எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காற்றலையில் ஓர் காதல் காவியம் - அத்தியாயம் 1

Dharshika

Moderator
"நெஞ்சுக்குள்ளே இன்னாறுன்னு சொன்னால் புரியுமா... " வானொலி மெல்ல இசைத்து கொண்டிருக்க ஜன்னல் ஓரமாக கையில் தேனீர் நிறைத்த கோப்பையுடன் இயற்கை அழகை கண் இமைக்காமல் பார்த்திருந்தாள் தியா.

கண்கள் என்னவோ இயற்கையை தான் ரசித்தன ஆனால் அவள் நெஞ்சம் முழுதும் வேறு எண்ணம். அன்று புதன் கிழமை அதனால் வானொலியில் காலையில் இருந்து இரவு பன்னிரனண்டு மணி வரை இடைக்கால பாடல்கள் வரிசை கட்டி ஒலித்தது. தியாவின் ஈடுபாடுகளில் பாடல்கள் தனி மகுடம் சூடிக் கொண்டு முதலிடத்தைப் பிடித்தவை.

தியா என்றாலே வானொலி தான் என்று அவளை நன்கு தெரிந்தவர்கள் சொல்லுவார்கள். தியா அதிகம் யாருடனும் பேசி பழக மாட்டாள். தியாவுக்கு மிக பிடித்த வானொலி பிரபலத்தின் நிகழ்ச்சி தினமும் இரவு ஒன்பது மணிக்கு ஒலிபரப்பாகும். அந்நிகழ்ச்சியில் காதல் கவிதைகள் வாசிக்கப்படும் அதுவும் தியாவின் மனதை கொள்ளை கொண்ட அந்த குரல்.

தியா அன்று வழக்கம் போல ஒன்பது மணி நிகழ்ச்சியை ரசித்து கொண்டிந்த போது அவளுக்கும் ஒரு கவிதையை பகிர தோன்றியது.


"அன்பின் ஏக்கம் அதை அடையும் வரை எரியும் தீபம்; அதை இழந்த பின் மட்டும் உணரப்படும் உண்மை. ஆனால் கையில் கிடைத்த பின் மிஞ்சுவது அலட்சியமே…"
என பகிர்ந்தாள்.

அதன் பிறகு வேலைகளை செய்து முடித்தவள்.
"அம்மா டின்னர் சாப்பிட வாரிங்களா?" என கேட்டுக் கொண்டே அறையில் நுளைந்தாள்.


விஜயா ஏதோ யோசனையில் மூழ்கி போனவராய் தன் அறையின் சுவற்றை பார்த்த வண்ணம் இருந்தார்.

"என்னம்மா பதிலே சொல்லல? " என்றவள் அம்மாவின் முன் அமர்ந்து அவர் கைகளை வருட.

சுயத்துக்கு வந்த விஜயா "தியாம்மா. என் கிட்ட ஏதும் கேட்டியா டா?" என செல்ல மகளின் கண்ணம் வருடி கேட்க தியா சிரித்து விட்டாள்.

“என்னம்மா யோசன உங்களுக்கு?”என்றாள் தியா.
“எல்லாம் உன்னோட எதிர்காலம் பத்தி தான் டா தியா குட்டி”. என்றார் விஜயா.


"என் எதிர்காலத்துக்கு என்னம்மா?

“சாப்பிட வாங்கம்மா பசிக்குது” என்றதுமே விஜயா “இன்னுமா நீயும் சாப்பிடல?” என்று சக்கர நாற்காலியை நகர்த்தி சாப்பாடு மேசையின் அருகே வந்தார்.

தாயும் மகளும் சில விடயங்களை பேசியபடி இரவு உணவை முடித்து விட்டு சீக்கிரமே தூக்கத்திற்க்கு அவரவர் அறைகளில் நுளைந்தார்கள்.

விஜயா மாத்திரைகள் தந்த தூக்கதினால் கண் அயர்ந்தார். ஆனால் தியா வழமை போல அவளுக்கு பிடித்த பாடலை "காதல் நீதானா காதல் நீதானா உன்னைக்கானத்தான் கண்கள் கொண்டேனா......." இயர்போன் இல் ரசித்தாள் அப்படியே மதி மயங்கி உறங்கி போனாள் பாவை அவள்.

நிகழ்ச்சியில் அவளின் கவிதை வாசிக்கப்பட்டதா என கூட அவள் நினைக்க தவறி இருந்தாள்.

மறு நாள் வழமை போல சுவையான தேனீருடன் அவளின் தோழி வானோலியும் அதில் ஓர் இனிய பாடல் அவள் எப்போதும் கேட்க விரும்பும் பாடல் ஒன்றும் இன்று கூட அவளின் காலை நேரத்தை அலங்கரித்தது.


