Sowndharyacheliyan
Writer
வான்மழை 30
அதிகாலை அடித்த அலாரத்தை வேகமாய் நிறுத்தியிருந்த சுபா, வேகமாய் திரும்பி பக்கத்தில் பார்க்க, சாத்வி இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தாள். பிள்ளையின் தூக்கம் கலையாதவாறு வேகமாய், எழுந்தவள் முகம் கழுவி, கலைந்திருந்த முடியை தூக்கி கொண்டையிட்டவள், வேகமாய் சென்று பால்கனியில் நிற்க,
அவளை ஏமாற்றாது வழக்கம் போல், அப்போது தான் பரணி இவளை கடந்து கடையை திறப்பதற்கு சென்றான். வழமை போல் கணவனின் தரிசனத்தை கண்டவள், தான் நின்றிருந்த மாடிவீட்டில் இருந்து வலப்பக்கம் பார்க்க, முத்துப்பேச்சி கோலமிட்டுக் கொண்டிருந்தவர், இவளை கண்டு விட்டு, முகத்தை திருப்பி கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.
அதில் லேசாய் சிரித்தவள், நேரமாவதை உணர்ந்து வேகமாய் வேலைகளை ஆரம்பித்திருந்தாள். முதல் வேலையாக குளித்து முடித்து சாமி படத்திற்கு தீபம் ஏற்றியவள், உணவு வேலையை பார்க்க தொடங்கியிருந்தாள்.
அடுப்பில் ஒருபக்கம் சாதத்தினை வைத்தவள், அடுத்த பக்கம் சாம்பாரினை வைப்பதற்குள், பிள்ளை எழுந்து விட்டிருக்க, அவளிற்கு பாலை அடுப்பில் வைத்தவள், சாத்வியை தூக்கி முகம் கழுவி வர, பால் காய்ந்திருந்தது.
பின், பாலினை சிப்பரில் ஊற்றி, பிள்ளையிடம் கொடுத்தவள், அவளை தூக்கி கொண்டு வெளியே வர, இவளை எதிர்பார்த்தது போல் பேச்சி அவர் வீட்டின் வெளியே நின்றிருக்க, வெளியே வந்தவள், பிள்ளையை கீழே இறக்கி விட, சாத்வியும் அழகாய் நடந்து பேச்சியிடம் சென்றது. இரண்டு மாத பழக்கம் மறக்குமா என்ன? பிள்ளையை பேச்சி ஓடி வந்து தூங்குவதை கண்டு விட்டு மீண்டும் வீட்டினுள் சென்றிருந்தாள்.
“என் தங்கப் பிள்ளை எழுந்துட்டிங்களா சாமி! இன்னைக்கு உன் அம்மாக்காரி பாலை கொடுத்து விட்டாளாக்கும். இந்த வீட்டுல பாலே இல்லை பாரு.” என்றபடி பிள்ளையை தூக்கி கொண்டு பேச்சி, உள்ளே சென்றிருந்தார்.அவர் பேசியது நன்றாகவே சுபாவின் காதில் விழுந்தது, பின் அவளுக்கு கேட்க வேண்டும் என்றுதானே அவரும் சத்தமாய் பேசுவது, இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து இரண்டு மாதாமாக அவர் பேசும் ஒரே வசனம். அதில் லேசாய் சிரித்தவளிற்கு, வாழ்க்கையே இந்த வீட்டிற்கு வந்த இரண்டு மாதத்தில் அத்தனை அழகாய் மாறி விட்டிருந்தது. கணவனுடன் இல்லை என்றாலும், அவனது அருகாமையில் இருப்பதே அவளிற்கு போதுமானதாய் இருந்தது. கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு மேலாகின்றது அவள் கணவனை விட்டு பிரிந்து,
நினைய வேண்டாம் மனமே, என நினைத்தாலும் அவளது மனம் ஆறு மாதங்களுக்கு முன் சென்று நின்றது.
இந்த ஆறு மாதக் காலமும், அனைவரின் வாழ்வும் இயல்பு போல் கடந்திருந்தது.
அன்றைய பேச்சிற்கு பிறகு, பரணி மற்றும் சுபாவின் வாழ்க்கையில் யாரும் தலையிடவில்லை. பரணி எப்போதும் போல் வருபவன், கடைக்கு சென்று விடுவான். அதனை மீறி ஒரு வார்த்தை சுபாவை பற்றியோ இல்லை சாத்வியை பற்றியோ வாங்கிட முடியாது அவனிடமிருந்து.
ஆரம்பத்தில் முத்துபேச்சி மனம் தாங்காமல் நிதமும் அவனிடம் மல்லுக்கட்ட, அவனின் வீம்பும் இறுக்கமும் நாளுக்குநாள் அதிகரித்ததில் பயந்து அந்த பேச்சினை விட்டுவிட்டார்.
