priya pandees
Moderator
அத்தியாயம் 27
அங்கு வரவேற்பரை சோஃபாவில் தான் மார்க் லேப்டாப்பில் வேலையாக இருந்தான். சற்றுமுன் தான் கிருஷ்ணா பள்ளி வாகனத்தில் வந்து இறங்கியிருந்தான். மனோவும் கண்ணனும் அவள் வண்டியில் வந்திறங்க, கிறங்கியபடி வந்தவள் வாசல் படியிலேயே சோர்ந்து அமர்ந்து விட,
"மனோ?" என்றான் லேப்டாப்பில் வேலை பார்த்தபடியே, கண்ணன் மட்டும் உள்ளே ஓடி வந்திருக்க, மீனம்மாவும், "என்ன மனோ அங்கனயே இருந்துட்ட?" என மார்க்கை கடந்து செல்கையில் தான், அவனும் திரும்பிப் பார்த்தான்.
"மாச குளிச்சிட்டியோ மனோ?" என மீனம்மா மெதுவாக வினவியபடி அவளருகில் அமர,
"என்ன மனோ ஓவர் டயர்டா?" என எழுந்து வந்திருந்தான் மார்க்கும்.
இருவரையும் திரும்பி பார்த்தவள், "மீனம்மா, பசங்கள பார்த்துக்கோ, நா அரைமணி நேரத்துல திரும்ப வரேன்" என எழுந்தவள், "வந்து வண்டிய எடுங்க" என மார்க்கிடம் ஸ்கூட்டி சாவியை நீட்ட,
"எங்கடி? ஸ்கூல்ல எதுவும் பிரச்சனை ஆகிடுச்சா?" என சாவியை வாங்கியபடி கேட்டை திறக்க,
"பிள்ளைக கீழ எதுவும் விழுந்துருச்சுங்களா மனோ?" என்றார் மனோ, சின்ன பிள்ளைகள் இருக்கும் இடத்தில் இதெல்லாம் அடிக்கடி நடப்பது தானே, பெற்றோர்களின் கேள்விக்கு தான் பதில் சொல்லுமுன் அயர்ந்து போகும். அந்த எண்ணத்தில் அவரும் கேட்க, "வந்து சொல்றேன் மீனம்மா" என மார்க்கின் பின் ஏறிவிட்டாள்.
அவளுக்கு இரண்டு பிரசவமும் பார்த்த மருத்துவரிடம் தான் அழைத்துச் சென்றாள். ஆஸ்பத்திரி என்றதும், புருவத்தை உயர்த்திவிட்டான் மார்கண்டேயன். மருத்துவமனைக்கு அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் டவுன் வரை வரவேண்டும்.
வந்திறங்கியதும், "இருக்கலாம்!" என்றாள் அவன் பார்வையில். இருவரையும் பார்த்ததும் கண்டுகொண்டார் அந்த மருத்துவர். மார்கண்டேயனை பார்த்து சிரிக்கவும் செய்ய, அவர் அறியாமல் மனோ இடுப்பில் முழங்கையால் இடித்தான் அவன்.
அவரிடம் கண்ணன் பிறந்தபோது குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துவிட சொல்லி மனோ சொல்ல, மார்க், "நா இங்கேயே இருக்கல தானடி? இருக்கட்டும் மெதுவா பண்ணிக்கலாம்" என மருத்துவர் முன்னயே சொல்லிவிட, சிரித்தபடி சென்றிருந்தார் அவர் அன்று. அது அவருக்கே இவனை கண்டதும் நினைவில் வந்துவிட்டது போலும்.
"வாங்க! குட் ந்யூஸ் தானே?" என்றே அழைக்க,
"இன்னும் செக் பண்ணல மேடம்" என்றாள் மனோ,
"சார் ஃபாரீன்ல இருந்து வந்துருக்காரே அப்ப கன்போர்ம்னு தான் அர்த்தம்" என்றார் அப்போதும்.
"நீ முன்னயே சொல்லிவச்சுட்டியா? கலாய்க்க ரெடியா உட்கார்ந்துருக்க மாதிரி இருக்கு?" என அவளிடம் சண்டைக்கு சென்றான் மார்க்.
