எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா - 10

subasini

Moderator
மனம் - 10

தந்தையின் தேவதையாக இருந்தவள்…
தலைமகனாக‌, பல நேரங்களில் தோள் கொடுத்தவளின் பக்கமிருந்து ஒரு சிறு‌ப்பிழை‌ கூட மிகப்பெரிய வலியை உண்டாக்கும்…

மகளின் இந்தத் தவறு அவரின் கௌரவத்தை உரசிப் பார்த்து இருக்கிறது…

என்ன செய்வது என்று தினறியவாறே‌‌ வார்த்தைகள் வற்றி மௌனம் என்னும் விரதம் ஏற்று இருந்தாள் சில மணித்தியாலங்கள்…

கங்காதரனுக்கு… ‌தாராவின்‌ மேல்‌‌ இருந்த‌ நம்பிக்கை‌ப் பொய்த்துப் போன தன் வேதனையை அப்பட்டமாக‌‌ முகத்தில்‌‌, பிரதிபலிக்க அமர்ந்து இருந்தார்…

தாராவின் மனமோ…‌பிள்ளைப்பற்றி‌ய எதாவது சொல்லிச் சமாளிக்கலாம்.. அவன் தந்தை யாரெனக் கேட்டால் என்ன பதில் சொல்வது.
பதில் இல்லா‌க் கேள்வி…

தந்தையின் வருகையினால் உண்டான அதிர்ச்சியில் அவள் வாசல் கதவைச் சும்மா அடைத்திருந்தாள்... தாழிட மறந்திருந்தாள்.. அன்றைய தினம் நடப்பதெல்லாம் அவளுக்கு எதிராக மாறிக் கொண்டே இருந்தது…

மெல்லச் சுயம் பெற்றவள்… “அப்பா, இந்தாங்க, தண்ணிக் குடிங்க" என்று கொடுத்தாள் தாரா…

அவளின் அமைதியான முகத்தில் இருந்த எதோ ஒன்று அவரின் கோபத்திற்குத் தூபம் இட , அவள் கையில் இருக்கும் கண்ணாடி டம்ளரை வேகமாகத் தட்டி விட்டார்.

அது விழுந்த வேகத்தில் அதன் சில் ஒன்று அவள் நெற்றியில் பட்டுத் தெறித்தது.

இதை அவரும் எதிர்பார்க்கவில்லை…
நல்ல வேலை மகனை உள்ளே படுக்க வைத்த‌ப் பின், தண்ணீர் கொண்டு வந்தாள் தாரா.

அதே சமயம் உள்ளே வந்தான் அதியமான்.

“தாரா” என்றவன் வேகமாக அவள் நெற்றியில் இருக்கும் காயத்தைப் பார்த்தான்…

அவனைச் சற்றும் எதிர்பாராத தாராவிற்குச் சூழ்நிலை, தன் கையை மீறிப் போவதைத் தடுக்க முடியவில்லை.

பதட்டத்தில் மயக்கம் வருவது போல் தோன்றியது…

இன்றை நாள் இவ்வளவு கேவலமாக விடியும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை…

தந்தையின் வருகை எதிர்பார்க்கவில்லை என்றால்… அதியமானின் வருகை அவளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி…

என்ன செய்வது என்று தெரியாமல் கண் கலங்கியது அவளுக்கு…

நெற்றியில் வழியும் குருதியோடு அவள் கண்ணீரும் கலந்ததைக் கண்டு அதியமானின் உள்ளம் ரணமாகியது…

வேகமாக அங்கே இருந்த மருந்துப் பெட்டியில் இருக்கும் மருந்தை எடுத்து அவள் நெற்றியினை‌த் துடைத்துப் போட்டு விட்டான்.

அவன் கண்ணும் கருத்துமாகத் தன் பணியில் கவனமாக இருந்தவனின் விழிகளில் ஊடுருவிய அவள் பார்வையை உணர்ந்தவனின் விழிகள் சிவந்திருந்தது.

