மனம் -7
தன் வேர்களைக் கொண்டு பூமியைப் பிளந்து அடி ஆழம் சென்று செழிப்பாக வளர்த்து, பல உயிர்களின்பசியைப் போக்கும் பொறுப்புக் கூடியதால் பாரம் ஏற, மண்ணை நோக்கித் தன் தலை வணங்கி நிற்கும் நெற்கதிர்களைப் போலத் தன் தவறினால் உண்டாகும் மனவலியும் , எல்லாம் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்ற பொறுப்பும் உணர்ந்ததன் காரணமாகப் பாரம் தாங்காமல் அத்தை மகனின் முன் தலைக் குனிந்து நின்றாள் தார.
"என்ன தாரா… ஏன் இப்படி நிற்கிறாய்" என்றவனின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
“தாரிகா எங்கே அவளுக்கு... என்ன ஆச்சு... ஏன் வீட்டில் யாருக்கும் சொல்ல வில்லை .. அவளுக்கு உடல் நிலைச் சரியில்லை என்று… இரு நான் மாமியிடம் கேட்கிறேன்” என்று தன் அலைபேசியில் புனிதாவிற்கு அழைக்க முற்படுகையில் வேகமாகத் தடுத்தாள் தாரா…
அவன் செயலில் ஐயோ! என்று பதறினாள் நளினி.
இந்தச் செயலில் இருவரையும் பார்த்த அவன் பார்வையில் உள்ளுர நடுங்கினாள் நளினி.
வேகமாகத் தாராவின் அருகே வந்து நின்றவள், மெல்ல அவள் காதருகே “என்ன சொல்லிச் சமாளிக்க” என்ற அவள் வார்த்தைகளை எல்லாம் கேட்டான் மகேந்திரன்.
தாரா என்ற குரல் உயர்த்தாமல் கர்ஜித்த அவன் வார்த்தைகளில் “ மாமா ப்ளீஸ்... கோபம் படாமல் கேளுங்கள்... இங்கே வைத்து எதுவும் பேச வேண்டாம்… இன்னும் கொஞ்ச நேரத்தில் தாரிகாவிற்குக் குழந்தைப் பிறந்து விடும்… அப்பறம் பேசலாம் நம்மை” என்ற அவள் வார்த்தைகளை எல்லாம் கேட்டவன் அதிர்ச்சியில் அங்கே சட்டென அமர்ந்ததில் அங்கே இருந்த இருக்கைகள் அதிர்ந்தது.
“என்ன உளறிட்டு இருக்கிறாய் நீ , உன்னுடைய பேச்சின் அர்த்தம் தெரியுதா!” என்றவனின் கேள்விக்குப் பதில் அளிக்கப் பயந்தவளின் நிலையைக் கண்டு உதவிக்கு வந்தாள் நளினி…
“என்ன மாமா பேசறீங்க… நீங்க நின்று கொண்டு இருப்பது எங்கே என்று பார்த்துட்டுப் பேசுங்கள்”… என்றாள் நளினி…
தாராவைக் காப்பாற்ற எண்ணியவளின் மனதில் அவனை 'மாமா' என்று அழைத்ததை உணரவில்லை அவள்…
ஆனால் அவளின் மாமா என்ற அழைப்பைப் பிடிக்காதவன் முகம் சுருங்கியது.
“நாங்களே பயந்துட்டு இருக்கோம்... இப்படிக் கேள்வி மேல் கேள்விக் கேட்டுக் கஷ்டப் படுத்தாதீங்க” என்றாள் நளினி.
அவளைப் பார்த்தப் பார்வையில் சர்வமும் நடுங்கியது நளினிக்கு…
மெல்ல அமைதியானாள்.
"தாரா நான் உன்னிடம் தான் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்" என்றான் மகேந்திரன்.
"தாரிகா ஒரு பிள்ளைக்குத் தாயாகப் போகிறாள் மாமா… அதற்குத் தான் நாங்கள் இங்கே இருக்கோம்... இன்னும் சிறிது நேரத்தில் என்ன குழந்தை என்று மருத்துவர் வந்து சொல்லி விடுவாரு... ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்" என்றாள் தாரா.
