Sowndharyacheliyan
Writer
“பாத்தாலும் பார்த்தேன் இப்புடி ஒரு கூறுக்கெட்ட கழுதைய, புருசன்காரன் விரட்டுறான், அவன்ட்ட போயி கெஞ்சிட்டு நின்னுட்டு இருக்கா டி உன் அக்காகாரி. இவளை என்னன்னு பெத்தேன்னு இருக்கு.” அதிகாலையில் வந்திருங்கிய தங்கையிடம், முணுமுணுத்தவாறும், கடுகடுத்தவாறும் இருந்தார் வள்ளியம்மை.
நேற்றைய இரவில் இருந்து கேட்கிறாள் இத்தகைய பேச்சினை,
இரவு எல்லாம் அழுதழது கண்ணீர் சுரபிகளே வற்றிப் போயிருந்தன சுரபிக்கு. வள்ளியம்மையின் ஒவ்வொரு சொல் அம்புகளும் குறிப் பார்த்து அவளை தாக்கின.
சாத்வியை கூட கவனிக்க முடியவில்லை அவளால். பிள்ளை வேறு வெகுநேரம் அழுது கொண்டிருந்ததே!
“இத்தாடி, இப்போ உன் ஒப்பாரிய நிப்பாட்டுறியா இல்லையா? வீடான வீட்டுல இப்புடி அழுது வச்சா வீடு வெளங்குமா?” வள்ளியம்மை வேகமாய் அவளருகே வந்து கத்திட, அப்போதும் மெளனமாய் மட்டுமே அமர்ந்திருந்தாள்.
“அம்மா விடேன், ஏன் அக்காவ போட்டு படுத்துற?” என்றபடி அவர்களுருகே வந்தமர்ந்தாள் யாதவி. அவளின் கையில் இருந்த சாத்விகா, சுபாவிடம் தாவியவள்,
“ம்மா, ப்பா!” என்றிட, மீண்டும் கண்ணீர் பெருகியது அவளிற்கு.
“பெரிய அப்பா! ஒண்ணுக்குக்கும் பிரோயோஜனம் இல்லாதவன்.” என வள்ளியம்மை மீண்டும் முணங்கிட, பார்வையிலயே அவரை எரித்தாள் சுபா.
“தேவையில்லாம அவரைப் பத்தி பேசுற வேலை வச்சிக்காத?”
“ஒண்ணுத்துக்கும் உதவாத புருசனை வச்சிக்கிட்டு உனக்கு ரோசம் வேற வருதோ?” என்றவரின் பேச்சில் ஆங்காரத்துடன் எழுந்தமர்ந்தவள்,
“அம்மான்னு கூட பாக்க மாட்டேன். அவ்ளோதானா உனக்கு மரியாதை! என் வாழ்க்கை இப்புடி ஆக நீ தான் காரணமே? எம் புருசனை பத்தி இன்னோரு வார்த்தை பேசுன! எதையாச்சும் கொண்டு அடிச்சிடுவேன் பாத்துக்கோ.”
“அய்யோ! அய்யோ அம்மான்னு கூட பாக்காம இப்புடி பேசுறாளே, அந்த வீட்டுல நீ ராணி மாதிரி இருந்தப் பாரு என்னால அது கெட்டுப் போறதுக்கு?
ஒரு குடும்பத்தை கைக்குள்ள போட்டுக்க துப்பில்லை உனக்கு? பேச வந்துட்டா பெருசா.”
“நீ பாத்தியா? என் புருசன் என்னை சந்தோசமத்தான் வச்சிருந்தாரு, என்னை அப்புடியே இருக்க விட்டியா நீ? உனக்கான இடத்தை தக்க வச்சிக்கோ, எப்போ வேணும்னாலும் உன்னை துரத்தி விட்டுடுவாங்கன்னு சொல்லி சொல்லியே என்னை பயமுறுத்தலை நீ?”
“இப்பவும், நான் சொன்னது தானே நடந்திருக்கு. உன் புருசன் உன்னை துரத்தி தானே விட்டிருக்கான்?”
“அதுக்கு காரணம் யாரு நீதானே? நேத்து நீ செஞ்ச வேலை தானே எல்லாம்?”
“அப்போ அந்த வருணா, அவளோட குடும்பம் என்னை அசிங்கப்படுத்தும், அதை நான் வாய் மூடி ஏத்துக்கனுமா?”
