கதிரவன் அவன் துயில் எழுந்து உயிர்வாழ் இனங்களை ரட்சிக்க வந்துகொண்டிருந்தான். ஊர் மக்கள் அனைவரும் சிறுது சிறிதாய் துயில் கலைந்து அவர்கள் வேலைகளை பார்க்க தொடங்கினார்கள்.
ஆனால் லில்லியோ இப்போதுதான் கண்ணயர்ந்தாள், அது அவள் திறன் பேசிக்கு பிடிக்காமல் அவளை எழுப்ப அவளின் அலாரம் அடிக்க ஆரம்பித்தது. சிணிங்கி கொண்டே திறன் பேசியை எடுத்தவள் அதனை அனைத்து விட்டு கண்களை திறந்து அங்கிருக்கும் முருகன் படத்தை பார்த்தாள்.
'தூக்கமா இருக்கு முருக ஆனால் என்ன செய்வது வேலைக்கு செல்ல வேண்டுமே' என்று சிரமப்பட்டு மெத்தையை விட்டு எழுந்தாள். பின் சென்று அவள் காலை கடமைகளை முடித்து விட்டு கடவுளை வணங்கி கொண்டிருக்கும் வேளையில் அவள் வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்க திருநீறை நெற்றியில் பூசி விட்டு கதவை திறக்க சென்றாள்.
வாசலில் பூஜாதான் கையில் சில சாப்பாட்டு பொருட்களுடன் நின்றிருந்தாள். அவளிடம் மராட்டியில் "உள்ளே வாங்க" என அழைத்தாள். அவளும் உள்ளே வந்து மராட்டியில் " உனக்கு கொஞ்சம் சுலபமான முறையில் உன்ன சில பொருட்கள் வாங்கி வந்துள்ளேன். நீ தயார் என்றாள் உன் பள்ளிக்கு புறப்படலாம்.
பின் பள்ளி முடிந்தவுடன் சமைக்க தேவையான பொருட்களை வாங்க அழைத்து செல்கிறேன்." என கூறினாள். லில்லயும் சினேகமாக சிரித்து நன்றி கூறி விட்டு அவளுடன் பள்ளிக்கு புறப்பட்டாள்.
சட் எட்வர்ட்ஸ் கத்தோலிக்க பிரைமரி ஸ்கூல் எனும் பெயருடன் மிக பிரமாண்டமாக எழுந்து நின்றது அந்த கட்டிடம். அதன் வலாகத்தில் லில்லியை இறக்கி விட்ட பூஜா மராத்தியில் " சரி லில்லி நீ உன் வேலைக்கு முதலில் போ... நான் மாலை நான்கு மணியளவில் வந்து உன்னை அழைத்து செல்கிறேன்." என கூறினாள்.
அதற்கு லில்லயும் "சரி" என தலை அசைத்து பள்ளியை நோக்கி நடக்கலானாள். லில்லி அவளுக்கான அனுமதி கடிதத்துடன் பிரின்ஸிபல் அறைக்கு சென்றாள். அங்கே நின்ற காவலாளியோ அறைக்கு வெளியே போடப்பட்டிருந்த நாற்காலியில் அவளை சிறிது நேரம் அமர சொன்னார்.
இன்னும் சில ஆசிரியர்கள் வந்தவுடன் அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து உள்ளே செல்லுமாறு கூறினார். அவளும் அங்கு போடப்பட்டிருக்கும் இருக்கையில் அமர்ந்து பிற ஆசிரியர்களுக்கான காத்திருந்தாள்.
(இதன் பிறகு ஆங்கிலேயர்களுடன் நடக்கும் ஆங்கில உரையாடல்கள் யாவும் தமிழில் மற்றும் பூஜாவுடன் நடக்கும் மராட்டி உரையாடலும் தமிழில் கூறப்படும்.)
காத்திருந்த சிறிது நேரத்திலே அணைத்து ஆசிரியர்களும் வந்து விட அனைவரும் ஒன்றாக பிரின்ஸிபல் அறைக்கு சென்றனர். அனைவரிடமும் தன்னை அறிமுக படுத்தி கொண்டார் மிஸ்டர் பீட்டர்.
"வணக்கம் நான் தான் மிஸ்டர் பீட்டர். இந்த பள்ளிக்கூடத்து பிரின்ஸிபல். உங்களுக்கு இந்த பள்ளி கூடத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கண்டிப்பாக என்னை வந்து பாருங்கள்.
உங்கள் பிரச்சனையை தீர்க்க நான் உதவுவேன்." என கூறி அனைவரின் பெயர்களையும் கேட்டு அறிந்து கொண்டு அவர்கள் கற்றுக் கொடுக்க போகும் மொழிகளையும் அறிந்து கொண்டார்.