"உங்க ஹிஸ்டரி அப்படி" என்றாள் அவள், இருவரும் அவர்களுக்குள் பேசியபடி அவர்முன் அமர,
"என்ன சார் எப்ப வந்தீங்க? அமெரிக்கா எப்படி இருக்கு?" என்றார் மருத்துவர்.
"என்னோட கார்ட்" என அவனது வெப் சொலுஷன் அடையாள அட்டையை எடுத்து நீட்டினான்.
"ஓ! குட் ப்ரைவேட்டா இங்கேயே ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா?" என அதை வாங்கி பார்த்தவர், உள்ளே வந்த செவிலியரிடம், "கிட் செக் பண்ண கூட்டிட்டு போங்க" என சொல்லி, மார்க்கை வெளியே காத்திருக்க சொல்லிவிட்டு, மனோவையும் போக சொல்ல, அவள் செவிலியருடன் எழுந்துச் சென்றுவிட்டாள்.
சென்ற பத்து நிமிடத்தில், மீண்டும் வந்தவள் வேகமாக வந்து அவனருகில் அமர்ந்து கொண்டாள்.
"என்னாச்சு?" என்றான் அவளின் வேகத்தில்.
"பிள்ளை தான், ஆனா பொம்பள பிள்ளையா இல்ல மறுபடியும் ஆம்பள பிள்ளையேவான்னு வெயிட் பண்ணி தான் தெரிஞ்சுக்கணும்" என்றாள் சாதரணமாக. அவளையே அவன் பார்த்திருக்க, "என்ன?" என்றாள் சிரிப்புடன்.
"உன் ஃபேஸ் ரியாக்ஷன் அப்சர்வ் பண்றேன். கிருஷ்ணா கண்ணா ரெண்டு பேருக்கும் வீடியோ கால்ல எவ்வளவு வெக்கப்பட்டுட்டு சொன்ன நீ. அந்த மனோவ எங்கடி?"
"அர்த்த ராத்திரில நீங்க செஞ்ச காம லீலைகள்ல அபீட்டாகிட்டு போல" என மறுபடியும் சிரிக்க,
"அடிப்பாவி!" என்றவன் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு முறைக்க,
"என்ன செய்றதெல்லாம் செஞ்சிட்டு முறைப்பு? மூணாவது பிள்ளைக்கும் வெக்கப்பட்டுட்டு நிக்றேன் நான்? இந்த டைமு ஆம்பள பிள்ளைனா என்ன பண்றதா ஐடியா?"
"அவ்வளவு தான். மூம்மூர்த்திகள் தான் நமக்குன்னு ஏத்துட்டு, அடுத்து ஹனிமூன் வித்தவுட் பெர்த்துன்னு போய்ட்டு போய்ட்டு வருவோம்"
"நல்ல முடிவு, இதுலயே ஃபிக்ஸாகுறீங்க. இனிலாம் பாடி தாங்காது எனக்கு"
"சரிடி!" என்றான் சிரிப்புடன்.
"என்ன சிரிப்பு? எதாவது அந்நேரம் மாத்தி பேசுங்க, ஆபரேஷன உங்களுக்கு பண்ண சொல்லிடுறேன் நானு"
"பண்ணிட்டு போறேன். உன் புருஷன என்ன நினைச்ச நீ? உனக்கு இது நார்மல் டெலிவரினா கண்டிப்பா ஆபரேஷன் நானே பண்ணிக்கிறேன்"
"சி செக்ஷன்னா?"
"அதுனா தனிதனியா பண்ண மாட்டாங்களாம், சேர்த்தே ஒரே ஆபரேஷனா பண்ணிடுவாங்களாம் நீ பண்ணிக்கோ"
"எப்ப விசாரிச்சீங்க?"
"இப்ப தான் நீ போய்ட்டு வருமுன்ன"
"ம்ம் பாப்போம் உங்க மக உங்களுக்கு சப்போர்ட் பண்றாளா இல்ல எனக்கு சப்போர்ட் பண்றாளான்னு" என அந்நேரம் சாதரணமாக சொல்லிய ஒன்று, பிரசவத்தின்போது நிஜமாகியிருந்தது.
