priya pandees
Moderator
அத்தியாயம் 24
மூன்று மாதங்கள் சென்றிருந்தது, லதா இன்னும் பழூரில் தான் இருந்தாள். சுரேந்தர் அவளிடம் எந்த பேச்சுவார்த்தையும் வைக்கவில்லை. தினமும் அவள் தான் பஞ்சாயத்தை இழுத்தபடி இருந்தாள். அவள் சாதாரணமாக நினைத்திருக்க, சுரேந்தர், 'நான் அப்படி இல்லை' என காண்பித்துவிட, அவனிடம் காட்ட முடியாததை எல்லாம் சாம்பவியிடமும், மார்கண்டேயனிடமும் தான் காட்டிக்கொண்டிருந்தாள்.
"உன்னால தான் நானும் என் புருஷனோட வாழாம இருக்கேன். நீ ஒழுங்கா அமெரிக்காலயே இருந்துருந்தா இன்னைக்கு எனக்கு இத்தன பிரச்சனையே இல்ல. எனக்கு என் புருஷனோட பிள்ளையோட போகணும்" என இவன் கண்ணில் படும்போதெல்லாம் அழுது அரற்றிவிடுகிறாள்.
"நீ இப்படியே பேசிட்டு இருந்தனா அப்றம், லைஃப் லாங் இங்கன தான் இருக்கணும். உன் புருஷன்ட்ட போக என்ன செய்யணுமோ அத செய்யணும், சும்மா என்னைய பேசிட்டு இருந்து டைம் வேஸ்ட் பண்ணாத"
"அப்ப நா முக்கியம் இல்லையா உனக்கு? என் லைஃப்ல நா எப்படி போனாலும் பரவால்லையா உனக்கு?"
"லூசா நீ? அப்படியே ஓங்கிட்டு ஒன்னு விட்றாலாமான்னு இருக்கு. உனக்கு ஒழுங்கா வாழ தெரியாததுக்குலாம் நா பொறுப்பேத்துக்க முடியாது. போய் அத்தான்ட்ட சாரி சொல்லிட்டு, அவரு சொல்றத கேட்டு இருக்க பாரு"
"அவரு வேலைக்கு போக சொல்வாரு"
"போக இஷ்டமில்லனா வேறெதாவது வீட்ல இருந்தே பாக்குற மாதிரி தொழில் பாரு. உனக்குன்னு ஒரு வேலை வருமானம் நல்லது தானே?"
"அதான் நீ பாக்றதுல ஷேர குடுன்னு சொல்றேன். இப்ப நீ குடுத்தாலும் அத அவர்ட்ட தூக்கிபோட்டுட்டு கெத்தா அந்த வீட்ல வாழுவேன்ல? என் தம்பி எனக்கு இருக்கான்னு காமிச்சா அவரால என்னைய இப்புடி மறுபடியும் விரட்ட முடியாதுல்ல?"
"உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. எப்படியோ போ" என்றவன், "இனி நா இங்க வரணும்னா அக்கா அங்க கிளம்பியிருக்கனும்மா. என்னால என் வேலையவும் பாக்க முடியல" என்றுவிட்டே கிளம்பிவந்தான். ஆனாலும் அவனை ஒருவித குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியிருந்தாள் லதா.
அவன் வந்ததிலிருந்தே யோசனையில் இருப்பதை கண்ட மனோ, "கிளம்புங்க கோவில் போய்ட்டு வரலாம்" என இழுத்துக்கொண்டு வந்திருந்தாள்.
கோவிலில் இருவரும் அமைதியாக அமர்ந்திருக்க, மாலை நேர ஊதல்காற்று உடலை சிலிர்க்க வைத்துக்கொண்டிருந்தது. அதிலும் அவன் முகம் தெளியவில்லை என குறித்து கொண்டாள். மறுபடியும் அமைதியாகவே வீடு வந்திறங்கினர்.
மீனம்மா பிள்ளைகள் இருவரையும் பார்க் அழைத்துச்சென்றிருக்க அதன்பின்னரே இவர்களும் கோவில் கிளம்பியிருந்தனர், இன்னும் அவர்கள் வரவில்லை என்பது வீட்டின் அமைதியிலேயே தெரிந்தது.