ஐந்து வயதில் தந்தையை இழந்த நாள் முதல், தியாவுக்கு உலகமே மாறி விட்டது. அந்த நாளின் நினைவு அவளுக்கு இன்னும் தெளிவாக இல்லை. ஆனால் அதன் பின் வந்த வாழ்க்கை மிகவும் தெளிவாக இருந்தது.

ஒரு பெண் தாய், தந்தை, நண்பர், ஆசிரியர் எல்லாம் ஒரே உருவத்தில்.ஆம் அவள் அம்மா விஜயா.


ஓய்வு பெற்ற பின், அந்த உற்சாகமான பெண் மெதுவாக அமைதியானவராக மாறினார். மன அழுத்தம், தனிமை அவளின் உடலையும் மனதையும் பாதிக்கத் தொடங்கின.

இன்று, படுக்கையில் இருந்து எழுவதற்கே உதவி தேவைப்படும் நிலை.

தியா படிப்பு முடித்து அவளும் ஒரு தனியார் பாடசாலையில் ஆசிரிய உத்தியோகத்தில் இருந்தாள். நான்கு ஆண்டுகள் பணியில் இருந்தாள் அத்தோடு அம்மாவை கவனிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

இவற்றை மனதில் அசை போட்டுக்கொண்டே தியா காலை உணவும் தயாரித்து முடித்தாள்.

மகளின் உதவி தேவைப்பட்ட விஜயா “ தியாம்மா இங்க கொஞ்சம் வாரியாடா” என அழைத்தது கேட்ட மகள் நொடிப்பொழுதில் விஜயாவின் அறைக்கு விரைந்து “என்னம்மா ஏதாவது பொருள் வேனுமா? இல்லன்னா பசியா?” என பரிவுடன் கேட்க,

“இல்லடா எனக்கு பசி எல்லாம் இல்ல, என்ன வெளியே கொஞ்சம் கூட்டிட்டு போறியா ?” என சிறு குழந்தை பாணியில் கேட்க,


“சரிம்மா எங்க போலாம் நீயே சொல்லு”என்றாள்.

“கோவில் போலாமா? முடியுமா ?” கேட்டார் விஜயா

“அம்மா உன்ன பாத்துக்க தானே நான் இருக்கேன் இது என்ன கேள்வி முடியுமானு?” சொல்லமாக கோபித்துக் கொள்வது போல பாவனை செய்தாள்.

விஜயாவின் முகம் வாட மறு நிமிடமே “ சும்மா விளையாட்டுக்குமா , நீ எங்க போலானு மட்டும் சொல்லுமா நான் கூட்டிட்டு போறேன்”.

இதை கேட்டதும் அளவு கடந்த சந்தோஷத்தில் விஜயா முகம் பிரகாசிக்க தியாவும் புன்னைகைத்தாள்.

இந்த சின்ன சின்ன சந்தோஷங்களை கூட தன் அம்மா இழந்து விடக்கூடாது என்ற என்னமே தன் மிகவும் நேசித்த ஆசிரிய வேலையில் இருந்து விடை பெற்று முழு நேர வேலையாக அம்மாவை கவனிக்க தொடங்கினாள்.

இப்போதும் அம்மாவின் ஓய்வூதியம் தான் அவர்களுக்கு உதவியது. அது போக தியா மாலை வேளையில் சிறுவர்களுக்கு வகுப்பு நடத்தினாள்.

“அம்மா சாப்பாடுங்க நான் போய் கோவில் போக ரெடியாகிட்டு வாறேன்” என அம்மாவுக்கு சுடச்சுட இட்லி உடன் சாம்பாரையும் பரிமாறி விட்டு தன் அறைக்குள் சென்றாள்.

நீல நிற கோட்டன் புடவையில் இளஞ்சிவப்பு கரையில் மிக அழகாக கையில் பூக்கள் நிறைத்த பூஜைத் தட்டுடன் வந்தாள்.

அம்மாவின் கண்கள் தன்னை இமைக்காமலே பார்த்ததை கவனிக்க தவறவில்லை. தியா “போலாமாம்மா?” என்றாள்.

“நீ சாப்பிடலயா ?” என அம்மா கேட்க, “இல்லமா கோவிலுக்கு போக நேரம் ஆச்சு வாங்க” என அம்மாவின் சக்கர நாற்காலியை வெளியே தள்ளிக் கொண்டு வந்து கதவினை பூட்டிக் கொண்டு மெல்ல அம்மாவின் நாற்காலியை நகர்த்தி கோவிலை நோக்கி நடந்தாள்.


