Sowndharyacheliyan
Writer
வான்மழை 19:
“வருக்குட்டி, சாப்பிட என்னடா வேணும்? மதியத்துக்கு மாப்பிள்ளையும் வருவாரா? மதியத்துக்கு அப்பாவ மட்டன் எடுத்துட்டு வரச் சொல்லிருக்கேன். வேற ஏதும் வேணுமாடா” என்றபடி அவளருகே வந்தமர்ந்தார் மல்லிகா.
திருமணம் முடித்து வந்த வருணாக்ஷிக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்தது தாய் வீட்டில்.
காலையில், முகிலன் அவளை இறக்கி விட்டுச் சென்றதிலிருந்தே நிமிடத்திற்கு ஒருமுறை அவளது வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தார் மல்லிகா.
பேத்திக்கு உண்ண செய்து கொடுக்க முடியவில்லை என்றாலும், அவளை கண்ணார ரசித்து மகிழந்துக் கொண்டிருந்தார் முனியம்மாள்.
இதில் கிருஷ்ணா வேற மதியமே விடுப்பு எடுத்துக் கொண்டு வருவதாக கூறியிருந்தான். கெளரிக்கு வேலை இருப்பதால், நாளை வருவதாக வருணாவை அழைத்துக் கூறியிருந்தாள்.
“ம்மா போதும், விட்டா ஒரே நாள்ல என்னை குண்டாக்கிடுவீங்கம்மா நீங்க!”
“ஆமா ஆக்குறாங்க உன்னை குண்டா, போடி! இந்தா இதை மட்டும் குடிச்சிடு.” கையில் ஜீன்ஸ் டம்ளரை திணித்த வரை கண்டு விழி பிதுங்கிற்று அவளிற்கு.
“மாப்பிள்ளை வருவாரா வரு?”
“இல்லம்மா அவருக்கு வேலை இருக்கு. நாளைக்கு என்னை கூட்டிட்டுப் போகத்தான் வருவாரு.”
“சரி, நாளைக்கு மாப்பிள்ளைக்கு லீவு தானே, காலை சாப்பாட்டுக்கு வர சொல்லிடு.”
“சரிம்மா! சொல்லிடுறேன்.”
“அப்பறம் வரு, உன் வீட்டாளுங்க எல்லாம் எப்புடி பழகுறாங்க உன்கூட!”
இயல்பாய் தாயின் குணம் தலை தூக்கியது.
“இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லைம்மா, எல்லாரும் நல்லவிதமாத்தான் இருக்காங்க, ஆனா சுபாக்கா தான் எப்புடின்னு எனக்கு புரியலை.”
“ஏன், அந்தப் பிள்ளை நல்லவிதமாத்தானே நடந்துக்கிச்சு.”
“ம்ஹ்ம் சில நேரம் அப்புடித் தோணுது, சில நேரம் புரிய மாட்டேங்குது அவுங்களை.” என்றபடி உணவு விசயத்தில் இருந்து நகை விசயம் வரை அனைத்தையும் தாயிடம் கூறியிருந்தாள்.
“சரி, சரி நீ மாப்பிள்ளை சொன்ன மாதிரியே, அவுங்க விசயத்துல அதிகமா வச்சுக்காத, ஆரம்பத்துலயே எனக்கு இந்த உறுத்தல் இருந்துச்சு.”
“சரிம்மா” என முடித்தவள், அடுத்தடுத்து வீட்டினருடன் செலவழித்ததில் நேரம் நிற்காமல் ஓடியிருந்தது. இதில் கிருஷ்ணா வேறு வந்துவிட கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் போனாது.
இடைஇடையே கணவனுக்கு பேசியவள், அவனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள். பகலவன் போய் நிலவு மகள் வந்து விட்டிருக்க, நாளை வரப்போகும் மருமகனிற்கான, விருந்துப்பட்டியில் அங்கே எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அனைவரும் இரவு உணவினை உண்டு முடித்திருந்தனர்.
“ஏங்கே! கறிக்கு சொல்லிட்டீங்களா?”
“சொல்லிட்டேன் மல்லி, கிருஷ்ணா நாளைக்கு வெள்ளனவே போகணும் சந்தைக்கு. அப்போ தான் பிரிச்சுப் பார்த்து வாங்க முடியும்.” மனைவியிடம் ஆரம்பித்து மகனிடம் முடிக்க,
“சரிப்பா, போகலாம்.” என்றான் கிருஷ்ணா.
