எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா - 20

subasini

Moderator
மனம் - 20

தன் திருமணம் நடக்கும் என்பதே நினைத்துப் பார்க்காத தாரிகா இன்று தன் காதல் கணவன் கையணைப்பில் என்பதே அவளுக்கு இந்த உலகத்தை வென்று விட்டோம் என்ற திருப்தியைத் தந்தது.

கையில் பால் சொம்புடன் தன் அறையில் வந்த தாரிகாவைக் கண்டு சிலையன நின்றான் சதீஷ்.

எளிமையான அவளுடைய அலங்காரமே அவள் அழகை இரட்டிப்பாகக் காட்டியது.

அவள் அருகில் வந்தவன்... கையில் இருக்கும் பால் சொம்பை வாங்கி அருகில் இருக்கும் மேசையில் வைத்து, அவளைத் தன் படுக்கையில் அமர வைத்தான்.

பின் மெல்ல அவள் கைகளைப் பிடித்து அவள் கண்களைப் பார்த்து "சாரி, தாரிகா" என்றான் சதீஷ்.

“விபத்து நடந்தது என் கவனக்குறைவால் தான், தவறு என் மேல் தான், அதனால் நீ எவ்வளவு கஷ்டங்களைக் கடந்து வந்திருக்கிறாய் என்பது நன்றாகவே தெரிகிறது” என்றான்.

அவனுக்கு எதுவும் மறக்கவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியானது தாரிகாவிற்கு.

“என்ன தாரிகா… என்ன ஆச்சு ஏன் இப்படிப் பாக்குற” என்று கேட்டான். அவளிடம்
அப்பொழுது “உங்களுக்கு எல்லாம் மறந்திருச்சு நான் நினைச்சேன்”…

“எல்லாம் மறந்தது தான் ஆனால் வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் அண்ணன் என்னுடைய காதலைப் பற்றி எல்லாம் விசாரிக்கத் தொடங்கிய பின்னே நம்மிடையே நடந்த எல்லாமே எனக்கு நினைவுக்கு வந்துருச்சு”… என்றான் சதீஷ்.

“ நினைவு வந்ததை நான் யாரிடமும் சொல்லவில்லை… உன்னிடம் தான் முதன் முதலில் சொல்ல வேண்டும்”… என்று கூறினான் சதீஷ்.
அதைக் கேட்டதும் கணவன் தன்னிடம் மட்டுமே எல்லாம் பகிருகிறான் என்பதில் சந்தோஷப்படுவதா! இல்லை யாரிடமும் கூறாமல் இருப்பதனால் பல கஷ்டங்களை எதிர்க்கொண்டதற்கு வேதனைபடுவதா! ஏன் தங்களுடைய குழந்தை என்பதைப் பற்றி ஏன் கேட்கவில்லை என்று சிந்தித்தாள் தாரிகாவிற்கு.

“உங்களுக்கு என்ன எல்லாம் நினைவு வந்திருக்கு”… என்று கேட்டாள் தாரிகா.

அவன் அதைப் பற்றி எதுவுமே கூறவில்லை. “இன்றைக்குத் திருமணமான முதல் நாள் இரவு... பழையதெல்லாம் பேச வேண்டுமா” என்று அவளை மையலாகப் பார்த்துக் கேட்டான் சதீஷ்.

என்ன கூறுவாள்? அவளும் காத்திருந்த இரவு தானே. ஆனால் மனமோ எதிலும் லையிக்காமல் இருந்தது.

அவள் முகத்தில் ஓடும் சிந்தனையைப் பார்த்தவன் மெல்ல அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி “சரி சரி ரொம்ப எல்லாம் யோசிக்காதே இந்த வாழ்க்கை நம்மளுடையது உன்னிடம் சொல்லாமல் யாரிடம் பகிர்வேன்” என்றவன்… அவளைத் தன் கைவளைவிலேயே வைத்துக் கொண்டு அவளிடம் தன் மனதில் இருக்கும் எல்லாம் பகிரலானான்.


