மனம் - 25
கேட்கப்படுவதற்கு எல்லாம் எளிமையாகப் பதில் சொல்லி விட முடியும் என்றால் பல நேரங்களில் நம் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவது இல்லை.
கணவனின் கேள்விக்கு உண்டான பதில் தன்னிடம் இருந்தாலும் அவளுக்குச் சொல்ல முடியவில்லை.
அவன் தம்பியை முடியாமல் படுக்க வைத்தற்குக் காரணம் தான் என்ற குற்ற உணர்வு அவளுக்கு இப்பொழுதும் இருக்கிறதே.. தன் மாமியாருக்கு இந்த உண்மைத் தெரிந்தால், என்ன நடக்கும் என்ற பயமும் மனதில் இருக்கிறது.
எல்லாம் தெரிந்தும் தன்னைத் திருமணம் செய்தக் கணவனின் செயலில் அவளுக்குச் சந்தேகம் வரத்தானே செய்யும்.
இவ்வளவு பயத்திற்கும் நடுவில் தன் காதல் மனம் தான் அவனோடு வாழ வைத்துக் கொண்டு இருந்தது.
அதுவும் அவள் தந்தையிடம் தங்களைப் பற்றி அதியமான் கூறியபொய்க்கும், நியாயமான காரணங்கள் அவனிடத்தில் இருந்ததால், அவளின் எல்லாக் கோபங்களும் தோற்றுப்போய்க் காதல் என்ற புள்ளியில் கணவனிடம் சரண்டைந்தாள் தாரா…
எல்லாம் அவளால் ஏற்றுக் கொள்ள முடிந்ததவளுக்கு, அவனோட 'காதல்' தான் அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
நேரடியாக அவனிடமே கூறினான்.
"உங்க வீட்டுப்பிள்ளையைக் கேட்டு இருந்தால், நானே கொடுத்து இருப்பேன்... திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்கவேயில்லை… நீங்கள் எதுக்கு என்னை உங்களோட மனைவியாக உரிமையைத் தந்தீங்க , இன்னும் எனக்கு அதுதான் புரியவில்லை" கோபம் இருந்த போதும் அழுகையின் ஊடே கேட்டாள் …
"என்னடி, பேசற… உன்னை எதுக்குக் கல்யாணம் பண்ணினேன் என்று எதிர் காலத்தில் நமக்குப் பிள்ளைப்பிறந்த பிறகும் தெரியவில்லை என்று சொல்லுவாயா… என் காதல் உனக்குப் புரியவில்லையா.. இல்லை நம்மோட அந்தரங்கம் அரங்கேறும் நேரம் எதுவும் நீ உணரவில்லையா... பிடிக்காத பெண்ணைத் திருமணம் செய்து வாழ்க்கையை நரகமாக்கும் சைக்கோ என்று நினைத்தாயா என்னை" ..என்ற அவன் கோபத்தில் வார்த்தைகள் எல்லாம் தடித்து வந்து விழுந்தது.
"நான் அப்படிச் சொல்ல வில்லை.. எதுக்குப் பிடிக்காத என்னைப் பொய்ச் சொல்லிக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க" என்ற அவள் கேள்விக்கு…
"பிடிக்காது என்று நான் சொன்னேனா"...
"நீங்க சொல்ல வேண்டாம்... உங்கள் பார்வையில் எனக்கு உணர்த்தி இருக்கீங்க" என்றாள்.
"அதையே சொல்லாதே தாரா" என்றவன் "அதற்குப் பிறகு மனசு மாறியிருக்கலாம் என்று ஏன் நீ நினைக்க வில்லை" என்றவன் "அப்போ நீ எதுக்குத் திருமணம் வேண்டாம் முடிவுச் செய்தாய்.. யாரையோகாதலித்து இருக்காய் அப்படிதானே" என்று கேட்டான் அதியமான்.
காதலித்தேன் தான்…என்று இழுத்தவளின் செயலில் பொறாமையோடு கோபமும் சேர்ந்ததில் அவன் உச்சரித்த வார்த்தைகளின் வீரியம் கூடியது.
"யாரையோ மனதில் வைத்து என்னோடு வாழ்ந்தாயா?" என்று அவன் கேட்டதும்.
