Sowndharyacheliyan
Writer
வான்மழை 27:
“என் பொண்ணுக்கு சீர் செய்ய, எனக்கு வக்கில்லைன்னு சொல்லுறீங்களா?”
அந்த ஒரு வார்த்தை வீட்டுக்குள் அதிக சத்தத்துடன் ஒலித்தது. அவர் பேசிவிட்டார் ஆனால் அவர் பேசியதன்
தாக்கம்? அங்கிருந்தவரிகளின் மனதினில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
வீட்டில் பேஃன் ஓடும் சத்தத்தை தவிர எதுவும் கேட்கவில்லை. அப்படி ஒரு நிசப்தம்!!!
மல்லிகாவின் கைகள் அந்த தட்டினை இறுகப்பற்றியது.
வள்ளியம்மையின் வார்த்தைகளில் அனைவரும் அதிர்ந்து நின்றனர் என்றால், சுபா கண்ணில் பயத்தோடு கணவனை காண, அவனின் பார்வை இவள் புறம் மெதுவாய் திரும்பியது.
“என்னங்க பேசுறீங்க நீங்க?” மல்லிகாவின் குரல் ஆதங்கத்துடன் வெளிவந்தது.
“என்ன பேசுறேன்? உள்ளதை தானே சொன்னேன்.” வள்ளியின் குரலில் அலட்சியம்.
“அம்மா.…!” சுபாவின் குரல் அவரை தடுக்க நினைக்க,
“ஏய்? நீ சும்மா இருடி. உன்னை நம்பினா அஞ்சு பைசாக்கு பிரயோஜனம் இல்லை. நான் சொல்றப்போ எல்லாம் என்னை அடக்கி வச்சியே? இப்போ என்னாச்சுன்னு பாரு? என்னை நடுவீட்டுல வச்சு அசிங்கப்படுத்திட்டாங்க.”
“மதினி, வார்த்தையை பார்த்து பேசுங்க. இப்போ என்ன நடந்திடுச்சுன்னு இப்புடி பேசுறீங்க? அவுங்க சுபாவை பொண்ணு மாதிரி நினைச்சுட்டு தானே இதை கொடுத்தாங்க.” முத்துப்பேச்சி வள்ளியம்மையை கண்டிக்க,
“ம்ஹீம், நீங்க உங்க பணக்கார சம்பந்தத்திற்கு தானே சப்போர்ட் பண்ணுவீங்க. என்னை எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியுமா? ஒன்னுக்கும் வக்கில்லாதவளுக்கு ஆதரவா எல்லாம் நீங்க பேசுவீங்களா?
என் பொண்ணுக்கு சீர் கொடுக்க யாரு அவுங்க? அவுங்க பொண்ணுக்கு கொடுத்த அதோட முடிச்சிக்கனும். எம் பொண்ணுக்கு செய்ய வேண்டிய அவசியம் என்ன? அப்போ எனக்கு பொங்கச் சீரு கொடுக்க வக்கில்லைன்னு தானே சொல்ல வர்றாங்க.”
“ஏய்! இந்தாம்மா உன் பொண்ணுக்கு ஒன்னும் நாங்க சீரு கொடுக்கலை, எம்பேத்தியோட புகுந்த வீட்டு ஆளுங்களுக்கான மரியாதை இது.” அதுவரை அமைதியாய் இருந்த முனிஸ்வரி பேசிட,
“அதான் எதுக்காக என் பொண்ணுக்கு மரியாதை தரனும் நீங்க”? முனிஸ்வரியின் பேச்சில் வாயடைத்துப் போன வள்ளியம்மை, எப்படியாவது சண்டையை பெரிதாக்கி சுபாவை தனியாக அழைத்து செல்ல வேண்டும் என்ற முனைப்புடன், அறிவை கடன் கொடுத்து விட்டிருந்தார்.
“பெத்த பொண்ணுக்கு கொடுக்கிற மரியாதையை, ஏன்னு கேட்கிற அம்மா நீயா தான் இருப்பா.” முனிஸ்வரி விடாமல் வாயடைக்க செய்ய,
“இங்கப் பாருங்க, பேச்சை மாத்தாதீங்க. மரியாதைன்னா உங்க பேத்திக்கு செஞ்ச அளவே எம்பொண்ணுக்கு சீர் செஞ்சுருக்கனுமா இல்லையா? நீங்க?”
