எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மன்னிப்பாயா உயிரே 🥺💔

Status
Not open for further replies.
தனது வீட்டில் வேலை செய்ய வந்த தேன்மொழியை காதலிக்கும் நாயகன் ஆழிவேந்தன்... இருவரும் காதலித்து கொண்டிருக்கும் சமயத்தில் தனது தவறான புரிதலால் தேன்மொழியை வார்த்தைகளால் காயப்படுத்தி மனதை உடைத்து வீட்டை விட்டு போக வைக்கும் வேந்தன்... அவளை தேடி அலைந்து கொண்டிருக்கிறான் ஆழிவேந்தன்... அவனது கண்ணில் படாமல் ஆட்டம் காட்டி கொண்டிருக்கிறாள் தேன்மொழி...


இருவரும் சேர்வார்களா..?? தேன்மொழி அவனை மன்னித்து ஏற்றுகொள்வாளா என்பதே இக்கதை.... 🥺❤️‍🩹inbound3324630663696503674.jpg
 
Last edited:
1. மன்னிப்பாயா உயிரே 🥺💔


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கிராமத்தின் (கற்பனை மட்டுமே) மையப்பகுதியில் அமைந்திருந்த கலை நயத்தோடு பழமை மாறாது அதே சமயத்தில் சற்று மாடர்னான மூன்று அடுக்குகளை கொண்ட வீட்டின் மூன்றாம் மாடியில் இருந்த ஒரு அறையில் அமர்ந்து தனது கையில் இருந்த புகைப்படத்தை பார்த்து பேசி கொண்டிருந்தான் இருபத்தி ஆறு வயதே ஆன ஆடவன் ஆழிவேந்தன்… அவனே நம் கதையின் நாயகன்… அவனது கையில் இருந்த புகைப்படத்தில் சிரித்த முகமாக தேவதையாக ஜொலித்து கொண்டிருந்தாள் ஆழிவேந்தனின் தேனு என்ற அழைப்பிற்கு சொந்தக்காரியான தேன்மொழி… அவளது புகைப்படத்தை வருடியவனின் கண்கள் கலங்கி போனது.. அதை விட அவனது கண்களில் கோபத்தின் சாயல் அதிகமாக இருந்தது.. தனது கண்களை இறுக்கி மூடி கண்ணீர் வெளியேறாமல் தடுத்த படியே கண்களை திறந்தான்.. அவனது கண்கள் இரண்டும் கோபத்தில் சிவந்து போயிருந்தது…


ஆழிவேந்தன், “தேனு… எங்க டி இருக்க.. என்னை மன்னிச்சிடி.. நான் உன்னோட மனசை உடைக்கிற மாதிரி பேசி உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன்.. நான் அப்படி பேசியிருக்க கூடாது.. நான் நீ போன்ல பேசுனதை கேட்டு மனசு உடைஞ்சு தான் அப்படி எல்லாம் பேசுனேன்… நீயும் என்னோட பணத்திற்காக தானே என்னை காதலிக்கிற மாதிரி நடிச்சிட்டு இருந்தா.. உன்னை எப்படியாவது கண்டு பிடிச்சு உன்னை கட்டி போட்டாவது என் கூட வாழ வைப்பேன்… நீ நிறைய விஷயங்களை என் கிட்ட இருந்து மறச்சிட்டேல…” என்று கூறியவன் அன்று தன்னவளை காயப்படுத்த வேண்டி பேசியது அனைத்தையும் நினைத்து பார்த்தான்.. அவள் கூற வருவதை காது கொடுக்காமல்… அவளை பேச விடாமல் தனது வார்த்தைகளால் காயப்படுத்தியதை மட்டும் மறந்து விட்டான் போலும்…


ஒன்பது மாதங்களுக்கு முன்பு :


தேன்மொழி சந்தோசமாக ஆழிவேந்தனின் அறைக்குள் நுழைந்து அவனிடம் ஏதோ கூற வாயை திறந்தவள் அழிவேந்தன் கூறியதை கேட்டு மனது உடைந்து கண்கள் கலங்கி கண்ணீர் வழிய ஆரம்பித்தது…


ஆழிவேந்தன், “ஏய் வேலைக்காரி.. எவ்வளவு தைரியம் இருந்த என்னோட அனுமதி இல்லாம என் ரூமுக்குள்ள வருவ… என்னோட ரூமுக்கு வர்றதுக்கு முன்னாடி வேலைக்காரங்க எல்லாரும் கதவை தட்டிட்டு வரணும்னு சொல்லிருக்கானா..” என்று கோபமாக கூறினான்.


