மனம் - 9
வேண்டாம் என்பது, வேண்டும் என்ற புள்ளியில் மாறும் கணம் எல்லாம் தன் வசமாகிவிடும்.
பி ஏ விடம் தன்னை நிராகரித்த பெண் யாரென விசாரிக்கச் சொன்ன அதியமானிற்கு மனதில் யாராக இருக்கும் என்று ஆவல் தோன்றியது.
தாரிகாவை இதுவரை யாரும் பார்க்காத காரணத்தால் இத்தனை குழப்பமும்.
ஒரு முறைப் பார்த்திருந்தால் இருவரின் முக ஜாடையும் யோசிக்க வைத்து இருக்கும்…
சூழ்நிலைகள் அனைத்தும் விதியின் கைப்பாவையாகிபோயின…
அதியமானின் பி ஏ, தாராவைப் பற்றின எல்லாத் தகவல்களும் கொண்டு வந்து கொடுத்தான்.
அதைப் பார்த்ததும் எப்படி உணர்ந்தான் என்று தெரியவில்லை.
இவளா… என்னை நிராகரித்தது…
தாரா, தன்னை வேண்டாம் என்றதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மெதுவாக அந்தக் கோப்பினைத் திறந்துப் பார்ததவனுக்கு மேலும் பெரிய அதிர்ச்சி…
ஆம்... தன் கம்பெனியில் பணிப் புரியும் தாரா…
இனியவன் க்ளைன்ட் சைட் பார்க்கிறான்... வென்டார், சைட் அதியமான் பார்க்கிறேன்…தாரா வெண்டார், சைட் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். அதனால் இனியவன் இன்னும் அவளை நேரில் பார்க்கவில்லை.
அவளின்.. பயோடேட்டாவில் திருமணம் ஆகவில்லை என்று இருந்தது… ஆனால் அவன் பி ஏ வின் கூற்றுப்படி அவளுக்கு ஒரு கைக்குழந்தை இருக்கிறது.
திருமணம் ஆகாமல் தாயானவள் என்னை நிராகரிப்பதா என்ற வன்மம் மனதில் உண்டானது. ஆண் என்ற அகங்காரம் அவன் அறிவினை மழுங்கச் செய்தது.
நிராகரிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டல்லவா…
அவனுக்கு அவளைப் பிடிக்காது என்பதனாலையே இந்தத் திருமணபந்தம் வேண்டாமென்று கூறினாள் என்பது அவனுக்குத் தெரியுமா?
இதெதுவும் புரியாமல் அவளை நேருக்கு நேரில் காணத் தீர்மானித்தான்.
தன்னைக் காணும் பொழுது அவள் முகத்தில் உண்டாகும் உணர்வுகளைக் காண அவனுக்கு ஆவல் தோன்றியது.
அவன் மனதில் அவளை எதாவது செய்ய வேண்டும் என்று எண்ணம் வலுப்பெற்றது…
வேண்டாம் என்பதெல்லாம் அவனுக்குப் பொருட்டல்ல... அவள் அவனை வேண்டாம் என்றது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…
நிராகரிக்கப்பட வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு தன்னை அவள் நிராகரிப்பதா… என்று எண்ணம் மனதில் ஆழமாக அவள் மேல் வன்மத்தை உருவாக்கியது…
அவளின் இந்த இரட்டை வேஷத்தைக் கலைக்க நேரம் பார்த்து இருந்தான் அதியமான்.
அவளும் அவள் மகனும் இருக்கும் போட்டோவை எடுத்துப் பார்த்தவனுக்கு ஏதோ மனதில் இடறியது…
குழந்தையின் முகத்தை எங்கேயோ பார்த்த போன்ற தோற்றம்…
யாராக இருக்கும் என்று சிந்தித்துப் படியே அன்றைய பொழுதைக் கழித்தவன் தன் வீட்டிற்குத் திரும்பினான்.
