kani suresh
Moderator
நிலா மேனகாவிடம் தன்னுடைய பெயரை கூறிய விதமே மேனகாவை உடல் சிலிர்க்க வைத்தது. அதேபோல் சிந்திக்கவும் வைத்தது.. சிலிர்க்க வைத்தது ஏன் என்று தெரியவில்லை ....
சிந்திக்கத் தூண்டிய விதம்.. நிலா என்ற பெயரை அவள் எங்கோ கேட்டு இருக்கிறாள்.எங்கு என்றுதான் அவளுக்கு புரியவில்லை .ஆகையால் சிந்தித்தாள்...
சிவாவுடன் வீட்டிற்கு சென்றுவிட்டாள் மேனகா.
சிவா அவளை வீட்டில் விட்டுவிட்டு அவனுடைய வேலையை பார்க்க சென்று விட்டான் ...
அதேபோல் நிலாவும் அவளுடைய வீட்டிற்கு சென்று விட்டாள்.
மறுநாள் காலையில் மேனகா பிறந்தநாளுக்காக சாமியை தரிசிக்க குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தாள்.சிவா வீட்டில், மேனகா , அவளின் அப்பா ,அம்மா, தாத்தா என ஐவர் மட்டுமே..
குடும்பத்துடன் முருகர் கோவிலுக்கு வந்திருந்தார்கள். அன்று வெள்ளிக்கிழமை என்பதால், முருகர் கோவில் உள்ளே உள்ள துர்க்கை அம்மனை தரிசிக்க நிலாவும் வந்திருந்தாள் அவளுடைய ஸ்கூட்டியில்.
நிலா அங்கு மேனகா, சிவா இருவரையும் எதிர்பார்க்கவில்லை. நிலா தான் முதலில் பார்த்தாள் ஸ்கூட்டியில் இருந்து இறங்கியவுடன்...
மேனகா சிவாவிடம் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டு வருவதைப் பார்த்தாள். மேனகா போட்டு இருந்த சுடிதார் நிலா விட்டுக்கொடுத்த சுடிதார் ..
நிலாவுக்கும் அந்த சுடிதார் ரொம்பவே பிடித்திருந்தது....
ஆனால் ,மேனகா பிறந்தநாள் என்று கேட்ட ஒரே காரணத்தால் தான் விட்டுக் கொடுத்தாள்..
ஒரு நொடி நின்று இருவரையும் பார்த்துவிட்டு, கோவிலுக்குள் செல்ல முயன்றாள். ஆனால்,ஏதோ ஒரு உந்துதலில் மேனகாவை நோக்கிச் சென்றாள் ....
மேனகா நிலாவை பார்த்தவள்.. "ஹாய் நிலா!" என்றாள் இதழ்களில் மென் புன்னகையுடன்..
"ஹாய்" என்றவள்.. "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!" என்றாள்..
அவளும்," தேங்க்ஸ்!" எனக் கூறி நிலாவை ஒரு நிமிடம் கட்டி அணைத்து விடுவித்தாள் ..
அப்போது அங்கு வந்த பெரியவர்கள்.. நிலாவை பார்த்து, "உன்னோட ஃப்ரெண்ட்டா மேனகா?" எனக் கேட்க.
"இல்ல மா.இவங்க என்ன விட பெரியவங்க..அப்புறம் எப்டி ப்ரெண்ட்!" என்றவள் புன்னகை மாறாமல், "ஆன, இனி இவங்க என்னோட ப்ரெண்ட் தான்.." என்க.
"ஆமாம்..நாங்க இனி ப்ரெண்ட்ஸ் தான்" என்றாள் நிலா சின்ன சிரிப்புடன்..
அனைவரும் ஒன்றும் புரியாமல்,கேள்வியாக இருவரையும் பார்க்க.
நேற்று துணி கடையில் நடந்ததை கூறினாள் .ஆனால்,அவள் சுடிதார் விட்டு கொடுத்ததை மட்டும் மறைத்து,நேற்று கடையில் பார்த்து பழக்கம் என மட்டும் கூறினாள்.
