priya pandees
Moderator
அத்தியாயம் 46
"அந்த ரோடு திரும்பத் திரும்ப டேமேஜ் ஆகுதுப்பா. பேட்ச் வொர்க் பண்ணது போதும். நல்ல ரோடா போடணும்" என ஆரம்பிப்பாள்.
"காண்ட்ராக்ட்தான்மா. சொன்னா செய்வானுங்க."
"அவங்களே செய்யட்டும். ஆனா, திரும்ப பேட்ச் வொர்க் பண்ணாத மாதிரி செய்யணும். அதுக்கு என்ன பண்ணலாம்?"
"ரோடுனா யூஸ் ஆக ஆக டேமேஜ் ஆகத்தான் செய்யும், பாப்பா. சரி, நீ சொல்லு. என்ன பண்ணணும்?"
"ஒரு ரெண்டு வருஷத்துக்குத் தாங்குற மாதிரி போட முடியாதாப்பா? குறைஞ்சது ரெண்டு வருஷமாவது தாங்க முடியாத அளவுக்கா அதுக்குப் பயன்படுத்துற பொருளோட குவாலிட்டி இருக்கு?"
"அப்படித்தான விக்கிறவன் விக்கிறான்?"
"சட்டசபையில இத பேசுங்க. இதோ, இதுல ஒரு குறிப்பிட்ட ஸ்கொயர் ஃபீட் அளவுக்கு ஆரம்பிச்சு, முழு நீள ரோடு போடுறதுக்கான செலவு எவ்வளவுன்னு இருக்கு. இதைப் பேசுங்க. அந்த ரோடோட இன்னைக்குள்ள நிலைமை என்னன்னு பாருங்கப்பா. இதனால ஸ்கூல் பிள்ளைங்க சைக்கிள்ல போனாகூட விழுந்து விழுந்து எந்திரிக்கிறாங்கன்னு ஒரு அம்மா வந்து அழுறாங்க. எப்படி ஈசியா விட முடியும்? நீங்க இதைச் சொல்லி நிதி ஒதுக்கீடு வேணும்னு கேளுங்க. பொதுப்பணித் துறைக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் ப்ராப்பரா லெட்டர் எழுதியிருக்கேன். நீங்க போய்ப் பேசுனா மட்டும் போதும். நல்ல தரமான ரோடா போட்டுத் தரணும், நம்ம தொகுதின்னு தனியா தெரியணும்ப்பா" என நீட்டிவிட,
"அடியே புவனா! உன் மக எனக்கே எந்தப் பிரச்சினைக்கு எந்தத் துறையில பேசணும்னு பாடம் எடுக்காடி! என்னை அங்க என்னடி நினைப்பானுங்க?" என அவர் புவனேஸ்வரியிடம் கத்த,
"அதை ஏன் அப்படி நினைக்கிறீங்க? உங்களை வச்சு அவ படிக்கிறா. அப்பாவுக்குச் சொல்லிக் கொடுத்து அவ கத்துக்குறா. அப்பத்தான அடுத்து எம்.எல்.ஏ ஆனதும் அவளும் போய்ப் பேச முடியும்? சோ, அவ எழுதி கொடுத்ததை கரெக்டாப் பேசிட்டு வாங்க. நாளைக்கு அவ போட்டுக் கொடுத்த ரோட்டுலயே போய் நிமிர்ந்து நின்னு ஓட்டும் கேட்கலாம்" என்பார் புவனேஸ்வரி.
ஒவ்வொரு பிரச்சினையும் அப்படித்தான் பேசப்பட்டது. சில வேலைகள் எம்.எல்.ஏவின் கைச்செலவிலேயே சீராக்கப்பட்டன.
"ஊருக்குச் செய்யவா நான் இவ்வளவு சம்பாதிச்சு வச்சிருக்கேன்?" என அதற்கும் புவனாவிடம்தான் குதிப்பார் எம்.எல்.ஏ. ஆனால், செய்ய வைத்துவிடுவாள் யுகப்ரதா.
"நீங்க இன்னைக்கு செஞ்சாதான நாளைக்கு அவளுக்கு ஓட்டுப் போடுவாங்க."
"ஏன்டி, நான்லாம் இப்படி செஞ்சா ஓட்டு வாங்குனேன்?"
"உங்களுக்கு இருக்கிற அனுபவம் அவளுக்கு இல்லையேங்க?"
