எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா - 27

subasini

Moderator
மனம் - 27

பிள்ளை மனம் தன் தம்பியோ தங்கையோ எதிர்பார்த்துக் காத்திருக்கக் காலம் அவனைத் தன் வளர்த்தியவர்களிடம் இருந்து பிரித்துச் செல்லதிட்ட மிட்டுக் காத்திருக்கிறது.

சதீஷ் தன் நிலையில் தெளிவாக இருந்தான்.

தாராவை வேதனைப் படுத்திப் பார்க்க எந்த எல்லைக்கும் செல்லதயாராக இருந்தான்.

கணவனின் மனநிலையை உணர்ந்தத் தாரிகாவிற்குத் தன்னுடைய தவறு நன்றாக உணர்ந்தது.

அவமானபட வேண்டி இருக்கும் என்று‌ப் பயந்து, தாராவிடம்‌பிள்ளையைத் தாரைவார்த்துக் கொடுத்தது தவறு என்று இப்போது உணர்ந்தாள் தாரிகா….

தன்னால் இப்போது வரைக்கும் மனவேதனை அடையும் தாராவின் வாழ்க்கை எண்ணிக் குற்ற உணர்வு அதிகமாகத் தோன்றி அவனை வதைத்தது.

கணவனின் காலைப் பிடித்துக் கெஞ்சியும் பார்த்து விட்டாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் கோபத்தில் அவனிடம் சண்டையிடத் தொடங்கினாள் தாரிகா.


அமீத்தை மாசமாக இருக்கும்போது உங்களிடம் நான் அமரனைப்பற்றுக் கூறியது எவ்வளவு தவறு என்று எனக்கு நன்றாகப் புரிய வைத்து விட்டிங்க... ஏதோ உணர்வு மிகுதியில் என்னை மறந்து நான் கூறிய உண்மையைத் தெரிந்துக்கொண்டு, இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு ஏன் இப்பொழுதுப் பிரச்சனைச் செய்றீங்க... இந்த விஷயம் தெரிந்ததும் நீங்கள் போயி அவங்களிடம் பிள்ளையைக் கொடுங்க என்று கேட்டு இருந்தால் உங்கள் பிள்ளையின் மேல் இருக்கும் பாசம் நினைக்கலாம் ... அதில் ஒரு நேர்மை இருந்திருக்கும். ஆனால் நான்கு வருஷத்துக்கு அப்புறம் எதுக்குப் போய்க் கேட்டீங்க" என்று தன் கணவனிடம் சண்டையிட்டாள் தாரிகா.

"இப்போ அமரனுக்கு ஆறு வயசு இருக்குமா? அவனோட இந்த ஆறு வருடங்களும் அம்மாவாக உன் தாரா இருந்திருக்கலாம், இப்போ அவனைக் கூட்டிட்டு வந்தால் அவன் குழந்தை என்பதால் அவனோட மனசு மாறிடும். ஆனால் அவளால் மாற முடியுமா? அந்த ஆறு வருஷம் அவளோட அன்பு, பாசம் அந்த வலி வேதனை எல்லாம் இனிவரும் காலங்கள் எல்லாம் அவள் அனுபவிப்பாள். அதுக்காகத்தான்" என்று தன் வில்லத்தனமான பேச்சைக் கூறினான் சதீஷ்.

"ஏன் இப்படிப் பண்ணறீங்க... ஒரு தாயோட வேதனையை உங்களுக்குப் புரியாதா? பெண்ணாகப் பிறந்திருந்தால் தானே உங்களுக்கு அதெல்லாம் தெரியும்... நீங்க வெறும் ஆண் தானே" என்று அவனிடம் சண்டையிட்டாள் தாரிகா.

"ஆணோ பெண்ணோ வலி வலிதான் வேதனை வேதனைதான். அன்னைக்கு என்னை அடித்து அவமானப்படுத்தி அதனால ஆக்சிடென்ட் ஆகி ஒரு வருஷம், எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். அதற்கான தண்டனை அவளுக்குத் தர வேண்டாமா! என்றான் சதீஷ்.