சிவா எதுவும் சொல்லவில்லை.. மேனகாவும் அவள் கூறுவதை அமைதியாக கேட்டவள்..அவள் கூறியதுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
இவ்வளவு நேரம் நிலா பேசுவதை அனைவரும் கேட்டு கொண்டு இருக்க..ஆனால்,சிவாவின் தாத்தா மட்டும் ரொம்ப நேரமாக நிலாவின் முகத்தையே உற்று நோக்கிய படி இருந்தார்.
அவரின் பார்வையை உணர்ந்த நிலா தான்.."என்ன தாத்தா ஏன் என்ன ரொம்ப நேரமா அப்படி பாக்குறீங்க?" என்றாள்.
அதுக்கு அவரோ,"ஒண்ணுமில்ல மா.."என்றவர் அமைதி ஆகிவிட்டார்.
ஆனால்,சிவாவின் அம்மா லட்சுமி தான்...' என்னாச்சு மாமாவுக்கு..அப்படி பாக்க மாட்டாரே..அதும் பார்த்திட்டு எதும் இல்லனு சொல்றாரு..அவர் நடவடிக்கை ஒன்னும் சரியில்லையே!' என எண்ணினார் மனதிற்குள் தான் வெளியே கேட்கவில்லை.
சிவாவின் அப்பா,மதியழகன்,அம்மா லட்சுமி, தாத்தா சிவலிங்கம்...பாட்டி சரோஜா அவர் இப்போது இல்லை
சிவலிங்கம் , சரோஜாவிற்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகன் ,ஒரு மகள் ..மகன் மதியழகன்
பின்னாளில் அவர்களது மகளைப் பற்றி நாம் பார்க்கலாம்...
மேனகா , நிலா இருவரும் பேசிக்கொண்டே சாமியே தரிசனம் செய்து விட்டு வந்தார்கள்.
சிறிது நேரத்தில் சிவாவிற்கு ஒரு ஃபோன் கால் வந்தது. சிவா வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு, " நீங்க கார்ல போங்க வீட்டுக்கு, எனக்கு ஜீப் வரும். நான் அதுல போயிக்கிறேன், எனக்கு வேலை இருக்கு" என்றவன் மேனகாவிடம் "குட்டிமா பார்த்து இரு. எனக்கு வேலை இருக்கு.." என கிளம்பி விட்டான்.
நிலா சிவாவையே பார்த்துக்கொண்டு இருந்தாள். ஆனால் அவன் பார்த்தும் பார்க்காதது போல் சென்று விட்டான்...
அவன் நகர்ந்தவுடன் மேனகா நிலாவிடம் ," நிலா உனக்கு அண்ணனை முன்னாடியே தெரியுமா ? நீ அவரை பார்க்குற பார்வையே ஒரு மாறி இருக்கு..ஆன, அவர் உன்ன கண்டுக்காம போறார் .அதனால தான் கேட்டேன்..தப்பா எடுத்துக்காத.."என்றாள்.
அவளோ,சிரித்துக்கொண்டே
சிவாவை பார்த்தது முதல் இன்று வரை நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூற...
அவளோ,வாயை பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள்..
இறுதியாக.."எனக்கு உங்க அண்ணனை பார்த்தா ஏதோ தோணுது மேனகா..ஆன என்னன்னு சரியா சொல்ல தெரியல."என்றாள் தன் மனதில் தோன்றியதையும் மறைக்காமல்,
மேனகா சிவாவிற்கு தங்கை என்பதைத் தாண்டி, அவளைப் பார்க்கும்போது, ஒரு நட்பு உணர்வு தோன்ற மனதில் உள்ளதை அப்படியே கூறிவிட்டாள்.
ஆனால் நிலா கூறியதில், மேனகா தான் ஒரு நிமிடம் ஜெர்க் ஆகி, "அம்மா தாயே! தயவு செஞ்சு என் அண்ணனை மட்டும் லவ் பண்ணி தொலைச்சிடாதே.."என்றாள் சிரிப்புடன்..