“நாளைக்கு மதினிங்களும் பாக்க வருவாங்க அவுங்களுக்கும் மதியசாப்பாடு இங்கன தான் சொல்லிருக்கு, கறி கொஞ்சம் கூட இருக்க மாதிரி பாத்துக்கோங்க.” என அவர்களிடம் பேச்சு போக,
வருணா தனது கைப்பேசியில் கணவனுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாள்.
“ப்ச் வருணாக்ஷி!” அவன் குரலைப் போலவே பட்டென வந்து விழுந்தது குறுஞ்செய்தி அவனிடமிருந்து.
கண்ணை சுருக்கி முறைக்கும் ஸ்மைலியை இவள் அனுப்ப,
“என்னதான் வருணா வேணும் உனக்கு?” அடுத்த குறுஞ்செய்தி அவனிடமிருந்து.
“நீ தான்!” என்ற வார்த்தைகள் இவளிடமிருந்து பாய்ந்திருந்தது.
அதனைக் கண்டுக் கொண்டவனின் இதழ்களில் அழகிய குறுசிரிப்பு. மாலை வேலை முடித்து வந்ததில் இருந்து, அவனிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறாள் அவன் மனையாள். நாளை செல்லவிருப்பவனை, இன்று இரவே வருமாறு ஒரே புலம்பல் அவளிடம்.
“நாளைக்கு தான்.” இவன் ஒற்றை வரியில் அவளை கோபமேற்ற,
“வர முடியுமா? முடியாதா?” கோப ஸ்மைலிகளோட வந்ததே அவளிடமிருந்து.
“முடியாது போடீ!”
“போயா யோவ்!” என ஆவேசமாக அனுப்பியவள் கையோடு ஆஃப்லைன் சென்று விட்டிருந்தாள். ஏனோ மனம் கணவனின் அருகாமையை அதிகம் நாடியது.
‘நாளைக்கு வர்றது இன்னைக்கு வந்த என்னவாம்’ என நொடித்துக் கொண்டவளிற்கு அவன் வருவான் என்ற நம்பிக்கை இல்லாதுப் போக,
“ம்மா, எனக்கு தூக்கம் வருது” என்றதோடு அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
இவள் அனுப்பிய செய்தியை கண்டு நகைத்தவன், “கடுகு சைஸ்னாலும் கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என முணங்கியவனுக்கு, அவளை காணும் ஆவல் எழ, வீட்டினரிடம் எப்படி சொல்வது என தயக்கம் எழ, தயங்கியவாறே கீழே சென்றான்.
“என்ன முகிலா, ஏதும் வேணுமாப்பா?” பேச்சி கேட்க,
“இல்லைம்மா, சும்மாதான் நீங்க இன்னும் தூங்கப் போகலையா?”
“உன் அப்பாவும் அண்ணனும் இன்னும் வரலைடா, அதான் உங்காந்திட்டு இருக்கேன்.”
“ஓ.. சரிம்மா” என்றவன் அடுத்து எப்படி விசயத்தை சொல்வது என தெரியாது பூனைப்போல் நடைப் போட,
மகனின் நடவடிக்கைகளை வேடிக்கைப் பார்த்தவருக்கு, அவனின் நிலை புரிந்து விட மெல்ல சிரித்துக் கொண்டவர்,
“வரு போன் போட்டாளா?” என்க,
“ம்ம்ம் அம்மா, கொஞ்ச நேர முன்னதான் பேசுனா” என்றவனிற்கு, மாமியார் வீட்டிற்க்கு செல்வதை எப்படி சொல்வது என அவன் தடுமாறிக் கொண்டிருக்க,
“ஏன் முகிலு, வேலை முடிச்சிட்டு அப்படியே உன் மாமியார் வீட்டுக்கு போயிருக்கலாம்ல, அங்கயேம் ராத்தங்கல் தங்குன மாதிரி இருக்கும்ல. நாளைக்கு காலையில போறவன், கொஞ்ச முன்னாடி போயிருக்கலாம். அவுங்களுக்கும் சந்தோசமா இருந்திருக்கும்.” மகனின் எண்ணப் போக்கிற்கு ஏற்றார் போல் அவர் பேச,