ப்ளீஸ் என்ற அவள் வார்த்தை ஆயிரம் வலிகளைச் சுமந்து விழுந்தது அவன் முன்னால்.
அவனும் காத்திருந்தான்… இந்தக் காத்திருப்பின் போது... தன் அருகே இருக்கும் நளினியின் மேல் கவனத்தைத் திரும்பியது மகேந்திரனுக்கு.
சிறு பிள்ளை என்ற தோற்றம் இருந்தாலும்... முகத்தில் தெரியும் முதிர்ச்சி அவள் வயதைச் சொல்லியது…
அங்கும் இங்கும் நடந்து நேரத்தைக் கடத்தும் அவள் செயலில் இறுக்கமான சூழலிலும் அவனுக்குச் சிரிப்பு வந்தது.
மெதுவாகச் சிரித்தவனின் முகத்தைப் பார்த்த நளினி, சிரித்தால் அழகாக இருக்கிறது தானே... அப்பறம் எதுக்கு முகத்தை உர்ர் என்று வைத்துக் கொண்டு உலா வரணும்... என்று அவனை மனதில் திட்டிக்கொண்டிருந்தாள்.
அவள் மனதில் மகேந்திரன் மேல் நன்மதிப்பு உண்டானது.
தாரா விடம் அவன் பேசியதில் மாமா என்பதையும் தாண்டி ஒரு சகோதரனின் கண்டிப்பும் கோபமும் அவளால் உணர முடிந்தது.
நேரம் கடக்க... மிகவும் போராடித் தன் மகனை ஈன்றெடுத்தாள் தாரிகா…
மகனின் முகத்தைக் கண்டதும் கண்களில் நீர்ப் பெருக்கெடுத்தது… இவன் முகம் பார்க்கத்தான் எவ்வளவு போராட்டம்... இனி வரும் காலங்களில் என்ன செய்வேன் என்ற பயம் அவனைக் கைகளில் வாங்கும் போது நடுங்கியது.
அவளின் நிலையை உணர்ந்து டாக்டர் அவள் தோளில் தட்டிய படி... குழந்தையை எடுத்துக் கொண்டு தாரா விடம் வந்தார்.
வேகமாகத் தன் உடன் பிறந்தவளின் மகனைத் தன் கைகளில் ஏந்தியவளுக்கு மனதில் பலவிதமான உணர்வுகள் தோன்றி அவளை உணர்ச்சி வசப்பட வைத்தது.
கண் கலங்கக் குழந்தையைக் கையில் ஏந்தியவள் பட்டுப்போன்ற பிள்ளையின் குட்டி நெற்றியில் மெல்ல முத்தமிட்டு உச்சி முகர்ந்தாள். பெறாமல் பிள்ளைக்குத் தாயானாள் தாரா.
தாராவின் அருகே வந்த நளினியும் சந்தோஷமாகக் குழந்தையைத் தொட்டுப் பார்த்து "பட்டுக் குட்டி" என்று அவன் கையில் தன் இதழ்ப் பதித்தாள்.
அவளின் செயலில் மகேந்திரன் மெல்ல அருகே வந்து குழந்தையைத் தன் கைகளில் வாங்கினான்.
பெரியவர்கள் யாரும் இல்லாமல் மிகப்பெரிய விஷயத்தை நடத்தி இருந்தனர் பெண்கள் இருவரும். இனி வரும் காலங்களில் தான் பலவிதமான கஷ்டங்களைக் கடந்து வரவேண்டும் என்று உணர்ந்து இருந்தனர்.
இந்தச் சமுதாயத்தைப் பற்றிய எந்தக் கவலையும் அவர்களைத் தாக்காமல்... இந்த நொடியை இந்த மூன்று பேரும் அனுபவித்தனர் ஆனந்தமாக... தங்கள் அன்பும் தைரியமும் கொண்டு இந்தப் பூமியில் பூத்துக் குலுங்கப் புத்தம் புதிய மலரை வரவேற்றனர்...
