‘எப்பொழுது தேவா கத்தினாலும் பதிலுக்கு அவளும் சரிசமமாக கத்தவே செய்வாள்’ ஆனால் இன்று, அதிர்ந்து கண்கள் கலங்கி நின்றவளே அவனின் மனதை நிறைத்தாள். இருந்தும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் கிளம்பிக்கொண்டிருந்தான்.
அன்று சாருமதி கூறியது போல் கண்ணாடி முன் நின்று அவனிடம் அவனே கேள்வி எழுப்பினான். “நீ இன்னும் உன்னோட காதலை அவகிட்ட சொல்லல.. அப்புறம் அவ என்னனு நினைப்பா?” என்ற மனதிடம், “இவ்வளவு நாள் வாழ்ந்ததில் அவளுக்கு என்னோட காதல் ஒரு துளி கூடவா புரியலை?” என்று அவனே எதிர்கேள்வியும் கேட்டான்.
“இவ்வளவு நாள் இல்லாம அவ எதுக்கு திடீர்னு இப்படி கேட்டான்னு யோசி” என்று மீண்டும் கேள்வியேழுப்பிய மனதை அடக்கிவிட்டு வேலைக்கு கிளம்பி வெளியே வந்தான்.
‘எவ்வளவு வேலை இருந்தாலும் ஒருநாளும் சாருமதி உணவை தவிர்க்க மாட்டாள். அவர்களையும் உணவை தவிர்க்க கூடாது என்றே அறிவுறுத்துவாள். ஆனால் தன்னுடைய கோபம் தான் அவளை இப்படி செய்ய வைத்தது’ என்று தன்னையே நிந்தித்தவன் “காஃபி மட்டும் போதும் மா” என்று அமர்ந்தான்.
‘அம்மாவுக்கு மட்டும் நான் கை ஓங்குனது தெரிஞ்சிது ஓங்கின கையை உடைச்சிடுவாங்க’ என்று எண்ணிக் கொண்டிருந்தவனிடம் காஃபியை கொடுத்துவிட்டு அன்று அவரின் பெரியம்மா வந்துவிட்டு சென்றதை இன்று தான் தேவாவிடம் தெரிவித்தார்.
“அவங்க அப்படி பேசுனதும் சாருவோட முகம் வாடிடுச்சி. அதுல இருந்து சரியாவே பேசல. நீயாவது அவகிட்ட எடுத்து சொல்லு தேவா” என்றார்.
‘ஓ! இதுனால தான் மேடம் கோபமா இருக்காங்களா? ச்ச நான் வேற அவகிட்ட ரொம்ப மோசமா நடந்துகிட்டேன்’ என்று மீண்டும் அவளிடம் நடந்துக்கொண்ட முறையை எண்ணி தன் மீதே கோபம் எழுந்தது.
இங்கு அகாடமியில் இருந்த சாருமதிக்கும் மனதே சரியில்லை. ‘எப்படி கை ஓங்கலாம்?’ என்று நினைத்து நினைத்து வருந்தியவள் நடன வகுப்பு எடுக்கும் நிலையிலும் இல்லை.
காலையில் மட்டும் வகுப்புகள் எடுத்தவள் மதிய வகுப்புகளை வேறொருவருக்கு மாற்றிவிட்டு யோகா வகுப்பிற்கு சென்றுவிட்டாள்.
பெரிய பளிங்கு கற்களாலான புத்தர் சிலை முன் காலை மடக்கி அமர்ந்தவள் கண்ணை மூடி தியான நிலைக்கு சென்றாள். சிறு வயதிலிருந்து பயின்ற கலை இன்று அவளின் மனதை ஒருநிலை படுத்த உதவியது.
எப்பொழுதாவது மனது அமைதியில்லாமல் தவித்தால் இதனை செய்வது சாருமதிக்கு வழக்கம் தான். சிறிது நேரம் மனதை சமன் படுத்தியவள் வீட்டிற்கு புறப்பட்டுவிட்டாள்.