இருந்தும் ஒரு நாள் பரணியை பிடித்து, முகிலன் சுபாவை பற்றி, அவளது பயத்தையும், தாழ்வுமனப்பான்மையையும், அவன் கணித்த விசயத்தையும் கூற, அனைத்தையும் காதில் வாங்கியவன் அமைதியாய் சென்று விட்டிருக்க, அதற்கு மேல் முகிலனால் தலையிட முடியவில்லை.
முகிலன்- வருணாவின் வாழ்க்கை சில பல சண்டைகளுடனும், சமாதனங்களுடனும் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தன.
என்னதான் குடும்பத்தினர் அவரவர் வாழ்க்கையையும் பார்த்தாலும், பரணியின் வாழ்க்கையை பற்றிய கவலை அவர்களிடம் இருந்தது உண்மை.
கணவனின் கோபம் இன்று குறைந்து விடும் நாளை குறைந்துவிடும் என நினைத்து காத்திருந்த சுபாவிற்கு பெரும் இடியாய் விழுந்தது, கணவனின் கோபம். நான்கு மாதங்கள் முழுதாக நான்கு மாதங்கள், அவளது கணவன் அவளை விட்டு பிரிந்து நிற்கிறான்.
அழுவதற்கு கூட அவளிடம் ஜீவன் இல்லாமல் போயிற்று.
எந்நேரமும் கணவனை பற்றியே யோசித்து, யோசித்து பைத்தியமாகிப் போயிருந்தாள். உணவும் சரியாக உண்ணாமல் ஆளே வாடி வதங்கிப் போய் கிடந்தாள். அதையும் விட தினமும் வள்ளியம்மையிடம் கேட்கும் குத்தல் பேச்சுக்கள் அவள் மனதையும் உடம்பையும் ரணமாக்கின.
வள்ளியம்மையோ பரணியின் இந்த வீம்பை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. எப்படியும் குழந்தையை பார்க்க வேண்டும் என்ற நினைப்பில் நிச்சயம் பஞ்சாயத்திற்கு வருவார்கள் என இறுமாப்பில் இருந்தவருக்கு, பெரிய அடியை கொடுத்திருந்தான் பரணி.
அவன் வராத கோபம், நாளுக்குநாள் அதிகரிக்கும் செலவு, அக்கம்பக்கத்தினருக்கு விசயம் தெரிந்து விட, அவர்களின் குத்தல் பேச்சு, என அனைத்து கோபத்தையும் ஆங்காரத்தையும் சுபாவின் மீது இறக்கி வைத்துக் கொண்டிருந்தார் வள்ளியம்மை. எப்படியாவது பரணியை வரவழைத்து விட வேண்டும் என அவர் செய்த செயல்யாவும் தோல்வியை தழுவ, மேலும் ஆத்திரம் கூடிப் போயிருந்தார். பஞ்சாயத்திற்கு அழைப்பதற்கு ஆட்கள் மூலம், இவரே தூது விட்டு பார்க்க, அதையும் அவன் மறுத்திருக்க அதில் எழுந்த அவமானத்தையும், எரிச்சலையும் அவனிடம் காட்ட முடியாது, இங்கே சுபாவிடம் தான் காட்டி கொண்டிருந்தார்.
அவரின் சுடு சொற்களை தாங்கி கொண்டு அங்கே தான் இருந்தாள் சுபா. அவளிற்கு வேறு போக்கிடம் இல்லையே. எந்நேரமும் கணவனின் நினைப்பு தான் அவளை ஆட்டிப்படைத்தது.
பெற்ற மகளின் மனம் வள்ளியம்மைக்கு புரியவில்லை அவருக்கு. யாதவிக்கு அக்காவின் நிலை மேலும் மோசமடைந்ததில்லை மனம் வருந்தியவள், சாத்வியை காட்டும் போது பரணியிடம் மீண்டும் பேசிப் பார்க்க, பதிலளிக்கவில்லை அவன். யாதவியாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பரணியிடம் கெஞ்ச அவளது சுயமரியாதை அனுமதித்திடவில்லை.
ஆக, நடப்பது நடக்கட்டும் என அவளும் அமைதியாகிவிட்டாள். யாரிடம் இதைப்பற்றி பேசுவது என தெரியாமல் இருந்தவள், மகாலிங்கத்திடம் கூட பேச முயன்றாள். ஆனால், அதற்கு பரணி விடவில்லை. அவளாலும் அதற்கு மேல் போராட முடியவில்லை விட்டு விட்டாள்.