“எங்க அண்ணா நம்முடைய காதலைப் பற்றிக் கேட்டதுமே, எனக்கு எல்லாமே நினைவு வந்து விட்டது தாரிகா, ஆனால் கல்யாணம் முடிந்ததுக்கப்புறம் சொல்லலாம் என்று நினைத்தேன். அதேபோல் உன் வீட்டில் என்ன நடந்திருக்கிறது உன் நிலைமை என்ன என்பதும் எனக்கு அறிய வேண்டியதாக இருந்தது, யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை, விபத்தின் காரணமாக என் போன் காணாமல் போய்விட்டது. அதனால் என்னுடைய பழைய நம்பர்க் கிடைக்கவில்லை, உன்னுடைய போன் நம்பரும் எனக்கு மறந்து விட்டது. என்ன செய்வது என்று தெரியவும் இல்லை, அதனால் அமைதியாக இருந்தேன். எப்படியும் உன்னைத் திருமணம் செய்தப் பின், எல்லாம் தெரிந்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தேன்” என்றான் சதீஷ்.


“ஆனால் அதுக்குள்ள எங்க அண்ணே உங்க அக்காவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவங்க இரண்டு பேருக்கும் நடந்தது நீயும் பார்த்தாய்தானே, அதுல எனக்குப் பயம் தான் வந்துச்சு, எங்க அம்மாவும் உங்க அம்மாவும் இந்த அளவுக்கு ரியாக்ட் ஆகுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை…

குடும்பத்தையே பாக்குறவன் தான் எங்க அண்ணன் …
எங்க அண்ணன் இல்லைனா நாங்க இல்லை , இந்தக் கம்பெனி இந்த வசதி வாய்ப்பு எதுவுமே கிடையாது. எங்க அண்ணன் தான் எல்லாமே உருவாக்கி வச்சிருக்கான்.
அவனுக்கே இந்த நிலைமை அப்படி என்றதுமே நான் பயந்துட்டேன். எனக்கான எதுவுமே என்னிடமில்லை… இனி மேல்தான் ஸ்க்ராட்சில் இருந்து எல்லாமே நான் தொடங்கணும். கொஞ்சம் சுயநலமாக யோசிச்சிட்டேன், அதனால் நான் எதையுமே கேட்டவில்லை ”
என்றான் சதீஷ்.

“ நம்மளுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களைக் கடந்து வந்துருச்சு. இனி வரும் வாழ்க்கையாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் நானும் மௌனமாகவே கடந்து வந்துட்டேன்” என்று சதீஷிடம் தன் மனதில் இருப்பதைக் கூறினாள் தாரிகா.

அப்பொழுதும் அவனும் சரி, அவளும் சரி அமரனைப் பற்றிப் பேசவில்லை.
தங்களைப் பற்றிச் சுயநலமாகவே சிந்தித்தனர். ஆனால் ஒன்றை மட்டும் மறந்து விட்டனர் அவர்கள் கையில் இருப்பது தங்கள் பெற்றெடுத்த பிள்ளை என்பதை அவள் மறந்து விட்டாள் தாரிகா.

எதுவாக இருந்தபோதும் நம் செயல்களுக்கான எல்லாப் பதிலும் காலத்தின் கைகளில் இருக்கும். வரும் காலங்களில் அதன் பதிலை இவர்கள் நேரிடும் போது அதைத் தாங்கிக் கொள்ளும் மனபக்குவம் அந்நேரம் இவர்களுக்கு இருக்குமா, என்பது வரும் காலங்களில் நாம் பார்ப்போம்.


தன் கணவனின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை அவளுக்குப் புரிந்தது. அவன் கூறுவது தான் சரி என்றும் நம்பினாள். அதனால் தங்கள் பிள்ளையைத் தாராவிடம் வளர்வதைச் சரி என்று நினைத்தாள் தாரிகா.

இனிய வரும் காலங்களில் தங்களுக்குப் பிறக்கும் குழந்தையே தங்களுடைய குழந்தையாக இருக்கட்டும் என்று நினைத்தாள். விதி யாரை விட்டது.

பழைய நினைவுகளையும் கதைகளையும் பேசி முடித்த பின்னர் அவர்களுக்கே உரிய நேரமும் வந்தது. மெல்ல அவளைக் காதலோடு பார்த்தான்.