“ ஆமா, நீ வாயை மூடிட்டு தான் இருந்திருக்கனும். எனக்கு ஒரு குண்டுமணி தங்கம் சீரா செஞ்சிருப்பியா நீயி? அவுங்க வருணாக்கு செய்யும் போது ஒரு மரியாதைக்கு எனக்கு கொடுத்தாங்க.
ஆனா, ஆரம்பத்துல இருந்தே அவுங்க மேல பொறமைப்பட்டுட்டு இருந்த நீ, நேத்து சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, உன் வன்மத்தை எல்லாம் கொட்டிட்ட? இதுல இப்போ வாழ்க்கையை கெடுத்துட்டு உட்காந்திட்டு இருக்கிறது நான் தான்.”
“எல்லாமே உனக்காகத்தானேடி நான் செஞ்சேன்.”
“இதை சொல்லி சொல்லித்தான் என்னை இத்தனை வருசமும் பைத்தியமாக்கிட்டு இருந்திருக்க நீ? எனக்காகான்னு, அப்போ ஏன் நேத்து என்னை இங்க இழுத்துட்டு வந்த, நான் அவ்வளவு சொல்லியும், மிரட்டி தானே இழுத்துட்டு வந்த, அங்கேயே இருந்திருந்தா, என் புருசன் கிட்ட என்னோட மனநிலையை சொல்லி சமாதனப்படுத்தியிருப்பான். எல்லாம் உன்னால் தான் கெட்டுப் போச்சு.”
“அடி, கூறுக்கெட்டவளே, இப்பவும் உன் புருசனை இங்க வரவைக்கிறதுக்கு தான் உன் பிள்ளையை தூக்கிட்டு வந்ததே? உன் மேல இருக்கிற கோபத்துல, உன்னை விட்டுட்டு இருப்பாங்க, ஆனா பிள்ளைய விட்டுட்டு இருக்க முடியுமா? மிஞ்சி போனா ரெண்டு நாளா, அதுக்கப்பறம் பிள்ளை பாசத்துல, உம்புருசன் உன்னை வந்து கெஞ்சி கூட்டிட்டு போறாரா இல்லையான்னு மட்டும் பாரு?
அப்புடி வந்தா, இந்த தடவை எல்லாத்தையும் பேசிட்டு தான் உன்னை அனுப்புவேன்.”
“என்ன பேசுவ?”
“அந்த ரெண்டு கடையையும் உன் பேர்ல மாத்துனாத்தான் அவர் கூட அனுப்புவேன்னு சொல்லுவேன்.” என்றவரை கண்டு முகத்தை சுழித்தாள் அவள்.
“இவ்வளவு பேராசை ஆகாதும்மா உனக்கு?”
“நான் இப்போ சொல்றது பேராசையாத்தான் இருக்கும். பின்னாடி அந்த முகிலனும் வருணாவும் வளமான வாழும்போது தான், நான் சொன்னது சரின்னு தெரியும் உனக்கு. அதனால் நான் சொல்றதை கேட்டுட்டு அமைதியா, ஒப்பாரி வைக்காம இரு. உன் புருசன் வரலைன்னா இன்னோரு ப்ளானும் இருக்கு.
பிள்ளைய கொண்டும் போயி அங்கே விட்டுட்டு வந்திடனும். பிள்ளை உன்னைத் தேடி அழும்தானே, எத்தனை நாள் சமாளிப்பாங்க நீ இல்லாம, ஒரு கட்டத்துல அவுங்களே வந்து உன்னை கூப்பிட்டு போவாங்க, அப்போ கடையை உன் பேர்ல மாத்திட்டு தான் அனுப்புவேன். அதனால இப்போ அழுதுட்டு இருக்காமா இரு. இதலாயாவது உருப்படியா, என் பேச்சை கேளு.” என்றவர் காலை உணவினை செய்வதற்கு சென்றிருந்தார்.
அவர் சென்றதும் மீண்டும் பரணியின் நினைவுகள் மட்டுமே அவளை ஆக்ரமித்தன. வள்ளியம்மையின் கூறியது போலான எண்ணங்கள் எல்லாம் அவளிடம் சுத்தமாக இல்லை.
மீண்டும் கணவனிடமே சென்று விடத் தான் துடித்துக் கொண்டிருந்தது அவளது மனம்.
