Dharshika
Moderator
பிரதீப் வீட்டில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன.
மாலை வேளைகளில் , பிரதீப் , அப்பா ராமு அம்மா பார்வதி மற்றும் தம்பி ராகவ் வும் வட்ட மேசை மாநாடு போல ஒருவரை ஒருவர் பார்த்தப் படி அமர்ந்து,
அவரவர்க்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைப் பற்றி கலந்துரையாடுவார்கள்.
அப்படி பேசிக்கொண்டிருக்கும் போது ,
“ கேட்டரிங்ல இருந்து கால் பண்ணி, சரியான ஆட்கள் எண்ணிக்கைய இரண்டு நாள் முன்னாடியே சொல்ல சொன்னாங்கப்பா .” என்றார் ராமு.
“நிச்சிய ஓலை எழுதுற வேலை யாரோடது??. ராமு கேட்க .
எல்லோறும் மௌனமாக இருந்தார்கள்.
“அந்த வேலையை மாறந்தாச்சுப்பா…” என தலையில் கைவைத்தார் பார்வதி.
“நான் எழுதட்டுமா அப்பா?”. என்று ராகவ் கேட்க.
“இல்ல ராகவ் அதை சரியா பண்ணனும் , உன்னால முடியாது..” என்றார் பார்வதி.
உடனே பிரதீப்புக்கு தியா ஞாபகம் வந்தது, சிறு வயதிலிருந்தே தியா தமிழ் மீது அளவற்ற பற்றுக் கொண்டவள் என அவன் அறிவான்.
“அம்மா , நம்ம தியாவ எழுத சொல்லலாம்…”என்றான்.
“ஆமாப்பா , தியாவையே எழுத சொல்லலாம், ரொம்ப சந்தோஷமா செய்வா..” என்றார் பார்வதி.
“நாளைக்கே தியாக்கு கால் பண்ணிச் சொல்லிடுப்பா.”என்றார் ராமு.
“சரிப்பா,அதெல்லாம் சொல்லிரலாம், அம்மா நிச்சிய புடவைக்கு ஜாக்கெட் ரெடியா?” பிரதீப் கேட்க.
“ஆமாப்பா , நாளைக்கு பூஜாகிட்ட அளவு எல்லாம் சரியா இருக்கானு காட்ட போகலாம்னு இருந்தேன் பிரதீப்” என்றார் பார்வதி.
“நீங்க சும்மா ஏன்மா கஷ்டப்படுறீங்க, நான் நாளைக்கு பூஜா வீட்டுத் தெருவைத் தாண்டித் தான் நிச்சியதார்த்த மாலைக்கு ஆடர்ப்பன்ற இடத்துக்குப் போகனு, நானே குடுத்துடுறேன்மா” பிரதீப் சொல்ல,
“அண்ணிய பார்க்க போறேனு சொல்லாம சொல்றான்மா….” ராகவ் ராகம் பாடி அண்ணனை வம்புக்கு இழுத்தான்.
“டேய், சும்மா ஏதாச்சும் அடிச்சு விடாத உன்ன…”என்று தம்பியை பிடிக்கப் பாய்ந்தான் பிரதீப் ஆனால் ராகவ் மின்னல் வேகத்தில் ஓட்டம் எடுக்க துரத்தி ஓடினான் பிரதீப்.
“பசங்களா இங்க இவ்ளோ வேலை இருக்கு இன்னு சின்ன குழந்தைங்க போல விளையாட்டு …” அலுத்துக் கொண்டு எழுந்து சென்றார் ராமு.
பார்வதியும் சிரித்துக் கொண்டே சமையலறைக்குள் சென்றார்.
மறு நாள் தூக்கம் கலைந்து எழுந்த உடனே, பிரதீப் தன் தொலைபேசியை தேடி எடுத்து பூஜாவிற்கு காலை வணக்கத்தையும் காதல் முத்தங்களையும் அனுப்பி விட்டு ,
மற்ற குறுஞ்செய்திகளை திறக்க தியாவிடம் இருந்து நிச்சியதார்த்த வாழ்த்து வந்திருப்பதை கவனித்தான்.
நன்றி என்று பதிலை அனுப்பிய மறு நொடி தியாவின் எண்ணுக்கு அழைத்தான்.
தியாவின் தொலைபேசி அலரும் சத்தம் கேட்க, விஜயா “ தியா உனக்கு கால்.” என்றார்.
தியா முற்றத்தில் நின்று பக்கத்து வீட்டு ராணியுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.
“அம்மா கூப்பிடுராங்கக்கா , நான் அப்பறமா வாறேன்.” என்று வீட்டுக்குள் விரைந்தவள்,
“என்னம்மா??”