என்றுமில்லாமல் இன்று முன் மாலையே வீட்டிற்கு வந்த மருமகளை கேள்வியாய் பார்த்த செல்வராணியிடம், “சீக்கிரமா கிளம்பி வந்துட்டேன் அத்தை” என்று சொல்லிவிட்டு அறைக்குள் வந்தாள்.
‘சும்மா இருந்தா லூசு மாதிரி யோசிப்போம்’ என்று மடிக்கணினியை எடுத்து ஏற்கனவே எடுத்த விடியோக்களை எடிட் செய்ய உட்கார்ந்துவிட்டாள்.
மாலையில் தேவாவும் விரைவிலேயே வந்துவிட்டான். அவனை பார்த்தவள் மடிக்கணினியை அணைத்து வைத்துவிட்டு வெளியேறிவிட்டாள். செல்வராணி அவளிடம் காஃபியை கொடுத்து மீண்டும் உள்ளே அனுப்பிவைத்தார்.
காஃபியை அவனின் முகம் பார்க்காமல் நீட்ட, அதை வாங்காமல் அவளையே பார்த்தான். அவனை முறைத்து பார்த்து அருகில் வைத்துவிட்டு வெளியே ஓடிவிட்டாள்.
இரவுணவை அனைவரும் ஒன்றாகவே உண்டனர். பின் அந்த பாத்திரங்களை ஒதுக்குவது என அறைக்கு செல்லாமல் நேரம் கடத்திக்கொண்டிருந்தாள் சாருமதி. “இதுலாம் காலைல பார்த்துக்கலாம் சாரு. நீ போய் தூங்கு. காலைலயும் வேலைக்கு போகணும்ல?” என அவளை அனுப்பிவிட்டே செல்வராணி படுக்கச் சென்றார்.
அறைக்குள் வந்து இரவுடை மாற்றிவிட்டு வந்தவளின் கையை பிடித்து “சாரி மதி!” என்றான்.
“கோபத்துல பண்ணிட்டேன். வேணும்னா என்னை ரெண்டு அடி கூட அடிச்சிடு. ஆனா பேசாம இருக்காத மதி ப்ளீஸ்..” என அவளை அருகில் இழுத்தான்.
அவள் கண்கள் மலுக்கென கண்ணீர் சிந்த, “எவ்வளவு கோபம் வந்தாலும் கையை ஓங்குவீங்களா? இது வன்முறை தான?” என அழுகையினுடே கேட்டாள்.
‘எதே? வன்முறையா?’ என்ற
அதிர்ச்சியுடன் அவளின் கண்ணீரை துடைத்தவன், “வன்முறைன்னு பெரிய வார்த்தைலாம் சொல்லாத டி. நீ அப்படி கேட்கவும் கோபமா அப்படி பண்ணிட்டேன். சாரி மதி” என காலையில் இறுக்கமாக பிடித்த தாடையை தடவி கொ(கெ)ஞ்சினான்.
“ஆனா அது தான உண்மை? நீங்க தீடீர்னு எதுக்கு கடன்லாம் வாங்கி என்னை கல்யாணம் பண்ணனும்? உங்க தங்க..” என்றவளின் வாயை மூடி முறைத்தவன்,
“மறுபடி மறுபடி அப்படி சொல்லாத மதி. உன்னை பிடித்து தான் கல்யாணம் பண்ணேன். போதுமா?” என்றவனின் கண்ணில் பொய் இல்லை கடலளவு காதல் தான் இருந்தது.
“நிஜமாவா?” என்றவளின் கண்கள் கண்ணீரில் பளபளத்தது.
“ஆமா. இந்த மதி முகம். உன்னோட பேச்சின்னு எல்லாமே பிடிச்சி தான் கல்யாணம் பண்ணேன்” என்றான். அதை கேட்டவளிற்கு பனிகட்டியை தலையில் வைத்தது போல் ஜிவ்வென்று இருந்தது.