“நம்முடைய காதல் எவ்வளவு சிறந்தது என்று உனக்குப் புரியுதா… நான் என்ன நினைக்கிறேனோ அதைத்தான் நீயும் நினைக்கிற… நான் என்ன செய்யணும்னு யோசிக்கணும் அதையேதான் நீ யோசிக்கிற… நமக்குள்ள நல்ல புரிதல் இருக்கு” என்றான் சதீஷ்.

அது புரிதல் இல்லை தங்களின் சுயநலமான சிந்தனை என்பது அங்கே அவர்கள் தங்கள் காதலுக்கானக் கௌரவமாக நினைத்தனர்.

மெல்ல அவளை அனைத்தவன் அவர்களுக்கான காதலில் திழைக்க ஆரம்பித்தனர். அவளை ஆசைத் தீரக் காதலித்துக் கொண்டாடித் தீர்த்தான் சதீஷ். இனி வரும் காலங்கள் எல்லாம் இந்தக் காதலோடும் இந்தப் புரிதலோடும் அழகாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு அவனுள் கலந்தாள் தாரிகா.

அவள் மனதில் மட்டும் ஆழமாகப் பதிந்த ஒரு விஷயம் வேகமாக ஒரு குழந்தைக்குத் தாயாவது மட்டுமே. அவள் கணவனிடம் கூடப் பகிர முடியாமல் தன் அந்தரங்கத்திலேயே வைத்திருந்தாள்.

அமரனைக் காணும் போதெல்லாம் தாராவின் தாய்மையும் அவளைப் பொறாமை கொள்ள வைத்திருந்தது என்பதுதான் உண்மை. ஆனால் அவனை அதைத் தன் பிள்ளையாக அடையாளப்படுத்த அவள் விரும்பவில்லை. வீணாகத் தன் வீட்டிலும், புகுந்த வீட்டிலும் தனக்கான நன்மதிப்பு எங்கே கெட்டுவிடுமோ என்ற பயமே அவளைத் தடுத்தது. அதனால் ஒரு குழந்தைக்குத் தாயாகி அந்த ஆனந்தத்தையும் அனுபவிக்க நினைத்தாள் தாரிகா.

எனவே வேகமாக ஒரு குழந்தைக்குத் தாயாவது மட்டுமே தன் முழு நேர லட்சியமாக மனதில் பதிய வைத்திருந்தாள்.
தங்கத்தின் வீட்டிலும் மகேந்திரனுக்கும் நளினிக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது முதலிரவு அறையில் நளினிக்காகக் காத்திருந்தான் மகேந்திரன்.

அவர்கள் வாழ்க்கை மட்டுமே தெளிந்த நீரோடியாகப் பயணித்துக் கொண்டிருந்தது.

ஆசை ஆசையாகக் காதலித்த கல்யாணம் செய்து, கணவனை முதன் முதலில் தனிமையாகக் காண, கையில் பால் சொம்புபோடு சென்றாள் நளினி.

அவளுக்கு மகேந்திரனை எவ்வளவு பிடிக்கும் என்பதற்கான கேள்விக்குப் பதில் இல்லை அந்த அளவுக்கு அவனை அவளுக்குப் பிடிக்கும் அதற்குக் காரணம் அவன் அன்பும் பாசமும் அக்கறையும் தெளிவானச் சிந்தனை மட்டுமே.

அவர்கள் வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் அவள் என்றுமே தாராவுக்கு உறுதுணையாக இருப்பாள் என்பது மட்டுமே அவள் மனதில் இருந்தது.

தன் கணவனைக் காதலோடு பார்த்தாள் நளினி. அவளைத் தன் அருகில் அமர்த்திக் கொண்டு தன் காதலைக் கூறினான் மகேந்திரன்.