வாசலை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவனை பின்னிருந்து அனைத்தாள் மனோ. அதில் கலைந்தவன், "என்னவாம் என் பொண்டாட்டி கட்டிலாம் பிடிக்கிறா?" என சிரித்தபடி கேட்க,
"உங்கள நா கட்டியே புடிச்சதில்லையா?"
"இப்ப நா வந்ததுல இருந்து நீயா கிட்ட வரல தானடி நீ?"
"ஆமா நீங்க மூணு வருஷம் எங்கள தேடி தவிச்சதுக்கு உங்கள வந்ததும் பாஞ்சுட்டு கட்டிப்பாங்க"
"சரி சரி மூடு மாற வேணாம். இப்ப நீயா கட்டிபிடிச்சத நாம செலிப்ரேட் பண்ணிடலாம்"
"உடனே ஜகா வாங்கிடுறது" என்றவள் அவன் பின் மண்டையின் முடியை பிடித்திழுக்க,
"ஷ் வலிக்குதுடி" என்றவன் திரும்பபோக,
"நோ! திரும்ப கூடாது. இன்னைக்கு நா என்ன கலர் சேரி கட்டிட்டு வந்தேன்னு சொல்லுங்க" என கேட்க,
"நேவி ப்ளூ கலர் சேரி, சேன்டல் ப்ளௌஸ்"
"ஹே! எப்பிடி? நீங்க கவனிச்ச மாதிரியே இல்ல? அவ்ளோ டீப் யோசனையில இருந்தீங்களே?" என அவள் எட்டி அவன் முன்னே வர,
"டீப்பா யோசிச்சா உன்னைய கவனிக்கலன்னு அர்த்தமாடி?" என அவளை இறுக்கி அருகில் அனைத்திழுக்க,
"பரவால்ல அப்ப சுதாரிப்பா தான் இருக்கீங்க" என்றவளை மேலே பேசவிடாமல், முத்தத்திற்குள் இழுத்துக்கொண்டான். அவன் அலைகழிப்பிற்கு மருந்தாக நினைத்தவள் முழுமையாக மயங்கி நின்றாள் மனோரஞ்சிதம்.
"மனோ!" என்றவன் அவள் கழுத்தில் புதைய,
"என்னவாம் மனோக்கு?"
"கடுப்பா இருக்குடி"
"அதான் உங்க மூஞ்சிய பாத்தாளே தெரியுதே. ஏன்னு தான் கேட்கிறேன்"
"அக்கா தான் கில்ட் ஃபீல் குடுக்குறா. நா நல்ல தம்பியே இல்லாத மாதிரி. நா அங்க வாங்கின சம்பளம் மந்திலி ஆறு லட்சம். அதுகிட்டயாவுது இங்க கொண்டு வரணும்னு தான் தேனீ பிஸ்னஸ், ஐடி சொல்யூஷன், இன்னொரு ஐடியா கூட பண்ணிட்ருக்கேன். இது என்னோட உழைப்பு தானே, நா அவளுக்கு செய்யணும்னா ஒன்னு அவ கஷ்டத்துல இருக்கணும் இல்ல பிஸ்னஸ்ல பாட்னரா இருக்கணும். ரெண்டும் இல்லாம லாபத்துல பங்கு கேட்குறது தப்பு தானே? இது ஏன் அவளுக்கு புரிய மாட்டேங்குது. நா செய்யாதது தான் தப்பு மாதிரியே பேசுறா. அம்மாவும், பொம்பள பிள்ளை தானப்பான்றாங்க? அப்ப நா சரியில்லையா?" என ஆயாசமாக கேட்க,
"இத என்ன நம்பிக்கைல உங்க பொண்டாட்டிட்ட கேட்கிறீங்க? எந்த பொண்டாட்டியாவது வர்ற வருமானத்துல பாதிய நாத்தனாருக்கு குடுன்னு சொல்லுவாளா? நா மட்டும் என்ன லூசா அப்படி சொல்ல?" என அவனை தள்ளிவிட்டு சீரியஸாகி கடித்தாள்.
"ம்ச் ஏன்டி கோவபடுற?" என மீண்டும் அவள் தோளில் சாய,
"உங்க அக்கா பிரச்சனைய அப்புறம் பாப்போம். அங்க ஆறு லட்சம் வாங்குனீங்கனா எதுக்கு அந்த வேலைய விட்டு வந்தீங்க?"
