எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 19

அத்தியாயம் 19​

அந்த பிரசவ அறையின் முன்னே அமர்ந்திருந்த கார்த்திக்கிற்கு மிகவும் பதற்றமாக இருந்தது.​

பல ஞாபகங்கள் தேவையில்லாமல் அவனை தாக்க, “கடவுளே! காவ்யாவும் குழந்தையும் நன்றாக இருக்க வேண்டும்” என மனதோடு வேண்டிக் கொண்டிருந்தான்.​

தவிப்புடனும் பயத்துடனும் இருந்த கார்த்திக்கை குளிர்விக்கும் விதமாக அவனின் புதல்வி வீறிட்ட அழுகையுடன் இப்பூவுலகிற்கு வந்தாள்.​

அவ்வளவு நேரம் காவ்யாவின் கதறலை கேட்டு பதற்றத்துடன் இருந்தவனுக்கு தன் மகளின் அழுகை குரல் சற்று நிம்மதியை அளித்தது.​

"பெண் குழந்தை!" என மருத்துவர் வந்து சொல்லிவிட்டு குழந்தையைக் காண்பித்தனர்.​

சித்து இங்கிருந்தால் பயந்து விடுவான் என்று கௌதம் அவனை வெளியே வைத்திருந்தான்.​

கௌதமிற்கு அழைத்த கண்மணி, “குழந்தை பிறந்துடுச்சி! பெண் குழந்தை! நீங்க சித்துவை கூட்டிட்டு வாங்க” என தகவலைக் கொடுத்தாள்.​

குழந்தையை வாங்கிய விசாலாட்சி, தன் பேத்தியை மடியில் வைத்துக்கொண்டார்.​

அன்றலர்ந்த ரோஜாவை போல் இருந்த குழந்தையைப் பார்த்த கார்த்திக்கின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கின.​

குழந்தைகள் என்றாலே பிடித்தவனுக்கு இன்று அவனின் குழந்தை புவியில் ஜெனித்தது அவ்வளவு மகிழ்வை கொடுத்தது.​

சித்து, "பாப்பா! பாப்பா! என்னோட பாப்பா!" என அவளைத் தூக்க முயன்றான்.​

கார்த்திக்கின் தாய் விசாலாட்சி, “நீ பாப்பாவை தூக்கக் கூடாது!” என சற்று அதட்டலுடன் கூறினார்.​

அவரின் அதட்டலில் அழத் தயாராகியவனின் மடியில் குழந்தையை தன் அன்னையிடமிருந்து வாங்கி வைத்த கார்த்திக், “இது நம்ம பாப்பா சித்து. நீ தான் இந்த பாப்பாவை வளர்க்க போற. நீ தான் விளையாட, படிக்க எல்லாமே சொல்லி கொடுக்கணும்” என அவனின் பொறுப்பையும் குழந்தைக்கு அவனின் முக்கியத்துவத்தையும் சொல்லிக் கொடுத்தவன், பார்வையாலே தன் அன்னையை எரித்தான்.​

“சின்ன குழந்தையா இருக்குன்னு தான் கார்த்தி அப்படி சொன்னேன்” என்றார் விசாலாட்சி உள்ளேபோன குரலில்.​

“எதுவா இருந்தாலும் சித்துவை இப்படி அதட்டாதீங்க அம்மா. நீங்க இப்படி பண்ணா அவன் பாப்பா கிட்ட நெருங்கவே யோசிப்பான்” என்று கடிந்துக் கொண்டான்.​

ஒருவாரம் மருத்துவமனை வாசம் முடித்து வந்த காவ்யாவை நன்றாக பார்த்துக் கொண்டான் கார்த்திக். குழந்தை பசியில் அழுதால் மட்டுமே அவளிடம் கொடுத்தான். மீதி நேரம் எல்லாம் சித்துவும் அவனுமே சேர்ந்து பார்த்துக் கொண்டனர்.​

காவ்யாவை அழைத்துப் போக கேட்டும் கார்த்திக் மறுத்துவிட தேவிகாவிற்கு அதில் சற்று வருத்தம் தான். ஆனால் காவ்யாவை தாங்கு தாங்கென்று தங்குபவனைப் பார்த்து பெருமிதமாகவும் இருந்தது.​

ஒரு மாதம் கழித்து குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.​

“என்னோட மருமகளுக்கு என்ன பெயர் வைக்க போறீங்க?” என சத்யன் கார்த்திக், காவ்யா இருவரையும் பார்த்து வினவினான்.​