உள்ளே மிகவும் சோர்வாக மனதளவில் தளர்ந்துக் கிடந்தாள் தாரிகா. அவளின் வேதனையும் பயமுமே இந்த நொடியை அனுபவிக்க விடவில்லை. இனி என்ன என்ற கேள்விக்குப் பதில் தான் அவளிடம் இல்லை.
கண்களை மூடிப் படுத்திருந்தாள்... அவளுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து அறைக்கு மாற்றிய தகவலைத் தந்தனர் அங்கே வந்த செவிலிப் பெண்கள்.
மூவரும் வேகமாக அவளைக் காணச் சென்றனர் அவளை அனுமதித்து இருக்கும் அறைக்கு.
பெண்கள் மட்டுமே இருக்கின்றனர் என்று நினைத்தவளின் எண்ணத்தைப் பொய்யாக்கி அங்கே காட்சித் தந்த மகேந்திரன் கண்டதும் பயத்தில் முகம் கருத்தது.
மகேந்திரனால் அவள் நிலையை உணர முடிந்தது.
மெல்ல அவள் அருகே வந்தவன் அவள் தலையை வருடி வருந்தாதே என்று நம்பிக்கையைத் தந்து விட்டு வேகமாக வெளியே வந்தான்.
குழந்தையைத் தாரிகாவிடம் கொடுத்த தாரா.. நளினியிடம் பார்த்துக்கொள்ளச் சொன்னவள் மகேந்திரனிடம் பேசுவதற்கு வேகமாக வெளியே வந்தாள்.
"மாமா, நான் சொல்வதைக் கொஞ்சம் கோபப்படாமல் கேளுங்கள்" என்றாள் தாரா.
"ம்ம்... இனிக் கோபப்பட்டு என்ன பண்ண, நடந்ததை மாற்றியமைக்க முடியுமா… இல்லை தானே…நீசொல்லு என்ன நடந்தது" என்று கேட்டான் மகேந்திரன்.
தாரிகாவின் காதல், அதில் அவள் கர்ப்பமானது, அதனால் தான் சதீஷை அடித்தது. அதனால் அவனுக்கு ஏற்பட்ட விபத்து … அதில் அவனுக்கு ஏற்பட்ட மறதி… எல்லாம் சொன்னவள்… அதியமான் தன்னை அவமானப் படுத்தியதை அவனிடம் கூறவில்லை.
அந்தச் சம்பவம் தாரிகாவின் வாழ்க்கையில் தேவையில்லாத பிரச்சினைகளை உண்டாக்குமோ என்றப் பயம் மனதில் இருந்தது.
இந்தச் சூழ்நிலையில் தாரிகா, தவிக்கக் காரணம் தன்னுடைய பொறுமையின்மைத் தான் என்றக் குற்ற உணர்வே அவளைக் கொன்றது. அவனால் இதை அவள் கூறவில்லை.
"சரி இப்போது என்ன செய்ய... இவளின் நியாபகமே அவனுக்கு வரவில்லையென்றால் என்ன செய்வது தாரா?" என்றுக் கேட்டான் மகேந்திரன்.
"புரியுது மாமா… நான் என்ன சொல்லவரேனா"…என்று இழுத்தவளை…
"அதுதான் எல்லாம் தெளிவாகத் திட்டம் போட்டுப் பண்ணறையே அப்பறம் என்ன தயக்கம் சொல்லு" என்று அவளை ஊக்கினான்.
அதில் மனம் வேதனையில் சுருங்கியதை முகம் காட்டியதில்...
அவன் கைகளைப் பிடித்தவன் " சாரி, நீ என்ன யோசிச்சு வைத்து இருக்கிறாய் என்று சொல்லு" என்றான்.