"அடிப்பாவி நீதான வா வான்ன?" என தலையை நிமிர்த்தி முறைத்தான் மார்க்.
"உங்கள வேலைய விட்டுட்டு வர சொன்னேனா நானு? என்னோட இருக்கலயேன்றது தான் எனக்கு கோவம். எங்க இருந்தாலும் உங்களோட எங்கள வச்சிருந்துருக்கணுங்க நீங்க"
"அமெரிக்கா, தனி மனுஷனுக்கு சரிடி. ஃபேமிலிக்குலாம் அங்க ஆறுலட்சம் இப்படின்றதுக்குள்ள காலியாகிடும்"
"ஓஹோ! சரிவிடுங்க, நாம இங்கேயே நிறைய ஏர்ன் பண்ணிக்குவோம்" என அவன் தோள் தட்டிகொடுக்க,
"சேட்டையாடி? நா எவ்ளோ ஃபீலிங்கா கேட்குறேன்"
"கண்டிப்பா பதில் வேணுமா?"
"தெரிஞ்சா சொல்லேன்?"
"நா எப்படி உங்க வீட்டுக்கு வந்ததும் உங்க அக்கா, மாமா, கிஷோர் பண்றதுலாம் எதுவும் சரியில்லன்னு சொன்னேன்னு சொல்லுங்க? உங்க ஃபேமிலிகுள்ள வந்ததும் சந்தேகமாவே எல்லாரையும் பார்த்தேன்னு திட்டாவீங்களே, ஏன்னு இப்ப உங்களுக்கு புரிஞ்சுட்டா?" என கேட்டு அவன் முகம் பார்க்க,
"ஆமா நீ கூடுதல் விவரம்னு தெரியாம, என்ட்ட பேசவே தயங்கின பிள்ள ரொம்ப சாதுன்னு நினச்சுட்டேன். இப்ப தான் புரிஞ்சது அது அப்படி இல்லன்னு"
"விவரம்லாம் எப்படி அனுபவம் இல்லாம வரும்? என் சொந்த அனுபவம் இது. எங்கப்பா கூட பிறந்தவங்க மூணு பேரு. அப்பாக்கு அப்பா சின்னபிள்ளைலயே தவறிட்டதால, அவங்க மூணு பேரயும் வளர்த்தது எங்கப்பா தான். அதனால அவங்களுக்கு எங்கப்பா அப்பான்னே எண்ணம். அப்படித்தான் சொல்லிப்பாங்க. தண்ணியடிச்சு ஒரு வேலைக்கும் உருப்படியாக போகாம, குடும்பத்த பாக்காம, அண்ணா காசு குடு காசு குடுன்னு நச்சு பண்ணி, எங்கப்பாவும் பாவம்னு குடுத்து, அது கடனாகி வட்டிபோட்டு, நா பனிரெண்டு படிச்சுட்ருந்தப்போ தான் எங்க எல்லாருக்கும் தெரியவே வந்தது, கடன் தொகை பெருசுன்னு. அத அடைக்க அந்த தம்பிங்க வரல, ஏன்னு கூட கேட்டுக்கல. செய்யவும் அங்க அவங்கட்ட ஒன்னும் கிடையாது அதுவேற விஷயம். நாங்க அத அடைக்க பட்ட கஷ்டம் சொல்லிலாம் யாருக்கும் புரியாது. அண்ணனுக்கு பேர்ல ஒரு இடம் வாங்கி வச்சுருந்தாங்க, அத வித்து, அம்மா நகைலாம் வித்து தான் அந்த கடன அடைச்சாங்க. அப்ப கொஞ்சம் மொத்த பணமா குடுத்து உதவினது சண்முகசுந்தரம் அங்கில் தான். மீண்டு வர ரெண்டு மூணு வருஷமாச்சு. அதுவர அவங்க எட்டிகூட பாக்கல, ஆனா மறுபடியும் வந்தாங்க. என் அண்ணா கவர்ன்மெண்ட் வேலைல ஜாயின் பண்ணதும், லோன் போட்டு இந்த வீட்ட வாங்கினான். அப்ப மறுபடியும் வந்து சேர்ந்துகிட்டாங்க. இப்ப இந்த வீட்ல அவங்களுக்கும் பங்கிருக்குன்னு வெக்கமே இல்லாம சொல்லிட்டு