Privi
Moderator
கல்லூரிக்கு வந்தவுடன், தனது நண்பர்கள் பட்டாளத்துடன் சிரித்தும் சலசலப்பாகவும் நேரத்தை கழித்துவிட்டு அவன் வகுப்பறைக்குள் சென்றான். அந்த அலைச்சலில் அவளைப் பற்றிய நினைவும் அவனுக்கு மறந்து போயிருந்தது. இவ்வாறே அன்றைய நாள் மெதுவாகக் கடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் ஒரு கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது வழக்கம். அந்த நிகழ்ச்சியில் சீனியர் மாணவர்கள் வழிநடத்த, ஜூனியர் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள். விருப்பம் இருந்தால் சீனியர் மாணவர்களும் பங்கேற்க அனுமதி உண்டு.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், ஜூனியர் மாணவர்களுக்கும் சீனியர் மாணவர்களுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வும் நட்பும் உருவாக வேண்டும் என்பதுதான்.
அதனால் தான் ஒவ்வொரு புதிய மாணவரும் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த ஆர்வமாக மேடையேறும். அவர்களை சரியான பாதையில் வழிநடத்துவது சீனியர் மாணவர்களின் பொறுப்பு.
ரணதீரன் இந்த கலை நிகழ்ச்சியில் இரண்டு போட்டிகளில் பங்கேற்க இருந்தான்—நடன நிகழ்ச்சியும் ஓவியப் போட்டியும். கடந்த ஆண்டுகளில் அவன் நடனத்திற்கு பயிற்சி அளித்தவனாக மட்டும் இருந்தான். ஆனால் இந்த வருடம் அவன் மனதில் ஒரு புதிய யோசனை தோன்றியது.
பத்து பேரைத் தேர்வு செய்து, அவர்களை ஐந்து ஜோடிகளாகப் பிரித்து நடனமாட வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். அதிலும் அவனும் ஒரு பெண்ணுடன் சேர்ந்து மேடையில் ஆட வேண்டும் என்ற எண்ணமும் அவன் மனதில் இருந்தது.
அவன் பயிற்சி கொடுக்கிறான் என்றாலே சில மாணவர்கள் மட்டுமே நடன நிகழ்ச்சிக்காக வருவார்கள். ஆனால் இப்போது அவனே மேடையில் ஆடப் போகிறான் என்ற செய்தி கேட்டதும் நிலைமை மாறிப்போயிற்று.
உண்மையில் ரணதீரன் பெயரை கேட்டவுடனே அந்த வழியே வராமல் தெறித்து ஓடிப்போனவர்களே அதிகம். இருந்தும், விஷயம் முழுவதும் தெரியாமல் ஐந்து பேர் தங்கள் பெயரை பதிவு செய்து விட்டனர்
அன்று நடனப் பயிற்சி நடைபெறும் இடத்திற்குச் சென்றவுடன் தான் ரணதீரனுக்கு உண்மை தெரிய வந்தது. நடனப் போட்டிக்காக பெயர் பதிவு செய்தவர்கள் வெறும் ஐந்து பேர்தான் என்று புரிந்தது. அதை கவனித்தவன், தன் பக்கத்தில் நின்றிருந்த நண்பனை நோக்கி திரும்பினான்.
“என்னடா இது? டான்ஸ் போட்டிக்கு இவ்வளவு குறைவான போட்டியாளர்களா? இங்க யாருக்கும் டான்ஸ் ஆடத் தெரியாதா?” என்று வியப்புடன் கேட்டான் ரணதீரன்.
அதற்கு அவன் நண்பன் சலிப்புடன் சிரித்தபடி, “க்கும்… எல்லாருக்கும் நடனம் ஆடத் தெரியும். ஆனா உன்னை பார்த்தாலே பயம். அதனால்தான் யாரும் இந்தப் பக்கம் வரலை,” என்று கூறினான்.
அதை கேட்ட ரணதீரன் சலிப்பாக தலையசைத்துவிட்டு, தனது கையில் இருந்த பெயர் பட்டியலை மீண்டும் பார்த்தான். பட்டியலில் ஐந்து பேர் பெயர் இருந்தாலும், அங்கு நின்றிருந்தது நான்கு பேர்கள்தான்.
