மனம் - 11
கோபம் எல்லாம் உன் மேல் இருக்கும் காதல் தான்…
காதல் எல்லாம் நீ என் கரங்களில் தவழத்தான்…
அதியமான் அவளைத் தன் மனைவியாகத் அருகே இருத்திக் கொள்ள அவன் மனதில் கூறும் காரணமென்னவோ 'என்னை வேண்டாம் என்றவளே, எனக்கு மனைவியாக வரவேண்டும்' என்பது தான்…
ஆனால் அவள் மேல் அவனுக்கு வந்த இந்தக் காதலை அவன் ரசிக்க ஆரம்பித்தான்…
அவளின் ஒவ்வொரு செயலிலும் அவனுடைய அருகாமையைத் தவிர்ப்பது அவனுக்கு ஆர்வத்தை உண்டாக்கியது…
அதற்காகவே அவள் அருகேச் சென்று நின்றான்…
அதெல்லாம் தவிர்க்கும் அவள் செயலில் இருக்கும் அத்தனை அழகையும் ரசித்தான் மனதோரம்…
இன்றைய பொழுதில் இருந்து அவன் மனம் முழுவதும் காதலாகத் தழும்பியது.
எட்டி நின்றுத் தன்னுள் தவித்துக் கொண்டிருந்தவளின் கஷ்டம் எல்லாம் அவளை அடைய, அவளுக்கு வரைந்த சக்ரவியூகம் என்று அவளுக்குத் தெரிய வந்தால் அவன் நிலை…
அவள் பிரிந்தச் செல்வாளா… எதிர் காலம் தான் சொல்லும்…
அதே நேரம் வீட்டிற்குச் சோர்வாக வந்த கங்காதரனைப் பார்த்துப் பதட்டமானாள் அவர் மனைவி புனிதா.
அவரின் கவலையான முகத்தில் அவருக்குப் பத்து வயது மூப்பினைக் காட்டியது…
அவரைப் பார்த்ததும் ஏதோ சரியில்லை என்று உணர்ந்தப் புனிதா அவருக்குப் பிடித்த பதத்தில் டீயைத் தயாரித்துக் குடிக்கக் கொடுத்தவள் 'என்னாச்சுங்க' என்று மெல்ல விசாரித்தார்.
இத்தனை வருடத் திருமணம் வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் கலங்காமல் எல்லாம் திடமாகக் கையாண்டிருக்கும் கங்காதரனை இப்படி அவர் பார்த்தது இல்லை…
என்னாச்சுங்க என்றவரின் கேள்விக்கு... தாராவைக் காணச் சென்றதும் அங்கே நடந்தது எல்லாம் ஒன்று விடாமல் தன் துணையிடம் பகிர்ந்தவருக்கு எவ்வளவு சொல்லியும் மனம் ஆறவே இல்லை…
“நம்மோட, தாரா இப்படிப் பண்ணுவாள் என்று நினைக்கவில்லை புனி… மனது ரொம்பப் பாராமாக இருக்கிறது… என்னிடம் வந்து இவரைத்தான் காதலிக்கிறேன் என்று சொல்லி இருந்தால்… அவளுக்கு நானே கல்யாணம் செய்து வைத்திருப்பேனே…
ஏன் இப்படிப் பண்ணினாள்” என்று வந்தப்பொழுதில் இருந்தே… மாறி மாறி இதே புலம்பிக் கொண்டு இருந்தவருக்கு… ஒரு கட்டத்தில் இதயத்தில் வலி உண்டானது…
“புனி என்ன தெரியவில்லை இங்கே வலிக்குது” என்றவர் அப்படியே சரிந்தார்…
கணவனின் நிலையைக் கண்டு “ஐயோ”… என்று கத்திய புனிதாவின் குரலைக் கேட்டு அருகே இருந்த தங்கம் அவர் மகன் மகேந்திரன் வந்தனர்…
படுக்கை அறை இருந்த தாரிகாவும வேகமாக “என்னாச்சு அம்மா” என்று வந்தாள்.
கங்காதரனின் நிலையைக் கண்டு… வேக வேகமாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்…
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு வந்திருக்கு என்று அவருக்கான சிகிச்சையை மேற்கொண்டனர்…
தாராவிற்கு அழைத்து அப்பாவிற்கு மாரடைப்பு என்றும் அவரை அருகே இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் அறிவித்தாள் தாரிகா.