“ஓஹோ, அப்போ உனக்கு நாங்க தாம்பூலம் கொடுத்தது பிரச்சினையில்லை. எம் பேத்தி அளவுக்கு செய்யலன்னு தான் கோபம். அது என்ன தேவைக்கு செய்யனும்?” எம் பேத்தி உரிமைப்பட்டவ, சும்மா எல்லாருக்கும் அந்த உரிமையை தூக்கி கொடுத்திட முடியுமா?”
“இந்தளவுக்கு தெரிஞ்சிருக்கவுங்க, உரிமை இல்லாத எம்பொண்ணுக்கு ஏன் இதை வர்றீங்க, பிச்சை போடுறீங்களா?” என்றவரின் வார்த்தையில் சுபா முற்றிலும் உடைந்து விட்டாள் என்றால் பரணி முற்றிலும் இறுகிப் போயிருந்தான்.
அவனது மாமியார் அவனது கெளரவத்தையும், மரியாதையையும் அல்லவா குடும்பத்தினர் முன்னர் அம்பலபடுத்திக் கொண்டிருக்கிறார்.
அதுவும் அவனது தம்பியின் மாமியார் குடும்பத்தின் முன்பு, உள்ளுக்குள் அவனை கொதிக்க வைத்தது வள்ளியின் பேச்சு. அப்போதும் அவன் வார்த்தைகளை விடாது, கோபத்தை அடக்கி வைக்க, பரணியை முற்றும் முழுதாக உணர்ந்த முகிலன், அண்ணனின் கையை இறுகப்பற்றியிருந்தான்.
முகிலனிற்கும் இதனுள் எப்படி போவது என்று தெரியவில்லை. இதற்கு மேலும் போசாமல் இருக்க கூடாது என எண்ணி அவன் வாய் திறக்க எத்தனித்த வேளை,
“அம்மா……!” என்றவளின் குரல் முற்றிலும் உடைந்திருக்க, அவளது கண்ணில் கண்ணீர் விடாது பெருகியது.
“இப்போ நீ தான் என்னை அசிங்கப்படுத்திட்டு இருக்க. போதும் நீ எதுவும் பேசாதே?”
“பேசாமா என்ன செய்ய சொல்ற? உன்னை மாதிரி என்னையும் இந்த வீட்டுல அவமானப்படுத்தி, மரியாதை தராம ஒடுக்கி வைப்பாங்க, அதை ஏத்துக்கனும்னு சொல்றியா? உன்னை மாதிரி மானங்கெட்டு எல்லாம் என்னால இருக்க முடியாது? உன்னை இந்த நிலைமைல வச்சிருந்தும், இன்னும் திருத்தலை பாரு நீ?” என்றவரின் வெடுக்கென்று பேச்சில் கோபமடைந்த முத்துப்பேச்சி,
“போதும், என்னமோ அப்போ இருந்தே இதையே பேசுறீங்க. சுபாவை நாங்க எப்புடி வச்சிருக்கோம்னு தெரியாதா? அவளுக்கு இந்த வீட்டுல என்ன மரியாதை இல்லாம போச்சு. எதை மனசுல வச்சிட்டுப் பேசுறீங்க நீங்க?”
“என்ன மரியாதை இருக்கு? ஒண்ணுமில்லாம வந்தவ தானேன்னுன்னு தானே நீங்க இவளை இவ்வளவு அலட்சியப்படுத்துறீங்க. உங்க இரண்டாவது மருமக வர்றதுக்கு முன்னாடி இருந்த மதிப்பும், மரியாதையும் இப்போ இவளுக்கு இருக்கா என்ன?”
“இப்புடி அபாண்டமா பேசாதீங்க, என்னைக்கும் நாங்க சுபாவ கொறையா நினைச்சதில்லை!”
“அப்பறம் ஏன் உங்க சின்ன பையன் நிச்சயத்துலயும், கல்யாணத்துலயும் உங்க சொந்தக்காரங்க எம்மக கொண்டு வராத சீர்வரிசை பத்தி பேசும்போது அமைதியா இருந்தீங்க, அப்போ உங்களுக்கும் இவ சீரு கொண்டு வரனும்ன்ற ஆசை இருந்திருக்கு. ஆனா வெளியுலகத்துக்கு மட்டும் நல்லவ வேசம்? சொல்லுங்க அன்னைக்கு ஏன் அமைதியா நின்னீங்க.”