அதுவரை தயங்கி கொண்டிருந்தவன், சட்டென தாய் சொன்னதைக் பிடித்துக் கொண்டவன்,
“ஆமாம்மா, நீங்க சொல்றதும் சரிதான். அவுங்களும் எதிர்பாப்பாங்க இல்லை. நீ சொல்றது தான்ம்மா சரி, உங்க பேச்சை என்னைக்கு நான் மீறியிருக்கேன். இப்பவே கிளம்புறேன் ஒண்ணும் பிரச்சனை இல்லை.” என நொடியில் பேச்சின் திசையினை அவன் மாற்றியிருக்க,
“அடேய்!”அவனின் இந்த பேச்சு சாதுர்யத்தில் திகைத்து தான் போனார் பேச்சி. இருந்தும் மகனை சீண்டும் ஆவல் எழ,
“அப்புடியா முகிலு, எனக்குத் தெரியுமே என் பையன் என் பேச்சுக்கு அவ்வளவு மதிப்புக் கொடுப்பான்னு, இருந்தாலும் இந்த ராத்திரி நேரத்துல வேண்டாம். நீ காலையிலேயே போ.” என உனது அன்னை நான் என பேச்சில் அவர் நிருபிக்க,
நொடியில் அவன் முகம் வாடிவிட்டது. இனி மேல் எப்படி ‘நான் என் மனைவியை பார்க்க சொல்கிறேன்’ என வெளிப்படையாக சொல்ல முடியாமல் அவன் தவித்திட,
“அம்புட்டுக்கு என்ன உனக்கு கெளரவம் கிடக்குது, என் பொண்டாட்டியப் பாக்க போறேன்னு சொல்லிட்டு போவானா, சும்மா என் பேச்சை தட்டாதவனாட்டம் பேச்சைப் பாரு.” என அவர் நொடித்திட,
தாயின் பேச்சில் அசடு வழிய இருந்தவன், தன்னை நிதானித்துக் கொண்டு,
“என்னம்மா இப்புடி சொல்லுறீங்க, உங்க பேச்சைக் கேட்டு தானே நான் வருணாவையே கட்டுனேன்.” என அவன் தாஜா செய்ய முயல,
“போடா, போடா உனக்கு பிடிக்கப் போயி தான் வருணாவ கட்டுனேன்னு தெரியாத எங்களுக்கு.” என மீண்டும் அவனை பங்கமாய் வாரியவர்,
“கிளம்பு முகிலு, இதுக்கு மேல நேரத்தை கடத்தாதே இருட்டிடுச்சு.” என்றவரின் பேச்சில் உற்சாகமாய் அவன் கிளம்பிட,
அந்நேரம் வெளியே வந்த சுபா,
“தம்பி கிளம்பிட்டீங்களா? நானே சொல்லனும்னு இருந்தேன், கடைக்குப் போய்ட்டு மாமாவ அனுப்பி விடுங்கன்னு, இன்னைக்கு கூட்டம் அதிகம் போல.” என,
முகிலனின் முகம் ஒரு நொடி வருத்தத்தை காண்பிக்க, பின் சுதாரித்துக் கொண்டவன் வாய்திறக்க,
“சுபா, அவன் வருணாவோட அம்மா வீட்டுக்குப் போறான். கடைக்குப் போகலை.”
“இப்பவே வா? நாளைக்குத்தானே அத்தை முகில் போறான்னு சொன்னீங்க. இப்போ என்ன திடீர்னு.” என்றவளின் கேள்வியில் சங்கடமுற்றுப் போனான் முகிலன்.
“நான் தான், போய்ட்டு வர சொன்னேன் சுபா, ஒரு நாளாச்சும் இவன் போய் தங்கனும்னு அவுங்க எதிர்பார்க்க மாட்டாங்களா?”
“ஓஹோ, ஆனா அத்தை மணி பாருங்களேன் நேரமாகிடுச்சு. இவ்வளவு நேரம், மாமா சாப்பிடாம இருந்தா என்ன ஆகுறது. தம்பி இந்த ஒரு தடவை நீங்க நாளைக்கு போங்களேன்.” என அவனிடமே கேட்டிட,
சரி என்பதை கவரி அவனிற்கு வேறு வழியிருக்கவில்லை.
