subageetha
Moderator
Manjam 20
காலையில் எழுந்து வந்த அதிதி நிரஞ்சனை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் வந்ததே தெரியாது.கீழே அம்மாவிடம் வழக்கம் போல் காபி கப்பை வாங்கி கொண்டு சோஃபாவில் அமர்ந்துகொண்டு அன்றைய தினசரியை புரட்டினாள். நிரஞ்சனும் இன்னும் எழுந்திருக்கவில்லை. விடிகாலையில் வந்தது தூக்கம் கலையவில்லை.
செய்தித்தாளில் அவள் விரும்பும் செய்திகள் எதுவும் இல்லை. நேரே தனது அறைக்குள் சென்றவள் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். முகம் கொஞ்சம் தெளிந்தும் கொஞ்சம் தெளிவு இல்லாமலும் அவளுக்கே அவளை பிடிக்கவில்லை.
வினயன் விவாகரத்து மனுவை திரும்ப பெறலாம் என்று போன் செய்ததாக விஸ்வம் வித்யாவிடம் பேசிக்கொண்டு இருந்ததை அதி கேட்டுவிட்டாள்.
அதில் அவளுக்கு உடன்பாடில்லை. அவள் பட்டிருப்பது மரணக்காயம். வார்த்தை கொண்டு சொன்னால் கூட புரியாது.
எந்தக் காரணம் கொண்டும் இந்த முறை விட்டுக் கொடுக்க கூடாது என்று முடிவு செய்து கொண்டாள். எப்பேர்பட்ட அவமானம்? கடைசி கடைசியாக அவன் நடந்து கொண்ட விதம் என்றேனும் மறக்க கூடுமா!
தனக்குத்தானே கண்ணாடியை பார்த்து பேசிக்கொண்டவளுக்கு மனதில் கொஞ்சம் தைரியம் கூடுவது போல இருந்தது. அதை இறுக்கி மனதில் முடிந்து வைத்துக்கொண்டவளுக்கு ‘தான்’ அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது லேசாக புரிவது போலிருந்தது. இந்த நேரம் நிரஞ்சன் தன்னுடன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கூட தோன்றியது. அதே சமயம் தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு சென்றவனிடம் அளவில்லாத கோபம் அவளுக்கு.
ஒரு வழியாக தனது யோசனை மூட்டைகளை மனதிற்குள் அடுக்கி வைத்துவிட்டு, குளிக்கச் சென்றாள். ஏதோ தோன்றியவளாக நிரஞ்சனும் அவளுமாக பஞ்சாபி ஹண்டலூமில் கடைசியாக திருமணத்திற்கு முன் வாங்கிய சுடிதாரை அணிந்து கொண்டாள்.
அந்த நாளைய எண்ணங்கள் அவள் மனதில் திரும்பவும் படம் போல் விரிய அவளையுமறியாமல் முகத்தில் புன்னகை கீற்று.
ஒருவாறாக தன்னை தயார்படுத்திக் கொண்டு கீழே இறங்கி வந்தவள் அடுக்களையில் வித்யா சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு தானும் அம்மாவிற்கு உதவி செய்வதற்காக உள்ளே சென்றாள். மகளை இந்த நேரத்தில் இங்கே பார்த்த வித்யாவிற்கு மகிழ்ச்சியும் ஆச்சரியமு மாக கலவையான உணர்வு மேலிட்டது.
வித்யா இன்று நிரஞ்சனுக்கு பிடித்தபதார்த்தங்களை சமைத்துக் கொண்டிருந்தாள். அதிதியின் மனதினுள் ‘இவையெல்லாம் நிரஞ்சனுக்கு பிடித்தவை ஆயிற்றே’ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. ஆனாலும் வாய் திறந்து எதுவும் கேட்கவில்லை. அம்மாவிற்கு தேவையானவற்றை செய்து கொடுத்துவிட்டு மீண்டும் தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.
வெகுநாட்களுக்கு பிறகு இதே அறையில் மூச்சை அடைப்பது போல தோன்றவே, தனது பால்கனியில் கதவுகளை விஸ்தாரமாக திறந்து வைத்துக் கொண்டு உள்ளே வரும் வெளிச்சத்தையும் காற்றையும் ஒரே சமயத்தில் தன்னுள் இழுத்துக் கொண்டாள்.