“அன்னைக்கு நான் பேசியிருந்த, திரும்பவும் அவுங்க அந்த பேச்சை விடாம பேசிட்டே இருப்பாங்க, அது சுபாக்கு இன்னும் கஷ்டமாகிடும்னு தான் நான் அந்த இடத்துலே அமைதியா போனேன். கடவுள் சத்தியமா வேற எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இத்தனை வருசத்துல என்னைக்காச்சும் நாங்க உன்னை சீரு கொண்டு வரலைன்னு எதுவும் கேட்டு இருப்போமா? சொல்லு சுபா? நீயும் உங்க அம்மா பேசுறதை கேட்டுட்டு அமைதியா நிக்கிற, அப்போ உங்கம்மா பேசுறது எல்லாம் சரியா?
“அய்யோ இல்லத்தை…!”
“அவளை ஏன் இதுல இழுக்குறீங்க, அவளுக்கு சூதுவாது இல்லாமப் போயிதான் உங்களோட சூழ்ச்சியை அவளால கண்டுப்பிடிக்க முடியலை.”
“போதும் அத்தை!” அதுவரை அமைதியை கடைப்பிடித்த பரணி வாய்திறந்தான்.
“இதுக்கு மேல எதுவும் நீங்க பேசக் கூடாது.”
“அய்யோ மாப்பிள்ளை நான் உங்களுக்காகவும், சுபாக்காகவும் தான் பேசுறேன். உங்களுக்கு உங்க அம்மா அப்பா பத்தி தெரியலை.”
“ஓஹோ! எனக்கு தெரியாததை விட உங்களுக்கு அதிகம் தெரியுமோ?”
“ஆமா”
“அப்போ சொல்லுங்க!”
“டேய் பரணி!”
“இருங்கப்பா, அதான் என் அத்தை தெரியும்னு சொல்றாங்களே, இவ்வளவு நேரமும், என் தம்பி குடும்பத்துக்கு முன்னாடி என்னை அசிங்கப்படுத்துனாங்க, இப்போ அடுத்து உங்ககிட்ட வர்றாங்க, என்னதான் சொல்றாங்கன்னு பாப்போம்.” என்றவனின் பேச்சு அவரை உசுப்பி விட,
“சொல்றேன் மாப்பிள்ளை, உங்கம்மாவோட பண ஆசையை, அவுங்க பச்சோந்தி குணத்தை முழுசா சொல்றேன்.”
“மரியாதை! மரியாதையா பேசனும். நீங்க சொல்றதை கேட்டு எல்லாரும் அமைதியா இருக்காங்கன்ற ஒரு காரணத்துக்காக என்ன வேணும்னாலும் பேசலாம்னு நினைக்க கூடாது.” முகிலன் அன்னையை பேசியது தாளாது கேட்டிட,
“என்ன முகிலு, மிரட்டுறியா?”
“பேச்சை மாத்தாமா பாய்ண்டுக்கு வாங்க.”
“என்ன வர்றது? எல்லாம் உன்னாலயும் உன் பொண்டாட்டினாலும் தான் ஆரம்பிச்சது.”
“இதுல, வருணா எங்க வந்தா?”
“அவதான் முக்கிய காரணமே. உங்கள் கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் இந்த வீட்ல, எல்லாமே சுபா தானே முடிவெடுத்துட்டு இருந்தா, அவளுக்கு தான் இங்க அதிகாரமும் மதிப்பு இருந்துச்சு.”
“இல்லையே, அண்ணிய விட அம்மாக்கு தான் அதிகாரம் இருந்தது. எந்த முடிவுனாலும் அம்மா தானோ எடுப்பாங்க.”