அவன் கூறியதை பெரிதாக எடுத்து கொள்ளாத தேன்மொழி அவனது அருகில் நெருங்கி அவனை அணைத்து கொண்டு, “என்னாச்சு மாமூ.. ஏன் இப்படி கோபப்படுற.. ஏதாவது பிரச்சனையா.. ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையா.. என்ன பிரச்சனையா இருந்தாலும் என் கிட்ட சொல்லு நான் உன்னோட பிரச்சனைக்கான தீர்வை கண்டு பிடிச்சு கொடுக்கிறேன்…” என்று தன்னவனின் கோபத்தை குறைக்கும் முயற்சியில் அவனது முதுகை தட்டி கொடுத்தாள்..


அவளது அணைப்பில் உருகிய மனதை கோபம் என்ற போர்வையால் அடக்கி அவளை தன்னிடம் இருந்து பிரித்து தள்ளி விட்ட ஆழி, “ஏய்.. உனக்கு வெக்கமா இல்ல.. என்னை மயக்கணும்னு நினைச்சு அதே மாதிரி மயக்கி நீ நினைச்ச எல்லாத்தையும் சாதிச்சிட்டியே… என்னை காதலிக்கிற மாதிரி நடிச்சு என்னோட சொத்தை ஆட்டைய போடணும்னு தானே என்னோட வீட்டுக்கு வேலைக்காரி வேஷம் போட்டு வந்த.. நீ ஒரு அப்பாவி மாதிரி நடிச்சு என்னோட வீட்டில உள்ள எல்லாரையும் ஏமாத்தி உன் பக்கம் திசை திருப்பி நீ சொல்றது எல்லாம் உண்மைன்னு நம்ப வச்சிட்டேல…. இப்பவும் உன்னோட உடல் தேவையை என் மூலமா அதாவது என்னை மயக்கி உன்னோட இச்சையை தீர்த்துக்க தானே வந்த… உன்னோட நாடகம் இப்போ எனக்கு தெரிஞ்சிடிச்சு..” என்று கோபமாக கூறினான்.



தேன்மொழி, “ஏன் மாமூ இப்படி எல்லாம் பேசுற.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா.. நான் எதுக்கு உன்னை காதலிக்கிற மாதிரி நடிச்சு ஏமாத்த போறேன்… நான் உன்னை உண்மையா காதலிக்கிறேன்.. நீயும் என்னை காதலிக்கிறேன்னு எனக்கு நல்லாவே தெரியும்… நீ இப்போ ஏதோ கோபத்தில இருக்க நான் உன் கிட்ட சொல்ல போற விஷயத்தை கேட்டா உன்னோட கோபம் இருந்த இடம் தெரியாம போக போகுது பாரு..” என்று கூறியவள்.


“மாமூ, இரண்டு வாரத்துக்கு முன்னாடி உங்களுக்கு காய்ச்சல் வந்த அன்னைக்கு…” என்று சொல்ல முடியாமல் திணறியவளின் உடல் முழுவதும் வெட்கத்தால் சிலிர்த்து அடங்கியது.. அதை விட தாய்மையின் காரணமாக அவளது முகம் பூரித்து போயிருந்தது… கன்னம் இரண்டும் வெட்கத்தில் செவ்வானமாக சிவந்திருந்தது.. வெட்கத்தால் சிவந்திருந்த அவளது கன்ன சிவப்பை பார்த்த ஆழி அவள் கூற வருவதை கேட்காமல் அவளை தவறாக புரிந்து கொண்டு அவளது மீதிருந்த கண் மண் தெரியாத கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று கூட யோசிக்காமல் வார்த்தைகளை விட்டான்.. பின்னாளில் அதை நினைத்தே அழ போகிறோம்… தன்னவள் அவளை தேடி தன்னை அலைய வைக்க போகிறாள் என்றும் அறியாமல் சிறிதும் யோசிக்காமல் அவள் மீது சிறிதும் நம்பிக்கை இல்லாமல் அவளை வார்த்தைகளால் வதைத்து காயப்படுத்தினான்… இப்போதும் அவன் மீது எந்த தவறும் இல்லை.. தவறு முழுவதும் அவள் மீதே என்று நினைத்து கொண்டிருக்கிறான் அவன்...



