எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா -26

subasini

Moderator
மனம் - 26

மாற்றம் என்பதைப் புரிதலோடு கையாண்டால் கவலையின்றி ‌வாழலாம்…

ஆறு வருடங்கள் பிறகு…
அதியமான் வீட்டில் காலை நேரம்…

"அமரா…‌ வா வந்து சாப்பிடு …‌ அம்மாவை டென்ஷன் பண்ணாதே" என்ற தாராவின் வார்த்தைகளைக் கேட்டு ‌தன் பாட்டியின் மடியில் அமர்ந்து கொண்டு இருந்தவன்," நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள் அம்மா, அப்போ தான் நான் சாப்பிடுவேன்" என்றான் அமரன்.

"முடியாது செல்லம்" என்றவள் "உனக்குப் பதிலாக நானே சாப்பிட்டுக்கிறேன்‌" என்று அவனுடைய உணவை உண்டாள் தாரா…

"பையனோட சாதத்தை அம்மா சாப்பிடுவாங்களா"… என்று கேட்டான் அமரன்…

"நான் சாப்பிடுவேன் டா" என்றபடியே எழுந்துச் சென்றாள் தாரா.

"பார்த்தீங்களா, பாட்டி" என்று சிணுங்கினாள் அமரன்…

"அம்மா சொல்றதைக் கேளுத் தங்கம்" என்ற சாந்தியம்மாவிடம் "நீங்கள் எப்போதும் அம்மாவிற்குத் தான் சப்போர்ட்" என்று அழத்தொடங்கினான்.

"அச்சோ என் செல்லம் அழறானா"…‌என்று அவனை அணைத்தார் சாந்தியாம்மா…

பின்னர் "உன்னோட அம்மா உன்னைப் பிரிஞ்சு இருக்க மாட்டா… அது தான் அவள் உன்னைப் புனிதாபாட்டி வீட்டுக்கு அனுப்புவதற்குத் தயங்குகிறாள் தங்கம், நம்மபாட்டியை இங்கே வரச்சொல்லலாம்" சாந்தியம்மா அமரனிடம் கூறினார்.

"அங்கே நல்லா இருக்கும் பாட்டி…‌ நளினிசித்தி இருப்பாங்க… அவர்கள் பையன் வருண் தம்பியும் இருப்பான்... நல்லா ஜாலியாக விளையாடலாம்" என்று அங்கே ஏன் போக ஆசைபடறேன் என்று அவன் கூறிய விஷயங்கள் அனைத்தும் நியாயமானதாக இருந்தது.

"சரி நீ போய் அம்மாவிடம் சமத்தாகச் சாப்பிடு, அவங்களிடம் எதிர்த்துபேசியதற்குச் சாரியும் கேளு.. நான் உன் அம்மாவிடம் பேசிப் பர்மிஷன் வாங்கித் தரேன் என்று அவனைத் தாராவிடம் அனுப்பி வைத்தார் சாந்தியம்மா.

தாராவிடம் வந்த அமரன் அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பிச் சாரி என்றான்.

அமைதியாக இருந்தவளிடம் அவன் கையில் இருக்கும் உணவுதட்டைத் தன் அம்மாவிடம் கொடுத்து ம்ம் ஆஆஆ என்று வாய்திறந்து நின்றான். அப்பொழுது அமைதியாக இருந்தவளின்‌செயலில், தட்டில் இருந்த உணவை எடுத்து ஒரு வாய் அவளுக்கு ஊட்டியவன் பசிக்குது என்றான் அவளைப் பாவமாகப் பார்த்து… மகனின் செயலில் அச்சோ என்றபடி உணவை அவனுக்கு ஊட்டத்தொடஙகினாள் தாரா.

உணவை உண்டு முடித்ததும் யமுனாவை‌ வம்பிழுக்கச் சென்றான் அமரன்.அவன் பொழுதுப் போக்கே யமுனாவிடம் வமபிழுப்பது தான்.

அப்போது தாராவைக் காண வந்தார் சாந்தி.
"ஏன் தாரா அவனை அனுப்ப மாட்டேங்கிறாய்" என்று கேட்டார்.