திரியிதாங்க. அவங்கள பேசியோ சண்டை போட்டோலாம் திருத்தவே முடியாது. ஒதுங்கி நின்னுக்கணும் நம்மளால முடிஞ்சது அவ்வளவு தான்னு நாங்க ஒதுங்கி தான் நிக்றோம். அப்பப்ப ஃபோன போட்டு டார்ச்சர் பண்ணுவாங்க தான், பத்து ஃபோனுக்கு ஒரு ஃபோன் எடுப்போம். எங்கப்பாவ விட்டுட்டு எங்கண்ணன இப்ப காக்கா பிடிச்சுட்டு திரியிதாங்க. ஆனா அனுபவம் இருக்கே அதனால அளந்து தான் எதுவும் வச்சுப்போம். இங்கேயே வலிக்க அனுபவபட்ட ஒரு விஷயத்த, மறுபடியும் என் வாழ்க்கைல தொடர எப்படி விடுவேன் நான்? அதான் ஆரம்பத்துலயே உங்களோட அவ்ளோ சண்டை போட்டேன். ஆனா நீங்களா பட்டுதான் புரியணும்னு இருந்துருக்கு என்ன செய்ய?" என்க,
"ஏன் இப்படிலாம் இருக்காங்க?"
"அவங்கவங்க எண்ணங்கள் அப்படி. அடுத்த ஜென்ரேஷன தான் அது போய் சேரும். அதபத்திலாம் கவலை இல்லாம நா பிறந்த என் வாழ்க்கைய என் இஷ்டம் போல திருப்தியா வாழ்ந்துட்டு போவேன்னு போறாங்க. என்ன செய்ய முடியும்?"
"அப்ப என் அக்காவ என்னடி செய்ய?"
"கண்டுக்காம விட்ருங்க. குடும்பம் வேணும்னா தானா கிளம்பி போவாங்க" என்க,
"ம்ம்" என அவளை அவன் மீண்டும் கட்டிக்கொண்டு கையால் ஊர்வலம் போக துவங்க,
"யோவ் மலைமுழுங்கி!" என அதட்டினாள், "பிள்ளைங்க வர்றதுக்குள்ள மினிஷோ முடிச்சுடலாம்டி" என கடத்தியேவிட்டான்.
ஒரு காலை பொழுது,
"ஏலே இப்ப வந்தேன்னா தெரியும்" என மீனம்மா அதட்டும் குரல், வெளிவாசல் வரை கேட்க, அதை கேட்டபடியே உள்ளே வந்தனர் மார்கண்டேயனும் திருவள்ளுவனும்.
"மீனம்மா மீனம்மா உன் கோபம் ஏனம்மா?" என பாடியபடியே தான் உள்ளே நுழைந்தான் திருவள்ளுவன்.
"இருக்குறவன் சேட்டை குறைக்கவே வழி தெரியல நீங்க இத என்னத்துக்குங்கேன் ஃபாரீனுல்ல இருந்நு புடிச்சுட்டு வந்தீக?" என மார்க்கிடம் அவர் சண்டைக்கு செல்ல,
"எல்லாம் காரணமாத்தான்" என்றான் மார்க்.
"புடிச்சுட்டு வந்தானா? என்ன மீனம்மா நக்கலா?" என்றான் வள்ளுவன்.
அவனை கண்டுகொள்ளாமல், "என்னத்த காரணம் வச்சுருக்கீக?" என்றார்.
"நானும் என் பொண்டாட்டியும் நாளைக்கே எதாவது காரணத்துக்காக சண்டை போடுறோம்னு வைங்க. பஞ்சாயத்து பண்ண வர்ற நீங்க, கொஞ்சமும் யோசிக்காம அவ பக்கம் தீர்ப்பு எழுதிட்டு போயிடுவீங்க"
"அதெப்படி நியாயமில்லாம பேசுவேனோ நானு?"
"உங்க நியாயம் அநியாயம்லாம் மனோ பக்கம் மட்டும் தேவைக்கு தக்கன சரிஞ்சுக்கும்னு என்னைய டிவோர்ஸ் பண்ண சொல்லி என் காதுக்கு கேட்கவே அவளுக்கு அட்வைஸ் பண்ணீங்களே அன்னைக்கே தெரிஞ்சுகிட்டேன்"
"ஃபாரீன் சாரு?"
