எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - [email protected]

அக்னி சிறகே

ஆசைகளால் தூண்டப்பட்டு அவதி படாதே
அன்பினால் அடிமைப்பட்டு கலைந்து விடாதே
கல்லாமை இருந்தால் பொறாமை புகுந்து கொல்லும்
வல்லமை இருந்தால் வானும் வணக்கம் சொல்லும்
வெற்று காகிதம் என தூக்கி எரியப்பட்ட உன்னை
வேதம் சொல்லும் கவியாய் நீ ஆள்வாய் இந்த மண்ணை
வாதாடி வாழ்ந்தவனும் இல்லை
போராடி தோற்றவனும் இல்லை
சிரமங்கள் எதிர்த்துத் துணிந்து வா
அக்னி சிறகுகள் விரித்துப் பறக்க வா
உறக்கம் தொலைத்து உதிக்க வா
ஊக்கம் கொண்டு உயர வா
உதறிய கைகளும்
உதிரம் கொடுக்கும்
விறகுகள் வைத்து எரித்து விடாமல்
சிறகுகள் கொடுத்து பறக்க வைப்போம்
 
Top