அழிவேந்தன், “ஏய் என்ன டி.. நான் உன்னை காதலிச்சேனா.. செம்ம காமெடி டி… நான் உன்னை காதலிக்கிறேன்னு என்னைக்காவது உன் கிட்ட சொன்னானா.. நீயா என் பின்னாடி சுத்துன… நானும் உன்னை டைம் பாஸ்சுக்கு யூஸ் பண்ணலாம்னு தான் காதலிக்கிற மாதிரி நடிச்சேன்…. அன்னைக்கு நடந்தது வெறும் ஆக்சிடென்ட் மட்டும் தான்.. நான் காய்ச்சல்ல சுயநினைவு இல்லாத நேரத்தில நீ என்னை நெருங்கி வந்த நானும் அதை பயன்படுத்தி உன்னை எடுத்துக்கிட்டேன்…. நீயா ஆசைப்பட்டு என்னை நெருங்கி வந்த நானும் பார்க்க தக்காளி பழம் மாதிரி இருந்த உன்னை விட முடியாம எடுத்துக்கிட்டேன்… நீயும் அதுக்காக தானே வந்த..” என்று அவளை கொச்சையாக பேசினான் ஆழிவேந்தன்..



“அப்புறம் அன்னைக்கு நடந்ததை வச்சு என்னை பிளாக்மெயில் பண்ணி என்னோட சொத்தை அடையலாம்னு மட்டும் நினைக்காத… உன்னோட திட்டம் எதுவுமே வெற்றி அடையாது.. நீ அன்னைக்கு நடந்ததை எல்லார்கிட்டயும் சொன்னாலும் நான் அதை அப்படியே மாற்றி உன் மேல தான் தப்பு இருக்க மாதிரி சொல்லுவேன்.. அன்னைக்கு நடந்தது உனக்கே தெரியும்.. நீயா தான் என்னை தேடி வந்த.. உன்னோட உடல் தேவையை நிறைவேத்திக்க தான் என்னை தேடி வந்தேன்னு எனக்கு நல்லா தெரியும்.. அதை வச்சே நான் காய்ச்சல்ல கிடந்ததை பயன்படுத்தி உனக்கு சாதகமாக மாற்றிட்ட… நான் சுயநினைவில இல்லாத நேரத்தில என் கூட வெக்கமே இல்லாம ஒண்ணா இருந்திருக்க…” என்றவன் சில அந்தரங்க விஷயங்களை அவளது காதில் கூறினான்..


அவன் கூறியதை கேட்டு துடித்து போனாள் தேன்மொழி.. தன்னவன் காய்ச்சலின் வீரியத்தில் கண்ணை கூட திறக்க முடியாமல் கிடந்தவனுக்கு மருந்து, மாத்திரை, ஊசி போட்டும் காய்ச்சலின் வீரியம் குறையாமல் இருந்ததால் தன்னவனை காப்பாற்ற வேண்டி தன்னையே அவனுக்கு கொடுத்ததை இவ்வளவு கேவலமாக பேசினானே என்று நினைத்து அவளது இதயம் சில்லு சில்லாக நொறுங்கியது.. தனது காதலை கொச்சைப்படுத்தியதை அவளால் தங்கி கொள்ள முடியவில்லை… அவளது மனதில் அவ்வளவு வலி ஏற்பட்டது.. இதற்கு மேல் எதற்க்காக உயிரோடு இருக்க வேண்டும் என்றும்.. இப்போதே பூமி பிளந்து சாகமாட்டோமா என்று மனதில் நினைத்தவள் தனது வயிற்றில் வளரின் தனது உதிரத்தின் நினைவு வந்ததும் தனது எண்ண போக்கை கண்டு நொந்து போனவள் தனது குழந்தைக்காக வாழ வேண்டும் என்று உறுதியான முடிவை மனதில் எடுத்து கொண்டாள்..



ஆழிவேந்தன் ஏற்கனவே தேன்மொழியை காயப்படுத்தியது போதாது என்று நினைத்தான் போலும், “ஏய்.. உனக்கு பணம் தானே முக்கியம்.. என்னோட பணத்திற்காக என் கூட படு**.. பணத்திற்காக எவன் கூட வேணாலும் என் கூட படுத்த மாதிரி அவனுங்க கூட போவியா… நீ போனாலும் போவ டி.. உனக்கு அதெல்லாம் கை வந்த கலை தானே… உனக்கு நடிக்க சொல்லியா தரேனும்.. நீ தான் டிராமா குயினாச்சே… அது மட்டுமா அழகா வேற இருக்க உன்னோட அழகை காட்டியே எல்லாரையும் மயக்கிடுவியே.. என்னை மயக்கினா மாதிரி.. உனக்கு உன்னோட அழகை காட்டி மயக்க மட்டும் தானே தெரியும்…” என்று அவளது ஒழுக்கத்தை பற்றி மிகவும் கேவலமாக பேசினான்..