பின் அனைவரிடமும் அவர்களின் அனுமதி கடிதத்தை பெற்று கொண்டார். பின் அவரின் உதவியாளரான டேவிட்டை அழைத்தவர் "இவர்கள் எல்லாம் எந்த வகுப்புக்கு செல்ல வேண்டும். அவர்களின் இடம் எங்கே?" என அனைத்தையும் கூற சொன்னார்.
அவரிடம் கூறிவிட்டு ஆசிரியர்களை பார்த்து "ஹாப்பி வார்க்கிங் டே" என கூறி அவர்களை வழி அனுப்பினார். பிரின்ஸிபல் அறையை விட்டு வெளியே வந்தவர்கள் டேவிட் சொன்ன தகவல்களையும் கால அட்டவணையையும் எடுத்துக்கொண்டு அவர்களின் வழங்கிய ஆசிரியர் அறைக்கு சென்றனர்.
முதல் நாள் லில்லிக்கு தமிழ் வகுப்பு இருந்தது. ஆனால் பள்ளி முடியும் தருவாயில் தான் அவளின் தமிழ் வகுப்புக்கான நேரம். அப்படிதான் அவர்களின் மொழி வகுப்பிற்கு நேரத்தை ஒதுக்கி உள்ளனர்.
மாணவர்களை சரியான பிரிவில் பிரித்து வகுப்பறை ஏற்பாடு செய்து குடுக்க சரியாக இருக்கும் என கருதி இந்த ஏற்பாட்டை செய்தனர். முதல் நாள் எல்லா பிற இன மாணவர்களையும் பள்ளி முடியும் வேளையில் ஒன்று திரட்டி அவர் அவர் சொந்த மொழிகளுக்கான வகுப்பிற்கு அனுப்பி வைத்தனர்.
அவள் வகுப்புக்கான நேரம் வர வகுப்புக்கு செல்ல தயாரானாள். அப்போது அங்கு வந்த ராம் "லில்லி மிஸ் பிரஸ்ட் டே வகுப்புக்கு போறிங்க பாத்து ஸ்டுடண்ட்ஸுக்கு கற்று கொடுங்க" என சற்று கேலி குரலில் கூறினான்.
அவனை ஒரு முறை முறைத்து விட்டு அவனை தாண்டி வகுப்பிற்கு செல்ல போனாள். அவனும் இரு தோள்களையும் குலுக்கி விட்டு சென்று விட்டான். படம் நடத்த ஆர்வமாக சென்றாள் லில்லி.
பல வருடங்கள் கழித்து தமிழ் மொழி கற்று தர போகிறாள். வகுப்பினுள் நுழைந்ததுமே அங்கே தமிழ் மாணவர்கள் அவர்களது இருக்கையில் அமர்ந்திருந்தனர். புத்தகத்தை ஆசிரியர் மேஜை மீது வைத்தவள் அவர்களிடம் திரும்பி " வணக்கம் என் பெயர் லில்லி. உங்களது தமிழ் ஆசிரியை." என கூறினாள்.
சில மாணவர்கள் முகம் அவள் பேசுவது புரிவது போல் இருக்க சிலர் முகம் அவள் வேற்று கிரகத்திலிருந்து வந்து பேசுவது போல் புரியாது பார்த்தனர். உடனே அவள் குரலை செருமிக்கொண்டு " ஐ அம் யுவர் தமிழ் டீச்சர். மை நேம் இஸ் லில்லி." என கூறினாள்.
எல்லோரும் உடனே கோரஸாக "குட் ஈவினிங் டீச்சர்" என கூறினார்கள். அவளும் சிரித்துக்கொண்டே "எனக்கு புரிகிறது இங்கு பலருக்கு நான் பேசும் தமிழ் மொழி புரியவில்லை ஆனால் இனி அப்படி இருக்க முடியாது தமிழில் பேசுவதை புரிஞ்சிக்க முயற்சி செய்யுங்கள்." என் ஆங்கிலத்தில் கூறி முடித்தாள்.
பின்னர் எல்லோருடைய பெயரை அவர்களையே கூற சொல்லி அறிமுக படுத்தி கொண்டாள். ஒவ்வொரு மாணவரும் அவர் பெயர் சொல்லி வர அடுத்த மாணவராக பெயர் சொன்னது மேக்னா தான். அலட்டிக்கொள்ளாமல் தமிழில் அழகாக "என் பெயர் மேக்னா ராயின்." என கூறினாள்.
அந்த வகுப்பில் முதலில் தமிழில் பேசிய மாணவியும் அவள் தான். தமிழை கேட்டவுடன் லில்லியின் இதழ்கள் தாமாக விரிந்து கொண்டது. பின் அடுத்த மாணவன், அடுத்த மாணவி என பெயர்களை கூறிக்கொண்டே சென்றனர்.