“அத அவரே சொல்லுவாரு. சித்துவும் அவரும் தான் பெயர் செலக்ட் பண்ணாங்க அண்ணா. என்கிட்ட கூட இன்னும் சொல்லல” என்றாள் காவ்யா.​

குழந்தையை தொட்டிலில் இட்டதும் கார்த்திக்கும் சித்துவும் தான் அதன் காதில்,​

“ஓவியா! ஓவியா! ஓவியா!” என்று மூன்று முறை கூறி பெயரிட்டனர்.​

“காவ்யா! ஓவியா! நேம் செலக்க்ஷன் நல்லாருக்கே கார்த்திக்” என்றான் கௌதம்.​

“நான்தான் செலக்ட் பண்ணேன்” என குதித்த சித்துவை கௌதம் தூக்கிக் கொண்டான்.​

“நீங்களா குட்டி செலக்ட் பண்ணீங்க? ரொம்ப நல்லாருக்கு!” என அவனின் கன்னத்தில் முத்தமிட்டான்.​

வண்ணங்கள் அற்ற அவர்களின் வாழ்க்கையில் பல வண்ணங்களை வாரி வழங்கும் ஓவியமாக அவர்களின் மகள் வந்ததால் ஓவியா என்று பெயர் சூட்டினர்.​

குழந்தை பிறந்ததும் காவ்யா வேலையை விட்டுவிட்டாள்.​

“ஏன்?” என்று கார்த்திக் கேட்டதற்கு, “பாப்பா கொஞ்சம் வளர்ந்ததும் நான் வேலைக்கு போகிறேன்” என்றாள்.​

“சரி உன்னிஷ்டம்” என்றுவிட்டான் கார்த்திக்.​

காவ்யாவின் மனதில் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. “எங்கே பெண் குழந்தை தானா?” என விசாலாட்சி கேட்டுவிடுவாரோ என்று அவளின் அனுபவத்தில் பயந்திருந்தாள்.​

ஆனால் விசாலாட்சியோ அதை எல்லாம் பெரிது பண்ணாமல் குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். காவ்யாவிற்கு முடியாததால் சித்துவை கூட அவரே பார்த்துக் கொண்டார்.​

மூன்று மாதம் இவர்களுடனே தங்கியிருந்து பார்த்துக் கொண்ட விசாலாட்சி ஊருக்கு புறப்பட்டு சென்றார்.​

அதன் பிறகு காவ்யாவை அடிக்கடி வந்து தேவிகா பார்த்துக்கொண்டார்.​

இடையில் ஒருநாள் மங்கலம் காவ்யாவையும் குழந்தையையும் பார்க்க வந்துவிட்டு சென்றார்.​

அப்படியே ஓவியாவுடன் அவர்களின் வாழ்க்கை தொடங்கியது.​

__________​

ஐந்து வருடங்களுக்கு பிறகு,​

மாலையில் தங்களின் அறையில் இருந்த காவ்யா மறுநாள் வேலைக்கு கட்டி செல்ல புடவையை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.​

வெளியே கூடத்தில் சித்து மற்றும் ஓவியாவுடன் அமர்ந்து அவர்களின் இருவர் புத்தங்கங்களுக்கும் அட்டை போட்டு கொண்டிருந்தான் கார்த்திக்.​

“என்னோடது தான் பர்ஸ்ட்!”​

“இல்ல என்னோடது தான்!” என சண்டையிட்ட இருவரிடமும் ஒரு ஒரு புத்தகத்தை கொடுத்து அட்டை போட சொல்லிவிட்டு அமர்ந்திருந்தான் கார்த்திக்.​

சரியாக வருதோ இல்லையோ தன் தகப்பன் கூறியதற்கே நான்கு வாயதாகிய ஓவியாவும் பத்து வயதாகிய சித்துவும் அட்டை போட முயன்று கொண்டிருந்தனர்.​

அவர்களின் சேட்டைகளை பார்த்து சிரித்தாள் காவ்யா.​

அவளை செல்லமாக முறைத்த கார்த்திக், “என்ன சிரிப்பு வேண்டியிருக்கு? இவங்க படிக்கிற இந்த முப்பது புக்ஸ்க்கு அட்டை போட்டே டையர்ட் ஆகிட்டேன்” என்றவனிடம் ஒரு காப்பியை கொடுத்தாள்.​

“ம்ம்ம். அப்பா தான் அட்டை போட்டுட்டாங்களே! புக்ஸ் எங்க வெக்கணுமோ அங்க எடுத்து வையுங்க” என குழந்தை இருவரிடமும் சொன்னாள். பின் அனைவரும் சாப்பிட்டு உறங்கிவிட்டனர்.​

