எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா -30

subasini

Moderator
மனம் - 30

இயற்கையின் மாற்றங்களில் மிகவும் அழகானது இரவில் இருந்து விடியலுக்கான பயணம் தான்.

அமரன் இந்தப் பயணத்தை ரசித்தபடியே நீண்ட வருடங்களுக்குப் பிறகு தாராவைப் பார்க்கபோகும் ஆவலில் வந்து கொண்டிருந்தான்.

இதெதுவும் தெரியாமல் என்றும் போல் அதிகாலையில் எழுந்தவள் சுப்ரபாதம் ஒலிக்க விட்டு, தன் பணிகளைச் செய்துக்கொண்டு இருந்தாள்.

மனதில் இன்றைக்கு என்னமோ நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சஞ்சலம் உண்டானது.

அதையெல்லாம் மனதில் அண்ட விடாமல் வேலை அவளை உள்ளிழுத்துக்கொண்டதில், பரபரபாகத் தன் வேலையில் மூழ்கியவளின் கவனத்தை வீட்டின் அழைப்பு மணிக் கவனத்தைத் திருப்பியது.

இந்நேரத்தில் யாராக இருக்கும் என்ற எண்ணத்தில் கதவைத் திறக்கச் சென்றாள் தாரா.

யமுனா, தன் குடும்பத்தோடு சேர்ந்ததில் வேலையை விட்டு இருந்தாள். உமா மட்டுமே தங்களோடு தங்கிபணிப் புரிந்துக்கொண்டிருந்தாள். அவள் சாந்தியம்மாவின் அறையில் தங்கிக்கொள்வாள்.

இரவில் அவருக்கு எதாவது உடல் நிலைசரியில்லை என்றால் கவனிக்க வேண்டி, அவருடனே அவரோட அறையில் தங்கி இருந்தாள் உமா.

வீட்டின் அழைப்பு மணியின் ஒலியில் உறக்கத்தில் இருந்து அவளுக்கு வழிப்புத் தட்டியது. வேகமாக எழுந்து வரவதற்குள் கதவுத் திறக்கும் சத்தம் கேட்டதில் தாரா விழுத்துக்கொண்டாள் என்பது அறிந்து வேகவேகமாகக் குளிக்கச் சென்றாள்.
வாயிலில் டிசார்ட் மற்றும் ஷர்ட்டஷோடு கையில் பயணப்பெட்டியை இழத்துக்கொண்டு அமரன் நிற்பதைக்கண்டு, கதவைத் திறந்த தாரா அதிர்ச்சியில் சிலையென நின்றிருந்தாள்.

பல நாட்கள் இப்படித் தன் பெரிய மகன் தன்னைத் தேடி வர மாட்டானா! என்று பல முறை அவள் கற்பனைச்செய்திருக்கிறாள். அவளின் ஏக்கமும் கற்பனையும்… இன்று நினைவில் நடந்துக்கொண்டிருக்கும் நேரம் வார்த்தைகளற்று ஊமையாக நின்றிருந்தாள்.

“வீட்டிற்கு வந்தவங்களை வா என்று கூப்பிட மாட்டீங்களா” என்றான் அமரன்.

அப்பொழுதான் நிகழ்காலம் உரைக்க அவனை வா என்று உள்ளே அழைத்தாள்.

அவன் எந்தத் தயக்கமும் இல்லாமல் நேராகப் படுக்கயறைக்குச் சென்று அதியமானின் அருகில் படுத்தான் அமரன்.

பல வருடங்களுக்குப் பிறகு நுகரும் அவன் தந்தையின் மணம்.

தன்னைதேடி மகள் தான் வந்து படுக்கிறாள் என்று எண்ணிய அதியமான் வேகமாக அவளை அணைத்து, தன் தூக்கத்தைத் தொடரநினைத்தவன் மூளை மெல்ல உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டது.

தன்னருகில் இருப்பது சின்னவளல்ல என்றுணர்ந்தது மட்டுமில்லை, அவன் திடமான தேகத்தை அணைத்ததில் யாரெனத் தெரிந்தது.