அன்றைய தினம் அலுவலகம் செல்ல முடியாமல் விடுமுறை எடுத்தவள் வாழ்க்கை இருளில் சிக்கிச் சிறு குழந்தையாகத் தவித்தது.
அவளின் நிலையைக் கண்டு அன்றைய தினம் அவனும் அவளோடு தங்கி விட்டான்…
தன் அன்னையிடம் வேலை விஷயமாக வெளியில் தங்க வேண்டி வந்தது என்று தகவலாகச் சொல்லி உள்ளே வரவும்.. அங்கே அப்பா என்று கத்தி அழுதவளைப் பிடித்துக் கொண்டு இருந்தார் யமுனா…
“என்ன... என்னாச்சு, தாரா.. ஏன் அழற... சொல்லுமா” என்று அவளை மெல்ல, தன் கைகளுக்குக் கொண்டு வந்தான் அதியமான்…
அப்பா..என்று மட்டுமே சொல்லிக் கொண்டு இருந்தவளை மெல்ல அமர வைத்து.. அப்பாவிற்கு என்ன என்று குழந்தையிடம் கேட்பது போல் கேட்டான்.
அவனின் செயலில் இருக்கும் நிதானமும் அவளைப் பாதுகாக்கத் துடிக்கும் அவன் காதலும் கண்டு யமுனா மனதில் 'பரவாயில்லை… நல்ல மனிதன் அவளுக்குக் கணவனாக இருக்கிறார்' … என்று நினைத்து அவளுக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வருவதற்குச் சமையலறைக்குள் சென்றார்…
“தாரா.. என்ன அப்பாவிற்கு என்ன ஆச்சு” என்று மீண்டும் கேட்டவனின் அவன் முகம் பார்த்து…
“அவருக்கு மாரடைப்பு என்று இப்போது தான் தாரிகா, சொன்னாள்…
"எனக்குப் பயமாக இருக்கிறது… நான் என்ன பண்ணுவேன்… அவருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.. என்னால் அவருக்கு இப்படி ஆகி விட்டது” என்று அழவும் அவனுக்கு மனதில் பாரம் ஏறியது…
தான் ஒன்று நினைத்துச் செய்தது… வேற மாதிரி நடந்துவிட்டது…
அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை…
அதிர்ச்சியில் அவளைப் பார்த்தான்…
அழும் அவளை ஆறுதலாக அணைத்தவன்… “அவருக்கு ஒன்றும் ஆகாது… அப்படி எல்லாம் நடக்க விட மாட்டேன்” என்றவன்
“வா அவரைப் போய்ப் பார்க்கலாம்” என்று அழைத்தான்…
இல்லை என்று அழுதப்படித் தலையை ஆட்டினாள் தாரா…
அந்தச் சோகத்திலும் அவள் செயலில் சொக்கித் தான் போனான் அதியமான்…
அன்றைய தினம் ஆயிரமாவது முறை அவளில் வீழ்ந்தான் அவளை வெறுத்த அதியமான்…
“தாரா.. இங்கே பாரு.. இப்போது நீ அங்கே கட்டாயம் போக வேண்டும்.. பயப்படாதே… நான் இருக்கிறேன்” என்றான்…
“இல்லை … என்னால் எப்படி அவரைப் போய்ப் பார்க்க முடியும்… எல்லாம் என்னால் தானே… அவருக்கு என்னால் மாரடைப்பு வந்துச்சு” என்று அவன் சட்டையைப் பிடித்து அழுதாள் தாரா…
அவளின் மனதில் இப்போது அவள் தந்தை மட்டுமே வலம் வந்ததால் தங்கள் இருவருக்கும் இடையே நடந்த எல்லாம் மறந்தாள்.
அவன் மட்டுமே தனக்குத் துணை என்று தன் மன வேதனையைப் பகிர்ந்தாள்... கட்டிய கணவனிடம் மனைவிக்கு இருக்கும் உரிமையில் கூறுவது போல் இருந்தது அவள் செயல்,அவளை மீறி எல்லாம் நடந்தது அவர்களுக்கு இடையே…
அவள் இருக்கும் நிலையில் தனியே அனுப்பப் பயந்த அதியமான் “நானும் உன்னுடன் வருகிறேன்.. நாம் போய்ப் பார்க்கலாம் வா” என்று அழைத்தது சென்றான்.
