அதி நிரஞ்சன் திருமண உறவு பற்றி யாருக்கும் அலுவலகத்தில் தெரியாததால் இவர்கள் ஒன்றாய் இருப்பது பற்றி கிசுகிசு வரத்தான் செய்தது. நிரஞ்சன் எதையும் கண்டு கொள்ளவில்லை. அதிக்கு தான் தாங்க முடியவில்லை.
சுமனாவாலும் தாங்கி கொள்ள முடியவில்லை.இது போன்ற ஒரு விஷயத்தை அவள் நிரஞ்சனிடம் எதிர்பார்க்கவில்லை.
அதிக்கு திருமணம் முடிந்து இத்தனை மாதங்கள் கடந்த பிறகும் நிரஞ்சன் ஏன் யாரிடமும் எதுவும் சொல்லாமல் இப்படி இருக்கிறான் என்று கோவம். வாய்விட்டு அவனிடம் கேட்க பிடிக்கவில்லை. வித்யா கொஞ்சம் கோவம் தெளிந்து, கணவருடன் பெங்களூரு வந்திருக்கிறாள். அவள் கண்களில் நிரஞ்சனும் அதியும் தனித்தனியாக அறைகளில் இருப்பது உறுத்துகிறது. ஏன் இப்படி என்று விஸ்வமும் திண்டாடுகிறார்.
நிரஞ்சன் மனநல மருத்துவரை சந்தித்து தன் மனைவி மற்றும் தோழியான அதி பற்றி பேசினான். மனைவியின் முன்னாள் பற்றியும் அந்தரங்கம் பற்றியும் சரியாக தெரியாதவனுக்கு, தன் தோழி -காதலி பற்றி ஆழமாய் தெரிந்திருக்கிறது.
அவள் தன்னிடம் பகிர்ந்துகொண்டவற்றை மேலோட்டமாக சொன்னவனுக்கு மேற்கொண்டு என்ன என்றும் தான் எப்படி அவளிடம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் பயம். அவளுடைனான திருமண வாழ்க்கையை அவன் மனம் விரும்புகிறது. அவள் என்ன நினைப்பாளோ, எப்படி எடுத்துக்கொள் வாளோ என்ற யோசனைகள் அவனை பாடாய் படுத்த மருத்துவர் முன் கண்மூடி அமர்ந்துவிட்டான். அவனிடமிருந்து ஆழ்ந்த பெருமூச்சு. தன்னை சமன் செய்துகொள்ள பிரேயர்த்தன பட்டவனை வியப்பை வெளிக்காட்டாமல் பார்த்தார் மருத்துவர். சுமார் ஐம்பது வயது பெண் மருத்துவரால் அதியை ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும், அவளிடம் பேசாமல் எதுவும் சொல்ல முடியாத நிலையில்,
“இங்க பாருங்க நிரஞ்சன், உங்க மனைவி வந்து என்னை மீட் பண்ணா என்னால தெளிவா பதில் சொல்ல முடியும். அண்ட் அவங்க உங்கள கணவரா பாக்க, ஷி நீட்ஸ் டைம். அத நீங்க குடுத்துதான் ஆகணும்.
நீங்க சொல்றத கேட்டா, ஷி வாஸ் அபக்ட்டாட் இன் டீப் னு தோணுது. அஸ்க் ஹர் டு கம் ஹியர். வில் ட்ரை டு ட்ரீட் ஹெர்.
நீங்க வீட்டுல, இருக்கும் பொழுது, உங்க நெருக்கத்த காமிக்க ட்ரை பண்ணுங்க. லைக் டிவி பாக்கும் பொழுது அவங்க பக்கத்துல உக்காந்து, அவங்க கையை பிடிச்சிட்டு டிவி பாக்குறது. சமையல் செய்யும் போதுன்ணு கொஞ்சம் ரொமான்ஸ் ட்ரை பண்ணுங்க. அவங்க ரியாக்ஷன், எஸ்பிரஷன் நோட் பண்ணுங்க. நீங்க டச் பண்ணா எப்படி பீல் பண்றாங்கன்னு தெரியணும்.
பிஃப்டீன் டேஸ் கழிச்சு அவங்களோட வர முயற்சி செய்ங்க... இல்லன்னா நீங்க மட்டும் வந்து பீட்பேக் சொல்லுங்க... ஆல் தி பெஸ்ட் “என்று அனுப்பி வைத்தார். வீட்டில் வித்யா தனது அறையில் வைத்து கேள்விக்கணைகள் தொடுக்க ஆரம்பித்து விட்டாள்.
