Sowndharyacheliyan
Writer
வான்மழை 20:
அடுத்த நாள் விருந்து தடபுடலாக நடைபெற்றது கார்முகிலனிற்கும் வருணாவிற்கும். கிருஷ்ணா அதிகாலையே, தாயையும் தந்தையையும் எழுப்பி முகிலன் வந்துவிட்டு விபரத்தினை சொல்லியிருக்க, அப்போதிருந்தே வீடு பரபரப்புக்குள்ளானது.
காலை ஆட்டுக்கால் சூப்பில் ஆரம்பித்தது, அடுத்தடுத்து உண்ண கொடுத்து அவனை திணறிடித்திருந்தனர். போதக்குறைக்கு குருசாமியின் உடன்பிறப்புகளும் வந்து விட கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்!
இதில் இளசுகள் வேறு ஒருபுறம், அவர்கள் இவனை நொடிக்கூட தனியே விடாது சுற்றி வளைத்திருக்க, அவர்களது சளைக்காது பேச்சில் அயர்ந்து தான் போனான். அதில் முக்கிய நிகழ்வு அக்கூட்டத்தல வழிநடத்தும் தலைவிகள் அவளது மனையாளும், கெளரியும் என கிருஷ்ணா சொல்லக் கேட்டு உள்ளுக்குள் கொஞ்சம் திடுக்கிட்டுத் தான் போனான்.
அவனும் நன்றாக கலகலப்பாக பேசுவான் தான். ஆனால் இப்படி இடைவெளியே இல்லாத பேச்சு அவனிற்கு பழக்கம் இல்லை. நண்டு, சிண்டு முதற் கொண்டு அவளது மனையாளின் பின்னே சுற்றிக் கொண்டிருந்ததை கண்டு சிரிப்புதான் வந்தது அவனிற்கு.
எதாவது ஒரு விசயம் கிடைத்து கொண்டிருந்தது அவர்கள் பேசுவதற்கு. மாலை ஆனதும் அந்த கூட்டம் எல்லாம் ஃப்ளான் செய்து இவனை அலேக்காக தியேட்டருக்கு தூக்கி சென்றிருந்தனர். அந்த ப்ளானை போட்டுக் கொடுத்தது அவனது மனைவி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தியேட்டரில் இரண்டு வரிசைகளை இவர்களே ஆக்ரமித்திருந்தனர். இதை எல்லாம் காண்கையில் முகிலனுக்கு சிரிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது எனில் சிறு கடுப்பும் உண்டானது அவனது மனைவியாள்.
காலையில் இருந்து அவனது அருகிலே வராமல் இருந்தவளின் மீது சிறு கடுப்பும் இருக்கத்தான் செய்தது. இன்னொன்று அவள் செய்த சேட்டைகளில் எல்லாம், இதுவே தனியாக இருந்திருந்தால் தலையிலேயே கொட்டியிருப்பான். அந்த அளவு, அவனை ஏகத்திற்கும் டென்ஷனாக்கியது அவளது சிறுபிள்ளை சேட்டைகள்.
தியேட்டரே கலவரமானது இவர்களின் சேட்டையால். ஒரு வழியாக அனைத்தையும் சமாளித்து படம் பார்த்து முடிப்பதற்குள் விழி பிதுங்கிப் போயிற்று அவனுக்கு.
அனைத்தும் முடிய, அந்த கூட்டத்தினை வீடு வந்து சேர்ப்பதற்குள் ஒரு வழியாகிப் போனான் தான் என சொல்ல வேண்டும். பின் இரவு உணவினை முடித்து விட்டு, முகிலனும் வருணாவும் கிளம்ப, மீண்டும் ஒரு பாசமழைப் போராட்டம் தான் அங்கே.
கண்ணில் நீரை வைத்துக் கொண்டு, அனைவரையும் அழ வைத்துக் கொண்டிருந்தவளை, முறைத்து வைத்தான் முகிலன்.