சற்றே உரக்க, “யார் அது? பெயர் கொடுத்து விட்டு வராதது?” என்று அதிகாரமாகக் கேட்டான் அவன்.
நின்றிருந்த நால்வரில் ஒரு பெண் தயக்கத்துடன் முன்னே வந்து,
“என் தோழிதான், அண்ணா. நேற்று வரை நல்லாத்தான் இருந்தாள். ஆனால் நேற்று அவளுக்கு காலில் அடி பட்டுவிட்டதாம். கட்டுடன் வந்திருக்கிறாள். அதனால அவளால் ஆட முடியாது என்று சொல்கிறாள்,” என்று கூறினாள். அவள் பெயர் ராதிகா.
ரணதீரன் சலிப்பாக தனது நண்பன் தினகரனை நோக்கிப் பார்த்தான்.
“என்னடா இது… ஆளே குறைவாக இருக்கிறார்கள் என்று நினைத்தால், இப்போ அந்த பெண்ணுக்கு காலில் அடி பட்டுவிட்டதாம்!” என்று குமுறினான்.
அதற்கு தினகரன் சற்றே சிரித்தபடி, “எனக்கு என்னமோ அவள் பொய் சொல்லுற மாதிரி தான் தோணுது. உன் பெயரை கேட்டு பயந்துட்டா என நினைக்கிறேன்,” என்று கூறினான்.
அவ்வாறு சொல்லிக்கொண்டே, அங்கு நின்றிருந்த நால்வரில் ஒருவனான சீலனை நோக்கி, அருகே வரும்படி கை அசைத்தான் தினகரன்.
சீலனும் அமைதியாக முன்னே வந்து நின்றான். ரணதீரன் தனது கையில் இருந்த பெயர் பட்டியலை ஒரு முறை பார்த்துவிட்டு,
“மலர்… முதலாம் ஆண்டு பி.காம். அவளை அழைத்து கொண்டு வா,” என்று கூறினான்.
சீலன் தலையசைத்துவிட்டு அவளை அழைத்துக் கொண்டு வர சென்றான். ஆனால் சென்றவன் அரை மணி நேரம் கடந்தும் திரும்பி வரவில்லை.
அதை கவனித்த ரணதீரன் சற்றே கோபமாக தினகரனை நோக்கி திரும்பி,
“என்னடா இது?” என்று கடுப்புடன் கேட்டான்.
தினகரன் அவன் கோபத்தை சமாளிக்க முயன்றபடி,
“சரி வா… நாமே போய் பார்த்து விட்டு வரலாம்,” என்று கூறி ரணதீரனை அழைத்துக் கொண்டு பி.காம். முதலாம் ஆண்டு வகுப்பை நோக்கி விரைந்தான்.
அவர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது, ஒரு வித்தியாசமான காட்சி அவர்களுக்கு முன்னால் விரிந்தது. சீலன் அந்தப் பெண்ணின் கையை பிடித்தபடி, ஏதோ கெஞ்சிக் கொண்டிருந்தான்.
அந்த காட்சியை பார்த்தவுடன் ரணதீரனின் முகத்தில் கோபம் தெளிவாகப் பதிந்தது.
“ஹேய்! உன்னிடம் நாங்கள் எல்லாம் கெஞ்சிக்கொண்டே இருக்கணுமோ? அப்போதான் மஹாராணி மனம் இறங்கி வருவீங்களோ?” என்று கத்திக்கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்து அவளை நோக்கி வேகமாக நடந்தான்.
அவன் குரல் கேட்ட திசையை நோக்கி வகுப்பில் இருந்த அனைவரும் சற்றே பீதியுடன் திரும்பிப் பார்த்தனர்.
பயத்தில் உடல் நடுங்க, கண்களில் கண்ணீர் துளிகள் தேங்கி, அவனை நிமிர்ந்து பார்த்தாள் மலர்.