மனதில் அந்த மழலையின் முகம் சதிராடிக்கொண்டிருந்தது அவனுக்கு…
ஒருவிதச் சலிப்போடு வந்தவனுக்கு டீக் குடித்தால் நன்றாக இருக்கும் தோன்றவே தன் தாயிடம்… "அம்மா டீ வேணும், எனக்கு ரொம்பத் தலை வலிக்குது" என்றவன் அப்படியே சோஃபாவில் சாய்ந்துக் கண் மூடி அமர்ந்தான்…
டீயோடு வந்த அவன் அம்மா சாந்தி அவனை எழுப்பினாள்…
“இந்தா அதியமான் டீ”
கண் விழித்துப் பார்த்தவனுக்கு எதிரே இருந்த சுவரில் மாட்டிய போட்டோக்கள் கண்ணில் பட்டது அதில் தன் சிறுவயதில் இருந்தத் தம்பியின் ஃபோட்டோ அவனை அதிர்ச்சி அடையச் செய்தது…
ஆமா அதிர்ச்சித்தான்... தாராவின் மகனோட முகம் தன் தம்பியின் சிறுவயது சாயலில் இருந்தது…
அவனுக்கு மெல்லப் புரிந்தது தாராவின் கோபம்... ஏன் அவனை அடித்தாள் என்று… ஆனால் தன்னை நிராகரித்தது மட்டும் இப்போதும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை… 'உனக்கு என்னைத் திருமணம் செய்ய விரும்பும் இல்லையா... அப்போ நீ தான் என் மனைவி… என் பிள்ளைக்கு நீ தான் அம்மா' என்று மனதில் உறுதிப்பூண்டான்.. அதற்கு என்ன செய்ய என்று பல திட்டங்கள் மனதில் எழுதினான்…
அதைச் செயல் படுத்த முதல் அடியை எடுத்து வைத்தான் அதியமான்…
தன் ப்ரோக்ராம் டெவலப்பர் டீமில் ஆறு மாதத்திற்கு அனைவருக்கும் அலுவலகம் வந்து வேலைச் செய்யும் முறையை அமுலுக்குக் கொண்டு வந்தான். அதை டீம் ஹெச் ஆரிடம் அறிவுறுத்தியவன், எல்லோருக்கும் மின்னஞ்சலில் உறுதிச் செய்யுமாறும் அதன் சிசியில் தன்னையும் சேர்க்குமாறுக் கூறினான்…
வென்டார்ச் சைட் என்பதால் தினமும் அலுவலகத்துக்கு வரவேண்டிய சூழ்நிலையில் தாராவைத் தள்ளினான்.
இதை உடனே அமலுக்குக் கொண்டு வர உத்தரவிட்டான்…
அனைவருக்கும் மெயில் பாப் அப் வந்தது... அதைக் கண்டதும் என்ன செய்ய என்று யோசிக்கலானாள் தாரா... வாரம் இருமுறை மட்டுமே அலுவலகம் செல்லும் சூழல் அவளுக்கு மிகவும் சுலபமாக இருந்தது. மகனைக் கண்ணும் கருத்துமாகப் பார்க்க முடிந்தது… இப்பொழுதும் கவலையில்லை தான்... அமரனைப் பார்த்துக்கொள்ளும் வேலையில் சேர்க்கப்பட்ட யமுனா அக்கா இருக்கிறாள் தான்…
மகேந்திரன் தன் நண்பன் உதவியுடன் வேலைக்கு அமர்த்திய அக்கா தான் இந்த யமுனா…
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துக் குடும்பக் கஷ்டம் அவளை வீட்டு வேலைகள் செய்யத் தள்ளியது… நம்பிக்கையானவள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கரைசேர்த்தி நிமிர்வதற்குள் திருமண வயதைக் கடந்த இருந்தாள்.