அத்தனை நாள் மனதில் இருந்த இறுக்கங்கள் தளர, “அப்ப கல்யாணத்துக்கு முன்னாடியே எதுக்கு தேவ் என்கிட்ட சொல்லல?”
“அதுக்கு காரணம் வந்தனா கல்யாணம் மதி” என்றதும் முறைத்தாள்.
“முழுசா முடிச்சிடுறேன் மதி. அப்புறம் நீ முறைப்பியோ இல்லை குரைப்பியோ” என அவளை மடியில் அமர்த்தி இடையை கட்டிக்கொண்டான். அவளும் அவனின் தோளில் கைபோட்டு வாகாக சாய்ந்துக்கொண்டாள்.
“உனக்கு தெரியுமானு தெரியல மதி. வந்தனாவுக்கு அரவிந்தை பார்க்கிறதுக்கு முன்னாடியே ஒரு வரன் பார்த்து நிச்சயம் வரை போனது. ஆனா நிச்சயம் செய்யும் ஒரு வாரத்துக்கு முன்னாடி அவன் தப்பானவன்னு தெரிஞ்சி நிறுத்திட்டோம். நல்ல வேளை வந்தனாவுக்கு அவன் மேல அப்ப வரைக்கும் எந்த வித உணர்வும் இல்லைன்னு சொல்லிட்டா. அதுக்கு அடுத்து ஆறுமாசம் கழித்து தான் அரவிந்தை பேசினோம். அதுவும் உங்க அண்ணாவைப்பற்றி டிடெக்ட்டிவ் வெச்சி விசாரிச்சி ரொம்ப யோசிச்சி முடிவு பண்ணது”
“எங்கேயாவது தப்பாகிடுமோ? அப்படி தப்பானா.. குறை சொல்ல ஒரு கூட்டமே இருக்கு. என்னை மலையளவு நம்புற அம்மாவையும் தங்கையையும் நான் தான பார்த்துக்கணும். அப்படி தான் அரவிந்த் சம்பந்தம் பேசி முடித்தோம்” என்று நிறுத்தினான். இந்த விவரம் எல்லாம் சாருமதிக்கு தெரியாது ஆனால் அவளின் குடும்பத்தில் அனைவருக்கும் தெரியும்.
அவளின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை வைத்தே அவளுக்கு தெரியவில்லை என்று புரிந்துகொண்டான் தேவா. “அவங்க நிச்சயத்தில் தான் உங்க பாட்டிக்கிட்ட வாயடிச்சிட்டிருந்த உன்னை பார்த்தேன். அதுக்கு முன்னாடியே பார்த்திருப்பேன் ஆனா சரியா கவனிச்சது இல்லை” என அவளின் உதடை வருடினான்.
“தேவ்..” என சிணுங்கி அவனின் கையை தட்டிவிட்டாள்.
“நீயும் உன்னோட பாட்டியும் நம்மளப்பற்றி தான் பேசுனீங்க..” என அவன் சிரிப்புடன் சொல்ல வெட்கத்துடன் அவனின் மார்பிலே முகம் புதைத்தாள். அந்த நாளின் இனிமை இருவர் மனதிலும் நிறைந்திருக்கிறதே!
“நீ சரியா பார்க்கலயே பாட்டின்னு சொன்னதுல இருந்து தான், நான் உன்னை சரியா பார்த்தேன். அதாவது வெளிப்படையா சொல்லனும்னா உன்னை சைட் அடிச்சேன்” என அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.
சாருமதி வெட்கத்துடன்,
“ஃபிராடு ஃபிராடு” என அவனின் தோளிலே அடித்தாள். அதனை சிரிப்புடன் ஏற்றுக்கொண்டான் தேவா.
“எல்லாம் சரியா போய்ட்டு இருக்கப்ப தான் தீடீர்ன்னு உன்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க” என்று நிறுத்திவிட்டு அவளின் முகத்தை நிமிர்த்தினான்.
