எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

17 மார்கண்டேயனின் மனோரஞ்சிதம்

priya pandees

Moderator
அத்தியாயம் 13

மார்கண்டையன் பாலா அழைக்காமல் உள்ளே எப்படி செல்ல என நிற்க, 'எவ்வளவு நேரம் நின்னாலும் உன்ன உள்ள கூப்பிட மாட்டேன்' என பைக்கில் ஒற்றை கை ஊன்றி சாய்ந்து அவனை பார்த்தே நின்றான் பாலா. மனோ பெருமுச்சுடன் இருவரையும் பார்த்தாலும் அவளும் அவனை உள்ளே அழைக்கவில்லை, ஆனால் அப்படியே விட்டுவிட்டு உள்ளே திரும்பவும் மனது வரமாட்டேன் என்றது. பாலாவும் அதற்கு தான் நின்றான், அவனை அப்படியே விட்டுவிட்டு உள்ளே செல்ல ஒருநொடி ஆகாது, ஆனால் வாசலில் நிற்பவனை அப்படியே விட்டுச்செல்ல மனமின்றி தான் அவனே ஏதாவது பேசட்டும் என நின்றிருந்தான்.

"அண்ணனும் தங்கச்சியும் இன்னைக்கு தான் என்னைய புதுசா பாக்குறாங்களா? எதாவது பேசுதாங்களான்னு பாரேன்" என மார்க்கும் முறைத்தபடி நிற்க,

உள்ளே, கிருஷ்ணனும், கண்ணனும் கையில் ஆளுக்கொரு முருங்கை குச்சியை வைத்துக்கொண்டு சேரில் ட்ரம்ஸ் வாசிக்க துவங்க, கச்சேரி ஆரம்பமாகியது. யார் அதிக சத்தோத்தோடு நாற்காலியை தட்டி உடைக்கிறார்கள் என போட்டிவேறு வந்துவிட, வீட்டின் நான்கு சுற்று சுவர்களே பிய்த்துக்கொண்டு எங்காவது ஓடிவிடலாமா என பார்க்கத்துவங்கிவிட்டது.

"ஆரம்பிச்சுட்டானுங்க" என பாலா காதை குடைய, "அடேய் ரெண்டு பேருக்கும் இப்ப வந்தேனா தெரியும்" என கத்தினாள் மனோ. அவர்கள் வாசிக்கும் ட்ரம்ஸ் சத்தத்திற்கு இடிவிழுந்தாளே காதில் விழாது, இவள் குரல் கேட்டதுபோல கனவு தான்.

மார்க்கிற்கும் காது கொய்ங்கென்றது, ஆனால் பாலா உள்ளே திரும்பிய கேப்பில், "உங்கண்ணன உள்ள போக சொல்லுடி" என மனோவிடம் கண்ணை உருட்டி பாலாவை காண்பித்து வாயசைக்க, முறைத்தாள் அவள்.

"சொல்லுடி. ப்ளீஸ்" என கண்கள் சுருக்கி கெஞ்சவும் செய்ய,

"இது அவன் வீடு. ஐயோ பாவம்னு கட்டிகொடுத்தப்றமு என்னைய உள்ள இருக்க விட்ருக்கான். அதனால யாராவது தங்கலாம்னு வந்தாலும் அவனுக்கு பிடிக்கணும் அவன் உள்ள வான்னு கூப்பிடணும்" என சொல்ல,

'அவள் அம்மா வீட்டில் அவள் சுகமாக தான் இருக்கிறாள்' என நினைத்திருந்தவனுக்கு, அவள் எண்ணத்தில் அப்படியில்லை, 'அன்டி தான் இங்கிருக்கிறேன்' என கூறியது அதிர்ச்சியாக கூட இருந்தது.

"மனோ! உன்ன அப்படியா வச்சுருக்கேன் நானு? அண்ணன் வீட்ல வேற வழியில்லாம இருக்கறதா நினைச்சு தான் இருக்கியா நீ? இவர் முன்ன இப்படி சொல்லலாமா முதல்ல? யார் இருந்தாலும் இல்லனாலும் என் அண்ணன் இருக்கான் என்னைய பாத்துக்கன்னு சொல்லிருக்க வேணாம்?" என அதட்ட,

"அவரோட பொறுப்பு அவருக்கு தெரியணும்லண்ணா?" என்றாள் மெதுவாக,

இவர்கள் மூவரும் உள்ளே நடக்கும் கச்சேரி சத்தத்தையும் தாண்டித்தான் பேசி நின்றனர்.