" ரொம்பப் பேசாதீங்க... உங்க அண்ணனோட மனைவி அவள் என்பதை மறந்துட்டுப் பேசிட்டு இருக்கீங்க" என்றாள் தாரிகா.

"சரிதான் எங்க அண்ணனுக்கு எப்படி அவள் மேல் காதல் வந்துச்சுன்னு தான் தெரியவல்லை... என்ன அடிச்சிருக்காள் எனக்கு விபத்து உண்டாகக் காரணம் அவள்தான் தெரிஞ்சும் அவளைக் கல்யாணம் பண்ணி இருக்கான். நான் நினைச்சேன் பழி வாங்கத்தான் கல்யாணம் பண்ணினான் என்று பார்த்தால்... அவளோடு காதல் வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கான். சரி விடு அதெல்லாம் அவர்களுடைய பர்சனல். அதுக்குள்ள நான் போக மாட்டேன் ஆனால் என் மகனை என்னால் கூட்டிட்டு வர முடியும். இதுதான் நான் அங்க இரண்டு பேருக்கும் கொடுக்கும் தண்டனை" என்றான் சதீஷ்.

"அவங்களுக்குத் தண்டனை என்று சொல்லிட்டு... நீங்கள் தண்டிக்கிறது உங்கள் மகனை என்று மறந்துடாதீங்க" என்றாள் தாரிகா.

" அமரன் அவங்களோட எவ்வளவு அன்பாகப் பாசமாகவும் இருக்கான் தெரியுமா? சொந்தப் பிள்ளையாகத் தான் அவனை வளர்த்திட்டு இருக்காங்க... அவங்களோட அழகான கூட்டுக்குள் கல் எறியும் உங்கள் செயல் மகாபாவம்" என்று ஆதங்கப்பட்டாள் தாரிகா.

"அமரனோட அம்மாவாகப் பேசுடி, நீ தான அவனைப் பெற்றெடுத்தாய்... அது கூட மறந்துவிட்டது. பெத்த மகனை விட்டுக் கொடுக்கிற கல்நெஞ்சுகாரியாக உன்னை நான் எதிர்பார்க்கவே இல்லை" என்றான் சதீஷ்.

"அவனை நான் தான் பெற்றேன் இல்லை என்று சொல்லவே இல்லை... ஆனால் நான் பிரசவிக்கும் போது உண்டான வலியை விட, அதிகமான வலியையும் வேதனையையும் தாரா அவனோட அம்மாவாக அனுபவித்தாள். அதுக்கு முன்னாடி என்னுடைய பிரசவ வலி எல்லாம் ஒன்றுமே கிடையாது. அவள் அவனுடைய அம்மாவாக இருந்ததுனாலே எத்தனை அவமானங்களை நேரிட்டாள் என்று நேரில் நான் பார்த்திருக்கேன். உங்க அம்மாவாகட்டும் எங்க அம்மாவாகட்டும் இப்ப அவங்கள அவளை மருமகளாகவும் மகளாவும் ஏத்துக்கிட்டாங்க என்பது வேறு.

ஆனால் அவள் கடந்து வந்த பாதையில் இருக்கிற வலியும் அவமானமும் என்னால் எல்லாம் தங்கி இருக்கவே முடியாது... நானாக இருந்திருந்தால் சத்தியமாகச் செத்தே போயிருப்பேன். அவள் உண்மையிலேயே தைரியமான பெண்ணாக அதை நேரிட்டாள். அதற்கு உறுதுணையாக உங்கள் அண்ணனும் இருந்திருக்காரு. உங்களை மாதிரியா உண்மையைத் தெரிந்துகொண்டு அமைதியாக இருந்துட்டு, குழந்தை என்ன ஆச்சுன்னு கேட்காமல் சுயநலமாக இருந்திருக்கீங்க, காதல் மட்டும் தான் உங்ககிட்ட இருக்குப் பொதுநலமான சிந்தனைகள் எதுவுமே இல்லை.