“அம்மா, நான் நாளைக்கு காலையிலயே போய்கிறேன். இப்ப கடைக்கு கிளம்புறேன்.” என,
அதுவரை மகனின் மகிழ்ச்சியை கண்டவருக்கு அதை விட மனமில்லாதுப் போக,
“இரு முகிலா” என்றபடி தனது போனை எடுத்து கணவருக்கு அடித்தவர், விசயத்தை கூறி அவர்கள் வர தாமதமாகுமா? என கேட்டு போனை வைத்தவர்,
“கடையை அடைச்சிட்டு வந்துட்டு இருக்காங்களாம் முகிலு, நீ கிளம்பு.” என்றிட,
“இந்த நேரத்துல எதுக்கத்தை..” என அடுத்து வாய் திறந்த சுபாவை,
“போதும் சுபா, புள்ளை கிளம்புறப்போ, தடங்கல் மாதிரி பேசாத. இங்கன தானே அவன் போய்க்குவான்.” என அவளை அடக்கியவர்,
“நீயி கிளம்பு டா” என அவனை அரற்றிட,
அடுத்து அண்ணன், அப்பா வந்து எதுவும் கேட்டு விடும் முன் சென்றிட வேண்டும் என நினைத்தவன், அவர்கள் வருவதற்கு முன்பும் வண்டியை பறக்க விட்டிருந்தான்.
மகன் செல்வதை பார்த்து விட்டு உள்ளே வந்தவருக்கு, சுபாவின் முகச்சிணுக்கம் கண்ணில் பட, கண்டுக் கொள்ளாமல் போய் விட்டார்.
“இவளால என்ன எல்லாம் பண்ண வேண்டியிருக்கு, எத்தனை பேரை சமாளிக்க வேண்டியிருக்கு.” என அவளை வாயில் போட்டு மென்றவாரே தான் சென்றான் முகிலன்.
வீட்டில் இருப்பவர்களை அழைக்க சங்கோஜமடைந்தவன், மனையாளிற்கே அழைப்பு விடுத்தான்.
“சொல்லுங்க” தூக்க கலக்கத்தில் அவள் குரல் ஒலித்ததில் கடுப்புற்றவன்,
“ நீ தூங்குறதுக்குத்தான் என்னைய வர சொன்னியா டி!” என்றவனின் சீற்றத்தில் அடித்துப் பிடித்து எழுந்தவள்,
“என்ன? என்ன? புரியலை?”
“உனக்கு புரியாது தான், வந்து கதவை திற வருணா”
“ஹான்! என்னங்க?” இன்னும் தெளிவடையாமல் அவள் கேட்டிட,
“வருணாக்ஷி!” பல்லை கடித்துக் கொண்டு அவன் அதட்டியதில், ஓரே ஓட்டமாய் ஓடி வந்து வெளிக் கதவினை திறந்திருந்தாள்.
இவளை முறைத்த வண்ணம் வண்டியினை உள்ளே ஏற்றியவன், வண்டியின் மீதிருந்த கவரினை அவள் கைகளில் திணித்திருந்தான்.
“வந்துட்டிங்களா” ஆவலாக அவனை நோக்கியவள், அந்த கவரின் உள்ளே இருந்த ஐஸ்கீரிம் டப்பாக்களை கண்டு உள்ளம் துள்ளினாள்.
இவன் சென்ற வெளிக் கேட்டினை பூட்டி விட்டு வரும் வரை, அவளது நிலை மாறவில்லை.
“போதும், கனவு கண்டது! உள்ளே கூப்பிட்டு போற நினைப்பு இருக்கா இல்லையா?”
“அச்சோ! வாங்க, வாங்க” என்றபடி அவனை உள்ளே அழைத்து செல்ல,
இந்நேரத்தில் கேட்ட வண்டி சத்தத்தில் கிருஷ்ணா எழுந்து வந்திருந்தான்.
“வாங்க மாப்பி” என சிரிப்புடன் அவனை வரவேற்றவன், “வருணா அம்மாவ எழுப்புடா” என்க,
அவனிற்கு பதில் சிரிப்பை வழங்கியவர், “வேண்டாம் கிருஷ்ணா, அவுங்க தூங்கட்டும், தொந்தரவு பண்ண வேண்டாம். காலையில பேசிக்கிறேன்.”
“சரிங்க மாப்பிள்ளை, ஏதும் சாப்புடுறீங்களா, வருணா எதுவும் கேட்கலையா நீ?” என அவளை அண்ணன்காரன் கண்டன பார்வை பார்க்க,
“ஷ்ஷ் மறந்துட்டேன். மாவு இருக்கு தோசை ஊத்தட்டுங்களாங்க.” என்க,
“வேண்டாம் வருணா, சாப்பிட்டுட்டு தான் கிளம்புனேன்.”