“எனக்குமே குழப்பம் தான் மதி. திடீர்னு கல்யாணம்னா நானும் எல்லாத்தையும் யோசிக்கணும் தான? மறுபடி வந்தனா கல்யாணத்துல ரிஸ்க் எடுக்க நான் விரும்பல. எனக்கு அவளோட கல்யாணம் தான் முதன்மையா இருந்தது. முதல்ல வந்தனா, அடுத்து நீ, நான்னு எல்லாத்தையும் யோசிச்சேன்” என அவன் மீண்டும் நிறுத்த படபடப்புடன் பார்த்தாள்.
“நீ உன்னோட பாட்டிங்க கூட லூட்டி அடிக்கிறது. எந்த ஒரு கவலையும் இல்லாம எல்லார்கிட்டயும் ஜாலியா பேசினதுன்னு என்னையறியாமையே எனக்குள்ள நீ வர தொடங்கிட்ட மதி. உன்னை பார்க்க பார்க்க உன்கூட வாழனும்ன்னு ஆசையா இருந்தது!”
“அதுக்காக நீ இல்லாம நான் இல்லை அப்படின்ற அளவுக்கெல்லாம் போகல. ஆனா அத எப்படி சொல்லுறது..?” என யோசித்தவன்,
“உன்கூடவே இருக்கணும்ன்னு மட்டும் தோணுச்சி மதி. அப்ப உன்னை கல்யாண பண்ணிக்க கேட்கலைனாலும் உனக்கு கல்யாணம் பேசுறப்பயோ இல்லை எனக்கு பேசுறப்பயோ உன்னையே பெண் கேட்டிருப்பேன். அதனால உன்ன மாதிரி ரொம்ப யோசிக்காம உடனே சரின்னு சொல்லிட்டேன். ஆனா அவங்க கல்யாணம் முடிஞ்சதும் தான் என்னால உன்கிட்ட நெருங்கவே முடிஞ்சிது” என அவன் சொல்ல அவனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
“அதுக்கு பெயர் தான் காதல்னா? எஸ் உன்னை காதலிச்சி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! அதுக்கு கடன் வாங்கினது எனக்கு பெருசா தெரியல மதி. இங்க பாதி கல்யாணம் கடன்வாங்கி தான நடக்குது” என அவளின் கண்களை பார்த்து காதலுடன் சொன்னான்.
அவ்வளவு நேரம் அவன் சொல்ல சொல்ல அவனின் உணர்வுகளை உள்வாங்கியவள் “அவங்க கல்யாணம் முடிஞ்சதும் சொல்லிருக்கலாமே தேவ்?” என அவன் கண்ணம் வருடி மீண்டும் கேட்டாள்.
“சொல்லியிருந்தா எதோ கடமையா இருந்திருக்கும் மதி. கல்யாணத்துக்கு சரின்னு சொன்னதுக்கே நீ இவ்வளவு யோசிச்சி குழம்புற? இதுல அப்பவே உன்னை ரொம்ப பிடிக்கும்னு சொல்லிருந்தா இன்னும் என்னலாம் கேட்பியோ?” என்றான் அவளை புரிந்து.
“சாரி தேவ்..” என அவனின் கழுத்தில் முகம் புதைத்தாள்.
“மதின்னு பெயர் வெச்சத்துக்காக மூளைக்கு ரொம்ப வேலைக்கொடுத்து யோசிக்காத மதி! ஜஸ்ட் கோ வித் தி ஃபலோ. சில விஷயங்களை எவ்வளவு யோசிச்சாலும் குழப்பம் தான் மிஞ்சும். நாம நினைக்கிற மாதிரி எல்லாமே நடந்துவிடாதே! யோசிச்சி, கேள்விகேட்டு, சிக்கலை உண்டு பண்ணாம நடக்கிறதே அப்படியே ஏத்துகிட்டு போய்ட்டே இருக்கணும் மதி”
“என்னை நம்புறேன்னு சொன்ன தான? அப்புறம் எதுக்கு இவ்வளவு குழப்பம்? இல்ல இவ்வளவு நாள் நாம வாழ்ந்ததுல என்னோட காதலை நான் உனக்கு உணர்த்தலையா?” என ஏமாற்றமாக கேட்டான்.