"அவளை விட்டு எப்படி அத்தை இருக்கிறது" என்றவளின் கண்கள் கலங்கியது.

"புரிகிறது தாரா, ஆனால் இதெல்லாம் பழகிவிடனும் குழந்தைகளுக்கு… எப்பொழுதும் நம் கைகளில் இருந்தால் அவங்க மற்ற உறவுகளிடம் எப்படிப் பழகுவது.. நானும் அவனும் உங்க ஊருக்குப் போய்க் கொஞ்சம் நாட்கள் இருக்கிறோம். உன்னோட பிரசவம் முடிந்ததும் நீயும் அங்கேயே வந்து தங்கி இருக்கலாம்" என்றார்சாந்தியம்மா.
"இங்கே பிரசவம் நேரம் புனிதா வரட்டும்" ‌என்றார். தன் மாமியாரின் வார்த்தைகளை அதுவும் சரி என்று புரிந்துக் கொண்டவள் "சரி அத்தை" என்றாள்.

சதீஷ் மற்றும் தாரிகா வெளிநாட்டில் செட்டில் ஆகுறோமென்று‌த் திடிரெனக் கூறி, அதற்கு வேண்டியது எல்லாம் செய்ய ஆரம்பித்த நேரம்... சாந்தியம்மாவிற்கு என்ன தான் பெரிய மகனின் மேல் கோபம் இருந்தாலும், அவனை விட்டு வெளி நாட்டுச் செல்லும் அளவுக்குக் கோபம் இல்லை.

அதனால் சதீஷிடம் வரவில்லை என்று கூறியவர்... அதியமான் வீட்டிற்குச் செல்லதயங்கினார்.தன் மாமியார் வெளிநாட்டுச் செல்லவில்லை என்று தெரிந்ததும்... அவரிடம் நேரில் சென்று பேசி மன்னிப்புக் கேட்டு அவரைத் தன்னோடு அழைத்து வந்து விட்டாள் தாரா.

அதியமான் கூறியது போல் அம்மா மகன் உறவில் இருக்கும் பாசம் அவரைக் கட்டி இழுத்து வந்தது.

அவள் மேல் கொஞ்சம் கொஞ்சமாக வந்த நல்ல எண்ணங்கள் ஒரு புள்ளியில் அவள் மேல் இருந்த கோபத்தைக் குறைத்தது அதனால் அவர்களோடு வந்து வாழ முடிவு செய்து அவர்களோடு ஒன்றியும் போனார்சாந்தி.

தாரிகாவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது தாரா விடம் அவர் மரியாதை மீறியபாசத்தை உணர்ந்தார் சாந்தி அதுதான் அவளிடம் வர‌‌காரணமாக இருந்தது.

எல்லாம் நன்றாகச் சென்றுக்கொண்டிருந்தது.

இன்னும் நான்கு மாதங்கள் பிறகு தாராவிற்கு வளைகாப்புச் செய்ய முடிவு செய்து இருந்தனர். இரு வீட்டிலும் அதற்கு முன் பாட்டி வீட்டில் விருந்தாடசெல்லக் கேட்டு அடம் பிடித்துக் கொண்டு இருந்தான் அமரன். அதுதான் தாரா வேண்டாம் என்றது. கர்ப்பம் காரணமாக வீட்டில் இருந்தே தன் வேலையைப் பார்க்கத் தொடங்கியிருந்தாள் தாரா.

மாலை நேரம் வேலை முடித்த வந்த அதியமான் கோபமாகத் தாராவின் முன் ஒரு கவரைத் தூக்கி வீசியவன் "நான் அன்றைக்கே சொன்னேன் கேட்டாயா? பாரு இப்போ" என்றான்.

எதுவும் தெரியாமல் அந்தக் கவரைப் பிரித்தவளின் கண்கள் நிறைந்தது கண்ணீரால்.

மகனின் சத்தத்தில் தன் அறையில் இருந்து வந்தார் சாந்தி.

அமரன் யமுனா உடன் வெளியே சென்றிருந்த நேரம் அது..

"ஏன் தம்பி இவ்வளவு கோபம்…‌ என்னாச்சு" என்று கேட்டார்.

அப்போது தன் மனைவியின் முகத்தைத் தான் பார்த்து இருந்தான் அதியமான்.