யமுனாவிடம் சொல்லிக் கொண்டு அமரனையும் எடுத்துக் கொண்டு தாராவின் வீட்டிற்குச் சென்றனர் இருவரும்... திருமணம் ஆகாமலேயே தம்பதிச் சமேதராகப் பிள்ளையோடு சென்றனர் ஒரு குடும்பமாக…
காரில் பயணித்ததால் இருவரும்…
மருத்துவமனைக்கு விரைவு வந்து அடைந்தனர்.
அவர் அனுமதித்து இருக்கும் பகுதிக்கு வேகமாக வந்து சேர்ந்தனர்…
கணவனோடு பிள்ளையைக் கையில் ஏந்திக் கொண்டு வந்த தாராவைப் பார்த்து அதிர்ச்சியானார் அவள் அத்தைத் தங்கம்…
அங்கே கங்காதரன் உடல் நிலைச் சரியில்லை என்று அறிந்ததும் நளினியும் வந்திருந்தாள்…
பெரியவர்கள் தவிரப் பாக்கி இருக்கு அனைவருக்கும் தாராவின் கையில் இருக்கும் அமரன் பற்றித் தெரியும்.. ஆனால் அதியமானின் வருகைத் தான் அவர்களுக்குக் குழப்பமாக இருந்தது…
மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர் மௌனமாக…
கணவனின் உடல் நிலையும் அவர் இன்னும் கண் விழிக்காமல் இருப்பது… எதிர்பாராத நேரத்தில் அவருக்கு உண்டான மாரடைப்புக்குக் காரணம் தாரா என்று உணர்ந்தார் புனிதா…
தாராவின் அருகில் வந்தவர் யாரும் எதிர்பாராத விதமாக அவளை ஒங்கி அடித்திருந்தார்… இப்படி அடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை அதியமான்…
மற்றொரு அடி அவளை அடிக்கக் கை ஒங்கிய நேரம் பிள்ளையோடு அடி வாங்கி நிற்கும் தாராவை அணைத்து, அவர் அடியில் இருந்து காத்த அவன் செயலில் அவனின் உரிமையின் ஆழம் உணர முடிந்தது அனைவருக்கும்.
இது யாரும் எதிர்பாராத திருப்பமாக அமைந்தது…
தாராவின் கைகளில் இருக்கும் அமரனின் பயந்த முகத்தைக் கண்டு
நளினி வேகமாக வந்து தாரா விடம் இருந்து அமரனை வாங்கினாள்.. அழாமல் சமத்தாக அவளிடம் சென்றான் அமரன்.
அவனோடு வீடியோ கால் பேசியதாலும் அடிக்கடி அவனைக் காணச் செல்வதாலும் அவர்களுக்கு இடையே நல்ல பரிச்சயம் இருந்ததால் குழந்தை அவளிடம் அழவில்லை…
“குட்டிப் பையா வாங்க… நாம விளையாடலாம்”… என்று அங்கிருந்துச் சென்றாள்…
நடப்பதெல்லாம் பார்த்து என்ன காரணம் அப்பாவிற்கு மாரடைப்பு என்று புரிந்துக் கொண்டாள் தாரிகா…
தன் தவறின் வீரியம் எல்லாம் தாராவைத் தாக்கிக் கொண்டு இருப்பதை உணர்ந்தாள் தாரிகா…
“தாரா.. நான் பண்ணினத் தவறுக்கு நீ ஏன்டி” என்று ஆரம்பித்தவளின் வார்த்தைகளை முடிக்க விடாமல்
“என்னை மன்னித்து விடுங்கள் அம்மா” என்று தாயின் காலில் வீழ்ந்துத் தாரிகாவின் வார்த்தைகளைத் திசைத் திருப்விட்டாள், தாரா.
தாயின் காலடியில் விழுந்தது மன்னிப்புக் கேட்கும் தாராவையும்... தாராவின் செயலைச் சற்றும் எதிர்பாராத அதியமான் “தாரா” என்று கத்தினான்…
அதியமான் முகத்தைப் பார்த்தத் தாரிகாவிற்கு அவன் யாரெனத் தெரியவில்லை... ஆனால் அவளுள் பயம் பிறந்தது அவன் முகத்தைக் கண்டு
ஆனால் தாராவோடுத் துணைக்கு வந்து இருக்கும் நண்பனாக இருக்கலாம் என்று தான் நினைத்தாள்.