இந்த வயதில் அவளுக்குத் துணையாக யாரும் வேண்டாம். கல்யாணம் செய்து மீண்டும் குடும்பப் பாரம் சுமந்து கஷ்டப்படும் மனநிலையில் அவள் இல்லை…
தன் உடன் பிறந்தவர்களுக்கு உதவியதில் பலன் மட்டுமே வாங்கிக் கடமையை அவர்கள் மறக்கவும், அந்தத் துயர் அவரை மீண்டுமொரு உறவை நம்பப் பயந்தது. தனிமையே துணை என்ற நிலைக்குத் தள்ளியது. சுயநலம் நிறைந்தது அவர் கண்ட உலகம்…
தனியாகப் பிள்ளையோடு கஷ்டப்படும் தாராவின் சூழல் அவரை அவளோடு இருக்கச் சம்மதித்தது…
சோர்வாக அமர்ந்து இருக்கும் தாராவைப் பார்த்தவாறே அமரனுக்குப் பால் ஆற்றிக்கொண்டு வந்தார்…
"என்ன பாப்பா யோசனையாக இருக்கப் போல" என்று கேட்டார்.
அவரிடம் இருக்கும் பால் புட்டியை வாங்கி அமரனுக்குக் குடிக்கக் கொடுத்து அவனை மடியில் கிடத்தியவள்… "நாளையிலிருந்து ஆஃபிஸ் வரச் சொல்லிட்டாங்க அக்கா… மூன்று மாதங்கள் நான் காலையில் போனாள் மாலையில் தான் வர முடியும். அது தான் யோசிக்கிறேன்… இந்த வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது... விடவும் முடியாது" என்றவள் என்ன செய்ய என்று யோசிக்கிறேன்…
"தம்பியை விட்டுட்டுப் போகணும்" என்று சோகமாகக் கூறினாள்…
"இதுக்காகவா இப்படி முகத்தை எட்டூருக்கு இழுத்து வச்சு இருக்க… அது தான் நான் இருக்கிறேனில்லையா... அப்பறம் என்ன" என்றவள்… "ஆமாம் தம்பி அப்பாவிற்குச் சொல்லிட்டியா" என்ற யமுனாவிடம்…
"அது தான் சொன்னே இல்லையா... அவருக்கு எனக்கும் சண்டை" என்று உருட்டிய பொய்யை மேலும் உருட்டினாள்…
"ஆமாம் அப்படி என்ன சண்டைக் குழந்தையோடு தனியாக வர அளவுக்கு … புருஷனும் பொண்டாட்டியும் வாழ்க்கையில் கொஞ்சம் அனுசரித்துப் போகணும்" என்றவர்…
"இதெல்லாம் உன்னோட அந்தரங்கம் பேச எனக்கு உரிமையில்லை தான்... ஓர் அக்காவாக வேதனைத் தாங்காமல் சொல்லிட்டேன் பாப்பா" என்று உள்ளே போய் இரவு உணவிற்குத் தயார் செய்யத் தொடங்கினார்…
புருஷன் என்ற அவர் வார்த்தைகளைக் கேட்டதும் உதட்டில் ஓரம் புன்னகையும்… மனதில் அதியமானின் முகமும் தோன்றி மறைந்ததில் சட்டென வியர்க்கத் தொடங்கியது..
இதென்ன… இன்னும் அவர் முகம் மறையாமல் மனதில் பதிந்து இருக்கிறது.. அதுவும் கணவன் என்ற வார்த்தைகளைக் கேட்டதும், அவர் முகம் தோன்றக் காரணம் கண்டு பிடித்தவளுக்குக் கண்கள் வலியில் நிறைந்தது…
இந்தக் காதல் எனக்குத் தோன்றியிருக்க வேண்டாம்.