“தேவ்..” என கண்கள் கலங்கி அவனை இறுக்கிக்கொண்டவள், “அப்படிலாம் இல்லை. கல்யாணம் பண்ணது தான் அவங்களுக்காகவான்னு கேட்டேன். ஆனா நாம வாழ்ந்த வாழ்க்கைல எனக்கு எந்த வித குழப்பமும் இல்லை. உங்க அன்பை உணர்ந்திருக்கேன்! உங்க காதல்ல கரைஞ்சிருக்கேன்!” என அவனை கட்டிப்பிடித்து அழுது தீர்த்தாள். கிட்டத்தட்ட ஒரு வாரமாக அனைத்தையும் மனதில் வைத்து உழன்றவளுக்கு இப்பொழுது மனது லேசான உணர்வு.
சாருமதி அவளை பற்றி மட்டுமே யோசித்து குழம்பியிருக்கிறாள். ஆனால் அவளவனோ அனைத்தையும் அனைத்து கோணங்களில் இருந்தும் யோசித்து இரண்டு திருமணத்தையும் நடத்த எவ்வளவு முயன்றிருக்கிறான் என்று அவன் வாயாலே கேட்டதும் தான் அவள் கேள்வியால் அவன் எவ்வளவு காயப்பட்டிருப்பான் என்று உணர்ந்தாள்.
“சாரி தேவ். நீங்க இவ்வளவு விளக்கம் கொடுக்கவேணாம்” என அவனுள் புதைந்து கொண்டாள்.
மெல்ல அவளை வருடி சமாதான படுத்தியவன் அவளை அப்படியே சாய்த்து அவளின் மீது சாய்ந்தான். அவ்வளவு நேரம் அவனிடம் ஆறுதல் அடைந்தவள், “காலைல என்னை அடிக்க கைய ஓங்கினீங்க தான? ரெண்டு நாள் பக்கத்துல கூட வர கூடாது” என அவனை தள்ளிவிட்டாள்.
“ஏய்! இதெல்லாம் அநியாயம் டி. மறுபடி முதல்ல இருந்தா” என அலறினான் தேவா.
“எல்லாம் நியாயம் தான். பொண்டாட்டினா அடிக்க வருவீங்களா?” என அவனை எட்ட நிறுத்தியவள் சொன்னது போலவே இரண்டு நாட்கள் அவனை அருகிலே சேர்க்கவில்லை.
அன்று மாலை அரவிந்த் வீட்டிற்கு வந்திருக்க, “என்னன்னா நாளைக்கு வலென்டைன்ஸ் டேன்னு நைட் இங்க தான் தங்க போறீயா?” என சாரு கிண்டலுடன் கேட்டாள்.
“ஆமா” என்று சிரிப்புடன் சொன்னவன் வந்தனாவின் அறைக்கு சென்றான்.
“அண்ணா இங்க தான் தங்க போறாங்களாம்” என சொல்லிக்கொண்டே உள்ளே வந்தவளின் கை பிடித்த தேவா, “சீக்கிரமா கிளம்பி வா” என்றான்.
“எங்க? எதுக்கு?” என அவன் முகம் பார்த்து நின்றவளிடம், “ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னா விடுறியா?” என்று சலித்துக்கொண்டவன் “ரெண்டு நாள் ஏற்காடு போய்ட்டு வரலாம்” என்றான்.