"உள்ள வாங்கன்னு ஆரத்தி எடுக்கணுமா உங்களுக்கு? வந்ததே மூணு வருஷங்கழிச்சு, இதுல மாப்ள மரியாதை வேற எதிர்பார்ப்போ?" என பாலா சொல்ல,

"உங்க வரவேற்ப யாரும் கேட்கல. வழிவிட்டு நின்னா நானே உள்ள போயிருப்பேன். அவளுக்கு அவ அண்ணன் வீடுனா எனக்கு இது என் மாமனார் வீடு தான். இப்ப என் பொண்டாட்டி என் மேல கோவமா இருக்கா, அவள சமாதானம் செய்யணும்னு தான் வந்துருக்கேன். அவ சமாதானம் ஆகிட்டா இந்த டைம் எங்கூடவே கூட்டிட்டு போயிருவேன்" என்றான் விரைப்புடன் இவனும் பதில் கொடுக்கவே,

"ரொம்ப சீக்கிரம் வந்துட்டாரு பொண்டாட்டிக்கு ரெண்டு பிரசவம் முடிஞ்சப்றம். உள்ள போங்க" என வண்டியையும் தள்ளி நிறுத்த,

"இன்னும் ரெண்டு பிள்ள பெத்தப்றம் வந்தாலும், அவ என் பொண்டாட்டி தான். தாய்மாமா தானே? எல்லாம் செய்யலாம் தப்பில்ல" என்றுவிட்ட அவனை தாண்டி உள்படி ஏறினான் மார்க்.

பாலா அவனை அழைக்கவுமே, மனோ உள்ளே சென்றுவிட்டாள். இவள் சென்று கத்தியும், பெரியவன் நிறுத்தினாலும் சின்னவன் விடாமல் தட்ட, "அவன் மட்டும் தட்டுதான்" என கிருஷ்ணனும் தட்டினான்.

"வீட்ல ஆளுங்க இருக்க வேணாமா? பாப்பா உள்ள தூங்கணும். அத்த வந்தா திட்டுவாங்க பேசாம இருங்கடா" என குச்சியை பிடிங்கினாள், தரையில் அழுது உருண்டான் கண்ணன். அந்த சைரனுக்கும் அடிக்கும் டமாரத்துக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லாததால், "என்னவும் செய்" என போட்டுவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

ஞானம் அங்குதான், ஃபோனில் யாரிடமோ பேசிக்கொண்டே சிறிய அட்டையில் ஏதோ எழுதியபடி இருந்தார். மீனம்மாவும், ஆண்டாளும் காய் நறுக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் மூவரையும் இந்த சத்தம் சுத்தமாக பாதித்ததுபோல தெரியவில்லை. அவர்கள் வேலையை அவர்கள் பாட்டில் பார்த்தபடி இருக்க, இவனுக்கு தான் காதே வலித்தது. அந்த சத்தத்தில் இவனை யாருமே கவனிக்கவில்லை. அவனும் கண்டுகொள்ளாமல் கொண்டு வந்த அந்த பெரிய பையோடு மனோ அறைக்குள் நுழைந்தான்.

"மனோ! உங்க அப்பா இந்த சத்தத்துல எப்றி ஃபோன் பேசிட்ருக்காரு?" என கட்டிலில் அமர,

"எதுக்கு வந்தீங்க?"

முறைத்தவன், "வருவேன்னு சொல்லிட்டு தான போனேன். இங்க பாரு மனோ, நா பண்ணது தப்புதான். ஒரு வருஷம்னு சொல்லிட்டு வரல, அதுக்கு உன் பேச்சும் காரணம் தான். சண்டை போட்டோம். போட்டோம் ஓகேவா, அதனால அது அப்படியே கன்ட்னியூ ஆகிடுச்சு. ரூபா அனுப்பாம விட்டது என்னோட பெரிய மிஸ்டேக் தான். சாரி ஃபார் தேட். பட் அதனால தான் நீ வேலைக்கு போயிருக்க, நல்ல விஷயம் தான நடந்துருக்கு. ப்ளீஸ் சண்டைய இழுத்துட்டே போக வேணாம். இனி நாம ஒன்னா இருக்கலாம். அமெரிக்கா போலாமா? உனக்கும் பசங்களுக்கும் விசா அப்ளை பண்ணட்டா?" என்றவன் அவன் பிள்ளைகள் சத்தத்தை தாண்டி தான் பேச வேண்டியிருந்தது.

"என்னைய பார்த்துக்க எனக்கு தெரியும். நீங்க உங்க வேலைய பாக்கலாம்"

"இப்பதானே சொன்னேன்" என்றவனுக்கு காதும் அடைத்துக்கொண்டு வந்தது.