“அப்போ தூங்குங்க மாப்பிள்ளை, காலையில பாக்கலாம். வருணா கூட்டிட்டுப் போ.” கிருஷ்ணா கூறியவன்,
“மறக்காம தண்ணிய எடுத்துட்டுப் போ வரு.” என்றபடி அவனறைக்கு சென்றிருந்தான்.
இவள் சென்ற தண்ணீர் எடுத்து வருவதற்குள் கட்டிலில் தலையணையை முதுகிற்கு வைத்து அமர்ந்திருந்தான் முகிலன்.
கதவை தாளிட்டு விட்டு, தண்ணீர் செம்பினையும், ஐஸ்கீரிமையும் மேஜையில் வைத்துவிட்டு வேகமாக அவனருகே நெருங்கி அமர்ந்தவள்,
“எனக்காகவா!’ கண்கள் மின்ன அவள் கேட்டிட, அந்த வெளிச்சத்தில் தாக்கப்பட்டவன்,
“மீஹூம் இல்லை எனக்காக!” என்றபடி எட்டி ஐஸ்கீரிமினை எடுத்திருந்தான்.
“பொய்!” அவள் சிணுங்க,
“மெய்!” என்றவனின் குரலில் முகம் சுருக்கியவள்,
“நான் கூப்பிட்டதுக்காக தானே வந்திங்க.”
“ஆமா, வந்தேன் அதுக்காக உனக்காக வந்தேன்னு அர்த்தம் இல்லையே”
“அய்யோ! யாருக்காகவும் வர வேண்டாம், விட்டா பைத்தியம் பிடிக்க வச்சிடுவிங்க” என்றவளின் முகம் உர்ரென மாறியிருந்தது.
சிரிப்புடன் ஒரு ஸ்பூன் ஐஸ்கீரிமை எடுத்து அவளிடம் நீட்ட, அதனை கண்டு அவள் முகம் பிராகாசித்தாலும், அவள் முகபாவானை மாற்றமால் இருக்க,
“உனக்காக வந்தா என்ன? இல்லை எனக்காக வந்தா என்ன? நீயும் நானும் வேறவேறாய என்ன?” என்றவனின் பேச்சில் கரைந்தவள், அவன் முகம் பார்க்க,
“ஆனா உண்மையிலயே எனக்காக தான் வந்தேன். என்னால இந்த பொண்ணை விட்டு இருக்க முடியலை. நீ சொன்ன ஒரு வார்த்தைய பிடிச்சிட்டு ஓடி வந்துட்டேன்.” என்றவன் அளவிற்கு ஐஸ்கிரீமை ஊட்டிட,
“பார்றா, அன்னைக்கு கேட்டும் ஊட்டி விடல, இன்னைக்கு கேட்காமயே ஊட்டுறீங்க.” என்றபடி அவள் அதனை வாங்கி கொள்ள,
“ம்ம் அது அப்புடிதான், நம்ம ஹஸ்பெண்ட் வொய்ப்புன்னு எல்லா இடத்துலயும் காட்டிக்கனும்னு அவசியம் இல்லை, சில மொமண்ட்ஸ் எல்லாம் நமக்கே நமக்கானது. அதை எல்லாருக்கும் கடைப் பரப்பனுமா என்ன?” என்றவனின் பேச்சில் இருந்த நியாயத்தில் வாய் மூடிக் கொண்டாள் அவனது மனையாள்.
முழுவதுமாக அதனை உண்டு முடித்து விட்டு, அவளை தனது கைவளைவில் வைத்துக் கொண்டு அவன் கண்மூடியிருக்க,
“ஆமா, அத்தைக்கிட்ட என்ன சொல்லிட்டு வந்தீங்க?” என அவள் கேட்டதும், வீட்டில் அவன் திணறி மாட்டிக் கொண்டது ஞாபகம் வர,
“எல்லாம் உன்னால தான்டி” என்றபடி அவள் கன்னத்தினை வலிக்க கிள்ளியவன், வீட்டில் நடந்தவற்றை கூறிட,
“ஹா ஹா அத்தை செம்ம இல்லை, அவுங்ககிட்ட பேச்சை மாத்துனீங்கன்னா விடுவாங்களா” என்றவள், அவன்
கை வளைவில் இருந்தவாறே விடாது நகைத்திட,
சிறு முறைப்புடன் அவளை பார்த்தவனின் முறைப்பு மறைந்து அங்கே உல்லாசம் குடிக் கொள்ள, அவளது சிரிக்கும் இதழ்களில் தனது இதழினை நிறைத்து அவளது சிரிப்பினை நிறுத்தியிருந்தான்.