"ஏனாம்?" என்றாள் இவளும் புன்னகையுடன்..
"அவருக்கு லவ்னாலே சுத்தமா பிடிக்காது, எங்க அத்தை லவ் மேரேஜ் தான் பண்ணிக்கிட்டாங்க.. அவங்க லவ் பண்ணது வீட்ல இருக்கவங்களுக்கு புடிக்கல.. இப்போ வரைக்கும் எங்க அத்தை கூட எங்களுக்கு டச் கிடையாது, அவங்க எங்க இருக்காங்க, எப்படி இருப்பாங்கன்னு கூட எனக்கு தெரியாது.. எங்க அத்தை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு போன சோகத்திலேயே எங்க பாட்டிக்கு உடம்பு முடியாம போய், கொஞ்ச நாள் படுகையில் இருந்து, எங்க பாட்டி இறந்துட்டாங்களாம்.
அதனால எங்க அண்ணன் அத்தை மேல ரொம்ப கோவமா இருக்காரு. எங்க அத்தையோட பேரை கேட்டாலே ரொம்ப கோபப்படுவார். அதனாலேயே அவருக்கு லவ் என்ற வார்த்தையை கேட்டாலே பிடிக்காது. இதுல எங்கிருந்து அவர் லவ் மேரேஜ் பண்ணுவாரு.."
என்றாள் மேனகா
"ஓ!" என மனதில் நினைத்துக் கொண்டு," சரி நீங்க எல்லாரும் உங்க அத்தை கிட்ட பேசுவீங்களா?"
"ப்ச்! இல்ல நிலா..யாரும் பேச மாட்டோம்.. அவங்க எங்க இருக்காங்கன்னு எங்களுக்கு தெரியாது இன்னும் சொல்லப்போனால் நான் அவங்களை இதுவரை பார்த்ததே இல்லை.. ஆனா ,அண்ணா பார்த்து இருக்கிறார். சின்ன வயசுல..அவருக்கு 2 வயசு வர அத்தை எங்க வீட்ல தான் இருந்தாங்க.. அதுக்கு அப்புறம் தான் லவ் பண்ணவங்களை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டாங்க.
அத்தை ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிட்டதால தான் பாட்டி செத்துட்டாங்கன்னு யாரோ சொல்லி, அது அண்ணனோட மனசுல ஆழமா பதிஞ்சுடுச்சு இப்போ வரை. அதனாலேயே அண்ணனுக்கு லவ் என்ற வார்த்தையே பிடிக்காது.."
நிலா எதும் பேசமால், அவள் கூறியதை யோசித்துக் கொண்டு இருந்தாள்..
அப்போது அங்கு சிவலிங்கம் தாத்தா வந்து நின்றார்..வந்தவர் நிலாவின் தலையை வருட.
அவளுக்கு ஒன்றும் புரியாமல் பேந்த பேந்த முழித்தபடி நின்றாள்.
அப்போது ரொம்ப நேரமாக தன் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தார் .இப்பொழுது வந்து தலையை வருடுகிறார் என்று யோசனையில் ஆழ்ந்திருக்க.
"உன்னோட அம்மா பேரு என்னமா?" என கேட்டார்
எதற்கு கேட்கிறார் என்று புரியவில்லை என்றாலும், "அமுதவல்லி தாத்தா ஏன் கேக்குறீங்க?"என்றாள்.
அவள் பெயர் சொன்ன அடுத்த நொடி ,சிவலிங்கம் மயங்கி கீழே விழுந்தார்.
தாத்தாவின் அருகில் நின்று கொண்டிருந்த மதியழகனுக்கு வேர்த்து கொட்டியது. லட்சுமிக்கு கை கால் உதற ஆரம்பித்தது.