அணைப்பில் இருந்த மென்மைக் குறைந்து அழுத்தம் இருந்தது. தன் தந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்துகண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து.

தன் மாமியரை அழைத்தப்படி வேகமாகத் தங்கள் அறைக்கு வந்த தாரா அங்கே கண்டகாட்சியில் அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

அமரனின் கண்ணீர், தந்தையின் மேனியை நனைத்ததில் மெல்லகண் திறந்தவன் கண்டது தன்னருகில் கண்கள் மூடியவாறு படுத்திருக்கும் அமரனைதான்.

மகனைக்கண்டதும் அவனை நன்றாக அணைத்தவன் “அமரன்” என்று அழைத்தான்
தந்தையின் அழைப்பில் கண் திறந்தவன் அதியமானைப் பார்த்துச் சிரித்தான்.

"எப்படி அப்பா இன்னும் அதே சாமிங்வோட இருக்கீங்க" என்றபடியே எழுந்து அமர்ந்தான்.

"என்ன அமரா… இரண்டு நாட்களுக்குப் பின் தானே வருவதாகச் சொன்னாய்.. இப்படிச் சொல்லாமல் வந்திருக்கிறாய்…‌ நீ வருகிறாயென்றால் உன்னை அழைத்து வருவதற்கு அப்பாவை அனுப்பியிருப்பேன் தானே" என்ற சாந்தியிடம் சர்ப்ரைஸ் பாட்டி என்றான். இந்தப் பரபரப்பில் தாராவின் இரண்டு மக்களும் வந்தனர் தங்கள் பெற்றோரின் அறைக்கு.

அமரனைக் கண்டதும் "ஹாய் அண்ணா" என்றபடி அவனிடம் தாவினாள் ஐந்தில் படிக்கும் அமராவதி…

"ஹாய்பேபி எப்படி இருக்கிறாய்" என்றபடி அவளைக் கொஞ்சினான் அவளுடைய பெரிய அண்ணன்.

தன் அண்ணனைக் கண்டதும் "ஹாய் அண்ணா" என்று தாயின் அருகில் சென்று நின்று கொண்டான் அகில்.

"எப்படி இருக்கிறாய் அகில்? ஸ்கூலெல்லாம் எப்படிப் போகிறது? என்று கேட்டான் அமரன்.

"இட்ஸ் கூல் அண்ணா என்றவன், உங்கள் பயணம் எப்படி இருந்தது" என்று கேட்டான்.

சிறுவர்களின் பேச்சில் கலந்துக்கொள்ளாமல் அமரனை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் மனைவியைப் பார்த்த அதியமான்..
“தாரா, பிள்ளைகளுக்குக் குடிக்க எதாவது கொண்டு வா" என்ற வார்த்தைகளைக் கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தாள் தாரா.
மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதும் அமரன் அவளைக் கவனித்துக்கொண்டு தான் இருந்தான். தந்தையிடம் இருக்கும் பாசத்தைக் கண்டு புருவம் சுருக்கியவள்… இவன் தம்பி தங்கைகளிடம் பேசியதில் முகம் வாடியவள்.. பாட்டியிடம் காட்டும் அன்பில் லேசாகக் கண் சிவந்து நின்றவள் என்று பலதரப்பட்ட உணர்வுகளைத் தாராவின் முகம் காட்டியது.

அதியமானின் வாரத்தைகள் சமையறை வரை கேட்டதோ என்னம்மோ.. உமா வேகமாக அங்கே இருக்கும் அனைவருக்கும் தேவையான எல்லாம் எடுத்து வந்தாள்.

சிறுவர்களுக்குப் பால், சாந்திம்மாவிற்குச் சர்க்கரைக் குறைவான டீ, தாரா மற்றும் அதியமான் அமரனுக்குக் காபி என்று அணைவருக்கும் எடுத்து வந்து கொடுத்தாள். அங்கே அனைவரும் அமர்ந்துக் குடித்தப்படி அமரனிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

தாராவை அதியமான் மற்றும் அமரன் அடிக்கடிப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அனைவரிடமும் பேசிய அமரன் அவளிடம் எதுவும் பேசவில்லை அவளும் அவனிடம் பேச முயலவில்லை.

