Sowndharyacheliyan
Writer
வான்மழை 32:
மேலும் ஒருவாரம் ஓடியிருந்தது.
கடை வேலையாக இரண்டு நாட்கள் மதுரை சென்றிருந்த பரணி, நேற்றைய இரவு தான் வீடு திரும்பியிருந்தான். இரவு அவன் வர நேரமாகிவிட்டது. மனைவியின் வீட்டை கடக்கும் போது, அவனது உள்ளம் பரபரத்தது. முழுதாக இரண்டு நாட்கள் ஆகியிருந்தது பிள்ளையையும் மனைவியையும் அவன் பார்த்து.
சாத்வியை தூக்கி கொஞ்சிட அவன் மனம் ஆளாய் பறக்க, தன்னை அடக்கிக் கொண்டு வீட்டை கடந்து சென்றிருந்தான்.
அடுத்த நாள் வழக்கம் போல் அதிகாலையே எழுந்து விட்ட பரணி, காலை கடன்களை முடித்துவிட்டு வெளியே வந்தவனின் பார்வை அனிச்சை செயலாக சுபாவின் வீட்டை பார்த்தது. இன்னும் இருளில் மூழ்கி கிடந்த வீட்டினை பார்த்தவனுக்கு யோசனையானது.
எப்போதும் அவன் எழும் நேரம், அங்கே வீட்டினிலும் விளக்கு எரியும். ஆனால் இன்று? யோசனை படிந்தது அவன் முகத்தில்.
‘சரி ஏதாச்சும் அசதியா இருக்கும்.’ தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன், வீட்டினுள் சென்றிருந்தான். அவன் குளித்து முடித்து, முத்துப்பேச்சி தந்த டீயை குடித்துவிட்டு கடைக்கு கிளம்புவதற்கு வெளியே வந்தவனின் பார்வை மீண்டும் மனைவி வீட்டுப் பக்கம் செல்ல, இன்னும் இருளில் தான் மூழ்கி கிடந்தது.
எப்போதும் இந்த நேரத்திற்கு கிளம்பி விடுபவனுக்கு இன்று அப்படி முடியவில்லை.
அவன் நின்றான்.
நெஞ்சுக்குள் ஒரு விசித்திரமான பதட்டம். மேலும் பத்து நிமிடங்கள் கடந்திருக்க, மகாலிங்கம் எழுந்து வந்திருந்தார்.
“பரணி, இன்னும் கிளம்பலையா?”
“இதோ ப்பா போகணும்.” என்றவன் அதற்கு மேல் நில்லாது வண்டியை கிளப்பியிருந்தான். அவன் கவனம் முழுவதும் மனைவியின் வீட்டின் மீது தான், தன்னை காண வந்து நிற்கும் மனைவியை அதிகத்திற்கும் தேடியது அவன் மனம். இன்னும் விளக்குகளும் ஒளிரவில்லை. வேண்டுமென்றே ஹாரனை அலறவிட்டான். அதன் சத்தத்திலாவது மனைவி வெளியே வருவாளா என்று? ஆனால் அவனிற்கு பலன் பூஜ்ஜியம் தான்.
வேகத்தை மட்டுப்படுத்தியவன், சுபாவின் வீட்டருகே வந்ததும் வண்டியை அணைத்திருந்தான். ஏனோ, மனைவியின் முகம் காணாமல் செல்ல விருப்பமில்லை அவனிற்கு. சிறிது நேரம் வண்டி ஸ்டார் ஆகாமல் இருப்பது போல், காட்டிக் கொண்டு அங்கேயே நின்றிருந்தவனுக்கு நேரம் கடந்தது.
பின் வண்டியை ஓங்கி மிதித்தவன், “ப்ரூம் ப்ரூம்!” என வண்டியை முறுக்கி சத்தத்தை கூட்டினான். இந்த சத்தம் கேட்டாவது மனைவி வந்துவிடுவாளா? என நினைத்து ஆக்ஸிலேட்டரை முயன்ற அளவு முறுக்கி சத்தத்தை கூட்டினான். ஆனால், அவன் மனைவிக்கு பதில், முத்துப்பேச்சி வெளியே வந்துவிட, சட்டென வண்டியினை கிளம்பியிருந்நவனின் முகம் கடுகடுவென மாறியிருந்தது மனைவியை காணததில்.
அவன் கிளம்பி சென்றாலும், மனசு அங்கேயே நின்றது.