கல்யாணம் செய்த பிறகு அடுத்த கட்டத்திற்கு மகள் பிராயாணம் செய்துதானே ஆகணும்?
நிரஞ்சன் இன்னும் எவ்வளவு நாள் தனது இளமை வேகத்திற்கு சமாதி கட்டிவிட்டு இப்படி கல்யாணம் செஞ்சும் பிரம்மச்சாரி என்று வாழ முடியும்?
இருவரும் விரும்பி கல்யாணம் செய்து கொண்டு விலகி நிற்பது சரி இல்லை என்று மகளை விளாசி தள்ளினாள் வித்யா.
'ரெண்டு பேரும் பிடிச்சுதானே கல்யாணம் செஞ்சுகிடீங்க அதி '?
பெண்ணிடம் மௌனம் மட்டும் பதிலாய். நடந்தவற்றை அம்மாவிடம் கூட சொல்ல அவளுக்கு விருப்பம் இல்லை.
அதியின் மௌனத்தில் சம்மதம் கண்ட வித்யா மேலே பேசினாள்.
“உங்க படுக்கை ஏன் தனியா இருக்கு அதி?”
இதற்கு என்ன என்று பதில் சொல்லுவாள் அதி?
“கொஞ்ச நாள் ஆகட்டும்ம்மா. எல்லாம் தானே செரியாகும்.”
“நீருவுக்கு இதுல சம்மதமா அதி?”
ம்ம்ம்... அவனுக்கு ஓகேதான் என்ற அதிக்கு அவனின் எதிர்பார்ப்பு தெரியுமே! மென்று விழுங்கிய மகளை வினோதமாய் பார்த்தாள் வித்யா.
“நம்ம நீரு தானேன்னு நினைக்கிறியா அதி... டேக் போர் கிரேன்டெட்னு இப்போ நீ எடுத்துக்கிட்டு பின்னால இவனை தொலைச்சிட்டு அழாத…”
அம்மா சொன்னவை நடந்துவிட்டால்? நீரு என்னை விட்டுட்டு போய்டுவானா... அவனில்லாம என்னால இருக்க முடியுமா... என்ற யோசனை அதிக்குள். இன்னும் அதிக்கு நீருவை காதலிப்பது புரியவில்லை.
“வெறும் செக்ஸ்சுவல் ரிலேஷன்ஷிப்தான் கல்யாண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும்னு சொல்றீங்களாம்மா…” இது அதி.
மகளை ஆழ்ந்த பார்வை பார்த்த வித்யாவுக்கு ஏதோ புரிய,'’ அப்போ, வினய் செஞ்ச தப்புக்கு நிரஞ்சனை பழி வாங்குறியா அதி, அதுவும் படுக்கைல??”
அதிர்ச்சியில் உறைந்தாள் அதி. இதுபோல் அவள் யோசிக்கவில்லை. ஆனாலும் அவள் செய்து கொண்டிருப்பது இதைதானே!
அவளையும் அறியாமல், நிரஞ்சனின் உணர்வுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவனும் தான் எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு அமைதியாய்... மனதினுள் அரற்றினாள் அதி. '’இதுக்குதானே, இந்த கல்யாணம் வேணாம்னு சொன்னேன் நிரஞ்சன்... இப்படி நிக்கிறேன் பாரு...'’
:”அம்மா... என்னால வினய் செஞ்ச கொடுமைலேந்து முழுசா வெளியே வர இயலாது. வேணும்னா நிரஞ்சனை டிவோர்ஸ் பண்ணிடவா... “என்றவளை பளார் என அறைந்துவிட்டாள் வித்யா. வாழ்க்கையை காப்பாற்றிக்கொள் என்று சொன்னால், இவள் இப்படி உளறுகிறாளே என்ற ஆற்றாமை.
இரண்டு நாட்கள் மைசூர் ஆடிட்டிங் முடித்து வீட்டுக்கு வந்தான் நிரஞ்சன். மனம் நொந்து போய் அதி. அவளது சிவந்த கண்கள் நிரஞ்சனுக்கு ஏதோ செய்தி சொல்ல, வித்யாவை முறைத்தான் நிரஞ்சன். அவன் குளித்து சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமை காத்த விஸ்வம், நிரஞ்சனிடம், '’ரிசப்ஷன் இன்னும் ஏன் வைக்கல மாப்ள?அதுக்கு ஏற்பாடு செய்ங்க” என்று சொல்லிவிட்டார். இம்முறை அதிர்வு நிரஞ்சனிடம்.
விஸ்வம் இந்த கல்யாணத்தை ஒப்புக்கொண்டுவிட்டார் என்பது தானே இதன் பொருள்...