எண்ணி மேக்னாவுடன் சேர்த்து ஆறு மாணவர்கள்தான் தமிழ் பேசினார்கள். மனதினில் ‘இன்னும் ஆறு மாதத்திற்குள் எப்படியாவது எல்லோருக்கும் தமிழ் கற்று தர வேண்டும்.' என நினைத்தவள் வகுப்பு முடிந்தவுடன் பள்ளியிலிருந்து புறப்பட்டாள்.
பள்ளி வாயிலுக்கு வந்தவள் ராம் நிர்ப்பதை பார்த்து விட்டு பெருமூச்சு ஒன்றை விட்டாள். பின் அவனை கண்டும் காணாதவள் போல் வேகமாக நடந்து வெளியே செல்ல முனைந்த பொது அவள் செல்லும் வழியில் ராம் குறுக்க வந்து வழி மறைத்தான்.
"என்ன மேடம் கண்டும் காணாமல் போறிங்க?" என கேட்டான்.
அதற்கு அவளோ "இப்போ என்ன சார் வேணும் உங்களுக்கு ஏன் எப்போதும் என்னை தொந்தரவு செய்து கொண்டே இருக்குறீர்கள்?" என குரலை கொஞ்சம் உயர்த்தி பேச அங்கு வந்து நின்றாள் பூஜா.
"ஏதேனும் பிரச்சனையா லில்லி?" என அவள் கேட்க, ராம் லில்லியை முறைத்து விட்டு செல்ல ஏதனிக்க, பூஜா "சார் இவள் என் தங்கை இன்னும் ஒருமுறை இவளை நீங்கள் தொந்தரவு செய்வதை நான் பார்த்தேன் என்றால் உங்கள் மீது போலீசில் புகார் கொடுத்துவிடுவேன்.
நம்ம ஊர் போலீஸ் போல் இல்லை இவர்கள். நான் சொல்ல வருவது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்." என பூஜா கூற அவன் இருவரையும் முறைத்து விட்டு அங்கிருந்து சென்றான்.
லில்லி பூஜாவுக்கு நன்றி கூறினாள். பின் இருவரும் சேர்ந்து கடைகளுக்கு சென்று லில்லிக்கு தேவையான பொருட்களை வாங்கினார். பொருட்களை எல்லாம் வாங்கியவுடன் பூஜா லில்லிக்கு பக்கத்தில் இருக்கும் கடைகளை அறிமுக படுத்தினாள்.
எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பின் பூஜா லில்லியை அவள் வீட்டிலேயே கொண்டு வந்து விட்டாள்.
பூஜா " லில்லி உனக்கு ஏதும் டவுட் வந்த எனக்கு கோல் செய். நான் வரேன்." என கூறிவிட்டு பூஜா வீட்டிற்கு புறப்பட்டு சென்றாள். அவள் சென்றவுடன் வீட்டினுள் வந்தவள் வாங்குய பொருட்களை ஒருங்க அதன் அதன் இடத்தில் வைத்து விட்டு, குளிக்க சென்றாள்.
குளித்து விட்டு வந்தவுடன் எளிமையான முறையில் உணவு செய்து சாப்பிட்டாள். உண்டு முடிந்தவுடன் நாளை செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் பட்டியலிட்டவள் பின் மாணவர்களுக்கு கொடுக்க இருக்கும் பாடங்களை மாடி கணினி மூலம் தயார் செய்தாள்.
வேலை எல்லாம் முடித்தவள் உறங்குவதற்கு சென்றாள். அதே நேரம் வீட்டில் இரவு உணவு தயார் செய்து மேக்னாவிற்கு தனக்கும் தட்டில் போட்டு கொண்டு டைனிங் ஏரியாவில் வந்து அமர்ந்தான்.
அவன் அருகில் அமர்ந்தாள் மேக்னா. "அப்பா எனக்கு இன்றுதான் முதல் தமிழ் வகுப்பு ஆரம்பிக்க பட்டது. ஏனோ எனக்கு அந்த ஆசிரியரை பிடிக்கவில்லை." என்றாள்.
அதற்கு ராயினோ "ஏன் பம்கின்? ஆசிரியர் உன்னை திட்டினாரா." என கேட்டான். அவளோ “இல்லை” என தலையாட்டினாள்.
ராயினோ அவளை யோசனையாக பார்த்து விட்டு, "பம்கின் யாரையும் நன்கு அறிவதற்கு முன் நாம் குறை கூற கூடாது. டோன்ட் ஜட்ஜ் தி புக் பாய் இட்ஸ் கவர்" என கூறினான்.
அதன் பின் இருவரும் அமைதியாக உணவு உண்டு, அவர் அவரது அறைக்கு உறங்க சென்று விட்டனர். என்னதான் உறங்க சென்றிருந்தாலும் ராயின் கூறியதைத்தான் மேக்னா யோசனை செய்திருந்தாள். காரணமே இல்லாமல் அவர்களை நாம் பிடிக்கவில்லை என கூற கூடாது என முடிவெடுத்தாள்.