இன்பமாய் அதிர்ந்தவள், “நிஜமாவா? நான் எதுவும் எடுத்து வைக்கலையே? முன்னைய சொல்லிருக்கலாம். அத்தைக்கு அண்ணிக்கு தெரியுமா?” என கேள்விகளை அடுக்கிக்கொண்டே கப்போர்ட்டை திறந்தாள்.
“எல்லார் கிட்டயும் சொல்லிட்டேன். உனக்கும் சேர்த்து நானே எடுத்து வெச்சிட்டேன்” என்று சிரித்தான். நம்ப முடியாமல் பெட்டியை திறந்து பார்க்க, இரண்டு புடவை எடுத்து வைத்திருந்தான். அவனை முறைத்துக்கொண்டே அவளுக்கு தேவையானதை எடுத்தவளை பார்த்தவன், “ரெண்டு நாளைக்கு ரெண்டு டிரஸ் போதும் மதி. ரூம்குள்ள இருந்தா அது கூட வேணாம்” என சொல்லி கண்ணடித்தவனிடம், “சண்டைபோட்டா அவுட்டிங் கூட்டிட்டு போவீங்க போல” என அவனை வம்பிழுத்தாள்.
ஏற்காடை அடைந்தவர்கள் அலுப்பு தீர குளித்தனர். “ரெண்டு நாள் மட்டும் மதி” என அவளின் காலில் கொலுசை ஆசையாக அணிவித்து அதை ஒலிக்கவிட்டான்.
பகலில் வெளியே சுற்றியவர்களை மாலை ஹனிமூன் சூட் வரவேற்றது. “பக்காவா பிளான் பண்ணிருக்கீங்க போலயே!” என அறையின் அலங்காரத்தை பார்த்து வியந்தவளை பின்னிருந்து அணைத்தவன், “ரெண்டு நாள் என்னை கிட்டயே விடல தான?” என அவளுடன் கட்டிலில் சரிந்தான்.
எப்பொழுதும் அவளிடம் கடைபிடிக்கும் மென்மை இன்று காணாமல் போய் வன்மையை மேற்கொண்டான். அவனின் ஒவ்வொரு தொடுகையிலும், அழுத்தத்திலும், முத்தத்திலும் காதலை அவளுக்கு உணர்த்திவிடும் தீவிரம் நிறைந்திருந்தது.
ஒருகட்டத்தில் பொறுக்க முடியாத சாருமதி, “என்ன தேவ்? ஒரே நாள்ல மொத்த கலோரியையும் குறைக்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்கீங்க போல?” என நக்கலுடன் கேட்டாள்.
“ஆமா டி. ஒரே நாள்ல உன்னை சைஸ் ஜிரோவா மாத்திடுறேன்”
“ஏற்கனவே நான் சைஸ் ஜீரோ தான்” என்றவளிடம், “இந்த மாதிரி நேரத்துல கூட உன்னால தான் டி இப்படி பேசிட்டு இருக்க முடியும். நீ பேசியே டையர்ட் ஆக்கிடுவ போல..” என அத்துடன் பேச்சை நிறுத்தியவன் அவளிடம் அவனுக்கான காதலை உணர்த்தினான்.
அவர்களின் செல்ல சிருங்கார சிணுங்களுடன் கொழுசும் இசைத்துக் கொண்டிருந்தது.
அவளின் கண்ணோடு கண்கலந்து காதலுடன் கூடினான். அங்கே நிகழ்ந்த கூடலில் அவனின் காதலை மட்டுமின்றி உயிரையும் அவளுக்குள் நிறைத்தான் சாருமதியின் தேவா.
ஒரு மாதம் கடந்த நிலையில் அன்று காலை தேவாவை எழுப்பிக் கொண்டிருந்தாள் சாருமதி.
“நைட்டும் தூங்க விட மாட்ற.. காலைலையும் எழுப்புற” என்று சாருமதியை போலவே அலுத்துக்கொண்டே எழுந்தவன் அவளின் கைபிடிக்க முயன்று கண்ணை லேசாக திறந்துபார்த்தான்.