"சண்டையும் வேணாம் சமாதானமும் வேணாம். டாட் வச்சது வச்சதாவே இருக்கட்டும்"

"முடியாதுடி"

"எனக்கு தேவையில்லன்ட்டேன். ஒரு விஷயம் தேவைப்படும்போது கிடைக்கலனா அப்புறம் அதுக்கு தேவையே இல்லாம போயிடும்"

"அப்படிலாம் போகாது. விசா எடுக்கட்டா சொல்லு. ஒன் மந்த் ஆகிடும் ப்ராசஸாகி வரணும்" என்றவன் அறை கதவை சாற்ற,

"கதவ திறங்க முதல்ல" என அதட்டினாள்,

"ஒன்னும் பேச முடியல மனோ"

"பரவால்ல திறங்க"

"அடிவெளுத்துபுடுவேன்டி, சும்மா இருக்கவன கிளப்பாம நில்லு" என்றதும் முறைத்து நின்றாள்.

"விசா எடுப்போமா?"

"வேணாம்னு சொல்லிட்டேன்ல. எனக்கு உங்களோட எங்கையும் வர விருப்பம் இல்ல. இங்க இருந்தும் நீங்க டைம் வேஸ்ட் பண்ண வேணாம்"

"டி மனோ! என்னைய என்னடி செய்ய சொல்ற? சாரி. நிஜமா சாரி. நா லாஸ்ட் டைமே இங்க வந்துடுற ப்ளான்ல தான் இருந்தேன். சென்னைக்கு ட்ரான்ஸபெர் வாங்கிப்போம்னு, ஆனா இட பிரச்சனைல தான் அத அப்படியே விட்டுட்டேன்"

"இப்பவும் விட்ருங்க"

"விடமுடியாது மனோ. அந்த இடத்த உன் பேருக்கு மாத்திடலாம்னு இருக்கேன். நீ அந்த இடத்துக்காக பேசல. எனக்கு புரியுது. என் பைக்க மாமா வீட்ல நிப்பாட்டி மாமாக்கு அது என் பைக்னே மறந்து போச்சு, அது எனக்கே கடுப்பாச்சு. என் மாமா தான் ஆனா நானே கடுப்பானேன். இங்க நீ அடுத்த வீட்ல இருந்து வந்த புள்ள, நீ அவங்க எல்லாரையும் புரிஞ்சுக்கணும்னு எதிர்பார்த்தது என் தப்பதான், ப்ளஸ் உனக்குன்னு முடிவு பண்ண விஷயத்த உன்ட்ட சொல்லாம தூக்கி கொடுத்ததும் என் தப்புதான். அதான் அத திருப்பி மாத்தி எழுதிடலாம்னு இருக்கேன்"

"எனக்கு எதுவும் தேவையில்லன்னு சொல்லிட்டேன். ஏதோ அந்த இடத்த சண்டை போட்டு நா வாங்கிட்ட ஃபீல் தான் எனக்கு மிஞ்சும். சோ உங்க சொத்து எதுவும் எனக்கு வேணாம். ப்ளீஸ் ஆளவிடுங்க"

"நோ மனோ! நீ என்ன சொன்ன, அந்த இடத்த திரும்ப நம்ம பேர்ல முடிக்க முடியாது, என் அக்கா விட மாட்டான்னு. அது பொது சொத்தா தான் பிரியும்னு சொன்ன, அங்க தான் நமக்கு இந்த சண்டையே ஆரம்பிச்சது. இப்ப நா முடிச்சு காண்பிச்சுட்டா, நம்ம சண்டைய இத்தோட நிறுத்திக்கணும் நீ. இடத்த ரிஜிஸ்டர் பண்ணிட்டு அமெரிக்கா கிளம்புறோம் நாம" என்றான் உத்தரவு போல,

நக்கலாக சிரித்தவள், "உங்க அக்கா மேல அவ்வளவு பாசம்? சரி செய்ங்க, என் பேரே நீங்க கொண்டு வர வேணாம், அட்லீஸ்ட் உங்க பேர்ல மட்டுமா முடிச்சு காட்டிடுங்க, நா ஒன்னுமே சொல்லாம உங்க கூட கிளம்பி வர்றேன்" என கூறிவிட்டாள்.

"நிஜமா?" என அவன் சாய்ந்தமர்ந்து புருவம் உயர்த்த,

"எனக்கு பொய் ப்ராமிஸ்லாம் பண்ண தெரியாது. சொன்னா சொன்னபடி செய்வேன்" என திமிராகவே சொல்லி காண்பித்தாள்.

"செய்றேன்டி. ஏதோ உள்நோக்கத்தோட தான நீ இத சொல்ற. செஞ்சுட்டு உன்ன தூக்கிட்டே போறேன்டி" என பேச, நக்கல் பார்வையோடே அறையிலிருந்து வெளியேறிவிட்டாள்.