அவன் கோபம்… அவன் வன்மம் எல்லாம் கடல் கடந்து சென்றது…

அவளை உள்ளே அழைத்துச் சென்றவன் அவளைப் பிள்ளையின் அருகே அமர வைக்க அவனையே பார்த்தாள்…

நான் பார்த்துக் கொள்கிறேன் என்று‌க் கண்களால் அவளுக்கு ஆறுதல் அளித்தவன், ‌அங்கே கப்போர்டில் இருந்து கவரை எடுத்து வேகமாகக் கங்காதரனிடம் வந்தான்…

அவரிடம் கவரைக் கொடுத்தவன் "அமரன் எங்கள் குழந்தை… அவனுக்கு நாங்கள் தான் பெத்தவங்க… இதில் தாராவோட தப்பு எதுவும் இல்லை, எல்லாத்துக்கும் நான் தான் காரணம், எதுவாக இருந்தாலும் என்னைத் திட்டுங்க… அவளை எதுவும் சொல்லாதீங்க…

இந்த விஷயத்தை யாருக்கும் தெரியாமல் முடிக்கத் தான் என் அம்மாவை அனுப்பி இருந்தேன்…

அவளுக்கு என் மேல் இருந்த கோவத்தில் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்…

அவளைச் சமாதானம் செய்யத் தான் நான் இங்கே வந்தேன் என்றான் அதியமான்…

இதெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட கங்காதரன்…

"உங்க காதல் ஊடல் எல்லாம் எனக்குத் தேவையில்லை… என் பொண்ணுக்கு நான் எல்லா உரிமைகளும் கொடுத்து இருக்கேன்… ஆனால் இதை என்னிடம் சொல்லி இருக்கணும்…சுதந்திரம் கொடுத்தால் இப்படி யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தும் அளவிற்கு அதைத் துஸ்பிரயோகப்படுத்தக் கூடாது இல்லையா... குடும்பத்தின்‌ மானத்தையே வாங்கிட்டாளே… இதெல்லாம் உங்களுக்குப் புரியுமா… அவங்க அம்மாவிற்கு அவள் மேல் எவ்வளவு நம்பிக்கைத் தெரியுமா… அதெல்லாம் தவுடுப் பொடியாக்கிட்டாளே…
அவளோட அம்மா கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவீங்களா…

உங்களோட வாழ்ந்து ஒரு பிள்ளைக்குத் தாயாகிருக்கிறாள் என்று அவள் அம்மாவிடம் நான் எப்படிச் சொல்லுவேன்… அவள் வாழப் போகும் குடும்பத்தின் பொறுப்பில் இருக்கும் உங்கள் அம்மா எல்லாம் அவளைப் பற்றி என்ன நினைப்பாங்க… யோசித்திருக்கீங்களா… அவளுக்கு உங்க வீட்டுக்கு வந்தாலும் மதிப்பு இருக்குமா" என்று கேட்ட அவரின் வார்த்தைகளுக்குப் பதில் இல்லை அதியமானிடம்.

எந்தத் தவறும் செய்யாமல் தந்தையின் முன் அவமானத்தால் ‌குன்றி நிற்கும் தாராவின் மேல் கட்டுக்கடங்காத காதல் ஊற்றெடுத்தது அதியமானின் மனதில்…

“என்னை நம்பி அவளைக் கல்யாணம் செய்து தாருங்கள் மாமா…‌ அவளை‌ நான் கண் கலங்காமல் பார்த்துக் கொள்கிறேன்” என்றவன்…

“என்னை மன்னித்து விடுங்கள்… உங்க பொண்ணுக்கு இப்படி ஒரு கஷ்டத்தைக் கொடுத்ததற்கு”… என்று‌ அவரிடம் மன்னிப்பை யாசித்தான்…

தன் தம்பியின் தவறைத் திருத்த முயன்றுக் கொண்டிருந்தான்…
தாரா இட்ட ஒற்றைப் புள்ளியில் மீண்டும் இரு புள்ளிகளை வைத்துத் தொடர்ந்தான் அதியமான்.
இதெல்லாம் படுக்கை அறையில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்தாள் தாரா…