குடும்ப நடத்தும்போது நம் குழந்தை என்ன ஆச்சு என்று நீங்க என்னிடம் கேட்டீங்களா" என்று ஆதங்கப்பட்டாள் தாரிகா.

"நீங்க ஒரு வார்த்தை நம் குழந்தை என்ன ஆச்சு என்று கேட்டிருந்தீங்கனா உண்மையெல்லாம் வெளியில வந்திருக்கும். உங்களுடைய மௌனம், உங்களுக்கு நினைவு இல்லையென்று நான் நினைச்சிட்டேன், அதே மாதிரி உங்க அண்ணனும் நினச்சியிருக்காரு. உங்களுக்காக எல்லாருமே யோசிக்கும் போது நீங்க எப்படி இப்படி யோசிக்கலாம். ஏன் இவ்வளவு சுயநலமா இருக்கீங்க மறப்பதும் மன்னிப்பதும் தானே மனிதனின் இயல்பு" என்றாள் தாரிகா.

"ஆமாமடி நான் மனுஷனே இல்லை, இப்ப என்னங்கற... நான் ஒரு வருஷம் அனுபவித்த துன்பத்தை ஆயுசு முழுக்கத் தாரா அனுபவிக்கணும் அவ்வளவுதான். இதுதான் என்னுடைய கணக்கு, தன் கணவன் அவனோட தவறைத் திருத்திக்கொள்வதற்குத் தயாராகவே இல்லை என்பது தாரிகா உணர்ந்தாள்.

"காலேஜ் படிக்கும்போதே தாய் ஆனது என்னுடைய தவறு தான். காதல் போதையில் வாழ்க்கையுடைய யதார்த்தத்தை மறந்து வாழ்ந்தது என் தவறு, அதுக்கு எனக்குத் தான் தண்டனைக் கிடைக்கணும், தாராவுக்கு இல்லை என்பது புரிஞ்சுக்கோங்க, இன்றைக்கு உரிமைக் கொண்டாடுற அமரனை வேண்டாமென்று அன்றைக்குச் சொன்னது நீங்க தான் என்பதையும் மறந்துடாதீங்க" என்றாள் தாரிகா…

அன்றைக்கு அது சரி என்று எனக்குத் தோன்றியது, இன்றைக்கு இது சரி என்றுதோன்றியது, மாற்றம் தானே மாறாதது அடிக்கடி நீ தானே சொல்லுவ" என்றான் சதீஷ்.

"அதே மாதிரிதான் இன்னைக்குச் சரி என்று படுறது நாளைக்குத் தவறாகலாம் இல்லையா" என்றாள் தாரிகா.


"இந்த மாதிரி வியாக்கியானம் பேசாதே, இந்தியாவுக்குப் போவதற்கு எல்லாம் ஏற்படும் செய்து தரேன், போய் நம் பையனை வாங்கிட்டு வரோம் அவ்வளவுதான், இதுக்கு மேல இதைப் பத்தின வாக்குவாதம் எனக்குப் பிடிக்கவில்லை, அமீத்தைப் பாரு நம்மளையே பாத்துட்டு இருக்கான், குழந்தை அழுக ஆரம்பிச்சிடுவான்" என்று நான்கு வயது மகனிடம் போனான் சதீஷ்.

அங்கே அழுது கொண்டிருந்த தாரிகாவைக் கவனிக்காமல் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தான் சதீஷ். தன் கணவன் மேல் காதல் நிறைய இருக்கிறது தாரிகாவிற்கு. அதனால் அவன் என்ன சொன்னாலும் கேட்கும் நிலையில் தான் இருந்தாள்.