இவருவரின் நிலையைக் கண்டதும் மனதில் பாரம் ஏறி அமர்ந்தது அதியமானுக்கு.

இவர்களின் இடையே இருக்கும் இந்தத் திரையை எப்படி அகற்ற என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.

தன் பெரிய மகனின் முகத்தில் இருந்த சோர்வைக் கண்டதும் “ம்ம எல்லாம் போய்ப் பிரெஷாகுங்கள் … அண்ணா சாப்பிட்டுக் கொஞ்ச நேரம் தூங்கட்டும்” என்றாள் தாரா.

“இன்னைக்கு ஸ்கூலுக்குப் போக வேண்டாமா” என்றவளிடம் "இன்றைக்கு நாங்கள் லீவ்… அண்ணா வந்திருக்கறாரு” என்று கோரஸ் பாடினார்..

அப்போது வேகமாக அமராவதியின் முகம் பார்த்தவன் “என்னபேபி, சொல்லவே இல்லையே நீ என்னிடம்… லாஸ்ட் டே வீடியோ காலில்” என்று தன் சிறிய தங்கையைக் கொஞ்சினான் அமரன்…

"இட்ஸ் ஆல்ஸோ ஏ சர்ப்ரைஸ் அண்ணா" என்றாளே பார்க்கலாம்…

"ஸ்வீட் பேபி நீ" என்றபடியே அவளை எடுத்துக் கொண்டு வந்தவன் அவன் பயணப் பெட்டியில் இருந்து அவளுக்கான பரிசை எடுத்துக் கொடுத்தான்…

ஓஹோ…என்று ராகம் இழுத்த அகிலனிடம்.. "ராகம் பாடாதே, உனக்கு நீ கேட்ட வாட்ச் வாங்கி இருக்கேன்" என்றவன் அவனிடம் கொடுத்தான்..‌
"தேங்கஸ் அண்ணா" என்று அவனை ஆரத்தழுவினான் அகிலன்…

"சரி நீங்கள் பிரெஷாகுங்க "என்று அவனும் தன்னறைக்குச் சென்றான் அகிலன்.

தாரா வேகமாகக் காலை நேரம் "நானே சமைக்கறேன் நீங்கள் உதவிச்செய்யுங்கள்" என்று உமாவிடம் கூறி, சமைக்குத்தொடங்கினாள்.
தன் பெரிய பேரனிடம்.. "சதீஷ் நல்லா இருக்கானா… அவனுக்குத் தான் எங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரதே இல்லை" என்று மகனைப் குற்றம் வாசித்தார் சாந்தியம்மா.

"அதெல்லாம் இல்லை பாட்டி உங்களுக்காக இந்தியாவிற்குத் திரும்பி வரேன்" என்று சொல்லச்சொன்னார் என்றான் அமரன்.

"சரி நீ குளிச்சுட்டு வா அமரன் நானும் குளிக்கப் போறேன்" என்று தன்னறைக்குச் சென்றார்சாந்தியம்மா.

அங்கே அமரன் மட்டும் அதியமான் இருந்தனர்.

நின்றவாறே தந்தையைப் பார்த்த அமரனிடம்…

"எப்படிடா இருக்க" என்று கேட்டான் அமரனின் தந்தை.

அவர்களைப் பிரிந்துசென்ற வருடங்களைப் பதிவுசெய்து… “இத்தனை வருடங்களும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன் அப்பா” என்றான் அமரன்.

அவன் அருகில் வந்த அதியமானைக் கட்டிப் பிடித்த அமரன்

“எல்லாம் இருந்தது... அதெல்லாம் என்னுடையதாக இல்லை" என்ற உணர்வு இருந்தது.

நான் யாரையும் குற்றம் சொல்ல வில்லை, ஆனால் என்னுடையது தான் என்ற போதிலும், அதெனக்கானதாக இல்லை என்பதை உணர்ந்துக் கொண்டேன்‌” என்ற மகனின் உணர்வுகளைப் படித்தவனுக்குத் தவறிழைத்து விட்டேனோ! என்று தோன்றியது.