“ம்ஹீம், அது அப்புடி உங்களுக்கு தோணிருக்கும். ஆனா, உண்மையிலேயே அந்த முடிவு என் பொண்ணோடததா இருக்கும். எப்பவும் அவளோட எண்ணங்கள், முடிவு தான் உங்க அம்மாக்கிட்ட வந்திருக்கும். அது ஹோட்டலுக்கு போற சின்ன விசயத்துல ஆரம்பிச்சு, இந்த வீட்டுல என்ன விசேஷம் வைக்கலாம்ன்ற வரைக்கும் எல்லாமே அவளோட முடிவாத்தான் இருந்தது.” என்றவரின் பேச்சில் முத்துப்பேச்சிக்கு ஏதோ பொறி தட்டியது.
தனக்கு ஆதரவாகச் பேசுவதாக நினைத்து வள்ளியம்மை அவளது குட்டுக்களை உடைக்கப் போவதை அறிந்து சுபா அவரை பேசவிடாமல் செய்ய முயல,
“அம்மா, போதும் உன் உளறலை நிறுத்து!”
“யாரு டி உளறுறா?”
“நீதான்மா!”
“சுபா!!” கணவனின் ஒற்றை அதட்டலில், அவளது தொண்டை அடைத்துக் கொண்டது.
“இவ்வளோ நேரம் எப்புடி அமைதியா இருந்தியோ, இப்பவும் “மூச்” சத்தம் வரக் கூடாது.” என்ற பரணியின் பார்வை முழுவதும் வள்ளியம்மையிடமே.
‘ஏதோ பெரிதாக வரப் போகிறது! என அவன் உள்ளுணர்வு அடித்துக் கூறியது.
“சரி, எப்போ சுபாவோட அதிகாரமும், முக்கியத்தவமும் இங்க கொறைய ஆரம்பிச்சது.”
“இதோ எல்லாம் இவளால தான் மாப்பிள்ளை.” என வருணாவை கைக் காட்டியவர்,
“உங்க தம்பிக்கு இவளை பொண்ணும் பாத்துட்டு வந்தப்பயே எங்களுக்கு பிடிக்கலை, ஏன்னா இவுங்க பெரிய ஆளுங்க. ஏகப்பட்ட சொத்து, சீர்வரிசைக்கு உரிமைப்பட்டவ இந்த வருணா. இந்த பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா, சுபாக்கும், எனக்கும் இங்க கிடைக்கிற மரியாதையும், முக்கியத்துவமும் கொறையம்னு எனக்கு தெரியும்.
ஏன்னா? இவ ஏகப்பட்ட சொத்துக்கு சொந்தக்காரி அதுப்போக இவுங்க வீட்டுல நிறைக்க செய்வாங்க, அதனால தான் இந்த பொண்ணை முகிலனுக்கு கட்ட வேண்டாம்னு நினைச்சேன்.ஏன் சுபாக்கே தெரியப் போய் தானே இந்த பொண்ணு வேண்டாம்னு தானே உங்கம்மாகிட்ட சொல்லிப்பார்த்தா,
ஆனா அது நடக்கலையே, அங்கே ஆட்டம் காண ஆரம்பிச்சுச்சு என் பொண்ணோட மரியாதை, அதுவரை அவளோட கட்டுபாட்டுல இருந்த இந்த குடும்பம், முதல் முறையா இந்த வருணாவோட விசயத்துல மாறிச்சு, சுபா வேண்டாம்னு சொல்லியும் முகிலுக்கு வருணாவ பேசி முடிச்சீங்க.
சரி, அது தான் போகுது அடுத்து உங்க தம்பி நிச்சயத்தையாவது சிம்பிளா பண்ணீங்களா அதுவும் இல்லை, எம்பொண்ணும் நீங்களும் கல்யாணம் பண்ணி வந்தப்போ ஒரு ரிசப்ஷன் கூட வைக்கல, உங்கம்மாப்பா ஆனா உங்க தம்பிக்கு நிச்சயத்தையே அவ்வளோ ஆடம்பரமா பண்ணாங்க, அதையும் எவ்வளவோ தடுக்க பார்த்தா எம்பொண்ணு முடியலையே! ரெண்டாவது தடவையும் அவளோட முடிவு உங்க குடும்பத்துக்கு முக்கியமா படலை.” என அப்போதுதான் பரணிக்கு சுபா முகிலன் நிச்சயத்துக்கு முன்பு அவள் கேட்டது ஞாபகம் வந்தது,
வெறித்த பார்வையுடன் இறுகிய உடலமைப்புடன் அவன் அவளை பார்க்க, சர்வமும் ஆட்டம் கண்டது சுபாவிற்கு.
