32
எவ்வளவு நேரம் அழுதாளோ அதிதி. அவள் அவன் மார்பில் சாய்ந்திருந்தாள். அவளது முதுகை ஆதாரவாக தடவி கொடுத்த நிரஞ்சன் மனதில், என்னவானாலும் அவளை இனிவிட்டுக்கொடுப்பதில்லை எனும் சங்கல்பம் செய்து கொண்டான். வெகுவாக சிதறியவள் அப்படியே தூங்கிவிட்டாள்.
சுமனா இவளிடம் பேசிய பிறகு அதிக்கு தூக்கம் சற்றும் வரவில்லை. இன்று நிரஞ்சனின் மார்பில் தஞ்சம் புகுந்தவளுக்கு இது தனக்கான இடம் என்று மனம் புரிந்து கொண்டதால் உறக்கம் தழுவியதோ!
அவள் மனதில் என்ன நினைக்கிறாள், கணவனிடம் விவாகரத்து பெற காரணம் என்ன என்று இப்போது தெரிந்துவிட்டது.
அவள் அழுவதைப் பார்த்தால், மனதளவில் வெகுவாக காயப்படுத்தப்பட்டு இருக்கிறாள் என்பது நிரஞ்சனுக்கு தெளிவாக புரிகிறது. இதிலிருந்து அவளை வெளியே கொண்டு வர வேணும் முதலில். அதற்கான உரிமையை அவனுக்கு யாரும் தரபோவதில்லை. தானே எடுத்துக்கொள்ள வேண்டியது தான் என உணர்ந்தவன் வெகு நேரம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக தனது கார் சாவி, வீட்டுச்சாவியையும் வாலட்டையும் எடுத்துக்கொண்டு, தனது அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் பாவையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஆட்டோ லாக் கொண்ட வெளிக்கதவை சாற்றினான்.
காரில் செல்லும் வழி முழுதும் யோசனைதான். தான் செய்வது சரியா, அதி எப்படி எடுத்துக் கொள்வாள்?
வித்யா அத்தையை எப்படி பார்ப்பது... என் அம்மா ம்ம்ஹும்...இனி எவ்வளவு விஷயங்களை தனியாக சமாளிக்க வேண்டுமோ என்று இத்யாதி கவலைகளை பட்டுக்கொண்டே அவன் சென்றது பெங்களூருவின் புகழ் பெற்ற நகை கடைக்குள்.
அதிக்கு கொஞ்சம் நகைகள் வாங்கியவன், ஐந்து சவரத்தில் செயினும், திருமங்கல்யமும் கூட வாங்கிகொண்டான்.
கொஞ்சம் பூ, பழம், மஞ்சள், குங்குமம் என்று மங்கல பொருட்களுடன் வீடு வந்து சேர்ந்தவன் மனதில் விஞ்சி நின்றது பயம்.
அதி இன்னும் விழித்திருக்கவில்லை. நிம்மதி பெருமூச்சுடன் எல்லாவற்றையும் ஸ்வாமி அறையில் வைத்து கதவை சாற்றியவன், திருமங்கல்யம் கோர்த்து இருக்கும் செயினை தனது அறை அல்மெராவில் வைத்து விட்டு, கொஞ்சம் பாயசம் செய்து வைத்தான்.
இனி, பயம் கொண்டு பிரயோஜனம் இல்லை என்று புரிந்தவனாக, கடவுளை மனதில் பிரார்த்தனை செய்து, அதியை எழுப்பினான். அவன் கொண்டு வந்த சூடான பில்டர் காபியின் மணம் 'அதியை சீக்கிரம் எழுந்துக்கோ அதி'எண்டு கூப்பாடு போட மெல்ல கண் விழித்தவளுக்கு, முதலில் ஒன்றும் புரியவில்லை.
கையில் காபீயுடன் நின்று கொண்டு இருந்தவனை பார்த்தவுடன் நடந்தவை நியாபகம் வர, படுக்கையில் இருந்து துள்ளி எழுந்தாள் பெண். அவன் கோவம், புரிகிறது. காதல்? எப்படி சாத்தியம்... இது வெறும் பரிதாபத்தை அடிப்படையாக கொண்ட உணர்வு. ஒருவேளை இன்று காதல் என்று நினைப்பது, திருமணமான பிறகு இவளை ஏன் மணந்து கொண்டேன் என்ற எண்ணத்தை அவனுக்கு உண்டு செய்துவிட்டால்?, என்ற கேள்வியே அவளை மேற்கொண்டு யோசிக்க விடாமல் தடுத்தது. அவளைப் பொறுத்தவரை, எவ்வளவு நல்ல ஆண்மகனாக இருந்தாலும் கணவன் என்ற ரோலை ஏற்கும் பொழுது அவர்களது மனம் மாறுபடலாம்,குணமும் வேறுபடலாம். நிரஞ்சன் என்ற நண்பனை தன் வாழ்க்கையில் என்றுமே தவற விட்டு விடக் கூடாது என்பது அவள் மனதில் தீர்மானம். கல்யாணம் என்ற வார்த்தை அவளுக்குள் பயத்தை விதைத்து இருக்கிறது.
