Manjam 29
தன் மனதில் உள்ள பாரத்தை மனதிற்கு பிடித்த நிரஞ்சனிடம் பகிர்ந்து கொண்டதில் மனம் லேசான உணர்வுடன் அதி இருந்தாள். மதியம் லன்ச் இருவரும் சேர்ந்து சமைத்தார்கள்.. படிக்கும் காலத்தில் வீட்டில் நிலைமை சரியில்லை என்றால் நீரு அதி வீட்டுக்கு வந்து விடுவான். வித்யா தன் பெண், நீரு இருவருக்கும் ஏதாவது சமைக்க கற்று தருவாள். இருவரும் விளையாட்டுதனமாய் கற்ற நாட்கள் மீண்டும் நினைவடுக்குகளை மீட்ட அப்படி ஒரு சந்தோஷம் மனதில்.
இருவரும் சேர்ந்தே மதிய உணவு சாப்பிட்டு முடித்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அடுக்களை சிங்கிள் இருந்த பாத்திரங்களை அதிதி கழுவி வைக்க, அவற்றை நன்றாக உலர்ந்த துணி கொண்டு துடைத்து அதன் இடங்களில் அடுக்கி வைத்தான் நிரஞ்சன். இது போன்ற பழக்கங்கள் எல்லாம் வித்யா பழக்கி வைத்தது தான். இன்றுவரை அவன் அந்தப் பழக்கங்கள் எதையுமே விடவில்லை. இருவருக்குள்ளும் ஏதோ பேச்சு சிரிப்பு என்று நேரம் போனதே தெரியவில்லை. மாலை நான்கு மணி அளவில் அதிதி நிரஞ்சன் வீட்டிலிருந்து கிளம்பினாள். தனது காரில் மீண்டும் அவளை அவள் அப்பா இருக்கும் இடம் வரை அழைத்துச் சென்று விட்டு விட்டு வேலை சம்பந்தமாக நம்ம பேசினத யோசிச்சு பாரு அதி... உனக்கு நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும் அண்ட் குண்டு சட்டியில குதிரை ஓட்டணும்னு அவசியமில்லை... என்று விட்டு கிளம்பிவிட்டான். மாடியில் அப்பாவை சந்திக்க வருவானோ என்று நினைத்தவளுக்கு ஏமாற்றம்தான்!
அவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சனை ஓடுகிறது. அது எதனால், என்னாலா? என்று பிரச்சனையின் கோணத்தை முதன்முறையாக ஆராய்ந்தாள். மனதிற்குள் ஒன்றும் புரிபடவில்லை. இதை எப்படி சரி செய்வது என்று யோசிக்க தொடங்கிவிட்டாள்.
அவள் அறைக்குள் வந்தவுடன், அதியின் பின்னால் நிரஞ்சன் வருகிறானா என்று பார்த்தவருக்கு அவன் வரவில்லை என்பது மனதில் சங்கடத்தை விதைத்தது. ஒன்றுமே அவர் பேசவில்லை. முதல்நாள் இரவே அடுத்த நாள் பயணத்திற்குத் தோதாக தனது உடமைகளை எல்லாம் பெட்டிக்குள் அடைத்து வைத்துவிட்டாள் அதிதி. அவள் வருவதற்குள் தனது பொருட்களையும் பேக் செய்துவிட்டார் விஸ்வமும். இருவரும் தங்கள் நிறுவன காரில் சென்னை புறப்பட்டார்கள். ஏனோ நிரஞ்சனையும் பெங்களூரு வையும் விட்டுக் கிளம்புவதற்கு அவளுக்கு மனது இல்லை.
நிரஞ்சன் சொன்ன விஷயங்கள் பற்றி அப்பாவிடம் எப்போது எப்படி ஆரம்பிப்பது என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் இங்கு வந்தால் மனதிற்கு நிம்மதியாகவும், அத்தோடு உலகின் இன்னொரு பரிமாணத்தை பார்க்கவும் தோதாக இருக்கும் என்று தீர்மானித்தவளுக்கு எப்படியும் இது பற்றி பேசியே தீருவது என்று உறுதி வந்துவிட்டது.
சென்னை வந்து ஒரு வாரத்திற்கு அதி தனது வேலைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. அந்த வார இறுதியில் அப்பாவும் அம்மாவும் வீட்டில் இருக்கும்போது நிதானமாய் தனது மனதில் இருப்பதை சொல்ல ஆரம்பித்தாள்.
