குறது, இது தான் நடக்கணும், இதுதான் நடக்கும்னு அல்ரெடி எழுதின நோட்புக் பிரகாரம் தானே எல்லாம் நடக்கும். அது தெரியாம என்ன வட்ட மாநாடு வேண்டியிருக்கு. இவுங்க ரெண்டு பேருக்கும் இந்த குழந்தை உருவாகணுன்றதும், இது உருவானதும் இரணியன் பாப்பு வாழ்க்கையில இணைந்ததற்கான முன்ஜென்ம ஞாபகங்கள மீட்டெடுப்பதும்தான விதி. அதன் பலனா தான அந்த குழந்தை தன்னுடைய இருப்பை நிலைநாட்டியதும் தன் முன்ஜென்ம உருவத்தையே தாட்சாயினி இரணியன் சகிதம் சிம்லாவில் காண நேர்ந்தது'.

முன்னோர் காலத்தில், "இச்ஜென்மத்தில் அனாதையாய், நிர்க்கதியாய், ராஜ வம்சத்தின் வாரிசாய் பிறந்தும் காடு, மேடுமாய், பட்டினியாய், கயவர்களிடமிருந்து கற்பை காக்க பரிதவிக்க விட்டு, வாழ்க்கை முழுவதும் ௭ன்னை ௭வர்கேனும் பயந்து ஓடவிட்ட என்னைப் பெற்றவளை வருந்த செய்ய வேணும், அவளுக்கு பிறவா பிள்ளையாய் பிறந்து, ஒரு நல்ல பெற்றோருக்கு பிள்ளையாய் அவர் கண் முன் வளருவேன், என் உயிர்ப்பு இக்கால நிகழ்வுகளை அவருக்கு மீட்டு கொண்டு வரட்டும்" என உயிர் விடும் தருவாயில் வரம் பெற்று இறந்தவள், பல வருட காத்திருப்பின் பின் மீண்டும் சற்று தள்ளி இருந்து தாயைக் காண ஜனித்திருக்கிறாள்.
 
அத்தியாயம் 29
ஹாஸ்பிட்டல் சென்று கன்பார்ம் செய்தபின் சில பல அறிவுரைகளும், மாத்திரைகளும் வாங்கிக்கொண்டு விஷா, சுஹா, வடிவு, மெய்யப்பன் நால்வரும் வீடு திரும்பினர். வேதி, பாப்பு, இரணியன் மூவரும் ஹாஸ்பிடலில் இருந்து அவரவர் வேலையை பார்க்க சென்றிருந்தனர்.

அப்பார்ட்மென்ட் வந்ததும் மெய்யப்பன், "நா இப்டியே கிளம்பறேன்மா" இவர்களை ட்ராப் செய்யவே வந்தவர் ௭ன்பதால் அவ்வாறு கூற. "சரிங்க" என வடிவு இறங்க, சுஹா "ப்பா, நா சீனியருக்கு மெசேஜ் அனுப்பிட்டேன், உங்கள பாத்து கேட்டாருன்னா சொல்லிடுங்க. நாளைக்கு எப்டியும் வந்துருவேன். இன்னைக்கு இன்ஜெக்ஷன் போட்டதால தான் கொஞ்சம் அதிக டயர்டா இருக்கு" ௭ன்க.

"நீ ஃபர்ஸ்ட் நல்லா ரெஸ்ட் எடு. உன் சீனியர் ௭ப்டியும் மேனேஜ் பண்ணிப்பாரு. என்னவோ நீ இல்லனா அவர் கேஸயே வாதாடாத மாதிரி தான், மெதுவா இங்க பாத்து இறங்கு" என அதட்டினார் வடிவு.

சுஹா வடிவை முறைக்க, "நீ போம்மா, கேட்டா நா சொல்லிக்கிறேன்" என்றார் மெய்யப்பன். பின் இருவரும் அவர்கள் வீடு இருக்கும் பிளாக் நோக்கி நடந்து விட, இன்னமும் நின்ற விஷாகனிடம், "சொல்லுங்க விஷாகன்" என்றார்.

"அது வந்து அங்கிள், ஹாஸ்பிடல்ல இன்னைக்கு செலவு எவ்வளவு ஆச்சுன்னு சொன்னீங்கன்னா குடுத்திருவேன், தப்பா நினைக்க கூடாது.." என அவன் இழுக்க, அவன் ஆசை புரிந்தது அவருக்கு, அதனால் சிரித்தவர், "இந்தாங்க பில்" என தன் பேக்கை திறந்து எடுத்து நீட்டினார். "தேங்க்ஸ் அங்கிள்" என்றவன் சந்தோஷமாக அதில் குறிப்பிட்டிருந்த பணத்தை தன் பர்சில் இருந்து எடுத்து நீட்டினான். சிரித்து வாங்கி கொண்டவர், "உங்கள எங்கயும் ட்ராப் பண்ணனுமா? நேத்து நீங்க பாப்பு கூட டாக்ஸில தான வந்தீங்க" என்க. "இல்ல அங்கிள். நா கொஞ்ச நேரம் இருந்து தான் கிளம்புவேன். நீங்க கிளம்புங்க". "சரிப்பா" என விடைபெற்றார்.

விஷா மேலேறி நேராக சுஹா அறை நோக்கி நடந்தான். அப்போது "மாப்ள" என்ற சத்தத்தில் அப்டியே நின்று திரும்ப, "என்ன ஸ்லோ மோஷன் வேண்டியகடக்கு, இங்க வாங்க" என்றார் கிட்சனிலிருந்த வடிவு. "என்னையவா மாப்பிளன்னு கூப்பிட்டீங்க?" "ஆமா", "ஏன் ஆண்ட்டி இந்த திடீர் மாற்றம்?” "அத்தைன்னே கூப்பிடுங்க நா ஒன்னும் நினைச்சுக்க மாட்டேன்", "சரி, ஏன் அத்த சடர்ன் சேன்ஜ்". "என் பிள்ளைக்கே பிள்ள குடுத்துட்டீங்க இன்னுமு மாப்பிள்ளன்னு கூப்பிடலனா ஊர் சிரிக்காது". "ஓ அப்டி ஒன்னு இருக்கோ?”
"ஆமா இப்ப இத கொண்டு போய் சுஹாட்ட கொடுங்க" என நீட்டினார் ஒரு ஜூஸ் கிளாசை. "ஓகே அத்த" என வாங்கிக் கொண்டு சுஹாவை தேடிச் சென்றான்.

"நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க. உங்களுக்கு எதும் ஒர்க் இருக்குன்னா நீங்க கிளம்பலாம்" என்றாள் சுஹா சாய்வாக அமர்ந்து. "இப்போதைக்கு இத விட முக்கியமான வேல ஏதும் இல்ல. இத குடிங்க, அத்த குடுத்தாங்க" ௭ன்றான் முகமெல்லாம் பல்லாக.

அவள் அவனை சந்தேகப் பார்வை பார்க்க, "ஐயையோ உடனே சந்தேகமா? இந்த ஜூஸ் குடுத்துலாம் லவ் ப்ரொபோஸ் பண்ற ஐடியா எனக்கு இல்லங்க. சோ தைரியமா குடிங்க". "நா அப்டி ஒன்னும் நினைக்கலயே" ௭ன க்ளாஸை வாங்கியவாறு சுஹா கேக்க.

"அப்படி நீங்க டைரெக்டா நினைக்கலனாலும் உங்க பார்வைக்கு இன்-டைரெக்டா அர்த்தம் அதான். இவன் இதக்காரணமா வச்சு நம்மள நெருங்குவானோன்னு தான நினைச்சீங்க, அதுக்கு மீனிங் அதுதான். எனக்கு இப்போதைக்கு அப்டி ஐடியா இல்ல, ப்யூச்சர்ல வந்தா சொல்றேன்".

"இப்போ மட்டும் எவ்ளோ வாய் பேச வருது உங்களுக்கு. ஆனா சில நேரத்துல பயந்த மாதிரி பேசுறீங்களே அப்ப நடிக்க தான செய்றீங்க?"
"உங்க குடும்பத்த கும்பலா பாத்தாலே பயம் தன்னால வந்துருதுங்க". "வரும் வரும், அப்பாட்ட என்ன ரூபா குடுத்தீங்க?"
"நீங்க எப்ப பாத்தீங்க?"
"இப்பதான் பால்கனி கதவ திறந்துட்டு உக்காரலாம்னு ஓபன் பண்ணப்ப".

'சொல்வோமா வேணாமா, சும்மா சொல்வோம் இப்ப ௭ன்ன' ௭ன முடிவெடுத்து "ம் அது நானே பேபிக்கான எக்ஸ்பென்ஷஸ் பாத்துக்குறேன்னு கேட்டேன். அங்கிள் செம ப்ரில்லியண்ட்ங்க எனக்கு எக்ஸ்பிளநேஷன் குடுக்க வேல வைக்காம புரிஞ்சுகிட்டு உடனே வாங்கி கிட்டாங்க".

"அப்ப நா இத பத்தி ௭க்ஸப்ளனேஷன் கேட்டா! என்ன அறிவு இல்லாதவன்னு சொல்லுவீங்களா?" "உங்களுக்கு என்ன கொஸ்டின் பண்ண ரைட்ஸ் இருக்குங்க, அதனால நீங்க கேட்கலாம்". "நீங்க இப்டியே உளறிட்டே இருங்க. நா கொஞ்ச நேரம் படுக்குறேன்". "ஓகேங்க, நீங்க தூங்குங்க. நா ஹோட்டல் போயிட்டு அப்டியே என் கார் எடுத்துட்டு வந்துடுறேன். ஈவினிங் பாக்கலாம். டேப்லட் கரெக்ட்டா எடுத்துக்கோங்க, உங்க நம்பர பாப்புட்ட வாங்கிக்கிறேன்" என அவள் பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறி விட்டான்.

அவன் செய்கைகளை ஏற்கவும் மனதில்லை, தள்ளி நில் என மறுத்துக் கூறவும் முடியவில்லை அவளால். அதற்கு மேல் யோசிக்க விடாமல் தலைவலி படுத்த, கண்ணை இறுக மூடி படுத்து விட்டாள்.

இரணியனும், பாப்புவும் சூட்டிங் நடக்கும் ஸ்டூடியோவிற்கே நேராக சென்றனர் அவரவர் வண்டியில். ஸ்டுடியோவில் செட் போட்டு, மீதி எடுக்க வேண்டிய காட்சிகளை ௭டுத்தனர். படப்பிடிப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கு இங்குதான் நடக்கும். நடுவில் வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய பாடல் காட்சிகள் பெண்டிங் இருக்க அதற்கு ஒரு 10 நாள் ஒதுக்கி சென்று வருவர்.

அவன் நடிக்க சென்றுவிட, பாப்பு அமர்ந்திருந்து படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தாள். அன்று காதல் காட்சிகள் படமாக்க பட்டுக்கொண்டிருக்க, முதல் முறையாக பிபி எவ்வாறு ஒருவர் உடலில் அதிகரிக்கும் ௭ன்பதை சுயமாக உணர்ந்தாள் பாப்பு. ஹீரோயின் தாவணி காற்றில் பறந்து விட, அதை கதையின் அவள் காதலனான நம் ஹீரோ அவள் கூச்சத்தை ரசித்து தானே கட்டி விடுகிறான். அதுவே ஸீனாக எடுக்க பட்டுக் கொண்டிருந்தது.

எப்பொழுதும் சுற்றி வேடிக்கை பார்க்க கிளம்பி விடுபவள், இங்கு அனைத்துமே செட்டிங்.. மரம் மரம் மாதிரி, பில்டிங் பில்டிங் மாதிரி, அந்த மரம் மாதிரியிலிருந்து அசுர காற்று வேறு வீச, அந்த காற்று மாதிரியானது ஹீரோயின் தாவணியை பறித்து சென்றுவிட்டது. இதெல்லாம்தான் அவள் பிபி ரைஸாக காரணம்.

'போன ஜென்மத்துல நா இவருக்கு புருஷனா இருந்து ௭ன்ன பாவம் பண்ணேன்னு இப்ப பழிவாங்குறீங்க, என் கண்ணு முன்னாடியே இன்னொருத்தி இடுப்ப பிடிச்சுட்ருக்காரு. என்னால கோவம் கூட படமுடியாது, அட கடவுளே எனக்கு தான் எவ்வளவு பெரிய தண்டனை' என புலம்பத்தான் முடிந்தது பாப்புவால்.

அவளை பிபியிடமிருந்து காப்பாத்த அங்கு வந்தான் ஆயுஸ், (4வது எபிசோடில கத சொல்லுறேன்னு வந்துட்டு, இரணியன் அதுக்கு வித்யூத் ஆக்டர் தான் சரிவரும்ன்னு சொல்லி அனுப்பிவிடுவானே அவனேதான்).

"ஹலோ மேடம், மே ஐ?" ௭ன அவள் அருகிலிருந்த சேரை காமித்து ஆயுஷ் கேக்க. பாப்பு திரும்பி அவள் பாதுகாவலனை பார்த்தாள் அவன் ஓகே ௭ன்பதாய் கை காட்டவும், திரும்பி வந்தவனிடம், "ஹாய், ப்ளீஸ்" ௭ன்றாள் அமர சொல்லி.

"நா இதுக்கு முன்ன சார மீட் பண்ணி ஒரு ஸ்டோரி சொன்னேன், சார் அத அக்ஸ்ப்ட் பண்ணல. அதான் இப்ப அவருக்கே அவருக்குன்னு ஒரு ஸ்டோரியோட வந்துருக்கேன். விஷா சார்ட்ட கேட்டேன், அவர் தான் உங்கள பாக்க சொல்லி இந்த ஸ்பாட் சொன்னாரு. எப்போ சார் பிரீன்னு சொன்னீங்கன்னா வந்து ஸ்டோரி லைன் சொல்லிடுவேன்" என வேகமாக சொல்லி முடிக்க.

"சண்டே மார்னிங் வீட்டுக்கு வந்திருங்க, நா செட்யூல் போட்டு வச்சிடுறேன். ஆனா கால்ஷீட் நவம்பர் மேல தான் கிடைக்கும்" ௭ன்றாள் ஒரு மேனேஜராய். "ஓகே மேடம், சார் பிஸியாகிடக் கூடாதுன்னு தான் நா இவ்வளவு ஸ்பீடா அடுத்த ஸ்டோரியோட வந்தேன்". "ஓகே சார், ஆனா ஒரு சின்ன கண்டிஷன்". "சொல்லுங்க மேடம்". "ஹீரோயின் கிளாமர் கொஞ்சம் குறைச்சு, ரொமான்டிக் சீன் இல்லாம ஸ்டோரி இருந்தா பெட்டர். சார்க்கு அதெல்லாம் பிடிக்காது" என்றாள்.

சிரித்தவன், "இது ஆக்சன் பிலிம் ஸ்டோரி மேடம், 80% காட்டுக்குள்ள தான். ஹீரோயின் 4 சீன்க்கு தான் வருவாங்க, அதனால ஸ்டோரி கண்டிப்பா சாருக்கு புடிக்கும்" என்றான் அவளைப் போலவே. "ஓகே சார் அப்ப நா சார்ம்ட்ட கண்டிப்பா சொல்றேன். உங்க ஸ்டோரிக்கு ரெகமண்ட் பண்றேன், தைரியமாப் போயிட்டு வாங்க" என்க. "தேங்க்ஸ் மேடம்" என கிளம்பினான் வந்தவன்.

சிறிது நேரம் கழித்து பிரேக் விட இரணியன், "ஒன் கப் காஃபி தாட்சா" என வந்தமர்ந்தான். "ஏன் சார்ம் தாவணிய இழுத்து இழுத்து கட்டி டயர்டாகிட்டிங்களா?" என்றாள் நாக்கலாக. "௭ஸ் 6 டேக் போயிடுச்சு" என்றான் அவன் சீரியஸாக.

'வேணும்னே 6 டேக் எடுத்துட்டு இங்க வந்து சீன பாரு' என அவள் முணங்க, அவள் முணங்களில் தான் அவன் அவள் முகத்தையே திரும்பிப் பார்த்தான். அவன் பார்க்கவும் "ஈ" என இழுத்து சிரித்தாள்.

"என்ன? ஒரு மார்க்கமா சிரிக்கிற", "ஒன்னுமில்லயே. இருங்க நா காபி எடுத்துட்டு வரேன்" என கேரவனுக்கு பிளாஸ்க் எடுக்க செல்லும் வகையில் நகர்ந்திருந்தாள். அவளை திரும்பிப் பார்த்தவன், 'இவ இப்டி படக்குனு போற ஆளில்லயே, ஒரு பக்கத்துக்கு பேசுவாளே' என யோசித்தவன், தற்போதைய சீனும் அவள் கேட்ட கேள்வியும் ஞாபகம் வர, "ஓ மேடம் காண்டுல இருக்காங்க" என சிரித்தவன் வேகமாக எழுந்தான்.

கேரவனிலிருந்து இறங்கிய பாப்புவிடம், "அங்கேயே வை, நா அங்க வரேன்" என சைகையில் சொல்ல. அவள் அப்டியே நின்றுவிட, இவன் அவளை நோக்கி சென்று அவளையும் தாண்டி கேரவனுள் சென்றான். "சார்ம் டீ வேணாமா?" எனக் கேட்டுக்கொண்டே அவளும் பின்னேற, ரிலாக்ஸாக அமர்ந்தவன், "நீ தான் டென்ஷன்ல இருக்குற, நீ பர்ஸ்ட் குடி" என்க.

"எனக்கென்ன டென்ஷன்?" "பாத்தியா நீ டென்ஷன்ல தான் இருக்க, இல்லன்னா இவ்வளவு சாஃப்டா பேசுவியா? எந்த பஞ்சம் வந்தாலும் இந்த டீய குடிக்க மாட்டேன்னு தான சொல்லியிருப்ப" ௭ன்றான் சிரித்து.

"அவ்வளவு அப்சர்வ் பண்ணுறீங்களா சார்ம் என்னைய?" ௭ன்க. "நைட் டின்னர் போலாமா?" ௭ன்றான் அவன்.

"ஏன் சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசுறீங்க? நா என்ன கேக்குறேன், நீங்க என்ன சொல்றீங்க?" "சே எஸ் ஆர் நோ தாட்சா". "நா ஏன் நோ சொல்லணும்?”

"குட். நைட் 8 மணிக்கு ஹோட்டல் xxல மீட் பண்ணலாம், நானே அபார்ட்மெண்ட் வந்து உன்ன பிக்கப் பண்ணிக்கிறேன்".

இரவு ஒன்பது முப்பது மணி, "எங்க தாட்சா வந்துருக்கோம்?" என்றான், சென்னையின் புறநகர் பகுதியில் ஒரு தெரு முனையில் காரை நிப்பாட்டி சுற்றி வெளியே பார்த்து. 8 மணிக்கு ஒரு பார்ப்பிக்யூ ஹோட்டல்ல டேபிள் புக் பண்ணிருந்தவன, லெப்ட்ல திரும்புங்க ரைட்ல திரும்பங்கன்னு 25 கிலோமீட்டர் தாண்டி இழுத்துட்டு வந்திருந்தாள் நம் பாப்பு.

"இங்க தான் சாப்பிட போறோம். டின்னர் போணும்னு கேட்டுட்டு இப்ப இப்டி கேக்றீங்க" என வெளியில் அந்த தெரு முனையில் தெரிந்த ஃபாஸ்ட் ஃபுட் கடையை காட்ட, "இங்கயா நோ வே. என் சாப்பாடு டயட் பத்தி தெரிஞ்சும், நீ எல்லாம் பண்ற. நா வேறெதுக்கோ பிளான் பண்ணேன் எல்லாத்தையும் நீ ஸ்பாயில் பண்ணிட்ட, டின்னரே வேணாம், லெட்ஸ் மூவ்" என டென்ஷனாகி அவன் காரை திருப்ப போக.

"இதெல்லா சீட்டிங், சும்மா இருந்தவள டின்னர் போலாம்னு கூப்டுட்டு, நா எல்லாம் பிளான் பண்ணப்புறம் இப்டி வர மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க". "நீ என்ன ப்ளான் பண்ண?", "நீங்க வருவீங்கன்னு இன்னைக்கு ஒன்டே வருமானத்த உங்களுக்காக எந்த கிரௌடும் சேராம செட் பண்ணிருக்காங்களே, அவங்களுக்கு எவ்வளவு ஏமாற்றமா இருக்கும்".

"நா வரேன்னு சொல்லி வச்சியா? உனக்கு தெரிஞ்ச கடையா அது". "ஆமா என் ப்ரண்ட் ஐஸ் இல்ல, அவ தம்பியும், அவன் ப்ரண்ட்ஸும் சேந்து போட்டுருக்காங்க. அவ என் மேல பயங்கர கோபத்துல இருந்தாளா இன்னைக்கு தான் உங்கள கூட்டிட்டு வர்றேன்னு சொல்லி அதுக்கு அவளையும் சில பல தியாகங்கள் பண்ண வச்சு ஒத்துக்க வச்சிருக்கேன்".

"உன்ன நம்பி கார்ட்ஸ்க்கு கூட சொல்லாம வந்தேன்ல, எனக்கு இது வேணும், லேசா விஷயம் லீக் ஆனாலும் இங்கிருந்து ஒரு அடி நகர முடியாது. நீ ஒரு இடியட்ன்னு தெரிஞ்சும், நீ காட்ற ரூட்ல நா போனேன் பாரு, மிஸ்டேக் என்து தான்".

"சும்மா எல்லாத்துக்கும் குதிக்காதீங்க சார்ம், எனக்கு கராத்தேலா தெரியும், உங்க பாடி கார்ட்ஸ விட பத்திரமா எந்த சேதாரமும் இல்லாம உங்கள வீட்ல சேக்குறது என் பொறுப்பு, போதுமா இறங்குங்க" என்க.

முகத்தில் கர்சிப் கட்டி கொண்டேதான் இறங்கினான் சுற்றி பார்த்தவாறு, அது ஒரு வண்டி கடை, அதன் வாசலில் நின்று சிலர் சாப்பிட்டு கொண்டிருந்தனர், அதன் சைடில் பிரீயாக சேர், பெஞ்ச் போட்டு சாப்பிட வசதி செய்யப்பட்டிருக்கும். அதில் இன்று சுற்றி கம்பு நடப்பட்டு, துணி கொண்டு மறைவாக கட்டப்பட்டிருந்தது. அதில் சில பல லைட்களை டெக்கரேஷனுக்காக தொங்கவிடப்பட்டிருந்தனர். உள்ளே ஒரு வேப்பமரமிருக்க, அதன் அடியில் இவர்களுக்கு டேபிள் சேர் அரேன்ஞ் செய்யப்பட்டிருந்தது. சுற்றி வேடிக்கை பார்த்தவாறே வந்து அந்த சேரில் அமர்ந்தான். அவசரமாக இந்த ஏற்பாட்டை செய்திருக்கின்றனர் என்பது அந்த எளிமையான டெக்கரேஷனில் தெரிந்தது. சிம்பிள் அண்ட் நீட்டாக இருந்தது அந்த பிளேஸ்.

"எப்டி நம்ம ஏற்பாடு? எப்பயும் ஹை க்ளாஸ் ரெஸ்டாரண்ட்ல் தான சாப்பிடுறீங்க, ஒரு சேஞ்சா இருக்கட்டும்னு கூப்பிட்டு வந்தா எவ்வளவு டென்ஷனாகுறீங்க" என்க. "என்ன இங்க யாரையும் காணோம்?", "எல்லா அந்த வண்டி கதவுக்குப் பின்ன தள்ளு முள்ளுல இருக்காங்க. நா சொல்லாம யாரும் வரக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிருக்கேன்ல".

அவள் சொல்லி முடிக்க கதவு அவர்கள் தள்ளிய தள்ளில் திறந்துவிட மொது மொதுவென ஒரு எட்டு பேர் வெளி வந்து விழுந்தனர், நாலைந்து பேர் விழுமுன் ஸ்டெடியாகி விட்டிருந்தனர்.

"பக்கிங்களா சார்ம் முன்ன என் மானமே போச்சு" என முதலில் எழுந்து நொண்டியவாறு வந்தாள் ஐஸ். " உனக்கு மானம் போச்சா? உன்னால எனக்கு தான்டி அவமானம். பெருமையா சொல்லி முடிக்கும் முன்ன வந்து விழுறீங்க". "அதுதான் பாப்பு பிரச்சன, நீ பெரும பேசுனியா, எருமைங்க பொறுமையில்லாம தள்ளிவிட்டுருச்சுங்க, நீ தான் எப்பவும் பேசுறியே, இன்னைக்கு எங்கள பாக்க தான கூட்டிட்டு வந்த, நாங்க பாத்துக்குறோம், நீ விலகு".

மொத்த வானரமும் அவனை சூழ்ந்துகொண்டு அதையும் இதையும் பேச, போட்டோ எடுக்க, ஆட்டோகிராப் வாங்க என கதை அளந்து கொண்டிருக்க, பாப்பு கடையை முன்னாள் பார்த்துக்கொள்ள சென்றிருந்தாள். இரணியன் பிளான் செய்து வந்தது வேறு என்றாலும் அந்த அரை மணி நேரம் அவர்கள் லூட்டியில் மனம் விட்டு சிரித்தான்.

"ம் பேசியாச்சா? இனினாலும் சாப்பாடு போடுவீங்களா? மாட்டீங்களா?" என்று வந்தாள் பாப்பு. சாப்பாடு செய்து கொடுக்க மட்டும் இவ்வளவு நேரம் ஒருத்தனை மாற்றி ஒருத்தன் சென்று வந்து கொண்டிருந்தனர்.

"நோ வே தாட்சா, கெட்டிங் லேட். எனக்கு ஹாஃப்பனவர் போனதே தெரியல தட்ஸ் ட்ரூ, ரொம்ப தேங்க்ஸ் நாங்க கிளம்புறோம்" என அவன் எழப் போக, "என்னண்ணா இவ்வளவு தூரம் வந்துட்டு எங்க கட சாப்பாட சாப்பிடாம போறேன்றீங்க" ஐசின் தம்பி சொல்ல.

"அவர் டயட் ஃபாலோ பண்றவர்டா, கேப்பக் கூழ், வரகரிசி கஞ்சி இருந்தா கொண்டு வா" நடுவில் பாப்பு சொல்ல. "அக்கா?" அவர்கள் முழிக்க.

"என்ன அக்கா? உங்க கட பெருமைய நானே சொல்ல முடியுமா? நீங்கதான் சொல்லணும், ஹைஜீனிக் வேணும் எதிர்பாக்குறார்டா" ௭ன ௭டுத்துக் குடுத்தாள். "அண்ணா டோன்ட் ஒரி. ஒன்ஸ் யூஸ் பண்ண ஆயில் திரும்ப திரும்ப நாங்க யூஸ் பண்றது இல்ல, நிறைய வெஜ்ஜீஸ் யூஸ் பண்றோம், கலோரீஸ் உண்டு தான், ஆனா ஹெல்த் அஃபக்ட் பண்ணாத கலோரீஸ். செக்கு எண்ணெய் தான் யூஸ் பண்றோம், நாட்டுக்கோழி தான், யூஸ் பண்ற மசாலா பவுடர்ஸ் எதுவுமே கலப்படம் இல்லாதது. நாங்களே திரிச்சு வாங்கி யூஸ் பண்றோம் இது தான் எங்க ஸ்பெஷலிட்டி. ரோட்டு கடைல சீப்பா கிடைக்கும் தான், ஆனா எங்கட்ட ஹெல்த்தின்றதால கொஞ்சம் காஸ்டலி. இன்னைக்கு நீங்க இங்க சாப்டுறத, நாளைக்கு எப்.பி, யூ.டியூப் ல போட்டு எங்க கடையவே ட்ரெண்ட் ஆக்கலாம்னு அக்கா சொன்னாங்க. அதுக்கும் உங்க பெர்மிஸ்ஸன் வேணும்" என்றான் படபடவென ஐஸ் தம்பி.

'அடிப்பாவி என்னலாம் பிளான் போட்டு குடுத்துருக்கா' என பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. "சோசியல் சர்வீஸா?" ௭ன்றான் இரணியன் பாப்புவிடம்.

"கடை போட்டு 6மந்த்ஸ் தான் சார்ம் ஆகுது. வளந்து வர்ற யெங்ஸ்டர்ஸ நாம தானே என்கரேஜ் பண்ணனும் அதான், பிரீ அட்வெர்டைஸ்ட்மென்ட்க்கு ஓகே சொன்னேன். ஆனா கூட புல்லா ஃப்ரீயா குடுக்கல சார்ம், லைப்-லாங் நா சென்னைல இருக்கும் போது சண்டே டின்னர் கரெக்ட்டா நா இருக்கிற பிளேஸ்க்கு வந்துடணும்னு அக்ரிமெண்ட் பேப்பர்ஸ் சைன் பண்ண சொல்லிட்டேன்". அவன் ஆச்சரியப்படுவது போல் வாயைப் பிதுக்கி பார்க்க.

"அவர் மனசு மாறதுக்குள்ள சாப்பாட எடுத்துட்டு வாங்கடா, தண்டமா நிக்கிறானுங்க பாரு" என மற்றவர்களை விரட்ட, எல்லாம் ஓட, அவள் தோழிகள் மட்டும் நகர மாட்டேன் என இருக்க, "போதும்டி ரொம்ப வளியுது, சுத்தி யாராவது இருந்தா அவருக்கு சாப்பிட முடியாது கொஞ்சம் போறீங்களா?" என்க. "அவர் சரின்னாலும் நீ ஒத்துக்க மாட்டியே" என முணங்கி விட்டே எழுந்து சென்றனர்.

அவன் ரிலாக்சாக அந்த பிளாஸ்டிக் சேரில் அமர, "1 மினிட்" என சென்றவள், ஒரு உட்டன் கப்பில் சூப்புடன் வந்தாள், "ஆட்டுக்கால் சூப், செமயா இருக்கும் ஸ்டார்டர் ம்ம்" என அவள் ஒன்றை எடுத்துக் கொள்ள, பயந்து பயந்து ஒரு சிப் எடுத்து குடித்தான்.

"சூப்பரா இருக்குயா" என மேலும் இரண்டு சிப் குடிக்க, "நல்லாருக்குல்ல அப்ப நா போட்டதுன்னு ஒத்துக்க வேண்டியது தான், நல்லாருந்தா நாம போட்டதுன்னு சொல்லுவோம், நல்லா இல்லன்னா அவனுங்க கடை அவனுங்க இதுவாவே இருக்கட்டும்னு நெனச்சிட்டுருந்தேன்".
"நீ எப்ப போட்ட?"
"இப்ப ஹால்ப்பனவர் அங்க நின்னனே அப்பதான். நீங்க எப்பவும் வெஜ் சூப் குடுப்பீங்க தானே நைட், அதுக்கு பதிலா இது".

"கெத்து தான் போ, செமையா வந்துருக்கு". அந்நேரம் சாப்பாடு கொண்டு வந்து வைக்கப்பட்டது. புரோட்டா, கிரில்டு சிக்கன், ஃப்ரைட் ரைஸ், மட்டன் வறுவல், இந்த பிளேட்களை பார்த்ததும் அரண்டு தான் விட்டான் இரணியன்.

"ஏன் சார்ம் மூஞ்சிய அப்டி வச்சுக்கிறீங்க? தைரியமா சாப்பிடுங்க நாளைக்கு, கூட ஒரு 1 மணி நேரம் அந்த மில்லுல ஓடுங்க அவ்வளவுதான்" என்றவள் அவன் இலையிலும் எடுத்து வைத்து தனக்கும் வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பிக்க, சற்று தள்ளி நின்று பார்க்கும் பசங்களுக்காக மெதுவாக புரோட்டாவை பிய்த்து தோசையில் சட்னி தொட்டு சாப்பிடுவதுபோல் சாப்பிட்டான்.

"சார்ம் இங்க பாருங்க இப்டி உங்க கைட்டே சின்ன சின்ன பீஸ பிச்சு போடுங்க" அவன் அதுபோலவே செய்ய, அதன் மேல் மட்டன் கிரேவியை ஊத்தியவள், "இத இப்டி அந்த கிரேவில விரவிட்டு சாப்பிடுங்க நல்லாருக்கும்". டேஸ்ட் நாக்கிலே நின்றது.

கடந்த எட்டு வருடமாக டயட் புட் தான், அதற்கு முன் ஹாஸ்டல் சாப்பாடு என்றாலும் பணக்கார கல்ச்சர் தான். அங்கும் எல்லாமே இருக்கும் அப்போது சாப்பிட்டிருக்கிறான்தான் ஆனால் ௭ல்லாமே டீசென்ட் புட்ஸ் ஸ்பூனில் சாப்பிடும் உணவுகளே சாப்பிட்டு பழக்கப் பட்டவன். இப்போது அந்த சாப்பாட்டின் ருசி அவனை மேலும் ருசித்து சாப்பிட வைத்தது.

அவ்வளவு நேரம் டயட் யோசனைகளும், சாப்பாட்டு பயத்திலிருந்தும் தெளிந்தவன், நிமிர்ந்து எதிரில் உள்ளவளை பார்த்தான். சாப்பாடே பிரதானம் என சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை சிறிது நேரம் ரசித்து விட்டு குனிந்து தன் இலையிலிருந்து இரண்டு புரோட்டா பீஸ்களை எடுத்தவன், "தாட்சா வில் யூ பி தேர் வித் மி வித் ஃபுல் ஆஃப் லவ் ஆன் மை ரிமைனிங் லைப்" என அவள் வாய் முன் நீட்டினான்.

திடிரென அவன் கூறவும், திருதிருவென முழித்தவள், "திரும்ப சொல்லுங்க சார்ம்?" என்க, "கை வலிக்குது இத வாங்குன்னே", வாய் திறந்து எட்டி வாங்கிக் கொண்டவள், கண்ணை சுருக்கி கையை குவித்து கெஞ்சலாக, "ஒரே ஒருக்கா ரிப்பீட் பண்ணுங்க" என்க.

"நா உன்ன இம்ப்ரஸ் பண்ணுவனா இல்லையான்னு தெரியாது, பட் யூ இம்பிரஸ்ட் மீ எ லாட். ஃபைனலி யா ஐ ஆம் இன் லவ் வித் யூ" ௭ன அவன் முடிக்குமுன் வேகமாக எழுந்து வந்து இடது கையால் அவன் கழுத்தை கட்டி, "மீ டு, மீ டு சார்ம், மீ டு" என்க.

மெதுவாக அவளை விலக்கி நிறுத்தி, "என்ன நா சொன்னதும் அக்ஸ்ப்ட் பண்ணிட்ட?" ௭ன்றான் புரியாத பார்வையில், "எனக்குத்தான் உங்கள ரொம்பவே பிடிக்குமே". "பிடிக்குறது வேற, லவ் வேறன்னு சொல்லுவ?", "நா எதையாவது சொல்லுவேன், நீங்க ஏன் லூசு மாதிரி அதையெல்லாம் நம்புறீங்க".

"அடிப்பாவி இப்டி பிளேட்டையே மாத்துற", "உங்களுக்குத்தான் சார்ம் புரியல. எந்தப் பொண்ணாவது கட்டாய தாலி கட்டுனவன ஜட்ஜ் பொண்ணாவும், ஐ.பி.எஸ். தங்கச்சியாவும் இருந்துட்டு சும்மா விடுவாளா? அப்பவே நீங்க புரிஞ்சிட்டுருக்க வேண்டாமா?”

"எனக்கு உன் அளவுக்கு பிரில்லியன்ட்னஸ் இல்லம்மா", "அப்டி ஒத்துக்கோங்க" எனப் பழைய இடத்தில் சென்று அமர்ந்தாள். அந்நேரம் அவள் போன், 'ஐ லவ் யூ மம்மி' என்று அடிக்க, இவள் "ஹலோ" என்பதற்குள், "எங்க இருக்க? இங்க வரியா? இல்ல உன் புருஷன் வீட்டுக்கு போயிட்டியா? அங்க போனா போன் பண்ணி சொல்ல மாட்டியா?" என அவர் திட்ட, "இன்னும் சாப்பிட்டே முடிக்கலம்மா. சாப்பிட்டு அங்க தான் வருவேன் போனவை" என வைத்துவிட்டாள்.

"தாட்சா நீ ஏன் இங்க ௭ன்கூட வரக்கூடாது?” "நோ சார்ம், நீங்க இந்த படம் முடியவும் ரிசப்சன் பார்ட்டி அரேஞ்ச் பண்றேன்னு சொல்லிருக்கீங்க, அதுல என்னால வயித்த தள்ளிட்டு நிக்க முடியாது. சோ பஸ்ட் பார்டி முடிக்கிறோம், அப்புறம் நம்ம லைஃப்ல ஸ்டார்ட் பண்றோம்".

"அவ்வளவு நம்பிக்கையா என் மேல? லாஸ்ட் ஒன் மந்த் என் கூட தான இருந்த, நா என்ன செஞ்சுட்டேன் உன்ன?” "அப்ப லவ் இல்ல, இப்ப இருக்கே", "அவுட் சைட் ஷூட்டிங் போக கூட வந்துதானே ஆகணும்?” "இன்னும் 3மந்த்ஸ்க்கு இங்க தான ஷூட்டிங், அந்த டென் டேய்ஸ் அவுடோர் சூட்டுக்கு விஷா வருவான்". "அப்ப அதுவரைக்கும்?", "அது வரைக்கும் நாம ஜாலியா லவ் பண்ணலாம்" என சாப்பிட்டு முடித்து கை கழுவ எழுந்து சென்றாள்.

கிரில்டு சிக்கனை முதன்முறையாக சாப்பிட்டு முடித்தவணும், வயிறும் மனமும் நிறைந்த சந்தோஷத்துடன் எழுந்து ஹேண்ட்வாஷ் செய்து அங்கிருந்தவர்களிடம் விடைபெற்று கொண்டு, பாப்புவையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

மூன்று மாதமென்பது 5மாதமாக ஆன பின்பு தான் இவர்கள் ரிஷப்ஷன் ஏற்பாடாகியது. அதில் விஷா சுஹா விஷயத்தையும் மீடியாவிற்கு அறிவித்தான் இரணியன். அந்த செய்தியை பார்த்த பின்பே நாடு திரும்பினாள் பவ்யா.
 
அத்தியாயம் 30
கடந்த ஐந்து மாதத்தில் நடந்தவை..

விஷா சுஹாவோடு, "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" பாட்டு பாடினானா இல்லையா தெரியாது, ஆனா வடிவோடு, "அத்தை மடி மெத்தையடி" பாடும் அளவிற்கு நெருங்கி விட்டிருந்தான். ஆரம்பத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் என வந்து போய் கொண்டிருந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி இப்போது கடந்த 2 மாதமாக ௭ல்லா நாளும் காலையில் வேலைக்குச் செல்பவன் ஈவினிங் சுஹாவிற்கு ஏதாவது வாங்கிக்கொண்டு ஆறு மணியில் வீடு திரும்பி விடும் பொறுப்பான கணவனாகிவிட்டான். அவளோ தேவைக்கு மட்டுமே கோர்ட்டிற்கு செல்கிறாள். அவளை கோர்ட், ஹாஸ்பிடல், கோவில் இப்படி மாற்றி மாற்றி அழைத்து செல்ல வந்துவிடுவான்.

"நானே போயிடுவேன் ஏதோ நா குழந்தைய ஏதும் பண்ணிருவேனோன்னு நீங்க கூடவே வர மாதிரி பீல் ஆகுது", ௭ன சுஹா ஒரு நாள் சொன்னபோது, "வக்கீல் மேடம். ஒரு விஷயம் இன்னைக்கு சொல்றது தான்.. மைண்ட்ல நல்லா ரிசிஸ்டர் பண்ணிக்கோங்க, நீங்கதான் என்னோட லீகல் வைப், இப்ப அத இன்னும் ஸ்டிராங்காக்க பேரெண்ட் ப்ரோமோஷன் வேற கிடைச்சுருக்கு. உங்களுக்கு வேற வழியே இல்ல, என்ன எப்டி அவாய்ட் பண்ணலாம்னு வில்லத்தனமா ஏதாவது யோசிக்காம, பிள்ளைய எந்த ஸ்கூல்ல சேக்கலாம்னு யோசிங்க, லைஃப்ல எல்லா சிட்ச்சுவேஷன்லயும் நம்ம பேபி விஷயத்துல நாம சேந்து நிக்க தான் வேணும். சோ என்ன எப்டி அக்ஸ்ப்ட் பண்ணலாம்னு மட்டும் யோசிங்க". "உங்கள எப்ப அக்ஸ்ப்ட் பண்ணலாம்னு யோசிக்கிறனோ அப்ப நீங்க எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்னு ஆசயும் வந்திடும் பரவாயில்லயா? முடியுமா உங்களால?. அப்படி ஒரு விஷயம் நடக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் யோசிக்கனும் தான் உங்கள அவாய்ட் பண்றேன்" சுஹா சொல்ல.

'வக்கில் மேடத்துட்ட வாய குடுக்கிறியே விஷாகா' ௭ன ஒரு நிமிடம் நிதானித்தாலும், "அப்டி ஒரு சுச்சுவேஷன் வரும்போது அத யோசிங்க இப்ப இன்னைக்கு அப்டி ஒரு தாட் இல்ல தானே, பீல் ஃபிரீ" என சமாளித்து விட்டான்.

ஆனால் அவன் அவளை கேரிங்காக பார்த்து கொள்வதே அவள் அவனை ௭ன்ன செய்யலாமென யோசிப்பதற்கான காரணமாக அமைந்தது. 'இவள் பதில் சொன்னா என்ன சொல்லாட்டி என்ன' என்பது போல் அவன் போக்கில் பேசி கொண்டிருப்பான். சுஹா உணராவிட்டாலும் அவன் பிள்ளை அவனையும், அவன் வரவையும் உடனே உணரும். அதுவும் ஐந்து மாத முடிவினில் இருப்பவளிடம் லேசு லேசாக அசைய ஆரம்பித்திருக்க, அவன் சத்தம் வந்த பின் பிள்ளையின் அசைவு சற்று அதிகமாக இருப்பதாகத் தான் தோன்றும் அவளுக்கு.

"கிரிமினல் கதயா கேக்கீங்க தான, கொஞ்சம் எமோஷனல் ஆகுறமாறி இருந்தாலும் இந்த சாங்ஸ் கேளுங்க" என லவ் சாங்ஸ் நிரம்பிய சிப் கார்ட் கொடுத்து வைத்திருந்தான். ௭ன்றாவது கொஞ்சம் கூடுதல் நேரம் நிற்கும் சூழ்நிலையில் வீடு வந்தமர்ந்தாள் என்றாள், கொஞ்சம் கூட தயங்காமல் எண்ணைப் போட்டு நீவி விடுவாள். அதையும் அவனே நாட்டு மருந்துக் கடையை தேடிப்பிடித்து வாங்கி வந்தது தான். அவளை அவன் வாழ்வில் கிடைத்த திடீர் அதிர்ஷ்டமாக பார்த்தான், அதனால் அவளை இம்ப்ரஸ் செய்யவேண்டும் என செய்யாமல் இயல்பாகவே அவளுக்கான வேலையை பார்த்தான்.

இவன் இப்படி எல்லாம் செய்வதை பார்த்து தான் சுஹாவிற்கு முன் வடிவு கவுந்து விட்டார். "ரொம்ப நல்ல பையன் நம்ம பொண்ண எப்டி தாங்குகிறார்" என தானே கண் வைத்துவிட்டு சுற்றி வேறு போட்டுவிடுவார். இப்பொழுதெல்லாம் அவனுக்குத் தான் அங்கு ஏக கவனிப்பு. என்ன புடிக்குமுன்னு கேட்டு கேட்டு கவனித்துக்கொள்கிறார் வடிவு. பாப்பு கூட நக்கலாய் அவனைப் பார்த்து சிரித்து செல்வாள்.

விஷா சுஹா வாழ்க்கை இப்படியென்றால் வேதிகா அரவிந்த் வாழ்க்கை வேறு போக்கில் சென்றது. காதலித்து கல்யாணம் செய்தவர்கள் அவர்கள், நல்ல அண்டர்ஸ்டாண்ட்டிங்கில், அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லாமல் தான் சென்றது. ஆனால் அவள் மாமியாரும், நாத்தனாரும் தான் பிரச்சனையை கிளப்பி கொண்டிருந்தனர். அவள் முன் நேராக பேசும் தைரியமற்று அரவிந்தனிடம் தான் ஏற்றி விடுவர்.

"1)கண்ட நேரத்துல வெளியே சுத்திட்டு வாறவள கட்டிக்கிட்டு வந்துட்டியே. 2) இந்த ஏரியாவுல இப்ப என்கிட்ட முகம்கொடுத்த யாரும் பேச மாட்டேங்குறாங்க தெரியுமா எல்லா உன் பொண்டாட்டிக்கு பயந்துதான். 3) எப்ப வந்து படுக்குறா எப்ப எந்திரிச்சு போறானே தெரிய மாட்டேங்குது. இவ என்னத்த நம்ம வீட்டுக்கு வாரிசப் பெத்துத் தரப்போறா? 4) மருமகக்காறி வந்து மாமியாருக்கு ஆக்கி போடுவான்னு கண்டுருக்கு, இங்க இவளுக்கு நாந்தான் கையில கொண்டு போய் குடுக்க வேண்டியிருக்கு. 5) எப்பப் பாத்தாலும் பேண்ட் சட்டைய போட்டுகிட்டு, ஒரு கோயில் குளம் எங்கேயாவது உன்னோட நிம்மதியா போயிட்டு வர முடியுதுடா அவளால?", இப்படி நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமா புலம்பிப் புலம்பி அரவிந்த் காதில் ரத்தம் வர வைத்துக் கொண்டிருந்தார். அவன் தங்கை வந்து விட்டாள் ௭ன்றால், வீடு இவன் வந்ததும் ஒப்பாரி கூடமாக மாறிவிடும். மாட்டிக் கொண்டு முழித்து தான் நிற்பான்.

கல்யாணம் முடித்துசென்று மறுவீடு கூட என கூட வராதவன் அவன். வேதிகாவுக்கு அதற்கென்று நாள் ஒதுக்க முடியாத சூழ்நிலை ஒரு காரணம், அவன் அம்மா விடாதது இன்னொரு காரணம், இத்தனை நாள் ஓடி விட்டது. வேதி நுங்கம்பாக்கத்தை கிராஸ் பண்ணுகையில் எப்படியும் அவள் வீடு சென்று விடுவாள். அதனால் அவள் பெற்றோருக்கும் அது பெரிதாகத் தோன்றவில்லை, இங்குள்ள விஷயங்களும் அங்கு இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. தற்போது இரணியன் பாப்பு ரிசெப்ஷன்க்கு அழைக்க போகையில் தான் அவர்கள் வீட்டிற்கே வடிவும், மெய்யப்பன் தம்பதியினர் முதல் முறை சென்றிருந்தனர்.

"எங்களுக்கு இது மாதிரி கேட்கவே புதுசா தான் இருக்கு சம்பந்தி, சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, கல்யாணம்னு டிவில சொல்லிட்டு அஞ்சு மாசம் சேந்து சுத்திட்டு ஒரே ரூம்ல வேற தங்கிட்டு, இப்பதான் ஊரறிய சொல்ல போறீங்க, இதுலா ௭ங்க பக்கம் பழக்கமேயில்ல. இன்னொரு பொண்ணுக்கு ௭ன்னடானா அக்கா கல்யாணத்தன்னைக்கே வாழ்க்க கெட்டுப் போச்சு, ஏதோ புண்ணியத்துக்கு ரெண்டாந்தாரமா அந்த பையனுக்கு புடிச்சு கட்டி வச்சுட்டிங்க. ஆனாலும் அத பெருச பண்ணாம உங்க இரண்டாவது மக அந்த பையனோட குடும்பம் நடத்தி இப்ப அஞ்சு மாசம். ஆனா இங்க ௭ங்க நிலமைய பாருங்க, அடம்பிடிச்சு கட்டிக்கிட்டு வந்தவ வயித்துல ஒன்னையும் காணோம், குடும்ப நடத்த நேரம் இருந்தா தான புழுப்பூச்சி உண்டாகும். என் ஒரே பையன் வயசும், வாழ்க்கையும் தான் வீணா போகுது. ஆதங்கத்தில நா புலம்புறேன், நீங்க எதுவும் மனசுல வச்சுக்க கூடாது" என தானும் மூக்கைச் சிந்தி, வடிவையும் மூக்கை சிந்த வைத்திருந்தார்.

அதன் பலனாய் வீட்டுக்கு வந்ததும் வேதியை வர வைத்து மொத்தமாகக் கொட்டி விட, அவளுக்கு இது பழக்கம்தான் என்பதால் அமைதியாகி விட்டாள், அருகில் இருந்த சுஹா தான் கொந்தளித்தாள், "அந்த அம்மாவ நாலு கேள்வினாலும் கேட்காம விடக்கூடாது, ௭ன்ன நான்சென்ஸா பேசிட்ருக்காங்க, நீங்க ஏன்ப்பா சும்மா வந்தீங்க, நா அவுங்கள சும்மா விட போறதில்ல" எனக் கிளம்பிவிட்டாள்.

எப்போதும் போல் சண்டையை தடுக்கும் வீரணான விஷா, "௭ன்ன பேப்பரும் பேனாவும் ௭டுத்துட்டு போய் கேஸ் போட போறீகளோ? சும்மா இருங்க மேடம். இந்த மாதிரி நேரத்துல நீங்க இவ்வளவு ஸ்டெயின் பண்ண கூடாது. பிரச்சின பண்றதுக்குன்னு ஒரு ஸ்பெஷல் மேட் வீட்லயே இருக்கும்போது எதுக்கு நீங்க டென்சனாகி, பேபிய டென்ஷன் ஆக்குறீங்க. உங்களுக்கு நா லைவ் டெலிகாஸ்ட் பண்றேன், வீட்ல இருந்து பார்த்து என்ஜாய் பண்ணுங்க சரியா" என்றவன், பாப்புவுக்கு கால் செய்து நடந்ததை சொல்ல, அதுவே போதுமானதாக இருக்க ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள் அரவிந்த் வீட்டிற்கு, "பாப்பு அங்க போறதுக்குள்ள நானும் போறேன் அப்பதான் பெரிய கலவரமாகம தடுக்க முடியும்" என ஓடினான் விஷாகன்.

விஷாகன் செல்லுமுன் பாப்பு ஸ்பாட்டை ரீச் செய்திருந்தாள், "வா பாப்பு" என ஆர்வி தான் வரவேற்றான். அவனையும் போன் செய்து வர வைத்திருந்தான் விஷா.

"ஹலோ மாமா எப்டி இருக்கீங்க?", "நா நல்லா இருக்கேன். நீ ௭ப்டி இருக்க, இரணியன் சார் எப்டி இருக்காங்க? ஒரு வழியா மேரேஜ் ரிசப்ஷனுக்கு ரெடி ஆகிட்டீங்க, வாழ்த்துக்கள்" ௭ன்க. "தேங்க்ஸ் மாமா எங்க அத்தைய காணும்",

"உள்ள படுத்திருக்காங்க. தூங்கிட்டாங்கன்னு நினைக்கிறேன் அதான் நம்ம பேச்சு சத்தம் கேட்டு எழுந்து வரல. உக்காரு கூட்டிட்டு வரேன்" என சென்றான் பக்கத்து அறைக்கு. சிரித்தவாறே சென்று ஹாலில் கிடந்த சோபாவில் அமர்ந்தாள். ஐந்து நிமிடம் உள்ளேயே ஆர்க்கியூமென்ட் நடந்தது, அது சலசலப்பாக அவளுக்கும் கேட்டது.

'வரமாட்டேன்னு அடம் பிடிக்கிறாப்புல போலயே' என நினைத்தவள், "மாமா அவங்களுக்கு எந்துச்சு வர கஷ்டமா இருக்குன்னா, நா வேணா அங்க வந்து பாத்துட்டு போறேன், எதுக்கு அவங்கள கட்டாயப்படுத்துறிங்க" என சுடிதார் டாப்பை உதறியவாறு இவள் எழ, அந்த அம்மா வேகமாக வெளியே வந்தது.

"வாங்கத்தே, நா இன்னும் பேசவே ஆரம்பிக்கல அதுக்குள்ள நீங்க இப்டி பயந்தா எப்டி?" என்க. " பாத்தியாடா வயசு வித்தியாசம் இல்லாம இந்த புள்ள இப்டித் தான் பேசும், அதான் வரலன்னு சொன்னேன், கேட்டியா?", "என்ன பாப்பு?" ஆர்வி பேசும்முன், "வெயிட் மாமா, நீங்க 'பேசாதன்னு' என் அக்காவ சொல்லி அடக்குற மாதிரி எல்லாம் என்ன அடக்க முடியாது. என் அம்மாவ இவங்க பேசினாங்க அதனால இவங்கள்ட்ட, எப்டி நீங்க ௭ங்க அம்மா அப்பாவ பேசலாம்னு கேட்க வந்துருக்கேன். இதுல என் அக்காவோ, என் அக்காவோட ஹஸ்பண்ட்டோ, என் அக்காவோட மாமியார்ன்றதோ கிடையாது. என் அம்மாவ அழவச்ச ஒரு லேடிய அழவச்சுட்டு போக வந்துருக்கேன் அவ்வளவுதான்" ௭ன பாப்பு முறைப்பாக சொல்ல.

"உன் அக்காவ நா பேச வேணாம்னு அடக்கி வைக்கல, அவளே மரியாதையா ஒதுங்கி போயிடுறா" ௭ன்றான் அரவிந்த்.

"அப்டி அவ குடுக்குற மரியாதைய உங்க அம்மாவுக்கு காப்பாத்திக்க தெரியலயே? அவ எவ்வளவு மரியாதையான பொசிஷன்ல இருக்கா தெரியுமா? உங்க ஏரியா பொண்ணுங்கிட்ட போய் கேட்டுப்பாருங்க, என் அக்கா இந்த வீட்டுக்கு வந்தப்புறம் அவங்க எல்லாம் எவ்வளவு சேஃப்டியா பீல் பண்றாங்கன்னு சொல்லுவாங்க. அப்புறம் என் அக்கா இரண்டாம் தாரமா போனதப் பத்தி இவங்க என்ன பேசுறது? இவங்க புருசனயா பங்கு போட்டுக்க வந்தா?" ௭ன்க.

"பாப்பு" அரவிந்த்தும், "ஏய்" என அவன் அம்மாவும் குரல் உயர்த்த, விஷாகன் உள்ளே நுழைந்தான்.

'ஆத்தி கச்சேரி ஆரம்பிச்சுட்டா போலயே? வேதிகா மேடத்துக்கு டிவோர்ஸ் வர போகாம காப்பாத்திரு ஆண்டவா' என வேண்டியவாறே உள்ளே சென்றான்.

"மூணு பிள்ளைகளையும் வாய் பேச மட்டுமே கத்துக்குடுத்து வளத்துருக்குடா உன் மாமியாரு. ச்சீ படிச்சவளாட்டமா பேசுறா?" ௭ன்றார் அவர் முகம் சுழித்து. "நா நீங்க பேசினதுக்கு தான் பதில் சொல்லிட்ருக்கேன். உங்கள போல பேசினா தானே உங்களுக்கு புரியும்" பாப்பு சொல்ல. "என்னவோ நீ ரொம்ப ஒழுங்கு மாதிரி பேசுற", "ஹான் அடுத்து அதுக்கு தான் வர்றேன். என்னைய, நா என் புருஷனோட தங்கியிருந்த பத்தி பேசினீங்களாமே. ஹஸ்பண்டும், வைப்பும் சேர்ந்து தங்காம வேற.." பாப்பு சொல்லுமுன் தடுத்து விட்டான் விஷா.