இந்தக் காதல் ஒரு தலையாக, அவள் மனதில் ஒரு புள்ளி விதையாக விழுந்தது... இன்று மெல்லக் குட்டித் துளிர் விட்டது அவள் விழிகளில்…
மெல்ல மகனின் முகத்தில் அவன் பெரியப்பாவின் சாயலைத் தேடினாள்… அந்தக் கேசம் அவனின் விழிகளும் அதியமானை நினைவுப்படுத்தியது அவளுக்கு… வேகமாக அவன் கேசத்தைக் கலைத்தவள்... அவன் கண்களில் தன் முத்தத்தைப் பதித்தாள்…
தாராவின் செயலில் வாயில் பால் ததும்பச் சிரித்தான் அமரன்…
"என்ன தெரிந்து சிரிக்கிறாய்ச் செல்லம். என் தங்கத்துக்கு என்ன வேணும்... பாப்புப் போதுமா... இந்தப் புட்டு வயிறு நிறைந்து விட்டதாடாப் பொன்னுக்குட்டிக்கு" என்று அவனைச் செல்லம் கொஞ்சியவள் அவனோடு விளையாடத் தொடங்கினாள்…
விளையாட்டின் முடிவில் மெல்ல உறங்கினான்…
அவனைப் படுக்க வைத்தவள் அடுத்த நாள் அலுவலகம் செல்ல வேண்டியதெல்லாம் எடுத்து வைத்தவள், நேரமாக எழுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் உணவினை உண்டவள் யமுனாவிடம் சொல்லிக் கொண்டு உறங்கச் சென்றாள்.
பழைய பூக்கள் உதிர... புதிய மலர்கள் மலர்ந்து அந்தக் காலை வேளையை அழகாக வரவேற்றது. தன் பால்கனிச் செடிகளின் நடுவில் டீக்கோப்பையோடு நின்று அந்த நாளை எப்பொழுதும் போல ரசித்து வரவேற்றாள் தாரா…
மனதில் ஏதோ ஒரு பதற்றம்.. இன்றைக்கு எதோ நடக்கப் போகிறது என்று அவள் மனம் கூவியது.. என்ன என்று தெரியவில்லை.. எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று எப்பொழுதும் போல வேகமாகத் தயாரினாள்.. அலுவலகம் போவதற்கு முன் மகனுக்கு எல்லாம் செய்து அழகுக் குட்டியாக யமுனாவிடம் ஒப்படைத்து விட்டுப் பத்திரம் என்று நூறு முறைக் கூறியவள் அலுவலகம் சென்றாள்…
தங்கள் அலுவலகத்தில் இந்தப் புதிய சட்டம் அமுலுக்கு வந்ததில் பலர் அதிருப்தி அடைந்தனர்... அதைப் பற்றி ஹெச்ஆர் அதியமானுக்கு மெயில் இட்டு, தன் கடமையைச் செவ்வனே செய்துள்ளார்…
அதைப் பார்த்த அதியமான் தன் பணியாளர்கள் அனைவருக்கும் மீட்டிங் வைத்து அன்றைய நாளை தொடங்கினான்.
அனைவரும் வந்திருந்தனர்…
மீட்டிங் ஹாலிற்கு வேகமாகத் வந்தவனை வரவேற்றனர் டீம் லீடரும் புராஜெக்ட் ஹெட்..அசோஸெட் இன்ஜினியரஸ் எல்லாம் வந்திருந்தனர்... தாராவின் பொஷிசனும் இந்தக் குழுவில் தான் இருந்தது ஜுனியர் இன்ஜினியர்.
உள்ளே வேகமாக வந்து அனைவருக்கும் காலை வணக்கம் கூறி, தன் இருக்கையில் அமர்ந்தவன் ஏன் இந்த மூன்று மாதங்கள் அனைவரும் தினமும் வரவேண்டும் என்று விளக்கியவன் விளக்கங்கள் எல்லாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படி இருந்தது… இந்த மூன்று மாதங்கள் பின் அனைவருக்கும் அவர் அவரது பணிக்காகச் சம்பளம் தனியாக வழங்கப்படும் என்றவன் அறிவிப்பில் அனைவருக்கும் சந்தோஷம் மட்டுமே இருந்தது.