மேனகாவிற்கு ஒன்றும் புரியவில்லை, தாத்தாவை பார்ப்பதில் குறியாக இருந்தாள். அப்போது நிலா தான் வேகமாக தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து தாத்தாவின் முகத்தில் அடித்து அவரை எழுப்பி விட்டாள்...
சிவலிங்கம் அவளை தன் அருகில் உட்கார வைத்து, அவளது தலையை வாஞ்சனையாக தடவி கொடுத்தார்.
அவளுக்கு எதற்காக தன் தாயின் பெயர் கேட்டார், பெயர் கூறிய அடுத்த நொடி மயங்கி விழுந்தார் என்று புரியாமல் ,"எதுக்கு தாத்தா அம்மாவோட பேர் கேட்டீங்க ?கேட்டவுடனே மயங்கி விழுந்துட்டீங்க என்ன ஆச்சு?"என கேள்வி எழுப்பினாள்.
"உன்கிட்ட நான் ஒரு விஷயம் பேசணும் மா.ஆனா, அது என் பேரனுக்கு தெரிய கூடாது " என்று கேட்டுக்கொண்டார் சிவலிங்கம்.
"சொல்லுங்க தாத்தா?"என்க.
"உன்னோட அம்மா தான் என்னோட பொண்ணு, என் பையன் மதியழகன் உடைய தங்கச்சி, என் பேரன் சிவாவோட அத்தை.
சிவா தான் இப்போ வர நாங்க அமுதவல்லியை பார்க்க கூடாது பேசக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கான். அது மட்டும் இல்லாம இப்போ சிவா காதல் என்ற வார்த்தையை வெறுக்கிறதுக்கு முக்கிய காரணமும் என் பொண்ணு அமுதவல்லி தான்."எனக் கூற,
நிலாவுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் உணர்ந்தாள்.
ஒரு சில நொடிக்கு பிறகு, தெளிவு பெற்று தனது அம்மா வள்ளிக்கு அழைத்தாள்.
காலை வேலை என்பதால் வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தார். கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு போன மகள் போன் செய்யவும் யோசனையுடன், போன் எடுத்தவர். "சொல்லு குட்டிமா?" என்க.
நிலா எடுத்த எடுப்பில்," அம்மா நம்ம எப்பவும் வர கோவில் இருக்குல்ல, அங்க நீ ,அப்பா அண்ணனை கூட்டிட்டு மூணு பேரும் வாங்க ,சீக்கிரம் !"எனக் கூறி வைத்து விட்டாள்.
அவர்கள் வீட்டிற்கு அருகில் தான் இந்த கோவில் இருக்கிறது. அடிக்கடி வரும் கோவிலிலும் என்பதால், பெரிதாக அவள் கோவிலை பற்றி எந்த விளக்கமும் தரவில்லை.
அவளுடைய அப்பா, அம்மா , அண்ணன் மூவரும் என்னமோ ஏதோ என்று அடித்து பிடித்து ஓடி வந்தார்கள்.
வேகமாக கோவிலுக்குள் நுழைந்த வள்ளியின் கண்ணில் முதலில் பட்டது என்னவோ, நிலாவின் அருகில் இருந்த தன் குடும்பத்தினர் தான்..
அன்பழகனும் தனது மனைவியின் குடும்பத்தினரை பார்த்தவுடன் அதிர்ச்சிக்கு உள்ளானார். உதயாவிற்கு பெரிதாக நினைவில்லை என்றாலும், சிறு வயதில் பார்த்திருக்கிறான்.
'இவங்களை எல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?' என்று யோசனையில் மூழ்கி இருந்தான்.
மகளைப் பார்த்த சிவலிங்கம் தான், மகள் வள்ளியின் அருகில் சென்று அவரின் தலையை வாஞ்சனையாக தடவி கொடுத்து, கையைப் பிடித்து நெற்றியில் வைத்த படி கண்ணீர் உகந்தார்.
மேனகா, உதயா இருவருக்கும் ,என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை, விளங்காத பார்வையுடன் நின்றனர்.