“நான் உன்னை எப்பவும் காதலிக்க மாட்டேன்.. உன் கூட ஒண்ணா இருந்தேன்னு உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைக்காத.. எனக்காக என் மாமா பொண்ணு சம்யூ இருக்கா.. அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.. உன்னை வேணும்னா வப்பாட்டியா வச்சுக்கிறேன்…” என்று ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்து விட்டோம் என்று சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லாமல் அவளை இன்னும் வார்த்தைகளால் வேதனைப்படுத்தினான்..



அவன் கூறியதை கேட்டா தேன்மொழியின் இதயத்தில் கூர் வாளால் தாக்கியது போல் அளவுக்கு அதிகமான வலி ஏற்பட்டது.. கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது… தன்னவன் தன்னை காதலிக்கவில்லை டைம் பாஸ்சிற்காக தன்னை காதலித்தது போல் நடித்தேன் என்று அவன் வாயால் கேட்டும் அதனை ஜீரணிக்க முடியவில்லை… அதை விட அவன் தன்னை மிகவும் கேவலமாக பேசியதை அவளால் தாங்க முடியவில்லை.. அவனிடம் எதுவும் கூறாமல் அறையை விட்டு வெளியேறினாள்.. அவனும் கோபத்தில் அவள் எங்கே சென்றாள் என்று பார்க்காமல் அலட்சியமாக இருந்தான்.. அன்று தான் அவளை கடைசியாக பார்த்தது.. அதன் பிறகு அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.. ஒன்பது மாதங்களாக தேடி கொண்டிருக்கிறான்..


ஆனால் அவனின் தேடலுக்கு சொந்தக்காரியோ அவனின் கண்ணில் சிக்காமல் அவனுக்கு ஆட்டம் காட்டி கொண்டிருக்கிறாள்…. பழைய நினைவில் இருந்து வெளியே வந்த ஆழிவேந்தனின் இதயம் பலமாக துடிக்க ஆரம்பித்தது.. ஆனால் எதனால் என்ற காரணம் மட்டும் புரியவில்லை… காரணம் புரியாமல் குழம்பி தவித்தான்..



அதே நேரம் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்த மருத்துவமனையில் லேபர் வார்டில் பிரசவ வலியில் துடித்து கொண்டிருந்தாள் தேன்மொழி… கிட்டத்தட்ட மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு தேன்மொழியின் கதறல் ஓய்ந்து வீல் என்ற அலறலுடன் ரோஸ் நிறத்தில் பிறந்தாள் ரோஜா மொட்டு… ஆழிவேந்தனின் பெண் வாரிசு…


குழந்தை பிறந்த மறு நிமிடம் மயக்கத்திற்கு சென்றாள் தேன்மொழி.. அவளுக்கு கொடுக்க வேண்டிய சிகிட்சைகளை கொடுத்து கொண்டிருந்தார் மருத்துவர்… இன்னொரு புறம் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சிகிட்சை கொடுத்து குழந்தையை சுத்தப்படுத்தி பூந்துண்டால் சுற்றி வெளியே கொண்டு சென்றார் நர்ஸ்.. வெளியே தோழியை நினைத்து பதற்றத்தோடு காத்திருந்த தேன்மொழியின் தோழி ஜீவிதாவின் கையில் குழந்தையை கொடுத்தார்… அவளும் தோழியின் குழந்தையை ஆசையாக வாங்கி நெற்றியில் மெதுவாக முத்தமிட்டு குழந்தையை கொஞ்சியவள்… தோழியை பற்றி நர்ஸிடம் விசாரித்தாள்… அவரும் தேன்மொழி மயக்கமாக இருக்கும் விஷயத்தை கூறி அரை மணி நேரத்தில் அறையில் மாற்ற போவதாக கூறி விட்டு குழந்தையை வாங்கி கொண்டு சென்றார்…



தனக்கு பெண் வாரிசு பிறந்ததை பற்றி அறியாமல்… காரணமே புரியாமல் படபடப்பிலும், பதற்றத்திலும் அமர்ந்திருந்தான் ஆழிவேந்தன்…



தனது உதிரத்தில் பிறந்த குழந்தையை பற்றி அறிந்து கொள்வானா…???



தன்னவளை தேடி கண்டு பிடிப்பானா…???



அவளை கண்டு பிடித்தாலும் அவனை மன்னித்து ஏற்று கொள்வாளா தேன்மொழி…??