"அப்ப அவ என்கிட்டக் கேட்டு கத்துக்கணும்ல? மக்கள் நல்லது செஞ்சா புகழுவாங்க. அதுக்காக எல்லாத்துக்கும் கை காசை வாரி இறைச்சா நடுத்தெருவிலதான் நிக்கணும். நான் எதுக்கு இருக்கேன்? என் பேச்சைக் கேட்கலாம்ல?"
"அதைத்தானே செஞ்சுட்டு இருக்கா?" என்பார் புவனேஸ்வரி.
'நாம சரியாத்தானே பேசுறோம்?' எனக் குழம்பித்தான் போவார் பொண்ணுச்சாமி.
இவ்வாறு அங்குள்ள பல பிரச்சினைகள், அவள் அரசியலுக்குள் வந்த கடந்த இரண்டு வருடங்களில் நடந்தேறியிருந்தன. அதற்குள் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டதா என்பது போல நாட்கள் வேகமாகச் சென்றிருந்தன.
இதோ, இன்னும் ஆறு மாதங்களில் எலெக்ஷன் வர இருக்கிறது. யுகப்ரதா, தான்தான் ஜெயிப்போம் என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்தாள். மற்ற கட்சியினரும்கூட அவள்தான் ஜெயிப்பாள் என்பதில் உறுதியாகத்தான் இருந்தனர். ஆனால், அதேநேரம் எரிச்சலிலும் இருந்தனர். அதனால்தான் எவ்வகையிலாவது அவளை அச்சுறுத்தப் பல முயற்சிகளைச் செய்தனர். அவர்கள் கொடுத்த அத்தனை தடைகளையும் கடந்து, தன் தொகுதி மக்களுக்கு அவ்வளவு செய்திருந்தாள் அவள்.
அவள் நேரடியாக யாருக்கும் உத்தரவு பிறப்பிக்க மாட்டாள். அப்படிச் செய்தால் அதிகாரிகள் கேட்க மாட்டார்கள் என்பதும் அவளுக்குத் தெரியும். அவளுடைய செயல்கள் எல்லாமே பொதுச்சேவை செய்வது போலத்தான் வெளித்தோற்றத்தில் இருக்கும். ஆனால், மக்களுக்கான நல்ல அரசியலையே செய்தாள் அவள்.
"மகராசியைப் பெத்திருக்கீங்கய்யா! நீங்க நல்லா இருக்கணும். உங்களுக்குப் பிறகு உங்க மகதான்னு காண்பிச்சுட்டீங்க. என்னமா வளர்த்திருக்கீங்க பிள்ளையை!" எனப் பொண்ணுச்சாமியைப் பாராட்டுவதற்கென்றே தினமும் இருவர் வர ஆரம்பித்திருந்தனர். அதிலேயே அவருக்கு உச்சி குளிர்ந்துவிட்டிருந்தது. கை காசைப் போட்டதைக்கூட மறந்துவிட்டிருந்தார். மகள் கேட்பதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு செய்ய ஆரம்பித்தார்.
இதோ, எலெக்ஷனில் நிற்பதற்காக யுகா, தன் பெயரைப் பதிவு செய்துவிட்டு வந்தும் ஒரு மாதமாகிவிட்டது. இனி பிரச்சாரம் செய்யும் நாட்களைத்தான் எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.
அப்போதும் பிரச்சினைகள் தானாக வருவதையும், மற்ற கட்சியினர் மட்டுமல்லாமல் தன் கட்சியினரே அவளுக்கு எதிராகப் பிரச்சினைகளை உருவாக்குவதையும் தடுக்க முடியவில்லை அவளால். நின்று போராடத்தான் வேண்டியிருந்தது.
கடந்த மாதத்தில்கூட, பேருந்தில் பயணம் செய்யும்போது டிக்கெட்டுக்குச் சில்லறை கேட்டு நடத்துநரிடம் பிரச்சினை செய்து, ஓட்டுநரைத் தாக்கி, பேருந்தையும் மக்களையும் சேதப்படுத்தி, தங்கள் கட்சியின் பெயரையும், "நாங்க பொண்ணுச்சாமி எம்.எல்.ஏ ஆளுங்க தெரியும்ல? கை வச்சா அவ்வளவுதான்!" என வேண்டுமென்றே சொல்லிவிட்டு வந்திருந்தனர்.