தானும் எழுந்து வெளியே வந்தவன், இன்னும் கச்சேரி நடத்திக்கொண்டிருந்த பிள்ளைகளிடம் சென்று நிற்க, இவனை கண்டதும், ஓடப்பார்த்த கண்ணனை, ஒரே கையில் தூக்கிபிடித்தவன், கிருஷ்ணனை பார்க்க, திருதிருத்தான் அவன்.

"வா பைக்ல ஒரு ரவுண்ட் போலாம்" என அழைக்க, "வரல!" என வேகமாக தலையசைத்தான்.

"வாடா சேட்டை! ரெண்டு பேரும் வீட்ட அலற விடுறீங்கன்ன?" என மறுகையில் அவனையும் இழுத்தபடி வர, இப்போது தான் அவன் சத்தமே வீட்டினருக்கு கேட்டது.

"வாங்க மாப்ள!" என ஞானம் ஒரு அறையிலிருந்து வர, மீனம்மாவும், ஆண்டாளும் அடுப்படி உள்ளிருந்து வந்து, "வாங்க" என ஆண்டாளும், "வாங்க ஃபாரீன் சாரு, என்ன நைட்டு போன வேகத்துல காலைல வந்து நிக்கீக? இதுக்கு நைட்டே இங்கன இருந்துருக்கலாம்ல?" என மீனம்மாவும் நின்றனர்.

"உங்க மக தான் போய்ட்டு நாளைக்கு என் அண்ணன் வரவும் பெர்மிசன் வாங்கிட்டு வந்து தங்குங்கன்னு சொல்லிட்டா. இது அவ அண்ணனோட வீடாம், அவளே அகதியா தான் இங்க இருக்காளாம், இதுல நா வேற வந்து தங்க முடியாதுன்னு சொன்னா" என்க,

"மனோவே சொல்லிட்டாளா?" என்றார் மீனம்மா.

"ஆமா. இங்க இருந்தாலும், என்கூட இருக்குற இடம் தான் அவ வீடாம் மீனம்மா. அத நா செய்யலன்னு தான் அவளுக்கு கோவம் போல. அதான் இந்த டைம் கூடயே கூட்டிட்டு போயிடலாம்னு இருக்கேன்" என்க,

"நல்லது மாப்ள. அவ கோவத்துல லூசு தனமா அப்படிதான் ஏதாவது பேசுவா, ஆனா எல்லாமே உங்க கூட வாழணும்னுன்ற எண்ணத்துல தான். பாலா அப்படி அவ தங்கச்சியவும் நினைக்கமாட்டான் உங்களையும் சொல்ல மாட்டான். இதுவும் உங்க வீடு போல தான் தாராளமா நீங்க எத்தன நாள் வேணாலும் தங்கலாம்" என்றார் ஆண்டாள்.

"ஃபாரீன் சார், மனோவ நிசமாவே கூட்டிட்டு போற ஐடியாவா இல்ல, இந்த டைமு ஜகா வாங்கிடுவீகளா?"

"விசா அப்ளை பண்ணி கைல குடுத்துடுறேன் அப்றம் நம்புங்க மீனம்மா"

"மனோ வர ஒத்துக்கிட்டாளா?"

"சண்டை ரெண்டு பேரும் தான் போட்டோம். நானும் கோச்சுட்டேன் அவளும் கோச்சுகிட்டா. ஆனா பனிஷ்மென்ட் மட்டும் எனக்கு தனியா தரேன்றா. அது சரியில்ல தானே? எடுத்து சொல்லுங்க மீனம்மா அவளுக்கு" என அவன் பேச, அந்தபக்கம் நின்று மனோவும் முறைக்க, இந்தபக்கம் ஞானம் அருகில் நின்ற பாலாவும் முறைத்தான்.

"அதெல்லாம் வருவா மாப்ள. அவளுக்கு கோவம், அதும் நீங்க கூட இருந்தாலே குறைஞ்சு காணாம போயிடும். நீங்க கூட்டிட்டு போக ஏற்பாடு பண்ணுங்க" என்ற ஆண்டாள், "சொல்லுங்க" என ஞானத்துக்கும் சொல்ல,

"மனோ சந்தோசமா இருக்கணும் மாப்ள. அவளுக்கு எது இஷ்டமோ அதான் எங்களுக்கும் இஷ்டம். அவ உங்க கூட சந்தோசமா கிளம்பி வந்தா போதும்" என்றுவிட்டார்.

"இத்தன வருஷம் ஏன் கூட்டிட்டு போகலன்னு அவர் இன்னும் காரணம் சொல்லலையே?" என்றான் பாலா,

"காரணமா? இப்டி மொத்த குடும்பமா ரெண்டு பிள்ளைகளோட போகணும்னு தான்னு கூட வச்சுக்கோங்க" என்றான் மார்க்.