அழிவேந்தன் கூறியது போல் தனது அத்தை மகளை திருமணம் செய்து கொள்வானா…???


அவ்வாறு நடந்தால் தேன்மொழி மற்றும் அவளது குழந்தையின் நிலை…???


அனைத்து கேள்விகளுக்கான விடையை அடுத்தடுத்த அத்தியாயங்களில் தெரிந்து கொள்ளலாம்….



தொடரும்….🥺❤️‍🩹
 
Last edited:
2. மன்னிப்பாயா உயிரே 🥺💔



ஆழிவேந்தன் என்னவென்று அறிய முடியாத உணர்வு பிடியில் சிக்கி தவித்தவன் பதற்றத்தோடும், படபடப்போடும் அமர்ந்திருந்தான்.. அவனது இதயத்துடிப்பு பல மடங்காக அதிகரித்தது.. தன்னவளுக்கு ஏதாவது ஆபத்தோ என்று நினைத்து பயந்து போனான்…


தனது போனை எடுத்த அழிவேந்தன் தனது நண்பனான கார்த்திக்கு அழைத்தான்.. மறு முனையில் அழைப்பை ஏற்றான் கார்த்திக்.. அவனை பேச விடாத வேந்தன், “டேய் மச்சான்… தேனு எங்க இருக்கான்னு கண்டு பிடிச்சிட்டியா….?? அவ இப்போ சேஃப்பா இருக்காளா…?? அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லையே டா..?? அவளுக்கு ஏதோ ஆபத்துன்னு மனசு சொல்லுது டா.. மனசு அவளுக்கு ஏதோ பிரச்சனையில் இருக்க மாதிரி சொல்லி எச்சரிச்சிட்டு இருக்கு… எனக்கு ரொம்ப பயமா இருக்கு டா.. அவளை தான் வீணா சந்தேகப்பட்டு அவளை வார்த்தையால வதைச்சு என்னை விட்டு போக வச்சேன்.. நான் அவளை பேசுன வார்த்தை எல்லாம் தப்புன்னு என்னோட மனசாட்சி சொல்லிட்டே இருக்கு.. அவ இங்க இருந்து போனதுல இருந்து என் மேல உயிரே வச்சிருந்த தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, ரேணுகா அத்தை, சண்முகம் மாமா, சைத்து மச்சான் யாருமே என் கிட்ட பேசல டா… இவங்களை விட நான் என்ன பண்ணாலும் எனக்கு துணையா நிக்கிற என்னோட தங்கச்சி கயல் பாப்பா கூட என் கிட்ட தேனு போனதுல இருந்து முகம் கொடுத்தே பேசல.. தாத்தா வேற அவ வீட்டை விட்டு போன மறு நாள் என்னை அடிச்சிட்டு அவளை கூட்டிட்டு வந்திட்டு அவரோட முகத்தில முழிக்க சொல்லிட்டாரு.. அவளை கூட்டிட்டு வர்றதுக்கு முன்னாடி அவரோட முகத்திலயே முழிக்க கூடாதுன்னு சொல்லிட்டாரு..” என்று வருத்தமான குரலில் கூறியவன் சில நிமிட அமைதிக்கு பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தான்..