'ஆளுங்கட்சியினரின் அராஜகப் போக்கு! தாதாக்களை உருவாக்கி வருகிறதா இந்த அரசு?' என்று சமூக வலைத்தளங்களும் செய்திச் சேனல்களும் அவளுடைய கட்சியின் பெயரைப் போட்டு பந்தாடிவிட்டன.
முதலமைச்சர் வரை அந்தப் பிரச்சினை சென்றிருந்தது. அன்று இவளை அவரே நேரில் வரவழைத்துப் பேசினார்.
அன்றொரு நாள் கட்சியில் சேரப்போகிறேன் என்றபோது கூறியதைத்தான் இன்றும் கொஞ்சம் மாற்றிக் கூறினார்.
"ரொம்ப நல்லவளா இருக்காதம்மா. மக்களுக்கே போரடிச்சுடும்."
"முடிவு பண்ணித்தானே சார் இறங்கியிருக்கேன்?" என்றாள் இவளும் பதற்றமின்றி.
"பரவாயில்ல. புதுசா ஆளுங்களையெல்லாம் சேர்த்துட்டு என்ன செய்யப்போறியோன்னு நினைச்சேன். இன்னும் ஜெயிக்கவே இல்ல ஆனா செயிச்ச மாதிரி காட்டிட்ட. எனக்கு இப்பவே தர்மபுரியில நம்ம கட்சிதான் நியூஸ் வந்துட்டே இருக்கு. கெட்டிக்காரிதான்!" எனப் பாராட்டவும் செய்தார்.
"ஜெயிச்சாலும் இப்படித்தான் சார் இருப்பேன்."
"அது உன் இஷ்டம்மா. உன் அரசியல் உன் இஷ்டம். கட்சிக்கு நல்ல பேருதான் முக்கியம். அதை நீ எப்படி வாங்கிக் கொடுத்தாலும் எனக்குச் சந்தோஷம்தான். எதிர்க்கட்சிக்காரனே, அந்தப் பொண்ணுதான் ஜெயிக்கும்னு பேசுறான்னா, கண்டிப்பா நீ கில்லாடிதான். உன் திறமையை நான் ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும். ஜெயிச்சுட்டு வா, பேசலாம்."
"கண்டிப்பா சார்."
"கவனமாவும் இருக்கணும். ஈசியா ஜெயிக்க விட்டுடவும் மாட்டாங்க. பொம்பளப் பிள்ளை நீ. ரொம்ப ரொம்பக் கவனமா இருக்கணும்."
"பாத்துக்குறேன் சார்" என்றுவிட்டு வந்திருந்தாள்.
வந்ததோடு அந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசி, சரிசெய்து, பொண்ணுச்சாமியின் வாயாலேயே,
"தண்ணியப் போட்டுட்டுக் கண்ணுமண்ணு தெரியாம எவனாவது உளறினா, தாராளமா உள்ளே தூக்கி வைங்க. அரசாங்க ஊழியர்களைத் தாக்கினதுக்கும், மக்கள் சொத்துல கையை வச்சதுக்குமான தண்டனையைக் கொடுங்க. கட்சியோ, நாங்களோ அதைத் தடுத்து நிறுத்த மாட்டோம். தப்புன்னா நானே பண்ணினாலும் தப்புத்தான்!" எனப் பேசிவிட வைத்திருந்தாள்.
அதற்குப் பின்னர்தான் அந்தப் பிரச்சினை கொஞ்சம் அடங்கியது. இதுபோல பல பிரச்சினைகளையும் இந்த இரண்டு ஆண்டுகளில் கடந்து வந்துவிட்டாள்.
இப்போது அரசியலில் எப்படியெல்லாம் பிரச்சினைகள் வரும் என்பதையும், அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் ஓரளவுக்குக் கற்றிருந்தாள் என்றுதான் கூறவேண்டும்.
அதைவிட, தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்றில்லாமல், "இத என்ன செய்யலாங்க? எப்படி பண்ணா சரியா வரும்?" என மௌனிதனிடம் கேட்பாள்.
"நீங்க அந்த இடத்துல இருந்து அந்தப் பிரச்சினையை எதிர்கொண்டா என்னவெல்லாம் செய்வீங்கன்னு சொல்லுங்க?" என மினி, செங்கமளத்திடமும் கேட்பாள்.