"வாய்க்கு வந்ததைப் பேசாதீங்க… நான் காதலித்தேன் தான்"… என்று மீண்டும் அமைதியானாள்.
"ஓஹோ… அவ்வளவு அந்தரங்கம்... என்னிடம் சொல்லத் தயங்கும் அளவுக்கு.. இனி இதைப் பற்றிப் பேச்சுவதற்கு நம்மிடையே எதுவுமில்லை என்று விலகிப் போகும் கணவனின் கையைப் பிடித்து நிறுத்தியவளின் கண்ணில் நிற்காமல் நீர்ச் சுரந்தது.
"இங்கே பாரு இப்படி அழுத டிராமாபோடாதே" என்றான் எரிச்சலில்…
அவள் மனதில் இருக்கும் யாரோமேல் கட்டுக்கடங்காத கோபம் மற்றும் பொறாமை உண்டானது.
இப்படித் தன்னிலை வரும் என்று நினைத்துப் பார்க்கவில்லை அதியமான்.
தான் உருகி உருகிக் காதலிக்கும் தன் மனைவிக்கு யாரோமேல் காதல் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சினத்தில் சிந்திக்கத் தவறி இருந்தான்… யாரோ ஒருவனை மனதில் வைத்துதன்னோடு எப்படி உறவாடுவாள் என்பது யோசிக்கத் தவறி இருந்தான் அதியமான். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்ற பழமொழிக்கு உதாரணமாக நின்றான் அங்கே.
"நீங்கள் கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்களேன்" என்ற தாராவின் வார்த்தைகளைக் காதில் வாங்காமல் கொதிநிலை இருந்தவன் "ம்ம் சொல்லு" என்றான்.
"நான்... காதலித்தது உங்களைத்தான்" என்றாள் உள்ளேபோன குரலில்…
அதிர்ச்சியாக அவளைப் பார்த்தவன்.. "இல்லை எனக்குப் புரியவில்லை" என்று தன் கண்களைச் சிமிட்டினான்…
"ஆமாம்" என்று தலையை ஆட்டியவள்…
நான் சதீஷ் பார்க்க மருத்துவமனை வந்த அன்றைய தினம் உங்களை முதல் முதலாகப் பார்த்தேன். உங்க தம்பிக்கா நீங்க தவித்த தவிப்பு அவன் மேல் இருக்கும் உங்கள் பாசம் என் மனதை அசைத்தது. அப்போது உங்க அம்மாவிடம் நீங்கள் நடந்து கொண்டவிதம். அவங்களை அரண் போல் தாங்கிய உங்கள் தைரியம் என்னை ஈர்த்தது.. உங்கள் செயலில் என் தந்தையின் சாயலைக்கண்டேன். அந்தத் தருணம் என்று மனதில் சிறு புள்ளியில் உண்டான காதல் என் மனதின் அடி ஆழம் வரை சென்று ஆணிவேராக ஊன்றியது.
பார்த்த உடனே காதல் என்பது நான் என்றைக்கும் நம்பிய தில்லை எனக்கு உண்டாகும் வரை…
அதை உணரவும்... என் மனதைத் திடம் படுத்தவும், அங்கே இருந்த கேண்டீனுக்குச் சென்றேன். அங்கே நீங்கள் வந்து பேசியதும், உங்க முகத்தில் எனக்கான உணர்வுகளைப் பார்த்ததும்" என்று வார்த்தைகளை முடிக்காமல் அன்றைய தினம் உண்டான வேதனையை இப்பொழுதும் உண்டானதில் கண்ணிரோடு அன்றைய துன்பத்தியும் சேர்த்தி முழுங்கினாள் தாரா.
அவளின் இந்தத் துன்பத்தைக் கண்டு அவளருகே அதியமான் நெருங்கி வரும்போது மீண்டும் … "என் காதல் தோன்றியச் சில கணங்களிலேயே மரணித்துப் போனது.. கணவனாக நீங்கள் என்னிடம் நெருங்கும் போது அடி மனதில் புதைந்துப்போன காதல் மீண்டும் அதன் வேர் உயிர் பெற்று மீண்டும் துளிர்ப்பதை என்னால் தடுக்க முடியவில்லை.