தனது பெட்டிகளை எடுத்து கட்டிலின் மேல் வைத்தாள். ‘வினய் வாங்கிக் கொடுத்திருக்கும் பொருட்கள் ஏதாவது இருக்கிறதா’ என்று பார்க்கும் போதுதான் அவளுக்கு ஒன்று புரிந்தது, இத்தனை வருடங்களில் அவன் தனது மனைவிக்கு என்று பிரத்யேகமாக ஒன்றினையும் வாங்கித் தந்ததில்லை. அதியின் உதட்டில் ஏளன வளைவு,வினய் காட்டிய காதலை எண்ணி!
இவ்வளவு காதலை மனதில் வைத்துக்கொண்டு ‘எப்படி அவளுடன் மீண்டும் ஒரு வாழ்க்கையை வாழ அவன் தயாராக இருக்கிறான்’ என்று அதிதிக்கு சுத்தமாக புரியவில்லை. காதல் கல்யாணம் இரண்டுமே மனம் ஒன்றாமல் நிலைக்காது. ஒருவேளை தான் விவாகரத்து வேண்டாம் என்று முடிவு செய்து அவனுடன் மீண்டும் இணைய முற்பட்டால் நரகத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற வாழ்க்கை என்பது அவள் எண்ணம்.
அதேசமயம் நடாலி என்னவானாள் என்றும் அதிதிக்கு குழப்பம். ஆனால் இதைப் பற்றி அவனைத் தவிர வேறு ஒருவராலும் பதில் சொல்ல இயலாது. சோர்ந்து போய் கட்டிலில் அமர்ந்து விட்டாள் அதி. நெற்றிப்பொட்டில் வலிப்பது போல் ஒரு பிரமை. புருவமத்தியில் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள்.
சியாட்டல் வீட்டிலிருந்து வந்ததிலிருந்து அவளுக்கு நிம்மதி இல்லை. அதுதான் தனது வீடு என்று அழுத்தமாக மனதில் பதிந்து கொண்டு விட்டதாலும் என்னமோ தனது பெற்றோரிடம் கூட வசிப்பதற்கு அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
திருமணமாகி இங்கிருந்து போனதிலிருந்து ஒரு முறை கூட இந்தியா வரவில்லை. ஆனால் இன்று நிரந்தரமாக வந்துவிட்டாள். திருமண வாழ்க்கை நிரந்தரம் இல்லையா? என்று அவளுக்கு இந்த க்ஷணம் சந்தேகமாக இருந்தது. அவன் திரும்ப அழைக்கும் போது அதை பற்றி யோசித்தால் என்ன என்று தோன்ற அவளுக்குள் ஆழமான நடுக்கம். சியாடல் வீடு அவளுக்கு சொர்கம் இல்லை... அவள் அணு அணுவாக அனுபவித்தது சோகமும் நரகமும் தான்.
சில பெண்களுக்கு இது போல் நிகழுகிறது. வெளிநாட்டில் திருமணம் செய்து கொடுத்த தங்கள் மகள் நிறைந்த வாழ்வு வாழ்வதாக பெற்றோர் யோசிக்க, பெண்கள் ஏதோ ஒரு வகையில் /வலையில் சிக்கி மீள முடியாது, மண்டும் பழைய வாழ்க்கை வாழ இயலாமல் ப்ச்...!
எல்லோரும் இப்படி என்று சொல்லவில்லை... நிகழ்பவர்களுக்கு வலி அதிகம்.
தனது பெட்டிகளில் இருக்கும் பொருட்களை தனது அல்மெராவில் அடுக்கி வைத்து பெட்டிகளை மீண்டும் பழைய படிக்கு பரணில் வைத்தாள். கடைசியாக வினய் பெட்டிகளை எடுத்து கொடுத்த நாழிகையை மறக்க முடியவில்லை. கதிரையில் அமர்ந்து சிறிது நீர் பருகி தன்னை சமன் செய்ய முயற்சி செய்தாள். அது அவ்வளவு சுலபமாக இல்லை.
இங்கு நுங்கம்பாக்கம் வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போதுதான் பெட்டிகளை அடுக்குகிறாள். என்ன ஆனது எனக்கு? நான் இப்படி இருப்பது சரி இல்லை என்று தோன்றினாலும் அடுத்து எப்படி என்று புரியவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் கோர்ட்டுக்கு சென்றாக வேண்டும்.