"இதுக்கு முன்னாடி இப்படி நடந்தப்ப என்னப்பா செஞ்சீங்க?" எனத் தன் தந்தையிடமும் கேட்பாள்.
அனைவரிடமும் கேட்டுத் தெரிந்துகொண்டவற்றைச் சேர்த்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவாள். அதையும் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வது வழக்கம்.
மொத்தத்தில், கட்சிக்கும் அவளுக்கும் இடையே அவளுடைய பிம்பங்களாக இருந்தவர்கள் அனைவருக்கும், பிரச்சினைகள் எந்த வழியில் வந்தாலும்—உள்ளிருந்தோ வெளியிலிருந்தோ—அவை அவளைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தெரியும்படியாகவே இருந்தன.
பிரச்சாரத்திற்கான நாட்களை எண்ணிக் காத்திருக்கத் தொடங்கினாள். அவளுக்கு அது ஒருவகையான உற்சாகமாகவும் இருந்தது.
தர்மபுரி கொஞ்சம் கொஞ்சமாகச் சுத்தமாகத் தொடங்கியது. முடிந்தவரை அனைத்துப் பிரச்சினைகளையும் விரைவாகச் சரிசெய்ய முயன்றாள் யுகப்ரதா. மக்களின் அத்தியாவசியத் தேவைகளில்தான் அவளுடைய முழுக் கவனமும் இருந்தது. அவற்றைச் சரிசெய்தாலே மற்ற பிரச்சினைகளைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என முதலில் அதிலிருந்துதான் தொடங்கினாள். பெண்களின் வரவேற்பையும் அதன் மூலம்தான் பெற்றாள்.
குடிநீர்ப் பிரச்சினைக்கு, ஒவ்வொரு கிராமத்திலும் தண்ணீர் விநியோகத்தை மாதந்தோறும் பொண்ணுச்சாமியுடன் நேரில் சென்று ஆய்வு செய்தாள். கலங்கலான நீருக்கு ஆய்வகப் பரிசோதனை செய்து, குழாய் உடைப்புகளையும் சுத்திகரிப்புக் குறைபாடுகளையும் சரிசெய்தாள்.
கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் இருந்த குறைபாடுகளைச் சரிசெய்யவும் நடவடிக்கை எடுத்தாள். கோடைக்காலத்திற்கான மாற்றுக் குடிநீர் ஏற்பாடுகளையும் செய்தாள்.
விவசாயத்தைப் பொறுத்தவரை, ஏரி, குளம், கால்வாய்களைத் தூர்வாரி நீர் சேமிப்பை அதிகரித்தாள். மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் சேமிப்புப் பணிகளை மேற்கொள்ளச் செய்தாள். மாம்பழம் உள்ளிட்ட விளைபொருட்களுக்குச் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன வசதிகள், பதப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்படுவதை ஊக்குவித்தாள். பயிர் இழப்பீடு, மானியம், பயிர்க்கடன் தொடர்பான மனுக்களுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுத்தாள்.
இதுபோல, வேலைவாய்ப்புக்கு முகாம்கள் நடத்துவது, சாலை வசதிக்காக நிதி ஒதுக்கீடு பெற்று புதிய சாலைகள் அமைப்பது, மருத்துவ வசதிகளில் கவனம் செலுத்துவது, தன் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது, அரசு நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்வது என அனைத்திலும் அவளுடைய கவனம் முழுமையாகச் சென்றது.
அவளும் அதிலிருந்து நிறையக் கற்றுக்கொண்டாள். எப்படியெல்லாம் பிரச்சினைகள் வரும், அவற்றை எப்படி எல்லாம் கையாள வேண்டும் என்பதையும் அனுபவத்தின் மூலம் கற்றாள். அப்பாவை முன்னிறுத்திப் பதவியில் இல்லாமலேயே கற்றுக்கொள்வது இன்னும் எளிதாக இருந்தது.
அவளுடைய பார்வை, தன் தொகுதியைத் தாண்டி ஒரு தெருவைக்கூட அதிகமாகச் செல்லவில்லை. அவளுடைய அப்பா பொண்ணுச்சாமி எம்.எல்.ஏவின் கீழ் வரும் பகுதிகள் மட்டுமே அவளுடைய இலக்காக இருந்தன. மற்ற தொகுதி மக்களும் அவளை நாட விரும்பினர். ஆனால், நாசுக்காக மறுத்துவிட்டாள்.