"ஐ லவ் யூ நளினி என்றவனைப் பார்த்து மெல்லச் சிரித்தபடி “உங்க காதலைச் சொல்வதற்கு என் கழுத்தில் தாலி ஏறணும் அப்படித்தானே” என்று அவனைக் கேலிச் செய்தாள்.
“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை… உன்னைக் காதலிக்கிறேன் என்று உனக்கும் தெரியும் என்பது எனக்கும் தெரியும், இந்த வார்த்தைகள் நம்முடைய உணர்வுகளை உணர்த்தும் விஷயமாக நான் நினைக்கிறேன்” என்றவன் பின்னர்

“நளினி என் வாழ்க்கையில் எனக்கென்று இருப்பது அம்மா, மாமா, அத்தை அவங்க
இரண்டு பெண் குழந்தைகள் மட்டும்தான்… எப்பவுமே நீ என் கூடவே இருப்பாய், நம்முடைய இந்த உலகத்துல உங்க அம்மாவும் சேர்த்து எல்லாரையும் தான் நாம் சந்தோஷமாகப் பார்த்துக்கணும்” என்று தெளிவாகக் கூறினான் மகேந்திரன்.

அவனின் இந்த அன்புதான் அவனிடம் அவளைச் சரணடையவைத்தது. அதனால் கண்கள் கலங்கப் பேச வாய் எடுத்தவளை, பேச விடாமல் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்திருந்தான் மகேந்திரன். அவளுக்குப் புரியவும் செய்தது அதனால் அவனுக்கு இசைந்துக் கொடுத்தாள் நளினி.

அங்கே அவர்களுக்கு இடையே அழகான வாழ்க்கை, புரிதலோடு தொடங்கியது.

வீட்டில் இருந்து தங்கள் தங்கி இருக்கும் அப்பார்ட்மெண்டிற்குக் காரில் பயணமாகிக் கொண்டு இருந்தனர் அதியமான் தம்பதியினர்.

அவர்கள் காரில் மௌனமே குடிக்கொண்டிருந்தது. பிள்ளையை மடியில் வைத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள் தாரா.

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அதியமான் “என்னடி யோசனை எல்லாம் பலமாக இருக்கு” என்று கேட்டான்.

தன் கணவனிடம் திரும்பியவள் “ஒன்னும் இல்லங்க” என்றாள் தயங்கியபடி, “இல்ல ஏதோ மனசுல வச்சுட்டுதான் இருக்க… என்னவென்று சொல்லு”என்றான்.


“இல்ல எங்க அம்மாவிடம் சில மாற்றங்கள் இருக்கு, எப்படியென்று தெரியல, ஒருவேளை தாரிகா அம்மாகிட்ட எல்லாம் உண்மையைச் சொல்லி இருப்பாளோ” என்ற தன்னுடைய சந்தேகத்தைக் கேள்வியாகத் தன் கணவனிடம் கேட்டாள் தாரா.


“ஏன் திடிரென இப்படி ஒரு சந்தேகம்” என்று கேட்டான் அதியமான்.


“அம்மா என்னைப் பாக்கும்போதெல்லாம் கண் கலங்குறாங்க… அதுதான் மனசுக்குச் சங்கடமாக இருக்கு” என்றாள் தாரா.

“ சரி விடு அவங்கள் தெரிஞ்சுகிட்டாங்கறது நல்ல விஷயம் தானே… இனி உன்னை வருத்தப்பட வைக்க மாட்டாங்க, வேதனைத் தரும் வார்த்தைகள் கொண்டு உன்னை வலிக்க வைக்க மாட்டாங்க, அதனால் எந்த விஷயத்தைச் சும்மா தோண்டித் துருவமல், அதை அப்படியே விட்டுவிடு” என்றான் அதியமான்.

மெல்ல அவனைப் பார்த்தவள் “நம்ம வீட்டிலும் எல்லா விஷயமும் சரியாகி அத்தை நம்மைப் புரிஞ்சுகிட்டால் போதுங்க… அப்புறம் எனக்கு எதுவுமே இல்லை… எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அழகானக் குடும்பமாக நம்ம வாழலாம்” என்றாள் தாரா.


சுயநலம் இல்லாத அவள் வார்த்தைகளைக் கேட்ட அதியமானுக்குத் தன் மனைவியின் மேல் காதல் மேலும் ஊற்றாக ஊற்றெடுத்தது.

“சரிதான் அதற்கும் ஒரு காலம் வரும்… அவங்களும் நம்மைப் புரிஞ்சுக்குவாங்க... சும்மா அதெல்லாம் யோசிச்சிட்டு இருக்காதே” என்றான் அதியமான்.
“எல்லாம் சரிதான்… இந்த நடு ராத்திரிக்கு எதுக்கு நம்ம இப்படிப் பயணம்… நம்ம வீட்டிலேயே இருந்திருக்கலாம்”என்றாள் தாரா.