“வருணாக்ஷி!” என சிறு முறைப்புடன் அவன் அதட்டிய பிறகே, அழுகையை நிப்பாட்டி இருந்தாள். வழக்கம் போல் வீட்டுப் பெண்கள், வருணாவிற்கு அறிவுரை மழையை பொழிய, ஆண்களே முகிலனிடம் தங்களது வீட்டுப் பொண்ணை பார்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டனர்.
ஒருவழியாக மனம் வந்து அவர்கள் இருவருக்கும் விடை கொடுத்தனர், வருணாவின் வீட்டார்கள் அதுவும் அடுத்த வாரம் இதே போல் வர வேண்டும் என்ற கோரிக்கையுடன்.
*************
கொண்டாட்களும், கேளிக்கைகளும், கல்யாணகலை எல்லாம் முடிந்து அவரவர் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தனர்.
இதில் கடந்தும் போன இரண்டு மாதமும் முகிலனிற்கும் வருணாவிற்கும் வசந்த காலமாகவே மட்டும் சென்றதா? என்றால் இல்லை என்ற பதில்.
வானிலை மாற்றம் போல் அவர்களே வாழ்விலும் அனைத்தும் வந்துப் போயின. என்ன ஒன்று யாராவது ஒருவர் அதில் இறங்கி வந்து சண்டையை முடித்திருந்தனர்.
இந்த இரண்டு மாதக் காலங்களில்,புகுந்த வீட்டாள்களை ஒரளவு கணித்திருந்தாள் வருணா. அதில் கணிப்பிற்கு அப்பாற்பட்டவள் என்றால் அது சுபா மட்டுமே.
அவளது குணநலன்கள் இதுவரை பிடிபடவில்லை வருணாவிற்கு. சில நேரம் நன்றாக பேசினால், பல நாட்கள் ஒதுங்கிப் போனாள் சுபா.
இடைப்பட்ட காலங்களில் இருவருக்கும் உரசல் வராமல் எல்லாம் இல்லை.
சின்ன சின்ன விசயங்களில் கூட இருவருக்கும் கருத்து வேறுபாடு நிறைய வந்தது.பல முறை வருணா விட்டுக் கொடுத்து செல்பவள், சில நேரங்களில் அவளும் மல்லுக்கு நின்றிருக்கிறாள்.
இத்தனை நாட்களில் சுபாவை பற்றிய அவளது கணிப்பு, எதிலும் தனது முதன்மையை, முக்கியத்தை, அதிகாரத்தை நிலைநாட்டியப்படியே இருக்கிறாள் என்பதே! அந்த அதிகராமும், முதன்மை நிலையும் திமிரினால், அகம்பாவத்தால் வந்தது என்றால் நிச்சயம் இல்லை! என்ற உண்மையும் வருணாவிற்கு புரிந்தது.
வேறு என்ன? என்ற நிலவரம் வருணாவிற்கு சரியாக பிடிபடவில்லை.
எனவே, சுபாவை அதிகம் நோண்டாமல் அவள் அவளது எல்லையிலயே நின்றுக் கொண்டாள்.
அன்றைய காலை பரபரப்புடன் விடிந்தது வருணாவிற்கு. இன்று அவள் வேலைக்கு செல்லவிருக்கும் முதல் நாள். இவ்வளவு சீக்கிரத்திலே அவள் செல்வதற்கு முழுக் காரணம் முகிலன் மட்டுமே. வீட்டு வேலைகளை செய்துக் கொண்டு, மாமியாருடன் சேர்ந்து கதையடித்துக் கொண்டிருந்தவளை அதட்டி, அருகில் இருக்கும் தனியார் பள்ளிகளில் நேர்காணல் செய்ய வைத்திருந்தான்.
இத்தனை சீக்கரமே ஏன்? என கேட்ட வருணாவை ஒரே முறைப்பில் அடக்கியவன், அவளிற்கு சப்போர்ட்டிற்கு வந்த அன்னையையும் கடிய தவறவில்லை.
“உனக்கு துணைக்கு ஆள் சேர்க்குறியா நீயி?” என தனிமையில் அவளை குட்டவும் தவறவில்லை அவன்.