அவள் தவறு செய்தவள் தான், அதை இல்லை என மூடி மறைக்க அவள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அவள் பரணியை காதலித்தது உண்மை, அவனின் காதலில் வாழ்ந்தது உண்மை, எந்நாளும் கணவனை அவள் குறைவாய் நினைத்ததில்லையே, அவளை பொறுத்தவரை அவளது கணவனும் தான் அவளிற்கு எல்லாமே! எந்த இடத்திலும் கணவனை விட்டுக் கொடுத்ததும் இல்லை, அவன் மீது அத்தனை அன்பு, காதல் அவளிடம் அதில் பொய்யில்லை.
ஆனால், நேற்றைய கணவனின் நடவடிக்கையை நிச்சயமாய் அவள் எதிர்பார்க்கவில்லை. அவளிடம் கோபப்படுவான், சண்டையிடுவான் என தான் நினைத்திருந்தாள், ஆனால் இப்படி வீட்டை விட்டு அனுப்புவான் என துளியளவு கூட அவளிற்கு எண்ணமில்லை. கணவன் தன்னை அந்தளவிற்கு வெறுத்து விட்டானா? என பயம் கொண்டது அவள் மனம்.
இருந்தும், கணவனின் கோபம் சிறிது நாட்களில் குறைந்து விடும் என நம்பிக்கை கொண்டிருந்தாள்.
வழக்கமான எழும் நேரத்துக்கு முத்துபேச்சி எழுந்திருக்க, தனக்கு முன் எழுந்து கடையை திறக்க செல்லும் கணவன் இன்னும் உறங்குவதை கண்டவர், அவரை தொந்தரவு செய்யாது வெளியேறினார்.
அவர் சென்ற நேரம், வீட்டுக் கதவினை திறந்துக் கொண்டிருந்தான் பரணி.
“பரணி!” பேச்சி அழைக்க,
“எழுந்துட்டீங்களாம்மா, அப்பா எழுந்துட்டாரா?”
“இல்லைப்பா தூங்குறாரு!”
“சரி தூங்கட்டும்மா, நான் கடைக்கு கிளம்பிட்டேன். பாத்துக்கோங்கம்மா, அப்பா காலை சாப்பாட்டை முடிச்சிட்டே வரட்டும்.” என அன்னைக்கு முதுகு காட்டியபடியே பேசியவன், சட்டென வெளியேறியிருக்க, பேச்சி அதிர்ந்து தான் போனார் அவனது இயல்பான பேச்சில்.
‘நேற்று நடந்த சம்பவத்திற்கும் அவனிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாது, எப்போதும் போல் பேசிவிட்டு சென்ற அவனை கண்டு கண்கள் கலங்கி போயின பேச்சிக்கு. பரணி சென்ற திசையை பார்த்தப்படி எவ்வளவு நேரம் நின்றிருந்தாரோ’.
“பேச்சி! என்னாச்சு” மகாலிங்கம் எழுந்து வந்தவர் மனைவியின் நிலை கண்டு அருகே வந்து அழைக்க,
“என்னங்க! பரணி” சற்று முன் மகன் பேசிய அனைத்தையும் கூறியவரின் கண்களில் கரகரெவன கண்ணீர் இறங்கிட, முகிலனும், வருணாவும் வந்தவர்கள் பேச்சியின் அழுகையை கண்டு பதறி அருகில் வந்தவர்கள்,
“என்னம்மா? என்னாச்சு அத்தை?” இருவரும் பதறிட,
“முகிலா! பரணி எந்திரிச்சு எப்பவும் போல கடை திறக்க போய்ட்டான்யா! ஒண்ணுமே நடக்காத மாதிரி பேசிட்டே அவன் பாட்டுக்கு போய்ட்டான்டா.” என,
மற்ற மூவரும் சற்றே அதிர்ந்து தான் போயினர்.
“எப்புடிடா இவனால, இப்புடி எப்பவும் போல இருக்க முடியுது? எனக்கு பயமா இருக்குடா முகிலு, இவன் நேத்துல இருந்து ஒத்த வார்த்தை யாருகிட்டயும் பேசலை, நேத்து நடந்ததை என்னாலயே ஜீரணிக்க முடியலை, இவன் எப்படி அதுக்குள்ள ஒண்ணுமே நடக்காத மாதிரி போறான். மனசுக்குள்ள ரணத்தை வச்சிட்டு போறானேடா.” என விடாமல் அவர் அழுதிட, மற்ற மூவருக்கும் அதே எண்ணம் தான்.
“அம்மா பொறுமையா இருங்க, சாப்பிட வருவான்ல என்னன்னு பேசுவோம்.” அவரை அமைதியடையச் செய்தான்.