"பாலா!" என அவனை அடக்கிய ஞானம், "நீங்க ப்ளான் பண்ணுங்க மாப்ள" என்றார் மார்க்கிடம்.

தலையசைத்தவன், "சரி நா இவங்கள கூட்டிட்டு வெளில போய்ட்டு வரேன்" என அவ்வளவு நேரமு கைக்குள் திருகி கொண்டிருந்த கண்ணனை, இறுக்கி பிடித்துக்கொண்டு கிருஷ்ணாவயும் அழைத்தபடி கிளம்பிவிட, அனைவரும் மனோவை திரும்பி பார்த்தனர்.

"வேணும்னே கோர்த்து விட்டுட்டு போயிட்டாரு பாரு" என சென்றவனை முறைத்தவள், "எனக்கு அங்க போறதுலலாம் இஷ்டம் இல்ல. இப்பதான் வேலை கொஞ்சம் செட்டாகி வருது. ஏதோ கொஞ்சம் ரிலீஃப்பா இருக்கேன். அத கெடுத்துக்க விரும்பல. அங்க போனாலும் வேலை கிடைக்கும். ஆனாலும், போக தோணல எனக்கு" என்றுமட்டும் கூற,

"உனக்கு பிடிச்ச இடத்துல, சந்தோசமா இருத்தா நீயி" என்றார் மீனம்மா.

"இவரு தான் வருவாரா மாட்டாரான்னு நாம அலமோதிட்டு இருந்தோம். வந்துட்டாருல்ல இனி இறுத்தி வைப்போம். நீ கவலபடாத மனோ" என்றான் பாலா.

"போனா போட்டும்ணா. யாரையும் இறுக்கிபிடுச்சு கட்டிபோட்டுலாம் வாழ வைக்க முடியாது. தனக்கே பிடிச்சு இருந்தாதான் அவங்களுக்கும் நிம்மதி அவங்கள சுத்தி உள்ளவங்களுக்கும் நிம்மதி. அதில்லாம இறுக்கிலாம் பிடிச்சா மூச்சு முட்டி மொத்தமா வெறுத்துரும்ணா" என்றவளை பாவமாக பார்த்தனர் நால்வரும்.

வெளியே, பைக்கை எடுத்துக் கொண்டிருந்தவன் காதிலும் அனைத்தும் விழுந்தது. எந்த முடிவாக இருந்தாலும் சீக்கிரம் எடுக்க வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான்.

சிறுவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றதில், ஒருவருக்கு ஒருவர் துணை என நினைத்தனரோ என்னவோ நேற்றளவுக்கு இல்லாமல் அப்பாவிடம் கொஞ்சம் பயம் தெளிந்திருந்தது இருவருக்கும்.

இருவரும், கடையில் கண்ணில் பட்டதை எல்லாம் தங்களை மறந்து கேட்க, "வாந்தி எடுப்பீங்கடா நீங்க. சோ எதுவும் கிடையாது. சும்மா வாங்க. உங்க மாமா கூட எங்கெல்லாம் போவீங்க?" என பேசி அவர்கள் சொல்வதை புரிந்த வகையில் ஏற்று, கிருஷ்ணனிடம் கண்ணன் பேசிக்கொண்டு வந்த மழலை மொழியில் வாய்விட்டு சிரித்து என கொஞ்ச நேரத்தை போக்கிவிட்டு மதிய உணவுக்குத்தான் வீட்டிற்குள் வந்தனர்.

ஞானம், ஆண்டாள், மீனம்மா, மனோ, பாலா என அனைவரும் முன்னறையில் தான் அமர்ந்திருந்தனர். ஞானமும், பாலாவும் ஏதோ பேசியபடி இருக்க, மீனம்மா அவித்த கடலையை உறித்து வைத்துக்கொண்டிருந்தார். ஆண்டாள் பாலாவின் மகளை மடியில் வைத்து ஆட்டிக்கொண்டிருக்க சின்னவள் பாதி தூக்கத்துற்கு சென்றிருந்தாள். மனோ ஒற்றை காலை மடக்கி வைத்து சோஃபாவில் அமர்ந்து, மகன்கள் இருவரின் சட்டைகளில் பியிந்திருந்த பட்டன்களைப் பார்த்து கை தையல் போட்டுக் கொண்டிருந்தாள்.