சொல்லுடி என்று வார்த்தைகளைத் தொங்கி இருந்தது அவன் பார்வையில்.

அழுத விழிகளோடு கணவனை எதிர் கொண்டவளுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை.

எப்படி மாமியாரிடம் கூறுவது என்று பயந்தாள் தாரா.

"இப்படி அழுதேவை நான் மனுஷனா இருக்க‌‌மாட்டேன்‌" என்றான் கோபமாக அதியமான்.

"நீ எதற்காக வந்ததில் இருந்தே அவளைத் திட்டிக் கொண்டு இருக்கிறாய்... என்ன சொன்னால் தானே‌தெரியும்" என்றதும்…
"நீங்கள் உங்கள் செல்ல மருமகளிடமே‌கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்" என்று போய்த் தன்னறையில் படுத்தான் அதியமான்.

"என்ன தாரா, தம்பிக்கு எதுக்கு இவ்வளவு கோபம்" என்று கேட்டார்சாந்தி.

அது வந்த அத்தை என்றவள் நம்ம அமரன் என்று வார்த்தைகளை மென்று முழுங்கினாள்‌தாரா.

"எதுவாக இருந்தாலும் சொல்லுதாரா" என்ற சாந்தியின் கடுமையான முகம் மாற்றத்தைக் கண்டவள் தாரிகா மற்றும் சதீஷ் கல்லூரிக் காலத்தில் ஏற்பட்ட காதலில் இருந்து, அவனை‌த் தாரா அடித்ததில் அவனுக்கு நடந்த விபத்து அதில் தான் அவன் காதல் அதியமான் அறிந்து கொண்டு அவனைச் சிகிச்சைச் செய்து நடக்க வைத்து அவன் காதலித்த பெண்ணைக் கல்யாணம் செய்து வைத்தான் என்பதும் அதில் தங்கள் திருமணம் நடக்கக் காரணமாக அமரன் இருந்தான் என்பதும் எல்லாம் அவருக்குப் புரியும் படி நடந்த அனைத்தையும் மறைக்காமல் கூறினாள் தாரா.

எவ்வளவு பெரிய விஷயம் இது..
"ஏன் மறைத்தாய்‌"என்றவர் "என்ன இருந்தாலும், அமரன் அவர்கள் பிள்ளைதானே தாரா, அவங்க எப்படி உரிமை கேட்காமல் இருப்பாங்க.. தப்புபண்ணீட்டிங்க நீங்கள் இரண்டு பேரும்" என்றார்.

"அவர் மேல் தவறில்லை அத்தை அவரை எதுவும் சொல்லாதீங்க... அவர் என்னிடம் கூறினார்... என்ன இருந்தாலும் உண்மை வெளியில் வரும்… அதுமட்டுமின்றிப் பெற்றவர்களிடம் பிள்ளை இருப்பது தான் நல்லது, எதிர் காலத்தில் பிள்ளைக்கு மனவேதனையே தரகூடாது" என்று எடுத்துக் கூறினார் என்று அழுதாள் தாரா.

"என்னால் அமரன் இல்லாமல் எப்படி அத்தை" என்று உடைந்து அழும் மருமகளின் பாசம் கண்டு அவருக்குக் கண் கலங்கியது…
அவளை ஆறுதல் படுத்தியவர் "தாரிகாவிடம் பேசிப் பார்" என்றார்.
சரி அத்தை என்றவள்... தாரிகாவை அழைத்தாள்…

"ஹலோ... சொல்லு, தாரா" என்ற தாரிகாவின் குரலில் இருந்த மாற்றம் தாராவிற்கு உணர முடிந்தது.

இருவரும் எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று தயங்கி அமைதியாக இருந்தனர்.
ஒரு கட்டத்தில் தாரா "இல்லை இங்கே வக்கீல் நோட்டீஸ் வந்து இருக்கிறது தாரிகா" என்றாள் தாரா.

