எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு !

Thoshi

Moderator
பெண்மையே பேசு

பேசு ...பெண்மையே பேசு...!!
வளைந்து நெளிந்து ஓடும் நதிக்கு ஈடாய் நாணத்தில் வளைந்து நெளிவது மட்டும் பெண்மை என்று எவர் சொன்னார் என உரத்து கேள் பெண்ணே !
நிமிர்ந்து நேர்கொண்ட பார்வை பார்த்தாலும் பரிசுத்தமானவர்கள் நாங்கள் என உரக்க சொல் பெண்மையே !
பேசு உனக்காக நீயே பேசு ..
பெண்மையே பேசு ...
பெண்மை பற்றி நிஜம் பேசு ....!!
மலைபோல் துன்பம் நேரினும் அதில் பனிபோல் கண்ட இன்பம் கொண்டு
தன்னைதானே செதுக்கி அத்துயரை மனபலத்தால் தீர்க்கும் பெண்மையே பேசு ...
உன் தன்மையை உலகம் அறிந்து புரிந்திட உரக்க பேசு....!!

-யமுனா
 
அருமை!
 
Top