அங்கே வந்த தாரா மகனின் வார்த்தைகளைக்கேட்டு வேதனையோடு நின்றிருந்தாள்.

தந்தையின் பின்னே நின்றிருந்த தாயைக் கண்டதும் தன் நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன், மெல்ல முகத்தை மாற்றி “உங்க சம்சாரம் வந்துட்டாங்கள் கடமையாற்ற” என்று கேலிச் செய்தான்.

மகனின் வார்த்தைகளைக் கேட்டு அவனை முறைத்தவள்…‌ “இப்படியே பேசிட்டு இருந்தாலென்ன அர்த்தம்.. ம்ம் இரண்டு பேரும் சீக்கிரம் ரெடியாகுங்க” என்றாள் தாரா.

எதுவும் தெரியாமல் முழித்த தந்தை மற்றும் மகனின் முகத்தைப் பார்த்தவள்..

“கோயிலுக்குப் போகணும்”…
என்று அறையில் இருந்து வெளியேறினாள்.

தந்தையைப் பார்த்து “என்ன இன்றைக்கு எதாவது விஷேச நாளா” என்றவரிடம்
“நீ வந்துவிட்டாய்… இல்லையா! அதுவே அவளுக்கு விஷேச நாள் தான்” என்றான் அவன் தந்தை…

“பார்த்தால் தெரியவில்லையே” என்றவனின் செயலில்

“குசும்பு டா உனக்கு.. பாவம் டா என் பொண்டாட்டி” என்ற தந்தையிடம்

“எப்படிக் காதல் இன்னும் குறையாமல் இருக்கிறது உங்களுக்கு"… என்றவனைப்
பார்த்து

“அதெல்லாம் அப்படித் தான்” என்ற குளிக்கச் சென்றான் அதியமான்.


அனைவரும் தயாராகி வந்தனர்.

சாந்தியம்மா எனக்கு முடியலை நீங்கள் போயிட்டு வாங்க.. நான் வீட்டில் சாமிக் கும்பிட்டு ‌நீங்க வருவதற்குள் உமா விடம் சொல்லி என்ன எல்லாம் சமைக்க என்று‌பார்க்கிறேன் என்று கூறி விட்டார்.

அதியமான் தன் மனைவி பிள்ளைகள் உடன் கோயிலுக்கு வந்தான்.

சாமிசன்னிதியில் கண் மூடி நின்றிருந்தாள் தாரா.

மனம் அமைதியடைந்ததில் நிம்மதி உண்டானது.

தன் மகன் தன்னைத் தேடி வந்து விட்டான் என்பதே அவளுக்கு நிறைவைதந்தது.

அவன் பேரில் அர்ச்சனைசெய்தவள் பிரசாதம் வாங்கியதும் அவனைத் தான் தேடினாள்… அவள் பின்னால் நின்றிருந்த அமரன் தாராவின் தோளினைத் திருப்பித் தன் பக்கம் பார்க்க வைத்ததும், அவன் நெற்றியில் திருநீறுப்பூசியத் தாராவின் விழிகள் சிவந்தது…


அவன் கைகளைப் பிடித்து அழைத்து வந்து அங்கே இருக்கும் முதியோர் அனைவருக்கும் அன்றைய உணவும் அதே போல அவர்களுக்கு உடையும் கொடுக்க வைத்தாள்.

இருவரும் எதையும் பேசிக் கொள்ளவில்லை.. தாயின் கட்டளை மீறும் பிள்ளை அல்லவே அவன்.

எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்தவன் உணவு உண்டதும் உறங்கச்சென்றான்.

பயணக் களைப்பு இருந்தது அவனுக்கு. தன் தாய்தந்தையின் அறையில் உறங்குவது , அவர்கள் மடியில் தூங்கிய உணர்வினை உண்டாக்கியது.