"அதென்ன கதை மீனம்மா? டிவோர்ஸ் வர பேசியிருக்கீங்க? அப்படி என்ன பண்ணான் நம்ம ஃபாரீன் மாப்ள?" என்றான் வள்ளுவன் மறுபடியும்.
"ஏன் கூடவே இருந்து குடித்தனம் பண்ணவருக்கு தெரியாதோ?"
"இவங்கூட குடித்தனம்? நானு? என்னைய பத்தி உங்க நெனப்பு தான் என்ன?" என இவன் முறைக்க,
திடீரென ஞாபகம் வந்தவராக, தலையிலடித்துக்கொண்டு, "ஐயையோ என் மாவு. உங்கட்ட பேசிட்டு அங்க விட்டுபுட்டேனே. இந்நேரம் க்ரைன்டர கழுவிருப்பானே அந்த சின்னவன்" என பதறிக்கொண்டு அவர் சமயலறை ஓட,
"சின்னவன் தான் வீட்ல இருக்கான். என்னவோ வேலைய பாத்துவிட்டான் போல" என்ற மார்கண்டேயன் உள்ளே செல்ல, வள்ளுவனும் சென்றான். பொதுவாக உள்ளே வரை செல்லமாட்டான். இன்று மீனம்மா பதட்டம், 'அப்படி என்னவாம்?' என்ற உந்துதலை கொடுத்திருக்க மார்க்கின் பின் நடந்தான்.
"இன்னைக்கு உன் அம்மா வரட்டும். உன்னைய வெளுக்க விடலனா பாரு? நைட்டுக்கு தோசை வேணும்னு கேளு, இந்த தண்ணீய கரைச்சு வாயிலேயே ஊத்துறேன்" என திட்டிக்கொண்டே க்ரைண்டரை அருகில் மாவோடு நின்றவனையும் முறைத்திருந்தார் மீனம்மா.
மீனம்மா மாவை அரைத்து முடித்துவிட்டு, அதை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்ற போகையில் மோட்டார் ஓடியதில் டேங்க் நிறைந்து தண்ணீர் சிந்த துவங்கியது. அதை நிறுத்த செல்ல கிளம்பியவர் அங்குதான் சிறியவன் அமர்ந்து விளையாடி கொண்டிருக்கிறான் என்பதால் முன் யோசனையாக க்ரைண்டர் ஸ்விட்சை அமர்த்திவிட்டு தான் சென்றிருந்தார். ஆனால் அவர் மீண்டும் வரும்போது குடத்திலிருந்து தண்ணீரை மோந்து குதிங்கால் ஊன்றி எட்டி க்ரைண்டரில் ஊற்றவும், மீண்டும் க்ரைண்டரிலிருந்து எடுத்து நிறை தண்ணீர் இருக்கும் குடத்தில் ஊற்றவும் என மாறி மாறி விளையாட்டாக அதை செய்ய துவங்கியிருக்க.
அங்கு வந்து அதை கண்ட மீனம்மா, "அடேய் கண்ணா!" என அதட்டியதில் அடித்துபிடித்து அவன் அம்மா அறைக்குள் ஓடியிருந்தான். அப்போது தான் அவர் திட்டியபடி நின்றதும், மார்க், வள்ளுவன் சத்தம் கேட்டு கேட்டை திறக்க அங்கே சென்றதும் அவர்களிடம் வம்பளந்ததும்.
இப்போது மீண்டும் வந்து அவர் பார்க்கையில் மொத்த சமையலறையும் இட்லி/தோசை மாவால் குளித்திருந்தது. கூடவே அவனும் முழு மாவு பிள்ளையாக குதூகலமாக வேறு நின்றான்.
"ஏன்டா இப்படி?" என்றான் மார்க், அவனுக்கு சிரிப்பாக இருந்தாலும், மீனம்மாவின் முகம் அவனை சிரிக்கவிடவில்லை, ஆனால் வள்ளுவன், 'கெக்கெ பெக்கெ' என சிரித்தான்.