அவன் மகள் அவளுக்கு குறித்து கொடுத்த தேதி தாண்டியும் வலிவந்து வெளிவரும் திட்டத்தில் இல்லாதவளாக, கம்மென்று உள்ளேயே இருந்துவிட்டாள். பிரசவ தேதி தாண்டிவிட்டதால் மருத்துவமனையில் அனுமதித்துவிட, பனிக்குடம் உடைந்து நீர் வெளியேற துவங்கிவிட்டது ஆனாலும் வலிவரவில்லை என்பதால் அறுவை சிகிச்சை தான் செய்யமுடியும் என்றுவிட்டனர். கிருஷ்ணா, கண்ணா இருவரும் சுகப்பிரசவத்தில் பிறந்திருக்க, மூன்றாவதாக வரும் மகள் அறுவைசிகிச்சையில் தான் வெளிவந்தாள்.
பிள்ளையை பார்க்க வந்த லதா, மார்கண்டேயனிடம் கெஞ்சவே செய்தாள், அதுவரையுமே இவனும் பேசவில்லை சுரேந்தரும் அவளை சேர்த்துகொள்ளவில்லை. சாம்பவியும் இவளை இப்போதெல்லாம் திட்ட துவங்கியிருக்க, எதுவும் செய்யமுடியாத நிலையில் இருந்தாள். பழூரில் சூப்பர் மார்க்கெட்டில், ஜவுளிக்கடையில், எஸ்டேட்டில் சூப்பர்வைஷராக இருக்கும் வேலை எல்லாம் கிடைத்தது, இரண்டு மாதம் போவாள் அங்கு அவளுக்கு ஒத்துவராது, நின்றுகொள்வாள் அல்லது அவர்களே நிறுத்திவிடுவார்கள். வேலையில் கவனமில்லாமல் இருந்தே நிலைத்து நிற்கமுடியாமல் போனது அவளுக்கு. ஆனால் கணவனும், அம்மாவும், தம்பியும் அவர்களாகவே இறங்கி வருவர் என நினைத்தே காத்திருந்தாள், அது வருடங்கள் கடந்தும் நடக்கவில்லை. இவள் சுரேந்தர் அனுப்பிய விவாகரத்துக்கும் பதில் அளிக்காததால், அவர்களே அவனுக்கு விடுதலை அளித்துவிடுவோம் என கூறிவிட, இப்போது செய்வதறியாமல் நின்றாள். பிள்ளைகள் கூட அவள் இல்லாமையை பழகியிருந்தனர் என்பது பெரிய இழப்பு தான் அவளுக்கு.
"உன் அத்தான்ட்ட சொல்லி என்னைய சேர்த்துக்க சொல்லுடா. இனி நா அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்குறேன். இதமட்டும் எனக்காக செய்டா பீளீஸ்" என வந்த இடத்தில் மருத்துவமனையில் வைத்தே கேட்க,
"நா எப்படி பேசமுடியும்? இது புருஷன் பொண்டாட்டி சண்டை நீங்க தான் சரி பண்ணிக்கணும்" என்றவனை விழிவிரித்து பார்த்தாள் லதா.
"போய் பேசி சரி பண்ணிக்கோ" என முடித்துவிட்டான். கிளம்பிவிட்டாள் லதா சென்னை நோக்கி. நான்கு அடி வாங்கி கொண்டுனாலும் அவனுடன் இருந்துவிடுவது தான் இனி மரியாதை என்ற முடிவிற்கே வந்திருந்தாள். இப்போதும் அவள் குணம் முழுமையாக மாறிவிட்டதா என்றெல்லாம் முடிவிற்கு வருவதற்கில்லை. மறுபடியும் எப்போது வேண்டுமானாலும் அவள் குணம் தலையை தூக்கி கொண்டு வெளியே வரத்தான் செய்யும். ஆதரிக்க ஆளில்லாததால் கொஞ்சம் அடங்கி இருப்பாள் என்ற நம்பிக்கை மட்டுமே அனைவருக்கும்.
லதாவிடம் பேசமாட்டேன் என்றாலும் சுரேந்தரிடமும் பேசிவிட்டான், "நா பாத்துக்குறேன்" என்ற சுரேந்தர், அதன்பின், லதாவை கைக்குள் வைத்து இறுக்கிதான் பிடித்தான். பிள்ளைகளிடம் தான் முறுக்கி கொண்டு திரிந்தாள், அவர்களும் அவள் விலகி இருந்தபோது விலகி இருந்தனர் மீண்டும் வரவும் இயல்பாகவே அம்மா என்று அரவணைத்துக்கொண்டனர்.