அதைக் கேட்டதும் தாரிகாவின் கண்கள் நிறைய " தாரா" என்றவள் சிறு மௌமனத்திற்குப் பின் அழுகையினூடே "என்னை மன்னித்து விடு. எல்லாம் அவரோட இஷ்டத்துக்குச் செய்திருக்காரு… எனக்கும் கெடு வைத்து இருக்கார்" என்றாள் தாரிகா…

"கெடுவா என்ன சொல்ல வருகிறாய்... புரியும் படிச்சொல்லு டி" என்றாள் தாரா.

"உன்னோட வளைகாப்பிற்கு வந்து... நான் அமரனை உன்னிடம் இருந்து வாங்கி வர வேண்டும், இல்லையென்றால் எனக்கு விவாகரத்துத் தருவாராம்… அதுவும் இரண்டாவது குழந்தை அமீத்தை என்னிடம் இருந்து வாங்கி விடுவாராம். அவரோட வக்கீல் என்னிடம் பேசினாங்க. உங்க வாழ்க்கையில் நல்லது நடக்க உங்க முதல் குழந்தை வாங்கி வாங்க, அப்போது தான் இரண்டாம் குழந்தை உங்களோட இருக்கும். முதல் குழந்தை அவர் பார்க்காத இருக்கக் காரணம். நான் தான் அதனால் இரண்டாம் குழந்தை என்னிடம் இருந்து பிரிக்க முடியும் சொல்றார்த் தாரா” என்ற தாரிகா, போனில் அழுத அழுகையை நிறுத்தத் தெரியாமல் தவித்தாள் தாரா.

தாரிகாவின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று அவள் செய்த விஷயம், அவள் வாழ்க்கையிழந்து, தன் இரண்டாவது குழந்தையையும் இழக்க நேரிடும் என்று உணர்ந்தாள் தாரா. தன் விழிகளைத் துடித்துக்கொண்டு கணவனைக் காணபதற்குத் தங்கள் அறைக்கு வந்தாள்.


தன்னருகே வந்த நிற்கும் மனைவியைப் பார்த்த அதியமான்…

"ம்ம் என்ன பண்ணனும் நான்" என்று நேரடியாகக் கேட்டான் அவளிடம்.

"தாரிகாவிடம் நான் பேசினேன்" என்றாள் தாரா.

"என்ன சொல்லறாள்" என்ற அதியமான் கேள்விக்கு…

சதீஷ் அவளிடம் கூறிய அனைத்தும் தன் கணவனிடம் சொன்னாள் தாரா.

"அவள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்த விஷயம்… அப்பறம் அமரன் எதிர்காலம் யோசிச்சேன், நீங்க சொன்னது தான் சரி" என்றவளின் வார்த்தைகள் அழுகையில் முடிந்தது.

"இதற்குத் தானே நான் நான்கு வருடங்களுக்கு முன் கூறினேன்.
என் பிள்ளைக்கு விவரம் வந்தாச்சு… அவன் வாழ்க்கையில் ஏன் இந்த மாற்றம் என்று எப்படிப் புரிய வைப்பேன்" என்று தலையில் கை வைத்து அமர்ந்த அதியமான் குரல் உடைந்திருந்தது.

மருமகள் கூறியதெல்லாம் கேட்டதும் சாந்தியம்மாவிற்குத் தன் இரண்டாவது மகன் இப்படிச் செய்திருப்பானா என்றகேள்வி மனதில் தோன்றியது. அவன் மேல் இருந்த நம்பிக்கையில் விரிசல் வீழ்ந்தது. தாரா அன்றிய தினம் அவனிடம் நடந்துக்கொண்டது சரி என்று தான் ஒரு தாயாக, பெண்ணாக யோசித்ததில் அவருக்குத் தோன்றியது.


இத்தனை வருடம் கழித்து எதற்கு இப்படியொரு முடிவு என்ற கேள்விக்குச் சதீஷிடம் தான் பதில் உள்ளது. எப்படியும் அவன் வருவான் அப்போது கேட்டவேண்டும் என்று எண்ணினார்.

அமரனைப் பிரிந்து எப்படி இருப்பார்கள் இந்தத் தாரா மற்றும் அதியாமான் என்று சிந்தித்தார். இதைபற்றி யோசிக்கும் போதே அவருக்குக் கண் கலங்கியது.