“சரி அதுவும் போய் தொலையட்டும்னு விட்டா, நிச்சயத்துலயே அவ்வளவு சபை நிறைக்க செய்றாங்க, இவளை பெத்தவங்க. எல்லாம் பணம் இருக்கிற செருக்கு, அந்த நிச்சயத்துல தான் எம்பொண்ணு ஒன்னும் இல்லாம வந்தவன்னு உங்க சொந்தம் எல்லாம் பேசிச்சு, அப்போ எவ்வளவு அவமானமா இருந்தது தெரியுமா எங்களுக்கு.
இனி கல்யாணத்தை நிறுத்த முடியாதுன்னு தெரிஞ்சுப்போச்சு, அதான் கல்யாணத்துக்கு அப்பறமாவது இந்த வருணாவையும் அவ கட்டுக்குள்ள வைக்கனும், எம்பொண்ணுக்கு தான் இங்க அதிகாரம் அதிகம்னு வருணாக்கு காட்டனும்னு சுபா சொன்னா,
ஆனா, அதுவும் நடக்கலை. ஏன்னா, வருணா சுபாவோட எந்த முடிவையும் மதிக்கலை.”
“நான் எப்போ சுபாக்காவ மதிக்காம போனேன்.” வருணாவின் குரல் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் வர,
“எப்போ மதிச்சு? இவ வேண்டாம்னு சொல்லியும் உன் மாமியாரை வெளிய கூட்டிட்டுப் போனதானே!”என்றவரின் பேச்சில் அனைவருக்கும் ச்சை என்ற உணர்வு தான்.
“எம்பொண்ணு ஒரு கூறுக்கெட்டவ, சூதுவாதே தெரியாது. ஆனா நீ அப்புடி இல்லையே வந்த உடனே எல்லாத்தையும் உன் கைக்குள்ள போட்டுக்கிட்ட தானே. இத்தனை வருசமாகியும் எம்பொண்ணு இந்த குடும்பத்தை தவிர வேற ஏதாச்சும் யோசிச்சிருப்பாளா? உங்களுக்காகவே தானே சமையக்கட்டுல கிடந்தா, ஆனா இந்த வருணா அப்புடி இல்லை, வந்த கொஞ்ச நாள்லயே, உங்களுக்கு எல்லாம் வடிச்சுக் கொட்ட முடியாதுன்னு, நேக்கா வேலைக்கு கிளம்பிட்டா,
ஏற்கனவே இவ வந்ததுல இருந்து, இவளுக்கு தான் இங்க மரியாதை. அப்பவும் நான் சொன்னே இவளை வேலைக்கு போக விடாம பண்ணுன்னு, ஆனா எங்க, நான் பெத்த முட்டாக்கழுதை அதையும் உருப்படியா செய்யலை.
வேலைக்கு போயி நாலு காசு சம்பாரிச்சதும், இவளுக்கு தான் இங்க மதிப்பும், மரியாதையும் கூடிடுச்சு. இப்போ எல்லாம் இவளோட கருத்தை தானே எல்லாரும் கேட்குறீங்க, இதை எல்லாம் எம்பொண்ணு சொல்லும் போது என் மனசு எப்புடி துடிச்சிருக்கும்.
இப்பவரை எம்பொண்ணை தான் அடக்கி வச்சிருந்தா, இப்போ இந்த தம்மாதுண்டு தட்டை தூக்கிட்டு வந்து, சுபாக்கு என்னால இந்த மாதிரி கூட சீர் செய்ய வக்கில்லைன்னு குத்திக் காட்டுறாங்க குடும்பமா சேர்ந்து.இதையெல்லாம் நீங்க கேட்க மாட்டீங்களா மாப்பிள்ளை. இப்பவாச்சும் தெரிஞ்சுக்கோங்க உங்கம்மாவோட கொணத்தை, உங்களுக்கும் அவுங்க அநியாயம் தான் பண்ணிருக்காங்க.
உங்களை மட்டும் கடையில வேலைப் பார்க்க விட்டுட்டு, அவுங்க சின்ன மகனை மட்டும் வாத்தியார் ஆக்கிருக்காங்க, பத்தாதுக்கு உங்க தம்பி அவ்ளோ பெரிய மண்டபத்தை வேற வாங்கி வாடகை விட்டு தனியா சம்பாதிக்கிறான். இதுல, அவன் பொண்டாட்டி சம்பளம் வேற வருது.