மூன்று வருடங்கள் பள்ளி விழா, மனோவின் பிரசவம், லதா சுரேந்தரின் பிரச்சனை தீர்வு என்றே கடந்து சென்றிருந்தது.
மறுவருடத்தில் முதலில் ஒரு ஹியரிங் முடிந்து அடுத்த ஹியரிங் ஐந்து மாதங்கள் கழித்து என்றானது. அதுவும் பிள்ளை பிறந்து மூன்று மாதத்தில் இருக்க, அதற்கு மார்க்கின் மாமா குடும்பம் வரவில்லை, அடுத்தது அடுத்த ஐந்து மாதத்தில் என்றாகியிருக்க, இவர்களுக்கும் வேலை, பள்ளி, மூன்று பிள்ளைகள், மீனம்மா, வள்ளுவன் என ஓடிய வேகம் தெரியவில்லை. மனோ, மார்க்கின் நாட்கள் அவ்வளவு அழகாக ஓடிக்கொண்டிருந்தது.
மகளுக்கு, 'சுபத்ரா' என பெயரிட்டனர், ஆண்டாள் மகன் பிள்ளையை பார்க்கவும் இங்கு மகள் பிள்ளையை பார்க்கவும் என ரோந்தில் தான் இருந்தார். அவருடன் ஞானமும் இழுபட்டார். அப்படி அவர் இங்கு வரும் சமயங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சண்முகசுந்தரமும் சுபத்ராவை கொஞ்ச வந்துவிடுவார்.
அங்கு பள்ளியில், அந்த லைவ் கேமரா என்று சொன்னதும் வேலை வேண்டாம் என கிளம்பிய ஆசிரியர்களும் உண்டு. "எல்லோரும் சேர்ந்து பேசலாம், இப்படி யாரோ நம்மள பார்த்துட்டே இருந்தா எப்படி க்ளாஸ் எடுக்க முடியும்?" என போர்கொடி தூக்கியவர்களும் உண்டு.
"கொரானா நேரத்துல ஆன்லைன்ல எடுத்த டீச்சர்ஸ் இங்கையும் இருக்கீங்க தானே? எனக்கு இஷ்யூ இல்ல, நா வேற ஸ்டாஃப்ஸ் எடுத்துக்குவேன், உங்க வேலை உங்க இஷ்டம் தான்" என்று முடித்துவிட்டாள் மனோ.
தமயந்தி, "உனக்கு கீழலாம் வேலை செய்ய முடியாது" என மகளையும் அழைத்துக்கொண்டு அன்று சென்றிருந்தவர். இந்த இரண்டு வருடத்தில், பள்ளியின் வளர்ச்சியை கண்டுவிட்டு மறுபடியும் இங்கேயே வர முயன்றுகொண்டிருக்கிறார்.
உண்மையில் சன்ரைஸ் பள்ளிக்கு அதிக வரவேற்பு, சுற்றி உள்ள கிராமங்களில் எல்லாம் தானாக கொண்டு சேர்க்க துவங்கி இருந்தனர். பள்ளியின் சேர்க்கை அளவு அரசாங்கம் கொடுத்த அளவீட்டை தாண்டி தான் சென்றது, ஓரிரு சீட் ஒதுக்கித்தான் கொடுத்தனர். அதற்கும் மேல் என்றாலும் வகுப்பு பாத்தாது என்ற நிலையில் வந்து நிற்கிறது. பள்ளியை விரிவாக்க லோன் எடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்கின்றனர் மார்க், மனோ இருவரும்.
இதனாலேயே மாமாவின் குடும்பம் மீது கவனம் இல்லாதிருந்தது. அடுத்த ஹியரிங்கிற்கும் அவர் வராத நிலையில் தான் விசாரிக்கவே செய்தான் மார்க். கிஷோர் அவன் மாமனார் குடும்பத்துடன் சென்றிருக்க, இவர்கள் மருத்துவமனை வீடு என தான் முதலில் அழைந்து கொண்டிருந்திருக்கின்றனர். பின் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்தாகவேண்டிய நிலை என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவிட்டார் மார்க்கின் மாமா.