அவள் மனதில் இருப்பதை கேட்டபிறகு அவள் அம்மா அப்பா இருவருக்கும் அதற்கு மேல் பொறுமையை இழுத்து பிடிக்க முடியவில்லை. மகள் தனியாக பெங்களூருவுக்கு செல்வது எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்று அவர்களுக்கு. அதேசமயம் ஒரே மகள் திருமண உறவு முறிந்து ஒரு வருஷம் ஆகிறது. இந்த நிலையில்அவளுக்கு மறுமணம் செய்வது பற்றி அவர்கள் இருவரும் சிந்தனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதெல்லாம் ஒரு புறம் என்றாலும் உண்மையில் நிரஞ்சன் இருக்கும் அதே அலுவலகத்தில் அதி வேலை செய்வதை வித்யா விஸ்வம் இருவரும் விரும்பவில்லை. அதை எப்படி அதிதிக்கு புரிய வைப்பது என்று தெரியாமல் ஏதேதோ காரணங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.
அவளது இரண்டாவது திருமணத்தை பற்றி பேசுவதற்கும் அவர்களுக்கு பயம்.
அதிதி ஒரே பிடியாக,சும்மா இன்டெர்வியூ போனா வேலை கிடைச்சிடாது.. ஜஸ்ட் ட்ரை பண்ரேன்... என கெஞ்ச ஆரம்பித்தாள். ஆனாலும் அவளின் பெற்றோர் மனம்
இறங்கவில்லை.
சோர்ந்து போன அதி அதற்கு மேல் அவர்களிடம் வாதாடவில்லை. அவளின் முக வாட்டம் அவர்களை நிலைகெட செய்ததுதான். ஆனால் தீயையும் பஞ்சையும் அருகில் அருகில் வைத்து சோதித்துப் பார்ப்பதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லை.
ஒரு மாதத்திற்கு மேல் அவள் முகம்
தெளியவில்லை. அலுவலகத்தில் நடக்கும் பிரச்சனைகள் விஸ்வம் அவருக்கும் தெரியும். ஆனால் அதிதி சென்னையிலேயே வேறு ஏதாவது அலுவலகத்தில் சேரவும் பரவாயில்லை. நிரஞ்சன் இருக்குமிடம் வேண்டாம் என்பது அவர் கருத்து.
ஆனால் அவரது இந்த கருத்துக்கு அதி ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு இந்த அலுவலகம் மாற்றம் மட்டுமல்ல... சென்னையை விட்டு செல்ல விரும்புகிறேன் என்றாள். அவளையுமறியாமல் நங்கநல்லூர் நாட்கள் அவள் மனதை பிழிந்து எடுக்கிறது இதையெல்லாம் பெற்றோரிடம் எப்படி சொல்ல முடியும்... தான் அனுபவித்தது பெரும் துன்பம் இல்லை... அதற்கும் மேலே உடல் வதை, உயிர்வதை... மனதை நிலை பிறழ செய்யும் கொடூரம். எல்லாவற்றையும் பெற்றோரிடம் சொல்வதற்கு அவள் கூச்சம் இடம் தர வில்லை. அம்மாவிடம் சென்னை வந்த புதிதில் பகிர்ந்து கொண்டவை வெறும் பத்து சதவிகிதம்தான். பாக்கி தொன்னூறு சதவிகிதம் பெரும் அந்தகாரம் தான்.
அதிதி தன்னிலையில் இருந்து மாறவில்லை. அவளது பிரச்சனைகள் நாளுக்கு நாள் வெவ்வேறு விதத்தில் அவளை பாதித்து கொண்டுதான் இருக்கிறது. அவள் அப்பா அந்த நிறுவனத்தின் பார்ட்னர் என்பதால் எல்லாம் ஒன்றும் மாறி விட வில்லை.
அவளது நிலையைக் கண்டு அவள் அப்பா அம்மா தான் இறங்கி வர வேண்டியதாயிற்று. அவளது இன்டெர்வியூவுக்காக ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுவனத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு, முழு அளவில் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறாள். நிரஞ்சன் அங்கு இருக்கிறான் என்பது எவ்வளவு தூரம் அவளது மன தைரியத்தை அதிகரிக்க செய்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவளது பொறுப்பும் அதிகம் என்று உணர்ந்து கொண்டாள். தனக்காக ரெபெர் செய்யும் நிரஞ்சன் முகத்தில் கரியைப் பூசி விடக்கூடாதே என்ற பயம்.