"அவளுக்கு இன்னும் ஒரு வருடம் தான் இந்த டிகிரி முடிக்க... அதற்குப் பின் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஆக ஒரு பரீட்சை எழுதனும்... அது வரைக்கும் எதாவது தனியார் பள்ளியில் வேலைக்குச் சேர்த்தி விட்டாள் போதும் மாமா... கையில் ஒரு வேலை இருக்கும் போது... அவளும் கொஞ்சம் தைரியமாக இருப்பாள்... அதுமட்டுமில்லைச் சும்மா இருக்கும் மனம் சைத்தானின் அரண்மனை என்று சொல்லுவாங்க.. அதனால் அவள் எதாவது பண்ணட்டும்” என்றாள் தாரா.
"இந்த ஐடியாவெல்லாம் சரி தான் … அவன் பையனை என்ன பண்ணப்போற" என்று கேட்டான் மகேந்திரன்.
அடுத்த மாதத்தில் இருந்து நான் வெளியூர்ப் போறேன் மாமா. எனக்கு அங்கே வேலை உறுதி ஆகிருச்சு. அங்கே நான் தனி வீடு எடுத்துத் தங்கி அவனைப் பார்த்துக்கொள்கிறேன். சதீஷ் திரும்ப வர வரைக்கும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் தாரா.
"நீ நன்றாக யோசிச்சுத் தான் பேசுறியா, தாரா... இது சுலபமான விஷயம் இல்லை.
உன்னோடைய வாழ்க்கையைப் பணயம் வைக்கிற புரியுதா உனக்கு"… அத்தை மகனிடம்
"எதுவும் ஆகாது மாமா... பார்த்துக் கொள்ளலாம்" என்றாள் தைரியமாக.
அவளின் இந்தத் தைரியம் அசட்டுத் தைரியமாகத் தோன்ற வில்லை மகேந்திரனுக்கு.
"புரியுது, தாரா... அவன் உண்மையாகக் காதலிக்கிறான்.. அவன் அண்ணன் எப்படியும் தம்பியின் காதலை நிறைவேத்திருவான் சொல்லற… ஆனால் இதெல்லாம் நடக்க டைம் எடுக்கும். இந்த டைம் எடுக்கும் என்பது தான் இங்குப் பிரச்சினையே" என்றான் மகேந்திரன்.
"எவ்வளவு காலம் உங்கள் பெற்றோர் வீட்டில் வைத்து உங்களை அழகுப் பார்ப்பார்கள்... திருமணம் என்ற பேச்சை எடுத்தால் என்ன பண்ணுவீங்க" என்று கேட்டான் மகேந்திரன்.
"அதற்குள் கண்டிப்பாகச் சதீஷ் தாரிகாவைத் தேடி வருவான்... எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றாள் தாரா.
மெல்லப் புன்னகை முகத்தில் படர… "அவளோட காதலன் மேல் அவளை விட உனக்குத் தான் நம்பிக்கை அதிகம் போலையே" என்று அவனின் வார்த்தைகளைக் கேட்டு மனதில் 'அவன் அண்ணன் மேல் மாமா' என்று நினைத்தாள் தாரா.
அதியமான் எண்ணம் தோன்றிய நொடி, மின்னல் போன்று ஒரு வலி மனதில் ஊடுருவியது.
"எல்லாம் நல்லதாக நடக்கும் நம்புவோம் மாமா"என்றவள் தயங்கினாள் அவனிடம் எப்படிக் கேட்க என்று…
அதைக் கண்டுக்கொண்ட மகேந்திரன் "என்னிடம் என்ன உனக்குத் தயக்கம் தாரா" என்றான்.
அவனின் அக்கறையான பாசத்தில் கண் கலங்கியது…
"அது… நான் வெளியூர்ப் போகனும்" என்று ஊரின் பெயரைப் சொன்னவள்... "அங்கே குழந்தையோடு தங்கனும்... தனியாக ஒரு பெண்... குழந்தையோடு இருப்பது கஷ்டம்…எனக்கு நல்ல இடத்தில் வீடு வேண்டும் மாமா… அப்பார்ட்மெண்ட் போல இருந்தால் நன்றாக இருக்கும்... அதுவும் வாடகைக்குப் போதும் மாமா... அதற்குப் பணம் தேவைபடும் அது மட்டும் இல்லாமல் எனக்கு அங்கே வீட்டு வேலைக்கு நம்பிக்கையான ஒரு பெண் உதவிக்கு வேண்டும் மாமா" என்றாள் தாரா.