“நான் என்ன தப்பு பண்ணாலும் எனக்கு அறிவுரை கொடுத்து திருந்த வச்சிட்டு இருந்த என்னோட குடும்பத்தை சேர்ந்தவங்க.. அவ போனதுல இருந்து என் கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்கிறாங்க… அம்மா கிட்ட பேச போன முகத்தை திருப்பிட்டு போறாங்க… அப்பா கிட்ட பேச போனா என்னோட முகத்தை கூட பார்க்காம முறுக்கிட்டு போறார்.. சரி ரேணுகா அத்தை கிட்ட பேசலாம்னு போனா அவங்க எதையோ தொலைச்ச மாதிரி எப்பவும் சோகமா இருக்காங்க… அதையும் மீறி அவங்க கிட்ட பேச போன… எனக்கு பதில் எதுவும் சொல்லாம அமைதியா அங்க இருந்து போயிடுறாங்க… மாமா கிட்ட பேச போனா மனுஷன் என்னை கொலைவெறியோட முறைச்சு பார்த்திட்டு போறார்… கயல் பாப்பா கிட்ட பேச போனா அவ என்னை கண்டுக்காம வெளியே போறா… நைட் நேரமா இருந்தா என்னை கேவலமா பார்த்திட்டு அவளோட ரூம்ல போய் அடைச்சுக்கிறா… சைத்து மச்சான் என்னோட ப்ரெண்ட் அவன் கிட்ட பேச போனா.. அவன் முகத்தை திருப்பிட்டு போறான்.. அதையும் மீறி அவன் கிட்ட பேச முயற்சி பண்ணா நான் சொல்ற எதையும் கேக்காம போறான்.. எல்லாரோட ஒதுக்கத்தையும் என்னால தாங்க முடியல… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. இதில வேற ரித்திகா பேயோட டார்ச்சர் தாங்க முடியல.. என்னை பார்க்கும் நேரத்தில எல்லாம் வழிஞ்சிட்டு பேசிட்டு இருக்கா… சம்யூவை கல்யாணம் பண்ணவே கூடாதாம்.. ரித்திகா பேயை தான் நான் கல்யாணம் பண்ணனும்னு சொல்லி டார்ச்சர் பண்றா.. அடிச்சாலும் கேட்க மாட்டேங்கிறா… கோபமா பேசி துரத்துனாலும் கேட்கல.. என்ன சொன்னாலும் கேட்காம பின்னாடியே நாய் குட்டி மாதிரி சுத்திட்டு இருக்க அரை பைத்தியம்… அதில வேற என்னை இம்ப்ரெஸ் பன்றேன்னு லூசு மாதிரி பண்ணிட்டு இருக்கா டா…” என்று கோபமாகவும் வருத்தமாகவும் கூறி முடித்தான்..



அழிவேந்தன் கூறியதை கேட்ட கார்த்திக் சத்தமாக சிரித்தவன், “டேய் நீ பேசாம ரித்திகாவையே கல்யாணம் பண்ணிக்கோ… அப்போ தான் தேன்மொழி, சம்யுக்தா ரொம்ப நிம்மதியா இருப்பாங்க… தேனுவை காதலிச்சது மாதிரி ஏமாத்தி அவளை வீட்டை விட்டு அனுப்புன உனக்கு ரித்திகா தான் சரியான ஜோடி.. அவளை கல்யாணம் பண்ணி நீ நாசமா போ… நீ ரித்திகாவை கல்யாணம் பண்ணிட்டு அவளை உனக்கு ஏற்ற மாதிரி மாற்றி குடும்பம் நடத்து… தேனுவை நீ நம்பாம அவளை சந்தேகப்பட்டு வார்த்தைகளால காயப்படுத்திட்டு வீட்டை விட்டு போக வச்சிட்டு இப்போ எதுக்கு டா அவளை தேடிட்டு இருக்க…” என்று நண்பனை கலாய்த்த படியே கூறினான்..



நண்பன் கூறியதை கேட்டு கோபமடைந்த ஆழி, “டேய் மச்சான் நீ மட்டும் என் கண்ணு முன்னாடி இருந்திருந்தா உன்னை கட்டி போட்டு தோலை உறிச்சிருப்பேன்… உன் வீட்டில இருக்கதுனால தப்பிச்ச… சும்மா பேச்சுக்கு கூட இப்படி சொல்லாத டா… கேட்கவே அருவெறுப்பா இருக்கு… நான் காதலிச்சது தேனுவை தான்.. அவ என்னை ஏமாத்த நினைச்சு துரோகம் பண்ணாலும்.. அவ மட்டும் தான் என்னோட உயிரே…” என்று வேதனை நிறைந்த குரலில் கூறினான்.. அவனது மனதில் தேன்மொழியை காயப்படுத்தி தொலைத்த வலி, வேதனை அப்பட்டமாக தெரிந்தது…



கார்த்திக், “மச்சான்.. நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு.. உன்னை சின்ன வயசில இருந்து காதலிச்சிட்டு இருந்த சம்யுக்தாவை கல்யாணம் பண்ணிப்பியா… இல்லை உன்னால பாதிக்கப்பட்ட தேன்மொழியை கல்யாணம் பண்ணிப்பியா… உன்னால இரண்டு பொண்ணுங்களோட வாழ்க்கை வீணாகிட்டு இருக்கு.. சின்ன வயசில இருந்தே உனக்கு சம்யுக்தாவை தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணி வச்சிருந்தாங்க… அதுக்கு நீயும் சம்மதம் தெரிவிச்ச தானே.. எல்லாம் தெரிஞ்சும் ஏன் டா தேனுவை காதலிக்கிற மாதிரி நடிச்சு ஏமாத்துன… இப்போ நீ இரண்டு பொண்ணுங்களுக்கு என்ன பதில் சொல்ல போற… உன்னோட விளையாட்டுதனத்தினால இரண்டு பொண்ணுங்களோட வாழ்க்கை நடு தெருவில் நிக்குது… எதுக்காக டா தேன்மொழியை காதலிக்கிற மாதிரி நடிச்ச… உன்னோட டைம் பாஸ்க்குக்காக அவளை காதலிக்கிற மாதிரி நடிப்பியா… தேன்மொழி வந்து என்னை ஏன் ஏமாத்துனேன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவ… அவளை நீ ஏமாத்திட்டு உன்னை அவ ஏமாத்தி துரோகம் பண்ண பார்த்தான்னு ஏன் டா பொய் சொல்லி அவளை வீட்டை விட்டு அனுப்புன…” என்று சரமாரியான கேள்விகளை நண்பனிடம் கேட்டான்..