எவ்வளவு நேரம் என்னையே பார்த்துக்கிட்டு இருப்ப அதி, போய் ஃபேஸ் வாஷ் பண்ணிக்கிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கோ. கொஞ்சம் அழுத்தமான பிரைட் கலர்ல சாரி கட்டிக்கோ... முகம் ரொம்ப டல் அடிக்குது, என்று சொல்லிவிட்டு அவ்வறை விட்டு வெளியே வந்தான். அவளுக்கோ அவன் இவ்வளவு ஈசியாக தன்னை சுதாரித்துக்கொண்டானா எனும் கேள்வி. அவன் குணம் புரிந்தவள் அதி. அவளிடம் ஏதாவது பேசி விடுவோமோ என்ற பதட்டத்தில் அவனுக்கு வியர்த்து வழிந்தது. தனது கர்ச்சீப்பால் முகத்தை துடைத்துக் கொண்டே கண்ணாடியைப் பார்த்தான். தன்னிடம் எதுவும் குறை இருப்பதாக தோன்றவில்லை. இருந்தாலும் பரவாயில்லை என்று தன் சம்பளத்தில் முதன்முறையாக வாங்கிய வெள்ளி சரிகை இட்ட வேட்டியை கட்டிக் கொண்டான். அவனது உயரத்திற்கும் உடல்வாகுக்கும் பாந்தமாய் பொருந்தியது ஆடை.
அதிக்கும் மாற்றம் தேவை படவே, கட்டியிருந்த புடவையை மாற்றிகொண்டாள், அவன் சொன்னபடிக்கு.
நிரஞ்சன், அதியின் திருமணம் நிச்சயம் ஆகும் பொழுது எடுத்து கொடுத்த சாப்ட் சில்க் கையில் வர அதையே கட்டிக்கொண்டாள்.
அந்தி சாயும் நேரம்... வெள்ளிக்கிழமை. இனி, இங்கிருந்து கிளம்ப வேணும் என்று எண்ணும் போதே கண்கள் கலங்கியது பெண் அவளுக்கு.
அறையிலிருந்து வெளியே வந்தவளுக்கு கையில் வைத்திருந்த பூவை கொடுத்தவன், “தலையில வச்சிக்கோ அதி,” என்றான் அவன் பார்வையில் அவளது தோற்றம் மீதான மெச்சுதல் இருந்தது. அவன் சொன்ன படிக்கு பூவை வைத்துக் கொண்டவளிடம், சுவாமி அறையில் விளக்கு ஏற்று என்றவனை வித்தியாசமாக பார்த்தாள் அதி. அவள் பார்வையில் நிரஞ்சன் புதிதாக தெரிந்தான். அவள் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. ஏதோ சரியில்லை என்று மனது நிச்சயம் சொன்னது.
அவள் மனதில் எண்ணங்கள் அவள் கண்களில் அப்பட்டமாக தெரிய, நிரஞ்சன் மனதில் வலி மட்டுமே!
‘'நா கிளம்பணும் நிரஞ்சன்,இப்போவே லேட்டாக்கிட்டு..”.என்றவள் தொண்டை வறண்டு போயிருந்தது. சத்தம் வெளியே வரவில்லை.
அவளை ஆழ்ந்து நோக்கியவனின் பார்வை வீச்சை தாள இயலாமல் பாவையின் பார்வை தாழ, நிரஞ்சன் முகத்தில் சந்தோஷம்.
மேலும் அவனிடம் பேசுவதற்கு அதிக்கு தயக்கம்.
‘'ஃப்ரைடே ஈவினிங் கிளம்பதே அதி. இப்போ போய் விளக்கேத்து…”என்றுவிட்டு ஸ்வாமி அறைக்குள் புகுந்தான் நிரஞ்சன். வேறு வழி தெரியாமல் அவன் பின்னே அவளும் சென்று விளக்கேற்றினாள். கைக்கூப்பி, கண்களை மூடி பிரார்த்தனை செய்தவள் கண்கள் மூடிய மோன நிலையில் இருக்க, மெதுவே தன் சட்டை பாக்கட்டுக்குள் சிரித்தபடி இருக்கும் தாலிக்கொடியை கையில் எடுத்து திருமாங்கல்யம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தவன் கடவுளை வேண்டியப்படி, அவள் கழுத்தில் அணிவித்தான்.