"உனக்கு எப்போது வேலையில் போய்ச் சேரவேண்டும்" என்று கேட்டான் மகேந்திரன்.
அதற்குப் பதில் சொன்னவளிடம் ... "என் நண்பன் அப்பார்ட்மெண்ட் அங்கே இருக்கிறது... அது நீ வேலைக்குச் செல்லும் பகுதியின் அருகில் தான் நினைக்கிறேன்… ஆனால் அது நமக்குக் கிடைக்குமா என்று தெரியவில்லை…
நான் கேட்டுப் பார்க்கிறேன்.. உனக்கு அதிஷ்டம் இருந்தால் கிடைக்கும்" என்றான்.
நம்ம ஊரில் இருக்கும் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேவைப் படுகிறது என்று கேள்விப்பட்டேன் என் கஸ்டமர்த் தான், அந்தப் பள்ளி நிர்வாகம்... அதனால் தாரிகாவின் வேலைக்கு நான் கேரண்டி" என்றான் மகேந்திரன்.
"அப்பொழுது நளினிக்கும் கிடைக்காமா என்று பாருங்கள் மாமா" என்றாள் தாரா…
சிறிது யோசனைக்குப் பின் சரி என்றுத் தலையை ஆட்டியவன் "முயற்சிப் பண்றேன்" என்று உறுதி அளித்தான் தாராவிற்கு.
தன் திட்டம் எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதில் மனதின் ஓரத்தில் நிம்மதி உண்டானது.
எப்படியும் சதீஷ் வந்து தாரிகாவைத் திருமணம் செய்யும் வரைக்கும் தங்கள் இந்தச் செயல்கள் எதுவும் தன் பெற்றோருக்குத் தெரியக் கூடாது என்பதில் இறைவனிடம் நிமிடத்திற்கு ஒரு முறை வேண்டுதல் வைத்தாள் தாரா.
தாராவின் கவலையைப் புரிந்து கொண்ட மகேந்திரன் அதெல்லாம் தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கைக் கொடுத்தான்.
"சரி நான் கிளம்பனும்… இல்லை என்றால் பல கேள்விகள் வரும்" என்றவன் தாரிகாவைக் காணச் சென்றான்.
அத்தை மகனின் முகத்தை நேருக்கு நேர்ப் பார்க்க முடியாமல் கண் தாழ்த்தினாள் தாரிகா.
"உன் காதல் மேல் உனக்கு இருக்கும் நம்பிக்கையை நாங்களும் நம்பறோம் தாரிகா.
தாரா எல்லாம் சொல்லி விட்டாள்... வருந்தாதே எல்லாம் நல்லதாக நடக்கும் என்று எண்ணுவோம்… உனக்குத் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நான் ஏற்பாடுச் செய்கின்றேன் இந்தப் படிப்பு முடிந்ததும் நீ வேலைக்குப் போகத் தயாராகு… உன் தோழிக்கும் சேர்த்தித் தான் சொல்லுகிறேன்" என்றான் மகேந்திரன்.
"அங்கு வேலைச் செய்து கொண்டே அரசுப் பணிக்கான தேர்விற்குப் படியுங்கள்" என்று அவளுக்குத் தைரியம் தந்தவன் "சரி நான் கிளம்பறேன் என்று விடைப் பெற்றான்.
தனக்கும் வேலையை வாங்கித் தரேன் என்ற அவனின் வார்த்தைகளைக் கேட்டுச் சந்தோஷத்தில் அவன் பின்னே சென்ற நளினி, “ வேலையெல்லாம் வாங்கித் தரீங்க… அப்படியே வாழ்க்கையும் தரலாமே" என்றாள்.