'என்ன சொல்லிட்டு இருக்காரு… என்னாச்சு இவருக்கு' எதுவும் அவளுக்குப் புரியவில்லை…

அவன் பேச்சுச் சரி பட்டு வரும் என்று தோன்றவில்லை… வேகமாக வெளியே வந்து அவள் தந்தையிடம் அமரன் பற்றிப் பேச வந்தாள்…

அப்போது தந்தையின் கையில் இருக்கும் ஃபைலை வாங்கிப் பார்த்தவளுக்கு மேலும் அதிர்ச்சியானாள்…

மெல்லக் குரல் உடைய ஏன் இப்படிப் பண்ணறீங்க…‌ உங்களுக்கு என்ன வேண்டும் என்றாள்…

அவளுக்கு மனதில் ஒரு பயம் உருண்டது…அவன் ரௌத்திரத்தின் முன் தன்னால் நின்றுப் போராட முடியாது…

வாழ்க்கையில் எந்தப் போர்க் களமும் வேண்டாம்… அமரனோடு‌ அமைதியாக இப்போது இருக்கும் வாழ்க்கைப் போதும் என்ற எண்ணம் மட்டுமே அவளுக்கு.

அதெல்லாம் அதியமானிற்கு‌ப் போதவில்லை…
“என் மனைவி என் பிள்ளைக்காகத் தான் பண்ணறேன்…

எனக்கும் ஆசை இருக்கும் தானே… என் குடும்பத்தோடு அழகான வாழ்க்கை வாழ்வதற்கு…
எனக்கும் உரிமை இருக்கிறது என்‌னோட பிள்ளையோடு இருப்பதற்கு” என்றான்…

என் பிள்ளை‌‌ என்று‌ அவன் அழுத்திச் சொன்ன வார்த்தைகள் அவளை நிறுத்தி வைத்தது சிலையென…

என் பிள்ளை என்றவனின் வார்த்தைகள் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது…

அவள் அருகே வந்தவன் “இங்கே பாரு, தாரா நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை” என்று‌ வசனம்‌ பேசினான்… இதெல்லாம் கண்டும், கேட்டும்,பார்த்தும் கோபம் வந்தது கங்காதரனுக்கு…

அவர் தாராவைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து.. அதியமானிடம்…

“உங்க அம்மாவிடம் சொல்லி நல்ல நாள் பாருங்கள்… இரண்டு திருமணமும் ஒரு நாளில் நடக்கட்டும்” என்றார்…

ஆனால் கையில் பிள்ளையோடு தாராவின் திருமணம் நடந்தால் நன்றாக இருக்காது என்று‌‌ எண்ணியவன்..

“இல்லை மாமா…‌எங்களுக்குத் திருமணம் எளிமையாக நடந்தால் போதும்” என்றான்…

“எனக்கு இதில் விருப்பம் இல்லை” என்று தாராவின் பதிலில் சினம் ஏற‌ அவளை‌ முறைத்தார் கங்காதரன்…

தந்தையின் பார்வையில் நொறுங்கிப் போனவள்… எதுவும் சொல்லாமல் ‌பால்கனிக்குச் சென்று‌ நின்றுக்கொண்டாள்…


மகளின் மேல் இருந்த கோபம் மற்றும் அதிருப்தியின் காரணம் கங்காதரனை அங்கே இருந்த போகச் சொன்னது… அதனால் அதியமானிடம் “என்ன பண்ண வேண்டும் என்று பேசி முடிவு செய்து என்னிடம் கூறுங்கள்… அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் நான் செய்கிறேன்” என்றவர் அங்கிருந்துச் சென்றார்…

மகளிடம் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்குத் திரும்பினார்…

அங்கே நடந்த எல்லாம் கவனித்த‌ யமுனா இருவருக்கும் தனிமைக் கொடுத்துக் கோயிலுக்குச் செல்கிறேன் என்று வெளியே வந்தார்…

அதியமான் மற்றும் தாராவிற்கான தனிமையில் அங்கே என்ன பேசுவது என்று தெரியவில்லை தாராவிற்கு…

'இவருக்கு என்ன ஆச்சு …ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்' என்ற குழப்பத்தில் இருந்தாள்…

அவள் நின்றிருக்கும் நிலைப் பார்த்து வேதனை மனதில் உண்டானது… எல்லாம் பழியும் ஏற்று அமைதியாக நிற்பவள் மேல் காதல் ஊற்றெடுத்தது.