அவன் கூறிய எதுவும் காதில் விழவே இல்லை தாராவிற்கு…
எப்படிக் கம்பெனியில் அதியமான் பெயரைக் கவனிக்க மறந்தேன் என்று யோசித்தாள்… அது மட்டுமில்லாமல் தன்னை எப்படித் தன் கம்பெனியில் பணிக்கு அமர்த்தினார் என்ற எண்ணம் அடுத்த அதிர்ச்சி அவளுக்கு…
அவளின் அதிர்ந்த முகத்தைப் பார்த்தும் பார்க்காதது போல் தான் கூறவேண்டிய எல்லாம் கூறியவன் அவளைக் கவனியாதது போல அங்கே இருந்து சென்றான்…
அவனுக்குச் செய்து முடிக்க நிறைய வேலைகள் வரிசைக் கட்டி நின்றிருந்தது…
ஆம்…. அலுவலகத்தில் தாராவின் பொறுப்பில் இருக்கும் ப்ரொஜெக்டில் அவளுக்கான வேலையை அதிகப் படுத்தியது எதற்கு என்று அவளுக்குப் புரியவில்லை…
அதனால் மாலை வீடு திரும்ப நேரம் ஆகும் என்று நன்றாகப் புரிந்தது… அதியமான் செயலில் சந்தேகம் அவளுக்கு வரவில்லை..
அவளை அடையாளம் தெரிந்தது போல் அவன் காட்டிக் கொள்ளாததால் உண்மையான வேலைப்பளு என்று மனதில் நினைத்தாள்…
தனக்கான உணவு இடைவேளையில் யமுனாவிற்கு அழைத்திருந்தாள்…
"அக்கா இனி மாலை நேரம் நான் வரவதற்கு லேட் ஆகும்... குட்டியை நீங்கள் கொஞ்சம் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றாள்…
"இதில் என்ன இருக்கிறது பாப்பா... நீ உன் வேலையைக் கவலைப்படாமல் பாரு… அதுதான் நாங்க” …என்று இழுத்தவளை அதியமான் பார்வை மேலும் பேச மறுத்தது…
"என்ன அக்கா நீங்க... என்றால் யாரைச் சொல்ல வரீங்க.. மகேந்திரன் மாமா வந்திருக்காரா"... என்ற தாராவின் குரலில் இருந்த உற்சாகம் கசப்பானதாக இருந்தது அதியமானுக்கு... தாராவிடமிருந்து போன் என்றதும் யமுனாவிடம் அதை ஸ்பீக்கரிலிடச் சொன்னவன்... அவனும் அவளின் குரலைக் கேட்டான்… அவள் மாமா மேல் இருக்கும் பாசம் அவனுக்குப் பிடிக்கவில்லை…
"யாரு அக்கா அந்த நாங்க" என்றாள் தாரா…
"நானும் அமரன் தம்பியும் தான் பாப்பா"… என்றுச் சாமாளித்தார் யமுனா…
தன் தம்பியின் குழந்தைப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு தாராவின் வீட்டிற்கு வந்தவன், யமுனாவிடம் காட்டி அவளுக்கு எனக்கும் சின்னச் சண்டை அதில் தவறு என் மேல் தான் அவளைச் சமாதானம் செய்ய வேண்டும். அதற்குப் பையன் கூட நான் பழகணும், அவன் என்னையும் நன்றாகத் தெரிந்து கொண்டால் எங்களுக்குள் இருக்கும் சண்டை அவனால் சரியாகும் என்றும், அதனால் பிள்ளையோடு பழக வேண்டும் என்று யமுனாவிடம் பேசிப் பணிய வைத்திருந்தான்…
மூன்றே மாதம் தான் அப்பறம் நாங்கள் ஓரே குடும்பம் என்று கண் கலங்கியவனின் செயலில் மனம் இறங்கினார் யமுனா... பிள்ளைக்குத் தந்தை பாசமும் வேண்டும் என்று எண்ணினார்… அதனால் அவனைப் பிள்ளையோடு பழகச் சம்மதித்தார்…
இரத்தப்பந்ததுக்கு உறவு முறை வார்த்தைகள் எதுவும் தேவையில்லை போலும்… அதியமானின் பாசத்தில் அவனோடு பச்சக் என்று ஒட்டிக் கொண்டான் அமரன்…
மெல்ல யமுனாவிடம்... "தாராவை எப்படி அழைக்கச் சொல்லிக்கொடுக்கிறாள் அம்மா என்றா... இல்லை மம்மி என்றா" என்று ஆழம் பார்த்தான்..