இவனின் கல்லூரியிலயே, அவளது படிப்பிற்கான வேலை காலியாக இருந்தது, அதை சொன்ன பொழுது, முடியவே முடியாது என ஒற்றைக் காலில் நின்று மறுத்திருந்தாள் வருணா.
“வீட்டுலயே உங்க வாத்தி மோஃட்டை என்னால் தாங்க முடியலை, இதுல உங்க காலேஜ்லயே, உங்களுக்கு பக்கத்துலயே! அவ்வாஆஆ என்னால முடியாதுப்பா.” என்றவளின் காரணத்தில் அவனது முகம் அஷ்டக்கோணலாயிற்று.
பிடிவதாமாக தனியார் பள்ளி ஒன்றில் நேர்காணல் செய்து, தேர்வு ஆகியிருந்தாள். வீட்டிலிருந்த சிறிது தொலைவு என்பதால், அவளின் ஸ்கூட்டியை கொண்டு வந்து விட்டிருந்தான் கிருஷ்ணா.
இன்று முதல் நாள் என்பதால் சிறு படபடப்புடனே இருந்தாள் வருணா. அவள் கிளம்புவதற்குள் ரூமையே இரண்டாக்கி, முகிலனை ஏகத்திற்கும் கத்த வைத்து விட்டே தயாராகியிருந்தாள்.
“வருணாக்ஷி! சர்ட்டிபிகேட்ஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டியா?” என்றவனின் கேள்விக்கு,
“ம்ம்ம் வச்சிட்டேன். இன்னைக்கு ஒரு நாள் என்னை கொண்டுப் போய் விடுறீங்களா” என்றவளின் குரலில் இருந்த பதட்டம் அவனை திரும்பி பார்க்க வைத்தது.
தலை சீவிக் கொண்டிருந்தவன், அவளது குரலில், அவளை அழைத்தான்.
“இங்க வா” என்றவனின் அழைப்பில் மறுக்காது அவனருகே சென்றாள்.
“என்னாச்சு வருக்கு, பயமா இருக்கா என்ன? நம்ப முடியலையே?” கேலிக் குரலில் அவன் கேட்க,
“பயமா இல்லை, ஆனா கொஞ்சம் பதட்டமான இருக்கு, அங்க ஆளுங்க எல்லாம் எப்புடி பழகுவாங்கன்னு இருக்கு.”
“அப்போ, என் காலேஜ்ஜீக்கு வா!”
“எதுக்கு? அங்க வந்தும் உங்க கையால கொட்டு வாங்குறதுக்கா? இங்கயாச்சும் மத்தவங்க நினைச்சு தான் பதட்டம். அங்க வந்தா உங்களை பாத்தே என் பிபி எகிறிடும். அதோடு வீட்டுல உங்களை பாக்குறது பத்தாதா, அங்கயும் வந்து காலையில இருந்து சாயந்திரம் வரைக்கும் உங்களையே எல்லாம் பாக்க முடியாது.” என கிண்டல் குரலில் அவள் முடிக்க,
அவளை முறைத்தவன்,
“ஏன் பார்த்தா என்னவாம்?”
“அதெல்லாம் முடியாது, முடியாது..!” என்றவளின் அடுத்த வார்த்தை அவனிடம் சிக்கியிருந்தது.
நிதானமாய் அவளை விட்டு விலகியவன்,
“என் முகத்தை பாக்க முடியாத வருடாம்மா!” என குழைந்தவனின் குரலில் அவளிற்கு கன்னங்கள் சூடாக,
அவனது மார்பிலே முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அவளை தனக்குள் புதைத்துக் கொண்டவன், சில நொடிகள் கழிய
“இன்னைக்கு ஸ்கூலுக்கு போக வேண்டாமா நீயி?” என மீண்டும் கிசுகிசுக்க,
அதில் சுயம் பெற்றவள்,
“ச்சூ , தள்ளிப் போங்க, கிளம்புறப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என அவனை தள்ளி விட்டவள்,
“என்னிய மயக்குறதே வாத்திக்கு வேலையாப் போச்சு” என முணுமுணுத்தாவாரே அவள் கீழிறங்கியிருக்க, அவள் பின்னே அடக்கப்பட்ட சிரிப்புடன் சென்றான் அவன்.