சிறிய மௌனத்திற்கு பிறகு அதியை பார்த்தவனுக்கு அவள் கண்கள் சம்மதம் சொல்ல, அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்கள்.
வித்யாவும் விஸ்வமும் நடுவில் இரண்டு வாரங்களுக்கு சென்னையில் கொஞ்சம் வேலை என்று இங்கு வந்துவிட, அதியும் நிரஞ்சனும் சற்றும் சலனம் இல்லாமல் தேவையானவற்றை செய்து கொண்டார்கள். நட்சத்திர ஹோட்டலில் ரிசப்ஷன், அங்கே இருக்கும் பார்லரில் இருவரின் அலங்காரம். நிரஞ்சன் க்ரெய் நிறத்தில் ஃபுல் சூட்டில் திருப்தி கொள்ள, பெண்ணோ மெல்லிய சரிகையுடன் மென்பட்டு கடல் நீலத்தில்.
வித்யா விஸ்வம் இருவரும் லாக்கரில் இருக்கும் பெண்ணின் நகைகள், முக்கியமாக நிரஞ்சனின் அம்மா கொடுத்திருந்த வளையல்கள் என எடுத்துக்கொண்டு, புதியதாக ரூபி செட்டும் வாங்கினார்கள்.
என்ன இருந்தாலும் நிரஞ்சன் வீட்டில் வரவேண்டும் என்று தோன்ற அடுத்த சமாதான முயற்சி. நிரஞ்சனின் வீட்டிற்கு சென்று பேச, நீண்ட வாக்குவாதம், கெஞ்சல்கள் என்று பெரிய பிரயர்த்தனம்... அவர்களும் வர ஒப்புதல் தந்த பிறகு, இருவரும் மீண்டும் பெங்களூரு பயணம்.
நிரஞ்சன் கிடைத்த தனிமையை முடிந்த வரை பயன்படுத்திக்கொண்டான்.
வேண்டுமென்றே சமையலுக்கு உதவி செய்கிறேன் என்று, அவள் இடுப்பு வழியே கைகளை நீட்டி அடுப்பில் உள்ளதை கிளறி விட்டான். தன் மூச்சு காற்று அவள் கழுத்தில் தன் இருப்பை சொல்ல வைத்தான்.
அவள் சோஃபாவில் அமர்ந்திருந்தால் அவள் மடியில் தலை வைத்து, அவள் கைவிரல்கள் கொண்டு தலை கோத வைத்தான்.. இப்படி எவ்வளவோ முயற்சிகள்.ஒவ்வொரு முறையும் அவள் விருப்பம், முகம் காட்டும் உணர்வுகள், உடல் மொழி என்று அவளின் மாறுதல்களை கணக்கெடுத்துகொண்டான். அவளுக்கு எந்த வகையிலும் அவனின் தொடுகை வெறுப்பாக இல்லை. இயல்பாக அதை அவள் ஏற்க பழகினாள். அம்மாவின் வார்த்தைகள் வேறு அவளை அழைக்கழித்தது. நிரஞ்சனை விட்டுக்கொடுப்பது பற்றி அவளுக்கு யோசிக்கவும் பயம். இதற்கு பெயர் தான் காதலா என்றெல்லாம் அவளுக்கு தெரியாது. ஆனால், நிரஞ்சன் அவளுடையவன் என்று மட்டும் தெரியும்.
அவனது முத்தங்கள் அவளுக்குள் ஏற்படுத்திய முதல் மாற்றம், தனக்கென இவன் இருக்கிறான்... புதிய வாழ்க்கை காத்துகொண்டு இருக்கிறது என்ற உணர்வு.
காதலை பகிர்ந்துக்கொள்ள அவளுக்கு தயக்கம் இல்லை. காமம் என்றாலே வினயும், பயமும். மோகத்தின் பிடியில் ஆழ்ந்து போகும் போது, உணர்வு ரீதியாக நிரஞ்சனை காயப்படுத்திவிட்டால் என்ற தாக்கம்... அவளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
வித்யா விஸ்வம் இருவரிடமும் அதி சொன்ன இன்னொரு விஷயம் நிரஞ்சன் காதலால் அல்ல, தன்னை பரிதாபம் காரணமாக மணம் செய்து கொண்டான் என்று.
விஸ்வம் தாள முடியாமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.
“இல்ல அதி, வினய் கூட உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆன சமயம், நிரஞ்சன் கேட்டான், அதிய என்கிட்ட குடுங்க, நா பத்திரமா பாத்துக்குவேன் ன்னு. சி. ஏ முடிச்சிடுவேன், அவளை நல்லா வச்சுக்க என்னால முடியும்னு கெஞ்சினான்”.