ஏதோ உறுத்த கண்களை திறந்தவளுக்கு அவன் செய்து கொண்டு இருந்த காரியம் உறைய வைத்தது. அவன் கண்களை அவள் பார்த்துக்கொண்டு சிலை போல் பெண் நிற்க, அவள் கழுத்தில் முழுதாக தொங்கியது அவன் அணிவித்த பொன் தாலி. அவள் சுதாரிப்பதற்குள் அவளது நெற்றி உச்சியிலும், திருமாங்கல்யத்திலும் குங்குமமும் இட்டு, தனது உரிமை இவள் என்று இம்முறை நிலைநாட்டிக்கொண்டான்.
அதிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. நடந்ததன் வீரியம் தாக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் என்றும் விளங்காமல் அவனையே வெறித்து பார்த்தவளின் விழிகளில் விழுந்தது அவன் விரிந்த புன்னகை. இவ(ன்) சுய நினைவோட தான் இத செஞ்சானா? நா அவ்ளோ எடுத்து சொல்லியும்... இப்போ நா எப்டி ரியாக்ட் செய்யனும்?
அழணுமா, கத்தணுமா...நிரஞ்சன் சட்டையை பிடிச்சு உலுக்கவா என்று என்று புத்தி பேதலித்தவள் போல் யோசித்து, அவன் சட்டையை பிடித்து இழுத்து அவனிடம் கேள்வி கேட்க எத்தனித்தவள், அவன் கண்களோடு தன் கண்களை கலந்து விட்டாள். அவள் மீதான ஈடுபாடு அந்த கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. மேற்கொண்டு அவனிடம் என்ன பேசுவது என்று குழம்பியவள்,'’நீ ரொம்ப அவசர பட்டுட்ட நிரஞ்சன், இதெல்லாம் எங்க கொண்டு போய் விட போகுதுனு உனக்கு ஏதாவது புரியுதா?
உங்க அம்மா கிட்ட நீ என்னனு சொல்ல போற? என் அப்பா அம்மாகிட்ட நான் என்னன்னு சொல்லுறது? ஏற்கனவே, உன்னையும் என்னையும் சேர்த்து வைத்து ஆபீஸ்ல பேசுறது பிடிக்காமதான் தனியா போகணும்னு யோசிச்சேன். இப்போ இப்படி ஆயிட்டு.”
அவளின் கூற்றில், எரிச்சல் கொண்ட நிரஞ்சனின் மனது தனது கோபத்தை வாய் வழியே காண்பித்துவிட்டது.
‘'தென் உனக்கு கஷ்டமா இருந்தா... ஐ மீன், இந்த தாலி பாரமா இருந்தா கழட்டி கொடுத்துடு, யாருகிட்டயும் ஏதும் விளக்கம் சொல்ல வேணாம்... கஷ்டம் இல்ல பாரு…” என்றவனை சூடாக ஒரு அறை விட்டாள் அதி.
‘'உனக்கு என்ன தோணுது நீரு, இது விளையாட்டு கயிறுன்னு? இல்ல நா உன்னோட பொம்மைன்னு... உன்ன நம்பி வந்தேன் பாரு, என்னை சொல்லணும்.
இப்போ பாரு, புருஷன்ன்ணு ஆன பிறகு உன்னோட புத்தி எப்படி போகுது...
யு க்நொவ், என்னோட நண்பன் நிரஞ்சன் இங்க இப்போ இல்ல. இதுக்கு தான் நா பயந்தேன்.”
மீண்டும் அவள் அழத் தொடங்க, சற்றே தொலைவில் நின்றவளை தன்னருகே இழுத்து தனக்குள் புதைத்துக் கொண்டான். அவனது உடல் கதக்கதப்பு அவளது கண்ணீரை மட்டுப்படுத்த,
‘'அழுதாலும் உன்கிட்டதான் வரத் தோணுது. ஏன் இப்படி நீரு...நா சொன்னேனே? என்னால உனக்கு வைப்ஃபா, உன்னோட தேவைகளை நிறைவு செய்ய முடியாது. நா ஏற்கனவே டிப்ரஷன்லேந்து முழுசா வெளிய வரல. இப்போ... இதுவும் சேந்து குற்ற உணர்ச்சியாகும்’'
என்றவளின் தாடை பிடித்து முகம் தூக்கியவன்,
“அப்டின்னு நா சொன்னேனா? வைஃப் னா என்ன பண்ணனும்? முதல்ல அத எனக்கு நீ சொல்லு அதி” என்றான். நிரஞ்சனின் குரல் குழைந்தது.
அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு குழப்பம்தான்.
இது சரி வராது நிரஞ்சன் என தள்ளி நின்று பேச முயன்றவளை மீண்டும் அருகே இழுத்துக்கொண்டான்.