அவள் அருகே வந்த அவளைப் பிடித்துத் தன் புறம் திருப்பினான்…
அதில் பதட்டம் அடைந்தாள் அவனை விட்டுச் சட்டெனத் தள்ளி நின்றாள்…

அவளின் செய்கையினால் அவர்களுக்கு இடையே உண்டான இடைவெளியைக் கண்டவாறு… அவளையும் பார்த்தான்…

அந்நேரம் எதுவும் சொல்லாமல் “இங்கே பாரு… அமரன் உன் ‌பையன் என்று அடையாளம் காணப்பட்டாச்சு.. அவனுக்கு அப்பா என்று நானும்” என்றான்…

“அதற்கு‌ அம்மா நான்... சரிதான்.. அப்பா நீங்க என்று சும்மா சொல்லாதீங்க…
எதற்கு அப்பாவிடம் இப்படி எல்லாம் பேசினீங்க”… என்றாள் கோபமாக அதில் கூட ஒர் அமைதியும் நிதானமும் இருந்தது…

"அப்பறம் என்ன சொல்லணும்… அப்பா இல்லாத பையன் அமரன் சொல்லணுமா உனக்கு... அதற்கு அர்த்தம் புரியுமா உனக்கு"… என்ற அவன் கேள்வியில் உடல் நடுங்கியது தாராவிற்கு.

அருகே நின்றவனுக்கு அது நன்றாக உணர முடிந்தது…


'அப்பா இல்லாத பையன் சொல்லுவாளாம் ஆனால் என்னைக் கல்யாணம் பண்ண மாட்டா... இருடி' என்று மனதில் நினைத்தவன் அவளிடம் அந்த மெடிக்கல் சர்டிபிகேட்டைக் கொடுத்துப் பாரு‌ என்றான்…

மகனின் பிறப்புச் சான்றிதழில் தாய் என்ற இடத்தில் தாரா என்று ஏற்கனவே இருந்தது தந்தை அதியமான் என்று‌ப் புதிதாகச் சேர்க்கப்பட்டு இருந்தது…

அதைப் பார்த்தவளுக்கு "இது தவறான சர்டிபிகேட் என்று என்னால் நிருபிக்க முடியும்" என்று‌ முறுக்கிக் கொண்டு நின்றாள்…

"என் தம்பியின் டிஎன்ஏ என்னோடு மேச் ஆகும் தாரா… அதே போல் உங்க இரண்டு பேர் டி என் ஏவும் அமரனுக்கு உன்னோட டிஎன்ஏ மேச் ஆகும். இதெல்லாம் ரொம்பத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்குப் புரியாது. அதனால் சும்மா என்னிடம் மோதாமல் நம் கல்யாணம் எப்போ என்று‌ மற்றும் முடிவுச் செய்‌” என்றான்‌ அதியமான்…

"இந்தத் திருமணம் வேண்டாம்…‌உங்களுக்கு‌ச் சொன்னால் புரியாது… என் அப்பா, சொன்ன வார்த்தைகள் உண்மை… எனக்கான மரியாதை உங்களிடம் இல்லை… எவ்வளவு தரம் தாழ்த்தப்பட்ட ஆளாகப் பார்க்க முடியுமோ அவ்வளவு பார்த்து இருக்கீங்க… அதுல உங்க குடும்பத்தில் வந்து போராடி... எனக்கு மரியாதை வாங்கி... தலை நிமிர்ந்து வாழப் போராடும் மனநிலை எனக்கு இல்லை, அப்படிப் போராட்டமான‌‌ வாழ்க்கை எனக்கும் வேண்டாம்…

என் பெற்றோரின் வயோதிகத்தில் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது… இன்றைக்குக் கோபமாகப் போகும் என் அப்பா கண்டிப்பா என்னைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…
உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம்” என்று தெளிவாகக் கூறினாள்.