கடை வந்ததும் வேலை கைக்கு வரவே இல்லை. மனம் முழுவதும் மனைவி மற்றும் மகளையே நினைத்தது. சரி எப்படி இருந்தாலும் வேலைக்கு வந்து தானே ஆக வேண்டும் என எதிர்பார்த்து அந்த தெருமுக்கினையே நொடிக்கொருதரம் பார்த்து கொண்டிருந்தான்.
நேரம் தான் கடந்ததே தவிர, அவளது மனையாள் வந்து சேரவில்லை.
நேரம் ஆக ஆக அவனிற்கு ஒருவித பயமும் கோபமும் தான் வந்தது. அலைபாய்ந்த மனநிலையுடன் இருந்தான். இருவருக்கும் என்ன ஆகிற்று, என்ற தவிப்பு கூடிக்கொண்டே சென்றது.
சரி பேச்சியிடமாவது கேட்டு விடுவோம் என நினைத்து அவன் முத்துப்பேச்சிக்கு அழைத்திருந்தாரன்.
“சொல்லு பரணி!”
“பாப்பா காலையில வந்தாளாம்மா!”
“இல்லைடா வரல”
“வரலையா?”
“ஆமா!”
“என்னம்மா ஆமான்னு சாதரணமாக சொல்லுறீங்க. ஏன்னு பார்க்க மாட்டீங்களா?”
அவன் குரல் சற்று உயர்ந்தது.
“ஏன் டா இப்படி பதறுற, நேத்து நைட்டுக்கு பாப்பாக்கு கொஞ்சம் காய்ச்சல் இருந்தது. மருந்து ஊத்தி விட்டிருப்பா போல, அதனால தான் வெளியில் வரலனு நினைக்கிறேன்.”
என்க,
இருந்தும் இவன் மனம் சமாதனமடைய மறுத்தது.
“நேத்தே காச்சாலா இருந்திருக்கு, என்கிட்ட சொல்லவே இல்லம்மா நீங்க?”
“நைட்டு லேசாத்தான்டா சுட்டுச்சு அதான் சொல்லலை, மருந்து சாப்பிட்டதுல பிள்ளை தூக்கத்துல இருப்பா!”
“ம்ம்ம், இவளும் காலையில இருந்து வெளிய வரலை, கடைக்கும் வரலை அதான்ம்மா கொஞ்சம் யோசனையா இருக்கு.”
“உன் பொண்டாட்டி மூஞ்சி அவ அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்தே சரியில்லாமாதான்டா இருந்தது. சொணங்கிட்டே கிடந்தா, நேத்தும் வேலையில இருந்து பாதிலயே வந்துட்டா.”
“அவுங்க அம்மா வீட்டுக்கா? அங்க போகமாட்டாளேம்மா!”
“யாதவிக்கு ஏதோ வரன் தகைச்சு வந்திருக்கும் போல, அதை என்ன ஏதுன்னு விசாரிக்கப் போனாப் போல, வருணா சொல்லிட்டு இருந்தா, உன் மாமியக்காரி என்னத்தை பேசிச்சுன்னு தெரியலை, வரும்போது முகம் சோர்ந்து தான் இருந்திச்சு.”
அந்த ஒரு வரி
பரணியின் மனசில் எங்கோ பதிந்தது.
“சரி அம்மா…”
என்று அவன் போனை வைத்தாலும், அவன் கால்கள் அங்கேயே நின்றது.
அவன் திரும்பி கடைக்குள் சென்றான்.
அந்த நாள் முழுவதும் ஒருவித சோர்வுடன் தான் சென்றது அவனிற்கு. எப்போதும் மதிய உணவு மனைவி, மகளை அருகே வைத்துக் கொண்டு உண்டவனிற்கு, இன்று தனியாக உண்ண மனம் வரவில்லை. அவளுடன் பேசவில்லை என்றாலும், கண்ணெதிரே இருக்கிறாளே, என்ற நிம்மதியில் இருந்தான். இன்று அதுவும் இல்லை.
‘அவுங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்ததுல இருந்து, ஆளு சரியில்லைன்னு சொன்னார்களே என்னவா இருக்கும்.’ என யோசித்தவன், அடுத்த நிமிடம் யாதவிக்கு அழைத்து விட்டிருந்தான்.
“சொல்லுங்க மாமா, நல்லாருக்கீங்களா?”