எனக்குக் காதல் நிறை வேற வேண்டும் என்ற ஆசையில்லை.. நீங்கள் காதலிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை… ஆனால் உங்களோட வெறுப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது" என்றவள். அவனை இறுக்கமாய்க் கட்டிப் பிடித்து இருந்தாள். அவன் மார்பில் முகத்தைப் புதைத்தவள்,
"உங்க கண்களைப் பார்க்கவே எனக்குப் பயம் தான்..இப்போ வரைக்கும் உங்கள் கண்களை நேருக்கு நேர்பார்ப்பதில்லை நான்" என்றவளின் நிலையை உணர முடிந்தது அதியமானால்…
பல நேரங்களில் அவனுடன் பேசும் போது அவன் முகத்தைப் பார்த்ததில்லை அவள், பெண்ணவளின் நாணம் என்றிருந்தான். அவன் அவளருகில் வரும் போது தடுமாறும் அவள் செயலில் வெட்கத்தோடு கூடிய நாணம் என்று நினைத்தான்.
அவள் காதருகே குனிந்தவன் "நமக்கான முக்கியமான நேரத்தில் அதுதான் கண்களை முடிக்கொள்கிறாயா" என்றவனின் கேள்வியில் முகம் சிவந்து சூடேறியது அவள் உடல்.
அவளின் வெட்கம் அவன் கோபத்தின் வெப்பத்தை நீரூற்றித் தணித்தது. காதல் உணர்வுகள் துளிர் விட்டதில் அவன் கரங்கள் மெல்ல அவள் மேனியில் பயணித்தது.
அவன் மார்பில் முகம் பதித்து இருந்தவள் மெல்ல நெளிந்தாள்.
அப்போது அவள் முகத்தை நிமிர்த்தினான் அவள் கணவன்.
நிமிர்ந்த மைவிழியாளின் இமைகள் மூடியிருந்தது.
காதல் மட்டுமே குரலில் இழையோட "அம்மூ" என்று அழைத்தவன் "என்னைப் பாருடி" … என்று அவள் விழிகளில் தன் முத்தத்தைப் பதித்தான்.
மெல்ல இமைகள் திறக்க அவன் முகத்தைப் பார்த்தவளுக்குக் காதல் மட்டுமே தவழ அவன் கைகள் அவளைத் தழுவியிருந்தது. மேலும் தன்னோடு நெருக்கமாக அணைத்தவன் மெல்ல…
"என் வாழ்க்கையில் காதல் செய்வதற்கெல்லாம் நேரமிருக்கவில்லை.. காதல் என்ற வார்த்தையை நான் சிந்தித்துக் கூடப் பார்த்ததில்லை. ஆனால் நானும் காதலித்தேன்... எந்த அளவுக்குக் காதலித்தேனென்றால், உனக்கான துயரத்தின் போது, என் இரு கைகளில் தான் உன் அடைக்கலம் இருக்கவேண்டும். நீ உன் தந்தையிடம் கூடப் பகர்வதை என்னால் தாங்க முடியாது அளவுக்குப் பொறாமை மனதில் உண்டாகும் அளவு உன் மேல் காதல் உண்டாகி என்னை ஆட்டிப்படைக்கிறது… என் மனைவியை அவள் பெற்றோராக இருந்தாலும், அவளை வேதனைப் படுத்துவதைத் தாங்க முடியாமல், என் தவறைத் திருத்தி அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டும் அளவுக்கு உன் கண்ணீர் என்னை வலிக்கச் செய்யும் அளவுக்கு உன் மேல் காதல் பித்தாகி அலைகிறேன் நான்.
காதலை என்னால் வார்த்தைகளைக் கொண்டு பேசி உன் காதை நிரப்ப முடியாது… என் உடல் நிலைசரியில்லை என்ற போதும்... என் அம்மாவின் அன்பை மீறி, உன் அரவணைப்புத் தேடி... உடல் ஒத்துழைக்காத நேரத்திலும், காரை ஓட்டி உன்னைத் தேடி வரும் அளவுக்கு, உன் மேல் உள்ளகாதல் என் உணர்வோடு ஒன்றி, என்னில் நிறைந்த இருக்கிறது.. அப்படிப் பட்ட என் காதலைப் பழிவாங்க என்று சொன்ன உன் வார்த்தையின் வீரியம் என்னைக்கொல்லாமல் கொல்லுதுடி” என்றான் அதியமான்
கணவனின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கு அதிர்ச்சிதான்.. எப்படி இவ்வளவு காதல் என்று கேள்வியோடு அவனைப் பார்த்தாள்.