“உன் போன் அலறிட்டே இருக்கு யாருனு பாரு…”.என்று விஜயா சொல்ல,
“ சரிம்மா..” என்று தொலைபேசியை எடுத்தாள் அதற்குள் அழைப்பு நின்றது.
“யாரு தியா?.”
“பிரதீப் அண்ணா தான்மா, நான் அவருக்கு கால் பண்றேன்.” என பிரதீப்பின் எண்ணுக்கு அழைத்தாள் தியா.
“குட் மோனிங் தீ….என்ன இளவரசி தூக்கமோ….” என்றான் பிரதீப்.
“குட் மோனிங் அண்ணா, இல்ல நான் ஆறு மணிக்கே எழுந்துட்டேனே…கங்கிராஜுலேஷன்ஸ் அண்ணா” என்றாள்.
“தாங்ஸ் தீ, ஒரு உதவி வேணும் தீ...செய்வியா?.”
“என்ன உதவி? சொல்லுங்க அண்ணா.”
“என்னோட நிச்சியதார்த்தப் பத்திரிகையை எழுதித் தர முடியுமா?.”
“என் அண்ணா கேட்டா செய்யாம இருப்பனா? கண்டிப்பா எழுதித்தாறேன் அண்ணா.”
“ரொம்ப தாங்ஸ் தீ……”
“அதெல்லாம் வேண்டாம், ஆமா பூஜா அண்ணி நல்லா இருக்காங்களா?”
“நல்லா இருக்கா தீ..அடிக்கடி உன்ன ஞாபகப்படுத்துவா, நான் தான் உன்கிட்ட சொல்ல மறந்துறேன்…”
“அது சரி , இனி மறந்தா பொண்ணு தோழி இல்லாம தான் உன் கல்யாணம் நடக்கும் பாத்துக்கோ….” மிரட்டலாக சொன்னாள்.
“சரிங்க இளவரசி , இப்போ நான் உன் அண்ணிய பார்க்கக் கிளம்புறேன், ஈவினிங் கால் பண்றேன் ” என சரணடைந்தான் பிரதீப்.
“சரி அண்ணா ஞாபகமா எனக்கு நிச்சியதார்த்த நேரம் , அண்ணியோட அம்மா ,அப்பாவோட முழு பெயர் எல்லாம் அனுப்புங்க அண்ணா. அண்ணிய கேட்டதா சொல்லுங்க.”
“ சரி தீ , நீ கேட்ட டீட்டேல்ஸ் எல்லாம் சீக்கிரமே அனுப்புறேன்.”என அழைப்பைத் துண்டித்தான்.
பிரதீப் பூஜா வீட்டிற்க்கு சென்றான்.
பூஜா வீட்டு முற்றத்தில் வலது புறத்தில் மூன்று ஜோடி லவ் பேட்ஸ் கூண்டுக்குள் இருக்கும். அவை எழுப்பும் கீச் சத்தமே அவைகளின் காதலை வெளிப்படுத்திவிடும், பிரதீப் எப்போது அங்கு சென்றாலும் அவைகளை ரசிக்காமல் வீட்டினுல் நுழைவதே இல்லை.
இடது புறத்தில் பூஜாவுக்கு பிடித்த பல வண்ண ரோஜாச் செடிகள் செழிப்பாக வளர்ந்து ரோஜா பூக்களை ஏந்திய படி நிற்க, அவற்றில் ஒன்றை பறித்து பிரதீப் வீட்டினுள் நுழைந்ததும் , “வாங்க மாப்பிளை , என்றார் பூஜாவின் அப்பா பாலா.
“வணக்கம் மாமா.”
“என்ன இவ்வளவு தூரம் வந்திருக்கிங்க ஏதும் முக்கியமான விஷயமா?” என கேட்கும் போதே,
பூஜாவின் அம்மா வேனி யும் வர “வந்த மாப்பிளைய உக்கார கூட சொல்லாம…” என கணவனைக் கண்களால் மிரட்டிக் கொண்டே ,
“நீங்க உக்காருங்க மாப்பிளை, நான் போய் பூஜாவை வர சொல்லுறேன்…”
“இல்ல அத்தை நானே போய் பூஜாவை …”என சின்ன தயக்கத்துடன் கேட்க,
“அவ ரூம்ல தான் இருக்கா போய் பாருங்க…” அத்தான் என புதிய குரல் கேட்க எல்லோரும் ஒன்று போல அத்திசையை பார்க்க அங்கே பூஜாவின் தங்கை கௌஷி பைகளோடு நின்றாள்.
“ஹாய் , கௌஷி எப்படி இருக்க?” பிரதீப் கேட்க
“நல்லா இருக்கேன் , நீங்க?”
கௌஷிக்கு அண்ணன் இல்லாத குறையும் , பிரதீப்புக்கு தங்கை இல்லாத குறையும், பூஜா பிரதீப் காதல் தீர்த்து வைத்தது.