கார்த்திக் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தான் ஆழிவேந்தன்.. அவனுக்கும் அவனது அத்தை மகள் சம்யுக்தாவிற்கும் திருமணம் செய்து வைப்பதாக சிறு வயதிலேயே முடிவு செய்து வைத்திருந்தனர் அவனது குடும்பத்தினர்… அவனது அத்தையின் மகள் சம்யுக்தா சிறு வயதிலேயே வெளிநாடு சென்றாள்… அதன் பிறகு அவள் சொந்த ஊருக்கு வரவே இல்லை… படிப்பு அனைத்தையும் வெளிநாட்டிலேயே முடித்து கொண்டாள்…



ஆழிவேந்தனின் குடும்பத்தினரை பற்றி பார்க்கலாம்…


குணசேகரன் - தனலெட்சுமி தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் மதிமாறன், ரேணுகா…



மதிமாறனின் மனைவி சித்ரா.. மதிமாறன், சித்ரா தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் மூத்தவன் ஆழிவேந்தன்.. இளையவள் கயல்விழி…



ரேணுகாவின் கணவர் சண்முகம்… ரேணுகா, சண்முகம் தம்பதியினருக்கு இரு பிள்ளைகள்.. மூத்தவன் சைதன்யா.. இளையவள் சம்யுக்தா..


ரேணுகாவுக்கு திருமணம் செய்து வைக்க வரன் பார்த்து கொண்டிருந்த சமயத்தில் தான் ரேணுகா தங்களது உணவுப்பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து கொண்டிருந்த சண்முகத்தை பார்த்ததும் பிடித்து போனது.. அவரிடம் தனது விருப்பத்தை கூறியதும் மறுத்து விட்டார்.. சண்முகத்தின் பெற்றோர் இருவரும் சிறு வயதிலேயே தீ விபத்தில் இறந்து விட்டனர்.. அதன் பிறகு ஆசிரமத்திலேயே வளர்ந்தார்… பள்ளி படிப்பு முடித்ததும் ஆசிரமத்தை விட்டு வெளியேறி தனியாக ஒரு வாடகை வீட்டை எடுத்து கல்லூரி சென்று விட்டு பகுதி நேர வேலை பார்த்து படித்தார்.. கல்லூரியில் நன்றாக படித்து தேர்ச்சி பெற்று… கிடைக்கும் அனைத்து வேலைகளையும் செய்து தனக்கு சொந்தமாக ஒரு சிறிய வீட்டை கட்டினார்… மூன்று வருடங்களுக்கு முன்னால் தான் குணசேகரனின் கம்பெனியில் வேலை கிடைத்தது… தனது திறமையாலும், அயராத உழைப்பாலும் படிப்படியாக முன்னேறி மேனேஜராக பணி புரிந்து கொண்டிருக்கிறார்.. ரேணுகா, சண்முகம் மறுத்ததும் தனது குடும்பத்தினரிடம் சண்முகத்தை பற்றி கூறி அவரையே திருமணம் செய்து வைக்க கூறினார்.. அவர்களும் சண்முகத்திடம் பேசி அவரை சம்மதிக்க வைத்தனர்.. அப்போதே அவர் போட்ட ஒரே கன்டிஷன் வீட்டோடு மாப்பிள்ளையாக வர மாட்டேன் என்பதே…