"போதும்னு நினைக்கிறேன் பாப்பு" விஷா பாப்பு கையை பிடித்து தடுக்க, "அடிக்கக் கை பரபரன்னு இருக்கு, ஆனா வேதிக்காவே உள்ள தூக்கி வைக்காம பொறுமையா இவங்களுக்கு மரியாதை கொடுத்து போறதால அடிக்க முடியல".

"தெரியும்மா உன்ன பத்தி, அவங்களும் சீக்கிரமே புரிஞ்சுபாங்க" விஷா பவ்யமாய் சொல்ல. "ஆர்வி மாமா நீங்க என்ன பண்றீங்க, குழந்த பிறக்கிற வர எங்க வீட்ல வந்து இருங்க, புள்ள இல்லாதது தான் என் அக்கா வேல வர பெரிய பிரச்சனயா இருக்கு, நீங்க அங்க போயிட்டா அக்கா எப்ப போறா, வர்றான்ற கஷ்டமில்லை, சமைச்சு தர வேண்டிய கஷ்டமில்லை, உங்க அம்மாக்கு புள்ள வாழ்க்கையை பார்த்து பார்த்து கஷ்டப்படத் தேவயில்ல. என்ன விஷா?" ௭ன ஆர்வியிடம் ஆரம்பித்து விஷாவிடம் முடிக்க.

"ரொம்ப பிரமாதமான ஐடியால்ல இது. வாங்க சகல எனக்கும் கம்பெனி கிடைக்கும்" ௭ன விஷா சொல்ல.

"ஏய்! நீ என்னடி இங்க வந்து நாட்டாம பண்ணுறது? என் பிள்ளைய என்ட்டருந்து குடும்பமா சேந்து பிரிக்க பாக்குறீங்களா?” "ஆமா, இன்னைக்கு தான் அதுவும் இப்பத் தான் அந்த ஐடியா வந்திருக்கு. இப்டியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா கடைசியா அதான் நடக்கும். ஏன்னா மாமா மறுத்துப் பேசாம நிக்கிறதுலயே தெரியல, நீங்க அவ்வளவு டார்ச்சர் பண்ணிருக்கீங்கன்னு. இனினாலும் யோசிங்க, இல்லனா! வந்து ரெண்டு பேரையும் கூட்டிட்டு போயிட்டே இருப்பேன். சொல்லி வைங்க மாமா. அப்றம் ரிசப்ஷனுக்கு கண்டிப்பா வந்துருங்க, பை" எனக் கிளம்ப.

"இத்தன நாள் உங்க வைஃப்ப மட்டும் பேசிட்ருந்திருப்பீங்க விஷயம் பெருசாகல, இப்ப அவங்க அம்மா, சுஹா, பாப்பு எல்லாரையும் பேசவும் தான், பாப்பு இங்க வந்து பேச வேண்டியதா போச்சு. எதும் மனசுல வெச்சுக்காதீங்க. பாப்போம்" என விஷாவும் விடைபெற்று கிளம்பினான்.

அதன்பின் வேதி மாமியாரும் அவனிடம் புலம்புவதை குறைத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், இரணியன் வேதியின் ஹையர் அஃபீசியலிடம் பர்சனல் வேண்டுகோளின் பேரில் அவளுக்கு 10 நாள் லீவு தரப்பட்டது. அரவிந்த்தும் வேதிகாவும், கல்யாணம் முடிந்து ஐந்து மாதம் கழித்து ஹனிமூன் கிளம்பி சென்றிருக்கின்றனர். ரிசப்ஷனுக்கு இரண்டு நாள் முன் வருவது போல் ஏற்பாடு செய்து கொண்டு.

மற்றவர்கள் வாழ்க்கை இப்படி சென்று கொண்டிருந்தது ௭ன்றால், இரணியன், பாப்பு வாழ்க்கை லவ் மோடில் சென்று கொண்டிருந்தது. சூட்டிங் டைமில் ப்ரொஃவஸனாகவும், மற்ற நேரங்களில் காதலர்களாகவும் வலம் வந்தனர்.

கார் ரைட் அதிகம் சென்றனர். அவனுக்கென ஹோட்டல்கள் பழக்கம் உண்டு பிரைவேட் ப்ளேஸ் அரேன்ஜ் செய்து தருவர், அப்படி இடங்களுக்கு அழைத்துச் செல்வான். அடுத்தது அவனது மகாபலிபுரம் ரிசார்ட், இதுதான் மாற்றி மாற்றி இவர்கள் போகுமிடம். வேறு காதலர்களுக்கான பொது இடங்களுக்கு போக முடியாத காரணத்தினாலேயே காரில் லாங் ட்ரைவ் எங்காவது சென்று திரும்புவது வழக்கமானது.

அவள் பிறந்ததிலிருந்து பண்ண சாதனைகளை எல்லாம் அவன் காது வலிக்க வலிக்க சொல்லி ரத்தம் வர வைத்து விட்டாள். அவன் அதற்கு மேல் முடியவில்லை ௭ன கெஞ்சும் சமயங்களில் அவனை பற்றி கேட்பாள், "பெருசா ஒண்ணுமில்ல, ஹாஸ்டல் தான் ஃபுல்லாவே, காலேஜ் படிக்கும்போதே மூவி ஆஃபர் அப்டியே இந்த பீல்ட்" ௭ன அவன் சிம்பிளாக முடித்து விட.

"இதான் உலகத்துக்கே தெரியுமே, வேற எதுவுமே இல்லயா? என்ன சார்ம் நீங்க லைஃப்ப இப்டி வேஸ்ட் பண்ணிருக்கீங்க. அப்ப உண்மைய சொல்லனும்னா என்னை மீட் பண்ண அப்புறம்தான் நீங்க ஹாப்பியாவே இருக்கீங்க?"
"ஆமா, ஆமா".

"இதெல்லாம் நீங்க சொல்லணும். நானே சொல்லிக்க வேண்டியிருக்கு. இட்ஸ் ஓகே, டோன்ட் ஒரி. உங்க ரிமைனிங் லைஃப்ப வண்ணமயமாக்க வேண்டியது என் பொறுப்பு". "உங்க பரந்த மனசுக்கு ரொம்ப நன்றி மேடம்", "இருக்கட்டும் இருக்கட்டும் சார்ம்" என இவள் கெத்தாக சொல்ல, "அப்படியேவா மெயின்டன் பண்ற" என அவன் அவள் இடுப்பில் கிள்ள, "நீங்க என் இடுப்புல கிள்ளுனா நா உங்க இடுப்புல கிள்ளுவேன்" என அவளும் கிள்ள, இப்படி பதிலுக்கு பதில் கிள்ளி விளையாடுவர்.

இல்லையெனில் சண்டையிடுவர். "இனி ஸ்கூட்டி உனக்கு அவ்வளவு சேஃப்டி இல்ல, அதனால கார்ல போயிட்டு வா, கார்ட்ஸ் கூடவே வருவாங்க" என்றவனுக்கு, "நீங்கதான் சுதந்திரம் இல்லாம இருக்கீங்கன்னா நானும் அப்டி இருக்கணுமா? நெவர் நா எப்பயும் போல தான் போயிட்டு வருவேன்".

அவனும் மேலும் மேலும் ஆர்க்யூ செய்து டயர்டாகி, அவளுக்கென ஒதுக்கப்பட்ட எஸ்கார்ட்டை, "எப்பயும் தாட்சாவ ஃபாலோ பண்ணனும், எனக்கு அப்டேட் குடுத்துட்டே இருக்கணும்" என்று விட்டான். ஸ்கூட்டியில் செல்வதை பாதுகாக்கும் கார்டு டிரைவருடன் காரில் செல்வான்.

அப்படித்தான் வேதி விஷயம் தெரிந்து அவன் அவர்களுக்கு ஹனிமூன் ஏற்பாடு செய்ததும், அப்படி பாப்புவை சண்டையில் கோர்த்து விட்ட விஷாகனை, இரணியன் தூக்கிப் போட்டு நாலு மிதி மிதித்தது, வேறு கதை.

இப்படி போய் கொண்டிருக்கும் போது, ஒரு நாள் காலையில் பாப்பு ஸ்டூடியோவுக்கு தான் சென்று கொண்டிருந்தாள், ஸ்கூட்டி பாதியில் டயர் பஞ்சராகி நின்று விட்டது, 'அதுவே நின்னுதா? யாரும் பிளான் பண்ணி நிப்பாட்டினாங்களா? இல்ல அவளே பாடி கார்ட்ட சுத்தல்ல விட எதுமேலயும் ஏத்தி இறக்கினாளோ?' எது காரணம் என்று தெரியவில்லை, வண்டி நின்றுவிட்டது. அங்கேயே ஓரத்தில் நிறுத்திவிட்டு தகப்பனாருக்கு போன் போட்டு சொல்லிவிட்டு கோடம்பாக்கம் போர்டு போட்டு வந்த பஸ்ஸை நிப்பாட்டி ஏறிவிட்டாள். பின்னாடியே வந்த கார்டும் ஓடிவந்து ஏறிக்கொண்டு இரணியனுக்கு தகவல் சொல்ல, "இடியட் பைக்க சர்வீஸ்க்கு நீயோ, டிரைவரோ எடுத்துட்டு போயிட்டு அவள கார்ல அனுப்பிற்க வேண்டியது தான" என்றவன் கார்ட் பதில் சொல்லுமுன் கட் செய்துவிட்டு பாப்புவிற்கு அழைத்தான்.

வேலைக்கு போகும் பீக் டைம் என்பதால் பஸ் பயங்கர கூட்டம், ௭ப்பொழுதும் காதில் தொங்கும் ஹெட்செட்டயும் அப்போது தான் கலட்டி பேக்கில் போட்டாள். மொபைல் சத்தம் அவள் காதில் விழாமல் போக, எடுக்கவில்லை.

அதுவும் போக அவள் வேறொரு விஷயத்தில் கவனமாக இருந்தாள். இவளுக்கு முன் நிற்கும் ஒருவன் அவன் அருகில் இருக்கும் சீட்டின் ஓரத்தில் அமர்ந்திருந்த பெண், நைட் டூட்டி முடித்து வீடு திரும்பும் பெண்ணோ என்னவோ? நல்ல உறக்கம், அந்த பெண்ணே உணராதவாறு அவளது இடது கை வளைவில் இவன் கையை நுழைத்துக் கொண்டிருக்க, பாப்புவிற்கு பி.பி ரைஸ்ஸாகி அவன் கொண்டு சென்ற கையை வெடுக்கென பிடித்து இழுத்து சாய்ந்து நிற்க இருக்கும் நீல் கம்பியின் பின் வளைத்து ஐந்து விரல்களும் ஒவ்வொன்றாக மடக்கு மடக்கென ஒடித்துவிட்டாள். நிமிடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டிருந்தது.

அவன் அலறலில் பஸ்ஸை நிறுத்தி விட, எல்லாரும் என்னவோ ஏதோவென்று விசாரிக்க ஆரம்பிக்க, அவன் தன் வலது கையை தூக்கிக் கொண்டு பாப்புவை அடிக்க வர, அதையும் பிடித்து அவள் திருக, பாடிகார்டு வந்து பிடித்துக் கொண்டான்.

எல்லோரும் "என்னாச்சு?" என்றதற்கு "என்ட்ட மிஸ்பிஹேவ் பண்ணுனா அதான் கைய உடைச்சேன்" என்றாள். அவன் கை வலியில் இவளிடம் எகிறிக் கொண்டுவர, பாடிகார்ட் அவனை மடக்கி பிடிக்க, சிலர் லைவ் வீடியோ எடுக்க, அது ட்ரெண்டாக, சிலர் 'அது சார்ம் வைப்' கூச்சலிட ஆரம்பிக்க, "வீர தமிழச்சி" என ஹாஸ்டேக்கில் வேகமாக பரவ ஆரம்பித்தாள் பாப்பு. பின் ௭ல்லோருமாக கூடி அதட்டி பஸ்ஸை போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி அவனை ஒப்படைத்துவிட்டு கம்ப்ளைன்ட் பைல் செய்து விட்டு கிளம்பினர்.

பின் அவள் ஸ்டூடியோ சென்றதும், அங்கு இரணியன் திட்ட ஆரம்பித்தான், "உனக்கென்ன பெரிய பாகுபலி தேவசேனான்னு நினைப்பா? உன்ன யாரு பஸ்ல போக சொன்னது? பின்னாடியே கார் வருதுன்னு தெரியும்தானே, பைக் நின்னுச்சுன்னா கார்ல ஏறி வர வேண்டியது தான, எதுக்கு போய் பஸ்ல ஏறுற?" என அவன் திட்ட ஆரம்பிக்க, "சார்ம், மொதயே சொன்னது தான், நா சுதந்திரமா இருக்கணும், சும்மா ஒளிஞ்சு ஒளிஞ்சு வாழ நா என்ன உங்கள மாதிரி செலிபிரிட்டியா?" "இங்க பாரு செலிபிரிட்டி ஓட ஒய்ஃப்ன்றதால தான் இவ்வளவு ஸ்பீடா ட்ரெண்ட் ஆகிட்ட, இனி நீ கண்ட்ரோலா தான்ம்மா இருக்கணும்" ௭ன்றான் போனை காட்டி.

"முடியாது சார்ம். நா இப்படித்தான். தப்பு எங்க நடந்தாலும் தட்டிக் கேட்பேன். பெண்கள அடக்கி வைக்கணும்ன்ற ஆங்கிள்ல சராசரி ஆம்பளையா யோசிக்காதீங்க" என அவளும், "நா ௭ன்ன சொல்றேன் இவ ௭ன்ன சொல்றா சரியான லூசு" ௭ன அவனுமாக, இப்படி அன்றைய பொழுது சண்டையோடும் மூஞ்சை தூக்கி வைத்தலோடும் கழியும்.

'ஏதாவது பிரச்சனையில் ஆர்வக்கோளாறு லூசுத்தனமா போய் மாட்டிக் கொள்ளுமே' என்ற எண்ணமே அவனுக்கு, அதனால் ஈவினிங் ஷூட் முடிந்து தானே அப்பார்ட்மெண்ட் சென்று இறக்கி விட முடிவு செய்து, அவளை ஏற்றிக் கொண்டு கிளம்பினான் சமாதானப் படுத்தும் முகமாய். அன்று அவளும் ரொம்ப பிகுப்பண்ணாமல் ஸ்கூட்டியில்லாத காரணத்தை மனதில் வைத்து வந்து ஏறிக் கொண்டாள்.

காரில் செல்கையில் அவன் பேசாமலே வர, "சமாதானப்படுத்த தானே ஏத்திட்டு வந்தீங்க, அப்புறமு பேசாமலே வந்தா என்ன அர்த்தம்? சீக்ரம் சாரி சொல்லுங்க" என்றாள். நம்மாளுக்கு தான் ரொம்ப நேரம் பேசாம வரமுடியாதே.

"சாரி சொல்றேன்னு நா சொல்லவே இல்லயே? ஐயோ பாவம் ஸ்கூட்டி இல்ல, நாம வராம கார்ல போமாட்டேன்னுவாளே, சுதந்திரப் பறவைன்னு பஸ்ல போய், இப்ப எவன்ட்டையாவது வம்பிழுத்து அடி வாங்கிட்டு வந்துட்டனா? ரிசப்ஷன் வேற நெருங்குது, அதான் நாமளே கொண்டு போய் விட்டுருலாம்னு வர்றேன்" ௭ன்றான் கெத்தை விடாமல் அவன்.

முறைத்தவள்"சரியான சாடிஸ்ட் சார்ம் நீங்க, ஒரு பொண்ணு தைரியமா ஒரு விஷயம் பண்ணா அது தப்புன்னு அடக்கி வைக்கிற ரகம். எல்லோரும் மிஸ்டர் மெய்யப்பன் ஆகிட முடியுமா. தப்புனா பாயா இருந்தாலும் கேளா இருந்தாலும் நியாயமா இருக்கணும். அது என்ன போயி அடி வாங்கிட்டு வருவேன்றீங்க, அப்டி எத்தன டைம் உங்க முன்ன வந்து நின்னு நீங்க பாத்தீங்க. சும்மா உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க சொல்லிட்டேன். ஒரு நேர மாதிரி ஒரு நேரம் நா பொறுமையா இருக்க மாட்டேன்" என இவள் பேசிக்கொண்டே போக, வண்டியை ஓரங்கட்டியவன் அவள் தலையை இழுத்து உதட்டை தன் உதட்டால் மூட, ம்கூம் இரு உதட்டிற்கும் நடுவில் அவள் கை தான் இருந்தது, அவள் கையில் தான் முத்தியிருந்தான்.

"எப்டி இவ்ளோ அலெர்ட்டா இருக்க?"
"அது அப்டித்தான்". "ஒரு தடவனாலும் குடுக்க விடேன்டி". "இப்டி கேட்டீங்கன்னா கூட யோசிப்பேன்". "ஓ உன்ட்ட கேட்டு கேட்டு தான் குடுக்கணுமோ?", "ஆமா பழக்கத்துக்கு வந்தப்புறம் எப்டி வேணா இருக்கலாம் ஆனா ஃபர்ஸ்ட் டைம் பர்மிஷன் வாங்கணும்ல". "அப்ப இதுக்கு முன்ன நா கொடுத்ததெல்லாம் கணக்கில வராதா?” "நா முழிச்சுருக்கும் போது குடுக்கல தான, அதனால அதுலா கணக்குல வராது". "அடிப்பாவி எல்லாமே தெரிஞ்சும் எப்டி இப்படி ௭துவுமே தெரியாத மாதிரி நடிக்கிற". "உங்களுக்கு பொண்ணுங்க லாஜிக்கே புரியல சார்ம்".

"சரி இப்ப குடுக்க விடுவியா? மாட்டியா?", "கண்டிப்பாவா?", "உன்ன" என் அவன் டென்ஷனாக, பாப்பு சிரித்தவாறு அவன் வாயை மூடியிருந்தாள்.

இப்படித்தான் 5 மாதமும் சண்டையும், சச்சரவும், சமாதானமுமாக கழிந்தது. இன்று ரிசப்ஷன், பெரிய மண்டபத்தில் தான் பயங்கர கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் நடந்தது. இருவரும் பாப்பு செலக்ஷனில் அமைந்த ட்ரெஸ்ஸிலேயே அழகாக மிளிர்ந்தனர். சிமெண்ட் கலர் ஜார்கெண்ட் சாரி, ஃபார்டி கொண்டையில் அம்சமாக இருந்தாள். அதே கலர் கோட் சூட்டில் ஸ்டைலாக இருந்தான் இரணியன்.

சில ஜோடிகளை "ஈ" ன்னு திறந்த வாயை மூடாமல் பார்ப்போமே அப்படித்தான் பலரும் அவ்விருவரை பார்த்திருந்தனர். மேல்தட்டு மக்களே அதிகம் தென்பட்டனர். ஆனால் அவர்களது பிஸி ஸ்செடுலுக்கு ஏற்ப வர போக இருந்தனர். சிரித்த முகமாக, சந்தோஷமாக இருவரும் வந்தவர்களை ரிஸீவ் செய்தது பல பேரை பொறாமை பட வைத்தது.
 
அத்தியாயம் 31
பாட்டும், டான்ஸும் பல வகை உணவுகளும் என ரிசப்ஷன் படு ஜோராக நடந்து கொண்டிருந்த நேரத்தில், மைக்கை கையில் ௭டுத்த இரணியன், "ஹாய் ஃப்ரண்ட்ஸ், எ வார்ம் ஈவினிங் டு எவெரி ஒன். தேங்க் யூ சோ மச், என்னோட, என் குடும்பத்தோட சார்பான இன்விடேஷன் ஏத்துக்கிட்டு ஃபங்ஷனுக்கு வந்ததுக்கு. அண்ட், " ௭ன நிறுத்தி பாப்புவை குறும்பு சிரிப்புடன் பார்த்து, "ஐ ஃபீல் சோ பிளஸ்டு, இப்டி ஒரு ஏஞ்சல் எனக்கு கிடைச்சதுக்கு, ரியலி ஐ ஃபீல் தி பெஸ்ட். ஐ லவ் யூ சோ மச் தாட்சா, தேங்க்ஸ் யூ டூ ஃபார் அக்ஸப்டிங் மீ" என சபையைப் பார்த்து ஆரம்பித்தாலும் பாப்புவிடம் வந்து முடித்தான்.

அவனை நெருங்கி புருவம் உயர்த்தி ரகசிய குரலில், "மைக்கப் புடுச்சா தான் ஐ லவ் யூ சொல்லணும்னு எதுவும் வேண்டுதலா சார்ம்" என்க.

அதற்குள் கீழ் உள்ளவர்கள், "சார் மைக்ல தான மேம் சொன்னாங்க, நீங்களும் மைக்குல தான் பதில் சொல்லணும். காதுல சொன்னா எப்டி?" என கத்த, இரணியன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி சிரிக்க.

பாப்பு கொஞ்சமும் யோசிக்கவில்லை, இரணியனை பார்த்தவாறே அவன் கையிலிருந்த மைக்கை வாங்கியவள், "லவ்வ சொல்ல வெட்கப்படுறவன் வாழவே வெக்கப்படணும்னு நம்ம தளபதியே சொல்லிருக்காரு தான? நானும் அந்த கேட்டகிரிதான். சோ, லவ் யூ டூ மச் சார்ம். ஃபர்ஸ்ட்டே எனக்கு உங்க மேல பயங்கர கிருஷ் தான், நேர்ல பார்த்ததும் லவ்வா கன்வெர்ட் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன்" என கண்ணடித்து சிரிக்க.

எல்லோரும் ஆர்ப்பரிக்க, இடது கையால் அவளை அணைத்து விடுவித்தான் இரணியன். பின் அவளிடமிருந்து மைக் வாங்கி, "தேங்க்யூ ஆல் அகைன் ஃபார் யுவர் ப்ரசன்ஸ். அண்ட் ஒன் மோர் திங், ஐ வாண்ட் டு கன்ஃப்பஸ், லெட் மீ இன்ட்ரோடியூஸ் மிஸஸ்.விஷாகன். எல்லோருக்கும் விஷாவ நல்லாவே தெரியும். நா என் சிஸ்டர மேரேஜ் பண்ணிக்க சொன்னப்ப, எனக்காக சரின்னு சொல்லிட்டான். பட் அவன் இவங்கள லவ் பண்ணிட்டு இருந்துருக்கான். அது லேட்டா தான் எங்களுக்கு தெரிய வந்தது. எனக்காக அவனோட லவ்வ ஏன் அவன் விட்டுக் கொடுக்கணும், அதான் நானே உங்ககிட்ட அவங்கள இன்ட்ரோ பண்றேன்னு ப்ராமிஸ் பண்ணேன். நவ் ஐ கெப்ட் மை வேர்ட்" ௭ன விஷாவையும் சுஹாவையும் மேடைக்கு அழைத்தான். கைத்தட்டி அதை அங்கீகரித்தனர் அங்கு கூடியிருந்தவர்கள்.

'இவரோட தங்கச்சிய ஃபர்ஸ்ட் கட்டிவச்சுட்டு, இப்ப இவரோட ஃவைப்வோட அக்காவ லவ்ர்னு இன்ட்ரோடியூஸ் பண்றாரு' இந்த குழப்பம் அங்கிருந்த அனைவரிடமும் இருந்தது, ஆனால் அவனிடம் நேரடியாக கேட்கும் தைரியமற்று 'இதெல்லாம் இப்ப நம்ம கல்ச்சர்லையும் சகஜம் ஆயிடுச்சு' என பின்னால் பேசிக்கொண்டனர்.

அதை கவனித்தாலும் கண்டு கொள்ளாமல் "ஹோப் யூ ஆல் எஞ்சாய் த பார்ட்டி" என முடித்தான்.

"அதெப்படி எல்லோருக்குள்ளயும் ஒரு லவ் ஹிஸ்டரிய கொண்டு வந்துறீங்க?" பாப்பு கேக்க, "காசா பணமா லவ் தான சும்மா சொல்லிப்போமே" ௭ன தோளை குழுக்க, (வர வர இவன் தான் பாப்பு மாறி பேச ஆரம்பிச்சுட்டான், 'இது நானு').

"இதுக்கு வெள்ளபாச்சா வீட்டுல போய் என்ன ஆட்டம் ஆடுவான்னு உங்களுக்கு தெரியுமா?" என்றவாறு சுஹாவை திரும்பி பார்க்க, விஷாகனை பிடித்து மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

"ம்கும் ஒன்னுமில்ல ஒன்னுமில்லங்கிறது, ஆனா இத்தினி கேப் இல்லாம உரசிக்கிட்டே சுத்த வேண்டியது" என பாப்பு முணங்க. "அது சரி. அவங்க என்ன செஞ்சாலும் தப்புனா எப்டிமா?" என இரணியன் ரகசியம் பேச, மெய்யப்பன் மேடையேறினார்.

"சொல்லுங்க அங்கிள்" என்றான் அவரிடம் இரணியன். "உங்க சிஸ்டர் இங்க வரலயே? ஏன்?” "எவ்வளவோ கால்ஸ், மெசேஜஸ் போட்டாச்சு. நோ யூஸ், எனக்கு டைட் வொர்க், இல்லனா நேர்லயே போயிட்டு கூட்டிட்டு வந்துருப்பேன். ஆனாலும் அவ ஒரே ப்லேஸ்ல இருக்கிற ஆளில்ல அங்கிள். அவளே வரட்டும் பாக்கலாம்" ௭ன சாதாரணமாக சொல்ல.

"இல்ல மாப்ள.. ஒரு பொண்ணுக்கு மேலும் மேலும் கஷ்டத்தக் கொடுத்து என் பொண்ண வாழ வைக்கிற மாதிரி ஒரு ஃபீல்" அவர் உண்மையில் கில்டியாக சொல்ல. "நோ ஒரி அங்கிள். ஐ கேன் மேனேஜ் இட்". "ம்" என தலையசைத்து கொண்டவர், "இன்னொரு ஃபேவர்" என்க. "சொல்லுங்க அங்கிள்", "ஃபங்க்ஷன் முடிச்சு பாப்புவ உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போணும்னு பிளான் பண்ணிருப்பீங்க. ஒரு 2, 3 டேஸ் இங்க நம்ம வீட்டுல இருந்துட்டு போறீங்களா?" என்க.

"ப்பா என்னப்பா பர்மிஷன்லா கேக்குறீங்க?" என பாப்பு ஆரம்பிக்க, சிரித்த இரணியன், "உங்கட்ட கேட்டு நா எதுவுமே செய்யல அங்கிள். நீங்களா கேட்டு நா செய்யப்போற ஃபர்ஸ்ட் விஷயம் இதுவா இருக்கட்டுமே" ௭ன்றான்.

"அப்டின்னா உங்களுக்கு எப்டி வசதி வேணும்னு சொல்லுங்க முடிஞ்சளவு தங்குறதுக்கு ஏற்பாடு பண்ணிடுவேன்". "அதுசரி, ஓவர் நைட்ல வீட்ட பங்களாவா மாத்துற மேஜிக் தெரியுமாப்பா உங்களுக்கு" பாப்பு இடைப்புக. "மூணு ரூம்ல அப்பா ரூம் கொஞ்சம் பெருசு இல்லையாடா, அத மாத்தி கொடுப்பேன்ல".

"அதெல்லாம் ஒன்னும் வேணாம் அங்கிள். என்னால ௭ங்கயும் அடாப்ட் பண்ணிக்க முடியும். நீங்க ரிலாக்ஸா இருங்க". "தேங்க்ஸ் மாப்பிள" என இறங்கினார் மேடையிலிருந்து.

வடிவு வேதியிடம், "உங்க மாமியார் பேசுனதுல தப்பே இல்லடி. எனக்கே இவ்வளவு குழப்பமா இருக்கே, வெளியிலிருந்து பாக்கிறவங்களுக்கு தப்பா தெரியுறதுல என்ன இருக்கு?" என்க. "என்னம்மா சொல்ற. என்ன குழப்பம்? என்ன என் மாமியார் பேசினது சரி?” "அது நம்ம பாப்புவுக்கு மாப்பிள்ளைக்கும் முதலிரவு முடிஞ்சிருக்குமா? இல்ல இன்னைக்கு ஏற்பாடு பண்ணனுமா? ச்சைனு இருக்கு, இத ௭ப்டி அவட்ட கேக்க".

சிரித்த வேதிகா, "நீ எதுவுமே செய்ய வேணாம், அவங்க ஆல்ரெடி லைஃப்ப ஸ்டார்ட் பண்ணிருந்தாலும் சரி, இல்ல இனிமே என்னைக்கு ஸ்டார்ட் பண்ணறதுனாலும் சரி, அது அவங்க பர்சனல். தே வில் டேக் கேர் ஆப் இட். அவங்க ரெண்டு பேரும் சின்ன பிள்ளைங்க இல்ல, பாத்து நடந்துப்பாங்க" என்றாள் பொறுமையாகவே.

"ம்.. ஆமா இங்க எது முறப்படி நடந்துருக்கு? நம்மட்ட சொல்லிட்டா உன் தங்கச்சி எல்லாம் செய்யுறா? அதவிட இன்னொரு கொடும, சுஹாவ பத்தி எப்படிலா பின்னாடி பேசுவாங்கன்னு இருக்கு? இப்ப வெளில முகம் காட்டவே கேவலமா இருக்கு".

"எல்லாமே ஆக்சிடெண்ட்டா நடந்துருச்சு. மிஞ்சிப் போனா இன்னும் 1ஹவர் இவங்கள பேஸ் பண்ணுவ, அப்றம் அவங்கவங்க லைப்ப பாக்க போயிடுவாங்க. வீணா மத்தவங்கள யோசிக்கறத விடு. சுஹாவுக்கு என்ன குறை? பாரு ஷி இஸ் ஹாப்பி" ௭ன்றாள் சுஹாவையும் விஷாவயும் காட்டி.

"இது ஒண்ணுதான் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு. அப்பா பாப்புவையும் மாப்பிள்ளையையும் ரெண்டு நாள் இருந்துட்டு போ சொல்லி கேட்டுருக்காரு. நீயும், மாப்பிளையும் கூட இருங்களேன். இனி இப்டி எல்லாரும் சேர்ந்து இருக்கிற மாதிரி சுச்சுவேஷன் எப்ப அமையுமோ" ௭ன்க. "ஆல்ரெடி டென் டேஸ் லீவு ஆயிடுச்சும்மா, இனி லீவு கேட்டா கமிஷனர் என்ன அப்டியே குடும்பத்த மட்டும் பாத்துட்டு வீட்டுலயே இருன்னுவாரு". "இங்கயிருந்து வேலைக்கு போ ரெண்டு நாள் தானே". "சரிம்மா ஆர்விட்ட பேசுறேன்". "நானும் அப்பாவ சொல்ல சொல்றேன்" என அவரவர் கணவரிடம் பேச சென்றனர்.

பங்ஷனில் இரணியன் அம்மாவும், அப்பாவும் கலந்து கொண்டாலும் பார்வையாளர்களாக தான் இருந்தனர். ஆனால் மெய்யப்பன் மரியாதை நிமித்தம் இரண்டு சம்பந்திமாரிடமும் விவரங்களை பகிர்ந்து கொண்டார். இருவருக்கும் சொந்தக்காரர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதில் வேதியின் மாமியார் கொஞ்சம் நெகிழ்ந்து விட்டார். அவ்வளவு பெரிய பணக்காரங்களையும், நம்மளையும் சரிசமமா நடத்துறாரே இந்த மனுஷன் என.

பவ்யாவின் அம்மா தெய்வநாயகத்திடம், "இந்த விஷா நம்ம புள்ளைய மொத்தமாவே மறந்துட்டான் பாத்தீங்களா? ஒரு வார்த்த அவள பத்தி விசாரிச்சானா?" ௭ன கேக்க, "அவ மாச கணக்குல போய் எங்கேயாவது ஒக்காந்துக்குவா, அவேன் அவளையே நெனச்சுக்கிட்டுருப்பானா? ஒரு அம்மாவா உன்னால அவள அடக்கி வழிக்குக் கொண்டுவர முடியுதா? ௭ப்பேற்பட்ட சூழ்நிலையிலயிருந்து இரணியன் அவள மீட்டெடுத்தான், அவ மனசு வலிக்குதுன்னு கேட்டான்னு அனுப்பி வச்சுட்டு இப்ப பேச்சா பேசுற" என அவர் கடித்து விட, அமைதியாக இருந்து கொண்டார் தில்லைவாணி.

இப்படி அவரவர் பக்க நியாயங்களுடன் பங்க்ஷன் இனிதாக முடிந்தது. ஃபங்ஷனை ஈவென்ட் ஆர்கனைஸரிடம் ஒப்படைத்து இருந்தான் இரணியன். அதனால் மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்ள, இவர்கள் வீடு திரும்பினர். இன்று யாரும் சொல்லாமலேயே வாசலில் நிற்க வைத்து மூன்று ஜோடிகளும் திருஷ்டி கழித்தார் வடிவு.

வீடு நுழைந்ததும் சுஹா டயர்ட்டில் அவள் அறை புகுந்துவிட, "பின்னாடியே என்னத்தையாவது கொண்டுட்டு நீயும் போவியே போகல?" என்றாள் விஷாகனிடம் பாப்பு நக்கலாக. " வேதி மேடம் போவாங்கன்னு வெயிட் பண்ணேன்".

"நா ஏன் போணும்னு நீங்க வெயிட் பண்ணுறீங்க" வேதி கேக்க. "ஓ! ரூம் ப்ராப்ளம் வருமோ, 4 கப்பில் பட் த்ரி பெட்ரூம்ஸ், அப்பா இதுக்கு தான் நைட்டோட நைட்டா வீட்ட இடிச்சு கட்றேன்னாறோ" என பாப்பு சொல்ல.

"அது ஒன்னும் பிரச்சன இல்ல, நானும் சகலையும் ஹால்ல ஆளுக்கொரு சோபால படுத்துக்குறோம், சிஸ்டர்ஸ் ரெண்டு பேரும் உள்ள படுத்துக்கட்டும்" என விஷா நல்ல பிள்ளையாக பெருந்தன்மையாக சொல்ல.

"எரும நீ ஒரே ரவுண்ட்ல ஓ இன்னிங்ஸ முடிச்சிட்ட, எங்க வேணா படுப்ப, அவங்களும் எதுக்கு ஹால்ல படுக்கணும்" பாப்பு திட்ட. "நல்லது சொன்னாலும் தப்பாதான் முடியும் போலயே" என விஷா முழிக்க.

தலையிலடித்துக் கொண்ட வடிவு, "எப்பத்தான் உனக்கு மூளை வளர போகுதோ தெரியல. மாப்பிள பிரெஷ் ஆகட்டும், உன் ரூமுக்கு கூட்டிட்டு போ. இருக்க டயர்ட்ல லூசு கணக்கா உளறிட்டுருக்கா" ௭ன பாப்புவை விரட்ட. "யாரு லூசு" என பாப்பு எழ, "தாட்சா டிரஸ் சேஞ்ச் பண்ணனும்" என அவளை தள்ளிச் சென்றான் இரணியன். "உன்ன வந்து கவனிச்சிக்கிறேன்" என்றவாறு அவர்கள் உள்ளே செல்ல.

"நீங்க போய் சுஹாவ பாருங்க மாப்பிள" என விஷாகனையும் வடிவு அடுத்ததாக அனுப்ப. "அப்போ இவங்க ரெண்டு பேரும்?" என்றான் வேதி, ஆர்வியை காட்டி.

"அத நாங்க பார்த்துக்குறோம் மாப்ள, நீங்க போய் படுங்க ரொம்ப அசதியா தெரியுறீங்க" என்கவும், தலையசைத்து 'இதுக்கு மேல கேட்டா அடிச்சாலும் அடிப்பாய்ங்களோ' ௭ன சென்று விட்டான்.

பின் அரவிந்திடம் திரும்பிய வடிவு, "உங்களுக்கு எங்க ரூம்ல ஒதுக்கி வச்சிருக்கேன் போய் தூங்குங்க" ௭ன்க. "அப்ப நீங்க?" ௭ன்றனர் இருவரும், "நாங்க இப்டி ஹால்ல படுத்துகிறோம். சோஃபாவ நகட்டி போட்டா நிறைய இடம் கிடைக்குமே" என்க. "ம்மா ரொம்ப கஷ்டம்மா" வேதி தயங்க, "இதுல என்ன கஷ்டம் மாப்பிள காத்துட்டு இருக்காரு பாரு. போ" என்க. உள்ளே சென்று சில பல போர்வைகளை எடுத்து வந்து சோஃபாவை நகட்டி நீட்டாக விரித்துக்கொடுத்தாள், மேல் மேல் 4, 5 பெட்ஷீட் விரிக்கையில் அது மெத்தையாக மாறி விட்டிருக்க அவளுக்கு பின்பே திருப்தியாக இருந்தது. பின்பே தனதறை சென்றாள் வேதி. விஷாவும் சிறிது நேரம் கழித்து வந்து பார்க்க, இருவரும் அசதியில் உறங்கி இருக்க, சத்தமில்லாமல் சென்று விட்டான்.

பாப்பு இரணியனை அழைத்துச் சென்றவள், அவனுக்கு பாத்ரூமை காட்டி விட்டு, தாறுமாறாக கிடந்த கட்டிலை ஒதுக்கினாள். பின் தானும் ட்ரஸ் சேஞ்ச் பண்ணி கொண்டு அவனுக்காக காத்திருக்க, வெளிவந்தவன், "ரூம் ப்ராப்ளம் சால்வ் ஆயிடுச்சா? இல்ல நாம வேணா பக்கத்துல ரூம் போட்டுப்போம்" என்க, "நீங்க வரட்டும்னு தான் வெயிட் பண்ணேன், நீங்க படுங்க நா பாத்துட்டு வரேன்" என சென்றாள்.

விஷா அப்போதுதான் பார்த்து சென்றான், இவளும் இருவரும் உறங்கி விட்டதைப் பார்த்து விட்டு வந்து, "அவங்க ஹால்ல படுத்துட்டாங்க, தூங்கிட்டாங்க". "எவங்க?", "அம்மாவும், அப்பாவும்". "சரி அவங்க ஆசைக்கு இன்னைக்கு இங்க தங்கிட்டு நாளைக்கு அங்க போயிடலாம் ஓகேவா? வயசானவங்கள ௭துக்கு கஷ்ட படுத்திட்டு" என வந்து தலையணையில் சாய்ந்து அமர்ந்தான். "ம்" என தோளை குலுக்கினாள் பாப்பு.

"நெக்ஸ்ட் தாட்சா" என அவன் கை இரண்டையும் அலுப்பாய் முறிக்க, "உங்களுக்கு செஞ்சு முடிக்க வேண்டிய கடமை எதுவும் பாக்கி இருக்கா?" என இடுப்பில் கைவைத்து கேட்க, "வாட் கம் அகைன்" என்றான் புரியாமல்.

"இல்ல சார்ம், வயசான அம்மா, ஓடிப்போன அப்பா, கல்யாணம் ஆகாத அக்கா, கையாலாகாத அண்ணன், வயசுக்கு வந்த தங்கச்சி, படிப்பு முடிக்காத தம்பி, இப்டி நீங்க செஞ்சு முடிக்க வேண்டிய ரெஸ்பான்சிபிலிடி ௭தும் இருக்கானு கேட்டேன்" ௭ன்றாள் சிரிக்காமலே.

"நீ இருக்க பாரு. நா ரெடியா தான் இருக்கேன், டயர்ட் எதுவும் இல்லன்னு சிம்பிளா டிரைக்டா சொல்லிருக்கலாம்ல" ௭ன்க. "ஹான்? நா எதுக்கு ரெடியா இருக்கேன்னு சொல்லணும்னு எக்ஸ்பெக்ட் பண்றீங்க? இப்டி எந்த கடமையும் இல்லனா எதுக்கு தூக்கம் வராம உக்காந்து இருக்கணும்னு சொல்ல வந்தேன், பேசாம தூங்குங்க, தப்பு தப்பா அர்த்தம் புரியிறது" என மறுபக்கம் திரும்பி சிரித்து, படுத்து போர்வையை கழுத்து வரை மூடி கொண்டாள்.

"உன்னயும் உன் சாட்டர் பாக்ஸ் வாயயும் நல்லா தெரிஞ்சும் உன் பெர்மிஸன் கேட்டு வெயிட் பண்ணேன்ல என்ன சொல்லணும். இனியும் உன்ன பேசவிட்டேன்னா நா தான் இடியட்" என்றவன் தன் பலத்தை காதலாய், ஆசையாய், மோகமாய் காட்ட ஆரம்பிக்க, கராத்தே கற்றவளும் விரும்பியே அவனுள் அடங்கி கரைந்து போனாள். தாம்பத்திய கடலில் குதித்து, குளித்து, முத்தெடுத்த அயர்வில் இருவரும் கண்ணயர்ந்தனர்.

மறுநாள் காலை, மூன்று மகள், மூன்று மருமகனுக்கும் சாப்பாடு தடபுடலாக ரெடியாகியது. அவர்கள் ப்ளாக்கில் ஒருவர் வீட்டுக்கு சமையல் செய்ய வரும் லேடியை அவர்களிடம் பேசி மூன்று நாளைக்கு வாடகைக்கு வாங்கி இருந்தார் வடிவு. அப்படி வடிவும், அந்த சமயக்கார அம்மாவும் காலை உணவு தயாரிப்பில் இறங்கிருக்க, இரணியன் முதலில் எழுந்து வந்தான்.

அவன் எப்பொழுதும் எழும் நேரம் ஆட்டோமேட்டிக்காக எழுப்பிவிட, திரும்பிப்பார்க்க பாப்பு சுகமாக உறங்கிக் கொண்டிருக்க, 3 மணி வரை அவளை அவன் படுத்தியது நினைவு வர, குனிந்து கன்னத்தில் முத்திட்டு பிரஷ்ஷாக சென்றான். பின் வெளிவர மெய்யப்பன் சோபாவில் அமர்ந்து ஏதோ ஃபைலில் குறித்துக் கொண்டிருக்க, "குட் மார்னிங் அங்கிள்" என சென்று அவரருகில் அமர்ந்தான்.

"குட்மார்னிங் மாப்பிள. என்ன அதுக்குள்ள எழுந்துட்டீங்க, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்ல. வடிவு காபி எடுத்துட்டு வாம்மா" என்க. "டீயா? காபியா மாப்பிள? நீங்க எழுந்துட்டிங்க அந்த கழுத இன்னும் தூங்குதோ?" என வந்த விடவு அறை நோக்கி நகர.

"இருக்கட்டும் ஆண்ட்டி நேத்து ரிசப்ஷன் டயர்ட் இருக்கும்தானே. எனக்கு ஜாக்கிங் போணும், அப்புறம்தான் கிரீன் டீ" என்றான் ௭ல்லாவற்றிற்கும் ஒன் லைனில் பதிலாக.

"கீழயே கிரவுண்டு இருக்கு மாப்பிள, அதுக்குள்ளேயே ஜிம் இருக்கு, வாங்க போவோம்" என மெய்யப்பன் எழ, இரணியனும் எழ, "நா வேணும்னா கூட போயிட்டு காட்டுறேன் மாமா" எனப் பின்னால் கேட்ட குரலில் இருவரும் திரும்ப, விஷா தான் தன் சாரை பற்றி தெரிந்து அலாரம் வைத்து கிளம்பி வந்திருந்தான்.

மெய்யப்பன் இரணியனை பார்க்க, "நீங்க வாக்கிங் வரணும்னா வாங்க அங்கிள்" என நிறுத்த, "எனக்கு இன்னிக்கு ஒரு ஜட்ஜ்மென்ட் இருக்கு அதான் பாத்துட்டு இருந்தேன்". "தென் யூ கேரியான் அங்கிள். நா விஷாவோட போறேன்" என முடிவாகி இருவரும் கிளம்பினர்.

சிறிது நேரம் அமைதியாகவே இருவரும் ஓட, "பவ்யாக்கு நேத்து உங்க ரிசப்ஷன்னு தெரியாதா சார்?" மெதுவாக கேட்டான் விஷா. "நீ கால் பண்ணவே இல்லயா அவளுக்கு?" ௭ன இரணியன் ஓடி கொண்டே பதில் கேள்வி கேக்க.

"பண்ணேன் சார். வேற வேற நம்பர்ல இருந்து கூச ட்ரை பண்ணிட்டேன், பிக் பண்ணவே இல்ல". "சேம்.. என் கால்ஸயும் பிக் பண்ணல. அம்மா எப்டியும் சொல்லிருப்பாங்க. நா அவள பத்தி ஏதாவது கேட்டாலே அழுறாங்க. சோ நா அவள ரீச் பண்ண ட்ரை பண்ணல. இப்ப அவ ஸ்பெயின்ல இருக்கான்னு தெரியும், பட் எந்த அளவுக்கு ஃப்ரீடமா இருக்கான்னு தெரியல? அத பிரடிக்ட் பண்ண முடியல?”

"இப்டி மாசக் கணக்குல போய் இருந்து பழைய படி எதுவும் பழகிட்டு வந்துவிடக்கூடாதுன்னு பயமா இல்லயா சார்" ௭ன தைரியமில்லா குரலிலே கேட்டான்.

"இப்பவர ஸ்டார்ட் பண்ணாம இருப்பான்னு எனக்கு தோணல? அவ அவ்வளவு அலெர்ட்டா இருக்கா அதுலயே தெரியுது ஏதோ பண்றான்னு. எனக்கு நெக்ஸ்ட் பிராஜக்ட் இன்னும் ஒரு மாசத்துல ஸ்டார்ட் ஆகுது அதுக்குள்ள அவள வர வைக்கணும். ஐ வில் டேக் கேர் டோண்ட் ஒரி".

அதற்கு மேல் அதை பற்றி கேக்க வேணாமென முடிவெடுத்து, "ஓகே சார். அந்த ஆயுஷ் என்ட்டயும் பேசுனான் சார், அவனோட ஃபர்ஸ்ட் பிலிம் கம்மிங் 12த் ரிலீஸ் ஆகுதாம். உங்கட்ட சொன்ன ஸ்டோரி ஓகே சொன்னீங்கன்னும் சொன்னான்".

"பிலிம் எப்டின்னு பாத்துரலாம் விஷா. நம்ம பிராஜக்ட்க்கு புரடெக்ஷனுக்கு ஆள் புடிச்சுட்டானான்னு கேட்கணும், தாட்சா கேட்டாளான்னு தெரியல?” "நம்ம கிருஷ்ணமூர்த்தி சார தான் ஓகே பண்ணிருக்கானாம்" விஷா சொல்ல. "தென் ஓகே பாத்துக்கலாம்" என்க.

"அவரோட மேனேஜர் ஸ்லோட்டி(ஒரு பார்ட்டில பாப்புட்ட வம்பு இழுத்தான்னு ஃபோர்க் வச்சு குத்துவாளே அவன் தான் இது), ஆல்ரெடி பாப்புட்ட பிரச்சனை பண்ணிருக்கான்" விஷா சொல்ல.

'இவ பிரச்சனய இழுக்காத ஏரியா எங்க தான் இருக்கு' என நினைத்தாலும் "அதெல்லாம் இன்னுமா நியாபகம் வச்சிருப்பான். அவனால ௭ன்ன பண்ணிட முடியும் விஷா, சின்ன சின்ன விஷயத்துக்குலா ரியாக்ட் பண்ண வேணாம்" என்று விட்டான்.

அதன் பின் இரண்டு மணி நேரம் ஜிம்மில் வொர்க் அவுட் முடித்தே திரும்பினர். இரணியன் ஒர்க்கவுட் செய்ய ஆரம்பிக்கவும், யோகா மாட்டை விரித்து அவ்வளவு நேரம் ஓடின அலுப்பு தீர "யோகா செய்றேன் சார்" என காலை நீட்டிப் படுத்தவன் தான் விஷா, சுகமான நல்ல உறக்கம், ஒர்க்கவுட் முடித்து வந்த இரணியன் அவன் காலில் மிதித்து எழுப்பியே அழைத்துச் சென்றான்.

இவர்கள் செல்லும் போது எல்லாருமே எழுந்திருந்தனர். வேதியும், அரவிந்தும் அவரவர் வேலைக்கு கிளம்பி நின்றனர். "குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்" வடிவு சொல்ல, இருவரும் அவரவர் அறை சென்று பிரெஷ்ஷாகி திரும்பினர். பின்பே தங்கள் இருவருக்காக தான் அனைவரும் காத்திருப்பது புரிந்தது.

மெய்யப்பன், இரணியன், அரவிந்த், வேதிகா, விஷா, சுஹாசினி, இருந்த ஆறு சேரில் ஆறு பேரும் அமர்ந்துவிட, "நா எங்க உட்கார்றது?" என வந்து நின்றாள் பாப்பு.

இரணியன் ஒர்க்கவுட் முடித்து திரும்புகையில் அவள் ஹாலிலும் இல்லை, ரூமிலும் இல்லை. சரி இங்க பக்கத்தில் எங்கேனும் சென்றிருப்பாள், வரட்டும் என நினைத்து குளித்து வர. இவன் வந்த உடனே புரிந்து கொண்ட எல்லோரின் காத்திருப்பு சாப்பிட அமர வைத்தது. அவன் அமர்ந்து பார்வையை சுழற்றி தேட ஆரம்பிக்க, பாப்பு வந்து விட்டிருந்தாள்.

"நா உங்கள தேடி கீழப் போனா, நீங்க எனக்கு முன்னால வந்து சாப்பிட உக்காந்துருக்கீங்க" என்றாள் முறைத்து இரணியனையும் விஷாவையும்.

"அவங்க ரெண்டு பேரும் வந்து அரை மணி நேரம் ஆச்சு, நீ எங்க போயி சுத்திட்டு வர்ற?" வடிவு கேட்க, "கீழ் ஃப்ளோர் மாமி புடிச்சிட்டாங்க, அவங்கள சமாளிச்சுட்டு வர்றதுக்குள்ள என் இடம் போச்சு".

"என் கூட நின்னு பரிமாறு" வடிவு சொல்ல. "இங்க வேணா உட்காருடாம்மா" என மெய்யப்பன் ௭ழ முன் வர, "அவ வீட்டுல தான் இருக்கப் போறா, உங்களுக்கு கோர்ட்டுக்கு லேட் ஆகிட்டு நீங்க சாப்பிடுங்க" என இட்லியை வைத்து கறிகொழம்பை ஊற்ற, இரணியன் "ஆண்ட்டி எனக்கு கிரீன் டீ மட்டும் போதும்" என வேகமாக மறுத்தான்.

"அவருக்கு மார்னிங் பிரேக்பாஸ்ட் மில்லட்ஸ் தான்" என பாப்பு சிரிக்க, "அதெல்லாம் சாப்பிட்டு சாப்பிடலாம் இப்ப இட்லி சாப்பிடுங்க விருந்துக்கு வந்த மாப்பிள்ளைக்கு பயறையா கொடுக்க முடியும். சாப்பிடுங்க மாப்பிள" என நாலு இட்லியை வைத்து, ஒரு கரண்டி குழம்பை ஊற்றி, அருகில் உளுந்த வடை கார சட்னி வைக்க, அவன் முழியோ முழியென முழித்தான்.

"இன்னைக்கு ஃபுல் டே ரெஸ்ட் தான சார்ம், ஈவினிங் 2ஹௌர்ஸ் ஜிம் போங்க, ஏத்துற கலோரிஸ இறக்கிடலாம்" என்றாள் பாப்பு.
முதல்முறை இவர்கள் வீட்டில் சாப்பிட அமர்ந்துவிட்டு அதற்கு மேல் சீன் கிரியேட் பண்ண பிடிக்காதவன் மெதுவாக சாப்பிடத் தொடங்க.

"என்ன விஷா ரொம்ப அமைதியா சாப்பிடுற?" பாப்பு அவனை வம்பிழுக்க, "பெரியவங்களா இருக்காங்களேனு ஒரு மரியாத தான் என்ன சகல?" அரவிந்த் சொல்ல, "இல்ல சாப்பிடும் போது பேசுறது பிடிக்காது. அதுலையும் அத்தையோட கை பக்குவம் ம்ம்ம்.." என உச்சுக் கொட்ட.

"இன்னைக்கு சமைச்சது செண்பாக்கா, இப்டி நைஸ் பண்ணி நைஸ் பண்ணி தான் உனக்கு பிடிச்சதையா ௭ங்கம்மாவ செய்ய வச்சுட்ருக்கியோ?" என பாப்பு கேட்க. "ஏன்?அதனால நீ சாப்பிடாம பட்டினியாவா இருந்த?" இதை சுஹா சொல்ல.

"பார்றா, அடியே வெள்ள பாச்சா புருஷன சொன்னதும் சண்டைக்கா வார. இரு நானும் என் ஹஸ்பண்ட்ட சப்போர்ட்க்கு கூட்டிட்டு வரேன்" என இரணியனிடம் திரும்ப, "அக்கா தங்கச்சி சண்டைக்கு நடுவுல நா எதுக்குமா" என்றான் முந்தி கொண்டு சத்தமாக, சுஹா வயித்திலிருந்த குழந்தை அவன் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டது போல் அசைய, அதில் அவள் உடலும் திடுக்கிட்டது.

இதை சுஹா அருகில் நின்ற பாப்புவும், அந்த பக்கம் அமர்ந்திருந்த விஷாவும் கவனித்துவிட்டு, "என்னாச்சு?" என்க. "குழந்தை திடீர்னு திடுக்குன்ன மாதிரி இருந்தது" சுஹா குழப்பமாக சொல்ல, "தண்ணீ வேணும்னா எடுத்து கொடு தாட்சா" இரணியன் இம்முறை கூறும்போதும் குழந்தை அதிகம் அசைவது போல் தெரிய, "அம்மா பாப்பா உள்ள என்ன செய்துன்னு தெரியல? சாப்பாடு எதுவும் பிடிக்கலையோ?" என சுஹா கேக்க, "ஹாஸ்பிடல் வேணும்னா போவோமா?" என்றான் விஷா.

"அதெல்லாம் ஒன்னும் செய்யாது சாப்ட்டு கொஞ்ச நேரம் படுத்து எந்திரி சரியாகிடும்" என முடித்துவிட்டார் வடிவு. அதன் பிறகு வேதி, அரவிந்த், மெய்யப்பன் மூவரும் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட. மற்றவர்களுக்கு அன்றைய பொழுது டிவி பார்ப்பது, கேரம் விளையாடுவது, ஈவினிங் மாடியில் அப்பார்ட்மெண்ட் குட்டிஸை சேர்த்துக் கொண்டு குதூகளிப்பதுமாக கழிந்தது. இரணியனுக்கு இதெல்லாம் புது அனுபவமே.

சுஹா அன்றைய பொழுதில் கவனித்ததில், 'இரணியன் குரல் கேட்கும் போது குழந்தை அசைதா? இல்ல விஷா பேச்சுக்குத்தான் இப்டி ரியாக்ட் பண்ணு தான்னு தெரியலயே, ஏதோ வித்யாசமா இருக்கே' ௭ன குழம்பி தவித்தாள்.