தாராவின் வார்த்தைகளைக் கேட்டு மனதில் ஏமாற்றம் மையம் கொண்டது அதியமானுக்கு…
தன் மேல் காதல் அவளுக்கு வரவேண்டும் என்று அவன் எதிர் பார்க்கவில்லை தான், ஆனாலும் ஏதோ ஒன்று அவளிடம் இருந்து தனக்கு வேண்டும் என்று அவன் ஆழ் மனதின் ஆசை அவனை ஆட்டிப் படைத்தது…

"நம் குடும்பத்தில் எல்லா‌‌ முடிவுகளும்‌ நான் தான் எடுப்பேன். என் பேச்சுக்கு எதிர் பேச்சு இப்போ இல்லை எப்பொழுதுமே நடக்காது.. என் மனைவியை அவமானப் படுத்தும் தைரியம் என் அம்மாவிற்கே‌க் கிடையாது” என்று அவள் விழிகளைப் பார்த்துக் கூறினான் …

“நான் உங்கள் அம்மாவை எதுவும் சொல்ல வில்லை”…என்றவளின் விழி மொழி உதிர்க்கும் அவள் உணர்வுகளை எங்கே படித்து விடுவானோ என்று‌ப் பயந்து முகம் திருப்பினாள் தாரா…

அவள் மனதில் எப்படி இவன் தன் வீட்டிற்கு வந்தான்... தன் அறையில் இந்த ஃபைல் எப்படி வைத்தான்.. தான் இங்கே குடி இருப்பது எப்படித் தெரிந்தது… அமரன் பற்றி யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த உண்மை, இவனுக்கு எப்படித் தெரிந்தது என்ற கேள்வி ஒன்றன் பின் ஒன்றாக அவள் முன் வந்த நின்றது…

தன் அருகில் நின்று கொண்டு முகத்தைத் திருப்பியவளின் செயலில் மனதோரத்தில் காதல் சாரலாக வீசியது…

அவள் கையினைப் பிடித்துத் தன்னைப் பார்க்கச் செய்தவன் “என் பொண்டாட்டி அவமானப் படுத்தும் தைரியம் யாருக்கும் இல்லை என்று சொன்னேன்” என்றான் அவள் விழிகளைப் பார்த்தான்.

மனதின் ஆழத்தில் இருக்கும் காதல் மெல்ல மேலெழுந்து வரப்பார்த்தது.
அதைத் தடுக்க அவன் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

அங்கே மௌனம் விளையாட… அதை மெல்லக் கட்டுக்குள் கொண்டு வந்தவள் “ஆமாம் எப்படி வீட்டுக்குள் விட்டாங்க உங்களை” என்று கேள்வியை அவனிடம் கேட்டாள்.

“உன் புருஷன் என்று தான்” என்று ரொம்பச் சாதாரணமாகச் சொன்னவனின் பதிலில் அவனை முறைத்தாள் தாரா.

“நீங்கள் சொன்னால் நம்ப அவங்க ஏமாளி ஒன்றும் இல்லை… ஏதோ சொல்லி இருக்கீங்க… நானே கேட்டுக்கொள்கிறேன்… அதற்குப் பின் அவங்களை வேலையில் இருந்து நிறுத்தி விடுகிறேன்.. இப்படி முன் பின் தெரியாத நபரை வீட்டில் விட்டு… என் வாழ்க்கையில் முக்கியமான விஷயம் முடிவுச் செய்யும் உரிமை அவங்களுக்கு இல்லை” என்றாள் தாரா…

அவளின் வார்த்தைகளில் இருந்த உண்மையில் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன்…

அவளை அழைத்து வந்து சோஃபாவில் அமர்த்தியவன், “இங்கே பாருத் தாரா… அவங்களை எதுவும் சொல்லாதே... பாவம் அவங்க உனக்கு நல்லது நினைத்துச் செய்துட்டாங்க...
அமரனும் நீயும் இருக்கும் ஃபோட்டோவைப் பார்த்ததும் எனக்குத் தெரிந்தது…