விநய் என்னென்ன குழப்பங்கள் செய்ய காத்திருக்கிறானோ தெரியவில்லை. யோசிக்க அச்சமாக இருக்கிறது.
இப்படியே இருந்தால் சித்தம் பேதலித்துவிடும் என அஞ்சி மீண்டும் கீழே இறங்கி செல்ல ஹாலில் நிரஞ்சனின் குரல். அதிதிக்கு செய்வதற்கு என்று வீட்டில் ஒன்றும் இல்லை. அநேகமான வேலைகளை வித்யா செய்து விடுகிறாள். மகளின் மன நிலைமை சரியாகும் வரை அவள் எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம் என்று அவளது பெற்றோர் அவளை கண்ணாடி பாத்திரம் போல் பாதுகாத்து வைக்க இத்தனை வருடங்களுக்கும் சேர்த்து நிரஞ்சனுக்கு இப்போது கோபம் வந்தது. தானும் சேர்ந்து இந்தப் பெண்ணிற்கு தோதாக இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்வு வேறு. கொஞ்சம் கொஞ்சமாக அதிதியை கொஞ்சமேனும் தைரியம் உள்ளவளாக மாற்றியிருந்தால் இப்போது இந்த சூழ்நிலையை அவள் அனாயாசமாக கையாண்டிருப்பாள். இன்னும் சொல்லப்போனால் இப்படிப்பட்ட நிலைமை வந்திருக்காது என்ற அவனுக்குள் அவனே பேசிக் கொண்டான்.
நிரஞ்சனை பார்த்த அதிதியின் மனதில் உற்சாகம். ஆனாலும் கோவத்தை விடாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்தாள். அவளது அப்பா விஸ்வம் நடப்பவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். தன் பெண்ணுக்கு எத்தனை மாதங்களில் கோபம் வரும் என்பதையே அவர் மறந்து இருந்தார். பொதுவாகவே அதிதி கோபம் வந்தால் காச்...மூச்... என்று கத்தும் ரகம் இல்லை.
ஆனால் போனமுறை நிரஞ்சனிடம் ‘அவள் தன் மன ஆதங்கத்தை வாய்விட்டு சொன்னாள்’ என்று வித்யா மூலம் கேள்விப்பட்டிருந்த விஸ்வம் சற்றே ஆசுவாசம் அடைந்தார். ஒரேடியாக மனப் போராட்டங்கள் எல்லாம் மனதிற்குள் பூட்டி வைத்து ஆழ்ந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவாளோ அதி என்ற பயம் அவருக்கு இருக்கிறது. நிரஞ்சன் எப்படி எடுத்துக் கொள்வான் என்று தெரியாது. ஆனால் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவன் வந்தது விஸ்வத்திற்கு பெரிய பலம் தான்!
கொஞ்ச நாட்களுக்கு இல்லை.இல்லை... கொஞ்சம் மாதங்கள் நிரஞ்சன் இங்கு சென்னையில் அவர்கள் வீட்டில்தான் தங்கி இருக்கப் போகிறான் என்று கேட்டதும் அவருக்கு தான் பேசியதை எல்லாம் அவன் மன்னித்து விட்டான் என்றே தோன்றியது. ஆனால் நிரஞ்சன் விசுவத்தை மன்னிக்கவில்லை, அதற்காக அதிதியின் வாழ்க்கையை அப்படியே விட்டு விடவும் அவன் தயாராக இல்லை.
காலையில் பிரேக்ஃபாஸ்ட் முடித்த கையோடு விசுவம் கிளம்பிவிட, நிரஞ்சனோ அதிதியிடம் ' கிளம்பு, சிஏ இன்ஸ்டிட்யூட் வரைக்கும் போயிட்டு வரலாம். அண்ட் மோர்ஓவர் இன்னிக்கு லஞ்ச் வெளியில சாப்பிடலாம்... 'என்று எதுவுமே நடக்காதது போல் நீரு சொல்ல அதி பொங்கி விட்டாள்.