“உன்னோட சுயநலம் இல்லாத மனசு முன்னே என் கோபம் எல்லாம் வீழ்ந்து விட்டது.
நீ நினைத்து இருந்தால் எல்லா உண்மையும் சொல்லி இருக்கலாம், ஆனால் சொல்ல வில்லைச் சதீஷ் நினைவுத் திரும்பவில்லை... அதனால் தாரிகாவின் வாழ்க்கை எங்கே கேள்விக் குறியாகி விடுமோ என்று நினைத்தாய். அதிமட்டுமின்றி அவர்கள் காதல் வெற்றி அடைய, நீ சுயநலம் இல்லாத எடுத்த முடிவு, உன் மேல் காதல் பிறந்தது ” என்றான் அதியமான்.
அவன் காதல் கொண்ட தரும் சொன்னதும் அவளுக்கு மனதில் நிம்மதிப் பரவியது... தன்னைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான் என்பதே அவள் காதலுக்குக் கிடைத்த அங்கீகாரமாக இருந்தது தாராவிற்கு.
தன் காதலைச் சொல்லாமலே அவனுக்குத் தன் மேல் காதல் வந்ததை உணர்ந்ததும் இந்தப் பந்தம் இறைவனால் உண்டாக்கியது என்று நினைத்தாள்.
தன்னைப் பற்றிய அவள் மனதில் உண்டான தவறான எண்ணத்தை நினைத்து வருந்தியவன், அவளிடம் தன் மனதைத் திறந்தான். அமைதியாகத் தங்கள் அறையில் இருக்கும் தங்கள் திருமணம் நாளில் எடுத்த புகைப்படத்தின் சட்டத்தில் இருக்கும் தங்கள் நிழலைப் பார்த்துக் கொண்டு இருந்தவனின்முதுகுப்புறம்வந்து அவனை அணைத்து இருந்தாள் தாரா.
அவளின் அணைப்பில் இருந்த நெருக்கம்… இறுக்கம் எல்லாம் அவள் மனநிலையைச் சொல்லியது.
அதை அனுபவித்தபடியே அமைதியாக இருந்தான் அதியமான்.
"என்னை மன்னித்து விடுங்கள்.. உங்களிடம் மனம் விட்டுப் பேசி இருக்கணும்… என்னைப் பற்றி மட்டுமே சிந்தித்து நடந்து கொண்டேன்" என்று ஒவ்வொரு வார்த்தையும் முடியும் போது அவன் முதுகில் தன் இதழ்களால் முத்தங்கள் பதித்தாள் அவன் முதுகில்.
அவளைத் தன் முன் கொண்டு வந்து நிறுத்தியவன்…
"ப்ளாக் அன்ட் வொய்ட்படத்தில் வரும் கதாநாயகி என்று நினைப்பு டி உனக்கு... பெரிய தியாகி மாதிரி நீ எடுத்த முடிவின் விளைவைப்பார்த்தாயா?… அமரன் தன் பெற்றோரைப் பிரிந்து இருக்கச் செய்து இருக்கிறது" என்றான்.
"நீ என்ன நினைத்து எல்லாம் செய்தாய்.. உன் அப்பாவிற்குத் தெரிந்தால் எதாவது ஆகும் என்று.. ஆனால் என் மூலம் அவருக்குத் தெரிந்ததா... அவ்வளவு தான் எப்படியும் உண்மை வெளியே வந்து விடும்… அதற்கு அவன் தாரிகாவோட பையன் என்றே அடையாளப் படுத்தி இருக்கலாம்… இனி எதிர்காலத்தில் அவன் வளர்ந்து வந்து என் பெற்றோரிடம் என்னைப் பிரிச்சுட்டாங்க என்று அவன் நினைத்தாலோ.. இல்லை நம்மைக் குற்றப்படுத்தினாலோ என்ன செய்வதென்று யோசித்தாயா" என்று கேட்டான் அதியமான்.