அமரனின் சொந்தம் பெற்றோராக வாழ்ந்த அவர்கள் வாழ்க்கையில் எங்கேயும் வித்தியாசம் அவர் கண்டதில்லை.

தாரிகா அமரனிடம் சின்னம்மாவாகத் தான் நடந்து கொண்டிருந்திருக்கிறாள்.

அவளுக்குப் பிறந்த இரண்டாவது குழந்தையிடம் காட்டும் அன்பும் பாசமும் எதுவும் அமரனிடம் அவள் காட்டி யாரும் பார்த்தில்லை. அப்படியிருக்க இந்த உண்மையை அறிந்தும் சாந்தியின் அதிர்ச்சிக் குறைய நேரம் எடுத்தது.

இதுவே தாரா வேறு வீட்டிற்குத் திருமணம் செய்து சென்றிருந்தால் அமரன் நிலை இன்றைய சம்பவம் இரண்டு குடும்பங்கள் இடையே நடந்த இருக்கும் அல்லவா.

இத்தனை வருடங்கள் பிறகு இப்போது எதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவருக்கு அறிய வேண்டி இருந்தது.
இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறது அதற்குள் மனம் மாற வாய்ப்புள்ளது என்று நப்பிக்கைக் கொண்டார்சாந்தி.

மெல்ல அதியமான் அறைக்கு வந்தார்.

அங்கே கணவன் மனைவியிடையே சண்டைப் போய்க் கொண்டிருந்தது… இல்லை இல்லை அதியமான் தாராவைத் திட்டிக் கொண்டு இருந்தான்.

எல்லாம் கேட்டபடி வந்தார் சாந்தி.

"நீ எதற்குத் தம்பி தாராவைத் திட்டிட்டு இருக்க… அவள் என்ன செய்வாள். நல்லதுதானே யோசித்தாள்… விடு இது தான் விதி என்று நினைச்சுக்கோ" என்றார்சாந்தியம்மா.

"எப்படி அம்மா விட.. அவன் இல்லாமல் ஒரு நாள் கடப்பதற்குக் கஷ்டம்... இனி வரும் காலங்களில் அவன் நம்முடன் இல்லை என்று நினைக்கவே பயமா இருக்கு" என்றான் அதியமான்.

உங்க மருமகள் அவனைப் பிரிந்து இருப்பாளா என்ற கேட்டான் அதியமான்.
அவர் வருத்தமாக அவளை‌ ஏறிட்டார்.

"நான் வேண்டுமென்றால் சதீஷிடம் பேசிபார்க்கவா" என்றார்சாந்தியம்மா.

"இல்லை வேண்டாம் அம்மா... பேசி முடிவு எடுக்க வேண்டுமென்றால், நம்மிடம் முதலில் பேசி இருப்பான். இப்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி‌இருக்க மாட்டான்" என்றான் அதியமான்.

"ஏன் இப்படிப் பண்ணினான் என்று தான் தெரியவில்லை" என்று சிந்தித்தான். "வேற ஏதோ அவன் மனதில் இருக்கும்மா, அவன் வரட்டும்" என்றான் அதியமான்.

"புரியுதுத் தம்பி" என்றவர் தாராவைத் தான் பார்த்தார்.


அவளோ என்ன செய்ய என்று தெரியாமல் தவித்தாள்.

"உங்க தம்பி தாரிகாவிற்கு விவாகரத்துக் கொடுப்பாராம்… அமரனை அவங்களுக்கு நாம் தரவில்லையென்றால்" என்றாள் உள்ளே போன குரலில்…

ம்ம் இது நடக்கும் நினைச்சேன்…

"நான் அப்பவும் சொன்னேன் அவன் பெற்றவர்களிடம் பேசலாம் என்று கேட்டாயா? இப்போ பாரு" …என்றவன்…

"உன்னால் முடியுமா? அமரனை விட்டுப் பிரிந்து இருக்க" என்று கேட்டான் அதியமான்.

கணவனின் வார்த்தைகளைக் கேட்டு அவளுக்குத் தலைச் சுற்றத் தொடங்கியது…

இனி வரும் நாட்களில் அமரனைக் கூடவே வைத்துக் கொண்டு சுற்றினாள் தாரா…

தொடரும் ...
 
Top