இவனுக்கு தெரிந்தும், சண்டையால் இந்தபக்கம் வராமல் இருக்கிறான் என ஊரில் எல்லாரும் நினைத்துவிட, அவன் அப்பாவிற்கு தெரிந்தும் அவரும் சொல்லாமல் இருந்துவிட்டார். அவன் கேட்டிருந்தால் சொல்லியிருப்பார், கடைசியாக வந்த இரண்டு வாய்தாவின் போதும், அவனாக விசாரிக்காததால் அவரும் சொல்லாமல் இருந்துகொண்டார். அவனுக்கு தேவையில்லை தானே என்ற எண்ணமும் சொல்லவிடவில்லை.
"நீங்க போய் பாத்தீங்களாப்பா? நா இப்படி இருக்கும்னே நினைக்கல. வேணும்னே வராம இருக்காருன்னு நினைச்சேன்" என்றான் விஷயம் தெரிந்ததும்.
"போய் பாக்கல மாரா. ஆனா கிட்னி ரெண்டும் போச்சு போல. ஒன்னாவது இப்ப ஆபரேஷன்ல மாத்தியாகணும்னு சொல்லிட்டாங்களாம். ஆர்கன் கிடைக்க தான் வெயிட் பண்றாங்க போல, ஊருக்குள்ள பேசிக்கிறத வச்சு தான் தெரியும்" என்றார் அவர்.
"நானும் கிடைக்குமான்னு விசாரிச்சு பாக்றேன்" என வைத்தவன், சென்னை வரை அவன் தொடர்பில் இருப்பவர்களிடம் விசாரித்து ஒரு டோனரை எப்படியோ பிடித்துவிட்டான்.
கிஷோருக்கும் அவ்வளவு பழக்கவழக்கமில்லை, அவன் மாமனாருக்கும் அந்த சுற்றுவட்டாரம் தவிர்த்து வெளிபழக்கம் இல்லை. அவர் மருமகனும் விசாரிக்கிறேன் என்றதோடு நிற்க. கடைசியில் மார்கண்டேயன் மூலம் தான் அது நடந்திருந்தது.
"சீக்கிரம் ஆபரேஷன முடிச்சுட்டு வந்து கேஸ வாபஸ் வாங்குற நீ. மறுபடியும் வீம்பு பண்ண, ஒரே கிட்னி தான இருக்கும் அதையும் உருவிட்டு விட்ருவேன். சீக்கிரம்" என்றவன் அத்தோடு ஒதுங்கியும் கொண்டான். அவரிடம் தான் பணம் இருக்கிறது, சொத்திருக்கிறதே அதை மொத்தமாக வைத்து தான் மருத்துவ செலவை பார்த்துக்கொண்டார். இப்போதும் அந்த இடத்தை வைத்தாவது கடைசி காலத்தை கழிக்கலாம் என்றால், சொந்த பிள்ளைகள் செய்யாததை அவன் செய்திருக்க, அவனிடம் முகத்தை காட்ட முடியவில்லை. அவன் மனைவியே அவரை நச்சரித்துகொண்டிருக்க, அடுத்த வாய்தாவில் அவரே, தப்பை ஒப்புகொண்டு மன்னிப்பை வேண்டிவிட, அவர் உடல்நிலை காரணமாக அபராத தொகையோடு வழக்கை முடித்தது நீதிமன்றம்.
அவர்களிடம் நின்று பேசகூட முயலவில்லை, கிளம்பிவிட்டான் மார்கண்டேயன்.
வெளிநாட்டில் குடும்ப வறுமைக்காக சென்று கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு மத்தியில் மார்கண்டேயனை போல் சுயவிருப்பத்திற்காகவும் தனிமை வேண்டியும், சுதந்திர வாழ்க்கைகாகவும், அதீத பணத்தாசையிலும், இங்கு அவர்களுக்கு தாரளமான வாழ்வாதாரம் இருந்தும் அங்கு சென்றிருப்பர். அவர்களுக்கு குடும்பம், பொண்டாட்டி, பிள்ளைகள் பற்றி பெரிதாக கவலை அக்கறை இருக்காது, அறுபது வயதில் வந்து நின்று பெரிய தியாகியாக பேசுவதில் வல்லவர்கள். அப்போது தான் பொண்டாட்டியின் பணிவிடையும் தேவையாக இருக்கும். ஆனால் அதுவரை பிள்ளைகளுக்காக மட்டுமே ஓடிக்கொண்டிருந்த அந்த பெண்ணின் மனநிலை யாருமே அறியபடாததாக அழிந்து மக்கி போயிருக்கும்.