முற்பிறவியிலும் கருவறையில் மட்டுமே இருந்து கேட்ட குரலாயிற்றே இரணியன் குரல். அதை மறுபடியும் கேட்கவும் அக்குழந்தைக்கு ஒரு சிலிர்ப்பு. ஆனால் அது தன் தாயின் குரலை அவ்வாறு கண்டுகொள்ளவில்லை என்பதுதான் வருத்தம், கண்டு கொள்ளவில்லை என்பதை விட கண்டு கொள்ள பிரியப்படவில்லை, அதனால் பாப்பு குரல் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இரணியனின் ஆத்மா இக்குழந்தையை காணமுடியாமல் இறந்ததால், அவன் ஆத்ம குரல் அக்குழந்தையின் கருவறை வரை இன்றும் சென்று தீண்டுகிறதோ!.

எப்படியோ இரண்டு நாட்களை கடத்தி விட்டு, இடம் பற்றாக்குறை கிளம்புகிறோம் என்றவனை மெய்யப்பனும், வடிவும் மாற்றி மாற்றி பேசி தடுத்து நிறுத்திவிட்டிருந்னர். ௭னவே மூன்றாம் நாள் பாப்புவும், இரணியனும் பாப்புவின் திங்கிஸை ௭டுத்து கொண்டு கிளம்பி, பெசன்ட் நகர் வந்தனர்.

இவர்கள் கார் விட்டு இறங்கி வீட்டினுள் நுழைய வாசலில் காலை வைக்க, துப்பாக்கி தோட்டா பயங்கர சத்தத்துடன் வந்து பாப்பு தோளை துளைத்தது.
 
அத்தியாயம் 32
சற்றுமுன்...

நுங்கம்பாக்கத்தில் இருந்து கிளம்ப, காரில் இருவரும் ஏறினதும், ஹெட்செட் எடுத்து பாப்பு மாட்ட, "பிளேயர்ல போடு நானும் கேட்பேன்" என்றான் இரணியன்.

"உங்களுக்கு பாட்டெல்லாம் கேட்க பிடிக்குமா?" ௭ன கேள்வியாய் அவனை பார்க்க, "௭ன்ன அவ்வளவு சந்தேகம் உனக்கு அதுல? உன் அளவுக்கு 24 மணி நேரம் கேக்கலனாலும் சில மூடுல கேட்பேன்".

"ஓ, எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும், உங்களுக்கு எந்த ஹீரோ ரொம்ப புடிக்கும்?" என்றாள் அவன் பக்கமாக திரும்பி அமர்ந்து ஆர்வமாக. "ரஜினி சார் ரொம்ப பிடிக்கும். அவர் படம்னா மட்டும் தான் காலேஜ் படிக்கும் போது தியேட்டர் சைடே போவேன்".

"அப்றம்?" அவள் அவனையே பார்த்து கொண்டிருக்க, "அப்புறம் உன்ன தான் ரொம்ப பிடிக்குது" என்றான் அவள் கன்னம் கிள்ளி. அவளை பார்த்து தலை சரித்து கண்ணடித்து.

மூக்கை சுருக்கி, "அத கேக்கல. வேற என்ன ௭ன்னலா பிடிக்கும்?” "எனக்கு நிஜமா தெரியலமா, நெஜமாவே இப்ப நீ கேட்டபாரு, அத வச்சுதான் எனக்கு ரஜினி பிடிக்கும்னே தெரியுது. எனக்கு என்ன பிடிக்கும்னு நா இதுவர யோசிச்சதே இல்ல, இப்டி ஏதாவது கேளு வேணும்னா பதில் சொல்றேன்" ௭ன்றான் காரை ஓட்டுவதிலும் கவனமாக.

"சத்தம், உங்க வீட்ல யாரு ரொம்ப பிடிக்கும்?", "விஷாவ" நொடியும் யோசிக்காமல் பதில் சொன்னான். "ப்ரண்ட்ஸ்?", "அப்டி யாருமே கிடையாது. நா ரொம்ப ரிசர்வ்டு. எல்லாருமே தேவைக்கு பழகுற மாதிரியே ௭னக்கு தோணும். சோ ஒதுங்கியே இருந்துப்பேன். ஸ்கூல்ல இருந்தே யார்ட்டயும் ரொம்ப பழக மாட்டேன். ஈவன் ௭ன் பக்கத்துல உட்கார்ந்துருக்கவன்ட்ட கூட. காலேஜ்லயும் கிளாஸ் பங்க் பண்றது, பார்ட்டி, பப்ன்னு என்ஜாய் பண்ணுவாங்க. ஃபர்ஸ்ட் என்னயும் கூப்ட்டாங்க, எனக்கு ஏனோ அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட்டே வராதா, சோ போ மாட்டேன். அவங்களும் அப்டியே என்ன ஒதுக்கி வச்சுட்டாங்க" ௭ன அவன் முடிக்க.

"ப்ரண்ட்ஸ்ஸே இல்லாம ஒருத்தரால இருக்க முடியுமா?" என அவள் வாயைப் பிளக்க, சிரித்தவாறே அவள் வாயை மூடியவன், "ஒரு சோளக்கிளி சோடி தன்ன தேடுது தேடுது மானே, அத திக்க விட்டு திசைய விட்டு நிக்குது நிக்குது முன்னே. இப்படி உன்ன மட்டுமே தேடித் திரிஞ்சேனோ என்னவோ?" என்றான் மேலும் சிரித்து.

"சார்ம் சூப்பரா பாடுறீங்க. ப்ளீஸ் ப்ளீஸ் கண்டினியூ பண்ணுங்க" ௭ன்க. "ச்சீ லூசு, எனக்கு அதுலா வராது". "சார்ம் சீரியஸா நீங்க பாடுனது சூப்பரா இருந்தது". "கேட்டுட்டு இருந்தத விட்டுவிட்டு எங்கயோ போயிட்ட, பாட்டுன்னா உடனே மத்ததெல்லாம் மறந்துடுது?" ௭ன அவள் தலையில் வலிக்காதவாறு கொட்ட.

அவன் கொண்டு வந்த கையை அப்படியே பிடித்து அதில் சாய்ந்துகொண்டு, "என்னவோ பாட்டுக்கு நா அடிக்ட் தான் சார்ம் சின்ன வயசிலிருந்தே". "இதே வாய எனக்கு அடிக்ட்ன்னு சொல்ல வைக்கிறேனா? இல்லையா? பாரு" என அவள் கீழ் உதட்டை பிடித்திழுக்க, "இப்பவே சொல்வேனே, உங்களுக்கு அடிக்ட் ஆகிட்டேன்னு, பாட்ட போட ஹெட்செட் எடுத்துட்டு பாட்ட போடாம உங்க மேல சாஞ்சுட்டு கத பேச உக்காந்துருக்கேனே தெரியலையா?" ௭ன வெக்கமே படாமல் கேக்க. "அடடா தாட்சாவா இப்டி பேசுறது". "உண்மைய எப்பவுமே ஒத்துக்குவா இந்த பாப்பு". அந்நேரம் வீடு வந்திருக்க காரிலிருந்து இறங்கினர். அடுத்து அந்த துப்பாக்கி சூடு நடக்க.

இரண்டு நொடி நடந்தது புரியாமல் ஸ்தம்பித்து நின்று விட்டான் இரணியன். ஆனால் அச்-சத்தத்திற்கு அந்த பங்களாவில் இருந்த மொத்த பேரும் ஓடி வந்திருந்தனர். ஜான் ஓடிவந்து ஆம்புலன்ஸுக்கு போன் செய்துவிட்டு துப்பாக்கியுடன் சிரித்துக் கொண்டு நின்ற பவ்யாவிடமிருந்த துப்பாக்கியை பறிக்க, விடமாட்டேன் என அவனிடம் மல்லுக்கட்டினாள் அவள்.

தில்லைவாணியும், பவ்யாவை கட்டுபடுத்த முயல தெய்வநாயகம் நேராக சென்று இரணியனை உசுப்பினார். கீழே விழுந்த பாப்புவை நம்பாமல் பார்த்து நின்றான் இரணியன். அவளும் அவனை தான் பார்த்திருந்தாள். அவளது மூளை எங்கெங்கோ பயணித்து கொண்டிருந்தது, இதேபோல் ரத்த வெள்ளத்தில் தான் கிடப்பது போலவும் அருகில் இரணியனும் அவளையே பார்த்தவாறு ரத்தவெள்ளத்தில் கிடப்பது போலவும் தோன்ற, மூச்சு வாங்க ஆரம்பித்தது அவளுக்கு, அந்நேரம் தான் இரணியனும் தன் அப்பாவால் சுயநினைவு பெற்று அவளிடம் வேகமாக அமர்ந்தான்.

"நோ ஒர்ரி பேபி, யூ வில் பி ஆல்ரைட்" என அவள் கழுத்தில் சுற்றி இருந்த ஸ்டூலை கழட்டி அவள் கையில் கட்ட, அவள் மொத்தமாக அவன் பதட்டமான முகத்தையே பார்த்திருந்தாள்.

"நான் பாவம் செய்தவள் நாதா, இப்பிறவியிலும் தங்களுடன் சேர்ந்து கடைசி வரை வரும் பாக்கியம் எனக்கு இல்லை" என்று விட்டு சிரித்தவள், "இப்டில்லாம் சினிமா வசனமா பேசணும் போல தோணுது சார்ம். நா அழகா இருக்கேனா எப்டியும் வீடியோ போட்டோன்னு எடுத்து சோசியல் மீடியாவுல போடுவாங்க" ௭ன்க.

அவனுக்கு பேச்சே வரவில்லை, இறுக்கி அணைத்துக் கொண்டான். ஆம்புலன்ஸ் வர அதில் ஏற்ற, அதற்குள் மீடியா கூடிவிட்டிருந்தது. இரணியனுக்கு ஒன்றுமே உணரும் நிலையில் இல்லை. சற்றுமுன் காரில் தன்னுடன் பேசி கொண்டு வந்தவளே மனதில் வந்து வந்து சென்றாள்.

ஆம்புலன்சில் இரணியன் மட்டுமே உடன் சென்றான், மீடியா கூடவும் பவ்யாவை தில்லைநாயகி இழுத்து சென்று ரூமில் விட்டு அடைத்து, ஜானிடம் அந்தத் துப்பாக்கியை கொடுத்து, விஷயம் வெளிவராம பார்த்துக் கொள்ள சொல்லி விரட்டினார். அங்கு விஷாகனுக்கும் விஷயம் சொல்லப்பட அவன் வீட்டில் சொல்லி அடித்து பிடித்து அனைவரும் ஹாஸ்பிடல் கிளம்பி ஓடினர்.

அங்கு இரணியன் கண்ணீர் வெளியேற விடாது தடுக்க, கும்பிடுவது போல் முகத்தை மூடி அமர்ந்திருந்தான். அவனிடம் சென்று 'என்ன நடந்தது?' என யாருக்குமே கேட்கத் தோன்றவில்லை அவன் நிலையைப் பார்த்ததும். அவன் பாடிகார்ட்ஸ், மீடியாக்களை அவனையும் அவன் குடும்பத்தையும் நெருங்காமல் பார்த்துக் கொண்டனர்.

மீடியாக்கள் வெளியில் நின்று அவர்களுக்குத் தெரிந்ததை சுவாரசியமாக சொல்லிக் கொண்டிருந்தனர். "இன்றைக்கு காலை பத்து மணி அளவில் நம்ம ஸ்மைலிங் சார்ம் வீட்டில் வைத்து அவரோட மனைவியை சில மர்ம நபர்கள் சுட்டுருக்காங்க, இப்ப **** ஹாஸ்பிடல்ல அவங்களுக்கு சிகிச்சை அளிக்க பட்டு கொண்டிருக்கிறது. இதுல யாருலா சம்பந்தப்பட்ருக்காங்க என்னன்னு இன்னும் நமக்கு டீடெயில்ஸ் கிடைக்கல. ரசிகர்கள் எல்லாம் திரள ஆரம்பிச்சுட்டாங்க. தீவிர சிகிச்சை பிரிவில தான் நம்ம சார்ம் வைப் இருக்குறதா டாக்டர் தரப்புல சொல்றாங்க. ஃபேமிலி மெம்பர்ஸ் இப்பதான் ஒவ்வொருத்தரா வர்றாங்க, பதட்டத்துல இருக்கிறதால அவங்களால நமக்கு இப்ப எந்த பதிலும் சொல்ல முடியாது. இருந்தாலும் எங்களுக்கு கிடைக்கிற இன்பர்மேஷன் தொடர்ந்து உங்களுக்கு சொல்லிட்டே இருப்போம். xxxxx செய்திகளுக்காக உங்கள் புகழேந்தி" இப்படி அவரவர் சேனலுக்காக அவரவர் செய்தியும், வீடியோவும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.

பாப்பு மற்றும் அவளது மொத்த குடும்பத்தைப் பற்றியும் பயோகிராபி ஒப்பிக்கப்பட்டது. தெய்வநாயகம் இரணியனை கிளப்பிவிட்டு, தில்லைநாயகியிடம் ஒரு ஆட்டம் ஆடி விட்டு கிளம்பி ஹாஸ்பிடல் வந்தார். அவரும் மீடியாக்களை தாண்டி உள்ளே கார்ட்ஸ் உதவியுடன் சென்றுவிட, அதற்காகவே காத்திருந்தது போல் பாப்பு ஃபேமிலில எல்லோரும் அவரைச் சூழ, "எதுனாலும் பாப்பு கண் முழிக்கட்டும் அப்புறம் இரணியனே உங்களுக்கு விளக்கமா சொல்லுவான்" என ஒதுங்கிக் கொண்டார்.

வேதிகாவுமே 'அவள் நல்லாயிருக்கான்ற செய்திக்காகவே அமைதி காத்தாள். அவள் நல்லா இருக்கான்னு சொல்லட்டும் அப்றம் ஆக்ஷன்ல இறங்கலாம்' என கோபத்தை அடக்கி உட்கார்ந்திருந்தாள். சுஹாவுக்குமே ஆத்திரம் அடங்க மறுத்தது, "எவன்னு கைல சிக்கட்டும் பாப்பு பிழைச்சாலும் அவன வெளியவே விடக்கூடாதுக்கா" என பொரிந்து தள்ளினாள்.

விஷாகன் இரணியனை பார்ப்பதும், ஐசியு கதவைத் பார்ப்பதுமாக இருந்தான். அவனுக்கு இரணியனை பார்க்கவே பாவமாக இருந்தது. அவனது சிவந்த நிறத்திற்கு முகம் மேலும் ரோஸ் நிறமாக இருந்தது. வந்த நேரத்திலிருந்து பார்க்கிறான் அவன் கண்ணைத் திறந்து யாரையும் பார்த்தானில்லை, முகத்தை மூடியவாறு அமர்ந்திருக்கிறான். ஒரு நர்ஸ் ஆபரேஷன் காண பேப்பருடன் தயக்கமாய் வந்து நிற்க, விஷாகன் இரணியனின் தோளில் மெதுவாக தொட்டான்.

இரணியன் அவன் உலகத்திலேயே இருக்க, விஷா "சார்" என மீண்டும் தோளில் அழுத்தம் கொடுக்க, முகத்தை துடைத்து நிமிர்ந்தான். நர்ஸ் பேப்பரை நீட்ட, "என்னதிது?" என்றான் புருவசுழிப்புடன் இரணியன்.

"ஆப்பரேஷன் ஃபார்ம், உங்க சைன்". அந்தப் பெண் முடிக்கும் முன், "வாட் தி ஹெல்! இன்னும் ஆப்பரேஷன் ஸ்டார்ட் பண்ணவே இல்லயா? இவ்வளவு நேரம் என்ன பண்ணீங்க. இப்ப பேப்பர் தூக்கிட்டு வந்து நிக்கிறீங்க" என கத்திக்கொண்டு அவன் எழ. நர்ஸ் பதறி பேப்பரை விட்டுவிட, விஷா தான் அதை எடுத்தான்.

"சார் ரிலாக்ஸ், ஆபரேஷன் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. ஃபார்மாலிட்டிக்காக எடுத்திட்டு வந்திருக்காங்க" விஷா சொல்ல, முறைத்தவாறே வாங்கி ஹாஸ்பண்ட் என்ற இடத்தில் வேகமாக சைன் இட்டான். அதற்குள் விஷா தண்ணீர் வாங்கி வந்து அவனிடம் நீட்ட, "எந்திக் கட்டும் விஷா அவ" என்று விட்டு அமர்ந்துவிட்டான்.

அடுத்த ஒன் ஹவரில் ஆப்ரேஷன் யூனிட் லைட் அணைய, எடுத்த குண்டை ஒரு கவரில் போட்டு எடுத்துக் கொண்டு ஒரு நர்ஸ் உடன் வெளிவந்தார் டாக்டர். "குண்ட எடுத்தாச்சு, பிளட் லாஸ் ஆயிருக்கு. சோ பிளட் டிரிப்ஸ் போட்டிருக்கோம், கண் முழிக்க சிக்ஸ் ஹவர்ஸ் ஆகும். அதுக்குள்ள ரூமுக்கு ஷிப்ட் பண்ண சொல்லியிருக்கேன். பிளட் ஏறி முடிக்கவும் ஷிப்ட் பண்ணிடுவாங்க, அப்புறம் நீங்க பாக்கலாம். போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா?" என ஸ்பீடாக அவர் பேசி முடிக்க, வேதி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, "நா கேஸ் பைல் பண்ணிடுறேன் டாக்டர். நீங்க ரிப்போர்ட் ரெடி பண்ணுங்க" என்றாள்.

இரணியன் மட்டும், "அவள டிஸ்டர்ப் பண்ணாம டூ மினிட்ஸ் பாத்துட்டு வந்துடுறேன் டாக்டர்" என்றவன் அவர் அனுமதி தருமுன் சென்றுவிட, "ப்ளீஸ் அவங்களுக்கு இன்பெக்சன் ஆகும். யாரையும் எங்களால அலோவ் பண்ண முடியாது" என டாக்டர் இவர்களிடம் சொல்ல.

"அவர் மட்டும் பாத்துட்டு வந்துடட்டும், நாங்க யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டோம்" என வேதி சொல்ல, அதற்குமேல் அவரால் வற்புறுத்த முடியாமல் நர்சிடம் சொல்லிவிட்டு சென்றார்.

ஹாஸ்பிடல் உடையில் தோளில் கட்டுடன் படுத்திருந்தாள் பாப்பு, தூங்குவது போல் தான் படுத்திருந்தாள். மெதுவாக நெருங்கி அவள் அருகில் நின்றவன் "சாரிமா, இட்ஸ் மை மிஸ்டேக். அவள ஃபர்ஸ்ட் நா வந்து பாத்துருக்கணும். பவ்யா வந்துட்டான்னு தெரிஞ்சும், போய் பாத்துலாம்னு அசால்டா இருந்தது தப்பு, வெரி சாரிமா" என அவள் அடிபடாத கை விரல்களை தன் கையோடு கோர்த்து கொண்டு அவளுடன் பேசிக் கொண்டிருந்தான்.

நர்ஸ் வந்து அவளது தாலி சங்கிலியை கொடுத்துவிட்டு, "சீக்கிரம் வெளிய போங்க சார். டாக்டர் வந்தா என்னத்தான் திட்டு வாங்க ப்ளீஸ்" என்று விட்டு ஓடியே விட்டார். அந்த தாலிக்கொடியை எடுத்து மெதுவாக அவள் தலையை தூக்கி கொண்டு போட்டுவிட்டான். நெற்றியில் அழுத்தமான முத்தம் ஒன்றை கொடுத்து, "சீக்கிரம் கண் முழிச்சுடுமா ப்ளீஸ். ஐ காண்ட் காண்ட்ரோல் மை செல்ப்" என்று விட்டு மறுபடியும் பொங்கிய கண்ணீரை அடக்கிக்கொண்டு வெளியேறினான்.

பாப்பு அம்மா அழுது கரைய, மெய்யப்பன் இடிந்து தான் அமர்ந்திருந்தார். துருதுருவென இருக்கும் ஆசை மகளை இப்படி அவர் ஒருநாளும் பார்த்ததில்லை. 'தன் வீட்டிலேயே தன்னுடன் வைத்திருக்க வேண்டுமோ? அந்த வீட்டிற்கு அனுப்பியதே தவறு' என ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தார். ரூமிற்கு மாற்றிய 4 மணி நேரத்தில் மெதுவாக கண் விழித்தாள், உடனே டாக்டருக்கு சொல்லப்பட வந்து அவளை செக் செய்தவர், "ஹொவ் ஆர் யூ மிஸஸ்.இரணியன்?" என்க.

"ஃபீலிங் பெட்டர் டாக்டர்" என மெதுவாகனாலும் சிரிக்க முயன்று சொல்ல. "வெல், குட் ரெஸ்பான்ஸ். இவ்வளவு நேரமும் பெய்ன் தெரிஞ்சிருக்காது இனிதான் தெரிய ஆரம்பிக்கும். சோ ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்க வேண்டாம், ஓகே?" என்க.

"ஓகே டாக்டர். ஒரு சின்ன ஹெல்ப்". "சொல்லுங்க" என்க, "எங்க அம்மாவ மட்டும் இந்த ரூம்குள்ள விடக் கூடாது", "ஏன்?" என்றார் குழப்பத்துடன், ஏற்கனவே கொலை கேஸ் என்றிருக்க, 'இந்த பெண்ணின் அம்மாவே அதுக்கு காரணமோ?' என அவர் கற்பனை ஓட, "வந்து, ஏதோ நானே வான்டெட்டா போய் குண்டு வாங்கிகிட்டு வந்து படுத்துட்ட மாதிரி திட்டுவாங்க, கொட்டுவாங்க. அப்புறம் நீங்க மண்டைலையும் கட்டு போட வேண்டியிருக்கும்" என்றாள் பாப்பு. சிரித்துவிட்ட டாக்டர், "நாட்டி கேர்ள். போலீஸ் ஸ்டேட்மெண்ட் கொடுக்கணும் ரெடியாகிக்கோங்க" என்று விட்டு வெளியேறினார்.

அவ்வளவு நேரமும் இரணியன் அவளை மட்டுமேதான் நினைத்திருந்தான். வேறெங்கும் அவன் நினைவுகள் நகரமாட்டேன் என்று அடம் பிடித்தது.
டாக்டர் வெளியே வரவும், வேதி தான், "எப்படி இருக்கா டாக்டர்?" என்றாள். "நல்லா இருக்காங்க. ஆனாலும் புண் ஆற மேக்ஸிமம் 3 மந்த்ஸ் ஆகும். கொடுத்திருக்க மருந்த பாலோவ் பண்ணிக்கோங்க. நல்ல ரெஸ்ட் தேவை அவ்வளவுதான்". "தேங்க்ஸ் டாக்டர்". "நா சாதாரணமா 1 வீக் வச்சு தான் டிஸ்சார்ஜ் பண்ணுவேன். பட் உங்க கேஸ்ல ஹாஸ்பிடல்ல கிரௌட் இருந்துட்டே இருக்கது அவ்வளவு சேப் கிடையாது மத்த பேஷன்ட்ஸக்கு, சோ".

"நாங்க வீட்ல பிரைவேட் நர்ஸ் வச்சு பாத்துக்குறோம் டாக்டர்" என்றான் விஷா. "குட், நானே எங்க ஹாஸ்பிடல் நர்ஸ் அப்பாய்ண்ட் பண்றேன், உங்க அட்ரஸ் சொல்லுங்க, அதுக்கு நியர்-பை ஏரியால உள்ள நர்ஸ்னா அவங்களுக்கும் ஈசி" என்று விட. "நுங்கம்பாக்கம் டாக்டர்" என்றான் இரணியன் எல்லோரின் பார்வையும் தாங்கி. 'எங்கு பெசன்ட் நகர் தான் கூட்டிச் செல்வேன்' என அடம் பிடிப்பான் என பயந்துதான் ௭ல்லாரும் அவனை பார்த்தனர்.

"இங்க பாத்துக்க இத்தன பேர் இருக்கைல அவளை தனியா கூட்டிட்டு போய் என்ன செய்யப்போறேன்" என்று அவன் கதவைத் திறந்து உள்ளே போக, மற்றவர்கள் தேங்கி நின்றனர் ஒரு பத்து நிமிடம் கழித்தே செல்லலாமென.

வாசலையே தான் பார்த்திருந்தாள் பாப்பு. இவன் நுழையவும் மெலிதாக சிரித்தவள், "நீங்க தான் மொத வருவீங்கன்னு நினைச்சேன்" என்றாள் மெதுவாக. அதை அவன் உணரவேயில்லை, அவனுக்கு கேட்கவுமில்லை. அவள் கையை பார்த்தவாறு நெருங்கியவன், மெதுவாக அவள் முகத்தை பார்க்க, கண்ணால் அழைத்தாள். அவன் அப்போதும் அப்படியே நிற்க, வலது கையை மெதுவாக தூக்கி வாவென அழைக்க, வேகமாக சென்று கட்டிலில் அவள் அருகில் அமர்ந்து குனிந்து அவள் அடிபடாத வலது தோளில் முகம் புதைத்துக்கொண்டான், அவளை அழுத்தாமல். அவன் தலையைத் தாங்கிக் கொண்டாள் பாப்பு.

"ஐ ஆம் சோ ஸ்கேர்ட் தாட்சா, ஆம் சோ ஸ்கேர்ட்" என்றான் முணங்களாக. "அப்டில்லாம் அவ்வளவு சீக்கிரம் உங்கள நிம்மதியா விட்டுறுவேனா என்ன?" என்றாள் அவளும். இப்பொழுது அவள் ரகசியமாக சொன்னாலும் அவனுக்கு கேட்டது. மெதுவாக எழுந்தவன், "வலிக்குதா?" என்க. "ம்" என்றாள் தலையசைத்து. "நா கைய கேட்டேன்". "நானும் கையை தான் சொன்னேன்" ௭ன அவள் சொல்லி கொண்டிருக்க. எல்லோரும் உள்நுழைந்தனர்.

வடிவு வேகமாய் வந்தவர், "எத்தன தடவ அடங்கியிரு, எவன்ட்டயும் வம்புக்கு போகாத. இப்டி அடி வாங்கிட்டு வர வேண்டியிருக்கும்ன்னு சொல்லிருப்பேன், கேட்டியாடி நீ? எப்ப சொன்னாலும் எதித்து எதித்து பேசுறது, இப்ப வந்த குண்ட கேட்சா பிடிக்க முடிஞ்சது உன்னால. என் வயித்துல வந்து பொறந்திருக்கியே என் உசுர வாங்குறதுக்குன்னு" என திட்டியவாறு அழ.

"உன்ன உள்ள விட வேண்டாம்னு சொன்னேனே எப்டி விட்டாங்க.
என்னைய திட்டிட்டு நீ அழற லூசாம்மா நீ?" என்றாள் பாப்பு. வலியில் முகம் சுளித்தாலும் பேச்சு நன்றாகவே வந்தது. "இப்டி எதுத்து எதுத்து பேசி தான் இப்ப இங்க வந்து படுத்துருக்க". அதன் பிறகு ஆளாளுக்கு நலம் விசாரித்து, இறுதியாக "ஆக்சுவலா நடந்தது என்ன?" என வந்து நின்றனர்.

வேதிகா இரணியனிடம், "நீங்க சொல்லுங்க? இவ்வளவு நேரம் பாப்பு கண்ணு விழிக்கட்டும்ன்னு தான் வெயிட் பண்ணோம் என்னாச்சு? ௭ன்ன நடந்தது?” அவன் அப்பாவும் அங்குதான் நின்றார். அவரை ஒருமுறை திரும்பிப் பார்த்தவன், "யார் இப்டி பண்ணதுன்னு தெரியல? நீங்க விசாரிங்க. வீட்டுக்குள்ள வெளியாள் வர வாய்ப்பில்லை, செக்யூரிட்டி டைட்டா இருக்கும் ௭ப்பவும். திடீர்னு நடந்ததால என்னாச்சுன்னு ரியலைஸ் பண்ண முடியல" என்கவும், பாப்புவிடம் திரும்பியவள், "நீ பாத்தியா பாப்பு?" என கேட்க, "பாத்த மாதிரியும் இருக்கு, பாக்காத மாதிரியும் இருக்கு" என்றாள் இரணியனை பார்த்து சிரித்தவாறு.

"நீயே கேஸ மூவ் பண்ணும்மா. மாப்பிள வீட்டுக்கு போய் விசாரிச்சன்னா உனக்கு க்ளூ கிடைக்கும்" என்றார் மெய்யப்பன். "ம்" ௭ன யோசனையாக இழுத்தவளும் "டேக் கேர் பாப்பு" என வெளியேறினாள்.

விஷாகன் மெதுவாக, "சார் வெளிய கிரவுட் ஜாஸ்தி ஆயிடுச்சு, மீடியாவும் வெயிட் பண்றாங்க, கொஞ்சம் வந்து பேசிட்டீங்கன்னா கிரவுட் கிளியராகும்" ௭ன்க. "ஓகே" என்றவாறு பாப்புவிடம் கண்ணசைத்து வெளியேறினான்.

விஷா, இரணியன் வெளியேறவும் அவன் தந்தையும் வெளியேறிவிட்டார். வடிவு, சுஹாசினி, மெய்யப்பன் மூவர் மட்டும் மீதமிருக்க, "நீ ஏன் ஹாஸ்பிட்டல்லயே இருக்க வீட்டுக்கு போக வேண்டியது தானே" என்றார் வடிவு சுஹாவிடம்.

"வெள்ள பாட்சா, உள்ளுக்குள்ள ஒரே குதூகலமா இருக்குமே? குத்தாட்டம்லா போடணும் போல இருக்குமே? பட் சேட், உன்னால இப்ப ஆட முடியாது" என்றாள் பாப்பு நக்கலாக. "உன்னல்லாம் கையில சுட்டதுக்கு பதிலா வாயில சுட்டுருக்கணும்டி. நா வீட்டுக்கு கிளம்புறேம்மா" சுஹா செல்ல, "அம்மாவையும் துணைக்கு கூட்டிட்டு போ, ௭னக்கு ச்சீ உனக்கு உதவியா இருக்கும்" என்றதற்கு வடிவு நறுக்கென கொட்ட, "சும்மாயிரு வடிவு விளையாட்டா பேசுற பிள்ளைய போட்டு அடிக்க" மெய்யப்பன் திட்ட. "நீங்க சுஹாவ அவ வீட்டுக்காரரோட அனுப்பி வச்சுட்டு வாங்க, நா இங்க இவள பாத்துக்குறேன்" ௭ன வடிவு பாப்புவை முறைத்தவாறு சொல்ல. "இல்லம்மா விஷா இப்ப என் கூட வருவார்ன்னு தோணல. சோ நா அப்பாவோடயே வீட்டுக்கு கிளம்புறேன். அவர் இங்கேயே இருக்கட்டும்" என இருவரும் வெளியேறிவிட்டனர்.

எல்லோரும் வெளியேறவும் பாப்பு கண்ணை இறுக்க மூடிக்கொண்டாள் அம்மாவின் சொற்பொழிவில் இருந்து தப்பிக்க.

இரணியன் வெளியேறி மீடியாவையும், மக்களையும் பார்த்து, "மை வைஃப் இஸ் பிலிங் பெட்டர் நவ், தேங்க்யூ சோ மச் ஃபார் யுவர் பிரேயர்" என்றும், மீடியாவின் கேள்விகளுக்கு, "கேஸ் பைல் பண்ணியாச்சு போலீஸ் டிபார்ட்மென்ட் வில் டேக் கேர் ஆஃப் இட்" எனவும் முடித்து அவர்களை கலைத்து விட்டான்.

அதன்பின் விஷாகன் மெதுவாக இரணியனிடம், "பவ்யா தான் பண்ணான்னு சொல்லி இருக்கலாமே சார்" என்க. 'உனக்கு எப்படி தெரியும்' என்ற பார்வை பார்த்தான் இரணியன். "ஜான் போன் பண்ணி சொன்னான் சார்" விஷா சொல்ல, அதற்கு இரணியன் "போலீசே அத வெளி கொண்டு வரட்டும்" என அமைதியாக பாப்பு அறையினுள் சென்று விட்டான்.

வேதி நேராக சென்றது இரணியன் வீட்டிற்கு, எல்லோரிடமும் விசாரித்ததில் தெரியாது என்றே சொன்னர். இருவரும் எங்கு நின்றனர், புல்லட் எங்கிருந்து வந்தது என்றதற்கு எல்லோரும் பார்க்கவில்லை என்று ஒரே மாதிரி கூறினர். சப்தம் கேட்டு வந்ததாகவே சொன்னர். வாசலில் இருந்த சிசிடிவி செக் செய்ய, அந்த டைம் மட்டும் டெலிட் செய்யப்பட்டிருக்க, அதற்கு முந்தைய ஒன் வீக் ரெக்காடும் செக் செய்து விட்டாள். புதிதாக வீட்டினுள் யாரும் வந்து செல்லவில்லை, பவ்யாவை தவிர. அடுத்ததாக வீடு முழுவதும் சோதனை செய்யப்பட்டது. கார்டனில் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டது, அது பாரன்சிக் டிபார்ட்மெண்ட்க்கு கைரேகை சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியாக தெய்வநாயகம், தில்லைவாணி, பவ்யா மூவரிடமும் விசாரிக்க வந்தாள். தெய்வநாயகம் தானும் சத்தம் கேட்டு வந்ததாகவே சொல்லிவிட, அவர் ஹாஸ்பிடலில் வைத்து வேறு விதமாக சொன்னதால் நம்பா பார்வை பார்த்தவள், அடுத்ததாக தில்லைவாணி, பவ்யா இருவரிடமும், "நீங்க ஏன் மிஸஸ்.இரணியனை பார்க்க ஹாஸ்பிடல் வரல?" என்றாள் எக்ஸ்ட்ரா கேள்வியாக.

"எங்களுக்கு அவள பிடிக்காது, அதனால அவளை வந்து பாக்கணும்னு தோணல" ௭ன்றனர் இருவரும். "உங்களுக்கு அவள பிடிக்காதுன்னா அவங்க உங்க வீட்டு மருமகளாக இன்னைக்கு இந்த வீட்டுக்கு வர்றதும் பிடிக்காம நீங்களே ஏன் ஆள் வச்சு அவங்கள சுட்டுருக்கக் கூடாது?" என்ற வேதியின் கேள்விக்கு இருவரும் திருதிருவென முழித்தனர்.
 
அத்தியாயம் 33
வேதியின் கேள்விக்கு இருவரும் முழிக்க, "என்ன இப்படி முழிக்கிறீங்க? ஆன்சர் மை கொஸ்டின்" என அதட்டலாக வேதி கேக்க. "இவளுக்கு எதுக்கு நா பயப்படனும்" என தாயிடம் எகிறிய பவ்யா, "ஆள் வச்சுலா செய்யல, ௭னக்கு அதுக்கு அவசியமு இல்ல. நா தான் உன் தங்கச்சிய சுட்டேன். ஆதாரம் இருந்தா அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போ. நா ஒரு விஐபி வீட்டு பொண்ணு, கம்ப்ளைண்ட் இல்லாம சந்தேக அடிப்படையில கூட்டிட்டு போக முடியாதுன்ற பேஸிக் சென்ஸ்னாலும் உனக்கு இருக்கும்னு நினைக்கிறேன். இப்ப மட்டுமில்ல இனியும் அவள நிம்மதியா இருக்க விட மாட்டேன். அவள மட்டும் இல்ல, என் புருஷன மயக்கி பிள்ள பெத்துக்க போறாளே உன் மொத தங்கச்சி அவளயும் இவள மாதிரி ஹாஸ்பிடல் பெட்ல படுக்க வைக்கிறனா இல்லயா பாரு" என கெத்தாக சொல்லி முடிக்கும்முன் அவள் வாய் கிழிந்து ரத்தம் சொட்ட, வேதி விட்டாள் ஒரு அறை.

"என்கிட்டயே அவ்வளவு தைரியமா சொல்ற நீ" என பவ்யாவின் மறு கன்னத்திலும் அறைய, அந்நேரம் வேதியுடன் வந்த கான்ஸ்டபிள் அவளிடம் வேகமாக வந்து, "யாரோ ஒருத்தன் நாதான் இரணியன் சார் வைஃப்ப சுட்டேன்னு எ5 போலீஸ் ஸ்டேஷன்ல அப்ரூவ் ஆகியிருக்கானாம்" மெதுவாக சொல்ல, வேதி பவ்யாவை முறைக்க, அதற்கு பவ்யா "என்ன அவ்வளவு ஈசியா நினைச்சுட்டீங்கள்ல" என கேலியாக சிரித்தவள் தனதறை சென்று மறைந்தாள்.

அவள் அம்மா கையை பிசைந்தவாறு முழித்து நிற்க, அவள் அப்பாவும் ஒன்றுமே செய்யமுடியாமல் தொய்ந்து போய் அமர்ந்து விட, வேதி கடுப்புடன் வெளியேறினாள். ஸ்டேஷன் சென்று சரண்டரானவனை ஆத்திரம் தீர மிதி மிதி என மிதித்து பின்பே, "என்ன காரணத்துக்காக சுட்ட? எப்டி வீட்டுக்குள்ள போன? எப்டி போன? எதுக்கு போன?" என வரிசையாக கேட்டாள்.

"ஒருநாள் ரோட்டுல வச்சு அந்த பொண்ணுட்ட வம்பிழுத்தேன், என்ன அடிச்சுட்டாங்க எனக்கு அவமானமா போச்சு. அதுக்கு பழிவாங்க தான் சுட்டேன். காம்பௌண்ட் ஏறி குதிச்சு உள்ளே போனேன். வாசல ஒட்டி பதுங்கி நின்னு சுட்டேன், தப்பிச்சு ஓடையில துப்பாக்கி அங்கேயே விழுந்துருச்சு, காம்பௌண்ட் ஏறி குதிச்சு தான் வந்தேன். ஒரு வேகத்துல செஞ்சாலும் அப்புறம் எப்படியும் நீங்க கண்டுபிடிச்சுடுவீங்கன்னு தோணுச்சு அதான் நானே வந்து சரணடைச்சுட்டேன்" அவன் உண்மையாக நடந்தது போலவே கோர்வையாக சொல்ல.

"அவ்வளவு செக்யூரிட்டி, அவங்க வளக்குற நாய்னு, இப்டி எல்லார் கண்ணுலயும் மண்ண தூவிட்டு நீ உள்ள போயிட்ட?" என்றாள் இகழ்ச்சியாக, இப்படி பொய் சொல்கிறானே என்ற ஆத்திரம் அடங்காமல் அவனை லத்தி உடையும் வரை அடித்தாள்.

"ஆமா, நாய் கட்டி தான் கடந்துச்சு" அவன் அசராமல் சொன்னதையே சொல்லி கொண்டிருந்தான். "சரி சிசிடிவி எப்டி டெலிட் பண்ண?" என்றாள் அவனை எப்படியும் சிக்க வைக்கும் நோக்குடன். "அது எனக்கு தெரியாது மேடம்", "ஏன்டா தெரியாது? இதுக்கு பதில் சொல்லித் தரலையா அவங்க" என ஓங்கி ஒரு மிதி மிதித்தாள்.

இதிலிருந்து அவள் புரிந்து கொண்டது, 'பவ்யா இத ஆத்திரத்தில புத்திகெட்டு செய்யல, முன்னையே எல்லாத்தையும் ப்ளான் பண்ணிதான் பண்ணியிருக்கா, துப்பாக்கி சப்ளையர் முதற்கொண்டு கண்டுபிடித்தாகிவிட்டது, ஆனால் அவள் பெயர் வெளிவரவில்லை, எவ்வளவு முயன்றும் சிக்கினவர்கள் வாயிலிருந்து அவள் பெயரைக் கொண்டு வரமுடியவில்லை, இவ்வாறு அவள் யோசித்துக் கொண்டிருக்க. வெகுநேரமாக அலறிக் கொண்டிருந்த மொபைல் தொந்தரவு தாங்காமல் எடுத்துப் பார்த்தாள், அவள் தந்தை எண்ணில் இருந்து தான் அழைப்பு வந்து கொண்டிருந்தது.

பாப்பு விஷயத்தை விசாரிக்க தான் அழைப்பார் என நினைத்தவள், "விசாரிச்சுட்டு தான் இருக்கேன்ப்பா" அவள் எடுத்ததும் ஆரம்பிக்க, "ம்மா நா வீட்டுக்கு போற வழில ஒரு சின்ன ஆக்சிடெண்ட், சுஹா மயங்கிட்டா, நா ஹாஸ்பிடல் தான் போயிட்டுருக்கேன் நீ முன்னப் போய் கொஞ்சம் சமாதானம் சொல்லி வைம்மா உன் அம்மாட்ட" என்க.

வேதி அவ்வளவு தைரியமானவளே ஒரு நிமிஷம் ஆட்டம் கண்டு விட்டாள். 'இந்த பவ்யா இவ்வளவு பெரிய கிரிமினலா சொன்னதை செய்கிறாளே' என யோசித்தாலும் ஹாஸ்பிட்டல் கிளம்பியிருந்தாள் கர்ப்பிணி தங்கைக்கான வேண்டுதலுடன்.

செல்லும் வழியில் போனை எடுத்து விஷாவிற்கு அழைக்க போனவள் மாற்றி இரணியனுக்கு அழைத்தாள். அவன் இவள் காலுக்காக காத்திருந்தானோ என்னவோ உடனே எடுத்தான், "மிஸ்டர்.இரணியன் அப்பாவும், சுஹாவும் ஹாஸ்பிடல் திரும்ப வந்துட்டு இருக்காங்க. என்ன பிரச்சனைன்னு தெரியல சுஹா மயங்கிட்டாளாம். நா அங்க தான் வந்துட்டுருக்கேன், இருந்தாலும் லேட் ஆகும் முன்ன சொல்லலாம்னு தான் கூப்பிட்டேன். கொஞ்சம் அங்க டாக்டர்கிட்ட சொல்லி அலெர்ட் பண்ணுங்க" என்று சொல்லி போனை வைக்க, பெர்க்னன்ட்டா இறுக்கத்தால ஏதோ மயக்கமென எண்ணியவன், விஷாவிடவும் அதையே சொல்ல, "விஷா, உன் வைப்க்கு இவ்வளவு நேரம் ஹாஸ்பிடல்ல இருந்தது ஒத்துக்கலனு நினைக்குறேன், மயங்கிட்டாங்களாம்" என்க.

விஷா சற்று பதட்டமானாலும் தைரியமாகவே இருந்தான். பெருசா ஒன்னும் இருக்காது என நினைத்து டாக்டரிடமும் இன்பார்ம் பண்ண, இவர்கள் வாசலுக்கு செல்ல, மெய்யப்பன் தலையில் ரத்தம் வலிய காரிலிருந்து இறங்கினார், அருகில் சுஹா மயங்கிய நிலையில் இருக்க, தானும் பின் வந்து இறங்கிய வேதியும், "ப்பா" என தான் ஓடி வந்தாள்.

காரை ஓட்டி வந்தவர் கார் கீயை இரணியனை வாயை பிளந்தவாறு நீட்ட, அவன் ஆச்சரியத்தை பொருட்படுத்தாமல் "என்ன நடந்ததுன்னு தெரியுமா?" என விசாரிக்க, "குட்டியானை குறுக்க பூந்துட்டான் சார். டிவைடர்ல போய் கார் மோதிட்டு, அவரு சைடு கண்ணாடியில மோதினதால மண்டை பிளந்துட்டு" வந்தவன் சொல்ல.

மற்ற எல்லோரும் உள் விரைந்தனர். மறுபடியும் ஐ.சி.யூ. மறுபடியும் பதட்டமான சூழ்நிலை, பாப்புவிற்கும், வடிவிற்கும் விஷயம் சொல்லப்படவில்லை. இரணியன், விஷா, வேதி மூவரும் நிற்க, அரவிந்த் அப்போதுதான் பாப்பு விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்தான்.

"நீங்க தான் உங்க சிஸ்டர்க்கு ஹெல்ப் பண்றீங்களான்னு தெரியல? ஆனா அவள நா சும்மா விடமாட்டேன். என் ஃபேமிலி மேலயே கைய வச்சுட்டாள்ள பாத்துக்குறேன்" என்றாள் இரணியனிடம் ஆத்திரமாக.

இரணியன் புருவம் சுளிக்க, விஷாகன், "ஏன் மேடம் பவ்யா என்ன சொன்னா?" என்க. "ரொம்ப தெனாவட்டா பாப்புவ நாந்தான் சுட்டேன், உன் முத தங்கச்சியும் இதே மாதிரி ஹாஸ்பிடல்ல படுக்க வைப்பேன்ன்னு சவால்விட்டா, அத தான் செஞ்சிருக்கா".

"தாராளமா அவள அரெஸ்ட் பண்ணுங்க, நா பெயில் எடுக்க கூட ட்ரை பண்ண மாட்டேன்" இரணியன் நிதானமாகவே சொல்ல, "எல்லாத்துக்கும் ஆல் செட் பண்ணிட்டுத்தான் வேலையே பாத்துருக்கா. நா தான் சுட்டேன்னு ஸ்டேஷன்ல வேற ஒருத்தன் வந்து உட்காந்துருக்கான். இப்போ இதும் தெரியாம நடந்த ஆக்சிடென்ட் மாதிரி பெர்ஃபெக்ட்டா பிளான் பண்ணிருக்கா. நீங்க எல்லாம் உண்மை தெரிஞ்சும் அமைதியா இருக்கீங்க. உங்க பொண்டாட்டி தானே உள்ள குண்டடிபட்டு கடக்குறா? எப்ப அவளுக்கு என்ன அநியாயம் நடந்தாலும் இப்டித்தான் வேடிக்கை பாக்குறீங்க" என்றாள் கொதிப்புடன், சிம்லாவில் நடந்ததையும் கணக்கில் கொண்டு.

"பவ்யாக்கு ஆப்போசிட்டா நா எதுவும் பண்ண முடியாது, பண்ணவும் மாட்டேன். நீங்க ஸ்டெப் எடுத்தாலும் நா சப்போர்ட் பண்ணி அவ பின்ன நிக்க மாட்டேன்" ௭ன்றான் இப்பொழுதும் நிதானமாகவே.

ஆனால் அவனுக்கு உள்ளுக்குள் அவ்வளவு ஆத்திரமாக வந்தது, "நீங்களாது உங்க மொத பொண்டாட்டி மேல கேஸ் கொடுப்பீங்களா? இல்ல..?" அவள் விஷாகனிடம் கேட்க. அவன் திரும்பி இரணியனை தான் பார்த்தான்.

"என்ன யோசிக்காத விஷா உனக்கு தோணுறத செய்" இரணியன் சொல்ல, விஷா வேதியை பார்த்து 'இல்லை' என்பதாக தலையாட்டா, "உங்களலாம் இன்னும் நம்பி பேசுறேன்ல நா ஒரு முட்டாள்" வேதி தலையில் அடித்துக்கொள்ள, ஆர்வி வந்து அவள் கையை அழுத்தி கொடுத்து அமைதி படுத்த முயற்சித்தான்.

"அவ தனியா இவ்வளவையும் செய்ய முடியாது, முன்ன அவளுக்கு ஒருத்தன் டிரக்ஸ் சப்ளை பண்ணான். அவனோட இப்ப எனக்கு தெரிஞ்சு பவ்யா காண்டாக்ட்ல இல்ல. வேற கிரிமினல்ஸ் அவளுக்கு பழகினாலும் அவன் மூலமாத்தான் வந்திருக்கும். லாஸ்ட் 2 இயர்ஸா அவ அதுல இருந்து மொத்தமா விலகியிருந்தா. விலக்கி வச்சுருந்தேன், பட் இப்ப 6 மந்த்ஸ் டிடெக்ட்டிவ் வச்சு ஃபாலோ பண்றேன் தான், ஆனாலும் என்னால அவள கெஸ் பண்ண முடியல, தெரிஞ்ச டீடைல்ஸ் கொடுக்க சொல்றேன்" என்றவன் டிடெக்டிவ் நம்பரை அவளிடம் கொடுத்து விட்டான்.

"இவ்வளவு ஃபாலோ பண்ற நீங்களே அவ மேல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா என்ன?" வேதியின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை.

சுஹாவை செக் செய்த டாக்டர் வந்து, "ஷி இஸ் பைன் நௌவ், பேபிக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல, சேஃப்பா இருக்கு. பட் அவங்க ஹார்ட்பீட் தான் ஹைல இருக்கு, ரொம்ப பயந்துருக்காங்க, நீங்க போய் பாத்து பேசுங்க. ஒன்னும் இல்ல அவங்க ஓகேவா இருக்காங்கன்னு அவங்க மனசு உணரணும், அப்ப தான் ஹார்ட் பீட் நார்மலாகும்" டாக்டர் சொல்லி செல்ல.

மூவருமே விஷா முகத்தை ஏறிட, ஒரு பெரும் தயக்கத்தின் பின் உள்ளே சென்றான். கண்மூடிப் படுத்திருந்தவளின் கண்கள் அலையுறுதலில் இருப்பது நன்றாகவே தெரிந்தது. விழிப்புடன் தான் இருக்கிறாள் ௭ன புரிந்து கொண்டான். அவள் தலையை ஆதரவாக தடவியவன் மேடிட்டிருந்த வயிற்றிலும் மெதுவாக கை வைக்க, அப்பொழுதும் அவள் கண் திறவாமல் இருக்க, மெதுவாக "நீங்க நல்லா இருக்கீங்க சுஹா, எவ்வளவு தைரியமான பொண்ணு நீங்க. இப்டி நீங்களும் பயந்து, குழந்தையையும் பயப்படவைக்குறீங்களே. நீங்க சேஃப்பா இருக்கீங்க, உங்க அப்பாக்கும் ஒண்ணுமில்ல. எப்பேற்பட்ட வக்கீல் இப்டி நடுங்குனீங்கன்னு வெளில தெரிஞ்சா வர்ற 4 கேசும் வராமல்ல போகிடும். இல்லனாலும் உங்க தங்கச்சியே நெறைய கேஸ் புடிச்சு கொண்டாந்து தருவா தான், ௭ன்ன பீஸ் தான் வராது. அதுக்கு தனியா நீங்க அவட்ட வாதாட வேண்டியிருக்கும்" என அவள் மனநிலையை மாற்ற பேசிக் கொண்டிருந்தான்.

இவன் பேசிய பேச்சில் நிதானமானாளோ? இல்லை அவன் குரலுக்கு உள்ளே குழந்தை கொடுக்கும் அசைவிற்காக தன்னை நிதானப்படுத்தினாளோ? தெரியாது, ஹார்ட் பீட் நார்மல் கவுண்டுக்கு வர நர்ஸ் டாக்டரை சென்று அழைத்து வந்தார். "வெரிகுட் மிஸ்டர்.விஷாகன், ஷி இஸ் காம்ப்ளிட்லி சேஃப் நௌவ், டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போலாம்" என்க. "தேங்க்ஸ் டாக்டர்" என திரும்பியவன், அவனையே பார்த்து இருந்த சுஹாசினியிடம் விரைந்தான். அவள் மெதுவாக எழ முயல, தானே கை பிடித்து இறக்கிவிட்டான்.

இருவரும் வெளியே வர, "அப்பாவுக்கு எப்படி இருக்கு விஷாகன்?" என்றாள் மெதுவாக. அவன் பதில் சொல்லும்முன், வேதி வந்து அவளைக் கட்டிக்கொள்ள, "ஐ அம் ஆல்ரைட் க்கா, அப்பா.?" சுஹா கேக்க, "நல்லா இருக்காரு, இப்ப யாரயும் உள்ள அலோவ் பண்ண மாட்டாங்களாம். தலைல ஸ்டிச்சஸ் போட்டுருக்காங்க மயக்கத்துல தான் இருக்காங்க. நீ வீட்ல போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு, நா நிலவரத்த பாத்துட்டு சொல்றேன்" என்க. "அம்மாக்கு சொல்லலயா க்கா?" சுஹா கேக்க.

"அம்மாவுக்கு இன்னும் தெரியாது, அப்பா முழிக்கவும் தான் சொல்லணும், எல்லாத்தையும் சொன்னா பயந்துடுவாங்க அதான் சொல்லல".

"அந்த வண்டி வேணும்னே இடிக்கிற மாதிரி வந்துதான் கிராஸ் ஆச்சுக்கா. என் சைட் இடிக்க வரவும் தான் அப்பா ரைட்ல கட் அடிச்சாங்க, பேலன்ஸ் மிஸ்ஸாச்சு" என குழப்பமாக சுஹா சொல்ல.

"இப்ப நீ இவ்வளவு யோசிக்க வேணாம், கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து யோசி. ஏதும் தோனுச்சுன்னா அப்ப சொல்லு. நானும் இதுக்கெல்லாம் பின்ன யாருயிருக்கான்னு கண்டு பிடிக்கிறேன்" என வேதி சொல்ல.

"சரிக்கா நா வீட்டுக்கு போய்ட்டு போன் பண்றேன்" ௭ன சுஹா சொல்ல, விஷா உடனே சுஹாவை அழைத்துக்கொண்டு வெளியேற, இரணியன் பாப்புவிடம் சொல்லிவிட்டு வீடு சென்று வர முடிவு எடுத்து அவள் இருந்த அறையை நோக்கி சென்றான்.

வேதியும், அரவிந்தும் ஐசியு வெளியவே அமர்ந்திருந்தனர். பவ்யாவை சிக்க வைக்க தீவிர யோசனையில் இறங்கி விட்டிருந்தாள் வேதி.

இரணியன் உள்ளே நுழையவும், வடிவு, "ஒரு வடியா இருக்கு மாப்ள, கொஞ்ச நேரம் இருக்கீங்களா நா போய் ஒரு டீ குடிச்சிட்டு வரேன்" ௭ன்க. "விஷயம் தெரிஞ்சா பாவம் எவ்வளவு சங்கடப்படுவாங்க" என நினைத்தவன் "சரிங்க ஆண்ட்டி" என்றவன் "மதியமும் சாப்டல ஏதாவது சாப்பாடு கூட சாப்ட்டு வாங்க ஆண்ட்டி" என்க. "சரி" என மையமாக தலையசைத்து வெளியேறினார் வடிவு.

'பேசாம வீட்டுக்கு போய் சாப்பிட்டு செஞ்சு எடுத்துட்டு வருவோமா நைட்டுக்கு எல்லாருமே திண்டாடனுமே' ௭ன்ற யோசனையுடன் கணவருக்கு போன் செய்ய, அதுவும் வேதிகா கையிலிருந்து அலறியது. அவளோ அட்டென்ட் செய்யாமல் அப்பா கண் முழிக்க காத்திருந்தாள்.

வடிவு 'ஒருவேளை கார் ஓட்டிட்டு இருப்பாரோ? சரி கொஞ்ச நேரம் கழிச்சு போட்டு பாப்போம்' என தலைவலியைப் போக்க கேன்டீனுக்கு நடையை கட்டினார்.

இரணியன் பாப்புவை இறக்கமாய் பார்த்தான். 'அப்பா, அக்காவிற்கும் பிரச்சனை என தெரிந்தால் என்ன செய்வாள்?' என யோசித்துக் கொண்டு அவள் முகத்தையே பார்க்க.