தாராவை வேகமாக எழுச்செய்தவன் புனிதாவைப் பார்த்து... தவறு என்னுடையது தான் என்று கங்காதரனிடம் என்ன சொன்னானோ அதையே இங்கேயும் கூறினான்…
மகேந்திரன் தாராவை அதிர்ச்சியாகப் பார்த்தான்…கண்களால் வினவினான் அப்படியா என்று அவளும் ஆம் என்று கூறினாள்…
மெல்லப் புனிதாவிடம்…
"சதீஷ் தன் தம்பி என்றும்... தாராவைத் திருமணம் செய்யக் கேட்க அனுப்பி எல்லாம் சரி செய்ய நினைத்தேன். ஆனால் இப்படி ஆகும் என்று தெரியவில்லை என்று அவரிடம் பேசிப் புரிய வைத்தான்…மருமகன்… மகனாக மாறி அவரிடம் பேசினான்… அதியமானின் பேச்சோ இல்லை அவனின் உண்மையான பாசமிக்கக் குணமோ புனிதாவினைச்சமாதானம் செய்ய
முயன்றது…
அங்கே எல்லாம் விதமானாப் பேச்சுக்களும் முடிந்து அங்கே அமைதி நிலவியது…
என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள நினைத்து மகேந்திரன்... தாராவின் கைகளைப் பிடித்து அங்கே இருக்கும் இருக்கையின் கடைசிப் பகுதியிக்கு அழைத்துச் சென்றான்…
அவள் அத்தை மகன் பிடித்த இருக்கும் அவள் கைகளையே பார்த்தவன் தாராவையும் பார்த்தான்… அவளுக்கு அதெல்லாம் எதுவும் உணரும் நிலையில் இல்லை…
“ தாரா வா, பையன் அழறான் பாரு” என்று அவளை அழைத்து நளினியின் அருகே சென்றான்…
அதியமானைப் பார்த்தபடி… "தாரா என்ன ஆச்சு.. எப்படி இதெல்லாம் நடந்தது” என்று கேட்டான் மகேந்திரன்…
அவர்கள் பேசுவதையே பார்த்த வண்ணம் முகம் இறுகி அமர்ந்து இருந்தான் அதியமான்…
அவளோ… நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் பகிர்ந்துக் கொண்டிருந்தாள்…தன் அத்தை மகனிடம்…
அவர்களுக்கு இடையே இருந்த அன்பு அவனுக்குப் பொறாமையைத் தூண்டியது…
மகேந்திரனின் அமைதியான முகமும் அதில் தவழும் பாசமும் அவன் குணத்தை எடுத்துக் கூறியது…
அவள் கூறிக்கொண்டு இருக்கும் போது நடு நடுவே அவள் அழும் பொழுது, அவள் கண்களைத் துடைத்துக் கொடுக்கும் பாங்கு... சிறுபிள்ளையென அவள் ஏங்கி ஏங்கி அழுது… அவனிடம் எல்லாம் சொல்லிக் கொண்டு இருப்பதைப் பார்த்துப் பொறுமை அவன் கட்டுக்குள் இருந்து விலகிக் கொண்டு இருந்தது…
என்ன பேசினாலும்.. இந்த இரண்டு நாட்கள் தன்னோடு ஓரே வீட்டில் இருந்து போதும் மகேந்திரன் இடம் காட்டும் அன்போ… உரிமையோ தன்னிடம் இன்னும் காட்டாமல் தன்னைத் தள்ளி வைத்திருப்பதாக உணர்ந்தான் அதியமான்…
அவன் மனதில் ஏதோ குறைவாகத் தோன்றிய உணர்வு இந்த உரிமையான செயல் தான்..