மறுநாள் காலையில் பரபரப்பாகவே விடிந்தது.​

பிள்ளைகள் இருவரையும் கிளப்பி அவர்களின் பள்ளி வாகனத்தில் ஏற்றுவதற்குள் கார்த்திக்கிற்கும் காவ்யாவிற்கும் போதும் போதும் என்றாகியது.​

“இப்ப டீச்சர் அம்மாக்கு பஸ் வருமா?” என கார்த்திக் கேட்டான்.​

“சும்மா சும்மா டீச்சர்னு கிண்டல் பண்ணாதீங்க கார்த்திக்” என சிணுங்களுடன் சொன்னவளை பார்த்தவன்,​

“அது கிண்டல் இல்லை காவ்யா. பெருமையா தான் சொல்லுறேன்” என கண்கள் முழுவதும் பெருமிதமாக பார்த்தான் கார்த்திக்.​

ஓவியா பிறந்து ஒரு வருடம் முடிந்ததும், ஒருநாள் அப்ளிகேஷன் உடன் வீட்டிற்கு கார்த்திக் வந்தான்.​

அவனின் கையில் இருந்ததை பார்த்த காவ்யா, “பாப்பாவுக்கு ஒரு வயசு தான் ஆகுது. அதுக்குள்ள ஸ்கூல் சேர்க்க பார்ம் வாங்கிட்டு வந்திருக்கீங்க?” என பதறியவளிடம்,​

“இது ஓவியாக்கு இல்லை. காவ்யாக்கு” என்றான் சிரிப்புடன்.​

“என்ன சொல்லுறீங்க கார்த்திக்?” என புரியாமல் விழித்தவளிடம்,​

“இது நீ பிஎச்டி படிக்கிறதுக்கான பார்ம்” என்றான். அவன் சொன்னதைக் கேட்டுத் திகைப்புடன் காவ்யா அவனையே பார்த்தாள்.​

“கௌதம் தான் சொன்னான் காவ்யா. உனக்கு இது படிக்கணும்னு ரொம்ப ஆசைனு. இப்ப பாப்பாவுக்கும் ஒரு வயசு ஆகிடுச்சே! அதான் இனி நீ படிக்கலாமேன்னு வாங்கிட்டு வந்தேன்” என்றவன்,​

“உன்னை கட்டுப்படுத்தல. உனக்கு பிடிச்சா மட்டும் படி” என்றான்.​

பத்து வருடங்கள் கழித்து தான் ஆசைப்பட்ட ஒன்று நிகழப் போவதை அறிந்த காவ்யா, கண்கள் கலங்கிய நிலையில் “ரொம்ப தேங்க்ஸ் கார்த்திக். எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல.. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றாள் மகிழ்ச்சி பொங்கிய குரலில்.​

“நீ இப்படியே எப்பவும் சந்தோசமா இருக்கனும் காவ்யா!” என்றான் அவளின் விழி நீரைத் துடைத்துவிட்டு.​

கானலாய் போன காவ்யாவின் கனவை மீட்டு கொடுத்த கார்த்திக் அவளின் கனவை அடைய தொடர்புள்ளியை வைத்தான்.​

பின் காவ்யாவும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டவள் நல்ல முறையில் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றாள். அவளின் திறமையை பார்த்த கல்லூரி அவளை அந்த கல்லூரியிலேயே பேராசிரியராக பணி புரியும்படி கேட்டுக் கொண்டனர்.​

‘தனக்கு தெரிந்ததை, தான் கற்றதை பிறருக்கு சொல்லிக் கொடுப்பத்தில் ஆத்ம திருப்தி கிடைக்கும்’ என்றுணர்ந்த காவ்யாவும் அவர்களின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டாள்.​

இப்பொழுது காவ்யா ஒரு கணிதப் பேராசிரியர்! கார்த்திக் சொன்னதை போல் அவளுக்கான கல்லூரி பேருந்து வர அதில் ஏறிக்கொண்டவள் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களையும் ரசித்து வாழக் கற்றுக் கொண்டாள்.​

அவர்கள் இருவரின் வாழ்விலும் சண்டையே வருவதில்லை என்றில்லை! சண்டை, கருத்து வேறுபாடுகள் என அனைத்தும் வந்து செல்லும். ஆனால் இந்த திருமணம் செய்ததே தவறோ! என்று என்றைக்கும் கார்த்திக்கும் காவ்யாவும் நினைத்ததே இல்லை.​