பாப்பு ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்க்க, ஒரு நொடி திக்கென்று தான் இருந்தது இரணியனுக்கு. தூங்குகிறாள் என நினைத்து அவன் அமைதியாக நிற்க, ஒரு கண்ணை திறந்து பார்த்தால் அவன் திடுக்கிடாமல் என்ன செய்வான்.

"என்ன தாட்சா விளையாட்டு இது, நீ தூங்குறன்னு நினைச்சேன்" என ஆசுவாசமாக அவள் அருகில் அமர, "என்ன தூக்குங்க" என வலது கையை நன்றாக நீட்டியும், இடது கையை லேசாக நீட்டியும் கேட்க. சிறுபிள்ளை போல் அவள் கைநீட்டி தூக்க சொல்லியதால், சிறு பிள்ளையை தூக்கி அமர்த்து போலவே குறும்பு சிரிப்புடன் அவளை தூக்கி அமர்த்தினான்.

லேசாக நெளிந்தவள், "பேட் டச் பண்றீங்க அடி" என மிரட்ட, "அடிப்பாவி சும்மா நின்னவன தூக்க சொல்லிட்டு இப்டி அபாண்டமா பழி போடுற?", "யாரு நானா?", "பின்ன நானா?” "முழிச்சுருந்தா உங்க மாமியார் ஃபிரீ அட்வைஸா பண்ணுவாங்களேன்னு தூங்குற மாதிரி படுத்திருந்தது கை, கால்லாம் விரைப்பா இருந்தது அதான் தூக்கி விட சொன்னேன்". "அத தான நானும் செஞ்சேன்" என்றான் அவனும் சிரித்து. "நாட்டி பாய், இவ்வளவு நேரம் எங்க போனீங்க?" என்க.

அவன் பிரஸிடம் பேசியதை சொல்ல, "என் ஃபோட்டோ எதுவும் நியூஸ்ல காட்டினாங்களா?" என்றாள் சீரியஸாக. அவன் முறைக்க, "நம்ம ரிசப்ஷன்ல நின்ன ௭ன் போட்டோ தான போட்டுருப்பாங்க இல்ல? அதான் ரீசண்டா எடுத்தது" என அவளே யூகமாய் பதிலும் சொல்லிக்கொள்ள, அவன் தலையில் அடித்துக்கொண்டான்.

பின் அமைதியாக அவள் கையை பிடித்துக்கொண்டு, "நா பவ்யாவ காட்டிக் கொடுக்கல அதுக்கு நிறைய ரீசன்ஸ் இருக்கு, பட் நீ ஏன் உன் அக்கா கேட்டப்ப சொல்லல?" ௭ன்றான், "நீங்களே சொல்லாதப்ப நா காட்டிக் கொடுத்தா உங்களுக்கு கஷ்டமா இருக்கும்னு தான் சொல்ல" என அவள் ஈசியாக சொல்ல.

"நீதி, நேர்மைன்னு கொடிபிடிக்குறவ இதெல்லாம் எனக்காக செஞ்சேன்னு சொன்னா நா நம்பிக்கைவா?" என்றான் அவளை முறைத்து. "அதெல்லாம் மத்தவங்க என்கிட்ட பாலோவ் பண்றதுக்காக சொல்வேன், நா பாலோவ் பண்றதுக்காக இல்ல" என்க.

"நான் சீரியஸா கேட்டுட்டுருக்கேன் தாட்சா, நீ விளையாடிட்டு இருக்க. இப்ப ஒழுங்கா சொல்றியா? இல்லையா?" என்றான் அதட்டலாக. "ஓ காட்! சார்ம் நீங்க என்ன ரீசனுக்காக அவள காட்டிக்கொடுக்கலயோ அதே ரீசனுக்காக தான் நானு சொல்லல ஓகே. ஹேப்பி" என்க.

"என்ன சேம் ரீசன்? என் ரீசன போட்டு வாங்க ட்ரை பண்றியா? நீ ஃபஸ்ட் சொன்னனா அப்புறம் நானே சொல்றேன்" இரணியன் சொல்ல.

"என்ன பெரிய ரீசன் இத போட்டு வேற வாங்குறாங்க. பவ்யாவோட அம்மா, அப்பாவுக்காக பண்ணிருப்பீங்க, அவங்க உங்க உண்மையான பேரெண்ட்ஸ் கிடையாது. ரொம்ப வருஷமா குழந்த இல்லன்னு உங்கள தத்தெடுத்து வளத்தாங்க, நீங்க வந்த நேரம் அவங்களுக்கு பவ்யா கிடைச்சா, ஆனாலும் அவங்க இதுவர உங்கள படிக்க வச்சு பாதுகாத்ததுக்கு நன்றியா அவங்க பொண்ண இப்ப காப்பாத்திட்டீங்க. என் சார்ம்காக நானும் அவ நேம் சொல்லல தட்ஸ் இட்" என்றாள் அவன் கண்ணம் கிள்ளி.

ஆச்சரியமாக அவளைப் பார்த்தவன், "உனக்கு எப்டி இதெல்லாம் தெரியும்" ௭ன்றான் புருவம் உயர்த்தி, "விஷா சொன்னான். சிம்லால வச்சு, உங்கட்டலவ் ப்ரொப்போஸ் பண்ண ட்ரை பண்ணி சொதப்புனேனே. அப்போ நீ பாஸ லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்ட, அதனால அவர பத்தி எனக்குத் தெரிஞ்சத நீயும் தெரிஞ்சுக்கோன்னு சொல்லி சொன்னான், ப்ளேடு மட்டும் போட்றாதன்னு சொல்லி கேட்டுகிட்டேன்" ௭ந்தவித அலட்டலும் இல்லாமல் பாப்பு சொல்ல.

"எல்லாமே சொன்னானா?" என்று முகத்தை அசுசயாக சுழித்து இரணியன். "எல்லாமே சொல்லிட்டான்" என்றாள் அவளும் ஓவல் சைஸ்ஸில் தன் மண்டையை உருட்டி.

சிறிது நேரம் அமைதியாக அவன் தரையை பார்த்தே அமர்ந்திருக்க, அவன் முகத்தை நிமிர்த்தி தன்னை காண வைத்தவள், "எதுக்கு இப்ப இவ்வளவு பீலிங்?" என்க. "எல்லாமே சொல்லிட்டானா?" ௭ன்றான் மறுபடியும் இரணியன்,.

"ஆமாப்பா, எனக்கு தெரிஞ்சதுனால என்ன இப்போ?" "என்ன நீ கேவலமா நினைச்சுருப்பேல்ல?" "எதுக்கு?" இரணியன் முதல் முறையாக திணறிப் பார்க்கிறாள்.

"என்னப்பா?" என அவன் நாடி பிடித்து கேட்க. கால் நீட்டி அமர்ந்திருந்தவள் மடியில் குப்புற படுத்து அவள் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான். அவன் முதுகை நீவி விட்டு அவனை ஆசுவாசப்படுத்தியவள், "ஒன்னும் இல்ல சார்ம் ஈஸி" ௭ன்க, "அவன் என்ன சொன்னான்?" முகத்தை வைத்தது வைத்த மாதிரியே நிமிராமல் கேட்க.

ஒரு பெரு மூச்சுடன் "நீங்க ஸ்கூல் ஹாஸ்டல்ல படிக்கும்போது உங்க அழகுல மயங்கி லேடி இன்ச்சார்ஜ் உங்கள ரேப் பண்ண பாத்துச்சுன்னு சொன்னான்" அவனை இலகுவாக்க அவள் அந்த சம்பவத்தை கேலியாக கூற, அவன் வயிற்றில் புக முயல்பவன் போல் முகத்தை மூடி அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டான். பயத்தில் சிறு குழந்தை தாயை அண்டுவது போல் அவளை இறுக்கிக் கொண்டிருந்தான்.

'அவளுக்கு இப்போது இதை ஆரம்பித்து இருக்க வேண்டாமோ?' என்று தோன்ற, "எப்பவோ நடந்தத இப்ப எதுக்கு பேசிக்கிட்டு, ஃபிரீயா விடுங்க. உங்கள இப்டி பாக்கவே வித்தியாசமாக இருக்கு. எனக்கு தெரியும்ன்றது தான் உங்க பிராப்ளம்னா, நா இத பத்தி உங்ககிட்ட பேசவே மாட்டேன். எங்கேயோ ஆரம்பிச்சு விஷயம் எங்கேயோ போயிட்டுருக்கு. எனக்கு தெரியும்ன்றது என்னைக்குனாலும் உங்களுக்கு தெரியதானே வேணும் அதான் சொல்லிட்டேன். எழுந்திரிங்க என்னதிது சின்னபுள்ள மாதிரி" என்றபின் இரு நொடி இறுகிய அணைப்பில் தன்னை ஆசுவாசப் படுத்தி விட்டு நிமிர்ந்தான்.

"எங்கேயோ ஆரம்பிச்சது எங்கேயோ வந்துருச்சுல்ல. சரி ஆரம்பிச்சத பேசி முடிச்சிரலாம், அது பணக்கார பசங்க படிக்கிற ஸ்கூல் தான். அதுலல்லாம் எனக்கு ஒரு குறையும் இல்ல. இவங்க என் ரியல் பேரெண்ட்ஸ் இல்லனு தெரிஞ்சப்புறம் தான் ஹாஸ்டல் போக முடிவெடுத்தேன். ௭ப்பயும் தனியாவே தான் இருப்பேன், அந்த லேடி ஆறுதல் சொல்ற மாதிரி தான் என்ன தொட்டு தொட்டு பேசும். பர்ஸ்ட் வித்தியாசம் தெரியல, அப்புறம் தெரிய ஆரம்பிச்சது. பேசுறது சிலது, அது என்ன சொல்லுதுன்னு கூடப் புரியாது. 18 வயசு பையன்னா எல்லாம் புரிஞ்சுருக்கணுமோ என்னவோ, ப்ரெண்ட்ஸ் நிறைய இருந்திருந்தா மே பி எனக்கு சில செக்ஸுவலி ரிலேட்டட் திங்ஸ் தெரிஞ்சுருக்கலாம். ௭னக்கு தெரியல. அதனால அத சொல்லிக் கொடுக்க முடிவு எடுத்த மாதிரி ஒரு நாள் நியூடா என் முன்னால வந்து நின்றுச்சு எனக்கு உடம்பெல்லாம் நடுங்கி, வாமிட் வந்து அத தள்ளிவிட்டு ஓடிவந்தேன், அப்பதான் விஷா பேரெண்ட் கார்ல மோதி ஆக்சிடென்ட் நடந்தது. அப்ப அவனோட பேரெண்ட்ஸ் டெத்துக்கு என் தரப்பு நியாயத்த விளக்கணும்னு அவன்ட்ட எல்லாமே சொன்னேன், பொண்ணுங்கனாலே ஒரு அலர்ஜி மாறி ஆனதுக்கு அதும் ஒரு ரீஸன்".

"அந்த லூசு என்கிட்ட சொல்லிடுச்சு", "உனக்கு ஒரு மாதிரியா இல்லயா?” "எனக்கு எதுக்கு ஒரு மாதிரியா இருக்கணும். நீங்க ஹேண்ட்சம் பெர்சன் சார்ம். ஜென்ட்ஸே உங்களப் பார்த்து பொறாம படுவாங்க. எத்தன பொண்ணுங்க உங்க மேல கிறுக்கா சுத்துறாங்க, அப்டி ஒரு பொக்கிஷம் எனக்கு கிடைச்சிருக்கு அதுக்கு நா பிரவ்டா ஃபீல் பண்ணனும்" ௭ன்றாள் ஆசையாக.

"போடி லூசு" என அந்த ஆணழகனையே வெட்கப்பட வைத்துவிட்டாள். "அழகா வெக்கப் படுறீங்க. சோ ஸ்வீட் சார்ம். பவ்யாவ என்ன பண்ண போறீங்க?" என்றாள் பேச்சை மாற்றி.

"ஏதாவது பண்ணனும், இன்னொரு விஷயமு நடந்திருச்சும்மா" என அவள் அப்பாவிற்கும், சுஹாவிற்கும் நடந்ததை சொல்ல, "அப்பா ௭ப்டி இருக்காரு இப்போ? இப்பவும் அவள கம்பளைண்ட் பண்ண மனசு வரலியா" என சுஹா பற்றி தெரிந்ததாள், அப்பாவை பற்றி விசாரித்து, உள்ளடக்கிய கோபத்துடன் கேக்க.

"அரெஸ்ட் பண்ண தேவயான ஆதாரங்கள கொடுத்துட்டேன். அவ அவுட் ஆப் கண்ட்ரோல் போயிட்டா, ஹெல்த் ஸ்பாயில் பண்ணிருப்பா, மெண்டல் இல்னஸ் கூட இருக்கும், அதுதான் இவ்வளவு விஷயம் பண்ணிருக்கா" ௭ன்றான் சீரியஸாக.

"சீக்கிரம் சாக போறவ, அதனால சுதந்திரமா இருக்கட்டும்ன்னு சொல்றீங்களா?" என பாப்பு கேட்க. பெருமூச்சுடன் குனிந்து கொண்டான்.

கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் வடிவு. இரணியன், "சரி தாட்சா ரெஸ்ட் எடு நா வீடு வரை போயிட்டு வரேன். டின்னர் வந்திடும் ஆண்ட்டி, அவளப் பாத்துக்கோங்க" என இருவருக்கும் சொல்லிவிட்டு கிளம்ப போக.

"நா அப்பாவ பாக்கணும்" என பெட்டை விட்டு இறங்க முயன்றாள் பாப்பு. "அப்பாவுக்கு போன் போட்டேன் எடுக்கல, வீட்டுக்கு போயிட்டு வரணும்ல டிராஃபிக்கோ என்னவோ?" வடிவு சொல்ல.

"அப்பா ஹாஸ்பிடல்ல தான் ம்மா இருக்காரு" என இரணியனை பார்த்தவாறு பாப்பு சொல்ல, வடிவு புரியாமல் முழிக்க, இரணியன் இதற்கு மேல் அவர்களைத் தடுத்து என்ன ஆகப் போகுது என நினைத்தவன் பாப்புவை கைத்தாங்கலாகப் பிடித்து கூட்டி முன்செல்ல, வடிவு குழப்ப முகத்துடன் பின் தொடர்ந்தார்.
 
அத்தியாயம் 34
இரணியன், பாப்புவையும், வடிவயும் அழைத்து செல்கையில், மெய்யப்பன் வார்டுக்கு மாற்றப்பட்டு, மயக்கம் தெளிந்து "சுஹா எப்டி இருக்காம்மா?" என வேதியிடம் விசாரித்து கொண்டிருந்தார்.

வடிவு திடுக்கிட்டு, பின் அழுது, "என்னங்க எப்டிங்க இப்டி ஆச்சு? தலையில இவ்வளவு பெரிய கட்டு போட்டுருக்காங்களே, யாருமே என்ட்ட சொல்லலையே" என விடாமல் அழுது புலம்ப, "நா நல்லா இருக்கேன்னு நானே சொல்லணும்னு தான் இவ்வளவு நேரமு சொல்லாம வெயிட் பண்ணிருக்காங்க. அப்புறமு நீ இப்டி அழுதா என்ன அர்த்தம். பாக்றதானே? நல்லா தானம்மா இருக்கேன்" என மெய்யப்பன் பொறுமையாகவே அதட்ட, வடிவு அழுகையிலிருந்து விசும்பலுக்கு சென்றார்.

"இப்ப எப்டிப்பா இருக்கு? டாக்டர் என்ன சொன்னாங்க?" பாப்பு கேட்க. "நீ ஏன் ம்மா மெனக்கெட்டு வந்த?", "கைல தானப்பா அடி, கால் நல்லாதானே இருக்கு. அத விடுங்க டாக்டர் ஒன்னும் பிரச்சன இல்லன்னு சொன்னாங்க தான?" என்றாள் அவர் தலையைத் தொட்டுப் பார்த்து.

"கார் கண்ணாடில கொஞ்சம் வேகமா மோதிட்டேன், அதுல 2, 3 பீஸ் தலைல குத்தி பிளட் ஓவர் ப்லொவ் ஆகிட்டு, இப்ப லேசா பெயின் மட்டும் இருக்கு அவ்வளவுதான். டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிட்டாங்க, புண்ணு ஆறுற வர ட்ரெஸ்ஸிங் மட்டும் வந்து பண்ணணும்" என சிரித்த முகமாகவே தான் சொன்னார் மெய்யப்பன்.

ஆனாலும் பாப்பு அடிபடாத வலதுகையால் அவர் கழுத்தை கட்டிக் கொள்ள, "ஒன்னும் இல்லடா பாப்புக்குட்டி" என்றார் அவள் தலையை தடவிக் கொடுத்து.

அந்த நேரம் "கொக்கு சைவ கொக்கு ஒரு கெண்டை மீனக்கண்டு விரதம் முடிஞ்சிருச்சா" என விக்கல் சத்தத்துடன் பாட்டு சத்தம் ஆரம்பிக்க, இரணியன், அவன் போன் அடிக்கிறது என்று உணராமல், அப்பா மகள் பாச மழையை குறுஞ்சிரிப்புடன் பார்த்து நின்றான்.

"மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தி தான் புடிச்சிருச்சாம்" என அடுத்த லைனிற்கு பாட்டு போயிருக்க, எல்லோரும் அவனை திரும்பி பார்க்க, பாப்புவும் அவன் போன் சத்தத்தில் மெலிதாக சிரித்து நார்மல் மோடிற்கு வந்தாள். அவளுக்கு மட்டும் தானே தெரியும் இரணியன் போன் தான் ரிங் ஆகிறதென்று.

"பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது? ஆகாயத்தப் பொத்தி வைக்க முடியாது" பாப்பு திரும்பி பொங்கி வந்த சிரிப்புடன் பார்க்க, "உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு" என்பதற்கும், எல்லோரும் தன்னையே கவனிப்பதயும், பாப்புவின் சிரிப்பயும் வைத்து, சவுண்டும் நம்மட்ட தான் கேக்குது என உணர்ந்தவன், போனை எடுத்துப் பார்த்து வேகமாக கட் செய்தான்.

"உன் வேலையா இது?" என இரணியன் பாப்புவைப் பார்த்து கேட்க, அதில் எல்லோருமே இலகுவாயிருந்தனர்.

"நீங்க தான சார்ம் ரஜினி சாங்ஸ் பிடிக்கும்னு சொன்னீங்க, அதான் கேட்டு என்ஜாய் பண்ணட்டும்னு வச்சேன்" என சொல்லிக் கொண்டே அவனை நெருங்கியவள், "ஆக்சுவலி செகண்ட் ஸ்டென்ஸா தான் வைக்க ப்ளான் பண்ணேன். நீங்க வெளில நாலு பெரிய மனுஷன் முன்ன இருக்கும்போது அந்த லைன் வந்துருச்சுன்னா உங்கள பாத்து சிரிச்சிடுவாங்களே, என் புருஷன் மானம் எனக்கு முக்கியம் இல்லயா? அதான் இத வச்சேன்" என்க. மெலிதாக சொன்னாலும் சின்ன அறை, மீதி இருந்த நால்வருக்குமே அவர்கள் சம்பாசனை கேட்டது.

"இப்ப மட்டும் எனக்கு நல்ல மரியாதை தான். உன் கை சரியாகட்டும் அப்புறம் மொத்தமாக கவனிச்சுக்கிறேன்" என அவளுக்கு மட்டும் கேட்குமாறு இவன் முனங்க, மறுபடியும் அவன் போன் விக்கியது.

எல்லோரும் நமட்டு சிரிப்பு சிரிக்க, "எக்சிகியூஸ்" கேட்டு வெளியேறினான் இரணியன். "அவர்ட்டயும் உன் வால் தனத்த அடக்கலயாடி நீ?" என வடிவு திட்ட. வாயை குணட்டி விட்டு தகப்பன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

காலையில் காரில் வரும் போது அவனிடம் பேசிக் கொண்டு வருகையில், அவன் ரஜினி பிடிக்குமென சொன்னதை வைத்து அவன் செல்லை ௭டுத்து அந்த பாட்டை ரிங் டோனாக செட் செய்து விட்டாள். அதன் பின் நடந்த கலவரத்தில் அவன் மொபைல் ஜானிடம் மாட்டிக்கொள்ள அவன் சுவிட்ச் ஆப் செய்து ஹாஸ்பிடல் கொண்டுவந்து கொடுத்து சென்றான். இவனும் அதன்பின் நியூஸ் பார்த்துவிட்டு வரிசையாக வரும் கால்களை அவாய்ட் செய்யவும், தேவையெனில் மட்டும் அட்டெண்ட் செய்துகொள்ளவும் வசதியாக சைலன்ட் வித் வைப்ரஷன் மோடில் போட்டு விட்டான், இப்போது வீட்டுக்கு கிளம்ப எண்ணி அதை நார்மல் மோடிற்கு மாற்ற, அது தன் இருப்பை காட்டிவிட்டது.

மெய்யப்பன் மயிரிழையில் உயிர் தப்பித்து, மகள் உயிரையும் காப்பாற்றி, அந்த பதட்டத்திலிருந்து சீக்கிரமாக மீண்டும்விட்டார். தைரியமான மூன்று பெண் சிங்கங்களை வளர்த்து வைத்திருக்கிறார். எதற்காக வீணாக அவர் அலட்டிக் கொள்ள வேண்டும். எதிலும் தேங்கி நிற்காமல் அடுத்து என்ன என சிந்திக்கும் திறன் அம்மூவருக்கும் இருக்கிறது. அதனால் தெம்பாக எழுந்து நின்றுவிட்டார்.

"பாப்புவ நாளைக்கு தான் டிஸ்சார்ஜ் பன்னுவாங்க, நீங்க இப்ப வீட்டுக்கு போனா உங்கள யார் பாத்துப்பாங்க?" என வடிவு கேட்க, "நீ வீட்டுக்கு அப்பாகூட கிளம்பும்மா, நா இங்க பாப்பு கூட இருக்கேன். நா இல்லாத நேரத்துல ஆர்வி இருக்கட்டும். மத்தபடி எப்டியும் மிஸ்டர்.இரணியன் இவளோட தான் இருப்பாரு, அவரோட கார்ட்ஸ் இருக்காங்க, அவர் ஒரு ஹெல்ப்பா கமிஷனர்ட்ட ப்ரொடெக்ஷன் கேட்டா போதும் போலீஸ்காரங்கள எப்பவும் ரெண்டு பேர் நிற்கிற மாதிரி போட்டுடலாம். இன்னைக்கு ஒன்டேக்கு இவ்ளோ தேவயுமில்ல, நைட் மட்டும் சமாளிச்சா போதும். சோ நீங்க கெளம்புங்க. டிரெஸ்ஸிங்க்கும் நீங்க ஹாஸ்பிடல் வர வேணாம்ப்பா, பாப்புவுக்கு ஒரு நர்ஸ் அப்பாயின்ட் பண்ண போறோம் அவங்களே உங்களுக்கு டிரசிங் பண்ணிடுவாங்க" என எல்லாத்தையும் யோசித்து முடிவு சொல்ல.

பாப்புவும், "நா பாத்துக்குறேன் கிளம்புங்க" என தைரியமாக சொல்லவும், இருவரும் கிளம்பிவிட்டனர். வேதி ஆர்வியிடம், "நீங்க இவங்கள வீட்ல ட்ராப் பண்ணிட்டு, வீட்ல போய் அத்தைட்ட விஷயத்தை சொல்லிட்டு வந்துருங்க" ௭ன்க, அவனும் சரியென அவர்களுடன் கிளம்பிவிட்டான்.

"நீ ரூம் போ பாப்பு. நா டிஸ்சார்ஜ் ஃபார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு வரேன்" என அவளறை வாசலில் வந்து விட்டுட்டு வேதி நகர, பாப்பு அறைக்குள் சென்று ஹெட்செட் மாட்டிப் நர்ஸ் உதவியுடன் படுத்துக்கொண்டாள்.

அங்கு அப்பார்ட்மெண்ட் நுழைந்தவர்களை பாப்புவை பற்றியும், மெய்யப்பனின் தலையைக் கண்டு அவரையும், 'என்னாச்சு? எப்படியாச்சு?' என கண்ணில் பட்டவர்களெல்லாம் விசாரிக்க, ஒவ்வொருத்தருக்கா பதில் சொல்லி வீடு வந்து காலிங் பெல்லை அழுத்த விஷாகன் வந்து கதவை திறந்தான்.

"சுஹா எப்டி இருக்கா?" என்றனர் அவனை கண்டதும் இருவரும் ஒரே போல். "நல்லாருக்காங்க. வேதிகா மேடத்துட்ட பேசிட்டு நீங்க டிஸ்சார்ஜ் ஆனத தெரிஞ்சிட்டு இப்பதான் தூங்குறாங்க" விஷா சொல்ல.

"அவ உங்க பொண்டாட்டி தான மாப்ள இன்னும் என்ன அவங்க இவங்கன்றீங்க?" என வடிவு அதட்ட, 'நா என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றேன். அப்டி கூப்பிட வரமாட்டேங்குதே' என நினைத்துக்கொண்டான், வெளியில் மலுப்பலாக சிரித்து சமாளிக்க.

"அவள எழுப்புங்க மாப்ள சாப்ட்டு தூங்கட்டும்", "தோச சுட்டு குடுத்தேன் சாப்ட்டு தான் தூங்குறாங்கத்தே" ௭ன்க. வடிவு மெய்யப்பனை பார்க்க.

"ஒரு நாள்னாலும் அத்தைக்கு நீங்க இது மாறி சுட்டு குடுத்திருக்கீங்களான்னு பார்வையிலேயே கேக்காங்கன்னு நினைக்கிறேன் அங்கில்" விஷா சொல்ல. "ஒருவேள நானும் ரெண்டாவதா இவள கட்டிருந்தா செஞ்சுருப்பேனோ ௭ன்னவோ" மெய்யப்பன் சிரிக்காமலே சொல்ல, வடிவு முகத்தை திருப்பி கொண்டு சமயலறை சென்று விட. மெய்யப்பன் அவரறை செல்ல. '௭னக்கு இது வேணும். இப்பதானே தெரியுது பாப்புவோட குசும்புக்கு அடித்தளம் ௭துன்னு' ௭ன நொந்து மீதமிருந்த அரவிந்த்திடம் திரும்பினான்.

"பாப்பு கூட யார் இருக்கா அரவிந்த்?" என்றான் அரவிந்திடம். "வேதி இருக்கா விஷா. தலையே சுத்துது, இதெல்லாம் புதுசா இருக்குல்ல. இத்தன நாள் நியூஸ்ல மட்டுமே பாத்ததெல்லா லைவ்வா பார்க்கிற மாதிரி இருக்கு".

"இதுக்கே பயந்தா எப்டி? காத்திருந்துல்ல வாக்கப்பட்டுருக்கீங்க, இன்னும் போலீஸ்கார வீட்டம்மா கூட, வாழ்க்கையில ௭வ்வளவோ பாக்க வேண்டியிருக்கு". "நானாது காரணத்தோட வந்து மாட்டுனேன். பட் நீங்க சார்?" என ஆர்வி சிரிக்க. "சரி சரி விடுங்க".

'என்னைய நக்கல் பண்ணனும்னா மட்டும் புள்ள பூச்சிக்கு கூட கவுண்டர் கிடைச்சுரும்' என மனதில் நினைத்து வெளியில், "இரணியன் சார் ஹாஸ்பிடல இல்லயா?" ௭ழ கேக்க. "வீடு வர போயிட்டு வரேன்ட்டு போனாங்க".

இரவு உணவை முடித்து, அரவிந்த் அவன் வீடு செல்வதாக சொல்லி கிளம்பி போக, "நா ஹாஸ்பிடல் போறேன் த்தே" என்று விஷா இரணியன் துணைக்கு கிளம்பிவிட்டான்.

அங்கு இரணியன் வீடு செல்ல, அவன் அப்பா மட்டுமே ஹாலில் அமர்ந்திருந்தார். அவரை பார்த்த வண்ணம் அமைதியாகவே மாடியேறி, அவனறை சென்றான். சில நிமிடங்கள் அப்படியே அமைதியாக கட்டிலில் படுத்துவிட்டான். ஏதேதோ யோசித்தான், இதுவரை நடந்து முடிந்தவற்றில் யாரின் மேலேயும் முழு காரணமும் இவர் தான் என்று கூறுவது போல் இல்லை. சூழ்நிலை காரணமாகவே நடந்ததாகவே தோன்றியது. பவ்யா ப்ரெண்ட்ட பி.ஏ ஆ அப்பாய்ண்ட் பண்ணாததால பவ்யாவுக்கு தாட்சா மேல கோவம். அதுல அவ பேசினதுக்கு தாட்சா அடிச்சுட்டா, அதனால பவ்யா ட்ரக் கலந்துட்டா. அதுல விஷாவுக்கு செகண்ட் மேரேஜ் நடந்துருச்சு. தன் புருஷன் வேற ஒரு பொண்ண பாத்தாலே கொலை பண்ற அளவுக்கு போற இந்த காலத்தில, அவேன் இன்னொரு பெண்ண கல்யாணமே பண்ணிட்டான்னுத் தெரிஞ்சதால இவளோட கோபம் நியாயமானது. எல்லாத்துக்குமே அவளோட ட்ரக் அடிக்ஷன் தான் காரணம். இப்ப கிரிமினலா யோசிக்கிற அளவுக்கு வந்துட்டாளே, இது தடுத்தே ஆகணுமே' என அவன் யோசனை இருக்க. என்ன செய்யலாம் என யோசித்து ஏதோ முடிவெடுத்தவனாக, குளித்து கிளம்பி தேவையான ட்ரெஸ்ஸை பேக் பண்ணி கீழ் இறங்கினான்.

ஜான் வந்து அவன் சூட்கேசை வாங்கி செல்ல, அவன் அப்பா, "அவுட் சூட்டிங்காப்பா?" என்றார், 'இருக்கிற சிச்சுவேஷன்ல இப்படி கிளம்பி போக வாய்ப்பில்லை' என அவன் தாயும் ஹாலுக்கு வர, தானும் சோபாவில் வந்து அமர்ந்தவன்.

"கடமை பட்ருக்கேன், அந்த ஒரு ரீசன் தான் உங்க பொண்ணு இன்னும் இந்த வீட்ல இருக்கா. பட், இன்னும் ஒன் டைம் நா இப்டி பொறுமையா இருப்பேன்னு சொல்ல முடியாது. இவளுக்கு என்ன டீலிங்னாலும் அது விஷாகனோட மட்டுமே இருக்கணும். அதத் தாண்டி என் ஃவைப் ஃபேமிலில இன்னொரு ஸ்டெப் எடுத்து வைக்க இனிமேலும் உங்க பொண்ணு நினைச்சானா காணாம போயிடுவா. உங்களுக்காக தான் இவ்வளவு நாள் அவளை பாதுகாத்துட்டுருந்தேன், ஆனா அவ சந்தோஷம்தான் முக்கியம்னு வெளிநாட்டுக்கு அனுப்பி பெரிய தப்பு பண்ணிட்டீங்க. கண்டிப்பா அதனால வர கூடுயத நீங்க பேஸ் பண்ணியே ஆகணும், கூட இந்த கிரிமினல் வேலயும் சேர்த்துக்க வேணாம்னு சொல்லுங்க. நா உங்ககிட்ட சொல்லிட்டு தான் செய்றேன் அப்றம் உன்ன எடுத்து வளர்த்ததுக்கு நீ காட்ற விசுவாசமான்னுலா கேக்காதீங்க. என் பொண்டாட்டிய பறி கொடுத்துட்டு உங்களுக்கு நன்றியா இருக்க வேண்டிய அவசியமே இல்ல, இருக்கவும் மாட்டேன். நா கிளம்புறேன். பொண்ணு என்ன செய்றா? யார் கிட்ட பேசுறான்னு கவனமா பாத்துக்கிட்டீங்கனா நல்லாருக்கும்" என அமர்தலாகவே கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.

தில்லைவாணி, 'இனி அவள கண்காணிப்பில தான் வச்சுக்கணும்' என மகளை காப்பாற்றும் உறுதி பூண்டார்.
இதற்கிடையில் வேதிக்கு கலெக்டர் ஆபீஸ் வாசலில் திடீர் போராட்டம் காரணம் உடனே அங்க போக சொல்லி உத்தரவு வர, பாப்பு அறையை எட்டிப் பார்க்க அவள் தூக்கத்தில் இருக்க, ஆர்விக்கு போன் செய்தாள். அவன் விஷா வந்து கொண்டிருப்பதாக கூறவும், நர்சிடம் சொல்லிவிட்டு தைரியமாக கிளம்பிவிட்டாள்.

பாப்பு சிறிது நேரம் தூங்கியவள், வயிறு பசி வந்து கத்த ஆரம்பிக்கவும், அசைந்து கொடுத்தாள். நர்ஸ் வந்து அவள் எழும்ப உதவி செய்ய, ரெஸ்ட் ரூம் சென்று வந்ததாள்.

"பசிக்குது சிஸ்டர் ஒரு காபி வாங்கிட்டு வர சொல்ல முடியுமா?" என கேட்க. "ஓகே மேம்" என நர்ஸ் வெளியேற உள்ளேயே இருப்பது ஒரு மாதிரியாக இருக்க, வெளி வந்து அமர்ந்தாள். அவளுடன் இருக்கும் கார்ட் அங்கு தான் நின்றான். "நீங்க எப்ப ஃபேமிலிய மீட் பண்ண போவீங்க?" அவரிடம் கேக்க. "6மந்த்ஸ் ஒன்ஸ் 1 மந்த் லீவ் உண்டு மேடம், பட் நடுவுல எதுவும் எமர்ஜென்சின்னா லீவு எடுத்துக்கலாம்". "ரொம்ப கஷ்டம். மேரேஜ் ஆயிடுச்சா?", "ரெண்டு பசங்க". "ரொம்ப மிஸ் பண்ணுவாங்கள்ல உங்கள", "பழகிக்கிட்டாங்க மேம்".

அந்நேரம் அந்த ஃப்ளோர் எண்டில் இருவர் பேசும் சத்தம் அந்த அமைதியான இடத்தை கிழித்துக்கொண்டு கேட்க, திரும்பி பார்க்க, ஒருவன் நர்ஸ் உடையில் இருந்த பெண்ணிடம் தகராறு பண்ணிக் கொண்டிருப்பது தெரிந்தது. அதை பார்த்த கார்ட், "மேடம் நீங்க இங்கேயே இருங்க, நா பாக்குறேன்" என அவளை இத்தனை மாதத்தில் அறிந்தவனாக சென்றான். பாப்பு அப்படி அமைதியாக வேடிக்கை பார்க்கும் ரகமில்லையே, அவள் மெதுவாக ௭ழுந்து அவர்களிடம் வருவதற்குள், அங்கு முன் சென்று விசாரித்த கார்ட், "ஏதோ ஹஸ்பண்ட் ஃவைப் விவகாரம் போல மேம்" என அவளை பாதியிலேயே மறித்துச் சொல்ல, "அப்டி தெரியல, இருங்க நா கேக்றேன்". "வேணாம் மேம் அவன் ஃபுல்லா குடிச்சிருக்கான்", "அதுக்காக அந்த பொண்ண அப்டியே விட முடியுமா?” "நா மேனேஜ்மென்ட்ல சொல்லிட்டு வரேன் மேம். அவங்க வந்து பாத்துப்பாங்க". "அடடா ஏன் இப்டி பயப்படுறீங்க? எனக்கு எதுவும் ஆகாது நகருங்க" என அவர்களிடம் செல்ல.

"கேன பயலே நா உன் பொண்டாட்டி இல்ல, மரியாதையா கைய விடு இல்ல நடக்கிறதே வேற" என அந்தப் பெண் திட்டி கொண்டிருக்க, "என்னாச்சு சிஸ்டர்?" பாப்பு கேக்க. "இவனுக்கு குடிபோதைல பொண்டாட்டி யாருன்னு கண்ணுக்கு தெரியல மேடம். அவ மேல ஃப்ளோருக்கு டாக்டர் கூட ரவுண்ட்ஸ் போயிருக்கா இப்போ போன் பண்ணி சொன்னா இவன் பண்ற அலப்பறைல அவள வேலையை விட்டு தூக்கிடுவாங்க. அதனால இந்த ஆள இப்டியே திட்டி அனுப்பிடலாம்னு பாத்தா போக மாட்டேங்குறான்".

ஓங்கி ஒரு அறை விட்டாள் பாப்பு, "விடுறா அவங்க கைய" என்க. விட்டுவிட்டான், ஆனால் அடுத்த நொடி அவளுக்கு தொட்டில் கட்டி தொங்க விட்டிருந்த கையை பிடித்து இழுக்க ஆரம்பித்திருந்தான், அது அவளுக்கு உயிர் போகும் வலியை குடுக்க, அவனை இன்னொரு அறை அறைய முனைந்தாள், முடியவில்லை.

"கட்டுன புருஷனயே கை நீட்டி அடிக்கிறியா நீ. வீட்டுக்கு வாடி உனக்கு நா யாருன்னு காட்றேன்" என அவள் முட்டியை பிடித்து விடாமலிழுக்க ரத்தம் வெளியேற ஆரம்பித்திருந்தது. நர்ஸ் அவன் முதுகில் அடியடி என அடித்தது அவன் அதை தூசு போல் உதறிவிட, ஒரு கரம் அவளை அணைத்து அவன் கன்னத்தில் இடியென இறங்க, ஒரே அடியில் சுருண்டு விழுந்திருந்தான்.

மேனேஜ்மென்ட்டிடம் சொல்லி விட்டு ஆட்களோடு வந்திருந்த கார்ட் அவனை அப்புறப்படுத்தும் வேலையை பார்க்க, அதீத வலியில் இரணியன் கையிலேயே மயங்கி சரிந்தாள் பாப்பு. அவன் தூக்கிக் கொண்டு ஓட, அதற்குள் அந்த நர்ஸ் டாக்டருக்கு இன்ஃபார்ம் செய்திருந்தது. அடுத்ததாக ட்ரீட்மென்ட் அதி வேகத்தில் நடக்க, அப்போது தான் விஷா உள் நுழைந்தான். இருக்கும் எரிச்சலில் அவனிடம் ௭கிறி விட்டான்.

"அத்தன பேர் இருக்கீங்கன்னு தானே கிளம்பி போனேன் அவளோட அதிக பிரஸ்ங்கிதனம் தெரிஞ்சும் எப்டி அவ குடும்பத்துல உள்ளவங்க இப்டி தனியா விட்டுட்டு கிளம்பி போனாங்க".
பின் அவளுக்கான நர்ஸ், கார்ட் எல்லோரையும் ஒரு வழியாக்கிவிட்டே விட்டான்.

டாக்டர் வந்து ஸ்ட்ரிக்ட்டாக, "அவுங்க அந்த கைக்கு ஸ்ட்ரைன் கொடுக்க கூடாது மிஸ்டர்.இரணியன், இன்னொரு டைம் இப்டியாச்சுன்னா புண் ஆறாம உள்ள செப்டிக் ஆகிடும், அப்றம் அது ஸ்ப்ரெட்டாக ஆரம்பிச்சுடும். ஈஸியான விஷயம் இல்ல, பி கேர்ஃபுல்" என சொல்லி சென்று விட, மறுபடியும் பிளட்டே உணவாக படுத்திருந்தாள் பாப்பு.

மறுநாள் காலையிலேயே கண் விழித்தாள். இரணியனும் விஷாகனுமே இருபக்கமும் அமர்ந்திருந்தனர். "குட் மார்னிங்" என சிரித்தவாறு கூற, இரணியன் முறைக்க.

விஷாகன், "விடிய விடிய தூங்கி எந்திரிச்ச நீ குட் மார்னிங் சொல்ல வேண்டிய தான், தூங்காம காவல் காத்த நாங்க எதுக்கு சொல்லனும்" என்க. "ஏன் தூங்கல? தூங்க வேண்டியது தான".

"அது எப்டி தூக்கத்திலையும் நீ எவன்ட்டயாது சண்டைக்கு போயிட்டனா?", "ஹே எனக்கு வேற வேலை வெட்டி இல்லாமலா சண்ட போட்டுட்டு இருக்கேன்", "இல்லையா பின்ன?" என்றான் விஷா.

"இங்க பாருங்க சார்ம்" என முறைத்துக் கொண்டிருந்தவனை வக்காலத்துக்கு கூப்பிட, அவன் பேசவே இல்லை வெளியே சென்று விட்டான். "சார்ம் ஏன்டா கோச்சுட்டு போறாரு? நீ ஏதாவது பண்ணியா?" பாப்பு பாவமாக கேக்க. "ஏன் நீ பண்றதுக்கு நா வாங்கி கட்றது பத்தலையா, நா வேற ௭க்ஸ்டரா பண்ணி அவரு ௭ன்ன மொத்தமா போட்டு தள்ளட்டும்ன்ற?”

"என்ன நீ என்னையே தப்பு சொல்லுற? குடிச்சுட்டு பொண்டாட்டின்னு வேறொரு பொண்ண கையை பிடிச்சு இழுக்கிறவன தடுத்தது எப்டி தப்பாகும்". "நொண்டி கைய வச்சுக்கிட்டு உனக்கு எதுக்கு அந்த வேண்டாத வேல?" தானும் ஆனமட்டும் முறைத்தான்.

"போடா எனக்கு ஒன்னும் நொண்டி கையில்ல". "பின்ன கட்டி தொங்க விட்ட கைன்னு சொல்லட்டா? இப்டி நிலைமைல மனநிலை சரியில்லாதவன் கூட எவன்கிட்டயும் வாய்க்கா தகராறுக்கு போமாட்டான். நீ நல்லா தான இருக்க?” "அக்கா புருஷன்னு நா பொறுமையா இருக்கேன், என்ட்ட வாங்காம போக மாட்டேன்னு நினைக்கிறேன்".

"இதத்தான் சொல்றேன். அதென்ன எடுத்ததுக்கெல்லாம் கைநீட்டுற பழக்கம், ஒரு பிரதர்லி அட்வைஸ் நா சொல்றத கேளு", "எரும என் அக்காக்கு பிள்ளைய கொடுத்துட்டு என்னைய தங்கச்சின்ற", "சரி விடு. ஒரு பிரெண்ட்லி அட்வைஸா கேளு". "உன்ன மாதிரி ஒரு பிரண்டு எனக்கு தேவ இல்ல", "மொத்தத்துல என் அட்வைஸ கேட்க மாட்ட", "ஆமா நீ எல்லாம் அட்வைஸ பண்ணிக் கேட்க மாட்டேன்". "உன்னையெல்லாம் என் மாமியார் மாதிரி எத்தன வடிவு வந்தாலும் திருத்த முடியாது".

"அந்த டிவியை போட்டு விட்டுட்டு போய் சார்ம்ம வரச்சொல்லு". "அவர் இருக்க கடுப்புல வந்தா கடிச்சு வச்சுருவார் பாத்துக்க", "என்ன மட்டும் தான் அவரால கடிக்க முடியும், லூசு மாதிரி பேசுற உன்னைய கடிச்சா நல்லா இருக்குமா?" என கண்ணடித்து சிரிக்க.

"உனக்கு கை வலிக்கல?" என்றான் விஷா சீரியஸாகவே புருவங்கள் சுருக்கி. "அத நெனச்சாத்தான் வலிக்கும், அதுக்குதான் அந்த டிவிய போடு" என்றவளிடம், தலையிலடித்துக் கொண்டு சென்று டிவியை போட்டு, ரிமோட்டை எடுத்து நீட்ட, டிரிப்ஸ் மறுபடியும் வலது கையில் போட்டிருக்க, அது நன்றாக வீங்கி விட்டிருந்தது. அவளால் அதை தூக்கவே முடியவில்லை.

அந்த வலியில் "மாடு என் கைதான் வீங்கி போய் இருக்குன்னு தெரியுதுல்ல நீயே சேனல் மாத்தி சாங் சேனல் ஏதாவது வை" என்க. "நீங்க இப்ப ஹெல்ப் கேட்கிறீங்க இல்ல? ரிமோட்ட தூக்க மட்டும் கைவராது ஆனா என்னைய அடிக்கனும்னா மட்டும் அந்த வீங்குன கைக்கு வலி மறந்துரும்". "புலம்பாம பாட்ட வைடா" என்க.

சேனல் மாற்றி கொண்டே வந்தவன், "குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி" என்ற பாட்டு வரவும், "இருக்கட்டும் இருக்கட்டும்" என பாப்பு சொல்ல. "இந்த சிச்சுவேஷனுக்கு இந்த பாட்டு தேவையா?" என அவள் பெட்டில் இருந்ததை கைகாட்டி கேட்க, "சார்ம் ரொம்ப ஹாட்டா இருக்காருல்ல, அவர சில் பண்ண தான் குளிருது பாட்டு, எப்டி விஷா?", அவன் பதில் சொல்ல வர, நர்ஸ் உள்ளே நுழைந்தார்.

"நீங்க பிரெஷ்ஷாக ஹெல்ப் பண்ண சொன்னாங்க மேடம்" நர்ஸ் சொல்ல, "யாரு?", "இரணியன் சார்". "நீங்க போய் அவரையே வர சொல்லுங்க". "இல்ல மேம் பெட் பேன்லா வைக்கணும்" என விஷாவை பார்த்தவாறு தயக்கத்துடன் சொல்ல.

விஷா வெளியேற, "அவர வர சொல்லுங்க நா அவர்ட்ட பேசிட்டு உங்கள கூப்பிட சொல்றேன்" என்றுவிட, அந்த நர்ஸ் வெளியேறிய 3 நிமிடத்தில்.

"ஏன்டி படுத்துற நேத்து காலைல சாப்டது, அடுத்து இன்னுவர சாப்பிடல. பிளட்ட ஏத்திட்டே வாழப்போறியா நீ?" என்றான் உள்நுழைந்தவாறு டிவியை அணைத்துவிட்டு.

யார்கனவே தான் செய்யாமல் நர்ஸை அனுப்பிய கோவத்தோடு, அவனுக்காக போட்ட பாட்டை ஒரு வார்த்தை கேட்காமல் டிவியை அமர்த்திய கோபமும் சேர்ந்து கொள்ள, "என்னோட சேர்ந்து குளிக்க மட்டும் முடியும், ஆனா என்ன ரெஸ்ட் ரூம் கூட்டிட்டு போக முடியாது?" என கேட்க.

அவளிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காதவன் முதலில் திகைத்து பின் தெளிந்து வேகமாக அவள் வாயை பொத்தி, "இடியட் எத சத்தமா சொல்லுறதுனுயில்ல. நா உனக்கு ஹெல்ப் பண்ண போய் கையை அழுத்தி பிடிச்சுடக்கூடாதுன்னு தான் சிஸ்டர அனுப்னேன், வெளி இடத்துல நா ஹெல்ப் பண்றது உனக்கு கம்ஃபர்டப்ளா இருக்காதோன்னு யோசிச்சேன்மா" என்க.

அவன் கையை எடுக்க சொல்லி அவள் கண்ணை காட்ட, பெருமூச்சுடன், கையை மெதுவாக எடுத்தான். "என்ன முழுசா தெரிஞ்ச நீங்க எனக்கு செய்றது எனக்கு கம்ஃபர்டப்ளா இருக்குமா? இல்ல முன்ன பின்ன தெரியாதவங்க செய்றது எனக்கு கம்ஃபர்டப்ளா இருக்குமா?" என பாப்பு கேட்கவும், அதன்பின் அவன் பேச்சை வளர்க்க வில்லை. இதுக்கு மேல இவள பேச விடுறதே தப்பு ௭ன்ற ௭ண்ணத்திற்கு வந்திருந்தான்.

அவள் பாத்ரூம் போக உதவி செய்து, அவளுக்கு பிரஷ் செய்துவிட்டு, சுடுநீரில் அவள் உடலை துடைத்து விட்டு, டிரஸ் மாற்றி விஷா வாங்கி வந்திருந்த சாப்பாட்டை ஊட்டி முடித்து மாத்திரை முழுங்க வைத்து, தூங்கவும் வைத்தான். அன்றும் ஹாஸ்பிடலில் தங்கிவிட சொல்லி மறுநாள் தான் டிஸ்சார்ஜ் செய்தனர்.

வீட்டில் மற்றவர்களுக்கு இரண்டாவதாக பிளட் ஏத்தின விஷயம் சொல்லப் படவில்லை. கூட ஒரு நாள் இருக்க சொல்லிட்டாங்க நா பாத்துக்கிறேன் என்பதாகத்தான் சொல்லப்பட்டது. இரணியனுக்கு வரும் கால்கள் அனைத்தையும் விஷாகனே மேனேஜ் செய்து கொண்டான்.

இவர்கள் வீட்டுக்கு வரவும் அபார்ட்மெண்ட் வாசிகள் எல்லோரும் வந்து பார்த்து செல்ல ஆரம்பித்தனர். இரணியன் அவளை விட்டு எங்கும் நகரவில்லை. படத்தை முடித்துக் கொடுத்த இரண்டு மாத ரெஸ்ட்டில் தான் இருந்தான். ஆக அவனுக்கு அவளைப் பார்த்துக் கொள்வதில் எந்த கஷ்டமும் இல்லை. இரண்டு நாள் சென்றிருக்க, அவர்கள் அப்பார்ட்மெண்ட் மேல்தளத்தில் இருந்து ஒரு ஹஸ்பண்ட் அண்ட் ஃவைப் நலம் விசாரிக்க வந்திருந்தனர்.

அப்போது "அடுத்தடுத்து நடந்த கல்யாணம் அப்புறம் இப்டி அடுத்தடுத்து நடக்கும் கெட்ட விஷயம் பேசாம குடும்பத்தோட குலதெய்வ கோயிலுக்கு போயிட்டு ஒரு பூஜைய கொடுத்து வாங்களேன் வடிவக்கா" என பேச்சுவாக்கில் அவர் சொல்லிச் செல்ல, வடிவு குழப்பத்திற்கு சென்றிருந்தார்.

அவர் குடும்பத்திற்கு குலதெய்வமே தெரியாது. மெய்யப்பன் சொன்னவரை, 'நான்கு தலைமுறையாக குலதெய்வ வழிபாடு எனக்கு தெரிஞ்சு கிடையாதுமா நாள் போக்குல அப்டியே அத மறந்துட்டோம்' கல்யாணமான புதுசுல வடிவு வீட்டாரின் கேள்விக்கு இவர் சொன்ன பதில்.

இத நெனச்சு குழம்பிப் போயிருந்தவரை மெய்யப்பன் தான், "நீ எப்பவும் போற அகஸ்தீஸ்வரர் கோவில் போயிட்டு வா, மனசுக்கு அமைதி கிடைக்கும்" என சொல்லி அனுப்ப. எதுத்த வீட்டு ராஜியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். சிவன் முன் நின்றதும் மனதில் உள்ள பாரம் அழுத்த அது கண்ணீராய் வெளியேறியது.

தீபார தட்டுடன் வந்த ஐயர், "மனச தளர விடாதீங்கோ, நடந்ததெல்லாம் நானும் கேள்விப்பட்டேன். குடும்பத்தோடு ஒரு தடவ உங்க குல தெய்வ ஸ்தலத்துக்கு போயிட்டு வாங்கோ" அதே வார்த்தையை 2ண்ட் டைம் கோயிலில் வைத்து கேட்கவும் மறுபடியும் மனசு குழம்ப "எங்களுக்கு குலதெய்வமெதுன்னு தெரியாதுங்க சாமி. நா கல்யாணம் ஆகி வந்ததிலிருந்தே போனதில்ல, அவருக்குமே தெரியாது. அவர் தாத்தாவுக்கு தாத்தா காலத்திலேயே அப்டியே விட்டுட்டாங்க போல, அது அப்டியே விட்டும் போச்சு. இத்தன வருஷம் கழிச்சு இப்ப எப்டி கண்டுபிடிக்க முடியும்" ௭ன்றார் வடிவு குழப்பத்துடன்.

சிறிது யோசித்தவர், "கோவில்ல குறி சொல்றவங்க, இல்லனா இந்த நாடி ஜோசியம் பாக்குறவங்கட்ட போனா அவங்க உங்க ஆத்துக்காரர் கை ரேகைய வச்சு கண்டுபிடிச்சு சொல்லிடுவாங்கம்மா" என்க. "என் வீட்ல உள்ளதுங்கல்லாம் ஜாதகம், ஜோசியம் ஒன்னயும் நம்பாதுகளே☹️☹️, சரிங்க சாமி நா எப்டியாது பேசிப் போய் பாக்குறேன்" என வடிவு கவலையாக சொல்ல.
 
"கவலைப்படாதீங்கம்மா, ஈஸ்வரன் சன்னதில வச்சு இத சொல்ல வச்சிருக்கார். அவரே உங்க வீட்டுக்காரர் மனச மாத்தி உங்களோட வர வைப்பார்" என்க. திருநீரை அவர் கையாலயே பூசிக் கொண்டு, சிவனை மனதார நிரப்பிக் கொண்டு வீடு திரும்பினார் வடிவு.

வீடு வந்ததும் கணவரிடம் ஐயர் சொன்னதை சொல்ல, "எப்பமோ விடுபட்டது இப்ப எப்படிமா கண்டுபிடிச்சு சொல்லுவாங்க. பூஜை பரிகாரம்ன்னு காசு தான் செலவாகும், எல்லாம் ஏமாத்துக்கார பசங்க வாழ்ற ஊர்ல, தானே போய் தலையைக் கொடுப்போம்னவ சொல்ற. நா ஒரு ஜட்ஜ், நானே ஏமாந்தா மத்தவனெல்லாம் ௭ன்ன எவ்வளவு கேவலமாக பேசுவான்" என்க.

"நா அந்த அகஸ்தீஸ்வரர நம்புறேங்க, ஏமாறுற வழில நம்மள கொண்டுபோய் நிறுத்த மாட்டாருங்க. இவ்வளவு நாள் இந்த தொழில்ல இருந்துருக்கீங்க ஆனா இதுவர நம்ம குடும்பத்துல இப்டி ஒரு அசம்பாவிதம் நடந்துருக்கா? இப்ப நடக்குதுன்னா என்ன அர்த்தம் நம்ம குலதெய்ம் நம்மள அழைக்குதுன்னு அர்த்தம்ங்க. மூணு மருமகனுங்க வந்தப்புறம் தான் இது நடக்கணும்னு இருந்திருக்கும். ஒரு தடவ எனக்காக வாங்க" ௭ன திரும்ப திரும்ப பேசி போராடி, 'அவளோட மனத்தெளிவுக்காகனாலும் போயிட்டு வருவோம்' என தலையில் கட்டை பிரித்த மறுநாள் கிளம்பினர்.

நாடி ஜோதிட நிலையம், ஒரு வயதானவர் வந்து மெய்யப்பனின் வலது பெரு விரல் ரேகை வாங்கிக் கொண்டு, அட்ரஸ், போன் நம்பரும் மட்டும் வாங்கிக் கொண்டார். பெயரை கூட சொல்ல வேண்டாம் ரேகை வைத்து நாங்களே கண்டு கொள்வோமென சொல்லிவிட.

நம்பிக்கையில்லாமல் அரைமணி நேரக் காத்திருப்பின் பலனாக, மெதுவாக ஆரம்பித்தார் அந்த பெரியவர்.