அன்றும் இன்றும் என்றும் அவளுக்குப் பலவீனமாகவே அமைந்துவிட்டது தன் காதல் என்பதை நன்றாக அறிந்து கொண்ட சதீஷ், அவளை அவன் இஷ்டத்திற்கு ஆட்டி வைத்தான் என்பதுதான் உண்மை. என்னதான் தாராவிற்காகச் சிந்தித்தாலும், சதீஷின் வார்த்தையை மீறித் தாரிகாவால் எதுவும் செய்ய முடியாது.


சதீசைப் பிரிந்து ஒரு நாள் என்ன ஒரு நிமிடம் கூட அவளால் இருக்க முடியாது என்பது தான் உண்மை. அந்த அளவுக்குப் பலவீனமாக இருந்தாள் அவன் காதல் மனைவி. அவனும் அப்படித்தான் காதலால் அவளைச் சிந்திக்க விடாமல் செய்திருந்தான். அவளுக்காக எதுவும் செய்யத் தயாராக இருந்தான்.

வெளிநாடுச் செல்ல வேண்டும் என்று சொன்னதும், நானும் உங்களோடு வருகிறேன் என்ற அவளுடைய ஒரு வார்த்தைக்காக, அவளுக்கான எல்லாமே செய்து முடித்தான். அதற்காக அவன் எடுத்த ரிஸ்குகள் பல.

அந்த அளவுக்கு அவள் மேல் அவன் காதல் கொண்டிருந்தான். ஆனால் அமரன் என்று வரும் பொழுது இருவரும் இரு
துருவமாக நின்று இருந்தனர் என்று சிந்திக்கும் போது சதீஷ் ஏற்றுக்கொள்ளப்பட முடியவில்லை. தன் அண்ணித் தன்னை அடித்தது மட்டுமே அவனுக்கு மனதில் நின்று கொண்டிருந்தது. அன்றி அதற்கான சூழ்நிலை அதற்கான அவளுடைய மனநிலை எதுவுமே அவன் சிந்திக்கத் தயாராக இல்லை.

அவன் செய்தது அன்றைய காலகட்டத்தில் அது மிகப்பெரிய தவறுதான் என்பது அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காதல் அதற்குப் பின் ஏற்படும் உறவுகளுக்கு இடையே இருக்கும் சங்கமம் பிள்ளை என்பது தானே என்று தான் நினைத்தானே அன்றி அந்த ஒரு வருடக் காலம் அந்தக் குழந்தை வளர்ப்பதற்குத் தாராப்பட்ட பாடும் அதனால் தாரிகாவுக்கு ஏற்பட்ட மன அழுத்தமும் உணர மறுத்தான் சதீஷ்.

பெண்ணின் உணர்வுகளும் மனநிலையும் வேதனையும் இந்தச் சமூகத்தோடு சார்ந்த சிலர் விஷயங்களும் உணர மறுக்கத்தான் செய்யும் ஆணின் மனம் என்றுமே அப்படித்தான்.

தினமும் அவனுடன் போராடுவது வேலையாக வைத்திருந்தாள் தாரிகா. ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு வந்தது சதீஷிருக்கு, அவனைத் தன்னோடு அணைத்தபடி அவளிடம் " தாரிகா இங்கே பார், நம்ம இரண்டு பேருக்கும் இடையில் அழகான வாழ்க்கைப் போயிட்டு இருக்கு. காதலோடு நம் வாழ்ந்துட்டு இருக்கும் இந்த அழகான வாழ்க்கையிலும் நம் காதலிலும் உன்னுடைய தாராவால் ஒரு விரிசல் வர வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். இந்த ஒரு மாசமா நீயும் நானும் சண்டை மட்டும்தான் போட்டுக் கொண்டிருக்கும் யோசித்துப்பாரு.