வருணா, டிபன் வேலையை எடுத்துக் கொண்டவள், பேச்சியையும், மகாலிங்கத்தையும் கஷ்டப்பட்டு உண்ண வைத்திருந்தாள்.
பரணிக்காக இங்கே நால்வரும் காத்திருக்க, அவனோ வந்தபாடில்லை. முகிலன் அவனை போனில் அழைக்க, அழைப்பை ஏற்றவன்,
“என்னடா?”
“சாப்பிட வரலையா நீ?”
“கடையில கூட்டம் அதிகமா இருக்கு, நான் இங்கயே சாப்பிட்டேன். அப்பாவ சீக்கிரம் வரச் சொல்லு.” என போனை கட் செய்திட,
அவன் கூறியதை வீட்டில் கூறியவன்,
“நான் நைட்டு வந்து பேசுறேன்ம்மா அவன்கிட்ட.” என்றுவிட்டு அவனும் வருணாவும் வேலைக்கு சென்றிருந்தனர்.
இரவு உணவு வேளையிலும் அவனுக்காய் அனைவரும் காத்திருக்க, மகாலிங்கத்தை மட்டும் அனுப்பி வைத்திருந்தான்.
ஏன்? என கேட்டதிற்கு கடையில் கூட்டம் என்றே கூறினான். மதிய உணவிற்கு கூட வரவில்லையாம். அவன் சொல்லும் காரணம் பொய் என்றும் எண்ண முடியவில்லை, ஏனெனில் பொங்கல் நெருங்குவதால் நாலாப்பக்கம் இருந்தும் பழனிக்கு படையெடுத்திருந்தனர் மக்கள்.
இரவு வெகுநேரம் ஆகியும் பரணி வராததால், சரி நாளை காலை பேசிக் கொள்வோம் என முகிலன் நினைத்திருக்க, அடுத்த நாளும் அனைவரும் விழிக்கும் முன்பே கிளம்பியிருந்தான். அடுத்த வந்த ஒருவாரமும் இதே தான் தொடர்கதை ஆனது.
முகிலனும் எப்படியாவது அவனிடம் பேசி விட வேண்டும் என இரவு அவனுக்காய் காத்திருப்பான், ஆனால் நள்ளிரவு தாண்டியும் பரணி வந்திருக்க மாட்டான், பொங்கல் விடுமுறை தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை இருப்பதால் கல்லூரியிலும் வேலைப்பளு அவனிற்கு அதிகமாயிருந்தது. உடல்சோர்வையும் மீறி அவன் காத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் முடியாமல் போய்விட, படுத்து விடுவான்.
சரி, காலையிலாவது அவனிடம் பேசிவிடுவோம் என அவன் அதிகாலையே எழுந்தாலும், அவனிற்கு முன் பரணி கிளம்பியிருப்பான்.
பேச்சியிடமும் மகாலிங்கத்திடமும் பரணியை பற்றி கேட்க,
“இந்தப் பைய என்ன பண்ண காத்திருக்கானே தெரியலை முகிலு, வர்றான், சாப்பிடுறான் கடைக்கு போய்ட்டுதான். அன்னைக்கு நடந்ததை பத்தி மூச்சுக் கூட விட மாட்டுறான். எப்போ தூங்குறான், எப்போ முழிக்கிறானே தெரிய மாட்டிங்குது. நான் பேசுனாலும் காதிலே வாங்கதாவன் மாதிரி போய்டுறான். பிள்ளை வேறு கண்ணுக்குள்ளயே நிக்கிறா, அன்னைக்கு அழுதுட்டே வேற போனா” என பேச்சி கூற,
“கடையில கூட முகம் குடுத்து பேச மாட்டாறான்ப்பா, எப்பவும் போல இருக்கான், என்னாலயும் ஆளுங்களை வச்சிக்கிட்டு அவன்கிட்ட பேச முடியலை, சரி வீட்டுல வச்சு பேசலாம் பாத்தாலும், என்னைய மொதல அனுப்பி விட்டுறான். அடுத்து அவன் எப்போ வர்றான்னே தெரிய மாட்டீங்குது. மொகத்துல ஒண்ணனையும் காட்டாம, இறுக்கமா சுத்திட்டு இருக்கான்.” என தந்தையின் பேச்சிலும் பெரும் கவலையுக்குள்ளாகிப் போனான் முகிலன்.