அவளை கண்டவுடன் ரணதீரன் அப்படியே ஸ்தம்பித்து நின்றான். அவனை சுண்டி இழுக்கும் அந்த கண்கள்… கண்ணீர் நிரம்பி இருந்தாலும் கூட, அவனுக்கு அவை அசாதாரணமாக அழகாகத் தோன்றின.
“இவ்வளவு அழகா இருக்க முடியுமா?” என்று அவன் மனமே அவனை வினவியதுபோல் தோன்றியது. அந்த எண்ணத்திலிருந்து சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டான்.
கத்திக்கொண்டிருந்த குரல் தானாகவே அடங்கியது. மெதுவாக அவள் அருகே சென்றான். அவளும் அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ரணதீரன் குனிந்து அவளது காலைப் பார்த்தான். உண்மையிலேயே அவளது காலில் கட்டு போடப்பட்டிருந்தது.
ஒரு வார்த்தையும் பேசாமல் எழுந்து நின்றவன், தினகரனையும் சீலனையும் நோக்கி, “வாங்கடா… போலாம்,” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியே நடந்தான்.
வாசல் கதவின் அருகில் சென்றபோது திடீரென நின்றான். மெதுவாக திரும்பி அவளை நோக்கிப் பார்த்தான். அவளும் இன்னும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒரு அழுத்தமான பார்வையை அவள்மேல் பதித்துவிட்டு அங்கிருந்து அகன்றான் ரணதீரன்.
அவன் அருகே நடந்துகொண்டிருந்த தினகரன் அவன் காதருகில் நெருங்கி,
“டேய்… இது அந்த பெண் தானே?” என்று மெதுவாகக் கேட்டான்.
அதற்கு ரணதீரன் வார்த்தையில்லாமல் ‘ஆம்’ என்று கூறும் விதமாக தலையசைத்தான்.
அந்த நேரத்தில் மலருக்கு தான் காண்பது கனவா என்று தோன்றியது.
‘அன்று என்னை மோதிய அந்த அண்ணன் தானா… இந்தக் கல்லூரியே பார்த்து நடுங்கும் சீனியர் ரணதீரனா?’ என்று அவள் மனதில் எண்ணங்கள் சுழன்றன.
சிறிது நேரத்தில் அடுத்த ஆசிரியர் வகுப்புக்குள் வந்தார். அவரை பார்த்ததும் மலர் தனது சிந்தனைகளை அனைத்தையும் தள்ளி வைத்து, மீண்டும் பாடத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.
அதே நேரத்தில், ரணதீரன் அந்த நால்வரையும் வைத்துக் கொண்டு நடனப் பயிற்சியை தொடங்கினான். அவன் எவ்வளவு முயற்சி செய்து பயிற்சி கொடுத்தாலும், அவன் சிந்தனை முழுவதும் மலரிடமே சுற்றிக் கொண்டிருந்தது.
பயிற்சி ஒரு கட்டத்திற்கு வந்ததும், அந்த நால்வரும் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் சென்றவுடன், தினகரனிடம் ஏதோ சொல்லிவிட்டு ரணதீரன் மலர் இருக்கும் வகுப்பை நோக்கி விரைந்தான்.
வகுப்பு முடிவடையும் தருவாயில் இருந்தது.
அவன் அமைதியாக வகுப்பறை வெளியே நின்று கொண்டு உள்ளே பார்த்தான். அவன் பார்வை நேராக மலர்மீதே விழுந்தது.
அவள் பாடத்தில் முழு கவனத்துடன் இருப்பதும்…
சில நேரங்களில் யோசித்தபடி பேனாவின் முனையை மெதுவாக உதடுகளில் தொட்டுக் கொள்ளும் பழக்கமும்…
ஆசிரியர் சொல்லும் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து, குறிப்பு எடுத்துக் கொள்வதும்…
ஏதாவது ஒன்று புரியாமல் போனால் அவள் முகத்தில் தோன்றும் அந்த சிறிய குழப்பமும்…
அதே விஷயம் புரிந்தவுடன் முகத்தில் மலரும் அந்த மெல்லிய புன்னகையும்…
அவளது ஒவ்வொரு சிறிய செயலும் ரணதீரனின் மனதை ஏதோ வித்தியாசமாகத் தொட்டது.