"இந்த ஒரு கட்டு ஓலைச் சுவடிகள்ல ஒன்னு உங்களிது" என கையில் வைத்திருந்த ஒரு ஓலைச் சுவடி கட்டை காமித்து கூறிவிட்டு, "நா ஒன்னு ஒன்னா படிச்சுக் காட்டுறேன், நீங்க ஆமா இல்லன்னு மட்டும் சொன்னா போதும்" என்க.

"நாங்க ஆமா இல்லன்னு சொல்றத வச்சே எங்கட்ட இருந்து விஷயத்த வாங்கிடுவீங்க அப்டித்தான?" மெய்யப்பன் மிதப்பாக கூற, மெலிதாக சிரித்த அந்தப் பெரியவர், தன் கையிலிருந்த ஓலைச் சுவடியைப் படிக்க ஆரம்பித்தார்.

"உங்களோட முதல் எழுத்து வல்லினத்துல வரும், அதாவது க,ச,ட,த,ப,ற, வல்லின ௭ழுத்துகள்ல ஆரம்பிக்கும், க,கா, கி,கீ, ச,சா, சி,சீ. இப்டி எழுத்துக்கள்ல ஒன்னு உங்க முதலெழுத்தா?" மெய்யப்பன் இல்லையென தலையசைக்க அந்த சுவடியை எடுத்து வைத்துவிட்டு அடுத்ததிற்கு போனார், "உங்களது மூத்த குழந்தை ஆண் குழந்தை", "இல்லை" வடிவு சொல்ல, சுவடியின் மறு பக்கம் திருப்பிய பெரியவர், "உங்க துணைவி அரசாங்க உத்தியோகர்" ௭ன்க.

"எல்லாத்தையும் எங்கட்டயே கேட்கறீங்க அதுவும் தப்பு தப்பா கேட்கிறீங்க" மெய்யப்பன் அமைதியாகவே இதயும் கேட்க. அடுத்த சுவடியை எடுத்தவர், "உங்க சுவடியை தவிர மத்த எல்லா சுவடியும் தப்பா தான் இருக்கும் சார்" என்றார். "அப்ப என் ரேகைய வச்சு என்னோடத கண்டுபிடிக்க முடியாதா உங்களால?", "நீங்க பிறந்த அதே நேரத்துல பிறந்தவங்க சுவடி தான் இந்த ஒரு கட்டும், நொடி கணக்கே வித்தியாசப்படும். அந்த நொடி நேர வித்தியாசமே உங்களுக்கும் இந்த மத்த சுவடி காரங்களுக்குமான வித்தியாசம்" மெய்யப்பன் ஒரு பெரு மூச்சை வெளியேற்ற, பெரியவர் அடுத்துப் படிக்க ஆரம்பிக்க, அடுத்த நான்கு சுவடிகளும் மெய்யப்பன் இல்லை என சொல்லும்படியாகவே அமைந்தது.

அடுத்த சுவடி, "நீங்க நீதித் துறையில வேலை பாக்குறீங்க", "எஸ்", அடுத்த லைனில், "உங்க மனைவி பேரோட எழுத்துக்களின் எண்ணிக்கை 5", "ஆமா" வடிவுமொழி வேகமாக சொல்ல, "உங்களுக்கு 3 பெண் குழந்தைகள், 3 பேருக்கும் கல்யாணமாயிருச்சு". "ஆமா ஆமா" வடிவுக்கு சந்தோஷம்.

"இப்ப உங்க பெயருக்கு வருவோம், உண்மையை சுவாசிக்கும் மூச்சாக கருதுபவர்கள் அடைமொழியாக கூறும் மெய்ற்கே தகப்பனிவன் என்பதாக மெய்யப்பன் தங்கள் பெயர் சரியா?" என்க. மெய்யப்பன் புருவம் உயர்த்தி அதை ஆமோதிக்க, "உங்கள் துணைவியாரின் பெயர் இடையினம் முதலெழுத்தாகவும் அதாவது ய,ர,ல,வ,ழ,ள இதில் குறிப்பாக 'வ' வில் தொடங்கும் பெயராகவும், வடிவங்களை மொத்த பெயராகத் தொடர்ந்து மொழியை பின்பற்றும் என சுவடி கூறுகிறது. வடிவமொழியாக இருக்கலாம் தங்கள் பெயர்" எனவும் மயங்கி விழாத குறைதான் வடிவு.

"அப்ப சரி இதுதான் உங்க சுவடி. இனி பிரதிபலன்களைப் பார்க்கலாம்" என்றார் அந்த பெரியவர். இருவரின் அமைதியையும் சம்மதமாக ஏற்று, "தொழில், குடும்பம்னு இந்த ரேகைக்காரருக்கு ஒரு குறையும் இருக்காது. எல்லாமே சிறப்பாக அமையும். சமுதாயத்தில நல்ல மரியாதையான வாழ்க்கை வாழுவீங்க. குழந்தைகளுக்கும் படிப்பு உத்தியோகம்னு சிறப்பாவே அமஞ்சிருக்கும். ஆனா ௭ல்லாமே நல்லதா நடந்துட்டா நாம கடவுள மறந்திடுவோமே. உங்க குழந்தைகளுக்கு கல்யாணம் உங்க இஷ்டப்படி நடந்திருக்காது. ஒரு குழந்தைக்கு கூட உங்க இஷ்டப்படி நடத்திருக்க மாட்டீங்க. அப்டி எந்த ஜாதக ஒத்துமையும் பாக்காம, நேரங்காலம் பாக்காம ஒரு உயிர் கூட உங்க குடும்பத்துல இந்நேரம் ஜனிச்சிருக்கணும். அது உங்க பூர்வ ஜென்ம பலன், ஒரு கன்னியோட சாபம் உங்களுக்கு இருக்கு, அந்த கன்னி மறுபடியும் உங்க குடும்பத்துல வந்த பிறக்கும், இப்டி ஒரு விஷயம் நடக்கும் போது சில பல கெட்டதும், நல்லதும் சேந்தே நடக்கும். வேற வழியில்ல, இதயெல்லாம் நீங்க தாண்டிதான் வந்தாகணும். அது பிறக்கிற நேரத்துல உங்க பொண்ணுங்கள்ல ஒருத்தர உங்கள விட்டு ரொம்ப தூரம் தள்ளி வைக்கும். அது நல்லதுக்குன்னு எடுத்துக்கங்க, கிட்டயிருந்தா அந்த உயிருக்கு ஆபத்தாவே முடியும். இப்பவே அதற்கான அறிகுறிகள காட்டியிருக்கும். சாபம் கொடுத்த கன்னியே மீண்டு வரும்போது அது உங்க குடும்பத்துல இணையுறதுக்கு நீங்க சிலபல மனவருத்தங்கள, இழப்புகள தாண்ட வேண்டிருக்கும். இது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. நம்ப கஷ்டமா தான் இருக்கும். நீங்க உங்க குல தெய்வத்துட்ட சரணடைங்க, குடும்ப அமைதிய அது மீட்டுத்தரும். கிட்டத்தட்ட 700 வருஷமா உங்க குலதெய்வம் வழிபாடு இல்லாம இருக்கு. இந்த கன்னி மீண்டு வர்ற நேரத்துக்கு தான் நீங்க உங்க குலதெய்வத்த போய் பாக்கணும்னு நாடி சொல்லுது. இது வர நீங்க போனும்னு முயற்சி ௭டுத்திருந்தாலும் போயிருக்க முடியாது. குலத்தெய்வம் எதுன்னு தெரியுமா?" என நிறுத்த.

மெய்யப்பன் அவர் கூறிய விஷயங்களை கேட்டு அரண்டுவிட்டார். நடந்ததை அப்படியே கூறிவிட்டதில், அவர் கூறிய மற்றவைகளையும் நம்ம வேண்டியதாயிற்று, அதே மோன நிலையில் 'தெரியாது' என தலையாட்ட, "சரி வர்ற சனிக்கிழமை நெறஞ்ச அமாவாசை, நா பிரதிஷ்ட வச்சுறேன் அப்ப திரும்ப வந்து கேட்டு தெரிஞ்சுக்கோங்க" ௭ன்றார் பெரியவர். தலையசைத்து அவர் தட்டில் ஆயிரம் ரூபாய் காணிக்கை வைத்து விட்டு கிளம்பி விட்டனர்.

அங்கு வேங்கை அம்மன் இவர்களின் குழப்ப முகங்களை கண்டு சாந்தமாக சிரித்து கொண்டிருந்தார்.
 
அத்தியாயம் 35
ஜோதிட நிலையத்திலிருந்து, வடிவும் மெய்யப்பனும், வீடு திரும்பிய போது ௭ல்லோரும் அவரவர் வேலையில் பிஸியாக இருக்க. இரவு உணவின் போது எல்லோரும் இருக்கும் நேரத்தில் விஷயத்தை சொல்லலாம் என அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த ஆர்வம் தாங்காமல் வடிவு மெதுவாக ஆரம்பித்தார்.

"இன்னைக்கு நானும், அப்பாவும் நாடி ஜோசியம் பார்க்க போனோம்", ஆச்சரியமாக தகப்பனை பார்த்த சுஹா, "என்னப்பா இந்த ஜாதகம், ஜோசியம் எல்லாமே பொய், நடக்கப் போறத யாராலும் கணிச்சு சொல்லவே முடியாது. அப்டி உண்மைய உள்ளபடி சொல்றவன் இருந்தா ஆக்சிடெண்ட் தனக்கு நடக்கப் போகுதுன்னு மின்னயே தெரிஞ்சிட்டு தன்ன காப்பாத்திக்க மாட்டானா? இந்த மாதிரிலா சொல்லுவீங்க. இப்ப நமக்கு ஒரு ஆக்சிடெண்ட்டுன்னதும் ஜோசியம் பாக்க போயிருக்கீங்க" என்றாள் விழி விரித்து.

"உன் அம்மா தூங்காம தவிக்கிறாம்மா என்ன செய்ய அவளுக்காகனாலும் போயிட்டு வருவோம்னு தோணுச்சு", "ஏன் அங்கிள் உங்களுக்கு அதுல எல்லாம் நம்பிக்க இல்லயா?" என்றான் இரணியன்.

"பெருசா இல்ல மாப்ள. நம்ம ஊர் கோயில்கள்ல, க்யூல நிக்க எரிச்சப்பட்டு சாமி வந்து ஆடுற மாதிரி ஆடி, ஏமாத்தி எல்லோரயும் இடிச்சுட்டு முன்ன போய் சாமி கும்பிட்டு போயிடுறாங்க. இப்டி சாமியவே ஏமாத்துற மக்கள் வாழ்ற காலத்துல இருக்கோம், நம்மள மாதிரி மனுஷங்கள ஏமாத்த எவ்வளவு நேரம் ஆகும்".

அவரின் அவ்வளவு பெரிய விளக்கம் பாவம் அவனுக்கு தான் புரியவில்லை. குத்துமதிப்பாக தலையசைத்து கேட்டுக் கொண்டான். அவன் முழியை கண்டு சிரித்த பாப்பு, "சார்ம் பெரிசா கோவில் குளம்ன்னு போனதில்ல ப்பா. கடைசியா எந்த ஸ்தலத்துக்கு போனீங்கன்னு கேட்டாலே, 'எப்ப போனோம்' ன்னு யோசிக்குற ரகம். அப்டியே போக வேண்டிய சூழ்நில வந்தாலும், விஐபி தரிசனம். எங்கிருந்து சாமி ஆடுறவங்களலா அவர் பாத்துருக்க போறாரு?" ௭ன்றவள், "ஆனா விஷா கோவிலுக்குலா போவான், ௭ங்க ஃபஸ்ர்ட் மீட்டீங்கே கோவில்ல தான், ஏன் விஷா சாமி ஆடுறவங்கள பாத்திருக்கியா நீ?" என தகப்பனிடம் ஆரம்பித்து விஷாவிடம் முடிக்க.

'சிவனே ன்னு சாப்பிடருக்குற நம்மள ௭துக்கு உள்ள இழுக்குறான்னு தெரியலயே' ௭ன அவன் பேந்த பேந்த முழிக்க, "அப்பப்போ எங்க அம்மா ஆடுவாங்களே பாத்ததில்லயா?" என்றாள் வடிவை ஓரக்கண்ணால் பார்த்து.

"நா நல்ல மூட்ல இருக்கேன், என் வாய கிளறி வாங்கி கட்டிக்காத. சொல்ல வந்தத கேக்குறீங்களா பிள்ளைகளா? என்னென்னத்தலாமோ பேசிக்கிட்டு, நம்பிக்க இல்லாத உன் அப்பாவே அவர் பேசுனத கேட்டு அரண்டுடார் தெரியுமா? அப்டியே நம்ம வீட்ல உக்காந்து நடந்ததப் நேர்ல பாத்த மாதிரி சொன்னார். என் பேர என்கிட்ட கேட்காமலேயே கரெக்டா சொல்லிட்டார் தெரியுமா" என அந்த அதிசயத்தை அவர் பெருமையாக சொல்ல.

"நேர்ல உக்காந்து பாத்தத தான் சொல்லிருப்பாரு" பாப்பு சொல்ல, "௭ன்னடி உளறுர அவர முன்ன பின்ன ஹாத்ததே இல்ல" வடிவு ௭ரிச்சலாக சொல்ல.

"இப்போதைக்கு உன் பேர வெளிநாட்டுல ஏதோ ஒரு மூலையில் இருக்கிறவன் கூட நம்மூர் நியூஸ் சேனல் ஒரு வாரம் பாத்திருந்தா சொல்லிருப்பான். இவரு நம்மூரிலயே இருக்கிறாரு இவர் சொல்றதுக்கென்ன" பாப்பு சொல்ல.

"போடி உனக்கு எல்லாத்துலயும் விளையாட்டு, எங்களுக்கு மூணு பொம்பள பிள்ளைக, மூணு பேருக்கும் கல்யாணம் ஆயிருக்கும், அவுங்கவுங்க விருப்பப்படி தான் நடந்திருக்கும்னு எல்லாத்தயும் அப்டியே சொன்னாருங்றேன்".

"லூசு தாம்மா நீ. போன ஒன் வீக்கா நம்ம ஃபேமிலி பயோகிராஃபி தான் மொத்த நியூஸ் சேனலும் சொல்லிட்டுருந்தாங்க. அத பாத்துட்டு நம்ம குடும்ப விவரத்த சொல்றது அவ்வளவு கஷ்டமா? நல்ல ஏமாந்துட்டு வந்துட்டு பெரும வேறப்பட்டுக்கோ" பாப்பு பல்லை கடிக்க.

வடிவு முழிக்க, மெய்யப்பன் புருவ சுழிப்புடன் யோசிக்க ஆரம்பித்தார், "என்னங்க நம்புற மாதிரியே சொன்னாறேங்க, கப்சா விட்டுருப்பாரோ?" வடிவு மெய்யப்பனிடம் கேட்க.

"யோசிப்போம் வடிவு, நம்ம குடும்ப விஷயம் மொத்த ஊருக்கும் தெரிஞ்சிருக்கு, அதும் ரீசென்ட் நியூஸ். பட் அவரு இத கேட்டுட்டு சொன்னாரான்னு தெரியாதே" மெய்யப்பன் குழப்பத்தோடு சொல்ல.

"பரிகாரம் அது இதுன்னு பெருசா ஏதாது பில்ல போட்டுட்டீங்களா?" சுஹா கேட்க. "நேரம் காலம் பாக்காமலேயே ஒரு ஜீவன் உருவாகியிருக்கனுமே இந்நேரம்னு நீ உண்டானத கூட கரெக்ட்டா சொன்னாரேடி" வடிவு சொல்ல.

"எங்க ரிசப்ஷன்ல இவங்க மேரேஜ் அனௌன்ஸ் பண்ணமே ம்மா. அவுங்களுக்குள்ள ஏதோ கஸமுசா, அதான் கமுக்கமா கல்யாணத்த முடிச்சுட்டாங்கன்னு நம்ம காதுபடவே உன் சித்தி பேசுனாங்க தானம்மா. அதுவும் நியூஸ்ல வந்துருக்குமே" மறுபடியும் பாப்பு விளக்க.

"பெருசா எதுவும் ஏமாறல தான ஃப்ரீயா விடுங்க" விஷாவும் சொல்ல, "குலதெய்வத்த கண்டுபிடிச்சு சொல்றேன்னு அம்மாவாசை அன்னைக்கு வர சொல்லிருக்காரு" மெய்யப்பன் சொல்ல.

"ஏமாத்துன்னு தெரிஞ்சிட்டு அப்டியே விட்ருங்க ப்பா" சுஹா சொல்ல. "இல்ல என்ன தைரியமிருந்தா மறுபடியும் வர சொல்லிருப்பான், போயி நாலு வார்த்த கேட்டுத் தான் வரணும்" பாப்பு டென்ஷனாக.

"நீ? கேட்டுட்டு மட்டும வரப்போற? மறுபடியும் ஒரு பிளாஷ் நியூஸ்க்கு ரெடி ஆயிட்ட அப்போ" விஷா நக்கலாக கேட்க.

"வெள்ள பாச்சா உன் புருஷன் வர வர என்கிட்ட ஓவரா பேசுறான் அப்றம் நானு நல்லா குடுத்துருவேன் நீ வருத்தப்பட கூடாது சொல்லிட்டேன்".

"ஏன் உனக்கு மட்டும் தான் கையிருக்கா அவருக்கு இல்லயா?" என சுஹாவும் சண்டைக்கு வர, இது ௭ங்கு போய் முடியுமென புரிந்து "சரி சரி நேரமாகிட்டு சாப்பிட்டு எந்திரிங்க" வடிவு முடித்துவிட.

இப்படி ஒரு குடும்ப சூழல் இரணியனுக்கு புதிது, அமைதியாக அந்த நேரத்தை ரசித்துக் கொண்டான்.

விஷா மெதுவாக பாப்பு காதில், "இப்போல்லா சுஹா மேடம் எனக்கு நிறைய சப்போர்ட் பண்றாங்கல்ல நீ இத பத்தி என்ன நினைக்கிற?" என்றான் அவளிடம் எதையோ எதிர்பார்த்து.

ஆனால் பாப்பு அவனுக்கு பதில் சொல்ல விளையாமல், முன்னே ஹாண்ட் வாஷ் செய்ய சென்ற சுஹா காதில் விழுமாறு, "அவ ஏன் உனக்கு சப்போர்ட் பண்ண மாட்டா, உன் மொத பொண்டாட்டி என்ன கொல்ல பாத்த சந்தோஷம் இருக்கும் இல்லயா?”

'௭ன்னது மொத பொண்டாட்டிக்காக இவுங்க சந்தோஷ படுறாங்களா ௭ன்ன குழப்புறா?' ௭ன நினைத்தவன், "எதுக்கு எத கனெக்ட் பண்ற பாவி, அவங்களே இப்பதான் கொஞ்சமா எனக்கு சப்போர்ட் பண்ணாங்க, அந்த சந்தோஷத்த ஷேர் பண்ணிக்க உன்ட்ட கேட்டதுக்கு இப்டி மண்ண வாரி தட்டிட்ட" என்றான் பாவமாக.

சுஹா செருமி காட்ட, விஷா சென்று வேகமாக கை கழுவி அவளை ஃபாலோ பண்ண போக. "ஹே நில்லு, நீ என்ன அவளுக்கு கீழ வேலையா பாக்குற, அவ கக்கேன்னு இறுமி தான் உன்ன கூப்பிடுவாளோ? ஏய் நில்லுடி விஷாவ நீ என்னன்னு நினைச்சுட்டு இருக்க" என பாப்பு நண்பனுக்காக போர்க்கொடி தூக்க.

"போச்சு டிவோர்ஸ்க்கு பிளான் பண்ணிட்டா" என முணங்கிய விஷா, "இல்ல பாப்பு எல்லார் முன்னயும் ௭ன்ன கூப்பிட ஒரு மாதிரி ஷையா ஃபீல் பண்ணிருப்பாங்க". "சிக்னல்லா கூப்டற கேவலத்த விட, பேர் சொல்லி கூப்பிடுறதுல என்ன கேவளம்" பாப்பு விடுவேனா பார் என பேச.

"உன்னயாடி கூப்பிட்டேன், அவர கூப்பிட்டா அவர் பதில் சொல்லட்டும். அவர் என்னைய அப்டி கூப்பிடாதன்னு சொல்லட்டும் நா பதில் சொல்லிக்கிறேன். இப்ப நீ போய் உன் வேலைய பாக்குறியா?" என்க.

"என் பிரெண்ட் ஒரு அம்மாஞ்சி, அவன் உன்ன ரூம்க்குள்ள விட்டு நாலு மிதி மிதிச்சா இப்டி கூப்பிடுவியா? நீ என்ன சொன்னாலும் சரி சரின்றதால தான இஷ்டத்துக்கு ௭ல்லாம் பண்ணுற" பாப்பு கையை கூட கழுவாமல் மல்லுக்கு நிற்க.

விஷா ஆதரவுக்காய் மற்ற மூவரையும் பார்க்க, வடிவு தீவிரமாய் பாத்திரம் விளக்குவதில் இருக்க, "இங்க பாரு, ஏதோ அடுத்த வீட்ல தான சண்ட நடக்கு நமக்கென்னன்ற மாதிரி மாங்கு மாங்குன்னு பாத்திரத்த கழுவிட்டு இருக்காங்க இந்த மாமியாரு" என நினைத்து கொண்டு மாமனாரை பார்க்க, "சுத்தம் இவரு கண்ஃபார்ம்மா அடுத்த வீட்டு சண்டைய தான் வேடிக்க பாக்குறாப்புல இருக்கு" என்றவன் அடுத்ததாக இரணியன் பக்கம் திரும்ப, அவன் கன்னத்தில் கையை தாங்கி பொண்டாட்டியை சைட் அடித்துக் கொண்டிருக்க, இது ஆவுறது இல்ல என்ற முடிவுக்கு வந்தவன்.

"பரவால்ல பாப்பு, நம்ம சுஹா மேடம் தான" என தனக்கு சப்போர்ட் செய்யும் பாப்புவிடம் அப்படித்தான் அவனால் சொல்ல முடிந்தது. சுஹா தன் நெற்றிக் கண்ணை திறந்து, "வாட் டூ யூ மீன்?" என நேரடியாக அவனிடம் கேட்க.

"இல்ல சுஹா நீங்க தானே என்ன சொல்ல முடியும் அதத் தான் அப்டி சொன்னேன்" என விஷா சொல்ல. "நீ ஏன் பயப்படுற விஷா? உனக்காக கேட்க யாருமில்லனு நினைச்சுக்கிட்டாளா? நா கேட்பேன், உனக்காக நா கேப்பேன்டா".

வராத கண்ணீரை துடைத்த விஷா, "டிவோர்ஸ் தான பாப்பு கேப்ப" என கேட்க. "ஓ! அப்டி வேற உன்ன மிரட்டி வச்சுருக்காளா?" ௭ன்க.

"மங்கி, ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்க்கு நடுவுல வாரதே தப்பு, நீ என்ன கொஸ்டின் வேற பண்றியா?" சுஹா தன் வயிற்றை பிடித்து கொண்டு சண்டைக்கு வர.

"நீ அவன ஹஸ்பண்ட் மாறி நடத்துனா நா ஏன்டி நடுவுல வாரேன்". "இப்ப என்ன அவருக்கு குறை வச்சுட்டேன்னு, உன்ட்ட வந்து சொன்னாருன்னு நீ இந்த துள்ளு துள்ளுற". "நம்ம அப்பாவும், அம்மாவும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப், வேதிகாவும், ஆர்வி மாமாவும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப், நானும் சார்மு ஹஸ்பண்ட் அண்ட் வைஃப், எங்க மூணு பேர்ல ௭ந்த ஹஸ்பண்ட் வைஃப்ப வாங்க மேடம், போங்க மேடம்னா கூப்பிட்டுருக்காங்க, ஹெல்த்தி ரிலேஷன்ஷிப் எங்களிது. நீ உன் அசிஸ்டன்ட் மாறில அவன வச்சிருக்க".

சுஹா முறையோ முறையென முறைக்க, 'குடி கெட்டது, இவ்வளவு நாள் ரூம்க்குள்ளயாது படுத்துட்டுருந்தேன் இனி ஹால்ல தான்' விஷா புலம்ப. "என் புருஷன எப்டி கூப்படுணும்னு நீ டியூஷன் எடுக்க தேவயில்ல" என்க.

பாப்பு மறுபடியும் சண்டைக்கு கிளம்ப, ஒருவழியாக பாத்திரத்தை கழுவி முடித்த வடிவு, "ஏய் இன்னும் தூங்க போலயா? மணி பத்தரை தாண்டிட்டு இந்நேரத்துல சவுண்ட் போட்டுட்டு கடக்கீங்க, நீங்களும் சொல்லாம நின்னு வேடிக்க பாக்கீங்க. மூணு பேரும் மாத்திரை போட்டாச்சா?" என வந்து நிமிடத்தில் சண்டையை முறியடித்து சபையை கலைக்க, பாப்புவையும், விஷாவையும் முறைத்தவாறு சுஹா தனதறை செல்ல, 'இந்த மாமியார் இத பாத்திரத்த கழுவாம வந்து செஞ்சிருந்தா தாவல' என நினைத்து சுஹாவை எப்படி சமாதானப்படுத்த என யோசித்துக் கொண்டு விஷாவும் பின்னே செல்ல.

"ரொம்ப நாள் கழிச்சு, இந்தப் பிள்ளைக 2ம் சண்டை போட்டுக்கிறத பாத்தேனா அதான் ரசிச்சு்டடு நின்னுட்டேன்" என மெய்யப்பன் சொல்ல. "இவளுங்களா சண்ட போட்டுக்கல? இவ்வளவு நாள் உங்க மூணாது மகளுக்கு காதல் கண்ண மட்டுமில்லாம வீட்டயும் சேத்து மறச்சிடுச்சு, அதான் வீடு அமைதியா இருந்துச்சு, இப்ப தெளிஞ்சுட்டா போல, இனி பழைய புராணத்த ஆரம்பிச்சுருவா, அவளுக்கு தான் ஒரு நாளைக்கு ஒருத்தர்ட்டனாலும் சண்ட போடலனா தூக்கம் வராதே" என மாத்திரை எடுத்து கணவரிடம் கொடுத்து விழுங்க சொல்லிவிட்டு மறுபக்கம் வந்து படுத்தார் வடிவு.

"ஜோசியர பாக்க போவோமா வேணாமான்னு ஒரே யோசனையா இருக்கு வடிவு". "போயிட்டு வருவோம்ங்க. அன்னைக்கு சொன்னதுதான் அகஸ்தீஸ்வரன நம்பி போவோம்" என சொல்ல, "ம்" ௭ன்றவாறு மெய்யப்பன் கண்ணயர்ந்தார்.

வெளியே, அவ்வளவு நேரம் அவர்கள் சண்டையை சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டிருந்த இரணியன், "முடிஞ்சதா இனினாலும் தூங்க போலாமா?" என கேட்க, "ம்" என சிரித்து தலையசைத்தாள் பாப்பு குட்டி.

"எதுக்கு இப்ப அவங்க ரெண்டு பேருக்கும் சண்டைய மூட்டிவிட்டு அனுப்பி வச்சுருக்க?" என்றான் அவள் தோளில் கையிட்டு நடத்தி சென்று. "இன்னும் ரெண்டு பேரும் ஒரு டிஸ்டன்ஸ்லயே இருக்காங்க. பாவம் விஷா அவள எவ்வளவு தாங்குறான். அவ பவ்யாவ மனசுல வச்சு விலகி விலகி நிக்கிறா, அதான் சண்டைய கிளப்பி விட்டிருக்கேன். ஒரு சண்டயோட ௭ண்ட், அதுக்கான சமாதானம், அந்த சமாதானத்துக்கப்புறம் வரக்கூடிய ஒரு பாண்ட் கண்டிப்பா ஸ்டராங்காகும் சார்ம்" என்றவாறு கட்டிலில் அவள் இடத்தில் படுக்க, அவளை நேராக படுக்க வைத்தவன் ஏசியையும், டிவியையும் ஆன் செய்துவிட்டு, "நீ இவ்வளவு தூரம் யோசிக்கிற ஆள் இல்லயே, திடீர்னு என்ன மைண்ட்க்கு வேலை கொடுத்துட்ட".

"ஹலோ என்ன நக்கலா? நீங்க இடியட் இடியட்ன்றதனால நா இடியட்யாவே தான் இருப்பேன்னு நீங்க நினைச்சுக்கிட்டா நானா பொறுப்பு".

"ஓகே, ஓ.கே பிரில்லியன்ட் வைஃப். ரொம்ப நேரம் டிவி வைக்க மாட்டேன், சோ சீக்கிரம் தூங்க ட்ரை பண்ணுங்க" என்க.

"எனக்கு தூக்கம் வரலையே" என்றவள் மெதுவாக அவனை நெருங்கி வர, "அதனால என்னைய தாலாட்டு பாட சொல்ல போறியா?" என்றான் குறும்பு சிரிப்புடன்.

அவனின் கேள்வியை கிடப்பில் போட்டவள், "எப்டி சார்ம் இவ்வளவு கண்ட்ரோலா இருக்கீங்க?" என்றாள் உண்மையாகவே சந்தேகத்துடன்.

சத்தமாக சிரித்தான், "இப்போ உனக்கு உடம்பு சரி இல்ல, சோ நா உன்னை எந்த வகையிலும் டெம்ப்ட் பண்ணி கஷ்டபடுத்த கூடாதுன்னு தான் கண்ட்ரோலா இருக்கேன்" ௭ன்றான் அவள் கேள்விக்கு டைரக்ட் பதிலாக.

"இல்ல என் மேல உங்களுக்கு ஆச அதிகம் இல்ல, அதான் உங்களால அப்டி இருக்க முடியுது". "கொஞ்சம் முன்னால தான் உன்ன பிரில்லியண்ட்ன்னு சொல்லவச்ச, அதுக்குள்ள இடியட் மாதிரி கொஸ்டின் பண்ற".

"பேச்ச மாத்தாதீங்க, சிம்லாலையும் இப்டித்தான் விலகி இருந்தீங்க. சரி ஓகே நாம சொன்னதுக்காக இப்டி இருக்காங்கன்னு நெனச்சேன். ஆனா இப்பவும் ஒரு சைட் கூட அடிக்க மாட்டேங்கறீங்க. நா நல்லா நோட் பண்ணிட்டேன், உங்களுக்கு என்மேல ஜஸ்ட் லவ் அவ்வளவுதான். எக்ஸ்ட்ரீம் லவ்லாம் இல்ல".

"ஐயோ பாவம்னு நா நல்லவனா இருக்கிறது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு" என்றவன் அவள் கண்ணத்தில் கோடிழுக்க, அந்த கையை தட்டி விட்டவள், "நா சொன்னதுக்காக நீங்க ஒன்னும் என்ன தொட வேணாம்".


"கை கட்ட அவுக்கல, வலி குறையல, ஆனா பேச்ச பாரு மூக்கி?" என்றான் அவள் மூக்கை திருகி இப்போதும் நக்கலாக. அவள் அமைதியாக திரும்பிப் படுத்து கொள்ள, அவளை திருப்பி இழுத்து தன் மேல் சாய்த்து அவள் கை அழுத்தாதவாறு அணைத்துக்கொண்டான்.

பின் அவளுக்கு பிடித்த சின்சான் வைக்கவும் கொஞ்ச நேரத்தில் அதனுள் மூழ்கி சிரிக்க ஆரம்பித்திருந்தாள். பின்பு கொஞ்ச நேரம் பார்க்க விட்டு 12 மணியாகவும், "லேட்டாயிடுச்சு போதும், தூங்கலாமா?" ௭ன்றவாறு ௭ழுந்து டிவியை அணைத்து, அவளையும் அணைத்துக்கொண்டு படுத்துவிட்டான்.

பொதுவாக படுத்தவுடன் தூங்கிவிடுபவள் பாப்பு. இப்பொழுது ஃபுல் ரெஸ்ட்டில் பகலிலும் தூங்க, நைட்டு தூங்க லேட் ஆகி விடுகிறது. ரூமினுள் அவள் ரெஸ்ட் ௭டுக்க வேண்டியே டிவி செட் செய்து விட்டான் அவள் கணவன். இரணியனுக்கு அவளை புரிந்தது. எந்த கணவனுக்கு தான் தன் மனைவி தன்னை தேடுவது கஷ்டத்தைத் தரும். அவனும் சந்தோசமாகவே அதை அனுபவித்தான். இப்போது அவளை திசை திருப்ப மட்டுமே அவனால் முடியும், அதையே செய்து அவளை தூங்க வைத்து விட்டான். சிறிது நேரம் கழித்து திரும்பி பார்த்தவன், அவள் தூக்கம் கலையாமல் அவளை நேராக படுக்க வைத்து, குண்டடிபட்ட கைக்கு அணைவாக தலையணையை வைத்து போர்வை போர்த்திவிட்டு அவளது உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுத்துவிட்டு சிரித்தவாறே தூக்கத்தைத் தழுவினான்.

விஷா சுஹா அறையில், சுஹா கோவமாக உட்கார்ந்திருக்க, பின் நுழைந்தவன், "விடுங்க மேடம் பாப்பு சும்மா ஜாலிக்கு பேசுறா". "அவள அவ இவன்னு ஈசியா பேச முடியுது, என்ன ஏன் அப்டி கூப்பிட உங்களால முடியல?" ௭ன்றாள் புருவம் சுழித்து. "அவ ஃபர்ஸ்ட்ல இருந்து எனக்கு ஃப்ரெண்ட்", "என்னயும் ஃபிரண்டா அக்சப்ட் பண்ணிக்கிட்ட தான் ஞாபகம்".

"அது இல்ல மேடம் திடீர்னு டக்குனு எப்டி கூப்டன்னு தெரில?", "சரி அத கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கோங்க, நவ் ஜஸ்ட் கால் மீ சுஹா".

மெதுவாக சிரித்தவன், "ஓகே சுஹா, இனி நேம் சொல்லி கூப்பிட்டு பேசப் பழகிக்கிறேன்" ௭ன உடனே ஒத்துக்கொண்டான். "இத அவ சொன்னப்புறந்தான் செய்வீங்களோ? பவ்யாட்ட இப்டி யோசிச்சுட்டு இருந்தீங்களா ௭ன்ன?" ௭ன்க.

'ஐயையோ டிராக் எங்கிருந்து எங்கயோ வருதே' என ஜர்க்கானவன், "எதுக்கு இப்ப பவ்யாவ கம்பேர் பண்றீங்க மே.." என நிறுத்திக் கொள்ள, "என்ன இருந்தாலும் நா செகண்ட் வைஃப் தான. அதனால என்கிட்ட டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ண வேண்டியதுதான்".

'அட ஆண்டவா எவ்வளவு கெத்தா இருந்த புள்ள இப்டி எல்லாம் புலம்புதே. ப்ரக்னென்ஸி ஹார்மோன் சேன்ஜ் காரணமா இருக்குமோ?' என யோசித்து அவன் முழிக்க, அவன் பதில் சொல்லாமல் முழிப்பதில் மேலும் டென்ஷனாகி, "ஒரு வார்த்தைக்குனாலும் அப்டி எல்லாம் இல்ல, உங்களுக்கும் நா இம்பார்ட்டன்ஸ் கொடுப்பேன்னு சொல்ல மாட்டேங்குறீங்க தான?" என்க.

"அப்ப நா உங்களுக்கு இம்பார்டன்ட்ஸ் இவ்வளவு நாளா குடுக்கலன்னு தோணுதா?" என்றான் விஷாகன் மெலிதாக சிரித்து. அதற்கு பதில் சொல்ல சுஹாவால் முடியவில்லை.

"எனக்கு தூக்கம் வருது, வெட்டியா பேசி என் தூக்கத்த கெடுத்துக்க விரும்பல" என்று அவள் ஒரு பக்கமாக படுக்க. 'அதுசரி வக்கீல் மேடம்க்கு பாயிண்ட் கிடைக்கலன்னா வாய்தா வாங்கிடுவாங்க' என இவன் புலம்ப.

"என்ன புலம்புறீங்க?” "நீங்க தூங்குங்கன்னு சொன்னேன் மேடம்". "இந்த மேடத்த விடவே மாட்டீங்களா?", "சரி சுஹா, குட் நைட் சுஹா, ஸ்வீட் ட்ரீம்ஸ் சுஹா, கேஷ நாளைக்கு ஒத்தி வச்சுக்கலாம் சுஹா" என்க, வெடுக்கென திரும்பி கொண்டாலும் உதட்டில் சிரிப்பு இருந்தது சுஹாவிற்கு.

அடுத்து வந்த அமாவாசையை கணக்கிட்டு கொண்டிருந்த வடிவு முந்தைய தினமே மெய்யப்பனிடம் அணத்த தொடங்கிருக்க, "கண்டிப்பா கூட்டிட்டு போறேன்ம்மா புலம்பித் தீர்க்காத" என்ற பின்பே அமைதியாக தூங்கினார்.

மறுநாள் தானும் வருவேன் என கிளம்பிய பாப்புவை, "ஒன்னும் வேணாம், நீ சண்ட போடணும்னு கிளம்பலனாலே நீ போற இடத்துல சண்ட வந்துரும். இதுல இன்னைக்கு சண்டை போடணும்னு வேற கிளம்புற நாங்க போற காரியம் நடந்த மாறி தான். அதனால நீ பேசாம வீட்ல இரு, நாங்களே போயிட்டு வாறோம்".

"தேவயில்லாம உன் பொண்ணு எந்த சண்டைக்கும் போறதில்லன்னு நீயே நம்பலனா எப்டிமா?", "சில நேரம் அத்த மாமாவவிட பாய்ண்ட்டா பேசுறாங்கள்ல பாப்பு" என பேப்பரில் கண்ணை பதித்தவாறு விஷா கேட்க.

திரும்பி அவனைப் பார்த்தவள், "உனக்கு மொறவாசல் பண்ற வேலை இல்லயா? ஃபிரியா இருக்க?" ௭ன்க. "சும்மா விஷாவ இப்டி சொல்ற வேல வச்சுக்காத, அவரு பேபிய பாத்துக்குறதுக்காக எனக்கு ஹெல்ப் பண்றாரு. அத இப்டி அசிங்கமா சொல்லாத அப்புறம் நா மனுஷியா இருக்க மாட்டேன்" என கிச்சனிலிருந்து ஜூஸ் டம்ளருடன் வெளிவந்த சுஹா கடுப்பாக கூற.

"அவனுக்கு ஃபுல் டைம் லாயரா வேல பாக்குற போல இருக்கே?" பாப்பு நக்கலாக சிரிக்க. "இதுங்க வாய பாத்துட்டு இருந்தா நாம கிளம்ப முடியாது, அதுங்க அடிச்சிட்டு கடக்கட்டும் வாங்க நாம போவோம்" என வடிவு வெளியேற, "ம்மா நில்லும்மா ௭னக்கு பதில் சொல்லாம நீ பாட்டுக்கு போற" ௭ன்ற பாப்புவிற்கு.

"உன் வீட்டுக்காரர் எக்சர்சைஸ் முடிச்சு இப்ப வருவாரு, கைக்கட்டு தான் அவுத்தாச்சுல்ல இன்னைக்குனாலும் அந்த புள்ளைக்கு நாலு தோச ஊத்திக் கொடு. சும்மா சின்னப் பிள்ளைக செர்லாக்க குடிச்ச மாதிரி அந்த கான்ப்ளக்ஸ் முழுங்கிட்டு இருக்காம. புருஷன் வயிறு நெறஞ்சாதான், பொண்டாட்டி புருஷன் மனசுல நிறைவா, சொல்றது புரியுதா? ஒழுங்கா தோசை கொடுத்து சாப்பிட வை. எவன்ட சண்டைக்குப் போகலாம்னு அலையுறா" என்றவாறு வடிவு செருப்பை மாட்டி வெளியேற.

சுஹா முறைத்து அறை நோக்கி செல்ல, விஷா குலுங்கி குலுங்கி சிரிக்க, சோபாவில் கிடந்த குஷனை தூக்கி அவனை நாலு அடி அடித்தாள்.

அப்போதும் அவன் விடாமல் உருண்டு புரண்டு சிரிக்க, "ஊர்ல இருந்து வந்துருக்குற உன் மொத பொண்டாட்டிய பாக்க போலையா நீ? அவ வந்து கிட்டத்தட்ட ஒரு மாசம் ஓடிப் போச்சு. நீ ரெண்டு பொண்டாட்டிக்காரன்றது மறந்துருச்சா?" என்க.

ஷாக்காகி ௭ழுந்தவன் அவள் வாயைப் பொத்த போராட, அவளும் அவனை தன் வாயைப் பொத்த விடாமல் மொத்த வாக்கியத்தையும் சொல்லி முடித்திருந்தாள். சுஹா நடையை நிறுத்தி விட்டு திரும்பி இருவரின் சண்டையையும் பார்க்க, "உன் அக்காவே இப்பதான் கொஞ்சமா என் பக்கம் சாய்றாங்க அது பொறுக்கலையா உனக்கு?" என்றான் விஷா பாவமாக.

"அதுக்காக பவ்யாவ விட்ற முடியுமா? அவ மட்டும் பாவம் இல்லயா? நா தான் உனக்கு செகண்ட் மேரேஜ் பண்ணி வச்சேன். நீ மறந்தாலும் நா எப்டி அவள மறக்க முடியும்" என பாப்பு நீதி நேர்மையை கையில் ௭டுத்துவிட.

"அவ சொல்றது கரெக்ட்டு தான், நீங்க பவ்யாவ போய் பாத்துட்டு வரலாமே? இன்னும் ஏன் போகல?" என்றாள் சுஹா கடின குரலில். "அவேன் இதுவர போகலன்னு எப்டி சொல்ற வெள்ள பாச்சா? இவன் போனான், ரோஷக்காரி பவ்யா, அவதான் உள்ள சேத்துக்கல".

"அட லூசு பாப்பு, வாயும் வயிறுமா இருக்கவளுக்கு எதுக்கு இப்டி மனகஷ்டம் கொடுக்கிற மாதிரி பேசுற?" என்றான் விஷா அவள் கழுத்தை நெறிப்பது போல கையை கொண்டு சென்று.

அவன் கையை தள்ளி விட்டவள் "இவளுக்கு என்ன கஷ்டம் ஓ! நீ அவளுக்கு பாக்குற எடுபிடி வேல, அது நீ அங்க போயிட்டனா கிடைக்காதுன்னு ஃபீல் பண்றாளோ?" ௭ன்க.

சுஹா அமைதியாக அறைக்குள் செல்ல. "உன் டார்கெட் நானா? சுஹாவா? ஏன் இப்டி லூசு மாதிரி பேசி அவள டென்ஷன் ஆக்குற" என சுஹா பின்னே நுழைய போனவனை, "உன் புள்ள பொறக்கும் போது அம்மாவும், அப்பாவும் அன்னியோன்னியமா இருக்கத பாத்து சந்தோஷப்படணும் தான்" பாப்பு இதயும் நக்கலாகவே சொல்ல.

"நீ நல்லவளா? கெட்டவளா பாப்பு?" என்றான் உண்மையிலேயே சந்தேகத்துடன். "உன் பொண்டாட்டி கிட்ட கேளு அவ சொல்லுவா" என புருஷனுக்காக தோசை ஊத்த சென்றாள் பாப்பு.

அங்கு ஜோதிட நிலையம் சென்றவர்களை, அந்த பெரியவர், "பிரதிஷ்டை வச்சுட்டேன். ஒரு அரை மணி நேரம் காத்திருங்க குறிப்பு எடுத்துட்டு சொல்றேன்" என்று விட, வெளியில் அமர்ந்திருந்தவர்கள் 45 நிமிடம் கழித்து அவர் அழைப்பின் பேரில் உள் சென்றனர்.

"என்ன சார் இன்னுமே நா சொன்னதுல, இல்ல என் மேல நம்பிக்கை வரலையா?" என்க. "எங்கள பத்தி தான் மொத்தத்தையும் மீடியா சொல்லிருச்சு. புதுசா நீங்க எதையும் சொல்லிடலியே?" என்க.

மெலிதாக சிரித்தவர், "இத நீங்க அன்னைக்கே கேட்டிருந்தாலும் நா பதில் சொல்லிருப்பேன். நாங்க யாருக்கும் இவ்வளவு விளக்கம் கொடுக்கறது இல்ல. நாங்க நாடி பாத்து சொல்றத சொல்லுவோம். நம்புறதும், நம்பாததும் அவங்கவங்க விருப்பம். ஆனா உங்கள நம்ப வைக்க வேண்டிய கட்டாயத்துல நா இருக்கேன். என்ன நீங்க நம்புனா தான் உங்களுக்கு உங்க குல தெய்வம் இதுதான்னு நா சொல்லப்போறதயும் நீங்க நம்புவீங்க. அப்டி நீங்க நம்புனா தான் அங்க போவீங்க. 700 வருஷமா நீங்க வர்ற வரைக்கும் எந்த பூஜையும், புனஸ்காரமு வேண்டாம்ன்னு காத்திருக்கிற அந்த தெய்வம் மனம் குளிரும். காலம் கனிஞ்சு வந்ததால தான் நீங்க என் முன்னாடி உட்கார்ந்துருக்கீங்க. உங்க குல தெய்வம் தான் உங்கள நம்பவைக்க என் மூலமா முயற்சி எடுத்து இருக்குன்னு நினைக்கிறேன்" என்று நீண்ட விளக்கம் கொடுக்க, சுருங்கிய புருவங்களுடன் அவரையே பார்த்திருந்தார் மெய்யப்பன்.

"சரி இதுவர நடந்ததை சொன்னதுனால உங்களால நம்ப முடியல, இனி நடக்கப் போறத சொன்னதுலயும் நம்பிக்கை வரல, அதனால குறுகிய காலத்துல நடக்கப்போற ஒரு விஷயம், உங்க குடும்பத்துக்கு ஒரு உயிர் ஜனிப்பு. அது ஆணா? பொண்ணான்னு? உங்க யாருக்கும் தெரியாது சரி தானே? அது நா சொன்ன மாதிரி உங்க பரம்பரைல அந்தக் கன்னியோட மறுபிறப்பு, அதனால அது கட்டாயமா பெண் குழந்தைதான். அது பொண்ணாவே பிறந்த அப்புறம் நீங்க என்னை நம்பினா போதும். அதுக்கப்புறம் நான் இப்போ குறிச்சு குடுக்குற ஸ்தலம் எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா போதும். அதுக்கப்றம்னாலும் கட்டாயம் குடும்பத்தோட போய் பூஜை பண்ணிட்டு வாங்க".

"அது வந்து உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்ல, பொதுவாவே இதுலல்லாம் நம்பிக்கை இல்லாததால கொஞ்சம் மனசு சுணங்கிடுச்சு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க சொல்லுங்க, நாங்க கேட்டுக்றோம்" வடிவு சொல்ல.
 
ஒரு தலையசைப்புடன், "சரியா சொல்லனும்னா நீங்க இப்ப குடியிருக்கிற இடத்துல இருந்து ஒரு 650 கிலோ மீட்டர் தொலைவில, தெற்கு திசையில காட்டுக்குள்ள இருக்கிற பெண் தெய்வம். கோவில் குகை போன்ற அமைப்புல இருக்கலாம்னு சொல்லுது. இல்ல பாறைக்கு அடிவாரத்துல, இரண்டு பாறை மறைவுல இப்படி ஏதாவது ஒன்னு தெய்வத்தை சுத்தி கற்பாறை இருக்கும், ஆயுதமேந்திய ஆக்ரோஷமான தெய்வம். வழிபடாம இருக்கதனால பாத கூட மறச்சு இல்லாம போயிருக்கலாம். பொதுவாவே குலதெய்வம்ன்றது வம்சா வழியா கும்பிட்டு வருவாங்க, ஒரு குடும்பம் திசை மாறிப் போனாலும் மத்தவங்க அந்த கோயிலை பராமரிச்சுட்டே வருவாங்க, அதனால திசையை சொன்னாலே ஓரளவுக்கு கண்டுபிடிச்சுடுவாங்க. ஆனா உங்க குல தெய்வம் உங்க வருகைக்காக மட்டுமே காத்திருக்குது. அதனால காட்டுக்குள்ள மறைஞ்சு இருக்கிற அம்மனை கண்டுபிடிக்குறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா பெரிய துறையில இருக்கீங்க உங்களால கண்டிப்பா முடியும். இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டாளே, அவளே சன்னதி திசையும் காண்பிப்பா" என முடித்து விட்டார் தன் கடமையை.

வணக்கம் வைத்து இருவரும் கிளம்ப, "புதுவரவு பொண்ணுனு உறுதியானப்புறமே நீங்க உங்க தேடுதல் வேலையை தொடங்கினா போதும்" புன்சிரிப்பு மாறாமலே இருவரையும் வழியனுப்பி வைத்தார். இவர் கட்டாயம் தன்னைத்தேடி திரும்ப வருவார் என்பதை சொல்லாமலே விட்டுவிட்டார் அந்த பெரியவர், மனதில் வைத்து சிரித்துக்கொண்டு.
 
அத்தியாயம் 36
பாப்பு கை கட்டு நீக்கிய பின்பும், கணவனின் கவனிப்பில் சொகுசாக இருக்க, இரணியனின் தற்போதைய தற்காலிக மேனேஜர் வேலையை விஷா தான் பார்த்துக் கொள்கிறான். தெய்வநாயகத்தின் ஹோட்டல் வேலைக்கும் போக வர இருக்க. அதனால் 24x7 பிசியாக சுற்றி வந்தான். சுஹாவை ஹாஸ்பிட்டல் அழைத்து சென்று வருவதும் அவன் கடமையே, சுஹா தான் கடந்த மாத பழக்கமாக எதற்கெடுத்தாலும் விஷாவை தேட ஆரம்பித்திருந்தாள். அதிகாலையே செல்பவன் வீடு திரும்ப லேட் நைட் ஆகிவிடுகிறது. மற்றவர்களும் சுஹாவின் தேடலை உணர்ந்தனர், ஆனால் கண்டுக்காமல் இருந்து கொண்டனர்.

பொறுத்து பொறுத்து பார்த்தவள், வேறுவழியின்றி தானே போன் அடித்து, "எப்ப வருவீங்க? இப்ப எங்க இருக்கீங்க?" என்று மெல்ல மெல்ல கேள்விகளைக் கேட்கத் தொடங்கியிருந்தாள்.

இப்படி சென்று கொண்டிருந்த நாட்களில், அன்றும் வீடு காலை நேர பரபரப்பிலிருந்தது, மெய்யப்பன் கோர்ட்க்கு கிளம்பிக் கொண்டிருக்க, இரணியன் ஒரு கையில் கிரீன் டீயும், மற்றொரு கை செல்லில் வலைதலங்களில் பிசியாகயாகவும் இருக்க, பாப்பு டிவி சேனலை மாற்றிக் கொண்டு மூணு பேர் உட்காரும் சோபாவில் படுத்து காலை ஆட்டிக் கொண்டிருக்க.

விஷா வேகமாக வந்து அவளின் சோஃபா பின் நின்று இரணியனுக்கு தெரியாமல் அவளை அழைக்க சைகையில் முயற்சி எடுக்க, அவள் இவனை கவனிக்காமல் டிவியில் மொத்த கவனத்தயும் கொண்டிருந்தாள், விறுவிறுவென வந்த வடிவு அவள் தலையில் நறுக்கென கொட்டி, "எந்திரிடி மொத, மாப்ள எவ்வளவு நேரமா கூப்டிட்டு இருக்காரு, எனக்கென்னன்னு டிவியை மாத்திடிருக்க. என்ன கொழுப்பா?" என்க.

பாப்பு, திடீரென வாங்கிய கொட்டில் மண்டை கலங்கிட, 2-3 நொடி என்ன பேசுது இந்த அம்மா என தான் பார்த்திருந்தாள். அவள் முழியை வைத்து மறுபடியும் கொட்ட வர, சுதாரித்தவள், "ம்மா எதுனாலும் வாய்ட்ட சொல்லுமா, என்ன வேணும் உனக்கு இப்போ?" என தலையை தேய்த்து கொண்டே எறிந்து விழ.

"ஆமா வா, உன்ன இடுப்புல தூக்கி வச்சுக் கொஞ்சணும். அதுக்கு தான் தேடி வந்தேன்". "ம்ம்மா" பாப்பு பல்லை கடிக்க, "மாப்ள கூப்புடுறத கூட கேக்காம அப்டி என்ன கனவுல இருக்க நீ?" என்க.

"கனவுல இருக்கேனா, எந்த மாப்ள ம்மா?" என தனக்கு முன்னால் அமர்ந்திருந்த இரணியனையும், பின் நின்ற விஷாகனையும் மாறி மாறிப் பார்த்தாள். இரணியனுக்கு கடந்த ஒரு மாதத்தில் தாய் மகள் பந்தம் அச்சர சுத்தமாக புரிந்து விட்டிருந்தது. அவர்கள் பாசமாக பேசாமல் கூட ஒருநாள் கழிந்தாலும் கழியும், சண்டையில்லாமல் ஒரு பொழுது கூட கழியாது. இன்று காலையிலேயேவா என்றுதான் பார்த்தான்.

அவன் பார்த்ததை வைத்து,'சார்ம் கூப்டல போல' ௭ன முடிவுக்கு வந்தவள், "நீதான் அந்த மாப்ளயா? ஏன் முன்ன வந்து கூப்ட மாட்டியோ" என்றாள் விஷாவிடம்.

மறுபடியும் அவளை கொட்டிய வடிவு, "அதென்னடி நீ! நீங்க வாங்கன்னு பேச மாட்டியா? அவரு உன் அக்கா புருஷன்னு ஞாபகத்தில் இருக்கட்டும்" என்க. அவரை விறுவிறுவென இழுத்துச் சென்று கிச்சனில் விட்டவள், அங்கு அடுப்பில் புட்டு அவிந்து கொண்டிருக்க, "அடுப்புல நிக்கும்போது ஃபுல் கான்சன்ட்ரேஷனும் அதுல தான் இருக்கணும். அப்ப தான் புட்ட கரிப்புடிக்காம ௭டுக்க முடியும்" என்று விட்டு செல்ல, "புட்டு கரிபுடிக்குதா? போடி லூசு" என வடிவு புட்டில் கவனமாக.

தலையை உலுக்கி தன்னை நிலைப்படுத்திய பாப்பு, "எதுக்கு கூப்பிட்ட விஷா?" என வர, 'அரவமில்லாம இவகிட்ட சைகையில விஷயத்தை கன்வேய் பண்ணிட்டு போயிடலாம்னு நினைச்சதுக்கு அவர்ட்டயே அம்மாவும், பொண்ணும் ௭ன்ன போட்டுவிட்டு கேள்விய பாரு?' என அவன் பல்லை நறநறவென்று கடித்தது வெளியில் வரை கேட்டது.

அதற்கும் பாப்பு, "என்னது சாப்டுற எனக்குத் தராம?" என்க. அவன் அப்பொழுதும் முறைக்க, "ஹே என்ன முறைக்கிற? உன்னால கொட்டு வாங்குனது நானு, நாதான் உன்ன முறைக்கணும்" என அடுத்த சண்டைக்குத் தயாராக.

