எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அக்னி சிறகே !

Thoshi

Moderator
அக்னி சிறகே

ஆண் என்னும் கூட்டுபுழுக்குள் மறைந்து கொண்டிருக்கும் பெண் பட்டாம்பூச்சிகளே உங்களின் சிறகை விரித்து இவ்வுலகை சுற்றிவாருங்கள் ..
எவர் தடுப்பது உங்களை ?
எவரேனும் எதற்க்கு தட்டி கொடுக்க வேண்டும் உங்களை ?
சிறகு என்பது உங்களுடையதாயின்
பறப்பதென்பது உங்கள் மனவிருப்பமல்லவா ?
சாந்தமாய் ஓரமாய் ஒதுங்கிக் கொள்ள உங்களுக்கிருப்பது சாதாரண சிறகல்ல..
அர்த்தநாரீசுவரரின் பிரதிபிம்பமாய்
படைக்கபட்டு அக்னி சிறகை கொண்டவர் நீங்கள் ..
உங்கள் ஜூவாலை கொண்டு தடைகளை தகர்த்தெரிந்து சிறகை விரித்து பறந்து வாருங்கள் ..
இவ்வுலம் ஆண்கள் மற்றும் பெண்கள் என்னும் சாதாரண சிறகுகளுக்காக மட்டுமன்று
அவமானத்தில் சுருண்டு நெஞ்சம் முழுக்க தனல் தகிக்கும் உங்களின் அக்னி சிறகுகளுக்காகவும் தான் ....

-யமுனா
 
அருமை!
 
Top