“ம்ம் இருக்கேன் யாதவி, வேலை எல்லாம் ஓகேவா.” படிப்பினை முடித்துவிட்டு, ஒரு மாதம் ஆகின்றது அவள் வேலையில் சேர்ந்து.
“கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு மாமா, ஆனா பழகிட்டா கொஞ்சம் ஈஸி ஆகிடும்.”
“ஓ.. சரி, பாப்பாவும், உங்க அக்காவும் அங்கே உங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க போல.”
“ஆமா மாமா, அக்கா வந்திருந்தா. அம்மா ஏதோ நல்ல இடம் தகைச்சு வந்திருக்கின்ற மாதிரி பேசுறாங்க, அதான் அக்காவை வரச் சொல்லிருந்தேன். என்னன்னு பாக்குறதுக்கு.”
“முடிவு ஆகிடுச்சா எல்லாம்.மாப்பிள்ளை எந்த ஊரு.”
“இங்க, திண்டுக்கல் தான் மாமா, ஏதோ தூரத்து சொந்தம் போல, திடுதிப்புன்னு அவுங்க வீட்டுல இருந்து வந்துட்டாங்க, அதான் என்ன பண்றதுன்னு தெரியாம அக்காவ கூப்பிட்டு விட்டுட்டேன். சும்மா பேசிட்டு தான் மாமா போயிருக்காங்க, இனிதான் மத்ததை எல்லாம் பாக்கனும்.”
“ஓஹ், ம்ம்ம் உங்க அக்கா மொகமே சரியில்லை, அங்க வந்துட்டு வந்ததும் இருந்து..!” என அவன் இழுக்க,
“அது மாமா, கொஞ்சம் சண்டையாகிப் போச்சு, அக்காக்கும் அம்மாக்கும்.”
“வழக்கமா போடுற சண்டையா?”
“அதுபோல தான் ஆனா, அம்மா ரொம்ப வார்த்தைய விட்டுட்டாங்க. வந்த வரன் கொஞ்சம் பெரிய இடம் போல, அம்மா அந்த வரனை உடனே முடிக்கனும்ன்ற மாதிரி பேச, அக்கா, கொஞ்சம் நல்லா விசாரிச்சுட்டு பண்ணலாம், வசதியானவங்க வேறன்னு, சொல்லிட்டா.
அதுக்கு அம்மா கொஞ்சம் பேசிட்டாங்க, வசதியான இடம் வந்திடுச்சுன்னு பொறாமைல இதை தட்டி விட பாக்கிறே, உன் தங்கச்சிக்கு வந்த வரன் வசதியை பார்த்து, உனக்கு நாங்க முடியலப்போல, வயிறு எரியுறன்னு. கொஞ்சம் அதிகமா பேசிட்டாங்க, அக்கானால அதை தாங்க முடியலை, அழுதுட்டு கிளம்பிட்டா, நானும் அம்மாவை எவ்வளவு கண்டிச்சாலும் கேட்க மாட்டுறாங்க மாமா, நான் அக்காவை இங்க கூப்பிட்டுருக்கவே கூடாது தான்.ஆனா அப்போதைக்கு பயத்துல கூப்பிட்டுட்டேன் மாமா. என்னால் தான் அவ பேச்சு வாங்கிட்டா.” என,
“சரிம்மா, நீ வேலையை பாரு. நான் வைக்கிறேன்.” என வைத்துவிட்டவனுக்கு கோபத்தை மட்டும் அடக்க முடியவில்லை.
“இவளை!!” என பல்லை கடித்தவனுக்கு சுபாவின் மீது தான் கோபம் வந்தது.
“அந்தம்மா பேசுனா, பதிலடி கொடுக்காமா இவ இப்புடி அழுத்துட்டு நின்னா, அந்தம்மா இன்னும் பேசத்தான் செய்யும்.” என்றவனிற்கு வேலையை ஓடவில்லை அன்று.
மாலைப்போல் மீண்டும் தாய்க்கு அழைத்து பிள்ளையை பற்றி விசாரிக்க,
“பிள்ளை வந்துட்டா பரணி, உன் பொண்டாட்டிக்கு தான் மேலுக்கு முடியாத மாதிரி தெரியுது. காலையில இருந்து, எதுவும் சமைக்கல போல, பிள்ளைக்கு மட்டும் ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிருக்காப் போல.” என,
“சரிம்மா, பாப்பாவை பாத்துக்கோங்க.” என வைத்தவனிற்கு, இரவு வரை தாக்குப்பிடிப்பதற்குள் பெரும்பாடாகிப் போனது.