“சீக்கிரம் போய் உங்க வருங்காலத்தை பாருங்க அத்தான்.” என பிரதீப்பை சீண்டி ஒருவாரு தன் அம்மா அப்பா விடம் இருந்து காப்பாற்றி விட்டாள்,
பாலாவும் வேனியும் மாறி மாறி கௌஷியை முறைத்து விட்டு அவரவர் வேலைகளைத் தொடர்ந்தார்கள்.
அதற்குள் காதல் மன்னன் மாடி படிகளில் வேகமாக ஏறி பூஜாவின் அறைக்குள் நுழைந்ததும் ,
அவன் கண்கள் அறை முழுதும் அலை பாய்ந்து தன் பிரியமானவளைத் தேடியது. பூஜா பால்கனியில் நின்றிருந்தாள்.
மெல்ல அருகே சென்று பின்னாலிருந்து அள்ளி அணைத்து , நின்ற இடத்திலேயே அவளோடு சுழன்று நின்றான் பிரதீப்.
அதை சற்றும் எதிர் பாராத பூஜா “அம்மா…”என கத்த ,
அவளை தன் பக்கமாக திருப்பினான் பிரதீப் , முகம் சிவக்க முத்துப்பற்களும் வெளியே தெரிய , கண்ணத்தில் குழி விழ சிரித்து , அவன் மார்பில் சாய்ந்தவள், அவன் இதயத் துடிப்பை கேட்டு சிரித்தாள்.”
இதற்கிடையே யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்க , இருவரும் திடுக்கிட,
“யாருடா இந்த நேரத்துல , நல்லா சிவ பூஜையில கரடி போல…” என்று பல்லைக் கடிக்க ,
“ இல்லயே , பிரதீப் பூஜையில…” என்று ஒற்றைக் கண் சிமிட்டி அவனைத் தள்ளி விட்டு கதவு பக்கமாக போக ,
“ போடி…” என்று விட்டு வேறு வழி இன்றி அவளைப் பின் தொடர்ந்தான்.
பூஜா கதவைத் திறக்க வேனி பழச்சாறு நிறைத்த கண்ணாடிக் கோப்பையோடு நின்றிருந்தாள்.
“என்னம்மா ??”
“மாப்பிளைக்கு இதைக் குடு…” என்று கையில் இருந்த கோப்பையை நீட்டிக் கொடுத்தார் வேனி.
“சரிம்மா …” என பவ்வியமாய் வாங்கிக் கொண்டாள்.
சீக்கிரமா கீழே வா, என்ற செய்தியையும் சைகையால் காட்டி விட்டு வேனி நகர்ந்தாள்.
பூஜா மீண்டும் கதவைப் தாழிட்டுத் திரும்ப பிரதீப் கையில் சிவப்பு ரோஜாவோடு சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தான்.
பூஜா பழச்சாற்றை மேசை மேலே வைத்தவள், தன்னவனிடம் நெருங்கினாள், தன்னவளை திருப்பி ரோஜாப்பூவை அவளுக்குச் சூட்டினான்.
அளவில்லா பட்டாம் பூச்சிகள் அவள் இதயத்தில்.
அவன் முகம் பார்த்து “என்ன ஓரே சப்ரைஸ் மழையா இருக்கு…”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை பூஜா, உன்னோட ஜாக்கெட் ரெடி அதைக் காட்டி அளவு சரி பார்க்க அம்மா அனுப்பினாங்க.”என்று பையை பூஜாவிடம் நீட்டினான்.
பூஜாவும் ஆர்வமாக பையைத்திறந்துப் பார்த்தாள்.
“சூப்பரா இருக்கு பிரதீப், நான் அளவு சரியா இருக்கானு உடுத்திப் பார்க்கவா?.... என கேட்டாள்.
“சரி சரி சீக்கிரம்" என்றவன் பூஜாவின் கட்டிலில் நாராயணன் போல் இடது கையால் தன் தலையைத் தாங்கி சாய்ந்தான்.
“நீங்க என்ன, இப்படிப் பார்த்தால் எப்படி…” என வெட்கத்தில் கண்களை கைகளால் மூடினாள்.
“என்னடி …!! நான் என்ன வேறு யாருமா??? என்று கோபமாகக் கேட்டான்.
“பிளீஸ் பிரதீப்…” என்று அவன் கண்ணம் கிள்ளி கெஞ்ச,
பிரதீப் சிரித்துக் கொண்டே “நீ ட்ரை பண்ணிட்டு கீழே வா செல்லம்..”என்று கண்ணத்தில் முத்தம் பதித்து விட்டு,
பழச்சாற்றை கையில் எடுத்துக் கொண்டவன் கீழே சென்றான்.
மீண்டும் அலைபாயும்.....