அவன் சதீஷோட பிள்ளை என்று… நீயும் தாரிகாவும் தங்கியிருந்த வீட்டின் அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று விசாரித்ததில் உறுதியாகிடுச்சு… அதில் அவனோட அம்மா என்ற இடத்தில் உன் பெயர் இருந்தது ஏன் உன் பெயரைக்கொடுத்தாய்” என்று அவன் கேள்விக்குத் தலையில் கை வைத்து அமர்ந்தாள் தாரா…

“அது சின்னத் தவறு…அதை எதிர் காலத்தில் மாற்றிக் கொள்ளலாம்.. நீங்கள் பேச்சைத் திசைத் திருப்பாமல் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று சொல்லுங்கள்” என்று‌ மீண்டும் கோபம் அடைந்தாள்.

சரி... சரி என்றவன்… “எங்க வீட்டுப் பிள்ளைக்கு வேற இன்ஃசியல் வர நான் எப்படி விடுவேன்” என்ற அவனின் கேள்வியில் அதியமான் மனதில் இருப்பதை உணர முடிந்தது.

“புரியுது.. அதற்கு நீங்கள் என்னிடம் வந்து பேசி இருக்கணும்..
நான் தெளிவாகச் சொல்லி இருப்பேன்... அதை விட்டு ஏன் இப்படி எல்லாம்... என் வாழ்க்கையைத் திசைத் திருப்பி இருக்கீங்க”…என்றவளுக்குத் தந்தையின் முன் தன் கூனிக்குறுகியபடி நின்று நிலை எண்ணிக் கண் கலங்கினாள்.

"என் அப்பாவின் முகத்தில் எப்படி முழிப்பேன்" என்றவளின் அழுகைக் கூடியது இல்லாமல் குறையவில்லை…

அவளின் அழுகையின் அரவத்தில் உள்ளே இருந்து தத்தித் தத்தி வந்த அமரன் எட்டிப் பார்த்தான்…

தாயின் கண்ணீரைக் கண்டு அவனும் அழ ஆரம்பித்தான்..

அழும் சின்னவனை எடுத்து ஆறுதல் படுத்திய அதியமானை “ப்பா” என்று‌ மழலையில் சொல்லி அழுதான்…
பேச்சு வராமல் தத்துப் பித்து என்று பேசியதோ அதியமானை “அப்பா” என்றழைத்தது தான்.

அதில் உணர்ச்சி வசப்பட்டு அதியமான் ஆனந்தமாகத் தாராவைப் பார்க்க... காலையில் ஏற்பட்ட அதிர்ச்சி விட இது மிகவும் பெரிதாகத் தாக்கியது அவளை…

கண்ணீரோடு விழி அகல அவனைப் பார்த்தாள்…‌”இன்னும்‌ என்ன எல்லாம் எனக்குத் தெரியாமல் என் வாழ்க்கையில் பண்ணி இருக்கீங்க”… என்று கேட்டாள் தாரா.
“ஒன்றும் நான் பண்ண வில்லை நீ எழுதிப் பாதியில் விட்டதை‌‌ நான் முழுதாக எழுதி முற்றுப் புள்ளி வைத்தேன்” என்றவனைப் புரியாமல் பார்த்தாள்

அதியமானோ “கல்யாணம் ஆகாமல் பிள்ளைக்குத் தாயாக இருக்கிறாய்… அவன் உன் பிள்ளையும் இல்லை... சதீஷ் உடன் திருமணம் முடிந்துப் பின்னர்த் தாரிகா வந்து பிள்ளையைக் கேட்டாள் என்ன செய்வாய்... திருமணத்திற்கு முன் பிள்ளைப் பெற்றவள் என்ற உன் பெயர் மாறுமா…இதெல்லாம் யாருக்கும் தெரியாமல் இருக்கும் என்று நினைக்கிறாயா…மறைக்கப்படக் கூடிய விஷயமா இது... தெரியாது என்று நாம் நினைக்கும் விஷயம் தான் தாரா வேகமாக எல்லோருக்கும் தெரிந்து விடும்” என்று அவளிடம் கூறினான்.