தன் உடன் பிறந்தவளின் பிள்ளைக்கு அன்னையாக இருக்க முடிவு செய்து விட்டாளா என்று அறிய வேண்டி இருந்தது…
"அம்மா என்று தான் கூப்பிடுவான் அதும் முழுதாக இல்லாமல் 'ம்மா' என்று தான் சொல்லுவான்" என்றாள் யமுனா…
அதைக் கேட்ட அவன் கண் கலங்கியது அவள் நல்ல மனதை அறிந்து. அவள் மேல் மெல்ல நல்ல எண்ணங்கள் உண்டானது அவனுக்கு. பிள்ளையிடம் தன்னைத் தந்தை என்றே அடையாளப்படுத்தியவன் பேச விளையாடி அன்றைய நாளை அங்கே கழித்தான். மாலை வேகமாகச் சென்றான் தன் வீட்டிற்கு…
வீட்டிற்கு வந்தவனுக்குத் தன் தம்பியிக்கு 'அவன் தந்தையானது தெரியவில்லையா... நினைவில்லையா' என்று அவனுக்குப் புரியவில்லை... அதை அவனிடம் கேட்பதற்கு முன் தாரா, தன் மனைவியாக இருக்க வேண்டும் என்ற நினைத்தான்… அது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை அவனும் உணரவில்லை… ஆனால் தனக்குப் பிள்ளை இருக்கறதி என்ற உண்மையைத் தாரிகா மற்றும் சதீஷ் யாரிடமும் கூறப்போவதில்லை என்று அதியமான் உணரும் தருணமும் வரும்.
நினைவில்லாதவனிடம் கேட்டு அவன் காதலில் சந்தேகத்தை உண்டாக்கிப் பிரிக்க மனமில்லை அதியமானுக்கு.. இந்த விவரங்கள் எதுவும் தன் தோழன் இனியனிடம் கூடப் பகிராமல் வைத்திருந்தான் அதியமான்…
மாலை நேரம் வீடு வந்த தாராவிற்கு… ஏதோ வித்தியாசமாக இருந்தது… என்றும் இல்லாமல் அமரன் "பா" என்று உலறிக்கொண்டு இருந்தான்…
"என்ன செல்லம் யமுனா அக்கா உனக்கு என்ன சொல்லிக் கொடுத்தாங்க" என்று பேசியபடி உறங்கும் வரை அவனைக் கீழே வைக்காமல் சுத்திக் கொண்டு இருந்தாள் தாரா. பகல் முழுவதும் அதியமானிடம் ஆட்டம் போட்டவன் சோர்வில் வேகமாக உறங்கிப் போனான்…
இதெதுவும் கவனிக்கும் நிலையில் தாராவும் இல்லை அவளும் சோர்வில் படுக்கச் சென்றாள்…
இப்படியே இரண்டு மாதங்கள் ஒடியது…
தாரா, பயந்தது போன்று எந்தச் சிக்கலும்... தொந்தரவும் அதியமான் பக்கம் இருந்து வரவில்லை... சுதந்திரமாகப் பணிச் செய்தாள். அதனால் எந்தச் சந்தேகமும் அவளுக்கு மனதில் அவன் மேல் தோன்றவில்லை…
ஆனால் அவளை எந்த விதமான எதிர் வினையும் செய்ய விடாமல் ஒரு மூலையில் நிற்க வைத்து... தன் திட்டங்களுக்கு அவளைத் தலையை மட்டும் அசைக்க வைப்பான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை…
அன்றைய காலை நேரத்தில் எப்பொழுதும் போல, அவள் தன் டீக்கோப்பையோடு பால்கனியில் அழகாக வைத்திருந்த குட்டிப் பூந்தோட்டத்தில் நின்றிருந்தாள்…
அப்போது வாயிலில் அழைப்பு மணியடித்து அவள் கவனத்தைத் திருப்பியது…