"தாட்சா" என்ற இரணியன், "நீ என்ன சொல்ல வந்த விஷா?" என்க. "நம்ம தாஷிப் சார்(டிரைக்டர்) ஒரு ஸ்டோரி சொல்லணும்னு கால் பண்ணாரு. நீங்க ரெஸ்ட்ல இருக்கீங்கன்னு சொன்னேன். ஒரு ஹாஃப் அன் ஹவர் போதும். அவரு வேற ஸ்டோரில கமிட்டாகும் முன்ன நா கால்ஷீட் வாங்கனும்னு ஒரு 3 டேஸா மாத்தி மாத்தி உங்க கிட்ட கேட்டியா கேட்டியான்னு போன் அடிச்சுட்டே இருந்தாரு. நேத்துதான் நீங்க இப்போதைக்கு யாரும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு சொன்னீங்கன்னு சொன்னேன். உடனே அவரு நா இன்னைக்கு நேரிலேயே வரேன் ஒரு ஹாஃப் அன் ஹவர் ப்ளீஸ்னு காலங்காத்தால போன் பண்ணாரு, அதான் இன்னைக்கு பாப்புட்ட போன குடுத்துட்டு, சமாளிக்க சொல்லிட்டு போவோம்ன்னு. பாப்புக்கிட்டேனா இவ்வளவு தூரம் ஸ்ட்ரெஸ் பண்ண மாட்டார்ன்னு தோணுச்சு" என அவன் படபடவென சொல்லி முடிக்க.

"ஸ்டோரி கேட்கிறதுல என்ன சார்ம் கஷ்டம், வரட்டுமே" என பாப்பு சொல்ல. "எந்த டிஸ்டர்பன்ஸ்ம் இல்லாம ஃபிரியா ரிலாக்ஸா உக்கார்ந்துதான் சார் ஸ்டோரி கேட்பாங்க பாப்பு. சொல்லுறவங்களுக்கும் அதுதான் கம்ஃபர்டப்ளா இருக்கும்" என்க.

"ஓ! இங்க ஏற்கனவே வெள்ள பாச்சா கிளைண்ட்ஸ் வேற வந்து போயிட்டுருக்காங்க. பத்தாக்குறைக்கு எங்க அம்மா கிட்சன்ல உருண்டு புரண்டு பாத்திரங்கள உருட்டி, பொரட்டி சமைப்பாங்க. கஷ்டம் தான் கத கேக்குறது, ௭ன்ன பண்ணலாம்" என மோவாய் தட்டி யோசிக்க.

"அத்தைய வம்புக்கு இழுக்குறதே நீதான். அப்றம் அவங்க கொட்டாம என்ன செய்வாங்க" விஷா சொல்ல. சாய்ந்தமர்ந்து, இருவருமே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என பார்த்திருந்தான் இரணியன்.

"பேசாம கீழ நம்ம அபார்ட்மெண்ட் மீட்டிங் ஹால்லயே, மீட்டிங் வெச்சுக்கிட்டா என்ன? யாரும் அந்த பக்கம் வராம பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு" என்க.

"நாம இப்போ ஒத்துட்டுருக்குற படம் அனௌன்ஸ்மென்ட் எப்ப பண்றதா இருக்காங்க விஷா?" இரணியன் அடுத்த கேள்வியாக அதை முன் வைக்க. "அது படத்தோட டைட்டில் செலக்ஷன்ல ப்ரடியூசரும், டைரக்டரும் இது வேணா அது, அது வேணா இதுன்னு டிஸ்கஷன்லயே இருக்காங்க சார்".

"வாரவங்ககிட்ட பொய் சொல்ல முடியாது விஷா, சரி ஓகே அவுங்க டிஸ்கஸ் பண்ணிட்டே இருக்கட்டும். நீ தாஷிப்ப வர சொல்லு, ஈவ்னிங் 3 ஓ கிளாக் ஷார்ப்" என்று விட, "ஓகே சார்" என அவன் போனுடன் நகரப் போக. பாப்பு மறுபடியும் டிவி பார்க்கும் முடிவுடன் ரிமோட் உடன் அமர்ந்து கொள்ள.

"ஒரு நிமிஷம் விஷாகன்" என நிறுத்தினாள் சுஹா. "என்ன?" என்பதாய் அவன் அவள் முகம் பார்க்க, அவளோ நேராக பாப்பு முன்வந்து நின்றவள், பாப்பு கையிலிருந்த ரிமோட்டை பிடுங்கி விட, "ஏன் நீ டிவி பாக்க போறியா?" என்ற பாப்புவின் கேள்விக்கு, விஷாகன் கையிலிருந்த போனை புடுங்கி, பாப்பு கையில் வைத்தாள்.

"வெட்டியா இருந்தா டிவி தான் பார்க்கத் தோணும். கை சரியாயிடுச்சு தான, இனி உன் வேலைய நீ பாரு" என்று விட்டு திரும்பி விஷாகனிடம், "ஈவினிங் 6 நீங்க வீட்ல இருக்கணும். நடு சாமம் வர்ற வேலைலா வேணாம்" என்றுவிட்டு அவள் வடிவை தேடிச் செல்ல.

விஷா தன் கையை பிசைந்து, "சாரி சார்" என்க. "அவ திட்டிட்டு போறது என்ன. நீ சாரின்னு சார்ம்ட்ட சொல்லற". "சும்மா இரு தாட்சா. நீ கிளம்பு விஷா. ஷி இஸ் ஆல்ரைட் நௌவ், ஷி வில் டேக் கேர்" ௭ன விஷாவை அனுப்பி விட்டான். அவன் மெதுவாக வெளியேற. பாப்புவும், இரணியனும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

ஈவினிங் வந்த தாஷிப் கதை சொல்லி செல்ல, இரண்டு நாள் கழித்து பாப்பு மூலமாகவே ஓகே சொல்லிவிட்டான். ஏப்ரல் 2020 வரை கால்ஷீட் ஆல்ரெடி ஃபுல்லாகியிருக்க, ஒன் மந்த் ரெஸ்ட் ஆன பின் ஜூன் 2020 - செப்டம்பர் 2020 டேட்ஸ் கொடுத்தான்.

இதற்கிடையில் பவ்யா இருமுறை இவர்கள் குடும்பத்தை தாக்க முயன்று விட்டாள். ஆம் இருமுறை முயற்சியே அவள் அதிக சிரமப்பட வேண்டியிருந்தது. போன் மூலமும் அவளால் வெளியில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவள் அண்ணனாகிய இரணியன் மிரட்டி சென்றதாக அவர் அன்னை கூறியதிலேயே தான் முழுமையாக கண்காணிக்கப்படுவோம் என அறிந்திருந்தாள். ஆனாலும் ஒரு துணிச்சலில் தோட்டக்காரன் அசந்த நேரத்தில் அவன் மொபைலில் இருந்து, ட்ரக் சப்ளை பண்ணுபவனுக்கு முயன்றாள். வேறு யாரோ போன் எடுக்கவும் கட் செய்து விட்டாள்.

கைவசமிருந்த ட்ரக் எல்லாவற்றையும் காலி செய்து, இப்போது கை, கால் பரபரப்பாக ஆரம்பித்து இருந்தது. அவர்கள் குடும்பத்தை பலி வாங்குவதை விட, போதையின் தேவை அவளை ஆட்டி படைக்க தொடங்கியது. தன்னை காட்டிக் கொடுக்காத வீட்டாள்களையும், ஜானையும் ஒரு வழியாக்கி கொண்டிருந்தாள். அவர்கள் அவளுக்காக அமைதியாகவில்லை, இரணியனே அமைதியாகயிருக்க தாங்கள் அதை மீற வேண்டாம் என அமைதி காத்தனர், ௭ன்பது அவளுக்கு புரியவில்லை ௭ன்றாலும், சுய நினைவோடு இருந்த அவளது பெற்றோர் இருவரும் நன்றாகவே புரிந்தது. அவளை அடக்க அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் விஷாகன் இரண்டாவது முறை அவளை காண வந்தது. சும்மாவே அவளை விட்டு விலகி ஓடுபவன் இப்படி இருப்பவளைக் கண்டால் தன் மகளை இதைக் காரணம் காட்டியே ஒதுக்கி விடுவான் என பயந்த தில்லைவாணி அவனை இம்முறையும் விரட்டிவிட்டார்.

அவன் அவள் கோபத்தை தணிக்கவே விளைந்தான். என்று சுஹா கழுத்தில் தாலி கட்டினானோ, அதாவது சுஹாவை தொட்ட பின் அவனால் பவ்யாவின் மூச்சுக்காற்று இருக்கும் இடத்தைக் கூட நெருங்க முடியவில்லை. அவளாகவே தேடி வந்த ஒரு முறையும் அவன் சுஹாவின் அருகில் இருப்பது போலவே சூழ்நிலை அமைந்தது. அதற்கான காரணம் அந்த பரமசிவனே அறிந்த ஒன்று.

பவ்யாவின் இரண்டாவது முயற்சியாக நடு சாமத்தில் காரை எடுத்துக்கொண்டு டிரக் சப்ளையரின் வீடு தேடி கிளம்பி விட்டாள். அவள் கேட்டை தாண்டிய மறுநிமிடமே அவளை இரணியன் நியமித்த ஆட்கள் பின்தொடர தொடங்கி விட்டிருந்தனர். அதை அவளும் அறிவாள், ஆனாலும் அவளுக்கு எல்லாவற்றையும் விட தற்போதைய தேவை போதை ஆகிப்போனது. அவள் எதிர் பார்த்து வந்த ஆள் கிடைக்காமல் போக, அந்த நேரத்தில் அவளை அங்கு கண்ட வேறொருவன் பணத்திற்கு ஆசைப்பட்டு அவளுக்கு வேண்டியதை கொடுத்தான், அதிகமாகவே வாங்கிக் கொண்டாள். அவள் வேறு எதுவும் பேசாமல் வீடு திரும்ப, இரணியன் ஆட்கள் அவனை நையப் புடைத்தனர்.

இரணியன் அடுத்த கட்டமாக மறு மாதம் சேலரி டெபாசிட் அக்கவுண்ட்ஸ் விஷாவும், பாப்புவும் பார்த்துக்கொண்டிருக்கையில், பவ்யாவின் அனைத்து டிரான்ஸாக்சனயும் முடக்கிவிட சொல்லிவிட்டான். காரணம் தெரிந்ததால் இருவருமே அதை ஆட்சேபிக்கவில்லை.

ஆனால் விஷாவிற்குத்தான் உறுத்திக்கொண்டே இருந்தது. அவள் திருந்தி தானே இருந்தாள். தான் இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டது தெரிந்த பின் தானே மறுபடி இப்படியானாள் என்ற உறுத்தல் அவனிடம் இருந்தது.

அதை பாப்புவிடம் சொன்ன பொழுது, "அவளுக்கு ஒரு ரீசன் தேவபட்டது விஷா, இத யூஸ் பண்ணிகிட்டா அவ்ளோ தான். இப்ப நா அவ இடத்துலயும், உன் இடத்துல சார்ம்மு இருந்திருந்தா, நா என்ன செஞ்சுருப்பேன் தெரியுமா?" என்றாள்.

"பளார்னு ஒன்னு விட்ருப்ப" என்றான் விஷா சோகமாக. "ம்கூம்☹️☹️, கைல கிடச்சத ௭டுத்து ஒரே சொருகா சொருகியிருப்பேன். என்ன தவிர வேற பொண்ண அவரு நினைக்க கூட விடமாட்டேன்".

"அது சரி சாரோட ப்ரோபெஸ்சன்ல எத்தன பொண்ணுங்களோட அவர் கிளோஸா நடிக்குறாரு. அதுலா உன் கணக்குல வராதா?” "அது நம்பிக்கை! வேற டிபார்ட்மெண்ட்". "என்னவோ பாப்பு. நீ ஈஸியா சொல்ற பவ்யா மறுபடியும் இப்டி மாற நானே காரணமாகிட்டேனோன்னு தோணிட்டேயிருக்கு".

"நீ வேணும்னா, என் அக்காவோட நின்னு அவ போராடியிருக்கணும் விஷா". "அப்டி போராடியிருந்தா இரண்டு பக்கமும் நா இடிபடுறதப் பாத்து நீ ஜாலியா இருந்திருப்ப?" விஷா சிரிக்காமல் சொல்ல.

"ஆமா பின்ன, சுஹாவும், பவ்யாவும் உனக்காக உருண்டு புரண்டு சண்ட போட்டுருப்பாங்க, நமக்கு என்டர்டைன்மென்ட் ஆகியிருக்கும். எல்லாமே கனவாவே போயிடும் போல இருக்கு. அவ பாட்டுக்கு தேர்ட் ரேட் கிரிமினல் மாதிரி கொலை செய்ய கிளம்பிட்டா, அதும் உன்ன விட்டுட்டு கல்யாணம் பண்ணி வச்ச என்ன, இதெல்லாம் நா எங்க போய் சொல்றது" என இருவரும் பேசிக் கொண்டது பேசி கொண்டதாகவே இருந்தது.

நாட்கள் செல்ல அடுத்தடுத்த விஷயமாக சௌத் இந்திய பிலிம் ஸ்டார் அவார்ட்ஸில் ஃபேவரிட் ஆக்டர் அவார்டு இரணியனுக்கும், ஃபேவரிட் பிலிம் தமிழில் அரக்கன் படமும் இடம் பெற்று விருதை பெற்று தந்தது. பாப்புவையும் பங்ஷனுக்கு அழைத்து சென்று அவார்டு வாங்கினான். தற்போதைய 'நேசமிகு நெஞ்சம்' படமும் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று கொண்டிருந்தது.

அடுத்து வந்த நாட்களில், "புராரி வனம்" படத்தின் பூஜையை முடித்து பத்து தினங்களில் ஷூட்டிங்கை தொடங்க இருந்தனர். ஆயுஷ் படத்தின் கதையாக சொல்லப்பட்டது. அந்த படத்தின் நாயகன் ஒரு ஃபாரஸ்ட் ஆபிஸர், அவன் கட்டுப்பாட்டில் இருக்கும் காட்டுப் பகுதியில் ஒரு விமானம் கன்ட்ரோலின்றி விழுந்து விடுகிறது. அதில் மினிஸ்டரின் மகளும் பிரயாணம் செய்திருக்க பிரஸர் அதிகமாகிறது. தேடுதல் பணி தீவிரமாகிறது. அதில் தான் ஹீரோவிற்கு ரகசிய செய்தியாக, அந்த மினிஸ்டர் பெண்ணின் செருப்பில் வைத்து பல கோடி மதிப்புள்ள வைர கற்கள் கடத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப் படுகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிப்பது தான் கிளைமாக்ஸ். இதில் தேடுதல் உதவிற்காக தடயவியல் நிபுணராக வரும் பெண் தான் ஹீரோயின். காட்டுக்குள்ளே தான் 70% படம் எடுக்கப்பட இருக்கிறது. லொகேஷன் பார்த்து அசிஸ்டன்ட் டைரக்டர் போட்டோ எடுத்து அனுப்ப, அதில் பெர்மிஷன் கிடைத்த, தங்கி படமெடுக்க ஏதுவான காடுகளை செலக்ட் செய்து. அது ௭ல்லாவற்றயும் படத்தின் மொத்த குழுவுக்கும் அனுப்பி விட்டான் ஆயுஷ்.

பாப்பு மூன்று மாத ரெஸ்டில் முழுமையாக குணமாகி, அவனது புராரி வனம் படத்திற்கு தேவையானவற்றை தயார் செய்தாள். அவனுக்கு அந்த படத்திற்கான சேலரி டீடைல்ஸ், ஐந்து மாதகால தேவையான சாப்பாடு, காஸ்டியூம், மேக்கப், ஹேர் டிரஸ்ஸர், கேரவன், சாங் & ஸ்டண்ட் டீடைல்ஸ், ஸ்டோரி ஸ்கிரிப்ட் என அத்தனையும் அக்ரிமெண்ட் ஆக்கப்பட்டு, ஹீரோ அண்ட் ப்ரடியூசர் இருவரிடமும் சைன் வாங்கப்பட்டது. அது எல்லாவற்றையும் செக் செய்து, அலாட் செய்யும் பொறுப்பு அவளிதுதான். இதற்குள் தான் பட பூஜைக்கான தேதி ப்ரடியூசரிடமிருந்து வந்தது.

இதில் பாப்புவிற்கு தான் ஏக சந்தோசம். காட்டுக்குள்ள போய் மூன்று மாதம். ஏனோ அவளுக்கு அதை நினைக்கும்போதே இனித்தது. "எல்லோருக்கும் இது கிடைக்காதுல்ல சார்ம். அந்த லைஃப்பும் எப்டி இருக்குன்னு பார்த்துட்டு வந்துரலாம். என் காலேஜ்ல ட்ரக்கிங்லா கூட்டிட்டு போவாங்க, ஆனா அங்க ஸ்டே பண்றது இல்ல. ஃபர்ஸ்ட் டைம் காட்டுக்குள்ள ஸ்டே வெரி எக்ஸைட்டட்".

"நீ ரொம்ப எக்ஸைட் ஆகுறன்னு நினைக்கிறேன். நாமளும் இப்ப மேக்ஸிமம் பெர்சன்ஸ் அலோட், மக்கள் ரோமிங் இருக்குற பிளேஸ்ல தான் ஸ்டே பண்ணப்போறோம். படத்துல பாக்கிற மக்களுக்குத்தான் அடர்ந்த காடு மாதிரி தெரியும். பட் நாம அவுடர்ல, சேப்டி பிளேஸ்ல தான் இருப்போம்" ௭ன்க.

"ம்ச் நீங்க எனக்கு சுத்தி காட்டுங்க. நாம காட்டுக்குள்ள போயிட்டு வரலாம், அவ்வளவு தூரம் போயிட்டு காட்ட சுத்தி பாக்லனா ௭ப்டி" என்றாள் கண்ணில் கனவு மின்ன.

"உன்ன யோசிக்க விடுறது தப்பு, ஆனா அத விட பெரிய தப்பு உன்ன பேச விடுறது. சீக்கிரம் கிளம்பு, 2 டேஸ் நாம பாண்டிச்சேரி போறோம். சூட் ஸ்டார்ட்டாகிட்ட அப்புறம் ரெஸ்ட் ரெம்ப கஷ்டம். சோ 2 டேஸ் ஃபுல்லா, லாஸ்ட் 3மந்த்ஸ்க்கும், இனி வர்ற 3 மந்த்ஸ்க்கு சேத்து என்ஜாய் பண்ணிட்டு வருவோம்" என அவளை கிளப்ப.

"சரியான கஞ்ச பிசினாரி சார்ம் நீங்க. ஹனிமூன இப்டி சிம்பிளா பாண்டிச்சேரில முடிக்குறீங்க. இந்தா இருக்குற பாண்டிச்சேரிய நா பாத்ததே இல்லனா நினைச்சீங்க?”

குறும்பாக சிரித்தவன், "ம், அதுக்குத்தான் நீ பாக்காத இடத்துக்கு கூட்டிட்டுப் போனா உனக்கு வெளில போணும் வேடிக்க பாக்கணும்லா தோணும். அந்த தாட்லா உனக்கு வரக்கூடாது, 2 டேஸ் மொத்தமும் எனக்கே எனக்கு மட்டும். உன் நினைப்புலயும் வேற யாரும், வேற எதுவும் வரக்கூடாது".

"பார்றா, லவ் டயலாக்ஸ அள்ளி தெளிக்றீங்க, எந்த மரத்தடி ஞானோதயம் சார்ம் திடீர்னு". "அத போற வழில சொல்றேன். இப்ப கிளம்பு". எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு விடைபெற்று கிளம்பினர் இருவரும்.

அவர்களுக்கென முன்னைய ஹனிமூன் சூட் ரெடியாகி இருந்தது, சகல வசதியுடன் இருந்தது அவ்வறை, மெழுகுவர்த்தியும், ரெட் ரோஸ்ஸும்மாக ஒருவித உணர்வலைகளை இருவருக்கும் கிளப்பி விட்டது என்பது மறுக்கப்படாத உண்மை. அவள் முகத்தையே தான் பார்த்திருந்தான் இரணியன். ரூமை சுற்றி பார்வையை கொண்டு வந்து அவனிடம் நிறுத்த, புருவம் உயர்த்தி "என்ன ஏகப்பட்ட ரியாக்ஷன்ஸ் வந்துட்டு இருக்கு உன் ஃபேஸ்ல?", "ஒரு மாதிரி, ம்கூம் பல மாறி இருக்கு சார்ம், பரவசமா ஐயோ சொல்லவே தெரியல. ஆனாலும் இந்த ரூம்ல பலபேர் ஹனிமூன் கொண்டாடியிருப்பாங்க தானே?"

"இல்லம்மா இது என் ரூம், எனக்கு மட்டுமான பர்சனல் ரூம்". "எத்தன டைம் இந்த ரிசார்ட்டுக்கு லாங் டிரைவ் கூட்டிட்டு வந்திருக்கீங்க ஒன்ஸ் கூட இங்க கூட்டிட்டு வரலையே?” "மறுபடியும் ##ஹாஸ்டேக்ல ட்ரெண்ட் ஆகுறதுக்கா?" என்றவன் அவளை பின்னிருந்து அணைக்க.

அவன் கைக்குள் திரும்பி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவள், "நீங்க ரொம்ப சேன்ஜ் ஆகியிருக்கீங்க தான சார்ம். முன்னால சிரிக்க காசு கேப்பிங்க, இப்ப தாராளமா சிரிக்கிறீங்க தான? நீங்க சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா, டே ஃபுல்லா பார்த்துட்டே இருக்கலாம். எப்டி இப்டி சிரிக்றீங்க?" என்றாள் அவன் சிரிப்பை பார்த்து ரசித்து.

"ஆரம்பிச்சிட்டியா இப்டியே பேசிட்டு தான் இருக்க போறியா? அழகா சிரிக்கிற அந்த லிப்ஸ்க்கு ஏதாவது குடுக்கலாம்ல?", "குடுக்க மாட்டேன்னு நா எப்ப சொன்னேன்" என்றவள் எக்கி முத்தமிட முயல, அவளை அப்படியே அள்ளிக் கொண்டு கட்டிலில் சரிந்தான். திகட்ட திகட்ட காதலை பரிமாறிக் கொண்டு 3 நாளில் வீடு திரும்பினர்.

அடுத்து வந்த நாட்களில் "புராரி வனம்" படப்பிடிப்பு தொடங்கியதும் அதில் பிசியாகி விட்டனர். விஷாகன் எப்பொழுதும் போல் அவன் வேலை மற்றும் சுஹா என்றிருந்தான். எல்லோரும் மெய்யப்பன் வீட்டில் தான் இருந்தனர். பாப்பு கூட, "உங்களுக்கு உங்க வீட்ட தேடலயா? கைதான் நல்ல ஆயிடுச்சே அவங்ககிட்ட இருந்து என்ன நான் பாதுகாக்க முடியும். யூ டோன்ட் ஒரி" என பெருந்தன்மையாக சொல்லி பார்த்தாள், "இல்ல எனக்கு இங்க இருக்க புடிச்சிருக்கு. இயல்பா இருக்குற இவங்க ௭ல்லாரோட ஆட்டிட்யூட் புடிச்சிருக்கு. நாம எப்டியும் சூட்டுக்கு கிளம்பணும், அதுவர இங்க இருக்கலாமே" என்று விட. அவனுக்காகவே அவள் கேட்டாள், அவனே அங்கிருக்க பிடிச்சிருக்கு எனும் போது என்ன கவலை என்று விட்டு, வெகு நாள் கழித்து அப்பார்ட்மெண்ட் ஹாலில் சீரியல் பார்க்கும் ஆண்ட்டிஸோடு ஐக்கியமாகிவிட்டாள்.

அந்த மாதம் சுஹாவிற்கு 9வது மாதமாக வளைகாப்பிட்டனர். அப்பார்ட்மெண்ட் ஆட்களாலே அந்த ஹால் நிரம்பி விட்டிருந்தது. சுஹாவை மாமி வீட்டில் இருந்து அழைத்து சென்று, அபார்ட்மெண்ட் கம்யூனிட்டி ஹாலில் ஃபங்ஷன் முடித்து, வடிவு தன் வீட்டுக்கு அழைத்து வருவதாக ஏற்பாடாகியது. விழாவிற்கான செலவு மொத்தத்தையும் விஷா தனதாக்கிக் கொண்டான். இரணியனுக்கு அது தன் வீடு பங்க்ஷன் என்றாலும், கூட்டம் கூடி விடக்கூடாதே என்ற எண்ணத்தில் டயத்துக்கு வந்து செல்வதாக கூறி விட்டான்.

விஷாகன் தான் முதல் வளையிலிட்டான். அவன் முகத்தையே பார்த்தவளிடம், "என்ன சுஹா?" என்றதற்கு, "இன்னைக்கு இந்த பங்க்ஷன் மொத்த பொறுப்பையும் நீங்க ஏத்துக்கிட்ட மாதிரி லைஃப் லாங் எங்க ரெண்டு பேரோட பொறுப்பையும் ஏத்துப்பீங்களா? ஒரு செகண்ட் கூட எனக்கும், என் பிள்ளைக்கும் நீங்க இல்லனான்ற '?' கொஸ்டின் மார்க் வராம பாத்துப்பீங்களா?" என்றாள்.

விஷாவுக்கு வார்த்தையே வரவில்லை, கண்ணில் நீர் முட்ட, அவள் நெற்றியில் இதழ் பதித்து வேகமாக விலகி சென்று விட்டான். பாப்பு அவன் பின்னேயே போக இருந்தவள், வாசலில் நுழையும் தன்னவனை கண்டதும், அவனை நோக்கி சென்று அவனையும் இழுத்துக் கொண்டு விஷாவிடம் செல்ல, இரணியனை கண்டதும் தாயைக் கண்ட கன்றை போல அணைத்து கதறிவிட்டான் விஷா.

"ஹே வாட் ஹேப்பன் மேன். ஹாப்பியா இருக்கிற டைம் அழுதுட்றுக்ற, வாட் ஹேப்பன் தாட்சா?" என விஷாவை அதட்டி, பாப்புவிடம் கேக்க, "டேய் ஓவரா சென்டிமென்ட்ட புளியாத பாக்க முடியல" என்றாள் பாப்பு.

"சார் சுஹா என்ன அக்ஸப்ட் பண்ணிக்கிட்டாங்க, என் பேபிய கடைசிவரை பாத்துக்க பெர்மிஷன் கொடுத்துட்டாங்க, எனக்குன்னு ஒரு பேமிலி, என் பிளட் ரிலேஷன்" என அவன் சொல்ல, அவன் நெகிழ்ச்சிக்கான காரணம் புரிந்து ஆறுதலாக அணைத்துக் கொண்டான் இரணியன்.

"ஹே அப்ப பவ்யாவோட வாழ்க்க?" என்றாள் பாப்பு நக்கலாக. விஷா மழங்களாக முழிக்க. "பாத்துக்கலாம் விஷா இப்போ இந்த டைம் உனக்கானது என்ஜாய் பண்ணு" என அவனை தேற்றி விட்டு, பாப்புவை முறைத்து, "டென்ஷனா இருக்கிறவன மேலும் டென்ஷனாக்குறதுல அப்டி ஒரு சந்தோசம் உனக்கு?" "இல்லயே மறந்துற கூடாதேன்னு நியாபக படுத்துனேன்" என அவள் தோளை குலுக்க. இருவரும் விஷாவையும் அழைத்துக்கொண்டு சுஹாவிற்கு வளையலிட சென்றனர்.

மறுநாளே பாப்புவும், இரணியனும் சூட்டிற்குகாக சௌத் தமிழ்நாடு, தமிழ்நாடு - கேரளாவை பிரிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரக் காடுகளின் ஒரு பகுதியில் சென்று இறங்கினர். அவர்கள் கிளம்பி சென்ற பத்து நாளில் தன் பெண் மகவை ஈன்றெடுத்தாள் சுஹா.
 
அத்தியாயம் 37
அது ஒரு மலையடிவார குக்கிராமம். அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் அண்ட் டெக்னீசியன்ஸ் முன்தினமே சென்று இறங்கியிருந்தனர். தங்குவதற்கு ஏதுவான ஹோட்டல்கள் அங்கிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டியிருக்க, முந்தைய இரவு அங்கேயே குடில் எழுப்பி தங்கியிருந்தற்து அடையாளமாக அங்கங்கு டெண்ட் இருந்தது. ஹீரோ, ஹீரோயின், மற்றும் டைரக்டர் இன்று காலை வந்து இறங்கியதும், அவர்களை முதலில் வரவேற்றது, இப்படத்தின் ப்ரடியூசர் கிருஷ்ணமூர்த்தியின் மேனேஜர் ஸ்லோட்டி தான்.

ஹீரோ, ஹீரோயின், டைரக்டர், கேமராமேன் இவர்களின் மேனேஜரே அவர்களுக்கான அனைத்து ஏற்பாடயும் பார்த்து கொள்வர். அடுத்து என்ன எனவும் அவர்களே கேட்டு வந்து சொல்ல வேண்டும். ஆகையால் பாப்பு கேரவனில் இருந்து இறங்கிச் சென்றாள்.

அங்கு எல்லோருமே இவளுக்கு புது ஆட்கள் தான் என்பதால், பொழுது போய்விடும் என்ற குஷியோடு அவ்விடத்தை வேடிக்கை பார்த்தவாறு சென்றாள்.

ஸ்லோட்டியயுமே அவளுக்கு ஞாபகம் இல்லை, "ஹாய்" என்றவாறு இவள் அவன் முன் நிற்க, ஸ்லாட்டி திருதிருத்தான். அக்ரிமெண்ட் போடுவதன் விஷயமாக அவள் இரு முறை அவர்கள் ஆபிஸ் வந்து போன போது தன்னைக் கண்டால் இந்த படமே வேண்டாம் என்று சொல்லி விடுவாள் என்று அவனே ௭ண்ணி கொண்டு அவள் கண்ணில் படாமல் ஆபீஸில் இருக்கும் மற்ற பசங்களை வைத்து வேலையை முடித்து இருந்தான்.

இப்போது அக்ரிமெண்ட்டும் முடிந்தது, இனி அவர்கள் இந்த படம் முடியும் வரை தன்னுடன் டிராவல் பண்ணி தானே ஆகணும் இந்நேரத்தில் அவளை பழி தீர்த்துக் கொள்ளலாம், ௭ன அவனும் பக்கா ப்ளானுடன் வந்திருந்தான்.

இன்று தன்னை கண்டதும் அவள் ஷாக்காவதை கண் குளிர வேண்டும். அந்நேரத்தில் அவளிடம் வந்து போகும் பயம், அதை வைத்தே எப்படியெல்லாம் அவளை பழி வாங்குவது என முடிவு எடுத்துக் கொள்வோம், இவ்வாறெல்லாம் அவன் ஏகப்பட்ட கற்பனையோடு வந்திருக்க, சின்ன ஜெர்க் கூட இல்லாமல் அவள் "ஹாய்" என்றாள்.

அவன் முகம் போன போக்கை வைத்து, "ஹாய்தான சொன்னேன் அதுக்கு ஏன் உங்க ஃபேஸ் இப்டிப்போகுது. ஹாய் சொல்ல இஷ்டம் இல்லனா விடுங்க, நோ ப்ராப்ளம். நேரா ஸ்பாட்க்கு ஏன் வர சொன்னீங்க மிஸ்டர்?. ஆஃப்டர்நூன் தான் சூட்ன்னு டைரக்டர் சொன்னார். சோ ஸ்டேக்கு எங்க பிளான் பண்ணிருக்கீங்க. இங்க இருந்து எவ்வளவு நேரம் ஆகும் ஹோட்டலுக்கு. ஏன் கேக்கறேன்னா போயிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு ரிட்டன் ஆகுற மாதிரி இருந்தா போயிட்டு ரிட்டர்ன் ஆகணும், இல்லன்னா இங்கேயே கேரவன்ல பிரெஷ் ஆகிப்பாங்க" என்று அவள் சொல்லி முடித்து அவன் பதிலுக்கு அவன் முகம் பார்க்க.

"என்ன உனக்கு ஞாபகம் இல்லயா? இல்ல ஞாபகமில்லாத மாதிரி நடிக்கிறியா?" என்றான் புருவம் சுருக்கி. அவனின் ஒருமையில் அவனை ஆழ்ந்து பார்த்து யோசித்தவள், அவளுக்கு எங்கும் பார்த்ததாக ஞாபகம் இல்லை, "இல்லயே **** காலேஜில படிச்சீங்களா?" என்றாள்.

சினி ஃபீல்டில் இரணியன் மனைவியாக தன்னை தெரிந்தவர்கள், வயதானவர்கள் உள்பட, ௭ல்லாரும் மரியாதையாக அழைக்க, இவனின் ஒருமை அழைப்பு, தன்னிடம் பழகிய வட்டத்தை சேர்ந்தவரகளாக, காலேஜ் சீனியர்களில் ஒருவனாக இருக்குமோ என்று தான் யோசித்தாள்.

அவனுக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. பாவம் அவனுக்கு என்ன தெரியும், அவள் அடித்தவர்களை எல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் கஜினி சூர்யா போல் அவர்களாக இவளுடன் நின்று போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு, "இங்க பாருங்க நா உங்ககிட்ட அடி வாங்கிருக்கேன்" என சொல்லிக் தன்னை அறிமுக படுத்தி கொள்ள வேண்டும் ௭ன்பது. இப்படி மொட்டையாக வந்து கேட்டால் எப்படி? இதற்குள் இரணியனிடமிருந்து போன் வந்துவிட, "இதோ வர்றேன் சார்ம்" என்றுவிட்டு போனை வைத்தவள்.

"சாரி, எனக்கு உங்கள தெரியல. யாருன்னு நீங்களே சொல்லுங்களேன்" என்றாள். அவனுக்கு மறுபடியும் அவன் அடிவாங்கியதை சொல்ல மனமில்லாமல், "நல்லா யோசி ஞாபகத்துல வரும். தென் ஸ்டே பத்தி கேட்டல்ல? ஹோட்டல் ௭துவும் அரேன்ஜ் பண்ணல, இன்னும் 2-3 ஹௌர்ஸ் ட்ராவல்ல தான் ஹோட்டல் புக் பண்ண முடியும். நாம காட்டோட அவுட்சைடுல தான் இருக்கோம். இது உள்ள போய் தான் படம் சூட் பண்ண போறதா அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் சொல்லிருக்காங்க. இங்க இருந்து போயிட்டு போயிட்டு வாரதுதா நமக்கு ஈஸி? சோ இங்கயே டென்ட் போட்டுக்கலாம்".

"இது காடு மிஸ்டர். ௭ந்தளவுக்கு ஸேஃப்டி இருக்கும்னு தெரியாதுல்ல?"

"இங்க கிராமத்து ஆளுங்கட்ட விசாரிச்சுட்டு தான் இந்த முடிவுக்கு வந்துருக்கோம். அவுங்க 4 பேர் ௭ப்பயும் ரோமிங்ல இருப்பாங்க, தென் உங்க கார்ட்ஸ் இருக்காங்க, இதுக்குமேல ௭ன்ன? வேற ௭ன்ன பெஸிலிட்டி வேணும்னாலும் ரெண்ட்க்கு அரேஞ்ச் பண்ணிக்லாம். நோ இஷ்யூஸ்"

பாப்பு யோசனையில் இருக்க, "வேற என்ன வேணாலும் கொண்டு வர ஏற்பாடு பண்ணியாச்சு, சோ, கேரவனும் திருப்பி அனுப்பிடலாம். கிளைமேட், காத்து, உங்களுக்கு கஷ்டமா இருக்காதளவுக்கு டெண்ட் இருக்கும். சார்ட்ட பேசிட்டு சொல்லுங்க. மேக்ஸிமும் 1 மந்த் இங்க சுத்தி தான் சூட் போகும். டைரக்டர்ட்ட சொன்னேன் அவருக்கு ஓகேன்ற மாதிரி தான் இருக்கு, ஹீரோயின் கூட ஓகே சொல்லிட்டாங்க. நீங்கதான் இனி பதில் சொல்லணும்" என்றான், எல்லோரும் ஓகே என்கையில் இவர்களும் ஓகே சொல்லதானே வேண்டும் என்ற எண்ணத்தில்.

பாப்புவும் அதைப் பெரிதாக எண்ணவில்லை, "ஓகே நா சார்ம்ட்ட கேட்டு கன்ஃபார்ம் பண்றேன். இப்ப பிரேக்பாஸ்ட் அரேன்ஜ் பண்ணிட்டீங்களா?" என்றாள் அடுத்த கேள்வியாக.

"ஸ்ரீனிவாஸ்" என கத்தி ஒருவனை அழைத்தான். அவன் வரவும், "ஹீரோவுக்கு புஃட் கொடுத்தனுப்பு" என்க. அவன் பாப்புவிடம், "சொல்லுங்க மேடம்" என்றான். அவள் அவளுக்கும், அவனுக்கும் ஆர்டர் சொல்லிவிட்டு, "கேரவனுக்கு கொண்டு வந்துடுங்க" என்று விட்டு சென்றாள்.

இவள் கேர்வனுக்கு செல்லவும், ஹால் போன்ற அமைப்பில் அவன் இல்லாமல் போக படுக்கை அறை நோக்கி சென்றாள். தலையணையில் முகம் புதைத்து குப்புறப் படுத்திருந்தான். அதில் குஷியானவள் வேகமாக செருப்பை கழட்டி விட்டு, அவன் தன்னை உணரும் முன் முதுகில் ஏறி படுத்து விட எண்ணி கட்டில் மேலேற, அவன் மீது சாய போனவளை அவளை விட வேகமாக திரும்பி படுத்து அணைத்து பிடித்துக் கொண்டான்.

"நா வந்தத கண்டுபிடிச்சிட்டீங்க தான?" என்றாள், அவன் மீது சுகமாய் படுத்துக் கொண்டு, "பின்ன நீ போட்டுருக்க டியோட்ரண்ட் தான் உனக்கு முன்ன பெட்ரூமுக்கு வந்துருதே". "இதே டியோட்ரண்ட்டோட வேற யாராவது வந்திருந்தா என்ன பண்ணிருப்பீங்க?”

"என் பெர்மிஸ்ஸன் இல்லாம கேரவன் டோரயே யாரும் ஓபன் பண்ண மாட்டாங்க, பெட்ரூம் வர வர்ற ஒரே தைரியசாலி என் பொண்டாட்டி மட்டும்தான், மூக்கி மேடம்". "ஆஹான்!" என நாக்கை துருத்தி வாயையும் பழிப்பு காட்ட, கிடைத்த வாய்ப்பை விட வேண்டாம் என நாக்கோடு சேர்த்து அவள் வாயையும் மூடி விட்டான்.

மேக்கொண்டு அவனை முன்னேற விடாமல் தடுத்தவள், "இப்ப சாப்பாடு கொண்டு வருவாங்க, சோ எழுந்து பிரெஷ் ஆகிட்டு வாங்க, சாப்பிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டா சூட்டுக்கு கிளம்ப சரியா இருக்கும்" என அவனை எழுப்பி அட்டாச்சுடு பாத்ரூமில் தள்ளி கதவை அடைத்து விட்டு, வெளிவர அந்த சீனிவாசன் வந்ததாக கார்ட் கிருஷ்ணன் கதவை தட்டினார்.

"தேங்க்ஸ்" சொல்லி அதைப் பெற்றுக் கொண்டவள் அவன் நம்பரையும் பெற்றுக்கொண்டு, "இனி டூ ஓவர்ஸ் முன்னயே ஆர்டர் என்னன்னு மெசேஜ் அனுப்பிடுறேன்" என்று விட்டு அவனை அனுப்பி வைத்தாள்.

பின் இரணியன் வர இருவருக்கும் வந்த சாப்பாடை எடுத்து வைத்துக்கொண்டு, ஹாலிலிருந்த டைனிங் டேபிள் போன்ற அமைப்பில் அமர்ந்தனர். "ஏன்ம்மா இவ்வளவு நேரம்?" என்றான் சப்பாத்தியை கீரை மசியலில் தொட்டு கொண்டு.

"அந்த மேனேஜர்க்கு என்ன தெரியும் போல சார்ம், என்ன ஞாபகம் இல்லையான்னு கேட்டான்? தெரியல மறந்துட்டேன், நீங்களே சொல்லுங்கன்னு சொன்னேன். பேச்ச மாத்திட்டான்" ௭ன நெய்யில் மிதந்த பொங்கலை ரசித்து ருசித்து.

"பீ ஃபிராங்க், அவன ஞாபகம் இல்லயா உனக்கு?" என்றான் இரணியன் சிரித்துக்கொண்டே. "இல்ல சார்ம்" ௭ன, இரணியன் சாதாரணமாக கேட்பதாக நினைத்து பதில் சொன்னவள், அவன் சிரிக்க, "ஏன் சிரிக்கிறீங்க?" என்க.

மேலும் சிரித்தவாறு, அன்று பார்ட்டியில் அவன் பேசியதையும், இவள் போர்க் எடுத்து குத்தியதையும் சொல்ல, "ச்ச அந்நேரமே ஞாபகம் வராம போயிடுச்சே, அந்த லூசு மாக்கான், என்ன வா, போன்னுலா பேசினான். நா கூட காலேஜ் சீனியர்ன்னு நினைச்சு விட்டுட்டேன்" என்க.

"ரைஸ்பெக்ட் இல்லாம பேசினானா? அந்த இடியட்" ௭ன இரணியன் அவனை அழைக்க போக. "நோ அவன நானே ௭ன் ஸ்டைல்ல டீல் பண்ணிக்றேன்",
"அவன் ஆல்ரெடி வாங்குனதயே மறக்கல. நீ புதுசா பிரச்சனய இழுக்காத. மறந்தது மறந்ததுதாகவே இருக்கட்டும்".

"எல்லோரும் என்னயே அடக்குங்க, நீங்க டென்ஷனானா அது சரி, நா ஆனா மட்டும் அது தப்பு. வடிவு கூட அதிகமாக சேராதிங்க சார்ம்" ௭ன்க, இரணியன் சிரித்தானே தவிர பதில் சொல்லவில்லை.

"அப்றம் அந்த மேனேஜர் இன்னொன்னும் சொன்னான். அக்ரிமெண்ட்ல காட்டுக்குள்ள படம்ன்றதால, ட்ராவெல்லிங் பொறுத்தே ஹோட்டல் அரேன்ஜ்மெண்ட் இருக்கும்னு போட்டுருந்தாங்கள்ல. சரியான பிஸ்னாரிங்க, முன்னயே இப்டி பிளான் பண்ணிட்டு தான் அக்ரிமெண்ட்ல அந்த லைன் ஆட் பண்ணிருப்பாங்க போல. இங்க இருந்து ஹோட்டல் ரொம்ப தூரமாம், சூட்டிங் ஸ்பாட்டும் இங்க இருந்து உள்ள போய் தான் எடுக்கணுமாம். இந்த கேரவன் வண்டியெல்லாம் போகாதாம், ரோடு கரடுமுரடா இருக்குமாம், இங்க டிராவலிங்குன்னு உள்ள 1 வண்டி மட்டும் எல்லோரும் போற மாறி அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு வச்சுக்கிட்டு, ஸ்டேக்கு டென்ட் போட்டு தான் தங்கணும்னு சொல்லுறான், வேற எந்த ப்ரோப்ளமும் வராம பாத்துப்பானாம். மத்த எல்லாரும் அப்டித்தான் தங்கிருக்காங்க போல. நீங்க, டைரக்டர், ஹீரோயின் உங்க 3 பேருக்கிட்ட மட்டும் பெர்மிஸ்ஸின் எதிர் பாக்கிறானாம், அதுலயும் அவங்க 2 பேர் ஓகே தானாம்", என அவள் முடிக்கும்முன் வேகமாக எழுந்தவன், "கால் தட் இடியட்" என்றான், ஹாண்ட்வாஷ் செய்து கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தவாறு, பாப்புவும் அந்த ஸ்லாட்டிக்கு போன் செய்து, "சார்ம் உங்கள கூப்பிடுறாரு" என்றுவிட்டு சாப்பிட்ட இடத்தை கிளீன் செய்தாள்.

ஸ்லாட்டிக்கு கோபமெல்லாம் பாப்புவிடம் மட்டுமே, இரணியனிடம் அவன் பப்பு வேகாது. அதிலும் இப்போது பாப்பு அவன் மனைவியாக இருக்க சிறுசிறு தொல்லைகள் அவள் வெளியே சொல்ல முடியாதவாறு கொடுக்க வேண்டும் என்று தான் எண்ணியிருந்தான். அவனது அந்த சிறு சிறு தொல்லைகளுக்கு. அவர்கள் கண்ணெதிரிலேயே இருக்க வேண்டும் என யோசித்தே இதை சொன்னான். அதுவும் போக டெண்ட் போட்டு தங்குவது எல்லாம் அவர்களின் வழக்கமே, ஹீரோயின் மட்டுமே அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டேன் என பொதுவாக அடம் பிடிப்பர். இங்கு அவரே ஒத்துக்கொள்ள, இரணியனும் ஒத்துக் கொள்வான் என்று எண்ணியிருக்க, இப்பொழுது அவனிடமிருந்து அழைப்பு வரவும் பதறிக் கொண்டு ஓடினான்.

வெளியிலிருந்த கார்ட்ஸில் ஒருவன் லேசாக கதவை தட்டிவிட்டு திறக்க, "அவன உள்ள அனுப்புங்க கிருஷ்ணன்" என்ற இரணியனின் வார்த்தைக்கு உள்ளே ஏறி இருந்தான் ஸ்லாட்டி.

"மிஸ்டர்.ஸ்லாட்டி, என்னால டெண்ட்லலா தங்க முடியாது, டிராவல் டிஸ்டன்ஸ் ஜாஸ்தினா, எனக்கு கேரவன் வேணும் எவ்வளவு நாள் தேவையோ புக் பண்ணிடுங்க. காட்டுக்குள்ள ட்ராவல், ஐ கன் அட்ஜஸ்ட் வித் யூ ஆல், பட் ஸ்டே டெஃபனட்லி கேரவன் வேணும். நீங்களே உங்க சார்ட்ட பேசுறீங்களா? இல்ல நா பேசவா?" என்றான் இரணியன் குரலில் கடுமையுடன்.

"இல்ல சார் நா ஜஸ்ட் ஒப்பினியன் சொன்னேன். டெஸிஸன் உங்களது தான். சார் உங்க முடிவு என்னன்னு தான் கேட்க சொன்னார். நா கேரவன் ஆபீஸ்ல பேசி புக் பண்ணிடுறேன் சார். சாரி ஃபார் இன்கன்வெனியன்ஸ்" என்றான் பயந்தவாறு.

இரணியன், அவனை முறைத்தவாறே, "௭னக்கு ஒர்க்கவுட் இன்ஸ்ட்ருமெண்டஸ் ௭ல்லாமே வேணும் அதயும் அரேஞ்ச் பண்ணிடுங்க" ௭ன்க, "ஓ.கே சார்" என்பதாக அவன் தலையாட்டி வெளியேற போக, "1 மோர் திங்க் ஸ்லாட்டி, ௭ன் வொய்ஃப்க்கு குடுக்குற ரெஸ்பெக்ட்லயும் ௭ந்த ப்ளாக் மார்க்கும் இருக்க கூடாது. இல்லனா இத பத்தியும் நா உங்க சார்கிட்ட பேச வேண்டியிருக்கும்" ௭ன்றவாறு ஸ்லாட்டியை, கையாட்டி வெளியேற சொல்ல, அவனும் சாரி ௭ன்ற சொல்லைகூட வாய்க்குள்ளேயே சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

"ஏன் சார்ம் இவ்வளவு கோபம்? டெண்ட் போட்டு தங்கினாலும் நல்லா தானே இருக்கும்". "ஆனா நமக்கு பிரைவசி இருக்காதுடி" என அவன் கண்ணடிக்க, "நாட்டி பாய்" என அவன் கன்னம் கிள்ளி முத்தினாள் பாப்பு.

அந்நேரம் அவள் போன், "ஐ லவ் யூ மம்மி" என பாடவும், "வந்து இவ்வளவு நேரம் ஆச்சு இன்ஃபார்ம் பண்ணாம ௭ன்னடி பண்றன்னு திட்டப் போறாங்க" இரணியன் சிரித்தவாறு சொல்ல. "எங்கம்மா திட்டுறதுக்கெல்லாம் பயந்தா எப்டி சார்ம்?" என்றவள் போனை தேட.

"அது சரி அவங்க திட்றதல்லாம் மைண்ட்ல ஏத்தி இருந்தா இந்நேரம் குடும்ப குத்து விளக்காயிருப்பியே" என்றான் மெதுவாக, சத்தமாக சொன்னால் ஆண்டியை கிடப்பில் போட்டுவிட்டு தன்னிடம் போர்தொடுக்க கிளம்பி விடுவாள் என இவ்வளவு நாள் பழக்கத்தில் தெரியுமே.

"நா என்ன உன்ன மாதிரி வெட்டியாவா இருக்கேன், சும்மா சும்மா போன் பேசுரதற்கு, வந்து இறங்கினதுல இருந்து நிக்க நேரமில்லாம ஓடிக்கிட்டு இருக்கேன்" என அவள் அந்த பக்கம் அளந்து விடுவதை கேட்டு சிரித்துக்கொண்டே சென்று படுத்தான்.

முந்தின தினம் கிளம்பும்போது நடந்தவற்றை நினைத்துப் பார்க்க மேலும் அவனது சிரிப்பு விரிந்தது.

மூன்று மாதமாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்துவிட்டு, அவள் சூட் கிளம்பவும், அதுவும் நடுவில் குண்டடி வேறு, ஆயிரம் அட்வைஸ் மழை பொழிந்து தள்ளினார் வடிவு. பாதி அவள் ஹெட் செட் தாண்டி காதுக்குள் செல்லவில்லை என்பது கூடுதல் தகவல்.

ஏர்போர்ட் வரை வழியனுப்ப கிளம்பினவர்களை, "பாசத்துல ஓவரா பொங்காதம்மா, நீ வாசல் வர வந்து பண்ணின அட்வைஸ்லேயே எனக்கு காது நெறஞ்சு போச்சு, 'யார்டயும் எந்த வம்புக்கும் போக கூடாது' அவ்ளோதான? இந்த ஒரு விஷயத்த வேற வேற வர்ட்ஸ் யூஸ் பண்ணி மாத்தி மாத்தி சொல்லிட்டுருக்க, எனக்கு நீ சொல்ல வந்த விஷயம் நல்லா புரிஞ்சுடுச்சு, சோ நீ ஏர்போர்ட் வர வந்து கஷ்டபட வேணாம்".

"இப்டி விதண்டாவாதமா பேசாதன்னு தான் சொல்றேன், வேதி போலீஸ்ல இருக்கா, சுஹா வக்கீலா இருக்கா, அவங்க வேலைல வராத பிரச்சினயாடி, அவங்களுக்கு என்னைக்காவது நா இப்டி அட்வைஸ் பண்ணி பாத்திருக்கியா? ஆனா நீ இருக்க பாரு, என்னைக்கு ௭னக்கு பிள்ளையா வந்து பொறந்தியோ அன்னையிலிருந்து பிரச்சனதான்".

"பிறந்ததுல இருந்தேவா த்தே?" விஷா கேட்க, "ஆமா மாப்ள, என்ன கஷ்டம்லா இவளால அனுபவிச்சிருக்கேன் தெரியுமா". "ஏற்கனவே பிரச்சனைன்னு தெரிஞ்சும் ஏன்த்தே கராத்தேலலா சேத்து விட்டீங்க?", "வேதிகாவும், சுஹாவும் போனாங்களே மாப்பிள" என அவர் மேற்கொண்டு சொல்லுமுன் "புரிஞ்சிடுச்சு வேதி மேடத்து மேல உள்ள பாசத்த போனாளோ? இல்லயோ? சுஹா மேல இருக்கிற பாசத்துல கண்டிப்பா வேணும்னு அடம் பிடிச்சுருப்பா, கரெக்டாத்தே?”

"ஆமா ஆமா ரொம்ப கரெக்ட் ரெண்டு பேரும் அப்டிக்கா போய் பேசிட்டுருங்க, நா மத்தவங்கட்ட சொல்லிட்டு கிளம்புறேன்" பாப்பு சொல்ல.

"பி கேர்ஃபுல் பாப்புக்குட்டி. ஃபாரஸ்ட் ஏரியா ஆர்வக் கோளாறுல எதுவும் செய்யக்கூடாது. எப்பயும் கவனமா இருக்கணும். சுத்திப்பாக்க போனேன், வேடிக்க பாக்கப் போனேன், அவுங்கள காப்பாத்த போனேன்னு, இவுங்கள காப்பாத்த போனேன்னு தனியா போய் எதுலயும் மாட்டிக்க கூடாது" மெய்யப்பன் சொல்ல.

"சுயர்ப்பா, இந்த தட என் கண்ணு முன்னால ௭வனாது ஒரு குழந்தைய பேட் டச் பண்ணாகூட, ஏண்டான்னு அவன ஒரு வார்த்த கேக்காம, செல்ஃபி எடுத்து உங்களுக்கு பார்வேர்ட் பண்றேன்".

"அவ என்னைக்குப்பா நம்மலா சொல்லி கேட்டுருக்கா? நீங்க, அவ பிறந்ததுமே மூணாவதா நமக்கு பொண்ணு தேவயான்னு கள்ளிப்பால் ஊத்திருக்கணும், அப்போ அத பண்ணாம விட்டு பெரிய தப்பு பண்ணி்ட்டீங்க".

இரணியன் வெறும் பார்வையாளனாக அவர்கள் கான்ர்ஷேசனை பார்த்து நின்றான். "ம்மா இவ டெலிவரி முடியவும் போன் பண்ணு, நா வந்து இவ வாயில அந்த கள்ளி பால ஊத்துறேன்". "என்ன பேச்சு பேசி பழகுறீங்க? படிச்ச பிள்ளைகளாட்டமா இருக்கு" என வடிவு டென்ஷனாக.

"இதுக்கெல்லாம் காரண கர்த்தாவே நீதான், சும்மா கிளம்புற நேரத்துல கோவத்த கிளப்பிக்கிட்டு. மறுபடியும் அட்வைஸ ஆரம்பிக்காத, நா கிட்சாகிட்ட சொல்லிட்டு வரேன்" என பாப்பு நகரவும், "அவ கொஞ்சம் ஆர்வக்கோளாறு மாப்பிள எதுக்கும் எப்பயும் அவ மேல ஒரு கண்ணு வச்சுக்கோங்க. ஏனோ பயமாவே இருக்குது" ௭ன்றார் வடிவு இரணியனிடம்.

"அன்னைக்கு நடத்த இன்ஸ்டன்ட் வச்சு நீங்க ரொம்ப யோசிக்கிறீங்கன்னு நினைக்கிறேன். டோன்ட் வொர்ரி கண்டிப்பா நா அவள பாத்துக்றேன், அண்ட் சூன் சுஹா டெலிவரிக்கு வருவோம், தென் என் பர்த்டேக்கு சென்னைக்கு வரணும். இப்டி அடுத்தடுத்து வந்து போயிட்டு தான் இருப்போம், சோ டோன்ட் ஒரி" என அவ்வளவு நேரம் உதட்டில் உறைந்த சிரிப்புடன், அமைதியாக அவர்களின் சம்பாஷணையை வேடிக்கை பார்த்த இரணியன் பதிலளித்தான்.