எதார்த்தமாகச் சிந்திக்க மாட்டாயா, தாரா” என்ற அதியமானின் கேள்வியில் அறிவுத் திறந்து கொண்டது உண்மைத் தான்…


தாரிகாவின் திருமணம் நேரத்தில் அமரனை எப்படி மறைக்க முடியும். எப்படியும் சில நாட்கள் வீட்டில் இருக்க வேண்டி வரும்.. ஒரு நாள் என்றால் யமுனா விடம் விட்டுச் செல்லலாம் ஆனால் இது சிந்ததவளுக்கு… ஊரார் முன்னிலையில் அவமானப் பட வேண்டி வந்திருக்கும் என்று உணரும் நேரம் தலைச் சுற்றியது அவளுக்கு.

எல்லாம் சுலபமாகப் பண்ணிவிடலாம் என்று நினைத்ததன் பின் விளைவுகள் எண்ணிப் பயம் தாக்கியது அவளை.

மனதில் நினைப்பதெல்லாம் சரியாக நடந்து விடுமா?
அதியமானின் வார்த்தைகளில் இருக்கும் யதார்த்தம் அவளை ஸ்தம்பிக்கச் செய்தது.

அவர் சொல்வதும் சரிதான் தாரிகாவின் திருமணம் நேரம் அமரனை எங்கே கொண்டு போய் வைப்பது நடவாத காரியம் அல்லவா!

எப்படியும் அவனுடைய விஷயம் இந்த உலகிற்குத் தெரியத்தான் போகிறது அது நல்லதாகவே இருக்க வேண்டும். அவனுடைய வாழ்க்கையில் அது பாதிப்பை உண்டாக்கக் கூடாது என்று மனதில் தெளிவுப் பிறந்து.

அதற்கு அதியமானைத் திருமணம் செய்ய வேண்டும் என்பது இல்லையே…. நான் யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு என்னோடது... அந்த உரிமையை இவருக்கு யார் தந்தது என்ற கோபம் மூக்கின் மேல் வந்து நின்றது.

நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் புரிகிறது.

ஆனால் தாரிகாவின் பிள்ளை என்று உண்மையைச் சொல்லிவிடலாம் அல்லவா …அதை விட்டுவிட்டு நீங்கள் ஏன் இந்தக் கதையில் பல திருப்பங்களை உண்டாக்கி வைத்திருக்கிறீர்கள்.

சொல்லலாம் தான்... ஆனால் இப்போ வரைக்கும் தாரிகா யாரிடமும் உண்மையைச் சொல்லவில்லை... நினைவு வந்த சதீஷீம் இதைப்பற்றி வாய்த் திறக்கவில்லை... அவன் பெர்த் சர்டி்பிகேடில் உன் பெயரை அம்மா என்று இருக்கும் இந்தச் சூழ்நிலை உனக்குப் புரியுதா? என்று தெளிவாகக் கேட்டான் அதியமான்.

அமரனுக்கு அம்மா என்ற இடத்தில் என் பெயர் வந்ததற்குக் காரணம்…அந்த மருத்துவமனையின் சிறிய கவனக்குறைவு... தாரிகாவை அட்மிட் செய்த டைம்... பெயர்ச் சொல்லுங்க என்று சொன்னதும்... சட்டுனு நான் என்னுடைய பெயரைச் சொல்லிட்டேன் … அவள் பிரசவ வழியில் துடிச்சிட்டு இருந்த பதட்டத்துல… நான் அதை யோசிக்கல …அவங்களும் அதைக் கவனிக்கல… அதனால அவனோட அம்மாவோட பெயர் எழுதும் இடத்தில் தாரா என்று எழுதிட்டாங்க... அதை மாத்திக்கலாம் இல்லையா... தாராக்கும் தாரிகாவுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்ல இல்ல… அதை மாத்தி விட முடியும் . ஆனா நீங்க எதுக்கு உங்களோட பெயரை அதில் சேர்த்திறீங்க… உங்கள் தவறுக்கு நியாயங்கள் கொண்டு வர வேண்டாம்” என்று அவனிடம் கேள்விகளைக் கேட்டாள் தாரா.