எதற்காக நம்ம மகனை நம்மிடம் கூட்டிட்டு வரணும் சொன்னதுக்காகவா? அமரன் நம் பையன் தானே, நன்றாக யோசி நம் பையன் ஏன் அவர்களிடம் வளரணும். ஒர் அப்பாவாக என்னுடைய உணர்வுகளைப் புரிஞ்சுக்கோ" என்று அவன் வேறு வழிக்கூடி அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.

"நம் குடும்பத்தில் தானே இருக்கான். அவன் அங்க இந்தியாவுல இருப்பதால் நம் வேலை இந்தியாவுக்கே மாத்திட்டுப் போயிடலாம்" என்றாள் தாரிகா.

"நோ நெவர், உன்னுடைய திட்டம் பலிக்காது , இந்தியாவுக்குப் போகணும் என்று நீ முடிவு செய்திருக்கையானால், நீ போ... அமீத்தையும் நான் தரமாட்டேன், நீ உங்க அம்மா வீட்டுக்குப் போனவுடன், என்னுடைய விவாகரத்துப் பத்திரம் உன் பின்னாடியே வரும். வாழ்க்கையில நீ இரண்டு குழந்தையுமில்லாமல் தனி மரமாக இருக்க வேண்டிவரும். இனிமேல் நீ என் முகத்தைப் பார்க்காத மாதிரி நான் செய்து விடுவேன்" என்று அவளைக் காதலால் மிரட்டினான் சதீஷ்.

அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் நெஞ்சில் ஈட்டியைப் பாய்த்தது. " இப்படி ஏன் பேசுறீங்க... கொஞ்சம் புரிஞ்சுக்கலாம் இல்ல" என்றாள் தாரிகா.

"புரியுது ஆனால், நீ தான் புரிஞ்சுக்காமல் பேசுற, இனிவரும் காலத்துல நாம் தான் உன்னுடைய அப்பா அம்மா என்ற விவரம் அவனுக்குத் தெரிந்தால், என்ன நினைப்பான் என்று ஒர் அம்மாவாக நீ யோசிச்சி இருக்கியா, உன்னைப் பற்றி அவன் என்ன நினைப்பான்" என்று எதார்த்தமான கேள்வியை அவள் முன்னே வைத்தான் சதீஷ்.

அதற்கு அவளுக்குப் பதில் இல்லை இப்போ இருக்கிறது கஷ்டமாக இருக்கலாம் ஆனால் வருங்காலத்தில் அது நம் பையனுக்குத் தான் நல்லது என்று அவள் மனதை மாற்றினான். சதீஷ்.

இப்படியே போராட்டமாகவும் சண்டையாகவும் மற்றும் வாக்குவாதமாகவும் நாட்கள் கடந்து சென்றது. மெல்ல இந்தியாவுக்கு அவர்கள் வரும் கால் நேரமும் நெருங்கியது இன்னும் ஒரு மாதத்தில் தாராவின் வளைகாப்பு அதற்காக அவர்கள் இந்தியாவிற்கு வர முடிவுச் செய்திருந்தனர் சதீஷ் குடும்பத்தினர்.

ஒரு மாதம் கழிந்து வளைகாப்பு என்ற நிலையில் தாராவிற்கு வளைகாப்புடைய மகிழ்ச்சியோ ஆரவாரமோ எதுவுமே இல்லாமல் மனம் சோர்ந்து போயிருந்தது. வளைகாப்பு முடிந்ததுமே தன்னை விட்டுப் பிரிந்துசென்று விடுவான் அமரன் என்ற வேதனை அவளை வாட்டி வதைத்தது.

அதனால் உடல் எடையும் குறைவாகிபோனது அவளைப் பரிசோதிக்கும் டாக்டர் "மாசமாக இருக்கும் பெண்ணுடைய உடல்எடைக் குறைவாகக் கூடாது கவனமாக இருங்கள். டெலிவரி டைம் காம்ப்ளிகேட்டட் ஆகிவிடும்" என்று அறிவுறுத்தினார்.