‘'ஸோ உனக்கு வேணும்னா என்ன பாக்க வருவ, இல்லன்னா அப்படியே சொல்லாம கொள்ளாம ஊருக்கு ஓடி போய்டுவே... மொதல்ல அப்பா நான் அவருடைய இஷ்டப்படி கல்யாணம் பண்ணிக்க நினைச்சாரு, நான் ஓகே சொன்னேன். அப்புறம் அந்த ப்ளடி **** அவன் இஷ்டத்துக்கு நான் இல்லைன்னு என்னை விவாகரத்து பண்ண சைன் பண்ண சொன்னான்.அப்பவும் ஓகே ன்னு சொன்னேன். திரும்ப கூட வாழ கூப்பிட்டா அதுக்கும் ஓகே ன்னு சொல்லணும்... இப்போ நீ, கூப்பிடும் போது நா... நாய் குட்டி மாதிரி உன் கூடவே வரணும். எனக்குனு எந்த உணர்வுகளும் இல்லை ரைட்?” என்று பொரிந்து தள்ள, அவள் கண்களோ அதற்கு மாறாக கண்ணீரை உதிர்தது. வித்யாவுக்கோ வினயன் விவாகரத்து மனுவை திரும்ப பெறுவது பற்றிய கேட்டது எப்படி தெரியும், அதோடு மகள் இவ்வளவு தூரம் மன அழுத்தத்தில் இருக்கிறாளா...என்று விக்கித்து நிற்க, அதிக்கு இவ்வளவு பேச தெரியுமா என்று நிரஞ்சன் சமைந்து விட்டான்.
இருந்தாலும் ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்டு இவளை இப்படியே வைத்து விட்டால் இவள் ஒன்றுமே செய்யாமல் தன் வாழ்க்கையை வைத்துக் கொள்வாள் என்று தோன்றவே, முகத்தை கொஞ்சம் கடுமையாக வைத்துக் கொண்டு, “இப்படியே எத்தனை நாள்தான் உன் வாழ்க்கையை தண்டமாய் ஓட்டுறதா முடிவுல இருக்க அதிதி?” என்றான்.
நிரஞ்சன் கேட்ட விதத்தில் வித்யாவுக்கு சட்டென்று கோபம் எட்டிப்பார்க்க, “எங்க மக எங்களுக்கு எப்பவுமே பாரம் இல்ல நிரஞ்சன்” என்றாள். வித்யாவிடமிருந்து இவ்வாறான மறுப்பை நிரஞ்சன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவளிடம் என்ன சொல்வது என்று யோசித்து ' “நெருப்புன்னா வாய் சூடாது.உங்க காலம் வரைக்கும் ஓகே அத்த....அதுக்கப்புறம், அவ தன் வாழ்க்கைய அமைச்சுக்க வேண்டாமா?” என்றவன் அதியிடம் திரும்பி அவளுக்கு யோசிக்க கூட நேரம் கொடுக்காமல்,” ஓகே அதி,உனக்கு ஜஸ்ட் டென் மினிட்ஸ் டைம்.சீக்கிரம் ரெடி ஆகு” என்றுவிட்டு வாசலுக்கு சென்று விட்டான். அவர்களிடம் பேசி முடிப்பதற்குள் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. வித்யா எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகிறாள் என்று வேறு பயம். ஆனால் வித்யாவும் நிரஞ்சன் சொன்னதில் இருக்கும் அர்த்தத்தை எடுத்துக்கொண்டு மௌனமாகி விட்டாள். நிச்சயம் அதியின் வாழ்க்கையில் வளர்ச்சியும் மலர்ச்சியும் தேவை. நிரஞ்சன் சொல்வது போல் அவள் மீண்டும் சிஏ படிப்பதனால் இந்த பிரச்சனைகளில் இருந்து கொஞ்சமாவது வெளியே வருவாள். வகுப்புகளுக்கு செல்வதும் பரீட்சைக்கு தயாராகும் விதமாக அவளது மனம் வேறு திசையை நோக்கி பயணிக்கும். அதுவே அவ்வளவு பிரச்சினைகளில் இருந்து தூர நின்று சமாளிக்கவும், போராடவும் தைரியத்தை தரலாம் என்று யோசித்து மறைமுகமாக நீரு சொல்வதற்கெல்லாம் பச்சைக் கொடி காட்டினாள்.
ஒரே மகளின் வாழ்வு சீரமைவதைத் தவிர அவளுக்கும் அவள் கணவருக்கும் வேறு என்ன வேண்டும்?