அன்றும் கணவனின் நினைப்பில், கண்ணீர் வடித்தவளுக்கு, சாத்வியின் அழுகுரல் கேட்டும் எழுந்து செல்ல முடியவில்லை அவளால். ஆனால் பிள்ளையின் அழுகை சத்தம் அதிகமாகியதில்,விரைந்து வெளியே சென்றிட,
அங்கே சாத்வி தரையில் அமர்ந்திருக்க, அவளுக்கருகே, டம்ளருடன் பால் கொட்டிக் கிடந்தது. அதனை கண்டதும் பதறியவள் வேகமாக குழந்தையின் அருகே சென்று பிள்ளையை தூக்கி பார்த்தாள், பால் ஏதும் பிள்ளையின் மீது கொட்டி விட்டதா என முழுவதுமாக ஆராய்ந்தாள்.
“என்னாச்சு என் தங்க பிள்ளைக்கு என்ன ஆச்சு? ஏன் அழறாங்க?”எனக் கேட்டப்படி பிள்ளையின் கண்ணீரை துடைத்திட,
தாயை கண்டதும் பிள்ளையின் அழுகை மேலும் அதிகரித்தது.
“ஒன்னும் இல்லடா, ஒன்னும் இல்ல பட்டுக்குட்டி. பால் ஏதும் பாப்பா மேல கொட்டிடுச்சா.” என,
இல்லை என தலையசைத்த பிள்ளை,
“பாட்டி அடிச்சு”என தன் முதுகை தொட்டு காட்டியவாறு கூற,
“என்ன?” என திகைத்தவள், வேகமாய் பிள்ளையின் முதுகை பார்த்திட, லேசாய் சிவந்தது போயிருந்தது.
அதனை கண்டவளுக்கு, ஆத்திரமும் அழுகையும் ஒருசேர எழுந்திட,
“யாரு கேட்டு பிள்ளை மேல் வைவச்சம்மா நீயி?” என கத்தியபடி சமையலறை உள்ளே இருந்தவரிடம் சண்டைக்கு கிளம்ப,
“பிள்ளையாடி பெத்து வச்சிருக்க நீயி? குடிக்க பாலைக் கொடுத்தா, வேண்டாம்னு எம்மேலயே கொட்டிவிட்டுட்டா, பிள்ளையா இது ச்சை.” தண்ணீரில் கைவைத்து எரிச்சலை அடக்க முயன்றபடி இருந்த வள்ளியம்மையின் பேச்சு ஆங்காரமாய் வந்து விழுந்தது.
அப்போது தான் வள்ளியம்மையின் கையை கண்டாள், சிவந்து போயிருந்ததை.
“அச்சோ! ஐஸ்கட்டி வைக்கலாம் வாம்மா?” என அவரை பிடிக்க,
நெருப்பாய் தகித்த எரிச்சலில்,
“போடி அந்த பக்கம் வந்துட்டா பெரிய இவளாட்டும்.” என ஒரே தள்ளாய் தள்ளி இருந்தார். பிள்ளையோடு பின்பக்கமாய் சரியா போனவள் சுதாரித்து அருகே இருந்த சுவரினை பற்றிய படி நின்று விட்டாள்.
“லூசாமா நீ, இப்படி தள்ளி விடுற கையில பாப்பா வச்சிருக்குறது தெரியுதா தெரியலையா?”
“ஏய், பேசாம போயிருடி, உன் பிள்ளைனால தான், எனக்கு இப்புடி ஆனது. பிள்ளைய அது பிசாசு, அப்புடியே அப்பனை கொண்டு இருக்கு.” வீரியமிக்க வார்த்தைகளை விட,
அந்த ஒரு வார்த்தை சுபாவின் உள்ளத்தை நொறுக்கி எறிந்தது.
“பிசாசா…?” என மெதுவாக அவள் உதடுகள் அசைந்தன.
கண்ணீரால் நனைந்த விழிகளில் கோபமும் வேதனையும் கலந்து எரிந்தது.
“குழந்தை பிள்ளைம்மா அவ? அவளுக்கு தெரிஞ்சா இதை செஞ்சா? அதுக்கு போயி பிள்ளையை இப்புடி பேசுறியேம்மா.?”
“தெரிஞ்சுதான்டி செஞ்சா? உன் பிள்ளைக்கு பால் வேண்டாமாம், ஹார்லிக்ஸ் வேணுமாம். இங்கே இருக்கிற இருப்புக்கு, அது ஒண்ணு தான் கொறைச்சல் உன் பிள்ளைக்கு.”என்ற வள்ளியம்மையின் வார்த்தைகள் குத்திக்குத்தி விழுந்தன.