எல்லாம் பார்த்தும் கேட்டும் கோபத்தின் உச்சத்தில் இருந்தால் அதியமான் நான்கு வருடங்களுக்கு முன்னே தாரிகாவின் திருமணம் முடிந்ததுமே பிள்ளையைக் கொடுக்கலாம் என்று தன்னுடைய வார்த்தைகளைக் கேட்க மறுத்த தன் மனைவியின் மேல் அவனுக்குக் கோபம் இருந்தது.

அவனுக்கும் வேதனை அல்லவா இந்த நான்கு வருடங்களும் மார்பிலும் தோளிமேலும் இட்டு வளர்த்திய தன் பிள்ளை அமரனைப் பிரிவது என்பது அவனுக்கு மிகவும் கொடூரமாகத் தோன்றியது. அவனை விட்டு எப்படி இருப்பான் என்று நினைத்தாலே தந்தையாகஅதியமானுக்குக் கண் கலங்கியது.

இதுவும் கடந்து போகும் இனிவரும் காலங்களில்... இப்பொழுது என்றால் பரவாயில்லை. இனியும் சில காலங்கள் கடந்து அவனுடைய பெற்றோர் தாங்கள் இல்லை என்று அறிந்தால், குழந்தை எப்படி அதை எதிர்கொள்வான் என்பது கேள்விக்குறித் தான், அதனால் இதுவும் கூட நல்லதுக்குதான் என்று தன்னுடைய வேதனையிலும் நல்லதைத் தேடினான் அதியமான். அதுவும் அமரனுக்காகவே தேடினான் அதியமான்.

தாராவின் உடல் நிலையும் யோசித்தான். அவன் மனதில் பயத்தை உண்டாக்கியிருந்தது இந்தப் பிரசவ நேரம். எதுவும் இல்லாமல் நல்லபடியாக அவள் பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டினான் அதியமான்.

தன்னை விட்டுபிரிந்து செல்லும் மகனுக்காக மகனுக்கு வருங்காலம் நல்லபடியாக அமைய வேண்டும். அவனுக்கு நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் தாரா. அவனிடம் எப்படித் தாரிகாவோடு அனுப்பும் விஷயத்தைக் கூறுவது என்று தெரியவில்லை.

அவன் எப்படி அதை எடுத்துக் கொள்வான் என்றும் புரியவில்லை ஆனால் அவளாகத் தாரிகாவும் சதீஷும்தான் உன்னுடைய அப்பா அம்மா என்ற உண்மையைக் கூற மனம் வரவில்லை அது கூட்டிச்செல்லும் அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று நினைத்தாள்.

அதனால் அவனிடம் பேசத் தயாரானாள், மனதளவில் தைரியத்தை வளர்த்துக் கொண்டு அவனோடு என்ன கூற வேண்டும் எப்படிக் கூற வேண்டும் என்று பலமுறை தன்னுள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டாள் தாரா. இதோ அவனிடம் பேசவும் தயாராகி விட்டாள்.

காவியத்தில் அந்த யசோதாவின் வலியினை மனதளவில் உணர்ந்தாள் தாரா.


அமரனுக்கான உணவை எடுத்துக்கொண்டு அவனைத் தன் மடியில் அமர்த்தி இருந்தாள் தாரா. அமரனோ தாராவிடம் அம்மா பாப்பாச்சாப்பிட்டானா? என்று கேட்டான்.

"அவன் எப்போவோ சாப்பிட்டான் தங்கம், நீ சாப்பிடு" என்றவள் "அமரன் குட்டியிடம் அம்மா கொஞ்சம் பேசணுமே" என்றாள்.

"என்னம்மா, பேசணும்" என்று கேட்டான்.

கேட்டவனோ அவள் வயிற்றுக்குள் குனிந்து "பேபிச் சாப்பிட்டீங்களா நீங்க" என்று காது வைத்துகேட்டான் அந்த நேரம் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையும் தன் இருப்பிடத்தை உணர்த்தியது.