“இல்லை தாரா, அது நம்ம வீடு இல்லை, அதை மனதில் பதிஞ்சு வச்சுக்கோ, அது சதீஷோட வீடு, நம்ம வீடு இப்ப நம்ம இருக்கிற அப்பார்ட்மெண்ட் மட்டும்தான், எதிர்காலத்தில் இந்த மனஸ்தாபம் குறைந்து எல்லாம் ஓன்றாகச்சேரலாம், நம்மிடமே அம்மா வந்து இருக்கலாம், அதெல்லாம் பிரச்சனை இல்லை. இனி இந்த வீட்டிற்குத் திரும்பி நம்ம வருது நன்றாக இருக்காது… நமக்கு மரியாதையாகவும் இருக்காது என்பதைப் புரிந்துகொள்” என்றான் அதியமான் தெளிவாக.

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க... என்ன இருந்தாலும் நம்ம வீடு தானே... நீங்க பார்த்துப் பார்த்துக் கட்டின வீடு" என்றாள்.

“அதில் உங்களோட கனவுகள் உணர்வுகள் எல்லாம் கலந்து இருக்கும் இல்லையா” என்று அவன் மனதில் இருந்த விஷயங்கள் எல்லாம் அவன் சொல்லாமலே புரிந்து கொண்டு பேசினாள் தாரா.

"நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான், இல்லையென்று சொல்லவில்லை, ஆனால் அதெல்லாம் கடந்த காலம். அதிலிருந்து நான் வெளியே வந்து விட்டேன். காசு என்பது இழந்தாலும் அதை மீண்டும் நம்மால் சம்பாதித்துக் கொள்ள முடியும். ஆனால் உறவு என்பது இழந்தால் சம்பாதித்துக் கொள்ளலாம்... உறவுகள் இடையே இருக்கும் பிளவு சரியாகும் தான் … ஆனால் அதன் அடையாளம் அங்கே தான் இருக்கும். அந்த அந்த வலி மனதின் ஓரம் எப்பொழுது முணு முணுத்துக் கொண்டே இருக்கும்" என்றான் அதியமான்.

அவன் கூறிய இந்த வார்த்தைகளை அவள் தெளிவாகக் கேட்டிருக்கலாமோ பெண்ணவள் அதை உணரத் தவறினாள்.

நடு இரவில் தங்கள் வீடு வந்து சேர்ந்தனர்.


எல்லாம் நல்ல விதமாக முடிந்தது என்ற சந்தோஷம் தாராவிற்கு மனதில் இருந்தது.

அமரனைப் படுக்க வைத்தவளுக்கு... பெற்றவர்கள் இவனைப் பற்றி எதுவுமே கண்டு கொள்ள வில்லை என்ற சின்னச் சலசலப்பு மனதின் ஆழத்தில் இருந்தது.

இவன் பெரிதாக வளர்ந்து வந்த பின் இந்த உண்மைத் தெரிய வருமோ என்ற பயமும் அவளுக்கு இருந்தது.


எல்லாம் நம் விதியின் கையில் தான் என்று பெருமூச்சு விட்டாள் தாரா.

உறங்குவதற்குத் தயாராகி வந்த அதியமான் அவளின் முக மாற்றத்தைக் கண்டு "என்ன தாரா என் பையனைப் பார்த்துட்டே இருக்க... அவளை விட நான் அழகாக இருக்கேன்" தானே என்று பிள்ளையிடம்‌, போட்டிப் போட்டான் அவள் கணவன்.