பாப்பு கிச்சாவிடம், "கிச்சா நா ஊருக்கு போயிட்டு வரேன். எங்க அம்மாவயும், வீட்டையும் பத்திரமா பாத்துக்கோ, வெள்ளப்பாச்சாவுக்கு நல்லபடியா டெலிவரி ஆகணும், பேபிய நீ பாத்துக்கோ அவ அதுக்குலா லாயிக்கு இல்ல, சும்மா சண்ட வளக்க மட்டுந்தான் அவளுக்கு தெரியும். ('௭த யார் சொல்றது' ௭ன கிச்சா நினைத்தது ராதைக்கு மட்டுமே கேட்டது) அப்றம் நா அங்க போய் ஃபாரஸ்ட்ட நல்லா சுத்தி பாக்க ஒரு கைட் ஏற்பாடு பண்ணி குடுத்துரு. அப்றம் வேதிக்கா'வும் சீக்கிரம் கன்சீவ்வாக பிளஸ் பண்ணுங்க. அப்பாவுக்கு இல்-லிகல் கிரிமினல் கேஸ் எதுவும் ஜட்ஜ்மண்ட்டுக்கு வராம பாத்துக்கோ. அப்றம்", அவள் எப்போதும் போல் சத்தமாக வேண்டிக் கொண்டிருக்க. ௭ல்லோரும் அவள் வேண்டுதலை கேட்டு நிற்க.

"நா கிளம்புற வர ஃப்லைட்டும் அப்டியே நிக்கணும், அதயும் சேத்து வேண்டிக்கோ" என்றான் விஷா அங்கிருந்து சத்தமாக. கண்ணை திறந்து முறைத்தவள், "உன்ன இருவரேன்" என கருவிக்கொண்டு "எல்லாரயும் நா வர்ற வர பத்திரமா பாத்துக்கோ கிச்சா, மிஸ் யூ" என அவரின் பிரிவுத் துயரத்தை கன்னத்தில் முத்தம் பதித்து தெரிவித்துக் கொண்டு, இரணியனிடம் வந்தாள்.

கிச்சாவும் ராதையின் முறைப்பை பெற்றுக் கொண்டு படக்கென திரும்பிக் கொண்டார்.
இங்கு வந்த பாப்பு, விஷாகனிடம் "விஷா என் போன் எங்க போச்சுன்னு தெரியல கொஞ்சம் கால் பண்றியா?" என தேடுவது போல் கேட்க, "எதயும் ஒரு இடத்துல வச்சா தான, சொல்ற பேச்சக் கேக்குறதில்ல. கிளம்பி கீழ வந்து நின்னுட்டு செல் காணும், பேக் காணும்னுட்டு" வடிவு திட்ட, விஷா சிரித்துக் கொண்டே, "இருக்கட்டும்த்தே, நா போய் எடுத்துட்டு வரேன்" என்று விஷா பெருந்தன்மையாக சொல்ல.

"ஹே விஷா, நீ அவ்வளவு கஷ்டப்பட வேணாம், நா கான்ஃபார்ம்மா எடுத்துட்டு வந்தேன். நீ கால் மட்டும் குடு நா எங்கன்னு பாத்துக்குறேன்" என்றாள். விஷாகனும் கால் செய்ய, அது, "எதுக்கு பொண்டாட்டி ௭ன்ன சுத்தி வப்பாட்டி ௭க்கசக்கமாகி போச்சு கணக்கு" என பாடி பாப்புவின் சுடிதார் பாக்கெட்டிலேயே தன் இருப்பிடத்தை காட்டவும், அவள் ஆர அமர, "ஓ இங்கதான் இருக்கா, கவனிக்கல விஷா" என்க.

மெய்யப்பனும், இரணியனும் சிரிப்பை கட்டுப்படுத்த. "என்ன எழவு பாட்டுடி இது. உனக்கு கொஞ்சமாவது அவரு உன் அக்கா புருஷன்ற மரியாத இருக்கா?" என வடிவு ஆரம்பிக்க.

சுஹா தீயாக விஷாவை முறைக்க, விஷா "இவ்வளவு நேரமா அவள கலாய்ச்சதுக்கு ஒரு பாட்டுல இரண்டு பேரயும் ஆஃப் பண்ணிட்டா" என முனகியவன், "உன்ன ஒழுங்கா கால் கட் பண்ணிட்டு, என் நம்பருக்கு டோன்ன சேன்ஜ் பண்ற" என எட்டி போனை வாங்க வர.

"முடியாது என்ன பண்ணுவ? உண்ம தான இது. நா எதுக்கு மாத்தணும்". "நீ மாத்த வேணா குடு நா மாத்றேன்" என அவன் எட்டிப் பிடிக்க, அவள் ஓட என ஐந்து நிமிடம் அந்த இடத்தை சுற்றி சுற்றி ஓடிக் களைத்து, "நா பாட்ட சேன்ஜ் பண்ணணும்னா என்கிட்ட இனிமே அதிகப் பிரசங்கித் தனமா பேசமாட்டேன்னு பிராமிஸ் பண்ணு".

"உனக்கே ஒரு பெரிய கும்பிடும்மா, இறங்கி வந்துருக்குத, ஏத்தி விட்டுட்டு போயிடாத நல்லா இருப்ப" என அவன் கும்பிடவும், "ஹே வெள்ள பாச்சா, உன்னய விஷா வேதாளம்ன்றான்" என கோர்த்துவிட்டு விட்டு அவன் வந்து பிடிப்பதற்குள் வந்து காரில் ஏறிக்கொண்டாள்.

இரணியனும் சிரித்தவாறு ஏற டாட்டா காண்பித்து விடைபெற்றனர். அதையே இப்பொழுது நினைத்துப் பார்த்து சிரித்தவாறு தூங்கி இருந்தான்.

அடுத்ததாக லஞ் முடிஞ்சதும் சூட்டிங்கிற்கு கிளம்பி சென்றனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த, காட்டை முழுவதுமாக அறிந்தவர்கள் இருவர் படக்குழுவினருடன் வழிகாட்ட சென்றனர். முதல் சீனாக ஹீரோ, ஹீரோயின் ஒருவருக்கொருவர் இன்டர்ட்யூஸ் ஆகிக் கொள்ளும் சீன் எடுக்கப்பட்டது. ப்லைட் தேடும் குழு காட்டில் சென்று கொண்டிருக்க, ஹீரோயினை பாம்பு கடித்து விட, அவள் மயக்கமாக பக்கத்திலிருக்கும் ஹீரோ தாங்கிப் பிடித்து தூக்கிக் கொண்டு இடம் பார்த்த படுக்க வைத்து, தன் கர்சீப் எடுத்து பாதத்தின் மேல் கட்ட வேண்டும் இதுவே சீன். இரண்டு முறை தூக்கும் போது பொறுமையாக இருந்த பாப்பு மூன்றாவது ஷாட்டிற்கு பார்வையை திருப்பி மெதுவாக நகர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.

அவள் கார்ட் கிருஷ்ணனும் உடன் நடக்க ஆரம்பித்தார். மரங்களும், செடிகளும் நிறைந்த காடு தான் ௭ன்றாலும், ஆள் நடமாட்டம் இருக்கும் இடமே ௭ன்பதை காட்ட பாதை எல்லாம் கல், முள் இல்லாமல் நன்றாக இருந்தது. நாலு ஸ்டெப் எடுத்து வைக்கவும், ஸ்லாட்டி சுற்றிவந்து வழிமறித்தான், மேனேஜரும் மேனேஜரும் பேசுவது வித்தியாசமானது இல்லயே, எனவே கார்ட் ஒதுங்கியே நின்றுகொண்டார்.

"அடடா என்ன காதல் என்ன காதல்!. புருஷன் இன்னொரு பொண்ணோட குளோஸா இருக்கிறத பொண்டாட்டியால தாங்க முடியல. பொண்டாட்டி இல்லாம புருஷனால ஒரு நாள் கூட தூங்க முடியல. ப்பா ௭ன்னால இத தாங்கிக்க சுத்தமா முடியல" ௭ன அவன் சிலாகிக்க. "ஏதோ ரைமிங்கா ட்ரை பண்ற பட் நோ யூஸ், ௭னக்கு புரியல".

"உன்ன விட்டுட்டு இருக்க முடியாம தான கேரவன் வேணும்னு அடம் பிடிச்சு புக் பண்ணிருக்காரு. அப்டி என்ன இருக்கு உன்கிட்ட, ஒரு நாள் கூட பாக்காம இருக்க முடியாத அளவுக்கு" ௭ன அவளை கஷ்டபடுத்த வேண்டி கேக்க.

"நீ இதுவர பாத்த பொண்ணுங்கள்ட்டலா என்ன இருந்ததோ அதான் என்ட்டயும் இருக்க. புதுசா ஏதாவது வித்தியாசமா இருந்தான்னு என் ஹஸ்பண்ட்ட வர சொல்றேன் கேட்டு தெரிஞ்சுக்கிறியா?" என்றாள் பாப்பு.

அவன் அவளிடம் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை. பிடிக்காத பெண்களை வக்கிரமாக பேசி அழ வைப்பதில் சுகம் காணும் இவனைப் போன்ற ஆட்களுக்கு பதிலுக்குப் பதில் பேசிவிடும் பெண்கள் அதிசயப் பிறவியாக தான் தெரிவர். அவனும் பாப்புவை அப்படித்தான் விசித்திரமாக பார்த்தான். இப்படி பேசினால் பயப்படுவாள், வெளியில் சொல்ல கூட யோசிப்பாள், என்றே நினைத்தான். இன்னும் நிறையப் பேச வந்தவனை முதல் வரியிலேயே ஆஃப் செய்து விட்டிருந்தாள். ஆனால் அது அவனின் கோபத்தை அதிகரித்ததே அன்றி ஒரு சதவிகிதம் கூட குறைக்கவில்லை. முறைத்தவாறு அவன் நகர்ந்து விட.

'இவனுக்கு ஏற்கனவே வாங்கினது பத்தல, போறதுக்குள்ள இன்னொரு தடவ கண்டிப்பா ௭ன்ட்ட வாங்குவான்' என நினைத்தவள், காட்டை பற்றி தெரிந்தவர்களை தேடி சென்றாள். "ஹாய், ஹலோ" என இருவருக்கும் சொல்ல, "வணக்கம் தங்கச்சி" என்றார் ஒருவர், இன்னொருவர் வெறுமனே சிரிக்க.

"நா அதோ நடிக்கிறார்ல அவரோட வைஃப், பாப்பு குட்டி ௭ன் பேரு, நீங்க?", 'சரி அதுக்கு என்பதுபோல் இருவரும் பார்க்க', "சரி விடுங்க, என்னைய யாருனு தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க? நேரா விஷயத்துக்கு வரேன். எனக்கு இந்த காட்டை சுத்தி பாக்கணும் இங்க என்ன எல்லாம் இருக்கு?” "௭ன் பேரு வீரமணி தங்கச்சி, கடைசி இரண்டு நாள் சுத்தி காட்டுங்கன்னு அந்த சூப்பர்வைசர் தம்பி சொல்லிச்சுங்க. கண்டிப்பா சுத்தி காட்றேனுங்க" ௭ன்றார் முதலில் வணக்கம் சொன்ன அதே ஒருவர்.

"அதுவர எனக்கு போர் அடிக்குமே, நீங்க எனக்கு மட்டும் சுத்தி காட்ட மாட்டீங்களா?” "ஏன் தங்கச்சி உனக்கு இங்க ஏதும் வேல இல்லயா?" அவர் ௭தேச்சயமாகவே கேட்டார்.

"அதெல்லாம் நிறைய இருக்கு, ஃப்ரியா இருக்கிற நேரத்துல தான் போகணும்ன்னு கேட்கிறேன். இங்க என்ன ஸ்பெஷல்? நீங்க எல்லாம் என்ன வேலை பாக்குறீங்க?" ௭ன்றாள் பேச்சை வளக்க. "எங்க கிராமத்த சுத்தி விவசாயம் பாப்போம், தேனெடுக்க போவோம், அப்புறம் அரசாங்கத்துல 100 நாள் வேல திட்டத்துல களைப்பறிக்குறது, முள் செடியை வெட்டுறதுன்னு குடுப்பாங்க அத பாப்போமுங்க. அதும் போக இங்க குறிப்பிட்ட இடத்தை ஏலத்துக்கு எடுத்துருக்குறவங்க குடுக்குற வேலைய பாப்போங்க, தினக்கூலி தான்".
 

"மிருகங்கள்லாம் வராதா? பயமா இருக்காதா?”, "அதும் எப்பவாது வருமுங்க, விளைய போட்ருக்கத பாதுகாத்துக்குன்னே தான் இருக்கணும். ஆனா அதுங்க இடத்துக்குள்ள போகலன்னா அவ்வளவு தொந்தரவு இருக்காதுங்க. ௭ப்பவாது வழி தவறி வந்துடுச்சுன்னா தான் நமக்கு பயந்துட்டு எதயாது சேதப் படுத்திடுங்க".

"ஓ! இங்க எத்தன வருசமா இருக்கீங்க?" "நா பொறந்ததுல இருந்தே இங்க தானுங்க, 40 வருஷமாட்டு இருக்கும்". ஒருவன் மட்டுமே பதில் சொல்லிக் கொண்டிருக்க, மற்றொருவன் படம் எடுப்பதை மும்முரமாக வேடிக்கை பார்த்திருந்தான்.

"டூரிஸ்டர் வருவாங்களே? நீங்க கைடு தான? அதுல நல்ல வருமானம் வருமே?” "வருவாங்க தங்கச்சி, ஆனா அவங்கள கூட்டியார சூப்பர்வைஸருங்க மொத்தமா எடுத்துட்டு, நமக்கு 50, 100 தான் குடுத்துட்டு போவாங்க".

"௭ங்களுக்கும், இப்ப அப்டித்தான் பேசியிருக்காங்கலா?” "ஆமா தங்கச்சி, எப்டியும் மூணு மாசங்கன்னி நீங்க இங்க இருப்பீங்க, அதுவர உங்களோட தான் எங்க ரெண்டு பேருக்கும் வேல. மாசம் 5000 ரூபா தரேன்னு சொல்லி இருக்கான் அந்த சூப்பர்வைசர்".

'௭ப்டியும் ஒரு நாளைக்கு 5000ரூபா வாங்குவான் அவன், வேலையேப் பாக்காம அவ்வளவையும் அமுக்கிருவானோ, ஃப்ராடு' என நினைத்தவள்.

"இந்த தடவ உங்களுக்கான காசு டைரக்டா உங்ககிட்ட வரும். டோன்ட் ஒர்ரி" ௭ன அவர் தோளை தட்டி குடுக்க. "ரொம்ப நன்றி தங்கச்சி, நீங்க தான் சம்பளம் போடுற முதலாளியா?” "இல்ல தான், ஆனா நா பேசி வாங்கி தரேன்". "ரொம்ப நன்றி தங்கச்சி". "எனக்கு நன்றி எல்லாம் வேணா, சுத்தி காட்டினா போதும்". "அதுக்காகத்தான் சம்பளத்த முழுசா தறேன்னு சொன்னீங்களா?", "அப்படியும் வச்சுக்கலாம். நீங்களும் எனக்கு சும்மா செய்ய வேணாம், நானும் உங்களுக்கு சும்மா உதவவேணாம்". "நல்லா வெளிப்படையா பேசுறீங்கம்மா".

"ஆமா நா ௭ப்பயும் அப்டித்தான். இப்ப சொல்லுங்க இங்க என்னலாம் இருக்கு சுத்தி பாக்க?” "காட்டுக்குள்ள என்னம்மா இருக்கும். சிவன் கோயில் பழங்காலக் கோயில் ஒன்னு இருக்கு. அப்றம் இப்டி இடது பக்கமா ஒரு கிலோமீட்டர் போனா ஒரு அருவி இருக்குதுங்க. இங்குட்டு ஒரு இருவது கிலோமீட்டர் குள்ள நிறைய பழ மரங்கள் இருக்கு, தன்னால வளந்த மரங்கன்றதால எல்லாமே ஒரு ருசியா இருக்கும். அப்புறம் மலையேறுவீங்கன்னா அதுக்கு தெக்கால போனா ஒரு பதினைந்து கிலோமீட்டர் தான். மனுஷங்க வரையறைக்கு செக்போஸ்ட் இருக்குமா, அத தாண்டி போக முடியாது. உள்ள போகப்போக அடர்ந்த காடு, ரொம்ப இருட்டா இருக்கும். உள்ள நம்மால போகவே முடியாது. இங்கேயே இவ்வளவும் நீங்க பாக்கலாம்".

"சிவன் கோவிலா?", "ஆமா தங்கச்சி, சுயம்புலிங்கம், அரசர் காலத்திலந்தொட்டே இருக்குன்னு ௭ங்க அப்பத்தா சொல்லும். அங்க போனா மனசுக்கு அவ்வளவு அமைதியா இருக்கும். பழைய கால கோவில் அது. இது சிவனோட வனம் அதனாலதான் இதுக்கு புராரிவனம்னே பேரு".

'ஓ! அத தான் படம் பேரா வச்சிருக்காங்களோ?' என நினைத்துக்கொண்டு, "சரி ப்ரோ நீங்க கண்டிப்பா சுத்திப் காட்டனும் ஓ.கே. நா ௭ப்பன்னு டிசைட் பண்ணிட்டு சொல்றேன். பை ப்ரோ" என்றவள் கிளம்ப போக.

"ஏம்மா நீங்க ரொம்ப ஆர்வமா இருக்கதுனால சொல்றேன் தனியா எங்கேயும் கிளம்பி போயிடாதீங்க, விலங்குக எப்ப எங்கிட்டு வரும்னு அதுக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது. அப்புறம் வடகிழக்கு பக்கமு போயிறாதீக, அங்குட்டு நீங்க நெனச்சாலும் போக முடியாது. தீயசக்தி ஆக்கிரமிப்பு இருக்குன்னு சிலரும், சிவனடியார்கள் இருக்கதுனால மந்திர வளையம் போட்டு வச்சுருக்கதா சிலரும் சொல்றாங்க. எது உண்மைன்னு தெரியல. அந்த பக்குட்டும் போகாதீக" அவ்வளவு நேரம் தனக்கென்ன இதில் லாபம் ௭ன நின்ற மற்றவன் சொல்ல.

"நா போனுங்கறதுக்காகவே சொல்றமாறி சொல்றீங்களே ப்ரோ. ௭னிவே உங்க அக்கறைக்கு ரொம்ப தேங்க்ஸ் பிரதர். சூட் முடிஞ்சது இனி பேக்கப் தான், ௭ன் ஹஸ்பண்ட் ௭ன்ன தேடுவாங்க. சோ பை" என இரணியனை நோக்கி சென்று விட்டாள்.

"ஏன்டா அத சொன்ன, வெளியூர் புள்ள விவரமில்லாம வடக்க போயி ௭ன்னமாச்சு ஆனா ௭ன்னடா பண்றது விளங்காத பயலே" ௭ன வீரமணி திட்ட. "ண்ணே நீ வேற, அப்டி அங்க ௭ன்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க இது ஒரு நல்ல வாய்ப்பு பாத்துக்க, இவிக கூட்டமா வந்துருக்காக, தனியா தான அதுக்குள்ள யாரலயும் போக முடியல, கூட்டமா போனா ௭ன்ன ஆகுதுன்னு ஒரு கை பாத்தரலாம்ல, அங்க அரச கால புதையல் இருக்குண்ணே, உள்ள மட்டும் போயிட்டோம்னா, நானே ௭ன்ன இருக்குன்னு கண்டு புடிச்சுருவேணாக்கும்", " நீ வேண்டாத வேல ௭தயும் பாத்து வர்ற 5, 10 யும் கெடுத்துருவன்னு நினைக்கேன், ௭ன்னய உன் கூட்டுல சேக்காத" ௭ன்ற புலம்பலுடன் வீரமணி வண்டியை நோக்கி நகர்ந்தார்.
 
அத்தியாயம் 38
அடுத்து வந்த நாட்களில், 10 மணியளவில் ஷூட்டிங் கிளம்பி செல்வதும், படப்பிடிப்பு நேரமான 4, 5 மணி நேரத்திற்கு மட்டும் பாப்பு பக்கத்தில் உள்ள இடங்களை சுற்றிப் பார்க்க கார்ட் கிருஷ்ணன், மற்றும் சுற்றி காண்பிக்க வீரமணி, சோலையன், சகிதம் கிளம்பிச் செல்வதும் வாடிக்கையானது.

இரணியன் எப்போதும் அவள் மேல் ஒரு கண் வைத்திருப்பதால் அவனுக்கு தெரியாமல் செல்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்ததால், காட்டை சுற்றி பார்க்க செல்ல பெர்மிஷன் கேட்டு நின்றவளிடம், "நீ போறது என் பிராப்ளமில்ல போயிட்டு ஒரு பிராப்ளத்தோட வருவியே அதான் யோசிக்கிறேன்" ௭ன மறுத்தான்.

"ப்ராமிஸ் நா நல்லா சுத்தி மட்டும் பாத்துட்டு வருவேன், அப்றம் ஒரு நாள் உங்கள கூட்டிட்டு போறேன், நாம தனியா போலாம், ஓகே வா" என அவன் கன்னம் பிடித்து கெஞ்சவும் அவனால் மறுக்க முடியவில்லை.

"ஓகே மா போய்ட்டு வா, பட், ஆன் 5, யூ வில் ஹவ் டு பிஃபோர் ஆன் மை ஐஸ் (மாலை 5 மணிக்குள் நீ என் கண்களுக்கு முன் இருக்க வேண்டும்)", "டீல் சார்ம்" என கட்டிக்கொண்டாள்.

டிசம்பர் மாத ஓவர் பனி காரணமாக, காட்டினுள் காலை வேளைகளில் சூட் செய்யமுடியாமல் 11 மணிக்கு மேல் 5 மணிக்குள் என்று செட்டியூல் போட்டிருந்தனர். அதில் லஞ்ச்சை அவனுடன் முடித்துவிட்டு கிருஷ்ணனுடன் இருக்கும் மற்ற கார்ட்ஸையும் சேர்த்து 3 பேர் பாதுகாப்பில் தான் அந்த காட்டை சுற்றி பார்த்தாள்.

ஸ்லோட்டியும் தன்னால் முடிந்த அளவுக்கு இரணியன் கவனத்திற்கு போகாமல் பாப்புவிற்கு தொந்தரவு தர முயன்று கொண்டிருந்தான். அவளுக்கென செல்லும் சாப்பாட்டில் அதிக உப்பை கொட்டுவது, டீ, காஃபியில் அதிக சீனியை கொட்டுவது, ஜூஸில் அதிக ஐஸ் போடுவது, அதனால் இரண்டு நாள் அவள் த்ரோட் பெயின் / கோல்டில் அவதிப்படுவதைப் பார்த்து சந்தோஷப்படுவது என சிறு சிறு தொல்லைகள் செய்தான்.

இதனால் அவள் டென்ஷன் ஆனாலோ இல்லையோ, "வாட்ஸ் ராங் வித் தட் கேட்டரிங் ஸ்லோட்டி. சேன்ஜ் தட் காண்ட்ராக்ட் ரைட் நௌ" என பிடிபிடியென இரணியன் பிடித்துவிட்டான்.

அடுத்ததாக அவள் காட்டை சுற்றி பார்க்க செல்லும் இடத்தில் ஏதாவது செய்ய சொல்லி சோலய்யனிடம் சொன்னான். வீரமணி அதற்கு சரிபட்டு வரமாட்டான் என்றெண்ணி.

சோலைய்னும் வாங்கும் காசிற்காக பாப்புவை நெருஞ்சில் முள் இருக்கும் இடத்தில் அவள் கால் இடறி விழ வைப்பது, அட்டை பூச்சிகள் அதிகம் இருக்கும் இடத்தில் சுற்றி வர வைத்து, மாலை அதிக நேரமாக்கி இரணியனிடம் திருப்பி அழைத்து வருவது என இருக்க.

முதல் இரண்டு நாள் அதை பெரிதுபடுத்தாதவள், இரணியன் இவள் எங்காவது அடிபட்டு வரவும், இனி நீ எங்கேயும் போகவேண்டாம் என அதட்டவும், மூன்றாம் நாள் "இனி இப்டி நடக்காது, இன்னைக்கு நா பெர்பெக்ட்டா போற மாதிரியே வருவேன் ஓகே, அப்டி வரலனா இனி போக சொல்லி கேட்க மாட்டேன்" என்ற பின்னும் கிருஷ்ணனை நாலு திட்டு திட்டியே உடன் அனுப்பினான்.

பாவம் அவரும் தான் என்ன செய்வார், அவள் விழுந்து வாருவதெல்லாம் தற்செயலாக நடப்பது போலவே இருக்கையில் அவரால் தூக்கி மட்டுமே விட முடிந்தது.

ஆனால் பாப்பு அதன்பின் சுற்றுப்புறத்தையும், உடன் வருபவர்களையும் கவனித்து வந்ததில் சோலய்யன் முயற்சி பிடிபட, சற்றும் யோசிக்காமல் பளார் என அறைந்திருந்தாள்.

அவன் திருட்டு முழி முழிக்க, "என்ன கூட்டிட்டு போக பிடிக்கலன்னா என் கூட வராத. நா வேற ஆள ஏற்பாடு பண்ணிக்கிறேன். அத விட்டுட்டு இப்டி வேண்டாத வேலை பாத்த" விரல் நீட்டி எச்சரித்து விட்டு திரும்ப, வீரமணி திக் பிரமையில் நிக்க, "நீங்களுமா?" என்றாள் அதட்டலாக.

"இவன் வேணும்னே தான் தாமதமாக்கி, சுத்தி கூட்டிட்டு போறான்னு எனக்கு தெரியும் தங்கச்சி, ஆனா ஒரு பக்கம் சம்பளம் கொடுக்கிறவுக சொல்லுதாக, இன்னொரு பக்கம் இவேன் என் கூட்டாளி எப்டி காட்டி கொடுக்க முடியும்" என அவர் தலை குனிய.

"சம்பளம் கொடுக்குறவங்க சொன்னாங்களா? அது யாரு?", "அந்த மேனேஜர் தம்பி தான்". "ஸ்லாட்டியா?" "ஆமா தங்கச்சி", "அவனே ஒரு தொட நடுங்கி அவன் பேச்ச கேட்டா செய்றீங்க?" என தலையிலடித்துவள், "வாங்கப்போவோம். நீ 10 ஸ்டெப்ஸ் பின்ன நடந்து வரணும்" என்றாள் சோலய்யனிடம். முதல் முறை ஒரு பெண்ணிடம் அடிவாங்கிய அதிர்ச்சி அவனிடமிருந்து விலகி வெகு நேரம் பிடித்தது. "நா பார்த்துக்குறேன்மா" என்றார் கிருஷ்ணனும், ஒரு பாடிகார்டாய் இருந்து கொண்டு இவனை கவனிக்காமல் இருந்து விட்டோமே என்ற வருத்தம் அவருக்கு.

மேலும் ஒரு வாரம் அவர்கள் காட்டிய இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்தாள். அங்கு சுற்றி வந்ததில் சில நேரம் சில இடங்கள் அவளுக்கு இதுக்கு முன்னரே பார்த்தது போலும் இதே இடத்தில் இதேபோல் இதற்கு முன்னும் அமர்ந்து வேடிக்கை பார்த்தது போல் ௭ல்லாம் தோன்றும். ஆனாலும் அது அவளுக்கு எப்போதுமே வரும் ஒன்று தான். வீட்டிலேயே அமர்ந்து பேசிக்கொண்டோ, சாப்பிட்டுக்கொண்டோ இருக்கும் போது அது ஏற்கனவே நடந்தது போல் தோன்றும். அப்புறம் அது மறந்தும் போகும் அதுபோலவே இதுவும் என நினைத்துக்கொண்டாள்.

அடுத்து என்ன செய்யலாம் என ஸ்லாட்டி ஒரு பக்கம் யோசனையில் சுற்றிவர, அவனுக்கும் ஒரு வாய்ப்பு அவனைத் தேடி வந்தது. அந்த படத்தின் ஹீரோயின், "மிஸ்டர் ஸ்லோட்டி எனக்கு ஒரு பேவர்" என கெஞ்சி கொஞ்சி கேட்டு வந்து நின்றாள்.

"சொல்லுங்க மேடம்", "எனக்கு இரணியன் கூட ஒரு ஒன் ஹவர்னாலும் தனியா ஸ்பெண்ட் பண்ணனும், கொஞ்சம் அதுக்கு ஏற்பாடு பண்ண முடியுமா?" என்க. 'நம்மள இவ என்னன்னு நினைச்சா' என பல்லை நறநறவென்று கடித்தான்.

"சூட்டிங் டைம் ஃபுல்லா உங்க கூட தான மேம் இருக்காரு". "நாந்தான் சொன்னனே தனியா மீட் பண்ணனும்னு. சூட்டிங்ல சுத்தி கிரவுட், அவர் வைஃப்க்கு இன்ஃபர்மேஷன் போயிடும்ன்னு நினைப்பாரோ என்னவோ? என் பக்கம் திரும்புறதே இல்ல". "அப்டி இல்ல மேடம். அவர் நார்மலாவே அப்டித்தான், ரொம்ப ரிசர்வ்டு. யார்ட்டயும் ஃப்ரீயா பேசி பழக மாட்டார்". "நானும் கேள்விப்பட்டுருக்கேன். பட் கியூரியாசிட்டி கண்ட்ரோல் பண்ண முடியல, இதுக்கு முன்னால பாக்கணும், பழகணும்ன்னு ட்ரை பண்ணி இருக்கேன். சான்ஸ் அமையல, மேரேஜ் புரோபோசல் கூட வைக்கணும்னு இருந்தேன். மை பேட் லக், அவருக்கு சீக்கிரமா மேரேஜ் ஆயிடுச்சு. நா கொஞ்சம் ஸ்டெடி ஆகிட்டு அவர்ட்ட பேசலாம்னு நினைச்சுட்டுருந்தேன் அதுக்குள்ள அவருக்கு மேரேஜ் ஆயிடுச்சு. அட்லீஸ்ட் இது அவருக்கு தெரியனாலும் படுத்தணும், அப்ப தான் ஐ ஃபீல் ஜஸ்ட் ரிலாக்ஸ்".

"அவர தனியா மீட் பண்றது ரொம்ப கஷ்டமே மேம்". "நீங்க நினைச்சா முடியுமே" என அவள் சிரிக்க, "ட்ரை பண்றேன், ஆனா நீங்க எபடி சுச்சுவேஷன் வந்தாலும் என் நேம்ம சொல்லக்கூடாது". "ச்ச, ச்ச என்ன ஸ்லோட்டி எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்றீங்க, வேணா பாருங்க அவரே எங்க மீட்டிங்க வெளியில சொல்ல மாட்டார், கிடைச்ச சுச்சுவேஷன அப்டி யூஸ் பண்ணிக்க போறேன்". "ஓகே மேம், ஆல் தி பெஸ்ட். நா மேனேஜர் மூணு பேரையும் இன்னைக்கு நைட்டு டின்னருக்கு கூப்பிடுறேன், அந்த டைம்ம நீங்க யூஸ் பண்ணிக்கோங்க" என ஸ்லோட்டியும் சிரிக்க, "தேங்க்யூ" என கட்டிப்பிடித்து தன் சந்தோசத்தை வெளிப்படுத்தி சென்றாள்.

"அந்த இரணியன பத்தி சரியாத் தெரியாம புலம்பிட்டு போது பைத்தியம். இத நா எனக்கு யூஸ் பண்றேன். தேங்க்யூ" என அவளைப் போலவே சொல்லிக்கொண்டான்.

பின் சற்று நேரத்தில் அவன் மூன்று மேனேஜருக்கும் அழைப்பு விடுக்க, இரணியன் மறுக்க, "விஷா இருந்தா போயிருப்பான் தான, நானும் போவேன். நீங்க ஸ்கிரிப்ட் ரீட் பண்ணி முடிக்கும்போது உங்க முன்னாடி நிப்பேன்" என்றபின் "அடிதடியாகாம திரும்பி வந்தா சரி" என்று அனுப்பி வைத்தான்.

அவள் சென்ற பத்து நிமிடத்தில் கிருஷ்ணன் கதவை தட்டிவிட்டு உள்ளே வர, "சொல்லுங்க கிருஷ்ணன்" என்றான் இரணியன் பார்வையை நிமிர்த்தாமல். "ஹீரோயின் மேடம் உங்கள பாக்க பெர்மிஷன் கேக்குறாங்க", "ஃபார் வாட்?" என்றான் நிமிர்ந்து புருவ சுளிப்புடன். "ஏதோ பர்சனலா பேசணுமாம்" தயங்கியவாறு சொல்ல, "எதுனாலும் நாளைக்கு ஸ்பாட்ல பேசிக்கலாம்னு சொல்லி அனுப்புங்க" என குனிந்து மறுபடியும் ரீட் பண்ண ஆரம்பிக்க, வெளியே சென்றவர் சற்று நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட, அவருக்கு கால் செய்து உள்ளே அனுப்ப சொன்னான்.

ட்ரான்ஸ்பேரன்ட் (அலசலான) ட்ரெஸ்ஸுடன் உள்ளே நுழைந்தவளை தீயாக முறைத்தான். "என்ன பிஹேவியர் இது. அன்டைம்ல இப்டி வந்தீங்கன்னா, காசிப் எழுத இந்த ஒரு பிக்சர் போதும். நமக்குள்ள பர்சனலா பேச என்ன இருக்கு சொல்லுங்க".

"ஷேல் ஐ" என்றாள் அவன் அமர்ந்திருந்த சோபாவில் இருந்த இருக்கையை காட்டி, "சிட்" என்றான் மேலும் முறைப்பாகவே.

அவள் பால் வண்ண அழகி, மெழுகு பொம்மையாக இருந்தாள். அதுவும் அந்த கவர்ச்சி உடையில், அவள் கேரவனில் இருந்து இவன் கேரவனுக்குள் வருமுன் பார்த்த அனைத்து கண்களும் ஒரு நொடியேனும் அவளை முழுதாய் அலசி விடுவித்தது. ஆனால் இரணியன் அவள் முகத்தினில் இருக்கும் கண்களை தாண்டி மூக்கிற்கு கூட அவன் பார்வை இறங்கவிடவில்லை.

"எக்ஸ்க்யூஸ் மி" என அவள் முகமுன் அவன் சொடக்கிட, அந்த கையை அவள் தன் இரு கைக்குள் அடக்கிக்கொள்ள, அவனோ உதறி தன் கையை விடுவித்துக் கொண்டான்.

"ப்ளீஸ் சார், கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணுங்க, இல்லனா இந்த சான்ஸையும் மிஸ் பண்ணிடுவேன். ஐ லவ் யூ சார், யா ஐ லவ் யூ சோ மச். இத நா முன்னயே சொல்லியிருக்கணும். பட் அதுக்குள்ள உங்களுக்கு திடீர்னு மேரேஜ் பிக்ஸ் ஆகிடும்னு எக்ஸ்பெக்ட் பண்ணல. நா வெர்ஜின் இல்ல தான், ஆனா என் லவ் ப்யூர், எப்டியாது இத உங்க கிட்ட சொல்லிடணும்னு வெயிட் பண்ணேன். இப்ப சொல்லிட்டேன். என்ன நீங்க செகண்ட் வைஃப்பா கூட அக்சப்ட் பண்ணிக்கலாம், இல்ல லிவிங் டுகதர் ஓகேனாலும் ஓகே. என்னால உங்க ஃபேமிலிக்குள்ள எந்த ப்ராப்ளமும் வராது ஐ ஸ்வர்" என அவன் முகத்தையே பார்த்தவாறு அனைத்தையும் சொல்லி முடிக்க.

தலையை அழுத்தத் தேய்த்தவன், "ப்ளீஸ் லீவ்" என்றான் கதவை கைகாட்டி காட்டமாக. "சே எஸ் ஆர் நோ இரணியன்" என லவ்வை சொல்லிவிட்ட உரிமை அவள் வார்த்தையில் வெளிப்பட, ஓங்கிவிட்டான் ஒரு அரை, "என்ன கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கேட்ட கேர்ள்ஸ் கவுண்ட் மோர் தன் 1000. ஐ காண்ட் மேரி தம் ஆல். கெட் லாஸ்ட்" என்றான் உக்கிரமாக.

அவன் கட்டாயம் கை ஓங்குவான் என தெரிந்தே வந்ததால் அசராமல் தான் நின்றாள் அவள். "நா தான் எனக்கு எதுனாலும் ஓகேன்னு சொல்றேனே அப்றமு ஏன் இப்டி அடமென்ட்டா இருக்கீங்க. ஐ டோன்ட் ஹேவ் கேமரா லைக் தட் ஆப்ஜெக்ட்ஸ். ப்ளீஸ் பிலீவ் மீ. மை லவ் இஸ் ட்ரூ".

"உன்ன கார்ட்ஸ் விட்டு வெளியில தள்ள எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. இந்த பிலிம் ஹீரோயின் நீ ஏதோ அறிவில்லாம உளர்றன்னு பொறுமையா சொல்லிட்டு இருக்கேன். உன் ரெஸ்பெக்ட் காப்பாத்திக்க, லீவ்" என்க.

"சாரி ஐ ஓன்ட் மிஸ் மை சான்ஸ்" என்றவள் போட்டிருந்த அந்த ஒரு கவுனையும் கழற்ற, அது அவள் உடம்பில் இருந்து நழுவி கீழே விழுந்தது. அவள் அப்படி நிற்பாள் என எதிர்பார்க்காதவன் கை ஸிவர் ஆக ஆரம்பிக்க, சோஃபா கை பிடியை பிடிக்க முற்பட்டான். அவளோ அவன் அறுவறுப்புடன் முகம் சுழிப்பதைக் கண்டு, வேகமாக அவனை அணைத்து "சாரி இரணியன், எனக்கு வேற வழி தெரியல. நீங்க கண்ண தாண்டி பாக்க மாட்றீங்க. இப்படித்தான் உங்கள பாக்க வைக்க முடியும்னு தோணுச்சு அதான் இப்படி பண்ணிட்டேன். ௭ன்ன பாத்தா கண்டிப்பா உங்களுக்கு ௭ன்ன பிடிக்கும்னு தான் இப்டி பண்ணேன். நீங்க இப்படி ஃபேஸ் எக்ஸ்பிரஷன் கொடுக்காதீங்க, என்னால டாலரேட் பண்ண முடியல" என அவனை விடாமல் புலம்பித் தள்ள.

"சிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே ஆண் இனமே உன்னை வணங்குமே" என பாப்பு பாடிக் கொண்டே கதவை திறந்ததும் கண்ட காட்சி ஆடை இல்லாத பெண் தன் கணவனை காட்டிக்கொண்டு நிற்பது தான்.

திடீரென பாப்புவை அங்கு எதிர்பாராத அந்த ஹீரோயின் வேகமாக தன் உடையை எடுத்து அணிய, பாப்பு அதை பார்த்தவள், "நீ டிரஸ் போட்டப்புறமு போடாம இருக்க மாதிரி தான் இருக்கு லூசு. ஏன்டி என் புருஷன கட்டிப் பிடிச்ச, சான்ஸ் கேட்டு அலையுறியா? சீன் சூட் முடிஞ்சப்புறமு அவரையே நீ முழுங்குற மாதிரி பாக்குறப்பவே நினைச்சேன் இது மாதிரி ஒரு நாள் வந்து நிப்பன்னு. நீ என்ன ட்ரை பண்ணாலும் ஒன்னும் நடக்காது, செல்ஃப் கண்ட்ரோல் அதிகமுள்ள மனுஷன், மை சார்ம். எல்லோரும் இப்டி ஸ்ட்ராங்கா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. லைஃப்ப வேஸ்ட் பண்ணாம ஸ்டெடியாக பாரு. அந்த ஸ்லாட்டி ஐடியாவா இது? என்ன சாப்பிட கூப்பிட்டுட்டு உன்ன இங்க அனுப்பி விட்டு, பின்னயே என்னயும் இங்க அனுப்ப, சாப்பாடு வர லேட்டாகும் போயிட்டு ஹாஃப் அன் ஹௌர் கழிச்சு வாங்கன்னு அனுப்பிட்டான். லூசு பயலே நீயும், உன் டின்னரும்னு போடான்னு திட்டிட்டு வர்றேன். அவனோடல்லா கூட்டு சேராத ஓகேவா? போயிட்டு வா. இனி இப்டி விபரீத விளையாட்டு ட்ரை பண்ணக்கூடாது, அடிப்பேன்" என கதவை திறந்து அவளை வெளியே தள்ளிவிட்டு, உள்ளே திரும்ப நின்ற இடத்தில் அப்படியே நின்றான் இரணியன்.

மெதுவாக அவனை நெருங்கியவள், அவன் முகம் நிமிர்த்தி, "என்ன சார்ம்" என்றாள் தலை சரித்து சிரித்து, "சாரிமா" என்றான் இரணியன். "தப்பு பண்ணவங்க தான சாரி சொல்லணும், நீங்க எனக்கு தெரியாம என்ன தப்பு பண்ணீங்க?" என கேட்க.

அவன் அமைதியாக நிற்க, "ஜில் அவுட் சார்ம், போய் குளிச்சிட்டு வாங்க டின்னர் வர்ற டைம் ஆயிடுச்சு" என அனுப்ப அவனும் குளித்து வர இருவரும் அமைதியாகவே சாப்பிட்டனர்.

"எப்பயும் ஏதாவது பேசுவ தானே? இப்ப ஏன் அமைதியாவே இருக்க? அந்த பொண்ணு லவ் அது இதுன்னு உளறிட்டு திடீர்னு அப்டி ஹக் பண்ணிட்டு, நா ௭க்ஸ்பெக்ட் பண்ணல, நீ அத பத்தி எதுவுமே கேட்கல?” "நீங்களே சொல்லிடுவீங்கன்னு தெரியுமே". "ப்ளீஸ் தாட்சா சொல்லு. நீ ஏன் என்ன டவுட் பண்ணல". "எனக்கு தோணலையே சார்ம்". "எக்ஸ்போஸ் இட் பிராங்லி". "நீங்க அவ்வளவு ஒர்த் இல்லன்னு என் மைண்ட்டும் மனசும் நம்புதோ என்னவோ" ௭ன்றாள் ௭ப்பொழுதும் போல், "அடி கழுத, ௭ன் மேல உனக்கு இப்டி ஒரு இம்ப்ரஷன் இருக்கே இத ௭ப்டி தான் மாத்றது" என கேக்க, "ஆய கலைகள் அத்தனையும் கத்து கொடுங்க ஒத்துக்றேன்" ௭ன கண்ணடிக்க, சிரித்தவாறு எழுந்து சென்று படுத்தனர்.
 
அத்தியாயம் 39
படுத்த பின்னும் அவன் உருண்டு கொண்டே வர, பாப்பு படுத்த நிமிடம் உறங்கியிருந்தாள். அவனால் அதற்கு மேல் முடியாமல், அவள் வயிற்றில் தலை வைத்து இறுக்கிப் பிடித்துக்கொண்டு தூங்க முற்பட, அதில் விழித்தவள், "என்னாச்சு சார்ம்" என கேட்க.

"தூக்கம் வரலம்மா" அவனது கில்ட்டி ஃபீல்லிங் அவளுக்கு புரிந்தது. "வெளில போலாமா?" ௭ன்க, "இந்நேரமா? எங்க?” "காட்டுக்குள்ள தான்". "இடியட் அனிமல்ஸ் உலாத்துர நேரம்". "நாம கேர்ஃபுல்லா போவோம். ரிஸ்க் தான் ஆனாலும் நல்லார்க்கும்ல. நா ரூட் நல்லா நோட் பண்ணி வச்சிருக்கேன். உங்க பர்த்டே நைட்டு அங்க கூட்டிட்டு போய் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு. பட் நீங்க சேடா இருக்கிறதால இன்னைக்கே கூட்டிட்டு போறேன்". "எவ்வளவு ஈசியா பேசுற நீ? இந்நேரம் எவனாது வாலண்டியரா காட்டுக்குள்ள போய் அனிமல்ஸ்க்கு புட் ஆவானா? நீதான் இடியட்னா என்னயும் இடியட் ஆக்க பாக்குற? இனி எனக்கு தூக்கம் வந்துரும், பேசாம தூங்கு. காலைல போகலாம்". "எனக்கு தூக்கம் போயிடுச்சு, நா மைண்ட் செட் பண்ணிட்டேன், சோ, வாங்க போகலாம். என்ன ஹீரோ நீங்க இப்டி பயப்படுறீங்க. நா வீரமணி ப்ரோட்ட நல்லா விசாரிச்சுட்டேன், மக்கள் நடமாடுற இடம் வர அனிமல்ஸ் நிறைய டைம் வராதாம். நாம அத டிஸ்டர்ப் பண்ணலனா அதும் நம்மள டிஸ்டர்ப் பண்ணாம போயிடுமாம். பத்தாததுக்கு செக்போஸ்ட் வேற இருக்கு, பின்ன என்ன பயம். வாங்க போலாம். திரில்லிங்கா இருக்கும்". "நா வரல", "நா போறேன்" என எழுந்து டிரஸ் மாற்றியவள், மொபைல், பவர் பேங்க், வாட்டர் பாட்டில், இருவருக்கும் ஒன் செட் டிரஸ், ஸ்கார்ப் என அனைத்தும் அடங்கிய ஒரு பேக் சகிதம் கிளம்பிவிட, "சரியான லூசு தான்டி நீ" என்ற சொல்லுடன் டீசர்ட் அணிந்து அவளுடன் புறப்பட்டான்.

கார்ட்ஸ் இருவரும் உடன் வந்தனர். ஜீப்பை கிருஷ்ணனே ஓட்ட, மூவரும் பின் ஏறினர். முதலில் அருவிக்கே அழைத்துச் சென்றாள். டிசம்பர் மாதக் குளிர் மற்றும் காட்டினுள் மரக்கிளை அசைவால் உருவாகும் காற்றின் குளிர் கிடுகிடுவென நடுங்கி, ரோட்டு மேலேயே ஜீப்பையும், கார்ட்ஸயும் நிறுத்திவிட்டு பாப்புவும், இரணியன் மட்டும் உள்ளே அருவியை நோக்கி நடந்தனர். கொஞ்ச தூரம் சென்றதுமே தண்ணீர் ஓடும் ஓடை வந்தது, அதன் ஓரமாகவே நடந்து செல்ல செல்ல குளிர் அதிகரிக்க, அவன் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அவனோ அவள் தோளை சுற்றி கை போட்டு அணைத்து அழைத்துச்சென்றான்.

"செமையா இருக்குள்ள சார்ம்?" "பயங்கரமா குளிருது, ஆனாலும் நல்லா இருக்கு. காத்து சவுண்டு தான் பயங்கரமா இருக்கு, மத்தபடி ஓகே" அருவியை நெருங்கினர், ஹோ என இரைச்சலுடன் அருவி கொட்ட, "குளிப்பமா?" ௭ன்றாள், "ஏது நக்கலா? ஜன்னி வந்துரும்". "அதெல்லாம் ஒன்னும் வராது, வாங்க" என இழுத்துச் சென்று தண்ணீரில் நிறுத்த, முதலில் இருவருக்குமே வெடவெடத்து விட்டது. பின் உடல் அந்த தண்ணீர் பதத்திற்கு பழகிவிட நிதானமாகினர்.

"சூப்பர்ல? பாட்டு போட்டு ரெண்டு பேரும் ஒரு டூயட் ஆடுவோமா? பவுர்ணமி நிலா வெளிச்சம், காடு, அருவி இதெல்லாம் இனி என்னைக்கு கெடைக்குமோ?” "ஓ ஆடலாமே. அருவி சத்தத்த மீறி ௭னக்கு கேக்குற மாதிரி பாடு ஆடலாம்" என்றான் அவன்.

அதனால் சும்மாவே அவன் கையை பிடித்து சுற்றி சுற்றி வந்து ஆடி டயர்டாகி அவள் ஒரு முடிவுக்கு வந்து "போவோமா?" என்க. உடையை மாற்றிக்கொண்டு ஈர உடையை கையில் தூக்கிக் கொண்டு கிளம்பினர். அடுத்ததாக ஜீப்பிற்கு போவதாக அவன் நினைக்க, அவள் அழைத்துச் சென்றது சிவன் கோவில். குகை போன்ற அமைப்பில் அவர் வீற்றிருக்க, முன்னாள் கல் மண்டபம் போன்ற அமைப்பில் இருந்தது. வழிப்போக்கர்கள் அமர்ந்து செல்ல அந்த காலத்தில் கட்டி வைக்கப்பட்டது போன்று இருந்தது.

"இது சுயம்புலிங்கமாம் சார்ம் கேட்டதெல்லாம் கிடைக்குமாம், வேண்டிக்கோங்க". "இதுக்கு முன்ன இங்க வந்த மாதிரி ஒரு ஃபில் இருக்கு தாட்சா" என்றான் குகையை சுற்றி பார்த்து. "எக்ஸாக்ட்லி எனக்கும், சேம் பீலிங். மே பி இதுமாதிரி சென்னை சைடுல எதுவும் இருக்குமா இருக்கும்" என்றாள். "இருக்கலாம், மனசுக்கு அமைதியான ஃபீல் கொடுக்குது இந்த பிளேஸ்" என்க. அவள் தலையசைத்தாள். சற்று நேரம் அந்த வெளி மண்டபத்தில் அமர்ந்து இருந்தனர். பின் "போலாமா?" என அவன் எழ, தானும் எழுந்தவள் முன் நடக்க, இரண்டு இடத்திற்கு சரியான பாதையில் வந்து விட்டதால் திரும்பி ஜீப்பிற்கு கரெக்டாக அழைத்து சென்று விடுவாள் என்றெண்ணி அவளை அவன் பின்தொடர, அவளோ பாதை மாறி வட கிழக்குப் பக்கமாக நடந்து சென்றாள்.

கொஞ்ச தூரம் வந்தபின், நிலா வெளிச்சம் குறைய, பாதை இல்லாமல் மரத்தின் இடைவெளி மட்டுமே இருந்தது. அதன் நடுவில் புகுந்து சென்றாள்.

"ரொம்ப நேரமா நடக்கிறோம் வரும்போது இவ்வளவு டிஸ்டன்ஸ் இல்லயே?", "ஆமா சார்ம், ரூட் மாறிட்டுனு நினைக்கிறேன்". "ரூட்டு மாறிடுச்சா அடிப்பாவி, இப்ப எப்டித் திரும்புறது. கூகுள் மேப் கூட போட முடியாது". "தெரியல சார்ம்" என இருவரும் நடந்தே ஒரு கிலோ மீட்டர் தொலைவு காட்டினுள் நடந்து வந்து இருந்தனர்.

மறுபடியும் ஒரு குகை போன்ற அமைப்பு தெரிய, ஆனால் ஆள் நடமாட்டம் இல்லாததால் உள்ளே விலங்கு எதுவும் இருக்கலாம் என இருவரும் வெளியிலேயே சுற்றி பார்த்து நின்றனர். ஐபோன் வெளிச்சத்தில் பார்த்தனர், நிலா வெளிச்சமும் சுத்தமாக வர முடியாத அளவு இருட்டாக இருந்தது. எந்த பக்கம் செல்ல என இருவரும் முழித்து திரும்ப போக, "என்ன இவ்வளவு தூரம் வந்துட்டு உள்ள வராம திரும்புறீங்க" என்ற குரலில் தூக்கிவாரிப் போட, இருவரும் திரும்பினர்.

ஒரு பெண் தீப்பந்தத்தோடு சிரித்த முகமாக நிற்க, "வழி மாறி வந்துட்டோம்ங்க வெளியில எப்டி போறதுன்னு தெரியல". "இல்லையே சரியான பாதையில் தான வந்திருக்கீங்க. உள்ள வாங்க, ஆத்தாவ தரிசிச்சுட்டு போலாம்". "உள்ள கோவில் இருக்கா? நீங்க இங்க தான் இருக்கீங்களா?” "ஆமா இந்த குகையில தான் தங்கி இருக்கேன்". "பாதையே இல்லாம கும்மிருட்டாக இருக்கு எப்டி தைரியமா இருக்கீங்க". "சின்ன வயசுல இருந்தே வந்து போய் பழகிடிச்சுமா" என பேசிக் கொண்டே உள்ளே நடந்தனர்.

ஒட்டடை படிந்த, அதீத தூசியோடு வவ்வால் வாடையடிக்க அந்த குகை நீண்டு சென்றது. இருவரும் அந்த பந்தத்தின் பிரகாசத்தில் ஐபோன் வெளிச்சம் வேலையற்றுவிட, சுத்தி வேடிக்கை பார்த்தவாறு நடந்தனர். இருவருமே ஒருவித பரவச நிலையில் இருந்தனர்.

"ஏன் இவ்வளவு நாஸ்டியா கடக்கு? நீங்க சுத்தம் பண்றது இல்லயா?" பாப்பு கேக்க. "இவ்வளவு பெரிய குகைய தனியா எப்டிமா சுத்தப்படுத்த. நானுமே என்னைக்காவது தான் வருவேன். பௌர்ணமியும் வெள்ளிக்கிழமையும் சேந்து வர்ற நாள் மட்டும் வருவேன். இன்னைக்கும் அப்படித்தான் வந்தேன்".

உள்ளே நுழைந்தனர். தலை உசரம் கல்லிருக்க, அதற்கு மேல் நின்றாள் வேங்கை நல்லாள். அவ்வளவு தூசியிலும், பழமையிலும் அவளது முகத்திலிருந்த ஆக்ரோஷம் சற்றும் குறையாமல் இருந்தது.

"காட்டுக்குள்ளேயே நிலா வெளிச்சம் வர முடியல, ஆனா குகைக்குள்ள அம்மன் முகத்துல வெளிச்சம் எப்டி?" என்றாள் பாப்பு அதிசயமாக தன் மேலெல்லாம் புல்லரிக்க. "அது சந்திரனோட அமைப்பு, ஆத்தாவ குளிர்விக்கும் பொருட்டு அவ தலைக்கு மேல் உள்ள பாறை இடைவெளியில புகுந்து அம்மா மேல வெளிச்சத்த பரப்புறாரு".

அந்த முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்து நின்றான் இரணியன். பின் வேகமாக பாறையைப் பற்றி ஏறி, தன் கையிலிருந்த துணியால் அம்மன் மேலிருந்த தூசியை, ஒட்டடையை துடைத்தெடுத்தான். அவள் காலைச் சுற்றிக் கிடந்த குப்பையை அதே துணியால் துடைத்து கீழ் தள்ளினான். கீழிறங்கி நெடுஞ்சான் கிடயாய் விழுந்து வணங்கினான். அதற்குமேல் அவனால் அங்கு நிற்க முடியாமல் மூச்சு முட்ட, ஒரு முறை சுற்றி அவ்விடத்தை பார்த்து விட்டு வெளியே நடக்க ஆரம்பித்தான்.

"இருங்க சார்ம்" என்றவள், "அந்த முகத்தில் ஒரு தேஜஸ் இருக்குதும்மா பாத்துட்டே இருக்கலாம் போல. பகல்ல ஒருநாள் வரணும்" ௭ன தானும் விழுந்து வணங்கியவள், "வெளியில எப்டி போறதுன்னு வழிகாட்டுங்க ப்ளீஸ்" என்றாள் அந்தப் பெண்ணிடம்.