“ஹார்லிக்ஸ் தானேம்மா கேட்டா, கொடுக்க வேண்டியது தானே?” இதற்காகவா இவ்வளவு வார்த்தைகள் என சுபாவின் மனம் கசந்தது.
“வாங்கி தரவா? காசுக்கு எங்க போறது? உங்க அப்பன் வீட்டிலிருந்து நீ கொண்டு வந்தியா? இல்ல அவன் அப்பன் தான் கொண்டுவந்து கொடுத்தானா வாங்கி கொடுக்குறதுக்கு.?”
“என்னம்மா இப்படி பேசுற?”
“வேற எப்புடி பேச சொல்லுற?” எனக்கென்னன்னு எப்ப பாரு அந்த ரூமுக்குள்ள உட்கார்ந்து அழுதுட்டே இருந்தா, சாப்பாட்டுக்கு என்ன பண்றது? மகாராணி எனக்கென்னன்னு இருக்க, இங்க நான்தானே எல்லாத்தையும் சமாளிக்கிறேன். கையில காசும் இல்லை, ஏதோ யாதவி வேலைக்கு போறனால கொஞ்சம் நிக்கிது. அதையும் உன் பிள்ளைக்கே ஆக்கி கொட்ட சொல்லுறியா?
உன்னை விட சின்னவ வேலைக்கு போயி சம்பாரிக்கிறா, அதுல உட்கார்ந்து சொகுசா சாப்பிடுறோமேன்னு கொஞ்சமாச்சும் மனசாட்சி குத்தலையாடி உனக்கு?”
அந்த வார்த்தைகள் சுபாவை அசையாமல் நிற்க வைத்தது.
இதுவரைக்கும் கேட்ட எல்லா குத்தல்களையும் விட,
இது தான் அதிகமா குத்தியது.
“நான் இதுவரைக்கும் எதுவுமே செய்யலையம்மா உனக்கு?” மாதம் மாதம் இவள் தானே பணம் அனுப்புவாள்.
“ஆமா, கொடுத்தா அப்புடியே லட்சம்லட்சமா? கொடுத்தது பிசுனாரி காசு, அதது புருசன்காரன் வீட்டுல இருந்துட்டே பெத்த அம்மாக்கு எவ்வளவு செய்யுறாங்க, இங்க வெறும் ஆயிரம் கணக்குல காசக் கொடுத்திட்டு, அதை சொல்லி வேற காட்டுறியே, அசிங்கமா இல்லை உனக்கு? புருசன்காரன் கைக்குள்ள போட்டுக்க தெரியாத இப்புடி ஒரு முட்டாளை பெத்ததுக்கு, என்னை நானே அடிச்சிக்கனும்.”
வள்ளியம்மையின் இத்தகைய பேச்சுக்கள் அவளிற்கு பழக்கம் தான், ஆனால் இந்த நொடி அவளது மனதை கத்தியாய் கிழித்தது அவரது வார்த்தைகள்.
“சரி, நான் முட்டாளவே இருந்துட்டு போறேன். உங்களுக்கு நான் எவ்வளவு அள்ளி கொட்டுனாலும் பத்தாது, அந்தளவுக்கு பேராசை பிடிச்சி போயிருக்கீங்க. என் தப்பு தான், உங்களால் தான், என் வாழ்க்கை நாசமாப் போகுதுன்னு தெரிஞ்சும், மானங்கெட்டுப் போயி இங்கயே, அம்மா வீடுன்னு இருந்தேன்ல, எனக்கு இந்த முட்டாள் பட்டம் அவசியமானது தான்.”
“சும்மா, சும்மா கொடுத்தேன்னு சொல்லாதா சுபா, இப்போ நீ இங்க வந்து மூணு மாசத்துக்கு மேல ஆச்சு, செலவுக்கு என்ன பண்ணுவாங்கன்ற நினைப்பு கொஞ்சமாச்சும் இருக்கா உனக்கு? தட்டுல சோறு வந்துட்டா போதும் உனக்கும், உம் பொண்ணுக்கும். பெத்த அம்மாவும், தங்கச்சியும் எப்புடியோ கஷ்டப்பட்டுட்டு போகட்டும், உனக்கு உன் புருசன்காரனை நினைச்சிட்டு அந்த ரூமுக்குள்ள அழுகனும்.
அழுதா ஆச்சா?”
“எம்புருசனை நினைச்சு, என் வாழ்க்கையை நினைச்சு அழுதேன் அது தப்பா?”
“அழுகுறேன்னு, சாப்பாடு ஏதும் சாப்பிடமா இருந்தியா? இல்லை உன் பிள்ளைக்கு தான் கொடுக்காம இருந்தியா? நல்ல வக்கணையா கொட்டிக்கிட்டீங்க தானே? அதுக்கு காசுக்கு எங்க போறது? இனி பிச்சை தான் எடுக்கனும்.?”