ரணதீரனின் பார்வை அவளை தலை முதல் கால் வரை அமைதியாக ஆராய்ந்து கொண்டிருந்தது.
அடர்த்தியாக விரிந்த கருங்கூந்தல்… படர்ந்த நெற்றி… அதன் ஓரத்தில் சில துளி மழைத்துளிகளைப் போல சின்னச் சின்ன முடித்துண்டுகள் காற்றில் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தன.
நெற்றியின் நடுவில் சிறிய கருப்பு பொட்டு ஒன்று அமைதியாக ஒட்டியிருந்தது.
அவளின் நிறம்—மிகவும் வெளிரும் இல்லை, அதிகமாக கருமையும் இல்லை. மாம்பழ நிறத்துடன் கலந்த அந்த இயற்கையான ததும்பும் நிறம்; இன்று “டஸ்கி ஸ்கின்” என்று சொல்லப்படும் அழகான ஒளிர்வு.
முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லை. ஆனாலும் அந்த எளிமையே அவளுக்கு ஒரு தனித்துவமான அழகை தந்தது.
சாதாரணமான ஒரு பருத்தி குர்டி மட்டும் அணிந்து கொண்டு, எந்த ஆடம்பரமும் இல்லாமல், இயற்கையான அழகோடு அமைதியாக அமர்ந்திருந்தாள் மலர்.
அந்த எளிமைதான் ரணதீரனின் பார்வையை இன்னும் சில நொடிகள் அவள்மீது நிலைக்க வைத்தது.
அவள் செய்த ஒவ்வொரு செயலும் அவன் மனப் பெட்டகத்தில் மெதுவாக சேமித்து வைக்கப்பட்ட நினைவுகளாக மாறிக் கொண்டிருந்தது.
வெளியே ஒருவன் தன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாமலேயே, பாடத்தில் முழு கவனத்தையும் செலுத்தித் கொண்டிருந்தாள் மலர். வகுப்பு முடிந்தது. வலியால் முகம் சுளித்தபடி, காலை மெல்லத் தரைதோய்த்து நொண்டி நொண்டி வகுப்பறையை விட்டு வெளியேறினாள்.
"ஹேய்... நில்லு!"
கம்பீரமான அந்தக் குரல் அவளை அப்படியே உறைய வைத்தது. சட்டெனத் திரும்பிப் பார்த்தவளுக்குத் திக்கென்றிருந்தது; அங்கே ரணதீரன் நின்றிருந்தான்.
நிதானமாக நடந்து வந்தவன், அவளுக்கு முன் நின்றான். அவனது பார்வையும் கவனமும் அவள் கால்களின் மீதே நிலைத்திருந்தது. லேசாகக் குனிந்து அந்தக் கட்டைப் பார்த்தவன், பிறகு நிமிர்ந்து அவள் கண்களை ஊடுருவினான்.
"நேத்து நான் கேட்டப்போ, பெருசா ஒன்னும் அடி இல்லனு சொன்ன? ஆனா இப்போ என்னடான்னா இவ்வளவு பெரிய காயத்தோட நிக்கிற..." அவனது குரலில் மெல்லிய அதட்டலும் அக்கறையும் கலந்திருந்தது.
மலர் தயக்கத்துடன் அவனை ஏறிட்டாள். "நானும்... நானும் சாதாரண அடிதான்னுதான் நினைச்சேன். ஆனா வீட்டுக்குப் போனதுக்கப்புறம் வலி உயிர் போற மாதிரி அதிகமாயிடுச்சு.
அப்பாதான் ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போனார். டாக்டரைப் பார்த்தப்போதான் தசை பிரண்டு இருக்குன்னு தெரிஞ்சது. அவர்தான் இப்போ இந்தக் கட்டைப் போட்டு விட்டார்," எனச் சொல்லி முடித்தாள்.