தன்னிடம் அவள் காட்டும் ஒதுக்கம் அவனுக்கு இப்போது நன்றாக உணர முடிந்தது... அவன் மட்டுமே மனதளவில் அவளை நெருங்கி இருக்கிறேன் என்று உணர்ந்ததும் அவனுக்கு அதிர்ச்சியோடு கூடிய ஆச்சரியம் உண்டானது…
மீண்டும் ஒரு முறைத் தன்னுடைய காதலை உணர்ந்தான் அதியமான்…
அங்கே பேசிக் கொண்டு இருக்கும் மூவரையும் பார்த்தவனுக்கு நளினியும் மகேந்திரனுக்கும் இடையே ஓடும் காதல் கண்ணில் புலப்பட்டது… அதில் இருக்கும் உரிமையும்... தாராவின் மேல் அவனுக்கு இருக்கும் பாசமும் புரிந்தது தான், ஆனாலும் பொறாமைக் கணன்று கொண்டு இருந்தது மனதில்…
அவன் அருகே இருந்த தாரிகாவிற்கு அதியமான் மேல் பயம் உண்டானது…
தங்கள் காதலின் சின்னமாக அமரன் தாராவின் கையில்… இது வரை இது பற்றி எதுவும் தான் பேசாமல் அமைதியாக இருப்பது குற்ற உணர்வு உண்டாக்கியது…
இந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள என்று நிஜமாகவே அவளுக்குத் தெரியவில்லை… நிறுத்தாமல் அழுதுகொண்டே இருந்தாள்…
அப்பொழுதும் அவளுக்குத் தாராவின் அரவணைப்புத் தேவையாக இருந்தது…
புனிதாவோ தன்னைச் சுற்றி நடப்பதை உணராமல் கணவனை நினைத்து அழுதுகொண்டே இருந்தாள்..அவரை ஆறுதல் படுத்தும் பணியைத் தங்கம் ஏற்றுக் கொண்டு இருந்தாள்…
"ஒன்னும் ஆகாது, புனி.. அண்ணா சரியாகிருவாரு…அப்படியெல்லாம் விட மாட்டோம்… டாக்டர் வந்து என்ன சொல்றாங்களென்று பார்க்கலாம்... இல்லையா, பக்கத்தில் இருக்கும் பெரிய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போய்ப் பார்க்கலாம்" என்று அவருக்குத் தெரிந்தது போல் தன் அண்ணியைச் சமாதானம் செய்தார்.
இந்தச் சூழ்நிலையில் யாரின் கவனமும் கவராமல் மெல்ல, தாராவின் பகுதிக்கு ஒடிச் சென்றத் தாரிகா... தன் உடன் ஒட்டிப் பிறந்தவளைக் கட்டிப்பிடித்து அழுதாள்…
“எல்லாம் நான் பண்ணிட்டு, நீ ஏன்டி இப்படிக் கெட்டப் பெயர் எடுத்த” என்று அழுதாள்…
இருவரும் இப்படி அழுவதைத் தாங்காமல் மகேந்திரன் நளினி இருவரும் அவர்களை ஒன்றாக அணைத்து அழாதே என்று ஆறுதல் படுத்திய விதம் நால்வரும் ஒரே நண்பர்கள் வட்டம் என்று நன்றாகத் தெரிந்தது.
அவர்களுக்கு இடையேயான பாசம் அவனுக்குப் புரியத்தான் செய்தது.
" இப்போது இரண்டு பேரும் அழுவதை நிறுத்தப்போறீங்களா… இல்லையா"… என்று நளினி மிரட்டினாள்… இருவரும் அமைதியாகினர்…
அப்போது தாராவைப் பார்த்து… " அவர் சதீஷோட அண்ணா தானே தாரா… அவருக்கு" என்று மெல்ல இழுத்தாள்…
"தெரியாம் டி அதனால் தான் பெண் கேட்டு அவங்க அம்மாவை அனுப்பி இருந்தாக"… என்றாள் தாரா…
அப்போது மகேந்திரன் ஆமாம்… "அவங்கள் பெரிய மகனுக்கு உன்னைப் பெண் கேட்டாங்கள் தாரா"…
"ஆமாம் அவருக்குத் தான் அவங்க அம்மா என்னைப் பெண் கேட்டாங்க மாமா" என்றாள் தாரா
அப்படியா என்று கண்களை விரித்தாள் நளினி…
எல்லாம் நன்றாகத் தானே போயிட்டு இருந்துச்சு அப்பறம் எப்படி இப்படி ஒரு சூழல் வந்தது என்று கேட்டாள் நளினி…
“இல்லை… நான் இந்தக் கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லிட்டேன் நளினி… ஆனால் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது…
"இப்போ நாங்கள் தம்பதியர் என்று எங்க அப்பா நினைச்சுட்டு இருக்காரு… எனக்குத் திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாய் என்று நினைத்து இருக்காரு… நான் என் வாழ்க்கையில் நடந்த இதெல்லாம் அவரிடம் சொல்லாமல் மறைத்து விட்டேன் என்று கோபம் மற்றும் ஏமாற்றம் தந்த வேதனையால் தான் இப்போ இப்படி முடியாமல் படுத்து இருக்கார்” என்றாள், தாரா.