மனோ அப்படி போய்விடாமல் அவள் வாழ்க்கையை மீட்டுக்கொண்டாள். அதற்கு மார்கண்டேயன் அவள்மீது வைத்திருந்த உண்மையான பாசமும் ஒரு காரணம். அவனுக்கு நேர்ந்த மிகப்பெரிய ஏமாற்றமும் மற்றொரு காரணம். தக்க சமயத்தில் சுதாரித்துவிட்டதால் அவர்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்கிக் கொண்டனர், இல்லையானால் தொலைந்ததை மறுபிறவி எடுத்தாலும் மீட்டெடுக்க முடியாது.
ஏமாற்றுபவர்களுக்கான தண்டனை என்றானாலும் நிச்சயம் கிடைக்கும், நம் கண் முன்னேயே அவர்கள் மடிந்து சரிவதை பார்க்க வைத்துவிடுவார் கடவுள். சிறுவிஷயமாகினும் நம்மளை நம்பும் ஒருவரை ஏமாற்றும் முன் ஒருநிமிடம் யோசித்துவிடுங்கள், இல்லையேல் பலமடங்காக வருத்தபட வேண்டிய சூழல் அமைந்துவிடும். அது அம்மா, மகன்/மகள் மீது வைக்கும் நம்பிக்கையாக இருக்கலாம். மனைவி, கணவன் மீதோ கணவன், மனைவி மீதோ வைக்கும் நம்பிக்கையாக இருக்கலாம். ஆசிரியர் தன் மாணவர்கள் மீது வைக்கும் நம்பிக்கையாக இருக்கலாம், மாணவர்கள் தங்கள் ஆசிரியர் மீது வைக்கும் நம்பிக்கையாக இருக்கலாம். அது ஏமாற்றப்படும்போது சம்பந்தப்பட்டவருக்கு அதிகமாக வலிக்கும், அப்படி ஒருவர் அனுபவிக்கும் வலி பலமடங்காக வலியை எதிராலிக்கு திருப்பித் தரும்.
மார்கண்டையன் அவன் மனைவியை ஏமாற்றவில்லை, அலட்சியம் தான் செய்தான் அதற்கே அவனுக்கு அவ்வளவு பெரிய ஏமாற்றத்தை கடக்க வேண்டிவந்தது. அவன் அக்கா மனோவிற்கு செய்ததை சிறுதும் குறைவின்றி தானும் அனுபவித்துவிட்டாள். அவன் மாமாவும் மொத்தமாக இழந்து அவன் உதவியை வாங்கிவிட்டு நிற்கிறார்.
மனோ அவள் வாழ்க்கையை அவளே செம்மைபடுத்திக் கொண்டாள். மார்க்கண்டேயனை தானாக வரவழைத்து, அவன் வந்தபோது விதண்டாவாதம் பண்ணாமல் இறுக்கிபிடித்துக்கொண்டாள். எங்கும் அவனை விட்டும் கொடுக்கவில்லை, தூக்கியும் பிடிக்கவில்லை. ஆதரவாக மட்டும் நின்றுகொண்டாள். அதுவே அவளிடம் அவனை இறங்கிவர வைத்ததும், தழைந்து போக வைத்ததும்.
இடத்தை முழுமையாக மார்க் பெயரில் மாற்றிய கையோடு கொண்டு மனோவிடம் நீட்டவிட்டான் அவன், மறுவாரத்தில் மொத்த குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாள் திருச்செந்தூருக்கு.
மூன்று மொட்டை!