இல்லை என்று தலையை ஆட்டியவளிடம் "நாளை யார் எப்படி மாறுவாங்க என்று தெரியாது, தாரா என் சொந்த அனுபவம். தாரிகா உன் வாழ்க்கையைக் கெடுத்து அவள் தவறைச் சரிபண்ணப் பார்க்கிறாள். அதைக் கேட்டு இனி என்ன பண்ணுவாங்கென்று தெரிய வில்லை. எனக்கு உன்னிடம் ஒரு கேள்வி" என்று தன் மனைவி பார்த்தான் அதியமான்.
"சொல்லுங்க" என்றாள் தாரா.
"உனக்கென்று பிள்ளைப்பிறந்தால் அமரன் மேல் இருக்கும் அன்புக் குறைந்து விடுமா? என்ற கணவனின் கேள்வியில் அவன் அணைப்பில் இருந்த வெளியே வந்தவள் அவன் தள்ளி விட்டாள்... படுக்கையில் சென்று அமர்ந்து அழ ஆரம்பித்தாள்…
"என்னடி நீ எது சொன்னாலும் அழ ஆரம்பித்தால், என்ன செய்ய" என்றவன்…" நானும் அந்தப் பிளக் அன்ட் வொய்ட் படம் பாத்துஇருக்கேன்டி" என்றான்.
அவள் தன் அணைப்பில் இருந்து விலகியது பார்த்து "பையன் என்றதும் புருஷன் கூட வேண்டாம் அப்படித் தானே" என்றவனின் வார்த்தைகள் புரியாமல் பார்த்தவளிடம் "இவ்வளவு நேரம் இங்கே தானே இருந்தே" என்று தன் இடபக்க மார்பைத் தொட்டுக் காட்டினான்.
கணவனின் சீண்டலில் முகம் திரும்பியவள்
"நீங்கள் எப்படிச் சொல்லலாம்"…
"அமரன் தான் உங்களை என்னிடம் கொண்டு வந்த சேர்க்கக் காரணம், என் வாழ்க்கைத் தொடங்க முதல் புள்ளி அவன் தான். அவனுக்கு நான் தான் அம்மா, இதில் எந்த மாற்றமும் இல்லை" என்றவளின் உறுதியில் அசந்து போனான் அதியமான்.
"தாரிகா, கேட்க மாட்டாள் தான் நினைக்கிறேன்… அவள் செயல் அப்படித் தான் நினைக்க வைக்கிறது. அவர்களுக்கு என்று இன்னொரு குழந்தைப் பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்றாள் தாரா.
"ம்ம் இதுவும் சரிதான்" என்றவன் "அவர்கள் இருவரும் கேட்க வரமாட்டாங்க, ஆனால் சதீஷ் உண்மைத் தெரிய வரும் நேரம், என்ன செய்வான் தெரியாதுத் தாரா" என்றான் அதியமான்.
கணவனின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் தாரா.
“என்ன சொல்ல வரீங்க” என்றவளைத் தன்னருகே இழுத்தவன்
என் அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டு நான்… நேரடியாகத் தாரிகாவிடம் பேசி விட்டேன்
அம்மா மனதில் நம்மோட கல்யாணம் பிடிக்கவில்லை என்பதை விட உன்னை மரியாதைக் குறைவாக நடத்தியது… எனக்குப் பிடிக்கவில்லை என்பதை விட … எந்தத் தவறும் செய்யாமல் உன்னை எல்லோரும் தண்டித்தது எனக்கு ரொம்ப வேதனை உண்டாக்கியது
அம்மாவிடம் சொல்லிப் புரிய வைக்க நினைத்தேன் ஆனால் அதில் தாரிகா வாழ்க்கை அடங்கி இருக்கிறது… அம்மா கோபத்தில் சதீஷ் வீட்டை விட்டு வெளியேறி விடச் சொன்னால் அவன் நிலையை யோசித்தேன் அதையே தாரிகாவிடம் சொன்னேன்.