நடப்பதை லட்சுமியும் , அன்பழகனும் பார்வையாளராக பார்த்துக் கொண்டு நின்றனர்.
மதியழகன் தன் தங்கையை நேரில் பார்த்த, சிறு அதிர்ச்சியில் இருந்தவர் ,நினைவு பெற்று வள்ளியை ஆரத்தழுவினார்.
ஆனால் இதில் சிறிது கூட உணர்ச்சி இல்லாமல் இருந்தது அமுதவல்லி தான், எதையும் உணரும் நிலையில் இல்லை. அவர் மூளை உணர்த்தியது ஒன்றே ஒன்றுதான்.. வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து விட்டேன் என்று வருடங்களாக பேசாமல் இருந்தவர்கள். அவர் தன் காதலை வீட்டில் உள்ளவர்களிடம் கூற தான் செய்தார். இப்படி என் உடன் கல்லூரியில் வேலை செய்யும் அன்பழகன் என்பவரை விரும்புவதாக, ஆனால், அவர் எவ்வளவு கூறியும் தாய் ,தந்தை அண்ணன் மூவரும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அதனால் தான், இறுதியில் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டார்.
அன்பழகனுக்கு பெற்றவர்கள் என்று யாரும் கிடையாது. சொந்தபந்தம் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு யாரும் இல்லை. அதனால்தான் வள்ளியின் தாய், தந்தை, அண்ணன் மூவரும் இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
உடன் பிறந்தவராக, பெற்றவர்களாக தன் மகள் குடும்பமாக வாழ ஆசைப்பட.. தனிக்கட்டையாக இருக்கும் அன்பழகனுக்கு மணமுடித்து வைக்க விருப்பமில்லை. மற்றபடி அன்பழகனை வேண்டாம் என்று கூறுவதற்கு வேறு எந்த தடையும் இல்லை.
அவர் ஓடிப்போய் திருமணமும் செய்து கொள்ள ,பேச்சுவார்த்தை முற்றிலுமாக நின்று இருந்தது. இறுதியாக தாய் சரோஜா படுகையில் இருக்கும் போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை கேள்விப்பட்டு பார்க்க வந்தார் வள்ளி. அப்போது அண்ணனும், தந்தையும் அவரைப் பார்க்க அனுமதிக்கவில்லை. தாய் உடல்நிலை சரியில்லாத நிலையில் இருக்கும் போது கூட தன்னை அனுமதிக்காமல் இருப்பதால் பிறந்த விட்டு உறவு என்பது தனக்கு இல்லை என்று அங்கிருந்து வந்துவிட்டார்.
அப்போது சிவாவுக்கு இரண்டரை வயது இருக்கும். உதயாவிற்கு ஒரு வயது இருக்கும். மேனகா ,நிலா இருவரும் அப்போது பிறக்கவில்லை.
ரொம்ப நேரமாக வள்ளி அழுகையில் கரைந்தபடி நின்றார். அன்பழகன் தான் அவரை தேற்றி அனைவரிடமும் பேச கூறினார்.
அப்பொழுதும் வள்ளி மௌனமாக இருக்க, நிலா தான் தாயின் கையைப் பிடித்து உலுக்கியவள், அவரை நேருக்கு நேராக பார்த்து "இன்னும் எத்தனை நாளைக்கு பேசாம இருக்க போற, உன்னோட குடும்பம் தானே! உன்னை பெத்தவங்க ,கூட பொறந்தவங்க தானே பேசுமா!" என்றாள்..
"ஓ! என்னோட குடும்பமா ?என்ன பெத்தவங்களா ?கூட பொறந்தவங்களா ?அது இப்போ தான் அவங்க கண்ணுக்கு தெரியிறனா? இவ்வளவு நாளா இப்படி ஒருத்தி இருக்கிறது அவங்க கண்ணுக்கு தெரியலையோ?" என்றார் விரக்தியாக..
"அம்மா என்னம்மா இப்படி பேசுற?"
"என்ன வேணாம்னு சொன்னவங்க எனக்கும் வேணாம் டி.."