அவன் செயலில்.. "நல்லா வளர்த்தி வச்சிருக்கடிப் புள்ளைய" என்ற கணவனின் வார்த்தைகளை "நான் எங்கே வளர்த்திதேன்.. அவனாக வளர்ந்து இருக்கிறான்" என்றவளின் சொல்லில் வேதனைக் கரைபுரண்டது…

நேரம் செல்ல மதிய உணவின் நேரம் வந்ததில் அமரனை உணவு உண்ண எழுப்ப வந்தவள்…
நன்றாக உறங்கும் மகனைக் கண்டவள் அவன் அருகில் அமர்ந்து மெல்லதலை முடியைக் கோதி விட்டாள் தாரா.

தாயின் வாசனை நுகர்ந்தவன் சட்டென அவள் மடியில் தலையை வைத்துபடுத்து, தன் உறக்கத்தைத் தொடர்ந்தான் அமரன்.

வளர்ந்து மகனின் செயலில் அவன் ஏக்கங்களை உணர முடிந்தது.

'அவன் இழந்ததும்… அன்று கிடைக்காததும் தன் தாய் மடி' என்று‌சொல்லாமல் சொல்லிய அவன் செயலில் துக்கம் அவள் தொண்டைக் குழி அடைத்ததில்… வேதனை வார்த்தைகளின்றி வெளிவர முடியாமல் தடுமாறியது.

அந்தச் செயலின் அழுத்தம் அவள் அழுகையின் சத்ததை விசும்பலாக அங்கே எதிரொலித்தது.

"அவள் கண்ணிலிருந்து பிறந்த நீர், அவன் தலை முடியை நனைக்கப் பட்டென விழித் திறந்தவன் தாராவின் முகத்தைப் பார்த்தான்.

அழுத விழியோடு அமர்ந்து இருக்கும் தாராவைப் பார்த்தவன் அவள் கன்னத்தைத் துடைத்து விட்டு “ஏன் அம்மா" என்று அவளை அணைத்தான்.
"தப்புப் பண்ணிட்டேன் டா… உன் நன்மைக்காக என்று, நான் செய்த விஷயம்... உனக்கு இவ்வளவு வேதனையைத் தரும் என்று நினைக்கவில்லை"… என்று அவனைக் கட்டிப்பிடித்து அழுதாள் தாரா.

"தாரிகா என் இடத்தில் இருந்து உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வாள் என்று நம்பினேனே”… என்றாள் தாரா.

“உங்க இடத்திற்கு அவங்க வரவில்லையா.. இல்லை நான் அனுமதிக்க வில்லையா? என்று எங்கள் இருவருக்கும் தெரியாது. ஆனால் உங்களின் இடம் என் வாழ்க்கையில் காலியாகத் தான் இருக்கிறது அம்மா” என்றவனை அணைத்து உச்சி முகர்ந்தாள் தாரா.

எப்படியெல்லாம் சீராட்டி வளர்த்தபிள்ளை… அவனுக்கான பாசம் கிடைக்காமல் தான் உயிரோடு இருந்தும் அன்னை மடிக்கு ஏங்கியிருந்திருக்கிறான்… அவனிடம் அம்மாவாகத் தன் அன்பை வழங்காமல் தவிக்கவிட்ட, தாரிகா மேல் கட்டுக்கடங்காத கோபம் உண்டானது மனதில்.

“எல்லாம் என்னுடைய தவறு தான்… அவங்களை நம்பி உன்னை அனுப்பி வைத்தது” என்று அழுதாள்.

“சாரி … சாரி டா, செல்லம்" என்ற தாரா அவன் முகத்தைப் பார்த்து "என் மேல் உனக்குக் கோபம் இல்லையா… வரேன் என்று கூறி வராமல் உன்னை ஏங்க வைத்து.. பல‌வருடங்கள் காக்க வைத்து... கேவலமாக ஏமாற்றி இருக்கிறேன்” கூறியவளுக்கு எப்படியாவது காலயெந்திரத்தில் சென்று நடந்ததை மாற்ற முடியாதா என்ற ஏக்கம் உண்டானது. அதுவே அவளைக் கொன்றது மனதளவில்.