“அம்மா பக்கத்து தெருவில இருக்க அம்மன் கோவிலுக்கு போவோமா? இல்ல…” என பேச்சை தொடங்க,

விஜயா “தியா உனக்கு எந்த கோவிலுக்கு போக வசதியோ அங்க போகலாம்.”என்று முடிவை அவளிடமே விட்டு விட. இருவரும் தியா சொன்ன கோவிலில் தம் வேண்டுதல்களை முடித்து. மீண்டும் வீடு திரும்பினர்.

கதவை திறந்த தியா “அம்மா உங்களுக்கு ரொம்ப அசதியா இருக்கும் நீங்க கொஞ்சம் தூங்குங்க. நான் சமையல் முடிச்சுட்டு எழுப்பி விடுறேன்.” என சொல்ல.

விஜயாவும் “சரி” என தன் அறைக்கு செல்ல.

தியா இலகு உடைக்கு மாறியவள் சமையல் அறைக்கு வர அவள் அன்பு தோழி வானொலி மௌனம் காப்பதை உணர்ந்து உடனே வானொலியை ஒலிக்க செய்தாள்.

தோழி பாடினாள் "ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்…" தியாவும் இனைந்து பாடலை முனுமுனுத்த படி சமையலை முடித்தாள்.

விஜயாவும் அந்நேரம் சமையல் அறைக்கு வார தியாவின் பாட்டு அவர் செவியில் விழ “சூப்பரா பாடுற தியா.” திடுக்கிட்டு போனால் தியா.


“அம்மா நீங்களா நான் பயந்தே போனேன் வாங்க சாப்பிடலாம்” தியா பேச்சை திசை திருப்ப,

விஜயாவும் “சரிம்மா , அந்த மாத்திரை பெட்டிய எடுத்து தாம்மா.” என மதிய உணவுக்கு தயாராகினார்.

தியாவும் விஜயாவும் மதிய உணவுக்கு பின் ஓய்வுக்காக தத்தம் அறைகளுக்குள் விரைந்தனர்.

இதுவே தினசரி வழமையாக இருந்தது. மீண்டும் மாலை தேனீர் அம்மாவின் தேவைகள் மீண்டும் இரவு உணவு என லட்சியமே இல்லாத ஒரு வாழ்க்கை வட்டத்தினை தனக்குத் தானே வரைந்த தியா ஒரு உயிரற்ற பொருளின் இயல்புடன் வாழ்கையை நகர்த்தினாள்.

அவளின் ஒரே ஒரு சந்தோஷம் வானொலியில் கேட்கும் பாடல்களும் அவள் இரவை இனிதாக்கும் அந்த மாய குரலும் தான்.

ஒன்பது மணி இரவு உணவு தயாரிக்கும் வேளை அந்த குரல் “வணக்கம் இதய ஒலி ரசிக சொந்தங்களே…..” என ஒலிக்க தியா வின் முகத்தில் கோடி நிலவின் ஒளி , கண்ணம் சிவக்க அப்படி ஓர் ஆனந்தம் அவள் உள்ளத்தில்.

அந்த குரல் அன்று கிடைத்த காதல் கவிதைகளை இதயங்களுக்கு குளிர்சியூட்டும் விதம் தொகுத்து வழங்கி இறுதியில் “எட்டில் அழகு பதின் எட்டில் அழகு எந்தப் பெண்ணும் இருபதில் இரட்டை அழகு ….” பாடலை ஒலிபரப்பி விடைபெற்றது அந்த மாயக்குரல்.

தியா அந்த நாளின் முடிவில் தனக்கு பிடித்த குரலை கேட்ட மகிழ்ச்சியில் பெரு மூச்சு விட்டாள்.

அவள் இதயம் அமர்களம் இன்றி அமைதியை உணர்ந்தது.

இரவு உணவும் அம்மாவின் சில உணர்வு கலந்த உரையாடல்களின் பின், அம்மாவின் மாத்திரைகளை கொடுத்து “அம்மா நீங்க எத பற்றியும் யோசிக்காம நிம்மதியா தூங்குங்க” என போர்வை போர்த்தி அம்மாவிடம் விடை பெற்றாள்.

கண்மூடி படுக்கையில் புரண்டாள் ஆனால் தன் கவிதை அந்த மனதை கொள்ளை அடித்த குரல் வாசித்ததா? இல்லையா? என்ற என்னமும் அவ்வப்போது தோன்றி மறைந்தது.
மெல்ல உடல் சோர்வில் கண் அயர்ந்து தூங்கினாள் நாயகி.



 
Top