“தேவ் போய் முகம் கழுவிட்டு இங்க வாங்க..” என்றாள் கண்ணாடி முன் நின்று. அவள் சொன்னதை செய்தவன் அவளை பின்னிருந்து அணைத்தான்.
மெல்ல அவனின் கரம் பற்றி அவளின் வயிரோடு ஒட்டிவைத்தாள். சந்தோசமும் எதிர்பார்ப்புடனும் அவளை கண்ணாடி வழியே பார்த்தவன் கண்கள் கலங்க, “நிஜமாவா மதி?” என்றான்.
“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவளுக்கு வார்த்தையே வரவில்லை. கர்ப்பத்தை உறுதி செய்த சாதனத்தை அவனின் கையில் திணித்தாள். அதில் இருந்த இரண்டு கோடை பார்த்தவன் பரவசத்தில் என்ன செய்வதென்றே புரியாமல் சாருவை இறுக்கி முத்தம் கொடுத்தான்.
எத்தனை மாதங்கள் சாருமதி இதற்காக ஏங்கியிருக்கிறாள் என்று அவன் அறிவானே! இப்பொழுது வரும் மாதவிடாயும் தள்ளி போயிருக்க அவளை குழப்ப விரும்பாமல் அமைதி காத்தவனின் கண்கள் பணித்தது.
பின் இருவரும் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மருத்துவரை சந்தித்து மீண்டும் உறுதி செய்துவிட்டு வந்தனர். அதன் பிறகு தான் செல்வராணியிடம் சொன்னார்கள். பின் ஃபோன் செய்து சாருமதியின் வீட்டிற்கும் தெரியப்படுத்தினர்.
உடனே செல்வராணி அவர்களின் குலதெய்வத்திற்கு வேண்டி காணிக்கையை முடிந்துவைத்தார்.
விஷயம் தெரிந்த அடுத்த நொடி அரவிந்தனுடன் அனைவரும் கிளம்பி வந்துவிட்டார்கள்.
சாருமதியை உச்சி முகர்ந்த கோமதி, “நல்லாயிரு தாயி!” என்று கண்கலங்க கூறினார்.
ஜெயந்தி, “ரெண்டு பேரும் மாசமா இருக்கீங்க. ஒரே வீட்டுல இருக்க கூடாது!” என்று சொல்லி சாருமதியை அழைத்து செல்ல கேட்டார்.
சாருமதி எவ்வளவு சொல்லியும் விடவில்லை. அவள் தேவாவிடம் கேட்க, அவனுக்கும் புரியவில்லை. பின், “வந்தனாவிற்கு குழந்தை பிறக்கும் வரைக்கும் உன்னோட கோம்ஸ் கூட இருந்துட்டு வா மதி” என அவளை சமாதானபடுத்தி அனுப்பிவைத்தான்.
பின் ஏரோபிக் நடனம் ஆடலாமா வேண்டாமா என்று டாக்டரிடமும் ஆலோசனை பெற்றுவிட்டு மிதமான உடற்பயிற்சி மட்டும் செய்தாள். ஆனாலும் தினமும் அகாடமி சென்றுவிடுவாள்.
ஒருவாரம் சென்ற நிலையில் ஒருநாள் இரவில் வந்தனாவிற்கு வலி வர அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இரவு சென்றவர்களை காக்கவைத்து காலையில் தான் அவர்களின் புதல்வன் பிறந்தான்.
சாருமதியும் கர்ப்பமாக உள்ளதால் கோமதியுடன் வீட்டிலேயே இருக்கவைத்து குழந்தை பிறந்த பிறகே அழைத்து வரப்பட்டாள்.
குழந்தை பிறந்தது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால் மீண்டும் அவர்களின் வீட்டிற்கு செல்வது சாருமதிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்தது. அவளுடன் கோமதியும் பேத்தியையும் கொள்ளு பேரனையும் கவனிக்க வந்துவிட்டார்.