ஒருவழியாக நிரஞ்சன், சென்னையில் இன்டெர்வியூ ஏற்பாடு செய்தான். வேலையும் சென்னையிலேயே கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று வேறு சொல்லி விட்டான். ஆனால் அதிக்குத்தான் முகம் விழுந்துவிட்டது.
பெங்களூரு செல்ல அவளுக்கு விருப்பம் என்று சொல்லியும் கூட நிரஞ்சன் ஏன் இப்படி செய்தான்? அப்பாவும் அம்மாவும் ஏதாவது சொல்லி இருப்பார்களா...என்றெல்லாம் குழம்பித் தவித்தாள்.
இன்டெர்வியூ நாளும் வரவே அங்கே விஸ்வம் தனது காரிலேயே மகளைக் கூட்டிக்கொண்டு சென்றார். அதி வேலையை ராஜினாமா செய்துவிட்டுத்தான் இங்கு வந்திருக்கிறாள். விஸ்வம் மனம் முழுவதும் தவிப்பு. இன்டெர்வியூ செய்யும் பேனலில் நிரஞ்சன் அமர்ந்திருப்பதை கண்டு அதி மனதில் ஆயிரம் கேள்விகள். அங்கே அவனது கம்பீரத்தையும், அவன் அமர்ந்திருக்கும் இடத்தையும் பார்த்து அவளையுமறியாமல் மனதில் ஒரு கர்வம். இவன் என் தோழன் என்று.
நேர்காணலில் மற்ற எல்லோரையும் விட நிரஞ்சன் தான் அவளை மிகவும் படுத்தி எடுத்து விட்டான். மற்ற எல்லோருக்கும் இவன் ஏன் இவ்வளவு அந்த பெண்ணை சோதனை செய்கிறான் என்று தோன்றும் அளவிற்கு. ஆனால் அதிதிக்கு புரிந்தது, எந்த காரணத்தைக் கொண்டும் அவன் ரெபர் செய்ததற்க்கு வேறு விதமான எதிர்வினைகள் நிகழ்ந்து விடக்கூடாது என்று அவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறான் அவன் என. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நிதானமாக பதில் சொன்னவளுக்கு சில கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. இங்கு வேலைக்கு சேர்ந்தால் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறேன் என்றாள். அவளது புன்னகை மாறாத இந்த பதில், எதிரில் அமர்ந்திருப்பவர்களுக்கு அவளைப் பற்றிய கருத்தை மேம்படச் செய்தது.
சென்னையிலேயே பணி இருக்கலாம் என்று அவர்கள் சொல்ல, பெங்களூருவில் கிடைக்குமா என்று அவளே வாய்விட்டு கேட்டுவிட்டாள். நிரஞ்சன் அவளுக்கு சென்னையில் வேலை வேண்டும் என்றுதான் ஏற்பாடு செய்திருந்தான். அவளது இந்த விருப்பம் அவனுக்கு ஒரு புன்னகையை வரவழைத்தது.
அடுத்து வந்த பத்து நாட்களில் தனது உடமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு பெங்களூர் நோக்கி பயணப்பட்டாள் அதிதி. வித்யா விஸ்வம் இருவரும் மனமே இல்லாமல் அவளுக்காக வளைந்து கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில்.