‘பிள்ளைக்கு ஒன்றுமில்லை, என ஆறுதல் அடைந்தாலும். மனம் மனைவியை நினைத்து வண்டாய் குடைந்தது.’
இரவு, கடை மூடிவிட்டு வீடு திரும்பும் வழியில், அவன் வண்டி தானாகவே வேகத்தை குறைத்தது.மனைவியின் வீடு முன் வந்தபோது.
வாசல் முன் மங்கலான விளக்கு
இந்த முறை,
அவன் நின்றான்.
அந்த வீட்டைப் பார்த்தான்.
அவள் உள்ளே இருக்கிறாள் என்று தெரிகிறது! ஆனால் மனதினில் அவளை பார்க்க முடியாத தூரம்.
ஒரு நிமிடம்!
இரண்டு நிமிடம்!
அவன் அங்கேயே நின்றான்.
பிறகு,
வண்டியை மெதுவாக கிளப்பினான்.
இவனை கண்டதும் பிள்ளை தாவிக் கொண்டு இவனிடம் வந்தது.
“குட்டிம்மா, சாப்பிட்டீங்களாடா.”
“ம்ம்ம் ப்பா,பாட்டி புவ்வா தந்தா!” என,
“என் சமத்துக்குட்டி!” என்றபடி பிள்ளையை அணைத்துக் கொண்டவன், அடுத்தடுத்து வேலையை கவனிக்கலானான்.
இரவு உணவினை முடித்தவன், பிள்ளையோட வெளியே முற்றத்தில் அமர்ந்திருந்தான். அவனருகே முத்துப்பேச்சி.
சுபாவை பற்றி எதுவும் பேசுவாரா? என அவன் மனம் தவிக்க அவரை பார்க்க, மகனின் பார்வையை புரிந்தவரோ!
“காலையில இருந்து வெளிய வந்த மாதிரி தெரியலை, இப்போ நைட்டுக்கு உங்கப்பா தான் இட்லி வாங்கி கொடுத்திட்டு வந்திருக்காரு. பிள்ளைய இங்கனவே தங்க வச்சிக்க சொல்லிருக்க, அவளுக்கு இருக்கிறது பிள்ளைக்கு ஒட்டிக்குமாம்.
காச்சல்ல முகமெல்லாம் சிவந்திருக்கும் போல, உங்கப்பா ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டிருக்காரு, பிடிவாதக்காரி “மாத்திரை போட்டுருக்கேன் சரியாயிடும் மாமா, இல்லைன்னா நாளைக்கு போய்க்கிறேன்னு” சொல்லி அனுப்பி இருக்கா உங்க அப்பா பாவம் மனுஷன் புலம்பிக்கிட்டே இருக்காரு.
வருணா இருந்தாவாது ஒத்தாசைக்கு அவள போய் இருக்க சொல்லி இருக்கலாம் ஆனா அவ அவுங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கா.” என,
எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவனின் உள்ளம் மட்டும் தவித்தது.
சிறிது நேரத்தில் பிள்ளை தூக்கத்திற்கு ஏங்கிட,
“பிள்ளையை கொடு பரணி. நான் போய் தூங்க வைக்கிறேன். நீயும் பார்த்துட்டு படுத்து தூங்கு, நாளைக்கு காலைல என்னன்னு பாத்துக்கலாம்.” என்றபடி சாத்விகாவை தூக்கிக் கொண்டு அவர் உள்ளே சென்றுவிட,
பரணிக்கு உள்ளே செல்ல மனமின்றி, கயிற்று கட்டிலை வெளியே தூக்கிபோட்டவன், சுபாவின் வீட்டை பார்த்தப்படி படுத்துக்கொண்டான். அவன் பார்வை முழுவதும் அவள் அறையை வட்டமடித்தது, எங்காவது வெளிச்சம் தென்படுகிறதா என்று? வெகுநேரம் உறங்காமல் கிடந்தவன், ஒருகட்டத்தில் தன்னையும் மீறி கண்ணயரந்திருந்தான்.
விடியலில், கோழிகளின் சத்தத்தில் அவனது வழக்கமான நேரத்தில் கண்விழித்த இருந்தான் பரணி. எழுந்ததும் அவனது கண்கள் மனைவியை தான் தேடியது. இன்றும் அவளது வீடு இருளில் தான் மூழ்கி இருந்தது.