“ச்சீ, பெத்த பொண்ணுக்கு சாப்பாடு போட இவ்வளவு கணக்கு பாக்குறியோம்மா?”
அந்த கேள்வி இந்த முறை கசப்பா இருந்தது.
வள்ளியம்மை சற்றே சிரிச்சார்… கேலி கலந்த சிரிப்பு.
“கணக்கு பாக்காம என்ன பண்ணனும்? வீடு நடத்துறதுக்கு காசு வேணாமா? நீ போயி சம்பாதிக்கறியா? இல்ல உன் புருசன் அனுப்புறானா?”
சுபா ஒரு அடியளவு முன்னே வந்தாள்.
“எப்ப பாரு காசு, காசு, காசு இதை தவிர வேற பேச்சே வராதாம்மா உனக்கு?”
“வராதுடி ஏன்னா இங்கே,அது தான் தேவையா இருக்கு? உன்னால கொண்டு வர முடியுமா? சொல்லு?”
சுபாவிடம் பதிலில்லை.
“முடியாதுல்லை, அப்போ நான் பேசுவேன் கேட்டுத்தான் ஆகணும். அவ்வளவு ரோசம் இருந்தா வீட்டுல தண்டமா இருக்காமா, நீ சாப்பிடறதுக்கு காசை கொண்டு வா பாப்போம். அதுவும் முடியாது, ஆனா இவளுக்கும் இவ பிள்ளைக்கும் வக்கணையா மட்டும் திங்க தெரியும்.”
“போதும்மா, பாப்பாவ இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசக்கூடாது நீ?”
“அப்புடித்தான் பேசுவேன், ஒண்ணுத்துக்கு உதவாத நீயும் உன் பிள்ளையும், என் வீட்டுல தண்டச்சோறு தான் திங்குறீங்க, அப்போ நான் பேசத்தான் செய்வேன், நீ கேட்டுத்தான் ஆகணும்.”
“கேட்க முடியாதுன்னா என்ன பண்ணுவா?”
“அப்போ, இந்த வீட்டுல இருக்க முடியாது.”
“வெளிய போக சொல்லுறியாம்மா?”
“இங்கே இருக்கணும்னா நான் பேசுறதை, சொல்லுவதை கேட்டுத்தான் ஆகணும்.”
“அப்புடி, ஒண்ணும் மானங்கெட்டுப் போயி நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் கிளம்புறேன்.”
வேகமாய் பிள்ளையை தூக்கி கொண்டு வெளியே நடக்க,
“போயி? பிச்சை எடுக்க போறியா சோத்துக்கு? எங்க போகப் போற? போறதுக்கு இடம் இருக்கா உனக்கு?”
வள்ளியம்மையின் பேச்சில் அடுத்த அடி நகர மறுத்தது அவளது கால்கள்.
அவர் கூறுவது உண்மைத் தானோ? போவதற்கு வேறு போக்கிடம் இல்லைதானே? இப்போதே கணவனிடம் செல்ல அவளது கால்கள் துடிக்கிறதே? கணவனை நினைத்து மாத்திரத்தில் அவளிற்கு தெம்பு வந்தது.
இனி என்ன ஆனாலும் சரி, பரணி அவளை அடித்து விரட்டினாலும் சரி திரும்பி இங்கே வருவதற்கு அவளிற்கு துளிகூட எண்ணமில்லை. ஆனால், கணவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? மனம் பரணியை நினைத்து பயந்தாலும், மனதை தெம்பாக்கி கொண்டு கணவனை தேடி சென்றுவிட்டாள்.
பரணியின் வீட்டிற்கு போவதற்கு கால்கள் கூசியது அவளிற்கு. ஆதலால், நேராக கடைக்கு சென்று விட்டாள். இவள் சென்ற நேரம் பரணி மட்டுமே கடையில் இருக்க, அலங்கோலமாய் அழுது வடிந்த கண்களுடன் வந்து நின்ற மனைவியையும், மகளையும் கண்டு அதிர்ந்து தான் போனான் அவன்.
“அப்பா!” என பிள்ளை அவனிடம் தாவிட, இறக்கி விட்டாள்.
“என்னங்க!” என்ன தேம்பிய படி வீட்டில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தவள்,
“நான் செஞ்சது தப்புதான் ரொம்ப பெரிய தப்புதான். இல்லைன்னு சொல்லல, அதற்கான தண்டனையை நீங்க என்ன கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். ஆனா திரும்ப என்னை அந்த வீட்டுக்கு மட்டும் போக சொல்லாதீங்க.”என்க,
அதனை கேட்ட பரணிக்கு, வள்ளியம்மையை அடிக்கும் வேகம் எழுந்தது. இருந்தும் தன்னை கட்டுப்படுத்தி கொண்டவன், மனைவியின் முகம் பாராது, அவளிற்கு பதில் அளிக்காது நிற்க, அதை எதிர்பார்த்திருந்து வந்தவளுக்கு, அழுகை வரவில்லை.