கணவனின் விளையாட்டில் அவனைப் பார்த்து முறைத்தவள்… “அவனைப் பற்றி உங்கள் தம்பி தாரிகாவிடம் கேட்கவே இல்லை. எதிர்காலத்தில் அவனைப் பெத்தவங்க அவர்கள் தானென்று தெரிந்தால் என்ன ஆகும்? எனக்கு அது‌தான் பயமாக இருக்கு‌” என்றாள் தாரா…

சதீஷ் மற்றும் தாரிகாவிடம் அவனை ஓப்படைப்பது எல்லோருக்கும் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று நம்மால் கணிக்க முடிந்தால் பல‌விஷயங்கள்‌நடந்து இருக்கவே இருக்காது.. எதுவாக இருந்தாலும் நாம் சமாளிக்கலாம்… அமரனைக் கஷ்டபடுத்தும் எந்த விஷயமும் என்னால் தாங்க முடியாது. உண்மையை என்றைக்குமே மறைக்க முடியாது. அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அவன் பெற்றொர் அவர்கள் தான் என்பது நூறு சதவீதம் உண்மை என்பதை மறக்காதே தாரா" என்று கசப்பான சத்தியத்தைப் பேசினான்.

கணவனின் வார்த்தைகளைக் கேட்டுக் கண் கலங்கியது என்றால் அவள் கரங்களோ... பிள்ளையை இறுக்கி அணைத்தது அவள் அணைப்பில் உண்டான வலியில் சிணுங்கினான் குழந்தை.

"தாரா.. பையன் அழறான் பாரு" என்றவன் அவள் அருகில் வந்து… அவள் முகத்தைப் பார்த்து…‌ அமரன் அப்பா இந்த அதியமான் தாரா… உன் தாரிகாவின் பிடிவாதம் எல்லாம் என் முன் செல்லுபடியாகாது…‌ நீயே நினைத்தாலும் அவனுக்கு அம்மா என்ற உன் பெயரை அழிக்கவோ மாற்றவோ முடியாது. ஆனால் அவங்க இவனை‌ உரிமைக் கொண்டாட வந்தால், அவன்‌ நம்முடைய மகன் தான் என்ற பேப்பர் எல்லாம் பக்காவாகத் தயாராகத் தான் வைத்திருக்கிறேன்.. என்ன இருந்தாலும் உண்மையென்று இருக்கு இல்லையா? அதன் முன் நாம் பணிந்துப் போகவேண்டி வரும் தாரா. இப்போதென்றால் அவன் குழந்தை.. அதனால் இடம் மாறினாலும் அப்படியொன்றும் பாதிப்பு அவனுக்கு இல்லை.. அவன் நன்மைக்காக நான் பேசறேன்" என்றான் அதியமான்.

கணவனின் எதார்த்ததில் தைரியம் இழந்தாள் தாரா. இல்லை என்று தலையை அசைத்துத் தர மாட்டேன் என்றாள்.

'அமரன் வரவுதான் என் காதல் வெற்றி அடையக்காரணமாக இருந்தது' என்று மனதில் நினைத்தவள் "அமரன் தான் நம் வாழ்க்கையை அர்த்தம் உள்ளாதாக மாற்றியிருக்கான். என்னால் அவனை விட்டுப் பிரிந்து இருப்பது..." என்று வார்த்தையை முடிக்காமல் அழுதவளின் அழுகையைக் கண்டு பயந்தான் அதியமான்.

"சரி சரி.. நீ இப்படி அழாதே.. இப்படி நடந்தால்... என்ன செய்ய என்று தான் கேட்டேன்... சதீஷ் கேட்டு வர மாட்டான் என்று நினைக்கிறேன்.. தாரிகாவிற்கு என்னைப் பற்றித் தெரியாது... உனக்காக என்னவேனா நான் செய்வேன் தாரா" என்றான் அதியமான்.

கணவனின் வார்த்தைகளைக் கேட்டுக் காதல் பெருக அவனை அணைத்து இருந்தாள் முதன் முறையாக அவளை மறந்து.

அதை உணர்ந்தவன் அவளைத் தன்னோடு அணைத்து அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன் "போ போய்த் தூங்கு எதுவும் யோசித்துக் கவலைப் படாதே நான் இருக்கேன்... எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்" என்ற அதியமானை எதுவும் செய்ய முடியாது நிற்கவைக்கும் எதிர்காலம் என்று தெரியவில்லை அவனுக்கு.


அதே போன்று
எல்லாம் சரிசெய்யும் அதியமான் தன் காதல் வாழ்க்கையை அவள் புரட்டிப் போடும் போது சரி செய்ய முடியுமா அவனால்…


தொடரும்…
 
Top