அதில் அவளால் செய்ய என்ன இருக்கிறது? அவளால் செய்யவும் முடியாதே!
இப்படித்தான் அவளுடைய அரசியல் பயணம் தொடர்ந்தது. நாட்கள் கடந்து, வருடங்களையும் கடந்திருந்தது.
───
"அக்கா!" என வந்து நின்றான் செங்கமளம்.
"அண்ணி!" என வந்து நின்றான் மினி.
"காலையிலேயேவாடா?" எனக் கேட்டபடி, ஒற்றையாகச் சாத்தியிருந்த கதவைத் திறந்தான் மௌனிதன்.
"மீட்டிங், அண்ணா" என மினி சொல்ல,
"முடியலடா. லொட்டு லொட்டுன்னு எந்நேரமும் அந்த ஃபோனோடவே திரியுற நீ!" என மௌனிதன் சொல்ல,
"சக்கரைக் குட்டன்!" என அவன் பின்னால் இருந்து வந்துவிட்டாள் யுகப்ரதா.
"அண்ணி! கிளறி ஆத்துல மெடிக்கல் வேஸ்ட்டைக் கொட்டிட்டாங்களே, அது சம்பந்தமா இன்னைக்கு அந்தச் சங்கரனைப் பார்க்கப் போறோம். போயிட்டு வந்து எனக்கு இங்க லோடு இறக்குற வேலை வேற இருக்கு. சீக்கிரம் வாங்க, போலாம்!" என்றான் மினி.
"அக்கா, தர்மபுரியில ரத்த தான முகாம் நடக்குது. நீங்கதான் ஸ்டார்ட் பண்ணி வைக்கணும். அதனால முதல்ல அங்கதான் போகணும்" என்றான் செங்கமளம்.
"இன்னைக்கு அதை ஃபிக்ஸ் பண்ணாதன்னு உன்ட்ட சொன்னேன்லடா?" என மினி செங்கமளத்திடம் சண்டைக்குச் செல்ல,
"டாக்டர்ஸ், ஹாஸ்பிட்டல், போலீஸ்காரங்கன்னு எல்லாருக்கும் ஒத்துவர்ற நாள்லதான அதை ஃபிக்ஸ் பண்ண முடியும்? நான் உங்ககிட்ட முன்னாடியே சொன்னேன்ல, மினி சார்? நீங்கதான் இன்னைக்கு முனிசிபல் ஆபீஸ் மீட்டிங்கை மாத்தி வச்சிருக்கணும். இப்ப வந்து என்கிட்டச் சொன்னா எப்படி? ஷெட்யூல் உங்களுக்குத் தெரியாமலா நடக்குது?"
"டேய், இது ஒரு வாரமா இழுத்தடிச்சுட்டு இருக்குடா. நீயும் பார்த்துட்டுத்தான இருக்க? வேணும்னே பண்றாங்கன்னு நேத்துக்கூட உன்கிட்டச் சொன்னேன்ல? எலெக்ஷன் முடியட்டும், அப்புறம் இருக்கு அவனுங்களுக்கு. இப்ப பிரச்சினையை முடிக்க அவங்களைப் போய்ப் பார்த்துத்தான் ஆகணும்."
"அங்க கேம்ப் ரெடியாகிட்டு இருக்கு, மினி சார். அதையும் நாமதான் பார்க்கணும்."
"உன்னைய மினி சாருன்னு கூப்பிடாதன்னு சொன்னேன்லடா?"
"அது அப்படியே பழகிடுச்சு, மினி சார். இப்ப அது முக்கியமா? கேம்புக்குப் போய் ஆரம்பிச்சு வச்சுட்டு, அங்கிருந்து அப்படியே முனிசிபல் ஆபீஸ் போங்க. அங்க மத்ததை நான் பார்த்துக்குறேன்."