அவளது காலடியிலிருந்து உச்சி வரை ஒருமுறை தீட்சண்யமாகப் பார்த்த ரணதீரன், "வலி அதிகமா இருக்கோ?" எனக் கேட்டான். அவனது குரலில் இருந்த ஒருவித அழுத்தம் அவளை நிலைகுலையச் செய்தது.
மலர் மௌனமாகத் தலையசைத்து "ஆமாம்" என ஒப்புக்கொண்டாள்.
"அப்போ... உன்னால டான்ஸ் ஆட முடியாதா?" - ரணதீரனின் அடுத்த கேள்வி விழுந்தது.
மலரின் விழிகள் தரையை பார்த்து கொண்டு "இல்லை..." என மிக மெல்லிய குரலில் தலையை அசைத்தாள்.
ரணதீரன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டு, அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான்.
"உனக்கு ரெண்டு நாள் டைம் தரேன். நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. ஆனா, ரெண்டு நாள் கழிச்சு நீ கண்டிப்பா டான்ஸ் ஆட வந்தே ஆகணும்!" என அதிகாரத்தோடு கட்டளையிட்டான்.
அவன் சொன்னதைக் கேட்டு மலர் விக்கித்து நின்றாள். "இந்தக் காலால் எப்படி?" என்பது போல விழி பிதுங்கி அவனை ஏறிட்டாள்.
அவளது அந்த அப்பாவியான பார்வை ரணதீரனின் மனதிற்குள் ஏதோ ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது.
'ஐயோ! இந்த ஒத்தக் கண்ணை வெச்சே நம்மைக் கொல்றாளே... ராட்சசி!' எனத் தனக்குள் புலம்பிக் கொண்டான் ரணதீரன். ஆனால் வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், மீண்டும் அவளை அழுத்தமாகப் பார்த்து, "நான் சொன்னது புரியுதா?" எனக் கேட்டான்.
அவனது ஆளுமைக்கு முன் மறுத்துப் பேச முடியாமல், "புரிகிறது..." என மெதுவாகத் தலையாட்டினாள் மலர்.
அவளது பதிலை ஏற்றுக்கொண்டவன், "அது... சமத்துப் பொண்ணு!" என்பது போலப் பார்த்துவிட்டு, "பார்த்துப் போ... காலைத் தரையில ரொம்ப அழுத்தாம மெதுவா நடந்து போ," என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் இட்ட கட்டளையை ஏற்க முடியாமல், மனதிற்குள் ரணதீரனை சகட்டுமேனிக்கு அர்ச்சனை செய்தவாறே அங்கிருந்து நகர்ந்தாள் மலர். வலியோடு அவள் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்துச் செல்வதையே, மெய்மறந்த நிலையில் விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரணதீரன்.
அவனது உலகமே அவளிடம் லயித்திருந்த அந்தத் தருணத்தில், பின்னால் வந்த தினகரன் பலமாக ரணதீரனின் முதுகில் தட்டினான்.
"என்னடா... சிலையாட்டம் இங்கேயே நின்னுகிட்டு இருக்க?" எனத் தினகரன் கிண்டலாகக் கேட்டான்.
ரணதீரன் சட்டெனத் தன் பார்வையைத் திருப்பவில்லை. தாராளமான ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு, "என் அப்பாவிடம் சண்டை போட வேண்டிய காலம் ரொம்ப நெருங்கிடுச்சுன்னு நினைக்கிறேன்டா..." என நிதானமாகக் கூறினான்.
அவன் சொன்ன அந்தப் பூடகமான பதில் தினகரனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. குழப்பத்துடன் ரணதீரனைப் பார்த்தவன், "என்னடா சொல்ற? புரியுற மாதிரி சொல்லு..." எனக் கேட்டான்.
அதற்கு ரணதீரன் மெல்லிய புன்னகையுடன், "எல்லாமே புரிய வேண்டிய நேரத்துல புரியும். இப்போ வா... நாம கிளம்பலாம்," என்று கூறிவிட்டு, மர்மமான ஒரு முடிவோடு அவனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.