“எனக்கு தெரியும்ங்க, உங்களால் என்னை இன்னும் மன்னிக்க முடியலைன்னு, ஆனா, இந்த நாலு மாசமும் அதுக்கான தண்டனையை நான் நல்லாவோ அனுபவிச்சிட்டேன். நானும் எம்பொண்ணும் சொமையா இருக்கோம்னு சொல்லாம சொல்லிட்டாங்க. இதுக்கு மேல மானங்கெட்டுப் போயி அந்த சோத்தை என்னால திங்க முடியாது. உங்க பொண்ணுக்கு சாப்பாடு வாங்குறதுக்கு காசு கொடுங்கன்னு கேக்குறதுக்கு நாக்கு கூசுது. ஆனா வேற வழியில்லை, பாப்பாக்கு மாட்டும் ஏதாச்சும் வாங்கி கொடுங்க, சாயந்திரம் வரை இவளை வச்சிருங்க? நான் வந்திடுறேன்.” என அவள் நகர,
இவள் வந்த சிறிது நேரத்திலே வந்துவிட்ட மகாலிங்கம், சுபாவை கண்டதும் பரணியின் மன நிலையை அறிய வேண்டி அங்கே ஓரமாக நின்று கொண்டு இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தவர், அவர்கள் பேசுவது முழுவதையும் கேட்டவர் சுபா நகர தொடங்கிய வேலை சட்டென முன் வந்தவர்,
“எங்கம்மா போற?” என,
அவரைக் கண்டதும் தன்னால் தலை தாழ்த்தி விட்டாள் சுபா.
“பிள்ளைக்கு சாப்பாட்டுக்கு கொடுக்க வேண்டியது அப்பனோட கடமைனா, கட்டின மனைவிக்கு சாப்பாடு போடுறது புருஷனோட கடமை இல்லையா?”பரணியை பார்த்தவாரு அவர் கேட்க முகத்தை திருப்பிக் கொண்டான் அவன்.
“வேண்டாம் மா..மா!” அதை சொல்வதற்குள் பெரும்பாடுபட்டு போனாள் அவள்.
“பாப்பாவுக்கு மட்டும் பார்த்த போதும், எனக்கு நானே பாத்துப்பேன்.”
“எப்புடிம்மா?”
“இந்த கிரிவலத்துல இருக்கிற கடையில வேலைக்கா மாமா பஞ்சம்? எனக்கான ஒருவேளை சாப்பாட்டை என் காசுலயே நான் சாப்பிட்டுக்கிறேன் மாமா.”
“ஓ அப்போ வேலைக்கு போகணும்னு முடிவு பண்ணிட்டியா?”
ஆமாம் என்று தலையசைத்தாள்.
“அப்போ வா” என்றவர் எதிரே இருந்த கடைக்கு அழைத்து சென்றவர்,
“முருகேசா, வேலைக்கு ஆள் வேணும்னு கேட்டு இருந்தியேப்பா, இந்த பொண்ணை சேர்த்துக்க.” என அக்கடை முதலாளியிடம் அவர் பேச,
சுபாவை கண்டு திகைத்தார் அவர். அவருக்குதான் தெரியுமோ சுபாவை.
“லிங்கம்..!” என அவர் இழுக்க, மகாலிங்கம் முருகேசனிற்கு கண்ஜாடை காட்டிட, சரியென்று அவளை வேலைக்கு எடுத்துக் கொண்டார்.
“நாளைல இருந்து வா மா…” என்றார் முருகேசன்.
“இப்போயே வர்றேன் அண்ணே…” மெதுவாக சொன்னாள் சுபா.
அவள் சொன்ன அந்த வார்த்தை அவள் எடுத்த முடிவுக்கு சாட்சி.
“இப்போ வேலைக்கு பிரச்சனை இல்லைம்மா, எங்க தங்க போறா? திரும்ப உங்கம்மா வீட்டுக்கே….!”
என்றவரை,
“இல்லை மாமா இனி நான் அங்க போறதா இல்லை!” இடையிட்டு மறுத்தது சுபாவின் குரல்.
“சரிம்மா, அதுக்கு ஒரு ஏற்பாடு பண்ணுறேன்.” என்றவரை மறுக்க முடியவில்லை அவளால்.மறுத்து அவளால் என்ன செய்ய முடியும்? எங்கு சென்று தங்குவாள்? நிச்சயம் அவளது பிறந்த வீட்டிற்கும் சரி செல்ல முடியாது.