எப்படி இதெல்லாம் அவருக்குத் தெரிந்தது என்ற கேள்விக்கு நடந்ததை எல்லாம் கூறியவள்… அதியமான் பக்கத்தில் இருக்கும் விஷயங்களையும் கூறினாள் தாரா…
இதில் அதியமான் தான் எல்லாச் செய்தான் என்று யாருக்கும் தெரியவில்லை…
அவள் தந்தைக்கு அமரன் தாராவின் புகைப்படங்கள் அனுப்பி வைத்தது அவன் தான் என்று யாருக்கும் தெரியவில்லை.
இக்கட்டான சூழ்நிலையில் அவளைக் காப்பாற்றிய நல்லவனாகத் தெரிந்தான் நளினி, தாரிகா மற்றும் மகேந்திரனுக்கு…
அதனால் மகேந்திரன் வேகமாக அதியமானிடம் வந்தவன் அவன் கைகளைப் பிடித்து "ரொம்ப நன்றிங்க... தாராவைப் காப்பாற்றியதற்கு… இல்லையென்றால் அவள் நிலை… யோசிக்கவேப் பயமாக இருக்கிறது… உளமார்ந்த நன்றிகளைப் பகிர்ந்தான் மகேந்திரன்.
மகேந்திரனின் நன்றி உரைத்தல் அவனைத் தள்ளி வைப்பது போல உணர்ந்தான் .ஆனால் எதுவும் செய்ய முடியாது நிலையில் இருந்தான் அதியமான்.
"நன்றி எல்லாம் எதற்குங்க… நம்ம எல்லாம் ஒரே குடும்பம் தானே"… என்றான் அதியமான்.
"நீங்கள் என்னை மகேந்திரன் என்றே அழைக்கலாம், உங்கள் வயது தான் எனக்கும்" என்றான் மகேந்திரன்…
"சரி மகி" என்று அவன் பெயரை மேலும் சுருக்கினான் அதியமான்…
மகேந்திரனிடம் நட்புக் கரத்தின நீட்டி, தன்னை அதியமான் என்றும் அவன் என்னவாக இருக்கிறான் என்றும் அறிமுகம் படுத்திக்கொண்டான் .
அதில் அவன் உயரம் நன்றாகப் புரிந்தது மகேந்திரனுக்கு.
அப்போதும் அவனோட கம்பெனியில் அவள் பணிப் புரிகிறாள் என்று அவன் கூறவில்லை… அதை மகேந்திரனும் கவனிக்க வில்லை…
அந்நேரம் இரண்டு பெண்கள் வாழ்க்கையும் எந்தக் கலக்கமும் இல்லாமல் செட்டில் ஆகவேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருந்தது மகேந்திரனுக்கு.
"மகேந்திரன்"…என்று தயங்கி நின்றான் அதியமான்.
"என்ன சொல்லுங்க அதியமான்"… என்று கேட்டதும்…
"இல்லை... தாராவின் அப்பாவிற்கு இந்த அளவுக்கு உடல் நிலை மோசமாக நான் காரணமாக இருந்து விட்டேன்… எனக்கு அதைச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்… உங்க உதவி வேண்டும் அதற்கு"… என்றான் அதியமான்.
"என்ன செய்யணும்" என்று கேட்டான் மகேந்திரன்.
"எனக்கும் தாரா விற்கும் திருமணம் நடக்க வேண்டும்… உடனே" என்றான் அதியமான்.
அவன் இந்தப் பதிலில் அதிர்ச்சி அடைந்தவன்… "அவருக்கு உடம்பு முடியாமல் இருக்கும் இந்த நேரத்தில் இதெல்லாம் வேணுமா" என்று கேட்டான் மகேந்திரன்.
"கண்டிப்பாக மகி… அவரிடம் நான் பேசறேன்" என்றவன்…
"நீங்க ஏற்பாடு மட்டும் பண்ணுங்க மத்ததெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான் அதியமான்.