கண்களில் உயிரை தேக்கி அதி, “அதுக்கு நீங்க என்ன சொன்னீங்கப்பா... “என்றாள்.
நிரஞ்சன் தன்னை காதலித்தானா என்பதே அவளுக்கு நெஞ்சம் விம்மியது. தனக்கு திருமணம் முடிந்த பிறகு அவன் ஏன் தன்னை கண்டுகொள்ளாமல் விடுத்தான் என்று புரிந்தவளுக்கு அழுத்தம் தாங்க முடியவில்லை. காதலை சுமந்து கொண்டு, தன்னை மட்டுமே எண்ணி தனியாக, தனிமையில் இருந்த நிரஞ்சனை அவள் இன்னும் கணவனாக ஏற்கவில்லையே என்ற கழிவிரக்கம்.
விஸ்வம் தொடர்ந்தார்…” நிரஞ்சன் கிட்ட அதிய என்னோட தங்கச்சி மகனுக்குதான் கொடுப்பேன். அவன் இப்போவே க்ரீன் கார்டு வாங்கிட்டான். வெல் செட்டில்ட். நீ சி. ஏ எப்போ பாஸ் பண்ணி, வேலைல கால் ஊனி, ரொம்ப டைம் எடுக்கும்னு சொன்னேன்.”
“அதுக்கு அவன் அதியும் படிக்கணும் சார்.கொஞ்சம் வெயிட் பண்ணலாம் சார்னு எடுத்து சொன்னான்.
எனக்கு கோவம். அவளை உன்பக்கம் சாய்க்க பாக்காத நிரஞ்சன். என் பொண்ணு நல்லா வாழணும். இப்போ நீ இங்க தங்கியிருக்க, படிக்க வித்யாதான் பணம் காட்டுறா. அதியோட நட்புக்காக உன்ன உள்ள சேத்தேன். இப்போ எங்களுக்கு துரோகம் பண்றேன்னு வார்த்தை விட்டேன். உன் கல்யாணம் வரை அங்க இருந்தவன் நீ கிளம்பின உடனே அவனும் கிளம்பிட்டான். யு ஆர் லக்கி அதி. வீம்பா இப்போ உன்னை கல்யாணம் முடிச்சிட்டான்.”
அப்பா சொன்னவற்றை கேட்டவளுக்கு அழுகை, கோவம் என கலவையான உணர்வுகள். எல்லாமே மாறிவிட்டது. இதுதான் விதியா'என்று மருகினாள்.
நிரஞ்சனை அவள் முழுதாக கணவனாக ஏற்க முடிவு செய்தவள் அவன் முயற்சிகள் புரிந்து தானும் தன்னை புது வாழ்க்கை வாழ தயார் படுத்திக்கொண்டாள்.
நிரஞ்சன் மருத்துவரை சந்திக்க வருமாறு கூப்பிட்டப்போதும் முழு மனதுனேயே அவனுடன் சென்று கவுன்சிலிங் எடுத்தாள்.ஆழ் மனதில் இருக்கும் கசடுகள் மெல்ல கரைய ஆரம்பித்தது.
திருமண வரவேற்பில் இருவரும் ஒருவருக்கொருவர் பொருந்தியவர்கள் என்று பார்த்தாலே புரிந்தது. நிரஞ்சன் அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் மகனின் வாழ்க்கை இனியாவது நன்றாக இருக்க கடவுளை பிரார்த்தனை செய்தாள்.
வித்யா விஸ்வமும் சென்னை வந்தாயிற்று. நாட்கள் நகர நிரஞ்சன் அதிதி இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாயிற்று. அதி நிரஞ்சனின் தொடுகையில் மயங்கினாள். அதற்கான காத்திருப்பு அவளுக்கு சுகமான ஒன்று. நிரஞ்சன் தனது பொறுமையை விட்டானில்லை. கவுன்சிலிங்கும் போய் கொண்டிருக்கிறது.
தாம்பத்தியம் பற்றிய கனவுகள் இருவருக்க ம் உண்டு என்பதை இருவரும் ஒப்புக்கொண்டார்கள். ஆனால், பெண்ணின் தயக்கம் அடுத்த நிலைக்கு தடையாக.
“ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது .இனி என்னென்ன நேர்ந்திடுமோ…
வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை
மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்றும் தோன்றவில்லை
வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை
பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை...
பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை
உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை
எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ
விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ
காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை
ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை இனி என்னென்ன நேர்ந்திடுமோ....
வைரமுத்துவின் வரிகள் இவர்களுக்காக எழுதப்பட்டதா...