"அப்பா எதுவுமே வாங்கி தரல தாத்தா" என வந்தவுடன் இரண்டும் ஓடிச்சென்று போட்டு கொடுக்க,

"தாத்தாவன்னா ஏமாத்தி வாங்கிட்டு வந்துருவீங்க, உங்கப்பாவ அப்பிடி ஏமாத்த முடியலயோ?" என்றார் மீனம்மா.

"வாந்தி எடுப்பாங்களோன்னு பயம் மனோ. அதான் எதுவும் வாங்கி குடுக்கல" என மனோவுக்கு அருகில் அமர்ந்த மார்க் தானாகவே பதில் சொல்ல.

"ரொம்ப நல்லது" என்று முடித்துக்கொண்டாள் அவள்.

"உங்க மூணு பேருக்கும் அங்கயிருந்து வாங்கிட்டு வந்துருக்கேன் மனோ. அதை அவனுங்களுக்கு எடுத்துக்குடு" என்றான், இதையும் அவளிடம் மட்டுமாக ரகசியம் போல,

"நீங்களே எடுத்து குடுக்கலாம். வாங்கிப்பானுங்க" என அவள் மற்றவர்களுக்கும் கேட்கும்படியே பதிலளித்தாள்.

"ரொம்ப பண்ணுறடி" என்றவன், யாரும் அறியாதவாறு அவள் மடக்கி மடிக்கு அடியில் வைத்திருந்த காலின் மெட்டிவிரலை நிமிண்டிவிட்டே எழுந்துச் சென்றான்.

"ம்ச்!" என்றவள் காலை எடுத்து கீழே விட்டு நேராக அமர்ந்துகொண்டாள்.

மதிய உணவு தனித்தனியாகவே உண்டுவிட்டு அவரவர் அறை புகுந்துவிட்டனர், "ஃபாரீன் சாரு சாப்பிட வாங்க. வச்சுட்டு நா என் வீடு வரைக்கும் போய்ட்டு வரணும்" என மீனம்மா அழைக்க,

"மனோ வைப்பா, இல்லனா நானே வச்சுக்குறேன் மீனம்மா நீங்க போங்க" என்றான் அவன்.

"அவ வைக்கட்டும் நீ கிளம்பு" என சொல்லிவிட்டு தான் ஆண்டாளும் அறைக்குள் சென்றுவிட்டிருந்தார். மனோ அங்கு தான் சாப்பாட்டு மேசையில் சின்னவன் காலை தொங்க போட்டு அமர்ந்திருக்க இவள் நாற்காலியில் அமர்ந்து ஊட்டிக்கொண்டிருந்தாள். கிருஷ்ணன் தட்டோடு டிவி முன் சென்று அமர்ந்திருந்தான்.

"அவளும் இன்னும் சாப்பிடல. அப்ப நீங்களே சேர்ந்து சாப்பிடுங்க" என்றவரும் கிளம்பிவிட்டார், அவர் மகள் ஊரிலிருந்து வருவதால் கிளம்பிவிட்டார்.

"எல்லா சனி ஞாயிறும் உனக்கு லீவா மனோ?" என அவள் பின் வந்து நின்றான் மார்கண்டேயன்.

"இல்ல" என்றவள் நெளியாமல் இருக்க அரும்பாடுபட்டாள். அவன் நாற்காலியில் சாய்ந்து கூட நிற்கவில்லை, ஒற்றை கை மட்டும் அவள் அமர்ந்திருந்த சேரின் பின் பகுதியில் இருந்தது.

"பின்ன? செகென்ட் சேட்டர்டே மட்டுமா?"

"எதுக்கு கேட்குறீங்க?" என்றாள் கடுப்பாக, எதுவுமே நடக்காதது போல வந்து நின்று பேசுபவனை ஒன்றும் செய்ய முடியாத கடுப்பு அவளுக்கு.

"சும்மா தெரிஞ்சுக்க தான்டி. இதகூட சொல்ல மாட்டியா?" என தோளை குலுக்க,

"பேங்க் ஹாலிடேஸ் மாதிரி" என்றாள் பட்டென்று,

"அடிக்கணுமா உனக்கு என்னைய? பால் வீசுற மாதிரி வேர்ட்ஸ வீசுற" என்றவன், அவள் பின்னங்கழுத்தில் ஊத,

வேகமாக விலகி எழுந்தவள், "என்ன வேணும்?" என்றாள் அவனை நேராக பார்த்து,

"அடிப்பாவி, நூல் ஒட்டிட்ருந்ததுன்னு ஊதினேன், விட்டா நிஜமாவே அடிச்சுடுவ போல. அம்மாடி நீ முகத்த தூக்கி வச்சுருக்க ஹைட்டுக்கு, எனக்கு வேற எந்த மூடும் வராது, தைரியமாவே இரு. வந்து வந்து பிள்ள குடுத்துட்டு போனேன்னு வேற சொல்லி காண்பிச்சுருக்க, இந்த தடவ அதுக்காகவே அமெரிக்கா போனதுக்கு அப்றம் தான் எதுவும்னு முடிவுல இருக்கேன். தப்பா நினைச்சு என்னைய கடியாக்காம போய் சாப்பாட எடுத்துட்டு வா சாப்பிடுவோம்" என அவன் பேசி நிறுத்தவும், வேகமாக உள்ளே சென்று தட்டில் சாதத்தை மட்டும் போட்டு கொண்டு வந்து மேசையில் அவன் முன் வைத்தாள். மற்ற எல்லாம் அங்கேயே இருந்தது.