"இன்னைக்கும் அந்த மனுஷன் கோச்சுக்கிட்டு போயிருவாரு. சொன்ன டைமுக்கு வரலன்னு நம்மளையே காரணம் சொல்லுவாரு. அப்புறம் அதை காரணம் காட்டி அவர்கிட்ட நீ சண்டைக்குப் போகணும். அதான உனக்கு வேணும்?" என மினி அவனை முறைக்க,
"மினி சார், வேணும்னே செய்றவங்ககிட்டக் கொஞ்சம் அப்படியும் இப்படியும்தான் சார் பேசணும். இல்லன்னா நம்மள ரொம்ப அலட்சியப்படுத்துவாங்க. நான் முதல் நாளே போயிருந்தா இந்நேரம் வேலை முடிஞ்சிருக்கும். என்னை வர வேண்டாம்னுட்டு ஒரு வாரமா நீங்கதான் அலைஞ்சுட்டு இருக்கீங்க. இப்பவும் கேம்புக்குப் போயிட்டு அங்க போவோம். நானும் வரேன். இன்னைக்கே வேலையை முடிச்சுடலாம்."
"ரௌடிப் பயலே! அடுத்த தடவை அரெஸ்ட் பண்ணி உள்ள கொண்டுவச்சா, ஜாமீன் எடுக்க வரவே மாட்டேன்டா. உன் அக்கா குறளி வித்தையைக் காட்டினாலும்கூட செய்ய மாட்டேன், பார்த்துக்கோ!"
"என் அக்காவுக்கு நீங்க ரொம்பப் பயப்படுறீங்க, மினி சார். அதுக்காகவே செய்வீங்கன்னு எனக்குத் தெரியும்" என்றான் செங்கமளம்.
"என்னடி இவனுங்க?" என வாசலில் நின்று சண்டையிட்ட இருவரையும் காட்டி மௌனிதன் யுகாவிடம் கேட்க,
"அவங்கள விடுங்க, இன்னைக்கு நான் போகவா வேண்டாமா? ரொம்பச் சலிப்பா கேட்டீங்களே?" என்றாள் யுகா அவனிடம்.
"பார்ரா! போகாதன்னா போகமாட்டியா?"
"கண்டிப்பா! உங்ககூட சுகர் ஃபேக்டரிக்கு வருவேன். மிட்டாய் சாப்பிடுவேன். ஜம்முன்னு ஒரு காபி குடிச்சுட்டு ஃபுல் ரெஸ்ட்ல இருந்துருவேன்."
"சின்ன வாண்டு ரெண்டையும் அங்க கூட்டிட்டுப் போய், அவங்க அங்க ஒதுங்க வைக்கிறதையெல்லாம் நான் எடுத்துவச்சுட்டு உட்கார்ந்திருக்கணும். ரைட்டா?" என முறைத்தான் மௌனிதன்.
"எல்லாத்துக்கும் சலிச்சா எப்படிங்க?"
"போரடிக்குதுடி. ஓடிட்டே இருக்க நீ!" என அவளருகில் வர, கண்ணை உருட்டி வாசலில் நின்றவர்களைக் காண்பித்தாள்.
பிள்ளைகள் பிறந்ததிலிருந்து, அவளுடைய அரசியல் பிரவேசம் தொடங்கியதிலிருந்து, இருவருக்கும் வீட்டிலும் நேரமிருப்பதில்லை; வெளியிலும் நேரமிருப்பதில்லை. அவனையும் பிஸியாகவே வைத்திருந்தாள் அவள்.
யுகாவின் அரசியல் நுழைவு, மினி, செங்கமளம் தொடங்கி அவளுடைய வீட்டினர், மௌனியின் வீட்டினர், எம்.எல்.ஏவான பொண்ணுச்சாமி, அவரின் கீழ் வரும் அதிகாரிகள், அலுவலர்கள் என அனைவரையும் பிஸியாக்கியிருந்தது. பிஸியாக்கிவிட்டிருந்தாள் யுகப்ரதா.
"இன்னைக்கு போயிட்டு மதியம் வந்துடுறேன். நாம ஒகேனக்கல் போயிட்டு வரலாம். டீல்?" என யுகா சொல்லவும்,
"ம்ம்... போலாம். ஒருமாதிரி ட்ரையா இருக்கு. இன்னும் டேட் அனௌன்ஸ் பண்ணிட்டா, அப்புறம் சுத்தமா உன்னையப் பிடிக்கவே முடியாது."
"அப்ப குட்டீஸை ரெண்டு நாள் அப்பாகிட்ட அனுப்பிட்டு நாம ஃபன் பண்ணிடுவோமா?" என அவனை நெருங்கிக் கேட்டாள்.