‘காச்சல் குறைச்சிருச்சான்னு தெரியலையே’ என நினைத்தபடி அவனது வேலைகள் அனைத்தையும் முடித்தவனின் பார்வை மட்டும் அவளது வீட்டை விட்டு அகலவில்லை.
பேச்சி அவனிற்கு டீயை கொடுத்தவரின் பார்வையும் சுபா வீட்டை தான் வட்டமடித்தது.
“எப்புடி இருக்கான்னு தெரியலை!” என்றவரின் பேச்சை ஆமோதித்தவண்ணம் அமரந்திருந்தான் அவன்.
“கொஞ்ச நேரம் கழிச்சு, அப்பாவை பாத்துட்டு வர சொல்லுறேன் தம்பி.” என்க, சரி என தலையசைத்தவன் கடைக்கு கிளம்பியிருந்தான். கிட்டதட்ட நான்கு நாட்களுக்கு மேலாக மனைவியின் முகம் காணததில், அவன் உள்ளம் சலனப்பட்டிருந்து. மேலும் உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டதில் இருந்து, அவளை நெருங்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் ஒருவிதக் குற்ற உணர்ச்சியில் தவித்து தான் போனான்.
அவளது வீட்டை கடக்க முடியாமல் வண்டியை நிறுத்திவிட்டிருந்தான் முற்றிலுமாக, பூட்டியிருந்த கதவே அவனது கண்ணிற்கு புலப்பட்டது. ஏனோ அவனை காணாமல் நகர முடியும் என தோன்றவில்லை.
‘பேசாமல் சென்று பார்த்துவிடுவோமா’ என அவன் மனம் அலைபாய, வண்டியை விட்டு இறங்கி விட்டவனிற்கு, அவள் வீட்டுக்குள் நுழைந்திடும் தைரியம் வந்துவிடவில்லை. வெகுநேரம் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டவன், தந்தை பார்த்து விட்டு சொல்லட்டும் என நினைத்தவன், அங்கிருந்து புறப்பட்டிருந்தான்.
கடையில் கூட்டம் அலைமோதினாலும், இவனின் கவனம் எல்லாம் செல்போனில் தான் இருந்தது. முத்துப்பேச்சியின் அழைப்பு வர காத்திருந்தான் அவன்.
நேரம் தான் சென்றதே தவிர, அழைப்பு வந்தபாடில்லை, மகாலிங்கமும் கடைக்கு வந்தபாடில்லை. நேரம் செல்ல, செல்ல அவனிற்கு இங்கே பொறுமை கரைய ஆரம்பித்திருந்தது.
ஒருகட்டத்தில் போனை எடுத்தவன் தாய்க்கு அழைக்க போக, முத்துப்பேச்சியே அழைத்திருந்தார்.
அவசரமாய் அதை ஏற்றவன்,
“சொல்லுங்கம்மா!” என,
அடுத்து அந்தப்பக்கம் அவர் கூறியதை கேட்டு நொடி திகைத்தவன், அடுத்த சில நிமிடங்களில் கடைப்பையனிடம் கடையை ஒப்படைத்துவிட்டு, வண்டியை வேகம் கொண்டு உதைத்து, கிளம்பியிருந்தான்.
செல்லும் வழி எங்கும்,
“பரணி, கொஞ்சம் சீக்கிரம் வாடா வீட்டுக்கு. அப்பா போய் சுபாவ கூப்பிட்டும் வெளிய வரலை அவ, அவரு ரொம்ப நேரமா கதவை தட்டியும், திறக்கலைடா அவ, போன் பண்ணாலும் சுவிட்ச் ஆப்னு வருது. பாப்பா வேற அவளை கேட்டு அழ ஆரம்பிச்சிட்டா, அப்பா கதவை உடைக்க பாக்கிறாரு முடியலை, நீ வா தம்பி சீக்கிரம் எனக்கு பயமா இருக்கு.” என்ற தாயின் வார்த்தைகளே ரீங்காரமிட, வேகம் கொண்டு கிளம்பியிருந்தான்.
இவன் சென்ற நேரம், முத்துப்பேச்சியும் அங்கே இருக்க, அதை தவிர சிலர் இருந்தனர்.
“ஏப்பா, கதவுக்கு இன்னொரு சாவி ஏதும் இருக்கா” ஒருவர் சத்தமிட,
“கீழ் வீட்டுல தேடிக்கிட்டு இருக்காங்க.” மற்றவரின் குரல்.