ஆனா, உங்களுக்கு என்ன வருது? உங்களுக்குன்னு தனியா வருமானம் ஏதும் இருக்கா, இருக்கிறது ரெண்டு கடை அதையாச்சும் உங்க பேர்ல மாத்துனாங்களா அதுவும் இல்லை, அதுலயும் ஒரு கடை உங்க தம்பிக்கு போகும். இந்த வீட்டுலயும் அவனுக்கு பங்கு போகும். எல்லா பக்கமும் உங்க தம்பிக்கு வருமானம் பெருகிட்டே தான் போகுது. அவன் நினைச்சா இதை விட பெரிய வீடாக் கூட கட்டுவான் அந்தளவு அவனுக்கு காசு வருது.
ஆனா நீங்க காலம் பூராம் அந்த கடையிலயே வேலைப் பாக்கனும். உங்களுக்குன்னு தனியா எந்த காசும் உங்கப்பா தரப் போறதில்லை. கடைசி வரை உங்க உழைப்பை மட்டும் எடுத்துட்டு நடுத்தெருவுல விடப் போறாங்க. இதை இந்த முட்டாளுக்கு சொன்னாலும் புரியலை.
உங்களை நம்பி பிரோயோஜனம் இல்லைன்னு சொல்லியும். எம் புருசனை பத்தி பேசாதன்னு என்கிட்டயே சண்டைக்கு வர்ற, உங்களை நம்பி ஒரு பிள்ளைய வேற பெத்து வச்சிருக்கா,
பிள்ளைய கொடுத்ததை தவிர, வேற எந்த சொத்து கொடுத்துட்டீங்க எம்பொண்ணுக்கு.” என்றவரின் சாக்கடை பேச்சில் முகம் கருத்து விட்டான் பரணி.
எவ்வளவு பெரிய அசிங்கம்! அதுவும் வீட்டினர் முன்பு!
‘ பிள்ளை கொடுக்க மட்டும் தான் நீ லாயாக்குன்னு’ சொல்லாமல் சொல்லி விட்டார் அல்லவா. அவனால் தலை நிமிர்ந்து நிற்க முடியவில்லை. இத்தனை பேச்சிலும் அவனது கண்கள் மனையாளிடம் மட்டுமே இருந்தது. ஒருமுறையாவது இது எல்லாம் பொய் என மறுத்து விட மாட்டாளா? என தவித்தவனின் தவிப்பில் நெருப்பை அள்ளிக் கொட்டியிருந்தனர் அவனது மனையாளும் மாமியாரும்.’
அவரது இத்தகைய தரம் குறைந்த பேச்சினை கேட்ட அனைவரது முகங்களும் அசூசையில் சுழித்து விட்டது. கணவனை பேசியதும் அதற்கு மேல் பொறுக்க முடியாது சுபா வாய்திறக்க எத்தனித்த வேளை,
“உங்கம்மா இப்போ வரை சொன்னது எல்லாம் உண்மையா?” என்றவனின் அடைத்த குரலில், பதறி அவள் பரணியின் முகம் பார்க்க, அவளருகே வந்தவன், அவளது கைகளை எடுத்து தனது தலையில் வைத்தவன்,
“உண்மையை மட்டும் தான் சொல்லனும். எம்மேல சத்தியம் இது.”
“என்னங்க..!” பதறி அவள் கைகளை இழுக்க முயல, முடியவில்லை.
“விடுங்க ப்ளீஸ்!”
“உண்மையா? பொய்யா?”
என்ன பதில் கூறிவிட முடியும் அவளால்.
அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்த வண்ணம் இருக்க,
“அப்போ உண்மைத்தான் இல்லை.” என்றவனின் பேச்சில் கசப்பு.
“இல்லைங்க, நான் சொல்ல வர்றதை கொஞ்சம் கேளுங்க….!”
“கூடவே இருந்து குடும்பத்தை கெடுக்க நினைச்சிருக்கல்ல நீ?”
“இல்லைங்க!”