அவர்களை வெளி பாதை வரை வந்து விடுகையில் பொழுது நன்றாக விடிந்திருந்தது. "இனி நீங்கள் ௭ளிதாக சென்று விடலாம்" என அந்தப் பெண் விடை பெறாமலே காட்டுக்குள் சென்று விட, கார்ட்ஸ் இருவரும் இவர்களை காணாமல் மொத்த செட்டிற்கும் சொல்லியிருக்க.

காடு மொத்தமும் ஆளுக்கொரு திசையில் தேடிக்கொண்டிருக்க. வெளிவந்த இவர்களை ஒருவன் பார்த்து இருப்பிடம் அழைத்துச் சென்றான். எல்லோரின் கேள்விக்கும் வழி தவறி விட்டோம் என்ற பதிலுடன் முடித்துக் கொண்டனர்.

அன்றைய பொழுதில் பாப்பு இரணியன் இருவருக்குமே மனதில் நிறைந்திருந்தாள் வேங்கை நல்லாள்.

அதே நாளன்று காலை, அங்கு மெய்யப்பன் வீட்டில், தன் சீனியரின் ஒரு கிளைன்ட் சுஹாவிடம் பாயிண்ட்ஸ் வாங்கிச் செல்வதற்காக வந்திருக்க, அதை அவருக்கும் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தாள். லேசாக வயிறு வலிப்பது போல் இருக்க அருகில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணியை குடித்து தன்னை சமன் செய்து, அதற்கு மேல் அமர்ந்திருக்க முடியாமல் வேகமாக அவருக்கும் எக்ஸ்பிளைன் பண்ணி முடிக்க. விஷா வீட்டினுள் நுழைந்தான்.

பொதுவாக இடப்பட்ட நேரம் வீடு திரும்பாதவன் அன்று வந்திருக்க, "என்ன?" என்பதாய் அவள் புருவம் உயர்த்த, "சும்மா" என வாயசைவில் பதில் சொல்லிவிட்டு அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான். இவன் வரவும் வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்த வடிவும் உள்ளே வந்தார், "என்ன தம்பி இந்நேரம் வந்துருக்கீங்க? டீ போடட்டா?" என்றவாறு.

"இல்லத்தே இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன் அதான் அப்டியே சுஹாவுக்கு எப்டி இருக்குன்னு பாத்துட்டு போலாம்னு..". "சரி பரவாயில்ல. இருட்டுனாப்ல இருக்கு சூடா டீ குடிங்க" என அவர் கிச்சன் செல்ல. கிளைன்ட்டும் சுஹாவிடம் விடைபெற்று கிளம்பினார்.

"என்ன விஷயம்?" என்றாள் அவன் முகம் பார்த்து, "தெரியல ஒரு மாதிரி பயமா இருந்தது அதான் கிளம்பி வந்துட்டேன்" ௭ன்றான் மறைக்காமல். "எதுக்குங்க?", "சொல்ல தெரியல. ஆனா உன்கிட்ட இருந்தா பெட்டர்ன்னு தோணுச்சு. வலி எதுவும் இருக்கா?" என்றான் அவள் வயிற்றை தடவி.

'இப்ப தான் லேசா வலிச்சது, அதுக்குள்ள உங்களுக்கு டெலிபதில்ல சொல்லிட்டாங்களா உங்க பேபி' ௭ன சிரித்தவள், "இன்னும் நாலு நாள் இருக்கேங்க, அப்றம் எதுக்கு இப்பவே பயம்" ௭ன்க.

"நா கொஞ்ச நேரம் உன் மடில படுத்துக்கட்டுமா?" என்றான் குனிந்து அவள் முகம் பார்க்காமல். அவனையே பார்த்தவள், "அந்த டீப்பாயை எடுத்து போடுங்க" என்றாள். அவன் இழுத்துப் போடவும், அவள் மெதுவாக காலை தூக்கி அதில் நீட்ட, "வேணாங்க எதுக்கு கஷ்டம், சாரி இப்ப எப்டி உங்களால இத பண்ண முடியும்னு நா யோசிக்கல" பாதி நேரம் மரியாதையாகவும், மீதி நேரம் வா, போ ௭ன்றும், இஷ்டம் போல் வாயில் வருவதை கூப்பிட்டு கொண்டிருந்தான்.

"நீங்க எதையுமே யோசிக்க வேணாம், வாங்க வந்து படுங்க" ௭ன்றாள் அவன் படுக்க வாகாக அமர்ந்து. "இல்லங்க உங்களுக்கு வலிக்கும், கஷ்டமா இருக்கும், எனக்காகன்னு யோசிக்காதீங்க. டெலிவரி அப்றம் நா எப்ப வேணா படுத்துக்க தான போறேன், ஃப்ரீயா விடு" என எழப் போக. "அடடா, நீங்க உங்க பேபி பக்கத்துல படுத்தீங்கன்னா ஃபேக் பெயின் கூட குடுக்காம பேபி சமத்தா இருக்கும். சோ ௭னக்காக பயப்படாம படுங்க" என்ற பின் மெதுவாக அவள் மடிமீது தலை வைத்து படுத்து கண் மூடினான்.

அந்நேரம் டீயுடன் வந்தார் வடிவு, "என்னாச்சுடி?" என இங்கு நடந்த சம்பாஷணை தெரியாமல் செய்கையில் விஷாவை காட்டி வினவ. "ஒன்னுமில்ல நீ போ" என சைகையிலேயே அவரை அனுப்பி விட்டு அவன் தலையை கோத ஆரம்பித்தாள் சுஹா. அவ்வளவு நேரம் அலைபாய்ந்த அவன் மனதிலிருந்த பயம் விலக, கண்ணயர்ந்தவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான். மேலும் அரை மணி நேரம் கடந்து இருந்த நிலையில் அவளுக்கு கால் வலிக்க ஆரம்பித்தது, வயிற்றிலும் ஏதோ அசவுகரியம் தெரிய, "ம்மா." என அவன் புஜத்தை அழுத்தியதில் பதறி எழுந்தான் விஷா.

"சாரி சாரி சுஹா, இடிச்சுட்டேனா. அப்பதையே எழுப்பியிருக்கலாம்ல்ல. எங்க வலிக்குது. அத்த... என்ன செய்து சுஹா" என அவன் போக்கில் பேச வடிவும் "என்னாச்சு மாப்ள, வழி வந்துட்டா சுஹா" என உள்ளறையில் படுத்திருந்தவர் ௭ழுந்து வேகமாக வந்தார்.

"ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணுங்க, ரிப்போர்ட் எடுத்துட்டு கிளம்புங்க, ஹாஸ்பிடல் போயிடலாம்" என எழுந்தவன் அவளையும் எழுப்ப, மெதுவாக எழுந்தாள். மூவருமாக மருத்துவமனை அடைய டாக்டர் செக் செய்துவிட்டு அட்மிட் ஆக சொல்லிவிட, விஷயம் மெய்யப்பன், வேதி இருவருக்கும் சொல்லப்பட்டது, இருவரும் வந்து சேர்ந்தனர். இரணியனுக்கும் பாப்புவிற்கும் குழந்தை பிறந்ததும் சொல்லிக் கொள்ளலாம் என முடிவு எடுத்துக் கொண்டனர்.

சுஹாவிற்கு வலி அதிகரித்தது ஒருபக்கம் என்றால், குழந்தை பிறப்பும் தள்ளிப்போய் நள்ளிரவை தொட்டுக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பாப்புவின் முகத்தில் பலதரப்பட்ட பாவனைகள் வந்து போய்க்கொண்டிருந்தன. அவள் ஆழ்மனம் எதையோ உணர்ந்து பயப்படுவது போல், அவள் முகம் வெளிறி அந்த பயத்தை பிரதிபலித்தது. அந்த பயம் பதட்டத்தை கொடுக்க, பதட்டம் மூச்சுத்திணறலை கொடுக்க, அது வலிப்பில் கொண்டுவந்துவிட்டது.

பாப்புவிற்கு வலிப்பு வந்து, உடல் அதிர ஆரம்பிக்க, அதில் இரணியன் விழிக்க அவன் தூக்கம் நன்றாக தெளிந்து கீழ் விழப்போனவளை பிடிக்குமுன் அவள் விழுந்து விட. விழுந்த வேகத்தில் தலை தரையில் மோதி, கை அருகில் இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளில் மாறி மாறி இடிக்கப்பட்டு, அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூச்சாடி அவள் தலையில் விழுந்து நெத்தியில் கீறலை கொடுத்து உருண்டது.

அடுத்தடுத்த நொடிகளில் இரணியன் இறங்கி அவளை தூக்குமுன் இவ்வளவும் நடந்திருக்க, அவனுக்கும் பதட்டம் அதிகமாகியிருந்தது. அதுவரை அவள் பிட்ஸில் துடிக்கிறாள் என்பதை உணராதவன், உணர்ந்த அடுத்த நொடியில் அவளை தூக்க முயல, அவள் உடல் அலைக்கழிப்பு ஒத்துழைக்கவில்லை. எங்கோ சினிமாவில் பார்த்த ஞாபகத்தில் ட்ரெஸ்ஸிங் டேபிள் லாக்கில் தொங்கிக் கொண்டிருந்த கீயை எடுத்து அவள் கையில் வைத்து அழுத்தினான். அடுத்த இரண்டு நிமிடம் முழு போராட்டத்தின் பின் மெதுவாக மயக்கத்திற்கு சென்றாள்.

தலையில் பட்ட அடி மற்றும் கீறலால் ரத்த கசிவு ஏற்பட்டு முகம் வீங்க ஆரம்பித்தது. வேகமாக எழுந்தவன் அவளை தூக்கி கட்டிலில் கிடத்தி கண்ணம் தட்டி, தண்ணீர் தெளித்து எழுப்பி பார்த்தான், அவள் அசையவே இல்லை என்றதும், இவர்கள் குழுவுடன் வந்திருந்த டாக்டரை வர சொல்லலாம் என்று ஸ்லாட்டிக்கு அழைத்தான்.

அடுத்த 15 நிமிடத்தில் ஸ்லோட்டி டாக்டருடன் வந்துவிட, "இதுக்கு முன்ன இவங்களுக்கு பிட்ஸ் வந்திருக்கா?" ௭ன்றார், வந்து பாப்புவை மருத்துவம் பார்த்த டாக்டர், "மேரேஜ்க்கு அப்றம் இல்ல, பிஃபோர் வந்து இருக்கா என்னன்னு தெரியல". "பிட்ஸ் வர நிறைய ரீசன்ஸ் இருக்கு. ஜெனிடிக் ப்ராப்ளம், ஸ்ட்ரெஸ், விட்டமின் லெஸ், இப்ப இவங்களுக்கு எதனால வந்ததுன்னு தெரியல. அவங்களுக்கு கான்சியஸ் வரட்டும் விசாரிக்கலாம். இப்போதைக்கு வீக்கம் குறைய இன்ஜெக்ஷன் போட்டுருக்கேன் ஒரு 2 ஹௌர்ஸ்ல எப்டியும் எழுந்திருப்பாங்க. சாப்பிட ஏதாவது கொடுத்து இந்த டேப்லெட்ட கொடுங்க. நா மார்னிங் வந்து பாக்குறேன்".

டாக்டரும் ஸ்லோட்டியும் சென்று விட, மெதுவாக பாப்பு பக்கத்தில் அமர்ந்து அவள் முகத்தை வருடி விட்டான். அந்நேரம் அவன் போன் அலற, இந்நேரம் யாரு என்ற குழப்பத்துடன் போனை எடுக்க, விஷாவின் பெயரைக் கண்டதும் பதறித்தான் எடுத்தான்.

"வாட் ஹேப்பெண்ட் விஷா? இந்நேரம் கால் பண்ணிருக்க?” "சார்.. சார்.. நா அப்பாவாகிட்டேன். பேபி பிறந்துருச்சு". "வாவ் கங்கிராட்ஸ் மேன். வெரி ஹாப்பி பார் யூ. என்ன பேபி", "கேர்ள்", "என்ஜாய் மேன், கன்வெய் மை விஷ்ஸ் டு ஆல். ஹௌவ் இஸ் சுஹா?” "இன்னும் ஷிப்ட் பண்ணல, பேபி மட்டும் காட்டினாங்க, கொஞ்சம் சின்ன வயசு பாப்பு ஜாடையில இருக்கிறதா தான் அத்த சொல்றாங்க. பாப்புவ எங்க சார், கொடுங்களேன் அவகிட்டயும் இந்த குட் நியூஸ நானே சொல்றேன்".

"அவளுக்கு கொஞ்சம் ஹெல்த் இஸ்ஸு விஷா, இன்ஜெக்ஷன் போட்டு தூங்குறா மார்னிங் பேச சொல்றேன்". "ஓ! ஓகே சார் பெருசா எதுவும் இல்லயே? ஓகே தான, இல்ல நா கிளம்பி வரேன்". "ஹே நாட் அட் ஆல். எதுனா நானே சொல்றேன். இப்ப, நீ உன் டைம்ம என்ஜாய் பண்ணு". "ஓகே சார் டேக் கேர்".

"பை" போனை வைத்தவன். "ஹே மூக்கி, நீ சித்தி ஆகிட்ட, அத சொல்ற டைம்க்கு இப்டி படுத்திருக்கியே, எனக்கு ஏதோ மாதிரி பயமா இருக்குமா சீக்கிரம் முழிச்சுக்கோயேன். ப்ளீஸ் தாட்சா கெட்டப்" என்றவன் அவளை அணைத்தவாறு படுத்து கொண்டான்.

ஆனால் தூக்கம் வர மறுத்தது, ஏதோ யோசித்துக் கொண்டு படுத்திருக்க, இரண்டு மணி நேரம் கழித்து அவள் விழிக்க காத்திருந்தான். மேலும் இரண்டு மணி நேரம் சென்றும் அவள் ௭ழவில்லை. பொழுது நன்றாக விடிந்திருந்தது, முதல் வேலையாக கிருஷ்ணனையே கேரவனை எடுக்க சொல்லி ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையை சென்றடைந்தான்.

அங்கு அவளை செக் செய்த மருத்துவர்கள், பாப்பு ஹோமா ஸ்டேஜில் இருப்பதாக சொல்ல, அவனுக்கு அது கனவு போல் தான் இருந்தது.

"வாட்? என்ன சொல்றீங்க டாக்டர் திடீர்னு எப்டி இப்டி ஆகும்?” "மே பி பிட்ஸ் வந்து அவங்க கீழ விழுந்தாங்கன்னு சொல்றீங்க மண்டையில அடிபட்ட அதிர்ச்சியா கூட இருக்கலாம்". "அப்டி ஒன்னும் பெருசா அடிப்படலயே டாக்டர். ஓ மை காட்! வாட்ஸ் ஹப்பெனிங் ஹியர்" ௭ன தலையில் கை வைத்து அமர்ந்துவிட.

"இட்ஸ் ஓகே, மிஸ்டர் இரணியன். அவங்களுக்கு எப்டி திடீர்னு பிட்ஸ் வந்தது? எதுவும் ப்ரோப்ளம்ல இருந்தாங்களா?” "நோ வே டாக்டர். அவளே ஒரு ஸ்டிரஸ் பஸ்டர். ஜாலியா இருக்கிற பொண்ணு, எதையுமே மைண்ட்டுக்கு ஏத்திக்க மாட்டா. நேத்து நைட்டு தூங்கிற வர வாய் மூடாம பேசிட்டுருந்தவ" ௭ன்றவனால் அதற்கு மேல் முடியாமல் கண்ணீர் வர பேச்சு தடைபட்டது.

"ரிலாக்ஸ் மிஸ்டர் இரணியன். அவங்க ஓவர் ஸ்ட்ரஸ்ல ஆழ் மனசோட போராட்டத்துல இருக்காங்க. பி பி ரேட் ரைஸ் ஆகி ரைஸ் ஆகி டௌன் ஆகுது. நீங்க ரெகுலரா அவங்ககிட்ட பேச்சுக் கொடுங்க, உங்க பேச்சு அவங்கள பிரசன்ட் சிச்சுவேஷனுக்கு கொண்டு வரும். அப்ப அவங்களுக்கு கான்சியஸ் வரும். டோன்ட் ஒரி, ஸ்டிராங்கா இருங்க. இங்கேயே வச்சு பாக்குறீங்களா? இல்ல சென்னை கொண்டு போறீங்களா? எனக்கென்னவோ இந்த டைம்ல ட்ராவல் பண்ண வேணாம்னு தோணுது, நீங்க பிரைவேட் ஹெலிபேட் லைக் தட் கூட்டிட்டு போறீங்கன்னா நோ இஸ்யூஸ். முடிவு பண்ணிட்டு சொல்லுங்க" அவன் தோள் தட்டி அவர் சென்றுவிட, அவனுக்கோ ௭ன்ன செய்வதென்று தெரியாமல், அவள் இருந்த அறை உள்ளே சென்று அவள் வயிற்றில் முகம் புதைத்து கவிழ்ந்து கொண்டான்.
 
அத்தியாயம் 40
இரணியனுக்கு நடப்பதை புரிந்து கொள்ள அதிக நேரம் பிடித்தது. அதனாலயே செய்வதறியாது அவள் அருகிலேயே அமைதியாக அமர்ந்து விட்டான்.

'எப்படி. எப்படி. எப்படி திடீர்னு ஸ்ட்ரஸ் வரும் அதுவும் கோமா ஸ்டேஜ் போரளவு. என்னாச்சு அவளுக்கு? என்ன நடந்தது? என்க்கிட்டயே தான இருந்தா, எப்ப என்ன நடந்துருக்கும்? நா ஏன் மிஸ் பண்ணேன்?' என அவன் மனது விடாமல் புலம்பிக் கொண்டிருந்தது.

அன்று பிற்பகல் தான், அந்த ஹீரோயின் பிரச்சினைக்காக ஸ்லாட்டியை கூப்பிட்டு இரண்டு அறை விட்டிருந்தான். 'ஆக அதற்கு மேல் அவன் தாட்சாவை ஸ்ட்ரஸ் செய்ய எதும் செய்திருக்க முடியாது. வேறு யாரும் இவளிடம் வம்பிழுக்க சான்ஸ் இல்லை. ஒருவேளை நேத்து என்னை அந்தப் பொண்ணோட அப்படி பாத்தது தான்? வெளிக்காட்டாம மறைச்சிருப்பாளோ? அதுதான் அவ மனச பாதிச்சுருக்குமோ?' என்பதில் வந்து நின்றது அவன் புலம்பல். அவனது கில்ட்டி மனம் அதுதான் காரணம் என்ற முடிவுக்கு வந்து தன்னைத்தானே வருத்திக்கொண்டது.

விஷா, பாப்புவிடம் குழந்தை பிறந்த விஷயத்தை சொல்ல மறுபடியும் கால் செய்தான். மொபைல் வெளியில் இருக்கும் கேரவனில் கடந்து அலறி நின்றது. நான்கைந்து முறை வெயிட் செய்து, வெயிட் செய்து கால் செய்து பார்த்தவன், அடுத்ததாக கிருஷ்ணனுக்கு அழைத்தான், சூட்டிங்கில் இருப்பதாக சொன்னால் பாப்பு ஃப்ரீயாக தான் இருப்பாள் போன் கொடுக்க சொல்லலாம் என்றெண்ணி கால் செய்தான். எடுத்தவர் நடந்ததைக் கூறி முடிக்க, இரண்டு நிமிட அமைதிக்குப் பின், "சார் கூடவே இருங்க கிருஷ்ணன். நா நெக்ஸ்ட் ஃபிலைட் எப்பன்னு பாத்து கிளம்பி வரேன். நீங்க இருக்கிற லொகேஷன் எனக்கு ஷேர் பண்ணிருங்க" என வைத்தவன், சுஹா இருந்த அறையினுள் விஷயத்தை எப்படி சொல்வது என்ற யோசனையுடன் சென்றான் விஷா.

குழந்தையை கையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த வடிவு, "என்ன மாப்ள அந்தக் கழுத இப்பவாது பேசினாளா? நைட்டே நீங்க போன் பண்ணீங்க, இந்நேரம் அவளே அவ மக எப்டி இருக்கான்னு கேட்டு போன் பண்ணிருக்க வேணாம்? எப்போ வராங்களாம்? கிளம்பிட்டாங்ளா?" என்றவர், "ஹே குட்டி, உன்ன பாக்க சித்தியும், சித்தப்பாவும் வந்துட்டுருக்காங்க. உன் சித்தி ரொம்ப சேட்டக்காரி அவள மாதிரி வளராம நீ உன் பெரியம்மா மாதிரி பொறுப்பா வளரணும் சரியா" என பேசிக் கொண்டிருக்க.

சுஹா, மெய்யப்பன், வேதி மூவரும் வடிவு பேச்சைக்கேட்டு சிரித்தாலும், பதில் சொல்லாமல் தீவிர யோசனையில் இருந்த விஷா முகத்தையே பார்த்தனர்.

சுஹா, "என்னங்க உங்க சார் இப்ப வர முடியலன்னு எதுவும் சொன்னாங்களா?" என்றாள், அவன் முகத்திலிருந்த சோக பாவனையை கண்டு. "ஆமா சுஹா, அங்க ஏதோ ப்ராப்ளம் போல, என்னன்னு சரியா தெரியல நா இப்ப கிளம்புறேன், போயிட்டு என்னென்ன கால் பண்றேன்" என்றதும், "பிரச்சனையா அங்க யார்ட்ட என்ன வம்பிழுத்தா?" ௭ன்றார் வடிவு, பிரச்சனை ௭ன்றாலே தன் மகள் தானே ௭ன்ற அதீத நம்பிக்கையில்.

"சும்மா இரு வடிவு, என்ன நடந்ததுன்னு கரெக்டா சொல்லுங்க மாப்ள. காட்டுக்குள்ள வேற போயிருக்காங்க, எல்லோரும் சேஃப் தான?" என்றார் மெய்யப்பன்.

"எக்ஸாக்ட்டா என்ன பிராப்ளம்னு தெரியல அங்கிள். சார், பாப்பு ரெண்டு பேர் போனும் அட்டென்ட் பண்ணல, கிருஷ்ணன தான் பிடிக்க முடிஞ்சது, அவர் சொன்ன வர சேஃப் தான். இருந்தாலும் நா போயிட்டு வந்திடலாம்ன்னு தான் கிளம்புறேன். இங்க தான் இத்தன பேர் இருக்கீங்களே மேனேஜ் பண்ணிப்பீங்க தான?" என்றான் இறுதி கேள்வியை சுஹாவிடம் வைத்து.

அவளுக்கு அவன் குழந்தை பிறந்த உடனே செல்வது கஷ்டமாக இருந்தாலும், அவன் முகத்தில் இருந்த குழப்பம் கலந்த வேதனை, அங்கு ஒருமுறை நேரில் சென்று பார்த்து விட்டு வந்தால் சரியாகி விடுவான் என தோன்ற, கண்ணசைத்து அனுமதி தந்தாள்.

"வீட்டு கீ கொடுங்கத்தே 2 செட் ட்ரஸ் எடுத்துட்டே கிளம்புறேன்" என அவன் வாங்கிக்கொண்டு வெளியேற, மெய்யப்பன், "நா அவர ட்ராப் பண்ணிட்டு வர்றேன்" என கிளம்பினார்.

"இல்லப்பா நீங்க இருங்க, நா அப்டியே ஸ்டேஷன் கிளம்பணும். சோ நா ட்ராப் பண்ணிடுறேன்" என்ற வேதி மூவரிடமும் விடை பெற்று கிளம்பினாள்.

விஷா வாசலுக்கு வந்து கார் எடுக்க, வேதி பின்னையே வந்தவள், "நீங்க ஒரு ஒன் ஹவர் கழிச்சு ஏர்போர்ட் வந்திருங்க வேலு" என தன் பொலிரோ டிரைவரிடம் கூறியவள் விஷாவுடன் காரில் ஏறிக் கொண்டாள்.

'என்ன இப்பயும் என் மேல சந்தேகமா? அட ஆண்டவா, இருக்கிற டென்ஷன்ல இவங்களுக்கு பதில் சொல்ல வேற யோசிக்கனுமா? என்ன கொஸ்டின்லா கேப்பாங்களோ? தெரியலையே' என்ற யோசனை ஒருபக்கம் இருந்தாலும், சென்னை டு தூத்துக்குடி பிலைட் டைமிங் செக் செய்து ஒரு டிக்கெட் போட்டு விட்டான். அப்பார்ட்மெண்ட் வந்து இறங்கும் வரை இருவரும் அமைதியாகவே வந்து இறங்கினர்.

அவன் பேக் செய்யும் வரை பொறுமையாக இருந்தவள், அவன் கிளம்பி வரவும் தானும் எழ, "இருக்கட்டும் மேடம், நா இங்கிருந்து கேப்ல போயிடுவேன். மெனக்கட்டு நீங்க எதுக்கு அழைஞ்சுட்டு நீங்க டூட்டிக்கு கிளம்புங்க".

"என் வேலைய பாருன்னு சொல்லுறீங்க?” "இல்ல மேடம்.." அவன் இழுக்க.

"டைரக்ட்டா பேசலாமா? அங்க என்ன ப்ராப்ளம்? பாப்புக்கு என்ன? அவளுக்கு ஏதாவது ப்ராப்ளம்னா இந்நேரம் வர எனக்கு இல்ல அப்பாவுக்கு இன்ஃபார்ம் பண்ணாம இருக்க மாட்டா. இன்னைக்கு அவ அக்காவோட டெலிவரி அண்ட் அவ பெஸ்ட் பிரண்ட்க்கு பேபி பொறந்திருக்கு. ஸ்டில் நௌவ் போன்ல கூட விஷ் பண்ணல? சோ காண்டாக்ட் பண்ண முடியாத நிலைமையில தான் டெப்பனட்டா பாப்பு இருக்கா. என்ன நடந்ததுன்னு உங்களுக்கு தெரிஞ்சதால தான் இவ்வளவு ஸ்பீடா கிளம்புறீங்க. மறுபடியும் உங்க ஃபர்ஸ்ட் வைஃப்னாலயே ப்ராப்ளம்னாலும் பரவால்ல என்னன்னு சொல்லிவிட்டு கிளம்புங்க" என வேதி நிறுத்த.

'எவ்வளவு யோசிச்சுருக்காங்கப்பா' என நினைத்தவன், "என்னன்னு ஃபுல்லா தெரியாம சொல்ல வேணாம்னு தான் மேடம் போய் பாத்துட்டு சொல்லலாம்னு கிளம்புனேன். பாப்புக்கு ஏதோ ஹெல்த் இஸ்யூ, ரைட் நவ் ஹாஸ்பிடலைஸ்டு. இன்னும் கான்சியஸ் வரலன்னு கிருஷ்ணன் சொல்றாரு, அவருக்கும் வேற எதுவும் தெரியல. நைட்டே சார் சொன்னார் பாப்புக்கு உடம்பு சரியில்ல டேப்லெட் போட்டு தூங்குறான்னு. மார்னிங் வர கான்ஷியஸ் வரலன்னு கிருஷ்ணனையே கேரவன எடுக்க சொல்லி ஹாஸ்பிடல் போயிட்டாங்களாம். பவ்யாவால எந்த ப்ராப்ளமு வந்திருக்க வாய்ப்பில்லை. ஷி இஸ் ஸ்ட்ரிக்ட்லி பாலோவ்டு. நா போய் சிச்சுவேஷன் பாத்துட்டு கால் பண்ணுறேன்" என அவன் பேக்கை கையிலெடுக்க.

"பாப்புக்கு என்னாச்சு? நவ் ஐ காண்ட் டேக் பெர்மிஸ்ஸன் டூ. இன்னைக்கு பி.எம் சென்னைக்கு வாரார், நா இங்க இருக்கணும். ஆஃப்டர் 4 கிடைக்குற ஃப்லைட்ல கிளம்பி வரேன். நீங்க போயிட்டு அப்டேட் கொடுங்க, கண்டிப்பா உங்க காலுக்கு வெயிட் பண்ணுவேன்.
நானும் அவங்க 2 பேருக்கும் ட்ரை பண்ணிட்டே இருக்கேன்" என்றவள் அவனை அழைத்து வந்து ஏர்போர்ட்டில் விட்டுவிட்டு, திரும்பி வந்து, காரை அபார்ட்மெண்ட் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு காத்திருந்த வேலுவுடன் டூட்டியை பார்க்க அறை மனதோடு சென்றாள்.

விஷாகன் தூத்துக்குடி ஏர்போர்ட் சென்றிறங்கி, அடுத்த 3 மணி நேர ட்ராவெலில் ஹாஸ்பிடல் வந்திறங்குகையில் மணி, மாலை 6 மணியை தொட்டிருந்தது.

கிருஷ்ணன் தான் படப்பிடிப்பு குழுவினர் கேள்விகளுக்கும், போனில் கேட்பவர்களுக்கும், நேரில் வந்தவர்களும் இரணியனை நெருங்க விடாமல் சமாளித்து கொண்டிருந்தான். மற்றவன் பாப்பு இருக்கும் ரூம் வாசலிலேயே அமர்ந்து இருந்தான். விஷாகன் ஹாஸ்பிடல் நெருங்குகையில் போன் செய்ததால், கிருஷ்ணன் வாசலிலேயே வந்து நின்று, பாப்பு, இரணியன் இருந்த அறைக்கு அழைத்து சென்றுவிட்டான்.

முதல் நாள் இரவு தூக்கமின்மை, காலையிலிருந்து சாப்பிடாதது எல்லாம் சேர்ந்து, இரணியன் முழுமையாக கலைத்திருந்தான். அவள் பெட் அருகில் சேர் போட்டு அமர்ந்து, அவள் அருகிலேயே தலை சாய்த்திருந்தான். விஷாகன் சென்று மெதுவாக இரணியன் தோளை தொட்டு எழுப்ப, 'டாக்டரோ?' என நிமிர்ந்தவன், விஷாவை கண்டதும், "ஹே விஷா! எப்டி வந்த மேன்? இருக்க சுச்சுவேஷன்ல உங்களுக்கு இன்பாஃர்ம் பண்ணனும்ன்னு தோணல, கிருஷ்ணன் சொன்னாரா?”

"ஆமா சார், அவர் சரியா என்ன ப்ராப்ளம்ன்னு சொல்லல. நீங்க ரெண்டு பேரும் போன் அட்டென்ட் பண்ணல அதான் கிளம்பி வந்துட்டேன். டாக்டர் என்ன சொன்னாங்க சார்?”

"கோமா ஸ்டேஜ் போயிட்டதா சொல்றாங்க. மே பி ஸ்ட்ரெஸ் ரீசனா இருக்கும்னு சொல்றாங்க. பட் நேத்து நைட்டு வர என்கிட்ட நல்லா பேசிட்டு இருந்தா. அப்றம் அப்டி என்ன நடந்திருக்க முடியும்" படபடவென்ற இரணியனின் குழப்பமான பேச்சு விஷாவிற்கு புதிது.

இரணியன் இதையே யோசித்து யோசித்து அதிக ஸ்ட்ரெஸ்ஸில் இருப்பதாக பட்டது. போன் செய்து சாப்பாடும், தண்ணீர் பாட்டிலும் கிருஷ்ணனை வாங்கி வரச் சொன்னான்.

அதுவரை பாப்புவிற்கு ஸ்டிரஸ் வரக் காரணமாக இருக்கும் அவன் அறிந்த அத்தனையையும் பாப்புவை பார்த்தவாறு சொல்லி முடித்தான் இரணியன்.

"சார், பாப்பு உங்கள நிறையக் கேர்ள்ஸோட நெருக்கமா இதுக்கு முன்னயே பல படத்துல பாத்துருக்காங்க. அது நடிப்பு தான்னாலும் அந்த விஷயம் இவ்வளவு தூரம் கொண்டு போய்விடும்னு தோணல. பாப்பு கேரக்டருக்கு அவ மனசுக்குள்ளேயே வச்சு கஷ்டப்படுற ஆளில்ல. உங்க மேலயே அந்த இடத்துல கோபனாலும் ஃபேஸ் டு ஃபேஸ் காட்டிட்ற ஆளு. நீங்க காட்டுக்குள்ள நைட்டு போனதா சொன்னீங்க, அங்க எதயோ பாத்து பயந்திருக்கலாமே? அந்நேரத்துல நீங்க பக்கத்துல இருக்குற தைரியத்துல இருந்திருக்கலாம், பட் அது மனசுல பதிஞ்சு, தூக்கத்துல வெளிப்பட்டு இருக்கலாமே? மனுசங்கள பாத்து பயப்படுற ஜீவன் இல்லயே அவ, அத வச்சுத்தான் சொல்றேன்" என விஷா அவனுக்கு சரியாக தெரியாவிட்டாலும், இரணியன் வருத்தப்படுவது பிடிக்காமல் விளக்கிக் கொண்டிருந்தான்.

"அப்ப என்னால தாட்சாக்கு இப்டி ஒரு நிலைம இல்ல தானே விஷா?" என்றான் பயத்துடன் இரணியன். "கண்டிப்பா இருக்காது சார். ஒரு நாள் பேச்சு வாக்கில, என் இடத்தில் உங்கள வச்சு, ரெண்டு பொண்டாட்டிட்ட மாட்டிட்டு முழிக்கிற மாதிரி நீங்க நின்னா என்ன செய்வேன்னு சொன்னா தெரியுமா? கையில கிடைக்குறத எடுத்து உங்கள சொருகிடுவேன்னு சொன்னா. அவள தாண்டி வேற யாரையும் நீங்க சும்மா அழகா இருக்காங்கன்னு கூட பாக்க மாட்டீங்கன்னு நம்பிக்கையா சொன்னா சார். உங்க விஷயத்துல ரொம்ப தெளிவு சார் பாப்பு. வேற என்ன ரீசன்னு தான் யோசிக்கணும்".

அந்நேரம் கிருஷ்ணன் வந்து கதவை தட்ட, விஷா சென்று, அவர் கொடுத்ததை வாங்கி வந்தவன், "ஃபர்ஸ்ட் கொஞ்சம் தண்ணி குடிங்க சார், எவ்வளவு நேரமா தண்ணீ கூட குடிக்காம இருக்கீங்கன்னு தெரியல" ௭ன்க. மறுக்காமல் வாங்கி குடித்தான். அந்த அறையிலேயே இருந்த பாத்ரூமை காட்டி, "போய் பிரஸ் ஆயிட்டு வந்து சாப்பிடுங்க சார்". "ஒண்ணுமே பண்ண தோணல விஷா". "சாப்ட்டா தான் சார் ௭தாது தோணும். நெக்ஸ்ட் என்னன்னு யோசிக்கணுமே, இங்க கம்டர்டப்ளா இல்லனா கேரவன் வெளில தான் நிக்கிது, போய் அதுல பிரெஷ் ஆகிட்டு வாங்க ப்ளீஸ்" என கை பிடித்து எழுப்பி விட்டான்.

அவனுக்கும் அது புரிந்தது, 'இப்படியே இருக்க முடியாது, நெக்ஸ்ட் ௭ன்னன்னு யோசிச்சாகனும்' என எழுந்தவன்.

"நீ தாட்சாகிட்டயே இரு விஷா டென் மினிட்ஸ்ல வந்துடுவேன்" என்க. "கண்டிப்பா சார். பாப்பு என் ஒரே ஃப்ரண்ட். அவள பாத்துக்குற பொறுப்பு எனக்கும் இருக்கு சார்" என்ற பின் திரும்பி அவளைப் பார்த்து விட்டு வேகமாக வெளியேறினான்.


இரணியன் வெளியேறவும், உள்ளே வந்த கிருஷ்ணன், "விஷா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும், சார்ட்ட இத சொல்ல ட்ரை பண்ணேன், அவர் கேக்குற சுச்சுவேஷன்ல இல்ல". "சொல்லுங்க கிருஷ்ணன்".

"மேடம விசாரிச்சு காலையில இருந்து ஷூட்டிங் ஸ்பாட்ல உள்ளவங்க நேர்ல வந்துட்டு போனாங்க. அதுல மேடம் டெய்லி காட்டை சுத்தி பாக்க கூட்டிட்டு போறவர் வீரமணி, அவர் வந்து விசாரிச்சப்ப, நா கோமா ஸ்டேஜ்ன்னு சொல்லல, பட் இன்னும் கண்ணு முழிக்கல ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்குன்னு சொன்னேன். அதுக்கு அவர் என்ன சொன்னார்ன்னா, 'இனி அந்த தங்கச்சி எந்திருக்குறது கஷ்டம் தான். நா நேத்து காலையிலேயே நினைச்சேன், காட்டுக்குள்ள வடக்குப்பக்கம் யாராலயும் இதுவர போக முடிஞ்சது இல்ல. கடந்த காலத்துல எத்தனயோ பேர், அந்த பக்குட்டு போக முயற்சி செஞ்சு தூக்கி வீசப்பட்டுருக்காங்க. அப்ப ௭ங்க ஊர் சிவன் கோவில் பூசாரி தான் காப்பாத்தி விடுவாரு. அதே ஆள் ரெண்டாவதும் முயற்சி செஞ்சா, உடம்பு சரியில்லாம படுத்து ஒரு மண்டலத்துக்குள்ள உயிர விட்ருவாங்க. இவங்க ரெண்டு பேரும் உள்ள போனதே அதிசயம். எப்டி எதுவும் ஆகாம வெளில வந்தாங்கன்னும் தெரியல. அந்த ஐயாவும் போயிட்டு வந்துருக்காரு, ஆனா அவருக்கு ஒன்னுமாகல, ரெண்டு பேருக்கும் சேத்து அந்த தங்கச்சியத்தான் தாக்கியிருக்கு, அதான் சொல்றேன், எந்திரிக்கிறது கஷ்டம்னு. இங்கிலீஷ் மருந்து எல்லாம் வேலைக்கு ஆகாது, காட்டுக்குள்ள உள்ள சிவன் கோவில் பூசாரி எங்க கிராமத்துல தான் இருக்காரு அவருக்கு தான் இதுக்கான வைத்தியம் தெரியும். அவர்ட்ட கூட்டிட்டு வாங்க, மொத தடவ தான்கிறதால அவரால குணப்படுத்த முடிஞ்சாலும் முடியும்'. இப்படி எல்லாம் சொல்லிட்டு போனார். இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல" என்றார் கிருஷ்ணன்.

"சரி கிருஷ்ணன், நா அது என்னன்னு விசாரிக்கிறேன்" என்கவும் கிருஷ்ணன் வெளியேற. வர்ற வழியிலேயே நான்கு முறை போன் அடித்து விட்ட வேதிக்கு அழைத்தான். சுருக்கமாக நடந்ததை அனைத்தயும் கூற, வீட்டினரான வடிவு, மெய்யப்பன் இருவருக்கும் பாப்பு நிலைமையை சொல்லாமல் அன்றைய பொழுதை சமாளிக்க முடிவு செய்தனர்.

பாப்புவின் கை பிடித்து அழுத்தி கொடுத்தவன், "உன்ன துருதுருன்னு பாத்துட்டு இப்டி பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு பாப்பு. எத போட்டு கன்ஃப்யூஸ் பண்ணிட்டு இப்டி தூக்கத்துலயே இருக்க. எனக்கு பேபி பொறந்துருச்சு. உன்ட்ட சொல்ல அவ்வளவு ஆசையா இருந்தேன். நீ என்னடான்னா ரியாக்ஷனே இல்லாம கேக்குற நிலைமைல இருக்க. எழுந்திரு பாப்பு. உன் சார்ம் முகத்துல கஷ்டமே இருக்கக்கூடாது, சிரிச்சுட்டே இருக்கணும் சொல்லுவ தான. இப்ப எழுந்து பாரு, அவர் முகம் எவ்வளவு கவலையில இருக்குன்னு தெரியும். எழும்பு பாப்பு" என்கையில் இரணியன் உள்ளே நுழைந்தான்.

அங்கேயே அவள் அருகில் அமர்ந்து அவனை சாப்பிட வைத்துவிட்டு, டாக்டரை பார்க்க சென்றான் விஷா. அவர் இரணியனிடம் சொன்னதையே அவனிடமும் சொன்னார்.

"இது ஒரு வகை கனவுநிலை, அவங்க தூங்கிக்கிட்டு இருக்காங்க. நாம அவங்கள எழுப்பினா நம்முடைய தொடுகைய உணராத ஒருவகை உறக்கம், அவங்க ப்ரைன் ப்ரசென்ட்ல ஆக்டிவா இல்ல. அது ஆக்டிவான செகண்ட் முழிச்சுடுவாங்க. அது எப்போ நடக்கும்னு அவங்க ப்ரைன்க்கு மட்டும் தான் தெரியும்".

"வேற எங்கேயாவது, ஐ மீன் வேற கண்ட்ரிஸ்ல ஸ்பெஷலிஸ்ட் இருக்காங்களா டாக்டர், ரெஃபர் பண்ணுங்க. அங்கேயே கூட போய் பாக்குறோம்".

"நா சொன்னது உங்களுக்கு இன்னும் புரியலை மிஸ்டர்.விஷாகன். ஃபார் எக்ஸாம்பிள் மனநலம் பாதிக்கப்பட்டவங்கள பாத்திருப்பீங்க, அவங்களுக்கு எப்டி ட்ரீட்மெண்ட் கொடுக்கிறாங்க?”

"அதுக்குன்னு ஹாஸ்பிடல், ஸ்பெஷலிஸ்ட் இருக்காங்க".

"யா, அவங்க மைண்ட், மனசு சொல்ற பேச்ச அவங்களால கேட்க முடியுறதில்ல. அதுதான் மெண்டலி டிஸ்டர்ப்ட் ஸ்டேஜ். அதுக்காக ப்ரைன்ல சர்ஜரியும், வேற ஒரு நார்மல் ரியாக்டிங் பெர்சன் ஹார்ட்டயும் எடுத்து மாத்தி வச்சுட்டா? மெண்டல் இல்னஸ் சரியாகிடும்னு சொல்ல முடியுமா?”

"நோ டாக்டர், அவங்க அவங்களோட வேர்ல்டுல இருந்து வெளிவரணும்" ௭ன ஒத்து கொண்டான் விஷா.

"எக்ஸாக்ட்லி, மிஸஸ் இரணியனும் அவங்க வேர்ல்ட்ல இருந்து பிரசண்ட்க்கு அவங்களா வரணும். நாம சில மெடிசன்ஸ் கொடுத்து அதுக்கு ஹெல்ப் பண்ணலாம் தட் ஷீட்". அவன் அமைதியாக இருக்க, "அவங்கள சுத்தி எப்பவும் ஒரு ஆள் இருக்கிற மாதிரி பாத்துக்கோங்க. பேச்சு கொடுத்திட்டே இருங்க. ஹியரிங் சென்ஸ் தான் ப்ரைன்ன இன்ட்யூஸ் பண்ணிட்டே இருக்கும். அது மூலமா தான் உங்க வாய்ஸ் அவங்கள ரீச் பண்ணும். ஹோப் ஃபார் த பெஸ்ட்" என விஷா தோளை தட்டிக் கொடுக்க.

"தேங்க்ஸ் டாக்டர்" என விடைபெற்று யோசனையோடே வெளியேறினான்.

பின் வேதிக்கு கால் செய்து, டாக்டர் கூறியதை சொல்ல, 4 மணிக்கு சொன்னது போல் கிளம்பியிருந்தவள், அடுத்த 1ஹௌரில் பாப்பு முன் நின்றாள். நடந்தவற்றை விஷா மூலமும், கிருஷ்ணன் மூலமும் தெரிந்து கொண்டவள், "அடுத்து என்ன செய்யறதா டிசைட் பண்ணிருக்கீங்க மிஸ்டர்.இரணியன்" என்றாள் இரணியனிடம்.

"சென்னை கூட்டிட்டு போயிடலாம்". "ஓகே சார், அப்ப நா ஹெலிபேட் அரேன்ஞ்மென்ட்ஸ் பாக்குறேன்" என விஷா வெளியேற.

பின்னேயே சென்ற வேதி கிருஷ்ணனை அழைத்துக்கொண்டு அந்த மலையடிவார கிராமம் சென்றாள், வீரமணி சொன்னவற்றை விசாரிக்க.

வீரமணி தனக்குத் தெரிந்ததை சொல்லி, அந்த பூசாரியிடம் அழைத்துச் செல்ல. "அந்த வடக்கு திக்குக்கு யாராலயும் இதுவர போக முடிஞ்சதில்ல. இவங்கள உள்ள விட்டுருக்குனா அது நல்ல சக்தியா இருந்தா உங்க தங்கச்சிக்கு நல்ல சக்தி துணை இருக்குன்னு அர்த்தம். ஒருவேள அது தீய சக்தியா இருந்தா உங்க தங்கச்சி மூலமா அது தன் தேவையை தீர்த்துக்கும்னு அர்த்தம். என் மூத்தவங்க அந்தப் பக்கம் போக முயற்சி செஞ்சு அடிபட்டு வாரவங்களுக்கு பண்ண வைத்தியம் எனக்கு தெரியும், அத நா பண்ணுவேன். ஆனா உங்க தங்கச்சி சுயநினைவு இல்லாம இருக்கதால என்னால மீட்டுக் கொண்டுவர முடியணும்னா, அதுக்கு அந்த கடவுள் தான் மனசு வைக்கணும்".

'அவரே நம்பிக்கை இல்லாம பேசைல எப்படி பாப்புவ இங்க தூக்கிட்டு வந்து வச்சு பார்க்க முடியும்' என்றெண்ணியவள், எதுவும் சொல்லாமலே கிளம்பிவிட்டாள்.

அவள் சென்ற பிறகு "ஏன் சாமி உங்களால முடியாதா?" என்றார் வீரமணி. "என் கையால குணமாகணும்ன்ற விதி இருந்தா அந்த பெண், தன்னால என்னைத் தேடி வரும். நேரம் வரட்டும் பாப்போம். நீ கெளம்பு" என அனுப்பி விட்டார் பூசாரி.

அன்றைய இரவுப் பொழுதை ஒருவழியாக நெட்டி தள்ளி விட்டு, மறுநாள் காலையே மெய்யப்பனுக்கு கால் செய்து விஷயத்தை சொல்லிவிட்டனர். அவர் அங்கு பெரிய மருத்துவமனையில் அட்மிஷனுக்கு ஏற்பாடு செய்து விட, வடிவு ஒருபக்கம் அழுது கரைய, சுஹா தான் பிள்ளையையும், தாயையும் சேர்த்து சமாளிக்க வேண்டியதாயிற்று.

பாப்புவை சென்னையில் நேராக ஹாஸ்பிடல் கூட்டி வந்து அட்மிட் செய்தனர். அங்கு டாக்டர் சொன்னதையே இங்கேயும் சொல்ல, இரணியன் அவளைப் பார்த்துக் கொள்வதை முழுநேர வேலையாகக் கொண்டான். வடிவு, மெய்யப்பன், விஷா மூவரும் வீட்டில் இருக்கும் சுஹாவிற்காகவும், பாப்புவிற்காகவும் பார்க்க அலைந்து கொண்டிருந்தனர். குழந்தை ஹாஸ்பிடல் தூக்கி வந்தால் இன்ஃபெக்ஷன் ஆகும் என டெலிவரி ஆன பத்து நாட்களான நிலையில் சுஹா மட்டும் வந்து பாப்புவை பார்த்துச் சென்றாள்.

எல்லோரும் அவளுடன் பேசிக்கொண்டே இருந்தனர். ஆனால் அவளிடம் தான் எந்த மாற்றமும் இல்லை. மேலும் ஒரு வாரம் கடந்த நிலையில், இரணியனை படத்தை முடித்துக் கொடுக்க சொல்லி கால் மேல் கால் வந்துகொண்டிருக்க, விஷாகன் முதலில் சமாளித்து, பின் இரணியனிடம், "இங்க பாப்புவ நல்லா பாத்துக்குவாங்க சார். நீங்க படத்த முடிச்சுக் கொடுத்துட்டு வந்துடுங்க. அக்ரிமெண்ட் பேப்பர் வச்சு பேசுறாங்க. இருக்கிற பிரச்சினைல அதயும் சேர்த்துக்க வேணாமே" என இரணியன் மனதை மாற்ற முயற்சித்தான்.

இரணியன் ஆளே மாறி இருந்தான். ஒரு மாதம் சரியாக தூங்காதது, சாப்பிடாதது, உடம்பை பேணாதது என ஹீரோயிக் பெர்சனாலிட்டி இல்லாமல் இருந்தான். அதை மீட்டெடுக்க விஷா தான் மிகவும் போராட வேண்டியிருந்தது. இரணியன் எதையும் கண்டுகொள்ளவில்லை. அவன் உலகில் அவனும், பாப்புவும் மட்டுமே என இருந்தான்.

மேலும் ஒரு மாதம் சென்றும் பாப்புவிடம் மாற்றம் இல்லை. பட பிரச்சினை வேறு மிகவும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்க குடும்பம் மொத்தமும் தவித்து கொண்டு தான் இருந்தது.

அன்று காலை ௭ப்பொழுதும் போல் பேப்பரில் கவனத்தை வைத்திருந்த மெய்யப்பன், நாடி ஜோதிடம் விளம்பரத்தை பார்த்ததும், அந்த ஜோதிடர் சொன்னதெல்லாம் ஞாபகம் வர, அன்றே அவரைப் பார்க்கக் கிளம்பிவிட்டார். ஏனோ அங்கு சென்றால் பதில் கிடைக்கும் என நம்பினார். வடிவு ஏற்கனவே அலைச்சலில் இருக்க, தான் மட்டுமாய் கிளம்பி விட்டார்.

நாடி ஜோதிட நிலையம்.

இவரை பார்த்ததும் ஞாபகம் வந்ததாய் சிரித்தார் அந்த பெரியவர். "பெண் மகவு பிறந்தது போல?" தன்னை பார்க்க வந்ததை வைத்து கூறினார் அவர்.

"ஆமாங்க, அடுத்தடுத்து என்னென்னவோ நடந்திருச்சு. ஆனா ஒண்ணுமே புரியல. எப்டி சரி பண்றதுன்னும் தெரியல". "சொன்னேனே, குலதெய்வத்த கண்டுபிடிங்க".

மெய்யப்பன் தன் வீட்டில் நடந்தவற்றையெல்லாம் சொல்ல, "அந்த பொண்ண அது நினைவு இழந்த இடத்துக்கே கூட்டிட்டு போங்க. அங்க தான் அதை திரும்பப் பெற முடியும்".

"அங்க எங்களுக்கு யாரையும் தெரியாது". "அதான் நாட்டு மருத்துவம் பாப்பாங்கன்னு சொல்றீங்களே. நம்பிக்கையா அங்க கொண்டு சேருங்க. குல தெய்வத்த மனசுல நினைச்சு கண்ணுல காட்டுன்னு கேளுங்க. அதுவே வழி காட்டும்" சுருக்கமாகவே பதில் சொன்னார்.

"எப்ப தான் இந்த பிரச்சனையெல்லாம் தீரும்" என்றார் மெய்யப்பன் சோர்வாய்.
"நீங்க குடும்பமா உங்க குல தெய்வத்த தரிசிக்கிற அன்னைக்கு".

அவர் மேலும் சோர்வாய் எழ, "சீக்கிரமா உங்க குலதெய்வத்த கண்டுபுடிங்க, அதுவர உங்க மூணாவது பொண்ணும், உங்க புதுவரவான பேத்தியும் சந்திக்கவே முடியாது. ஒரே இடத்துல இருக்கவும் முடியாது. ரெண்டுபேரும் முதல்ல சந்திக்கிற இடம் உங்க குலதெய்வ ஸ்தலமா தான் இருக்கும். அதுவர ரெண்டு பேரையும் ஒரு இடத்துல கொண்டு வர, நீங்க நினைச்சாலும் முடியாது" என வணங்கி அனுப்பி வைத்தார்.

'அவர் சொன்னபடி தான் நடக்குது' என நினைத்த மெய்யப்பன், சுஹாவையும், வடிவையும், குழந்தையையும், வேதி-அரவிந்த் பொறுப்பில் விட்டுவிட்டு விஷாகனையும், இரணியனையும் பாப்புவுடன் ஜோதிடர் சொன்னதயே சொல்லி காட்டிற்கு அனுப்பிவிட்டார், தான் குலதெய்வ தேடலில் தீவிரமாக இறங்கினார்.

சூட்டிங் ஸ்பாட்டிற்கே செல்வதால் இரணியனை கெஞ்சி கெஞ்சி படத்தை முடித்துக் கொடுத்து அனுப்பினான் விஷா. சொன்னதை விட சீக்கிரமாய் தன் சீன்களை முடித்துக் கொடுத்தான் இரணியன்.

ஆனால் அதற்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியாமல் படவேலை தான் பாதியிலேயே நின்றது. கொரோனா எனும் பேரலையால் மார்ச் 23, 2020, 21 நாள் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. படக்குழுவினர் கிடைத்த வண்டியில் அவரவர் இருப்பிடம் சென்றனர். மெய்யப்பனும் சென்னை வந்து தங்கினார். அவரால் குலதெய்வத்தை தேட முடியாமல் முடங்கினார்.

குடும்பம் தனித்தனியாய் கிடந்து அல்லாடியது. இரணியன் மறுபடியும் முழுநேரமும் பாப்பு அருகில் தங்கிவிட்டான். பாப்புவிற்கு பச்சை இலை வைத்தியம் கொடுக்கப்பட்டது. மூளையைத் தூண்டும் மூலிகை அவள் தலையடியிலும், தலைசுற்றிலும் கட்டப்பட்டது. சாப்பாடு கசாயமாகவே கொடுக்கப்பட்டது. அவள் முடங்கி இருக்கையில் மொத்த உலகமுமே முடங்கி தான் இருந்தது அவளே அறியாமல்.

எல்லோர் நிலைமையும் இப்படி இருக்க, பாப்பு 3 மாதம் முன்பு, அன்றிரவு கனவில் தன்னைப் போல உருவ ஒற்றுமை கொண்ட பெண் காட்டுப்பகுதியில் தலை தெறிக்க ஓட, 4 பேர் குதிரையில் துரத்த தன் தாவணி பறி போயிருந்த நிலையில் தன் மானத்தை காப்பாற்ற உதவி நாடி கத்தியவாறு ஓடுகிறாள் அந்தப் பெண். அதற்குள் குதிரையில் வந்தவர்கள் அவளை சுற்றி விட, செய்வதறியாது திணறி கையெடுத்து வேண்டி அழுகிறாள். கல்நெஞ்சம் கொண்ட அந்த மிருகங்கள் அவளை மாறிமாறிப் பந்தாட இனி தப்பிக்க வழியில்லை என்றெண்ணியவள், அவர்களில் ஒருவன் இடுப்பில் வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி தன் கழுத்தை அறுத்து மாய்ந்து போகிறார்கள். யாரந்த பெண் என்ற தேடலில் தான் பின்னோக்கி சென்று விட்டாள் பாப்பு.

அவளது ஆர்வக்கோளாறு தனம் தான் நாம் அறிந்ததாயிற்றே. அது தான் தற்போது மற்ற அனைவரையும் கஷ்டத்தில் ஆழ்த்தி, கனவுலகத்தில் சஞ்சரிக்க சென்று விட்டாள். நாமும் சென்று அது என்னவென்று முழுவதுமாய் தெரிந்து கொள்வோம் பாகம் இரண்டில்.
 
Top