“சீக்கிரம், ஒண்ணுக்கிடக்க ஒண்ணு ஆகிடப் போகுது.” ஆளாளுக்கு கருத்து சொல்ல, பரணி வந்தவன் எதையும் யோசிக்காது, பலம் கொண்டு கதவை மோதிட, அவனுடன் சேர்ந்து இன்னும் சிலர்.
பலகட்ட மோதலுக்கு பிறகு, கதவு லேசாய் விரிசலிட, மீண்டும் மீண்டும் மோதியதில் கதவு தாழ் உடைந்திருந்தது.
“ஏய், நில்லுங்கப்பா உள்ளே அந்த பொண்ணு எந்த நிலையில இருக்குன்னு தெரியலை, ஆம்பிளைங்க யாரும் உள்ளார போயிடாதீங்க. மகாலிங்கம் உங்க சம்சாராத்தை உள்ளே போக சொல்லுங்க.” உதவிக்கு வந்தவர் கூறிக் கொண்டிருக்க, அதனை எல்லாம் காதில் வாங்காதவனாய் பரணி வேகமாய் உள்ளே நுழைந்திருந்தான்.
அவன் உள்ளே நுழைந்த அந்த நொடி,
அங்கே இருந்த அமைதியே அவனை குத்தியது.
“சுபா…!” என்று அவன் குரல் அந்த வீட்டின் சுவற்றில் மோதிப் போனது.
எந்த பதிலும் இல்லை.
அவசரமாக அறை கதவைத் தள்ளி திறந்தவன், அங்கே பார்த்த காட்சியில்
ஒரு நொடி அவன் மூச்சே நின்றது.
படுக்கையின் ஓரத்தில் அலங்கோலமாய், மயக்க நிலையில் பேச்சின்றி கண் மூடி கிடக்க, அவளருகே நேற்று இரவு மகாலிங்கம் வாங்கி கொடுத்த உணவு பார்சல் பிரிக்கப்படாமல் கிடந்தது. போன் ஒரு பக்கமாய் கிடக்க, வெறும் தண்ணீரை மட்டும் குடித்திருப்பாள் போலும், சமையலறையில் லைட் எரிந்த வண்ணம் இருக்க, சிங்கில் பாத்திரம் நிரம்பி கிடந்தது. தலை தொங்கிப் போய் இருந்தவளை கண்டவன் அதிர்ந்து தான் போனான்.
வேகமாய் அவளருகே சென்றவன்,
“சுபா…சுபா!’ என கன்னத்தை தட்டியவன், கையை பட்டென இழுத்துக் கொண்டான். அனலாய் தகித்தது அவளது உடல். இவன் பின்னே வந்திருந்த பேச்சி,
“என்ன பரணி?”
“அம்மா, உடம்பு கொதிக்குதும்மா!”
என, அவரும் சுபாவை தொட்டும் பார்த்தவர்,
“ஆமாடா, பாவி மக எவ்ளோ நேரமா இப்புடி கிடக்கிறானு தெரியலையே, நேத்துல இருந்து ஒண்ணும் திங்காம கிடந்திருக்கா. ஏங்க, ஆட்டோக்கு சொல்லுங்க, பரணி தூக்குடா இவளை சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகனும்.” நொடியில் அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்.
சாத்வி வேறு சுபாவை கண்டு அழ ஆர்மபிக்க, அவளை சமாதானப்படுத்தவே பெரும் கஷ்டமாய் போயிற்று.
வாசலில் ஆட்டோ வந்து நிற்க, சுபாவுடன் மருத்துவமனைக்கு கிளப்பியிருந்தான் பரணி.
மருத்துவமனையில் அவளிற்கான சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
தொண்டை வறண்டு இறுக்கி பிடிக்க, உதடுகள் உலர்ந்து தாகம் எடுக்க, தண்ணீரை தேடின அவளது உதடுகள்.
அவள் தேடிய தண்ணீர் கிடைக்காமல் போக, ”தண்ணி! தண்ணி!” என அவள் உதடுகள் மெதுவாக முணங்கிய வேளை, இருமல் வர பெரும் சத்தத்துடன் இருமிக் கொண்டே வேகமாய் எழுந்தமரந்திருந்தாள் சுபா.
அவள் எழுந்த வேகத்திற்கு அவள் கையில் குத்தப்பட்டிருந்த செலைன் பாட்டில்கள் ஒருவித வேகத்துடன் ஆடி கீழே விழும் பின் வந்து பிடித்திருந்தான் பரணி.