"நீயும் வா. கண்ணா தான் சாப்பிட்டான்ல?" என அவள் கையிலிருந்த தட்டை காண்பிக்க,

"எனக்கு தனியா சாப்பிட்டு பழக்கம் தான். நீங்க உங்க சாப்பாட சாப்பிடுற வேலைய பாருங்க"

"எனக்கும் தனியா சாப்பிட்டு பழக்கம் தான். அதுக்காக சேர்ந்தே சாப்பிட மாட்டேன்னு அடமா பிடிச்சுட்ருக்கேன். போய் உனக்கும் எடுத்துட்டு வா, இல்லனா ஒரே தட்டுல ஷேர் பண்ணிப்போம். எனக்கு ஓகே"

"நல்லா எதாவது சொல்லிட போறேன். இப்படி பேசி பேசியே கரைச்சு ஏமாத்திடலாம்னு தான இங்க வந்து உட்கார்ந்துருக்கீங்க? அப்படி என்ன அவசியம் உங்களுக்கு? எதுக்கு என்னைய மறுபடியும் உங்க பக்கம் இழுத்து, என்னைய உங்களுக்காக ஏங்க வச்சு, அப்புறம் ஏதாவது காரணங்காட்டி சண்டை போட்டு விட்டுட்டு கிளம்பிடணும். அதுக்கு இப்பவே சண்டையா தானே இருக்கு, அத அப்படியே இருக்க விடுங்களேன்" என்றாள் முறைப்புடனே,

"நாலாம் சண்டை போடல. அங்க வச்சு போட்டேன். அப்றம் நீ பேசியிருந்தா பேசிருப்பேன். நீதான் வீம்பா இருந்த சோ நானும் இருந்தேன். இப்போ இதோ நீதான் அதே சண்டைய கன்ட்னியூ பண்ற, ஆனா என்னைய ப்ளேம் பண்ற. வேணாம் மனோ?" என்றான்.

"நீங்க எதுவுமே செய்யலல?"

"நாந்தான் சாரி சொன்னேனே?"

"சாரி சொல்லிட்டா, உடனே மன்னிச்சுடனுமா உங்கள?"
 

"அதான உலக வழக்கம்?"

"ச்ச உங்கட்ட மனுஷி பேசுவாளா?" என எரிச்சல் பட,

"அம்மா, அப்பா என்ன சொல்லுதாங்க?" என்றான் கண்ணன். அவ்வளவு நேரமும் கையிலிருந்த அப்பளம் வாய்க்கு வேலை கொடுத்திருந்ததால் இருவரையும் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தான்.

"சாப்பிட்டு போய் உங்கப்பாட்ட பாடம் படிக்கிறியா நீ? உனக்கு அவங்க சொல்லி தராங்களாம்" என்றாள்,

"அம்மாகிட்ட!"

"அப்பாக்கு நிறையா தெரியும், என்ன கேட்டாலும் சொல்லி தருவாங்க"

"இவ இருக்க கடுப்புக்கு நம்மள புகழ்றான்னா, அங்க ஏதோ ராங்கா நடக்க போவுதுன்னுல அர்த்தம்!" என இருவரையும் பார்த்தான் மார்க்.

கண்ணன் திரும்பி, "ஆமாவா?" என்றான் இப்போது இவனிடம்.

மார்க் மனோவை பார்க்க, "பையனுக்கு சொல்லி தர மாட்டீங்களா? அவங்க ரெண்டு பேரும் உங்க பொறுப்புன்னு சொன்னேன் தான? இதுக்கே இவ்ளோ யோசிக்கிறீங்க, பின்ன எங்கள அங்க கூட்டிட்டு போறேன் சொல்றதெல்லாம் ட்ராமா தான அப்போ?"

"ஹே இருடி. உடனே சுர்ருன்னு ஏறாத. பாடம் தான? நீ பேசுறதுல தான் அங்க பாடமா பாம்மான்னு தெரியலயேன்னு யோசிக்க வேண்டியதா இருக்கு எனக்கு" என சமாளித்தான்.