“சதீஷ் சட்டரீதியான நடவடிக்கை வைத்து உன்னை எங்களிடம் கேட்டான்… அதுதான் எந்தப் பிரச்சனையும் வேண்டாம், உன் மனதில் தேவையில்லாத குழப்பங்கள் உண்டுபண்ண விருப்பவல்லை. அதுமட்டுமின்றித் தாரிகா மற்றும் அமீத்காகவும் யோசித்தேன்” என்றாள் தாரா.

தாயின் வார்த்தைகளைக் கேட்டு “அப்போ எனக்காக யோசிக்க வில்லையா” என்றான் அமரன்.

"யோசித்தேனே… எதிர்காலத்தில் அவர்கள் தான் உன்னைப் பெற்றவர்கள் என்று உனக்குத் தெரிய வரும் போது ஏற்படும் வேதனை, என்னால் பார்க்க முடியாது அமரா… அதுமட்டுமின்றி உன்னைப் பெற்றவள் நானில்லை என்று நீ அறிந்து என்னைவிட்டு விலகி விட்டாயானால்… நான் உயிரோடு இருக்கவே மாட்டேன்” என்ற தாயின் சொற்கள் எல்லாம் அவன் வேதனைக்கு மருந்தாக மாறி அவனைக் குளிர்வித்தது…

இத்தனை காலமும் இதையெல்லாம் மனதில் போட்டு வேதனைபட்டு வரும் தாராவின் உணர்வுகளை உணர்ந்து கொண்ட அமரன் “விடுங்க அம்மா... காலம் நம்மை எங்கே விட்டுச் சென்றதோ அங்கே இருந்து வாழ ஆரம்பிக்கலாம்.

"எனக்கு என்று நிறையக் கடமைகள் இருக்கிறது… அதற்கு‌ நீங்க தான் என்னுடன் இருந்த எல்லாச் சொல்லிதரணும். வரும் காலங்களில் நமக்கு நேரமிருக்காது… இப்படி வேதனைபடுவதற்கு” என்று தன் தாயின் மனதை மாற்ற, பல விஷயங்களைப் பேசியவன் “அம்மா பசிக்குது” என்றான்…

"வா, போய்ச் சாப்பிடலாம்" என்றவளிடம் “ரொம்ப டையர்டாக இருக்கும்மா” என்றான்.

“சரி. இரு‌ வரேன்” என்றவள் நேராகச் சமையலறை வந்து அவனுக்கு உணவினை எடுத்துக் கொண்டு வந்தாள்.

பெற்றவள் தாரிகா என்றாலும்… அவன் மண்ணில் வந்த காலத்தில் இருந்து கையிலேந்தியவள் தாரா... அந்தப் பந்தம் பல வருடங்கள் பிரிந்து வாழ்ந்தபோதும், அதில் விரிசல் விழாமல் மேலும் இறுக்கிபிடித்து இருந்தது.

அதே சமயம்… "அவனுக்கு உணவினை ஊட்டிவிட்டவாறே… அமரா உனக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் கிடைத்தது கூடக் கிடைக்காமல் செய்து விட்டேனே"… என்று புலம்பியபடி அவனுக்கு உணவை ஊட்டியவளின் செயலில்….‌சிரித்த அமரன்…

"அம்மா.. ஏன் இப்படிப் புலம்பிட்டே‌இருக்கீங்க…‌ நடந்ததை மாற்றக்கூடய அளவுக்கு நமக்குச் சக்தி இல்லை… அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் போது மன வலிக் குறையும்… இந்த வேதனைக்கான மருந்தாக இனி வரும் காலங்களில் நாம் சந்தோஷமாக எல்லாம் ஒன்றாக இருக்கலாம்" என்றான் அமரன்.

ம்ம் என்றவளின் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவன், "அச்சோ
… விடுங்க இதெல்லாம் நமக்கு நடக்க வேண்டும் என்றிருக்கிறது" என்றவன் அவளுக்கு உணவை ஊட்டி விட்டான்…

அங்கே அம்மா மகனுக்கு இடையேயான பாசம் புதுப்பிக்கப்பட்டது…


தொடரும்…
 
Top