கார்த்திக் அவனது அம்மா, அப்பா இருவரையும் உடன் வந்து வசிக்குமாறு அழைத்தான்.​

ஆனால் “இங்கு தான் எங்களுக்கு சரியா இருக்கு கார்த்தி” என அவர்கள் வர மறுத்துவிட்டனர்.​

இரு மாதங்களுக்கு ஒருமுறை சென்று அவர்களைப் பார்த்துக் கொண்டனர் காவ்யாவும் கார்த்திக்கும்.​

மாலையில் வீடு திரும்பிய அனைவரும் கௌதமின் வீட்டிற்கு புறப்பட்டனர்.​

அன்று தான் கௌதமின் மகன் சந்தோஷிற்கு முதலாம் பிறந்தநாள்!​

கார்த்திக்கிற்கு இன்னமும் நினைவிருந்தது, தர்ஷினியின் முதல் பிறந்தநாளில் தான் இவர்களின் வீட்டிற்கு வந்து திருமணத்தை பற்றிய பேச்சினை தொடங்கியது.​

இப்பொழுது அவர்களின் புதல்வன் சந்தோஷின் பிறந்தநாளிற்கு இரு குழந்தைகள் என குடும்பமாக வருகை தந்தது அவனுக்கு மனநிறைவைக் கொடுத்தது.​

கேக் வெட்டி கொண்டாடியதும் கௌதமின் கட்டாயத்தில் இரவு அங்கேயே தங்க திட்டமிட்டனர்.​

“நாளைக்கு லீவ் தான? இங்கயே இருங்களேன்?” என்ற கௌதமை மறுக்க முடியாமல் தங்கினர்.​

இரவு உணவை முடித்து மாடியில் உலாத்திக் கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்க்க வந்தான் கௌதம்.​

“எனக்கொரு டவுட் கார்த்திக். நீங்க மதுரை தான? இதுவரைக்கும் ஜல்லிகட்டுல ஒரு மாடை கூட நீங்க அடக்கி நான் பார்த்தது இல்லையே?” என்றான் கிண்டலுடன்.​

“ஏன்? மாட்டை அடக்குனா தான் பொண்ணு கொடுப்பீங்களா?” என அவனும் கிண்டலுடனே கேட்டுவிட்டு,​

“ஆனா.. ரொம்ப தாமதமா கேட்டுடீங்க கௌதம். எனக்கு மாடு கிட்ட போறதுக்கே பயம்” என்றான் கார்த்திக்.​

அவன் கூறியதில் சிரித்தவன், “மாட்டை அடக்குறவனை விட என் தங்கச்சியோட மனசை புரிஞ்சி அவளுக்கு நல்ல துணையா இருந்தாலே போதும் கார்த்திக். அதுல நீங்க தான் பெஸ்ட்” என்றான் மகிழ்வுடன்.​

“ரெண்டு பேரும் இங்க என்ன பண்ணுறீங்க?” என காவ்யா கேட்டுக்கொண்டே அவர்களிடம் வந்தாள்.​

“சும்மா தான் பேசிக்கிட்டிருந்தோம் அம்மு” என்ற கௌதம் இருவருக்கும் குட் நைட் சொல்லிவிட்டு கிழிறங்கினான்.​

“என்ன?” என புருவம் உயர்த்திப் பார்த்த காவ்யாவிடம்,​

“தேங்க்ஸ் காவ்யா! நீயும் சித்துவும் என்னோட வாழ்க்கைல வரலனா..? என்னால யோசிக்க கூட முடியல..” என்றான் குரல் தழுதழுக்க.​

“அதையே நாங்களும் சொல்லலாமே கார்த்திக்!” என அவனின் கண்களை உறுத்துப் பார்த்த காவ்யா, “ஆனா.. அப்படி சொன்னா..? நீங்க பீல் பண்ணுவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என முறுக்கிக் கொண்டாள்.​

“சரி! சரி!” என கையை சமாதானமாக உயர்த்தியவன், “நானும் சொல்லல. நீயும் சொல்ல வேண்டாம்” என்றான் புன்னகையுடன்.​

சிரித்துக்கொண்டே அவனின் இடக்கரத்தை வளைத்துப் பிடித்தவள் அவனின் இடது தோளில் சாய்ந்தாள்.​

முற்றுப் பெறாமலே​

முற்றுப்புள்ளி பெற்ற​

அவர்களின் வாழ்வில்..​

தொடர்புள்ளியாய் மற்றவர் வந்து..​

வசந்தத்தை வீசுவது தான்​

விதியின் விந்தையோ!​

*** முற்றும் ***​

Super story
 
Top