"அடேய் உன் பசங்க சேட்டை பண்ணிட்டு யோசிப்பாங்களா இல்ல யோசிச்சு வச்சுதான் சேட்டையே பண்ணுவாங்களா?" என மறுபடியும் சிரிக்க,
"காலியாசி மீனம்மா" (காலியாகிடுச்சு) என்றான் கண்ணன்.
"ஆமா அம்புட்டையுந்தான் வாரி இறைச்சிட்டியே" என அவன் சிரிக்க, மீனம்மா, மாவு வலிக்கும் கரண்டியாலேயே வள்ளுவன் மண்டையில் பட்டென்று ஒன்று வைத்துவிட்டார்.
"ஆத்தி! என்னா அடி!" என தேய்த்தவாறு மீனம்மாவை பார்க்க,
"ஒன்றரை மணிநேரமா நா ஆட்டின மாவு, உங்களுக்கு சிரிப்பா இருக்கோ?" என சேலையே வேறு இழுத்து சொருக,
"ஓ! சாரி சாரி மீனம்மா" என வள்ளுவன் சரண்டர் ஆக, "நீயும் சாரி சொல்லு கண்ணா!" என்றான் மார்க்.
"சாயி சொல்ல மாத்தேன்" என்றான் கண்ணன்.
"டேய். அம்மா ஃபுட் வேஸ்ட் பண்ணாதன்னு சொல்லிருக்கா தான? நீ எவ்ளோ வேஸ்ட் பண்ணிருக்க பாரு. அம்மா வந்தா கோச்சிப்பா"
"நா கொத்தல. மீனம்மா தான்"
"பொய் வேற சொல்லுவியா நீ" என்றவன் அவனை அப்படியே தூக்கிக்கொண்டு குளியலறை சென்றுவிட,
"குழந்தைங்க பொய் சொல்ல மாட்டாங்களாம். அவேன் நீங்க கொட்டினதா தான் சொல்றான். ஏன் மீனம்மா இப்படி மாவ கொட்டி விளையாண்டீங்க? விளையாட வேற விளையாட்டா இல்ல? செஸ், கேரம், டேபிள் டென்னீஸ்னு இன்டோர் கேம்ஸ் நிறைய எனக்கு தெரியும், இனி இப்படி மாவு கூட தனியா விளையாடாதீங்க. ஒரு ஃபோன் போடுங்க, வந்துடுறேன் நாம் சேர்ந்து விளையாடலாம்" என வள்ளுவன் சொல்ல,
"ஃபோனு தான் போட போறேன். மென்டலு ஆஸ்பத்திரிக்கு ஃபோன போட்டு உங்கள புடிச்சு குடுக்கல?" என்ற மீனம்மா, சுத்தபடுத்துவதில் இறங்க, அவனும் அவரை வம்பிழுத்தபடியே மேல் வேலையாக அவருக்கு உதவினான். மாவு சிதறியிருந்த பாத்திரங்களை சிங்க்கில் எடுத்து போட்டான். மாவாகியிருந்த தண்ணீர் குடத்தை தூக்கிச்சென்று வெளியே செடிகளுக்கு பாயும் குட்டி தண்ணீர் தொட்டியில் ஊற்றிவிட்டு வந்தான். இப்படி அவனிருப்பதால் தான் அவன் எவ்வளவு வம்பு வளர்த்தாலும், அவனிடம் தானும் தளைந்து போனார் மீனம்மா. வரம்புமீறி அவரிடம் யாரும் இவ்வளவு விளையாண்டதில்லை, விதிவிலக்காக நின்றான் வள்ளுவன்.
வள்ளுவனோ, அவன் வீட்டில் அவனது ஆச்சி, அப்பாத்தாவிடம் செய்ய முடியாததை எல்லாம் மீனம்மாவிடம் செய்து ரசித்துக் கொண்டிருந்தான்.
மனோவும், கிருஷ்ணாவும் பள்ளியிலிருந்து அழைத்துச் செல்லும் ஒருநாள் சுற்றுலா சென்றிருந்தனர்.