குணசேகரன் தனது மகளை பிரிந்து இருக்க முடியாது என்ற கவலையில் இருந்தார்… அப்போது மணிமாறன் தங்களது வீட்டிற்கு அருகில் ஒரு வீட்டை கட்டி அதில் தனது தங்கையையும் தங்கை கணவரையும் குடி வைக்கலாம் என்று தனது ஐடியாவை கூறினார்… உடனே சண்முகம் அதற்கு மறுப்பு கூறி தனது சேமிப்பில் உள்ள பணத்தை வைத்து தானே வீடு கட்டி கொள்வதாக கூறினார்… அவரது நேர்மை பிடித்து போனதால் அப்படியே செய்யும் படி இருவரும் கூறினர்… அதன் படியே சண்முகம் தனது சேமிப்பில் இருந்த பணம் அனைத்தையும் வைத்து ஒரு பெரிய வீட்டை அழகாக கட்டினார்… ஒரு நன்னாளில் ரேணுகா, சண்முகம் இருவரின் திருமணம் நல்லபடியாக பெரியோர்களின் ஆசியுடன் நடந்தது… சண்முகம் தனது மனைவி ரேணுகாவை உள்ளம் கையில் வைத்து தங்கினார்…



குணசேகரன் தாத்தாவுக்கு அண்ணன் ஒருவரும் உண்டு.. அவர் சிவராமன்.. அவரது மனைவி செண்பகம்.. அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.. அவரது மகன் வசந்தன், மருமகள் காயத்ரி இருவரும் வெளிநாட்டில் செட்டிலாகி இருந்தனர்.. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.. அவர்களை பார்க்க வெளிநாட்டிற்கு சென்ற நேரத்தில் சம்யுக்தாவையும் உடன் அழைத்து சென்றனர்.. அனைவருக்கும் சம்யுக்தா என்றால் உயிர்… அவளும் தனது அதிக நேரத்தை சிவராமன், செண்பகம் தம்பதியினருடனே செலவழிப்பால்.. அதனாலேயே அவளையும் அவர்களுடனே செல்ல அனுமதித்தனர்… அதற்கு காரணமும் உண்டு.. குணசேகரனின் தொழில்துறை எதிரிகளால் சம்யுக்தாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது… அதனால் அவளை பாதுக்காப்பான இடத்திற்கு அனுப்ப முடிவு செய்தனர்… இங்கே தங்களுடன் அவளை வைத்து கொண்டு பாடிகார்ட்ஸ் மூலம் பாதுகாப்பு கொடுத்தாலும் அவளால் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாது…



அந்த நேரம் காயத்ரி, குணசேகரனின் குடும்பத்தினரிடம் தங்களுக்கு குழந்தை இல்லாததால் சம்யுக்தாவை வளர்க்க அழுகையுடனே அனுமதி கேட்டார்… அவரது நிலைமை புரிந்ததால் முழு மனதுடன் அவளை வளர்க்க சம்மதித்து சிவராமன், செண்பகம் தம்பதியினருடன் அனுப்பி வைத்தனர்.. சம்யுக்தா பாதுகாப்பாகவும், அதே சமயம் சுதந்திரமாகவும் தைரியமாகவும் வளர வேண்டும் என்பதற்காக…



ஆழிவேந்தன் சம்யுக்தாவின் ஐந்து வயதில் அவளை பார்த்தது அதன் பிறகு அவளை அவன் பார்த்ததே இல்லை.. அவள் இப்போது எப்படி இருப்பாள் என்றும் தெரியாது…



கார்த்திக், “டேய்.. நான் கேட்டதுக்கு பதிலே காணோம்.. உனக்கு தேன்மொழி வேணும்னா நீயே கண்டுபிடிச்சுக்கோ.. சம்யுக்தா வேணும்னா தேன்மொழியை தேடாத யாரு வேணும்னு நீயே முடிவு பண்ணிக்கோ…” என்றான்.


ஆழிவேந்தன், “எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல டா..” என்று குழப்பத்துடனே கூறினான். கார்த்திக் எதுவும் கூறாமல் அழைப்பை துண்டித்தான்..



கார்த்திக் தனது மனதில், “நீ தேன்மொழியை தான் காதலிக்கிற ஆனா அதை கூட நீ இன்னும் உணரல… உன்னோட தப்பான புரிதல்னால வார்த்தைகளை கொட்டி விலை மதிக்க முடியாத வைரத்தை தொலைச்சிட்ட… தேன்மொழியோட ஒரு குணத்தை தான் பார்த்திருக்க.. இன்னொரு குணத்தை உன்னோட பொண்ணே காட்டிடிடுவா…” என்று மனதில் நினைத்தவன் தனது போனை எடுத்து தேன்மொழி மற்றும் அவளது மகளின் உடல் நலனை பற்றி கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினான்..




தொடரும்…. 🥺❤️‍🩹
 
Last edited:
Status
Not open for further replies.
Top