எப்படியோ சாப்பாட்டை முடித்து, அவனை குட்டி தூக்கமும் போட வைத்து, மார்க்கிடம் இருவரையும் கொண்டு விட்டாள், "ஸ்டடி டைம்" என்று,

"ஏன்டா உங்கம்மா செய்றத பார்த்தா, நீங்க ரெண்டு பேரும் பெரிய ஞான சூனியங்களா இருப்பீங்களோ?" என சந்தேகமாக அவர்களிடமே கேட்டான்.

"அப்படினா?" என கிருஷ்ணன் கேட்க, "இது என்ன?" என அவன் புத்கத்தை எடுத்து வந்து மார்க் மடியில் வைத்தான் கண்ணன்.

"நீ உன் பாடத்த எடுத்து எழுது. இவனுக்கு என்னன்னு பார்த்துட்டு உன்ட்ட வரேன்" என கிருஷ்ணனிடம் சொன்னவன், கண்ணன் வைத்த புத்தகத்தை அவனிடமே காண்பித்து, "என்ட்ட என்னன்னு கேட்குற, நீ சொல்லு இது என்ன?" என அதிலிருந்த மிருகங்கள் படங்களில் ஒன்றை காண்பித்து கேட்டான்.

"யானை!" என்றான் கண்ணன்.

"வெரிகுட். இங்க்லீஷ்ல?" என மார்க் கேட்க,

"இங்க்லீஷ் யானை" என்றான் மகன்.

"இங்க்லீஷ் யானையா? டேய் அது நேம் இங்க்லீஷ்ல எலிஃபேன்ட்"

"எலிபேந்த்"

"ஆமா அதான். இது என்ன சொல்லு?"

"ஆது"

"சரி ஆதாவே இருக்கட்டும். இது என்ன?"

"இந்த ஆது எப்பி புக்ல வந்துச்சி?" என மகன் கேள்வி கேட்டான்.

"அது ட்ரா பண்ணி ப்ரின்ட் பண்ணிருக்காங்க அப்படிதான் வந்துருக்கு"

"யாரு பண்ணா?"

"அது கடைக்காரங்க"

"யார் கைக்காரங்க?"

"இந்த புக் விக்ற கடைக்காரங்க"

"யாரு புக் விக்ற கைகாரங்க?"

"டேய் படிடா"

"மிஸ் படிக்க சொல்லிருக்காங்களா?"

"ஆமா. படிச்சா தான் நல்லது"

"எதுக்கு நல்லது?"

"படிச்சா தான் வேலைக்கு போகலாம்"

"அம்மா மாதிரி ஸூத்திலயா?"

"ஆமா"

"அப்ப நாக்கு ஸூத்தி வாங்குவோமா?"

"படிச்சு முடி வாங்குவோம்"

"எப்பி முயிக்கணு?"

"மனோ!" என கத்தியேவிட்டான் மார்க்.

"என்ன? இங்க தான இருக்கேன். எதுக்கு இப்படி கத்றீங்க?" என வந்தாள் மனோ.

"கொஸ்டின் மட்டும் கேட்காத ப்ளீஸ். எனக்கு ஏற்கனவே மூச்சு வாங்குது. நீ இவன கூட்டிட்டு போ. மூணு வயசுலயே படிச்சு ஹோம்வொர்க் கரெக்ட்டா எழுதி நாளைக்கே அவன் என்ன கலெக்டர் ஆக போறானா? மெதுவாவே படிக்கட்டும் அவசரமில்ல. நா இவன படிக்க வச்சுக்குறேன்" என கிருஷ்ணா பக்கம் திரும்பி அமர்ந்து விட, நக்கலான சிரிப்புடன், கண்ணனை அழைத்துச் சென்றுவிட்டாள் மனோ.
 
மார்க்கு 🤣🤣🤣🤣🤣மாட்டினடா அடுத்து கிருஷ்ணா டர்ன் 😂😂😂😂

என்ன தெனாவட்டா பேசுறான் மன்னிப்பு கேட்டா உடனே மன்னிச்சுடணுமா 😏😏 உன்னோட பாசமான அக்கா அடுத்த ஆப்பு வைப்பா.... 😄
 
Kanna kita irunthu thapichuta. Ana krishna irukane innum 😈😈😈
Un akka yaru ennanu innumada unaku puriyala. Ne poi ketu paru. 2×2 four nu kanakku potu chandramuki ah Mari Unga amma brain ah salavai senju idatha un peruku Matha vidamata. Half amount kudu...half idam kudu nu ethachu ketpa paru. Summava Mano senju katunu solluva. Ne America va maranthutu ingaye irukathuku valiya paru man
 
Top