நிரஞ்சன் அலுவலகம் அருகிலேயே அவளுக்காக ஒரு பீ ஜீ ஏற்பாடு செய்து கொடுத்து விட்டான். அவள் மனதில் புது தெம்பு. எங்கே தங்கபோகிறாள் என்று யோசித்து குழம்பிய அவள் பெற்றோர் கொஞ்சம் ஆஸ்வாசம் கொள்ள நாட்கள் நகர ஆரம்பித்தது. அலுவலத்தில் நிரஞ்சன் முற்றிலும் வேறாக தெரிய அதிக்கு மூச்சு அடைத்தது. அலுவகத்தில் அவள் வேறு ஒரு ஆடிட்டர் கீழே வேலை செய்ய, இவன் அவளிடம் அலுவலக நேரத்தில் பேசுவதை முற்றிலும் தவிர்த்தான். அவனது அத்தை மகள் என்று அவளை அறிமுகப்படுத்தியதன் மூலம் அவளுக்கு ஒரு பாதுகாப்பு வளையம். அவனிடன் உள்ள மரியாதை காரணமாக இவளுக்கு தெரியாததை சொல்லி கொடுக்க மற்றவர்கள் முன் வர, சுமனாவுக்கு மட்டும் அதியை கண்டாலே பிடிக்கவில்லை. அவனது அத்தைமகள் எனும் அறிமுகம், அதியின் அழகு, உயரம், நுனினாக்கில் விளையாடும் அமெரிக்க வகை ஆங்கில உச்சரிப்பு எல்லாமே அவளை எரிச்சல் கொள்ள செய்தது. கழுத்தில் தாலி இல்லாததால் அவள் திருமணம் ஆனவள் என்று யாருக்கும் தெரியாது. அதி விருப்பம் கொண்ட மாற்றம். மாலை சில நேரம் இருவருக்கும் வேலை முடிந்து விட்டால் நிரஞ்சன் அவளை கூட்டி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அதிதி அவனருகில் உட்கார்ந்து பயணம் செய்வதை கவனித்த சுமனாவிற்குள் அடக்க முடியாத ஆத்திரம்... அதி கணக்குகள் புரியாது தவிக்கும் சமயங்களில் சுமா அவளை மட்டம் தட்டுவதை விடாது செய்ய, இதையே கவனித்துக்கொண்டிருந்த ஆரியன், அதிதிக்கு சப்போர்ட் செய்து கொண்டு அவள் உதவிக்கு வந்த நிற்பதை வழக்கமாக கொண்டான். ஆரியனுக்கு சுமனாவின் எண்ணம் போகும் போக்கு புரிந்ததால் தான் இப்படி.. ஆனால் ஒரு படி மேலே சென்று அதி ஆட்டோவிற்கு அலுவலக வாயிலில் காத்திருக்கும் ஒரு சில சமயங்களில் அவளைத் தனது காரில் ஏற்றிச் சென்று அவளது பி ஜி யில் விடவும் செய்தான். இருவருக்குள்ளும் நல்ல நட்பு உருவாக, அலுவலகத்திலும் இருவரும் சகஜமாக இருக்க, சுமா மனதில் இவள் ஆர்யனை வளைத்து விட்டாள் என தோன்ற அதி மீது தேவை இல்லாத வன்மத்தை வளர்த்துக்கொண்டாள்.
இன்னொரு புறம் இவற்றை கவனித்த நிரஞ்சனுக்குள் எச்சரிக்கை உணர்வு எழ தன்னுடையவளை மீண்டும் யாருக்கும் கொடுக்க முடியாது என்று தீர்மானித்து அதி கிளம்பும் சமயங்களில் தானும் கிளம்பினான். வேலை முடியாவிட்டால் வீட்டுக்கு சென்று முடித்தான். சில சமயங்களில் அவளை தன்னுடன் அழைத்து சென்று அவள் இருப்பிடத்தில் விட்டு மீண்டும் வந்து வேலையை அலுவலகத்தில் தொடர்ந்தான். ஆர்யான் இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவன் மனதில், நிரஞ்சனுக்கு அதி மீதான உரிமை உணர்வு தெளிவாக தெரிவதால் சந்தோஷம் அடைகிறான். நல்லவேளை, சுமனாவை நிரஞ்சன் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை என்ற சந்தோஷம். அதனாலேயே, அவர்கள் திருமண பந்தத்தில் சேர வேணும் எனும் எண்ணம். அவர்களது இந்த போக்கு சுமனாவுக்குள் கோவத்தை விசிறி விட்டது.
ஆர்யானுடன் அதி சிரித்து பேசுவதை நிரஞ்சன், சுமனா இருவரும் வெறுக்க விளைவு...சுமா ஆர்யானுடன் பேசுவதை முற்றிலும் தவிர்த்தாள். அதியை காய்ந்தாள். நிரஞ்சன் அலுவலக சம்மந்தமான விஷயங்களில் தலையிட கூடாது. அவளே சமாளிக்கணும் என்று தூரம் நின்று பார்க்க, சுமனா அதிகம் அதை பயன்படுத்திக்கொண்டாள்.
ஆர்யான் முன்னை விட அதிகம் அதிக்காக பார்த்தான்.
இவற்றை வளர விட கூடாது என்று முடிவு செய்த நிரஞ்சன் ஆர்யானை தனியே சந்திக்க முடிவு செய்தான்.