அவளின் வார்த்தைகள் புரியாத புருவம் சுருங்கப் பார்த்தவன்… அதன் அர்த்தம் புரிந்ததும் "எனக்கு இருப்பது ஒரு வாழ்க்கைத் தான்... அதையும் உனக்குத் தந்து விட்டு நான் என்ன செய்ய" என்றான்.
"உங்கள் வாழ்க்கையில் எனக்குப் பங்குத் தாங்க" என்றாள் குறும்பாக.
"உனக்கு விளையாட என் வாழ்க்கைத் தான் கிடைத்ததாம்மா" என்றான் கேலியாக.
"உண்மையில் நான் கேட்டது விளையாட்டு என்று நினைக்கிறீங்களா" என்றவளின் விழி நிறைய
அதில் பதறியவன்… "நான் சும்மா சொன்னேன் முதலில் படிப்பை முடி… என் விதி நீயானால்… என்றும் என்னருகில் நீ மட்டுமே... அது உறுதி" என்றான் மகேந்திரன்.
இப்போது குழம்பி நிற்பது நளினியின் முறையாயிற்று…
'என் காதலை ஏற்றுக் கொண்டாரா..இல்லை என்று தவிர்த்துப் போகிறாரா என்ன சொல்லவராரு'... என்று அப்படியே நின்றாள் நளினி…
அவள் மனதில் மகேந்திரன் மேல் காதல் நங்கூரம் இட்டு அமர்ந்தது...
மனதில் வரைந்த காதல் ஓவியம் மழையில் நனைந்துச் சாயம் வெளுத்து விட்டதே என்று உள்ளம் உருகித் தவித்தாள் தாரிகா.
எங்கே தவறிழைத்தேன்.. காதலிக்கும் போது போலித்தனம் எங்கேயும் பிடிபடவில்லையே… அவனின் காதல் உண்மையாக இருந்ததே…
போலியைக் கண்டு ஏமாறும் அபலை அல்லவே நான்!
கூட்டமாகப் பாய்ந்து வந்த உணர்வுக் குவியலில் காணமல் போனதே என் காதல் என்று மனதில் புலம்பித் தவித்தாள் தாரிகா.
தன் தவறிய நிகழ்வு அவன் மகனிடம் இருந்து அவளை விலக்கி வைத்தது.
பால் அருந்த மட்டுமே தாய் மடி வந்தவன் மற்ற நேரமெல்லாம் தாராவின் கைகளில் தவழ்ந்தான்…
நாட்கள் கடக்கத் தாரா, செல்லும் நாளும் வந்தது.
வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சந்தேகம் வராது எல்லாம் செய்திருந்தாள் மகேந்திரன் உதவியோடு.
பிள்ளையோடு சென்று விட்டாள் தாரா.
மகனின் பிரிவு வலியை உண்டாக்கியப் போதும் தன் தவறுக்குத் தண்டனையாக ஏற்றுக் கொண்டாள் தாரிகா.
தன் படிப்பை முடிக்க இன்னும் ஒரு வருடம் இருந்தது.
தாரிகாவைத் தனியாக விடாமல் உடன் இருந்து பார்த்துக் கொண்டாள் நளினி.
நட்பு மீறியப் பாசமும் இருந்தது இருவருக்கும்.
தாரா, புதிய ஊர்ப் புதிய மக்கள் என்றுத் தன் வாழ்க்கையைத் தொடங்கினாள்.
மகனோடு வாழும் இந்த வாழ்க்கை அவளுக்கு அழகானதாக இருந்தது.
மனதிற்குள் புதைந்து இருக்கும் ரகசியத்தைத் தோண்டி எடுக்க அவன் வருவானோ… வந்தவன் கிள்ளித் தருவது அன்பாக இருக்குமா இல்லை... அடக்க முடியாத அளவுக்
குத் துயரை அள்ளித் தருவானா... என்பது வரும் காலங்களில் தெரியும்…
எது எப்படியோ அன்போ துயரோ தன்னைப் பாதிக்காது என்று நிமிர்ந்து நிற்பாள் இந்தப் பவளக்கொடி…
தொடரும்…