அன்பழகன் தான் ஏதேதோ கூறி பேச வைத்தார்.
"அப்பா இவரு அனாதையா இருக்காரு அதனால தான் இவருக்கு என்ன கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு சொன்னீங்க.. அவருக்குன்னு ஒரு குடும்பம் இல்ல, அதனால கல்யாணம் பண்ணி தர மாட்டேன்னு சொன்ன, உங்களால நம்ப குடும்பத்துல அவரை ஒரு ஆளா நினைச்சு பார்க்கணும்னு உங்க யாருக்கும் தோணல இல்லையா? அப்படி நினைச்சு நீங்க என்ன அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சிருந்தா அவரும் நம்மளோட ஒரே குடும்பமா வாழ்ந்திருப்பாரு இல்ல? ஆனா இத எதையுமே நீங்க செய்யாம, இப்ப வந்து பேசுனா எப்படி பேச முடியும்?"
லட்சுமி தான்," வள்ளி எங்கள மன்னிச்சிடு! அன்னைக்கு இருந்த சூழ்நிலை எங்களால பேச முடியல.
அத்தை தான் அவங்க இறக்கும் தருவாயில் இருக்கும் போது, நீ அவங்கள பார்க்க கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டாங்க. அதனாலதான் உன்னை அவங்க இறுதி சடங்குல கூட கலந்துக்க விடாம இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். இருந்தாலும் நாங்க பண்ணது தப்பு தான். எங்களை மன்னிச்சிரு, உனக்கே உன்னோட அப்பாவும் அண்ணனும் உன் மேல எந்த அளவுக்கு உயிரையே வச்சிருக்காங்கன்னு தெரியும். இப்போ வரைக்கும் அவங்களுக்கு நீனா உயிர் தான்.."
"ஓ ! இப்ப வர என் மேல அன்பு வச்சிருக்கவங்க தான் என்னை தேடி வரவே இல்லையோ?"
"அது.. "என்று ஒரு சில நொடி தடுமாறியவர்.. "இப்ப வர உன்னை மாமாவும் சரி ,அவரும் சரி தேடி வராதது காரணம். நீ தூக்கி வளர்த்த உன்னுடைய மருமகன் தான்!"
"என்ன ?என்னோட மருமகனால நீங்க என்ன தேடி வரலையா? ஏனாம்?"
"அத்தையை போலவே சிவாவும் இருக்கானே வள்ளி நாங்க என்ன பண்ண? அதனாலதான் இப்ப வர அவரும் ,மாமாவும் உன்ன பாக்க வரல, உன்னை தேடவும் இல்லை. எங்கிருந்தாலும் நீ நல்லா இருப்பேன்னு நம்பிக்கை எங்களுக்கு இருந்துச்சு. அதுக்கு காரணமும் இருக்கு. அன்பழகன் அண்ணன பத்தி நீ வீட்ல பேசி ஒத்துக்காம அதுக்கப்புறம் நீ அவரை கல்யாணம் பண்ணிட்டு போனதுக்கு அப்புறம் ,உன்ன பத்தி விசாரிக்க செஞ்சோம், நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு போனவரு எப்படிப்பட்டவருணும், விசாரிக்க செஞ்சோம். கல்யாணம் பண்ணிட்டு போனதுக்கு அப்புறம் அவரோட எப்படி நீ வாழுற என்பதையும் பார்க்க செஞ்சோம். கண்குளிர அவர் உன்னை நல்லா வச்சுக்கறதை பார்த்த பிறகு தான். அவர் உன்னைத் தேடி வரல.. இப்போ உன்னை தேடி வராமல் இருப்பதற்கு காரணம் சிவா தான்!"
இவ்வளவு நேரம் லஷ்மி கூறியதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த நிலா "அவரால எதனால நீங்க எங்க அம்மாவ தேடி வரல? அதுக்கு காரணம் என்ன?"
லக்ஷ்மி பதில் கூற முடியாமல், திணறினார்.