“மெதுவ எந்திரிக்க மாட்டியாடி!” என்றவனின் சத்தத்தையும் மீறி அவள் இருமல் ஒலி கேட்க, இருமிய வண்ணம் சைகையிலயே ‘தண்ணி!” கேட்க,
வேகமாய் பாட்டிலை திறந்து அவளிற்கு சிறிது நீரை புகட்டியவன், அவளது முதுகை நீவி ஆசுவாசமடைய செய்தான்.
சிறிது தண்ணீர் குடிச்சதும் சுபா இன்னும் இருமிக்கொண்டே இருந்தாள்.
பரணி அவள் முதுகை மெதுவா தடவி கொண்டிருந்தான். அவன் கையில் இன்னும் நடுக்கம் போகவில்லை.
“மெதுவா…” அவன் சொன்னான். குரல் கிட்டத்தட்ட கேட்காத அளவுக்கு தாழ்ந்தது.
சில நிமிடம் எதுவும் பேசவில்லை.
அவள் மூச்சை சீராக்கிக் கொண்டாள்.
கணவனது குரல் கேட்டாலும், நிமிர்ந்து அவனை பார்க்கும் தைரியம் அவளிற்கு வரவில்லை.எப்படி வரும்? அவள் செய்து வைத்திருக்கும் வேலையில்?
அவள் மெளனத்தை உணர்ந்தவன், எதுவும் பேசாமல் பழையபடி நாற்காலியில் சென்றமர்ந்துக் கொண்டான். சில விநாடிகள் நிசப்தம்.சட்டென நினைவு வந்தவளாக,
“பாப்பா?” என அவனை நிமிர்ந்து பார்த்து கேட்டிட, அவளது விழிகளைசில நொடி ஊடுறியவன்,
“பிள்ளைய பத்தின நினைப்பு கொஞ்சமும் இல்லாமதானே இப்புடி வந்து படுத்துக் கிடக்கிற, இப்போ என்ன புதுசா தேடுற?” சுள்ளென கேட்டிருந்தான். அவனது கேள்வியில் சுபாவின் விழிகளில் நீர் நிரம்பிட, அதனை கண்டு முகத்தை திருப்பி கொண்டவன்,
“அம்மா கூட வீட்டுக்கு போயிருக்கா பாப்பா!” என, கேட்டுக்கொண்டாள்.
“நா..ன் இப்புடி ஆகுமுன்னு நினைக்கலை?”
“ எது டீஹைட்ரேஷனாகி, மயக்கமாகி, காச்சல் அனலா கொதிக்கும்னு, நீ நினைக்கலை, அப்புடித்தானே” கோபம் கொப்பளித்தது அவனது குரலில்.
என்ன பதில் சொல்ல முடியும் அவளால்?
அவளது மௌனம்
இந்த முறை அவனை இன்னும் சினமடைய வைத்தது.
“கண்டவங்க பேச்சுக்கெல்லாம் மதிப்பு கொடுத்து, எத்தனை நாளைக்கு உண்ணாவிரத போராட்டம் இருக்கலாம்னு முடிவு பண்ணிருந்தீங்க மேடம்?” என்றதும் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் சுபா.
‘எப்படி தெரிந்தது இவருக்கு?’ திகைத்து அவள் பார்க்க,
“யாதவி!” ஒற்றை வார்த்தையில் அவளது பார்வைக்கு பதில் அளித்திருந்தான்.
சுபாவின் முகம் சற்றே சுருங்கியது.
‘அங்கே நடந்த அத்தனை பேச்சுவார்த்தைகளும் கணவனிற்கு தெரிந்திருக்கிறதே என்று!”
அவள் பார்வை மீண்டும் கீழே விழுந்தது.
“ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்லாதவனுக்கு, எதுக்கு பதில் சொல்லிக்கிட்டுன்னு அமைதியா இருக்கியோ?” என்றதும் பதறி நிமிர்ந்திருந்தாள்.
“அப்புடிலாம் இல்லைங்க!”
“வேற எப்புடி? எங்கப்பா வாங்கி கொடுத்த சாப்பாட்டையும் மதிக்காம தூக்கி போட்டிருக்க.”
“அபாண்டமா பேசாதீங்க, நான் தூக்கி எல்லாம் போடலை.” சிறு கோபம் வெளிப்பட்டது அவளிடம்.