இந்தக் காலை நேரத்தில் யாராக இருக்கும் என்று நினைத்தவள் வேகமாகச் சென்று கதவைத் திறந்தாள்…
அங்கே முகத்தில் கோபம் மட்டுமே தாண்டவமாட அவள் தந்தை கங்காதரன் நின்று இருந்தார்…
அவரைப் எதிர் பார்க்கவில்லை தாரா… அதிர்ச்சியில் அவரை உள்ளே அழைக்க மறந்து நின்றாள்… அவளுக்கு எல்லாம் செயலற்ற அவள் உலகம் சுற்றாமல் அப்படியே உறைந்துப் போய் நின்றது…
மகன் விழிக்கும் நேரம்.. அவனும் எழுந்து அருகில் இருக்கும் தாயைக் காணாது அழுதான்…
சமையலறையில் வேலைப் பளுக் காரணமாக இதெல்லாம் கவனிக்க வில்லை யமுனா…
அழுதுகொண்டே வந்த அமரன் அவளை "மா" என்று இழுத்தான்…
அப்பொழுதுத்தான் சுயம் பெற்றவள் என்ன செல்லம் என்றுஅவனை எடுத்து இடுப்பில் இருத்தியவள்… உள்ளே போன குரலில் " உள்ளே வாங்க அப்பா" என்று அவரை உள்ளே அழைத்தாள்…
அவளையே பார்த்தார் கங்காதரன்… அவருக்கு நம்பிக்கை இல்லாமல் தான் அவளைக் காண வந்தார்…
ஆம்… அவர் போனுக்கு அவளும் அமரனும் இருக்கும் ஃபோட்டோ ஒன்று வந்ததை உறுதிச் செய்ய முன் அறிவிப்பு இல்லாமல் வந்திருந்தார்…
எப்பொழுதும் அறிவிப்போடு வரும் போது யமுனாவோடு அவனை மகேந்திரனின் நண்பனின் வீட்டிற்கு எடுத்துச் செல்லச் சொல்லி விடுவாள்.
அதுபோல ஒரு நாளுக்கு மேல் அவர் தங்க முடியாது படி எதாவது ஒரு சூழல் வரும்… அதனால் அவருக்கும் அமரன் பற்றி எதுவும் தெரியவில்லை…
இன்று அவருக்கு வந்த புலனத்தில் அவளின் ரகசியம் அம்பலமானது. யார் அனுப்பியது என்பதெல்லாம் அந்த அப்பாவி மனிதன் சிந்திக்க வில்லை. தன் மகளின் வாழ்க்கையில் தவறு எதாவது நடந்தேறிவிட்டதா என்றப் பதட்டத்தில் இந்த விஷயத்தைத் தன் மனைவியிடம் கூடப் பகிராமல் மறைத்து, உண்மை என்ன என்று தெரிந்துக் கொள்ளலாம் என்று வந்தவருக்கு எல்லாம் தெரிந்தது…
தன் மகளின் வாழ்க்கையில் தனக்கு அறியாமல் ரகசியம் இருக்கிறது என்று…
அவளிடம் எதுவும் பேசாமல் கண் கலங்க அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தார் கங்காதரன்…
அவரின் மௌனம் அவளைக் கொன்றது என்றால் அவர் மௌனத்தைக் கலைத்தால் என்ன செய்ய.. அவரிடம் இருந்து பறந்து வரும் வினாவிற்கான விடை அவளிடம் இல்லையே…பிள்ளையின் தந்தை… இன்று பிள்ளையின் அம்மாவாக அடையாளம் காணப்பட்ட தனக்குத் துணை யாரென்று கேள்விக்கு அவளுக்கே பதிலில்லை…
மௌனம் மட்டுமே வலியைத் தருமா... இதோ தந்தை மற்றும் மகளைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தது அந்த மௌனம்…
மௌனம் பல சூழலில் அழகென்றால் இங்கே மௌனம் அந்தகார நரகமாக இருந்தது தந்தை மற்றும் மகளுக்கு…
தொடரும்…