“அன்னைக்கு கேட்டேனே, நீ என்னை விரும்புனியா இல்லை பணத்தையான்னு. என்னைத்தான்னு அடிச்சு சொன்னதானே, அப்போ அதுவும் பொய்! இத்தனை வருச வாழ்க்கையும் பொய்யா அப்போ? நான் விரும்புனா சுபாவா நீ? எல்லாமே பொய் தானா!”
“நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க, நான் உங்களை விரும்பி கல்யாணம் பண்ணது உண்மை. இந்த வீட்டுல என்னை ஒண்ணும் இல்லாம வந்தவன்னு ஒதுக்கிட கூடாதுன்னு தாங்க, நான் போராடுனேன்.”
“அப்போ உனக்கே என்மேல நம்பிக்கையில்லை. உங்கம்மா சொன்ன மாதிரி, என்னால உனக்கு பிள்ளை மட்டும் தான் கொடுக்க முடியும், உன்னை நல்லபடியா வாழ வைக்க முடியாதுன்னு நினைச்சிருக்க.”
“அய்யோ! சத்தியமா அப்புடி இல்லைங்க, என்னைக்கும் நான் உங்களை…..”
“போதும்!!! உன் பொய் எல்லாம் போதும்!” என கத்தியவன், என்னை நம்பாத நீ? இந்த வீட்டுல இருந்து கஷ்டப்படனும்னு அவசியம் இல்லை.
“உங்க பொண்ணை கூட்டிட்டு கிளம்புங்க!” வள்ளியம்மையிடம் அவன் கோபத்தை காட்டிட,
“என்ன மாப்பிள்ளை, உங்களுக்காகவும் தானே…!” என அவர் பேசும் போதே,
“சுளீர்” என்ற சத்தத்துடன் அங்கிருந்த கண்ணாடி டீப்பாயை உடைந்திருந்தது.
“அவ்ளோதான் உங்களுக்கு மரியாதை, இதுக்கப்பறம் ஒரு வார்த்தை! ஒரு வார்த்தை நீங்க பேசக் கூடாது. இந்தளவு கீழ்த்தரமான செயலை உங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்க்கலை. இதுக்கு மேலேயும் நீங்க போகலைன்னு, வெளியே பிடிச்சு தள்ளவும் நான் யோசிக்க மாட்டேன்.” என்றவனின் வார்த்தையில் முகம் கருத்து விட்டது அவருக்கு.
“பரணி!!!” மகாலிங்கம் மகனின் பேச்சினை ஏற்க முடியாது பேசிட,
“மன்னிச்சிடுங்கப்பா, ஆனா நான் பேசுனது மாற்றம் இல்லை. இன்னும் அஞ்சு நிமிசத்துல இவுங்களும், இவுங்க பொண்ணும் கிளம்பலைன்னா, கண்டிப்பா நான் சொன்னதை செய்வேன்.” என்றவனின் இறுகிய குரலில், மற்றவர்களால் அவனை நெருங்க முடியவில்லை.
“ஏய், போதும் வாடி, நீ இந்த வீட்டுல இருந்து பொழைச்சது. ஒண்ணுத்துக்கும் பிரயோஜனம் இல்லைன்னாலும் கோபத்துக்கு மட்டும் கொறைச்சலில்லை உம் புருசனுக்கு. அதை வச்சு ஒரு உப்பு மொளாகா கூட வாங்க முடியாது. இப்புடி பேச்சைக் கேட்டுட்டும் இனி மானமுள்ளவ இந்த வீட்டுல இருப்பாளா?” என்றவர் சுபாவை இழுத்துக் கொண்டு செல்ல,
“அம்மா, விடும்மா. அவரு புரியாம பேசுறாரு. நான் சொன்னா என்னை புரிஞ்சுப்பாரு.” என அழுதபடியே சுபா அவளது கையை பலம் கொண்டு உருவ,
“சப்” என்று ஓங்கி அறைந்திருந்தார் வள்ளியம்மை.