கங்காதரனைப் பரிசோதிக்கும் மருத்துவரை கண்டு அவர் உடல் நிலை இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டான்..பின் அவருக்கானச் சிகிச்சையைப் பற்றி எல்லாம் விசாரித்தவன்… அவரை இனி வரும் காலங்களில் எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டான் அதியமான்.
கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்..
அதிக வேலைப் பளு இல்லாமல் ஓய்வில் இருப்பது நல்லது என்றார் டாக்டர்.
அவரின் உடல் நிலையில் இனி அவருக்கு ஓய்வு மட்டுமே வேண்டும் என்ற புரிந்தது அதியமானுக்கு.
எப்பொழுது அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று கேட்டான்…
இன்றைக்கு அவர் உடல் நிலைப் பார்த்து விட்டுச் சொல்கிறேன் என்றார் மருத்துவர்.
அவரைப் பார்க்கலாமா டாக்டர் என்று கேட்டான்…
"ம்ம் பார்க்கலாம் மிஸ்டர் அதியமான்… நான் உங்களுக்கு ஏற்பாடுச் செய்கின்றேன்" என்று கூறியவர் அவருக்கு இப்போது அமைதியும் ஆரோக்கியமான சூழல் தான் முக்கியம் என்றார்.
"புரியுது டாக்டர்" என்றவன் அவரோடு கங்காதரனைக் காணச் சென்றான்.
அவரிடம் பேச வேண்டி இருந்தது அவனுக்கு.. அவரோட நம்பிக்கையும் அன்பும் அவனுக்குத் தேவை இப்போது இருக்கும் சூழலில்…
அதுமட்டும் இல்லாமல் தந்தை இல்லாமல் வாழ்ந்த அவனுக்கு ஒரு தந்தையின் வேதனையும் கோபமும் சகிக்க முடியாததாக இருந்தது.
கங்காதரனை அனுமதிக்கப் பட்டு இருக்கும் அறைக்கு மருத்துவரோடு சென்றுப் பார்த்தான் அதியமான்.
அப்பொழுதுத் தான் கண் விழித்து இருந்தார் தாராவின் தந்தை.
மெல்ல இமைத் திறக்கவும்... அவரைப் பரிசோதித்த டாக்டர்… "இப்போது எப்படி இருக்கிறது கங்காதரன்" என்று கேட்டார்.
"ம்ம் பரவாயில்லை டாக்டர்" என்றவரின் பதில் மிகவும் பலவீனமாக வந்தது.
"சரியாகிவிடும் எல்லாம், வொர்ரிப் பண்ணாதீங்க" என்றார்…
டாக்டர் சென்றதும் கங்காதரன் அருகே வந்து அமர்ந்த அதியமானிற்குச் சொல்லில் அடங்காது வேதனை உண்டானது.
அவர் கைகளைப் பிடித்து… "மாமா என்னை மன்னித்து விடுங்கள்... உங்க பையனாக நினைத்து இந்தத் தவறை மன்னித்து விடுங்கள்… அப்பா இல்லாத பையன் நான்" என்றவனின் கண்கள் கலங்கியது. மேலும்
"உங்களை என் அப்பா நினைத்து வாக்குத் தரேன்.. உங்க பொண்ணைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்கிறேன் மாமா" என்றவன் கொடுத்த வார்த்தைகளைக் காப்பாற்றுவானா அதியமான்.
அவனின் வார்த்தைகளில் இருந்த உண்மை அவருக்கு யானைப் பலத்தைத் தந்தது…
அவர் கைகளைப் பிடித்து இருக்கும் அவன் கைகள் தன் கரம் வைத்து "உங்களை நம்பறேன் மாப்பிள்ளை…என் பொண்ணு என்னிடம் உண்மையை மறைத்து விட்டாள் என்ற கோபம் தான்… விடுங்க இதெல்லாம் அப்பா பொண்ணு நடுவுல இரு
ப்பது, சரியாகக் கொஞ்சம் நாட்கள் ஆகும்" என்றவர்…
"அப்பா இல்லை என்று வருத்தம் படாதீங்க, அந்த இடத்தில் உங்களுக்கு நான் இருக்கிறேன்"…என்றவர் மெல்லப் புன்னகைத்தார்.
அங்கே அழகான புரிதல் மாமனாருக்கும் மருமகனுக்கும் உருவாகியது.
தொடரும்…