புகுந்த வீட்டிற்கு செல்லும் அருகதை இனி அவளிற்கு இல்லை. ஆக, சரியென தலையாட்டுவதை தவிர வேறு வழியிருக்கவில்லை அவளிற்கு.
மகாலிங்கம் பரணியை நோக்கி வர, அதுவரை அவரது செயல்களை கவனித்துக் கொண்டிருந்தவன், அவர் அருகே வரவும், பிள்ளையை கொஞ்சும் சாக்கில் கீழே குனிந்துக் கொண்டான்.
“பரணி!”
“அப்பா?”
“நம்ம மயில்சாமி மாமா வீட்டைத்தான் பேச போறேன் இவுங்க தங்குறதுக்கு.”
அவர் சொன்ன வீடு இவர்களது வீட்டிற்கு வலப்புறம் இரண்டு வீடுகள் தள்ளி மாடியில் ஒற்றை படுக்கை கொண்ட வீடு.
பரணி பதில் ஏதும் பேசவில்லை.
“பரணி உன்கிட்ட தான் பேசுறேன்.”
“கேக்குதுப்பா!”
“அப்போ பதில் சொல்லாமா இருக்க?”
“இதுல நான் என்னப்பா சொல்ல இருக்கு? எனக்கு சம்பந்தமில்லாததுப்பா.”
“அப்போ, கடைசி வரைக்கும் இப்படியேதான் இருக்க போறியா?”
“தெரியலைப்பா!”
“பிள்ளைக்காகவாச்சும் மன்னிச்சிட வேண்டியதுதானேப்பா?”
“மறக்க முடிஞ்சாதானேப்பா மன்னிக்கிறதை பத்தி யோசிக்க?.”
“அப்போ, முழுசா வேண்டாம்னு முடிவெடுத்திட்ட?” பதில் இல்லை.
“நீ விட்ட மாதிரி, என்னால எம்பேத்தியையும் மருமகளையும் விட முடியாது, அவுங்க என் பொறுப்பு.” என்றவர் சென்றுவிட, அவரின் வார்த்தை சுருக்கென்று மனதை தைத்திட, செல்லும் அவரையே வெறித்துப் பார்த்தான் அவன்.
அதன் பின் மகாலிங்கம் வேகமாய் செயல்பட்டு, சுபாவிற்கு அந்த வீட்டை பேசி முடித்திருந்தார். வீட்டினருக்கு இந்த விசயம் தெரிந்த போது, ஆச்சர்யபட்டவர்கள், வள்ளியம்மை மீது கடும் கோபத்திலும் இருந்தனர்.
வேலை விசயமாக வெளியே சென்றிருந்த யாதவி, வீட்டில் நடந்தவற்றை கேள்விப்பட்டு அக்காவை தேடி வந்தவள், சுபாவின் மாற்றத்தை கண்டு வியந்து தான் போனாள்.
சுபா அவளின் முடிவில் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்திட, அவளின் உறுதியை உடைக்க விரும்பாது, யாதவியும் விட்டு விட்டாள்.
குக்கரில் சத்தத்தில் பழைய நினைவுகளில் இருந்து மீண்டவளுக்க, இப்போது அழகை வரவில்லை. வாழ்க்கையை நினைத்து பயமும் வரவில்லை.
கணவனின் அருகில் இருப்பதே, அவளுக்கு போதுமானதாக இருந்தது. நிச்சயம் அவனது கோபம் குறைந்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாள்.
வேலைக்கு நேரமாவதை உணர்ந்து, தயாராகி வந்தவள், கீழிறங்க இவளது வருகையை எதிர்பார்த்திருந்த முத்துப்பேச்சி பிள்ளையை அனுப்பிவிட்டார். சாத்வி குளித்து முடித்து தயாராகி வந்தாள்.
“சாப்பிட்டீங்களா தங்கம்?”
“ம்ம்ம் பாத்தி இட்லி..” என்றவளின் பேச்சில் இட்லி உண்டாள் என்பதை அறிந்துக் கொண்டவள், திரும்பி வள்ளியம்மையை பார்த்து தலையசைக்க, அதுவரை அவளை பார்த்துக் கொண்டிருந்தவர், அவளது தலையசைப்பை உள்வாங்கி கொண்டு, முகத்தை தோள்பட்டையில் இடித்துக் கொண்டு சென்றிருந்தார்.
“அப்பாவை பாக்க போகலாமா குட்டி!” என்றபடி கிளம்பியிருந்தாள் சுபா.