தெளிவாகப் பேசிய தாராவின் வார்த்தைகளைக் கேட்ட அதியமான் அவளைச் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என்று நினைத்தான்

அவள் தந்தையின் குற்றச்சாட்டில் அவர் முன் பிடிக்கப்பட்டு விட்டோம் என்ற பதட்டத்தில் எதுவும் சிந்திக்க மாட்டாள் என்று தவறாக நினைத்து விட்டான்.

மனதில் சிரித்தவன் மெல்ல அவளைப் பார்த்து “தாரிகாவும் எங்க வீட்டு மருமகளாக வந்துருவா… உங்க அப்பா உனக்கு வேற இடத்தில் திருமணம் செய்து அனுப்பி விட்டால்... எங்க வீட்டுப் பையனுக்கு யாரோ ஒருத்தன் அப்பாவாக இருக்கிறது நான் எப்படிச் சம்மதிப்பேன்… முடியுமா…அந்த டைம்ல இந்த விஷயம் இன்னும் பெரிய கான்டவர்சியாகும்… அதனால் தான் உனக்கு நான் உதவிச் செய்தேன்… அது கூடப் புரிஞ்சுக்காம இப்படிப் பேசுறியே” என்று மேலும் அவளைக் குழம்பினான் அதியமான்..

“இதென்னவோ நீங்க உதவிச் செய்த மாதிரித் தெரியவல்லை... திட்டம் போட்டு ஏதோ பண்ணறீங்கன்னு மட்டும் புரியுது… ஆனால் உங்களுடைய இன்டென்ஷன் என்ன என்று தெரியல… இப்பவும் சொல்றேன்… உங்களுக்கு எனக்குமான இந்தத் திருமணம்… நல்ல உறவினையோ, உங்களுக்கோ எனக்கோ நல்ல அமைதியான வாழ்க்கையோ தராது… உங்களுக்கு என்னைப் பிடிக்கவும் பிடிக்காது. அதனால் நீங்க வேறு பெண்ணைக் கல்யாணம் செய்வது நல்லது. நான் எங்க அப்பாவிடம் எல்லா உண்மையையும் சொல்லி அவருக்கு நான் புரிய வைக்கிறேன்" என்றாள் தாரா.



“என்னம்மா, சொல்லப் போற… அதுதான் நான் தெளிவாகச் சொல்லிட்டேன் இல்ல… உங்க அப்பா கிட்ட …எனக்கும் அவளுக்கும் இப்பொழுது ஒரு சின்னக் கருத்து வேறுபாடு… அதனால் சண்டைப் போட்டுப் பிரிஞ்சு இருக்கோம் என்று ,அப்போ நீ என்ன போய் அவரிடம் சொன்னாலும், என் மேல் இருக்கும் கோபத்தில் இந்தக் கல்யாணத்தை நீ வேண்டாம் என்று கூறுகிறாய் என்று தான் உன் தந்தை நினைப்பார், அப்பறம் நான் உன்னைக் காதலிக்கிறேன் சொல்வில்லை, உன்னை என் மனைவி என்று சொல்லி இருக்கேன் நன்றாக யோசிச்சுக்கோ” என்று மேலும் அவளுக்குப் புரிய வைத்தான் அதியமான்.

அதியமான் வார்த்தைகள் எல்லாம் கேட்டு என்ன செய்வது என்று புரியவில்லை... தயாராக இருக்கும் வருங்காலம் நமக்கு என்ன தரும் என்றும் தெரியவில்லை… இப்பொழுது என்ன செய்ய என்று இரு கைகளாலும் தலையைப் பிடித்தபடி அங்கே அமர்ந்திருந்தாள்.

மகனுடன் விளையாடிக்கொண்டே அவளுடைய செயலை
ப் பார்த்தவன் மனதில் சிரிப்புத் தான் வந்தது… இப்பொழுதும் 'சரி நம்மோட கல்யாணத்தைப் பற்றி யோசிக்கலாம் என்று சொல்கிறாளா' என்று மனதினோறும் அவள் மேல் அவனுக்குக் கோபமும் இருந்தது. ஆனால் அவனின் கோபம் நியாயமானதா என்பது அவனுக்கே வெளிச்சம்…

தொடரும்…
 
Top