கிருஷ்ணனுக்கு, கண்ணனுக்கு, மார்கண்டேயனுக்கு என மூவருக்கும் மொட்டை அடித்து, கடலில் மூழ்கி எழுந்து, நாழிகிணறிலும் குளித்துவிட்டு, பெரிய பட்டையுடன் முருகனை மனதார தரிசித்து, நன்றிகூறிவிட்டு, அங்கேயே ஏழு ஆண்டிகளுக்கு அன்னதானம் வழங்கிவிட்டு, ஊர் திரும்பினர். வீட்டிலும் அனைவருக்கும் மறுநாள் சிறப்பு விருந்து ஏற்பாடாகியிருந்தது.
வந்த அலுப்பில் அனைவரும் உறங்கியிருக்க, ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்து, அதற்கான நேத்திகடனையும் செலுத்திவிட்ட நிம்மதியில் விழித்தபடி வாசல் படியில் காலை நீட்டி அமர்ந்திருந்தாள் மனோரஞ்சிதம்.
"எத்தன நாள் ஆசைடி என்னைய இப்படி மொட்ட மண்டையா பாக்கணும்னு?" என அவளருகில் அவளை இடித்தபடி வந்தமர்ந்தான் மார்க்.
"உங்க பொண்ண தூங்க வச்சாச்சா?" என்றாள் அவள்.
தோளில் போட்டு இந்தபக்கமும் அந்தபக்கமும் நடந்து தட்டிகொடுத்து, ஆட்டிகொடுத்து என ஒருவழியாக தூங்க வைத்து வந்திருந்தான். அவள் பிறந்ததிலிருந்து அவன் தான் இரவு விழித்து பார்த்துகொள்கிறான். அவளும் இவள் பாலை கொடுத்தாலும் கொட்டாவி வந்தாலும் கண்ணை தேய்த்தாலும் அவன் தூக்கிய பின் அவன் தோளில் தான் தூங்குவாள். இதை பழக்கியது அவன் தான். அதனால் இப்போதுவரை தூக்கி நடப்பதும் அவன்தான்.
நிலா வெளிச்சத்தில் பிரகாசமான முகத்துடன் அமர்ந்திருந்த மனைவி அவனை வெகுவாக ஈர்த்தாள். அவ்வளவு தெளிவு, நிறைவான சந்தோசம் அவள் முகத்தில்.
"என்ன பார்வைலாம் பலமா இருக்கு?" என திரும்பி பார்க்க,
"சரி பாக்கல, பாப்பா தூங்கிட்டா நீ சொல்லு" என அவள் முகம் பார்க்க,
"பசங்களோட எந்த மொட்டைக்காவது வந்து நின்றிருக்கீங்களா நீங்க? அட்லீஸ்ட் முதல் மொட்டை, காது குத்துன்னு எதுக்காவது?" என அவள் நிதானமாக கேட்க,
படக்கென்று சுதாரித்தவன், "இப்ப எதுக்கு அங்க போற நீ?" என்க,
"அதெல்லாம் நானா அப்பாவ மட்டும் கூட்டிட்டு போய் போட்டு வருவேன் தெரியுமா? ரொம்ப கஷ்டமா இருக்கும், காது குத்து பங்க்ஷன்லா எல்லாரும் அவ்வளவு பெருசா எடுத்து நடத்துவாங்க, நம்ம பிள்ளைங்களுக்கு அப்படி எதுவும் செஞ்சதில்ல. அழுவாங்க கைய கால உதறும்போது பிடிக்க கூட ஆளிருக்காது. நீங்க வராம யாரையும் கூப்பிட பிடிக்காம, நாங்களா போய் ரொம்ப சிரமப்பட்டு தான் போட்டு வருவோம்"
"அதனால வந்தா இவன புடிச்சு உக்கார வச்சு ஒரு மொட்டைய போட்ரணும்னு ப்ளான் பண்ணியோ?" என பேச்சை மாற்றினான்.
"ம்ம்!" என சிரிக்க,
"கொழுப்புடி உனக்கு?" என அதட்ட,
"வேண்டுதல் கிண்டல் பண்ண கூடாது" என்றாள் மனோ.
"மாஸ்டர் ப்ளான்னு சொல்லு. வேண்டுதலாம்ல"
"ரெண்டும் தான்"
"சரிவிடு நீ ஹேப்பியா இருக்கல்ல இப்ப? மொட்ட போடுற குறையும் தீர்ந்தாச்சுல்ல அதுபோதும்" என்க,