கடையில் வியாபாரம் சூடு பிடித்திருந்தாலும் பரணியின் கண்கள் நொடிக்கு ஒருமுறை வந்த வீதியின் முனையை தொட்டு மீண்டு கொண்டிருந்தது.
சாத்விகாவை தூக்கியபடி சுபா வர, அதுவரை அவர்களை எதிர்நோக்கி காத்திருந்தவன் அவர்கள்கிட்டே வரவும் முகத்தை திருப்பிக் கொண்டான்.
வழக்கம்போல் பரணியின் கடை முன்பு சில நிமிடங்கள் என்ற சுபா, பின் சாத்வியை கீழே இறக்கி விட, பிள்ளையும் இயல்பு போல் தந்தையிடம் சென்று விட்டது.
பிள்ளை உள்ளே சென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டவள், நொடிக்கும் அதிகமாய் பரணியின் விழிகளை சந்தித்து விட்டு எதிரில் இருந்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்து இருந்தாள்.
எதிரில் இருந்த கடை பஞ்சாமிர்தம், அல்வா என விற்கப்படும் இனிப்பு கடை.
அதில் தான் வேலைக்கு இருந்தால் சுபா.
இவள் சென்றதும் அங்கிருந்த முதலாளி இவளைக் கண்டு புன்னகைக்க, பதிலுக்கு புன்னகைத்தாள், வியாபாரத்தினை பார்க்க தொடங்கி இருந்தாள். இனிப்பு கடைகளில் கூட்டத்திற்கு பஞ்சமா ஏற்படும்? மதியம் வரை நல்ல கூட்டம் இரண்டு கடைகளிலுமே.
சுபா சாப்பாட்ட முடிச்சிருமா கூட்டம் கம்மியா இருக்கிறப்பவே. நான் வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன். கடையை பாத்துக்கோ.” கடையின் முதலாளி சுபாவிடம் கூறிவிட்டு கிளம்பி இருந்தார்.
அவர் கிளம்பியதும் சுபா, பரணியின் கடைக்கு வந்தவள், அங்கே இரண்டு டிபன் பாக்ஸினை வைத்திட, எப்போதும் போல் சிறிய பாக்ஸினை மட்டும் எடுத்தவன், அதில் இருந்ததை பிள்ளைக்கு ஊட்ட ஆரம்பத்திருந்தான்.
இன்றாவது கணவன் தான் கொண்டு வந்ததை எடுப்பானா என ஆசையில் வந்தவளுக்கு வழக்கம் போல் ஏமாற்றம் தான் மிஞ்சியது. அவனின் கோபத்தை அறிந்தவள் தானே! சோர்ந்த முகத்துடன் அவள் திரும்பி விட, செல்லும் அவளை பார்த்தவனின் பார்வை ஒரு நொடி அந்த டிபன் பாக்ஸின் மீது அழுத்தமாய் பதிந்து பின்பு மீண்டது.
பரணியின் விழிகளில் படுமாறு அமர்ந்து உண்ண ஆரம்பித்திருந்தாள். பசியின் வேகம் உணவினை அள்ளி உண்டவளுக்கு, விக்கல் எடுத்திட, தண்ணீரை தேடியவளுக்கு அப்போது தான் உரைத்தது, எடுத்து வர மறந்தது. கடையில் வைத்திருக்கும் குடத்தினை காண, அதுவும் காலியாகிருந்தது.
விக்கலின் வேகம் அதிகமாகிட, உணவு பொட்டலத்தினை மூடி வைத்த நொடி, அவள் முன் தண்ணீர் நீட்டப்பட்டது அழகிய பிஞ்சு கரங்களால். இவளின் போராட்டத்தினை கண்டு பரணி தான் கொடுத்து அனுப்பி இருந்தான். சட்டென நிமிர்ந்து சுபா பரணியை பார்க்க அதுவரை அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் அவசரமாக முகத்தை திருப்பிக் கொண்டிருந்தான்.
கலங்கிய விழிகளுடன் தண்ணீரை வாங்கிப் பருகியவள், மீதி உணவினையும் உண்டு முடித்து இருந்தாள். பின், சாத்வி தூங்குவதற்கு கண்களை கசக்கிட,
“குட்டிம்மாக்கு தூக்கம் வந்திடுச்சாடா? இருங்க வந்திடுறேன்.” என்றபடி உண்டு முடித்தவற்றை தூக்கி குப்பையில் போட்டு விட்டு வந்தவள், பிள்ளையை மடிக்கு மாற்றி தட்டி கொடுக்க ஆரம்பித்திருந்தாள். மதிய வேளை என்பதாலும், வெயிலின் தாக்கத்தாலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. இனி, அவளின் முதலாளி வெயில் குறைந்து மாலைப் போல் தான் கடைக்கு வருவார்.