“அப்பறம் ஏன்…?” வாக்கியத்தை முடிக்காமல் அவன் விட,
“பாப்பாக்கு முடியாம போனதாலே அவளை பார்த்துகிட்டே என்னை கவனிக்காம விட்டுட்டேன்.மாமா வாங்கி கொடுத்ததை சாப்பிடலாம்னு இருக்கிறப்ப தான், லேசா தூக்கம் வர்ற மாதிரி இருந்தது, அதான் கொஞ்ச நேரம் படுத்து எழுந்து சாப்பிடலாம்னு தூங்கிட்டேன். நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.”
“மண்ணாங்கட்டி! மயக்கத்துக்கும், தூக்கத்துக்கும் வித்தியாசம் தெரியலை, அப்புடியே ஒரேடியா தூக்கியிருப்ப!” என்றவனின் சத்தத்தில் இவளிற்கு பயம் பிடித்துக் கொண்டது. அப்படி மட்டும் ஏதாவது ஆகியிருந்தால்? நினைக்கவே நடுங்கியது அவள் உள்ளம்.
“இப்போ பயந்து..?” பரணியின் வார்த்தை ஈட்டியாய் குத்தியது.
“ப்ளீஸ்ங்க, நான் நிஜமா இந்தளவு ஆகும்னு நினைக்கலை. அம்…. அவுங்க பேசுனது ரொம்ப மனசுக்கு கஷ்டமாகிப் போச்சு. நான் நல்லா விசாரிச்சுட்டு பண்ணலாம்னு தான் சொன்னேன், அதுக்கு போயி…” அவளால் முழுதாக முடிக்க முடியாமல் விம்மிட,
“அவுங்க பேசுறது புதுசா என்ன?”
“ம்ஹீம் இல்லை!”
“தெரிஞ்சா சரி, ஏதாச்சு தேவைன்னா கேளு.” என்றவன் கண்களை மூடிக் கொண்டான். அதன்பிறகு எதுவும் பேசுவில்லை அவன்.
அவனிற்கே உள்ளம் குத்தியது உண்மை, சுபாவின் மாற்றங்களை இந்த ஆறு மாதத்தில் கண்கூடாக கண்டுக் கொண்டு தானே இருக்கிறான். அப்படி இருந்தும், அவளை தனியாக இந்த நிலைமையில் விட்டிருக்க கூடாது என அவன் மனமே அவனை குத்தியது.
ஏதோ, கடவுள் புண்ணியத்தில் தவறாக எதுவும் நடக்கவில்லை. அப்படி மட்டும் ஏதேனும் தவறாகிப் போயிருந்தால்??? நினைக்கவே உடல் நடுங்கிற்று. அவளிற்கு ஏதாவது ஆகியிருந்தால் தன்னால் தாங்கி கொள்ள முடிந்திருக்குமா என்ன? தவறை உணர்ந்து திருந்தி மன்னிப்பு கேட்டவளை மன்னிக்காது மேலுமல்லாவா நோகடித்திருக்கிறான்.
அவள் செய்தது பெரும் தவறு தான்! இல்லை என்பதற்கில்லை! அதை அவள் உணர்ந்த பின்னும் அவளை தண்டிப்பது முறையா? இல்லை அவளை முழுதாக வெட்டித்தான் விட முடியுமா? அப்படி செய்வதாயின், உலகில் ஒருவர் கூட சேர்ந்து வாழ முடியாதல்லவா? எத்தனையே தவறுகள் கணவன் மனைவிக்குள் நடக்கின்றது தான், யாரோ ஒருவர் விட்டுக் கொடுத்து, மன்னித்து தானே வாழ்க்கை ஓடுகிறது.
மேலும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் வைத்திருந்து தான் அனுப்பினர் சுபாவை. அந்த இரண்டு நாட்களும் உடன் இருந்தவன், ஒருவித சிந்தனையிலயே தான் இருந்தான்.
வருணாவும், முகிலனும் விசயம் கேள்விப்பட்டு வந்திருந்தனர்.
முத்துப்பேச்சி கூட ஒன்றிரண்டு வார்த்தைகள் பேச, இவளால் தான் அவரது முகம் பார்க்க கூசியது. அதனை புரிந்தவரும் ஒரு அளவோடு நிறுத்திக் கொண்டார்.
யாதவி வந்து பார்த்துவிட்டு சென்றிருந்தாள். வள்ளியம்மை எட்டிக் கூட பார்க்கவில்லை. யாதவிக்கு வந்த வரனை முடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.