"அம்மா பாப்பாச்சாப்பிட்டுட்டேன்னு சொல்றமா" என்று அவள் வயிற்றில் ஒரு முத்தத்தைப் பதித்தவன், "எனக்கும் கொடுங்கள்" என்று கூறி உணவே வாங்கி உண்ணத் தொடங்கினான்.

அப்பொழுது மெல்ல அவன் முடியைக் கொத்திவிட்டவள், "தங்கம் என்றவளின் முகத்தையே பார்த்தான் அமரன்.

"தாரிகாசின்னம்மா ஊர்ல இருந்து வராங்க" என்றாள்.

"அப்படியா எப்ப வராங்க, அமித் பாப்பாவும் வருவான் தானே" என்றான் அமரன்.

"ஆமாம் வரான்" என்றவள் "இந்தத் தடவை அவங்களுடன் நீயும் ஊருக்குப் போக வேண்டி வரும்" என்றாள்.

"எதுக்குமா நான் போணும்" என்றான் அமரன்.

"அம்மாக்குப் பாப்பாப் பொறக்குது இல்லையா, அதனால உன்னை அம்மாவால் சரியாகக் கவனிக்கவே முடியாது. அதனாலதான் சின்னம்மாவுடன் இப்போ உன்னை அனுப்பறேன். பாப்பாப் பெருசானதும், அம்மா வந்து உன்னைப் பார்க்க வரேன்" என்று கூறினாள் தாரா.


"யமுனா ஆன்ட்டியும் இருக்காங்க , நம் பாட்டியும் இருக்காங்கல்ல, ஊருக்குப் போனாதும் புனிதாபாட்டி வருவாங்கள் தானே... அப்பறம் நானும் குறும்புப் பண்ண மாட்டேன் அம்மா" என்று அவனுக்கு அறிந்தது போலப் பேசினான்.

"ஆமாம் அவர்கள் எல்லாம் வயசானவங்கள் தானே, கஷ்டப்படுத்தக் கூடாதுத் தங்கம்" என்றாள் தாரா.

மகனிடம் பேசுவதைக் கேட்டப்படி அங்கே வந்தான் அதியமான். கணவனைக் கண்டதும் கண் கலங்கியது அவளுக்கு…
சதீஷ் அமரனைக் கேட்டதில் இருந்து தாராவிடம் பாராமுகமாக நடந்தான் கோபத்தில்…

அப்பா என்று அவனிடம் தாவி ஓடினான்.

"அம்மா அப்பாவுக்குச் சாதத்தைக் கொடுங்கள்" என்றவன் தாராவைப் பார்த்தான்.

வேகமாக உணவை எடுத்து அவனுக்கு ஊட்டினாள் அவன் தாரா. அவளின் முகத்தைப் பார்த்தவனுக்குக் கண் கலங்க உணவை‌தரும் அவளை‌ வேதனைப்படுத்த விரும்பவில்லை அவள் கணவன்.

அவளிடம் உணவை வாங்கி உண்டவன் அவளுக்கும் ஊட்டி விட்டான் அதியமான்.

‌தாரா அதியமான் அமரன் என்று மூவருமான ஒன்றாக இருப்பதைப் பார்த்துக் கண் பட்டு விடும் என்றார்சாந்தியம்மா.

"இனி‌க் கண் பட்டால் என்ன அம்மா… அதுதான் எல்லாம் மாறிடுச்சே" என்று கூறினான் அதியமான்.

"அப்படியெல்லாம் பேசாதே தம்பி.. சதீஷ் உன் தம்பி கண்டிப்பா உனக்காக விட்டுக் கொடுக்கத் தான் யோசிப்பான்" என்று நம்பிக்கையோடு கூறினார்.

தன் தாயின் நம்பிக்கை உடைக்கவென வந்து கொண்டு இ
ருந்தான் சதீஷ்.

தொடரும்…
 
Top