"நீ கிருஷ்ணாவ கூட்டிட்டு போய்ட்டு வா நா பாத்துக்குறேன்" என முந்தைய தினம் பழூரில் இருந்தவன் சொல்லியிருக்க, இதோ காலையில் மனோ கிளம்பிவிட, இவனும் வந்திருந்தான். வள்ளுவனின் பிள்ளைகளும் அதே பள்ளி தான், அவன் மகள் சிறியவள் கிருஷ்ணாவின் வகுப்பு, அவன் வீட்டிலும் அவன் மனைவியும் மகளும் சென்றிருக்க, மூத்தவன் பள்ளிக்கு அவன் வகுப்பிற்குச் சென்றிருந்தான். குடும்பமாகவே நட்பாகியிருந்தனர்.
"மீனம்மா பாவமில்ல? ஏன்டா இப்டி மாவ கொட்டின?" என கண்ணனை லேசாக அதட்டியபடிதான் குளிக்க வைத்தான் மார்க்.
"மாவு கொத்தி விளையாந்தேன்"
"மாவுல விளையாட கூடாது"
"விளையாதணும்"
"அம்மாவும் கிருஷ்ணாவும் மட்டும் போயிருக்காங்க உனக்கு போக வேணாமா?"
"போணு"
"நீ இப்படிலாம் பண்ணிட்ருந்தா அம்மா உன்ன எங்கையும் கூட்டிட்டு போகமாட்டாங்க"
"கூத்திபோவனு"
"அப்ப நீ சேட்டை பண்ண மாட்டேன்னு சொல்லு"
"பண்ணுவேன்"
"டேய்!" என மார்க் முறைக்கவும், குனிந்து கொண்டான் கண்ணன்.
கிருஷ்ணாவை அதட்டவும், அதிகம் சேட்டையாகையில் அடிக்கவும் செய்கிறான் என்பதால் அதை பார்த்தே மார்க்கிடம் சிறியவனுக்கு பயம் உண்டு. மார்கண்டேயனும் கிருஷ்ணா அளவிற்கு செல்ல விடாமல் மூன்று வயதிலேயே அனைத்தையும் இவனுக்கு புரிய வைக்க முயன்றான். அதில் முக்கிய பாடம், அடம்பிடித்தால் எதுவும் கிடைக்காது என இருவரும் இப்போது அறிந்திருந்தனர். முன்னரெல்லாம், கிருஷ்ணா எதாவது வேண்டும் என்றால் உடனே அழுதுவிடுவான், விடாமல் அழுவான் ஞானம் அழைத்துச் சென்று வாங்கி கொடுத்துவிட்டே ஓய்வார்.
முன்னரே மனோ கேட்டதை எல்லாம் வாங்கி தரமாட்டாள், இப்போது மார்க்கின் அதட்டலும் சேர, எவ்வளவு நேரம் அழுதாலும், "அழுது முடிச்சுட்டு வா" என கண்டுகொள்ளாமல் விட, முதலில், நான்கைந்து முறை அழுதான், அடுத்து அது குறைந்தது, 'வாங்கி தரமாட்டாங்க' என அவனே முடிவிற்கு வந்து, வேற விஷயத்திற்கு தாவிவிட பழகினான். அவனை பார்த்தே கற்கிறான் கண்ணனும்.
கண்ணனும் ஒருமுறை அதிகமான கோவத்தில், எப்போதும் போல மனோவை அடிக்க, அன்று முழுவதும் மனோவை அவனிடம் பேசவிடவில்லை மார்க். சாப்பிட உறங்க கூட அவனிடமே வைத்துக்கொண்டான்.
"அம்மாவ அடிச்சனா அம்மா உன்ட்ட பேசவே மாட்டாங்க. ஊருக்கு போயிடுவாங்க நீ அப்பாகிட்ட தான் இருக்கணும்" என்றுவிட்டான். இரண்டு நாட்கள் முன்பு கூட குடித்துக்கொண்டிருந்த பால் கப்பை அவள் மீது தூக்கி வீசிவிட்டான். அதற்கு தான் இன்று கிருஷ்ணாவுடன் சுற்றுலா பயணம்.
"அவனுக்கு மனசுல பதியணும் மனோ. நா அவன தனியா விடல தானே? மீனம்மாவும் இருக்காங்க. கிருஷ்ணாவும் பாவம்ல போய்ட்டு வா. அடுத்த பிள்ளைக்கு இவனுங்க ரெண்டு பேரும் பெஸ்ட் அண்ணனுங்களா இருக்க வேணாம்?" என மார்க் தான் அனுப்பிவைத்துவிட்டான்.