“என்ன பண்றீங்க நீங்க?” மல்லிகா பதறிட,
“போதும் உங்க நாடகம், இதுக்குத் தானே ஆசைப்பட்டிங்க, நடந்திருச்சு இப்போ சந்தோசமா? இனி உங்க பொண்ணு மட்டும் தான் இந்த வீட்டை ஆளுவா, நல்லா கண்ணார பாத்து ரசிச்சுக்கோங்க. பணக்கார மருமகளை மட்டும் நல்லா தாங்கு தாங்குன்னு தாங்குவாங்க இந்த வீட்டுல உள்ளவங்க. எம்பொண்ணு இனி இந்த வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டா.” என கத்தியவர்,
“இப்போ மட்டும் நீ என்கூட வரலை, என்னை உயிரோடவா பார்க்க முடியாது.” என மிரட்டி சாத்விக்காவையும் தூக்கி கொண்டு, மகளை தரதரவென இழுத்துக் கொண்டு சென்றிருந்தார்.
குழந்தை நடந்த களோபரத்தில் வீறிட்டு அலற, பெற்றவனின் மனம் துடித்தது. இருந்தும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் தங்களது அறைக்கு சென்று கதவடைத்திருந்தான்.
முகிலன் வேகமாய் சென்ற அண்ணனின் அறைக்கதவை தட்டிட,
“ஒண்ணும் பண்ணிக்க மாட்டேன்டா, எம்பொண்ணுக்காச்சும் நான் நல்ல அப்பாவ இருக்கனும்ல. யாரையும் பாக்குற தைரியம் இல்லைடா இப்போ எனக்கு, விட்ருடா.” என்றவனின் பேச்சில் முகிலனின் முகம் கசங்கி விட்டது.
“இந்த தாம்பூலத்தை நீ குடுக்காம இருந்திருக்கலாம் மல்லி.” அதுவரை எதிலும் மூக்கை நுழைக்காமல் இருந்த குருசாமி கூறிட,
கண்ணில் நீர் நிரம்பி விட்டது மல்லிகாவிற்கு.
“நான் இப்படி ஆகும்னு நினைக்கலைங்க.”
“யோசிச்சிருக்கனும் மல்லி!”
“எய்யா குரு, அந்த பொம்பிள்ளை மனசுல இவ்வளவு பொறாமை, அழுக்கு இருந்ததுக்கு மல்லி என்னய்யா செய்வா?” மருமகளை மகன் பேசியது தாளாது அவர் முறையிட,
“எல்லாமே நம்ம யோசிச்சிருக்கனும்மா? இப்போ மல்லி இதை குடுத்திருக்கலைன்னா, இந்த பிரச்சினையே வந்திருக்காதுல்ல.”
“இல்லை மாமா, இந்த விசயம் எப்பாயாவது ஒரு நாள் வெளிய வந்து தான் இருக்கும். அது இன்னைக்கு நடந்திருக்கு அவ்ளோதான். அத்தை மேல எந்த தப்பும் இல்லை.” முகிலன் ஆதரவாய் பேச,
“இதுக்கு மேல பேசி இனி ஆகப்போறது ஒண்ணும் இல்லை மாப்பிள்ளை. நாங்க கிளம்பறோம் மகாலிங்கம், இதுக்கு மேல இங்க இருக்கிறது நல்லதில்லை. இப்போதைக்கு பரணி தம்பியை பாருங்க அதான் முக்கியம்.” என்றவர் கிருஷ்ணாவை பார்க்க, அவன் காரேடுக்க சென்றுவிட்டான்.
“வரும்மா, உன் மேல தப்பில்லாதப்போ நீ யாருக்காகவும் அடக்கி போகணும்னு அவசியம் இல்லை. பாத்துக்கோ” என்றபடி அவர் மகாலிங்கத்தையும், பேச்சியையும் கண் காட்ட, ஆமோதித்து தலையசைத்தாள் அவள்.
கலங்கி நிற்கும் அன்னையை சரி செய்வதா? இல்லை உடைந்து நிற்கும் மாமியாரை சரி செய்வதா? இல்லை தன்மேல் சுமத்தப்பட்ட அபாண்டமான பழியில்
இருந்து வெளிவருவதா? என தெரியாமல் வருணா தவித்திட, அவளருகே நெருங்கி தோளில் கைப்போட்டு அணைத்துக் கொண்டு முகிலன்,
“நான் இருக்கேன் மாமா. நீங்க கவலைப்படாம போங்க. அத்தையை ஏதும் சொல்லாதீங்க.” என, சரியென்றவர் கிளம்பி இருந்தார் குடும்பத்துடன்.