சதீஷிற்கு இந்த நிமுடம் வரை அவர்களுக்குக் குழந்தை இருப்பதைப் பற்றிக் கேட்டானா என்ற கேள்விக்கு அவள் பதில் இல்லை என்பது தான். அப்போ அவன் நினைவில் இல்லை என்று தானே அர்த்தம் எனக் கேட்டேன் ஆமாம் என்றாள். அப்போ அமரன் உன் பையன் என்று தெரிந்தால் என்ற என் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை ..
அப்படி மகன் வேண்டும் என்றால் இரண்டு வீட்டுச் சைட் எல்லா உண்மையும் சொல்லி வாங்கிக்கோங்க என்று சொல்லிட்டேன். இதெல்லாம் யோசித்துப் பயந்து விட்டாள் ” என்றான் அதியமான்.
அவளிடம் எதிர்காலத்தில் இந்த உண்மை வெளியே வந்தால், அமரனுக்கு ஏற்படும் வேதனையும் கஷ்டத்தையும் எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தேன். அவனுக்காக நாங்கள் எதுவும் செய்யவில்லை இனியும் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லிட்டாள்.எதிர்காலத்தில் எனக்குப் பிள்ளையே பிறக்கவில்லை என்றாலும் கூட அமரனிடம் உரிமைக் கேட்டு வரமாட்டேன்.. அவளுக்குப் பையன் எதிர்காலம் நன்றாக இருந்தால் போதும் என்று சொல்லி விட்டாள்.
"நான் வேண்டுமென்றால் அவளிடம் பேசவாங்க" என்று கேட்டாள் தாரா.
"இப்பொழுது வேண்டாம்" என்றான் அதியமான்.
"சரி நான் போய் யமுனா அக்காவிடம் இருந்து பையனை எடுத்துட்டு வரேன்" என்று எழுந்தவளைப் பிடித்து இழுத்தவன் "அவன் இன்றைக்கு அங்கேயே படுக்கட்டும் என்றான்.
மெல்ல அவள் இடுப்பில் கையைப் போட்டு அணைத்தவன் “நான் கோபமாக இருக்கேன் தாரா” என்றான் குரலில் காதலோடான காமம் இழையோட…
அதுதான் மன்னிப்பைக் கேட்டேனே என்றாள்.
"உனக்குச் மன்னிப்புக் கேட்கத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்" என்றவன் "வா நான் சொல்லித்தரேன்" என்று அவளை அணைத்திருந்தான்.
அவன் அணைப்பில் உடலில் வெப்பம் ஏற நாணத்தால் கண்கள் முடினாள் தாரா.
அவள் வழிகளில் தன்முத்தத்தைப் பதித்தவன் "என்னைப் பாருடி"… என்றான் கிறக்கமாக.
"ம்ம் சொல்லுங்க" என்று விழித் திறந்தவளின் இதழைத் தன் வசப்படுத்தியவன் அவள் இமையை மூட அனுமதிக்கவில்லை.
தன் காதலில் மருதானியின்று அவளைச் சிவக்க வைத்து அழகுப் பார்த்தவன் அவள் காதலைக் கடனின்றி வாங்கிக் கொண்டான்.
நேற்று என்பது இன்றில்லை…
ஆம் மனிதனின் மனமும் அப்படித் தான் நேற்றைய நல்லவன் இன்று இருப்பதில்லை… அதே பொல் இன்றைய கெட்டவன் நாளைய நல்லவனாகிறான்.மாறும் உலகத்தில் மாற்றங்கள் உண்டாகும் வாழ்க்கையில் அன்பு மட்டுமே என்றும் நிறைவைத் தரும்.
தாராவின் வாழ்க்கையில் என்றும் அவளுக்கு நிறைவைத் தருவது அன்பு மட்டும் இருக்கும் மனம்.
அதைச் சோதித்துப் பார்க்க மீண்டும் ஒரு சூழலை ஆறு வருடங்கள் பின் விதி உண்டாக்கி அவள் முன் வந்து நின்றது… அப்பொழுது மற்றவரின் நன்மையை மட்டுமே சிந்தித்துச் செயல் படுமா அவள் மனம்…
தொடரும்…