“பாரு அதி, உன்ன வேற யாருகிட்டயும் குடுக்க என்னால முடியாது. எனக்கு அதி வேணும். பொண்டாட்டி அதின்னா காதல் பண்ணுவேன். இல்ல, பிரண்ட் அதின்னா பொக்கிஷம் மாதிரி கைக்குள்ள வச்சிப்பேன். பட் நோ காம்ப்ரமைஸ்... நீ எனக்கே சொந்தமா என் கூட வேணும்” என்றுவிட்டு அவள் முன் உச்சி முகர்ந்தான்.
அவளுக்கு நிரஞ்சன் தன் மீது வைத்திருக்கும் பாசமும் உயிர் நேசமும் புரிகிறது. அதை தாங்கும் சக்தியோ, அவனுக்கு திகட்ட திகட்ட தன் காதலை அள்ளி வழங்கும் மனோ நிலையோ இல்லை.
“நிச்சயம் என் மேல உனக்கு காதல் வரும் அதி. எப்படியும் ஆண்கள் மனைவிகிட்ட எதிர்பாக்குறது நல்ல தோழியையும் தான். அப்டி பாத்தா அம் லக்கி.டோன்ட் கன்பியூஸ் எனிதிங்மோர்,” என்றுவிட்டு உள்ளிருந்து பாயசம் நிரம்பிய கப்பை எடுத்து வந்தான்.
“டேஸ்ட் பண்ணிப்பாரு அதி, நம்ம கல்யாணம், சோ பாயசம் செய்யணும்னு தோணிச்சு…”என்று இயல்பாக சொன்னவனிடம் எப்படி நடந்துகொள்வது என்று திகைத்துபோனாள் பெண்.
அவள் நயன பாஷை புரிந்தவன் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த கப்பிலிருந்து ஸ்பூனில் பாயசம் எடுத்து அவள் வாயருகே கொண்டு செல்ல, தன்னை அறியாது பெண்ணும் வாங்கிக்கொண்டாள்.
உடம்பு சரி இல்லாது இருந்த மகளை பார்க்க வந்த வித்யா விஸ்வம் தங்களிடம் இருக்கும் நிரஞ்சன் வீட்டு சாவி கொண்டு திறக்க, கண்டது இந்த காட்சியை தான்.
அதி நிரஞ்சன் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, தொலைவிலிருந்து பார்த்தவர்களுக்கு, அதிக்கு சாப்பிட பிடிக்காததால் நிரஞ்சன் உதவி செய்வதாக தோன்ற, பேசாமல் அதியை கொஞ்ச நாட்களுக்கு சென்னை கூட்டி செல்ல தோன்றியது.
நிரஞ்சனின் அதிரடியில் சித்தம் கலங்கி நிற்கும் அதிக்கும் சரி, அவளை கரம் பிடித்த சந்தோஷத்தில் இருக்கும் நிரஞ்சனுக்கும் சரி, அதி பெற்றோர் வந்திருப்பது தெரியவில்லை.
ஹாலில் சூட்கேஸை வைத்துவிட்டு மகளின் அருகில் வந்த வித்யா, அதியின் தோற்றம் கண்டு மயங்கி சரிய, சட்டென்று நிலைமை புரிந்தவனாக நிரஞ்சன் தன் கைகளில் தாங்கிகொண்டான்.
மனைவி நிலை கண்ட விஸ்வம் அருகே வர, அதியை மண பெண்ணாக மீண்டும் பார்த்தவருக்கு உடல் குலுங்கியது.
நிரஞ்சன் அதிதி இருவரையும் ஒரு பார்வை பார்த்தவர் ஒன்றும் பேசவில்லை.
வித்யாவை அதியின் அறையில் படுக்க வைத்திருந்தான் நிரஞ்சன். அவளுக்கு மயக்கம் இன்னும் தெளியாததால், மருத்துவரை வீட்டுக்கு அழைத்தான்.
அதிக்கு குற்ற உணர்ச்சி. விஸ்வம் மகளிடம் பேசவும் இல்லை, அவளை தன் அருகில் நெருங்கவும் அனுமதிக்கவில்லை. அதே அறையில் ஒரு ஓரமாய், தன் அம்மாவை பார்த்துக்கொண்டு தரையில் மடங்கி அமர்ந்திருந்தாள்.
சட்டென இவற்றை எதிர்பார்த்திராத நிரஞ்சனுக்கும் வித்யாவை நினைத்து பதறியது.
‘அதி சொன்னது போல் கொஞ்சமும் பொறுமை இல்லாமல் நடந்து கொண்டுவிட்டேனே... இது எங்கே போய் முடியும்’ என்று அவனுக்கு பயம் வந்தது.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. நான் திரும்பவும் அதியின் பெற்றவர்களிடம் பெண் கேட்டு, அதியின் மனதை மாற்ற முயற்சி செய்திருக்கணும் என்று யோசித்தவனுக்கு அடுத்து என்ன என்று யோசனை ஓட, மருத்துவர் வருகைக்காக காத்திருந்தான்.