“அம்மா, டிபன் ரெடியா” என்றபடி முகிலன் வர,
“ஆச்சு, ஆச்சு வாங்க ரெண்டு பேரும் சீக்கிரம்.” என்றபடி, உணவினை பேச்சி எடுத்து வர,
“அத்தை அவருக்கு வைங்க, எங்க ரெண்டும் பேருக்கும் மதியத்துக்கு சாப்பாடு எடுத்து வச்சிட்டு வர்றேன்.” என்றபடி வருணா உள்நுழைய போக,
“இங்க வா வருணா நீயி, உள்ளதான் சுபா இருக்கா அவளை எடுத்து வைக்க சொல்றேன். உனக்கு நேரமாகிடப்போகுது வா, வந்து உட்காரு.” அவளை அமரவைத்து உணவினை பரிமாறி விட, இதனை கேட்டுக் கொண்டிருந்த சுபாவிற்கு ஆத்திரம் கூடியது.
‘இவளிற்கு நான் சேவை செய்வதா?’ சுபாவின் முகம் கோபத்தில் கொதிக்க செய்தது.
“சுபா எடுத்து வச்சிட்டியா?”
“ஹான் அத்தை, இதோ” கோபத்தை அடக்கியவள், முகத்தில் சிரிப்பை பூசிக் கொண்டு வெளியே வந்தாள்.
“இதோ அத்தை ரெண்டு பேருக்கும் பேக் பண்ணிட்டேன்.” இருவரது லன்ஜ் பேக்கினையும் வைத்தபடி அவள் பேச,
“தாங்கஸ் அக்கா நாளையில இருந்து நானே பண்ணிடுவேன்.” உண்டு முடித்து எழுந்தபடி வருணா பேச,
“இதுல என்ன கஷ்டம் வருணா, நான் என்ன உன்னை மாதிரி வேலைக்கா போறேன். வீட்டுல சும்மாதானே இருக்கேன். இதைக் கூட செய்ய மாட்டேனா என்ன?” சிரிப்புடன் வார்த்தைகளில் மெல்லிய கோபத்தை தடவி அவள் பேசிட,
மற்ற இருவருக்கும் அது புரியவில்லை என்றாலும், வருணாவிற்கு சட்டென பிடிபட்டுவிட்டது, சுபாவின் பேச்சின் அர்த்தம். இருந்தாலும் அவள் பேசிய விதத்தில் அதை விகல்பமாக எடுக்க முடியவில்லை என்றாலும்,உள்ளே உறுத்தியது வருணாவிற்கு.
“அதுக்கென்னக்கா நீங்களும் தாரளமாக வேலைக்கு போங்க, யாராவது வேண்டாம்னு சொல்லிடுவாங்களா என்ன?” என சிரித்தப்படி அவள் கூறிட,
‘என்னால எல்லாம் வேலைக்கு போக முடியாதுன்னு நக்கல் பண்றா’ என அதையும் தவறாகவோ அர்த்தம் புரிந்துக் கொண்டாள் சுபா.
அங்கிருந்த சுபா ,பேச்சியிடம் சொல்லிக் கொண்டு வருணா கிளம்பிய நேரம், மகாலிங்கமும், பரணியும் காலை உணவிற்கு வந்து விட, அவர்களிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள்.
அவள் கேட்டதிற்கிணங்க, முகிலன் தான் அவளை பள்ளியில் விட்டிருந்தான். வருணா பயந்தது போல் அல்லாமல் அன்றைய தினம் பள்ளியில் எல்லாம் நல்லதாகவே சென்றது அவளிற்கு.
அங்கிருந்தவர்களும் வருணாவிடம் நன்றாகவே பழக, அன்றைய நாள் மட்டுமல்லது, அதற்கடுத்த வந்த வாரங்களும் அவளிற்கு அப்பள்ளி
பழகிவிட, எந்த வித இடைஞ்சல்களும் இன்றி பள்ளிக்கு சென்று வர ஆரம்பித்திருந்தாள்.